https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...f9&oe=5EDBEFE3
Printable View
மேலுள்ள அனைத்து
திரிசூலம் ஸ்டில்களும் உதவி Vcg திருப்பதி (H O S ) நன்றி
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...af&oe=5E93BA3E
வியட்நாம் வீடு பட விளம்பரங்கள் உதவி Vemkatesh Warma நன்றி
இன்று 28/01/2020 மதியம் 1.30 மணிக்கு வசந்த் டிவி யில். நடிகர் திலகத்தின் -
" விடிவெள்ளி "சிறந்த படம் காண தவறாதீர்கள். !!!
இதில் நடிகர்திலகமும், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...8a&oe=5EC47EB3
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 28/01/2020 மதியம் 2.00 மணிக்கு கேப்டன் டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த
" கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி "¶
படத்தை காண தவறாதீர்கள். ¶
... சிவாஜி, பத்மினி, மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...01&oe=5ECA36A0
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 28/01/2020 - 12.00pm மணிக்கு முரசு டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " எதிரொலி ". ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், கே.ஆர்.விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர் காண தவறாதீர்கள். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...49&oe=5E9906D8
நன்றி Jeyavelu Kandaswami
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெரு வெற்றி எப்படியெல்லாம்
எம் ஜீ ஆரையும் அவரது சீடர்களையும் நித்திரை கொள்ளவிடாமல்
கதிகலங்க வைத்திருக்கிறது என்பதை சீடர்களின் பதிவுகளில்
அவ்வப்போது வெளிப்பட்டுவிடுகின்றது. சிவாஜியை சீண்டினால்தான்
எம் ஜீ ஆருக்கு பெருமை சேரும்போல் தெரிகிறது.
கணேசன் திருப்பதி போனது பணத்தை பாதுகாப்பதற்காம்
என்னமா கதை அளந்திருக்கிறார் பெயர் தெரியாத பேர்வழி
எங்களை சும்மா இருக்கவிடமாட்டார்கள் இந்த நித்திரையிலும்
கதிகலங்கும் பேர்வழிகள்.
பழையனவற்ரை புரட்டவேண்டும் என்பது அவர்களது அவா என்றால்
புரட்டவேண்டியதுதான் பழையனவற்றை .
தொடரவேண்டும் என்பது அவர்கள் விருப்பம் தொடரும்........
'யார் இந்த நிலவு ஏன் இந்த கனவு.. யாரோ சொல்ல யாரோ இங்கு வந்த உறவு... காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு...'
இன்று 29/01/2020- இரவு 07.00 மணிக்கு முரசு டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த "சாந்தி ". !
நடிகர்திலகம், தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !
... படத்தை காண தவறாதீர்கள். !
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...a6&oe=5ED3D5E2https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...63&oe=5EC27EB0
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 29/01/2020- இரவு 07.30 மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த
" நல்லதொரு குடும்பம்".
இந்த படத்தில் நடிகர்திலகம், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். ∆
... படத்தை காண தவறாதீர்கள். ∆
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...bc&oe=5ECD3343
நன்றி Jeyavelu Kandaswami
அன்பிற்குரியவர்களே,
பழைய படங்களை டிஜிட்டல் செய்வதற்கு
முன்னோடி காவியநாயகனின் கர்ணன்.
... புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக, கர்ணனை தொடர்ந்து
சில படங்கள் டிஜிட்டலில் தயாராகி வெளிவந்த, சுவடே தெரியாமால் காணாமல் போயின...
பல படங்கள் வெளிவராமல் முடங்கி கிடக்கின்றன.
ஆனால், நடிகர்திலகத்திற்கு மட்டும் எப்படி வெற்றி பெறுகிறது என்று எதிரிகளின் வயிறு எரிகிறது.
இதோ, 2020ல் டிஜிட்டலில் வெளிவர போகும் படங்கள்..
வியட்நாம் வீடு.... முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை, நம் கண்முன் கொண்டு வந்து, வயதான வேடம்.
ராமன் எத்தனை ராமனடி.... ஒரு அப்பாவி இளைஞனாக இருந்து, காதல் வயப்பட்டு, காதலியை அடைய, நடிகராக உயர்ந்த நிலையை அடையும் கதை. ராமனாக நடிப்பிலும், நடிகர்திலகமாக வந்து ஸ்டைலிலும் கலக்கும் இளைஞர்.
சவாலே சமாளி, படம் முழுவதும், ஒரு கிராமத்து இளைஞனாக, அநீதியை கண்டு கொதித்தெழும் கதாபாத்திரம். படம் முழுக்க வேட்டி, சட்டை அணிந்து நடித்த படம்.
இது தான், நடிகர்திலகத்தின் ஒவ்வொரு படமும் வெற்றி பெறுவதற்கான காரணங்கள்...
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...70&oe=5E92592D
நன்றி சுந்தர்ராஜன்
என்னடா இது? நடிகர்திலகம் எப்படிப்பட்ட படங்களாக கலையுலகிற்கு அளித்துக் கொண்டிருக்கிறார்.ஒவ்வொரு படங்களும் சாதாரணமானவையா என்ன? வருகின்ற மற்ற சில படங்கள் கோபுரங்கள் என்றால் நடிகர்திலகத்தின் படங்கள் கோபுர கலசங்கள் அன்றோ? நடிகர்திலகத்தின் எத்தனை படங்களை பட்டியலிடுவது!
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மசாலா படங்களை முன்னிறுத்தி இவை சரித்திரம் படைத்தன!? சாதனை படைத்தன!? என்று சாதா படங்களை எப்போதும் கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்களே!
இந்த படங்களை செய்துவிட்டு ஓங்காரமிடுகிறீர்களா? இதோ... பார்! நான் கொடுக்கிறேன்டா ஹிட்டு! அதையும் பாருங்கடா! அதுவும் 200 வது படமா கமர்ஷியலாகவே செய்து காட்டுகிறேன் என்று சொல்வது போல் திரிசூலம் செய்தார்.
சும்மா காட்டுத்தனமான ஹிட்டு!
அரக்கன் வந்து துவம்சம் செய்தது போல் ராட்ஷச ஹிட்டு.வெளியான ஒரு தியேட்டரையும் விட்டு வைக்கவில்லை.
அடைமழை போல் வசூல் மழை.தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் பணமழையில் நனைந்தார்கள்.இப்பச் சொல்லுங்கடா பாப்போம்! என்பது போல் தான் அந்த படத்தின் ஹிட் அமைந்தது! சூறாவளி ஹிட்
அது! 150 படத்துக்கு மேலே வருடத்திற்கு இரண்டு படங்கள் மட்டும் செலக்டிவ்வாக செய்திருந்திருப்பாரேயானால் எல்லாமும்
சுனாமி ஹிட்டாகத்தான் ஓடியிருக்கும்.மேக்ஸிமம் தியேட்டர்ஸ் எல்லாம் குத்தகைக்கு எடுத்தது போல் அவர் படங்களே ரன்னிங்கில் இருந்திருக்கும்.
ஆனாலும் படங்கள் ரயில் ஊர்தி போலும் வந்து கொண்டிருந்தனதான்.
கௌரவம், தில்லானா மோகனாம்பாள் தெய்வமகன் என்றெல்லாம் எப்படிப்பட்ட படங்களாக கொடுத்துள்ளார்.அதையெல்லாம் விட்டு விட்டு அஞ்சு பாட்டு அஞ்சு பைட்டு கவர்ச்சி பழிவாங்கல் என்று தொடர் பார்முலா படங்களையா சாதனை சரித்திரம் என்பீர்கள்.
அந்த பேச்சுக்குத்தான்யா திரிசூலம் வேட்டு வெச்சது.எதிலும் தன் தலையீட்டை அதிகம் நுழைக்காதவர் நடிகர்திலகம்.நடிப்பை தாண்டி தன் காலடியை ஒரு அடி கூட முன் வைக்காத நிலையிலேயே உலகெங்கும் தன் கொடியை பறக்க விட்ட நடிகர்திலகம் தன் கால் பாதத்தை கொஞ்சம்
வியாபாரம் சார்ந்தும்
நகர்த்தியிருந்திருப்பாரேயானால் ,
சாதனை சரித்திரம் என்று மற்றவர்கள் பீற்றிக் கொள்ள ஒன்றுமே இருந்திருக்காது.
நன்றி Senthilvel Sivaraj
எவ்வளவு உயர்ந்த மனிதர் !
ஆனால், எவ்வளவு சிறந்த பணிவு !!
வாழ்நாள் முழுவதும், தன் இமயம் போன்ற உயரத்தை எங்கேயும் காட்டாமல், அடக்கத்துடன் வாழ்ந்த நம் இதயவேந்தரைப் போன்ற பணிவான குணம் வேறு யாருக்கும் இருக்குமா என்று தேடினாலும் தென்படாது..
இந்த அற்புதக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்..
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...26&oe=5EC9BF47
நன்றி Nagarajan Velliangiri
ஐஸ்வச்சா வரி தள்ளுபடி ஒருவருக்கு.ஆனால் எங்கள் சிங்கத்தமிழன் நேர்மை யாருக்கு வரும் #வருமான_வரி_சிவாஜியின்_நேர்மை.
1980 - சிவாஜிக்கு காங்கிரஸில் 5 MP தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. திருச்சி, கரூர், கோவை, ஈரோடு, தென் சென்னை தொகுதிகளில் சிவாஜி சிபாரிசு செய்யும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். அனைவரும் வெற்றியும் பெறுகின்றனர். அதில் தென் சென்னையில் வென்ற திரு.R.வெங்கட்ராமன் அவர்கள் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.
சிவாஜியின் வரவு செலவுகளை அவரது தம்பி சண்முகம் பராமரித்து வந்...தார். ஒரு நாள் அவரது தணிக்கையாளர் சிவாஜியிடம் வந்து வருமான வரி தாக்கல் செய்ததில் சிறு தவறு நடந்து விட்டது. நம்ம வெங்கட்ராமனுக்கு ஒரு போன் செய்தால் போதும் சரி செய்து விடலாம் என்கிறார். கோபத்தின் உச்சிக்கே சென்ற சிவாஜி நீங்கள் செய்த தவறுக்கு நான் அவரிடம் கெஞ்ச வேண்டுமா! அதோடு அவர் எனக்கு அமைச்சரல்ல. இந்த நாட்டிற்கு நிதி அமைச்சர். கட்சிகாரங்கிற உறவெல்லாம் தேர்தலோடு முடிஞ்சிப் போச்சி. தவறு செஞ்சது நீங்கள்தான் அபராதத்தை கட்டித் தொலையுங்க! தம்பி இன்னொரு தடவை தப்பு நடந்துச்சி அபராத தொகையை இவனுங்க சம்பளத்திலே பிடிச்சு கட்டிடு என்று கத்திவிட்டு ஷுட்டிங்சென்று விட்டார்.
(திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற "நடிகர் திலகம் ஒரு நேர்மையாளர்" நிகழ்ச்சியில் திரு.வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் உரையிலிருந்து).
நன்றி Vijay Rai Kumar.
..............................................
ஒவ்வொரு எழுத்தாளர் க்கும் ஒரு பிரத்யேக நடை உண்டு.. அது போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடையும் புகழ் பெற்ற ஒன்று. ¶
அந்த காலத்தில் 'கல் தூண்' என்று படம் வந்தது. மேஜர்சுந்தர் ராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்திருந்தார். ¶
ஒர் காட்சியில் சிவாஜி கம்பீரமாக நடந்து வர வேண்டும், எப்படி நடப்பது என மேஜர் சொல்லிக்கொடுத்தார். ¶
... ஆனால் அது அவருக்கே பிடிக்கவில்லை.. இன்னொரு விதமாக மாற்றினார்.. அதுவும் திருப்தி இல்லை. ¶
சிவாஜி சொன்னார் : ரொம்ப கஷ்டப்படாதே... நான் சில டைப்ல நடந்து காட்டுறேன்.. உனக்கு எது புடிக்குதோ அதை செலக்ட் பண்ணு... ஷூட்டிங்ல அதை ஃபாலோ பண்றேன் என சொல்லி விட்டு பத்து விதங்களில் நடந்து காட்டினார் சிவாஜி... மேஜர் அசந்து போனார்... நடிப்பின் அகராதிக்கு , நடிப்பு சொல்லத்தர முயன்ற தன் அசட்டுத் தனத்தை எண்ணி சிரித்துக் கொண்டார். ¶
என்னதான் நடிகர் திலகம் என பிறர் பாராட்டினாலும் இயக்குனர் சொன்னபடி நடிப்பதுதான் நல்லது என கருத்துடையவர் சிவாஜி.
நன்றி Jeyavelu Kandaswami
" உங்கள் மந்தையில் இருந்து இரண்டுஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன..இரண்டும் சந்திட்ட போதுபேச முடியவில்லையே. "
இன்று 30.01.2020 இரவு 11.00 மணிக்கு ஜெயா டிவி யில் - நடிகர்திலகம் நடித்த வெற்றி படம். !!!
... " ஞான ஒளி " படத்தை கண்டு களியுங்கள். !!!
சிவாஜி, சாரதா, மேஜர்சுந்தராஜன் நடித்து உள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...e7&oe=5EDB013B
நன்றி Jeyavelu Kandaswami
ஸ்டண்ட் நடிகருக்கும் அவரது சீடர்களுக்கும் கணேசன் எப்பொழுதும் சிம்ம சொற்பனமாக திகழ்ந்தார்.
கனவிலும் நினைவிலும் ஸ்டண்ட் நடிகருக்கும் அவரது சீடர்களுக்கும் கண்களுக்குள் கணேசன்
விரலைவிட்டு குடைந்து கொண்டிருந்தார். இத்தனைக்கும் கணேசன் மற்றவர்களைப்பற்றி
எவ்வித அக்கறையும் கொள்ளாமல் தானும் தன் வேலையுமாக இருந்தார்.
தி மு க வில் கணேசன் செல்வாக்குடன் இருப்பது மு க உட்பட பலருக்க பிடிக்காமல் இருந்தது,
புதிதாக புகுந்து கொண்ட ஸ்டண்ட் நடிகருக்கு வசதியாகிவிட்டது.
தன்னுடன் ஒன்றாக திரிந்தவன் தி மு க வில் புகழுடன் இருப்பதா? குழி பறிப்பு தொடங்கியது.
கட்சிக்கு நிதி பற்றாக்குறை ஈடு செய்ய பலருக்கும் வேண்டுகோள்.அதிக நிதி திரட்டியவவருக்கு
பாராட்டு விழா.கட்சியில் கணேசனை பிடிக்காதவர்களை கோஷ்ட்டி சேர்த்துக்கொண்டு ஸ்டண்ட் நடிகர் காய் நகர்த்தினார்.
படங்களில் காட்டுவார்களே வில்லன் கோஷ்ட்டிகளின் தந்திரங்களை அதேபோன்று,ஸ்டண்ட் நடிகர் படங்களில்தான்
கதாநாயகன் பங்களிப்பு ,வெளியே முழுக்க முழுக்க வில்லத்தனம்.
வில்லன் கோஷ்ட்டிகளின் பங்களிப்புடன் அதிகம் நிதி திரட்டிய கணேசனை ஓரம் கட்டி
தனக்கு பொன்னாடையை தானே போர்த்திக்கொண்டார் ஸ்டண்ட் நடிகர் பாரத் பட்டத்தை அபகரித்ததுபோல,
பொன்மனச்செம்மல் பட்டத்தை பெற்றுக்கொண்டதைபோல .
தான் அதிக நிதி திரட்டிக்கொடுத்தும், தன்னை நிராகரித்தது துரோகி ஸ்டண்ட் நடிகரினதும் ஏனைய துரோகிகளினதும்
கைங்கரியம் என்பதை தெரிந்து கொண்டு சபரிமலை சென்றவர்தான் கணேசன்.
ஸ்டண்ட் நடிகர் போன்று 5 ரூபாய் கொடுத்துவிட்டு 5000 ரூபாய்க்கு புகழ் பெற்றவரல்ல கணேசன்.
லட்சக்கணக்கில் கொடுத்துவிட்டு ஸ்டண்ட் நடிகரது தந்திரத்தாலும் அவரது கை கூலிகளாலும் கஞ்சன் என பெயர் வாங்கியவர்தான் கணேசன்.
நல்லவன் என பெயர் வாங்கிய கெட்டவனல்ல எங்கள் கணேசன்
கெட்டவன் என பெயர் வாங்கிய நல்லவன்
ஆட்சி பலம் அரசியல் பலம் பண பலம் இருந்தும் சாதிக்க முடியாத நடிகரின் பல பழைய படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்ட போதும் ஒரு படம் கூட தமிழகமெங்கும் 2 வாரங்கள் ஓட லாயக்கில்லாத நிலைமை அவர்களுக்கு காரணம் இப்போது அவருடைய படங்களை 3 மணி நேரம் இந்த தலைமுறையால் உட்கார்ந்து பார்க்க முடியாது சோரம்போன சண்டை காட்சிகளும் வள வளா கதையின் வேகமும் இந்த தலைமுறை மக்களால் சகிக்க முடியாது --இன்றைய படங்களில் சண்டை காட்சிகள் காட்சி அமைப்புகள் காலத்திற்கேற்றார் போல் வித்யாசமாக வெளிப்படுத்துகிறார்கள் இப்போதுள்ள நடிகர்கள் --ஆனால் சிவாஜி அவர்களின் படங்கள் இன்னும் எத்தனை தலைமுறை ஆனாலும் நினைத்து பார்க்க முடியாத வேடங்களையும் நடிப்பையும் வெளிப்படுத்திய மகான் மற்றும் பிறவி நடிகர் எங்கள் சிவாஜி --அதனால் தான் கர்ணன் தமிழகத்தில் 14 திரைகளில் 50 நாட்கள் 3 திரைகளில் 75 நாட்கள் சென்னையில் 150 நாட்கள் என சரித்திர சாதனை கண்டது -- அது மட்டுமே காலத்தால் அழியாத காதல் காவியம் வசந்த மாளிகையும் 5 ஊர்களில் 25 நாட்கள் என வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இப்படி ஒரு சாதனையும் ஒரு மறு வெளியீட்டு படமும் செய்யாத அந்த நடிகரின் படங்கள் இரண்டு நாள் மூன்று நாள் என இடைவெளிக்காக திரையிடப்படும் படங்களின் எண்ணிக்கையை கொண்டு தம்பட்டம் அடித்துக்கொள்பவரை நினைத்தால் சிரிப்புதான் வருது.நாங்கள் சாதித்து காட்டி விட்டோம் --உங்கள் நடிகரின் ஒரு படமாவது நாடெங்கும் 2 வாரம் காணட்டும் எங்களோடு போட்டி போடுங்கள் அது வரை உங்கள் நடிகரை நாங்கள் ஒரு போட்டியாளராகவே கருதவில்லை
நம் எல்லோருக்கும் தெரியும் இந்த படம் எப்போது எடுத்தது என்றுதைபூச திருநாளில் முருகன் அடிமை திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிக ளின்நினைவாக .......அண்ணன் சிவாஜி அவர்களின் மணி விழாவில் மேடை ஏறிய வாரியார் சுவாமிகள் மணி விழா தம்பதிகளை வாழ்த்தி விட்டு பேசும் போது ....சிவாஜி ஒரு கஞ்சன்சிவாஜி மஹா கஞ்சன்என்றெல்லாம் பேசுகிறார்கள்இந்த கணேசன்வள்ளல் கணேசன்வாழும் கர்ணன் சிவாஜி கணேசன்ஆன்மீகத்திற்காக எவ்வளவு அள்ளி அள்ளி கொடுத்து இருக்கிறார் என்று எவனுக்காவது தெரியுமாநான் அவரிடம் வாங்கியே பழக்க பட்டவன் ஆனால் இன்று நான் வாழ்த்துக்களை வழங்க வந்துள்ளேன் என்று கூறி என்அப்பன் முருகன் அருள் இவருக்கு என்றும் உண்டு என்று வாழ்த்தினார் நன்றி திரு சதா வெங்கட் ராமன்#நன்றி விஜயா ராஜ்குமார்https://scontent.fmaa1-4.fna.fbcdn.n...99&oe=5EDA7BA7
ராஜ ராஜ சோழனுக்கும் அவன் கட்டிய உலகப்புகழ் பெற்ற ப்ரகதீஸ்வர் ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும் உருவம் கொடுத்த எங்கள் தமிழ் கடவுள் சிவாஜி அவர்கள் கம்பபீரமாக தமிழ் வளர்த்த தஞ்சையில் சிலை வடிவமாக வீற்றிருக்கும் தோற்றம் --இந்த பெருமை எந்த நடிகனுக்கு கிடைக்கும் https://scontent.fmaa1-4.fna.fbcdn.n...64&oe=5ECDA88A
படித்ததில் ரசித்தது / தெரிந்துக் கொள்வோம். ¶~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~'THE MAN WITH THE IRON MASK’ என்ற ஆங்கில கதையைத் தழுவி மாடர்ன் தியேட்டர் ஸ் P.U.சின்னப்பாவை வைத்து 1945 ல் ‘உத்தமபுத்திரன்’ என்று தமிழில் முதல் இரட்டை வேடப் படத்தை எடுத்தார்கள். ¶15 ஆண்டுகளுக்கு பிறகு அதே தலைப்பில் மீண்டும் சிவாஜியை இரு வேடங்களில் நடிக்க வைக்க ஏற்பாடு செய்து ‘உத்தமபுத்திரன்’ என்று விளம்பரம் கொடுத்தார் கள். விளம்பரம் வந்த அன்று அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ¶அதே நாளில் பத்திரிகையில் இன்னொரு விளம்பரம். எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் நடிக்கும் ‘உத்தமபுத்திரன்’ என்று வந்திருந்தது, பலர் திகைத்துப்போனார்கள்.¶பிறகு N.S.K. கிருஷ்ணன் எம்.ஜி.ஆரை சமாதானம் செய்து, அவர் படத்திற்கு வேறு ஒரு படத்தலைப்பு மாற்றிக் கொள்ள சொன்னார். ¶உத்தம்புத்திரனுக்கு ஸ்ரீதர் கதை, வசனம் எழுதினார். இயக்கியவர், டி.பிரகாஷ்ராவ். படத்தில் பாடல்கள் அனைத்தும் அசத்தல். அதில் ஒன்று: 'உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே' பாட்டு.ஆரம்பத்தில் மிருதுவாக பியானோ ஸ்வரங்களை இசைக்க பாடல் தொடங்கும். பத்மினியின் துள்ளாட்டம், சிவாஜியின் தள்ளாட்டம் இரண்டுக்கும் ஈடு கொடுக்கும் வயலினின் சுகமான அருவி இசை… மறக்க முடியாது. ¶நன்றி : இணையதளம். ¶https://scontent.fmaa1-4.fna.fbcdn.n...40&oe=5EBF6966
திகைக்கவைக்கும் திறன்பாடுகள்! பிரமிக்கவைக்கும் பல்சுவைப் படைப்புகள், சிலிர்க்கவைக்கும் சிங்கநாதக்குரல்! சொக்கவைக்கும் அங்க அசைவுகள்! கதிகலங்கவைக்கும் கனல்வசனங்கள்! நிமிரவைக்கும் நின் நடையுடை பாவங்கள்(Bhaavam) தேன்தமிழ் சொல்லாளும் உன்னத உரையாடல்கள்! இவையாவும் நாளை வேறொருவரிடம் என சொல்லவியலாத ,சமனற்ற,நிகரில்லாத, ஈடிணையற்ற, எதிரிணை எட்டவியலாத சரித்திரம் படைத்த பார்புகழ் கலை ஞானனே! ஏழேழு பிறவியிலும் ஏற்றமிகு ஏகனாக! தனித்துவத் தீரனாக, ஈடு கொடுக்க இறையாலும் இயலாத, ஆண்டவனே அதிசயிக்கும் அற்புதனே!! அகிலத்திரையுலகத் தலைமகனே! தவப்புதல்வனே! தெய்வப்பிறவியே! தெய்வமகனே! ஞான ஒளியே! உத்தமபுத்திரனே! இல்லற ஜோதியே! அமரதீபமே! கலையுலகின் விடிவெள்ளியே! சாதனை சரித்திர நாயகனே! அன்னை இல்லத்தின் ஆலயமணியே! சிரஞ்சீவியான திருவருட்செல்வனே! தமிழ் தந்த தங்கச்சுரங்கமே! வைரநெஞ்சமே! மனிதருள் மாணிக்கமே! இன்று(திறன்) உன்னுடையது!! நாளை வேறொருவருடையது என சொல்லவியலாத, எட்டமுடியாத பெரும் திறன் புகழ்கண்ட கலையுலகத்தின் பல்கலைக்கழகமே!! திரையுலகக் கலங்கரை தீபமே! தெவிட்டாத தெள்ளமுதனே! செவாலியே சிவாஜிகணேசனே! என்றென்றும் நீங்கா நினைவில் திரைக்கலையுலகமும், ரசிகமணிகளும்.— with Subramanian Ganeshan.https://scontent.fmaa1-3.fna.fbcdn.n...5c&oe=5ECAC3AB
பாசமலர் க்ளைமாக்ஸ். கருப்பு வண்ணச் சேலையில் கவலை ரேகைகள் வழியும் சோகம் விழுங்கிய முகத்தில், அரிதாரப் பூச்சு அதிகமின்றி சாவித்ரி செட்டுக்குள் வந்தார். ஏதோ இழவு வீட்டுக்குள் நுழைவது மாதிரியான தோற்றம். குறும்பு கொப்பளிக்க உலா வரும் ஜெமினியும் சும்மா எட்டிப் பார்த்து விட்டு ஓடிப் போனார்.இறப்பதற்குத் தயாராக சிவாஜி தனது கடைசி வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார். நடிப்புக்காகப் பெற்ற ஆசிய விருதைக் கடந்து, உலகக் கலைஞனாகும் கனவுகள் அவருக்குள் கனல் விரித்து எரிமலையை ஏற்படுத்தின. வடலூரில் வள்ளலார் தீ மூட்டிய அனையாத அடுப்பு எரிவது போல், எப்போதும் அனல் காற்று வீசிக்கொண்டிருந்தது அவர் உள்ளத்தில்.சிற்றுண்டி, மதிய உணவு இரண்டையும் தவிர்த்து அன்றைக்குப் பட்டினி, சிவாஜி பிலிம்ஸ் காசோலையில் கையெழுத்து என அலுவலகப் பணிக்கும் கூட 144. வான் மழை போல் சகோதர வேதனையைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற முடிவோடு சிவாஜியும் சாவித்ரியும் கிளிசரினை மறுத்தார்கள். ஒப்பற்ற நடிப்பின் பல்கலைக்கழகங்களுக்கு ஓத்திகையா?ரெடி டேக் ஆக்ஷன். விட்டல்ராவின் காமிரா ஓடியது. அண்ணன் பார்வை இழந்து நிற்கும் பரிதாபத்தைக் கண்டு தங்கை கதறுகிறாள்.‘நீங்கள் மவுனமா இருந்தாலும் ஆயிரமாயிரம் அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே- அந்தக் கண்கள் எங்கே அண்ணா? வைரம் போல் ஜொலிச்சி வைரிகளையும் வசீகரிக்கக் கூடிய உங்க அழகான கண்கள் எங்கே அண்ணா?’உணர்ச்சி வசப்பட்ட உச்சக்கட்ட நடிப்பில் சாவித்ரிக்கு வைரி என்கிற அவ்வளவு அறிமுகமில்லாத வார்த்தை ஞாபகமில்லை. விரோதி என மாற்றிச் சொல்லி விட்டார்.’வைரி, விரோதி இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். பின்னே என்னா அம்மாடி. பீம்பாய் பர்பாமன்ஸ் ஓகேயா?’ உயிர் உருகும் நேரத்திலும் ராஜசேகரன் மெல்லிய வறட்சியான குரலில் ராதாவுக்காகப் பரிந்து பேசினார்.சாவித்ரி ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லே இந்தத் தடவை சரியா சொல்றேன். அது நல்ல டயலாக். ஒன்மோர் டேக் ப்ளீஸ்’ எனக் கெஞ்சும் குரலில் வற்புறுத்த,வைரி மிகச் சரியாக ஒலித்தது. ஆனால் முந்தைய டேக்கில் பொங்கிய அணை மீறிய உணர்ச்சி வெள்ளம் காணாமல் போய் விட்டது. ‘முதல் ஷாட்டையே வெச்சுக்கலாம் அம்மாடி’ என ஆறுதலாக சிவாஜி சொல்ல, சாவித்ரி கூனிக் குறுகிப்போய், தன் இரு கைகளாலும் முகம் பொத்தி நிஜமாகவே அழுதார்.‘திரைப்பட வசனகர்த்தாவாக- எனது நீண்ட நெடிய அனுபவத்தில் - எத்தனையோ படங்களுக்கு எழுதி, எண்ணற்ற நடிகர் நடிகைகள் நடித்ததில், வசனத்தில் ஒரே ஒரு வார்த்தை தன்னை அறியாமல் மாறிப் போனதற்காக வருந்திக் கண்ணீர் விட்டு அழுத ஒரே ஒரு நடிகை சாவித்ரி மட்டுமே.’- ஆரூர்தாஸ்.பாசமலராக இருந்தாலும் படையப்பாவாக இருந்தாலும் சவமாக நடிப்பதிலும் சிவாஜி சிகரம். அண்ணனை மரணத்திலும் துரத்திய சாவித்ரியும் பிணமாகவே கிடந்தார். இம்மி அளவும் கண்களை இமைக்காமல், இறந்து பின்னும் நடிப்பில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் இரு திலகங்களும். பன்னீரின் நறுமணம் வீசும் பீம்பாயின் கைக்குட்டைகள் கண்ணீரில்குளித்தன நாள் முழுவதும்....நன்றி!"நவீனன்யாழ் இணையம்சாவித்திரி தொடரிலிருந்துhttps://scontent.fmaa1-3.fna.fbcdn.n...e1&oe=5ED84ED8
வணக்கம் உறவுகளே !
கணனி சரியாக இயங்காத காரணத்தால் பதிவுகள் இடமுடியவில்லை.
மிகவிரைவில் பதிவுகள் தொடரும்....