http://i1300.photobucket.com/albums/...psmoy0xtmb.jpg
Printable View
மறக்க முடியாத மார்ச் -1970
1969 தீபாவளி சமயத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் நம் நாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று 1970 பிப்ரவரியில் 100வது நாள் வெற்றி விழா தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடபட்டது . மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் சக கலைஞரகள் பங்கு பெற்று சிறப்பித்தார்கள் .
1970 பொங்கல் வெளியீடாக வந்த மக்கள் திலகத்தின் '' மாட்டுக்கார வேலன் '' சென்னை நகரில் புதிய சரித்திரம் படைத்தது .சென்னை நகரில் 4 அரங்கிலும் தொடர்ந்து 444 காட்சிகள் அரங்கு நிறைந்து தென்னகமெங்கும் வசூலில்
புதிய வரலாற்று படைத்தது .
1969ல் அடிமைப்பெண் - நம்நாடு தொடர்ந்து 1970ல் மாட்டுக்கார வேலன் வெற்றிகள் மூலம் ஹாட் ரிக் சாதனை புரிந்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர் .