http://www.youtube.com/watch?v=9TCbJhMx7ak
Printable View
படத்தை பற்றி :
முதலில் சாதாரன வக்கீல் ஜூனியர் என்று அறிமுகம் ஆகும் நடிகர் திலகம் , பிறகு தன் சீனியர் தன்னை கேட்கும் பொது அவர் அது theft
இல்லை , mutual exchange என்று சொல்லும் வசனம் நான் மிகவும் ரசித்த ஒன்று , பிறகு அவர் VKR , நம்பியார் உடன் பேசும் வார்த்தைகள் , முதல் சந்திப்பில் razor ஷார்ப் , ஆனால் ஒரு பஞ்ச் dialouge , எதுவும் இல்லாமல் , கத்தாமல் கூலாக டீல் செய்யும் விதம் நன்று
மெதுவாக செல்லும் படத்தில் , ஸ்ரீ பிரியா விதவையாக வந்து நிற்கும் பொது பக்கு என்று இருக்கிறது , சிவாஜி சார் மெதுவாக காபி குடிக்கும் பொது , அதை கொட்டி விட்டு , கண்ணை கசக்கும் காட்சி , சிவாஜி சார் brand of அக்டிங் - superb
பின்பு ஸ்ரீ பிரியா விடம் தான் இப்போ நிம்மதியாக இருபதாகவும் மீண்டும் உறவை புதுபிக்க முடியாது என்று சொல்லும் இடம் நிதர்சன உண்மை
KR விஜயா ஸ்ரீ பிரியா உடன் சிவாஜியை வீட்டுக்கு அனுப்பி வைத்து கோவிலுக்கு சென்று விட்டு , வரும் பொது , உண்மையை அறிந்து கொண்டு வதும் , ஸ்ரீ பிரியா காபி போட்டு தரட்டுமா என்று கேட்க , என் taste என் மனைவிக்கு தான் தெரியும் என்ற உடன் , இதை கேட்கும்
KR விஜயா உங்கள் taste என்ன என்று தெரிய வந்தது என்று சொல்லி ,இப்போ காபி கொடு குடிப்பார் என்று சொல்லும் காட்சி சபாஷ்
நான் பார்த்த வரையில் நடிகர் திலகத்தின் படம் எப்படி இருந்தாலும் அதில் நடிகர் திலகத்தின் நடிப்பு குறை சொல்ல முடியாது , இதிலும் அபப்டி தான்
அடுத்தது சிரஞ்சீவி
அண்ணனோட கருத்ததான் திருத்தினீங்க. அண்ணனுக்கு ஆதரவா நாலு வார்த்தைகள் எழுதவுமா கூடாது. திரைப்படங்களில் வில்லன்களை மட்டுமல்ல, காமெடியன்களையும் அனுமதிப்பவர்கள், இந்த திரியில் எப்போதாவது அத்திபூத்தாற் போல தோன்றி சவால் விட்டு மறையும் எங்கள் அண்ணனை அனுமதிக்கக்கூடாதா? இதற்கு மேல் நானொன்றும் செய்யமுடியாது. ஆனால் நீங்கள் அனுமதித்தால், அண்ணனும் ஏற்றுக்கொண்டால், விதவிதமாக சவால் விடுவது பற்றி அண்ணனுக்கு மேலும் எடுத்துரைப்பேன். உதாரணத்திற்கு புதுப்புது பெயர்களை, புதுப்புது மொழிகளின் வார்த்தைகளைச் சொல்லி அந்த படங்களில் நடித்திருக்கிறார்களா, அந்த படங்கள் வெளியாயிருக்கின்றனவா என்று சவால் விடுவார். தவறிப்போய் அந்தமாதிரிப்படங்கள் வெளியாயிருந்தால், மன்னிப்பு கேட்டுவிட்டு 1980 முன் அந்த படங்கள் வெளியாயினவா என்பார். அப்படியேயிருந்தால் மன்னிப்பு கேட்டுவிட்டு 100 நாட்கள் ஓடினவா என்பார். அப்படியேயிருந்தால் மன்னிப்பு கேட்டுவிட்டு குறைந்த தியேட்டர்களில்தானே என்பார். அதிக தியேட்டர்கள் என்றால் மன்னிப்பு கேட்டுவிட்டு வெள்ளிவிழாப்படமா என்பார். அப்படியேயிருந்தால் மன்னிப்பு கேட்டுவிட்டு மறுபடியும் குறைந்த தியேட்டர்களில்தானே என்பார். அதுவும் அதிக தியேட்டர்கள் என்றால் மன்னிப்பு கேட்டுவிட்டு வேறொரு வருடத்தை சொல்லி அந்த வருடத்தில் இருக்கா என்பார். இதற்கு மேலும் யாராலாவது பதில் சொல்லமுடியுமா? அண்ணன் வெற்றி பெறுவார். அப்படியுமில்லாமல் யாராவது பதில் கொடுத்தால் அண்ணனுக்கு இருக்கவே இருக்கிறது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம். எல்லாரும் காலி. அதற்கும் நிற்பவரிருந்தால் அண்ணனின் பிரம்மாஸ்திரம் பல திருத்தங்கள் கண்ட 'அடிமைப்பெண்' விளம்பரம் வரும். அண்ணனுக்கே வெற்றி. ஐயய்யோ அண்ணனின் வெற்றி ரகசியத்தை சொல்லிவிட்டேனோ!!! பரவாயில்லை. இருந்தாலும் அண்ணனை யாரும் வெற்றி கொள்ளவே முடியாது. அவர் இது போன்ற புதுப்புது யுக்திகளுடன் வந்து வீழ்த்தவே முடியாத வெற்றி பெறுவார்.
Mr Rahul,
Do post your review of Oorum Oravum one of NT's best movie in his
later part.
Regards
BANGALORE TAMIL SANGAM - TO DAY 7PM
NT PHOTO - OPENED BY SOWKAR JANAKI MADAM AT TAMIL SANGAM .
http://i62.tinypic.com/dewaoy.jpg
TAMIL SANGAM - HALL
http://i61.tinypic.com/111ifye.jpg
SOWKAR MADAM SPEECH
http://i61.tinypic.com/ftpz7d.jpg
RAMKUMAR AND DIRECTOR R.SUNDARARAJAN
http://i58.tinypic.com/2nuirl0.jpg
Dear Vinod Sir,
Thank you so much for attending the function and uploading the snaps taken during the event. But sklightly out of focus probably due to the fact it was taken from mobile phone. Nevertheless thanks a tonne for your gesture!
Regards
mr vinod sir very glad you have attened NT function this attitude or culture should prevail betwee our two groups always otherwise later dates all of us will not be respected by future generations.
thanks how AO doig at bagalore. AO oe of my fav movies seen twice in the first week itself with one of MGR fan by name jaga my very close rfriennd those days. unfortunately he is no more now, pasumaiyana ninaivugal.
வினோத் சார் , மிகவும் நன்றி உருவ பட விழாவை இங்கு பதிவிட்டதற்காக - பாரபட்சம் இல்லாமல் நீங்கள் பதிவுகளை போடுகிண்டீர்கள் - ஆனாலும் சிலர் அந்த நல் உறவை வளர்க்க தயாராக இல்லை - உண்மையை , உண்மை என்று சொல்லவும் தயிரியம் இல்லாமல் இருப்பதனால் நாம் அருகே இருந்தும் வேற வேற planet இல் வாழ்ந்து கொண்டு இருகின்றோம்
என் பதிவுக்கு ஒரு பதிலை எதிர் பார்த்தேன் - ஒரு பொய்யை பல பேர் கூறி உண்மை என்று நம்ப வைத்து கொண்டிருக்கும் அந்த பந்துலுவின் நஷ்ட்டத்தை பற்றித்தான் - உங்களுக்கு கண்டிப்பாக இந்த விஷயமும் தெரிந்திருக்கும் - பந்தலு அந்த பக்கம் வந்து சேர்ந்த வுடன் பல படங்கள் எடுத்த பின் மூன்று மாதம் நோய் வாய்ப்பட்டார் - NT மிகவும் busy யாக இருந்த நேரம் அது - பந்துலுவின் உடல் நிலையை கேள்விப்பட்டு , ஷூட்டிங் ( ooty ) யை ரத்து செய்துவிட்டு தன மனைவியுடன் அவசரமாக அவர் வீடு சென்று பார்த்தார் - ஆறுதலும் , பண உதவியும் உடனே செய்தார் - பந்தலுவினால் பேச கூட முடியவில்லை - அவருடைய கண்ணீரை துடைத்துவிட்டு வீடு திரும்பினார் - வேறு எவராவது NT யின் position இல் இருந்திருந்தால் பந்துலு இருந்த திசை பக்கம் தலை வைத்து கூட படுத்திருக்க மாட்டான் - நன்றி என்றால் இது தான் - தன்னை போல பிறரை எண்ணும் தன்மை அவரிடம் அளவுக்கு மீறி கொட்டிக்கிடந்தது - இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் - உண்மைக்கு புறம்பாக அவரை பற்றி பேசினால் ஏன் எங்கள் இரத்தம் கொதிக்கின்றது என்று - NT யின் பெரிய தவறு - மற்றவர்கள் போல விளம்பரத்தை விரும்பாமல் இருந்ததுதான்
அன்புடன் ரவி
The award for the best joke of the year goes to -----------:-D:):smile2::lol2::rotfl::happydance::clap:
நகைச்சுவை நம் திரியில் சுத்தமாக குறைந்து விட்டது - அப்படி ஒன்று , இரண்டு பதிவுகள் போட்டாலும் சிரிப்பவர்கள் நம் திரியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை - சிரித்தால் தானே கவலை மறைய - சில நாள் தானே சுமைகள் குறைய என்று தலைவர் பாடி இருந்தாலும் நாம் அந்த பாடல் வரிகளை serious ஆக எடுத்து கொள்வதில்லை .
இங்கு நகைச்சுவை சரக்கு இல்லாததினால் - மற்ற திரியிலிருந்து கடன் வாங்க வேண்டியதாகி விட்டது - எவ்வளவு நகைசுவையுடன் அவர்கள் திரியை எடுத்து செல்கிண்டார்கள் - நாமும் கற்று கொள்ள வேண்டிய பாடம் - ஒரு உதாரணத்திற்கு ஒரு நண்பர் அங்கே கீழ் கண்டவாறு எழுதிஉள்ளார் - courtesy - Net ஆம் :-D:-D
"While multiplexes like SPI cinemas and old cinema-houses like AVM and Albert had asked for the movie in Chennai, other theatres like Devi Paradise jumped into the fray and asked for a print on Wednesday, said G Chokkalingam of Divya Films, the firm that bought the original film and restored it digitally. And astonishingly, despite indie films like Adiyum Andhamum and Kadhal Solla Aasai releasing on Friday, the advance reservation in uptown multiplexes like Escape have been mind-blowing. “Some of the shows are nearly full all the way up to Wednesday, which almost never happens these days,” confirmed a theatre official. Coming from the same firm that digitally remastered and released Sivaji Ganesan’s Karnan, the MGR blockbuster has already outdone his old rivals film by quite a stretch. :omg:“Karnan was a period film, while Aayirathil Oruvan was a mass flick in 1965. Obviously, it will make waves now,” said distributor R Selvam.- courtesy net
இதை படித்து விட்டும் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் - உங்களுக்கும் நகைச்சுவைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்றாகிவிடும் - கொஞ்சம் சிரிங்க பாஸ் !!!
BRpanthulu, good hearted person was surrouded by friends who have guided him in the wrong directions when muradan muthu was about to be compeled for release Navarathri also ready for relese the question which has to made as 100 th picure of NT. IT was decided to make navarathri as 100th picture by NT's brother who was manging all his busineses and so diwaliday 1964 MM opened the screens as morning show 10am at city theatres as 99th film of NT and ihappened to see at PRABHATH mannady area
navarathri declared as 100th picture opened the screens same day matinee shows,thus by making the tally as 100.
i saw it first show at maharani as we had good connections with theatre managements those days.
As BRP wanted to release MM as 100 and do very big business which wasot possible
he made swiftdecision of switch over to other side.
Dear Vinod sir,
Thanks for the coverage of NT function
Dear Vasudevan sir,
Thanks for your comments, will defnitely write about oorum Uravum very soon
Dear KC Sekar sir,
Thanks for your kind words
அன்புள்ள ராகுல் ராம் - அருமையாக ஊருக்கு ஒரு பிள்ளையை அலசி உள்ளீர்கள் - 80 க்கும் மேல் nt பல புரட்சிகளை பண்ணியுள்ளார் - அவைகள் அதிகமாக வெளி வரவேண்டும் .
நீங்கள் அடுத்து சிரஞ்சீவியை அலசுபோவதாக அறிந்தேன் - மிகவும் கவனமாக கையாளவும் - இந்த படம் சில மாதங்களுக்கு முன் இந்த திரியில் பல வாக்கு வாதங்களை ஏற்படுத்தியது - சிரஞ்சீவியாக பதிவுகள் போட்டுகொண்டிருந்த சிலர் வெளிநடப்புக்கு உள்ளனார்கள் - திரி மிகவும் பாதிக்கப்பட்டது - வார்த்தைகள் மிகவும் தடித்தே வெளி வந்தன !!
எந்த படத்தை பற்றியும் எழுதும் முன் அந்த படம் ஏன் உங்களை கவர்ந்தது - அதன் தாக்கம் என்ன என்று கூறினால் பதிவுகள் இன்னும் நன்றாக இருக்கும்
படிக்க காத்துகொண்டுருக்கின்றோம்
Nandraaga vai valikka siriththu vittom boss. eppavume kizhavi manjal kuliththa pazhaiya vishayangalaiye ezhudhipp pazhakkap pattavarkalukku nadappu unmaigalai unara innum konjam kaalamagum. AO a film expected to do wonders from their side, oru vaarathileye neettip paduththu vittaduhey! idhaiththan naam Karna Kadooram endru solgirom!!
அன்புள்ள ராமஜெயம் சார் - நாம் எவ்வளவுதான் உண்மையை கூரை மீது நின்று கூவினாலும் அவர்கள் செவிகளுக்கு எட்டவே எட்டாது - நீங்களே காந்திஜியை கோட்சே சுடவில்லை - bathroom இல் அவர் குளிக்கும் பொழுது மனம் உடைந்து தூக்கில் தொங்கி விட்டார் என்று உரக்க கூறுங்கள் - அதுவே உண்மையாகி - பல சேனல்களிலும் வெளியாகி , breaking news ஆக வெளிவந்து அடுத்த தலை முறையின் சரித்திர புத்தகத்தில் காந்திஜி ஒரு கோழை - உல் பூசல்களை தயிரியமாக எதிர் கொள்ள தெரியாமல் தற்கொலையை நாடினார் - கோட்சே எவ்வளவு தடுத்தும் காந்திஜியினால் தன தாழ்வு மனப்பான்மையை போக்கிக்கொள்ள முடியவில்லை - உண்மையில் கோட்சே வைத்தான் father of nation என்று சொல்ல வேண்டும் - காந்திஜி யை வேண்டுமானால் chittappa of the nation என்று கூறலாம் - இப்படி நம் எதிர் காலத்தில் நம் வாரிசுகள் படிப்பார்கள் --
பொய் ஒரு நடிகையை போல - அதிகமான மேக்கப் தேவை - நேரில் பார்த்தால் படு விகாரமாக இருக்கும் - படத்தில் grpahic effect மூலம் 80 வயது கிழவியை கூட டூயட் பாட வைப்பதில்லையா - அதே மாதிரி பொய்யை நன்றாக குளிப்பாட்டி , பவுடர் போட்டு , சென்ட் தெளித்து - முடிக்கு godrej dye அடித்து , பல் செட்டையும் மாத்தி - நடமாட விடுகிறார்கள் . பொய்யை பாது காக்க பத்து பேராவது வேண்டும் - அதற்கு உண்மை வெளிதெரியும் வரைதான் ஆயுசு !!!
உண்மைக்கு மேக்கப் தேவை இல்லை - என்றுமே அழகாக இருக்கும் தலைவர் மூன்று தெய்வத்திலும் , நெஞ்சிருக்கும் வரையிலும் வந்த மாதிரி - உண்மை தனியாகத்தான் இருக்கும் - அதற்க்கு பத்து ஆட்கள் தேவை இல்லை - ஆர்பாட்டங்கள் தேவை இல்லை - ஆனால் பலர் சூழ்ந்துள்ள பொய்யை கொல்லும் திறமை அதற்க்கு என்றும் உண்டு - ஒரே ஒரு weak point - உண்மை அதிகமாக உறங்குவதையே விரும்பும் - அதனால் பொய்யின் அட்டகாசங்கள் வெற்றி அடைவது போல தோன்றும் - ஆனால் ஒரு நாள் பொய் இறக்கும் போது அது ஒரு அநாதை பிணம் போலத்தான் பொதைக்கபடும் .
நாம் என்றுமே உண்மையின் பக்கத்தில் இருப்பவர்கள் - அது தற்காலிகமாக உறங்குமே தவிர என்றுமே நம் தலைவர் மாதிரி சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் - அதன் வலிமை கர்ணன் படம் போல பத்தாயிரம் படங்கள் வந்தும் பத்தாயிரத்தில் ஒன்றாக நின்று தமிழ் திரை உலகத்திற்கே பெருமை சேர்கின்றதே - இதன் பக்கமே என்றும் நிற்போம்
அன்புடன் ரவி
:):smokesmile:
Dear Vinod Sir,
Thanks for your posts about Nadigarthilagam Portrait opening function held at Bangalore.
Dear Ravi sir,
Thanks for your advice, I will definitely say why the movie impressed me, Also I will be careful about my choice of words while analyzing the movie
உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
அந்த திரியில் வருவது பாதி - அதில் தூங்கி கிடப்பது நீதி !!
தோல்வி என்றால் அது தோல்வி - அதை வெற்றி என்றால்
கிடைப்பது கேளி - பொய்யும் உண்மை போல நடிக்கும் -அது
நாள் பட நாள் பட புரியும் -- ( உள்ளம் என்பது ---)
http://youtu.be/Jicjjb8Co7k
ஆயிரம் பொய்கள் சொல்லி வளர்கின்ற திரியே போற்றி -அருள் செய்யும் முகத்தை பார்த்து இருள் சேர்க்கும் திரியே போற்றி
சந்திரன் நலமே வாழ்க எங்கள் நாயகனை மட்டம் தட்டும் திரியே போற்றி
நானிலம் உள நாள் மட்டும் உண்மையை சொல்லவே மாட்டாய் - போற்றி போற்றி !!!!
http://youtu.be/xsCtzX-9TiU
Attachment 3206Attachment 3206 Clear Clipboard 75 1/1
பார்த்ததில் பிடித்தது -19
இந்த பதிவில் நாம் பார்க்க போகும் படம் 1984 ல் வந்த அதிகம் அலச படாத படமான சிரஞ்சீவி , ஆலயமணி ,ஆண்டவன் கட்டளை(1964), அன்பு கரங்கள் (1965) படத்தில் நடிகர் திலகத்துடன் கை கோர்த்த பின் , மக்கள் திலகத்துடன் அடிமை பெண் , குடி இருந்த கோவில் , உழைக்கும் கரங்கள் , பல்லாண்டு வாழ்க , இன்று போல் என்றும் வாழ்க போன்ற படங்களை கொடுத்தவர் , நவகராக நாயகி , தாய் மூகாம்பிகை , வருவான் வடிவேலன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மீண்டும் நம் நடிகர் திலகத்துடன் சேர்ந்த படம் தான் இந்த சிரஞ்சீவி
கப்பலை சுற்றி எடுக்க பட்ட படங்கள் என்ற உடன் என் நினைவுக்கு வரும் படங்கள் , கப்பல் ஒட்டிய தமிழன் , ஆயிரத்தில் ஒருவன் ,
காவிய தலைவன் , மன்மதன் அம்பு , புதிய பறவை , மூன்று எழுத்து என்று பல படங்கள்
இதில் சண்டை , காமெடி , adventure , thriller என்று பல genre படங்கள் வந்து உள்ளது.
பல படங்களில் கப்பல் என்பது சில காட்சிகளில் மட்டுமே வரும் , ஆயிரத்தில் ஒருவன் , மன்மதன் அம்பு படத்தில் கப்பலின் பங்கு சற்று அதிகம் , இந்த லிஸ்ட் ல் சிரஞ்சீவி படத்தையும் சேர்க்கலாம்
Infact முழு படமும் கப்பலில் எடுக்க பட்டது இது மட்டும் தான் என்று நினைக்கிறன்
கதை :
டேவிட் சிரஞ்சீவி (சிவாஜி சார் ) கப்பலில் ஒரு topaz அதாவது கிளீனிங் staff.
தன் வாழ்நாள் முழுவதும் அந்த கப்பலிலே கழித்தவர் ,கல்யாணம் ஆகாதவர் , அவருக்கு எல்லோரையும் பிடிக்கும் அதனால் எல்லோருக்கும் அவரையும் பிடிக்கும் கதை சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து தொடங்குகிறது , அந்த கப்பலில் பிரயாணம் செய்ய வரும் நபர்கள்
ஸ்ரீப்ரியா (நித்யா ) மனநிலை பாதிக்க பட்டவர் , தினேஷ் (சரத் பாபு ) டாக்டர் , இப்பொழுது கைதாகி , இந்தியாவுக்கு கொண்டு வர படுகிறார் , மேடம் D souza (சௌகார் ஜானகி) பெரிய பணக்காரி தன் சொத்தை அனாதைகளுக்கு எழுதி வைத்து விட்டு , இப்போ இந்தியாவில் இருக்கும் ஆஸ்ரமத்துக்கு ஒரு பெட்டியை கொண்டு போகுகிறார் , ரேகா என்ற பெண் தினேஷின் காதலி , அவரை காப்பற்றி கூட்டி செல்ல கப்பலில் வருகிறார் , சத்யராஜ் , விஜயகுமார் மற்றும் பலர் D Souza வின் வைரத்தை கொள்ளை அடிக்க வருகிறார்கள் , சிரஞ்சீவி கூட ஒரு சின்ன பையன் மணி விடுமுறையை கழித்து விட்டு வருகிறார் .
இவர்கள் தான் படத்தின் பிரதான பாத்திரங்கள்
கப்பல் கிளம்பிய உடன் கேப்டன் , சிரஞ்சீவியை அழைக்கிறார், அங்கே செல்லும் சிரஞ்சீவி தன் கடைசி பயணம் இது தான் என்று தெரிவிக்க படுகிறது , ஆம் அவர் ஒய்வு பெரும் விதை எட்டி விட்டார் என்று கேப்டன் சொல்லி விடுகிறார் , மேலும் 7 வயது முதல் இந்த கப்பலில் இருப்பதால் சிரஞ்சீவிக்கு VIP status கொடுக்க படுகிறது , அதை மறுக்கும் சிரஞ்சீவி ஒரு topaz ஆகவே சென்னைக்கு வந்து சேர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ,அது ஏற்று கொள்ள படுகிறது
கப்பலில் அனைவரும் அவருக்கு பிரிவு உபசாரம் தருகிறார்கள்
அந்த பார்ட்டி முடிந்த உடன் மேடம் D Souza சிரஞ்சீவி கூட பேசி கொண்டே நடக்கிறார் (கப்பலுக்கு வந்த உடன் தன் வைர பொட்டி கிழே விழந்த உடன் அதை சிரஞ்சீவி எடுத்து தந்த காரணத்தினால் ஒரு நட்பு வளர்கிறது )
மேடம் D Souza தான் இந்தியா செல்லும் காரணத்தை சொல்லுகிறார்.
தனக்கே தெரியாமல் சிரஞ்சீவி வைர பொட்டியை காப்பாற்றுகிறார் . அப்பொழுது மேடம் D souza தன்னுக்கு வந்த மிரட்டல் கடிதத்தை காட்டுகிறார் . அதில் அந்த பெட்டியை தன்னுக்கு தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று எழுதி உள்ளது , இதை படிக்கும் சிரஞ்சீவி ஒரு கருப்பு உருவத்தை பார்க்கிறார் , அவர் துரத்தி செல்ல அது சத்யராஜ் இருக்கும் அறைக்கு சென்று மறைந்து விடுகிறது , சிரஞ்சீவி D souzaக்கு தைரியம் சொல்லுகிறார்
சிரஞ்சீவியை கொல்ல ஐஸ் கிரீமில் விஷம் கலக்க படுகிறது , அதை மணி சாப்பிட அவர் உயிருக்கு ஆபத்து வருகிறது , நல்ல வேலையாக டாக்டர் தினேஷ் சிகிச்சை செய்ய சிறுவன் மணி பிழைத்து விடுகிறார் . அதனால் அவர் கையில் விலங்கு கழட்ட படுகிறது .
சிரஞ்சீவி letter ல் இருக்கும் கையெழுத்து யார் உடையது என்று ஆராய்ச்சி செய்கிறார் , அப்பொழுது அவர் தேங்காய் ஸ்ரீநிவாசன் , மனோரமா இருவரையும் சந்திக்கிறார் (இருவரும் ஜோசியக்காரர்கள் )
இவர்கள் கையெழுத்து ஒத்து போகததால் வெளியே வரும் சிரஞ்சீவி மீண்டும் அந்த கருப்பு உருவத்தை பார்க்கிறார் , அதை துரத்தி போகும் பொது அது நித்யா என்று தெரிய வருகிறது , அதுவும் அவர் பைத்தியம் இல்லை என்றும் தெரிய வருகிறது , மேலும் அவரும் தினேஷும் காதலர்கள் என்றும் அவர் கொலை செய்ய வில்லை என்றும் நித்யா சொல்லுகிறார் (தினேஷ் காலேஜ் ல் நடந்த கொலைக்கு குற்றம் சாட்ட படுகிறார் , ஆனால் அந்த நேரத்தில் அவர் நித்யா உடன் இருந்து இருக்கிறார் )
D souza வின் உடல் நலம் மோசம் ஆகவே தன் வசம் உள்ள வைர பொட்டியை சிரஞ்சீவியிடம் கொடுக்கிறார்.
சிரஞ்சீவி திருடர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் .
பெட்டியை தேடி வரும் நபர்களின் கையில் D souza வின் டைரி கிடைகிறது
D souza அழைக்கவே அவரை பார்க்க செல்லும் சிரஞ்சீவியிடம் பாவ மனிப்பு கேட்கிறார் (தன் இளமை காலத்தில் தவறு செய்ததாகவும் அதில் ஒரு குழந்தைக்கு தாய் ஆனதையும் , அந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய பாவத்துக்கு தான் பாவ மனிப்பு )
இதை கேட்ட சிரஞ்சீவிக்கு அதிர்ச்சி , என் என்றால் அவர் தான் அந்த குழந்தையை கண்டு எடுத்து ஆனதை ஆஸ்ரமத்தில் சேர்கிறார் , அந்த குழந்தையின் முதுகில் ஒரு மச்சம் இருப்பதும் அவருக்கு ஞாபகம்.
டைரியை படிக்கும் சத்யராஜ் மற்றும் அவர் ஆட்கள் ரேகாவை D Souzaவின் மகளாக நடிக்க சொல்லுகிறார்கள் , பதிலுக்கு அவர்கள் தினேஷை விடுவிக்க உதவி செய்வதாக சொல்ல ரேகா சம்மதிக்கிறார்
நித்யாவை கெடுக்க வரும் சத்யராஜ்யிடம் இருந்து அவரை காப்பாற்றும் சிரஞ்சீவி அவர் முதுகில் இருக்கும் மச்சத்தை பார்க்கிறார்
நித்யா உடன் பேசும் சிரஞ்சீவி அவர் தான் உண்மையான D souza வின் வாரிசு என்று தெரிய வருகிறது
இதற்குள் கப்பலில் இருக்கும் அனைவரும் D souzavin அறைக்கு செல்ல அங்கே அவர் ரேகா தான் தன் மகள் என்று சொல்லி விட்டு இறந்து விடுகிறார் . பாவ மனிப்பு கொடுக்கும் நபர் உண்மையை சொல்ல கூடாது என்பது கோட்பாடு , அதை மீற முடியமால் தவிக்கிறார் சிரஞ்சீவி. D souza வின் இறுதி சடங்கை நடத்த கப்பலின் கேப்டன் சிரஞ்சீவியிடம் கொடுக்கிறார்
ஆனால் வில்லன் ஆட்களால் வைர பொட்டியை கண்டுபிடிக்க முடியமால் திண்டாடுகிறார்கள் ,
வாரிசு கிட்ட கொடுக்க வேண்டிய D Souza வின் சொத்தை தர மறுக்கிறார்
ரேகா உண்மையான வாரிசு இல்லை என்பதை மட்டும் சொல்லும் அவர் அதை எப்படி சொல்லுகிறார் என்பதை மட்டும் சொல்ல மறுக்கிறார் ,
(மத கோட்பாட்டுக்கு கட்டுப்பட்டு )
கப்பல் கேப்டன் கேட்டு கூட வைர பொட்டியை தர மறுக்கிறார் சிரஞ்சீவி , நடவடிக்கைக்கு உள்ளாகிறார் .
சிரஞ்சீவி எல்லோர் வெறுப்பையும் சம்பாதிக்கிறார் , ரேகா மணியிடம் பெட்டியை கேட்க மணியோ இந்த பெட்டியால் தான் சிரஞ்சீவிக்கு பிரச்சனை என்று பொட்டியை கொடுத்து விடுகிறார் , அதை கொண்டு பொய் சத்யராஜிடம் கொடுத்து , தினேஷ் விடுதலைக்கு உதவ கேட்கிறார்
சத்யராஜ் மறுக்கிறார் . வேறு வழி தெரியாமல் ரேகா நித்யாவிடம் தான் தான் unmai கொலைகாரி என்றும் தன் கற்பை காப்பாற்றிக்கொள்ள தான் தான் கொலை செய்ததாகவும் , மேலும் சத்யராஜின் தூண்டுதலின் பெயரில் தான் தான் D souza வின் வாரிசு என்று பொய் சொன்ன விஷியதையும் அனைவரின் முன்னணியிலும் சொல்லுகிறார்
தேங்காய் ஸ்ரீநிவாசன் கொலை செய்ய பட்ட நபரின் அண்ணன் என்று தெரிய வருகிறது , அவரின் இலக்கு தினேஷின் உயிர் , தன் தம்பி மேல் தான் தவறு என்று தெரிய வந்ததும் பழி வாங்கும் என்னத்தை மாற்றி கொளுகிறார்
சிரஞ்சீவி வந்து பொட்டியை காண வில்லை என்று தேட மணி அதை ரேகாவிடம் கொடுத்த விஷியத்தை சொல்ல சிரஞ்சீவி கப்பலின் மேல் தலத்தில் பெட்டியை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார்
சண்டை போடும் பொது தாக்க படுகிறார் , அனைவரும் மேலே வந்து வில்லன் ஆட்களை கைது செய்கிறார்கள் ,பலத்த தாக்குதலுக்கு சிரஞ்சீவியின் உயிர் பலியாகி விடுகிறது
தன் உயிரை கொடுத்து அனைவருக்கும் நன்மை செய்யும் சிரஞ்சீவியிடம் அனைவரும் தங்கள் தப்புக்கு மனிப்பு கேட்கிறார்கள்
படத்தின் கதையை பற்றி விரிவாக பார்த்தோம் , இனி படத்தை பற்றி analysis
முதலில் சிரஞ்சீவியை பற்றி :
நான் வருத்த படுகிறேன் இதை போன்ற படத்தை பார்த்து ,
wait நடிகர் திலகத்தின் choice of roles பற்றி அல்ல
ஆனால் 80 s பிறகு நடிகர் திலகத்தின் படங்களின் தரத்தை பற்றி விமர்சிக்கும் நபர்களை பார்த்து , அந்த நபர்கள் வைக்கும் குற்றச்சாட்டு 80 ல் வயதுக்கு எற்ற வேடத்தில் நடிகர் திலகம் நடிக்க வில்லை , ஆடல் பாடல் என்ற கதை அம்சம் இல்லாமல் , படத்தில் நடிக்கிறார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு
அவர்களுக்கு பதில் பல படங்கள் மூலம் நம் நடிகர்திலகம் சொல்லி உள்ளார் , மேலும் நம் திரி நண்பர்களும் பல தடவை , பல உதாரணங்களை காட்டி விலகி உள்ளார்கள் , குற்றச்சாட்டை வைக்கும் நண்பர்கள் இந்த படத்தை பார்க்கலாம் , பார்த்தல் கண்டிப்பாக தங்கள் நினைப்பை மாற்றி கொள்வார்கள் என்று நினைக்கிறன்
ஒரு முழு படத்தையும் ஒரு கப்பலில் எடுத்து முடித்து இருக்கிறார்கள் , பல படங்கள் கப்பலில் எடுக்க பட்டு இருந்தாலும் இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் முழு படமும் கப்பலில் எடுக்க பட்டு உள்ளது என்ற காரணம் தான் அதுவும் உட்புறம் காட்சிகள் கூட அழகாக படம் பிடிக்க பட்டு உள்ளது உபயம் MC சேகர் அவர்களின் ஒளிபதிவு
படம் ஆரம்பித்ததும் ஒரு குரல் படத்தின் அணைத்து கதாபாத்திரங்கள் பற்றியும் சிறு குறிப்பு தருகிறது , அதன் மூலம் எடுத்த உடன் நாம் கதைக்கு உள்ளே செல்லே வெகு வசதியாக இருக்கிறது
டேவிட் சிரஞ்சீவி - நடிகர் திலகம் ஏற்று நடித்த மிகவும் கடினமான பாத்திரங்களில் ஒன்று ஆனால் it went un noticed . இந்த பாத்திரம் என்ன கடின பாத்திரம் என்று கேட்கலாம் , முதலில் இது கடலில் எடுக்க பட்ட படம் என்பதினால் ஏற்படும் physical stress , kindly remember படம் வரும் பொது நடிகர் திலகத்தின் வயது 57 இருக்கும் என்று நினைக்கிறன் , கூடவே அரசியல் டென்ஷன் வேறு , இதை அனைத்தையும் தாண்டி தான் நடித்து இருக்கிறார்
சரி இது exaggeration என்று சொல்லும் நண்பர்கள் இந்த படத்தில் வரும் இரு காட்சிகளில் நம் நடிகர் திலகத்தின் புதிய பறவை மற்றும்
VIETNAAM வீடு படங்களில் வரும் சுழ்நிளைல்கள் போல் வரும் காட்சிகளில் அந்த படத்தின் சாயல்கள் கொஞ்சம் கூட வராமல் பார்த்து கொண்டு இருக்கிறார் என்றால் அதை என்னவென்று சொல்லுவது
(அந்த இரு சுழ்நிளைல்கள் வைத்து ஒரு compare and contrast செய்து இருக்கிறேன்)
இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் நடிகர் திலகத்தின் பிரிவு உபசாரம் பாடல் அன்பு எனும் ஒளியாக என்ற மிகவும் அற்புதமான பாடல் , கப்பல் கேப்டன் ஜெய் கணேஷ் மற்றும் கோபாலகிருஷ்ணன் இருவரும் பியானோ வாசிக்க சொல்ல , முதலில் வெக்க படும் நம்மவர் பிறகு வசிக்க ஆரம்பிக்கும் பொது என்னையும் அறியாமல் என் நினைவுகள் புதிய பறவை படத்தில் வரும் உன்னை ஒன்று கேட்பேன் பாடலுக்கு செல்லுகிறது , அந்த படத்தில் நாயகன் கோபால் பியானோ வாசிக்கும் விதத்தில் ஒரு ராயல் டச் இருக்கும் , மேலும் பணக்கார தோரணை முகத்திலும் , நடனத்திலும் இருக்கும்
இந்த படத்தில் சிரஞ்சீவி சாதாரன தொழிலாளி , வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருந்து உழைத்து வரும் நபருக்கு இன்று மிக பெரிய கெளரவம் தர பட , அதை அவர் எப்படி எடுத்து கொள்ளுகிறார் , தன் வாழ்கையை பற்றி எப்படி பாடுகிறார் என்பது தான் இந்த பாடல் , வரிகளும் நடிப்பும் இந்த காட்சியை எங்கோ கொண்டு செல்லுகிறது
retirement பற்றி பேச சிவாஜி சாரை வர சொல்லும் கேப்டன் ஜெய் கணேஷை பார்க்க போகும் பொது , அவர் நாங்கள் uncle சிரஞ்சீவிடம் பேச வேண்டும் என்றதும் கலர் டிரஸ் போட்டு கொண்டு , ஸ்டூல் ல் ஒரு ஓரமாக அமரும் பாங்கும் , தன்னை பற்றி கேப்டன் உயர்வாக சொல்ல சொல்ல , அதற்கு அவர் எதற்கு இது என்பதை போன்ற முக பாவத்துடன் வெட்க படுவதும் , தன்னை பற்றி பேச பேச உட்கார சங்கோஜம் படுவதும் டாப் , அதுவும் close up காட்சிகளில் அவர் reactions பிரமாதமாக இருக்கிறது
அவர்கள் தன் retirement பற்றி சொன்ன உடன் வெளியே சென்று குதிக்க முயற்சிக்கும் பொது , அவர் மனசாட்சி பேசும் வசனம் சாட்டை அடி , மனசாட்சிக்கு மிஞ்சிய எஜமானர் இல்லை என்பதை பறை சாற்றும் காட்சி
இதை பார்க்கும் பொது VIETNAAM வீடு படத்தில் வரும் prestige பத்மநாபன் தான் நினைவுக்கு வருகிறார் , because இரண்டு படத்திலும் ஒரே சூழ்நிலை , நடித்தவர் ஒரே நடிகர் , பத்மநாபன் படித்த சற்று economic status உள்ள நபர் , குடும்பஸ்தன் , தனக்கு retirement என்றதும் இவரும் அதிர்ச்சி அடைகிறார் , ஆனால் அதை வெளியே காட்டமல் வந்து , விசன படுகிறார்
சிரஞ்சீவி அதிகம் படிக்காதவர் , வாழ்கையை அந்த கப்பலில் கழித்தவர் , ஆனதை , அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை ,கப்பலை தவிர , , he is emotionally attached to that ship and those people in the ship (unlike prestige பத்மநாபன் , அவருக்கு இன்னும் family settle ஆக வில்லை என்பது பெரிய கவலை ) அதனால் சாக துணிகிறார் , மனசாட்சி வந்து இளரத்தம் பாய வேண்டாமா , வழி விட வேண்டாமா , கர்த்தருக்கு தான் உயிர் சொந்தம் என்று சொல்லவே தன் பணியை கடைசி தடவையாக தொடர அனுமதி கேட்கிறார்
கடவுள் அவருக்கு தான் சோதனையை வைத்து விடுகிறார் , சௌகார் ஜானகிக்கு பாவ மனிப்பு வழங்கி அதனால் தர்ம சங்கடமான சூழ்நிலையில் மாட்டி கொண்டு யாரிடம் எல்லாம் நல்ல பெயர் எடுத்தாரோ அவர்களின் கண்களில் எல்லாம் கெட்டவராக காட்சி அளிக்கிறார் , அந்த காட்சியில் தான் அவர் முகத்தில் எத்தனை கருணை
ஸ்ரீ பிரியா வை காப்பாற்ற சண்டை போடும் காட்சி ஸ்டைல் + காமெடி
ஸ்ரீ பிரியா தான் உண்மையான வாரிசு என்று சொல்ல முடியமால் , நிரூபிக்க முயற்சி செய்து தோற்கும் போதும் , கடைசியில் உதவி செய்ய போக வம்பில் மாட்டி உயிரை விடும்போதும் அவர் பேசும் வசனத்தில் நம்மளை நெகிழ வைக்கிறார் , மேலும் அவர் crucify செய்ய பட்டது போல நிற்க வைக்க படும் காட்சி காணும் பொது கண்களில் கண்ணீர்
மொத்தத்தில் படத்தின் lively performance நம்மவரிடம் இருந்து தான்
ஸ்ரீ பிரியா :
முதலில் பைத்தியமாக நடித்து , பிறகு தன் காதலரை காப்பாற்ற வந்தவர் தன் தாய் யார் என்று தெரியமால் அலைவதும் , சிவாஜி கூட சேர்ந்து உண்மையை நிலை நாட பாடு படுவதும் என்று நன்றாக நடித்து இருக்கிறார்
மாஸ்டர் சுதர்சன் :
மணி என்ற கதாபாத்திரத்தில் கொஞ்சம் அதிகமாக பேசினாலும் மனதில் நிற்கிறார்
சரத்பாபு :
வழக்கம் போலே dignifed ரோல் : டாக்டர் , பையனை காப்பாற்ற முயற்சுக்கும் காட்சியில் மட்டும் நன்றாக நடித்து இருக்கிறார்
சத்யராஜ் , விஜயகுமார்
வில்லன் பாத்திரங்களுக்கு சரியான தேர்வு
தேங்காய் - மனோரமா :
எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தேங்காய் ஸ்ரீநிவாசன் , சிரிப்பு தான் வர வில்லை
படத்தின் குறை என்று பார்த்தால் - தேவை இல்லாமல் வந்த silk ஸ்மிதா பாடல் , நகைச்சுவை இல்லாதது
மொத்தத்தில் - சிவாஜி சாரின் வித்தியாசமான நடிப்புக்காக பார்க்கலாம்
அடுத்தது - வசந்தத்தில் ஒரு நாள்
School Master :
இப்படி நன்றியை காண்பித்து பெருமை பட வைத்தவரிடம் புறமுதுகு காட்டி ஓடியவரின் ஒரு screen - படம் ஸ்கூல் மாஸ்டர் (ஹிந்தி) - இந்த ஸ்க்ரீன் மூலம் நம் தெரிந்துகொள்வது - நன்றியை மறந்து வாழ்பவர்கள் - வாழ்வதில் ஒரு அர்த்தமும் இல்லை - அவர்கள் பூமிக்கு பாரமே - கர்ணனையும் , கும்பகர்ணனையும் மிகவும் போற்றக்கூடிய நபர்களாக்கினது அவர்களது செய்நன்றி மறவாத குணம் - இருந்த இடம் நல்ல இடம் இல்லை - ஆனால் பெற்ற குணம் அவர்களை அந்த இதிகாசங்களின் ஹீரோக்களை விட மிக உயர்வில் கொண்டு சென்று விட்டது - வாழ்வில் நாம் எதையும் இழக்கலாம் செய்நன்றியை மட்டும் இழக்கவே கூடாது - அப்படி இழந்தால் நம் வினை நம்மை சுட அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது -------
http://youtu.be/q8vxKpQy2RM
சில வாழ்க்கை தத்துவங்களும் அதை நிரூபிக்கும் NT யின் படங்களும்
NT ஒரு தங்க சுரங்கம் - எவ்வளவு விஷயங்கள் அவரிடமும் , அவர் படங்களிலும் புதைந்து கிடக்கின்றன - கீழ்கண்ட அருமையான "quotes " அவரின் படங்களுடன் எப்படி ஒத்துபோகின்றன என்று பாருங்களேன் !! - இது சற்றே மாறுதலான பதிவு -------
Quote 1 :
" Life is the most difficult exam . Many people fail because they try to copy others , Not realizing that every one has a different question paper !"
இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் - "நெஞ்சிருக்கும் வரை "; மோட்டார் சுந்தரம் பிள்ளை ;; இல்லற ஜோதி
Quote 2 :
It is a long journey between human being and being human -
இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் - 'ஆலயமணி ; வசந்தத்தில் ஓர் நாள்
Quote 3
F-E-A-R has two meanings
1. F - Forget ; E -Everything ; A -And ; R -Run
2. F - Face ; E - Everything ; A - And ; R - Rise
இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் - ' வீரபாண்டிய கட்ட பொம்மன் " ; நாம் பிறந்த மண்
Quote 4
"Happiness will never come to those who don't appreciate what they already have "
இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் - ' எங்க மாமா " ; சுமதி சுந்தரி ; கலாட்டா கல்யாணம்
Quote 5
"Two things define you . Your patience when you have nothing ; and your attitude when you have everything "
இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் - ' அவன் தான் மனிதன் " சவாலே சமாளி
Quote 6
"when your nail grows long , we cut nails not fingers ; similarly when misunderstanding grows up cut your ego not your relationship "
இந்த வார்த்தைகளை நிரூபித்த படம் - ' கர்ணன் " ; பழனி ,
Quote 7
"We still love ourselves after doing many mistakes - then how can we hate others for their single mistake? Strange but true !"
இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள் - ' பாபு " , குலமா குணமா " , "பச்சை விளக்கு " , படித்தால் மட்டும் போதுமா ?"
quote 8
Respect people who find time for you in their busy schedule but love people who never look at their schedule when you need them
இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள் - - உனக்காக நான் ; உயர்ந்த மனிதன் , கை கொடுத்த தெய்வம்
Quote 9
“There no market for your emotions – so never advertise your feelings , just show your attitude
இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள் : - மூன்று தெய்வங்கள் ; எத்தனை ராமனடி ; படிக்காத மேதை
Quote 10
Relationships never dies a natural death. They are murdered by EGO , IGNORANCE , ATTITUDE
இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள் : முதல் மரியாதை ; பார் மகளே பார்
Quote 11
"When you're Happy you enjoy the Music,
But When you're Sad, you Understand The Lyrics "
இந்த வார்த்தைகளை நிரூபித்த படங்கள் : ஆண்டவன் கட்டளை ; விடிவெள்ளி , இரும்புத்திரை
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
அன்புள்ள ராகுல் - அருமையான அலசல் - மிகவும் கவனமாக கையாண்டதிற்கு நன்றி - படம் ஒரு " titanic " ஆக இருந்தாலும் ( நமக்கு தான் மழுப்ப வராதே !!) NT யின் நடிப்பில் அனைவரும் நீந்தி பத்திரமாக கரை சேர்ந்தனர் .
நீங்கள் எடுத்துகொள்ளும் அடுத்தபடமும் நல்ல படம் - போதிய இடைவெளி கொடுத்து அதை பதிவிடுங்கள் - மற்றவர்கள் படித்து ரசிக்க சிறிது அவகாசம் வேண்டும் - நீங்கள் எடுத்துகொள்ளும் படங்களை பற்றி இன்னும் நன்றாக தெரிந்தவர்கள் இருக்கும் திரி இது - அவர்கள் கருத்துக்களையும் பதிவிட நாம் வாய்ப்பு கொடுக்கவேண்டும் .
மற்றவர்கள் அவர்களுடைய பதிவுகளை போடவும் , உங்கள் பதிவுகள் மேலும் மேலும் சிறப்பாக வரவும் என்னுடைய சிறிய வேண்டுகோள் இது !!
அன்புடன் ரவி