http://i67.tinypic.com/apahs8.jpg
Printable View
இதயவீணை படப்பிடிப்பின் இடைவேளையில் ராணுவ வீரர்களின் அன்புப்பிடியில்
மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர்.
http://i68.tinypic.com/ejbshs.jpg
முந்தானை முடிச்சு படத்தில் நடித்த போது நடிகர் பயில்வான் ரங்கநாதனின்
தோற்றம் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் .
http://i67.tinypic.com/wqwlsy.jpg
வண்ணத்திரை வார இதழ்
எப்பொழுதும் திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் பிரகாசித்து கொண்டேயிருக்கும் "ஒளிவிளக்கு" இவ்வளவு சாதாரணமான ப்ரிண்ட்லேயே இந்தளவுக்கு வசூல் பிரளயம் காணுகிறது, ஒழுங்காக டிஜிட்டல் பிரதியில் வெளியிட்டால் எந்தளவுக்கு வசூல் இலக்கிய, இலக்கணம் படைக்கும்?!!!!! 👍 👌...தமிழ் மொழியில் மட்டுமல்ல, மலையாளம் தெலுங்கு கன்னடம் மராத்தி ஹிந்தி வங்காளம் ஒரியா உட்பட இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளில் வேறெந்த நடிகர்கள், நடிகைகள் நடித்த 100 வது படம் இதுவரை இத்தகைய சாதனை... சரித்திரம்... சகாப்தம் படைத்ததில்லை... இனி யாரும் படைக்க போவதில்லை எம்.ஜி.ஆர்., ஐ தவிர.............
தலைவரை பற்றிய ஒரு தகவல் :
தேர்த் திருவிழா : 23-02-1968
"தேர்த் திருவிழா " 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தலைவர் எம் ஜி யாரின் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் ( சரவணன் என்ற பரிசல் துளையும் கதாபாத்திரத்தில் ) ஜெயலலிதா , C.R. விஜியகுமாரி, S.A.அசோகன், R.முத்துராமன், நாகேஷ் , மனோரமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
தேர்த் திருவிழா :-
இயக்குனர் :* எம். ஏ. திருமுகம் தயாரிப்பாளர் : எம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
கதை:. தேவர்
வசனம் : மதுரை திருமாறன்
பாடல்கள் : மருதகாசி
இசை : கே. வி. மகாதேவன்
கதாநாயகன் : எம். ஜி. ஆர்
கதாநாயகி : ஜெயலலிதா
வெளியீடு : பிப்ரவரி 23, 1968
பாடல்கள் :
@. ஏய் குட்டி * என்னா குட்டி
@. மழை முத்து முத்து பந்தல் இட்டு கிட்ட கிட்ட
@. சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு சிட்டு
@. அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா அழகன் நீதான் நீதான் என்று அடிக்கட்டுமா
*எம்ஜிஆர் தன் தங்கையின் வாழ்கையில் விளையாடிய டைரக்டரை கண்டு பிடித்து அவனுக்குகே திருமண செய்து வைப்பது எப்படி என்பதே கதை *
@ இதுவும் 16 நாள்களில் எடுத்து முடிக்கப்பட்டது.
@. இது எதிர் பார்த்த வெற்றி பெறாத படங்களில் ஒன்று. ஆனாலும் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களையும், படத்தை திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களையும் வாழ வைத்த காவியம்...
" தேர்த் திருவிழா என்பது பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஊர்கூடித் தேர் இழுத்தால் தான் தேர்த் திருவிழாவினைக் கொண்டாட முடியும். இது ஒற்றுமையை மறைமுகமாக வலியுறுத்தும் விழா.
தமிழ்நாட்டில் திருவாரூர் தேர் ஆசியாவிலே மிகப்பெரிய தேர் ஆகும்.
படித்ததை / பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்கள் மேலான
கருத்துகளை வரவேற்கிறேன். என். வேலாயுதன். நன்றி... வணக்கம்... Courtesy: wa.,
மலரும் நினைவுகள் - 1977
*****************************************
1977 பாராளுமன்ற தேர்தல் மக்கள் திலகம் எம்ஜிஆரின் அதிமுக கூட்டணி யின் வெற்றி சரித்திரம் .
42 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 1977ல் வெளியானது
.
மக்கள் திலகம் எம்ஜிஆர்
**************************************
.இன்றுபோல் என்றும் வாழ்க, நவரத்தினம், மீனவ நண்பன் , மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போன்றபடங்களில் நடித்துக்கொண்டிருந்தார் .பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் . மக்கள் திலகம் 60 வயதில் மிக அழகாகவும் இளமையாகவும் சுறுசுறுப்பான ஹீரோ வாக வலம் வந்தார்
அதிமுக சந்தித்த தேர்தல்கள்
*******************************************
1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் சரித்திர சாதனை படைத்தார் . 1974ல் புதுவை மாநிலத்தில் முதல் முறையாக அதிமுக ஆட்சி அமைத்தது .
கோவை - புதுவை நாடாளுமன்ற தொகுதிகளை முறையே வலது கம்யூ மற்றும் அதிமுக கைப்பற்றியது
1977 பாராளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர் தலைமயில் காங் கட்சி வலது கம்யூ முஸ்லீம்லீக் கூட்டணி அமைத்தது
தமிழ் நாட்டில் அதிமுக 20 தொகுதிகள் மற்றும் புதுவை மொத்தம் 21 இடங்களில் போட்டியிட்டது .காங் கட்சி 15 இடங்களிலும் முஸ்லீம்லீக் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் இரவு பகலாக 40 தொகுதிகளுக்கும் ஒட்டு வேட்டையாடினார் .காங் கட்சி பிரமுகரான நடிகர் சிவாஜிகணேசனும் கூட்டணிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் முழு ஒத்துழைப்பு தந்து 40 தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்றி வாக்குகள் சேகரித்தார்கள் . சிவாஜிகணேசனின் ரசிகர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பது உண்மை
ஒட்டு எண்ணிக்கை அன்று ,,,
பெங்களூர் நகரில் ,,
1977 நாடாளுமன்ற தேர்தல் எண்ணிக்கை அன்றய தினம் காலை 10 மணி முதல் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் தினசுடர் பத்திரிகை முன்பும் பிடிஐ எனப்படும் செய்தி டெலிபிரின்டர் நிறுவனத்தின் முன்னர் குவிந்தார்கள் .
சற்று தூரத்தில் ஸ்ரீ என்ற திரை அரங்கில் எம்ஜிஆரின் நாடோடி மன்னன் திரைப்படம் தினசரி 4 காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .
பகல் 12 மணிக்கு தபால் ஒட்டு எண்ணிக்கையில் திமுக பல தொகுதிகளில் முனனிலை என்ற செய்தி வந்ததும் அங்கு கூடியிருந்த திமுகவினர் ஒரே ஆரவாரத்துடன் பட்டாசுகளை வெடிக்க தொடங்கினார்கள் . பிற்பகல் 2 மணி அளவில் முதல் செய்தியாக பழனி தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் காங் கட்சி சி .சுப்பிரமணியம் 10000 வாக்குகள் முந்துகிறார் .3மணி முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 36 தொகுதிகளில் முன்னேறி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி அடைந்தார்கள் .
அதிமுக முக்கிய பிரமுகர்கள்
ஆலந்தூர் மோகனரங்கம்
சேலம் கண்ணன்
ஆலடி அருணா
எஸ்.டி. சோமசுந்தரம்
பெ .அன்பழகன்
இளஞ்செழியன்
மாயத்தேவர்
வேணுகோபால்
பாலா பழனூர்
பிரமிக்க வைத்த தேர்தல் முடிவுகள் - ஒரு கண்ணோட்டம்
தேர்தலில் எம்ஜிஆர் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள் . எல்லோரின்கணிப்புகளை யும் முறியடித்தார் எம்ஜிஆர் .
அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை வென்றது .புதுவை தொகுதி யிலும் வெற்றி
மொத்தம் 19 இடங்களில் வெற்றி .
காங் கட்சி
நாகர்கோயில் தொகுதியில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தது
வேலூர் தொகுதியில் முஸ் .லீக் கட்சி 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது .
வலது கம்யூ போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது
அதிமுகவின் வெற்றி 19 வேட்பாளர்கள்
நெல்லை - ஆலடி அருணா --- 1,82,000
ராமநாதபுரம் - அன்பழகன் 1.75 000
சிவகங்கை - தியாகராஜன் 2.11.000
புதுக்கோட்டை - இளஞ்செழியன்.2,23,000
தஞ்சை - சோமசுந்தரம் 97,000
பெரம்பலூர் - அசோக்ராஜ் 1,80 000
பெரியகுளம் - ராமசாமி 2,04,000
திண்டுக்கல் - மாயத்தேவர் 1,69 000
பொள்ளாச்சி - ராஜு 1,24,000
நீலகிரி - ராமலிங்கம் 59.000
திருச்செங்கோடு - குழந்தைவேலு 1,28,000
சேலம் - கண்ணன் 79,000
வந்தவாசி - வேணுகோபால் 81,000
திருப்பத்தூர் - விஸ்வநாதன் 98,000
செங்கல்பட்டு - மோகனரங்கம் 35,000
ஸ்ரீபெரும்புதூர் - ஜெகநாதன் 45,000
கிருஷ்ணகிரி - பெரியசாமி 1,19,000
சிதம்பரம் - முருகேசன் 1,09,000
புதுவை - பாலா பழனூர் 19,000
வட சென்னை
மத்திய சென்னை
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்தது
வட சென்னையில் நாஞ்சில் மனோகரன் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .
மத்திய சென்னை யில் ராஜா முகமது 73ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .
1977 பாராளுமன்ற தேர்தலில் எம்ஜிஆரின் உழைப்பால் அதிமுக கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது . அன்றைய தினமே தமிழகத்தின்
அடுத்த முதல்வர் எம்ஜிஆர் அடுத்த ஆட்சி அண்ணாதிமுக என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்தியது .
இந்தியா முழுவதும் அனைத்து பத்திரிகைகளும் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை பற்றி விரிவாக புகழ்ந்து எழுதினார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெருமையும் நிறைவான மகிழ்வும் தந்த தேர்தல் முடிவுகள் மறக்க முடியாத வரலாற்று சாதனை ............ Thanks wa., Sharing...
.
எங்களது இனியநண்பர் திரு.என்.ஆறுமுகம் புரட்சித்தலைவரின் தீவிர ரசிகர் புரட்சித்தலைவரின் படங்கள் பிறந்தநாள் விழாக்களில் மெகாசைஸ். பேனர்.போஸ்ட்டர் போட்டு அசத்தும் இனியவரின்.வீட்டுத் திருமணம் நாளை 24.2.2019 ஞாயிறு காலை 6.30.மணிக்குமேல் 7.25. மணிக்குள் மதுரையைஅடுத்த திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோவில் அருகில் சன்னதிதெரு ஸ்ரீ.செல்வலெட்சுமி திருமணமண்டபம் புரட்சித்தலைவரின் நல்வாழ்த்துக்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் வழங்க நடைபெற இருக்கின்றது மணமக்களை மனதாரவும் இதயபூர்வமாக வும் வாழ்த்தி மதுரை நண்பர்கள் வைத்தப்பேனர் இது குருப்பில் அனைத்துநண்பர்களும் வாழ்த்துங்கள் முடிந்தவர்கள் நேரில்வந்து ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று நல்லநேரம் படத்தின் சூப்பர் புகைப்படங்களை சமர்பித்து வேண்டிக்கொள்ளும் மதுரை மாநகர் மாவட்ட அனைத்து புரட்சித்தலைவரின் பக்தர்கள் நன்றி...... Thanks wa...
வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புரட்சி தலைவரின் 102 வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு தொடர்ச்சி ...........
தகவல் உதவி : வேலூர் நண்பர் திரு.ராமமூர்த்தி .
http://i64.tinypic.com/n66p6x.jpg