tk u sailesh basu sir
Printable View
என்றுமே வசூல் சக்ரவர்த்தி எங்கள் எம்ஜிஆர்தான்...எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பட்டத்தை தக்க வைத்துகொண்டிருக்கும் தனிப்பெரும் தலைவர் எங்கள் தங்கம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று...ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒப்பிலியப்பன் எங்கள் இதய தெய்வம் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்வோம்...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,காலை சிற்றுண்டி அருந்திவிட்டு ,வெளியே கிளம்ப தயாராகிறார் . அப்பொழுது அவரை அடிக்கடி சந்திக்கும் செல்வாக்கு உள்ள ஒருவர் தன் நண்பர் முருகேசன்(பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவருடன் தலைவரை பார்க்க வந்துள்ளார் . அவரை பார்த்த மக்கள் திலகம் , முதலில் சாப்பிட சொல்கிறார் . பின் உதவி ஏதாவது செய்யனுமா என்று தலைவரே கேட்டுள்ளார் .
வந்தவர் சொன்னார் ,"அண்ணே இவர் பெயர் முருகேசன் ; தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை நடத்திவருகிறார் . அதில் ஒரு சிக்கல் ,கடை சற்று ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது ,இதை காரணமாக வைத்துக்கொண்டு , இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது . வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன் . " என்றார் .
தலைவர் சில நொடி யோசித்துவிட்டு ,புன்னகையுடன் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் .
அதன் பின் மூன்று நாட்கள் ,கோட்டையிலிருந்து வீட்டிற்கு தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார் .போகும்பொழுது பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார் .ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம் , முதல்வராக இருந்துகொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தே வைத்திருந்தார் .
அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார் . பீடா கடை அருகே வந்ததும் , பத்துமீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார். அதிகாரிகளுக்கோ குழப்பம் , திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு , பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .
தலைவர் நம்ம கடையை நோக்கி வர்றாரே என்று முருகேசனுக்கும் குழப்பம் .செய்வதறியாது நிற்கிறார். பீடா கடையை அடைந்த தலைவர் , "என்ன முருகேசா , இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணம் . தொழில் லாம் எப்படி போகுது ? என்று ரொம்ப நாள் பழகிய நண்பன் போல் முருகேசனுடன் உரையாடுகிறார் . முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உளறுகிறார் .
"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா "என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி , கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா ? அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா ? சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம் என்று ஆளாளுக்கு தாங்கள் கேள்விப்பட்டதை பரப்பிவிடுகிறார்கள் .தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது . வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன் ,பின்னாளில் அவர் கிட்டேயே ரெக்கமன்ட் க்கு வந்தது வேறு விஷயம்
#தலைவர் நினைத்திருந்தால் , தொல்லை கொடுத்தவர்களை போனில் மிரட்டியிருக்கலாம் , அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ , தலைவருக்கோ தகுதியான குணமல்ல .வேறு யாராக இருந்திருந்தால் , இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள் ,இல்லையெனில் ,போனில் மிரட்டியிருப்பார்கள் . அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை நம் கலியுகக் கர்ணனுக்கு மட்டுமே உண்டு . இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்
KP Ramesh in Face book.
ரவிச்சந்திரன் ஸார்,
இன்னும் நிறைய பதிவுகள் காண வாழ்த்துகள்.
EN KADAMAI -1964
http://i43.tinypic.com/2i9p4ao.png
கருணை உள்ளங்கள்..
http://i41.tinypic.com/2m6q4jc.jpg
நமது இதய தெய்வத்தின் தீவிர ரசிகர் கடலூர் திரு. தயாள் அவர்கள் கொடுத்த புகைப்படங்கள் இவை...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
MAKKAL THILAGAM MGR 'S SUPER FOOTBALL PLAY WITH ELEPHANTS IN NALLA NERAM
http://www.youtube.com/watch?v=u_xUT...QIJ_q7Ap2gq-vw
சமீபத்தில் திரைக்கு வந்து ஓடி கொண்டிருக்கும் தில்லுமுல்லு படத்தில் கதாநாயகி கதாநாயகனை பார்த்து 'அன்பு காட்டுவதில் எம்ஜிஆர்' போல் என்பார்..அப்போது சிரித்து வாழவேண்டும் எம்ஜிஆரை காட்டுவார்கள்..அதே போல் ஒரு சண்டைகாட்சியில் ஆயிரத்தில் ஒருவன் சுவரொட்டியை பின்னணியில் காட்டுவார்கள்...இன்னும் தலைவரின் தாக்கம் திரையில் தொடரும்...நமது தெய்வம் இல்லாமல் இதுவரையிலும்... இனிமேலும் திரையுலகே இல்லை...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..
படம் சொல்லும் செய்தி
http://i43.tinypic.com/mslr9x.jpg
புதுச்சேரியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அறக்கட்டளை நடத்தி வரும் திரு. பி.கே. லோகநாதன் அவர்களை அறியாதவர் புதுச்சேரியில் இருக்க வாய்ப்பில்லை. அவர் அதிமுகவில் ஒரு முன்னாள் எதிர்கட்சித்தலைவராக இருந்தவர்..தற்போது அரசியலில் இருந்து விலகி தலைவர் புகழ் பாடி வருகிறார்..ஒவ்வொரு ஆண்டும் தலைவரின் நினைவாக எம்ஜிஆர் இலக்கிய விழா என்று இரண்டு நாட்கள் விழா எடுப்பார்..அவ்விழாவில் நலத்திட்ட உதவிகள், அரசியல், மருத்துவம், கலை, இலக்கியம், சமூக சேவை என ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்படுபவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எம்ஜிஆர் விருது வழங்குவார். சமீபத்தில் அவர் நிகழ்த்திய இலக்கிய விழாவில் எங்களின் 'பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையை' சிறந்த சமூக சேவை மன்றமாக தேர்ந்தெடுத்து விருது வழங்கினார்.விருதினை புதுச்சேரி மின்துறை அமைச்சர் திரு. தியாகராஜன் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
விழாவிற்கு வந்திருந்த திருவண்ணாமலை எம்ஜிஆர் பித்தன் திரு. கலீல் பாஷா. அவருக்கு சிறப்பு செய்யப்படுகிறது
http://i39.tinypic.com/j6gyes.jpg
http://i42.tinypic.com/2le3q5w.jpg
1500 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த அன்புள்ளங்கள்
திரு வினோத்
திரு.கலியபெருமாள்
திரு சைலேஷ்
திரு மாசனம்
மற்றும்
அலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பேராசிரியர் திரு செல்வகுமார் & PAMMALAR ஆகியோருக்கு நன்றி
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------------------------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்கள் திரு கலியபெருமாள் சார்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
1500 பதிவுகளென்ன 1,50,000 பதிவுகளைக் கூட சலக்காமல் சிறந்த முறையில் தரும் வல்லமை படைத்தவர் ரவிச்சந்திரன் அவர்கள். தன் உடல் நிலையைக் கூட பொருட் படுத்தாமல் உழைத்து சிறப்பு சேர விழையும் அவருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 19
46-ம் ஆண்டு துவக்கம் [1968 - 2013]
புதிய பூமி [வெளியான தேதி : 27.6.1968]
மக்கள் திலகத்தின் 98வது திரைக்காவியம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 25.6.1968
http://i1110.photobucket.com/albums/...c1aea50e02.jpg
குறிப்பு:
சிங்காரச் சென்னையில் "புதிய பூமி":
1. குளோப் - 49 நாட்கள்
2. ஸ்ரீகிருஷ்ணா - 49 நாட்கள்
3. மேகலா - 43 நாட்கள்
4. நூர்ஜஹான் - 29 நாட்கள்
பூமி செழிக்கும்.....
அன்புடன்,
பம்மலார்.
ஜே யார் மூவிஸ் ''புதிய பூமி ''
மக்கள் திலகத்தின் 98வது படம் .
வெளியான நாள் . 27-6-1968
45 ஆண்டு நிறைவு நாள் .
மக்கள் திலகம் எம்ஜியார் - திருமதி ஜானகி இவர்களின்
பெயரில் ஜானகி எம்ஜியார் என்பதை ,சுருக்கி ஜே யார் மூவிஸ்
என்று 1966ல் துவங்கி 1968ல் படம் வெளியானது .
மக்கள் திலகம் டாக்டராக . கதிரவன் என்ற பெயரில் நடித்த படம் .
இயக்குனர் குகநாதன்
கதாசிரியர் thennarasu அறிமுக படம் .
பாடலாசிரியர் பூவை செங்குட்டவன் எழுதிய மிகவும் புகழ்
பெற்ற பாடல் '' நான் உங்கள் வீட்டு பிள்ளை ''
கண்ணதாசனின் இரு பொருள் வாக்கியமான ''வளை '' என்ற
''சின்னவளை முகம் சிவந்தவளை''
''விழியே விழியே உனக்கென்ன வேலை ''
போன்ற இனிய பாடல்கள் .
இனிமையான பொழுது போக்கு நிறைந்த படம் .
மக்கள் திலகம் மிகவும் சிறப்பாக நடித்து இருப்பார் .
சுமாரான வெற்றி படம் .
நன்றி .... நன்றி . நன்றி
பம்மலார் சார்
இனிய காலை வணக்கம்
புதிய பூமி
அருமையான விளம்பரத்துடன் இன்று வருகை புரிந்துள்ள
உங்களுக்கு திரியின் சார்பாக நன்றி .
A very GOOD MORNING & Thank You, esvee Sir !
மக்கள் திலகத்தின் புதியபூமி குறித்த படங்களைப் பதிவு செய்த வினோத் ஸார் &
புதிய பூமி வெளியீட்டின் முரசொலி விளம்பரத்தை தந்த பம்மலார் அவர்களுக்கு நன்றி.
1500 அற்புதமான அர்த்தம் நிறைந்த பதிவுகள். பாராட்டுக்கள், நன்றி திரு. ரவிச்சந்திரன் சார்,
தங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
வ.ஜெய்சங்கர்.
1968.....எண்ண அலைகள்
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள் .
மக்கள் திலகத்தின் 100 வது படம்
ஒளிவிளக்கு
மதுரை மீனாக்ஷி அரங்கில் தொடர்ந்து 110 காட்சிகள் அரங்கு நிறைந்து - 147 நாட்கள் - 21 வாரங்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த படம் .
ஒரு நடிகரின் 100 வது படம் , அதுவும் மதுரை நகரில் அட்டகாசமான சாதனைகள் செய்தது என்றால் அது நம் மக்கள் திலகம் எம்ஜியார் ஒருவரின் படம் மட்டுமே .
குடியிருந்த கோயில்
மதுரை நியூ சினிமாவில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 133 நாட்கள் ஓடியது மாபெரும் சாதனை .
கண்ணன் என் காதலன்
மதுரை - சிந்தாமணியில் 91 நாட்கள் ஓடியது .
ரகசிய போலீஸ் 115
மதுரை - சிந்தாமணியில் 10 வாரங்களுக்கு மேல் ஓடியது .
கணவன்
மதுரை தங்கம் - 8 வாரங்கள்
புதியபூமி
மதுரை - அலங்கார்
69 நாட்கள் ஓடியது .
தேர்த்திருவிழா - காதல் வாகனம்
இரண்டு படங்கள் மட்டும் 6 வாரங்கள் குறைந்த அளவிற்கு ஓடியது .
THANKS TFMLOVER SIR
http://i871.photobucket.com/albums/a...udhiya-MGR.gif
மக்கள் திலகம் எம்ஜியார் ரசிகர்களுக்கு மறக்க முடியாத மதுரைமாநகரில் வெற்றி பவனி வந்த படங்கள் .
1950- மருத நாட்டு இளவரசி
1951- மந்திரிகுமாரி
1952- என்தங்கை
1954- மலைக்கள்ளன்
1955 - குலேபகாவலி
1956- மதுரை வீரன்
1957- சக்ரவர்த்தி திருமகள்
1958 - நாடோடி மன்னன்
1960 - பாக்தாத் திருடன்
1961- திருடாதே / தாய் சொல்லை தட்டாதே
1962- தாயை காத்த தனயன்
1963- நீதிக்கு பின் பாசம்
1964- பணக்கார குடும்பம்
1965- எங்க வீட்டு பிள்ளை
1966- அன்பேவா
1967 - காவல்காரன்
1968 - ஒளிவிளக்கு / குடியிருந்தகோயில்
1969- அடிமைபெண் / நம்நாடு
1970- மாட்டுக்கார வேலன் / எங்கள் தங்கம்
1971- குமரிகோட்டம் / ரிக்ஷாக்காரன்
1972 - நல்ல நேரம் / இதயவீணை
1973 - உலகம் சுற்றும் வாலிபன்
1974 உரிமைக்குரல் / நேற்று இன்று நாளை
1975 - இதயக்கனி / பல்லாண்டு வாழ்க
1977- இன்றுபோல் என்றும் வாழ்க / மீனவநண்பன் .
1953- 1959- 1976 இந்த மூன்று வருடங்களில் மட்டும் மக்கள் திலகத்தின் 100 நாட்கள் படங்கள் இல்லை .
மக்கள் திலகம் படங்கள் எல்லா பெரு நகரங்களிலும் - சிறு நகரங்களிலும் 1950-1977 வரை தொடர்ந்து 27 வருடங்கள்
தமிழ் திரை உலகில் முடிசூடிய மன்னனாக வாழ்ந்து
வரலாறு படைத்தவர் நம் மக்கள் திலகம் எம்ஜியார் .
மதுரை மாநகர மக்கள் திலகத்தின் சாதனைகள் தொடரும் .
உழைப்பே உயர்வு தரும்..
மக்கள் திலகத்தின் இந்த பொன்மொழியை அவருடைய பக்தர்கள் இன்றளவும் தெய்வத்தின் வாக்காய் எடுத்துக்கொண்டு உழைப்பிலே நம்பிக்கை வைத்து முன்னேறி கொண்டிருக்கிறார்கள்...எத்தனையோ லட்சோப லட்சம் மக்கள் அவருடைய நற்போதனைகளை கேட்டு அதன் வழி நடக்கிறார்கள்...வறுமையாய் இருந்தாலும் தவறான வழியில் நடக்காமல் வாழ்பவர்கள்.. பொதுசேவை மனப்பான்மை கொண்டவர்கள்..மற்றவர்களுக்கு உதவுவதில் இன்பம் காண்பவர்கள்..இத்தகைய பக்தர்களை உருவாக்கி வியக்கத்தக்க சாதனையை நம் தெய்வத்தால் மட்டுமே நிகழ்த்த முடிந்தது..
புதுச்சேரியில் 'உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என்ற பொன்மொழிக்கேற்ப டீக்கடை நடத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் திரு. பரமானந்தம் கூறும்போது..'நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன்..என் கடையில் கூட எந்த தெய்வங்களின் படங்களை வைத்திருப்பது கிடையாது..எம்ஜிஆரின் ஓவிய படத்தை வைத்துதான் பூஜை செய்கிறேன்..அவர்தான் என் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்து வருகிறார்" என்கிறார்.
http://i41.tinypic.com/w2mxd5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திரு பரமானந்தம் வணங்கும் எம்ஜிஆரின் ஓவியம்
http://i40.tinypic.com/533fd1.jpg
புதுச்சேரி லாஸ்பேட்டையில் திரு. துரை ஜெய்ஷங்கர் என்பவற்றின் வீட்டில் எடுத்த புகைப்படங்கள் இவை..எந்த பக்கம் திரும்பினாலும் தெய்வத்தின் திருவுருவே காணப்படுகிறது..இவருடைய மனைவி, இவருடைய மகள் சத்யா, இவருடைய மருமகன் பாண்டியன், அனைவரும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள்..இவருடைய பேத்தி செல்வி..ஜெயசத்யா..தற்போது கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.. எம்ஜிஆரின் தீவிர ரசிகை..அவருடைய புகைப்படங்கள் மற்றும் ஸ்டிக்கர்களை விரும்பி வாங்கி அவர்கள் வீட்டில் ஒட்டி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்..இந்த சிறிய வயதுடைய மாணவியும் எம்ஜிஆர் ரசிகையாய் இருப்பதுதான் தலைவரின் சாதனையாகும்...
http://i41.tinypic.com/ig91er.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்