-
தலைமைப்பண்பு என்று அண்ணாதுரை சொல்வது: முகத்தில் புன்னகை; அகத்தில் நம்பிக்கை; செய்கையில் சுத்தம்; சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மை.
அத்தனை பண்புகளும், எம்.ஜி.இராமச்சந்திரனிடம் இருந்தது. முகத்தில் புன்னகை; எம்.ஜி.இராமச்சந்திரன் முகம், அழகு, வசீகரம்; கவர்ந்து தன்வசப்படுத்தும் தன்மை.
அக நம்பிக்கை. எம்.ஜி.இராமச்சந்திரன், மற்றவர்களது அகத்திலும் நம்பிக்கை ஏற்படும் வழியில் செயலாற்றினார். தன்னைப்போல் பிறரும், அக நம்பிக்கையோடு வாழ்வை வாழ வழி செய்து கொடுத்தவர், எம்.ஜி.ஆர்.
செய்கையில் சுத்தம். அகத்தில் தூய்மை; புறத்தில் தூய்மை. தூய்மைதானே கற்பு.
சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மை. இந்த குணம் இருப்பவர்கள், இயற்கையாகவே, மனித குல சேவையில் ஈடுபடுவார்கள்.
-
கிழக்கு பதிப்பகம் வெளியீடான "வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை" புத்தகத்தை படித்தேன். ஆர். முத்துக்குமார் அவர்கள் எழுதிய, இந்த புத்தகத்தை பற்றிய என் கருத்துக்களை இங்கு பதிகின்றேன்.
"நான் ஆணையிட்டால்,
அது நடந்துவிட்டால்,
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்"
என்ற புகழ்பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரர் எம். ஜி. ஆர். கிட்டதட்ட அவர் ஆட்சி காலத்தில் இதுதான நடந்தது. அவரது கடும் உழைப்பு, திறமைகளை தாண்டியும், ஏதோ ஒரு வசீகரம் அவரிடம் இருந்துள்ளது, எனவே தான் இன்றும் எம். ஜி. ஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும் ரசிகர்கள் அதிகம்.
இந்த புத்தகத்தை படிக்கும் முன்பு வரை எம். ஜி. ஆர் ஒரு சிறந்த மனிதன், அவர் மக்களுக்கு நிறைய நன்மை செய்திருக்கிறார் என்று தான் என் மனதில் பதிந்திருந்தது. ஆனால் இவைகளை தாண்டியும் எம். ஜி. ஆர் ஒரு சிறந்த நடிகன், சிறு வயதில் இருந்தே அவர் நிறைய பயிற்சி எடுத்திருக்கிறார் என்பதை ஆர். முத்துக்குமார் இப்புத்தகத்தின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைய புதிய தலைமுறை நடிகர்களை போல் இல்லாமல், நாடகத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு வந்தவர்களே, மக்கள் மனதில் நிங்காத இடம் பிடிப்பர் என்பதை எம். ஜி. ஆரின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும், இதற்கு ஆதாரமான அத்தனை சான்றுகளையும் இந்த புத்தகத்தில் காணலாம்.
இன்று எத்தனையோ நிகழ்ச்சிகளில் எம். ஜி. ஆர் என்றாலே, கையையும், காலையும் தூக்கிக் கொண்டு ஏதோ கோமாளியைப் போல் சித்தரிப்பதை பார்க்கிறோம், இப்படி இளைய சமுதாயத்தின் மனதில் தப்பான எண்ணத்தை பரப்பும் அனைவரும், எம். ஜி. ஆரின் வாழ்க்கையை படித்த பின்பு, இந்த மாபெரும் மனிதனை அவ்வளவு சாதாரணமாக இழிவு படுத்துவது தவறு என்று நிச்சயம் சிந்திப்பார்கள். தனது முகத்தை மட்டும் காட்டி, தமிழ்நாட்டின் அரசியலையே புரட்டி போட்ட பெருமை எம். ஜி. ஆருக்கு உண்டு. அவர் செயல்களில் சுயநலம் இருந்தாலும், அதன் இறுதி நோக்கு பொது நலத்திற்காகவே பயன்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. வருமான வரி பற்றி எம். ஜி. ஆரின் கருத்துக்கள் இதற்கான சான்று. தன்னலமற்ற தலைவர்களின் பட்டியலில் அழுத்தமான இடத்தை என்றும் எம். ஜி. ஆர் வசப்படுத்திவிட்டார்.
இவர் வாழ்ந்த நாட்களில் ஒரு புரியாத புதிராக, மக்கள் மனதில் அதீத ஆளுமை கொண்டவராக இருந்திருக்கிறார். சினிமா, அரசியல் என்ற இரு பெரும் கடலில் ஆளுமை செலுத்திய மனிதனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வது மிகுந்த சிரமமான ஒன்று, அதனை திறம்பட இந்த புத்தகத்தில் ஆர். முத்துக்குமார் பதிவு செய்திருக்கிறார். எம். ஜி. ஆர் பிறப்பு முதல், இறப்பு வரை நடந்ததை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, சுவாரஸ்யமாக தேவையான அளவு விவரித்துள்ளார்.
-
-
-
Makkal thilagam mgr in nan anaiyittal movie telecasting podhigai channel.
-
-
Look at the questions asked by his fans and as well as from others. How MGR has answered it. The first question is about the difference between Politics and Arts (Cinema here) and how MGR had given the definition clearly.
(1) அரசியல், கலை இரண்டுக்குமுள்ள வேறுபாடு என்ன?
எம்.ஜி.ஆர் பதில் - அரசியல் மேடை அரசியலுக்காக உள்ளது. சமூக, பொருளாதாரத்தைப் பாதுகாக்க இயங்கும் ஒரு அமைப்பு அரசியல். கலை மேடை கலைக்காக உள்ளது. மனித உணர்ச்சிகளை நேர்மையான வகையில் உருவாக்கவும், கட்டுப்படுத்தவும், சோர்வுற்ற மனித உள்ளத்திற்கு அமைதியைக் கொடுக்கவும், மறந்துவிட்ட பண்பினை நினைவு படுத்தவும் தெரிய வேண்டிய உண்மைகளை உணர்த்தவும், வாழ வேண்டிய முறைகளை வகுத்துக் கொடுக்கவும், வாழ்க்கை நிலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றிச் சமத்துவ போதனை செய்யவும் உள்ளது கலை.
(2) ராஜாஜி அவர்களைப் பற்றிய உங்கள் கருத்து யாது?
எம்.ஜி.ஆர் பதில் - விலைமதிக்க முடியாத முத்துக்களோடு விவரமறிய முடியாத எத்தனையெத்தனையோ விந்தைப் பொருள்களை யெல்லாம் தன்னகத்தே மறைத்து வைத்துக் கொண்டு, அலைக்கரங்களால் மண்ணைத் தழுவியும் தழுவாமலும், ஒரு நிலையில் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாத ஆழ்கடல் போன்றவர் ராஜாஜி என்று கூறலாம் அல்லவா.
(3) பெரியாரை எதற்கு ஒப்பிடலாம்?
எம்.ஜி.ஆர் பதில் - தானும் வளர்ந்து, தன்னில் தோன்றும் விழுதுகளையும் தனித்து ஊன்றச் செய்து, தன்னில் வந்து ஒதுங்குவோருக்கெல்லாம் (அவர்கள் கள்வர்களாகவும் இருக்கலாம் களவு கொடுத்தவர்களாகவும் இருக்கலாம்) நிழல் தரும் ஆலமரத்திற்கு ஒப்பிடலாம்.
The above questions about the legendary figures of Tamilnadu politics. MGR has equated their character, Rajaji for Sea and Periyar to the Banyan Tree.
Though fourth question was asked 40 years ago the same condition is still prevailing in Tamil Nadu.
(4) தமிழ்நாட்டில் வறுமை அடியோடு தீரும் நிலை என்று பிறக்கும்?
எம்.ஜி.ஆர் பதில் - எல்லா வளங்களும் இருந்து அன்புவளம், பண்புள்ள அறிவு வளம் ஆகியவை இரண்டுமே அதிக அளவில் வற்றாத ஊற்றுப் போல் சுரக்கும் நிலையில் இன்றைய தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால், அதன் வளமெல்லாம் சுரண்டப்படுவதை கூடப் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொண்டிருக்கிறது. அந்த அன்பும் பண்புள்ள அறிவும் எந்த அளவுக்கு எத்தகையவரிடம், எவ்விதம் செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு என்றைக்கு முடிவு செய்து செயற்படுமோ, அன்று தான் வறுமை அடியோடு தீரும் நிலை பிறக்கும்.
Fifth answer gives advice to everybody and also to me.
(5) சிறந்த பேச்சாளராக விளங்க நாங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை பற்றி விரிவாக விளக்கவும்?
எம்.ஜி.ஆர் பதில் - ஒரு கொள்கையில் பரிபூரண நம்பிக்கை வேண்டும். அந்தக் கொள்கை பற்றிய விரிவான - ஆழமான விளக்கங்களை அறிந்திருக்க வேண்டும், எந்த மொழியில் கருத்துக்களை வெளியிட விரும்புகின்றோமோ அந்த மொழியில் பேசும்போது வார்த்தைப் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும். நமது பேச்சைக் கேட்கின்றவர்கள் அதிசயத்தோடு கவனிக்காமல் அக்கறையோடு கவனிக்கும்படி பேச வேண்டும்.
Everybody knows about MGR's philanthropic nature. Here in this answer MGR says the difficulties he faced when he tried to get a conclusion to help or not.
(6) தாங்கள் அளிக்கும் நன்கொடைகள் நல்ல முறையில் செலவழிக்கப் பட்டிருக்கின்றனவா? என்று தாங்கள் கவனிப்பதுண்டா?
எம்.ஜி.ஆர் பதில் - சிலவற்றைப் பற்றிச் சொன்னால் எனக்கும் உங்களுக்கும் வேதனை தருவதாயிருக்கும் சிலர் நான் நம்பும்படியான பொய்களைச் சொல்லிப் பலனைப் பெற்றதண்டு. அதை அறிந்த நான் எச்சரிக்கையாக இருக்க முயன்றதன் விளைவாக உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு நான் பயன்பட முடியாமற் போனதும் உண்டு.
(7) உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
எம்.ஜி.ஆர் பதில் - ரசிகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான் உண்மையான ரசிகர்களாக இருக்க வேண்டும். வேறு குழப்பங்களில் சிக்கிக் கொண்டு தேவையற்ற விபரீதத்திற்கு ஆளாகி விடக்கூடாது.
courtesy - net
-
மிக்க நன்றி திரு இரவிச்சந்திரன் சார் புரட்சித்தலைவரின்
நினைவு அஞ்சலி தொடரும் .......
இதோ உங்களுடன் இணைகின்றேன்
-
-
பாட்டு பாட வா - எம் ஜி ஆர் பாடல்கள்
http://i45.tinypic.com/rtpdaf.jpg
எம் ஜி ஆர் தமிழகத்தின் ஒரு தலை சிறந்த கலைஞர். நம் இந்திய வரலாறு கண்ட - காணக்கிடைக்காத - மாபெரும் அதிசயம். அவர் ஒரு மிகப்பெறிய சாதனையாளர். தன் கொள்கைகளை மிகவும் தெளிவாக மக்களுக்கு உரைத்தவர். அவர் படங்களில் கதை வசனம் பாடல்கள் இவை மூன்றுமே மிகவும் சுவையாக இருக்கும்.
அவருக்காக பாடல்கள் எழுதப்பட்டன அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல்: உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
.
காதல், தேசப்பற்று, வீரம், விவேகம், தாய்ப்பாசம் என்று பல நல்லு கருத்துள்ள பாடல்கள் அவர் படங்களில் இடம் பெற்றுள்ளன. மக்கள் திலகம் என்று சரியான பெயர் அவருக்கு சூடினார்கள்.
அவர் நடிப்பில் சண்டை காட்சிகளில் மட்டும் அல்லாமல் நாட்டியத்திலும் தன் திறமையை காட்டினார். ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்
என்னை மிகவும் கவர்ந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
தி.பா.ஆனந்த
துபாய்
-
-பண்ருட்டி இராமச்சந்திரன்-
எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால், எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம் தான் இருந்தது.
அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்றபிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
http://i50.tinypic.com/1q1thg.jpg
இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும் கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர்.எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் "என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக் கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்" என்று சொல்லி சிரித்தார்.
`புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா'என்று கேட்டேன். அதற்கு அவர், "நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால்,மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப்பெற முடியும். அதற்கு மக்கள் நம்மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயற்பாடுகள் இருக்க வேண்டும்"என்றார்.
நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.
எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி,மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். "நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற"என்ற பாட்டுஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.
1984 இல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.
அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். `மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன்பெறலாம்.ஆனால், குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்" என்பார்.
அரிசி விலையையும் பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்குத் திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறுவிவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம்போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.
ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது.அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.
எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான்.
எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாட்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தை களுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படி சொன்னாராம்.
அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்தக் குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால் தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.
சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூடசில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்துத்தெரிவித்தனர். இதனால், ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால், எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும். ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.
இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்துப் பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.
"ஆளும் வளரணும், அறிவும் வளரணும்- அதுதாண்டா வளர்ச்சி", என்பது எம்.ஜி. ஆரின் படத்தில் வரும் பாட்டு.
நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும் மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983 ஆம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவுசெய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால், இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்கு தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தத��
�.
உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது.இந்தியாவின் சார்பில் ஐ.நா. சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார்.இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.
உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும் நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர் பெயரும் ஐ.நா.சபையில் இடம்பெற்றது.
முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!
-தினமணி-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தங்கத் தலைவனின் நினைவுநாள் செய்திகள்இன்னும்
அதிகஅளவில் நாளை நமது ரத்தத்தின் ரத்தமான
உடன்பிறப்புக்கு
-
அதேபோல் வேறு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை
முடிந்தால் திரியில் வெளியிடவும்
நன்றி
-
MGR STATUE IN SAMADHI IN 3D - A TRIBUTE ON REMEMBRANCE DAY
http://i1146.photobucket.com/albums/...cal2013afw.jpg
ANAGLYPH IMAGE VIEW WITH 3D GLASSES
-
[QUOTE=esvee;991745]Dinamalar
http://i47.tinypic.com/14a90gj.jpg
திரையுலகிலும், அரசியல் வழியிலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர்; அனைவர் இதயத்திலும் குடியிருந்த கோயில்; ஏழைகள் நெஞ்சில், எங்கள் வீட்டு பிள்ளை; தமிழகத்தின் நிரந்தர தலைவன்'- அந்த மூன்றெழுத்தை அறிந்து கொள்ள, இந்த வார்த்தைகளே போதும். கனவில் வந்தாலும் விசில் பறக்கும், திரையில் வந்தால் வசூல் பறக்கும்; ஆம், எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்துக்கு, தமிழகம் தந்த சிம்மாசனம், விலை மதிக்க முடியாதது. "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்,' என்ற, பாடல் வரிகளை, தனக்கே சாத்தியமாக்கியவர். ரசிகர்களை தள்ளி நிற்க வைத்தே பார்க்கும் இதே சினிமா உலகில், அவர்களை கட்டித்தழுவி கரம் குலுக்கியவர், எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும், தன் பின்னால் கொண்டு வர, இவர் பயன்படுத்தி ஆயுதம், "சிரிப்பு'.
அந்த வெள்ளந்தி சிரிப்பிற்கு, வெள்ளைக் கொடி காட்டிய கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது. தன் வாழ்நாள் முழுவதையும், "நடிப்பு, அரசியல், ஆட்சி,' என, மக்களுக்காய் அர்ப்பணித்த, உன்னத மனிதர் அவர்.
நாளை (டிச.,24) எம்.ஜி.ஆர்., நினைவு நாள் : ரசிகர்களை ஏங்க வைத்து, தன் ஆத்மாவை தூங்க வைத்த, அந்த அற்புத மனிதரை, யாரும் நினைக்கவில்லை; ஆம், மறந்தால் தானே நினைப்பதற்கு! அவருடன் நெருக்கத்திலிருந்த மதுரை ரசிகர்களின் நினைவுகள் இதோ:
சோலை நாராயணன்: 1974ல், "புரட்சி பயணத்திற்காக' மதுரை வந்த தலைவர், அனைத்து வார்டுகளிலும் கொடி ஏற்றினார். கூடலழகர் கோயில் அருகே வந்த போது, அதிக நேரம் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில், ஏற்ற வேண்டிய கொடியை சிக்கல் செய்து கொடுத்தோம். வாங்கிய வேகத்தில் சிக்கலை எடுத்து, கொடியை ஏற்றியவர், எங்கள் எண்ணத்தை புரிந்து, சிறிது நேரம் நின்று சென்றார்....' என, அன்பு காட்டியவர். தலைவரை சந்திக்க சென்ற நாட்களும், அவர் காட்டிய அன்பும், மறக்க முடியாதது. வி.கோட்டை: சென்னைக்கு தலைவரை பார்க்கச் செல்வோம். "வாங்கப்பா... எப்போ வந்தீங்க? சாப்டீங்களா? அடிக்கடி வர்றீங்க, எதுல வர்றீங்க?' என, எங்களிடம் கேட்டார். "லாரியில் வாறோம்...' என, சேர்ந்து பதில் சொன்னோம். அருகில் நின்ற குஞ்சப்பனிடம், "பார்த்தீயா... லாரியில் வாறாங்களாம்... உன்னையும் லாரியில் தான் அனுப்பணும்,' என, கிண்டலடித்தவர், "சாப்பிட்டு போங்கய்யா...' என, அன்பு கட்டளை வைத்து நகர்ந்தார். ஒரு முறை அமெரிக்கா கிளம்பிக் கொண்டிருந்தவரை, சந்தித்தோம். அப்போது அவருக்கு பால் கொண்டுவந்தனர். என்னுடன் வந்த நண்பர், "தனக்கு அந்த பால் வேண்டும்,' எனக்கேட்டார். சிரித்தபடி, தலைவரும் கொடுத்தார்; வாங்கிய வேகத்தில், தலைவரிடம் நீட்டினார், அந்த நண்பர். "என் வீட்டு பாலை எனக்கே தர்றீங்களா...' என, சிரித்தபடி, தலைவர் ருசித்தார். ரசிகனின் எந்த ஆசையையும், அவர் நிறைவேற்றத் தவறியதில்லை. தாய், தந்தை கற்றுக் கொடுத்ததை விட, தலைவரிடம் கற்றது அதிகம்.
கே.ஹமீது: கட்சி துவங்கிய உடன், மதுரையில் எம்.ஜி.ஆர்., நடத்திய கூட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்பு; "மைக் செட்' மறுக்கப்பட்டது. மைக் செட் அமைப்பாளரான என்னிடம், ஐந்து ஒலிபெருக்கிகள் தான் இருந்தன. வெளியூரிலிருந்து, 50க்கு மேல் வாடகைக்கு வாங்கி, ஏற்பாடு செய்தேன். அந்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, அரசியல் திருப்பம் தந்தது. அன்று முதல், தென் மாவட்டத்தில் எந்த கூட்டம் நடத்தாலும்,
"திருப்பரங்குன்றம் "மைக் செட்'டை "புக்' பண்ணுங்க...' என, கூறிவிடுவார். அவர் குரலுக்கு, நான் தான் பொருத்தமானவன், என்பதை, பலமுறை கூறுவார். திருச்சி விழா ஒன்றில் "மைக் செட்' போட்டுக்கொண்டிருந்த என்னை அழைத்தவர், "உனக்கு என்ன உதவி வேண்டும்...' எனக்கேட்டார். "எதுவும் வேணாம் தலைவரே...' என, நான் கூறியதும், "எல்லாரும் இப்படியே சொல்லுங்க... காளிமுத்துவை கூட்டிட்டு என்னை வந்த பாரு...' என, கட்டளையிட்டார். தன் விசுவாசிகளை கைவிடக்கூடாது என்பதில், அக்கறை காட்டுபவர் அவர். இவ்வாறு மனம் திறந்தனர். தன்னைச் சார்ந்தவர்களுக்கு, உதவுவதை, கடைசி வரை எம்.ஜி.ஆர்., பின்பற்றினார். அது தான், மறைந்த பிறகும் அவரை, அனைவர் மனதிலும் பிறக்க வைத்தது.
-
article - net
1977 ல பெரிய வெள்ளம் வந்தது, நாங்கள் இருந்தது 3 வது மாடி, காலையில் பார்த்தால் , ஒரே தண்ணி, 10 அடிக்கு மேல், முதல் மாடி வரை வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது , வீட்டுக்கு முன் 50 அடி தள்ளி ஓடி கொண்டிரிந்த அடையாறு நதி , வழிந்து, ஊர் வழியாக ஓடியது. கண் முன்னே, மாடுகள், குடிசைகள், ஒரு சில பொனங்கள்...எல்லாம் போனது,... காலை நேரம் என்பதால், எல்லாரும் வீட்டில், அப்பா என்னை பிடித்து ஒரு ரூம்ல் அடைத்து தாழ் போட்டாச்சு, நான் அண்ணாவின் சைக்கிள் சாவியை எடுத்து, ரூமை திறக்கலின்னா சாவியை வெள்ளத்தில் தூக்கி போட்டுடுவேன்னு பயமுறுத்தினேன்., கதவு திறந்தது ...3 வது மடியில் இருந்து ஒரே ஜம்ப், நீஞ்சி கொஞ்சம் தள்ளி உள்ள எதுத்த பில்டிங்க்கு போனேன், அங்கிருந்து ஹெலிகாப்டர் வந்து ஆட்களை எடுத்து போவதை பாத்தேன், தண்ணி தேங்கிய தண்ணி இல்லை, நன்றாக ஓடுகிற வெள்ளம், மாலை வரை அங்கேயே தங்கி, தண்ணி சற்று வடிந்தவுடன் வீட்டுக்கு திரும்பி வந்தேன்... அடுத்த நாளே எல்லாரும் கோட்டூர் புரத்தை விட்டு , மாமா வீட்டுக்கு போனோம்.
ஒரு வாரம் கழித்து வந்த பொழுது , MGR கோட்டூர்புரம் வந்தார். , . நானும் இன்னும் சில பசங்களும் MGR இன் நீல அம்பசிடர் காரை பின் தொடர்ந்து ஓடி, அவரிடம் கை கொடுத்தோம் , தம்பி... பாத்து பாத்து ,என்று சொன்னது இன்னமும் நினைவில் நிற்கிறது. MGR பற்றி சொல்லவேண்டுமானால், நீங்கள் எந்த கலர் வேண்டுமானலும் கற்பனை செய்து கொள்ளுங்கள் , பால் வெண்மை , ரோசா பூவு மாதிரி சிவப்பு , ..அல்லது தங்க நிறம் ..... ஆனால், MGR நேரில் , கற்பனையை விட ஒரு 50 % அழ்காக வசீகரமாக இருந்தார். .
MGR கூட போட்டோ எடுக்க முடியலை,
-
-
-
-
-
-
http://i46.tinypic.com/2i91ceq.jpg
பெற்றால்தான்பிள்ளையா படப்பிடப்பு சமயத்தில்
-
-
http://i45.tinypic.com/14kwos7.jpg
தாய் சொல்லைத் தட்டாதே 100 நாள் விழாவில்
-
-
-
-