http://i58.tinypic.com/ljq85.jpg
Printable View
மக்கள் திலகத்தின் சந்திரோதயம் படத்தின் ஸ்டில் அத்தனையும் கண்ணை கவருகிறது.பாராட்டுக்கள் முத்தையன் சார் .
சைதை திரு ராஜ்குமார் அவர்கள் திரியில் பங்கெடுத்து கொள்வது மிக்க மகிழ்ச்சி . தொடர்ந்து திரியில்பதிவிடவும் .
1973
வெற்றி சரித்திரம்
இந்திய அரசியல் வரலாற்றில் இப்படியொரு
இடைத்தேர்தலை யாரும்
கண்டிருக்க முடியாது என்று சொல்லத்தக்க
அளவில் நடைபெற்றதுதான்
1973 -ம்ஆண்டு தமிழகம் சந்தித்த
திண்டுக்கல் இடைத்தேர்தல் !
அண்ணா தி மு க .தொடங்கிய ஆறு மாத காலத்துக்குள் 1973-ம ஆண்டு
மே மாதம் நடைபெற்ற அந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டியில்
அண்ணா தி மு க மகாத்தான வெற்றி பெற்றது எம்ஜியாருக்குள்ள
மக்கள் சக்தியின் மகாத்தான ஆதரவை உலகுக்கு பறை சாற்றியது
அந்த இடைத்தேர்தல்
மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த அன்றைய பிரதமர் இந்திராகாந்தி
தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ்
மாநிலத்தில் ஆளும் கட்சியாக
இருந்த திராவிடமுன்னேற்றகழகம் தமிழகத்தின் தனிப்பெரும்
தலைவராக திகழ்ந்து புகழ்பெற்ற
பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான
ஸ்தாபன காங்கிரஸ் என்ற மும்முனை தாக்குதலை
எம் ஜி ஆர் தலைமையிலான
அண்ணா தி .மு .க .இடது சாரிகளின் துணையோடு வெற்றிகண்டது
இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தி .மு .க மற்றும் இரண்டு காங்கிரஸ் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து
வீடு வீடாக தெருத்தெருவாக ஒரு சுவரைக்கூட விட்டு வைக்காமல்
தங்களது சின்னத்தை வரைந்து விட்டனர் .போதாக்குறைக்கு
மார்க்சிஸ்ட்கமயுனிஸ்ட் கட்சியும் தமது பங்குக்கு
தோழர் சங்கரையாவை வேட்பாளராக
அறிவித்து அவர்களின் சின்னத்தையும் வரைய தொடங்கிவிட்டனர் .அதன் பின்னர் தான் ,பி .இராம மூர்த்தியுடன் எம் .ஜி .ஆர் இந்திய கம்யுனிஸ்ட் தலைவராக இருந்த எம் .கல்யாண சுந்தரமும் பேசி
அ.தி .மு க .வுக்கு ஆதரவு கேட்டனர் .சி .பி. எம் .வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டார் .
தேர்தலுக்கு மூன்று வாரங்கள் இருந்த நிலையில் தான் அண்ணா தி.மு.க.
வேட்பாளராக கே.மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை எம்.ஜி.ஆர். அறிவித்தார் அதன் பிறகு இரண்டொரு நாள் கழித்துதான்
வெற்றி சின்னமாம் இரட்டை இல்லை சின்னம் அறிவிக்கப்பட்டது
.
கட்சி புதியது ,வேட்பாளர் புதியவர் ,சின்னம் புதிது .இந்த நிலையில்
முழுக்க முழுக்க மக்களையும் ,தொண்டர்களையும் ,மட்டுமே நம்பி
எம்.ஜி.ஆர்.களம் இறங்கினார்
டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர்கள் வந்து குவிந்துவிட்டனர்
மாநிலத்தின் மொத்த அமைச்சரவை யும் திண்டுக்கல் தொகுதியில்
முகாமிட்டுவிட்டது எங்கு பார்த்தாலும் புத்தம் புதிய கார்களும் ஜீப்புகளும்
பறந்து கொண்டிருந்தன .வீதிக்கு வீதி வண்ண விளக்கு அலங்காரங்கள் ,
கொடி,தோரணங்கள் ,கட் -அவுட்டுகள் ,போஸ்டர்கள் என்று ஆளும்
தி.மு.க.பணத்தை வாரியிறைத்தது .திண்டுக்கல் நாடாளுமன்றத
தொகுதியையே கோலாகலமாக்கிக் கொண்டிருந்தது .
ஆனால் அண்ணா தி.மு.க. வின் நிலையோ ?அறிவிக்கப்பட்ட இரட்டை
இலை சின்னத்தை வரைவதற்கு கூட சுவர்கள் கிடைக்கவில்லை
பிரசாரத்துக்கு பெரிய அளவில் வண்டி வாகனங்கள் இல்லை .ஆனாலும்
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும தொண்டர்கள் படையெடுத்து
வந்திருந்தினர் .அவர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தனர் .வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தனர்
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலக்கோட்டை ,ஆத்தூர் ,சோழவந்தான் ,உசிலம்பட்டி ,திருமங்கலம் ,திண்டுகல்
ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆங்காங்கே அண்ணா தி.மு.க.
தொண்டர்கள் மிரட்டப்பட்டார்கள் ,தாக்கப்பட்டார்கள் .அ.தி.மு.க.கோடிக்
கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன .தொழில் துறை ரவுடிகளும் ,குண்டர்களும்,ஆயுள்கைதிகளும் நேரடியாக களத்தில் இறக்கி
விடப்பட்டு அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன இதற்க்கு மூல காரணமாக
இருந்தவர் மதுரை முன்னாள் மேயர் முத்து என குற்றச்சாட்டு அப்போது
எழுந்தது
இந்த வன்முறை வெறியாட்டத்துக்கு முதல் களப்பலியானவர் தான்
வத்தலகுண்டு ஆறுமுகம் என்ற அ.தி மு.க.தொண்டர் .திருச்சி சுசிலா ,கோடையிடி முத்துராமன் என்ற அ.தி.மு.க.பேச்சாளர் பங்கேற்ற பிரசரா
பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரவு தேர்தல் அலுவலகத்துக்கு வந்த
அந்த தொண்டனை குத்தி கொலை செய்துவிட்டனர் . அந்த தகவல்
அறிந்து .ஆறுமுகத்தின் இளம் மனைவி கர்ப்பவதியாக இருந்த சுந்தரியை
சந்தித்து ஆறுதல் சொல்ல வந்த எம்.ஜி.ஆர்.கண்ணீர்விட்டு அழுதார்
மே மாதம் முதல் வாரத்தில் இந்தச்சம்பவம் வத்தலகுண்டு நகரில் நடை
பெற்றது மே 11-ஆம் தேதி எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி படைப்பான
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானது அன்று திண்டுகல்
நகரில் வரலாறு காணா வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்டது
பிரசாரத்துக்காக லாரிகளில் வந்த அண்ணா தி.மு.க. தொண்டர்கள் விரட்டி
அடிக்கப்பட்டனர் .அன்று தான் விளாத்திகுளம் ஒன்றிய அ.தி.மு.க. அமைப்பாளர் யாக்கோப்பு
ரெட்டியார் வெட்டப்பட்டார்
இத்தகைய மிரட்டலும் ,மிரட்சியுமான சூழ்நிலையில் தான் எம்.ஜி.ஆரின்
சூறாவளிப் பிரசாரமும் நடைபெற்றது .அவர் சென்ற வ்ழிஎங்கும்
மக்கள் கூட்டம் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து அவரைக்கண்டு
அவரதுஉரை கேட்டு மகிழ்ச்சி அடைந்தது .எங்கு திரும்பினாலும்
இரட்டைவிரல் காட்டி அ.தி.மு.க.வெற்றிக்கு கட்டியம் கூறிய அந்த
மக்கள் கூட்டம் 1973-மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற .வாக்குப்
பதிவின் பொது தங்கள் அமோக ஆதரவை எம்.ஜி.ஆர். மீது தங்களுக்குள்ள அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்தியது .
மே மதம் 22-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதிமுக வின் வெற்றி
தகவல்அறிவிக்கப்பட்டபோது ,தமிழகம் எங்கும் கோலாகலம் ,மக்கள் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி
ஆறு மாதக் குழந்தையான அண்ணா தி.மு.க..அந்த இடைத்தேர்தலில்
பெற்ற வாக்குகளின் விபரம்
மொத்தம் வாக்குகள் ............643704
பதிவானவை ...........................491553
அண்ணா தி.மு.க.....................260930
ஸ்தாபன காங்கிரஸ் ............118032
தி.மு.க...................................... .... 93496
இந்திர காங்கிரஸ் ...................11423
இந்த தேர்தலில் அப்போதைய ஆளும் தி.மு.க மூன்றாம் இடத்துக்கு
தள்ளப்பட்டது இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் உட்பட மற்ற
அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் '' என் அண்ணன் ''.
இன்று 45 ஆண்டுகள் நிறைவு தினம் .
அடிமைப்பெண் , நம்நாடு , மாட்டுக்கார வேலன் என்று மூன்று படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நான்காவதாக 21.5.1970 அன்று திரைக்கு வந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் .
1970ம் ஆண்டு சேலம் அலங்கார் தியேட்டரில் என் அண்ணன் திரைப்படம் வெளியான போது திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்ட 110 அடி உயர பிரம்மாண்டமான கட் அவுட் இது.இதை நிறுவ 70 கிலோ ஆணிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த கட் அவுட் கீழே நிற்கும் மக்களை பார்க்கும் போது இதன் பிரம்மாண்டம் விளங்கும்.
http://i62.tinypic.com/15plpns.jpg
courtesy face book
வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்த "என் அண்ணன்" படத்திற்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்த பாடல்கள் அனைவரையும் முணுமுணுக்க வைத்தன. கண்ணதாசன் - வாலி இருவரின் கற்பனையில் மிதந்துவந்த வார்த்தைகளுக்கு தன் இசையால் உயிர் கொடுத்தார் கே.வி.மகாதேவன்.
"நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா" - டி.எம்.எஸ். பாடும் தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளுக்கு பாடலின் நோக்கம் சிதையாத வண்ணம் அருமையாக மெட்டமைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.
"நீல நிறம் வானுக்கும் மண்ணுக்கும் நீல நிறம்" - டி.எம்.எஸ். - எஸ். ஜானகியின் இணைவில் ஒரு அருமையான மெலடி என்றால்,
நாட்டுப்புறத்து காதலை அருமையாக சித்தரிக்கும் துள்ளல் மெட்டில் ஒரு "சலக்கு சலக்கு சிங்காரி" என்று இருவேறுபட்ட எல்லைகளையும் தொட்டார் மகாதேவன்.
"கடவுள் ஏன் கல்லானான்?" பாடலை மறக்க முடியுமா? இந்தப் பாடலுக்கு மகாதேவன் அமைத்த மெட்டு பாடலை இன்றளவும் உயிர்த் துடிப்புடன் உலவ வைத்திருக்கிறது.
மக்கள் திலகம் - கே.வி.மகாதேவனின் வெற்றிக்கூட்டணி
-
நெஞ்சம் உண்டு! நேர்மை உண்டு!
‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, 21.5.1970 அன்று,, ‘என் அண்ணன்’ படம் வெளியாயிற்று.
வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ப. நீலகண்டன் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், கண்ணதாசனின் கருத்துமிக்கப் பாடல்களோடு, புரட்சி நடிகரும், கலைச்செல்வி ஜெயலலிதாவும் இணைந்து நடித்த இப்படமும் பெரிய வெற்றிப் படமாகவே அமைந்தது.
இப்படத்தின் முதல் பாடலே, கேட்போர் நாடி நரம்புகளையெல்லாம் முறுக்கேற்றி வீரத்தை விளைவிக்கும் பாடலாக அமைந்தது.
அண்ணாசாலை… அங்கே இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போதே தனது செலவில் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அண்ணாசிலை.
1969 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் மூன்றாம் நாளில் அமரராகிவிட்ட அந்த அண்ணாவை நினைத்து, சிலையைப் பார்த்து, குதிரைவண்டியை ஓட்டிக்கொண்டே வணக்கம் செய்து, எம்.ஜி.ஆர். பாடிவரும் பாடல் காட்சிக்கான பாடலாக அப்பாடல் திகழ்ந்தது.
காலமாற்றத்தில் காங்கிரஸ் இயக்கம் பிளவு கண்டது. கவிஞரோ இந்திராகாந்தியின் தலைமையிலான இந்திரா காங்கிரசில் சேர்ந்தார். அப்போது தி.மு.கழகமும் இந்திரா காங்கிரசோடு உறவு கொண்டிருந்தது. அறிஞர் அண்ணாவின் மீதும் மனதின் அடித்தளத்தில் மாறாத பாசங்கொண்டிருந்த கவியரசர் இச்சூழ்நிலையில், தி.மு.கழகத்தின் பொருளாளராய் வீற்றிருந்த எம்.ஜி.ஆருக்காக, வீரநடை போட்டு எழுதிய விவேகம் செறிந்த வேகப்பாடலே அது…! எது என்பீர்! கேளுங்களேன்!
“நெஞ்சம் உண்டு! நேர்மை உண்டு! ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா! – நீ
ஆற்றுவெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா!”
எப்படி இருக்கிறது. தொடக்கமே? கேட்டீர்களா?
‘நெஞ்சம் இருக்கிறது! அதிலே நேர்மையும் இருக்கிறது! வெற்றிக்கு உரிய நேரமோ காத்திருக்கிறது! அப்புறம் ஏன் பிறர் பால் அஞ்சி அஞ்சி, கெஞ்சி கெஞ்சி வாழ வேண்டும்? அஞ்சி வாழ்ந்ததும் போதும்! ராஜா! நீ காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுபோல் எழுந்து ஓடு!’ என்றல்லவா எம்.ஜி.ஆர். வீர முழக்கமிடுகிறார்.
அற்புதமான புரட்சிப் பாடலின் அடுத்த வரிகள்!….இதோ!
“அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? – தினம்
அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டுகண்டு பயம் எதற்கு? – நீ
கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு….
எப்படிப்பட்ட வினாக்கள்? எம்.ஜி.ஆர்.. எழுப்புவன? நியாயந்தானே!
‘அடிமைப்பட்டு உயிர் சுமக்கும் உடம்பிற்கு இரத்தமும்; நாளும் அச்சப்பட்டு வாழும் கோழைக்குக் குடும்ப வாழ்க்கையும் எதற்காம்? கொடுஞ்செயல்களைக் கண்டு கண்டு பயப்படுதலும் எதற்காம்?
மனிதா! நீ பிறக்கும்போது கொண்டு வந்ததுதான் என்ன? தொலைந்து போவதற்கு என்ன இருக்கிறது? நீ தைரியமாக மீசையை முறுக்கு!’ இத்தகு புரட்சி வினாக்களை எழுப்பி, வீரம் விளைவிக்கும் விதைகளை யாரால் தூவ முடியும்? எம்.ஜி.ஆரால் தான் முடியும்! அதைப் பார்வையிட்டுப் பக்குவமாய்ப் பாடல் எழுதித்தரக் கண்ணதாசனால்தான் முடியும்! அப்படித்தானே!
இன்னும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேளீர்!
“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி – அதன்
அருகினில் ஓலை குடிசை கட்டி,
பொன்னான உலகென்று பெயருமிட்டால் – இந்த
பூமி சிரிக்கும்! அந்த சாமி சிரிக்கும்!”
அதிரும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேட்டீர்களா?
‘உயர்ந்து நிற்கும் வானளாவிய மாகளிகைகள்! அதன் ஓரங்களில் ஓசை குடிசைகள்! இப்படி இருப்பதுதானா பொன்னான உலகம்? இப்படிப் பெயரிட்டு அழைத்தால் இந்த பூமி மக்கள் சிரிக்க மாட்டார்களா? பூமியைப் படைத்த அந்த ஆண்டவனாம் சாமி சிரிக்கமாட்டானா?’
இவற்றிற்கெல்லாம் விடைகள்! யார் தருவது?
விடைகள் தரப் புறப்பட்டு வரும் கவியரசர் வரிகள் இதோ! எம்.ஜி.ஆர். என்ற புரட்சித் தலைவர் மூலம் புவிவாழ் மக்களுக்குப் புலப்படுத்தப்படுவதைக் காணீர்!
“உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு! – இங்கு
உன்னைவிட்டால் பூமி ஏது? கவலை விடு!
ரெண்டில் ஒன்று பார்ப்பதற்குத் தோளை நிமிர்த்து! – அதில்
நீதி உன்னைத் தேடிவரும் மாலை தொடுத்து!”
விடைகளைக் கண்டீர்களா?
‘உறுதிகொண்ட நெஞ்சம் உள்ள இளைஞனே! உன் நாட்டில் எல்லாம் உண்டு என்ற நம்பிக்கையில் உன் காலை முன்வைத்து முன்னேறு! நீதானே இந்த பூமியின் ராஜா! உன்னைப் போன்ற இளைஞர்களை விட்டுவிட்டு இந்த பூமி இயங்க முடியுமா? எனவே கவலையை விட்டுவிடு!
வெற்றியா? தோல்வியா? இந்த இரண்டில் ஒன்றைப் பார்ப்பதற்கு நீ தோளை நிமிர்த்து! நீதியே உன்னைத் தேடி வந்து வெற்றி மாலையைச்சூட்டும்!’
எல்லாம் சரிதான்! கவிஞர், புரட்சித் தலைவர் இருவரும் கூடி, இறுதியில் சொல்லும் விடை எங்கோ இடிப்பதுபோல் உள்ளதே? என்பீர்கள்!
ஆமாம்! கவிஞர் ஆவேசமுடன் தீட்டிய வரி, சென்சாரில் மாட்டி, படத்தில் எம்.ஜி.ஆரால் எடுத்துச் சொல்ல முடியாமல் மாற்றம் பெற்றுவிட்டதுதான் உண்மை.
அந்த ஈற்றடி இதுதான்….!
“நீதி வரவில்லை எனில் வாளை உயர்த்து!” என்பதே.
இப்போது சரிதானே! உண்மை உழைப்பு! உயர் தியாகம்! இவற்றிற்கெல்லாம் நீதி கிட்டாவிடில் வாளை உயர்த்த வேண்டியது தானே! வெட்ட வேண்டிய தீமைகளை வேரறுக்க வேண்டியது தானே! இப்போது விடை சரிதானே!
courtesy - kannadasan