http://tamil.filmibeat.com/heroes/to...ay-031114.html
Printable View
பக்தர்களுக்கு என் பணிவான வணக்கம்.
இந்த வருடம் ஒரு விசேஷம்
இன்று அவர் பிறந்த நாள்
நாளை அவர் தாயின் நாள்.
எல்லா வருஷமும் உள்ள விசேஷம்
முதல்நாள் நம் மகாகலைஞன் பிறந்த நாள்
அடுத்த நாள் நம் மகாத்மா பிறந்த நாள்.
தலைவர் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும்
புதிதாக ஒன்று புரிபடுவதால் அவருடைய பழைய படம் எனும்
கேள்விக்கே இடமில்லை
அவர் நம் எண்ணத்திலே இரண்டற கலந்து விட்டதால் அவர்
நம்மை பிரிந்து விட்டார் எனும் பேச்சுக்கும் இடமில்லை.
நம் ரசனை எனும் திறன் இவர் நடிப்பினால் அன்றோ பட்டை தீட்டப்பட்டது!
இன்று அவரே நடிப்பின் அளவுகோல்.
அவரை வைத்து பிறரை மதிப்பிடலாமே அன்றி ஒப்பிடுவது தகாத செயல்.
அந்த தேவையற்ற செயலை நாம் செய்யாமலிருக்க இந்நன்னாளில் உறுதி பூணுவோம்.
“♫ ♬எல்லோரும் கொண்டாடுவோம் தலைவரின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வைஎண்ணி.”♫ ♬♫ ♬
Today's Dinamalar
நடிகர் திலகம் சிவாஜியை பற்றி திரைபிரபலங்களின் பேட்டி!!
01 அக்,2014 - 14:54 IST
துடிக்கும் இதயமும், இவர் பெயர் கேட்டால் நடிக்கும். கேமரா முன் முகம் சிவந்தால், எரிமலை கூட வெடிக்கும். அதனால் தான், ஏற்ற பாத்திரங்களுக்கே, அவரை பிடிக்கும். சின்னையாபிள்ளை கணேசனாக பிறந்து, உலக சினிமாவின் உயிர் நாடியாய் உலா வந்த அந்த மூன்றெழுத்து, மூச்சுக் காற்றிருக்கும் வரை மறையாது. பிற குழந்தைகளை போலவே, பிறந்ததும் அழுதது அக்குழந்தை; பின்னர் தான் தெரிந்தது, அது மறையும் போது, அனைவரும் இப்படித்தான் அழுவார்கள் என்பதை, அன்றே நடித்துக் காட்டியிருக்கிறது, அந்த குழந்தை. உடல், பொருள், ஆவி அத்தனையும், தமிழ் சினிமாவிற்கு அர்ப்பணித்த அந்த அதிசய பிறவிக்கு பெயர் "சிவாஜி. தன்னை படைத்த கடவுளுக்கே, தன் நடிப்பில் முகம் கொடுத்தவர். பராசக்தியில் தொடங்கி, படையப்பா வரை, இவரை மிஞ்ச எவரப்பா? இன்று அவரது 86வது பிறந்தநாள், இந்தநாளில் அவரைப்பற்றிய சில நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர் சில பிரபலங்கள். இதோ உங்களுக்காக...
விஜய் சேதுபதி
சிவாஜி பற்றி நான் சொல்லணும் என்றால், தமிழ் சினிமாவின் டிஸ்னரியே அவர் தான். டெக்னாலாஜி வளராத அந்தக்காலத்திலேயே இவரது நடிப்பை பார்த்து, இன்றைக்கும் நாம் பார்த்து பிரமிப்பு அடைகிறோம். பல புதுமைகளை படைத்து விட்டு சென்று விட்டார். சமீபத்தில், ''ராஜபாட் ரங்கதுரை'', ''தில்லானா மோனாம்மாள்'', ''கர்ணன்'' போன்ற அவருடைய படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. படத்தில் அவரது ஒவ்வொரு அசைவுகளும் நடித்து இருக்கிறது என்று சொல்லலாம். பிரமாண்ட நடிப்புக்கு சொந்தக்காரர் சிவாஜி, அவரைப்போல் இன்னொரு நடிகர் வர சான்ஸே இல்லை என்கிறார் விஜய் சேதுபதி.
டி.ஆர்.
நடிகர் திலகம் தனக்கென்று இலக்கணம் வகுத்தவர், நடிப்பில் வரலாற்றை படைத்தவர் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர், ரெஸ்ட் இல்லாத கலைஞர். குணச்சித்ர பாத்திரங்களில் தன்னை பிறவி கலைஞராக பிரதிபலித்த அற்புத நடிகர். என் வாழ்க்கையில் ''தங்கைக்கு ஓர் கீதம்'', ''என் தங்கை கல்யாணி'' போன்ற படங்கள் எடுக்க அவரின் ''பாசமலர்'' படமே காரணம். என் வாழ்க்கையில் மிகப்பெரிய படிப்பினை கொடுத்த படம் பாசமலர். அவருடைய ''முத்துக்கள் மூன்று'' படத்திற்கு இசையமைத்தேன். நான் எம்.ஜி.ஆரின் தீவிர வெறியன். ஆனால் சிவாஜியின் தீவிர ரசிகன் என்று அப்போது அவரிடமே சொன்னேன். மல்லிகையின் மனம் ரோஜாவுக்கு இருக்காது, ரோஜாவின் மனம் மல்லிகைக்கு இருக்காது. சிவாஜி என் கண்ணை விட்டு எப்போதும் அகலாதவர். ஒருவன் நடக்க ''ஆஹா மெல்ல நட மெல்ல நட...'' என்று அப்போதே கற்றுக்கொடுத்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றவர். சிவாஜிக்கு கர்ஜிக்கவும் தெரியும், கருணை காட்டவும் தெரியும். மொத்தத்தி்ல வீர தமிழர் சிவாஜி என்கிறார் டி.ஆர்.
கருணாகரன்
நான் படித்தது தஞ்சாவூர். நான் சூரக்கோட்டையை தாண்டும்போதெல்லாம், என் தாயார், இது தான் சிவாஜி வீடு என்று காண்பிப்பார். நான் திரைக்கு வருவேன் என்று நினைத்து பார்த்தது இல்லை. இந்த வயது ரசிகர்கள் என்றில்லாமல், எல்லா வயது ரசிகர்களையும் உட்கார வைத்தவர். மரியாதைக்குரிய பெரிய மனிதர். அவரை சந்திக்க முடியவில்லை என்று சங்கட்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் பிரபு அவர்கள், என்னை பார்த்து நல்லா நடிக்கிறீங்க என்று பாராட்டினார். அதுவே எனக்கு சிவாஜியிடமிருந்து பாராட்டு கிடைத்தது போன்று இருந்தது என்றார் கருணாகரன்.
ஸ்ரீகாந்த்
நான் சமீபத்தில் தான் சினிமா பீல்டுக்கு வந்தேன், அதனால் அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது படங்களை பார்த்து என்னை ஒரு நடிகனாக மாற்றிக் கொண்டேன். நடிப்புன்னா சிவாஜி என்று சொல்கிறோம். தேவர் மகன் படத்தை பார்த்து அசந்து போய் உள்ளேன். சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள அவர் காட்டும் ஈடுபாடை பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். அதுக்கு தனி திறமை வேண்டும். ஸ்கிரீன் பிரசண்ட் அவரிடம் இருக்கு. அவர் ஒரு பிறவி நடிகர். அந்தமாதிரி நடிகர்கள் ஒருமுறை தான் பிறப்பார்கள். இன்று மட்டுமல்ல என்றுமே பேசக்கூடிய ஒரு நடிகர் சிவாஜி என்கிறார் ஸ்ரீகாந்த்.
விமல்
இன்னைக்கு மட்டுமல்ல, நடிப்புக்காக படைக்கப்பட்டவர் தான் சிவாஜி. அவரது ஒவ்வொரு படமும் இப்போது வரும் நடிகர்களுக்கு பெரிய உதாரணமாக இருக்கு. எனக்கு யார் கதை சொன்னாலும், சிவாஜியின் 10 படங்களின் ரெபரென்ஸ் கிடைக்கும். பட்டிதொட்டியெல்லாம் சிவாஜிக்கு ரசிகர்கள் உண்டு. தலைமுறை தாண்டி நிற்பவர் சிவாஜி. இந்தநாளில் அவரை பற்றி பேச பெருமைப்படுகிறேன் என்கிறார் விமல்
விதார்த்
நான் கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவன். கூத்துபட்டறைக்கு முன்பே, பராசக்தி படத்தில் சிவாஜி வைத்த ஹேர் ஸ்டலைத்தான் நானும் வைத்தேன். என் தாத்தா சிவாஜியின் தீவிர ரசிகர், பராசக்தி படத்தில் ஒரு பெரிய ரோலில் நடித்து இருந்தார். சிவாஜி, தேவகோட்டைக்கு வளாமஊர்மத்தேவரை பார்க்க வரும்போது நான் அவரை பார்த்துள்ளேன். நான் சிறுவனாக இருந்தபோது 3 முறை அவரை பார்த்துள்ளேன். அந்தநாள் இன்னும் என் கண்முன் நிற்கிறது. ஒரு நடிகர் என்று ஒருவரை முதல்முறையாக நான் பார்த்தது சிவாஜியைத்தான். இன்றும் என் குடும்பத்தோடு அவரது படங்களை பார்க்கிறேன். நடிகர்களுக்கே குருவாக இருந்தவர். இப்போதும் ஒரு நடிகன் உருவாகும் போது பராசக்தி படத்தின் டயலாக்கை உச்சரிக்காமல் இருந்தது கிடையாது. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது நமக்கு பெருமை என்கிறார் விதார்த்.
- See more at: http://cinema.dinamalar.com/tamil-ne....Axz2XpId.dpuf
தமிழ் தாயின் தவ புதல்வன்
எங்கள் இதய தெய்வம்
அண்ணன் சிவாஜி நடிப்பு கடவுள்
அவதார தினம்
இன்று திருச்சியில் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி நகரின் முக்கிய இடங்களில் அவருடைய படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு சீரும் சிறப்புமாக கொண்டாட பட்டது. திருச்சி மாநகரில் மொத்தம் 8 வகையான போஸ்டர்களை ரசிகர்கள் வெளியிட்டனர்.இன்றைய மாலை மலர், மாலை முரசு பேப்பர்கள் இந்த செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
திரு. சந்திர சேகர் அவர்களுக்கு இந்த பிறந்த நாளில் சமூக நலப் பேரவை சார்பாக நடிகர் திலகத்திற்கு பாரத் ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசை கேட்கும் படி கோரிக்கை வைக்க வேண்டுகிறேன்.
ரசிகர்கள் அனைவருக்கும் எமது சிவாஜி ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்
C. RAMACHANDRAN
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...7e6bb2c01cdbe1
இன்று உலக முதியோர் தினமும் கூட இளம் வயதிலேயே இமேஜ் பாராமல் வயது முதிர்ந்த கதாபாத்திரங்களில் துணிந்து நடித்து சிகரம் தொட்டவர் நடிகர்திலகம். முதுமை தவிர்க்க முடியாதது. முதுமையில் பாதுகாப்பு இன்றியமையாதது. முதுமையிலும் தன்னம்பிக்கை மெச்சத்தகுந்தது.
https://www.youtube.com/watch?v=gqIX9OQHxUU
https://www.youtube.com/watch?v=BkpXqNt6DBE
https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM
Recognition for our veteran hubber Mr Raghavendra Sir at NT's Birthday function. I take this opportunity to congratulate Mr Raghavendra for the
memonto received from Mr G Ramkumar. Remaining details I request Mr Murali to post here for the benefit of Millons of NT's fans.
a function will be remembered for the thought provoking speech by Mr Pon Radhakrishnan.
Now overto Mr Murali.
Regards
இன்று முதல் திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதாக திருச்சி தகவல் கூறுகின்றன. இன்றைய தமிழக சூழ்நிலையிலும் வேலை நாளிலும் ஆயுத பூஜைக்கு முன்னேற்பாடுகள் நடக்கும் நிலையிலும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் பிறந்த நாள் விழாவில் மும்முரமாக இருந்த நேரத்திலும் இன்றைய தினம் 450 பேர் கண்டு களித்திருக்கின்றனர். இதில் வியப்பூட்டும் விஷயம் வந்தவர்களில் 100 பேர் பெண்கள் என்பதாகும். படத்திற்கு கிடைத்திற்கும் வரவேற்பு மற்றும் வசூல் பற்றி மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
வாசு,
முந்தைய வருடங்களில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நடைபெறும்போது அவ்விழாவைப் பற்றிய செய்திகளை திரியில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். காரணம் அன்றைய காலத்தில் அவை முழுமையாக மக்கள் மத்தியில் சென்று அடைய வழி இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த 2,3 வருடங்களாக விழா நிகழ்வுகள் You Tube போன்ற இணையதளங்களில் இவை தரவேற்றப்படுவதால் நாம் விழாவையோ அல்லது சிறப்பு விருந்தினரின் பேச்சையோ எழுத தேவையில்லாத சூழல்.
மிக மிக முக்கியமான மூன்று சந்தோஷங்கள் இன்றைய விழாவின் மூலம் கிடைத்தது. முதலும் முக்கியமான சந்தோஷம் அருமை நண்பர் ராகவேந்தர் சார் மேடையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதை விட சந்தோஷம் அவரையும் அவரின் நடிகர் திலகம். காம் இணையதளத்தைப் பற்றியும் குறிப்பிட்டு பிரபு பேசியது. ராகவேந்தர் சாரை எழுந்து நிற்க சொல்லி அனைவரையும் கரகோஷம் செய்யுமாறு பிரபு கேட்டுக் கொள்ள அனைவரும் கைதட்டியது. இன்றைய பிறந்த நாள் விழாவில் சிவாஜி விருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் நடிகர் திலகத்துடன் இனைந்து நடித்த காட்சிகளை தொகுத்திருந்தது நமது ராகவேந்தர் சார்தான். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தைப் பற்றிய தனிப் பாடல் பின்னணியில் ஒலிக்க நடிகர் திலகத்தின் பல்வேறு வகையான கெட் அப்கள் அடங்கிய புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் மின்னியதை தொகுத்தவரும் அவரே. வ்வாழ்துகள் ராகவேந்தர் சார்.
இரண்டாவது சந்தோசம் வெளி நாட்டிலிருந்தும் கூட நடிகர் திலகத்தின் ரசிகர்கள் கலந்துக் கொண்டது. பர்மா இன்றைய மியன்மார் நாட்டிலிருந்து வந்தவர்கள் ஒரு புறம் என்றால் என்னோடு நீண்ட நாட்களாக மின்னஞ்சல் தொடர்பில் இருக்கும் கனடா வாழ் இலங்கை தமிழர் ஞானேந்திரன் தன குடும்பத்தோடு இதற்காகவே வந்தது. கிளிப்பிங்க்ஸ் திரையிட்ட போதெல்லாம் மகிழ்வும் அது தந்த ஆனந்தக் கண்ணீரும் பொங்க பார்த்தவர் விழா முடிந்ததும் மனம் நெகிழ பல வருடங்களுக்கு பிறகு இப்படி ஒத்த ரசனையுடைய ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு அவர் நன்றி சொல்ல, விழாவிற்கு வந்ததற்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று சொல்லி அவரை சந்தோஷத்தோடு வழியனுப்பியது இரண்டாவது பெரிய சந்தோசம்.
Last but not the least சிறப்பு விருந்தினர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களின் சிறப்புரை. 30 நிமிடம் பேசிய அவர் தன்னை முழுக்க முழுக்க ஒரு சிவாஜி ரசிகராகவே இனம் காட்டிக் கொண்டு பேசினார் என்பதுதான் சிறப்பு. நடிகர் திலகத்தின் பல்வேறு வேடங்களை சுட்டிக்காட்டி [குறிப்பிட வேண்டிய விஷயம் அனைவருக்கும் தெரிந்த படங்களைப் பற்றி மாவு அரைக்காமல் ரங்கோன் ராதா திரும்பிப் பார் போன்ற படங்கள் மற்றும் வாழ்க்கை படத்தைப் பற்றியும் சிலாகித்து பேசி] இன்றைய திரை உலகத்திற்கு மட்டுமல்ல இன்றைய தமிழக இந்திய குடிமகனின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளுக்குக் கூட நடிகர் திலகம் எப்படி relevant ஆகப் பொருந்துகிறார் என்பதை எடுத்துரைத்து நடிப்பு என்பது ஒரு மதமானால் அதற்கு நடிப்புக் கடவுள் நடிகர் திலகம் அவரின் பிறந்த நாளை கொண்டாடாத நடிகர் சங்கத்திற்கு பலமாக குட்டு வைத்து, வரும் காலங்களில் நடிகர் திலகத்திற்கு புகழ் சேர்க்கும் விதம் அவருக்குரிய கெளரவம் செய்யப்படும் என்ற நம்பிக்கையை விதைத்து, அவர் பெயில் அரசாங்க விருதுகள் வழங்கப்பட வேண்டும் அதற்கான நேரம் காலம் கனிந்து வருகிறது என்று உற்சாகப்படுத்தி சுருக்கமாக சொன்னால் விழாவிற்கு வந்திருந்த அனைவரின் மனத்திலும் நல்ல இடத்தைப் பிடித்தார் இந்த நாகர்கோவில் ராசாக்கமங்கலம் ஊர்காரர்.
வீடியோ தரவேற்றப்படும்போது இவரின் பேச்சை முழுமையாக அனைவரும் கண்டு கேட்டு ரசிக்கலாம்.
அன்புடன்
http://i1087.photobucket.com/albums/...art%20-2/k.jpg
இணைபிரியாத இரு மேதைகள்... ஒருவரின் பிறந்த நாளும் இன்னொருவரின் நினைவு நாளும் ஒரே மாதம்.. அதே போல் ஒருவரின் நினைவு நாளும் இன்னொருவரின் பிறந்த நாளும் ஒரே மாதம்...
பெருந்தலைவரின் உண்மையான ஒரே தொண்டன் என்பதற்கு இதைவிட சாட்சி இல்லை..
தூய்மையான அரசியலின் அடையாளங்கள்...
தங்களின் புகழ் வாழ்க...
முரளி சார்
தங்களுடைய சிறப்பான பதிவின் மூலம் நிகழ்ச்சிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பினை மீண்டும் தந்தமைக்கு உளமார்ந்த நன்றி.
நடிகர் திலகம் இணைய தளத்தைப் பற்றிக் கூறியதன் மூலம் இணைய வழி நடிகர் திலகம் புகழைப் பரப்பும் முயற்சிகளுக்கு பிரபு அவர்கள் கூறிய நன்றியாகவே இதை நான் நினைத்துக் கொள்கிறேன். இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
My Life Is My Message : Mahaathmaa Gandhiji
Today for Gandhian Thoughts! Gandhi himself became a philosophy that teaches us to win through 'Ahimsaa', the term which has almost become a lip service only on the occasion of his birth day celebrations. Though not a direct disciple of Gandhi, NT served the nation through his films upon the Gandhian messages adopted by his mentor Kamaraj. We all try to understand Gandhian thoughts as if six blind men trying to understand how an elephant looks! The true tribute to Gandhiji is the implementation of total 'madhuvilakku' and 'pulaal unnaamai' besides the 'ahimsaa' way of our struggles to any cause! The 'white' elephant is possible?!(Wikipedia: Gandhiji considered the consumption of alcohol as a major social evil and encouraged complete prohibition in India.Prohibition in India exists in the states of Gujarat and Nagaland; parts of Manipur; as well as the Union Territory of Lakshadweep. Kerala is implementing prohibition in phased manner. All other Indian states and union territories permit the sale of alcohol.)
A small film made for children, but certainly, it teaches everyone!
https://www.youtube.com/watch?v=ZvnSIOtQ8hc
https://www.youtube.com/watch?v=OuZXRN6Rct0
https://www.youtube.com/watch?v=gM61HhWsB60
NT Thread's tributes to the Father of our Nation:
https://www.youtube.com/watch?v=3PVy4tFjITY
NT Thread's tributes to the Father of our Nation:
the only tamil movie song devoted to Gandhiji!?
https://www.youtube.com/watch?v=k9Hfx1MNO9U
https://www.youtube.com/watch?v=zKUpbXldBA4
Video rendering of a poem on Nadigar Thilagam
http://www.youtube.com/watch?v=3sWf_ddXQfc
Tributes to NT the Raajapaart of Movie arena!
ராஜபார்ட் கள்ளபார்ட் அக்கால நாடக மேடைகளில் பிரதானமான பாத்திரங்கள் நடிகர்திலகத்தின் திரைப்பாத்திரங்களுக்கு வலிமையின் மூலம் அவரது நாடக
அனுபவங்களே ! சாதாரணமாக நம் கண் முன்னே உலவும் ஏழ்மையில் உழலும் ஒரு தெருக்கூத்துக் கலைஞன் விட்டலாச்சார்யா படம்போல ராஜபார்ட் / கள்ளபார்ட் ஆக கூடுவிட்டுக் கூடு பாய்ந்து அந்தப்பாத்திரமாகவே மாறிவிடும் தோரணை கெத்து நடையுடை பாவனைகளை உலகளவில் நடிகர்திலகத்திற்கு இணையாக சாதித்துக் காட்டியவர் எவருமேயில்லையே! நவராத்திரி ராஜபார்ட், கள்வனின் காதலி/என் தம்பி கள்ளபார்ட் மற்றும் நாடகக்கலைஞர்களுக்குப் பெருமை சேர்த்திட்ட சொர்க்கம், ராஜபார்ட் ரங்கதுரை.......பிறவிக்கலைஞனின் குறளிவித்தையைக் கண்டிட எம் கண்கள் புண்ணியம் செய்தனவே!
https://www.youtube.com/watch?v=DqWKRny75nc
If the Raajapaart entertained us, this Kallapaart enthralls us!
https://www.youtube.com/watch?v=STeAHQyK1Kw
ராகவேந்தர் சார்,
இதை நான் இரண்டு வருடம் முன்பு எழுதி,முரளி என் ஆசை நிறைவேற போவதாக சொன்ன ஞாபகம். என்னிடம் இதை தேர்ந்தெடுக்க சொல்லி பத்து சீட்டு கொடுக்க பட்டிருந்தாலும் ,பத்திலும் உங்கள் பெயரையே குறிப்பிட்டிருப்பேன். நீங்கள் நடிகர்திலகமே மூச்சாக வாழ்வதால், நாமெல்லாம் ஆரோக்யமான ஒரே காற்றை சுவாசித்து ஜீவிக்கும் ஒரு மரத்து பறவைகள்.
நமக்குள் மாறுபாடுகள் வந்த போதும் ,மதிப்பீடுகள் தேய்ந்ததில்லை. மதிப்புகள் குலைந்ததில்லை. நீங்கள் எப்பாடு பட்டாவது அவர் பெயரை காக்க அத்தனையையும் அணைப்பீர்கள். நானோ அவருடைய படங்களே அவர் மாண்பை குலைக்குமானால் ,உதறி விட எண்ணுபவன். ஆனால் இரண்டுமே அவருக்காக நாம் செய்யும் வெவ்வேறு வகை பூஜைகளே.(நாயன்மார்,ஆழ்வார்கள் வழியில் ஒவ்வொன்றும் ஒரு விதம்)
உங்களை விட தகுந்தவரை எங்கள் யாராலும் நினைக்க கூட முடியாது. கெளரவம் பெற்றதற்கு எங்கள் வாழ்த்துக்கள் .எனக்கே கிடைத்த மகிழ்ச்சி.
Devotion : Thy name is Sivaji Ganesan!
https://www.youtube.com/watch?v=-zyxs-tVB_Q
https://www.youtube.com/watch?v=QDNfqMAd5pQ
நடிகர்திலகத்தை வைத்து படமெடுத்த 90% சதவிகித தயாரிப்பாளர்கள் முதல் வெளியீட்டிலேயே லாபம் கண்டு அவரை திரும்ப திரும்ப வைத்து படமெடுத்தவர்கள்.இது நடிகர்திலகத்தின் வெற்றி விகிதம்,ஒரு முறை எடுத்தவர்கள் திரும்ப திரும்ப எத்தனை முறை எடுத்தனர் என்ற கணக்கை போட்டாலே தெரியும்.(உ.ம் -பக்ஷிராஜா,வேலுமணி,பீ.எஸ்.வீரப்பா,பந்துலு,ஏ.பீ.நாகர ாஜன்,ஸ்ரீதர்,ஜெமினி,ஏ.வீ.எம்,பாலாஜி, முக்தா,ஏ.சி.டி,பீ.மாதவன் என்று பெரும் படை ,பல படங்கள்)
ஆடி பாடி கதிரறுப்பார் ஆனந்தத்தோடு. ஆனால் அறுத்த கருது போற இடம் வேறொரு வீடு என்பது போலத்தான் மறு வெளியீடுகள்.தயாரிப்பாளர் துண்டை காணோம் துணியை காணோம் என்று போன பிறகு ,மற்றவர் அடிமாடு விலையில் வாங்கி நடத்தும் முறையில்லா வியாபாரம். எதற்கும் புள்ளி விவரமோ,நிரூபணமோ செய்ய முடியாத வெற்று கூச்சல்களே.
நடிகர்திலகம் படங்கள் மட்டுமே போட்டிக்காக இல்லாமல்,இயல்பாக பொது மக்கள் பார்த்து ஓடிய படங்கள். அவருக்கு அரசியல் சார்ந்த உதவிகளோ, கைகாசு போட்டு படத்தை ஓட வைக்க வேண்டிய அவசியமோ அல்லது அதை மாதிரி செய்து அவரை தூக்கி பிடிக்க பார்க்கும் போலி ரசிகர் படைகளோ இருந்ததில்லை. இதை பெருமையாகவே கூறி கொள்ளலாம்.
இப்போதுதான் தெள்ளதெளிவாக முரளி சார் மறு வெளியீட்டு சாதனைகளையும் உரைத்து, யார் வசூல் சக்ரவர்த்தி என்று நிருபித்து விட்டாரே?
மறு வெளியீடுகளிலும் புதிய பறவைக்கும்,சிவந்த மண்ணுக்கும், பராசக்திக்கும்,கட்டபொம்மனுக்கும்,வசந்த மாளிகைக்கும் சென்னையில் நான் மாணவனாக இருந்த போது (1976-1984) யார் படத்திற்கும் எந்த காலத்திலும் கண்டதேயில்லை. புதிய பறவை பைலட் திரையரங்கில் 1977 வாக்கில் மறு வெளியீடு கண்டு ,கிட்டத்தட்ட சென்னை நகரை நான்கு வருடங்கள் தொடர்ந்து, பல திரையரங்குகள் கண்டு ஆண்டது வரலாறு.
NT's 'senjotrukkadan' to drama base in his films!
In a way, Saamrat Asokan might have inspired Gandhiji on his principle of non-violence after seeing the perils of war ! Terrific portrayal by NT in Annaiyin Aanai and RajaRani!!
https://www.youtube.com/watch?v=q929CuI7UZA
Sivaji Ganesan's longest dialogue!
https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34
Sivaji Ganesan transforms into Socretes and Othello!
உன்னையே நீ அறிவாய்! (உன்னையறிந்தால்...நீ உன்னையறிந்தாலின் முன்னோடி!)
https://www.youtube.com/watch?v=sEipFRf3-8s
நடிகர்திலகத்தின் பசுமை நிறைந்த நாடக நினைவுகள்
https://www.youtube.com/watch?v=lSAcVpljPE0
Dear raghavendra sir,
congratulations for the recognition and momento you got from the first family of tamil cinema
Dear Ragavendran Sir
My Heartiest Congratulations for Recognition got from Ilayathilagam Prabhu on NT'S function at chennai yesterday
C. Ramachandran.
Dear Raghavender Sir,
I was fortunate to be there in Music Academy to witness our Acting God's 86th Birth Anniversary celebration and to hear and witness the ultimate honour bestowed on you by none other than the NT family.
You truly deserve every bit and all of us cherish it.
Hearty congratulations and awaiting more from you,
Regards,
R. Parthasarathy
Congratulations Mr. Ragavendar sir. For the NT award.
Puthiya paravai dubbed in Russian. Language
courtesy FB
Thanks to mr N swami duraivelu
View Album, http://s1055.photobucket.com/user/se...nadigartilagam
Courtesy: Dinamalar
சிவாஜி பிறந்த நாள் விழாவை நடிகர் சங்கம் கொண்டாட வேண்டும்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
02 அக்,2014 - 15:26 IST கருத்தைப் பதிவு செய்ய
0 0
எழுத்தின் அளவு:
நடிகர் திலகம் சிவாஜியின் 86வது பிறந்த நாளை சிவாஜி குடும்பத்தினர் சென்னை மியூசிக் அகாடமியில் கொண்டாடினார். இதையட்டி கலை உலகில் சாதனை படைத்த பாடகி ஜமுனா ராணி, நாட்டிய பேரொளி பத்மா சுப்பிரமணியம், நடிகர்கள் வி.எஸ்.ராகவன், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபன் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சான்றிதழுடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இதனை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்து தன் நடிப்பு வாழ்க்கையை தொடங்கியவர் சிவாஜி. நாடக நடிப்பால் வெறும் கணேசன், சிவாஜி கணேசன் ஆனார். சிவபெருமான், முருகன், பாரதத்தாய் போன்ற கடவுள்களையும், திருவருட் செல்வர் போன்ற ஆன்மீக குருக்களையும், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற சுதந்திரபோராட்ட தியாகிகளையும் நமக்கு காட்டியவர் அவர்.
அழுகை, சிரிப்பு, ஆடல், பாடல் என எல்லாவற்றையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டோம். ஒரு வழக்கறிஞர், போலீஸ் அதிகாரி, நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். சிவாஜி ஒரு பல்கலைகழகம் அவரிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்றைய நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். கல்விக்கு சரஸ்வதி பூஜை நடத்துவதைப்போல நடிப்புக்கு சிவாஜி பூஜை நடத்த வேண்டும்.
சினிமாவில் ஜெயித்த அவரால் அரசியலில் ஜெயிக்க முடியாமல் போனது. காரணம் அவருக்கு நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியவில்லை. ஆனாலும் தமிழ் சினிமாவின் நிரந்தர முதல்வர் அவர்தான்.
கலைத்துறை சிவாஜிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பது என் ஆதங்கம். அவரது பெயரில் மிகப்பெரிய விருதுகள் வழங்கப்பட வேண்டும். சிவாஜி குடும்பம் அவரது பிறந்த நாளை கொண்டாடினால் போதாது. நடிகர் சங்கம் ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டும். அதுதான் அவர்கள் சிவாஜிக்கு செய்யும் மரியாதை. அடுத்த ஆண்டு முதலே சிவாஜி பிறந்த நாளை நடிகர் சங்கம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
முன்னதாக சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் வரவேற்றார். முடிவில் இளையமகன் பிரபு நன்றி கூறினார்.
- See more at: http://cinema.dinamalar.com/hindi-ne....Xy8GZuPb.dpuf
என் இனிய நல்வாழ்த்துக்கள்!
திரு ராகவேந்திரா அவர்களுக்கு...
பாராட்டு நல்கிய அன்புள்ளங்கள்
முரளி சித்தூர் வாசுதேவன், சந்திரசேகர், கோபு எ கோபாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், கோபால், பெங்களூர் கார்த்திக், ஆனந்த், பார்த்தசாரதி, பரணி, கோவை செந்தில்
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றிகள்.
எல்லாப் புகழும் நம் இதய தெய்வம் நடிகர் திலகத்துக்கே...
அன்புடன்
ராகவேந்திரன்
இளைய திலகம் பிரபு அவர்களின் உரை....
http://www.youtube.com/watch?v=ZPCWzywEXwY
Punishment mode in Kollywood differs from Hollywood!!
Have nice pooja celebrations with NT daring an elephant in Saraswathi Sabatham! GG prefers to punish the hero NT tied onto a wooden plank this Kollywood way!!to be trampled by an elephant!!!!
https://www.youtube.com/watch?v=YIPFopNqSos
But, Goldfinger (GertForbe) wishes to punish James Bond (Connery) tied onto table in this Hollywood way!! Laser beam replacing Elephants leg percussion !!!!
https://www.youtube.com/watch?v=DoQwKe0lggw
Tomorrow vidhyaarambam day for children! NT's vidhyaarambam in saraswathi sabatham!!
https://www.youtube.com/watch?v=usLFng3LZiE
Mahakavi Kaalidas!!: Yaar tharuvaar indha ariyaasanam when your fans have already offered you an immortal simmaasanam!
https://www.youtube.com/watch?v=Fm7QOXpd3jU