Originally Posted by
Baskar Trichi
வணக்கம். மக்கள்திலகத்தின் அன்பு ரசிக நண்பர்கள் இன்று 14/08/2015 அவர்கள் திரியில் 1975 இல் வெளியான படங்களில் இதயக்கனி மட்டுமே
சென்னை தவிர பிற நகரங்களில் 100 நாட்கள் ஓடியது என்று திரு முக்தாசீனிவாசன் இதயக்கனி வெற்றி விழாவில் பேசியதாக செய்தி பதிவிட்டு
உள்ளார்கள். இந்த செய்தி ஏற்கனவே பதிவிடப்பட்டு அதற்கு ரவிகிரன் சார் 1975 இல் வெளிவந்து 100 நாட்கள் ஓடிய சிவாஜி நடித்த அவன்தான்மனிதன்
100 நாட்கள் ஓடிய விளம்பர பதிவை போட்டு உண்மையை உலகுக்கு சொல்லி விட்டார் !
அவன்தான் மனிதன் 100 நாட்கள் ஓடிய திரைகள்
சென்னை - சாந்தி கிரௌன் புவனேஸ்வரி
திருச்சி - ராஜா
மதுரை - சென்ட்ரல்
சேலம் - ஜெயா
எனக்கு தெரிந்து திருச்சி, மதுரை,சேலம் மூன்றும் சென்னைக்கு வெளியில் தான் உள்ளது என நினைக்கிறேன் !
மக்கள் திலகத்தை வானளாவ புகழ்ந்து பேசிய முக்தா அவர்கள் ஏன் அவரை வைத்து ஒரு படம் கூட தயாரிக்காமல் சிவாஜியை வைத்து பல படங்கள்
தொடர்ந்து தயாரித்தார் என்றும் சொல்லியிருக்கலாம் !
நன்றி !