-
உலகில் எந்த ஒரு நடிகருக்கோ தலைவருக்கோ இல்லாத வரலாற்று சிறப்பு மிக்க சாதனை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு. திமுக ஆட்சிக்கு எதிராக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மதுரை வந்த போது அவரை சந்தித்து மனு கொடுக்க புரட்சித் தலைவர் திட்டமிட்டார். ஆனால் வழியெங்கும் மக்களின் எழுச்சி மிக்க வரவேற்பால் ரயில் 10 மணி நேரம் தாமதமாக மதுரைக்கு சென்றது. இதனால் இந்திரா காந்தியை புரட்சித் தலைவர் சந்திக்க முடியவில்லை.என்றாலும் மக்களின் வரவேற்பால் ரயில் 10 மணி நேரம் தாமதம் ஆனது. இது உலக வரலாற்றில் எந்த தலைவருக்கும் கிடைக்காத பெருமை.இன்று இந்திரா காந்தியின் பிறந்த நாள். இந்த நாளில் இதோ அந்த வரலாற்று சம்பவம்.
--------------------
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1973-ம் ஆண்டில் அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார்.
அதற்காக, சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்கு கிளம்பினார். இரவு நேரம் என்றாலும் வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். திருச்சியில் இருந்து ஆங்காங்கே மக்கள் வெள்ளம் ரயிலை வழியில் நிறுத்தியது. எம்.ஜி.ஆரும் தான் இருந்த ரயில் பெட்டியின் கதவைத் திறந்து மக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர். மக்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று இன்ஜின் டிரைவரும் ரயிலை மெதுவாக இயக்க ஆரம்பித்தார். ரயில் மரவட்டையாக ஊர்ந்து சென்றது.
மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். ரயில் ஊர்ந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதால் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார்.
கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட் டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ‘‘கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காக காத்திருக்கின்ற னர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவது தான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர்.
நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தை தொடர முடிவு செய் தார். ஆனாலும், அதிமுக கட்சியின் முக்கியஸ்தர் களை இந்திரா காந்தியிடம் அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன் னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.
எம்.ஜி.ஆருக்கு நேரு குடும்பத்தின் மீதும் இந்திரா காந்தியின் மீதும் மிகுந்த அபிமானம் உண்டு. இந்திராவும் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு அளித்து வந்தார். 1977- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திரா காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டது. மதுரையில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஜி.ஆரும். இந்திரா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர்.
அரசியல் காற்று அவ்வப்போது திசை மாறுவதால் எதிரணியில் இருக்க வேண்டி இருந்தாலும் இருவரும் பரஸ்பரம் கொண்ட அன்பும் மரியாதையும் என்றும் மாறியது இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். சென்னை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டபோது, அவரை பார்ப் பதற்காகவே டெல்லியில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி பறந்து வந்தார். அவர் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசு சார்பில் எல்லா உதவிகளையும் செய்தார்.
எம்.ஜி.ஆருக்கும் இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. எம்.ஜி.ஆர் பிறந்த அதே 1917-ம் ஆண்டில்தான் இந்திரா காந்தியும் பிறந்தார். பிறப்பு முதல் கடைசி வரை எம்.ஜி.ஆருக்கும் 7-ம் எண்ணுக்கும் தொடர்பு உண்டு. அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் ஆண்டுகள், தேதிகள் மற்றும் அவற்றின் கூட்டுத் தொகைக்கும் 7-க்கும் தொடர்பு இருக்கும்.
எம்.ஜி.ஆர் பிறந்த தேதி 17, பிறந்த ஆண்டு 1917, முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆன ஆண்டு 1967, அப்போது அவர் சார்ந்திருந்த திமுக ஆட்சியைப் பிடித்த ஆண்டு 1967, அவர் அதிமுகவை தொடங்கிய தேதி 17, எம்.ஜி.ஆர். முதல்முறையாக முதல்வரானது 1977, அவர் பயன்படுத்திய அம்பாசிடர் கார் எண் 4777, இதன் கூட்டுத் தொகை 7. எம்.ஜி.ஆர். மறைந்தது 24-12-1987, இதன் கூட்டுத் தொகையும் 7-தான்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆரை சந்திப்பதற்காக வந்ததுதான் இந்திரா காந்தி கடைசியாக தமிழகம் வந்தது. அடுத்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்ட துயரம் நடந்தது. அதேபோல, எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, பிரதமர் ராஜிவ் தலைமையில் சென்னையில் நடந்த நேரு சிலை திறப்பு விழா.
சென்னை மருத்துவமனையில் எம்.ஜி.ஆரை சந்தித்து நலம் விசாரித்த இந்திரா காந்தி அவரிடம் கூறினார்... ‘‘நீங்கள் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்தவர். இந்த சோதனையில் இருந்தும் மீண்டு வருவீர்கள்’’ என்றார். அவர் சொன்னது பலித்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக முதல்வராக சென்ற எம்.ஜி.ஆர்., உடல் நலம் தேறி அங்கிருந்தபடியே, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகவே வந்தது வரலாறு.
நன்றி -- தி இந்து நாளிதழ்...mj
-
#எம்ஜிஆரை_போல்
#கோயில்களை_சீரமைப்பீர் !
பல நுற்றாண்டுகள் பழமைவாய்ந்த நம் கோவில்கள் பராமரிப்பின்றி அழிந்து போகும் நிலையில் உள்ளன.அவற்றை காப்பாற்ற வேண்டும். கோவில் நிர்வாகமும் அரசும் பக்தர்களின் பணத்தை வெவ்வேறு காரியங்களுக்கு செலவு செய்கின்றது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனரே தவிர கோவில்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில்லை. கோவில்களை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்று ‘தினமலர்’ நாளிதழில் ‘இது உங்கள் இடம்’ பகுதியில் அந்த துறையால் எந்த பயனும் இல்லை என்ற தலைப்பில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்.
முதல்வர் எம்ஜிஆர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய பின்பு அப்போதைய இ.காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த வைஜயந்திமாலா பாலி இல்ல நிகழ்ச்சிக்கு வந்தார். அங்கு இருந்த பெண் ஒருவர் எம்ஜிஆரிடம் சென்று "அதிகாலையில் பார்த்தசாரதி ஆண்டவன் முகத்தில்தான் விழிப்போம்.
இப்போது தரிசிக்க முடியவில்லை. கோவில் குளம் பொது கழிப்படமாக மாறிவிட்டது. கோயிலை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் தெப்பத்தை பார்த்து நீண்ட காலம் ஆகின்றது. அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை" என்றார்.
அந்த பெண் கூறிய குறைகளை பொறுமையாக கேட்ட எம்ஜிஆர், "கவலை வேண்டாம், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார். திடீர் என்று ஒரு நாள் கோடைகாலம் என்பதால் வெயில் சுட்டெரிக்கும் மதிய நேரத்தில் பார்த்தசாரதி கோவிலுக்கு எம்ஜிஆர் காரில் வந்து இறங்கினார். வேஷ்டியை மடித்து கொண்டு ஜிப்பாவில் இருந்த கைக்குட்டைi எடுத்து முகத்தில் மாஸ்க்காக கட்டிக் கொண்டு குளத்தில் உள்ளே மைய பகுதிக்கு இறங்கி சென்றுவிட்டார்.
விஷயம் அறிந்தவுடன் இதுவரை அந்த பக்கமே வராத அதிகாரிகள் குடையை தூக்கிக் கொண்டு குளத்திற்குள் இறங்கி ஓடினார்கள். குடையை பிடிக்க வேண்டாம் என்று எம்ஜிஆர் தடுத்துவிட்டார். உடல் நிலையை பொருட்படுத்தாமல் துர்நாற்றத்தை தாங்கிக்கொண்டு குளத்தை ஆய்வு செய்த பின்பு மேலே ஏறி வந்தார்.
"கோவில் நிலையை அரசின் கவனத்திற்கு ஏன் கொண்டு வரவில்லை?" என்று அதிகாரிகளை கண்டித்தார். அதன் பின்பு அறநிலையத்துறை அதிகாரிகளை மாற்றவும் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை ஏற்று அமைச்சர் வி.வி.சாமிநாதனும் இரவு பகலாக அதே இடத்தில் முகாமிட்டு குளத்தை சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டார். லாரிகள் மூலம் குளத்தில் தண்ணீர்விட ஏற்பாடு செய்தார். குளத்தில் தெப்பம் சென்ற பிறகுதான் அமைச்சர் அங்கிருந்து சென்றார்.
ஏனென்றால் எம்ஜிஆர் தன்னுடன் வந்த, அப்போது அறநிலையத் துறையை கூடுதலாக கவனித்த சுற்றுலாதுறை அமைச்சர் வி.வி.சாமிநாதனிடம் "கோயில் குளம் விரைவில் சீராக வேண்டும். அது வரை இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது. குளத்தில் தெப்பம் விட்ட பிறகுதான் நீங்கள் இந்த இடத்தை விட்டே செல்ல வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
திடீர் என்று எம்ஜிஆர் அந்த பகுதிக்கு வந்தவுடன் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அக்ரகாரத்து மாமி ஒருவர் தன் வீட்டில் ஜுஸ் தயார் செய்து கொண்டு ஓடி வந்து காவல் தடுப்பை மீறி வழங்கினார்.
அந்த பெண்மணிக்கு தன் இரு கரங்களால் கைகூப்பி வணங்கி "உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. மருந்து கட்டுப்பாட்டில் இருக்கின்றேன். ஜுஸ் வேண்டாம்" என்று சொல்லி விட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். பார்த்தசாரதி கோயில் இந்த நிலமை என்றால் கபாலீஸ்வரர் கோயில் எப்படி இருக்கிறது என்பதை நேரில் அறிந்து கொள்ள சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தையும் எம்ஜிஆர் திடீரென்று பார்வையிட்டு அதையும் சீர் செய்ய உத்தரவிட்டார்.
எம்ஜிஆர் தன் ஆட்சிகாலத்தில் தமிழகத்திலுள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு
குடமுழுக்கு விழா நடத்தி இந்து அறநிலையத் துறையை பொலிவுடன் வைத்திருந்தார். அத்துறையில் சரியாக செயல்படாத அதிகாரிகளை மாற்ற வேண்டுமே தவிர அந்த துறையையே கலைக்கக்கூடாது. மூட்டை பூச்சியை ஒழிக்க வீட்டை கொளுத்தக்கூடாது....GDR...
-
#பாசத்தில் #ஜெயிக்கப்போவது #யார்? #வாத்தியாரா? #பக்தர்களா?
தனது பிரமிப்பான இமாலய வளர்ச்சியின் , புகழின் ஆணிவேர் ரசிகர்களே என்பதைப் புரிந்திருந்தவர் மக்கள்திலகம்...
தினமும் தீபாவளி காணும் திரைஅரங்குகள், வாத்தியார் படங்கள் திரையிடப்படும்போது...
தன் ரசிகர்களின் மேல் உயிரையே வைத்திருந்தார்...வாத்தியார்...
1973 ம் ஆண்டு அமெரிக்க பயணம் முடித்து தாயகம் வந்த அன்று மீனம்பாக்கம் முதல் மர்லின்மன்றோ சிலை வரை மக்கள் வெள்ளம்.இதை அறிந்து விமானநிலையத்தில் இருந்து எம்ஜிஆர் வீட்டுக்கு செல்லாமல் மவுண்ட்ரோடு முழுவதும் திறந்த வேனில் வந்து ரசிகர்களை சந்தித்து விட்டே திரும்பினார் !
சிகிச்சைக்காக தலைவர் அமெரிக்கா பயணம்...
நடு இரவில்...
மக்களுக்கு நன்கு தெரியும் தலைவர் முகத்தை பார்க்கவே முடியாது என்பது இருந்தும் மருத்துவமனை முதல் விமானநிலையம் வரை சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் தலைவர் பயணிக்கும் ஆம்புலன்ஸ் வண்டியைப் பார்க்க, கண்களில் நீருடன்...
#இதுதாங்க #எம்ஜிஆர்
ஒருவேளை உணவிற்குக் கூட கஷ்டப்படும் வறியவர்கள் கூட தங்களுடைய சொந்த செலவில் தனது பாசத்தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்
என்றால் அது உலகிலேயே "#வாத்தியார்" ஒருவருக்குத் தான் என்பதை கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய என்னால் முடியும்......bsm...
-
பொதுவாக, எம்ஜிஆரின் திரைப்படங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. திராவிட இயக்க படங்கள் 2.சமூக கதைகளை உள்ளடக்கிய படங்கள் 3. ஹீரோயிஸத்தை அடிப்படையாக கொண்ட ஃபார்முலா படங்கள்.
ஆரம்ப படங்களில் மாமன்னராகவும், மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்க்கும் கலகக்காரனாகவும், அரசுக்கு எதிராக சாமான்ய மக்களை திரட்டும் போராளியாகவும் எம்ஜிஆர் சித்தரிக்கப்பட்டார். இரண்டாவதாக சமூக படங்கள்தான் மக்களிடம் எம்ஜிஆருக்கு பிரபலத்தை தர ஆரம்பித்தது. நெருக்கடி ஆனால், 1960-ல் இருந்து தமிழ்த்திரையின் போக்கு வியப்பூட்டும் அளவுக்கு மாற ஆரம்பித்துவிட்டது.. ஸ்ரீதர், கேஎஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட புது புது இயக்குனர்கள் அடிப்படை பிரச்சனைகளையும், கூட்டுக்குடும்பத்தின் உள் முரண்பாடுகளையும் உள்ளடக்கிய திரைப்படங்களை வெளியிட்டனர். சரித்திர சம்பவங்கள், கத்தி சண்டைகள், வீரதீர சாகச செயல்கள் எல்லாம் அப்போது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன. அதனால் எம்ஜிஆர் ஒரு நெருக்கடியில் நின்றார். உத்திகள் ஒரு புதிய பாதையை, புதிய பாத்திர படைப்பை அவர் தேர்வு செய்ய வேண்டியதாயிற்று.. மல்யுத்தம், குத்துச்சண்டை, வாள்சண்டை போன்றவை இனி எடுபடாது.. அனைத்தும் காலாவதியாகிவிட்டன. அதனால் சமூக படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்தார். கத்தி சண்டைகளுக்கு பதில் நடனங்களில் கவனம் செலுத்தினார். சண்டை காட்சிகளைக்கூட சரித்திர கதைகளில் இருந்த பாணியை மாற்றி புதிய உத்திகளை கையாண்டார். குடும்ப தலைவன், தாய் சொல்லை தட்டாதே, பாசம், தாயை காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், பணத்தோட்டம், பெரிய இடத்துபெண், தெய்வதாய், படகோட்டி, பணம் படைத்தவன், அன்பே வா, குடியிருந்த கோயில், கண்ணன் என் காதலன், ஒளிவிளக்கு போன்ற எண்ணற்ற சமூகப்படங்கள் வெளிவந்தன. வீழ்த்தினார் கலாப்பூர்வ பார்வையில் அணுகுகிறபோது இப்படங்கள் எல்லாம் இரண்டாம்பட்சமானவையே.. அழகியலோ, கலை நுணுக்கமோ, உள்ளத்தை உருக வைக்கும் உணர்ச்சி குவியலோ இப்படங்களில் இருக்காது என்பது உண்மைதான். ஆனால் சமூகவியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறபோது, இப்படங்களில் முதல்தரமானவையாய் விளங்கின. மது அருந்துதல், சிகரெட் பிடித்தல், சூதாடுதல், கற்பழிப்பு, பெண்களை ஏமாற்றுவது, வட்டிக்கொடுமையால் ஏழைகள் வாடுவது, திருடுவது, அடுத்தவரை கெடுப்பது போன்ற சமூக தீமைகளை எம்ஜிஆர் கடுமையாக எதிர்த்தார். பாதிக்கப்பட்ட பெண்களை வீரதீர சண்டைகளிட்டு காப்பாற்றினார்.. ஏழைகளுக்கு உதவினார்.. தாயை தெய்வமென வணங்கினார்.. பெண்களை தாயாக போற்றினார்.. அக்கிரமக்காரர்களை, ஆணவக்காரர்களை, காமப்பிண்டங்களை தனி ஆளாக நின்று வீழ்த்தினார். அறநெறிப்பண்பு அதனால் ஒரு புறம் பெண்களும், மறு புறம் இளைஞர்களும் எம்ஜிஆருக்கு அபிமானிகளாய் மாறினார்கள்.. அறநெறிப் பண்புகளை வலியுறுத்தியதால் நடுத்தர மக்களும் அவரை நேசித்தார்கள். இதற்கிடையே ஏற்கனவே திராவிட எழுத்தாளர்களின் படைப்புகளாலும், திமுகவின் அங்கமாக எம்ஜிஆர் இருந்ததாலும் எம்ஜிஆருக்கு ஒரு தனிப்புகழும் செல்வாக்கும் இருந்தது. திராவிட இயக்க தொண்டர்களோடு பெண்களும், இளைஞர்களும், நடுத்தர வர்க்க படிப்பாளிகளும் இணைந்ததால் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக எம்ஜிஆர் உயர்ந்தார். 60 முதல் 70-ம் ஆண்டுகளிலும் முடிசூடா மன்னனாகவே வலம்வந்தார்.. "என் இதயக்கனி" என்று அண்ணாவே பாராட்டும் அளவுக்கு செல்வாக்கு கொடி கட்டி பறந்தது. 3 வித தாக்கம் இறுதியில் எம்ஜிஆரின் திரைப்படங்கள் 3 வித தாக்கத்தை திரைக்கு வெளியே உருவாக்கியது. 1. சினிமாவில் முதன்முதலாக ஹீரோயிசம் உருவாகி வளர்ந்தது. 2. அடித்தட்டில் உள்ள ஏழை மக்கள் புதிய உத்வேகம் பெற்று அகரீதியாகவும், புறரீதியாகவும் அவர்களை மாற்றியது. 3. அரசியல் செல்வாக்கு பெற்று - ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி - ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு புதுமையை நிகழ்த்தியது. எத்தனையோ கலைஞர்கள் எம்ஜிஆருக்கு முன்னும், பின்னும் நடித்து புகழ்பெற்றாலும், அவர்கள் அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாக மட்டுமே கருதப்பட்டார்கள்.. ஆனால் எம்ஜிஆர் படங்கள் நேர் எதிரானவை.. மக்கள் அவர் எந்த கேரக்டரை ஏற்றாலும், அதை நிஜ எம்ஜிஆராகத்தான் பார்த்தார்கள்.. எம்ஜிஆர் நல்லவர், தண்ணி அடிக்க மாட்டார், சிகரெட் பிடிக்க மாட்டார், தன் மனைவியையோ காதலியையோ தவிர பிற பெண்களை தாயாக கருதுவார்.. தீமைகளை எதிர்த்து போராடுவார்.. ஏழைகளை பாதுகாப்பார் என்றெல்லாம் நிஜமாகவே மக்கள் நம்பினார்கள். அதனால் ஹீரோவாக சினிமாவில் மட்டுமல்ல.. திரைக்கு வெளியேயும் உருவானார் எம்ஜிஆர். பாடல்கள் மற்ற ஹீரோக்களின் வாழ்க்கை ஸ்டுடியோக்கள், ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் முடிந்து போயிற்று என்றால், எம்ஜிஆரோ, இதையெல்லாம் தாண்டி, அரசியல் மேடைகள், மாநாடு, பேரணிகளிலும் பங்கேற்றார். ஏழை எளிய மக்களுக்கும், பொதுநல அமைப்புகளுக்கும் வாரி வழங்கிய வள்ளலாகவும் திகழ்ந்தார்.. தியேட்டரில் இருந்த ரசிகர்கள் காலப்போக்கில் ரசிகர் மன்ற தொண்டர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், இறுதியில் வாக்காளர்களாகவும் மாறினார்கள். இதற்கு இன்னொரு காரணம் அவருக்காக பாடப்பட்ட பாடல்கள், எழுதப்பட்ட உணர்ச்சிகரமான வரிகள்தான். ஏழைகளை பற்றியும், உழைப்பின் உயர்வு குறித்தும் நற்பண்புகளின் நன்மை குறித்தும் பல பாடல்கள் எம்ஜிஆருக்காகவே எழுதப்பட்டன... இந்த பாடல்கள் இப்படித்தான் அமைய வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கவனமும் ஆர்வமும் கொண்டிருந்தார்.. சாதாரண டூயட் பாட்டு என்றால்கூட கண்ணியமும் நயமும் கலந்திருப்பதை இப்போதும் நாம் காண முடியும். அடித்தள காரணம் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் மாறுதலை உருவாக்கியது. படகோட்டி வந்தபோது, மீனவர்கள் எம்ஜிஆரை தங்களில் ஒருவராகவும், ரிக்*ஷாக்காரன் வந்தபோது ரிக்*ஷா இழுத்தவர்கள் அவரை தங்களில் ஒருவராகவும் பாவித்தார்கள். அது மட்டுமல்ல.. தங்கள் தொழில் மீது ஒரு பற்றும் பெருமையும் ஈடுபாடும் அவர்களுக்கு உண்டாயிற்று. அழுக்கும் கிழிசலும் கொண்ட கந்தலாடையுடன் ரிக்*ஷா இழுத்தவர்கள், எம்ஜிஆரை பார்த்து முக்கால் பேண்ட்டையும், சட்டையையும் அணிந்தார்கள்.. அதேபோல் விவசாயி, தொழிலாளி, பஸ் கண்டக்டர், டிரைவர், அனாதை, போலீஸ்காரன், நரிக்குறவர், போன்ற பல கதாபாத்திரங்களை எம்ஜிஆர் ஏற்றார்.. இப் பாத்திரப் படைப்புகளில் எம்ஜிஆரை கண்டு விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன் போன்றோர் தன்னையே மறந்தனர். எம்ஜிஆரின் திரை வெற்றிக்கும், அரசியல் வெற்றிக்கும் இதுவே அடித்தள காரணமாயிற்று. எட்டாவது வள்ளல் ஆனால் பல படங்களை ஃபார்முலா படங்கள் என்று அழைக்கப்பட்டாலும், அடிப்படையில் சில அறநெறிப் பண்புகளை வலியுறுத்தின என்பதிலும், ஆபாசமோ, அருவருப்போ இல்லாமல், ஆரோக்கியமான - அன்றாட வாழ்க்கையின் துன்ப துயரங்களை மறந்து கொஞ்ச நேரமாவது தன்னையே மறந்து ரசிக்கும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருந்தன என்பதிலும் மாற்று கருத்து இல்லை.. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், "வெறும் பொழுதுபோக்கு அம்சமாயிருந்த சினிமாவை மக்களோடும், சமுதாயத்தோடும், இறுதியில் அரசியலோடும் இணைத்து.. ஆட்சியையே கைப்பற்றும் அளவுக்கு மாபெரும் சக்தி படைத்த மகத்தான கலைஞர்தான் எட்டாவது வள்ளல் எனப்படும் மக்கள் திலகம் எம்ஜிஆர்!.........Baabaa
-
எத்தனை தலைமுறை ஆனாலும் இவர் புகழ்
நிலைத்திருக்க இந்த காரணம்தான் :
எத்தனை தலைவர்களை உலகம் கண்டிருந்தாலும் புரட்சித் தலைவர்போல்
தன்னிகரற்ற தலைவர் எவரும் இல்லை.
எந்த இடத்திலும் மக்களை மதிப்பதிலும்,
மக்களுக்கு நன்மை செய்வதிலும் உலகில்
முன்னோடி இவர் மனிதநேயம்.எம்.ஜி.ஆர் என்றாலே மக்களும் எங்கள் வீட்டு பிள்ளை என்று உரிமை கொண்டாடினர்.அவரும் தன் இறுதிநாள் வரை அந்த மக்கள் செல்வாக்கை
காப்பிற்றியவர்.அவரின் அந்த கருணை குணத்தால் மக்கள் முன் அவருக்குண்டான
செல்வாக்கை இன்றைய தலைமுறை தலைவர்கள் பிரச்சாரம் செய்ய செல்லும்போதுகூட கூட்டத்தில் உள்ள தாய்மார்கள் எம்.ஜி.ஆர் பெயரை தவறாமல் அசைபோடுவதால்தான் அனைத்து சட்டமன்ற
தேர்தலின் பிரச்சாரங்களின் மூலதனமாக அனைவருக்கும் எம்.ஜி.ஆர் இருக்கிறார்.
அவரை போற்றிப் பாதுகாக்கத் தெரிந்தவர்கள் பெருமை அடையலாம்..........Rnjt
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
-
புரட்சித்தலைவர் நடித்த காலகட்டங்களில் தன்னை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் போக்கிய காவல்காரனாக இருந்தார். அதேபோல் தன்னை நம்பியிருந்த ஒட்டுமொத்த தமிழக மக்களின் காவல்காரனாக இருந்தார். இன்றைய இப்போதைய சூழ்நிலைகளில் மற்ற தலைமைகளை மனதாலும் நினைக்காதே உண்மையாக நேசிக்கின்ற புரட்சித்தலைவரின் ரசிகர்களை மற்றும் பக்தர்களை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கிறார் மற்றும் அவர்களுக்கும் காவல்காரராக இருக்கிறார் ... புரட்சித்தலைவரை உண்மையாக நம்பியவர்களுக்கு என்றும் எப்போதும் தோல்வி என்பது துளியளவும் கிடையாது.
கெத்தாக சொல்லுவோம் கம்பீரமாக சொல்லுவோம் நாம் புரட்சித்தலைவரின் மிகத் தூய்மையான அக்மார்க் வெறியர்கள் என்று நம்முடைய ஒரே தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........sbm
-
அன்று இரவு ஜப்பான் நாட்டு விமான நிலையத்தில் அந்த பட குழு வருகைக்காக காத்து இருந்தேன்.
எனக்குள் பெரும் பட படப்பு.... என்னை நம்பி பெரும் பொருள் செலவில் ஒரு படத்தை எடுக்க விரும்பி நான் ஜப்பான் நாட்டுக்கு சில மாதங்கள் முன்பே வந்து விட்டது நினைவுக்கு வந்தது...
அந்த விமானத்தின் வருகை அறிவிக்க பட்டு விட்டது...அந்த பட குழு வருகை தெரிந்து தமிழ் மக்கள் கூட்டம் அந்த இரவிலும் அலை மோதியது...
கஸ்டம்ஸ் பகுதியை தாண்டி தன் படை பரிவாரங்கள் உடன் அந்த சந்திரன் விமான நிலைய வெளிச்சம் தாண்டி வேட்டி ஜிப்பாவில் மின்னி கொண்டு ஒரு தங்க நிலா தரையில் நடப்பதை போல இருந்தது.....பலமுறை அவர் அருகே இருந்து பார்த்த எனக்கு அது புதிதாய் இருந்தது...
பலத்த கரவொலிகள் இடையே என் அருகில் அவர் வர நான் பதட்டம் கொண்டு ஜப்பான் எக்ஸ்போ 70 பொருள் காட்சி திடலில் படம் எடுக்க அனுமதி வாங்கி விட்டேன்...
நம்ம தமிழகத்தில் அங்கே போகிறார் அனுமதி எல்லாம் கிடைக்காது என்று சிலர் பேசியது உண்மையா என்று கேட்டேன்...இப்போ எதுக்கு அது நான் வந்து விட்டேன் அல்லவா.
உங்கள் உழைப்புக்கு நன்றி....எப்படியும் படப்பிடிப்பு எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நாம் நினைத்த படி நடக்கும் வாங்க அறைக்கு போகலாம் என்று என்னை தோளில் கை போட்டு அழைத்து செல்ல..
டோக்கியோ நகரில் உள்ள பிரபல இம்பீரியல் ஹோட்டலுக்கு வந்தோம் நாங்கள்.
அசோகன் அசந்து போய் இருந்தார்.
மஞ்சுளா முகம் மங்கி போய் இருந்தது.
லதா அவர்கள் நடையில் நளினம் இல்லை..
சந்திரகலா அவர்கள் எப்போது எங்கே சாய்வோம் என்ற நிலையில்.
நாகேஷ் பாவம் நடக்கவே முடியவில்லை...
நெடும் தூர விமான பயணத்தில் அதில் கொடுக்க பட்ட உணவுகள் எவருக்கும் பிடிக்காமல் அனைவரும் பசியில் தவிக்க...
பாதி ராத்திரி 1 மணி கடந்த நேரம் தலைவர் மட்டும் அசராமல் இங்கே இப்போது அனைவருக்கும் ரசம் மோர் சாதம் கிடைத்தாலும் போதும் கிடைக்குமா என்று கேட்க.....
என்னது ரசம் மோரா என்று நான் எனக்குள் திகைத்து நிற்க என்ன நடந்தது அடுத்து...
தலைவர் ரசிகர்கள் வரவேற்பை பொறுத்து அடுத்த பகுதி தொடரும்
வாழ்க தலைவர் புகழ்
உங்களில் ஒருவன் நெல்லை மணி நன்றி..........
-
1971 டிச 9 ம் தேதி வெளியான கருப்பு வெள்ளை திரைப்படம்தான் நாஞ்சில் புரடொக்ஷன்ஸ் "ஒரு தாய் மக்கள்". தயாரிப்பில் நீண்ட நாட்களாக இருந்த படம். ஆரம்பத்தில் ஜெய்சங்கர் சரோஜாதேவியுடன் நடித்து ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு முத்துராமன் ஜெயலலிதா நடிக்க படமாக்கப்பட்டது.
ஜெய்சங்கர் பல படங்களில் கமிட் ஆகியிருந்ததால் அவருடைய கால்ஷீட் பிரச்னையால் அவருக்கு பதில் முத்துராமன் நடித்தார். 1966 ல் பூஜை போட்டு தொடங்கிய படம் 1971 இறுதியில் வெளியானது. கருப்பு வெள்ளை படம் என்பதால் எம்ஜிஆர் இந்தப்படத்துக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று மாற்று அணியினர் பொய் பிரசாரம் செய்தனர்.
"நீரும் நெருப்பும்" வெளியான அக் 18 க்குப் பின் அதே ஆண்டு டிச 9 ல் வெளியாகி வெற்றி பெற்ற படம். 10 க்கும் மேற்பட்ட அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. சென்னையில் 50 நாட்களும் அதிகபட்சமாக பிற ஊர்களில் 70 நாட்கள் வரையிலும் ஓடியது. இலங்கையில் 10 வாரங்களை கடந்து வசூலில் சாதித்த படம். பாடல்கள் அத்தனையும் படம் வெளிவரும் முன்னரே வெளியாகி வெற்றி பெற்றது.
'பாடினாள் ஒரு பாடல்' 'கண்ணன் எந்தன் காதலன்' 'ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்' 'இங்கு நல்லாயிருக்கணும் எல்லோரும்' போன்ற பாடல்கள் அத்தனையும் தேனில் தோய்த்த பலா போல் சுவைமிக்கது. பாடலுக்காகவே பலமுறை பார்த்த படம். கொஞ்சம் கூட தொய்வில்லாமல் கதை விறுவிறுப்பாக பின்னப்பட்டிருக்கும்.
சண்டை காட்சிகளில் தனி முத்திரை பதித்திருப்பார் தலைவர்.
வேறு ஒரு நாளில் வெளியாகி யிருந்தால் படம் நிச்சயம் 100 நாட்களை எளிதில் கடந்திருக்கும். இங்கு 100 நாட்கள் ஓட்டிய அய்யனின் "மன்னவன் வந்தானடி" மற்றும் அநேக அய்யன் படங்களை இலங்கையில் ஓட ஓட விரட்டிய படம்தான் "ஒரு தாய் மக்கள்". கலர் படங்கள் வந்த நேரத்தில் கருப்பு வெள்ளை படமாக வந்தாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்பதை நிரூபித்தது..........ksr...
-
Mgr தன்னுடய தலைவர் *பேரறிஞர் அண்ணா-வை* போற்றியது போல் வேறு எவரும் போற்றியதில்லை.
01. தன் தலைவர் ஊரின் பெயருடன் ''காஞ்சித்தலைவன் '' என்ற படத்தில் நடித்தார் .
02. ''நம் நாடு '' படத்தில் அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவர் பெயரில் இருந்த '' துரை '' என்ற பெயரின் கதா பத்திரத்தில் நடித்தார் .
03. 'அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்' இதய வீணை
04. 'அண்ணனின் பாதையில் வெற்றியே காணாலாம்' மீனவ நண்பன்
05. 'உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்' நவரத்தினம்
06. 'இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்' பல்லாண்டு வாழ்க
07. 'அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்' இதயக்கனி
09. 'என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது' நினைத்தை முடிப்பவன் .
10. 'அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்' உரிமைக்குரல்
11. 'நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்' நேற்று இன்று நாளை
12 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா' எங்கள் தங்கம்
13. 'சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்' கண்ணன் என் காதலன்
14. 'மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' பெற்றால்தான் பிள்ளையா
15. 'நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' புதிய பூமி
16. 'தம்பி! நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று' நேற்று இன்று நாளை
17. 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்' எங்கள் தங்கம்
18. '....கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்து ஆளு..' எங்கள் தங்கம்...drn
-
அந்தக் கார் யாருடையது, உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. கார் கண்ணாடி, கூலிங்கிளாஸ் பொருத்தப்பட்டிருந்தது. அவருடன் காரில் நானும் இருந்தேன். பேசிக்கொண்டே வந்தோம்.
சாலையோரத்தில் ஏராளமானபேர் சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் அவர் கையெடுத்துக் கும்பிட்டார். அவர்களை கடக்கும் வரை கும்பிட்டபடியே இருந்தார். எனக்குச் சந்தேகம். உள்ளேயிருந்து கும்பிட்டது அவர்களுக்குத் தெரியாது. ஆனா கும்பிடுறீங்களேனு குழப்பத்தோடும் தவிப்போடும் கேட்டேன்*. உடனே அவர் சொன்னார்:
'அவர்களுக்குத் தெரியணும் என்று கும்பிடும் போடணும்னு அவசியமில்லை.
இந்தக் கும்பிடு ஒரு நன்றி. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு பல நாள் பசியும் பட்டினியுமா இருந்தவன் நான். இன்னைக்கு என்னை எல்லா விதமாகவும் ஏற்றுக்கொண்டு, மிகப்பெரிய பீடத்தையும் பேரையும் புகழையும் கொடுத்திருக்காங்க. மக்களைப் பார்க்கும்போதெல்லாம் நன்றி சொல்ற விதமா கும்பிடுகிறேன். சாகற வரைக்கும் கும்பிடுவேன்'
இதைக்கேட்டதும் நெக்குருகிப் போய்விட்டேன். அவர் வேறு யாருமல்ல. அப்ப முதல்வராக இருந்த சினிமாலயும், மக்கள் மனசுலயும் எப்பவுமே முதல் முழு மனிதராக இருந்த எம்ஜிஆர் தான். இந்த நன்றி மறவாத குணம் தான் அவரை மக்கள் திலகம்னு சொல்ல வச்சி கொண்டாடவும் வச்சுச்சு. எம்ஜிஆர் உலகம் இருக்கிறவரை பேசப்படுவார், போற்றப்படுவார்!
--வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் ஒரு நேர்காணலில் சொன்னது இது.
அதன்பிறகு வந்தவர்கள்?.........
-
தாய்மையைப் போற்றிய மாமனிதர்
தாய்மையைப் போற்றும் எம்.ஜி.ஆரின் குணத்தைப் பற்றி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி பகிர்ந்து கொண்டவை.
“எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே என் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் உண்டு. படப்பிடிப்பிலோ அல்லது வேறு பொது நிகழ்ச்சிகளிலோ அவரைக் கண்டால் உடனே நான் எழுந்து நின்றுவிடுவேன். அவர் முன் உட்காரவே மாட்டேன்.
இதைக் கண்டு பலமுறை அவர் என்னிடம் செல்லமாக கோபித்துக் கொண்டு, “நீங்க நின்னா நானும் நிப்பேன். நீங்க உட்கார்ந்தா தான் நானும் உட்காருவேன்” என்பார். பிறகு உட்கார்ந்து கொள்வேன்.
‘தொழிலாளி’ படத்தில் ஒரு முக்கியமான காட்சி. “அம்மா எனக்கு வேலை கிடைச்சிடிச்சு”ன்னு சொல்லிகிட்டே அந்த வேலைக்கான கடிதத்தை என்னிடம் கொடுத்து ஆசி பெறுவார். அப்போது சற்றும் எதிர்பாராமல் திடுதிப்பென்று என் கால்களை கட்டிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. “ஐயய்யோ எந்திரிங்க…” என்றேன்.
உடனே ஸ்டில் போட்டோகிராபர் நாகராஜன்ராவை கூப்பிட்டு அந்தக் காட்சியை உடனே ஸ்டில் எடுக்கும்படி கூறினார்.
படத்தில் இதுபோல் காலைக் கட்டிப்பிடித்து ஆசி பெறுவது போல் இருக்காது. என் அம்மாவிடம் ஆசி பெறுவதாக நினைத்து இதை செய்தேன் என்றார். அதை இன்று நினைத்தாலும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது”.
நன்றி: நடிகன் குரல் இதழ்...mj
-
நவரத்தினம் படம் தோல்வின்னு கணேசன் ரசிகர்கள் பிதற்றுவார்கள். ஆனா, சாவித்திரிய காவு வாங்கின பிராப்தம் படம் நட்டம் இல்லை என்பார்கள். பேசும் படத்தில் 1976 வந்த செய்தி பாருங்க. நவரத்தினம் படத்தொடக்கவிழா நடக்கும் 8 நாளுக்குள் எல்லா ஏரியாவும் வித்துவிட்டது. ஏ.பி.நாகராஜனும் இதை பேட்டில சொல்லிருக்கார். பதிவோட இணைப்புல இருக்கு. நாகராஜனுக்கும் நட்டமில்லை. 100 நாள் ஓடாட்டியும் சென்னை,50 நாள் ஆசியாவின் பெரிய தியேட்டரில் மதுரை தங்கத்தில் 61 நாள், பல நகரங்களில் நன்றாக ஓடி நல்ல வசூல் பெற்றது. விவரம் அடுத்து பதிவில்....rrn...
-
நடிகப் பேரரசர் நண்பா.. பட்டிக்காடா பட்டணமா படத்துக்கு டிக்கட் எடுக்க மதுரயில அந்த பிள்ளை முரளி சீனிவாசன் பட்ட பாட்டை நீயும் படிச்சியா. நானும் சிரிச்சேன். இதில் ஒரு விசயம். கடைசியில அந்தாளுக்கும் அவரோட உற்வுப் பையனுக்கும் டிக்கட் கொடுத்தது நம்ம ஆளு ஒருத்தராம். எம்ஜிஆர் மாதிரியே எம்ஜிஆர் ரசிகனும் எப்பயும் குடுக்கற, ஆபத்துல அவசரத்துல காப்பாதுறவனாதான்யா இருப்பான். அப்பயும் டிக்கட்டுல கவுண்டர் பாயில் கிழிஞ்சி இருந்துச்சாம். அப்புறம் உள்ள போயிட்டாராம். கேட்டுல இருந்தவர் விட்டுட்டாரம். இதுல என்ன வேடிக்கயின்னா குரங்கு தன் குட்டிய விட்டு சூடு பாக்க சொன்னா மாதிரி முதல்ல இந்த ஆள இவரோட உறவுபையன் உள்ள விடறானா பாருன்னு டெஸ்ட் பண்ண அனுப்பிருக்காரு. இவரை உள்ள விட்டதும் அவரு வந்தாராம். பொய் டிக்கட்டுன்னா அடிவாங்கினா நான் மட்டும் வாங்கணுமா.. சுயநலமா இருக்கியே, நீயும் வா ந்னு சொல்லத்தெரியல. ஆனா, டிக்கட் கிழிஞ்சு இருந்ததைப் பாத்ததும் எம்ஜிஆர் ரசிகர் நம்மை போட்டுப் பாத்துட்டாரோன்னு நினைச்சாராம். சீ.. அற்பங்கள்....rrn
-
"எம்.ஜி.ஆர். நிஜ வாழ்விலும் ஹீரோ தான்!"
-இயக்குநர் எம்.ஏ.திருமுகம்
அறுபதுகளில் வந்த தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றாலே அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் நடித்திருப்பார்கள். நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லனாக வருவார். கே.வி.மகாதேவன் இசையமைத்திருப்பார். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருப்பார். தேவரின் இளைய தம்பியான எம்.ஏ. திருமுகம், படத்தை இயக்கியிருப்பார்.
சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளை வளர்ப்பதிலும், அவற்றுடன் பழகுவதிலும் சாண்டோ சின்னப்பா தேவருக்கு நேர் எதிரானவர் எம்.ஏ.திருமுகம். விலங்குகள் என்றால் அவருக்கு அவ்வளவு பயம்!
ஒருமுறை வேட்டைக்காரன் (1964) படத்துக்காக சிங்கத்தை வைத்து வெளிப்புற படப்பிடிப்பு நடந்திருக்கிறது. பழகிய சிங்கம்தான் என்றாலும் கூண்டை விட்டு வெளியே வந்த பிறகு சிங்கத்தின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.
அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர் வேறு நடிக்க இருந்தார். சாண்டோ சின்னப்பா தேவர் அன்று படப்பிடிப்புக்கு வரவில்லை. அவர் வெளியூர் சென்றிருந்தார். எனவே, முழுவிழிப்பு நிலையில் படக்குழு இருந்தது.
சிங்கம் ஏதாவது கலாட்டா செய்தால், எடுத்த எடுப்பில் அதை கூண்டில் அடைத்து விட முடியாது. எனவே சிங்கத்தை வலையுடன் வளைத்துப் பிடிக்க, அதற்கென பயிற்சி பெற்ற தேவர் பிலிம்ஸ் குழு ஒன்று தயாராக இருந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் கிணறு போன்ற பத்தடி பள்ளமும் தோண்டப்பட்டு இருந்தது.
சிங்கம் ஏதாவது தகராறு செய்தால், வலையால் அதைச் சுற்றிவளைத்து முதல்வேலையாக அந்தப் பள்ளத்தில் தள்ளிவிட்டுவிடுவார்கள். சிங்கம் இயல்பு நிலைக்குத் திரும்பியபிறகு பள்ளத்தின் ஒருபகுதியை இடித்துத் தகர்த்து, சிங்கத்தைப் பிடித்து, மீண்டும் அதை கூண்டில் அடைப்பார்கள்.
இப்போது படப்பிடிப்பு ஆரம்பமானது. இயக்குநர் எம்.ஏ.திருமுகம், ஒளிப்பதிவாளரின் அருகே நின்றார். ‘கேமரா ஸ்டார்ட், ரெடி’ என்று அவர் சொன்னதுதான் தாமதம், சிங்கம் திருமுகத்தை நோக்கிப் பாய்ந்தது.
தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்கும் விலங்குகளில் எந்த விலங்கு குழப்பம் அடைந்தாலும் அது எம்.ஏ.திருமுகத்தை நோக்கித்தான் பாயும். அவரது ராசி அப்படி. அதனால் சிங்கம் தன்னை நோக்கி பாய்ந்து வந்தபோது திருமுகம் திரும்பி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்.
ஓடிய திருமுகம் கால்தவறி அந்த பத்தடி பள்ளத்தில் விழுந்தார். (கால்தவறி விழுந்தாரா அல்லது பாதுகாப்பு கருதி பயத்தில் உள்ளே குதித்தாரா என்பது தெரியாது) ஆனால், கெடுவாய்ப்பாக சிங்கமும் அந்த பத்தடி பள்ளத்தில் குதித்து விட்டது.
இப்போது சிங்கமும், திருமுகமும் ஒரே பள்ளத்தில் கிடக்க, திருமுகம் பயந்து அலற ஆரம்பித்தார். சிங்கத்தைப் பிடிக்க வேண்டிய தேவர் பிலிம்ஸ் ஆள்களோ, பள்ளத்தைச் சூழ்ந்து நின்று செய்வதறியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒருவர் துணிச்சலாக உள்ளே குதித்தார். குதித்தவர் சிங்கத்துக்கும், திருமுகத்துக்கும் நடுவில் அரண் போல நின்று கொண்டார். அப்படி குதித்த நபர் வேறு யாருமில்லை. எம்.ஜி.ஆரேதான்.
எம்.ஜி.ஆரே உள்ளே குதித்துவிட்டார், அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் சாண்டோ சின்னப்பா தேவருக்கு யார் பதில் சொல்வது என்ற பயத்தில் தேவர் பிலிம்ஸ் ஆள்கள் அத்தனைப் பேரும் இப்போது பொத்பொத்தென வலையுடன் பள்ளத்தில் குதித்தார்கள். வேறு வழியில்லாமல் சிங்கத்தை அவர்கள் மடக்கினார்கள்.
‘அண்ணன் எம்.ஜி.ஆர் வெறும் சினிமா கதாநாயகன் இல்லை. நிஜவாழ்விலும் அவர் ஹீரோதான்’ என்று இந்த நிகழ்ச்சியை பின்னாளில் நினைவுகூர்ந்தார் எம்.ஏ.திருமுகம்.
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு.........Pgd
-
எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது. இது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் அலுவலகமாக இருந்த இடமாகும். அவருடைய இறப்பிற்குப் பிறகு நினைவிடமாக பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்
எம்.ஜி.ஆரின் அம்பாசடர் கார்
நினைவிடத்தின் அமைப்பு மற்றும் உள்ளவை தொகு
இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலைக்கு எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் எம்.ஜி.ஆர் ரசிகர்களும், அரசியல்வாதிகளும், கட்சி தலைவர்களும் மாலை அணிவிக்கின்றனர்.
இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்திய tmx 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நினைவு இல்லத்தில் உள்ள நினைவுப் பொருள்கள் தொகு
எம்.ஜி.ஆர் வளர்த்த ஆண் சிங்கம் ராஜா பாடம் செய்து பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
எம்.ஜி.ஆர் படித்த நூல்கள்
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருள்கள்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் முதன் முதலாக இணைந்த 12 பேரின் உறுப்பினர் படிவங்கள்.
எம்.ஜி.ஆரின் அம்பாசிடர் கார்
எம்.ஜி.ஆர் உபயோகித்த உடற்பயிற்சி கருவிகள்.
துப்பாக்கி சூட்டினை அடுத்து அவர் கழுத்தில் இடப்பட்டிருந்த மாவுக் கட்டு போன்றவை நினைவு இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா, இலங்கை, ரஷ்யா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், நார்வே, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நாணயங்கள் உள்ளன
நினைவு இல்லம் குறித்து எம்.ஜி.ஆர் உயில்====
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன் என்று எம்.ஜி.ஆர் தான் அலுவலகமாக பயன்படுத்திய வீட்டினை நினைவில்லமாக மாற்றுமாறும், இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் தன் உயிலில் குறிப்பிட்டுள்ளார்
#சிவதாஸ்_கிருஷ்ணசாமி ...
.........
-
"எட்டு திக்கும் எம்ஜிஆர்
திருநாமம் மணக்குது"
**********************************
'ஞாபகம் வருதே' தொடர்! 'சத்துணவால் பக்தனான கதை'....1-5 ம் வகுப்புவரை கோதுமை கஞ்சி மதிய வேளை ஊற்றுவார்கள். ஒரு கரண்டி கஞ்சிதான் கிடைக்கும். ஒரு துண்டு அச்சு வெல்லம் தருவார்கள். அலுமினிய தட்டு ஒன்றன்மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தண்ணீர் குடிக்க அலுமினிய டம்ளர் பயன்படுத்தினோம். வீட்டிலிருந்து உயரமான கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் குடிக்க கொண்டு வருவோம். புத்தகப்பை துணிப்பையாக இருக்கும். அல்லது வயர் பின்னல் பையாக இருக்கும். அதிசயமாக ஒரு பையன் சிறிய அலுமினிய பெட்டியில் புத்தகம் வைத்து எடுத்து வருவான். காலில் செருப்பு அணிந்ததில்லை. ஓரிரு பையன்களின். கால் சட்டை பின்பக்கம் கிழிந்திருக்கும். அதை ஓட்டக் கால்சட்டை என கிண்டலடிப்பார்கள். கசங்கிய சட்டையில் பட்டன்கள் பெரும்பாலும் இருக்காது. பட்டன்களுக்குப் பதிலாக ஊக்கு குத்தி இருக்கும். மதியம் சாப்பிட்ட கோதுமை கஞ்சி மாலை பள்ளிக்கூடம் முடியும் போது வயிறை பதம் பார்க்கும். புதிய புத்தகங்கள் டீச்சர் அடுக்கி வைத்து ஒவ்வொருவராக அழைத்து தருவார். புதிய புத்தகத்தை திறந்து அதை முகர்ந்து பார்ப்போம். அந்த வாசனை மனதை மகிழ்விக்கும். இடைவெளியிட்டு சில பக்கங்களில் மயில் முடி சொருகி வைத்து மறுநாள் அதை பல துண்டுகளாக்கி மயில் முடி குட்டிப் போட்டுள்ளதாக குழந்தைகளை ஏமாற்றி சிரித்து மகிழ்ந்தோம். புதிய பாடப்புத்தகத்தில் முதலமைச்சர் எம்ஜிஆர் புகைப்படம் கண்டு பரவசமானோம். அவர் அருகில் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் புகைப்படமும் இருந்தது. திடீரென ஒருநாள் ' நம்ம பள்ளிக்கூடத்துல நாளையிலேர்ந்து சத்துணவு போடப்போறாங்க'' என்ற செய்தி கேட்டு ஓடோடிச் சென்று அம்மாவிடம் சொல்லி மகிழ்ந்தோம். சத்துணவு பொருட்கள் கொண்டு வரும் லாரியைப் பார்த்ததும் ' டீச்சர் டீச்சர் சத்துணவு அரிசி லாரி வருது' என ஆர்ப்பரிப்போம். ஜன்னல் வழியாக வேடிக்கையும் பார்த்தோம். சத்துணவு கூடத்தை எட்டிப் பார்த்து அரிசி, காய்கறிகள், தகரத்திலான கேன்களில் எண்ணெய் என உணவுக் கூடத்தில் நடந்துள்ள மாற்றங்களை ரசித்தோம்.புதிய யூனிபார்ம், பல்பொடி, காலணிகள் தரப்பட்டன. ஆரம்ப வகுப்புகளில் ஒரு கரண்டி கோதுமை கஞ்சியையும் ஒரு துண்டு அச்சு வெல்லத்தையும் சாப்பிட்டுவிட்டு இன்னொரு கரண்டி கோதுமை கஞ்சி கிடைக்காதா என அலுமினிய தட்டில் ஒட்டியிருந்த மிச்சத்தை நக்கிய காலம் போய் வயிறு நிறைய சோறு தந்த.... 1977-82 க்குள் இந்த மாற்றத்தை தந்தவர் புரட்சித்தலைவர் என்பதை அறிந்தோம். வீடுகளில் உள்ள பானைகளில் அரிசி நிரம்பி இருந்ததை முதன்முதலாக பார்த்து உணர்ச்சி வயப்பட்டோம். கடைகளில் அரிசி மிகமிக குறைந்த விலையில் விற்கப்படுவதாக அம்மா முகம் மலர கூறியது கேட்டு ஆச்சர்யமானோம்.
1984-85 இடைப்பட்ட காலத்தில் ' எம்ஜிஆர் இறந்துவிட்டார' என்றும்' இல்லை இல்லை எம்ஜிஆர் உயிருடன்தான் இருக்கிறார்' என்றும் வீடுகளில் தெருக்களில் கடைவீதிகளில் அரசியல் கட்சி மேடைகளில் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் விவாதிப்பதை உற்றுக் கவனித்தோம். டிவி பெட்டியில் வீடியோ சுமந்து வந்த வாகனங்கள் அமெரிக்க மருத்துவமனையில் 'எம்ஜிஆர் உயிர்த்தெழுந்திருந்ததைக்' காட்டியது. புரட்சித்தலைவர் மீது ஈர்ப்பு அதிகரித்தது. தியேட்டர்களில் 1980-85 கால புதிய படங்களைவிட மக்கள் திலகம் மறுவெளியீடு காவியங்கள் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்தன. தேர்தல் காலங்களில் ஊரில் நாலைந்து பேர் தவிர அனைத்தும் இரட்டை இலை வாக்குகள். எட்டுத் திக்கும் ' எம்ஜிஆர் எம்ஜிஆர்' என்ற புகழே படர்ந்திருந்தது. 1987 ல் எம்ஜிஆர் பக்தனாக மாறி இருந்தோம். இன்றோ எம்ஜிஆர் எம்ஜிஆர் என்றே இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது.
என்றும் நம் கடவுள்
எம்ஜிஆர்
...arm
-
மக்கள் திலகம் எம் ஜி ஆர் படங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி.......
________
சென்னை மூலக்கடை ஐயப்பாவில் இன்று முதல் (5/2/21) பல்லாண்டு வாழ்க
தினசரி 3 காட்சிகள்
தகவல் உதவி திரு. சங்கர், மணலி.
திருச்சி பேலஸ் அரங்கில் நினைத்ததை முடி ப்பவன் 6/2/21 முதல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது.
: தகவல் உதவி திரு. கிருஷ்ணன், திருச்சி
-
சேலம் அலங்கா ர் அரங்கில் 5/2/21 முதல்
மக்கள் திலகம் எம் ஜி ஆர் இரு வேடங்களில் அசத்திய எங்க வீட்டு பிள்ளை தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
தகவல் உதவி திரு ராஜா, நெல்லை.
-
இந்துமதக் கடவுள் எவராயிருந்தாலும்-
கிருத்துவ மதத்தின் ஏசுவாக இருந்தாலும்-
இஸ்லாமியர்களின் நபிகள் நாயகமாக இருந்தாலும்-
உண்மையான பக்தனிடம்,,தாம் தாழ்ந்து அவனை உயர வைத்துப் பார்ப்பார்கள்!
எம்.ஜி.ஆர்,,எவ்வளவோ ஏழைப் பாழைகளின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்!
தன் லட்சியப் பிடிப்பில் அந்த எம்.ஜி.ஆருக்கே சவால் விட்ட ஒருவரின் திருமணம் தான் இன்றையப் பதிவு!
அது எம்.ஜி.ஆரின் உழைக்கும் கரங்கள் பட ஷூட்டிங்!
எம்.ஜி.ஆரின் காருக்கு முன்னால் அந்த ஏழை இளைஞர் விழுகிறார்?
எம்.ஜி.ஆரின் கார் டிரைவர்,கொஞ்சம் அசந்திருந்தாலும் கார்,,அந்த ஏழை மீது ஏறியிருக்கும்?
காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்,,அந்த இளைஞரைக் கண்டிக்க-- அவர் சொல்கிறார்--
போரூருக்குப் பக்கத்துல கிராமத்துல விவசாயம் பார்க்கறேங்க. ரெண்டு மூணு வருசமா எனக்குக் கண்ணாலம் கட்டி வைக்க எங்க சொந்தக்காரங்கப் பிடிவாதமா இருக்காங்க.
என் தலைவன் நீ மாலை எடுத்துக் கொடுக்காம நான் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டேங்க!
நீங்க என்னிக்கு சொல்லறீங்களோ,,எந்த இடத்துல சொல்றீங்களோ அங்கே உங்க முன்னாடி தாலி கட்டறேங்க--
அதெல்லாம் தப்பு! பெரியவங்கப் பார்த்து ஏற்பாடு பண்ணற விஷயம் தான் கல்யாணம்!
நீ,,கல்யாணப் பத்திரிகையோட வா. நான் அவசியம் வந்து கல்யாணத்த நடத்தி வைக்கறேன்!!
எம்.ஜி.ஆரின் இந்த வாக்குறுதியால் இரண்டு இறக்கைகள் இளைஞன் உடலில் ஒட்டிக் கொள்ள-ஆனந்தமாகப் பறந்து செல்கிறார் தன் கிராமத்துக்கு?
அன்றைய அந்த முகூர்த்த நாள்--
நெடு நேரம் பார்த்தும் எம்.ஜி.ஆர் வரவில்லை?
உன் மனசு நோகக் கூடாதுன்னு அவர் வர்ரதா சொல்லியிருப்பாரு! நம்ம தகுதிக்கெல்லாம் அந்த மகராசன எதிர்ப்பார்க்கறது தப்பு!
பெற்றோரின் சமாதானத்தை மீறி அந்த இளைஞர் சினக்கிறார்--
இப்பவேப் போய் என் தலைவனைக் கேக்கறேன்--
உன் தொண்டனா இருக்கறதை விடப் பெரிய தகுதியா என்னத்த எதிர்ப்பார்க்கறே நீ--
உன் பக்தனை அவ்வளவு சாதாரணமாக நினைச்சுட்டியா? உன் பேரச் சொல்லற உன் பக்தனோட நீ உசத்தியாப் போய்ட்டியா?
இப்பவே மதறாஸ் போய் என் தலைவன்ட்டே நியாயத்தக் கேக்கறேன்--
வெறி பிடித்தது போல் முழங்கிவிட்டு,,கல்யாண உடையிலேயே சென்னையை நோக்கி ஓடுகிறார் அந்த இளைஞர்??
சென்னை!
இடம்--சத்யா ஸ்டூடியோ--
தார்ப் பாய்ச்சுக் கட்டின வேட்டியோடும்,ஜிப்பாவோடும் படப்பிடிப்புக்கு தயார் ஆகும் எம்.ஜி.ஆர்,,மேக்கப்-பெட்டிக்குள் இருந்த அந்தத் திருமண அழைப்பிதழ் எம்.ஜி.ஆரைப் பார்த்துப் புன்னகைக்க--
ஏக டென்ஷனாகிறார் எம்.ஜி.ஆர்??
இந்தக் கல்யாணத்தை ஏன் எனக்கு நினைவுப்படுத்தலே??
காரமாகக் கேட்டபடியே காரில் பாய்கிறார்?
உடையை மாற்றக் கூட நேரமில்லை!
அதே ஒப்பனை உடை--வேஷ்டி--ஜிப்பா?
கடுகிப் பறந்த எம்.ஜி.ஆரின் கார் அந்த கிராமத்தை அடைய-- நெக்குருகி அவரை வரவேற்ற அந்த இளைஞரின் பெற்றோர் அழுகையோடு விபரத்தைக் கூற--
எம்.ஜி.ஆர்,,தம் டிரைவரோடு இன்னும் இரண்டு பேர்களை அனுப்புகிறார் --
சத்யா ஸ்டூடியோ அருகில்--
கல்யாண உடையோடு உன் மத்தம் கொண்டு ஓடியபடி இருக்கும் அந்த இளைஞனைக் காரில் போட்டுக் கொண்டு வர--
இனிதே நடைபெறுகிறது எம்.ஜி.ஆர் முன்னிலையில் அந்தத் திருமணம்/
இரண்டுக் கட்டு நோட்டுக்களை இளைஞன் கையில் திணித்த எம்.ஜி.ஆர்,,அவர் காதில் ஏதோ சொல்லிவிட்டு நகர--
இந்த இளைஞன் உடலில் மீண்டும் இறக்கை?
இம்முறை தன் மனைவியோடு ஆனந்தத்தில் பறக்கிறார்??
ஆம்! மறு நாள் சத்தியா ஸ்டூடியோவில் அலங்கரிக்கப்பட்ட அந்த உயர் ரக இருக்கைகளில் அந்தக் கிராமத்து தம்பதிகள் அமர்ந்திருக்க--
சத்யா ஸ்டூடியோ ஊழியர்களுக்கு அன்று எம்.ஜி.ஆர் செலவில் விருந்து??
இங்கே ஒன்றை நன்றாக நோக்க வேண்டும்--
பக்தனை நோக்கி எம்.ஜி.ஆர் ஓடியது ஷூட்டிங் உடையில் என்றால்--
அந்த பக்தனோ,,தன் கல்யாண உடையிலேவ்யே தன் தலைவனை நோக்கி ஓடியிருக்கிறார்??
சட்டையை சட்டைப் பண்ணாத உண்மையான உணர்ச்சி வேகம் இரு தரப்பிலும்??
சரி! திருமணத்தை நடத்தி வைத்து தன் உயரத்தை எம்.ஜி.ஆர் காட்ட--
எம்.ஜி.ஆருக்கு சற்றும் சளைத்தவரா அவர் பக்தர்?
எம்.ஜி.ஆர்,,அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது-
எம்.ஜி.ஆர் குணமாக வேண்டி,,தீ மிதித்த அந்த இளைஞர் காளிக்கு நேர்த்திக் கடனாக--
தம் வலது கையையே வெட்டி பலி கொடுக்கிறார்???
தலைவன் என்றால் எம்.ஜி.ஆர் போலவும்--
பக்தன் என்றால் அவரது இத்தகைய விசுவாசி போலும்--
எங்குமே இனிக் காண இயலாது என்பதில் உடன்பாடு தானே உங்களுக்கும்???...Baabaa
-
"ஒருதாய் மக்கள்"., 5 வருசம் நீண்ட தயாரிப்பு. துப்பாக்கி சூடு சம்பவம், தேர்தல், நடிகர்கள் மாற்றம் என இழுத்து தாமதமாய் வெளியானது. ரிக்சாக்காரன், நீரும் நெருப்பும் என்று கலரில் பிரம்மாண்ட செட்களுடன் படங்கள் வந்த நேரத்துல கறுப்பு வெள்ளையில் வந்தது. பிரம்மாண்டம் செட் எல்லாம் இல்லை. கனவுப் பாட்டு இல்லை. தனி கொள்கைப்பாட்டும் இல்லை. நம்பாளுக்கு சாதாரண காஸ்டூம் டிரஸ். தலைவர் படத்துலயே ரொம்ப சின்ன படம் .15 ரீல். படத்துக்கு பெரிய செலவும் இல்ல. மொத்தமே 3 வீடு, நம்பியார் பதுக்கல் குடோன், தலைவரை அடைச்சு வெச்சிருக்கும் டஞ்சன் ரூம், நம்பியார் சண்டை குளம் செட், பாட்டுக்கு ஸ்டுடியோ, அவுட்டோர் கிராமம் வயல், கிளைமாக்சில் அவுட்டோர் மலை அவ்வளவுதான். படத்துக்கு எதிர்பார்ப்பும் இல்ல. பெரிய வெற்றியும் இல்ல. ஆனா, 5 பாட்டும் ஒண்ணு சுசீலா ரிப்பீட்டு. முத்து. சூப்பர் இட். தலைவர வெச்சு குறைஞ்ச முதலீடு படம். அப்புறம் லாபத்துக்கு என்ன....rrn
-
இந்தப் படத்துல குளத்துல சண்டையில் நம்பியாருக்கு டூப்பா நடிச்ச மக்கள் திலகம் பாதுகாவலர் சமீபத்தில் இறந்த அமரர் கே. பி. ராமகிருஷ்ணனுக்கு கால் உடைஞ்சு போச்சு. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை செலவு பூராவும் தயாரிப்பாளர் தலையில் கட்டாமல் புரட்சித் தலைவர் ஏழைகள் வள்ளல் தானே ஏத்துக்கிட்டார். இதாவது பரவால்ல. தன்னோட பாதுகாவலர் செஞ்சாருன்னு சொல்லலாம். அந்த சமயத்தில மஞ்சக் காமாலை வந்து அதே ஆஸ்பத்திரில சேர்ந்த ( மெட்ராஸ் கே ஜே ஆஸ்பத்திரி) சாவித்திரி சிகிச்சை செலவயும் ஏழைகளின் தெய்வம் எட்டாம் வள்ளல் ஏத்துக்கிட்டார். ஒருதாய் மக்கள் படத்திலயும் நடிக்காத சாவித்திரிக்கு வைத்தியம் செய்யணும்னு தலைவருக்கு என்னய்யா அவசியம். சாவித்திரியோட அண்ணன் நொண்ணன்னு சொன்னவன்லாம் சாவித்திரிய திரும்பிக்கூட பாக்கல. வள்ளலார் புரட்சித் தலைவர் வாழ்க..........rrn...
-
இவன் ஒரு முட்டாள் ...னாட்டி. சுரேஷ் சுரேஷ். 72 க்கு பிறகு எம்ஜிஆர் படம் சரியா ஓடலியாம். ஏண்டா 73 ல் உலகம் சுற்றும் வாலிபன் வந்தப்ப நீ பரலோகம் போயிருந்தியா. ரஜினி, கமல், விஜயகாந்த் வெள்ளத்தில் எம்ஜிஆர் அடித்து செல்லப்பட்டிருப்பார்னு சொல்றியே. அப்படி அடிச்சிட்டு போக அவர் என்ன கணேசனா. நீ சொன்ன நடிகர்கள் படித்தில எல்லாம் துணை நடிகனா நடிச்சவர்தான் கணேசன். 1990 வரை கதாநாயகன் அந்தஸ்தில் கணேசன் இருந்தாரா. டேய் .சுரேசா. கதானாயகன்றது அப்பா, தாத்தாவா, மாமனாரா வர்ரது இல்லடா. உங்க கணேசன் கடைசி காலத்துல பூரணம் விசுவனாதன் மாதிரிதான் நடிச்சார்.விட்டா ஆசை என்ற அஜித் குமார் படத்துல பூரணம் விசுவனாதன் தான் கதாநாயகன்னு சொல்லுவ போல.முட்டாள் பயல்....rrn
-
இங்க வந்து ஞாயம் சொல்றவங்க நல்லா பாத்துக்குங்கய்யா. யாரோ கார்திகேயனாம். என்ன சொல்றான் பாருங்க. ஏண்டா கார்த்திகேயா பாடு ..யே. எம்ஜிஆர் படம் திமுக ஆதரவு, பத்திரிகைகாரனை அடிச்சு கஸ்டப்பட்டு ஓடிச்சுன்னு சொல்றியே ஏண்டா பத்திரிகைகாரனை அடிச்சா படம் ஓடுமா. அட விஞ்ஞானி புடுங்கி.கணேசன் படம் கஸ்டப்படாம ஓடிச்சா.. எங்கே. தியேட்டரை விட்டா. வீரபாண்டிய கட்டபொம்மன் 300 நாள், வசந்த மாளிகை 750 நாள் எங்கடா இதெல்லாம்.. தமிழ்னாடு பூராம் சேர்ந்து மொத்தமா இத்தனை வருசத்தில் ஓடினதா.. த்தா....rrn
-
சென்னை டூ மதுரை... புரட்சித்தலைவரை ஒன்றரை நாள் பயணிக்க வைத்த மக்கள்...
இரவு சென்னையிலிருந்த கிளம்பிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டியது. மாறாக மாலை 5 மணிக்குதான் மதுரை வந்தடைந்தது.. ஏன்? எதனால்? எப்படி? யாரால்?
இப்படி ஒரு சம்பவத்தை நம்ப முடிகிறதா? ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்பதே உண்மை...,
ஆம் 48 ஆண்டுகளுக்கு முன் உண்மையில் அப்படிப்பட்ட அதிசயம் நடந்தது.
1973-எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த நேரம்... அ.இ.தி.மு.க.வை தொடங்கியிருந்தார். மக்கள் செல்வாக்கு எப்போதும் போல நிறைந்திருந்தது.
காரணம் சரித்திர, புராண மாயையில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவில் சமூகக் கருத்துகளை தன் பாணியில் சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார் எம்ஜிஆர்.
அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார். சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்குக் கிளம்பினார் தலைவர். இரவு நேரம் என்றாலும் கூட வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் மக்கள் ரயிலையே நிறுத்தியே விட்டார்கள். அதுவும் திருச்சியை நெருங்கும் போது ரயில் நகரவே வழியில்லை.
எம்ஜிஆர் பற்றித்தான் நமக்கு தெரியுமே... எந்த தொண்டரையும் புறக்கணிக்காமல் அனைவர் வரவேற்பையும் ஏற்றுக்கொள்ள ரயில் மிக மிக மெதுவாக நகர ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.
மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரைச் சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். தாமதமாகிக்கொண்டே இருந்தது.
'ரயில் இந்த வேகத்தில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது' என்பதாலும், 'தன்னால் ரயிலில் வரும் பயணிகளும் பாதிக்கப்படுகிறார்களே' என்பதாலும் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார்.
கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார். கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது...
இந்த செய்தியறிந்த ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட்டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே புரட்சித்தலைவர் இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர்.
''கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவதுதான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்," என்று கேட்டுக் கொண்டனர்.
அதோடு எம்ஜிஆர் உடன் பயணித்தவர்களும் "உங்களோடு பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்... எத்தனை நாட்களானாலும் பரவாயில்லை," என்று சொல்ல, பொன்மனச்செம்மல் உருகிப்போனார்.
நிலைமையை புரிந்து கொண்ட மக்கள்திலகம் ரயிலிலேயே பயணத்தைத் தொடர முடிவு செய்தார்.
தன் நண்பர்களை இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன்னார்.
வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.
இதுதான் உண்மையான மக்கள் செல்வாக்கு என்பது...!
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்............vrh
-
சசியா--சரியா?--சரிவா??
-----------------------------------
எம்.ஜி.ஆருக்கு மட்டுமே இருந்த அந்த விசேஷ சிறப்பை ஜெ உணராமல் போனது துரதிர்ஷ்டம் என்றும்--
ஆர்.எம்.வீயின் சில நடவடிக்கைகளைப் பற்றி,,ஜெ,,எம்.ஜி.ஆரிடம் புகார் தெரிவித்தும் அவர் மௌனமாக இருந்தார் என்றும் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தோம்!
அதைக் கொஞ்சம் விரிவாக இங்கே பார்ப்போம்!
எம்.ஜி.ஆரின் அந்த விசேஷ சிறப்பு--
தமக்கு ஒருவர் நல்லது செய்தோலோ,,தம்மிடம் நேர்மையாக இருந்தாலோ--குறிப்பிட்ட அந்த நபரை உடனேப் பாராட்டி விட மாட்டார்!
அந்த நபரே எதிர்பார்க்காத நிலையில்,,அந்த நபரே மறந்து விட்டாலும் கூட இரட்டிப்பாக,,மூன்று மடங்காக தம் நன்றியை திருப்பிக் காட்டி அவரை திணற அடிப்பார்!
அதில் வேடிக்கை என்னவென்றால்--
எம்.ஜி.ஆர் அவருக்கு செய்யும் நேரம் அந்த நபர் உண்மையிலேயே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்??
அஃதைப் போலவே--
ஒருவருக்கு தண்டனை வழங்க வேண்டி இருப்பின்--
எடுத்த உடனேயே அவரை தண்டித்துவிட மாட்டார்.
புத்திமதி சொல்வார். திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் கொடுப்பார்.
வேறு வழியில்லை--முற்றிப் போய்விட்டது என்னும்போது களத்தில் இறங்குவார்.
சினிமாவில் கூடப் பார்க்கலாம்--
எதிராளி அடித்த பின்னரே இவர் கை ஓங்கும்! வெற்றியை வாங்கும்.
அண்ணா காலத்திலிருந்து கருணா நிதிக்கு எம்.ஜி.ஆர் கொடுக்காத சந்தர்ப்பங்களா??
ஒரு சாதாரணத் தொண்டனுக்குக் கூட எம்.ஜி.ஆரின் இந்த குணம் தெரிந்திருக்கும்போது இதை அன்று ஜெ எப்படி தெரிந்து கொள்ளாமல் விட்டார் என்பது நமது இன்று வரையிலான ஆச்சரியங்களில் ஒன்று!
ஜெ,,புகார் செய்யும் முன்னரே,,எம்.ஜி.ஆரே ஆர்.எம்.வீயை ஆழம் பார்த்துக் கொண்டிருந்தார்?
மிகச் சரியாக சொல்ல வேண்டுமென்றால்--
தி.மு.க--அ.தி.மு.க இணைப்பு முயற்சி நடந்தபோது--
அதில் ஆர்.எம்.வீ காட்டிய அதீத ஆர்வம்,,அப்போதே எம்.ஜி.ஆரை யோசிக்க வைக்க ஆரம்பித்தது!
கொ.ப.செ வாக ஜெ கட்சியில் ஆற்றிய பணி,,அவருடைய சுறுசுறுப்பு--மக்களிடம் ஜெ வுக்கு இருந்த வரவேற்பு--மிக முக்கியமாக அன்றைய கருணா நிதியை மேடை தோறும் ஜெ சந்தித்த வேகம்--இவை அனைத்துமே இம்மி பிசகாமல் எம்.ஜி.ஆர் கவனித்துக் கொண்டு தான் வந்தார் என்பதை ஜெ கவனிக்கவில்லை??
போகும்வரை ஆர்.எம்.வீயைப் போக விட்டு,,அவருடன் எவ்வளவு பேர் ஒட்டுகிறார்கள் என்பதையும் கணக்கிட்டு,,அவரை எதிர் கொள்ள இருந்தார் எம்.ஜி.ஆர்!அந்த சமயத்தில் ஜெ கண்டறிந்து சொன்ன சில விஷயங்களும் எம்.ஜி.ஆருக்கு உதவியாகவே இருந்தன.
அன்று ஜெ மட்டும் ,எம்.ஜி.ஆர் மேல் நம்பிக்கை வைத்துக் கொஞ்சம் பொறுமை காட்டியிருந்தால்--
அரசியல் வாரிசாக,,அன்றே எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கப் பட்டிருந்திருப்பார்!!
விதி இங்கே தான் வக்கிரமாக சிரித்தது--
கட்சியில்,,தன் கை ஓங்க,,ஆர்.எம்.வீ முனைந்தது போலவே--
ஜெவும் தன் பலத்தைக் காட்ட முயற்சிகள் மேற் கொண்டார்.
ஒரு சினிமாப்பாடல் வரி இங்கே உண்மையானது--
அவன் போட்ட கணக்கொன்று
இவன் போட்ட கணக்கொன்று
இரண்டுமே தவறானது--பூம்புகார் படப் பாடல்!
ஆர்/எம்/வீ--ஜெ--இருவருக்குமே பாடம் புகட்ட நினைத்த எம்.ஜி.ஆர்--
அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில்,,கட்சியின் சின்னம் கிடையாது என்று அறிவித்ததுடன்--
தாம் பிரச்சாரமே செய்யாமல் இருவரையும் பிரச்சாரம் செய்ய வைத்தார்!
திருச்செந்தூ இடைத் தேர்தலில் இன்னொரு வேடிக்கை நடந்தது.
அற நிலையத்துறை அமைச்சரான ஆர்.எம்.வீ--வேல் சம்பந்தமாக சம்பந்தப்பட்டிருந்ததால் அவர் பிரச்சாரத்துக்கு செல்ல முடியாத நிலையில்--ஜெ வை அனுப்பினார் எம்.ஜி.ஆர்.
அப்படியும் அன்றைய அந்தத் தொகுதியின் நிலை அ.தி.மு.கவுக்கு சாதகமில்லாத சூழ் நிலையில் தாமே பிரச்சாரத்துக்குச் சென்று வெற்றிக் கனியை பறித்து வந்தார் எம்.ஜி.ஆர்
இதன் மூலம் இருவருக்குமே எம்.ஜி.ஆர் உணர்த்திய செய்தி--
நீங்கள் இருவருமே பெரியவர் அல்ல?
இரட்டை இலையும்,,நானும் இருக்கும் வரையில்???
சரி! 1990 களுக்குப் பிறகு தொண்டர்களிடம் தொலைவை மேற் கொண்ட ஜெ,,,ஆரம்பத்திலிருந்தே அப்படித் தானா என்று கேட்டால்--
இல்லை என்பதே நம் பதில்.
எம்.ஜி.ஆரது தொண்டர்களுக்காக ஜெ,,,உதவி செய்து,,,எம்.ஜி.ஆரிடமே பதில் சொல்ல வேண்டிய ஒரு நிகழ்வும் நடந்திருக்கிறது??
அது??
நாளைப் பார்க்கலாமா???!!!...vtr
-
"இன்று போல் என்றும் வாழ்க" 1977
மே 5 ம் தேதியன்று வெளியான படம்.
100 நாட்களை கடந்து ஓடிய வெற்றிப் படம். ராதாசலூஜா தலைவருடன் நடித்த இரண்டாவது படம். ராதா சலூஜா நடித்த "இதயக்கனி" "இன்று போல் என்றும் வாழ்க" ஆகிய இரண்டு படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடி மகத்தான வெற்றியைப் பெற்ற படங்கள். சென்னையில் 50 நாட்களில் ரூ994000 வசூலாக பெற்று 50 நாட்களிலே 10 லட்சத்தை நெருங்கி சாதனை படைத்தது.
சென்னையில் தேவிபாரடைஸிலும் மற்றும் மதுரை சென்ட்ரல் தியேட்டரிலும் 100 நாட்கள் ஓடியது. சென்னையில் 100 வது நாள் விழாவில் கவர்னர் பட்வாரி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
சென்னையில் ஓடி முடிய ரூ 1529371.65 வசூலாக பெற்று 15 லட்சம் தாண்டிய படங்களில் ஒன்றாக சிறப்பு பெற்றது. சென்னையில் 15 லட்சம் கடந்த தலைவர் படங்கள் மொத்தம் 5.
அதில் ஒன்று "இன்று போல் என்றும் வாழ்க" என்றால் அந்த வெற்றியின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். நெல்லை சென்ட்ரலில் 77 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. நாகர்கோவில் குறுகிய காலத்தில் வசூலில் சாதனை செய்த படம்.
திருச்சி பேலஸில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை செய்தது. எம்ஜிஆரை தமிழக முதல்வராக தரிசித்துக்கொண்டே பார்த்த படம்.
'இது நாட்டை காக்கும் கை' என்ற
பாடல் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் சின்னத்தை குறிப்பாக உணர்த்தியது. காங்கிரஸ் மேடைகளில் நிகழ்ச்சிக்கு முன்னால் இந்தப்பாடல் ஒரு எழுச்சியை கொடுத்தது எனலாம்.
எதிரியை வீழ்த்தி துவம்சம் செய்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டே பார்த்த ஞாபகம்.
ஆஹா! என்ன ஒரு வெற்றிக்களிப்பு! அனைவருக்குமே இருந்தது எனலாம். இனி அது போன்ற ஒரு தருணம் கிட்டுமா? தனக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களின் 'அன்புக்கு நான் அடிமை' என்ற பொருள் பொதிந்த பாடலை படத்தின் ஹைலைட்டாக வைத்திருந்தது அருமையாக அவர்களுக்கு நன்றி சொல்வது போல் இருந்தது குறிப்பிடத்தக்கது..........ksr.........
-
“ ‘அடிமைப்பெண்’ வெற்றியடைந்தது எப்படி?” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #
புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.
திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; UNEASY-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.
ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார். எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.
எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.
அன்று அடிமைப்பெண்
`அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.
`அடிமைப்பெண்'ணின் சாதனை
தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள், இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.
இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.
அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’
‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.
பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'
`அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை
வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவி நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.
புஷ் குல்லா
`அடிமைப்பெண்' படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயிருந்த வேளையில்தான் எம்.ஜி.ஆருக்கு புஷ் குல்லா பரிசாகக் கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அன்று முதல் அவர் அந்த புஷ் குல்லாவைத் தொடர்ந்து அணிந்துவந்தார். அப்போது ஒரு நிருபர், ``நீங்கள் வழுக்கையை மறைக்கத்தான் புஷ் குல்லா அணிகிறீர்களா?'' என்று கேட்டபோது, ``எனக்கு வழுக்கை இருந்தால், மக்கள் என்னை எம்.ஜி.ஆர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?'' என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கான பதிலை, அந்த நிருபர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றுவந்தபோது வெளியான புகைப்படங்களைப் பார்த்து மக்கள் அவருக்கு அமோகமாக ஓட்டளித்து வெற்றி பெறச்செய்தபோது புரிந்துகொண்டார். அவரது கதை கதாபத்திரம் மற்றும் கொடை உள்ளம் இவையே மக்களை மிகவும் கவர்ந்தன.
1936-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் `சதிலீலாவதி' என்ற படத்தில் நடித்தது முதல் 1969-ம் ஆண்டில் `அடிமைப்பெண்' வெளிவரும் வரை அவரைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, அவர் வயது என்ன என்பதைக் கணக்கிடத் தெரியாதா? அவருக்கும் அந்தந்த வயதுக்குரிய உடலியல் மாற்றங்கள் வரும் என்பது புரியாதா? இருந்தாலும் அவரை மக்கள் ரசித்து மகிழ்ந்ததற்குக் காரணம், அவரது கதையமைப்பும் அதற்கேற்ற கதாபாத்திரப் பொருத்தமும் இளமைத் தோற்றமும் அவரது சுறுசுறுப்பும்தான்.
பாடல் காட்சிகளில் அவர் சும்மா நின்றுகொண்டு பாட மாட்டார். அவரிடம் ஒரு துள்ளலும் உற்சாகமும் ததும்பிக்கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் `வேட்டைக்காரன்' பட விமர்சனத்தில் `கால்களில் சக்கரம் கட்டியிருக்கிறாரோ!' எனக் கேட்டிருந்தது. ஆக, `அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் புஷ் குல்லா அணிந்திருந்தார்.
எம்.ஜி.ஆரின் கையில் ஒரு வாட்ச்
``நூறு முறையாவது `அடிமைப்பெண்' படத்தைப் பார்த்திருப்பேன்'' என்று கூறும் ஒரு ரசிகர், ஒருநாள் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் கைகுலுக்கி இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் ப்ரியர் அல்லர் வெறியர். எம்.ஜி.ஆர் கார் அங்கு இருந்து நகர்ந்த பிறகும் எம்.ஜி.ஆரைத் தொட்ட இன்பத்திலேயே திளைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் கார் சற்று தொலைவில் நின்றுவிட்டது. மீண்டும் எல்லோரும் கார் அருகில் ஓடினர். அவர் ஒரு வாட்சை நீட்டியபடி வெளியே எட்டிப்பார்த்தார். பிறகுதான் தெரிந்தது, இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்தபடி காருடன் சிறிது தூரம் ஓடியபோது, அவரது வாட்ச் கழன்று எம்.ஜி.ஆர் மடியில் விழுந்திருப்பது. ரசிகருக்கு இரட்டிப்பு சந்தோஷம். எம்.ஜி.ஆர் தொட்டுத் தந்த வாட்ச், இன்றும் அவருக்குப் பொக்கிஷமாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு அதுதான் பேச்சு.
கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே!
எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பாலைவனத்து ஒட்டகவாலாக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏராளமான ஒட்டகங்கள் இடம்பெறும் காட்சி ஒன்றில் நடிக்க பாலைவனத்துக்கு வந்த அவர்களுக்கு, தாகம் தீர்க்க எம்.ஜி.ஆர் கிரேடு கிரேடாக கோகோகோலா வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் மனமுவந்து `பெரியமனுஷன்யா அவரு' என்ற அர்த்தத்தில் `படா ஆத்மி’ எனப் புகழ்ந்தனர். படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் வந்த எம்.ஜி.ஆர்., அங்கு நடந்த விபத்துக்கான நிவாரண உதவியாக பெருந்தொகை ஒன்றை முதலமைச்சரிடம் கொடுத்து உதவியிருக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. எங்கு இருந்தாலும் மலர் மணக்கும் என்பதில் ஆச்சர்யமில்லையே! இந்தப் பாலைவனப் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவால் மண்ணில் கால் புதைந்து நடக்க இயலவில்லை என்பதால், எம்.ஜி.ஆர் அவரை குழந்தைபோல தூக்கிக்கொண்டு சென்றாராம். உதவி என்பது, பணத்தால் மட்டுமல்ல... நல்ல மனத்தாலும் நடக்கும்.
நிலைத்து நிற்கும் பாத்திரப் படைப்பு
சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு விவசாயி, தன்னிடம் உழவு மாடு இல்லாத காரணத்தால் தன் மகள்களை ஏரில் பூட்டி, தன் நிலத்தை உழும் செய்தியைப் படித்தோம். பலர் வருத்தப்பட்டனர். இதே நிலைதான் `அடிமைப்பெண்' படத்தில் வரும் பெண்களுக்கும். அவர்கள் வண்டி இழுக்க வேண்டும், ஏர் உழ வேண்டும், செக்கு இழுக்க வேண்டும். இவர்களை சூரக்காட்டு மன்னனிடமிருந்து வேங்கையன் (எம்.ஜி.ஆர்) காப்பாற்ற வேண்டும். `இது ஏதோ ராஜா காலத்துக் கதை. இதெல்லாம் இன்றைக்கு சரிவராது' என நினைத்து ஒதுக்க முடியாது. எம்.ஜி.ஆரின் படங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதால்தான், அவை இன்றும் இளைய சமுதாயத்தினராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன; வரவேற்பு பெறுகின்றன.
ஹீரோ-வை உருவாக்கும் ஜீவா
கிராமங்களில் கட்டுக்கடங்காத காளிபோல திரியும் ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால், `ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் சரியாகிவிடும்' என்பார்கள். அதாவது ஒரு பெண் அவன் வாழ்க்கையில் வந்து அவள் அவனைத் திருத்தி குடும்பப் பொறுப்புள்ளவனாக்கிவிடுவாள் என்பது நம்பிக்கை. இதுதான் ஜீவாவின் பாத்திரப்படைப்பு. மனித சஞ்சாரமற்ற தனிச்சிறையில் அடைந்து கிடந்த ஒருவனை, ஜீவாவின் கையில் ஒப்படைத்துவிட்டு அவளது தாத்தா இறந்துவிடுகிறார். அவள் அவனுக்கு நாகரிகம், பண்பாடு, பாதுகாப்புக் கலைகள், தன் வரலாறு என அனைத்தும் சொல்லிக்கொடுத்து மாவீரனாக உருவாக்குகிறாள். அவனும் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்றுகிறான். இது அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதால், இந்தக் கதாபாத்திரத்தை பெண்களும் ஆண்களும் ஏற்றுக்கொள்கின்றனர். திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., ஜீவாவிடம் முத்தம் கேட்கும் காட்சியில் வைத்தியர் (சந்திரபாபு) ஜீவாவிடம் `இவன், உன்னிடம் தவறாக நடந்துகொள்ளப்போகிறான்' என்று எச்சரிக்கிறார். அப்போது திடீரென எங்கள் பின் சீட்டில் இருந்த ஒருவர் ``அதெல்லாம் சிவாஜி படத்தில்தான் நடக்கும்'' என்றார். ஒரு விநாடி பயங்கர அமைதி. அவர் அதுவரை வசனங்களை எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வந்தவர், இப்படி ஒரு கமென்ட் அடித்தார்.
தாயின் வைராக்கியம்
வயதான மரத்தை வைரம் பாய்ந்த மரம் என்பர். அதுபோல வயதானவர்களும் வைராக்கியம் படைத்தவர்களாக இருப்பது வழக்கம். `அடிமைப்பெண்' படத்தில் வரும் ராஜமாதா (பண்டரிபாய்) தன் குடிமக்களை அடிமைப் பிடியிலிருந்து காப்பதுதான் தன் முதல் கடமை என்று நம்பியதால், அவர் தன் மகன் விடுதலை அடையாத நிலையிலும் ஓர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். எனவே, தன்னைக் காண வந்த மகனிடம் `என் முகத்தில் விழிக்காதே! நம் குலப்பெண்கள் அனைவரது காலிலும் உள்ள விலங்குகளை அகற்றிவிட்டு, பிறகு என்னிடம் வா'' என்று இரக்கமே இல்லாமல் அனுப்பிவிடுகிறார். இந்த வைராக்கியம் வேங்கையனுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது. அப்போது அவர் பாடும் பாடல் மனிதத் தாயைப் பாடுவதாக இல்லாமல் அன்னை பராசக்தியையே எண்ணிப் பாடுவதுபோல அமைந்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.மு.க-காரர்கள் பலரது போனிலும் இந்தப் பாடலே (தாயில்லாமல் நானில்லை) காலர் ட்யூனாக இருந்ததை நாடறியும்.
சூரக்காடு ஏன்?
எம்.ஜி.ஆரின் சினிமா ரசிகர்கள் தம் எதிரியாகக் கருதிய சிவாஜி, சூரக்கோட்டையின் சொந்தக்காரர். ஆக, சூரக்கோட்டை இந்தப் படத்தில் `சூரக்காடு' என்றாயிற்று. கோட்டை என்றால், அவனை மன்னனாகக் காட்ட வேண்டும். இவன் மன்னன் அல்ல, மனிதப்பண்பு சிறிதும் இல்லாத காட்டான். அதனால்தான் அந்த நாட்டுக்கு பெயர் `சூரக்காடு'. இப்போது ரசிகர்களும் திருப்தி அடைவார்கள். படங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பெயர் சூட்டுவதில் எம்.ஜி.ஆர் காட்டும் அளவுக்கு வேறு யாராவது அக்கறையும் கவனமும் காட்டியிருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.
ஜீவா – காதலின் கௌரவம்
எம்.ஜி.ஆர்., படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகி வந்த நேரம் அவருடன் சில படங்களில் நடித்து வந்த (கதாநாயகியாக அல்ல) ஒரு நடிகைக்கு, இவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர்., காதலில் ஈடுபட்டு திரை வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த நடிகை, எம்.ஜி.ஆருக்கு வெண்மை நிறம் பிடிக்கும் என்பதால் இரவில் வெள்ளை உடையில் இவர் இருந்த அறையின் கதவை வந்து தட்டினார். நல்ல பாடகியான அவர், நடத்தும் கச்சேரிகளுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர் முதல் வரிசையில் போய் அமர்ந்து ரசிப்பாராம். ஆனால், காதல் என்றவுடன் காத தூரம் ஓட ஆரம்பித்தார். பாவம் அவர் சூழ்நிலை அப்படி. அவர் அம்மாவிடம் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போய் நிற்க இயலாது. அவரால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அவர் வெற்று ஆசையை வளர்த்துக்கொள்ளவில்லை. பிறகு திரையுலகில் எம்.ஜி.ஆர் நல்ல நிலைக்கு வந்து சொந்தமாகப் படம் எடுத்தபோது, அந்தப் பாடகி நடிகையின் செல்லப்பெயர்களை, தான் திருமணம் செய்யும் கதாநாயகிகளுக்கு வைத்து அந்தக் காதலை கௌரவித்தார். `நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவி, `அடிமைப்பெண்'ணில் ஜெயலலிதா, `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலா ஆகியோருக்கு அந்தப் பெண்ணின் பெயர்தான் சூட்டப்பட்டது.
குழந்தைகள், ரசிகரான கதை
எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் சிறுவர்களுக்கு, அவை நல்ல போதனைகளாக இருந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர வேண்டும் என்ற தீவிர எண்ணத்தையும் அந்தப் படங்கள் ஏற்படுத்தின. மற்ற தமிழ் திரைப்படங்களில்கூட சிறுவர்களைக் காட்டும்போது, அவர்கள் எம்.ஜி.ஆர் படப் பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும். இதுவும் ஒரு தொழில் உத்தி. அடுத்த தலைமுறையை தனக்கு ரசிகராகத் தயார்படுத்தும் சிறப்பான உத்தி. நடிகரும் பத்திரிகையாளருமான சோ, தன் துக்ளக் பத்திரிகையில் எம்.ஜி.ஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார். அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார். அவனை அழைத்து `என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `எம்.ஜி.ஆரை கும்பிட்டால் நல்லா படிப்பு வரும். அதனால கும்பிட்டுட்டுப் போறேன்' என்றானாம். இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதைத்தான் சொல்வான். அவர்களும் `என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர் மீதான அன்பு பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் என்ற மனிதர் மாமனிதராகி இப்போது தெய்வமாகிவிட்டார்.
`அடிமைப்பெண்' படத்தில் குழந்தைகள் முதலில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து படிப்பார்கள். பிறகு `காலத்தை வென்றவன் நீ...' பாடலில் அவரிடம் கொஞ்சிக் குலவுவார்கள். அவரோடு பேபி ராணிவும் இன்னொரு சிறுவனும் இருக்கும் கட் அவுட்டில் இவர்களுக்கு பதில் அஜித்தின் பிள்ளைகளை இணைத்திருந்தார்கள். மினிப்பிரியா தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அந்தக் கட் அவுட்டைப் பார்த்து பலரும் அஜித் ரசிகர்களின் விவேகத்தைப் பாராட்டினர். `அடிமைப்பெண்' படத்தின் பிற்பகுதியில் பெரியவர்கள் எல்லோரும் தவறான கருத்துடன் எம்.ஜி.ஆரிடம் விரோதப் போக்கைக் காண்பிக்கும்போது, சிறுவர்கள் மட்டும் அவரிடம் ஓடிவந்து `மாமா... மாமா' என்று அழைத்து அன்பு மழை பொழிவார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பதை நிரூபிக்கும் காட்சி இது.
இந்தப் படத்தில் பேபி ராணி முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிப் பிள்ளையாகக் காட்டப்பட்டிப்பார். ஜீவாவுக்குப் பதில் பவளவல்லி வந்திருப்பதை அவள் காலில் இருக்கும் ஆறாவது விரலை வைத்து இந்தப் பாப்பா கண்டுபிடித்துவிடும் . அதை வைத்தியரிடம் வந்து கேட்கும்போது, அவர் தூக்கக்கலக்கத்தில் பதில் சொல்லும்போது `பட் பட்' என்று அவர் கன்னத்தில் அடிக்கும். படம் பார்க்கும் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சிரித்து ரசித்துப் பார்க்கும் காட்சி இது. கடைசிப் பாடல் காட்சியில் பிள்ளைகளும் தங்களை அந்த விடுதலைப் போரில் இணைத்துக்கொள்வர். `உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...' என்ற பாடல் காட்சியில் சிறுவர்களும் பங்கேற்றிருப்பது இந்த நாட்டின் நன்மையில் அவர்களுக்கும் நேரடி பங்கு இருப்பதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகிறது.
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யார்?
எம்.ஜி.ஆருக்கு வயதானவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிகர்கள்தான். அவரது படம், இவர்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது.
கட்சிக் கொள்கை
எம்.ஜி.ஆர்., பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர். அவர் தன் படத்தில் தன் கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகள் இடம்பெறுவதை கட்டாயம் ஆக்கியிருந்தார். அதனால்தான் முக்கியமான தத்துவப் பாடலை தனிப்பாடலை அவர் பாடும்போது தன் கறுப்புச் சட்டை கட்சியைச் சேர்ந்தவன் என்பதை நேரடியாக உணர்த்துவதற்காக அவர் கறுப்புச் சட்டை அணிந்து நடிப்பார். கலர் படமாக இருந்தாலும் அவர் கறுப்புச் சட்டை அணிந்திருப்பார். `எங்க வீட்டுப் பிள்ளை'யில் `நான் ஆணையிட்டால்...' பாடல், `சந்திரோதயம்' படத்தில் `புத்தன், இயேசு, காந்தி பிறந்தது...' போன்ற பாடல் காட்சிகளில் அவர் கறுப்புச் சட்டை போட்டிருப்பதைச் சான்றாகக் கூறலாம்.
`அடிமைப்பெண்' படத்தில். பேய், பிசாசு, மாந்திரீகம் என்பவையெல்லாம் வெறும் பொய் பித்தலாட்டம் எனக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த விஷயத்தை வேடிக்கையாக நகைச்சுவையாகக் காட்டியிருப்பார். அம்முக்குட்டி புஷ்பமாலா வைத்தியராக இருந்து இப்போது மந்திரவாதியாக மாறி வந்திருக்கும் சந்திரபாபுவை மிரட்டுவதற்காக மண்டையோட்டை பறக்கவிடுவார். பிறகு தானே எலும்புக்கூடு உடையைப் போத்திக்கொண்டு எலும்புக்கூடு நடந்து வருவதுபோல் காட்டி அவரை பயமுறுத்துவார். பிறகு ``இதெல்லாம் பொய். இங்கே பார் மண்டையோட்டுக்குள் புறாவை அழுத்தி வைத்திருக்கிறேன். அதனால் அது அசைகிறது’’ என்பார். படம் பார்க்கும் பிள்ளைகள் சிரித்து மகிழ்வார்கள். சிரிப்புடன் சிந்தனையையும் ஊட்டும் காட்சிகள் இவை.......... Srinivasan
-
(கக்கன் பெயரில் யார் வந்தாலும் இலவச மருத்துவம் செய்ய உத்தரவிட்ட ஒப்பற்ற தலைவர்)
1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள்.
முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட
வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித்
தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம்
விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது
குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம்
கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார்அந்தப் பெண்மணி.
வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு
கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி
பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி
நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில்
அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார்.அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு,
பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை
அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு
வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும்
நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.
அ ந்தப் பெண்மணி… பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த
தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி
என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன்.
சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில்
பணியாற்றியவர்.
அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர்
என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக
வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்
வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத
துரதிர்ஷ்டவசமானநிலைமை.
பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்
அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம்
கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள்
வந்துவிட்டார்கள். ''வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து
வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம்
கேட்கிறார் கக்கனின் மனைவி.
கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று
நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு
சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு
நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக்
கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின்
குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத்
துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத் தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே
கட்டிவிட்டார். இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர்.
நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச்
செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாட
கையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர்.
கொடுத்த மரியாதை.
தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின்
தியாகத்துக்கு மரி யாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர்.
மறுநாளே உத்தரவு போட்டார்.
''முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின்
மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க
இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்குமாதம் 500
ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்'' என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட
உத்தரவு.
அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப்
பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த
திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.
எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை சென்றார். உடல் நலம் சரியில்லாமல் அரசு
மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது கட்சிக்காரர்
ஒருவரை பார்ப்பதற்காக அங்கு செல்கிறார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு
புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு தியாகி
கக்கனும் இங்கே சிகிச்சை பெற்றுவருகிறார்என்று அவருடன் இருந்தவர்கள்
தெரிவித்தனர். உடனே, எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. ''இதை ஏன் முதலிலேயே
தெரிவிக்கவில்லை?'' என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில்
சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து அவரை காணச் சென்றார்.
அங்கு சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும்
எம்.ஜி.ஆருக்கு கண்கள் கலங்கின. மருத்துவமனையில்தனக்கு தெரி விக்காமல்
சேர்ந்தது பற்றி கக்கனிடம் அன்புடன் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு,
மருத்துவர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும்
உத்தரவிட்டார்.
கக்கனின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும் பத்தினருக்கு இலவச வீடு, அரசு
உதவித் தொகை, வைத்திய வசதிகள் கிடைக்கும்படி செய்தார்.
தியாகி கக்கனுக்கு செய்த உதவிக்காக முதல்வர் எம்.ஜி.ஆரை கட்சி வேறுபாடு
இல்லாமல் எல்லா தரப்பினரும் பாராட்டினர். .
கவியரசு கண்ணதாசன் தெரிவித்த பாராட்டு சற்று வித்தியாசமானது,உண்மையும்
கூட. அவர் சொன்னார்… ''கக்கனைப் போன்ற உண்மை யான தியாகிகளுக்கு உதவி
செய்யும் எம்.ஜி.ஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.''.........Pngu
-
எல்லோருக்கும் உதவுவதால் எம் ஜி ஆர் கடவுள் தான்..
டாக்டர் உதயமூர்த்தி எழுதிய அமேரிக்காவில் எம் ஜி ஆர் என்ற நூலில் இருந்து..
அமேரிக்கா பல்கலை கழகங்களின் அழைப்பை ஏற்று சுற்று பயணத்தை முடித்து விட்டு வாஷிங்டன் விமானநிலையத்தில் தன் அமேரிக்கா நண்பர்களுடன் நூழைகிறார் எம் ஜி ஆர் சிறிது நடந்த எம் ஜி ஆர் கண்கள் ஓரமாக நின்று சிறுகுழந்தையோடு ஒரு ஆங்கிலபெண்மணி அழுதுகொண்டிருப்பதை. கவனிக்கிறது உடனே அவர் அருகே சென்று ஆங்கிலத்தில் ஏன் அழுகிறாய் என எம் ஜி ஆர் கேட்கிறார் அமேரிக்காவை பொறுத்தவரை அதிகம் எவரும் அடுத்தவர் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை
எம் ஜி ஆர் கேட்ட உடன் அந்த பெண் தான் தன் கணவரை காண வந்ததாகவும் அவர் இங்கு ராணுவத்தில் பணி செய்வதாகவும் தான் நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததாகவும் இங்கு வைத்து தன் பை திருடபட்டதாகவும் தன் முக்கிய ஆவணம் பணம் எல்லாம் அதில் உள்ளது அதனால் என்ன செய்வது என்று புரியாமல் அழுவதாகவும் கூற உடனே எம் ஜி ஆர் தன் கூடவந்த செல்வாக்கு மிக்க ஒரு நண்பரை அழைத்து நீங்கள் இந்த பெண்ணிற்க்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள் சிலவிற்க்கு பணமும் கொடுங்கள் நான் ஊர் சென்று அனுப்புகிறேன் என கூறிவிட்டு அந்த பெண்ணிடம் கவலை படாதீர்கள் இவர் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவியும் செய்வார் என கூறி விடை பெற்று விமானம் நோக்கி செல்கிறார் எம் ஜி ஆர்
இதை கவனித்து கொண்டிருந்த என் மனம் என்னை அறியாமல் பொன்னின் நிறம் பிள்ளை மனம்வள்ளல் குணம் யாரோ என்ற பாடலை நினைத்தது
உண்மை நண்பர்களே கடவுள் ஒருவரே யார் என்று பாராமல் உதவுபவர் அதனால் யார் என்று பாராமல் எல்லோர்க்கும் உதவும் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் ஒரு கடவுளே
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...........Raja Erd
-
மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ஒரு சமயம் மழை சரியாக பெய்யாமல் பெரிய வறட்சியாக இருந்தது.
காஞ்சி மகாபெரியவர் தமிழ்நாட்டில் இருந்து பாத யாத்திரையாகச் சென்று மற்ற மாநிலங்களில் நீண்ட காலமாகத் தங்கியிருந்தார். மகாபெரியவரை மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தால் மழை செழிப்பாகப் பெய்யும். வறட்சி நீங்கும் என்று எம்ஜிஆரிடம் பலர் ஆலோசனை கூறினர்.
அவரும் மகாபெரியவரிடம் தமிழ்நாட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டார். மகாபெரியவரும் அதை ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டு எல்லையில் வேலூரில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரிக் ஷாவைப் கையால் பிடித்துக் கொண்டு எப்போதும் போல் மகாபெரியவர் வேகம் வேகமாக நடந்து வந்தார். அதைக் கண்ட
ஆர்.எம்.வீரப்பன் கண்களில் கண்ணீர் தாரையாக வழிந்தது. அப்போது அவர் அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார்.
நாத்திகவாதியாக இருந்த அவர் ஒரு க்ஷணத்தில் instantaneous ஆக ஆத்திகவாதியாக மாறினார்.
வரவேற்பு நிகழ்சியில் ஆர்எம்வீரப்பன் பேசினார். இதற்கு முன்பு என்னிடம் யாராவது கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லியிருப்பேன். ஆனால் இனிமேல் என்னிடம் அதே கேள்வியைக் கேட்டால் பார்த்து விட்டேன் என்றுதான் சொல்வேன் என்று அவர் பேசினார்.
நங்கநல்லூர் ராமமந்திரம் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ மகாபெரியவா மகோத்ஸவத்தில் சிறப்புரை ஆற்றியபோது பிரபல நாட்டிய கலைஞர் பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் தான் நேரில் கண்ட இந்த தகவலைத் தெரிவித்தார்.
ஹரிஹரசுப்பிரமணியன்
வெங்கடசுப்பிரமணியன்
-
1972-ல் அ.தி.மு.க. துவக்கப்பட்டபோது அதற்கு அடித்தளமாக இருந்தவர்கள் அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் தான். அ.தி.மு.க. என்ற பெயரையே உருவாக்கி மக்கள் திலகத்திடம் வழங்கியதும் ஒரு தொண்டர்தான். அ.தி.மு.க. உருவாவதற்கு முன்பே கழகக் கொடியை முதலில் உருவாக்கி ஏற்றி பெருமைப்பட்டவர்களும் தொண்டர்கள்தான்.
திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று தந்து இரட்டை இலைச் சின்னத்தை வெற்றி சின்னமாக்கியவர்களும் அ.தி.மு.க.தொண்டர்கள்தான்.
இதை மனதில் வைத்தோ என்னவோ எம்.ஜி.ஆர். ஒரு கூட்டத்தில் மேடையிலிருந்த தலைவர்களை கைநீட்டி சுட்டிக்காட்டி; இவர்களைவிட எதிரில் இருக்கும் தொண்டர்கள்தான் எனக்கு முக்கியம் என்று வெளிப்படையாகச் சொன்னார்.
தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு பாரபட்சமில்லாமல் முழுக்க நம்பிக்கையுடன் தன்னை உயர்த்திய தொண்டர்களுக்கு அவர் எப்பொழுதுமே முதல் மரியாதை கொடுத்து வந்தார்.
கடைசிக் காலக் கட்டத்தில் மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். மாநாட்டில் கூட தொண்டர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற கவனத்தோடு அவர் பேசிய பேச்சு சர்ச்சையை உருவாக்கியது என்றாலும், அந்தளவுக்குத் தொண்டர்கள்மேல் பரிவுடன் இருந்தார் மக்கள் திலகம்.
அதே மாநாட்டில் அவருக்கு வெள்ளிச் செங்கோலை வழங்கியதும்கூட கழகத்தின் முன்னணி தொண்டர் ஒருவர்தான்.
இந்தளவுக்கு தொண்டர்கள்மேல் புரட்சித் தலைவர் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும்தான் அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் அடிப்படை....
-
#தமிழ்_என்னை_வளர்த்தது- #எம்ஜிஆர்.
ஒவ்வொருவருக்கும் அவரது தாயின் மொழியே அவருக்கும் உரிமையான மொழியாகும். எனது தாய் கேரளத்தைச் சேர்ந்தவர். அவர் பேசிய மொழி மலையாளம். அப்படியானால் நான் பேசவேண்டிய மொழியும் அந்த மலையாள மொழியாகத்தான் இருக்க வேண்டும்? என்னை பொறுத்தவரை ஒரு விசித்திரமான நிலைமை. எனது காதுகள் புரிந்து கொள்ளும் சக்தியைப் பெற்றபோது கேட்ட ஒலி தமிழின் ஒலி ஆகும். என் கண்கள் முதன் முதலில் பார்க்கவும், படிக்கவும் வாய்த்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே.
என்னை சுற்றியிருந்த பழக்க வழக்கங்கள் எனக்கு சொன்னவை எல்லாம் தமிழ் பண்பாட்டின் நிழல் ஆட்டங்களைத் தான். பண்பாட்டு தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் இப்படி எங்கு பார்த்தாலும், கேட்டாலும், படித்தாலும், பேசினாலும் தமிழ்தான். வாழும் முறையில் கூட தமிழ், தமிழ் என்ற நிலைமைக்குள், வட்டத்துக்குள், முட்டைக்குள் குஞ்சாக இருந்தேன்.
வெளியில் வந்த பிறகும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று இருக்கிற நிலையில் தான் வளர்ந்தேன். இத்தகைய சூழலில் நான் எப்படி வளர்ந்து இருப்பேன் என்று சொல்லிக் கொள்ளத்தான் வேண்டுமா?
நான் தமிழ் பாடல்களை கேட்டு மனம் பூரித்து அந்த கவிதை நயத்தை பற்றி திறனாய்வு செய்து மகிழ்வேன். ஆனால் மலையாள மொழியில் பாண்டித்தியம் (புலமை) இல்லை.
("எம்.ஜி.ஆர். எழுத்தும், பேச்சும்" என்ற நூலில் குமாரவேல்)
கோவை எம்.எஸ்.சேகர் எழுதி #இதயக்கனி பிப்ரவரி 2021 இதழில்
இடம் பெற்றது.............vrh
-
M.g.r.தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்பதோடு, மிகுந்த தமிழ்ப் பற்றும் கொண்டவர். தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும்தான் என்பதை பெருமிதத்தோடு சொல்வார். தமிழுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் நிலைத்து நிற்க வழி செய்தார்!
1974-ம் ஆண்டு பிப்ரவரியில் பாண்டிச்சேரியில் சட்டப் பேரவைக்கும் நாடாளு மன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றார். மாஹே என்ற இடத்தில் பிரசாரக் கூட்டம். அந்தப் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம். மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கினார். அவரது பேச்சை இடைமறித்து, மலையாளத்தில் பேசு மாறு கூட்டத்தில் இருந்த பெரும்பாலோர் கேட்டுக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு வந்ததே கோபம்!
‘‘எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி தமிழ் மட்டும்தான். சிறுவயதில் நாடக மேடை மூலம் தமிழ் கற்றுக் கொண்டேன். வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் தமிழில்தான் பேசுவேன். நான் வளர்ந்து, புகழ்பெற்று, இன்று உங்கள் முன் நிற்பதற்கு என்னை அரவணைத்து ஆளாக்கிய தமிழகம் தான் காரணம். எனவே, தமிழில்தான் பேசுவேன். விருப்பம் உள்ளவர்கள் என் பேச்சைக் கேட்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் இங்கிருந்து சென்று விடலாம்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளினார். பின்னர், வாய் திறக்காத கூட்டத்தினர் அவரது தமிழ் உணர்வைக் கண்டு வியந்தனர்.
இந்தத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்... பாண்டிச்சேரி சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 30 தொகுதி களில் அதிமுக 12 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஸ்தாபன காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக 2 தொகுதிகளில் வென்றது. பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் பாலா பழனூர் வெற்றி பெற்றார்.
புதுவை முதல்வராக அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்தாலும், தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி அகில இந்திய அளவில் பேசப்பட்டது. அந்த சமயத் தில் கோவை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செ.அரங்கநாயகம் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுகவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.
தமிழுக்கு தொண்டாற்றி ‘முத்தமிழ் காவலர்’ என்று போற்றப்பட்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். நீதிக்கட்சியிலும் பணியாற்றியுள்ளார். நீதிக்கட்சியின் சார்பில் பனகல் அரசர் சர்.ராமராய நிங்கார் 1921-ம் ஆண்டு முதல் 1926-ம் ஆண்டுவரை சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்தார். அப்போதெல்லாம், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்றால் அந்த மாணவன் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.
பனகல் அரசரை கி.ஆ.பெ. விசுவ நாதம் சந்தித்து, ‘‘ஆங்கிலமும் தமிழும் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தரவேண்டும்’’ என்று வலியுறுத்தி வெற்றி பெற்றார். அதன் பின்னர்தான், பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் மருத்துவக் கல்லூரி வாயிலை மிதிக்க முடிந்தது. பனகல் அரசர் நினைவாகத்தான் சென்னை சைதாப்பேட்டையில் ‘பனகல் மாளிகை’யும் தியாகராய நகரில் ‘பனகல் பூங்கா’வும் அமைந்துள்ளன.
கி.ஆ.பெ. விசுவநாதத்துக்கு தமிழுக்கு என்று ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று விருப் பம். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது அவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். உடனடியாக அதற்கு எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். கி.ஆ.பெ.விசுவநாதத் தையே அதற்கான திட்டங்களை தயாரிக் கும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்ட தோடு, ஒரு குழுவையும் அமைத்து அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தார். அப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப் டம்பர் 15-ம் தேதி உருவாக்கப் பட்டதுதான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.
தமிழறிஞர் டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு உண்டு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் அண்ணன் சதாவதானி தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். ஒரே நேரத்தில் நூறு செயல்களை கவனித்து, நினைவில் நிறுத்தி பின்னர், அவற்றை சரியாக வெளிப்படுத்துபவர்களை ‘சதாவதானி’ என்று போற்றுவர். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவர் கிருஷ்ணசாமி பாவலர். அவர் எழுதிய ‘கதர் பக்தி’, ‘நாகபுரி கொடிப்போர்’ உள்ளிட்ட தேசிய மற்றும் சமூக சீர்த்திருத்த நாடகங்களில் சிறுவயதில் நாடக மேடைகளில் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.
அவரது சகோதரரான தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக் குப் பிறகு அவரது திருவுருவச் சிலையை, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். மதுரை பல்கலைக்கழகத்துக்கு 1978-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியதும் எம்.ஜி.ஆர்.தான்!
தனது இறுதிமூச்சு வரை தமிழுக் காகவே முழங்கியவர் தேவநேயப் பாவாணர். அவருக்கு எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு உண்டு. 1981-ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தமிழுக்கு எம்.ஜி.ஆர். சிறப்பு சேர்த்தார். மாநாட்டில் பாவாணரின் பேச்சை எம்.ஜி.ஆர். ஆர்வமுடன் கேட்டார். தேவநேயப் பாவாணர் தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்.
உலகில் உள்ள எத்தனை மொழி களுக்கு தமிழ் மூலமொழியாக விளங்குகிறது என்பதையும் எத்தனை மொழிச் சொற்களுக்கு தமிழே வேர்ச் சொல்லாக விளங்குகிறது என் பதையும் ஆதாரபூர்வமான கருத்துக் களுடன் பாவாணர் சுவைபடப் பேசிக் கொண்டே போனார். சாப்பாட்டு நேரமும் கடந்துவிட்டது. சாப்பாட்டையும் மறந்து அவரது பேச்சை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார். கூட்டமும் ஆர்ப்பரித்தது. ஒருமணி நேரத்துக்கும் மேல் பாவாணரின் சொல்மாரி தொடர்ந்தது.
அன்றைய தினமே எதிர்பாராத அந்த சோகமும் நடந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதுரை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சில நாட் களில் நோயின் தாக்கத்தால் தமிழின் மேன்மைக்காக ஒலித்த அவரது பேச்சு மட்டுமல்ல; மூச்சும் அடங்கியது. இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. தேவநேயப் பாவாணரின் பெயர் நிலைத்து நிற்கும் வகையில் மாவட்ட நூலகங்களுக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.
‘‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’’ என்று முழங்கியவர் புரட்சிக் கவிஞர்!
அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் புரட்சித் தலைவர்!...vrh
-
கண்ணதாசனின் கருத்து
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.
“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”
இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.
‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.
1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.
தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.
Advertisement
report this ad
அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.
இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?
சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.
செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.
1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.
பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.
கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.
இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.
ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.
இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.
மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.
திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.
இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!
வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.
ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.
காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.
(இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)
இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.
இப்படக் கதை செல்லும்.
பொம்மியாக நடிப்பின் இலக்கணமாம் பி. பானுமதியும், நாரசப்பனாக நடிப்பின் நாயகன் டி.எஆ. பாலையாவும் நடித்தார்கள்.
மதுரை மன்னனாகோ.ஏ.கே தேவரும்; அரண்மனை நாட்டியக்காரியாக நாட்டியப் பேரொளி பத்மினியும் நடித்திருந்தனர்.
சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோபித்த வெற்றியைத் தேடித்தந்ததற்குக் காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும்; கருத்தைக் கவரும் வசனங்களுமே எனலாம்.
தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமையாக உயர்த்திக் காட்டி, தமிழ்த்திரையுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியமே மதுரைவீரன் எனலாம்.
இப்படத்தில், புரட்சிநடிகரின் இயற்கையான நடிப்பிற்கு உலக அளவில் பெரும் பாராட்டுகள் கிட்டின என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது.
அந்த அளவிற்குக் கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.
படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!
வாருங்கள்!
(பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)
நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.
மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?
நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.
மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?
வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.
வீரன்: இல்லை!
சொக்கன்: எப்படி?
வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது நரசப்பன் வாதம்!
வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!
நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…
வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!
{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}
இப்படியே நீளும் வாதங்களின் முடிவில்….
நரசப்பன்: தீச்செயல் பல செய்த இவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம்! ஆனாலும், போகட்டும் ஆயுள்தண்டனை விதியுங்கள்!
சொக்கன்: ஆம். ஆயுள் தண்டனை! அதிலிருந்து தப்ப முடியாது. இன்றுமுதல் பொம்மியின் மனச்சிறையில் ஆயுள் முழுவதும் கிடந்து சாவாயாக! அதோடு நமது தளபதியும் ஆவாயாக.
நரசப்பன்: அரசே!
சொக்கன்: போவாயாக.
(இந்த வசனங்கள் வரும்போது, திரையரங்குகளில் எழுந்த சிரிப்பொலியும், கரவொலியும் அடேயப்பா! எத்துனை ஆரவாரமானது.)
பொம்மண்ணன்: மன்னா!
சொக்கன்: பொம்மண்ணா! கறந்த பால் மடி புகாது. இயற்கையாகக் கலந்துவிட்ட அவர்களை, இனிப் பிரித்தாலும் உமது மகள் கன்னித்தன்மை பெறமுடியாது.
பொம்மண்ணன்: ஆனாலும் அவன் கீழ்ச்சாதி.
சொக்கன்: சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி! அதை மாற்றிக் கொள்வதுதான் நீதி! காலம் மாறி வருகிறது! எல்லோரும் ஓரு குலமு என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறது. அதற்கு நாம் அச்சாரம் போடுகிறோம் இன்று! அந்தப் பெருமையில் நீரும் பங்கு கொள்ளும்.
{கேட்டீர்களா? சாதி எனும் தீயை அணைக்கத் தேன்தமிழில், நம் தீஞ்சுவைக் கவிஞர் தீட்டித் தந்த தெளிவான வசனங்களை…!}
இப்படியே நம் இதயங்களை ஈர்க்கும் வசனங்கையே பார்த்துச் சென்றால், மதுரைவீரன் வசனங்கள் மட்டுமே நூலை நிரப்பிவிடும். பின்னர், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் என்ற கருத்துகளைக் காண இயலாமல் போய்விடும்.
ஆதலால் மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குமறு தீர்ப்பளித்த திருமலை மன்னனை நோக்கி பொம்மியும், வெள்ளையம்மாளும் பேசுமாறு, கவியரசர் புவி புகழத் தீட்டிய வசனங்களின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஏனைய கருத்துகளைக் காண்போமே!
பொம்மி: நீதான் மதுரை மன்னனா? வா! ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய்? கொலை புரியும் காட்சியைக் கண்டுகளிக்க வந்தாயா? அக்கிரமத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட ஆனந்தத்திலே ஓடி வந்தாயா? தாவி வந்த குழந்தையின் கன்னத்தைக் கடித்தாயே! மனம் திறந்து உண்மையைக் கூறியும் கடும் தண்டனை விதித்தாயே! சாவு எப்படி இருக்கிறது என்று கார்க்க வேண்டுமா? பார்! பார்! பாவி பார்! கண்கெட்ட உன் ஆட்சியின் பெருமையைக் காப்பாற்ற ஓடுவந்த கால்களைப் பார். சுற்றி வரும் எதிரிகளை தூகாக்குவேன் என்று கத்தி எடுத்த கைகளைப் பார்! ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்த சுத்த வீரனைப் பார்! மாலையிட்ட மணவாளன் அங்கே! ஆலையிட்ட கரும்பாக அவதிப்படும் நான் இங்கே! நீதி எங்கே? நியாயம் எங்கே? நாடு ஆளும் மன்னவனா நீ? நடுநிசியில் கொலை புரியும் கள்ளனுக்கும், உனக்கும் என்ன பேதம்? போ! போய்விடு.
திருமலை மன்னன்: ஐயோ! தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்! எல்லாம் அவன் செயல்!
வெள்ளையம்மாள்: அழு! நன்றாக அழு! தொண்டை அடைத்துப் போகும் அளவுக்கு அழு! ஆற்றாது அலறும் இந்த அபலைப் பெண்கள் தனியாகவே அழுவது? நீயும் கூட, சேர்ந்து அழு! அநியாயத்தின் உருவமே! சாகப்போகும் போதாவது உன் கண்கள் திறந்தன. அந்தக் கண்களிலே ஒளியிருக்கிறதா? இருந்தால் பார்! தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!
அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?
‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்ததும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!
திருமலை மன்னன்: இல்லை! பிறழாத நீதி பிறழ்ந்தது! வளையாத செங்கோல் வளைந்தது! என்னைக் கெடுத்துவிட்டார்கள் சண்டாளர்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!
வெள்ளையம்மாள்: மன்னிப்பு! வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ!
பார்த்தீர்களா! படித்தீர்களா?
நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!
இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?
இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.
மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே....dvr
-
#இதுதான் #மாஸ்
பல வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம்...
"கொழும்புவில் உள்ள ஆங்கிலப்படம் மட்டுமே காட்டப்படும் அரங்கில் ஒரு பிரபலமான ஆங்கிலப்படம் திரையிடப்படுகிறது...
இடைவேளையில் ஒரு படத்தின் ட்ரைலர் காட்டப்படுகிறது...
திரையில் தெரிவது.. #ஸ்கூட்டரின் #ஆக்சிலேட்டரை #முறுக்கும் #ஒரு #கரம் #மட்டுமே...
அந்த சில நொடிக் காட்சிக்காக...
அப்போதே ரசிகர்களின் #கரஒலியும், #விசிலும் காதைக் கிழித்தன...
காட்டப்பட்ட பொற்கரம் வாத்தியாருடையது..(இதிலென்ன ஆச்சரியம்ங்கறீங்களா ???)
வாத்தியார் சீனுக்கு கரகோஷங்கள் ஒன்றும் புதிதில்ல. இருப்பினும்,
இதில் வியப்பென்னவென்றால், கரகோஷம் எழுப்பிய அனைவருமே "#சிங்களர்கள்..."!!!...bsm...
-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*
ஒளிபரப்பாகிய பட்டியல்* (11/01/21* முதல்* 20/01/21* வரை )
----------------------------------------------------------------------------------------------------------------------------------
11/01/21 -சன் லைப் - காலை 11 மணி - இதயக்கனி*
* * * * * * * ராஜ் -பிற்பகல் 1.30 மணி -அலிபாபாவும் 40 திருடர்களும்*
* * * * * * *பாலிமர் -பிற்பகல் 2 மணி -சக்கரவர்த்தி திருமகள்*
* * * * * * * பெப்பேர்ஸ் -பிற்பகல் 2.30மணி- தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * முரசு டிவி -பிற்பகல் 3.30 மணி -கொடுத்து வைத்தவள்*
12/01/21-ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - மதுரை வீரன்*
* * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - திருடாதே*
* * * * * சன் லைப் - மாலை 4 மணி - எங்க வீட்டு பிள்ளை*
* * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி - ஆனந்த ஜோதி*
13/01/21- சன் லைஃ - காலை 11 மணி - நல்ல நேரம்*
* * * * * * * ராஜ் டிவி - பிற்பகல்* .1.30 மணி - நல்ல நேரம்*
* * * * * * பெப்பெர்ஸ் -பிற்பகல் 2.30 மணி - முகராசி*
* * * * * * *சன்* லைப்-* மாலை 4 மணி - சந்திரோதயம்*
* * * * * * புது யுகம் - இரவு 7 மணி - என் கடமை*
15/01/21- சன் லைப் - காலை 11 மணி -நினைத்ததை முடிப்பவன்*
* * * * * * * முரசு -மதியம் 12மணி/இரவு 7 மணி -ஆனந்த ஜோதி*
* * * * * * *மீனாட்சி - மதியம் 12 மணி -விவசாயி*
* * * * * * *மீனாட்சி - இரவு 9 மணி - வேட்டைக்காரன்*
16/01/21-பாலிமர் - இரவு 11 மணி -நீதிக்கு பின் பாசம்*
17/01/21- ஜெயா மூவிஸ் -காலை 7 மணி -ஒரு தாய் மக்கள்*
* * * * * * * *ஜெயா மூவிஸ் -காலை 10 மணி - பணம் படைத்தவன்*
* * * * * * * சன் லைப் -காலை 11 மணி - என் கடமை*
* * * * * * * மெகா டிவி - மதியம் 12 மணி -குடியிருந்த கோயில்*
* * * * * * * மீனாட்சி -மதியம் 12 மணி -நல்ல நேரம்*
* * * * * * *டி. திரை எஸ்.சி.வி.-பிற்பகல் 12.30 மணி -எங்க வீட்டு பிள்ளை*
* * * * * * *ஜெயா டிவி -பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 2.30 மணி -உலகம் சுற்றும் வாலிபன்*
* * * * * *மெகா 24-பிற்பகல் 2.30 மணி -வேட்டைக்காரன்*
* * * * * *ஜெயா மூவிஸ் -மாலை 4மணி - பட்டிக்காட்டு பொன்னையா*
* * * * * * மெகா 24 -மாலை 6 மணி - நல்ல நேரம்*
* * * * * * டி.டி.வி. - மாலை 6 மணி - எங்க வீட்டு பிள்ளை*
* * * * * ஜெயா மூவிஸ் -இரவு 7 மணி- இதய வீணை*
* * * * *புது யுகம் டிவி- இரவு 7 மணி -* நல்ல நேரம்**
* * * * * டி.திரை எஸ்.சி.வி.-இரவு 8 மணி - அடிமைப்பெண்*
* * * * * ஜெயா டிவி* - இரவு 9 மணி -* குமரிக்கோட்டம்*
* * * * * *பாலிமர் -இரவு 11 மணி - ராமன் தேடிய சீதை*
18/01/21-சன்* *லைப்- காலை 11 மணி - எங்கள் தங்கம்*
* * * * * * *ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - என் அண்ணன்*
* * * * * * வஸந்த் - இரவு 7.30மணி - படகோட்டி*
* * * * * * மூன் டிவி - இரவு* 8 மணி - வேட்டைக்காரன்*
19/01/21- ராஜ் டிவி -பிற்பகல் 1.30மணி -தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * சன் லைப்- மாலை 4 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * *புது யுகம் - இரவு 7 மணி - தாயை காத்த தனயன்*
20/01/21-சன் லைப்- காலை 11 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - அடிமைப்பெண்*
* * * * * * வசந்த் டிவி -இரவு 7.30 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * *பாலிமர் - இரவு 77 மணி - தாய் சொல்லை தட்டாதே**
-
தனியார் தொலைக்காட்சிகளில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
ஒளிபரப்பான*பட்டியல் 9 21/01/21 முதல் 31/01/21 வரை )
------------------------------------------------------------------------------------------------------------------------------
21/01/21-சன் லைப் - காலை 11 மணி - கண்ணன் என் காதலன்*
* * * * * * *ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - நாடோடி மன்னன்*
* * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - நவரத்தினம்*
* * * * * * சன் லைப் - மாலை 4 மணி - உழைக்கும் கரங்கள்*
22/01/21-சன் லைப்- காலை 11 மணி - என் அண்ணன்*
* * * * * * *முரசு -மதியம் 12மணி /இரவு 7மணி-தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * *மெகா டிவி -பிற்பகல் 1.30 மணி - படகோட்டி*
* * * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி -தாயை காத்த தனயன்*
* * * * * * *மெகா 24-பிற்பகல் 2.30 மணி -தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * சன் லைப்- மாலை 4 மணி - புதிய பூமி*
23/01/21-மீனாட்சி - பிற்பகல் 1 மணி -வேட்டைக்காரன்*
25/01/21-மெகா டிவி -அதிகாலை 1 மணி -குடியிருந்த கோயில்*
* * * * * * சன் லைப்- காலை 11 மணி - நாளை நமதே*
* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - மாட்டுக்கார வேலன்*
* * * * * * பாலிமர் டிவி- இரவு 11 மணி - நவரத்தினம்*
26/01/21- சன்* லைப் - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*
27/01/21-சன் லைப்- காலை 11 மணி -தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * *முரசு -மதியம் 12மணி/இரவு 7மணி- பெற்றால்தான் பிள்ளையா*
* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி -கலங்கரை விளக்கம்*
* * * * * * மெகா 24-பிற்பகல் 2.30மணி -தாயை காத்த தனயன்*
* * * * * *புது யுகம் -பிற்பகல் 2 மணி* - ராமன் தேடிய சீதை*
28/01/21-வேந்தர் டிவி -காலை 10 மணி -தனிப்பிறவி*
* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - பெரிய இடத்து பெண்*
* * * * * * மீனாட்சி - இரவு 9 மணி -தலைவன்*
* * * * * * மெகா 24- இரவு 9 மணி - காலத்தை வென்றவன்*
29/01/21-சன் லைப் - காலை 11 மணி -தெய்வத்தாய்*
* * * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30மணி - ரகசிய போலீஸ் 115*
* * * * * * சன் லைப் - மாலை 4 மணி - காவல் காரன்*
* * * * * * பாலிமர் - இரவு 11 மணி - புதிய பூமி*
30/01/21-மெகா டிவி -அதிகாலை 1 மணி - படகோட்டி*
* * * * * * * முரசு -மதியம் 12 மணி / இரவு 7 மணி - தொழிலாளி*
* * * * * *ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - காலத்தை வென்றவன்*
31/01/21-சன் லைப்- காலை 11 மணி - கணவன்*
* * * * * * * மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - தேர் திருவிழா** * * * * * * * * * * * **
-
#ந*ம்நாடு திரைப்ப*ட* ஷூட்டிங்கில் எம்ஜிஆரின் ட்ரீட்மெண்ட்..
விஜயா வாஹினியில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு 'வாங்கய்யா வாத்யாரய்யா வரவேற்க வந்தோமய்யா ஏழைகள் உங்களை நம்பி எதிர்ப்பார்த்து நின்றோமய்யா' என்ற பாடல் காட்சிசயை 'நம்நாடு' படத்திற்காகப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். செல்வி ஜெயலலிதா. நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் கலந்த நடனக் கலைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். டைரக்டர் ஜம்பு பாடல் காட்சியை பரபரப்புடன் படமாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் படத்தை விஜயா இண்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் சார்பில் நாகிரெட்டியாரும், சக்கரபாணியும் தயாரித்தனர்.
இந்தப் பாடல் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் எடுத்து முடித்ததும் மதியவேளை படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டது. அனைவரும் சாப்பிடப் போனார்கள். எம்.ஜி.ஆர்.சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக தியாகராய நகரில் உள்ள தனது ஆற்காடு சாலை அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். அன்றும் அப்பபடியே போய்விட்டார். மதிய உணவு முடிந்ததும் அனைவரையும் மேனேஜர் படப்பிடிப்புக்கு வரச் சொன்னார். எல்லோரும் பாடல் காட்சியில் நடனமாடுவதற்கு ரெடியனார்கள்.
அப்பொழுது எம்.ஜி.ஆர். அவர்களின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய எம்ஜிஆர் நடனக் கலைஞர் ஒருவரிடம் 'சாப்பிட்டு விட்டீர்களா' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியிருந்தது. நடனக் கலைஞர்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதா சம்பந்தப்பட்ட நடனக் காட்சியையும் படமாக்க தொடங்கினார்கள். நடனக் காட்சியை எடுத்து முடித்ததும் இறுதியாக குளோசப் காட்சியையும் எடுக்கத் தயாரனார்கள்.
அடுத்து எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட காட்சியை எடுப்பதற்காக டைரக்டர் ஜம்பு எம்.ஜி.ஆரை அழைத்து வரச் சொன்னார். படப்படிப்பில் இருந்த படம் சம்பந்தபட்ட புரொடக்ஷன் மேனேஜர் எம்.ஜி.ஆர். இருக்கும் அறைக்கு ஒடிப் போய் பார்த்தார். அறை மூடப்பட்டிருந்தது கதவைத் தட்டினார். கதவு திறந்தது உள்ளிருந்து வேறு யாரோ ஒருவர் வெளியே வந்தார். புரொடக்ஷன் மேனேஜர் எம்.ஜி.ஆர்.உள்ள இருக்கிறாரா என்று மெதுவான குரலில் கேட்டுக் கொண்டே அறைக்குள் சென்றார் உள்ளே எம்.ஜி.ஆர்.இல்லை. உள்ளே இருந்தவரும் 'அவர் இங்கு வரவேயில்லையே', என்றார்.
புரொடக்ஷன் மேனேஜருக்கு டென்ஷன் ஆரம்பித்தது. இப்பதானே காரில் வந்து இறங்கினார். நானே பார்த்தேனே.. எங்கு போயிருப்பார்? தேடிக் கொண்டே வெளியேவந்தார்.
அவரது காரும் அங்கு இல்லை. நேரடியாக டைக்ரடர் ஜம்புவிடம் வந்தார். 'சின்னவர் அந்த அறையில் இல்லை. அவர் ரூமுக்கும் வரவில்லையாம்,' என்று விபரம் சொன்னார் மேனேஜர்.
அதற்கு டைரக்டர் ஜம்பு, 'அவர் கார் வந்ததை நான் பார்த்தேன். காரிலிருந்து இறங்கி யாரோ ஒரு டான்ஸரிடம் பேசிக்கிட்டிருந்தார். திடீர்னு எங்கு போயிருப்பார்?' என்று ஸ்டுடியோ முழுவதும் போய் தேடினார்கள். எங்கும் இல்லை. அதற்குள் அவர்களுக்கு தகவல் வந்தது, எம்.ஜி.ஆர். தனது ஆற்காடு சாலையிலுள்ள அலுவலகத்திற்கு சென்றுவிட்டார் என்று. படப்பிடிப்பில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
என்ன பிரச்சனை? எதற்காக எம்.ஜி.ஆர். திரும்பி போனர்? அதுக்காக இருக்குமோ? இதுக்காக இருக்குமோ? என்றுஅனுமானத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள் படப்பிடிப்பு குழுவினர்.
படப்பிடிப்பு நடத்துகொண்டிருந்த விஜயா வாஹினி ஸ்டுடியோ முழுவதும் பரபரப்பாகியது. அதற்குள் டைரக்டர் ஜம்பு, மேனேஜரைக் கூப்பிட்டு ஒரு யோசனை சொன்னார். 'எம்.ஜி.ஆர். இங்கு வந்த போது யாரோ ஒரு டான்ஸரிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது தேடிப் பிடித்து அழைத்து வா' என்றார்.
புரொடக்ஷன் மேனேஜர் அவரது உதவியாளர்களும் ஓடிப் போய் தேடினார்கள். இறுதியாக செட்டுக்குள் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்த அந்த டான்சரை அடையாளம் கண்டு அழைத்து வந்தார்கள்.
டைரக்டர் ஜம்பு அவரைத் தனியாக அழைத்துக் கொண்டு போய் மெல்ல விசாரித்தார்.
டான்ச*ரிட*ம் எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருந்தாரா?"
"ஆமாம்... என்னிடம் தான் பேசிக்கொண்டிருந்தார்" என்று பவ்யமாக சொன்னார் அந்த டான்ஸ் கலைஞர். "உங்களிடம் சின்னவர் என்ன கேட்டார்... நீங்கள்அவரிடம் என்ன பதில் சொன்னீங்க?"
அதற்கு டான்ஸ் கலைஞர், "சாப்பிட்டாச்சான்னு கேட்டார்... சாப்பிட்டோம்னு சொன்னோம். என்ன சாப்பிட்டீங்கன்னு திரும்பக் கேட்டார். நான் புளியோதரை, தயிர் சாதம் பொட்டலம் கட்டிக் குடுத்தாங்க... அதைத்தான் சாப்பிட்டோம்னு சொன்னேன். அதுக்கப்புறம் அவர் என்னை எதுவுமே கேட்கவேயில்லை காரில் ஏறி வெளியே போய்விட்டார்," என்று டான்ஸர் சொல்லி முடித்ததும் புரொடக்ஷன் மேனேஜருக்கு எதனால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது என்பது புரிந்துவிட்டது.
டைரக்டர் ஜம்புவும் எங்கே தவறு நடத்திருக்கு என்பதைப் புரிந்துக் கொண்டார்.
டைக்ரடர் ஜம்பு, புரொடக்ஷன் மேனேஜரும் சேர்ந்து ஆற்காடு சாலையிலுள்ள எம்.ஜி.ஆர்.அலுவலகத்திற்கு போனார்கள்.
எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்துப் பேசினார்கள். புரொடக்ஷன் மேனேஜர்தான் பேசினார்.
"இந்த தப்புக்கு நான்தான் காரணம். மேனேஜ்மெண்டுக்கு இதுப் பற்றி எதுவும் தெரியாது லஞ்ச் பிரேக்குக்கு அப்புறம் சீக்கிரம் படப்பிடிப்பு தொடங்கணும், நிறைய டான்சர்கள் இருந்ததால் பொட்டலம் சாப்பாடு கொடுத்துட்டா சீக்கிரமா சாப்பிட்டு வந்துடுவாங்கனு நான் அப்படி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன். இனி அப்படி ஒரு தவறு நடக்காது மன்னிச்சிடுங்க," என்று மேனேஜர் பேசி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆரின் கார் ஆற்காடு சாலையிலிருந்து கிளம்பியது.
அதன்பிறகு 'நம்நாடு' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து எந்த விதமான காலதாமதமும் இல்லாமல் நடந்தது. இந்தப்பாடல் காட்சி எடுத்து முடியும் வரைஎம்.ஜி.ஆர்.அங்கேயே சக கலைஞர்களுடன் இணைந்து சாப்பிட்டார். தனக்கு என்ன உணவோ, அதுதான் படக்குழுவினர் அனைவருக்கும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
அவரது கோபத்திற்குக் காரணம் புரொடக்ஷன் மேனேஜர் கம்பெனி சார்பில் நல்ல சாப்பாடு போடாமல், பொட்டலம் சாப்பாடு கொடுத்ததுதான். அதுவும் மேனேஜ்மெண்ட்டுக்கு தெரியாமல், மேனேஜர் எடுத்த முடிவினால் வந்த விபரீதம்தான் இது.
எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பு என்றால் அனைவருக்கும் நல்ல சாப்பாடுதான் போடுவார்கள். அது எந்தக் கம்பெனி படமாக இருந்தாலும். இது அவரது படத்தில் நடித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். எம்.ஜி.ஆரிடம் ஒரு குணம் உண்டு... தன்னுடைய படத்தில் நடிப்பவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைத்ததா? சம்பளத்தை முழுமையாக கொடுத்து விட்டார்களா? என்பதில் அதிக கவனம் எடுத்து கொள்வார்.
இன்று வரையிலும் அவரது பேரும், புகழும் நிலைத்து நிற்பதற்கு அவரது இந்த குணமும், நல்ல மனமும்தான் காரணம்.
இந்தப் படத்திற்கு ஜம்பு டைரக்டரான பின்னணியில் ஒரு செய்தி உண்டு. 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை குறுகிய காலத்தில் எடுத்தார்கள். அந்தப் படத்தை 14.1.1965 பொங்கல் பண்டிகை நாளில் வெளியிடுவதற்காக தீவிரமாக ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் படம் சீக்கிரமாக வெளியே வருமா என்று சந்தேகம் இருந்தது. அப்பொழுது ஜம்பு அந்தப் படத்தின் எடிட்டிங் வேலைகளுக்கு உடனிருந்து படம் சீக்கிரமாக வெளியே வருவதற்கு உதவிகள் செய்தார். அதனால்தான் எம்.ஜி.ஆர்.அவர்கள் 'நம்நாடு' படத்தை இயக்குகின்ற வாய்ப்பை ஜம்புவுக்குக் கொடுத்தார்...........rms
-
க*லெக்ட*ர் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் 24/10/1972ல் எம்ஜிஆர் ந*ட*த்தும் முத*ல் கூட்ட*த்தில் க*லந்துகொள்ள வேண்டும், அவ*ர் ஆர*ம்பிக்கும் க*ட்சிக்கு த*ம் ஆத*ர*வை அளிக்கவேண்டும் என முடிவு செய்த மக்கள் காலை 8 மணிமுத*லே தேர*டி திட*லில் கூட ஆர*ம்பித்துவிட்டார்கள்.
அப்போதெல்லாம் அவ்வ*ளவு ப*ஸ் வ*ச*தி கிடையாது. எனவே சுற்றியுள்ள கிராமங்க*ளில் உள்ள மக்களெல்லாம் க*ட்டுச்சோற்றை க*ட்டிக்கொண்டு கால்ந*டையாக*வும், மாட்டு வ*ண்டியிலும், குதிரை வ*ண்டியிலும் வ*ந்து மக்கள் தேர*டியில் இட*ம் பிடிக்க* ஆர*ம்பித்து விட்டார்க*ள். 2 கிலோமீட்ட*ர் தூர*த்திற்கு மக்கள் வெள்ளம் ம*தியமே அலை மோதிய*து.
இனிமேல் அவ்வ*ளவு கூட்ட*த்தை க*லைக்க*வும் முடியாது. க*லைத்தாலும் நிலைமை விப*ரீத*மாகிவிடும் என்று மேலிட*த்திற்கு தெரிவித்துவிட்டு க*லெக்ட*ர் கூட்ட*த்திற்கு ஒருவ*ழியாக அன்று மதிய*ம் அனுமதி அளித்துவிட்டார்.
நிலைமை இவ்வாறிருக்க தோட்ட*த்திலோ எம்ஜிஆருக்கு க*டும் காய்ச்ச*ல். மருத்துவ*ர்க*ள் எம்ஜிஆரை எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்று த*டுத்துவிட்ட*ன*ர். ஜானகி அம்மாவும் அருகிருந்து எம்ஜிஆரை க*வ*னித்துக் கொண்டார். நேர*மோ சென்று கொண்டிருந்த*து.
கூட்ட*த்திற்கு போகும்வ*ழியில் எம்ஜிஆரை தீர்த்துக்க*ட்ட* ஒரு கூட்ட*மும், அவ*ர் முக*த்தில் திராவ*க*த்தை வீச ஒரு கூட்ட*மும் த*யாராக இருப்ப*தாக எம்ஜிஆர் வீட்டிற்கு த*க*வ*ல் கிடைத்த*து. இடையே வானொலியில் எம்ஜிஆருக்கு உட*ல்நிலை ச*ரியில்லாத*தால் பொதுக்கூட்ட*ம் ர*த்து என்ற செய்தியும் வ*ர* மக்கள் கொதித்து போயின*ர். ப*லர் ர*க*ளையில் ஈடுப*ட்ட*ன*ர்.
நிலைமையின் விப*ரீத*த்தை உணர்ந்த மன்றத்த*லைவ*ர் பாலாஜி, சென்னையை நோக்கி காரில் புற*ப்ப*ட்டார். வ*ழியில் காரை மறித்து ப*லர் என்னைய்யா! வாத்தியார் வ*ராரா? இல்லையா? என்று துளைத்தெடுத்த*ன*ர். க*ண்டிப்பாக வ*ருவார் என்று சொல்லிவிட்டு தோட்ட*த்திற்கு சென்றார் பாலாஜி.
அங்கு சென்ற பாலாஜி அதிர்ச்சிய*டைந்தார். ஒருப*க்க*ம் எம்ஜிஆருக்கு க*டும் காய்ச்ச*ல். மறுபுற*ம் அவ*ரை கொல்ல* காத்திருக்கும் கூட்ட*ம். க*வ*லை அடைந்த ஜானகி அம்மையாரோ, த*லைவ*ரை அழைத்துச் செல்லக்கூடாது என்று பாலாஜியிட*ம் வாத*ம் செய்தார்.
உட*னே பாலாஜி, த*லைவ*ரே! நீங்கள் மட்டும் இன்று கூட்ட*த்திற்கு வ*ர*வில்லையென்றால் அந்த மாமர*த்திலே தூக்கு போட்டுக்கொள்வேன் என்று கையைக்காட்ட*, எம்ஜிஆர் மருத்துவ*ர்க*ள், ஜானகி அம்மையாரையும் ச*மாதான*ப்ப*டுத்தி விட்டு காரில் ஏறிவிட்டார். கார் ப*லவ*ழியில் சுற்றி வ*ந்து காஞ்சிபுர*ம் வ*ந்த*டைந்தது. ஏற்கெனவே திட்ட*மிட்ட*ப*டி எம்ஜிஆரை வ*ய*ல்வெளி வ*ழியே 1/2 கி.மீ ந*ட*த்தியே கூட்டி வ*ந்த*ன*ர். மேடையின் பின்புற*ம் இருந்த ப*ள்ளிவாச*ல் காம்ப*வுண்ட் கேட் வ*ழியே எம்ஜிஆர் வ*ந்து திடீரென மேடையில் தோன்றிய*தும் ம*க்க*ள் ஆர*வார*த்திற்கு அளவேயில்லை. மக்களின் எழுச்சியையும் ச*ந்தோஷ*த்தையும் பார்த்த எம்ஜிஆர், பாலாஜியையே கூட்ட*த்திற்கு த*லைமையேற்க செய்தார். க*ட்சி ஆரம்பித்து ஒருவார*மே ஆகியிருந்த* நிலையில் எம்ஜிஆர் க*ருப்பு சிவ*ப்பு க*ரைவேட்டியையே க*ட்டியிருந்தார். தோளில் க*ருப்பு சிவ*ப்பு பார்ட*ரில் துண்டும் இருந்த*து. ப*க்க*த்து க*ட்டிட*த்தில் திராவ*க*ம் வீச காத்திருந்த கும்ப*ல், இவ்வ*ளவு ப*ர*ப*ர*ப்பான கூட்ட*த்தில் திராவ*க*த்தை எம்ஜிஆர்மீது வீசிவிட்டு த*ப்புவ*து எளித*ல்ல என்று முடிவு செய்து இட*த்தை காலி செய்த*ன*ர்.
த*லைவ*ர்மீது மக்கள் க*ருப்பு மற்றும் சிவ*ப்பு துண்டுக*ளை கீழேயிருந்து வீசின*ர். அனைத்தையும் லாவ*க*மாக பிடித்த எம்ஜிஆரின் ஸ்டைலையும் வேக*த்தையும் பார்த்த* மக்களின் கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும் விண்ணை பிளந்த*து.
இது திமுக கூட்ட*மா அல்ல*து அண்ணா திமுக கூட்ட*மா என விய*க்கும*ளவிற்கு மேடையில் க*ருப்பு சிவ*ப்பு துண்டுக*ள் குவிந்து கிட*ந்த*து. அப்போதே திமுக என்றால் எம்ஜிஆர். எம்ஜிஆர் இல்லாத திமுக க*தை முடிந்த*து என ஆட்சியாளர்க*ளுக்கு உரைத்த*து.
இந்த* ஆர*வார* ச*ந்தோஷத்தில் த*லைவ*ரின் காய்ச்ச*ல் ப*ற*ந்தோடிய*து. மாறாக த*லைவ*ரின் வ*ளர்ச்சியை பிடிக்காத க*ருணாநிதி உள்ளிட்ட அப்போதைய த*மிழ*க அர*சிய*ல் க*ட்சித் த*லைவ*ர்க*ளுக்கு காய்ச்ச*ல் தொற்றிக் கொண்ட*து.
எவ்வித* குறிப்புமின்றி, எம்ஜிஆர் " என*து ர*த்த*த்தின் ர*த்த*மான உட*ன்பிற*ப்புக*ளே! என ஆர*ம்பித்து, நான் க*ணக்கு கேட்ட*து த*வ*றா? என்ற கேள்வியுட*ன் திமுக வ*ளர்ச்சிக்கு த*ன்னுடைய ப*ங்கு, என சுமார் இர*ண்டு மணி நேர*ம் (இர*வு 10 மணிமுத*ல் 12 மணிவ*ரை) பேசிவிட்டு சென்றார். மறுநாள் அனைத்து தின*ச*ரிக*ளிலும், எம்ஜிஆர் த*லைப்பு செய்தி ஆனார்.........vrh
-
புரட்சித் தலைவர் நடித்த, இயக்கிய திரைப்படங்கள் தொகுப்பு.
1930 களில் வெளிவந்த திரைப்படங்கள்.
1. 1936 சதிலீலாவதி . தயாரிப்பு மனோரமா ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் ஆய்வாளர் ரெங்கைய நாயுடு. இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன். எம்ஜிஆர் அவர்கள் நடித்த முதல் திரைப்படம், சிறு வேடம்.
2. 1936 இரு சகோதரர்கள். தயாரிப்பு பரமேஸ்வரி சௌண்ட் பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளம் முஸ்லிம் இளைஞன் இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன். சிறு வேடம்
3. 1938. தட்சயக்ஞம். தயாரிப்பு மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ்.கதாபாத்திரம் விஷ்ணு. இயக்கம் ராஜா சந்திரசேகர். புராணப்படம்
4. 1938 வீர ஜெகதீஸ். தயாரிப்பு வி. எஸ். டாக்கீஸ் கதாபாத்திரம் பையன். இயக்கம் டி. பி. கைலாசம், ஆர். பிரகாஷ்
5. 1939 மாயா மச்சீந்திரா. தயாரிப்பு மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ். கதாபாத்திரம் சூரியகேது . இயக்கம் ராஜா சந்திரசேகர்.
6. 1939 பிரகலாதா. தயாரிப்பு சலீம் சங்கர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் இந்திரன். இயக்கம் பி. என். ராவ். புராணப்படம்
1940 களில் வெளிவந்த படங்கள்.
7. 1941 வேதவதி (சீதா ஜனனம்). தயாரிப்பு சியாமளா பிக்சர்ஸ் .கதாபாத்திரம் இந்திரஜித். இயக்கம் டி. ஆர். ரகுநாத்.
8. 1941 அசோக் குமார் . தயாரிப்பு முருகன் டாக்கீஸ் ஃபிலிம் கம்பெனி. கதாபாத்திரம் தளபதி மகேந்திரன். இயக்கம் ராஜா சந்திரசேகர் . எம். கே. தியாகராஜ பாகவதருடன் நடித்த முதல் படம்
9. 1942 தமிழறியும் பெருமாள். தயாரிப்பு உமா பிக்சர்ஸ். கதாபாத்திரம் சந்தானம். இயக்கம் டி. ஆர். ரகுநாத்.
10. 1943 தாசிப் பெண் (ஜோதிமலர்). தயாரிப்பு புவனேஸ்வரி பிக்சர்ஸ். கௌரவ நடிகர். இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன் .
11. 1944 ஹரிச்சந்திரா. தயாரிப்பு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஃபிலிம் கம்பெனி. கதாபாத்திரம் ஒரு அமைச்சர். இயக்கம் கே. பி. நாகபூஷணம். எம்ஜிஆர் பி. யு. சின்னப்பா வுடன் நடித்த முதல் திரைப்படம்
12 . 1945. சாலிவாகனன். தயாரிப்பு பாஸ்கர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் விக்ரமாதித்யன். இயக்கம் பி. என். ராவ். எம்ஜிஆர் வில்லனாக நடித்தார்
13. 1945 மீரா. தயாரிப்பு சந்திரப்பிரபா சினிடோன். கதாபாத்திரம் தளபதி ஜெயமல் இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன் .
14. 1946 ஸ்ரீ முருகன். தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் பரமசிவன். இயக்கம் எம். சோமசுந்தரம். வி. எஸ். நாராயண். புராணப்படம். சிவ - பார்வதி நடனத்தில் சிவன் வேடத்தில் நடனமாடினார்.
ஜூபிடர் நிறுவனத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் படம்.
15. 1947 ராஜகுமாரி. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் மோகன். இயக்கம் ஏ. எஸ். ஏ. சாமி. (எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம்)
16. 1947 பைத்தியக்காரன். தயாரிப்பு என். எஸ். கே. ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் மூர்த்தி இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு (இரண்டாவது கதாநாயகன்)
17. 1948 அபிமன்யு. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் அர்ச்சுனன். இயக்கம் எம். சோமசுந்தரம் ஏ. காசிலிங்கம்.
18. 1948 ராஜ முக்தி. தயாரிப்பு நரேந்திர பிக்சர்ஸ். கதாபாத்திரம் மகேந்திரவர்மன். இயக்கம் ராஜா சந்திரசேகர். வி. என். ஜானகி, பி. பானுமதி இருவரும் இந்தப் படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதருடன் ஜோடி சேர்ந்து நடித்தனர்.
19. 1948 மோகினி. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ்.கதாபாத்திரம் தளபதி விஜயகுமார் லங்கா சத்தியம் இரண்டாவது கதாநாயகன்.
வி. என். ஜானகியுடன் ஜோடியாக நடித்த முதல் படம். டி. எஸ். பாலையா பிரதான பாத்திரத்தில் மாதுரிதேவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
20. 1949 ரத்னகுமார் . தயாரிப்பு முருகன் டாக்கீஸ் ஃபிலிம் கம்பெனி.கதாபாத்திரம் பாலதேவன். இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு பி. பானுமதி கதாநாயகியாக நடித்த முதல் படம்.
அவர் பி. யு..சின்னப்பாவுக்கு ஜோடியாக நடித்தார். எம். ஜி. ஆர். துணை நடிகர்.
1950 களில் வெளிவந்த படங்கள்.
21. 1950 மருதநாட்டு இளவரசி. தயாரிப்பு ஜி. கோவிந்தன் அன் கோ. கதாபாத்திரம் காண்டீபன் ஏ. காசிலிங்கம். (ராஜகுமாரிக்குப் பின்னர்.தனிக் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படம்.)
22. 1950 மந்திரி குமாரி. தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ். கதாபாத்திரம் தளபதி வீரமோகன். எல்லிஸ் ஆர். டங்கன். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் படம்.
23. 1951 மர்மயோகி. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளவரசன் கரிகாலன். இயக்கம் கே. ராம்நாத்.
24 . 1951 ஏக்தா ராஜா. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளவரசன் கரிகாலன். இயக்கம் கே. ராம்நாத். (மர்மயோகி இந்திப் பதிப்பு)
25. 1951 சர்வாதிகாரி. தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ். கதாபாத்திரம் பிரதாப் வீரன். இயக்கம் டி. ஆர். சுந்தரம்.
26. 1951 சர்வாதிகாரி. தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ். கதாபாத்திரம் பிரதாப் வீரன். இயக்கம் டி. ஆர். சுந்தரம். சர்வாதிகாரி (தெலுங்கு பதிப்பு)
27. 1952 அந்தமான் கைதி. தயாரிப்பு ராதாகிருஷ்ணா ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் நடராஜ் . இயக்கம் வி. கிருஷ்ணன். (இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பின்னணி)
28. 1952 குமாரி தயாரிப்பு ஆர். பத்மநாபன் -ராஜேஸ்வரி.கதாபாத்திரம் விஜயன் . இயக்கம் ஆர். பத்மநாபன் . கே. வி. மகாதேவன் இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். திரைப்படம்.
29. 1952 என் தங்கை . தயாரிப்பு அசோகா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் ராஜேந்திரன். இயக்கம் சி. ஹெச் நாராயணமூர்த்தி.
எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் முதல் திரைப்படம்
30. 1953 நாம் . தயாரிப்பு ஜூபிடர், மேகலா பிக்சர்ஸ். கதாபாத்திரம் குமரன். இயக்கம் ஏ. காசிலிங்கம். எம் ஜி ஆர், எம் ஜி சக்ரபாணி, கருணாநிதி, பி எஸ் வீரப்பா கூட்டு தயாரிப்பு.
31. 1953 ஜெனோவா . தயாரிப்பு சந்திரா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் சிப்ரெக்கா. இயக்கம் எஃப். நாகூர்.முதல் மலையாள திரைப்படம்
32. 1953 ஜெனோவா . தயாரிப்பு சந்திரா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் சிப்ரெக்கா. இயக்கம் எஃப். நாகூர். மலையாளப் படத்தின் தமிழ் பதிப்பு
33. 1954 பணக்காரி தயாரிப்பு உமா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் ஆபீசர் சௌந்தர். இயக்கம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்.
34. 1954 மலைக்கள்ளன். தயாரிப்பு பட்சிராஜா ஸ்டூடியோஸ். கதாபாத்திரம் மலைக்கள்ளன் , அப்துல் ரஹீம் &
குமாரதேவன். இயக்கம் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
35. 1954 கூண்டுக்கிளி. தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ்.கதாபாத்திரம் தங்கராஜ். இயக்கம் டி. ஆர். ராமண்ணா. சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரே திரைப்படம்.
36. 1955 குலேபகாவலி. தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் தாசன். இயக்கம் டி. ஆர். ராமண்ணா. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம்
37. 1956. அலிபாபாவும் நாற்பது திருடர்களும். தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ் கதாபாத்திரம் அலிபாபா. இயக்கம் டி. ஆர். சுந்தரம். முதல் முழுநீள தமிழ் வண்ணப் படம் (கேவா கலர்)
38. 1956 மதுரை வீரன். தயாரிப்பு கிருஷ்ணா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் வீரன். இயக்கம் டி. யோகானந்த். எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் இரண்டாவது திரைப்படம்
39. 1956 தாய்க்குப்பின் தாரம். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் முத்தையன் இயக்கம் எம். ஏ. திருமுகம். தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம்
40 . 1957 சக்கரவர்த்தித் திருமகள். தயாரிப்பு உமா பிக்சர்ஸ். கதாபாத்திரம் உதயசூரியன்.இயக்கம் ப. நீலகண்டன்.
ப. நீலகண்டன் இயக்கத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம்
41. 1957 ராஜ ராஜன். தயாரிப்பு நீலா புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் இளவரசன் ராஜராஜன். இயக்கம் டி. ஆர். சுந்தரம்
42. 1957 புதுமைப்பித்தன் . தயாரிப்பு சிவகாமி பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளவரசன் ஜீவகன். இயக்கம் டி. ஆர். ராமண்ணா.
43. 1957 மகாதேவி. தயாரிப்பு ஸ்ரீ கணேஷ் மூவிடோன். கதாபாத்திரம் தளபதி வல்லபன் இயக்கம் சுந்தர் ராவ் நட்கர்ணி .
44. 1958 நாடோடி மன்னன். தயாரிப்பு
எம். ஜி. ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் மார்த்தாண்டன் & வீராங்கன். எம்ஜிஆர் தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம்
இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படம்
பி. சரோஜாதேவியுடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம்
45. 1959 தாய் மகளுக்குக் கட்டிய தாலி தயாரிப்பு கல்பனா கலா மந்திர். கதாபாத்திரம் கனகு . இயக்கம் ஆர். ஆர். சந்திரன். ஜமுனாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம். அறிஞர் அண்ணா கதை, வசனம்.
1960 -களில் வெளிவந்த படங்கள்.
46. 1960 பாக்தாத் திருடன். தயாரிப்பு சதர்ன் மூவீஸ். கதாபாத்திரம் முகம்மது அலி. இயக்கம் டி. பி. சுந்தரம். வைஜயந்தி மாலாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்.
47. 1960 ராஜா தேசிங்கு. தயாரிப்பு கிருஷ்ணா பிக்சர்ஸ். கதாபாத்திரம் தேசிங்கு ராஜன் & முகமதுகான். இயக்கம் டி. ஆர். ரகுநாத். எஸ். எஸ். ராஜேந்திரனுடன் சேர்ந்து நடித்த முதல் திரைப்படம். எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் மூன்றாவது திரைப்படம்
48. 1960. மன்னாதி மன்னன். தயாரிப்பு நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளவரசன் மணிவண்ணன் . இயக்கம் எம். நடேசன்
49. 1961 அரசிளங்குமரி . தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் அறிவழகன். இயக்கம் ஏ. எஸ். ஏ. சாமி
50. 1961 திருடாதே. தயாரிப்பு ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் பாலு. இயக்கம் ப. நீலகண்டன்.
51. 1961 சபாஷ் மாப்பிளே. தயாரிப்பு ராகவன் புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் வாசு இயக்கம் எஸ். ராகவன் .
52. 1961 நல்லவன் வாழ்வான். தயாரிப்பு அரசு பிக்சர்ஸ். கதாபாத்திரம் முத்து. இயக்கம் ப. நீலகண்டன். அறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதினார்
53. 1961 தாய் சொல்லைத் தட்டாதே. தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் போலீஸ் ஆஃபீசர் ராஜு. இயக்கம் எம். ஏ. திருமுகம்
54. 1962 ராணி சம்யுக்தா. தயாரிப்பு சரஸ்வதி பிக்சர்ஸ். கதாபாத்திரம் பிரிதிவிராஜன். இயக்கம் டி. யோகானந்த்.
55. 1962. மாடப்புறா. தயாரிப்பு பி. வி. என். புரொடக்சன்ஸ்.கதாபாத்திரம் ராமு . இயக்கம் எஸ். ஏ. சுப்பாராமன்
56. 1962 தாயைக்காத்த தனயன் . தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் வேட்டைக்காரன் சேகர். இயக்கம் எம். ஏ. திருமுகம்.
57. 1962 குடும்பத் தலைவன். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் வாசு. இயக்கம் எம். ஏ. திருமுகம் .
58. 1962. பாசம். தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ்.கதாபாத்திரம் கோபி. இயக்கம் டி. ஆர். ராமண்ணா. எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் நாலாவது திரைப்படம்
59. 1962 விக்ரமாதித்தன். தயாரிப்பு பாரத் புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் ராஜா விக்ரமாதித்தன். இயக்கம் டி. ஆர். ரகுநாத்
என். எஸ். ராமதாஸ் .
60. 1963 பணத்தோட்டம். தயாரிப்பு சரவணா ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் செல்வம். இயக்கம் கே. சங்கர். கே. சங்கர் இயக்கத்தில் நடித்த முதல் படம். சரவணா ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடித்த முதல் படம்.
61. 1963 கொடுத்து வைத்தவள். ஈ. வி. ஆர். பிக்சர்ஸ் முருகன். கதாபாத்திரம் கட்டிட ஒப்பந்தக்காரர் செல்வம். இயக்கம் ப. நீலகண்டன் .
62. 1963 தர்மம் தலைகாக்கும். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் டாக்டர் சந்திரன். இயக்கம் எம். ஏ. திருமுகம்.
63. 1963 கலை அரசி. தயாரிப்பு சரோடி பிரதர்ஸ். கதாபாத்திரம் மோகன்
வேற்றுக்கோள் கோமாளி. இயக்கம் ஏ. காசிலிங்கம்.
64. 1963 பெரிய இடத்துப் பெண். தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் அழகப்பன்/முருகப்பன். இயக்கம் டி. ஆர். ராமண்ணா.
65. 1963 ஆனந்த ஜோதி . தயாரிப்பு ஹரிஹரன் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் பள்ளி ஆசிரியர் ஆனந்த். இயக்கம் வி. என். ரெட்டி. தேவிகாவுடன் நடித்த ஒரே திரைப்படம்
66. 1963 நீதிக்குப்பின் பாசம். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் வழக்கறிஞர் கோபால். இயக்கம் எம். ஏ. திருமுகம்.
67. 1963 காஞ்சித்தலைவன் . தயாரிப்பு மேகலா பிக்சர்ஸ். கதாபாத்திரம் நரசிம்ம பல்லவன். இயக்கம் ஏ. காசிலிங்கம் .
68. 1963 பரிசு. தயாரிப்பு கௌரி பிக்சர்ஸ் கதாபாத்திரம் இரகசிய போலீஸ் வேணு இயக்கம் டி. யோகானந்த் .
69. 1964. வேட்டைக்காரன். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் பாபு. இயக்கம் எம். ஏ. திருமுகம்.
70 . 1964 என் கடமை. தயாரிப்பு நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் . கதாபாத்திரம்போலீஸ் ஆபீசர் நாதன் . இயக்கம் எம். நடேசன்
71. 1964 பணக்கார குடும்பம். தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் நல்ல தம்பி. இயக்கம் டி. ஆர். ராமண்ணா
72. 1964 தெய்வத்தாய். தயாரிப்பு சத்யா மூவீஸ். கதாபாத்திரம் சிபிஐ அதிகாரி மாறன். இயக்கம் பி. மாதவன் .
73. 1964 தொழிலாளி. தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் தொழிலாளி ராஜு. இயக்கம்எம். ஏ. திருமுகம்
74. 1964 படகோட்டி. தயாரிப்பு சரவணா ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் மீனவர் மாணிக்கம். இயக்கம் டி. பிரகாஷ் ராவ். எம்ஜிஆர் நடித்த முதல் ஈஸ்ட்மன் வண்ண திரைப்படம்.
75 . 1964 தாயின் மடியில். தயாரிப்பு அன்னை ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் ஜாக்கி ராஜா. இயக்கம் ஏ. சுப்பா ராவ்.
76. 1965 எங்க வீட்டுப் பிள்ளை. தயாரிப்பு விஜயா கம்பைன்ஸ். கதாபாத்திரம் ராமு (ராமன்), இளங்கோ (லட்சுமணன்). இயக்கம் சாணக்யா. எம்ஜிஆர் இரட்டை வேடங்களில்.
77 . 1965 பணம் படைத்தவன். தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் ராஜா. இயக்கம் டி. ஆர். ராமண்ணா.
78. 1965 ஆயிரத்தில் ஒருவன். தயாரிப்பு பத்மினி பிக்சர்ஸ். கதாபாத்திரம் மருத்துவர் மணிமாறன். இயக்கம் பி. ஆர். பந்துலு. ஜெயலலிதாவுடன் சேர்ந்து நடித்த முதல் படம்
79. 1965 கலங்கரை விளக்கம். தயாரிப்பு சரவணா ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் வழக்கறிஞர் ரவி. இயக்கம் கே. சங்கர்.
80. 1965. கன்னித்தாய் தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் கேப்டன் சரவணன் இயக்கம் எம். ஏ. திருமுகம்.
81. 1965 தாழம்பூ. தயாரிப்பு ஸ்ரீ பாலமுருகன் ஃபிலிம்ஸ் .கதாபாத்திரம் துரை (பட்டதாரி). இயக்கம் என். எஸ். ராமதாஸ்
82 . 1965 ஆசை முகம். தயாரிப்பு மோகன் புரொடக்சன்ஸ்.கதாபாத்திரம் மனோகர், வஜ்ரவேலு . இயக்கம் பி. புல்லையா
83. 1966 அன்பே வா. தயாரிப்பு ஏவி. எம். புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் பாலு/முதலாளி ஜே. பி. இயக்கம் ஏ. சி. திருலோகச்சந்தர்
84. 1966 நான் ஆணையிட்டால் தயாரிப்பு சத்யா மூவீஸ். கதாபாத்திரம் பாஷா அல்லது பாண்டியன். இயக்கம் சாணக்யா .
85. 1966 முகராசி தயாரிப்பு தேவர் பிலிம்ஸ். கதாபாத்திரம் போலீஸ் அதிகாரி ராமு. இயக்கம் எம். ஏ. திருமுகம்.
ஜெமினி கணேசனோடு சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்
86 . 1966 நாடோடி. தயாரிப்பு பத்மினி பிக்சர்ஸ். கதாபாத்திரம் தியாகு. இயக்கம் பி. ஆர். பந்துலு
87. 1966 சந்திரோதயம். தயாரிப்பு - சரவணா ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் பத்திரிகையாளர் சந்திரன். இயக்கம் கே. சங்கர்.
88. 1966 தாலி பாக்கியம். தயாரிப்பு வரலட்சுமி பிக்சர்ஸ். கதாபாத்திரம் - முருகன் இயக்கம் - கே. பி. நாகபூஷணம் ( இயக்குனர் நடிகை கண்ணாம்பாளின் கணவர் )
89. 1966 தனிப் பிறவி. தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - இரும்புத் தொழிலாளி முத்தையா. இயக்கம் எம். ஏ. திருமுகம்
90. 1966 பறக்கும் பாவை . தயாரிப்பு - ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் - ஜீவா, டாக்சி ஓட்டுநர் . இயக்கம் டி. ஆர். ராமண்ணா
91. 1966 பெற்றால்தான் பிள்ளையா. தயாரிப்பு ஸ்ரீ முத்துக்குமரன் பிக்சர்ஸ். கதாபாத்திரம் - ஆனந்தன் (அனாதை). இயக்கம் - கிருஷ்ணன்-பஞ்சு
எம். ஆர். ராதாவுடன் சேர்ந்து நடித்த இருபத்தைந்தாவதும் இறுதியுமான திரைப்படம்
92 . 1967 தாய்க்குத் தலைமகன். தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - மருது. இயக்கம் - எம். ஏ. திருமுகம் .
இத்திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாள் (12. சனவரி 1967) எம். ஜி. ஆரை எம். ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினார்.
93. 1967 அரச கட்டளை . தயாரிப்பு - சத்தியராஜா பிக்சர்ஸ். கதாபாத்திரம் - விஜயன். இயக்கம் -எம். ஜி. சக்ரபாணி.
எம். ஜி. ஆரோடு பி. சரோஜாதேவி நடித்த கடைசித் திரைப்படம்
94 . 1967 காவல்காரன். தயாரிப்பு - சத்யா மூவீஸ். கதாபாத்திரம் - மணி (ஓட்டுநர்). இயக்கம் ப. நீலகண்டன் .
95. 1967 விவசாயி. தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் - முத்தையா . இயக்கம் - எம். ஏ. திருமுகம் .
96. 1968 ரகசிய போலீஸ் 115. தயாரிப்பு - பத்மினி பிக்சர்ஸ். கதாபாத்திரம் - ராமு, இயக்கம் - பி. ஆர். பந்துலு .
97. 1968 தேர்த் திருவிழா தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - சரவணன்
இயக்கம் - எம். ஏ. திருமுகம் .
98 . 1968 குடியிருந்த கோயில். தயாரிப்பு - சரவணா ஸ்க்ரீன்ஸ் .கதாபாத்திரம் - ஆனந்த் & பாபு. இயக்கம் - கே. சங்கர்.
99. 1968 கண்ணன் என் காதலன். தயாரிப்பு - சத்யா மூவீஸ் . கதாபாத்திரம் -"பியானோ" கண்ணன். இயக்கம் - ப. நீலகண்டன் .
100. 1968 ஒளி விளக்கு. தயாரிப்பு - ஜெமினி ஸ்டூடியோஸ் . கதாபாத்திரம் - முத்து. இயக்கம் - சாணக்யா. ஜெமினி நிறுவனத்தில் நடித்த ஒரே திரைப்படம்.
101 . 1968 கணவன். தயாரிப்பு - வள்ளி ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - வேலையா. இயக்கம் -ப. நீலகண்டன் .
102. 1968 புதிய பூமி. தயாரிப்பு - ஜே. ஆர். மூவீஸ். கதாபாத்திரம் -டாக்டர் கதிரவன். இயக்கம் - சாணக்யா.
103. 1968 காதல் வாகனம் . தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம்- சுந்தரம். இயக்கம் எம். ஏ. திருமுகம் .
104. 1969 அடிமைப் பெண். தயாரிப்பு -
எம். ஜி. ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் - வேங்கைமலை அரசன் (தந்தை),
இளவரசன் வேங்கையன் (மகன்) இயக்கம் - கே. சங்கர். எம்ஜிஆர் சொந்த தயாரிப்பு.
105 . 1969 நம் நாடு. தயாரிப்பு - விஜயா இன்டர்நேஷனல்.கதாபாத்திரம்- துரை . இயக்கம் - சி. பி. ஜம்புலிங்கம்
1970 களில் நடித்த படங்கள்
106 . 1970 மாட்டுக்கார வேலன் தயாரிப்பு - ஜெயந்தி ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - வேலன் & ரகுநாத். இயக்கம் -ப. நீலகண்டன். இரட்டை வேடம்
107. 1970 என் அண்ணன். தயாரிப்பு - வீனஸ் பிக்சர்ஸ். கதாபாத்திரம் -ரெங்கன். இயக்கம் - ப. நீலகண்டன்
108. 1970 தலைவன். தாமஸ் பிக்சர்ஸ். கதாபாத்திரம் - இரகசிய போலீஸ் இளங்கோ. இயக்கம் - பி. ஏ. தாமஸ் & சிங்கமுத்து
109. 1970 தேடிவந்த மாப்பிள்ளை. தயாரிப்பு - பத்மினி பிக்சர்ஸ் கதாபாத்திரம் - சங்கர் . இயக்கம் -பி. ஆர். பந்துலு .
110. 1970 எங்கள் தங்கம் தயாரிப்பு - மேகலா பிக்சர்ஸ். கதாபாத்திரம் - தங்கம் இயக்கம் - கிருஷ்ணன்-பஞ்சு
111. 1971 குமரிக்கோட்டம் தயாரிப்பு - கே. சி. ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - கோபால். இயக்கம் ப. நீலகண்டன் .
112. 1971 ரிக்*ஷாக்காரன் தயாரிப்பு - சத்யா மூவீஸ் கதாபாத்திரம் - செல்வம் . இயக்கம் - எம். கிருஷ்ணன் நாயர். சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது
113. 1971 நீரும் நெருப்பும். தயாரிப்பு - நியூ மணி ஜே சினி புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் இளவரசன் மணிவண்ணன் & இளவரசன் கரிகாலன். இயக்கம் - ப. நீலகண்டன். இரட்டை வேடம்.
114 . 1971 ஒரு தாய் மக்கள். தயாரிப்பு - நாஞ்சில் புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் - கண்ணன். இயக்கம் - ப. நீலகண்டன் .
115 . 1972 சங்கே முழங்கு தயாரிப்பு - வள்ளி ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் -முருகன். இயக்கம் - ப. நீலகண்டன் . லட்சுமியுடன் ஜோடியாக நடித்த முதல் திரைப்படம்
116. 1972 நல்ல நேரம் தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - ராஜு. இயக்கம் - எம். ஏ. திருமுகம் . தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் நடித்த இறுதி திரைப்படம்
117. 1972 ராமன் தேடிய சீதை தயாரிப்பு - ஜெயந்தி ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் - கோடீஸ்வரர் எஸ். ஜே. ராமன் . இயக்கம் - ப. நீலகண்டன்
118 . 1972 நான் ஏன் பிறந்தேன் தயாரிப்பு - காமாட்சி ஏஜென்சீஸ் கதாபாத்திரம் - கண்ணன். இயக்கம் -எம். கிருஷ்ணன் நாயர்
119. 1972 அன்னமிட்ட கை தயாரிப்பு - ராமச்சந்திரா புரொடக்சன்ஸ். கதாபத்திரம் - துரைராஜ். இயக்கம் -எம். கிருஷ்ணன் நாயர் எம்ஜிஆர் நடித்த கடைசி கருப்பு-வெள்ளை திரைப்படம்
120. 1972 இதய வீணை தயாரிப்பு - உதயம் புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - சௌந்தரம் இயக்கம் - கிருஷ்ணன்-பஞ்சு . திமுக உறுப்பினராக இறுதி திரைப்படம்
121 . 1973 உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பு - எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கதாபாத்திரம் - விஞ்ஞானி முருகன் &
ராஜு. எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இரண்டாவது திரைப்படம்
122. 1973 பட்டிக்காட்டு பொன்னையா தயாரிப்பு - வசந்த் பிக்சர்ஸ் கதாபாத்திரம் - பொன்னையா & முத்தையா இயக்கம் - பி. எஸ். ரெங்கா. ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்த கடைசிப் படம்
123 . 1974 நேற்று இன்று நாளை தயாரிப்பு - அமல்ராஜ் ஃபிலிம்ஸ் (அசோகன்) கதாபாத்திரம் - மாணிக்கம் என்ற ரத்தினம் மற்றும்
குமார். இயக்கம் - ப. நீலகண்டன் .
124 . 1974 உரிமைக்குரல் தயாரிப்பு - சித்ராலயா ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் - கோபிநாத் (கோபி) இயக்கம் - சி. வி. ஸ்ரீதர் ஸ்ரீதர் இயக்கத்தில் நடித்த முதல் திரைப்படம்
125 . 1974 சிரித்து வாழ வேண்டும் தயாரிப்பு - உதயம் புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் உஸ்தாத் அப்துல் ரஹ்மான். இயக்கம் - எஸ். எஸ். பாலன்.
126 . 1975 நினைத்ததை முடிப்பவன் தயாரிப்பு - ஓரியன்டல் பிக்சர்ஸ் கதாபாத்திரம் - சௌந்தரம் (பாடகன்) மற்றும்
ரஞ்சித் குமார் (வியாபாரி) இயக்கம் - ப. நீலகண்டன் . எஸ். ஏ. அசோகனுடன் நடித்த 59 ஆவதும் இறுதியுமான திரைப்படம்
127. 1975 நாளை நமதே தயாரிப்பு - கஜேந்திரா ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் - சங்கர் மற்றும் விஜயகுமார் இயக்கம் - கே. எஸ். சேதுமாதவன்
128. 1975 இதயக்கனி தயாரிப்பு - சத்யா மூவீஸ் கதாபாத்திரம் - போலீஸ் அதிகாரி மோகன் இயக்கம் - ஏ. ஜெகந்நாதன்
ராதா சலூஜாவுடன் நடித்த முதல் திரைப்படம்
129 . 1975 பல்லாண்டு வாழ்க தயாரிப்பு - உதயம் புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - ராஜன் (சின்னையா - உதவி சிறை அதிகாரி) இயக்கம் - கே. சங்கர்.
130 . 1976 நீதிக்குத் தலைவணங்கு தயாரிப்பு - ஸ்ரீ உமையாம்பிகை புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - விஜய் இயக்கம் ப. நீலகண்டன்
131. 1976 உழைக்கும் கரங்கள் தயாரிப்பு - கே சீ ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் - ரெங்கன் இயக்கம் - கே. சங்கர். புரட்சித் தலைவர் 30 வருடங்களுக்கு முன் ஸ்ரீ முருகன் திரைப்படத்தில் ஆடியபின் இத்திரைப்படத்தில் பரமசிவனாக நடனம் ஆடினார்.
132 1976 ஊருக்கு உழைப்பவன் தயாரிப்பு - வீனஸ் பிக்சர்ஸ் கதாபாத்திரம் - போலீஸ் அதிகாரி செல்வம் மற்றும் தொழிலதிபர் ராஜா இயக்கம் - எம். கிருஷ்ணன் நாயர்
133. 1977 இன்றுபோல் என்றும் வாழ்க தயாரிப்பு - சுப்பு புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - விவசாயி முருகன் இயக்கம் - கே. சங்கர். ராதா சலூஜாவுடன் நடித்த இரண்டாவதும் இறுதியுமான திரைப்படம்
134. 1977 நவரத்தினம் தயாரிப்பு- சி. என். வி. மூவீஸ் கதாபாத்திரம் - கோடீஸ்வரர் தங்கம் இயக்கம் - ஏ. பி. நாகராஜன்
சிறப்பு 9 கதா நாயகிகளுடன் நடித்தார்.
135 . 1977 மீனவ நண்பன் தயாரிப்பு- முத்து எண்டர்பிரைசஸ் குமரன் இயக்கம்-ஸ்ரீதர் .
136 . 1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தயாரிப்பு-சோலேஸ்வர் கம்பைன்ஸ் கதாப்பாத்திரம்-பைந்தழிழ் குமரன் அல்லது இளவரசன் சுந்தர பாண்டியன் இயக்கம்-எம்ஜிஆர் & கே. சங்கர்
1990 களில் வெளிவந்த படங்கள்
137 1990 அவசர போலீஸ் 100 சுதா சினி மூவீஸ்.கதாபாத்திரம் ராஜு. கே. பாக்யராஜ் முடிக்கப்படாத அண்ணா நீ என் தெய்வம் என்ற எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம் இத் திரைப்படத்துடன் சேர்க்கப்பட்டது. எம். என். நம்பியாருடன் சேர்ந்து நடித்த கடைசி திரைப்படம்
138 1991 நல்லதை நாடு கேட்கும் ஜேப்பியார் பிக்சர்ஸ்..........vrh