-
தமிழ்வாணன் இயக்கத்தில் அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் பெயர் என்னவென்று தெரியுமா நண்பர்களே..?
நமது நடிகர் தில...கத்தின் 125 வது மாபெரும் வெற்றிக் காவியமான ''உயர்ந்த மனிதன்'' தான் அப்படத்தின் பெயர்...
அது ஒருபுறம் இருக்கட்டும்...
தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகும் முதல் நேரடி தமிழ் படம் இதுவாகும்...
இதில் அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் தமிழ்வாணன் படமாக்கி வருகிறார்...
இப்படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஒரு வீட்டினுள் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படம் மாட்டியிருப்பது போலவும்...
அதற்கு பக்கத்தில், அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது போலவும் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர்...
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமிதாப்பச்சன் தெரிவித்திருப்பதாவது :
சிவாஜி கணேசன் என்னும் தலைவனின் நிழலில் இரு சீடர்கள் எஸ்.ஜே.சூர்யாவும் நானும்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் உச்ச பட்ச மாபெரும் அடையாளம். அவரது புகைபடம் இந்த சுவருக்கு மேலும் அழகு சேர்க்கிறது...
அவர் வியத்தகு திறமை கொண்டவர்...
அவருக்கு எனது மரியாதையை தாழ் பணிந்து உரித்தாக்குகிறேன்...
சிவாஜியின் திருவுருவப்படத்தை சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன்...
அவர் ஒரு மாஸ்டர்...
நாம் அனைவருமே அவருடைய சீடர்கள் என்று நடிகர் திலகத்திற்கு இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் புகழாரம் சூட்டியுள்ளார்...
http://oi64.tinypic.com/2rvy0kj.jpghttp://oi65.tinypic.com/10qju3m.jpg
நன்றி M V Ramkumar
-
-
-
-
இன்று மாலை சென்னை P.T. தியாகராய ஹாலில், சமூக சேவகர் சிவாஜிரவி அவர்கள் வழங்கும் நடிகர்திலகத்தின் பாடல்களால் தொகுக்கப்பட்ட,
#முரளியின்மௌனராகம் இசைத் திருவிழா!
http://oi65.tinypic.com/8wa3i0.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
-
சிவாஜி....
இப்படி ஒரு மனிதரை உலகம் கண்டதுண்டா
என்னை முதலமைச்சர் ஆக்குங்கள்,
ஆட்சி அதிகாரத்தை எனக்கு தாருங்கள் என்று கேட்காத
... ஒரே அரசியல் தலைவர் சிவாஜி மட்டுமே,
பெரியாரிடமிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் தான் முதலமைச்சராக தனி இயக்கம் கண்டார்,
அண்ணாவிற்கு பிறகு கலைஞர்,
கலைஞரிடமிருந்து பிரிந்த எம்,ஜி,ஆர்,
பின்னர் திமுகவிலிருந்து பிரிந்த பலரும் தான் முதலமைச்சராக நினைத்தனர்,
அதே போல், கலையுலகில் இருந்த வந்தவர்கள் பலரும் தான் முதலமைச்சராக நினைக்கின்றனர்.
ஆனால், மக்கள்தலைவர் சிவாஜி அவர்களோ,
ஆரம்பத்தில் அண்ணா அவர்களை முதலமைச்சர் ஆக்குங்கள் என்றும்,
அதன் பிறகு பெருந்தலைவர் காமராசர் அவர்களை முதலமைச்சர் ஆக்குங்கள் என்றும்,
பின்னர் திமுக, அதிமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்தபோது, கருணாநதி அவர்களையும், எம்,ஜி,ஆர் அவர்களையும் முதலமைச்சர் ஆக்குங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.
மக்களிடத்தில் செல்வாக்கு இல்லாதவர்கள் கூட தனியாக கட்சியை உருவாக்கி, தான் முதலமைச்சராக ஆசைப்பட்டனர் என்பது நாடறிந்த உண்மை,
ஆனால, தான் தனியாக இயக்கம் கண்டபோதும், எம்,ஜி,ஆரின் மனைவி ஜானகி எம்,ஜி,ஆரை முதலமைச்சர் ஆக்குங்கள் என்று மக்களிடத்தில் கேட்டாரே தவிர,
என்னை முதலமைச்சர் ஆக்குங்கள் என்று கேட்கவில்லை,
தன்னை நம்பியவர்களை, உயர்நத இடத்திற்கு கொணடு சென்ற ஒரே தலைவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் தான்,
கமல் அவர்கள் சொன்னது போல, சிவாஜி ரசிகர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவோம்,
http://oi65.tinypic.com/291e5ap.jpg
நன்றி sunderrajan
-
-
வட சென்னை என்பது சென்னை மாநகரம் உருவான காலந்தொட்டு மக்கள் தொகை மிகுந்த, பழைமை வாய்ந்த கோயில்கள், வரலாற்றுப் புராதானச் சின்னங்கள், கட்டடங்கள் நிறைந்த, குறுகலான ஆனால் நீண்ட சாலை வசதிகளைக் கொண்ட பகுதியாகும்.
இங்கு பிராட்வே, கிரௌன்,கிருஷ்ணா, பிரபாத், பாரத், பத்மநாபா, மகாராணி, அகஸ்தியா, தங்கம், பிரைட்டன், முருகன்,பாண்டியன் மினர்வா,தமிழ்நாடு என்று ஏராளமான திரையரங்குகள் அமைந்திருந்தன. தற்போது இருப்பது விரல்விட்டு எண்ணும் அளவிற்கு வெறும் 5 மட்டுமே.
தமிழகத்தில் சினிமா தோன்...றிய காலத்தில் பெரும்பாலான திரைப்படங்கள்
இப்பகுதியை மையமாக வைத்தே திரையிடப்பட்டன.
எல்லா நடிகரின் திரைப்படங்களும், இப்பகுதியில் திரையிடப்பட்டு வெற்றிவிழா கண்டிருக்கின்றன. ஆனால் எல்லா காலங்களிலும் வெற்றி பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறி!
அய்யன் நடிகர் திலகத்தைத் தவிர.
ஆம்.
நடிகர்திலகம் நடித்து 53 திரைப்படங்கள் இப்பகுதியில், பராசக்தி தொடங்கி படையப்பா வரை நூறு நாள் முதல் வெள்ளிவிழா வரை ஓடி அசத்தியிருக்கின்றன.
அதிலும், கிரௌன் திரையரங்கில் மட்டும் 3 படங்கள் வெள்ளி விழாவும், 30 படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடியிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.
காலங்கள் தோறும் ஆக்சன் பட நாயகர்கள் மட்டுமே சாதனையாளர்கள் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த்திரையில் எந்தவொரு நாயகர்களுக்காவது, வட சென்னையில் இந்த எண்ணிக்கையில் படம் ஓடியிருக்குமா என்பது சந்தேகமே.
விவவரம் தெரிந்தோர் பதிவிடலாம்.
அய்யனின் வெற்றிப்படப் பட்டியல் உங்கள் பார்வைக்காக ...
1. பிராட்வே தியேட்டர்
பெண்ணின் பெருமை 105 நாள்
தெய்வப்பிறவி 107
படித்தால் மட்டும் போதுமா 104
2. கிருஷ்ணா தியேட்டர்
பாவ மன்னிப்பு 127
பாலும் பழமும் 127
ஆலயமணி 105
வாழ்க்கை 117
3. பிரபாத் தியேட்டர்
கை கொடுத்த தெய்வம் 100
கர்ணன் 100
4. மகாராணி தியேட்டர்
பச்சை விளக்கு 105
நவராத்திரி 101
அந்தமான் காதலி 100
மருமகள் 117
5. பாரத் தியேட்டர்
பராசக்தி 100
படையப்பா 126
6. அகஸ்தியா தியேட்டர்
சிவந்தமண் 117
நீதிபதி 125
படிக்காதவன் 123
தேவர் மகன் 103
7. எம்.எம். தியேட்டர்
ஒன்ஸ் மோர் 133
8. கிரவுன் தியேட்டர்
அமரதீபம் 125
வணங்காமுடி 100
வீரபாண்டிய கட்டபொம்மன் 111
பாகப்பிரிவினை 104
படிக்காத மேதை 116
விடிவெள்ளி 104
பாசமலர் 133
திருவிளையாடல் 179
சரஸ்வதி சபதம் 133
கலாட்டா கல்யாணம் 106
தில்லானா மோகானாம்பாள் 111
தெய்வமகன் 100
வியட்நாம் வீடு 103
எங்கிருந்தோ வந்தாள் 100
சவாலே சமாளி 107
பாபு 102
பட்டிக்காடா பட்டணமா 111
வசந்தமாளிகை 140
பாரதவிலாஸ் 100
எங்கள் தங்க ராஜா 102
கௌரவம் 102
தங்கப்பதக்கம் 176
அவன்தான் மனிதன் 113
மன்னவன் வந்தானடி 100
தீபம் 106
அண்ணன் ஒரு கோயில் 114
தியாகம் 111
திரிசூலம் 175
ரிஷிமூலம் 104
வா கண்ணா வா 100
தீர்ப்பு 105
சந்திப்பு 100
வெள்ளை ரோஜா 104
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
-
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக பி.கணேசன் அவர்கள் தலைமையில், நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெற்று வரும் 52 வார தொடர் அன்னதானத்தில், இன்று மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
இந்த சிறப்பு அன்னதானத்தின் உபயதாரர் தஞ்சாவூர் திரு. P. நாகராஜா அவர்கள்.
திரு. நாகராஜா அவர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாததால் அவர் சார்பாக திரு.BV.முரளி அவர்கள் கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு. சிவாஜி பாஸ்கர் அவர்க...ள் நடிகர்திலகத்தின் புத்தகமும், நினைவுச் சான்றிதழையும் வழங்கினார்.
பின்னர், திரு. பி.வி.முரளி, திரு. சிவாஜி பாஸ்கர் இருவரோடு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட 'மாடிப்பூங்கா சிகர' மன்றத்தின் திரு. மகா, புரசைவாக்கம் திரு. பாபு முதலானோர் அன்னதானத்தை துவக்கி வைத்து பொது மக்களுக்கு உணவினை வழங்கினர்.
சமூகசேவகர் திரு. சிவாஜிரவி அவர்கள் வந்திருந்து நிகழ்ச்சிக்கு வாழ்த்தினைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திரு.ML.கான், திரு. RS. சிவா, தென்சென்னை மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் திரு. அண்ணாமலை, திரு. கோவா ராஜேந்திரன், திரு. குமார், திரு. பாண்டியன், திரு. நந்தகுமார், திரு. ராகவேந்திரா, அம்பத்தூர் திரு. சுப்பிரமணி உள்ளிட்ட 'சிகர' மன்றத்து அன்புள்ளங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன், ஏராமான பொது மக்களும் திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது என்ற மன மகிழ்வோடு...
வான்நிலா விஜயகுமாரன்.
http://oi66.tinypic.com/za6fb.jpghttp://oi64.tinypic.com/m9liqs.jpghttp://oi63.tinypic.com/dcekwi.jpghttp://oi63.tinypic.com/2m35wyq.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
#கிரஹப்பிரவேசம் 10:04:1976
#43ஆண்டுகள்நிறைவு
#பிராஸ்பரிட்டிபிக்சர்ஸ் தயாரிப்பு
#தயாரிப்பு_இயக்கம் D. யோகானந்த்
#சென்னை_பைலட் திரையரங்கில் தொடர்ந்து 69 காட்சிகளும், #சென்னைமுரளிகிருஷ்ணா திரையரங்கில் தொடர்ந்து 65 காட்சிகளும் அரங்கு நிறைந்த முதல் படம்....
1976 ஆம் ஆண்டில் முதல் 6 மாதங்களில் #திரையிடப்பட்ட33வண்ணப்பிரதிகளில்,
11 திரைகளில் 50 நாட்களைத் தொட்ட படம்.
கோவை ராயலிலும் சென்னை முரளிகிருஷ்ணாவிலும் முன் ஒப்பந்தம் காரணமாக 48 நாட்களில் எடுக்கப்பட்டது.
#சேலம் மற்றும் #யாழ்ப்பாணம் ஊர்களில் இணைந்து 100 நாட்களைக் கடந்த படம்.
நன்றி : வல்லிபுரம் சிவானந்தன்
HOS
http://oi66.tinypic.com/24g3ssg.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
-
இதய தெய்வம் சிவாஜி அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வருவதாக ஒத்துக் கொண்டால் தனக்கு துக்கம் .... துயரம் ..... துண்பம் ..... எது நடந்தாலும் தான் வருவதாக சொன்ன நிகழ்ச்சிக்கு தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிப் பார்கள் தஞ்சை மாவட்ட சிவாஜி மன்ற தலைவராக இருந்த திரு, அ.வைரக்கண்ணு அவர்களின் குழந்தைகளின் காதனி விழாவிற்கு வருவதாக ஓத்து கொண்டார்கள் 01.07.1987ல்பட்டு கோட்டையில் இந்நிகழ்ச்சி வெகு சிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில் நிகழ்ச்சிக்கு முதல் நாள் நம் இளைய திலகம் பிரபு அவர்களின் புதல்வர் குழந்தை சண்முகபிரியன் இறந்து விடுகிறார் எங்கெளுக்கெள்ளாம் பெரும் அதிர்ச்சி பட்டுக்கோட்டையில் நடைபெறும் காதனி விழாவிற்கு அண்ணன் சிவாஜி அவர்கள் வரமாட்டார் என்றே முடிவு செய்து விட்டோம் ஆனால் அந்த தெய்வ பிறவி தன் பேரன் இறந்த துக்கத்திலும் கூட சென்னையில் இருந்து கார் மூலமாக அந்த கா தனி விழாவில் பங்கேற்க வழக்கமாக நேரம் தவறாது சரியான நேரத்திற்கு பட்டுக்கோட்டையில் காதனி விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள் இவ்விழாவில் பங்கேற்க வந்த புதுக்கோட்டை நாடாளமன்ற உறுப்பினர் ஸ்ரீமான் ஐயா V.N.சுவாமிநாதன் அவர்களும் தம்பி கோட்டை பெரியவர் சுந்தரேஷத் தேவர் Ex. M. L.C அவர்களும் (படத்தில் இருக்கிறார்கள் இவர்கள் அண்ணன் சிவாஜி மீது பாசமும் பக்தியும் நிறைந்தவர்கள் ) ஏன்ன.... நாங்க இப்பதான் கேள்வி பட்டோம் ஏன் இவ்வளவு துயரத்திலும் சிறம பட்டு வந்தீங்க நாங்க பார்த்துக மாட்டோமா என்றனர் அதற்கு அந்த தெய்வமகன் என்ன சொன்னார் தெரியுமா என் மன்றத்து பையன் எந்நாளும் என் புகழ் பாடுறவன் அதுவும் இந்த மாவட்ட தலைவரா இருக்கான் அவன் பிள்ளைகளுக்கு விஷேசம் நான் வராட்டி நல்லா இருக்குமா ஊரல்லாம் நான் வாரேன்னு சொல்லி பத்திரிக்கை வைச்சிருப்பான் அவன் சொந்த பந்தம் எல்லாம் என்ன நினைப்பாங்க அப்புறம் நம்ப கட்சி கார பயலுங்களும் சிவாஜிக்கு வைரக் கண்னை பிடிக்கள அதான் வரவில்லை என்று கண்ணு வைச்சு........ காது வெச்சு பேசுவானுங்க எனக்கு குடும்பத்தை விட தொண்டன் தான் முக்கியம் என்று சொன்னார் அண்ணன் சிவாஜி பிறகு குழந்தைகளை வாழ்த்தி பேசும் போது இது என் வீட்டு நிகழ்ச்சி நான் உங்களை எல்லாம் வாசலில் நின்று வரவேற்று இருக்க வேண்டும் சிறிது காலதாமதம் ஆகிவிட்டது இப்பிள்ளைகள் ஆல் போல் தழைத்து அருகு போல் வேறு ன்றி வாழ்க பல்லாண்டு என வாழ்தினார்கள் அண்ணன் சிவாஜி அவர்கள் அதே போல் வைரக்கன்னு அவர்களின் தாயார் பக்கிரியம்மாள் அவர்கள் இறந்து விட்டார்கள் அப்போது அண்ணன் சிவாஜி அவர்கள் சூரக்கோட்டையில் இருந்தார்கள் நான் தான் சென்று துக்க செய்தியை சொன்னேன் எப்போது எடுக்கிறார்கள் என்று கேட்டார்கள் மதியம் 12.00 மணிக்கு என்றேன் சரி பூச் சந்தைக்கு சென்று துளசி மாலை கட்டி எடுத்து வா போய் விட்டு வந்து விடுவோம் என்றார்கள் அதன்படியே பட்டுகோட்டைக்கு பயணம் ஆனோம் தஞ்சாவூர் பட்டுகோட்டை நெடுஞ்சாலையில் ஆலடி குமளை என்ற கிராமத்தில் ரோட்டோரமாகவே அமைந்த வீடு கொளுத்தும் கோடை உச்சி வெயில் புதிதாக போட பட்டதார்சாலை துக்க வீட்டிற்கு கொஞ்சம் தூரத்திற்கு முன்பாக அண்ணன் சிவாஜியை வரவேற்று அழைத்து செல்வதற்காக பட்டுக்கோட்டை டாக்டர் .மு .செல்லப்பன் அவர்கள் நம் சிவாஜி மன்றத்து மறவர்களுடன் காத்து கொண்டு இருந்தார்கள் அவர்களை பார்ததும் அண்ணன் சிவாஜி அவர்கள் காரில் இருந்து இறங்கிவிட்டார்கள் காரிலேயே செருப்பை கழற்றி விட்டு இறங்கி துக்க வீட்டை நோக்கி நடந்தே சென்று அம்மையாரின் உடலுக்கு துளி சி மாலை வைத்து மரியாதை செய்து விட்டு வைரக்கண்ணு மற்றும் அவரது சகோதரர் ளை அருகில் அழைத்து ஆறுதல் கூறிவிட்டு காரி ஏறி புறப்பட்டபோது தன் இருக்கையில் அமர்ந்தவுடன் ஏய் அண்ணன் கால் எப்படி இருக்கு பார் என்று தன் உள்ளங்கால்களை காண்பித்தார் அந்த கோடை கொளுத்தும் உச்சி வெயிலில் புதிய தார்சாலையில் தன் காலில் செருப்பு அணியாமல் நடந்த தில் உள்ளங்கால்கள் கொப்பளித்து விட்டன சூரக்கோட்டைக்கு வந்தவுடன் தனது குடும்ப டாக்டர் குமார் அவர்களுக்கு தகவல் தர பட்டு உடனே அவர் வந்து சீக்கிச்சை மேற்கொண்டார்கள் அன்று அண்ணன் சிவாஜி அவர்கள் சென்னை புறப்படுவதாக இருந்தது ஆனால் மேலும் நான்கு நாட்கள் சூரக்கோட்டையில் ஒய்வெடுத்துவிட்டு பிறகு சென்னை பயணம் ஆனார்கள் அண்ணன் சிவாஜி அவர்கள் தன்னை நேசித்தவர்களை எந்த சூழ்நிலையிலும் பெருமை படுத்த தவறியதில்லை இது போன்ற தலைவரை வேறு இயக்கத்திலே எவரேனும் கண்டதுண்டா இந்த அற்புத மனிதரை போல் ............ இது போன்ற நிகழ்வுகள் ஏராளம் தொடர்ந்து பார்ப்போம் உங்களது வாழ்த்துக்களுடன் என்றும் பிரியமுடன்...... சதா. வெங்கட்ராமன் தஞ்சாவூர்.
http://oi65.tinypic.com/egzfvm.jpg
நன்றி வாசுதேவன் .S