http://i1065.photobucket.com/albums/...ps88kirbzf.gif
Printable View
ரவிQuote:
"என் அரசியல் பொய்யில்லை"
என்று நெஞ்சு நிமிர்த்திச்
சொல்வதற்கு
யாரால் முடியும்...
உங்களைத் தவிர..?
இது ஒன்றே போதும்.. மற்றவையெல்லாம் போனஸ்..
உளமார்ந்த பாராட்டுக்கள்.
வாசு சார்
இந்த நாளை மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை.
இருந்தாலும் தங்கள் அஞ்சலியின் மூலம் நம் ஒவ்வொருவர் மனதிலும் எத்தனை ஆழமாக தலைவர் குடிகொண்டிருக்கிறார் என்பதை ஒரு சான்றாகப் பார்க்க முடிகிறது.
One movie got realeased on this day (21/7) .Imayam. Thanks Murali.
நடிப்பு தெய்வமே உனக்கு என் கண்ணீர் அஞ்சலி.
சிவாஜி என்ற மாமேதை
நடிகர்திலகம் Stanislavski ,Straberg ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objectiveபடி,கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த ்தி,காத்து,அழித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner பாணியில் instinctive improvisations செய்து,
Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,
Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,
Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,
Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,
Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில்,
உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.இதனாலேயே உலகத்தில் ,எந்த நல்ல நடிகன், எந்த ஸ்கூல் படி நடித்தாலும் ,எல்லாமே அவருடைய நடிப்பின் ஒரு அங்கமாகவே நம் புலனுக்கு தெரிந்தார்கள்.(அத்தனை school யும் integrate செய்த சுயம்பு நடிகன் அந்த பிறவி மேதை).அதனாலேயே,அனைத்து இயக்குனர்களின் கனவு நாயகனாகி,நல்ல படம் தர விரும்பும் அனைவருக்கும் ஒரே நம்பிக்கை ஒளியாகி,அந்த படங்களை வேறு தளத்திற்கே உயர்த்தினார்.
marlon brando (அண்ணா இவருடன் ஒப்பிட்டு நடிகர்திலகத்தை புகழ்ந்தார்)- அவர் என்னை போல் நடிப்பார் ,நான் அவரை போல் நடிக்க முடியாது என்று சொன்னதின் உள்ளர்த்தம் தேடி பயணித்ததன் விளைவே இந்த தொடர்.(நம்மை போல உபசாரத்திற்கு ஒருவரை புகழும் மரபு Hollywood இல் கிடையாது.
உலக பட பரிச்சயம் உள்ள சுஜாதா (எழுத்தாளர்) NT ஐ Marlon Brando ,Rex Harrison ,Alpacino ,Robert De Niro ,Paul Neuman வரிசையிலும் ,முதல்வர் ஜெயலலிதா இவரை Marlon Brando ,Richard Burton ,Laurence Olivier வரிசையிலும், உலக பட ரசிகரான சோ அவர்கள் சமீபத்திய பதிவு ஒன்றில், Laurence Olivier ,Charles Laughton ,Gilgit ,David Niven ,Danny Kaye ,Clark Gable ,Humphrey Bogart ,Norman Wisdom ,Charles Heston ஆகியோருடனும்,Randor Guy இவரை paul Muni ,Spencer Tracy போன்றோருடனும் ஒப்பிட்டு பேசியுள்ளனர் எனக்கும், Kurosawa நடிகரான takashi Shimura , Nesferatu பட நடிகர் Klauskinski, Lincoln பட oscar நாயகன் Daniel Day Louis போன்றவர்களின் நடிப்பிலும் அவர் பிம்பமே தெரிகிறது.
அவரின் ரசிகர்களின் பட்டியலில் சத்யஜித் ரே,பிரிதிவி ராஜ் கபூர்,ராஜ் கபூர்,திலிப் குமார்,தேவ் ஆனந்த்,சஞ்சீவ் குமார்,அமிதாப் பச்சன்,லதா மங்கேஷ்கர்,ராஜ்குமார்,விஷ்ணுவர்தன் A .N R ,NTR ,கமல்,ரஜினி,பாரதி ராஜா,மகேந்திரன்,ஷங்கர்,பாலு மகேந்திரா ,மது,சத்யன்,பிரேம் நசிர்,மமூட்டி,மோகன் லால்,கோபி,திலகன், இன்னும் எண்ணிலங்கா இந்த பட்டியல் ரசிகர்கள் மட்டுமல்ல. பலர் அவரை role model ஆக,குருவாக பாவிப்பவர்கள்.
சிவாஜி என்ற மாமனிதர்.
ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.
அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.
ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.
நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை எழுதி பெருமை கொள்கிறேன்.
இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.
அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .
வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.
எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .
கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.
சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.
பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.
சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.
நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.
மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.
கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.
தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.
பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.
ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.
இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.
தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.
அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.
நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.
படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.
பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.
யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.
தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.
பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.
நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.
தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.
தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.
Nadippin Thavapudhalvan, Dinamalar link ...
http://cinema.dinamalar.com/tamil-ne...ji-Ganesan.htm
Sivaji oru sagaptham, Dinamalar video link .....
http://www.dinamalar.com/video_main....62910&cat=1238
நம் பாட்டுடை தலைவனை நினைவு கூர்ந்து எழுதிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!
வாசு, உங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!
ஆதவன் ரவி,
உண்மையான அன்போடு மனதின் அடித்தளத்திலிருந்து எழுதப்பட்ட வார்த்தைகள்! நெகிழ்ச்சி!
அன்புடன்
எண்ணிலடங்கா முறை எழுதியிருக்கிறேன்
எங்கள் மதுரையையும் நடிகர் திலகத்தையும் பிரிக்க முடியாது என்று!
எத்தனை முறை சுவைத்தாலும் சர்க்கரையின் சுவை இனிப்பு என்பது போல
எத்தனை முறை சொன்னாலும் மதுரையின் பெருமை தனிதான்!
சிவகாமியின் செல்வன் திரைப்படம் சிவகாமியின் செல்வன் பிறந்த நாளில் மீனாட்சி பட்டணத்தில் மீனாட்சி திரையரங்கில் வெளியாகி ராஜாமணி அம்மையாரின் தவப்புதல்வனின் நினைவு நாளான இன்று வரை ஒரு வாரத்தை நிறைவு செய்ததோடு மட்டுமல்லாமல் இந்த 7 நாட்களில் எந்த பழைய திரைப்படமும் பெறாத வசூலை பெற்றிருக்கிறது. அது மட்டுமல்ல அதன் காரணமாகவே இரண்டாவது வாரமாக அதே திரையரங்கில் படம் தொடர்கிறது. மீனாட்சி அரங்கம் புதுப்பிக்கப்பட்ட பின் ஒரு பழைய படம் இரண்டாவது வாரம் ஓடுவதும் இதுவே முதல் முறை.
அன்றும் இன்றும் என்றென்றும் நடிகர் திலகத்திற்கும் அவரது படங்களுக்கும் மாபெரும் ஆதரவு கொடுக்கும் மதுரை சிவாஜி அடியார்களுக்கு அடுத்த விருந்து படைக்க, 20,000 acres of fertile land + மில் ஓனர் ராஜசேகர் அடுத்த மாதம் விஜயம் செய்கிறார்.
அனைத்து துறைகளிலும் உயர்ந்த மனிதனாக விளங்கிய நடிகர் திலகம், underplay நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த உயர்ந்த மனிதன் திரைக்காவியம் ஆகஸ்ட் 12 முதல் தினசரி 4 காட்சிகளாக மதுரை சென்ட்ரலில்!
அன்புடன்
Andha Naal (B/W 1954; Sivaji Ganesan, PandariBai)
Dir: 'Veena' Balachandar
Written by: Javar Seetharaman
By PrabhuRam(P_R)
Imagine a movie made in 1954 without any songs. Imagine it with a shocking start: a murder and followed by an investigatioon. Narrated without digression with a slickness unparalleled in Tamil movies even till date.
The story moves from the murder of engineer Rajan (Sivaji Ganesan) in his own house and the landing up of an investigation duo headed by Javer Seetharam. The audience now, (and always) knows only as much about the victim and the murder as
the investigators know. The duo pick up hints and leads and proceed on with investigation. The investigation reveals more and more about the dead man. Each possible suspect has known one dimension of the dead man. An arrogant scientist , a caddish opportunist to his mistress, a scheming backstabber to his neighbour, a selfish gold-digger to his sister-in-law, a cold but in a weird way loving man to his brother, an ambitious and earnest young man to his teacher and an unpatriotic individualist to his wife.
In the small flashbacks each lasting about ten minutes each Sivaji, in arguably THE greatest perfomance of his career, brings to life that dimension, that the narrator of the flashback intends to highlight. In fact the movie traces the character over time and we progressively understand rajan's motivations for previous actions
as the narrative progresses. There are also six enactments of the plausible ways in which the murder could have happened and Sivaji is a treat.The clear characterization is achieved with minimal dialogue and extraordinary acting, which the viewer realizes not so much while watching but when he reflects after the movie.
JS's taut screenplay is also kept alive by keeping the audience guessing as we are led to view with suspicion each of the suspects who all bore grudges against the dead man. JS also sprinkles some naughty humour without upsetting the balance.
I am not much for technical details but I recall this one scene in a park where Sivaji meets his mistress and he is washing his hands off her in an extremely caddish manner. She entreats him but he remains unswerved.At the end of the scene it is as if you can imagine Sivaji with a tight lip and raised eyebrows playing arrogant. Now, why do I say 'imagine' ? That is because one does not see either of the players in that scene.We only see their silhouttes and in Sivaji's case the smoke from his cigarettes. The scene is of incredible visual appeal.
Honestly I don't recall much about the background music which is a lifeline for such a movie. The movie is set in the backdrop of WW2 in those days where Adyar was still navigable but I am in no position to evaluate the historical accuracy of art-direction etc. At the risk of sounding naive I can say that the furniture, clothing and Madras outdoors were pretty stagnant in style for a long time, so I guess there is no jarring inaccuracy.
JS acting is a little affected at times, terying to look like GKChesterton's father Brown. The climax unravelling follows a wee bit of melodrama but that can of course be excused. In fact the very last shot itself makes amends for the temporary dip in style towards the climax. It's not a very long movie and there is nothing exclusively Tamil in its appeal. Strongly recommended for those who haven't seen it and those who have seen it too
From Ananda vikatan.
'சிவாஜியைப் பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்டுவது!' - சிலாகித்த எம்.ஜி.ஆர்
http://img.vikatan.com/cinema/2016/0...es/sivaji3.jpg
திரையுலகில் போட்டி என்பது தமிழ் சினிமாவின் முதல்நாள் காமிராவை இயக்கத் துவங்கியபோது உருவாகிவிட்டது எனலாம். ஒருவகையில் இதுநாள் வரை சினிமாவை வாழவைக்கும் ரகசியங்களில் தலையானது இதுதான். தியாகராஜ பாகவதர் - பி.யு சின்னப்பாவில் தொடங்கி இன்றைய சிம்பு- தனுஷ் வரை இந்த ரகசியத்தைப் பின்பற்றித்தான் தங்கள் ரசிகர் கூட்டத்தை பெருக்கி வந்தனர், பெருக்கி வருகின்றனர்.
இவர்களில் கிட்டதட்ட 3 தலைமுறை கடந்த பின்னரும் தங்களின் ஆதர்ச நடிகருக்காக கொடிபிடித்துவருவது எம்.ஜி.ஆர்- சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளுக்குத்தான். திரையுலகிலும் அரசியலிலும் புகழ்க்கொடி நாட்டி மறைந்தபின்னரும் இன்றும் இது தொடர்ந்து வருவது சினிமா மீதான மக்களின் நேசத்திற்கு உ]தாரணம். ஆனால் ஆச்சர்யமாக இந்த இருபெரும் நடிகர்களும் தொழில் ரீதியாக தங்களுக்கான போட்டியை தக்க வைத்துக்கொண்டாலும், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தியவர்கள். எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி மறைந்த அன்று யார் யாரோ வந்து ஆறுதல் சொன்னபோது அமைதியாக நின்றார் எம்.ஜி.ஆர் . 'சிவாஜி வந்தபோது ஒரு பிரளயம் வந்ததுபோல் என்னிடம் அழுகை வெடித்து வந்தது' என சிவாஜியுடனான தன் பாசத்தை தன் வாழ்க்கைக் கட்டுரை ஒன்றில் வடித்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, ஒரே தாயின் வயிற்றில் உண்டு வளர்ந்த எங்களை அரசியல் பிரித்துப் பார்த்துவிட்டது என சிவாஜி கண்ணிரோடு கட்டுரை எழுதினார் சினிமா சஞ்சிகை ஒன்றுக்கு.
http://img.vikatan.com/cinema/2016/0...sivaji6005.jpg
தம்பி என வாஞ்சையாக அழைத்தார் எம்.ஜி.ஆர். ‘ அண்ணா’ என அதை வழிமொழிந்தார் சிவாஜி. இப்படி தொழில் போட்டியை மீறி ஒருவருக்கொருவர் அன்பு காட்டிய சந்தர்ப்பங்களில் ஒன்று, சிவாஜியின் அமெரிக்க பயணத்தின்போது எம்.ஜி.ஆர் செய்த நெகிழ்வான செயல். அமெரிக்கா சென்று திரும்பிய சிவாஜிக்கு நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளித்த எம்.ஜி.ஆர், அவர் பொறுப்பாசிரியராக இருந்த ‘நடிகன் குரல்’ இதழில் சிவாஜி பற்றி அருமையானதொரு கட்டுரை எழுதினார். ஈகோவின்றி சிவாஜியை புகழ்ந்து எம்.ஜி.ஆர் எழுதிய இந்தக் கட்டுரை சிவாஜி என்ற மகாநடிகனை மட்டுமல்ல, மனிதநேயர் எம்.ஜி.ஆரின் குணத்தையும் வெளிப்படுத்துகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் ஆரோக்கியமான இந்த உறவை இன்றைய இளம்தலைமுறை சினிமா நடிகர்களும் பின்பற்றலாம்.
http://img.vikatan.com/cinema/2016/0.../sivajimgr.jpg
அப்படி என்ன எழுதினார் எம்.ஜி.ஆர்...
“ தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. - இது குறள்
- நாம் எடுத்துக்கொள்ளும் பொறுப்பில் புகழோடு விளங்க வேண்டும் என்பது தான் அக்குறளின் உட்பொருள். தம்பி கணேசன் அவர்கள் இக்குறளுக்கு முற்றிலும் பொருத்தமான தகுதி பெற்றவர். இன்று புகழ் குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய் திகழும் இவர், பல்லாண்டுகளுக்கு முன்னரே, முன்னேற்றத்தின் முன்னோட்டமான அடிப்படைத்திறமைகள் பெற்றிருந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அந்த நாளில், கவியின் கனவு நாடகத்தைப் பலரும் பார்த்திருப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். அந்த நாடகத்தில் தம்பி கணேசன் ஏற்றுக்கொண்ட பாத்திரம் அனுதாபமோ, பாராட்டுதலோ பெறத்தக்க பாத்திரமல்ல. மேலும், இப்போது போல அப்போது விளம்பரம் பெற்றிருக்கவும் இல்லை. ஆயினும், நாடகத்தை பார்க்கும் மக்கள் அவரை மறக்க முடியாத நிலையில், அந்தப் பாத்திரத்தில் நடித்து, அவரது நடிப்பால் மக்கள் மனதில் நிலைநிறுத்திக் கொண்டுவிடுவார் அவர்.
மனோகரா நாடகத்தை எடுத்துக்கொள்வோம். பத்மாவதி வேடம் ஏற்றுக்கொண்டு, தாய்மையுணர்வையும், பாசத்தையும் நெஞ்சுருகப் பொழிந்து. வீறுகொண்டெழும் மகனை அடக்கி. “ஏந்தியவாளை இறக்கு; மறுப்பாயாகில், இதே வாளால் உன்னைப் பெற்றெடுத்த தாயான என்னை முதலில் வெட்டி வீழ்த்தி விட்டு உன் விருப்பம் போல் செய்” என்று அவர் கூறுகிற கட்டம் ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாது. ஆண் ‘ஆண்’ ஆக நடிப்பது இயற்கை. பத்து அல்லது பன்னிரண்டு வயதில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபடி பெண் வேடம் தாங்கி நடிப்பது, ஓரளவுக்குப் பொருத்தமாகவும் தோன்றலாம். மேலும், அலங்காரம் செய்து, பூச்சூடி, சிறுவனைச் சிறுமி போலத் தோற்றுவிப்பது இயற்கையான நடிப்புக்கு உதவி செய்ய முடியும். அதோடு இனிமையான இளங்குரலுக்கூடச் சிறுவர்களுக்கு ஒத்துழைக்கும்.
ஆனால், வாலிப வயதை அடைந்த ஓர் ஆண் ‘பெண்’ணாக நடிப்பது அவ்வளவு சுலபமல்ல. இனிமையான குரல்மாறி, கடினமான குரலாக ஆகியுள்ள பருவத்தில் இயற்கைக்கே எதிராக, இயற்கையோடு போராடி, இயற்கையாக நடித்துப் புகழ்பெற்றார் அவர் என்றால் அது மிகப்பெரிய சாதனையே ஆகுமல்லவா? அன்று நாடக மேடையில் எல்லாத்தரப்பு வேடங்களிலும் தனிச் சிறப்போடு நடித்துத் தனது நடிப்பால், ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கும், நாடகத்திற்குமே பொலிவூட்டியவர் தம்பி கணேசன். மேடையில் பயங்கரச் சண்டைக் காட்சிகளிலும் துணிந்து நடித்தவர். பெரும் புகழும், பெருமையும் எதிர்காலத்திலும் அவரை அடையப்போகின்றன என்பதற்கும் முன்னறிவிப்பான தகுதிகளாக இருந்தவை இவை.
நல்ல குணங்கள் உள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறப்படலாம். பாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரும் இடம்பெறுவது இயற்கை என்று சொல்லப்படலாம். ஆனால், மக்களால் வெறுக்கப்படும் பாத்திரத்தைத் தாங்கி, மக்கள் இதயத்தில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். ‘திரும்பிப் பார்’ என்னும் படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார்.
பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்குமளவுக்கு, ‘ஆங்கில பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.
http://img.vikatan.com/cinema/2016/0...es/sivaji5.jpg
ஆங்கிலப் பாணியின் சாயல் ஆங்காங்கே இருக்குமானால், அது ஆங்கிலப் படங்களைப் பார்த்துத்தான் பிறந்ததென்று எப்படிக் கூறமுடியும். சிறப்புக்குரிய பயிற்சியாலும், உழைப்பாலும் அப்படிப் போற்றத்தக்க திறமை உண்டாயிற்று என்று உணர்வது தானே முறையும், பண்புமாகும். மேலும், நடிப்பு என்பது என்ன? கற்பனை தானே! ஏதோ ஒன்றிலிருந்து பிறந்து அல்லது பிரிந்து அதிகமாவதுதான் கற்பனை. நடிகராயினும், எழுத்தாளராயினும் புதிதாக ஒன்றைப் படைப்பவர்கள் எல்லோருமே காண்பனவற்றை ஊடுருவி நோக்கும் நுண்புலனும், காணாதவற்றைத் தோற்றுவிக்கும் செயல் திறனும் பெற்றிருப்பது இயற்கை. ஆதலால், “இது அந்தப் பாணி, இந்தப் பாணி’ என்று மேலெழுந்தவாரியாக விமர்சிப்பது தவறாகும்.
தம்பி கணேசன் நாடகத்தில் நடித்தபோது அந்த நடிப்புக்குப் பாராட்டு குவிந்தது. சினிமாவில் நடிக்கு முன்பு வேறு நடிகர்களுக்குக் குரல் கொடுத்தபோது அந்தக் குரலுக்குப் பெருமை. பிறகு சினிமாவில் நடிக்கத் துவங்கியபோதும் வெற்றிப்படிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தன. எந்த நிலையிலும் தான் ஏற்கும் கலைத் தொழிலில் தனக்கென்று ஒரு ஸ்தானத்தைப் பெறக்கூடிய தகுதி அவரிடம் வேரூன்றியிருந்தது. அமெரிக்க அரசாங்க விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி வரவேற்பும், பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்?” என்று கேள்வி கேட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை.
http://img.vikatan.com/cinema/2016/0...es/sivaji1.jpg
உண்மையைப் புரிந்துக் கொள்ளாத சிலரால் எழுப்பப்பட்ட அதுபோன்ற கேள்விகளுக்கு, ஆனந்த விகடனைப் போன்ற பத்திரிகைகள் நேர்மையான பதிலைத்தர முனைந்ததற்காக, நடிகர் சங்கத்தின் சார்பில் நன்றி செலுத்திக் கொள்கிறேன். இன்னின்னார் இப்படியிப்படிப் பேசியதாகப் பகுத்து உரையாடலின் வடிவத்திலே தம்பி கணேசனின், சிறப்புப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். எல்லோருக்கும் பொதுவில் நான் ஒன்றிரண்டு சொல்லிகொள்ள விரும்புகிறேன்.
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் அல்ல இப்போது இருப்பவர்கள்; அதாவது, மக்களின் விருப்பம், தேவை, ஆசைக் கனவுகள் இவையாவும், முன்பு இருந்ததைப் போலில்லாமல், வெவ்வேறு வகையில் மிகமிக வளர்ந்து பெருகியிருக்கின்றன. அப்படிப்பட்ட ஆசைகளில் ஒன்றுதான் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டவரும், தங்கள் தொழில் போற்றப் படவேண்டும், மற்றத்தொழில் வல்லுநர்களால் கவுரவிக்கப்பட வேண்டும் என்று கொள்ளும் ஆசையும்.
http://img.vikatan.com/cinema/2016/0...es/sivaji4.jpg
மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்று அடிப்படைகளின் மீது தோன்றி, அவற்றைச் சார்ந்ததாக விளங்குவதே நடிப்புக்கலை, நாடகத்திலோ, சினிமாவிலோ நடிக்கிற ஒருவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பாரானால், அவருக்கு வருகிற பெருமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற அத்தனை பேர்களுக்கும் வருகிற பெருமையாகும். அவர் தமிழைத்தாய் மொழியாகக் கொண்டிருக்கிறார் என்னும்போது, ‘தமிழன்’ என்ற இனத்தைச் சார்ந்தவராகிறார். தமிழ் இனத்தைச் சேர்ந்த அவருக்குக் கிடைக்கக்கூடிய பெருமைகள் யாவும் தமிழினத்திற்கு, அதாவது, நமக்கு வழிகாட்டியாக விளங்கிய முன்னோருக்கும், இன்று நம்முடன் இருந்து வாழ்வோருக்கும், இக்கலையை இனி பின்பற்றப்போகும் எதிர்காலத்தவருக்கும் உரிய பெருமையாகும்.
தமிழ்ப்பண்பாடு உலகத்திலேயே மிகச் சிறந்த பண்பாடு என நல்லோர்களாலும், வல்லோர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தகைய பண்பாட்டைத் தாய்மொழியாம் தமிழில் தமிழ் இனத்தைச் சேர்ந்த தமிழன் எடுத்துச்சொல்லி, அதற்காகப் பாராட்டப்பட்டால், அது தமிழ்மொழிக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ்ப்பண்பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு ஆகும் அல்லவா? ”இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் சிவாஜி கணேசன் யார்?” என்ற கேள்வி பிறக்கும்போது, “அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப்பண்பாடு!” என்ற பதில்தான் கிடைக்கும். அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு!
வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் கலாசாரக் குழுவினருள் தமிழர்களுக்கு ஏன் இடமளிப்பதில்லை என்றெல்லாம் பலகாலமாகவே இந்திய அரசினரிடம் கேட்டு வந்தோம். தந்திகள் கொடுத்தும் கேட்டோம். கடிதங்கள் அனுப்பியும் வினவினோம். நல்ல தரமுள்ள பல்வேறு பத்திரிகைகள் கூட இந்தக் கருத்தை வற்புறுத்தின. அவைகளுக்கெல்லாம் வெற்றியாக, உலக வல்லரசுகளுக்கிடையே முக்கியமானதெனக் குறிப்பிடத்தக்க தகுதியைப் பெற்றுள்ள அமெரிக்க அரசாங்கம், ஒரு தமிழ் மகனை, அதிலும் ஒரு நாடக சினிமா நடிப்புக் கலைஞனை அரசாங்க விருந்தினர் என்ற அந்தஸ்தோடு அழைத்துப் பெருமைப் படுத்தியது இதுவரை எந்தத் தமிழ் நடிகனுக்கும் கிடைக்காத ஒரு பெரும் பேறு. அதனைப்பெற்ற தம்பி கணேசனை வரவேற்காமல் வேறு யாரை வரவேற்பது? அவரைப் பாராட்டாமல் வேறு எவரைப் பாராட்டுவது? அவருக்குப் புகழ்மாலை சூட்டாமல் வேறு யாருக்குச் சூட்டுவது?
எதிலும் குறை காண்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். உண்மையில் அவர்கள் தான் மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறவர்கள்! அந்தத் துணைதான் இன்றைய தினம் சிவாஜி கணேசன் அவர்களை அமெரிக்கா வரை அழைத்துச் சென்றிருக்கிறது.
முன்னர் கலைவாணர் அவர்கள் முதன்முதலாக ரஷ்ய விஜயம் செய்து திரும்பியபோது, சென்னைக் கடற்கரையிலும், மற்றப் பொதுவிடங்களிலும் பெரும் பாராட்டு விழாக்கள் நடத்தி மகிழ்ந்தோம்.
அதற்குப் பிறகு அவ்வப்போது சில நடிகமணிகள் ஒருசில அயல்நாடுகளுக்குச் சென்று திரும்பிவந்த போது, பெரும் விழாக்கள் நடத்தவில்லை என்றாலும், நமது நன்மதிப்பைத் தெரிவித்தோம். இப்போது சிவாஜி கணேசன் அவர்களோ, சரித்திரத்திலேயே முதன் முறையாக அமெரிக்க அரசினரால் அழைக்கப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி மிகவும் போற்றத்தக்கதால் விசேஷமாக விழா நடத்தினோம்.
இனி அடுத்தடுத்துச் செல்பவர்களையும், பாராட்டவே விரும்புகிறேன். முதன் முறையாகச் சென்று நம்மவருக்குப் புகழ்திரட்டி வந்த காரணத்தால் தம்பி கணேசனுக்கு இப்பெரும் விழாவை நடத்தினோம். இந்த அளவுக்கு விரிவாகச் செய்யமுடியாவிடினும் இதயங்கனிந்த பாராட்டுக்களை இனிச் செல்வோருக்கு எப்போதும் வழங்கக் காத்திருக்கிறேன்.
தம்பி கணேசனுடைய புகழ் இன்னும் மேலோங்கட்டும்! அவர் நீடூழி வாழ என் அன்னையை இறைஞ்சுகின்றேன்”
https://igmedia.blob.core.windows.ne..._1972016_m.jpg
Quote:
WOW! Sivaji Ganesan-Mohanlal movie to at last release
IndiaGlitz [Tuesday, July 19, 2016]
Reproduced from and courtesy: http://www.indiaglitz.com/sivaji-gan...ws-163506.htmlQuote:
Nadigar Thilagam Sivaji Ganesan the undisputed Emperor of Tamil cinema has his exclusive place in the minds of Tamils and movie lovers all over. While there are chances to watch his classic films on television now and then films like ‘Karnan’, ‘Thiruvilayadal’ and ‘Deivamagan’ are screened regularly in theaters finding huge response. His ‘Sivagamiyin Selvan’ has just crossed the 100 day mark in Srinivasa theater.
For a new generation of movie goers there comes a golden opportunity to watch a relatively unseen picture of Sivaji Ganesan titled ‘Payana Mozhi’ directed by Prathap Pothen with Mohanlal, Ranjitha, Soman, Nedumudi Venu, Prakash Raj and Thilagan in the cast. The story is written by Priyadarshan and it is the dubbed version of the 1997 Malayalam movie ‘Yaathra Mozhi’ with music by Illayaraja.
Quote:
Sivaji Ganesan remembered in Puducherry
Read more at: http://www.oneindia.com/puducherry/s...y-2160044.htmlQuote:
Puducherry, July 21: Chief Minister V Narayanasamy today paid homage at the statue of the veteran stage and film actor Sivaji Ganesan on his 15th death anniversary. Ministers, legislators and Deputy Speaker V P Sivakolundhu were among those who paid floral tributes at the statue of the iconic figure of Tamil cinema. Delegates of different outfits and functionaries of various associations also paid homage at the statue.
தன் அளப்பறிய கலைத்திறமையால்
சிவனை, கண்ணனை, கந்தனை,
கர்ணனை, திருமாலை, அப்பர் பெருமானை,
கப்பலோட்டிய தமிழனை, கட்டப்பொம்மனை
நம் கண்முன்னே நிறுத்தியவர்.
... மன்னனுக்கு ஒருநடை,
அண்ணனுக்கு ஒருநடை,
ஏர் உழவனுக்கு ஒருநடை,
பெருங்கிழவனுக்கும் ஒருநடை,
மீனவனுக்கு ஒருநடை,
அன்பு மாணவனுக்கு ஒருநடை,
கள்வனுக்கு ஒருநடை,
கடுங்காவலனுக்கும் ஒருநடை,
கவிஞருக்கு ஒருநடை,
நற்காதலனுக்கு ஒருநடை - என்று
தன் தனித்திறன்மிக்க நடிப்பாற்றலால் நாட்டுமக்கள்
உள்ளத்திலும், இல்லத்திலும் நீண்டப் புகழோடு நிலைத்து வாழ்பவர்.
சிம்மக்குரலால், தன் சின்ன நாவசைவால்
நம்தமிழர் நாட்டிற்கு நல்லதமிழ் உச்சரிப்பைக்
கற்றுக்கொடுத்த கலையுலகப் பேராசான்.
உலகத்தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்
நமது ஐயா நடிகர் திலகம் அவர்களுடைய
15 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.
அந்த ஒப்பற்ற கலை உலக மேதைக்கு
நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
https://www.facebook.com/senthamizha...5890489642628/
(சீமான் அவர்களின் முகநூலில்இருந்து)
அன்புள்ள ரஜினி ரசிகர்களுக்கு,
நான் கபாலி படத்தை மிகவும் ரசித்தேன். தலைவரின் மாற்றம் பிடித்தே இருந்தது. இந்த வயதிலும்,நிறைய உடல் உபாதைகளை சுமந்தும், இப்படி ஒரு energy level ,commitment and youthful exuberance யாரிடமும் காண முடியாது.வாழ்த்துக்கள்,மகிழ்ச்சி.
நான் சொல்வது என்னவென்றால், நடிகர்திலகத்திடம் இருந்து emoting skills ,style ,screen presence இவற்றை ரஜினியும் ,variety ,get up change ,unpredictabilty in movies என்பதை கமலும் எடுத்துள்ளனர்.
நடிகர்திலகம் நடித்து 1973 ஜூலை யில் வந்த படம் எங்கள் தங்க ராஜா.(ரஜினி படவுலகுக்குள் நுழையும் முன் இரு ஆண்டுகள் முன்பே)இதில் நடிகர்திலகம் பைரவன் என்று ஒரு பாத்திரம் பண்ணியிருப்பார். அதன் பின் அதனை அவர் repeat செய்யவில்லை. இதில் ரஜினியின் மூலத்தை தரிசிக்கலாம். இதை நான் நிறைய ரஜினி ரசிகர்களிடம் போட்டு காட்டிய போது ,ஆச்சர்யத்தில் மிதந்தனர். தங்கள் தலைவர் ஏன் நடிகர்திலகத்தின் மீது அத்தனை மரியாதை வைத்துள்ளார் என புரிந்து கொண்டனர். இதோ உங்கள் பார்வைக்கு அந்த படத்தின் ஒரு பாடல் காட்சி.
https://www.youtube.com/watch?v=Hc6E_789nYY
'கபாலி' பரபரப்பிலும் அரங்கம் நிறைந்த 'அவன்தான் மனிதன்'- திருச்சியில் நடிகர் சிவாஜி ரசிகர்கள் ''மகிழ்ச்சி'' http://tamil.thehindu.com/multimedia...n_2945864f.jpg சிவாஜியின் ’அவன்தான் மனிதன்’ படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி கெயிட்டி திரையரங்குக்கு வெளியே மாட்டியுள்ள ஹவுஸ்புல் போர்டு.
நடிகர் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவாஜிகணேசனின் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் திருச்சி திரையரங்கில் நேற்று அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது, அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியானது ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் நட்பின் ஆழத்தை வலியுறுத்தும் படமாகும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். இதில், சிவாஜிகணேசன், முத்துராமன், ஜெயலலிதா, மஞ்சுளா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடத்துள்ளனர்.
வழக்கமாக வார விடுமுறை நாட்களில் அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் அதிக அளவில் இருக்கும். கடந்த 22-ம் தேதி நடிகர் ரஜினி நடித்து வெளியான ‘கபாலி’ படம், திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, கோடிக்கணக்கில் வசூலித்து வரும் நிலையில், திருச்சி மேலரண் சாலையில் உள்ள கெயிட்டி திரையரங்கில் நேற்று முன்தினம் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் வெளியானது.
படம் திரையிடப்பட்ட முதல் நாளிலேயே வழக்கத்தைவிட அதிக அளவில் கூட்டம் வந்த நிலையில், நேற்று மாலை நேரக் காட்சியில் திரையரங்கு நிறைந்தது. இங்குள்ள 324 டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. இது, சிவாஜிகணேசனின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சிறப்பு அழைப்பாளர் அண்ணாதுரை கூறும்போது, “நடிப்பால் மக்களைக் கவர்ந்த சிவாஜியின் நினைவுகள் மக்களைவிட்டு மறையவில்லை என்பதை, இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம்” என்றார்.
திரையரங்கு மேலாளர் இக்பால் கூறும்போது, “இந்தப் படத்தை திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே அதிக கூட்டம் உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்கில் ‘ஹவுஸ்புல் போர்டு’ மாட்டியுள்ளோம். டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சிலர் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது” என்றார்.
the hindu
இதுதான் வஞ்ச புகழ்ச்சி. இதை செய்பவர் ஒரு பத்திரிகை தர்மம் தெரியாதவராகவே இருக்க முடியும். ஒரு பக்கம் அஷ்டோத்திரம் படித்து அர்ச்சனைகள் செய்வது, நடிகர்திலகத்திற்கு ,தன சார்பு நிலை காட்டாமல் ஏனோதானோ என்று எழுதுவது.
இதன் உள்ளரசியலை புரிந்து கொள்ளாமல் நம் ரசிக கண்மணிகள் இதை திரும்ப திரும்ப திரியில் போடுவது நமது அறியாமையை காட்டுகிறது.விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல சிவாஜி என்ற விஷம பிரயோகம். இது எல்லோருக்குமே பொருந்தும்? அப்படியானால் தமிழ் ஹிந்து எல்லோரையும் விமரிசன கண்ணோட்டத்தில்தானே அணுக வேண்டும்? அஷ்டோத்தர நாமாவளி பாடும் போது எல்லோருமே அரசியல்-சினிமா இவற்றில் விமரிசனத்திற்கு உள்ளாக்க பட வேண்டியவர்களே என்ற பகுத்தறிவு எங்கே போனதாம்?
1)பலர் உண்டாம் ,அதில் சிவாஜியும் ஒருவராம் .
2)இன்றைய தலை முறையினர் அவரை ரசிக்க முடியாது என்ற பல்லவி. இதை விட ஆண்ட புளுகு இருக்க முடியாது. நமது கர்ணன் படத்தை பார்த்து களித்த 50% இளைஞர்களே.
3)overacting என்ற வறட்டு பல்லவி. Different school of Acting என்பதை சொல்லியும் இதை விட அபத்த களஞ்சிய ஒன்று இருக்கவே முடியாது.
4)சுஜாதா ,தான் சிவாஜி ரசிகர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் தனது சிறுகதைகளில் ,தான் ஆனந்த விகடனில் எழுதிய இரங்கல் செய்தியில்.அவர் போகிற போக்கில் ராஜ ராஜ சோழனை பற்றி சொன்னது மட்டும் எடுத்தாள பட்டுள்ளது.
5)இது முழுவதுமே நடுநிலை என்ற நிர்பந்தத்திற்காக சிவாஜி வெறுப்பாளர் ஒருவரால் எழுத பட்ட ஒப்புக்கு சப்பாணி பதிவு.
6)எனது சந்தேகம் தமிழ் ஹிந்து சினிமா பகுதி பொறுப்பாளர் மீது. ஆசிரியர் அசோகன் மிக நாணயமானவர். நமது ரசிகர்கள் இன்றே அவர் பார்வைக்கு ஈ மெயில் அல்லது தொலைபேசி மூலம் புகார் அளிக்கும் படி கோருகிறேன்.தமிழ் ஹிண்டுவின் செய்திகள் விஷமத்தனமாக மாறுவதை பலமுறை சுட்டி காட்டியுள்ளேன்.
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, நமது தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 23.07.2016 முதல் திருச்சி கெயிட்டி திரையரங்கில் நடிகர்திலகத்தின் 175வது வெற்றிக்காவியமான அவன்தான் மனிதன் திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தினை நமது மக்கள்தலைவரின் புகழுக்கு எங்கிருந்து களங்கம் வந்தாலும் ஆதாரத்துடன் தட்டிக்கேட்கும் அருமை சகோதரர் சுப்பு அவர்கள் வெளியீடு செய்தார். தலைவரின் எந்த படம் போட்டாலும் ஞாயிறு மாலைக் காட்சி கெயிட்டி திரையரங்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் என்பது திருச்சியில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும்.
இந்த முறை மேலும் ஒரு சிறப்பாக சமீபத்தில் திரு்ச்சியில் உதயமான அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் அகிலஇந்திய தலைவர் திருச்சி சீனிவாசன் அவர்களின் தலைமையில் கெயிட்டி தியேட்டரில் குவிந்தனர். தலைவரின் கட்அவுட்டிற்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மாலை அணிவிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் திருச்சி கெயிட்டி திரையரங்கில் திரண்டனர்.
திருச்சி மாரீஸ் குரூப் ரசிகர்கள் சார்பில் தலைவரின் கட்அவுட்டிற்கு பொியமாலை போடப்பட்டது. அனைத்து ரசிகர்களும் ஒன்று சேர்ந்து அவன்தான் மனிதன் திரைப்படத்திற்கு திருச்சி ரசிகர்கள் மாபெரும் வரவேற்பைக் கொடுத்தது, அந்த வழியாக சென்றவர்கள் இந்த தியேட்டரில் புதிய படம் வெளியாகியுள்ளதா என்ற சந்தேகத்ததுடனே சென்றனர்.
http://www.sivajiganesan.in/Images/240716_78.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/240716_76.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/240716_77.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/240716_74.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/240716_80.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/240716_79.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/240716_81.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/220716_27.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மக்கள்தலைவரின் அருந்தவப்புதல்வனும், அகிலஇந்திய சிவாஜி ரசிகர்மன்றத்தின் தலைவருமான தளபதி ராம்குமார் அவர்கள் சென்னையில் உள்ள தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
http://www.sivajiganesan.in/Images/220716_5.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/270716_6.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மதுரை நீதிமன்றம் அருகே உள்ள மக்கள்தலைவரின் சிலைக்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் பொதுசெயலாளர் ரமேஷ்பாபு, துணைத்தலைவர் சுந்தராஜன், மதுரை நகர் தலைவர் சாேமசுந்தரம், மாவட்ட தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கார்த்திகேயன், குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
http://www.sivajiganesan.in/Images/220716_24.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சி, 22.07.16 தினத்தந்தி மற்றும் மாலை முரசு நாளிதழில் வெளிவந்த செய்தி.....
http://www.sivajiganesan.in/Images/220716_26.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.