https://uploads.tapatalk-cdn.com/201...8338c2f075.gif
Printable View
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
30 வது வெற்றிச்சித்திரம்
பெண்ணின் பெருமை வெளியான நாள் இன்று
பெண்ணின் பெருமை 17 பெப்ரவரி 1956
http://www.thehindu.com/todays-paper...A1MC0F24jpgjpg
https://upload.wikimedia.org/wikiped...ai_Poster_.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
240 வது வெற்றிச்சித்திரம்
சிரஞ்சீவி வெளியான நாள் இன்று
சிரஞ்சீவி 17 பெப்ரவரி 1984
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...2d&oe=5B1F2028
vaannila vijayakumar
தமிழ்த்திரையில் நடிகர்திலகம் படைத்த சாதனைகள் இன்று ஊடகங்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டாலும், அது மேகங்கள் கூடி சூரியனை மறைப்பதற்கு ஒப்பானதே.
ஒளிவீசும் வைரம் ஒருநாளும் பூமிக்குள் தங்காது. இன்றல்ல... என்றேனும் ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
அய்யனின் அளப்பதற்கரிய தமிழ்ப்பட சாதனைகளில் இருந்து இதோ சிலதுளிகள்...
மாதத்தின் '31' தேதிகளிலும் அவரின் படங்கள் வெளியாகி வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் விந்தையினைப் பாரீர்.
திட்டமிட்டு ஒரு நாயகனை உருவாக்கி, இதுபோல் தேதிதோறும் படங்களை வெளியிட முயற்சித்தாலும் வெற்றிபெற முடியாது என்பதை மிகவும் தலைக்கனத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.
இதோ பார்வைக்காக...
01:06:1974. தங்கப்பதக்கம் 26W
02:08:1975. மன்னவன் வந்தானடி H
03:03.1954. மனோகரா 23W
04:03:1978. தியாகம் 25W
05: 09:1969. தெய்வமகன் H
06:05:1972. பட்டிக்காடா பட்டணமா 26W
07:12:1972. நீதி H
08:12:1979 வெற்றிக்கு ஒருவன்
09:11:1969. சிவந்தமண் 21W
10:01:1986. சாதனை 19W
11:04:1975. அவன்தான் மனிதன் H
12:04:1957. வணங்காமுடி H
13:04:1960. தெய்வப்பிறவி H
14: 04:1958. சம்பூர்ண ராமாயணம் 23W
15:08:1985. முதல் மரியாதை 25W
16.05:1959. வீரபாண்டிய கட்டபொம்மன் 26W
17:10:1952. பராசக்தி 42W
18:07:1964. கைகொடுத்த தெய்வம் H
19:08:1996. ஒரு யாத்ரா மொழி H
20:02:1970. விளையாட்டுப்பிள்ளை H
21:05:1982. தீர்ப்பு 25W
22:12:1973. ராஜபார்ட் ரங்கதுரை H
23:11:1962. ஆலயமணி H
24: 03:1973. பாரதவிலாஸ் H
25:06:1960. படிக்காத மேதை 22W
26:01:1983. நீதிபதி 25W
27:01:1979. திரிசூலம் HH
28:08:1987. ஜல்லிக்கட்டு H
29:09:1972. வசந்தமாளிகை 41W
30:10:1978. பைலட் பிரேம்நாத் HH ( இலங்கையில் அரங்கம் விட்டு அரங்கம் மாற்றி மூன்று வருடங்கள் வரை தொடர்ந்து ஓடிய மாபெரும் வெற்றிக்காவியம்.)
31:10:1959. பாகப்பிரிவினை 32W
பின்குறிப்பு: இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் படங்களும் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி இலக்கைத் தொட்டவை... வெற்றிக்கு ஒருவன் தவிர. அப்படம் மட்டுமே 100 நாட்களை எட்டவில்லை.
இப்பட்டியலைப் படித்தவுடன் 'இதென்ன பிரமாதம்' என்று ஆராயாதீர்கள். எல்லோர் பட்டியலையும் ஒப்பீடு நடத்தி விட்டுத்தான் இப்பதிவையே பதிவிடுகிறேன்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...dd&oe=5B095C37
courtesy nadigar thilakaM SIVAJI VISIRIKAL
அருமையான தொகுப்பு. innovative imagination - NT ரசிகர்களும் நடிகர் திலகம் போன்று திறமைசாலிகளே!!
இந்த சாதனையை நமது NT மட்டுமே செய்ய முடியும் என்பதை கர்வத்துடன் சொல்லி பெருமை அடைவோம். நமது NT புகழ் வளரட்டும்.
நன்றி vaannila விஜயகுமார் மற்றும் சிவா!! தங்களின் சேவை தொடரட்டும்
Tamil Hindu on One and only Uththama Puththiran: http://tamil.thehindu.com/cinema/cin...le22770413.ece
உத்தமபுத்திரன் 60 ஆண்டுகள்: பார்த்திபன் நல்லவன், விக்ரமன் கெட்டவன்
சிவாஜிகணேசன் ஒத்த உருவத்துடன் கூடிய இரட்டை வேடங்களில் நடித்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும், அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது இன்னமும் அலுக்காத ஒரு கலையனுபவத்தைத் தருகிறது.
செய்தியைக் கொண்டுசெல்லும் வீரனை மறைந்திருந்து அம்பெய்திக் கொல்லும் முதல் காட்சியிலேயே தொற்றிக்கொள்கிற பரபரப்பு, படம் முடியும்வரை தொய்வின்றித் தொடர்கிறது. இரண்டே கால் மணி நேரத் திரைப்படத்தில் முதல் இருபது நிமிடங்களிலேயே படத்தின் மொத்த முன்கதைச் சுருக்கத்தையும் சொல்லிமுடித்து அரைமணி நேரத்தில் படத்தின் உச்சக்கட்டச் சிக்கலுக்குள் அழைத்துச்சென்றுவிடுகிறது இப்படம். முதல் காட்சியிலேயே திரைப்படம் தொடங்கிவிட வேண்டும் என்ற திரைக்கதையின் வெற்றிச்சூத்திரம் சரியாகப் பொருந்திவந்த மிகச் சில தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
வியப்பூட்டும் அம்சங்கள்
படத்தில் இடம்பெறும் முதல் பாடல் ஒரு தாலாட்டு. தாய்மாமனின் தவறான வழிநடத்தலில் வளரும் விக்கிரமனையும் அரண்மனைப் பணியாளரின் பொறுப்பில் தலைமறைவாக வளரும் பார்த்திபனையும் அந்த ஒரே பாடலில் அடுத்தடுத்து காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் இன்னமும் ஆச்சர்யப்படுத்துகிறது. அரண்மனை இளவரசன் பொம்மைக் குதிரையில் ஆடிக்கொண்டிருக்கும்போது கானகத்தில் வளரும் அவனுடைய சகோதரன் உண்மையான குதிரையிலேயே பவனிவந்துகொண்டிருக்கும் காட்சியே இரண்டு பேரையும் ஒப்பிட்டுக் காட்டும் ஒரு சிறந்த குறியீடுதான்.
‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’ என்று ஸ்ரீதர் எழுதிய நறுக்குத் தெறித்தாற்போன்ற வசனம் படத்தின் முழுக்கதையையும் ஒரே வாக்கியத்தில் சொல்லி முடிக்கிறது. முடிசூட்டும் விழா மண்டபத்துக்கு சிவாஜிகணேசன் நடந்துவரும் காட்சியும் தாய்மாமன் நாகநாதனை நிர்வாகப் பொறுப்பில் அமர்த்திவிட்டு, அவையினரிடம் சம்மதம்தானே எனக் கேட்டு இல்லையா என ஒரே வார்த்தையில் அதை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமும் இன்னமும் ரசிக்கவைக்கின்றன.
‘முல்லை மலர் மேலே’ என்று கனிந்துருகும் காதலும் ‘யாரடி நீ மோகினி’ என்று நடனமிடவைக்கும் கொண்டாட்டமும் ‘காத்திருப்பான் கமலக்கண்ணன்’ என்று காதலின் ஏக்கமும் பாடல்களை இன்னமும் முணுமுணுக்கவைத்துக்கொண்டிருக்கிறது. பாடல்களுக்கான முக்கியத்துவம், படம் முழுக்கத் தொய்வே இல்லாமல் விறுவிறுப்பாக நகர்வது, கவனம் ஈர்க்கும் ஒளிப்பதிவு என்று ஸ்ரீதர் பின்னாட்களில் இயக்கிய படங்களில் இந்தக் கூறுகளைப் பார்க்க முடிகிறது.
இலக்கியத்தின் வழியாக
சிவாஜி-பத்மினி- எம்.என்.நம்பியார் என்று திறமையான கலைஞர்களின் நடிப்பும் ஜி.ராமநாதனின் இசையும் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு மேலும் செழுமை சேர்த்தன. எனினும், இந்தப் படத்தின் மையம், உருவத்தில் ஒத்திருக்கும் இரட்டைச் சகோதரர்களின் கதை என்பதுதான்.
இதே கதை இதே பெயரில் 1940-ல் பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடிக்கப் படமாகியிருக்கிறது. பி.யு.சின்னப்பா நடித்த அந்த முதலாவது ‘உத்தமபுத்திரன்’தான் தமிழின் முதல் இரட்டை வேடப் படம். 1929-ல் ஆலன் வான் இயக்கத்தில் வெளிவந்த ‘தி அயன் மாஸ்க்’ படத்தின் தழுவல்தான் அந்தப் படம். அந்தப் படத்துக்கான ஆதாரக் கதை பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் த்யுமா 1850-ல் எழுதிய ‘தி மேன் இன் தி அயன் மாஸ்க்’ என்ற நாவல்.
பி.யு.சின்னப்பா நடித்த ‘உத்தமபுத்திர’னுக்கும் சிவாஜி நடித்த ‘உத்தமபுத்திர’னுக்கும் நடுவில் இன்னொரு உருவ ஒற்றுமை கொண்ட சகோதரர்களைக் கதாநாயகர்களாகக் கொண்ட இன்னொரு தமிழ்த் திரைப்படமும் வெளிவந்தது. அந்தப் படம் 1949-ல் வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’. சிவாஜியின் ‘உத்தமபுத்திர’னில் அவருக்குத் தந்தையாக நடித்தாரே எம்.கே.ராதா. அவர்தான் அபூர்வ சகோதர்களாக நடித்தவர்.
அந்தப் படத்தின் மூலக்கதையாசிரியரும் அலெக்ஸாண்டர் த்யுமாதான். அவர் எழுதிய தி கார்சிகன் பிரதர்ஸ் நாவலைத் தழுவித்தான் ‘அபூர்வ சகோதரர்கள்’ உருவானார்கள். ஆக, திரைப்படத்தின் வித்தியாசமான கதைகளுக்கும் களங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் இலக்கியமே அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக இருந்துவருகிறது என்பதற்கு ‘உத்தமபுத்திரன்’ ஓர் உதாரணம்.
தமிழில் அதன் பிறகு வெளிவந்த உருவ ஒற்றுமை கொண்ட சகோதரர்களின் கதைகளில் எல்லாம் ‘உத்தமபுத்திர’னின் தாக்கம் கொஞ்சமாகவோ முழுமையாகவோ இருக்கிறது. இயக்குநர்களிடத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்பதைத் தாண்டி ‘உத்தமபுத்திரன்’ ரசிகர்களிடத்தில் உருவாக்கிய தாக்கம்தான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.
‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ அதே கதையை நகைச்சுவை, சமகால அரசியலோடு சேர்த்துச் சொல்லி வெற்றிபெற்றது. அடுத்த பாகமும் தயாராகிவருகிறது. தழுவல் ஒருபக்கம் இருக்கட்டும், ஒரிஜினல் ‘உத்தமபுத்திரன்’ படத்தின் கதையும் வசனங்களும்கூட இன்றைய அரசியல் சூழலுக்குப் பொருத்தமாகத்தானே இருக்கின்றன.
‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’.
COMMENTS SECTION on Uththama Puththiran from Tamil Hindu:
Reginald 9115 points
21 hours ago
" யாரடி நீ , உன் அழகை கன்னியர்கள் கண்டதினாலே இந்த இரண்டு பாடலின் காட்சிகளிலும் நடிகர் திலகத்தின் ஸ்டைல் ஐ மட்டும் நினையுங்கள் அப்பப்பா அற்புதம் . தாய்மாமனின் திட்டத்துக்கு தெளிவு கேட்பார் சிவாஜி " மாமா பார்த்திபன் என்று நினைத்து யாரேனும் என்னை கொன்றுவிட்டால் , நம்பியார் பதிலளிப்பார் ஆமாம் யோசிக்க வேண்டிய விஷயம் , சிவாஜி : இல்லை அடியோடு மறந்துவிட வேண்டிய விஷயம் . அற்புதமான படம் , ஹெலனின் அருமையான மேலை நாட்டு நடனம் .
VCS 400 points
a day ago
ஸ்ரீதரின் வசனத்திற்கு எடுத்துக்காட்டு:
"எப்படி வந்தீர்கள்? அரண்மனையில் யாராவது பார்த்திருந்தால் ஆபத்து"
"பார்த்தவர்களுக்குத் தான் ஆபத்து"
Sathya Ravi25 points
a day ago
" உத்தம புத்திரன் "
இரு வேறு தோற்றங்களுக்கு அருமையாக ஒப்பனை செய்த ஒப்பனை கலைஞரை பாராட்டாமல் இருக்க முடியாது .... நடிப்பில் சிவாஜி அவர்கள் வித்தியாசம் காட்டுவது அவரது தனி பாணி ... நடித்த அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருப்பது பாராட்டுக்குரியது .... ஸ்ரீதர் அவர்களின் வசனங்கள் உயிரோட்டம் ..
படப்பதிவு மிகவும் அருமையாக இருக்கும் .. ஒரு காட்சியின் கேள்வி ... அடுத்த காட்சியில் விடையாக வரும் ...
பல முறை பார்த்து வியந்திருக்கிறேன் இந்த படத்தை ... இப்போதும் எனது மனமகிழ் திரைப்படங்களில் இந்த படமும் உண்டு ....
R. BALAKRISHNAN4160 points
2 days ago
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்துப்பார்த்தாலும் அலுக்காது. சலிக்காது. இரண்டு வேடங்களுக்கும் சிவாஜி அவர்கள் காட்டியிருக்கும் வித்தியாசம் மற்றும் 'யாரடி நீ மோஹினி' பாடலுக்கு அவரின் நடனமும் அப்பப்பா..வார்த்தைகளால் சொல்லி மாளாது.
உத்தம புத்திரன் - இது போல் ஒரு படத்தை தமிழ் திரையுலகம் கண்டதில்லை ... இனியும் காணப்போவதும் இல்லை . Nt வெறியர்களை கட்டிப்போடும் படம்.
மென்மேலும் 100 ஆண்டுகள் காண உத்தம புத்திரனை வாழ்த்துவோம்..... வாழ்வார்!!
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
102 வது வெற்றிச்சித்திரம்
அன்புக்கரங்கள் வெளியான நாள் இன்று
அன்புக்கரங்கள் 19 பெப்ரவரி 1965
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...84&oe=5B199A30
பளனியப்பன் சுப்பு
வெளிவராத நடிகர் திலகத்தின் திரைப்படம்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...48&oe=5B0B5555
courtesy net
sekar parasuram
தமிழகத்தில் எவ்வளவோ நடிகர்கள் உருவானார்கள் ஒரு சில நடிகர்களை தமிழக மக்கள் மிகவும் ரொம்ப ஆர்ப்பரிப்போடு கொண்டாடியும் இருக்கிறார்கள்,
ஆனால் நடிகர்திலகம் ஒருவர் மட்டுமே ஏனைய பிற நடிகர்களோடு தொடர்பு படுத்த முடியாத வரலாற்று நிகழ்வுகளோடு இருக்கிறார்!
இனைப்பில் உள்ள வரலாற்று நிகழ்வு என்னவென்றால் இந்திய சுதந்திரப் போருக்கு வித்திட்ட முதல் வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு திருநெல்வேலி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் தனது சொந்த செலவிலேயே நினைவுச்சின்னத்தை உருவாக்கி தனது திரளான ரசிகர்களை ஒன்று திரட்டி அதற்கான மிகப்பெரிய விழாவையும் நடத்தி கட்டபொம்மனுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...6a&oe=5B1CDDF2
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...50&oe=5B1BC09D
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...bc&oe=5B10AAE7
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...68&oe=5B0D1731
courtesy net
vaannila vijayakumar
வாழ்த்துகிறோம்.
வாழ்க சிவாஜி!
மதுரையின் கலையடையாளங்களில் ஒன்று செண்ட்ரல் திரையரங்கம். நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிப் படங்களை திரையிட்ட அரங்கம்....
அவ்வரங்கத்தில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட அனுமதிச்சீட்டு வழங்கும் பணியில் இருப்பவர் திரு.செல்லையா அவர்கள். நடிகர்திலகத்தின் நெடுங்கால ரசிகர்.
அவருக்கு வயது 74.
அவர், அஅனுமதிச்சீட்டு வழங்கும் அறைமுழுதும் நம் நடிகர்திலகத்தின் புகைப்படங்களால் நிறைந்திருக்கும் அழகை இன்றும் நீங்கள் அங்கே ரசிக்கலாம். அந்த அளவுக்கு நம் அய்யனின்மேல் அதீதப் பற்றுக் கொண்டவர்.
இதனைக் கேள்வியுற்று, அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில், தென்சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூக. நலப் பேரவையைச் சேர்ந்த திரு. P.ஜெய்குமார் அவர்கள் 18:02:2018 அன்று ரூ.10000/- ( பத்தாயிரம் ரூபாய்) உதவித் தொகையை, திரையரங்க உரிமையாளர் மூலமாக திரு. செல்லையா அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மதுரையைச் சார்ந்த நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் திரு.பச்சைமணி, திரு. செல்வம், திரு. பி.பு வெங்கடேஷ், திரு. சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நண்பர் திரு.ஜெயகுமார் அவர்களின் நற்செயலை நாமும் பாராட்டுவோம்.
"அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்!"
என்பது அய்யனின் வாக்கு.
நல்ல மனம் வாழ்க!
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e9&oe=5B12EFFB
courtesy net
abdul khaddar
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...0c&oe=5B0A17C7
sekar parasuram
நேற்று புதுயுகம் தொலைக்காட்சியில் யாவரும் கேளிர் என்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் இயல் இசை நாடகம் இவற்றில் எது மக்களிடம் என்றும் மேலோங்கி இருக்கிறது என்ற தலைப்பில் விவாதம் செய்து பேசினார்கள்,
இதில் நாடகம் தான் தலை சிறந்தது என பேசிய நாடகக் கலைஞர் நடிகர் திலகத்தை குறிப்பிட்டு அகம் மகிழ்ந்து புகழ்ந்தார்,
நடிகர் திலகம் நடத்திய நாடகங்கள் மட்டுமே இன்றும் மக்களிடையே புகழ்பெற்று நிலைத்து நிற்கிறது, கட்டபொம்மன், ஹரிச்சந்திரா போன்ற எண்ணற்ற நாடகங்களில் அவரது பாதம் முதல் தலைமுடி வரை...யிலும் நடித்தது அந்த நடிப்புத் தான் எங்களை எல்லாம் மேடை ஏறி நடிக்கத் தூண்டியது
அதனால் தான் நாடகக் கலை அழியாமல் தொடர்கிறது,
இன்னமும் மக்களின் மனங்களில் வரலாற்று நாயகர்கள் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் எங்கள் நாடகக் கலையே என கருத்துக்களை வைத்தார்,
நாடகத் துறையாகட்டும் சினிமாவின் நடிப்புத் துறையாகட்டும் என்றென்றும் உதாரண சூரியனாக ஒளி தருபவர் நடிகர் திலகமே மட்டுமே
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...2c&oe=5B1B857C
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...8c&oe=5B4C5ADE
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...6e&oe=5B06A261
vaannila vijayakumar
EVER GREEN BOX OFFICE HERO
365 * 12 * 24 * 7
தமிழ்த்திரை உலகில் மட்டுமல்ல... எம்மொழிப் படவுலகிலும் இச்சாதனை எவருக்குமில்லை..! நூற்றுக்கும் மேற்பட்ட நூறுநாள் வெற்றிப் படங்களைத் தந்த காவிய நாயகன் நம் நடிகர்திலகம் மட்டுமே. இதில் எள்ளளவும் சந்தேகமின்றி நம் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
பண்டிகை நாட்களில், விடுமுறை தினங்களில் எதிர்ப்பார்ப்புகளை ரசிகர்களிடையே எகிற வைத்து வெளியிட்டால் தான் ஒரு திரைப்படம் வசூலை வாரிக் குவிக்கும் என்ற போலி வரையறைகளெல்லாம் நடிகர்திலகத்தின் படங்களுக்குக் கிடையாது. வெகு சாதாரண நாட்களில் வெளியாகிகூட சக்கைபோடு போட்டிருக்கின்றன.
1952 முதல் 1999 வரையிலான 49 ஆண்டுகளில் அய்யன் நடித்து வெளியான 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், மாதந்தோறும் வெளியாகி, ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதோடன்றி, வசூலில் வரலாற்றுச் சாதனைகள் புரிந்திருக்கின்றன.
அவற்றில், வெற்றிப் படங்களின் பட்டியலை மட்டும் மாத வாரியாக தொகுத்துஉங்கள் பார்வைக்கு பட்டியலிடுகிறேன். பார்த்து, ரசித்துப் படித்து,பகிருங்கள் தோழர்களே ...
** இக்குறியிட்ட படங்கள் மட்டும் இலங்கையில் ஓடியதாக மிகமிக நம்பத்தகுந்த நண்பர்கள் சொன்னதன் அடிப்படையில் பதிவிட்டிருக்கிறேன்.
JANUARY HITS...
01. காவேரி H
02. தங்கப்பதுமை H
03. இரும்புத்திரை 22W
04. பார்த்தால் பசிதீரும் H
05. கர்ணன் 22W
06. மோட்டார் சுந்தரம்பிள்ளை H
07. கந்தன் கருணை 18W
08. ராஜா H
09. சிவகாமியின் செல்வன் H
10. தீபம் 19W
11. அந்தமான் காதலி H
12. திரிசூலம் HH
13. ரிஷிமூலம் H
14. உருவங்கள் மாறலாம் H (Guest)
15. நீதிபதி 25 W
16. திருப்பம் H
17. பந்தம் H
18. சாதனை 19 W
19. மருமகள் 18W
01. SCHOOL MASTER / KANNADAM / 25W
02. BEZAWADA BEBBULI / TELUGU / H
FEBRUARY HITS...
01. பெண்ணின் பெருமை H
02. தெனாலி ராமன் H
03. மக்களைப் பெற்ற மகராசி 18 W
04. உத்தம புத்திரன் H
05. சத்தியசுந்தரம் H
06. வா கண்ணா வா H
01. DURTI / HINDI / 38 W
MARCH HITS....
01. மனோகரா 23 W
02. பதிபக்தி H
03. பாவமன்னிப்பு 25 W
04. இருவர் உள்ளம் H
05. குலமா குணமா H
06. ஞானஒளி H
07. பாரதவிலாஸ் H
08. ராஜராஜ சோழன் 98 Days
09. தியாகம் 25 W
APRIL HITS....
01. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி H
02. வணங்காமுடி H
03. சம்பூர்ண ராமாயணம் 23 W
04. தெய்வப்பிறவி 18W
05. படித்தால் மட்டும் போதுமா H
06. பச்சை விளக்கு H
07. சாந்தி H
08. கலாட்டா கல்யாணம் H
09. வியட்நாம் வீடு H
10. வாணிராணி H
11. அவன்தான் மனிதன் H
12. தர்மராஜா H **
13. நட்சத்திரம் (Guest) H
14. வாழ்க்கை H
15. படையப்பா (Guest) HH
MAY HITS...
01. வீரபாண்டிய கட்டபொம்மன் 25 W
02. பாசமலர் 25 W
03. பட்டிக்காடா பட்டணமா 25 W
04. சத்தியம் H**
05. கல்தூண் H
06. தீர்ப்பு 25 W
01. VISWANATHA NAYAKUDU / TELUGU / H
JUNE HITS....
01. அமரதீபம் 18 W
02. தங்கமலை ரகசியம் H
03. படிக்காத மேதை 23 W
04. என்தம்பி H**
05. தங்கப்பதக்கம் 26 W
06. உத்தமன் HH **
07. ஜெனரல் சக்கரவர்த்தி H
08. சந்திப்பு 25 W
JULY HITS...
01. திரும்பிப்பார் H
02. அன்னையின் ஆணை H
03. ஸ்ரீவள்ளி H**
04. கைகொடுத்த தெய்வம் H
05. திருவிளையாடல் 25 W
06. தில்லானா மோகனாம்பாள் 19 W
07. சவாலே சமாளி H
08. எங்கள் தங்கராஜா H
09. ஒன்ஸ்மோர் 19W
AUGUST HITS...
01.மங்கையர் திலகம் H
02. தூக்குதூக்கி H
03. மரகதம் H
04. ராமன் எத்தனை ராமனடி H
05. தவப்புதல்வன் H
06. என்மகன் H
07. மன்னவன் வந்தானடி H
08. நான் வாழவைப்பேன் H
09. முதல் மரியாதை 25 W
10. ஜல்லிக்கட்டு H
01. JEEVANA THEERAALU / TELUGU / H
02. AGNI PUTHRUDU / TELUGU / H
03. CHANDRAKUPTHA CHANakya /TELUGU /H
04. ORU YAATHRA MOZHI /MALAYALAM/H
SEPTEMBER HITS...
01. பாலும் பழமும் 18 W
02. புதியபறவை 19 W
03. சரஸ்வதி சபதம் 19 W
04. தெய்வமகன் H
05. வசந்தமாளிகை 41 W
06. மிருதங்க சக்கரவர்த்தி H
07. தாவணிக் கனவுகள் H
01. NIVURU KAPPINA NIPPU/ TELUGU / H
OCTOBER HITS....
01. பராசக்தி 42W
02. சபாஷ் மீனா H
03. பாகப்பிரிவினை 31 W
04. பந்தபாசம் H
05. எங்க ஊர் ராஜா H**
06. திருடன் 98Days **
07. எங்கிருந்தோ வந்தாள் H
08. சொர்க்கம் H
09. பாபு H
10. கௌரவம் H
11. பைலட் பிரேம்நாத் HH**
12. பட்டாக்கத்தி பைரவன் 17 W
13. கீழ்வானம் சிவக்கும் H
14. தேவர்மகன் 25 W
01. THACHOLI AMBU / MALAYALAM / H
NOVEMBER HITS....
01. காத்தவராயன் H
02. கப்பலோட்டிய தமிழன் H**
03. ஆலயமணி H
04. அன்னை இல்லம் H
05. நவராத்திரி H
06. இருமலர்கள் H
07. ஊட்டிவரை உறவு H
08. லட்சுமி கல்யாணம் H **
09. உயர்ந்தமனிதன் 18W
10. சிவந்தமண் 21 W
11. அண்ணன் ஒரு கோவில் H
12. விஸ்வரூபம் H
13. வெள்ளைரோஜா H
14. படிக்காதவன்/ Guest / 25 W
DECEMBER HITS....
01. எதிர்பாராதது H
02. பாக்கியவதி H
03. விடிவெள்ளி H
04. நீதி 99 Days
05. ராஜபார்ட்ரங்கதுரை H
06. புதியவானம் H
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e5&oe=5B031E38
courtesy net
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
137 வது வெற்றிச்சித்திரம்
விளையாட்டுப் பிள்ளை வெளியான நாள் இன்று
விளையாட்டுப் பிள்ளை 20 பெப்ரவரி 1970
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...4b&oe=5B231800
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...f6&oe=5B18E2BD
https://i.ytimg.com/vi/U9mevGb7yUI/hqdefault.jpg
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...58&oe=5B0A3E36
சத்திய சுந்தரம் வெளியான நாள் 21.02.1981. இன்றுடன் 37 ஆண்டுகளை நிறைவு செய்து 38வது ஆண்டில் நுழைகிறது.
பிழைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்
சத்திய சுந்தரம்
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
213 வது வெற்றிச்சித்திரம்
சத்திய சுந்தரம் வெளியான நாள் இன்று
சத்திய சுந்தரம் 21 பெப்ரவரி 1981
https://images-na.ssl-images-amazon....zL._SY445_.jpg
abdul kadar abdul salam
நடிகர் திலகத்தின் வெளிவராத படம்.!
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...f9&oe=5B15B198
courtesy net
vaannila v
நடிகர்திலகத்தின் ஹை- லைட்ஸ் : 4
'புதியபறவை'யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம்.
நடிகர்திலகம் அங்கேயே தங்கி, நடித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள், அவருடைய விலை உயர்ந்த கடிகாரம்திருட்டுப் போய் விட்டது. கடிகாரம் போய்விட்டதே என்று அவர் வருந்தவில்லை; நண்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்துவிட்டோமே என்று வருந்தினார்....
சில மணி நேரங்களில் அந்த கடிகாரம் கிடைத்துவிட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி.
அவனை மற்ற தொழிலாளர்கள் கையும்-களவுமாகப் பிடித்து, நடிகர்திலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் பயத்தால் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது.
அவனை நடிகர்திலகம் தன்னருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லி யிருக்கலாமே!" என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையைவிட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா... இதை வைத்துக் கொள். இனி திருட மாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்தப் பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.
தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளி, நடிகர்திலகம் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் கால்களில் விழுந்தான். "இனி செத்தாலும் சரி! நான் திருட மாட்டேன். இது சத்தியம்" என்று கண்ணீர் வடித்தபடி தழுதழுத்தக் குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள்.
தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன்.
நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை- மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.
- டாக்டர். பா. சிவந்தி ஆதித்தன்
தினத்தந்தி அதிபர்.
செவாலியர் சிவாஜி சிறப்பு மலரிலிருந்து
இன்னா செய்தாரை ஒறுத்து, நன்னயம் செய்த அய்யனின் புகழ் என்றென்றும் புவியாளும் என்பதில் சந்தேகமில்லை.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...22&oe=5B14E5C3
courtesy net
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...2f&oe=5B4B8C8A
Vaannila Vijayakumaran
நடிகர்திலகத்தின் ஹை-லைட் : 5
30000 உணவுப் பொட்டலங்கள் சிவாஜிகணேசன் அளித்தார்.
இதுவரை ரூ.40000 உதவி
1000 பவுண்டு பால் பவுடரும் வழங்கினார்...
இது 1960 நவம்பர் 13, கழக ஆதரவுப் பத்திரிகையான தனிஅரசு வில் வெளியான செய்தி.
சென்னை, நவ. 13-
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இன்று 30000 உணவுப் பொட்டலங்களை மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கினார். பல பகுதிகளில் பாதிக்ககப்பட்ட மக்ககளுக்கு கார்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
ரூபாய் 40,000
தமிழ் நாட்டில் பெய்த பெருமழையினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயரைப் போக்க நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இதுவரை 40000 ரூபாய் வரை பணமாகவும், அரிசியாகவும், உணவாகவும் வழங்கியிருக்கிறார்.
பால் பவுடர்
தமது வெள்ள நிவாரணக் குழு மூலம் தனது சொந்த மேற்பார்வையில் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் பணியின் நான்காவது நாளாக 30,000 க்கும் மேலான உணவுப் பொட்டலங்களும் , 1000 பவுண்டு பால் பவுடரும் விநியோகிக்கப் பட்டது.
கவுன்சிலர்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேற்படி உதவி அந்தந்த கவுன்சிலர்கள் மூலமும், ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலமும் சரியான நேரத்திற்கு முன்னால் ஒவ்வோர் இடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவை சரியான முறையில் விநியோகிக்கப் படுவதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
( தனிஅரசு, நவம்பர் 1960)
நடிகர்திலகத்தின் ஹை-லைட்ஸ் :6
தென்னிந்திய திரைப்பட டெக்னீஷியன்ஸ் சங்க கட்டிட நிதிக்காக சிவாஜி நாடக மன்றத்தாரின் ' வியட்நாம் வீடு ' நாடகம் மியூசிக் அகாடமி ஹாலில் அக்டோபர் 18ம் தேதி சனிக்கிழமை மாலை நடை பெற்றது. இந்த நாடகத்தில் ரூ. 30,000 வசூலாயிற்று.
வசூலான தொகை நடிகர்திலகத்தின் சார்பாக நன் கொடையாக வழங்கப்பட்டது.
இலவசமாக நாடகத்தை நடத்தித் தந்த நடிகர் திலகத்துக்கு சங்கச் செயலாளர் என்.கிருஷ்ணசாமி மாலை அணிவித்தார்.
(சினிமா ஸ்டார், நவம்பர் 1969)
-வசந்தமாளிகை மாத இதழிலிருந்து தகவல் திரட்டப்பட்டது.
அள்ளிக் கொடுத்தவரும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. வாங்கிக் கொண்டோரும் கடைசிவரை வாய்த் திறக்கவில்லை.
என்றாலும்,
எல்லாப் புகழும் அய்யன் ஒருவருக்கே.
courtesy net
subramani mariappa
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...69&oe=5B48D19F
vetrivel vetri
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...84&oe=5B4D0C53
vetrivel vetri
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...42&oe=5B05A7B6