நன்றி : அண்ணன் நெல்லை எஸ்.எஸ்.மணி
http://i66.tinypic.com/ejarh5.jpg
Printable View
நன்றி : அண்ணன் நெல்லை எஸ்.எஸ்.மணி
http://i66.tinypic.com/ejarh5.jpg
நன்றி : அண்ணன் நெல்லை எஸ்.எஸ். மணி
http://i65.tinypic.com/2chs7yr.jpg
தம்பி,
நீ என்ன சொல்ற என்பது எனக்குப் புரிகின்றது. ஏதோ சினிமாக்களில் ஏழை பங்காளராக மக்கள் திலகம் நடிச்சதாலேதான் அவர் ஏழைகளின் தோழர் என்ற பிம்பம் ஏற்பட்டதாக சில முகநூல் அறிவிலிங்கள் கூறியதை மறுத்திருக்கின்றாய்.
ஏழை மக்களுக்கு அவர் செய்த தொண்டுகள் பற்றியும் சொத்துக்களை எழுதி வைத்தது பற்றியும் சொல்லி படங்களில் நடிச்சதால் மட்டுமே இல்லை. நிஜமாகவே தனது சேவைகள் மூலம் புரட்சித் தலைவர் ஏழைப் பங்காளர் ஆனார் என்று சொல்கிறாய்.
இதைப் புரிந்து கொள்ள முடியாமல் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டாம். சுத்த வேஸ்ட்.
அருமை, அருமை, அருமை.
நன்றி அய்யா.
தன்னை மோசமாக விமர்சிக்கின்றவர்களுக்கும் கூட கருணை காட்டும் விசயத்தில் புரட்சித் தலைவர் மேல எனக்கும் வருத்தம் உண்டு. அது அவர் மேல் உள்ள அன்பு காரணாமாக உரிமையுடன் கூடின வருத்தம்.
ஒரு கவிஞன் இருந்தான். அவன் எல்லாரையும் மோசமாக பேசுவான். புரட்சித் தலைவரையும் மோசமாக எழுதினான். பேசினான். இத்தனைக்கும் அவனே மோசமான நடத்தை கொண்டவன். அதை அவனே சொல்லிருக்கான். தான் எத்தனை பெண்களிடம் தொடர்பு வைத்திருந்தேன் என்று சொல்லும் கேவலமானவர்களை ஆகா என்று பாராட்டுவார்கள். இதெல்லாம் ஒரு பெருமையா? மனிதன் என்றால் சில பலவீனங்கள் இருக்கும்தான். இதெல்லாம் சம்பந்தப்பட்ட இரண்டு பேரின் அந்தரங்கம். ஆனால், தான் நேர்மையாக இருந்தால் அடுத்தவனை சொல்ல வேண்டும். எவன் யோக்கியவான்?
அந்தக் கவிஞனையும் கூட மன்னித்து புரட்சித் தலைவர் பதவி வழங்கினார். காசுக்காக கவிதையை விற்கும் அந்த எச்சப் பய உடனே போட்டான் அந்தர் பல்டி. தான் சாகிற வரைக்கும் புரட்சித் தலைவரை பாராட்டித் தள்ளினான்.
அதுக்கும் கூட அந்தக் கவிஞன் ஒரு பிரபலம். அவன் வாயை கட்டுவதற்காக புரட்சித் தலைவர் பதவி வழங்கினார் என்று கூறுவான்கள். ஒரு பேச்சுக்கு சரி என்றே வைத்துக் கொள்ளலாம். நாத்திகம் ராமசாமி என்ன பெரிய பிரபலம்? சமூகத்தில் அந்தாளுக்கு என்ன மரியாதை இருந்தது? அந்த பத்திரிகை எத்தனை லட்சம் விற்றது? அந்த ஆளுக்கும் இரக்கம் காட்டி இருக்கிறார் புரட்சித் தலைவர்.
ஆனால், ஒன்று புரட்சித் தலைவரை யாரெல்லாம் திட்டினானோ அவன் எல்லாம் கடைசியில் புரட்சித் தலைவரை புகழ்ந்து பேசிவிட்டுதான் செத்தான்.
இன்றும் திரையுலகை ஆளும் எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்றும் இன்றும் என்றும் திரையுலகை ஆள்வார். சமீபத்தில் வெளிவந்த "கவண்" திரைப்படத்தில் டி.ஆர் அவர்கள் முதல் காட்சியில் எம்ஜிஆர் பட வசனங்களை சொல்லி புரட்சித்தலைவரின் அத்தனை பட்டங்களையும் சொல்வார். அதே போல் இறுதி காட்சியில் நினைத்தபடி எல்லாவற்றையும் வெற்றியாக முடித் தாகிவிட்டது.. இப்போது ஒரு பாடல் பாடவேண்டும் என்று சொல்வார். அதற்கு ஹீரோ விஜய் சேதுபதி இந்த பாடல்தான் என்று சொல்லி "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்"பாடலை சேர்ந்து பாடுவார்கள். கடைசியில் எழுத்து முடியும் வரை பொன்மனச்செம்மலின் அந்த கீதம் ஒலிக்கும். வெற்றி என்றால் எம்ஜிஆர்தானே.
மேலும், பவர் பாண்டி'' படத்திலும் பல இடங்களில் மக்கள் திலகம் தோன்றுவார். ராஜ்கிரண் வைத்திருக்கும் ஷீல்டுகளில் குடியிருந்த கோயில் கதாநாயகன் தோற்றம். சிறு வயது பாண்டியாக வரும் தனுஷ் வீட்டு வாசலில் எம்ஜிஆர் போட்டோ. பல ஷாட்டுகளில் இந்த போட்டோ காணப்படுகிறது. மேலும், தனுஷ் கதாநாயகியுடன் அடிமைப்பெண் திரைப்படம் பார்ப்பார். அதன் சுவரொட்டியையும் பல இடங்களில் காண்பிப்பார்கள்.
திரையுலகம் இருக்கும் வரை ஏன் இவ்வுலகம் இருக்கும் வரை எம்ஜிஆர் இருப்பார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i63.tinypic.com/21o3j9c.jpg
இப்போதும் சினிமாக்களில் புரட்சித் தலைவர் படங்கள் பாடல் காட்சிகள் எல்லாம் காட்டப்படுவது சந்தோசமாக இருக்கிறது. அவர் படத்தை காட்டுகிறார்களே தவிர, அவரை மாதிரி நல்ல கருத்துள்ள, படிப்பினை தரும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் படியான படங்களை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
கதை, கருத்து, காமெடி, பாட்டு, நடிப்பு, நல்ல சிந்தனை, இப்படி எல்லாவற்றிலும் தரம் குறைந்துவிட்டது.
சமீபத்தில் சில மாதங்கள் முன் வந்த ஒரு படத்தில் காமெடி நடிகர் ஒருவர் சின்ன பிள்ளைகள் விளையாடுமே. அதே மாதிரி ஆடு, மாடு, பசு, ...சு என்று வசனம் பேசுகிறார். இதெல்லாம் காமெடியா?
நடுநிசி நாய்கள் என்று ஒரு படம். தந்தையே தன் மகனை…… புரிந்து கொள்ளுங்கள். எழுத முடியவில்லை.
விஷ்ணு என்று ஒரு படத்தில் அந்தப் படத்தில் நடித்த நடிகரே சொந்த குரலில் பாடிய, தொட்டபேட்டா ரோட்டு மேலே முட்டை பரோட்டா நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா’ என்று ஒரு பாட்டு.
அந்த டூயட் பாட்டில் , ‘புதுப் புது வித்தைகளை கத்து தரட்டா.. நான் வந்தா அள்ளித்தந்தா உன் தாகம் தீருமா’ என்றெல்லாம் வரிகள் வரும். தப்பில்லை. சினிமாவில் இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் சகஜம்.
ஆனால், கொடுமை என்னவென்றால் இப்படியெல்லாம் காம உணர்ச்சி கலந்த அந்த பாடலை நடிகரோடு சேர்த்து பாடிய பாடகி யார் தெரியுமா? அந்த நடிகரின் அம்மா. படத்தை இயக்கியது அந்த நடிகரின் அப்பா.
இந்தக் கொடுமை எல்லாம் எங்கே போய் சொல்கிறது? நாடு உருப்படும்.
பெண்களை தாயாக தெய்வமாக மதித்து படத்தில் காட்டி நல்ல எண்ணங்களை மக்களிடம் புரட்சித் தலைவர் விதைத்தார். (உடனே யாராவது ஓடி வந்து டூயட் பாடல்கள் பற்றி சொல்லப் போகிறார்கள். மனைவி, காதலியுடன் படத்தில் ஒருவன் திருவருட்பாவா பாடுவான்?)
படங்களின் மூலம் நீதி, நேர்மை, நியாயம், தர்மம், ஒழுக்கம், சட்டத்தை மதித்தல், உதவும் குணம் எல்லாம் போதித்த புரட்சித் தலைவர் படங்கள் எங்கே?
காமப் பாடல்களை தன் தாயோடு சேர்த்து பாடும் நடிகர்கள், வக்கிர சிந்தனையுடன் படம் எடுக்கும் டைரக்டர்கள், ஆபாசமாக அருவருப்பாக பேசும் காமெடியன்களைக் கொண்ட படங்கள் எங்கே?
இப்பவெல்லாம் படமா எடுக்கிறார்கள்? படுபாவிகள்.
நேற்று (17/05/2017) காலை 11மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய் " சன்லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .
இன்று (18/05/2017) இரவு 7 மணி முதல் சன்லைப் சானலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "சர்வாதிகாரி " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/350lbvc.jpg
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,
இப்போது சற்று முன்புதான் சர்வாதிகாரி படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அதை குறிப்பிடலாம் என்று வந்து பார்த்தால் நீங்கள் படம் ஒளிபரப்பாவதை குறிப்பிட்டு மக்கள் திலகத்தின் அலப்பறையான ஸ்டில்லை போட்டிருக்கிறீர்கள். என்ன ஒரு ஸ்டைல் என்ன ஒரு அழகு. பால் வடியும் முகம். சுறுசுறுப்பு, இளமைத் துடிப்பு, சுருளான ஒரிஜினல் தலைமுடி. பிரதாபன் என்றால் பிரதாபன்தான்.
சர்வாதிகாரி படம் ஏதோ இங்கிலீஸ் படத்தின் தழுவல் என்று கேட்டிருக்கிறேன். என்ன படம் என்று தெரியவில்லை. படத்தின் பெயர் மறந்துவிட்டது. படத்திலும் இங்கிலீஸ் பட சாயல் தெரிகிறது.
ஒரு காலத்தில் மக்கள் திலகத்தை அட்டை கத்தி வீரர் என்று கேலி செய்தனர். ஆனால், அவர் உண்மையான கத்தியுடன் சண்டை போட்டிருக்கிறார்.இந்தப் படத்தில் சண்டைக் காட்சியின்போது மக்கள் திலகத்தின் வாள் தனது கை விரலை துளைத்துவிட்டதாக நம்பியார் சாமி பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். நான் அவரை சந்தித்துப் பேசும்போதும் அதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன். விரலில் தழும்பை காட்டினார்.
சர்வாதிகாரி படத்தில் நம்பியாருடன் மோதும் கடைசி சண்டையில் மக்கள் திலகத்தின் வாள் பட்டு கதவில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறும். சண்டையின்போது நம்பியார் தள்ளி விட்டதில் சிம்மாசனம் போன்ற நாற்காலியில் மக்கள் திலகம் போய் விழுவார். உடனடியாக விநாடி நேரத்தில் துள்ளி நாற்காலியில் இருந்து எழுந்து விலகுவார். அடுத்த கணம் கண் சிமிட்டும் நேரத்துக்குள் நம்பியாரின் வாள் அந்த நாற்காலியின் சாய்ந்து கொள்ளும் பகுதியை துளைத்து மறுபக்கம் வரும். எப்படிப்பட்ட டைமிங்? இன்றும் அந்தக் காட்சியைப் பார்த்து சிலிர்த்தேன்.
கடைசியில் நம்பியாரை வளைத்து அவரது வாள் கொண்ட கையை தனது இடதுகையில் மடக்கி அவரின் வயிற்றில் மக்கள் திலகம் தன் கை வாளால் குத்துவார். அப்போது நிஜமாகவே குத்துவது போல கோபமும் அநியாயக்காரனை எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும் மக்கள் திலகத்தின் முகத்தில் தெறிக்கும்.
வயிற்றில் குத்தப்பட்ட நம்பியார் நீண்ட மேஜையில் சாய்வார். அவரை மக்கள் திலகம் மீண்டும் கத்தியால் குத்த மாட்டார். செத்த பாம்பை அடிக்கவோ மனமில்லை. நம்பியாரின் செயல்களை நினைத்தால் ஆத்திரமோ அடங்கவில்லை. அதன் வெளிப்பாடாகவும் நம்பியாரை வெற்றி கொண்டதை காட்டும் வகையிலும் நம்பியாரின் கையில் உள்ள வாளை தன் கையில் உள்ள வாளால் பலமாக அடித்து அந்த வாளை கீழே விழ வைப்பார். ஆவேசத்தின் அற்புதமான வெளிப்பாடு.
மக்கள் திலகம் என்றாலே ஸ்டைல்தான் என்றாலும் கத்தியை கையில் எடுத்து விட்டால் கூடுதலாக தனி ஸ்டைல் அவருக்கு வந்துவிடும். மேலே உள்ள நீ்ங்கள் போட்ட அலப்பறை ஸ்டில் அதை நிரூபிக்கிறது லோகநாதன்.
நான் விடுவேனா? அதே சர்வாதிகாரி படத்தில் இருந்து புரட்சித் தலைவரின் இன்னொரு கலக்கல் ஸ்டைல். இந்தாருங்கள்.
http://i66.tinypic.com/eve541.jpg
எங்க வீட்டுப் பிள்ளையில் ரங்காராவிடம் வரதட்சணை கேட்கிற நம்பியார் சொல்ற மாதிரி..... எனக்கு ஆசை அதிகம்.
அரச கட்டளையில் வாள் பிடித்தபடி அமர்க்களப்படுத்தும் ஸ்டைல். இதுக்கு மேல நமக்கு என்ன வேண்டும்.
http://i67.tinypic.com/30vbq07.jpg
பார்த்துடலாம் வா.. என்பது மாதிரி கத்தியை பிடித்தபடி மணிவண்ணனின் அந்த ஸ்டைலான அசால்ட் சிரிப்புதான் நம்மளை துள்ள வைக்கிறது.
http://i63.tinypic.com/ir83zc.jpg
வாளைப் பிடித்தபடி ஸ்டைலான மக்கள் திலகத்தின் அசத்தும் படங்களை இன்னும் பரிமாறிக் கொள்ள ஆசைதான். அதற்கு முடிவு ஏது? இன்னிக்கி தூங்கினா மாதிரிதான் போங்கள்.
‘‘நமது தேவையே பிறருடைய நன்மை தான்...
நாம் வாழ்வை பிறருக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்கள்..."
- நம் மக்கள்திலகத்தின் வாக்கான, இதனையே வேத வாக்காக கொண்டு...
வருவோர் - போவோர் சட்டைப்பையில் கை விடாது...
சந்தா - நன்கொடை என வசூல் வேட்டை ஆடாது...
மக்கள் சேவை மட்டுமே மகத்தான சேவையாக கொண்டு...
மருத்துவம் - கல்வி - வேலைவாய்ப்பு என எங்கெல்லாம் எவருக்கெல்லாம் தேவை உள்ளதோ... அங்கே அவர்கள் தன்னிறைவு பெற...
பாரதத்தின் கண்களாய் மஹாத்மாவால் அடையாளம் காட்டப்பட்டு இன்று தன் சுயம் இழந்து நிற்கும் கிராமப்புற மேலாண்மை என சமூக நலனில் அடுத்த பரிணாமமாய்...
நம் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு காலத்தில்...
பொன்மனச்செம்மலின் திருப்பெயரிலேயே...
பொன்மனம் பொதுநலப் பேரவை ...
எதிர்வரும் ஜூன் - 03 - ஆம் தேதி சென்னையில் ஆத்மார்த்தமாக உருவாகிறது...
மறைக்கப்பட்ட - மறக்கப்பட்ட மக்கள் திலகத்தின் மாசற்ற மாணிக்க மனிதர்கள் இங்கே அடையாளம் காட்டப்படுவார்கள்... அங்கீகரிக்கப்படுவார்கள்...
மக்கள்திலகத்தின் உன்னத உதிர உறவுகளே இப்பேரவையின் ஆணி வேர்... அவர்களே இதனில் தொலைதொடர்பாய் செயல்பட போகிறார்கள்...
இனிய இன்னிசை நிகழ்வோடு...
நம் பொன்மனம் எப்.எம். இன் ஒத்துழைப்போடு...
இனிதாய் துவங்க உள்ளது...
வாருங்கள்...
வாழ்த்துங்கள்...
இல்லாமை இல்லாமல் புதியதோர் உலகம் செய்வோம்...!
- "பொன்மனம்" Siva Kumar
மக்கள் திலகத்தின் மாணவன் Mayil Raj
பொன்மனம் பொதுநலப் பேரவை
பொன்மனம் எப்.எம்.
http://i67.tinypic.com/2vkg3dy.jpg
அருமை நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே,
தங்களுக்கே உரித்த பாணியில், சர்வாதிகாரி படத்தின் விமர்சனங்கள்
புரட்சி நடிகரின் புயல் வேக வாள் சண்டை காட்சிகள் பற்றிய புகழ் மாலைகள்
மற்றும் அந்த காலத்தில் அட்டை கத்தி வீரர் என்று நையாண்டி செய்தவர்களுக்கு
ஒரிஜினல் வாள் கொண்டு சண்டை காட்சிகளில் தன் அபார நடிப்பு திறமையை
வெள்ளி திரையில் காண்பித்து ரசிகர்களை கவர்ந்த விதம் ஆகியவற்றை
வர்ணனையுடன் பதிவு செய்தமைக்கு நன்றி.
பல காட்சிகள் ஆங்கில படத்திற்கு இணையாக திறம்பட இயக்கிய இயக்குனர்
மாடர்ன் தியேட்டர் சுந்தரத்தையும் வெகுவாக பாராட்டலாம்.
நடிகை அஞ்சலிதேவி பாடும் "ராஜன் வருவாரே " பாடல் எதிரொலிக்கும்படி
அருமையாக அந்த காலத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இளமை ,அழகு தோற்றம் கண்ணுக்கு
குளிர்ச்சி.
நாளை (21/05/2017) காலை 11 மணிக்கு சன்லைப் சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "என் அண்ணன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i63.tinypic.com/24l7de9.jpg
நாளை இரவு 7மணிக்கு சன்லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "எங்கள் தங்கம் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i64.tinypic.com/scdjxs.jpg
இன்று (19/05/2017)முதல் சென்னை பாட்சாவில்(மினர்வா )மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "சங்கே முழங்கு" தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/246mdmg.jpg
இன்று (19/05/2017) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் மனைவி ஜானகி அம்மையார் அவர்களின் நினைவு நாள் சென்னை ராமாவரம் தோட்டத்தில்
அனுசரிக்கப்பட்டது .
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக பேனர்
ராமாவரம் தோட்டத்து நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது .
http://i63.tinypic.com/xmk00o.jpg
ராமாவரம் தோட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் .
http://i68.tinypic.com/24l76zb.jpg
நடிகர் தீபன் தனது அஞ்சலியை தெரிவிக்கும் வகையில் சென்னையில் பல இடங்களில் சுவரொட்டி ஒட்ட ஏற்பாடு செய்திருந்தார் .
http://i67.tinypic.com/2yv5ufs.jpg
நக்கீரன் வார இதழ்
http://i63.tinypic.com/j5fn10.jpg
நன்றி நண்பர் லோகநாதன் அவர்களே. சர்வாதிகாரி படம் பற்றிய உங்களுடைய சுவையான கூடுதலான தகவல்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது வழிபாட்டு தலமான ராமாவரம் தோட்டத்தில் நேற்று நடந்த ஜானகி அம்மாள் நினைவுநாள் நிகழ்ச்சிகள் பற்றிய தொகுப்பை எழுதுங்கள். நன்றி.
நக்கீரன் பத்திரிகை நடத்தும் நக்கீரன் கோபால் ஒரு திமுக அபிமானி. ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் கூட கடுமையாக எதிர்த்து எழுதி தனக்கும் தன் பத்திரிகைக்கும் விளம்பரம் தேடிக் கொண்ட நபர். திமுக அபிமானி என்பதால் புரட்சித் தலைவர் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஆசாமி. அதை அடிக்கடி வெளிப்படுத்தவும் செய்வார். புரட்சித் தலைவரை பாராட்டுவது போல மட்டம் தட்டுவார். ஏற்கெனவே ஒருமுறை புரட்சித் தலைவரை தவறாக தனது பத்திரிகையில் விமர்சித்து நமது மன்றங்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானார்.
புரட்சித் தலைவர் மீது நக்கீரன் கோபாலின் காழ்ப்புணர்ச்சி அந்தப் பத்திரிகையின் கேள்வி பதில் பகுதிகளில் வெளிப்படும். அதுக்கு இந்தக் கேள்வி பதிலும் ஒரு உதாரணம். புரட்சித் தலைவர் உண்மையிலேயே தொண்டர்களை மதித்து அவர்கள்தான் அதிமுக பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதி அமைத்தார்.
இந்த பதிலைப் பாருங்கள். கட்சியில் மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், அறிவுஜீவிகளால் தனது தலைமை பொறுப்புக்கு சிக்கல் வந்துவிடக்கூடாதே என்பதற்காக அந்த விதியை புரட்சித் தலைவர் கொண்டு வந்தாராம். தனது செல்வாக்கையும் தொண்டர் பலத்தையும் நம்பி புரட்சித் தலைவர் தொடங்கிய கட்சியில் அவருக்கு எதிராக கிளம்பி, யார் கட்சியை கைப்பற்ற முடியும்? அப்படி யாராவது கட்சியை கைப்பற்றினால் தொண்டர்களும், பொதுமக்களும் புரட்சித் தலைவரை புறக்கணித்துவிட்டு அவர்களை ஏற்பார்களா?
இத்தனைக்கும் பதிலின் ஆரம்பத்தில் ‘மக்கள் செல்வாக்கையும் ….…… அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் அதிமுக என்கிற கட்சி’ என்று வேறு சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி செல்வாக்கு உள்ள புரட்சித் தலைவரிடம் இருந்து தலைமைப் பொறுப்பை யார் பறித்துவிட முடியும்?
ராகவானந்தத்தையும்கூட புரட்சித் தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கினார். அதுவும் பதிலில் உள்ளது. அதையும் யாரும் எதிர்க்கவில்லை. புரட்சித் தலைவரை எதிர்த்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய எஸ்டி. சோமசுந்தரம் கூட தேர்தலில் தோற்றுப்போய் திரும்பவும் புரட்சித் தலைவரிடமே வந்து சேர்ந்தார். அவரையும் புரட்சித் தலைவர் ஏற்றுக் கொண்டார்.
நக்கீரன் கோபாலுக்கு கருணாநிதி மீது அபாரமான பிரியம். திமுகவுக்கும் கருணாநிதிக்கும் சாதகமாகவே எப்போதும் அவர் பத்திரிகையில் செய்தி வரும். திமுக தேர்தலில் தோற்கும் என்று உலகத்துக்கே தெரிந்தாலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு (?) போட்டு கடந்த தேர்தல் உட்பட பலமுறை முகத்தில் கரியை பூசிக் கொண்டார். கருணாநிதி மீதும் இப்போது ஸ்டாலின் மீதும் இவரும் திமுகவினரும் கொண்டுள்ள கண்மூடித்தனமான அன்பு தனிமனித வழிபாடு இல்லையா?
2009-ல் இதே மே மாதத்தில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் மகன் அழகிரிக்கும் பேரன் தயாநிதி மாறனுக்கும் மத்திய மந்திரி பதவிக்காக பேரம் பேசிக் கொண்டிருந்த, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் துரோகத்தை நக்கீரன் கோபால் கண்டிக்கவில்லை.
அப்படி கண்டித்திருந்தால் ஆகா, அவருக்கு தனிமனித வழிபாடு இல்லை. கொள்கை வழி நிற்பவர் என்று சொல்லியிருக்கலாம். அப்பவும் கருணாநிதிக்கு ஜால்ரா போட்டார். ஸ்டாலின் பையன் உதய நிதி ஸ்டாலின் பெயரால் கூட எங்கள் மதுரையில் அமைப்பை தொடங்கிவிட்டார்கள். இது தனிமனித வழிபாட்டையும் தாண்டிய குடும்ப வழிபாடு இல்லையா? (ஆனால், இந்தக் குடும்ப ஆட்சி கனவுக்கும், கடந்த 5 நாள்களாக ரஜினிகாந்த் பேசிய பேச்சையும் நடவடிக்கையையும் பார்த்தால் ஆப்பு வைத்துவிடுவார் போல இருக்கிறது.அதுக்காகவாவது ரஜினி அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி.)
கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரை மீட்பதற்காக தமிழக அரசின் தூதுவராக காட்டுக்குப் போய் வீரப்பனோடு நக்கீரன் கோபால் பல முறை பேச்சு நடத்தினார். ராஜ்குமாரை விடுக்க வீரப்பனுக்கு கொடுத்து அனுப்பிய பணத்தை (ராஜ்குமாரை மீட்க தானும் குறிப்பிட்ட தொகையை கொடுத்ததாக பின்னர் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக சொல்லி சர்ச்சை ஆனது நினைவிருக்கும்) நக்கீரன் கோபால் ஆட்டைய போட்டதாக செய்திகள் வெளியானது.
அது எந்த அளவு உண்மையோ தெரியாது. கண்மூடித்தனமாக யார் மீதும் குற்றம் சொல்லக்கூடாது. ஆனால், ராஜ்குமாரை விடுவிக்கும் முன் நடந்த கடைசி கட்ட பேச்சுவார்த்தைகளிலும் சரி, ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்தபோதும் சரி. நக்கீரன் கோபாலை அனுப்ப வேண்டாம் என்று பேச்சுவார்த்தையை நக்கீரன் கோபால் மூலம் நடத்திக் கொண்டிருந்த கருணாநிதி தலைமையிலான தமிழக அரசிடம் வீரப்பனே வெளிப்படையாக சொல்லிவிட்டான்.
அதன்பிறகுதான், அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு எங்கள் மதுரை தந்த மாவீரன் அய்யா பழ. நெடுமாறன் போய் வீரப்பனுடன் பேசி ராஜ்குமாரை மீட்டு வந்தார். முதலில் சில முறை பேச்சு நடத்த நக்கீரன் கோபாலை வரச் சொல்லி அனுமதித்த வீரப்பன், பிறகு ஏன் நக்கீரன் கோபாலை வரவேண்டாம் என்று சொன்னான்? அதுதான்... வீரப்பனுக்கு கொடுத்தனுப்பிய பணத்தை நக்கீரன் கோபால் ஆட்டைய போட்டது உண்மைதானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இப்படிப்பட்ட நக்கீரன் கோபாலுக்கு புரட்சித் தலைவர் தனது தொண்டர்களை மதித்து அவர்கள் மூலமே கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வழி செய்தார் என்று சொல்ல மனம் இல்லை. கட்சியின் அனுபவசாலிகளால் தனது தலைமை பொறுப்புக்கு சிக்கல் வந்துவிடக் கூடாதே என்பதற்காக அப்படி விதி அமைத்தாராம்.
அடப்பாவிங்களா... அதான் மழையே வரமாட்டேங்குது...
எத்தனையோ... அமைப்புகள்...?
எத்தனையோ... சேவா சங்கங்கள்...?
இத்துணை ஆண்டுகளாக...
அவர்கள் செய்யாததை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்...?
- "பத்தோடு பதினொன்றாய்..." நம்மை எதார்த்தமாய் பார்க்கும்...
"மதிப்புமிக்க அன்பர்" நேற்று கேட்டார் என்னிடம்...
இது தான் என் பதில்...
"இடது கையை இடுப்பிலும்... வலது கையை சைகையாய் ஆட்டியும் பேசும் உங்களைப்போன்றோர் சிலரும் ஆச்சரியத்தில் புருவமுயர்த்தி... வலது கையை வியப்பின் அடையாளமாக தாடையிலும் வைத்து நீங்கள் பார்க்கும் வகையில்...
நாங்க வரத்தான் போறோம்... இந்த சமுதாயத்துக்கு எங்களால ஆனத...
தரத்தான் போறோம்..." - என்றேன்..
- பொன்மனம் சிவகுமார்
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
பொன்மனம் பொதுநலப் பேரவை...
http://i65.tinypic.com/2eyf1qu.jpg
நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களின் கவனத்திற்கு ,
நக்கீரன் இதழில் சில மாதங்களாக தவறாமல் எம்.ஜி.ஆர். -அகமும், புறமும் என்கிற தலைப்பில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகளை ஆதரித்தும்,எதிர்த்தும் பிரசுரம் செய்து வருகிறார்கள்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பாராட்டியும் பத்திரிகைகள் வளர்கின்றன .
வருவாய் ஈட்டுகின்றன. அவரை விமர்சித்தும், பொருந்தாத கருத்துக்கள் கூறியும்
சில தினசரிகள், வார இதழ்கள் விளம்பரத்தை தேடிக் கொள்கின்றன. இவை ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் பழக்கம்.உதாரணத்திற்கு , தி,.மு.க. ஆட்சியின்போது , புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்த சமயத்தில் தினத்தந்தியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை இருட்டடிப்பு செய்து சரோஜாதேவி, நாகேஷ், நம்பியார் நடித்த "படகோட்டி " என்றும் ஜெயலலிதா நாகேஷ், நம்பியார் நடித்த "ஆயிரத்தில் ஒருவன் " என்றும் விளம்பரம் வெளியிட்டார்கள். சில மாதங்கள் வரையில் இந்த போக்கு நீடித்தது. பொதுமக்கள் இதை பொருட்படுத்தவில்லை . எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்கள் முதல் வெளியீட்டிலும், மறு வெளியீட்டிலும் பெற்ற வரவேற்பை கண்டு மனம் திருந்தி மக்கள் தலைவர் பெயரை விளம்பரத்தில் பயன்படுத்த ஆரம்பித்தனர் என்பது வரலாறு . எனவே, எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரையும், புகழையும், புகழ்ந்தும்,இகழ்ந்தும் பத்திரிகைகள் வாழத்தான் செய்கின்றன. வருமானத்தையும், விளம்பரத்தையும் தேடிக் கொள்கின்றன.
திரையுலகில், அரசியலில், பொது வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவது நமது தலைவருக்கு வாடிக்கை. மற்றவருக்கு வேடிக்கை .
சந்திரோதயம் படத்தில் வரும் வசனப்படி, என் எதிரி கூட சமமாக இல்லை என்றால் அலட்சியப்படுத்துபவன் நான் .என்று எம்.ஆர். ராதா விடம் கூறுவது நினைவுக்கு வருகிறது .
எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படத்தில் நடிப்பதை விட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன .
அவர் மறைந்து 30 ஆண்டுகள் ஆகின்றன . இன்றும். அவர் துவக்கிய கட்சி
ஆட்சி கட்டிலில் உள்ளது . அவரது பல படங்கள் டிஜிட்டல் தயாரிப்பில் உள்ளன .
மறு வெளியீடுகளில், பழைய படங்கள் வசூல் சாதனை செய்கின்றன .இவை
எல்லாம் நாம் பெருமைப்படக்கூடிய விஷயங்கள் .
எப்படியோ, எம்.ஜி.ஆர் என்கின்ற மனிதநேய மிக்க மாமனிதரின் பெயரை உச்சரிக்காமல் இன்றைய தினசரிகளோ, வார இதழ்களோ, மாத இதழ்களோ இல்லை . வரவேற்போம் நல்ல செய்திகளை மட்டும். துறப்போம் தவறான ,
பொய் செய்திகளை .
நக்கீரன் பற்றிய தங்களின் விமர்சனங்கள் அனைத்தும் உண்மையே.
அன்னை ஜானகி அம்மையார் அவர்களின் நினைவு நாள் , சென்னை ராமாவரம்
தோட்டத்தில் வெகு எளிமையாக அனுசரிக்கப்பட்டது . முன்னாள் அமைச்சர்
பொன்னையன் வந்திருந்தார் . முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். டெல்லி சென்றதால் வரவில்லை. தொண்டர்கள், பக்தர்கள் கணிசமான அளவில் வந்திருந்ததாக காவலாளி தெரிவித்தார். நான் பிற்பகலில் தாமதமாக
சென்றதால் யாரையும் சந்திக்க இயலவில்லை என்பதே தங்களுக்கு
தெரிவிக்கும் செய்தி.
கல்கி வார இதழ் -21/05/2017
http://i66.tinypic.com/2d7yk5y.jpg
புதிய தலைமுறை வார இதழ் -25/05/2017
http://i67.tinypic.com/3493tkp.jpg
http://i67.tinypic.com/6pcn0x.jpg
http://i67.tinypic.com/27x2ipi.jpg
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,
உங்களுடைய உதாரணங்களைக் கொண்ட உணர்ச்சிபூர்வமான பதிலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
ராமாவரம் தோட்டத்துக்கு நீங்கள் தாமதமாக சென்றதால் ஜானகி அம்மாள் நினைவு நாள் நிகழ்ச்சியை பதிவு செய்ய முடியாத உங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டேன். நன்றி.
தற்போது சன்லைப் சானலில் காலை 11 மணி முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். (புகழ் ) "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/f39hzr.jpg
தினமலர் - வாரமலர் -21/05/2017
http://i66.tinypic.com/2lkv8k1.jpg
http://i66.tinypic.com/15zp6rm.jpg
தமிழ் இந்து -19/05/2017
http://i68.tinypic.com/1z23vyf.jpg
http://i63.tinypic.com/30igsig.jpg
http://i63.tinypic.com/o9k6j8.jpg
http://i63.tinypic.com/i4jnf7.jpg
குறிப்பு : தினசரியில் ம.கோ. இரா என்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைக் குறிக்கும் .
(மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதன் சுருக்கம் )
ஜூனியர் விகடன் -24/05/2017
http://i63.tinypic.com/5n6wkl.jpg
நக்கீரன் 20/05/2017
http://i66.tinypic.com/2mpbmlg.jpg
முரசு டிவியில் சபாஷ் தம்பி என்று ஒரு படம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. கதை நாயகன் ஜெய்சங்கர். அது என்னவோ தெரியவில்ல. எந்தப் படத்தை பார்த்தாலும் அதிலும் துப்பறியும் படம் பார்த்தால் இந்தப் படத்தில் மக்கள் திலகம் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று மனது நினைக்கிறது.
சபாஷ் தம்பியில் மக்கள் திலகம் நடித்திருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும். மக்கள் திலகம் படத்தின் கதை அமைப்பை இன்னும் கொஞ்சம் மாற்றி நாம் எப்படி ரசிப்போமோ அப்பிடி படத்தை கொடுத்திருப்பார்.
சபாஷ் தம்பி சஸ்பென்ஸ் படம். இப்போது இந்த நேரத்தில் முரசு டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை யாராவது படத்தை பார்த்துக் கொண்டு இருக்கலாம். அதனால் சஸ்பென்சை சொல்ல மாட்டேன். படத்தில் வில்லனும் சரி, சஸ்பென்சும் சரி யாரும் ஊகிக்க முடியாதபடி இருக்க வேண்டியதுதான். ஆனால், ஏற்றுக் கொள்கின்ற மாதிரி இருக்க வேண்டும். சஸ்பென்ஸ் உடையும்போது ஆ… இவனா? அல்லது இவளா? என்று இருக்க வேண்டும். (இவளா… என்றால் பறக்கும் பாவை காஞ்சனா, இதயக்கனி ராஜசுலோசனா மாதிரி)
அதை விட்டுப்புட்டு சஸ்பென்ஸ் உடையும்போது காமெடியாக, ஏற்றுக் கொள்ள முடியாதமாதிரி ஜீரணிக்கவே கஷ்டமாக இருக்கக் கூடாது. சபாஷ் தம்பி படம் அப்பிடித்தான் இருக்கும். சஸ்பென்ஸ் உடையும்போது அதிர்ச்சிக்கு பதில் காமெடியாக இருக்கும். அது தேங்காய் சீனிவாசனின் காமெடியை தோற்கடித்து விடும்.
ஜெய்சங்கர் தன் பங்குக்கு கொடுத்த பாத்திரத்தை நன்றாகத்தான் நடிச்சிருப்பார். ஆனால், மக்கள் திலகம் மட்டும் இந்தப் படத்தில் நடித்திருந்தால்…? நிச்சயம் கதையோ அல்லது வில்லனாக கடைசியில் காட்டப்படுபவரோ மாற்றப்பட்டிருப்பார். இப்படி எரிச்சலுடன் நம்பளை ஏங்க வைக்கும் நிறைய படங்கள் உண்டு.
இப்படி நினைத்துக் கொண்டிருந்தேன். சபாஷ் தம்பியை தொடர்ந்து பார்க்க புடிக்கவில்லை. டிவியை நிறுத்திவிட்டு நான் நினைச்சதை பதிவு போட வந்துவிட்டேன்.
மக்களால் போற்றப்படுபவர், மக்கள் விரும்புகிற மாதிரி படங்கள் கொடுப்பவர் அதனால்தான் அவர்... மக்கள் திலகம்.
http://i68.tinypic.com/5vtbtc.jpg