Originally Posted by saradhaa_sn
ஆலயமணி, ஆண்டவன் கட்டளை படங்களுக்குப்பிறகு 'மாற்று முகாம்' இய்க்குனர் கே.சங்கர் மீண்டும் இப்படத்தில் நடிகர்திலகத்துடன் இணைந்தார். கே. வி. மகாதேவன் மாமா இசையமைத்துள்ளார்.
நடிகர் திலகத்தின் சூப்பர் ஜோடியான தேவிகாதான் இப்படத்தின் நாயகி. 'உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா' பாடலில் பாவாடை தாவணியில் அழகாக ஆடி வருவார். 'காகிதத்தில் கப்பல் செய்து' பாடலில் நடிகர்திலகம் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 'ஒண்ணாயிருக்க கத்துக்கணும்' என்ற தத்துவப்பாடலும் இவருகுத்தான். நடிகர்திலகத்தின் தங்கையாக மணிமாலா. அவரது ஜோடியாக பாலாஜி. இருவருக்கும் அருமையான டூயட் பாடல். பி.பி.எஸ்., மற்றும் சுசீலா குரலில் 'இரவு முடிந்து விடும்... முடிந்தால்..., பொழுது விடிந்துவிடும்' என்ற தேன் சொட்டும் பாடல்.
நகைச்சுவைக்கு நாகேஷ் உண்டு. கருப்பு வெள்ளைப்படமானாலும், ரயில்வே ஸ்டேஷன் வெளிப்புறக்காட்சிகள் மனதைக்கவரும்.
இது இன்ட்ரொடக்ஷன்தான், எல்லோரும் தவறாமல் இன்றிரவு பார்க்க வேண்டும் என்பதற்காக....