http://i60.tinypic.com/sxfa7s.jpg
Printable View
ரிலாக்ஸ் பாடல்.
ரொம்ப நாளைக்கு அப்புறம்.
சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.
கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.
http://padamhosting.me/out.php/i58872_RTS1.jpg
பாடலும் படார் படார்தான்.
இசையும் படார் படார்தான்
நடிப்பும் படார் படார்தான்
குரல்களும் படார் படார்தான்
ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.
எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...
நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.
http://i.ytimg.com/vi/B86Gk92C7MM/maxresdefault.jpg
கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.
விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.
'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,
ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.
இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.
'படார் படார் படார்
படார் படார் படார்
படார் படார் படார்'
'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'
அடேயப்பா! என்ன வரிகள்!
அடுத்த வரி டாப்.
தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,
'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)
மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.
அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,
எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,
'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு:)... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்':)
என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.
எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,
'படார் படார் படார்
படார் படார் படார்'
என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,
எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,
'பாடாதே பாடாதே நிப்பாட்டு
அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
படார் படார் படார்
படார் படார் படார்'
என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.
'படார் படார் படார்
படார் படார் படார்
எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...
(டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)
இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'
என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,
'நிப்பாட்டு'
என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.:)
'அடி சூர்ப்பனகை ராணி
மூக்கறுந்த மூலி
நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'
ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.
நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)
http://padamhosting.me/out.php/i58871_RTS2.jpg
தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.
'முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்':)
எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!
நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.
'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.
'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்:)
லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'
இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.
'என்முன் வளைந்து இளம் தென்றலில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
மிதந்து வரும் கைகளில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
வளையலின் டியூன் கேட்கலாம்'
மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,
இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,
இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.
ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.
'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'
என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!
'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'
எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.
'லவ்லி பியூட்டி கமான் சார்!'
எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்
'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'
என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)
அப்படியே இசை மாறும்.
ஈஸ்வரி,
'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'
எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)
பதிலுக்கு எம்.ஜி.ஆர்,
'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'
இப்போது மேடம் டர்ன்.
'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'
(அப்படிப் போடு அருவாள!):)
எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.
'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'
ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.
'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'
(இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)
இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.
'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'
மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.
'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
பலே பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே பலே
வெட்டாத கண்ணைக் கொண்டு
முட்டாத நெஞ்சைக் கொண்டு
கட்டாயம் காதலுண்டு
திட்டாதே என்னைக் கண்டு
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.
அப்பாடா!
பாடல் முடிவடையும்.
எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.
பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.
எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.
எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.
பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.
'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'
வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார்.:) 'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!
நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.
நீங்க எப்படி? பார்த்துட்டு சொல்லுங்கோ!
https://youtu.be/B86Gk92C7MM
அக்டோபர் 17-20 தேதியிட்ட, வாரம் இருமுறை வரும் "நக்கீரன்" பத்திரிகையில், மறைந்த அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ் எழுதி வரும் தொடரில் இந்த வாரம் நம் பொன்மக்னசெம்மலை பற்றிய ஒரு செய்தி - திரி அன்பர்கள் பார்வைக்கு :
http://i60.tinypic.com/o6l6cg.jpg
http://i62.tinypic.com/24bpvmu.jpg
http://i59.tinypic.com/sylc7k.jpg
தனது வியாபாரத்துக்காக, நம் பொன்மனச்செம்மல் நடித்த "ராமன் தேடிய சீதை" என்ற தலைப்பில் படம் எடுத்த, அகந்தை - ஆணவம் - மண்டைக்கணம் பிடித்த சுயநலவாதி, அறிவு ஜீவி போல் தன்னை காட்டி கொள்ளும் இயக்குனர் சேரன், தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்களை பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும், நடிகர் ரித்தீஷ் அவர்களை பற்றியும் விமர்சனம் செய்ததை கண்டித்து, அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நடிகர் விஜய் கார்த்திக் தலைமை ரசிகர் மன்றம் சார்பில், சென்னை நகரின் பிரதான பகுதிகளில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. சுவரொட்டியின் புகைப்படம் பின்னர் பதிவிடப்படும்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்காக தேவைப்பட்ட இடத்தை வாங்க, தான் நடித்த மூன்று படங்களின் சம்பளத்தை அளித்தவர் தான், கலியுக கடவுள், கொடை வள்ளல் நம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள். இடத்தை நம் இதய தெய்வம் மக்கள் திலகம் பொன்மனசெம்மலும், கலைவாணர் அவர்களும் தெரிவு செய்து வாங்கினர்.
பின்னர், அதில் அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அந்த இடத்தில், நம் புரட்சித்தலைவரின் ஆலோசனைப்படி கட்டிடம் கட்டினார். இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர். அவர்கள் உட்பட பலர் இந்த கட்டிடத்துக்கான நிதி வசூல் செய்து அளித்துள்ளனர். இந்த வரலாற்று உண்மை தெரியாமல், நடிகர் சங்க தேர்தலில், நடிகை ராதிகா உட்பட சிலர் உளறி திரிகின்றனர். இது பற்றி ஆதாரத்துடன் கூடிய செய்தி, விரைவில் பதிவிடப்படும்.
பின் குறிப்பு :
சங்கத்தின் LOGOவை
http://i59.tinypic.com/k30z1d.jpg
வடிவமைத்து,
"நடிகன் குரல்" http://i61.tinypic.com/5z883.jpg
என்ற பத்திரிகையை ஆரம்பித்து வைத்தவரும்
நம் மக்கள் திலகம் தான். !
சகோதரர் திரு. முத்தையன் அம்மு கைவண்ணத்தில், உருவான நம் மக்கள் திலகத்தின் "எங்கள் தங்கம்" மற்றும் "தாய் சொல்லை தட்டாதே" காவிய கட்சிகள் வெகு அற்புதம்.
அதிலும் குறிப்பாக, நம் தெய்வத்தின் தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவம் தாங்கிய பத்திரிகையை வைத்திருக்கும் காட்சி மிக மிக மிக மிக............................. அருமை !
[QUOTE=vasudevan31355;1261040][B]ரிலாக்ஸ் பாடல்.
ரொம்ப நாளைக்கு அப்புறம்.
சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.
கொஞ்சம் வித்தியாசமான பாடல்.
http://padamhosting.me/out.php/i58871_RTS2.jpg
நம் பொன்மனசெம்மலின் "ராமன் தேடிய சீதை" காவியத்தை பற்றி, சகோதரர் திரு. வாசுதேவன் அவர்களின் தொகுப்பு வெகு அருமை. பாராட்டுக்கள் கலந்த நன்றி !
http://i57.tinypic.com/1runn4.jpg
மறைந்து ஆண்டுகள் பல கடந்தும், மக்களால் இன்றும் பூஜிக்கப்படும் கடவுள், மதிக்கப்படும் தலைவர், மக்கள் நலனே தன் நலன் என்று கருதி அவர்களுக்காகவே வாழ்ந்த உண்மைத் தலைவர் உத்தமத் தலைவர், நம் இதய தெய்வம் தோற்றுவித்த அனைந்த்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 44வது ஆண்டு துவக்கத்தையொட்டி, பதிவுகள் வழங்கிட்ட, மக்கள் திலகம் திரி அன்பர்களுக்கு நன்றி ! !
http://i61.tinypic.com/2l96cz.jpg
தற்போது முரசு தொலைக்காட்சியில், நம் மன்னவனின் "நினைத்ததை முடிப்பவன்" காவியம் ஒளி பரப்பாகி கொண்டிருக்கிறது.
இன்று மக்கள்திலகம் அட்டகாச வாள் வீச்சில் கலக்கலோ கலக்கல் --- என வியாபித்த "நீரும் நெருப்பும்" வெளியாகி ரசிகர்கள் உள்ளம் கவர்ந்த நாள்...இந்த காவியம் தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியை விடவும் ஸ்ரீ லங்காவில் மகோன்னத வசூலை கண்டது..."b" &" c" சென்டர்களில் அமோகமாக வெற்றியை ருசித்தது...
மக்கள்திலகம் - பல்முனை மாண்புகளை விவரித்திருக்கும் அருமை சகோதரர் பொன்ராஜ் அவர்களின் கட்டுரையை இங்கே அளித்திருக்கும் பாச நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி...
நடிகர் சங்கத்தை துவக்கிய காலத்தில் மன்னாதி மன்னன் - ஆக திகழ்ந்த மக்கள்திலகம் அந்த அமைப்புக்கு என்னவொரு பொருத்தமாகவும், பெருந்தன்மையாகவும் " தென்னிந்திய நடிகர் சங்கம் " என்று பெயர் வைத்தார்கள்... இன்று அதன் பெயரைத்தான் மாற்ற முயல்கிறார்களே தவிர அதனால் சக நடிக,நடிகையருக்கு என்ன நன்மை விளைந்திடும் என எண்ணி பார்க்க வேண்டும்... அதுவே மக்கள்திலகம் அவர்களின் முயற்சிக்கு பெருமை சேர்க்கும்...
http://s1.postimg.org/t4r2pjr3j/SCAN0000.jpg
MAKKAL THILAGAM - M.A. THIRUMUGAM - DEVAR
Courtesy : Dinamalar Vaaramalar.
சென்னை சரவணாவில் 16/10/15 முதல் மக்கள் திலகத்தின் " நீரும் நெருப்பும் " தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது
இந்த ஆண்டில் இணைந்த 24வது எம்.ஜி.ஆர் வாரம்
http://i57.tinypic.com/25ri1zp.jpg
http://i60.tinypic.com/2sb4sa9.jpg
தகவல் உதவி திரு.பாண்டியன் (ஓட்டேரி)
Makkal thilagam m.g.r in idhaya veenai 44th anniversary today.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் களேபரங்கள் 18-10-2015 அன்று மிகவும் விசித்திரமானவையாக இருந்தன. ஒருவர் மீது ஒருவர் தனி நபர் விமர்சனங்கள் அதிகமாக இருந்ததேயன்றி சங்கத்தின் முன்னோடிகள் சங்கத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு செயலாற்றிய நிகழ்வுகள் போன்ற விவரங்களை அந்த தருணத்தில் மக்களுக்கு எடுத்துக் கூற யாரும் இல்லாத நிலை மிகவும் வருந்த தக்கது. குறிப்பாக புரட்சித் தலைவர் அவர்கள் நடிகர் சங்க வளர்ச்சிக்கு மிக அதிக அளவில் சிறப்பாக செயல்பட்டவர். இது குறித்து முன்பே நாம் பத்திரிக்கை இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளோம். தேர்தல் நடந்து கொண்டிருந்த அந்த தருணத்தில் புரட்சித் தலைவர் நடிகர் சங்கத்திற்கு ஆற்றிய வளர்ச்சிப் பணிகள்- கொண்டிருந்த ஈடுபாடு- செய்துள்ள புதுமைகள் என பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் ஏராளம் இருக்க ஊடங்களுக்கு முன்னால் பேசிய அனைவரும் ஒருவர் மீது ஒருவர் தனிநபர் விமர்சனங்கள் வைத்தார்களேயன்றி எவரும் சங்க முன்னோடிகள் குறித்த பெருமைகளை பேசவில்லை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடிகர் சங்கத்திற்கு செய்துள்ள உதவிகள் செயல்பாடுகள் போன்றவை இனி எவரும் அங்கு செய்ய முடியாத அளவிற்கு செயலாற்றியுள்ளார். இன்று நடிகர் சங்கத்தின் அடையாளசின்னமான ஒரு தாய் நான்கு குழந்தைகளை அரவணைத்து செல்வதாக உள்ள அந்த அடையாள சின்னத்திற்கு ஆலோசனை சொல்லி அதை செயல்படுத்தியதே புரட்சித் தலைவர் தான் என்பதை யாருமே நினைவு கொள்ளவில்லை --ஆம் நமது தாய் சங்கமான தமிழ் பேசும் நடிகர் சங்கம் மற்ற மொழி பேசும் கலைஞர்ளை அரவணைத்து செல்வதாக இருக்க வேண்டும் கலை தாய்க்கு இன மொழி வேற்றுமைகள் இல்லை. எனவே மற்ற மொழி பேசும் கலைஞர்களும் கலைத்தாயின் பிள்ளைகள்தான் என பழம்பெரும் இயக்குனரும் நடிகர் சங்க ஆரம்பகால முன்னோடியுமான கே.சுப்பிரமணியம் அவர்களிடம் எடுத்து கூறி அதற்கான சின்னத்தை புரட்சித் தலைவர் செயல்படுத்திய வரலாற்று நிகழ்வை ஊடகத்தின் முன் பேசிய எவரும் நினைவு கொள்ளவில்லை. நடிகர் சங்கத்திற்கென்று ஒரு பத்திரிகை வேண்டும் அப்போது தான் சங்க விவரங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் என்ற நல் எண்ணத்தில் நடிகன் குரல் என்ற பத்திரிக்கை ஒன்றை தொடக்கி அதற்கு தானே பதிப்பாசிரியராக இருந்து மிகச் சிறப்பாக அதை செயல் படுத்தினார். புரட்சித் தலைவர். முன்பெல்லாம் ஒரு சில காட்சிகளில் நடிப்பவர்களை எக்ஸ்ட்ரா நடிகர்கள் என கூறுவர். இம் முறையை மாற்றியமைத்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் அவர்களை துணை நடிகர்கள் { junior artist } {அ} சகநடிகர்கள் என அழைக்க வேண்டும் என்ற முறையை உருவாக்கியவர் புரட்சித் தலைவர் என்பதை எத்தனை சங்க உறுப்பினர்கள் அறிவார்கள்.? இன்றைய சூழலில் வாக்குகளுக்காக மட்டுமே நாடக நடிகர்களை தேடி சென்று அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையை காண முடிகிறது. ஆனால் அன்று எவ்வித பிரதி பலனுமின்றி அவர்களை அரவணைத்தவர் புரட்சித் தலைவர். குறிப்பாக வறுமையின் காரணமாக சில நடிகர்கள் மாத சந்தாவான 5 ரூபாய் கூட கொடுக்க முடியாமல் இருந்தார்கள். அவர்களின் நிலையை நன்குணர்ந்து அவர்கள் சார்பில் அந்த சந்தாவை புரட்சித் தலைவரே கட்டினார். பெண்களும் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர், அவர்களும் நிர்வாகம் செய்ய இயலும் என நடிகை அஞ்சலி தேவி அவர்களை நடிகர் சங்க தலைவர் ஆக்கி பெண்களை பெருமை படுத்தியதும் புரட்சித் தலைவர் அவர்களே. சங்க உறுப்பினர்கள் மகிழும் வண்ணம் ஆண்டு தோறும் பொங்கல் விழாவை நடிகர் சங்க வளாகத்தில் தனது சொந்த செலவில் நடத்தி அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். சங்கத்தில் தனக்கிருந்த ஈடுபாட்டை உணர்த்தும் வண்ணம் நடிகர் சங்க முத்திரையை தனது கை விரல் மோதிரத்தில் அணிந்து கொண்டார்.- இப்படியாக புரட்சித் தலைவர் நடிகர் சங்கத்திற்கு ஆற்றியுள்ள பணிகள் கணக்கிலடங்காதவை. நடிகர்களுக்கு மற்ற மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ பட்டங்கள் அல்லது கௌவரங்கள் கிடைக்கப் பட்டால் உடனே ஓடிச்சென்று அவர்களுக்கு விழா எடுத்து சிறப்பு செய்வார். இப்படி நடிகர் சங்கத்தில் புரட்சித் தலைவரின் செயற்கரிய நல்ல செயல்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். உலக அரங்கில் இந்திய நடிகர்களுக்கு குறிப்பாக -தமிழ் நடிகர்களுக்கு உயர் அந்தஸ்தை ஏற்படுத்தியவர் புரட்சித் தலைவர். ஆம் தனது கலைப் பணி மற்றும் மக்கள் பணி வாயிலாக மக்களிடம் செல்வாக்கு பெற்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு நடிகர் உலக அரங்கில் முதல் முறையாக பொறுப் பேற்றுக் கொண்டு நடிகர் சமுதாயத்தை உயர்த்தினார். ஆயிரக்கணக்கான நலிந்த நடிகர்களுக்கு ஏராளமான உதவிகளை பல்வேறு வழிகளில் செய்துள்ளவர்.- தான் முதல்வராக அந்த காலங்களிலும் மறைந்த ஏராளமான நடிகர்களின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டவர். இப்படி நடிகர் சங்கத்திற்கான புரட்சித் தலைவரது நற்பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே புதிதாக பதவிஏற்றுள்ள பாண்டவர் அணி புரட்சித் தலைவர் சங்கத்திற்கு செய்துள்ள எண்ணிலங்கா பணிகளை நன்குணர்ந்து புதிதாக அமையவிருக்கும்---
நடிகர் சங்க கட்டடத்திற்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டுவது சாலச் சிறந்ததாக இருக்கும் என்பதோடு உலக தமிழர்கள் அனைவரும் இதனால் மெத்த மகிழ்வு கொள்வார்கள் என்பதையும் நினைவு கூற விரும்புகிறோம். அப்படி ஒரு வேளை வேறு சில காரணங்களால் அப்படி செய்ய இயலாமல் போனால் புரட்சித் தலைவரின் முழு உருவ வெண்கலச் சிலையை குறைந்த பட்சம் கட்டிட வளாகத்தில் அமைக்க முன் வரலாம். அப்படி செய்யும் பட்சத்தில் எதிர்கால நடிகர் சங்க வரலாற்று ஆவணத்தில் உங்களது பெயர் நீக்கமற நிலைபெற ஒரு அற்புத வாய்ப்பாகவும் அது உங்களுக்கு அமையும் என்ற உண்மையையும் இந்த தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறோம். .தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருந்தாலும் சரி அல்லது தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று இருந்தாலும் சரி கூடுதலாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மாளிகை என பெயர் அமையப் பெறுவது கூடுதல் சிறப்பாக அமையும் என்பதே நமது கருத்து. அதுதான் அந்த மாமனிதர் சங்க வளர்ச்சிக்கு செய்துள்ள பணிகளுக்கு கைம்மாறு செய்வதாக அமையும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள பாண்டவர் அணிக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் வாழ்த்துக்கள்--
அன்பன் --ஆர்.கோவிந்தராஜ்
Madurai - Ram Theater
Makkal Thilagam MGR in
IDHYA KANI - Now Running
மக்கள் திலகத்தைப் பற்றி ஒன்றும் அறியாமல், தெரியாமல், சினிமாவிலும் அரசியலிலும் அவர் வெற்றி பெற்றதன் பின்னணி பற்றி புரியாமல், புரிந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் மனம் போன போக்கில் எழுதும் அரைவேக்காடுகள் " திண்ணை " என்ற தளத்தில் கண்டபடி உளறுகின்றன. 1957-ல் வெளிவந்த நாடோடி மன்னன் என்று உளறியிருப்பதே இந்த அரைவேக்காடுகளின் ‘ஞானத்தை’ சொல்லும். ஒரு வருடம் முன்னமே ரீலீஸ் செய்து விட்டது. கட்டுரையில் பல சம்பவங்களில் வருடங்கள் தவறு. முதல்வரான பிறகு மக்கள் திலகம் ருத்ராட்சம் அணிந்தாராம். (எப்போது?) இதுவும் அந்த பைத்தியக்காரனின் உளறல். அதுவரை ஆத்திகர் என்பதை சாமர்த்தியமாய் மறைத்து வைத்தாராம்
எப்பவுமே மக்கள் திலகம் தன்னை நாத்திகர் என்று சொன்னதில்லை. ஆத்திகர் என்பதை மறைத்ததும் இல்லை. அண்ணா இருந்தபோதே தனிப்பிறவி படத்தில் முருகன் வேடத்தில் தோன்றினார். அண்ணா இருந்தபோதே தேவரின் வேண்டுகோளுக்காக, மருதமலை முருகன் கோயிலுக்கு சென்று அங்கு தேவர் செலவில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளை தொடங்கி வைத்தார். இருவரும் இணைந்திருக்கும் அந்த படம் கூட நமது திரியில் முன்னர் பதிவாகி உள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின், ஒரு பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியில் ‘உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?’ என்ற கேள்விக்கு ‘துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகும் நான் உயிருடன் இருப்பதிலிருந்தே தெரியவில்லையா?’ என்று நம் புரட்சித்தலைவர் அவர்கள் பதிலளித்தார்.
வழக்கம் போல், பொறாமையில் பாரத் பட்டத்தை பற்றியும் உளறல். நல்லவேளை கமலஹாசன் அரசியலில் இல்லை. இருந்தால அவருக்கும் அரசியலால்தான் கிடைத்தது என்பார்கள்.
வயிற்றெரிச்சல்தான்.
திண்ணை பத்திரிகையில் ‘சமஸ்கிருதம் கற்றுக் கொள்வோம்’ என்ற தொடர் இருக்கிறது. இதிலிருந்தே அதன் பின்னணியை புரிந்து கொள்ளலாம்.
கட்டுரையை எழுதிய இந்த அறிவுஜீவி (??????) மக்கள் திலகம் படத்தை எல்லாம் எங்கே பார்த்திருக்கப்போகிறது? பார்த்தால் தீட்டு பட்டு விடுமே ?
அந்த திண்ணை பத்திரிகை கட்டுரைக்கு கீழேயே சஞ்சய் என்பவர் பதில் சொல்லிருக்கார். 1977ல் தேர்தல் வெற்றிக்கு காரணம் மக்கள் திலகமே என்று கூறியுள்ளார்.
http://puthu.thinnai.com/?p=30659sanjay says:
October 19, 2015 at 8:31 am
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்ட ஜனவரி 88லிருந்து சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற ஜனவரி 89 வரை ராஜிவ்காந்தி 37 முறை தமிழகம் வந்து மூப்பனாருக்காக பிரச்சாரம் செய்தார். ஆயினும், மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்திய காங்கிரசும் படுதோல்வி அடைந்தது. இத்தனைக்கும் அப்போது தமிழக ஆளுநராக இருந்த P.C .அலெக்சாண்டரின் ஆட்சி காங்கிரஸ் ஆட்சியாகவே பாவிக்கப்பட்டது. ஆகவே ஒருவகையில், 1989 தேர்தலை காங்கிரஸ் ஆளும் கட்சியாகவே சந்தித்தது எனலாம். அந்தத் தேர்தலின்போது காங்கிரஸ் ஒருவேளை மூப்பனாருக்கு பதிலாக சிவாஜியை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தியிருந்தால்? வரலாற்றின் ifs and buts தருணங்களில் இதுவும் ஒன்று.
Comment by Mr. Sanjay
This is a wrong assessment. Sivaji’s popularity as an actor was dimmed by this time. He also lost the elections in 1989. Also, he happened to be in the winning side in some elections & it was not because of him, his party won the elections
.
For instance, though MGR & Sivaji were in parties which were electoral allies in 1977, the alliance won primarily because of MGR & not for Sivaaji. Sivaji never stood up for his fans when they were insulted in the congress party. He simply kept quiet. He should have quit politics after he lost the elections & disbanded his party.
But he chose to become the leader of a party which no one in Tamil Nadu had heard of Janata Dal. He gave interviews that he would strive & bring Janata Dal to power.
Sivaji was a failure & unlucky in politics.
http://s21.postimg.org/dvysndzp3/scan0001.jpg
Courtesy : Cinema Express
THANK YOU MY DEAR BROTHER K.P.R. GOVINDARAJ FOR THE EXCELLENT POSTING WITH NICE SUGGESTION.
YOU CHERISHED THE OLD AND SWEET MEMORIES OF OUR BELOVED GOD M.G.R.'s DEDICATED AND COMMENDABLE WORK FOR THE NADIGAR SANGAM.
THE ACHIEVEMENTS OF OUR BELOVED GOD M.G.R. MADE WHEN HE WAS HOLDING THE KEY POSITION IN NADIGAR SANGAM, IS EVER MEMORABLE ONE.
HE (OUR BELOVED GOD M.G.R.) ALSO GAVE WAY FOR OTHERS TO HOLD POSITIONS IN THE NADIGAR SANGAM, SUBSEQUENTLY. THIS SHOWS HIS GENEROSITY & NOBILITY.
WE ARE ALL PROUD TO BE THE FANS AND DEVOTEES OF SUCH A GREAT PERSONALITY
இன்று நவராத்திரி பூஜை இலண்டன் நியூ மோல்டன் திருத்தணிகை முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடை பெற்றது.
அங்கு பிரசங்கம் செய்த சிவாச்சாரியார் ராஜசேகர குருக்கள் ,
மக்கள் எல்லாரும் நீதியின் வழியில் நடந்து தன்னால் ஆன உதவிகளை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். ஆண்டவன் தேவைக்கு அதிகமாக உங்களுக்குத் தரும் பணத்தை நல வழியில் செலவிடுங்கள். வாடும் ஏழை மக்களுக்கு கொடுங்கள் . அப்படி கொடுத்தால் நீங்கள் என்றும் வாழ்வீர்கள் என்றார்.
உங்களுக்கே தெரியும்
இறந்தும் இறவாப் புகழுடன்
இன்றும் வாழும் எம் ஜி ஆர்
எப்படி வாழ வேண்டும் என்று
உங்களுக்கு வாழ்ந்து
காட்டியிருக்கின்றார்
என்று உரையை முடித்தார்.