-
ulagam sutrum valiban - a review by a fan
'உலகம் சுற்றும் வாலிபன்'. 1973ல் வெளியானபோது வாலிபனுக்கு வயது 55. என்ன தில் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எவரும் தமிழகத்தில் எட்ட முடியாத மாஸ். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்றே மூன்று படங்களைதான் தலைவர் இயக்கியிருக்கிறார். எம்.ஜி.யார் பிக்சர்ஸ் லோகோ அதிகாரப்பூர்வமாக வெள்ளித்திரைக்கு வந்த முதல் படம்.
தலைவரின் மாஸ்டர்பீஸ். அந்த காலத்திலேயே அறுபது நாட்களில் தேவிபாரடைஸ் திரையரங்கில் மட்டும் ஐந்து லட்சத்தை வசூலித்த வசூல் சக்கரவர்த்தி. சென்னையிலும், மதுரையிலும் வெள்ளி விழா கண்ட படம். தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளில் இன்று வரை சாதனையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் படம். தடைகளை தவிடுபொடியாக்கிய சரித்திரம்.
இப்படத்தை திரையரங்கிலும், டி.வி.டி.யிலும் எத்தனைமுறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு படத்தின் ஸ்க்ரிப்டை மடமடவென்று ஒரு 192 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதித்தள்ள முடியும். இத்தனை முறை பார்க்குமளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது.
உலகத்தரமா.. வித்தியாசமான கதையா? இது இரண்டுமே இல்லை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கொண்டாட்டம். கொண்டாட்டத்தைத் தவிர வேறெதுவுமில்லை. தலைவரே பாடுவது போல் 'எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்'
இந்தியாவின் தலைசிறந்த(?) விஞ்ஞானிகளில் ஒருவரான முருகன் மின்னலின் ஒட்டுமொத்த சக்தியை சிறு கேப்ஸ்யூல்களில் அடக்கிவிடக்கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். அதை ஆக்கசக்திக்கு பயன்படுத்தும் விதமான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்கு முயல்கிறார். அழிவுசக்திகளுக்கு இந்த ஃபார்முலாவை விற்று கோடி கோடியாக சம்பாதிக்க நினைக்கிறார் சக விஞ்ஞானி பைரவன். ஃபார்முலாவை முருகன் எங்கோ மறைத்துவைத்திருக்க அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பைரவன் முருகனை கடத்தி விடுகிறார். கடத்தலுக்கு முன்பாக முருகன் நினைவாற்றலை இழந்துவிடுகிறார். ஒருபக்கம் வில்லன் குழு ஃபார்முலாவை தேட, மறுபுறம் முருகனின் தம்பியும், போலிஸ் சிஐடியுமான ராஜூ ஃபார்முலாவையும், அண்ணனையும் சேர்த்து தேடுகிறார். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் என்று பலநாடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு இறுதி வெற்றி நல்லவர்களுக்கே.
* இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தலைவர் ஒரு கெட்டப்புக்கு வித்தியாசம் காட்டுவதற்காக குறுந்தாடி வைத்து அசத்துவார். விஞ்ஞானி பாத்திரம் என்பதால் தாடி பொருத்தமாகவே இருக்கும்.
* தலைவர் ஆங்கிலத்திலும் விட்டு விளாசியிருப்பார். ஹோட்டல் ரிசப்ஷனில் "மே ஐ மீட் மிஸ்டர் பைரவன்?" என்று ஆங்கிலத்தில் கேட்கும்போது அரங்கமே அதிரும்.
* லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை என்று தலைவருக்கு நாலு ஹீரோயின்கள். ஒவ்வொரு ஹீரோயினுடனும் குஜாலான டூயட்கள் உண்டு.
* மனோகர், அசோகன், தேங்காய்சீனிவாசன், நம்பியார் என்று ஏராளமான வில்லன்கள். ஏராளமான சண்டைகள். சிகப்பு விளக்கு ஒளிகாட்டவே தலைவர் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டியிருந்திருக்கும்.
* சந்திரகலாவை ஒரு நடன ஓட்டலில் இருந்து தலைவர் மீட்கும் காட்சியில் ஸ்டண்ட் அட்டகாசம். தலைவரை விட பலமடங்கு எடை கூடி இருக்கும் வில்லனை அசால்ட்டாக தூக்கி எறிவார். அந்த சண்டைகாட்சியின் போது வளையவரும் அயல்நாட்டு கவர்ச்சித்தாரகைகளால் நம் கண்ணுக்கும் பசுமை.
* இறுதிக்காட்சி ஸ்கேட்டிங் ஃபைட்டுக்காகவே வாத்தியார் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்திருந்தார்.
* வாலி - எம்.எஸ்.வி கலக்கல் காக்டெயில். பாடல்கள் ஒவ்வொன்றும் காதில் தேன்மழை.
சீர்காழி குரலில் 'வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' கம்பீரமான ஓபனிங் சாங்க். 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' விஷூவல் ட்ரீட். 'சிக்குமங்கு சிக்குமங்கு சிக்கப்பாப்பா' பாட்டில் தலைவரின் குழந்தைத்தனம் வெளிப்படும். 'தங்கத் தோணியிலே' அசத்தலாக போட்டில் படமாக்கப்பட்ட பாடல். 'நிலவு ஒரு பெண்ணாகி' பாடலில் வரும் வார்த்தைகள் 'மடல்வாழை துடையிருக்க மச்சமொன்று அதிலிருக்க' இளமைக்குறும்பு. 'பச்சைக்கிளி முத்துச்சரம்' பட்டாசு, சிகப்புச்சட்டை, நீலநிற ஃபேண்ட், கழுத்தில் கர்ச்சீப், டீனேஜ் ஹீரோயின் என்று அதகளப்படுத்தியிருப்பார் தலைவர், போதாதற்கு 'கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா?' கிளர்ச்சியூட்டும் வரிகள். 'பஞ்சாயீ' இனிமை. 'அவள் ஒரு நவரச நாடகம்' படமாக்கப்பட்ட விதம் ஆச்சரியம். 'உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம்' டோக்கியோ டூர்.
* படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. தலைவரின் இளமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹீரோயின் சந்திரகலா முத்திய முகமாக இருப்பார். புரட்சித்தலைவி நடித்திருந்தால் செம மஜாவாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் தலைவருக்கும், தலைவிக்கும் ஊடல் இருந்ததாக சொல்வார்கள். ஆனாலும் சந்திரகலாவின் நடனம் பரவசம்.
* "நீங்க என்னாச்சி? என்னாச்சின்னு கேட்குறீங்க.. அவர் யார் ஆட்சி? யார் ஆட்சின்னு கேட்குறாரு...", "நாயோட திறமைய அவர் பார்க்கட்டும். என்னோட திறமைய நீ பாரு" - பஞ்ச் டயலாக்குகள், தவுசண்ட் வாலா சரங்கள்.
* பச்சைக்கிளி டூயட்டில் தாய்லாந்து ஹீரோயினை கசக்கி, தடவிய அடுத்தக் காட்சியில் தலைவர் "தங்கச்சீ..." என்று பாசமழை பொழிய, ஹீரோயினும் "அண்ணா.." என்று ஆரத்தழுவிக்கொள்வது அசத்தல் காமெடி. நாகேஷின் காமெடியை விட தலைவரின் காமெடி படத்தில் கொடிகட்டிப் பறக்கும்.
* தெத்துப்பல் நம்பியாருடனான சண்டைக்காட்சி தான் படத்தின் ஹைலைட். புத்தவிகாரத்தில் நடைபெறும் சண்டையில் அனலும், ஆவியும் பறக்கும். புத்த விகாரத்துக்குள் நுழையும்போது தலைவர் ஷூவை கழட்டிவிட்டு நுழையும் காட்சியில் இன்றும் கைத்தட்டல்.
* படத்தின் படப்பிடிப்பின்
போது தலைவர் திமுகவில் இருந்ததால் ஆங்காங்கே கருப்பு சிகப்பு தெரியும். மிகக்கஷ்டப்பட்டு எடிட்டிங்கில் அவற்றை வெட்டியிருந்தாலும் பலகாட்சிகளில் கருப்பு சிகப்பு இன்னமும் பளீரிடுகிறது.
* படத்தின் எண்ட் கார்டில் 'எமது அடுத்தத் தயாரிப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்று போடுவார்கள். தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் இன்னொரு சாதனைப்படத்தை தமிழ் திரையுலகம் இழந்தது.
Courtsey
Net..........VSM
-
நவயுக பாரி வள்ளல் புரட்ச்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர் வாழ்க்கை பக்கங்களியிருந்து
ஒரு சமயம் தலைவர் வண்டி ஒரு மலையடி பாதையில் பயணிக்கிறது, வண்டியில் புரடச்சித் தலைவர், அவரின் இல்லத்தரசி ஜானகி அம்மையார், கதை மற்றும் வசனகர்த்தா திரு ரவீந்திரன் மற்றும் கார் ஓட்டுநர் பயணத்தில் இருந்தனர், காரில் உரையடிக்கொண்டு இருக்கயில் பேச்சு தலைவரின் பெயர்,பட்டம் பற்றி போனது இதில் ரவிந்தர் தலைவரிடம் " அண்ணே! இந்த உலகம் பூரா தங்களை பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது "என்று கூறினார் அதற்க்கு தலைவர் "அப்படியெல்லாம் இல்லை என்னை அறியாதோர் எத்தனையோ பேர் இருக்கிறார் கள் " என்று கூறினார் இருருக்கவே முடியாது பந்தயம ₹500/= என்றார் ரவீந்திர், சரி என்றார் தலைவர் வண்டி சென்று கொண்டு இருந்தது சற்று தொலைவில் ஒரு வயோத்திகர் ஒருவர் நடந்து போய்க்கொண்டு இருந்தார் தலைவர் கரை நிறுத்தி அவரிடம் யாரு,? எங்கே? செல்கிறீர்கள் என்று வினாவினார் தான் இந்த மழைபக்கத்தில் ஒரு குடுசையில் இருப்பதாகவும் விறகு வெட்டி கிழே ஒரு கடையில் விற்று விட்டு வீடு திரும்புவதாக கூறினார் காரில் ஏறுங்கள் தங்களை வீட்டில் இறக்கிவிடுகிறேன் என்றார் தலைவர் அதற்க்கு அந்த முதியவர் பரவயில்லை பக்கம் தான் நடத்து போய் விடுவேன் என்றார் ஆனாலும் தலைவர் விடுவதாக இல்லை பரவாயில்லை வாருங்கள் நாங்கள் போகும் பாதைத்தான் சிரமம் ஏதும் இல்லை என்றார் பெரியவரும் ஏறிகொண்டார் பயணம் தொடர்ந்தது தலைவர் பெரியவரின் முழுவிபரமும் கேட்டு அறிந்தார் அதற்கு பிறகு காரில் மௌனம் நிலவியது கார் போய்க்கொண்டுருக்கையில் அந்த பெரியவர் ஓட்டுநரிடம் தம்பி அந்த ஓரத்தில் அந்த மரதிற்க்குபக்கத்தில் நிறுத்துங்கள், கரும் அவ்விடித்தில் போய் நின்றது, பெரியவர் இரங்கி " அய்யா மிக்க நன்றி! மன்னிக்கவும் தாங்கள் சற்று நேரம் இருங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு ஒரு ஒத்தையடி பாதையில் நடந்து மறைந்தார், தலைவர் ரவிந்த்ரை பார்த்து " பார்த்தாயா? அவருக்கு நான் யார் என்றே தெரியவில்லை என்றார், ரவிந்தார் தலைவரிடம் அவர் ஏழை, விறகு வெட்டி பிழைக்கிறார் அவருக்கு நீங்க எதுவும் உதவலேயே இது உங்கள் வழகத்திற்கு மாறாக உள்ளதே, அதற்க்கு தலைவர் அப்படியில்லை நான் அவரை காரில் ஏற சொன்ன பொழுது மறுத்தார் பார்த்தாய்யா?அதிலிருந்து புரிந்துகொண்டேன் அவர் மிகவும் தன்மானம் மிக்கவர் என்று என்வே பணம் தந்து அவர் உழைப்பை நான் அவமானப்படிதிவிட கூடாது,, தலைவர் சொல்லி முடிக்கும் தருவாயில் மூச்சிறைக்க வந்து சேர்ந்தார் பெரியவர் "தம்பி ஊருக்கெல்லாம் கொடுத்து உதவுற உன் நல்ல மனசுக்கு நான் ஏதாவது செய்யணும் என்று நினைத்துதான் வண்டியே நிறுத்தினேன் இந்தாப்பா என்னாலே முடிஞ்சது உனக்கு வாங்கிக்க என்று 3 ஆப்பிள் கணிகளை தலைவர் கையில் திணித்தார், தலைவர் பெரியவரின் கை பற்றி தன் கண்களில் ஒற்றி கொண்டார், பெரியவரிடம் விடைபெற்று கார் நாகர்ந்தது காரில் அனைவரும் மௌனம் தலைவர் மௌனம் கலைத்தார், " ஜானு அந்த பழங்களை பத்திரமாக வை அவைகளை நான் ஒருவன் மட்டும் தான் சாப்பிடப்போகிறேன் " என்றார் அடுத்தவர்களுக்கு கொடுக்காமல் சாப்பிடுவபவர நம் தலைவர்.....rmh
-
"தேர்த்திருவிழா" 1968 ம் வருடம் பிப்.23 ல் வெளியான தேவர் பிலிம்ஸின் 14 வது கருப்பு வெள்ளை படம்.
நல்ல அருமையான விறுவிறுப்பான படம். படம் வந்த நேரம் மிகவும் மோசமான ஒரு காலகட்டம். ஒரு பக்கம் "ரகசிய போலீஸ் 115" ஜன 11ல் வெளியாகி நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. "தேர்த்திருவிழா" பிப்ரவரியில் வருவதை ரசிகர்களே விரும்பவில்லை. தேவர் இதைப்பற்றி யெல்லாம் கவலை கொள்ளமாட்டார். அவருக்கு சொன்ன தேதியில் படப்பிடிப்பு முடியணும். சொன்ன தேதியில் படம் வெளியாக வேண்டும். இதிலே மிகவும் கவனமாக இருப்பார்.
வசூலும் முதல் ரவுண்டில் 20-25 லட்சம் வந்தால் போதும் போட்ட முதலை எடுத்து விடுவார். அதன்பின் ஓடுவது எல்லாம் லாபம்தான். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பிற நடிகர் படங்கள் எல்லாம் முதல் ரவுண்டில் வருவது மட்டும்தான் வசூல். அதோடு அந்தப் படங்கள் வசூலை நிறுத்தி விடும். அதன் பிறகு? அவ்வளவுதான்.
அதனால்தான் எம்ஜிஆர் காலத்திற்கு பிறகு மிகுந்த கடன்சுமையால் தேவர் பிலிம்ஸ் காணாமல் போய் விட்டது. இதில் தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த படங்களின் மொத்த உரிமைகளையும் கைமாற்றியதால் வந்த வினை.
படத்தின் முதலை 2 வாரத்திலே எடுத்து விடுவார். அதன்பிறகு படத்தின் ஓட்டத்தில் தலையிட மாட்டார். அப்படித்தான் நன்றாக போய்க் கொண்டிருந்த "விவசாயி" யை மற்ற எல்லா தியேட்டரிலிலும் எடுத்து விட்டு கிருஷ்ணவேணியில் மட்டும் 50 நாட்கள் ஓட விட்டார்கள். கூட வந்த "இரு மலர்கள்" "ஊட்டி வரை உறவை" விட "விவசாயி" அதிக வசூல் ஆகியிருந்தும் படத்தை 50 நாட்கள் கூட சரியாக ஓடவிடவில்லை.
அதேபோல் "தேர்த்திருவிழா"வும் ரிலீஸ் செய்த தேதி சரியில்லை.
அடுத்து மார்ச் 15 ல் மூன்றே வாரத்தில் அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படமான "குடியிருந்த கோயில்" வெளியீடு. ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவில் அழகிய கலைமான் என்பது போன்ற நிலை.
அதுமட்டுமல்ல பிப் 23 ல் "தேர்த்திருவிழா" கூட வந்த "பணமா பாசமா" எதிர்பாராமல் பம்பர் ஹிட்.. "பணமா பாசமா" முதல் முன்று நாட்கள் சரியாக போகவில்லை. மவுத் டாக் மூலமாக படம் பெண்களுக்கு பிடித்து போக படம் அசுரத்தனமான வெற்றியை பெற்றது. இருப்பினும் இப்போது "பணமா பாசமா" வை ஒரு காட்சி கூட தியேட்டரில் ஓட்ட முடியாது. ஆனால்
"தேர்த்திருவிழா" இப்போது திரையரங்கில் வெளியானாலும் 4,5
நாட்கள் ஓடி விடும் என்பதுதான் எம்ஜிஆர் படத்தின் மவுசுக்கு காரணம்.
இதில் சிக்குண்ட "தேர்த்திருவிழா"
ஒரளவு சுமாரான வெற்றியை பெற்றது. படத்தில் பாடல்கள் பிரமாதம். அதிலும் குறிப்பாக 'மழை முத்து முத்து பந்தலிட்டு','
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா?'
'யா யா பாத்தியா'? போன்ற அருமையான ஜோடி பாடல்களுடன் 'தஞ்சாவூரு சீமையிலே' போன்ற டப்பாங்குத்து பாடல்களும் ரசிக்கும்படி படமாக்கியிருப்பார்கள். அதில் தலைவர் கொடுக்கும் டான்ஸ் மூவ்மென்ட் மிகவும் அபாரமாக இருக்கும்.
படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகில் உள்ள கொள்ளிடத்தில் அமைந்திருக்கும் காவிரி கரையோரம் பரிசல் காட்சிகள் படமாக்கப்பட்டன. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி வெள்ளத்தை தடுத்தாலும் மக்கள் திலகத்தின் வருகையால் மக்கள் வெள்ளத்தை தடுக்க முடியாமல் திணறிய காவல்துறை ஒலி பெருக்கியை பயன்படுத்தியும் முடியாமல் தலைவரின் கண்ணசைவில் மக்கள் வெள்ளம் கட்டுப்பட்டதை ஒரு பேரதிசயமாக பேசிக்கொண்டனர்..
தேவர் படத்துக்குறிய சகல அம்சங்கள் நிறைந்திருந்தும் கால சூழ்நிலை சரியில்லாததால் எதிர்பார்த்த வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. இருப்பினும் சென்னையில் 50 நாட்களும் பிற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்களும் ஓடி ஒரு கெளரவமான வெற்றியை பெற்றது..........ksr...
-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
ஒளிபரப்பான*பட்டியல் (01/02/21 முதல் 10/02/21* வரை )
-----------------------------------------------------------------------------------------------------------------------
01/02/21- சன் லைப்- காலை 11 மணி - நம் நாடு*
* * * * * * * *மூன் டிவி - இரவு 8 மணி - நல்ல நேரம்*
* * * * * * * பாலிமர் - இரவு 11 மணி - நீரும் நெருப்பும்*
02/02/21-வஸந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - பணத்தோட்டம்*
* * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - தாய்க்கு பின் தாரம்*
03/02/21-முரசு -மதியம் 12 மணி /7 மணி -வேட்டைக்காரன்*
* * * * * * * புதுயுகம்* - பிற்பகல் 2 மணி - குடும்பத்தலைவன்*
** * * * * * * சன் லைப்* -* மாலை 4 மணி - ரிக் ஷாக் காரன்*
* * * * * * * *பாலிமர் - இரவு 11 மணி - வேட்டைக்காரன்*
04/02/21-வேந்தர் டிவி - காலை 10.30 மணி - தனிப்பிறவி*
* * * * * * * சன் லைப்- காலை 11 மணி - நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * மூன் டிவி - இரவு 8 மணி - காதல் வாகனம்*
05/02/21-மீனாட்சி -மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * *வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*
* * * * * * * சன் லைப்- மாலை 4 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * *மீனாட்சி - இரவு 9 மாய் - நான் ஆணையிட்டால்*
* * * * * * * பாலிமர் - இரவு 11 மணி - சங்கே முழங்கு*
06/2/21- சன் லைப்-காலை 11 மணி - ஆசைமுகம்*
* * * * * * * மீனாட்சி - இரவு 9.30 மணி -வேட்டைக்காரன்*
07/02/21-வானவில் -காலை 8 மணி -மாடப்புறா*
* * * * * * * மீனாட்சி - மதியம் 12 மணி - நல்ல நேரம்*
* * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி -சங்கே முழங்கு*
* * * * * * * சன் லைப்- மாலை 4 மணி - அரச கட்டளை*
* * * * * * * *மீனாட்சி -இரவு 9.30 மணி - விவசாயி*
08/02/21- மெகா 24- பிற்பகல் 2.30* மணி -நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * * சன் லைப் -மாலை 4 மணி - நவரத்தினம்*
09/02/21-வசந்த் டிவி -பிற்பகல் 1.30 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * * *புது யுகம் டிவி -பிற்பகல் 2 மணி -நீரும் நெருப்பும்*
* * * * * * * *சன் லைப் -மாலை 4 மணி -குடியிருந்த கோயில்*
10/02/21-சன் லைப்- காலை 11 மணி - அன்பே வா*
* * * * * * * * எப் எம். தமிழ் - இரவு 8 மணி - வேட்டைக்காரன்*
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி ...............
-----------------------------------------------------------------------------------------------------------------
இன்று முதல் (12/2/21) கோவை டிலைட்டில்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்*
உழைக்கும் கரங்கள்* தினசரி 2 காட்சிகள்* (மேட்னி /மாலை ) நடைபெறுகிறது .
தகவல் உதவி திரு. வி.ராஜா , நெல்லை.*
-
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய_சனிக்கிழமை #காலை_வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின் திரைப்படங்களை பற்றிய அலசலை ஒரு தொடராக பதிவிட ஆரம்பித்து உள்ளேன்
அதில் நேற்று தலைவரின் முதல் படமான சதிலீலாவதி பற்றி பார்த்தோம்.. அதில் துணை நடிகராக ஒரு காவல்துறை அதிகாரி வேடம் பூண்டு நடித்திருப்பார்.. அதிலிருந்து 14 படங்கள் வரை துணை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்..
தலைவர் தனது 15வது படத்தில் தான்
கதாநாயகன் வேடம் கிடைத்தது இன்று
அந்த திரைப்படம் பற்றி பார்ப்போம்..
#ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முதல் முறை கதையின் நாயகன் ஆக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார்.
இயக்கம்
ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்பு
எம். சோமசுந்தரம்
யூப்பிட்டர்
எஸ். கே. மொக்தீன்
இசை
எஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்பு
மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்
கே.மாலதி, எம்.என்.நம்பியார்,
எம்.ஆர்.சுவாமிநாதன், டி.எஸ்.பாலையா, புளிமூட்டை ராமசாமி,
கே.தவமணி தேவி,
எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்,
எஸ்.வி.சுப்பையா,
நாராயண பிள்ளை, டி.கே.சரஸ்வதி,
எம்.எம்.ராதாபாய்
ஒளிப்பதிவு
டபிள்யூ. ஆர். சுப்பாராவ், வி.கிருஷ்ணன்
படத்தொகுப்பு
டி. துரைராஜ்
வெளியீடு
ஏப்ரல் 11, 1947
நீளம்
14805 அடி
ராஜகுமாரி திரை படத்தின் சிறப்புகள் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,
மு.கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.
உடுமலை நாராயணகவியின் பாடல்களுக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற
எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம்.என்.நம்பியார் வாயசைத்தார்.
இப்படத்துக்கு உரையாடலை
மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.
படத்தில் ‘கதை, வசனம், சினாரியோ & டைரக்*ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் (பெயர் கையொப்ப வடிவில்) என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் வருகிறது.
ராஜகுமாரி மல்லிகாவை மீட்கப் புறப்படும் கட்டழகன் சுகுமாரன், வழியில் சர்ப்பத்தீவின் ராணி விஷாராணியிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது விஷாராணி, “காலையிலே ஜாலத் தீவுக்குப் போக கப்பல் தருகிறேன், இன்றிரவு நீ என்னை காமக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போ” என்கிறாள். விஷாராணி பேசும் இந்த ஒரு வசனம் அந்தக் கதாபாத்திரத்தின் குணத்தை மொத்தமாகச் சொல்லிச் சென்றது.
கலைஞர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியபோது 23 வயது இளைஞர்.
தனது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் மு.கருணாநிதி இப்படி நினைவு கூர்ந்திருக்கிறார் - “ஓராண்டு காலம் ’குடியரசு’ அலுவலகத்தில் பணியாற்றி, பெரியாரிடம் கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன். அதற்குப் பிறகு கோவையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு. திரைப்படத்துக்கு வசனம் எழுத வேண்டும் என்ற அழைப்பு. அதை அனுப்பியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி.
என்னுடைய நண்பர் துணையுடன் கோவை சென்று சாமியைச் சந்திந்தேன். ‘கோவை ஜுபிடர் நிறுவனம் எடுக்கவிருக்கும் ‘ராஜகுமாரி’ என்ற படத்துக்கு வசனம் எழுத வேண்டும்’ என்றார். இதை உடனடியாக பெரியாரிடம் தெரிவித்தேன். “போய் வா” என்று விடைகொடுத்தார்." என்று...
தனது 15வது படத்தில் கதாநாயகனாக நடித்த பின்பும் அடுத்தடுத்து துணை கதாபாத்திரம் வேடம் தான் வருகின்றது உதாரணமாக #அபிமன்யு போன்ற 7 படங்களில் நடித்திருக்கிறார்... புரட்சி தலைவர் கதாநாயகன் வேடம் ஏற்று அதிலிருந்து கதையின் நாயகனாகவே நடித்த திரைப்படம் பற்றி நாளை பார்ப்போம்....
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........
-
முத்தான முதல்வரே!!
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மக்களால் மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர்.இந்த வரலாறு வேறு
யாருக்கும் இல்லை.புரட்சித் தலைவருக்குப் பின் ஆள வந்தவர்கள் ஓட்டிற்கும்,கூட்டத்திற்கும் பணம் கொடுத்து சேர்த்த வரலாறை என்னாளும் மக்கள் அறிவர்.
இந்தியாவின் உயரிய விருதுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர்.
திரைத்துறையின் அனைத்து உயரிய விருதையும் பெற்ற ஒரே நடிகர் எம்.ஜி.ஆர்.
தமிழகத்தை ஆண்ட முதல்வர்களிலேயே
மக்கள் செல்வாக்கை நிரந்தரமாக பெற்ற ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.
அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளானாலும் இவருடைய புகழ் இமியும் குறையாத மாசற்ற மாணிக்கம் புரட்சித் தலைவரே!! இவர் கட்சியில் தொடர்கிறார்கள் என எல்லோரையும் உண்மையான புரட்சித் தலைவரின் ரசிகன் ஆதரிக்க மாட்டான்.....
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!
.........Rnjh
-
#பார்வை #ஒன்றே #போதுமே!
மக்கள் திலகம்...
தொலைவில் இருந்து பார்க்கப்
பார்க்க ஆவலைத் தூண்டும்...
கூட்டத்தில் இருந்து நகர்ந்து அருகே சென்று பார்க்கத் தூண்டும்...
நிறைய பேசத்தூண்டும்...
பொற்கரம் பற்றத் தோன்றும்...
பொற்பாதங்களில் விழத் தோன்றும்...
ஆனால் அருகே சென்றவுடன் நம் ஐம்புலன்களும் அடங்கிவிடும்...
நம்முள் பல இரசாயன அதிர்வுகளை ஏற்படுத்திவிடும்...
அந்த தரிசனமே கோடி புண்ணியமென்று நாம் கேட்க வந்ததையே மறந்து அவருக்குள் லயித்துவிடுவோம்...
தரிசனம் பெற்றதும், இந்த
உலகையே வென்றுவிட்டது போன்ற பரவச நிலையை அடைவோம்...
பிறந்த பயனை அடைந்து விட்டதாகப் பெருமை கொள்வோம்...
#இதுதான் #உண்மையான
#எம்ஜிஆர் #பக்தர்கள்.........bsm
-
உ.சு.வா...திரைக்கு பின் நடந்தவை பகுதி 4.
எக்ஸ்போ அரங்கில் லொகேஷன் பார்த்து கொண்டே இருக்கும் போது திடீர் என்று கூட்டத்தின் ஒரு பகுதியை நோக்கி அவர் ஓட....அவர் வேகம் முடியாமல் நாங்கள் தொடர்ந்து ஓட....
அங்கே ஒருவர் உடன் சகஜம் ஆக பேசி கொண்டு இருந்தார் எம்ஜிஆர் அவர்கள்..
இந்த நாட்டில் யார் அவர் இந்த மக்கள் கடலில் அவரை எப்படி இவர் கண்டு கொண்டார் என்று வியந்து அருகில் போய் நாங்க பார்க்க.....
என்னை பெயர் சொல்லி மணியன் சார் வாங்க இவர் யாரு தெரியவில்லையா...
நம்ம ஊரில் பிரபல தயாரிப்பாளர் பி.எஸ்.ரங்கா அவர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஹரிதான் இவர் என்று சொல்ல..
எம்ஜிஆர் அவர்கள் உடன் வந்த ராமமூர்த்தி அவர்கள் உடனே அடையாளம் கண்டு கொண்டு தொழில் ரீதியாக இணைய....
எம்ஜிஆர் அவர்கள் வந்த நோக்கம் புரிந்து கொண்டு அவரும் அதாவது ஹரியும் நானும் தயார் இணைந்து அருமையான காட்சிகளை கொண்டு செல்வோம் தமிழ் மண்ணுக்கு என்று சொல்ல.....
அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி...ஆனாலும் இந்த கூட்டத்தில் அவரை கண்டு பிடித்த கழுகு பார்வையை எண்ணி எண்ணி வியந்து கொள்வேன் நான்...அதுதான் அவர்.
அனைத்து இடங்களையும் தன் மன கண்ணில் உள்வாங்கி கொண்டு அடுத்த சில நாட்களில் அங்கே காட்சிகள் எடுக்க தயார் நிலையில் அனைவரும் புறப்பட்டு செல்ல.
ஒசாகா வரை விமானத்தில் செல்லும் போது ஜிப்பா வேட்டி அணிந்து என் அருகில் அமர்ந்து இருந்த பின் நான் சற்றே கண் அசர இறங்கும் இடம் வரும் போது சும்மா கோட்..சூட் உடையில் என் அருகில் ஒருவர் அமர்ந்து இருக்க...
யார் என்று பார்க்க அவரே தான்... என்ன இப்படி பயணத்தின் போதே உங்களால் எப்படி உடை மாற்றி கொள்ள முடிந்தது என்று நான் கேட்க.
அதுதான் நாடக அனுபவம்....கிடைக்கும் நேரத்தில் இடத்தில் சட்டுன்னு உடைகளை மாற்றி கொள்வது எங்கள் நாடக நடிகர்களின் வழக்கம் என்று சோலிகளை குலுக்கி கீழே போட்டது போல கல கல என்று சிரித்தார் அந்த விந்தை மனிதர்....
படத்தில் கடைசியாக வரும் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பாடலை தான் எண்ணிய படி எடுத்து முடித்தார்....
ஓர் இரு நாள் கழித்து எனக்கு தகவல் வந்தது சென்னையில் இருந்து.
படத்தின் முதல் பாடல் காட்சியை எடுத்து விட்டார் எம்ஜிஆர் என்ற தகவல் தெரிந்து..
அந்த ஒரே நாளில் விநியோக உரிமை பெற்று இருந்த நண்பர்கள் செங்கல்பட்டு...வட ஆற்காடு...தென் ஆற்காடு மற்றும் சில இடங்களில் பட வெளியீட்டு உரிமையை நினைத்ததை விட அந்த நேரத்தில் 4 லட்ச ரூபாய் அதிகம் ஆக கேட்க...
எவ்வளவு சொன்னாலும் சரி வாங்கி கொள்கிறோம் என்று முடிவாக..மற்ற தயாரிப்பாளர்கள் மனதில் படத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரிக்க....
அப்போதே சிறு சிறு உரசல்கள் ஆரம்பித்த நேரத்தில் எதிரிகள் என்ன ஆரம்பமே இப்படி இருக்கு என்று மனதுக்குள் புகைச்சல் அடைய.....
எல்லாம் நல்லா போகி கொண்டு இருந்த அந்த நாட்கள் கடந்து ஒரு நாள் நாகேஷ் அவர்கள் திடீர் என்று...என்று...
மொத்த பட குழுவும் அதிர்ந்து போக....
தொடரும்..அடுத்த பதிவில்....
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்.
நன்றி...நன்றி....
-
# பாவம் சி.கணேசன் ரசிகர்கள்,
ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்து கொண்டு அவ்வப்போது சில பதிவுகளை போட்டு அவர்களே கையும் தட்டிக் கொண்டு இருந்தார்கள்,
கூடவே எங்களின் கோயில் "அன்னை இல்லம் " என்றெல்லாம் சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் இப்படி ஒரு இடியை தலையிலே இந்த மனுஷன் இறக்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லையே எங்கள் அய்யனே கணேசா?????,
தேசியத்தையும், தெய்வீகத்தையும் கொண்டு வர போராடும் தற்போதைய பிரதமரே என் தலைவர் என்று முழங்கிக் கொண்டு அண்ணன் ராம்குமாரும், சூனியர் சிவாசி என்ற அடைமொழியோடு களம் இறங்கி முதல் ரவுண்டிலேயே காணாமல் போன துஷ்யந்த் சாரும் இப்படி சட்டியை கமத்துவார்கள் என்று கணேசன் குஞ்சுகள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை,
உடனே நம்ம அல்லக்கை சந்திரசேகர பூபதி கதறி அழுது அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ( இனி காங்கிரஸ்
கலைப்பிரிவு சார்பில் கணேசன் பிறந்தநாள் விழா? வுக்கும் பெப்பேதானா?)
நம்ம போண்டா மணிக்கு ஒருவர் நீண்ட அறிவுரையெல்லாம் வழங்கி பொங்கியிருக்கிறார் (அதாவது போண்டா அவர்களே இனி மேலாவது இந்த சுயநல வாதியின் அப்பனுக்கு வரிந்து கட்டிக்கொண்டு பதிவு போடுவதை விட்டுவிட்டு உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று ஒரு குஞ்சு சொல்ல போண்டாவும் சரிங்க என்று கண்ணீர் கடலில் நீந்தி பதிவு போட்டிருக்கிறது,
What a pity?)
போண்டா மணியும் உடனே தேர்தல் அலசல்கள் பண்ண ஆரம்பிச்சுருவாரு,
80 இல் பாராளுமன்ற தேர்தலில் ஏன் எம்ஜிஆர் வெற்றி பெற முடியவில்லை என்று ஒரு பதிவு போட்டு அவங்களுக்குள்ளே சொறிஞ்சு விட்டுக்குறது (இதெல்லாம் ஒரு பொழப்பு)
தலைவர் 80 பாராளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்களை பெற்றாலும் 80 லட்சம் வாக்குகளை அள்ளினார்,
மிருக பலத்துடன் இருந்த காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்து என்ன பெரிய புடுங்கி சாதனையை ஏற்படுத்தினார் என்று கொஞ்சம் சொல்லுங்களேன் போண்டா மணி அவர்களே, என்ன ஒரு 25 லட்சம் வாக்குகள் கூட வாங்கியிருப்பார்கள்,
ஆனால் சிவாஜி ஆரம்பித்த தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்து கணேசனார் மட்டும் மீசைய முறுக்கியதால் நம்ம ஆளு என்று மக்கள் கொஞ்சம் கருணை காட்டியதால் கோவணமாவது மிஞ்சியது,
திமுக வேட்பாளரிடம் 10643 ஓட்டு வித்தியாசத்தில் தோற்று கதறிக்கொண்டே கட்சியை கலைத்ததை போண்டா அப்படியே பூசி மெழுகுவார்,
ஆனால் தமிழ்நாடு முழுக்க கடும் போட்டியை 1980 பாராளுமன்ற தேர்தலில் தலைவர் கொடுத்ததை பேசாமல் விட்டு விடுவார்,
என்னதான் உங்கள் பிரச்சினை? கடைசியில் ராம்குமார் எல்லாருக்கும் சேர்த்து வச்சாரே ஆப்பு,
அதாங்க ஆப்பு, ஆப்பு,
இப்படித்தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் தூதுவிட்டு வி. பி சிங் கணேசனை ஜனதாதள தமிழக தலைவராக நியமித்து தனக்குத் தானே மீள முடியாத படுகுழியை வெட்டிக் கொண்டார்,
காமராஜரும் கடைசி வரையில் நம்பி கணேசனுக்கு வாழ்த்து கூறி விடை பெற்றுக்கொண்டார்,
80இல் கணேசன் " என் பிறந்தவீடும் புகுந்த வீடும் ஒன்றாகி விட்டது,
நாடாள கலைஞர் இருக்கிறார், எம்ஜிஆர் நடிக்கப் போகட்டும் என்று கூறி இரண்டு கட்சிகளுக்குமே வாய்க்கரிசி போட்டுவிட்டுத்தான் கணேசனார் ஓய்ந்தார்
இதையெல்லாம் போண்டா எழுதாது,
அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது ( ஏம்பா உனக்கே போரடிக்கலையா?)
கணேசன் திரை சாதனைகளை மூச்சு வாங்க விளக்கி கடைசியில் " வியட்நா ம் வீடு " படத்தை வாங்கி டிசிட்டலில்? வெளியிட்டு சாரு இப்போ எங்கே இருக்காரோ தெரியவில்லை,
இப்படி முன்பு பட்டை மீசை வைத்துக்கொண்டு திரிந்த ஒருவர் " பாசமலர் " படத்தை வெளியிட்டு அந்த மனுஷனும் படத்தில் வரும் சாவித்திரியை விட அதிகம் கண்ணீர் சிந்தியதாக கேள்வி?
இவனுங்க லட்சணத்தில் " அன்பே வா" டிஜிட்டல் படத்தைப் பற்றி விமர்சனம் வேற,
அன்பே வா தமிழகம் முழுக்க 150 திரை அரங்குகளுக்கு மேல் வெளியிட்டு அதுவும் திருப்பூர் போன்ற ஒரு சில இடங்களில் 25 நாளையும் வெற்றிகரமாக கடந்து ஒரே வாரத்தில் போட்ட காசை விட பலமடங்கு அள்ளி விட்டார் கந்தசாமி,
படம் டிஜிட்டல் செய்தது சரியில்லை என்று தலைவர் ரசிகர்கள் போராட்டம் நடத்தியதால் திரும்பவும் Redigital செய்து கொரோனா முடிந்ததும் படத்தை வெளியிட உள்ளார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் போண்டா மணி மற்றும் சில அல்லக்கைங்க,
Youtube இல் கூட எங்கு பார்த்தாலும் தலைவர் பற்றிய காணொளிகள் அப்படியே நிறைந்து கிடக்கிறது ( தலைவரை விமர்சிப்பதாக நினைப்பவன் கூட தலைவர் போட்டோ போட்டுத்தான் காசு பார்க்கிறான் )
தயாரிப்பாளர் கலைஞானம் சொல்கிறார் " மிருதங்க சக்கரவர்த்தி " படத்துக்கு கே. எஸ் கோபாலகிருஷ்ணன் 5 லட்சம் சம்பளம் கேட்டார் என்று சொல்லிவிட்டு ( சிவாஜியை விட இரண்டு மடங்கு சம்பளம் கூட கேட்டிருக்கிறார் )
அவர் சொல்லும் வார்த்தை இது " அப்போ எம்ஜிஆர் படம் டைரக்ட் செய்யும் டைரக்டரா அது வேற லெவல் சம்பளம் கொடுக்கணும் "
எங்க ஊரு சுசீந்திரம் சுப்பையா பிள்ளை கதையை எடுத்து அதில் சிவாஜி காட்டிய அங்க சேட்டைகளை பார்த்தால் உண்மையான தவில் வித்வான்கள் தவில் வாசிப்பதையே மறந்து விடுவார்கள்,
அதில் பட்ட லேசான காயத்துடன் தப்பிக்காமல் குறைந்த சம்பளம்தானே என்று மீண்டும் அய்யனை வைத்து " ராஜரிஷி " எடுத்து போர்வையை மூடி படுத்த கலைஞா னத்தை மீண்டும் வாழ்வளித்து நிமிர வைத்தது தலைவரின் கலையு லக வாரிசு பாக்கியராஜ் அவர்கள்,
அவரே காணொளி வெளியிட்டுள்ளார்,
இந்த சமையல் கட்டில் தூங்கும் பூனைகள் பார்க்கட்டும்,
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சித்ரா லட்சுமணன் அவர்களும் தலைவர் வாழ்க்கை வரலாறை சொல்லி views அள்ள ஆரம்பித்து விட்டார்,
கூடவே தலைவரின் திரை சாதனைகளை விலாவாரியாக சிலா கித்து சொல்கிறார் ( இவ்வளவுக்கும் கொஞ்ச காலம் சிவாஜி ரசிகர் மன்ற பத்திரிக்கை நடத்தியவர் சித்ரா )
இந்த பக்கத்தை பார்த்தால் யாருன்னு தெரியல " சிவாஜி முரசு " நேயர்களே அப்படீன்னு நல்ல காமெடியா தொடங்குவாரு ஒரு ஆள், அதை கேட்டால் யாருக்கும் சிரிப்பு வரும், அந்த வகையில் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி,
சில வருடங்களுக்கு முன் தினமலரில் " செலூலாய்டு சோழன் " தொடர் எழுதிய தற்சமயம் மறைந்து போன திரு. சுதாங்கன் அவர்கள் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார் " எம்ஜிஆர் படம் தோல்வி என்று சொன்னால் அந்த படத்தின் வசூல் என்பது மற்ற நடிகர்களின் மிகப்பெரிய வெற்றிப்படம் என்னும் படங்களின் வசூலுக்கு சமம் என்று விநியோகஸ்தர்கள் சொல்வார்கள் "
இதை சொல்லிவிட்டு சுதாங்கன் சொல்கிறார் வெற்றிப்படம் என்று சொல்லப்பட்ட " மன்னவன் வந்தானடி " படமும் "அவன்தான் மனிதன் படமும் உண்மையில் தோல்விப் படங்கள் "
இதைப் படித்து விட்டு "மய்யம் " இணைய தளத்தில் அவருக்கு வண்டை வண்டையாய் கணேசன் குஞ்சுகள் அர்ச்சனை செய்தார்கள்,
இப்போது போண்டா ஒரு பதிவு போட்டிருக்கிறார்
"எம்ஜிஆர் படங்கள் B&C யில் எப்போதும் வசூலை அள்ளுவதாக சினிமா ஆவணங்கள் எல்லாவற்றிலும் சரி, இப்போது வெளியிடுகின்ற புத்தகங்களிலும் சரி அடித்து சொல்கிறார்கள் என்று வேதனைப் பட்டிருக்கிறார்,
என்ன செய்ய உண்மையை உன்னைப் போன்ற ஒரு நாலு அவதாரங்கள் சிவாஜி அப்படி சிவாஜி இப்படி என்று எழுதினால் என்ன ஆகப்போகுது ( உங்களையெல்லாம் நினைத்து பரிதாபம்தான் ஏற்படுகிறது )
கூடிய சீக்கிரம் சிவாஜி ரசிகனாக இருந்த, உங்களுக்கெல்லாம் நிறைய தகவல்கள் தந்த ஒருவர் " The World Box Office Emperor Makkal Thilagam M. G. R. " என்னும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளார்.
தலைவரின் பக்தன்...
ஜே. ஜேம்ஸ்வாட்!.........(J.JamesWatt)
-
mgr முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார்.
காரில் கோட்டைக்கு போய் கொண்டே படிக்கிறார்.
அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பேரோ அல்லது கட்சிக்காரர் பேரோ அல்லது தான் யார் என்ன விவரம் என்று இணைப்பு கடிதம் கூட இல்லாமல் வந்த திருமண பத்திரிகை மட்டும் இருந்தது.
உதவி கேட்க வில்லை கலந்து கொள்ள கோரிக்கை இல்லை.
மனதில் ஏதோ தோன்றிய எம்ஜியார் பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார்.
பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தெய்க்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது
. அவர் செருப்பு தெய்க்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல நம் இதய தெய்வம் படம் மட்டும் ஒட்ட பட்டு இருந்தது விவரங்களை கேட்ட பொன்மனம் தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்கு தெரிய வேண்டும் ஆனால் அதற்கு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மை தொண்டனை நினைத்து உருகுகிறார்.
திருமண நாளும் வந்து விட்டது. காலை 9.00 மணிக்கு முகூர்த்தம். 8.45 மணி அளவில் காவல் துறை அணிவகுப்பு அந்த ஏழை தொழிலாளி வீட்டு முன்னால் காரணம் தெரியாமல் விழிக்கும் திருமண வீட்டார்.
மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் வாத்தியார். 4777 வாகனம் அந்த எளியவன் வீட்டு முன்னால் வந்து நிற்பதை அந்த பகுதி மக்கள் மற்றும் பத்திரிகை அனுப்பிய அந்த தொண்டன் எதிர்பார்க்கவில்லை.
கண்கள் கலங்கி இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளி கொடுத்து விட்டு நீ மட்டும்தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா நானும் கூட தான் என்று காலை உணவை அங்கே முடித்து கொண்டு புறப்படுகிறார்
#எட்டாவது_அதிசயம்_எம்ஜியார். செருப்பு தெய்க்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தது போல மதுரைவீரனில் நடித்து மட்டும் வாழ வில்லை நடப்பிலும் வாழ்ந்தார் வாத்தியார்...இன்றய நடிகர்களுக்கு சமர்ப்பணம் இந்த பதிவு #வாழ்க_எம்ஜியார்_புகழ் .....
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
-
தான் காதலித்த தமிழ்மொழியின் சிறப்பினை, இனிமையை உலகமெல்லாம் அறிய ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை 1981 ஆம் ஆண்டு மதுரையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இதுவே உலகத் தமிழ் மாநாட்டிலேயே தலைசிறந்த முதல் மாநாடாக என்றென்றும் திகழ்கிறது. பாரதி கண்ட புதுமை தமிழும் இவரே. தமிழ் தாய் பெற்றெடுத்த முதல் தலைமகனும் இவரே.தமிழ் மொழியின் சிறப்பை உலகம் அறிய தமிழறிஞர் மன்றம் ஒன்றை நிறுவ, யாம் முயற்சி எடுத்துள்ளோம் என்பதை ராஜராஜன் திரைப்படத்தில் எம்ஜிஆர் சொல்லுவார். அதுபோல் நடத்திக் காட்டிய ஒரே பச்சை தமிழன் எம்ஜிஆர் தான். இப்படி எல்லா திரைப்படங்களிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களை அருமையாக எடுத்துக்காட்டிய ஒரே தலைவர் எம்ஜிஆர் தான். இப்படி எத்தனையோ எண்ணற்ற சேவைகள் தமிழுக்காக எம்ஜிஆர் இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவியவர் எம்ஜிஆர். இது சாதாரணமானதல்ல. இன்று அதே தமிழ் பல்கலைக்கழகத்தில் தான் உலகத் தமிழ் ஆராய்ச்சிகள் அத்தனையும் செய்யப்படுகிறது. தாய் தமிழை போற்றி வணங்கிய தாய் மனம் கொண்ட தேவன் எம்ஜிஆரை என்னாலும் போற்றி அவர் வழி நடப்போம்....Mnkr
-
*"அன்பே வா" *
The 1961 American romantic comedy film *Come September* was adopted by A.C
Trilogchander... screenwriter for AVM Productions, for the screenplay of Anbe Vaa.
Tirulokchandar's salary was ₹ *70,000.*
Aaroor Dass wrote the film's dialogues and S. P. Muthuraman worked as an assistant director. S.
*Maruti Rao, R. G. Gope* and *A. K. Shekar* were in charge of the cinematography, editing, and art direction, respectively. *A. K. Chopra* was in charge of the film's choreography
and *Raghuram* , who later went on to become a successful choreographer in Indian cinema, worked as an assistant choreographer to him. *S.P.முத்துராமன் -* Asst.Director.
Ramachandran gave a call sheet of 72 days. MGR's Salary was
₹ *325,000.(* MGRன் வயது 48).
Final expenses for making this film was
$ *6 Million dollars.*
The exchange rate in 1966 was 4.79 Indian rupees (₹) per 1 US dollar (US$).
The sound effect of the horses' footfall in "Rajavin Paarvai" was created by *Meesai* *Murugesan.* The song " *Once A Pappa"* belongs to Baila, a Sri Lankan musical genre.
*Lead actors*
M. G. Ramachandran as J. Balasubramaniam (JB/Balu)
B. Saroja Devi as Geetha
*Male supporting actors*
S. A. Ashokan as Sekar
Nagesh as Ramaiah
T. R. Ramachandran as Punyakodi
P. D. Sambandam as Krishnaiah
*Female supporting actors*
Manorama as Kannamma
T. P. Muthulakshmi as Pappamma
Madhavi as Mary
M. S. S. Bhagyam as Govindhammal.
Famous writer " *சாவி"* acted as an extra in the song " புதிய வானம், புதிய பூமி".
MGR recommended J. *Jayalalithaa* for the role of the female lead Geetha, but it eventually went to B. Saroja Devi.She was paid ₹ *90,000* for acting in the film.Her *costume design* was done by the Anna Salai-based *Indian* *Silk House.*
As of February 2010, the costumes that Ramachandran used in the film are still preserved at AVM Studios. As of 2017, the MGTB car driven by Ramachandran in the film is preserved at the Madras Heritage Club's Vintage cars display. In August 2016, the *Studebaker* President car driven by Saroja Devi in the film was on display at the 14th annual exhibitions held at Don Bosco Matriculation Higher Secondary School, Chennai.
Anbe Vaa attained cult status in Tamil cinema,and was one of the first South Indian films to be shot in Shimla.
1966 முதல் இன்றுவரை "அன்பே வா" ஏறத்தாழ
₹ 1400 கோடிகளை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்கிறது கோடம்பாக்கம்.
MSV வெளியிட்ட வட்ட வடிவிலான ( CD Shaped) *LP Vinyl Record* ஒன்றின் இன்றைய விலை Rs.8000.
அன்று.. *மதுரை தங்கம்* Theatreல்( seating capacity: 3000), " அன்பே வா" *House Full* ஆக ஓடியது...ஒரு.. unbreakable Record.
^^^^^^^^^^^^^^^.........Kri.Mur
-
புரட்சித்தலைவர்
#மக்கள்_திலகம்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #ஞாயிற்றுக்கிழமை_காலை_வணக்கம்...
புரட்சி தலைவர்வரின் திரைப்படங்கள்
பற்றிய இந்த தொடரில் நேற்று புரட்சி தலைவர் கதையின் நாயகனாக நடித்த
ராஜகுமாரி திரைப்படம் பற்றி பார்த்தோம்
கதாநாயகனாக நடித்த போதும் அதன் பிறகு மீண்டும் கதாநாயகன் வேடம் பெரிதும் தேடி வரவில்லை அதற்கு பதிலாக கதாபாத்திரம் வேடம் தான் வந்தது தனது 15வது படத்தில் கதாநாயகனாக நடித்த பின்பு மீன்டும்
தனது 21வது படத்தில் தான் கதாநாயகனாக நடித்தார் அதற்கு இடைப்பட்ட காலத்தில்
பைத்தியகாரன்,அபிமன்யு, ராஜமுக்தி, மோகினி, ரத்னகுமார் போன்ற படங்களில் குடும்ப சூழ்நிலை காரணமாக நடித்தார்...
#மருதநாட்டு_இளவரசி’ – புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஹீரோ அங்கீகாரம் தந்த திரைப்படம்
அதை பற்றி இன்று பார்ப்போம்..!
சற்று நீண்ட பதிவாக இருக்கும் ஆதலால் மன்னிக்கவும் முடிந்த வரை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்று தான் இந்த பதிவு ஆனால் இந்த படத்தில் இருந்து தான் புரட்சி தலைவர் வாழ்க்கையிலும் முக்கியமான படமாக அமைந்தது அதனால் படத்தை பற்றி பல செய்திகள் சொல்லியாக வேண்டும் என்பதால்...
புரட்சி தலைவர் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தை அவரது ரசிகர்கள் மந்திரமாக உச்சரித்த காலமொன்று உண்டு. அதற்கு நேர்மாறாக, தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் புரட்சி தலைவர் எம்ஜிஆர் வாழ்ந்த காலமும் உண்டு.
இவ்விரண்டையும் கடந்துதான் அவர் காலத்தை வென்ற காவிய நாயகனாக உயர்ந்து விளங்குகிறார்.
தொடர்ச்சியாக வாய்ப்புகள் வராத நிலையில், ஹீரோவாக நடிப்பதைத் தொடர்வதா வேண்டாமா என்று அவர் குழம்பிய தருணமது. அந்தக் காலகட்டத்தில் அவரது திசையைத் தீர்மானித்த திரைப்படங்களில் முதன்மையானது ‘மருதநாட்டு இளவரசி’.
அதன்பின்னர் மலைக்கள்ளன், நாடோடி மன்னன், திருடாதே என்று பல சூப்பர்ஹிட்களை அவர் தருவதற்கு அடித்தளமிட்ட படமும் இதுதான்.
கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்தபிறகு, எம்ஜிஆர் தனக்கான பார்முலாவை வகுத்துக் கொண்டார். அதில் சிறுதுளி மருதநாட்டு இளவரசி திரைப்படத்திலேயே தெரியும்.
1937இல் ‘சதிலீலாவதி’ திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து தன் திரை வாழ்வைத் துவக்கினார் புரட்சி தலைவர் எம்ஜிஆர். அதன்பின்னர் தக்*ஷயக்ஞம், மாயா மச்சீந்திரா உட்பட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
இடைப்பட்ட காலத்தில் ‘சாயா’ என்ற படத்தில் அவர் நாயகனாக நடித்து அது பாதியிலேயே கைவிடப்பட்டது.
சிறு வேடங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு இது பேரதிர்ச்சியைத் தந்தது.
சாயாவின் இயக்குனராகப் பணியாற்றிய நந்தலால், ‘தொழிலை நேசித்துச் செய், எந்த நேரத்திலும் அது உன்னைக் கைவிடாது’ என்று அப்போது எம்ஜிஆருக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு, அதனை ஒருபோதும் தலைவர் மறக்கவில்லை.
ஒருவர் ஹீரோவாக நடிக்கும் படம் பாதியில் நின்றுவிட்டால் மற்றொரு வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்த காலமது.
(தினமலர் வாரமலர் இதழில் வெளியான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் எம்ஜிஆர்.)
நாயகனாக நடித்தபிறகு குணசித்திர வேடம், வில்லன் பாத்திரம் போன்றவற்றில் நடிப்பது அக்காலத்தில் சகஜமான விஷயமல்ல
தனக்கு உடன்பாடில்லாத போதும், குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பல படங்களில் சிறுவேடங்களில் தலைகாட்டினார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் நாயகனாக நடிக்கப் பேருதவி செய்தவர் இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. பின்னாட்களில், அவரது இசையமைப்பில் மலைக்கள்ளன், நாடோடி மன்னன், திருடாதே உட்படப் பல படங்களில் எம்ஜிஆர் பணியாற்றினார்.
மீண்டும் கதாநாயகனாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் நாயகன் ஆவதற்குத் துணை புரிந்தன மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘மந்திரிகுமாரி’ மற்றும் ஜி.கோவிந்தன் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘மருதநாட்டு இளவரசி’ ஆகிய திரைப்படங்கள்.
இவ்விரண்டிலும் தனது சிறப்பம்சம் என்னவென்று வெளிக்காட்டினார் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்.
எம்ஜிஆரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்து படம் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை பட அதிபர்களிடம் ஏற்படுத்திய திரைப்படம் ‘மருதநாட்டு இளவரசி’.
‘நான் ஏன் பிறந்தேன்’ நூலில், தன் திரையுலக வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களில் இரண்டாவதாக இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் எம்ஜிஆர். அவர் இப்படிச் சொன்னதற்குக் காரணமிருக்கிறது.
‘மந்திரிகுமாரி’ திரைப்படம் மு.கருணாநிதியின் எழுத்தில், எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் என்ற அடையாளத்தைப் பெற்றிருந்தது.
அதே நேரத்தில், பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே தயாரானது ‘மருதநாட்டு இளவரசி’.
வாள் சண்டையிடுவது, கேமிரா நோக்கி வசனம் பேசுவது, திரையில் காதலைப் பொழிவது என்று அக்காலத்து நாயகர்களுக்கான இலக்கணங்களை இப்படத்தில் பூர்த்தி செய்தார் எம்ஜிஆர்.
#மருதநாட்டு_இளவரசி_படத்தின்_கதை #இதுதான்.
குறிஞ்சி நாட்டு மன்னருக்கு சிங்காரி, சித்ரா என்று இரண்டு மனைவிகள். சிங்காரியின் வாரிசை அரியணையில் அமர வைக்க, அவரது சகோதரர் துர்ஜயன் சித்ராவைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்.
இதனை அறிந்து அரண்மனையை விட்டு வெளியேறும் சித்ரா, ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் அக்குழந்தையை அவர் பிரிகிறார்.
கார்மேகம் என்பவரிடத்தில் காண்டீபன் எனும் பெயரில் வளர்கிறது சித்ரா பெற்றெடுத்த குழந்தை.
25 ஆண்டுகள் கழித்து, மருத நாட்டுக்குத் தன் நண்பனுடன் செல்கிறார் காண்டீபன். அந்நாட்டின் இளவரசி ராணியைச் சந்திக்கிறார்.
சாதாரண பிரஜையாக காட்டிக்கொள்ளும் ராணிக்கும் காண்டீபனுக்கும் இடையே காதல் மலர்கிறது.
இதனிடையே, மருதநாட்டு இளவரசியை குறிஞ்சி நாட்டு இளவரசன் ரவுத்திரனுக்கு மணமுடிக்கத் திட்டமிடுகிறார் துர்ஜயன். அவரது சதியை முறியடித்து, ராணியின் கைபிடிக்கிறார் காண்டீபன்.
அவர்தான் குறிஞ்சி நாட்டின் உண்மையான வாரிசு என்று தெரிய வருவதுடன் படம் முடிவடைகிறது.
படம் ஓடத் தொடங்கி 27 நிமிடங்களுக்குப் பின்னரே புரட்சி தலைவர் எம்ஜிஆரின் அறிமுகம் நிகழ்வது, அக்காலத்தில் முன்கதைக்குத் தந்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. ஆனாலும், பின்பாதி முழுக்க நம் தலைவர் எம்ஜிஆர் ராஜ்ஜியம்தான்.
வழக்கமான அரச கதை என்றாலும், அழகு தமிழில் அமைந்த வசனங்கள் தியேட்டரில் ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற்றன. அதற்கேற்றவாறு வசனங்களை தெளிவாக உச்சரித்து நடித்திருந்தனர் மருதநாட்டு இளவரசியில் நடித்த நடிகர் நடிகைகள்.
எழுச்சியூட்டும் வசனங்களைக் கூட இயல்பாக வெளிப்படுத்தித் தனது நடிப்பு பாணி வேறு என்று உணர்த்தினார் எம்ஜிஆர். தன் ஆதர்சமாக எம்.கே.ராதா போன்ற நாயகர்களை அவர் போற்றியதும், ஹாலிவுட் திரைப்படங்களின் மாபெரும் ரசிகனாகத் திகழ்ந்ததும் கூட இதற்குக் காரணங்களாக இருந்திருக்கலாம்.
புளிமூட்டை ராமசாமியை இளவரசன் ரவுத்திரனாக நடித்தவர் தாக்க, அதனைத் தடுக்கும் எம்ஜிஆர் ‘யாராவது தும்மினால் துள்ளிவிழுவது அவனது பிறவிக்குணம்’ என்பார். இதுவே இப்படத்தில் அவரது முதல் வசனம்.
பாகவதர் டைப் தலைமுடி, ஸ்லிம்மான உடல்வாகு, இயல்பான உடல்மொழி என்று வித்தியாசமான எம்ஜிஆரை இதில் பார்க்க முடியும். தனக்கென்று தனி பாணியை கைக்கொண்ட பிறகு, அவர் இம்மூன்றையும் துறந்தார்.
ராஜகுமாரி (1947), அபிமன்யூ (1948) படங்களுக்குப் பின் மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி படங்களில் கருணாநிதியின் வசனங்களைத் திரையில் ஒலித்தார் எம்ஜிஆர்.
இதே காலகட்டத்தில் கருணாநிதி கைவண்ணத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி வசனம் பேசியதற்கும், இப்படங்களில் எம்ஜிஆர் வசனங்களை உச்சரித்த பாங்கிற்கும் பெரும் வித்தியாசம் உண்டு.
நாடக மேடை அனுபவம் உண்டு என்றாலும், சினிமா எனும் கலையின் நுட்பத்தைத் தனக்கேற்ற வகையில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் வரித்துக் கொண்டார்.
இந்த வித்தியாசம்தான் எம்ஜிஆர், சிவாஜி என்ற இருபெரும் சிகரங்கள் தமிழ்த் திரையின் போக்கைத் தீர்மானிக்கக் காரணமாக அமைந்தது
என்றால் அது மிகையாகாது. .
திரையில் மலர்ந்த கொள்கைகள்!
“மக்கள் எல்லோரும் சமமாக வேணும்; ஏற்றத்தாழ்வு மறைந்தாகணும்” என்று தொடங்கும் பாடலில் சமூகநீதி தொடர்பான பல்வேறு கருத்துகள் மருத நாட்டு இளவரசி படத்தில் இடம்பெற்றிருக்கும்.
இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், தான் குறிஞ்சி நாட்டு இளவரசன் அல்ல என்றும், அந்நாட்டு மக்களின் தலைவன் என்றும் அவர் பேசும் வசனம் இடம்பெற்றிருக்கும். தனது திரைப்பாதை எதுவென்று அறியாத நிலையில், அவர் இவ்வாறு நடித்தது நிச்சயம் ஆச்சர்யம்தான்.
பிற்காலத்தில் தன் படங்களில் இது போன்ற கருத்துகள் இடம்பெறுவதை எம்ஜிஆர் வழக்கமாக்கிக் கொண்டார் என்பதே இதன் சிறப்பைப் பறைசாற்றுகிறது.
மருதநாட்டு இளவரசி டைட்டில் காட்சியில் எம்.ஜி.ராம்சந்தர், வி.என்.ஜானகி என்றே இருவரது பெயர்கள் இடம்பெற்றன.
எம்ஜிஆர் என்றும், எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும் அக்காலத்தில் தன் பெயர் இடம்பெற அவர் விரும்பவில்லை. காரணம், அந்த காலத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் புகழ்வாய்ந்த நடிகராய்த் திகழ்ந்தார்.
ராமச்சந்திரன் என்ற பெயரில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார் இன்னொருவர்.
எனவே, தனது பெயர் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று ராம்சந்தர் என்று மாற்றிக்கொண்டார் புரட்சி தலைவர் எம்ஜிஆர். ராஜகுமாரி தொடங்கி கூண்டுக்கிளி வரை இது தொடர்ந்தது.
‘மலைக்கள்ளன்’ படத்தில் இருந்தே அவரது பெயர் எம்.ஜி.ராமசந்திரன் என்று டைட்டிலில் இடம்பெறலானது.
ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி, நாம் ஆகிய படங்களில் ஜானகி அம்மையாரும் எம்ஜிஆரும் இணைந்து நடித்துள்ளனர். எம்ஜிஆர், அவரது சகோதரர் சக்ரபாணி, கருணாநிதி உட்படச் சிலர் இணைந்து ‘நாம்’ படத்தைத் தயாரித்தனர்.
இப்படத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஜானகி அம்மையார். 1962ஆம் ஆண்டு ஜானகி அம்மையாரைத் திருமணம் செய்தார் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்.
மகாதேவி உட்பட எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் பி.எஸ்.வீரப்பா. கட்டுடலும் கரகரப்பான குரலும் மிரட்டும் கண்களும் தெளிவான உச்சரிப்பும் இவரது சிறப்பு.
இப்படத்தில் குறிஞ்சி நாட்டு மன்னராக நடித்திருந்தார் வீரப்பா.
பத்மினியின் ஸ்லிம் தோற்றம்!
இப்படத்தின் தொடக்கத்தில் வரும் ‘வீரத்தாயைப் பணிவோம்’ பாடலின் நடனக் காட்சியை வடிவமைத்தவர் காமினிகுமார் சின்ஹா. இப்பாடலில் லலிதா, பத்மினி இருவரும் தோன்றி நடனமாடியிருப்பர்.
ஸ்லிம் அழகுடன் பத்மினி தோன்றும் படங்களில் இதுவும் ஒன்று.
மைசூரிலுள்ள நவஜோதி ஸ்டூடியோவில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டது.
இப்படத்தில் எம்.எம்.மாரியப்பா, பி.லீலா, கே.வி.ஜானகி ஆகியோர் பாடல்களைப் பாடினர். ‘நதியே நீராழி’, ‘இந்த இன்பமே தந்த பைங்கிளி’ பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று இருக்கும் என எண்ணுகிறேன்... ஏனென்றால் இப்போது கேட்க்கும் போதே பாடல் மனதில் பதிகின்றதே...
சிறைபிடிக்கப்பட்ட ஜானகியை மீட்டுவர, எம்ஜிஆரும் சி.கே.நாகரத்னமும் நடனமாடும் காட்சியொன்று உண்டு. அந்த இடத்தில் பாடலுக்குப் பதிலாக வெறும் இசை மட்டுமே இடம்பெற்றிருந்தது இப்போதும் நம்மைக் கவரும்.
மந்திரிகுமாரி, மர்மயோகி பெற்ற வரவேற்பை, மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மருதநாட்டு இளவரசி திரைப்படம் பெறவில்லை என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.
ஆனால், எம்ஜிஆரை நாயகனாக வைத்துப் படமெடுக்கலாம் என்ற எண்ணத்தைப் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தியது இத்திரைப்படம்.
‘பராசக்தி’ திரைப்படம் சிவாஜி என்றொரு சகாப்தத்தை அடையாளம் காட்டுவதற்கு முன்னர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மற்றொரு சக்தியாக மாறிய எம்ஜிஆரை அடையாளம் காட்டிய வகையில் முக்கியத்துவம் பெறுகிறது ‘மருதநாட்டு இளவரசி’.
படத்தின் பெயர்: மருதநாட்டு இளவரசி, தயாரிப்பு: கோ.கோவிந்தன், படத்தொகுப்பு, சீனாரியோ,
இயக்கம்: காசிலிங்கம்,
கதை, வசனம்: மு.கருணாநிதி
கலை இயக்கம்: ஓ.ஆர்.எம்பாரய்யா, பாடல்கள்: சி.ஏ.லட்சுமணதாஸ், கே.பி.காமாட்சி சுந்தரம்,
இசை: எம்.எஸ்.ஞானமணி,
ஒளிப்பதிவு: ஜி.துரை,
ஒலிப்பதிவு: வி.சி.சேகர்,
லாபரட்டரி: கே.சீதாராம்,
பிராசஸிங்: ஹரிகிருஷ்ணன்.
நடிப்பு: எம்.ஜி.ராமச்சந்திரன், வி.என்.ஜானகி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, புளிமூட்டை ராமசாமி, சி.கே.சரஸ்வதி மற்றும் பலர்.
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........
-
"நாடோடி மன்னனி"ன் வெற்றி அய்யனையும் கைஸ்களையும் நிலைகுலைய வைத்தது எனலாம்.
அடுத்து தலைவர் நடித்த சமூகப்படம் சரியாக போகவில்லை என பரவலாக பேச்சு எழுந்ததும் அய்யன் சற்று ஏளனமாக அண்ணே சரித்திரப் படத்தில் நடிப்பதை விட்டு விட்டு சமூகப்படத்தில் ஏன் நடித்தீர்கள் என்று பொதுவான இடத்தில் கேள்வி கேட்டதும் தலைவருக்கு சங்கோஜமாகி விட்டது.
உடனே அடுத்த படத்தை வெற்றிப் படமாக்க முனைந்தார். அதுதான் சின்ன அண்ணாமலை தயாரிக்க "திருடாதே" படம் உருவான விதம்.. வெறும் 7000 ரூ வைத்து தொடங்கப்பட்ட படம், எம்ஜிஆர் கால்முறிவினால் படப்பிடிப்பு தாமதமானதும் பைனான்ஸ் பிரச்சினையில் படம் தேக்கமடைவதை விரும்பாத எம்ஜிஆர் படத்தை a l s க்கு விற்று சின்ன அண்ணாமலையை பைனான்ஸ் சிக்கலில் இருந்து மீட்டு
மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் போது சரோஜாதேவி மிகவும் பிஸியான நடிகையாகி நிறைய படங்களில் கமிட் ஆகியிருந்தார்.
ஒரு சில நேரங்களில் சரோஜாதேவியின் கால்ஷீட்டை அட்ஜெஸ்ட் செய்து நடித்துக் கொடுத்தார். அதன் பின்னர்தான் எதிர்காலத்தில் இப்படியொரு சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் நடிகைகளை முதல் படத்தில் புக் பண்ணும் போதே 5 வருட காண்ட்ராக்ட்டில் கையெழுத்து வாங்கினார்.
அதில் மஞ்சுளா தீயசக்தியின் மேற்பார்வையில் காண்ட்ராக்ட்டுக்கு துரோகம் செய்தார். ஆனால் லதா நல்ல ஒத்துழைப்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டு நீண்ட நாள் தலைவரின் நாயகியாக வலம் வந்தார். "திருடாதே" மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
எளிமையான முறையில் சமூக நீதியை போதித்து எந்த வித நட்சத்திரப்பட்டாளமும் இல்லாத சூழலில் வெற்றிக் கனியை சுவைத்ததுடன் விநியோகஸ்தர்களுக்கு மிகப் பெரிய லாபத்தை தந்தது.
ஆனால் "திருடாதே" கூட வந்த அய்யனின் நட்சத்திரப்பட்டாளம் நிறைந்த படத்தை சொந்தத் தியேட்டரில் வெள்ளி விழா ஓட்டினாலும் "திருடாதே" வசூலை எட்டிப்பிடிக்க முடியாமல் தட்டுத்தடுமாறியதை விநியோகஸ்தர்கள் போட்டு உடைத்து விட்டனர்.
அய்யன் படத்தின் வெற்றி என்ற மாயக்கோட்டை தகர்த்து வெள்ளிவிழா ஓடாவிட்டாலும் "திருடாதே" படத்தின் வெற்றி திக்கெட்டும் பரவியதால் எம்ஜிஆரின் மார்க்கெட் எங்கோ பறக்க ஆரம்பித்தது. அய்யன் மீண்டும் நட்சத்திரப் படடாளங்களை கூட்டணி அமைத்தாலும் எம்ஜிஆர் என்ற தனிமனித சக்தியை வெல்ல முடியாததால் குறுக்கு வழியில் படத்தை ஓட்ட ஆரம்பித்து வெற்றி என பொய்முகம் காட்டினர்.
1961 ல் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை "திருடாதே" பெற்றது. அடுத்த இடத்தில் "தாய் சொல்லை தட்டாதே" பெற்றதுடன் கூட வந்த தேச பக்தி படத்தை தோல்வியடையச் செய்தது சற்று வருத்தத்தை தந்தாலும் அது நம் தவறல்ல. தவறான நேரத்தை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளரின் தவறு. இருப்பினும் அந்த நேரத்தில் சுமார் 7 லட்ச ரூபாயை சேதம் செய்து விட்டது.
எளிமையான படஜெட்டில் எடுக்கப்பட்ட "திருடாதே" மற்றும் "தாய் சொல்லை தட்டாதே" போன்ற சமூகப் படத்தின் வெற்றி பெரும் நட்சத்திரப் பட்டாளங்களுடன் நடித்த அய்யனின் பெரிய பட்ஜெட் படங்களை ஓட ஓட விரட்டியது. தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்பதை "திருடாதே" சமூகப்படத்தின் வெற்றியின் மூலம் நிரூபித்து காட்டினார் மக்கள் திலகம் தாய் சொல்லை தட்டாதே தொடர்ந்து 100 காட்சிகள் hf ஆக ஓடியது. ஆனால் அய்யனின் வெள்ளி விழா படங்கள் தொடர் hf ஆனதில்லை.
இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அய்யன் படங்களின் வெற்றியின் ரகசியத்தை..........ksr.........
-
#ஐ #லவ் #யூ #வாத்தியாரே
Happy Valentine's Day Wishes
காதலுக்கு வயது தடையல்ல..
ஏனெனில் 'காதல்' என்பது வயதைப் பற்றிய விஷயமல்ல. மனதைப் பற்றிய விஷயம்...
இந்த ரீதியில் நன்கு ஆராய்ந்தோமானால் நம் புரட்சித்தலைவனே காதல் தலைவனாகிறான்...
ஏனெனில் மனதையும், வயதையும் கடைசி வரை கட்டுக்குள் வைத்திருந்தவர் நம்ம வாத்தியார் தாங்க...
திரைப்படத்துறையில்
காதல் மன்னன் ஜெமினி கணேசன் முதல்
காதல் இளவரசன் கமல் வரை கடைசி வரை... அதாவது ஒரு லெவலுக்கு மேல் காதல் காட்சியில் பரிமளிக்க முடியவில்லை. அவர்களின் உடல்வாகும், வயோதிகமும் காரணங்களாக இருக்கலாம். இனிமேல் காதல் காட்சியில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்ற லேசான அச்சமும், தன்னம்பிக்கையும் கூட காரணங்களாக இருக்கலாம்...
ஆனால் எதற்குமே அசராமல், வயது அறுபதை நெருங்கிக்கொண்டிருப்கும் போதும் மிகவும் துடிப்பாக காதல் காட்சியில் பட்டையைக் கிளப்பியது நம்ம வாத்தியார் தாங்க...! யாராவது மறுத்துச் சொல்லமுடியுமா ???
எந்த அளவு உடலையும் வயதையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்னு நான் சொல்லத் தேவையில்லை.
60 வயதில் காதல் காட்சியில் நடிப்பதற்கு எந்த அளவு துணிவும், தன்னம்பிக்கையும் வாத்தியாருக்கு இருந்திருக்கு பாருங்க..(இந்த தில் உலகத்துல வேற யாருக்கு இருக்கமுடியும்???)
இதில் ஹைலைட் என்னன்னா...ரசிகர்களும் ஏகோபித்தமாக ஆதரிச்சாங்க வாத்தியாரை...
தனது ஆரம்பகால படங்களிலுள்ள காதல் காட்சிகளை விட தனது கடைசி கட்ட திரைப்படங்களில் தான் காதல் காட்சிகளில் உற்சாகமாகவும், ஹைஸ்பீடாகவும் தூள் கிளப்பியிருப்பார்...
உதாரணத்திற்கு,
உரிமைக்குரல், மீனவநண்பன், உழைக்கும் கரங்கள், இதயக்கனி, நேற்று இன்று நாளை, உ.சு.வா, நாளை நமதே போன்ற திரைப்படங்களில் (பட்டியல் நீளும்) காதல் காட்சிகளில் வாத்தியார் பெர்ஃபாமன்ஸ் எப்படியிருந்ததுன்னு நா சொல்லவா வேணும்...
வாத்தியாரே
வீரத்துக்கும் நீ தான்
காதலுக்கும் நீ தான்
இந்த உலகத்துல "#வாலன்டைன்ஸ் #டே #கதாநாயகன்னு " சொன்னா அது நீ ஒருத்தரு தான் வாத்தியாரே.........BSM...
-
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய_திங்கட்கிழமை #காலை_வணக்கம்...
புரட்சி தலைவர் அவர்களின் திரைப்படங்களின் திரை வரிசையில் மூன்றாவது முறையாக கதையின் நாயகனாக நடித்த ஒரு மாபெரும் வெற்றி சித்திரம் பற்றி இன்று பார்ப்போம்...
அந்த வெற்றி சித்திரம் தான்
மந்திரி குமாரி மருதநாட்டு இளவரசி படத்திற்கு பிறகு எடுக்கபட்ட ஒரு வெற்றி காவியம் புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின் 22 வது திரைப்படம்..
மந்திரி குமாரி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் கதையானது குண்டலகேசியைத் தழுவி
மு.கருணாநிதி எழுதிய ஒரு நாடகமாகும். நாடகத்தைப் பார்த்த படத்தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அதைப் படமாக்க விரும்பி, அதற்குத் திரைக்கதை, வசனத்தை
மு. கருணாநிதியைக் கொண்டு எழுதவைத்து தயாரித்தார்.
எல்லிஸ் டங்கன், டி. ஆர். சுந்தரம் இருவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இயக்கம்
எல்லிஸ் டங்கன்
டி. ஆர். சுந்தரம்
கதை
மு. கருணாநிதி
நடிப்பு
எம். ஜி. இராமச்சந்திரன்
மாதுரி தேவி
எம். என். நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
ஜி. சகுந்தலா
வெளியீடு
1950
தளபதி வீரமோகனாக தலைவர் எம்.ஜி.ஆர் ,ராஜகுருவாக நம்பியாா், கொள்ளையன் பாா்த்திபனாக எஸ்.ஏ.நடராஜன், இளவரசி ஜீவரேகாவாக ஜி.சகுந்தலா ஆகியோா் நடித்திருந்தனா். மந்திாிகுமாாி அமுதவல்லியாக மாதுாிதேவி நடித்திருந்தாா்.
இந்த படத்தில் முக்கிய வசனங்கள் இடம்பெற்றது அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
ராஜகுரு கொள்ளையனாகிய தமது மகன் பாா்த்திபனிடம் 'கொள்ளையடிப்பது கலையா?' என ஆச்சாியமும் அதிா்ச்சியுமாக கேட்கிறாா். பாா்த்திபன் அதற்கொரு விளக்கம் அளித்து தனது செய்கைகளை நியாயப்படுத்தி விளக்கமளிக்கிறான்.
ராஜகுரு: அழகான விளக்கம்! உன் கலை ஆா்வம் உன் தலையை அறுப்பதாயிருந்தால்?
பாா்த்திபன்: என் கலைக்காக தியாகம் செய்தவனாவேன்.
அமுதவல்லி: மரணம்- நான் அணைத்து மகிழ்ந்த பொன்னுடலுக்கா? என் இதயத்திலே இலட்சம் தீபங்களை ஏற்றி வைத்த தங்கள் இன்னுயிருக்கா? முடியாது, முடியவே முடியாது. பாா்த்திபன்: நீ என்ன சாவித்திாியா, சபதம் செய்கிறாய்? இந்தக் காலத்து யமன் இளிச்சவாயனல்ல..
இந்த வசனங்கள் இன்றும் கை கொட்ட வைக்கின்றது...
கதைச்சுருக்கம் காண்போம்..
முல்லை நாட்டின் அரசர் ராஜ குருவின் (எம்.என்.நம்பியார்) சொல்படி நடப்பவர். குருவின் மகன் பார்த்திபன் (எஸ்.ஏ. நடராஜன்) முல்லை நாட்டின் தளபதி ஆக வேண்டும் என்று குரு ஆசைப்பட்டார். மாறாக, வீர மோஹனை தளபதியாக (எம். ஜி. ஆர்) நியமனம் செய்தார் அரசர். அதில் கோபமுற்ற பார்த்திபன், பகல் நேரங்களில் அரசாங்கத்திலும், இரவு நேரங்களில் வழிப்பறியிலும் ஈடுபடுகிறான். இளவரசி ஜீவரேகாவை (ஜி. சகுந்தலா) பார்த்திபன் மணக்க ஆசைப்படுகிறான். ஆனால் ஜீவரேகா வீர மோஹனை விரும்பினாள். பார்த்திபன் தன்னை சந்திக்க ஜீவரேகாவிற்கு ரகசிய தூது அனுப்பினான். அந்த தூது தவறுதலாக மந்திரி மகள் அமுதவல்லியை (மாதுரி தேவி) சென்றடைந்தது. அவளும் பார்த்திபனை பார்க்கச்செல்ல, இருவரும் காதல் வயப்படுகிறார்கள். ஆனால் பார்த்திபன் அமுதவல்லியை இன்பத்திற்காக மட்டும் பயன்படுத்தினான்.
இந்நிலையில், வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முல்லை நாட்டு அரசர் வீர மோஹனை அனுப்புகிறார். பார்த்திபனை பிடித்து அரசபையில் நிறுத்துகிறான் வீர மோகன். கோபமடைந்த ராஜ குரு தன் மகனை காப்பாற்ற பல வழிகளில் முயற்சிக்கிறார். பெண்தெய்வத்தின் முன் வாதிடுகிறார் ராஜகுரு. அப்போது, அச்சிலையின் பின்னால் ஒளிந்திருந்த அமுதவல்லி, பார்த்திபன் நிரபராதி என்று கூறுகிறாள். அது தெய்வத்தின் குரல் என்று நம்பிய அமுதவல்லியின் தந்தை மந்திரி, பார்த்திபன் நிரபராதி என்று அவரும் கூறிவிடுகிறார். ராஜ குருவுடனும், மந்திரியுடனும் அரசர் கலந்து ஆலோசித்து, பார்த்திபன் நிரபராதி என்றும், வீர மோஹனை நாடு கடத்த வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார். பின்னர், பார்த்திபன் அமுதவல்லியை மணந்துகொள்கிறான். வீர மோஹனுடன் ஜீவரேகாவும் சென்றுவிடுகிறாள்.
பார்த்திபனை திருந்துமாறு அமுதவல்லி கேட்டுக்கொண்டாலும், அவள் தூங்கும் பொழுது வழிப்பறியில் ஈடுபடுகிறான் பார்த்திபன். வீரமோஹனை தாக்கி, ஜீவரேகாவை கடத்திவிடுகிறான் பார்த்திபன். அமுதவல்லி தன் கணவரை மாறுவேடத்தில் பின்தொடர்ந்து சென்று, ஜீவரேகாவை காப்பாற்றுகிறாள். அதனால், அமுதவல்லியை கொன்றுவிட திட்டம் தீட்டி மலை உச்சிக்கு அழைத்து செல்கிறான் பார்த்திபன். மாறாக, அமுதவல்லி பார்த்திபனை தள்ளி கொன்று, ஒரு புத்தமத துறவியாகிறாள். ஜீவரேகாவை மாறுவேடத்தில் வீர மோகன் சந்திக்க வருகிறான். அப்போது ராஜகுரு அரசரை கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது பார்த்துவிடுகிறான். ஆனால், அரசர் வீர மோகன் தான் தன்னை கொல்ல வந்ததாக தவறாக நினைக்கிறார். பின்னர் அந்த சூழ்நிலையிலிருந்து வீர மோகன் எவ்வாறு தப்பித்தான் என்பதே மீதிக் கதையாகும்.
கா. மு. ஷெரிப் மற்றும் ஏ. மருதகாசி எழுதிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி பாடிய பாடல் "வாராய் நீ வாராய்" மிகவும் பிரபலமான பாடலாகும். இப்படத்தில் மொத்தம் 15 பாடல்கள் இடம் பெற்றிருந்தன....
அன்புடன்
படப்பை...
ஆர்.டி.பாபு......
-
உலக சரித்திரத்தில் உலகத்தில் பெரும் அதிசயம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒருவரே!
உலக வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திரை கலைஞன் என்ற பெருமையைப் பெற்றவர் புரட்சித்தலைவர்.
உலக வரலாற்றில் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே ஒரு மாநிலத்தின் அரசாங்கத்தை மாற்றி புதிய ஆட்சியை உருவாக்கியவர் புரட்சித்தலைவர்.
உலக வரலாற்றில் குண்டடிபட்டு மறுபிறவி எடுத்தவர் மாநிலங்கள் போற்றும் புகழுக்குரிய புகழ் வேந்தர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் ஒருவரே என்றும் எப்போதுமே.
உலக வரலாற்றில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டே மாநிலத்தின் முதல்வராகி புதிய சரித்திரத்தை ஏற்படுத்திய முதன் முதல்வர் புரட்சித்தலைவர் ஒருவரே.
உலக வரலாற்றில் புரட்சித்தலைவரின் உடல் நலம் குன்றிய போது உலகெங்கும் வாழும் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து பிரார்த்தனைகள் செய்தனர். மிகப்பெரிய மகத்தான தலைவர் மனிதப்புனிதர் புரட்சித்தலைவர் ஒருவரே
இப்படி உலக சரித்திரத்தில் பல அருங்குணங்களை கொண்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உலகின் அதிசயத்தில் முதல் மனிதர் என்பது நமக்கு பெருமைக்குரியதாகும் !
கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........
-
உலகை சுற்றிய வாலிபன்...பகுதி...5..
சென்னையில் இருந்து படம் எடுக்க வெளிநாடுகள் புறப்பட்ட தலைவர் அமரர் அண்ணா நினைவிடம் முதல் நாள் இரவு சென்று வணங்கினார்..
சென்னை விமான நிலையத்தில் தலைவர் அன்னை ஜானகி அம்மா மற்றும் பட குழுவினர் டெல்லிக்கு செல்லும் விமானத்தில் பயணம் போக அங்கே ஜனசமுத்திரம் போல கூட்டம்...
தலைவர் குழுவை வழி அனுப்பி வைக்க அன்றைய முதல்வரும் வந்து இருக்க....விமானத்தில் ஏறி அனைவரும் அமர மீண்டும் உள்ளே வந்து வழி அனுப்பினார் அந்த நல்லவர்..
டெல்லி விமானநிலையத்தில் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்...காத்து இருந்து நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தார்....அரசியல் விஷயங்களை...
தலைவர் மௌனமாக கேட்டு கொண்டு இருந்தார்...
அனைவரும் செக்கிங் பகுதிக்கு வருமாறு அழைக்க பட அவரவர் பாஸ்போர்ட்டை எடுத்து பார்க்கும் போது லதா அம்மா அவர்கள் ஐய்யோ என் பாஸ்போர்ட் இல்லையே என்று கத்த...
மொத்த கூட்டமும் தேடி அலைய சிறிது நேரம் முன்னால் அங்கே ரெஸ்ட் ரூம் அவர் போக அங்கேயே தன் கை பையை விட்டு விட்டு இருக்கை திரும்ப...
கிடைத்து விட்டது என்று மஞ்சுளா பையுடன் அங்கிருந்து ஓடி வர விமானம் புறப்பட்டது.
ஒரு வரலாற்று படத்தை உருவாக்க போகும் அனைவரையும் சுமந்து கொண்டு வெளிநாட்டுக்கு....
சென்ற பதிவில் நாகேஷ் குறித்து முடித்து இருந்த இடத்தில் இப்போ தொடர்வோம்..
நாகேஷ் ரயில்வேயில் வேலை செய்து கொண்டே நாடங்கங்கள் பின் படங்களில் நடிக்க ஆரம்பித்தவர்...புகை பிடிக்கும் பழக்கம் தாண்டி பின்னர் மது பழக்கம் கூட வந்து ஒட்டி கொண்டது.......
தலைவருடன் வெளிநாட்டில் இருக்கும் போது....அங்கே அனைவரும் சாப்பிடும் பில்லுக்கு ஹோட்டலில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைவர் பார்த்து கையொப்பம் இட பணம் ஹோட்டலுக்கு அப்போ அப்போ பணம் செலுத்த பட.
ஒரு நாள் குழுவினர் பட பிடிப்புக்கு கிளம்ப நாகேஷ் திடீர் என்று மயங்கி கீழே அங்கேயே விழுந்து விட....அனைவரும் பதறி....உடனே வெளிநாட்டு மருத்துவர் வந்து சோதிக்க..
இவர் தீவிர மது பழக்கம் கொண்டவர்..
இவர் ரத்தத்தில் அது கலந்து விட கடந்த நாட்களில் இவர் மது அருந்தவில்லை....அது இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்து உள்ளது என்கிறார்.
தலைவர் செய்தி அறிந்து எப்படிப்பட்ட ஒரு நல்ல நடிகர் இப்படி ஒரு வழக்கத்தில் சிக்கி கொண்டார் என்று வருந்தி....எனது நிறுவனம் இதை போன்ற செலவுகளை ஏற்காது.....
மருத்துவர் அறிவுரைப்படி இவருக்கு அளவோடு அந்த கேடு கெட்ட குடியை கொடுக்க சொல்லுங்கள்....
ஆனால் இவர் சம்பளத்தில் அந்த செலவு பிடித்து கொள்ள படும் என்று சொல்ல..
இருவரும் அடுத்து வந்த நாட்களில் சரி வர பேசி கொள்ளவில்லை..
அனைவர் முன்பும் தலைவர் சொன்ன கருத்துக்களே பின்னால் நாகேஷ் அவர்கள் ஒரு சில இடங்களில் தலைவரை விமர்சிக்க காரணம் ஆன ஆரம்ப புள்ளி இந்த நிகழ்வே.
ஸ்ரீகாந்த் என்று நடிகர் இருந்தார்....மாணவன் போன்ற அந்த கால படங்களில் நடித்து வில்லன் வேடங்களில் பின்பு நடித்தவர் அவரும் நாகேஷ் அவர்களும் இணை பிரியா நண்பர்கள் அனைத்து நிகழ்வுகளிலும்...
தலைவர் பின் நாட்களில் அனைத்தையும் மறந்து முழு சம்பளம் கொடுத்தது தனி கதை..
தலைவருக்கு மட்டுமே படத்தின் அத்துணை படத்தின் கதை அம்சமும் தெரியும்..
யாரிடமும் அதை பகிர்ந்து கொள்ளவில்லை அவர்.
நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் சில காட்சிகளை எடுக்க சொன்ன போது என்ன இவர் சம்பந்தம் இல்லாமல் காட்சிகளை எடுக்கிறார் என்று முணு முணுக்க....
அடுத்த பதிவில் நாயர் கடையில் சந்திப்போம்.
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்..
நன்றி.....
-
1967 முதல் இந்திய சினிமாவில் சிறந்த நடிக்கருக்கான தேசிய விருதுகள் மத்திய அரசு வழங்குகிறது .தமிழ் மொழியில் 1971ல் வெளியான "ரிக்க்ஷாகாரன்" படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதான "பாரத் "விருது தமிழ் நாட்டில் , தென்னிந்தியாவில் முதல் முதலாக மக்கள் திலகத்திற்கு தான் கொடுக்க பட்டது . அதற்கு பிறகு பத்து ஆண்டுகள் கழித்து கமலஹாசன் மூன்றாம் பிறை படத்திற்காக வாங்கினார் . மக்கள் திலகத்தின் இயற்கையான நடிப்பிற்கான அங்கிகாரத்தை மத்திய அரசு கவுரவித்தது . பன்றி மாதிரி 200 , 300 படங்களில் ஏதோ நாமும் நடித்தோம் , கல்லா கட்டினோம் , மக்களை அழ வைத்தோம் என்று இல்லாமலும் , தான் நடிப்பை தாமே புகழ்ந்து கொண்டு எல்லா படங்களிலும் துணை, இணை நடிகர்கள் முன் அவர்களை விட தான் நன்றாக நடிப்பதாக காட்டி கொண்டு குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டி கொண்டு நடித்தவர்கள் எவரும் தேசிய விருதை நெருங்க கூட முடிய வில்லை . அளவாக நடித்து தன் இயற்கை நடிப்பால் தேசிய விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் மக்கள் திலகம் ஒருவரே..........bpgi
-
புர*ட்சித்த*லைவ*ரின் ஒரிஜின*ல் ட*ய*லாக்குக*ளை காப்பி அடித்த ந*டிக*ர்க*ளின் ப*ட்டிய*லும், ப*ட*மும்..
1. நான் எப்ப* வ*ருவேன் எப்ப*டி வ*ருவேன்னு யாருக்கும் தெரியாது..
ப*ட*ம்: தாய்ச்சொல்லை த*ட்டாதே..எம்ஜிஆர் ச*ரோஜாதேவியிட*ம் கூறுவ*து..
காப்பி: ர*ஜினி..முத்து ப*ட*த்தில்
2. என்வ*ழியே த*னிவ*ழி..
ப*ட*ம்: நாளை ந*ம*தே ப*ட*த்தில் எம்ஜிஆர், ந*ம்பியாரிட*ம் கூறுவ*து
காப்பி: ர*ஜினி... படையப்பா
ப*ட*த்தில்
3. அங்கே புத்த*ர் சிலை இருந்த*து..புனித*மான இந்த* புத்த*ர் ஆல*ய*த்தில் உன் ர*த்த* துளிக*ள் ப*ட*க்கூடாது என்ப*தால்தான் நான் அடி வாங்கினேன்..இப்போது என் ப*ல*த்தை காட்ட*ட்டுமா?
ப*ட*ம்: உலகம் சுற்றும் வாலிப*ன், ந*ம்பியாரிட*ம் எம்ஜிஆர் கூறுவ*து..
காப்பி: விஜ*ய*காந்த் மாந*க*ர*க்க்காவ*லில் ச*ண்டைக்காட்சி ஒன்றில் கூறுவார்...Pgdi
-
[அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில...
1. அண்ணா எம்ஜிஆர் இருவரும் பிறப்பில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள்.
2. நோயின் காரணமாக இருவரும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர்கள்.
3. அண்ணா இறக்கும் முன் என் எஸ் கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். எம்ஜிஆர் இறக்கும் முன் ஜவஹர்லால் நேரு சிலையைதிறந்து வைத்தார்.
4. இருவரும் முதலமை*ச்ச*ராக இருக்கும் போதே மறைந்தவர்கள்.
5. இருவரது உடலையும் அருகருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
6. அண்ணா எம்ஜிஆரை எனது இதயக்கனி என்றார் .எம்ஜிஆர் அண்ணாவை எனது இதயதெய்வம் என்றார்.
7. இருவரும் மக்களை ஈர்ப்பதில் தனித்துவம் பெற்றனர். அதில் வெற்றியும் பெற்றனர்.
8. இருவரும் நள்ளிரவிலே மறைந்தனர்.
9. அண்ணா என்பது மூன்று எழுத்து தமிழில் எம்ஜிஆர் என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில். அண்ணாவின் முமு பெயர் அண்ணாதுரை எம்ஜிஆர் முமு பெயர் எம் ஜி ராமச்சந்திரன்.
10. திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர். ]
-
சும்மா வந்ததில்லை நமது இரட்டை இலை !
புரட்சிதலைவர் தனது துணைவியாரின் துணையுடன் தன்னை நம்பி வரும் எம்.ஜி.ஆர் ரசிக தொண்டர்கள்,அப்போதைய கழக இளைஞர்கள் ,உடன் வந்த அரசியல் விசுவாசிகள் அனைவரின் இரவு பகல் பாராத உழைப்பை மையப்படுத்தி 1972ல் அ.தி.மு.க ஆரம்பித்தார்.அதற்கு முன்னர் வரை 1953 முதல் 1972 வரை உதயசூரியனை உலகுக்கு தெரிவித்து மக்கள் மனதில் ஆழமாக பதியச்செய்தவர் எம்.ஜி.ஆர் தான் முதன்மை.அந்த சின்னத்தை மறைத்து 1973ல் இரட்டை இலையை மக்கள் மனதில் பதிய செய்ய மிகவும் கஷ்டப்பட்டவர் நமது வேந்தன் எம்.ஜி.ஆர்.
1973ல் திண்டுக்கல் தேர்தலில் இரட்டை இலை முதன்முதலாக பிரகனப் படுத்தப்படுகிறது.அப்போது தலைவர் ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
கூட்டத்தில் மக்களைப்பார்த்து "என்னை தெரியுமா " என்று கேட்கிறார்.மக்கள் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் என்று ஆர்ப்பரித்தனர்.பின்னர் நமது கட்சியின் சின்னம் என்ன சொல்லுங்கள் என்று கேட்கிறார்.உடன் மக்கள் உதயசூரியன்.உதய சூரியன் என்று சொன்னார்கள்.இதைக் கேட்ட தலைவர் மனம் இறுகி சுக்கலாகி விட்டார்.பின்னர் சுதாரித்து தான் நீக்கப்பட்டு புதுகட்சி ஆரம்பித்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக நெடிய விளக்கத்தை கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.உதயசூரியனை விளம்பரப்படுத்தியதன் விளைவு அதை மறக்கவும்,புது சின்னம் இரட்டை இலையை மக்கள் மனதில் பதிய எம்.ஜி.ஆர் எடுத்த முயற்சி சொல்லி மாளாது. ஆம் ! சும்மா வந்ததில்லை இரட்டை இலை !!.
பின்னர் மிகுந்த மன வருத்தத்தில் அறைக்கு திரும்பி உடன் இருந்த ஜேப்பியார்,தாழம்பூ பட டைரக்டர் ராமதாஸ் அவர்களிடம் இரட்டை இலை திண்டுக்கல் முதல் தேர்தலில் வெல்லுமா ?ஏனெனில் மக்களை சூரியனில் இருந்து இலைக்கு கொண்டுவர நிறைய உழைக்கவேண்டியுள்ளது என்று வருந்தி சொல்லியுள்ளார்.
ஆனால் தலைவரின் ஒப்பற்ற உழைப்பு 1973ல் முதல் தேர்தலில் இரட்டை இலை வென்றது.மக்கள் திலகம் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார்.அவர் மனது எவ்வளவு ஆனந்தப்பட்டிருக்கும்.அவர் யாருக்கு நன்றி சொன்னார்.?
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற இளைஞர்கள்,கழக தோழர்கள் தங்களது செலவில் பணிபுரிந்தவர்களுக்கு. போஸ்டர்,தேர்தல் வேலைகள் அனைத்தும் தங்கள் செலவில் செய்தவர்களுக்கு.தலைவரிடம் பணம் இல்லை.சாண்டோ சின்னப்பா தேவர் பணம் கொடுத்தார். பின்னர் கோவை தேர்தல் வெற்றி.பின்னர் 1977ல் வெற்றி .இப்படி இரட்டை இலையை மக்கள் மனதில் பதிய வைத்தவர் நமது தலைவர்.அந்த சின்னம் புனிதமானது.
ஆக அவர் கொடுத்த இரட்டை இலை இன்று அவர் அரசு என்று சொல்ல ஆளுபவர்களுக்கு மனதில்லை.வேறு ஒருவர் அரசு அமைய இரட்டை இலைக்கு ஆதரவு தாருங்கள் என்கின்றனர்.
நாமறிவோம் எது நன்று என்று.மக்களும் இரட்டை இலை தோன்றலை அறிவார்கள்..........nssm.
-
அன்று எம்ஜிஆர் திமுகவை படத்தில் எப்படி வளர்த்திருக்கிறார் என்பது நாடறிந்த ஒன்றுதான்.
1.விக்கரமாதித்தன் படத்தில் தலைவர் நெற்றியில் உதயசூரியன் பொட்டு வைத்திருப்பார்
.2.புதியபூமி படத்தில் எம்ஜிஆர் பெயர் கதிரவன்
.3.நாடோடி மன்னன் அடிமைப்பெண் படத்தில் எடுத்தவுடனே திமுக கொடியைக் காட்டுவார்.4.நல்லவன்வாழ்வான் படத்தில் பாடல்களில் உதயசூரியன் எதிரில் நிற்கையில் உள்ளத்தாமரை மலராதே!எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இருண்டபொழுதும் புலராதே!
5.விவசாயி படத்தில் இருந்திடலாம் நாட்டில் பலவண்ணக்கொடி !எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி..பாடலில் கருப்பு சிவப்பு கொடியைப் பறக்கவிடுதல்
.6.கலங்கரை விளக்கம் படத்தில் பல்லவன் பல்லவி பாடலில் எம்ஜிஆர் சட்டையில் உதயசூரியன் போட்டிருக்கும். 7.ஒருதாய்மக்கள் படத்தில் கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற மேனியைப் பாரு !நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு கூறடி கூறு என பாடலின் நடுவே வரும். 8.அடிமைப்பெண் படத்தில் நீ கடவுளைப் பார்த்தது கிடையாது.அவன் கருப்பா சிவப்பா தெரியாது.இறைவன் ஒருவன் இருக்கின்றான் இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
என பாடலில் வரும்.
9.ரிக்சாக்காரன் படத்தில் பம்பை உடுக்கை பாடலில் எம்ஜிஆரும் ஜோதிலட்சுமியும் ஆடும் போது ஜோதிலட்சுமி கையில் கருப்பு சிவப்பு வளையல் அடுக்கி கையில் இரண்டிலும் கருப்பு சிவப்பு கர்சீப் கட்டியிருப்பார்கள். 10.நம்நாடு படத்தில் எம்ஜிஆர் கருப்புகலர் பேண்டும் சிவப்புநிற சட்டையும் படங்களில் தோன்றுவார்.பெரும்பான்மை படங்களில்.பர்ஸ் ஒன்று எடுப்பார் அதிலும் கருப்பு சிவப்புதான்.
11.சங்கே முழங்கு படத்தில் எம்ஜிஆர் முதன்முதலில் லட்சுமியை சந்திக்குமுன் தினத்தந்தி பேப்பர் படிக்கும் போது கொட்டை எழுத்தில் தி.மு.க. வெற்றி எனவரும்.
12.எங்கள் தங்கம் படத்தில் சிறு சேமிப்பு விழாவில் முரசொலி மாறன் தோன்றுவார்.பிறகு லாட்டரிசீட்டு விழுந்ததும் அண்ணா ,கருணாநிதி எல்லோரையும் காட்டுவார்கள். 13.பணக்காரகுடும்பம் எம்ஜிஆரும் மணிமாலாவும் பாடும் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே என வரும்.அதில் எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே!என வரும்
14.அன்பே வா படத்தில் உதயசூரியனின் பார்வையிலே என பாடல் வரும் ஆடியோவில்.. சென்சார் பிரச்சனையில் சிக்கி புதியசூரியன் என மாறியது. இப்படி நிறைய இருக்கு.அ.தி.மு.க. ஆரம்பிக்கும் போதும் அண்ணா,இரட்டைஇலை,அ.திமு.க கொடி இதனைத் தவறாமல் காட்டுவார்....gdr
-
மக்கள் திலகம் எம் ஜி ஆர் ரசிகர் மன்றம்
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் என்பது, தமது படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு நடிகருக்காகத் தொடங்கப்பட்ட மன்றம் அல்ல. இந்த மன்றங்களை, நாம் சினிமா சார்ந்த ஒரு விஷயமாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. `கடவுள் இல்லை’ என்ற பாரம்பர்யத்தில் தோன்றிய தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள், கடவுள் பயம் இல்லாத கெட்டவர்கள், ஏழை ஏதிலி, படிக்காத பாமரர், ரெளடி, எம்.ஜி.ஆரை ரசிக்கும் பெண்கள் மோசமானவர்கள்... என்பதுபோன்ற எண்ணங்களும் பரவலாக இருந்தன. இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள், அவர்மீது தீவிர அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆருக்கு முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர், தன் மனைவியின் தாலியை விற்று தொடங்கினார். அதன் பிறகு ரசிகர் மன்றங்கள் புற்றீசல்களாகத் தோன்றின. கோயில் இல்லாத ஊர் இருக்கலாம், குளம் இல்லாத ஊர்கூட இருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர் மன்றம் இல்லாத இடமே இல்லை எனும் அளவுக்கு ரசிகர் மன்றங்கள் துளிர்த்தன.
Posted by : MG.Nagarajan
Published by : யாழ் இணையம்
in வண்ணத் திரை
-
#எம்ஜிஆர்_உரிமைக்குரல்!
M.G.R. படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை பெரும்பாலும் அவரிடமே தயாரிப்பாளர்கள் விட்டுவிடுவது வழக்கம். எம்.ஜி.ஆர். குறிப்பிடும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமாக இடம் பெறுபவர் பண்பட்ட நடிகரான வி.எஸ்.ராகவன்.
எம்.ஜி.ஆரின் 100-வது படமான ‘ஒளி விளக்கு’ படத்தில்தான் முதன்முத லில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வி.எஸ்.ராகவனுக்குக் கிடைத் தது. அதன்பிறகு, ‘எங்கள் தங்கம்’, ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக்குரல்’ உட்பட எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் அவரோடு வி.எஸ்.ராகவன் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட, அவர் நடிக்கும் படங்களில் கூடுத லான சம்பளம் கிடைக்கும். அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா என்பதை எம்.ஜி.ஆர். உறுதிப்படுத்திக் கொள் வார்.
‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் நடிக்க வி.எஸ்.ராகவனுக்கு குறிப்பிட்ட தொகை சம்பளமாக நிர்ண யிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு தயா ரிப்பு தரப்பில் இருந்து வி.எஸ்.ராகவ னுக்கு கோரிக்கை விடப்பட்டது. அவருக்கோ தர்மசங்கடம். தனது நிலையை கவிஞர் வாலியிடம் கூறினார். உடனே, வாலி ஒரு யோசனை கூறினார்.
அந்த யோசனையை வி.எஸ்.ராகவன் செயல்படுத்தினார். வாலியின் யோச னைப்படி தயாரிப்பு தரப்பிடம் வி.எஸ்.ராகவன் ஏவிய அஸ்திரம் இதுதான். ‘‘என் சம்பளம் எம்.ஜி.ஆரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முடிவு செய்த தொகையைவிட குறை வாக நான் வாங்கிக் கொண்டால் அவர் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது?’’ என்றார். மறுபேச்சு இல்லாமல் ஏற்கெனவே பேசிய சம்பளமே அவருக்கு கிடைத்தது.
வி.எஸ்.ராகவனின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். தாயாரை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் வி.எஸ்.ராகவன் இருந்தபோதுதான் இயல், இசை, நாடக மன்றத்துக்கு கவுரவச் செயலாளராக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார்.
அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருநாள் திடீரென வி.எஸ்.ராகவன் வீட்டுக்கு வந்து அவரிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்து, ‘‘உங் கள் தாயாரின் மருத்துவ செலவுக்காக எம்.ஜி.ஆர். கொடுக்கச் சொன்னார்’’ என்றார். அதை ஏற்க மறுத்த வி.எஸ்.ராகவன், ‘‘இந்தப் பணத்துக்கு இப்போது அவசியம் இல்லை. என்னோட நன்றி யைத் தெரிவித்து பணத்தை திருப்பி அவர்கிட்ட கொடுத்துடுங்க’’ என்றார்.
‘நாம் கொடுக்கும் பணத்தை மறுக் கிறாரே? நம்மை வி.எஸ்.ராகவன் நெருக்கமாக நினைக்கவில்லையோ? ’ என்று எம்.ஜி.ஆருக்கு அவர் மீது வருத் தம். அரசின் இயல், இசை, நாடக மன்றத் தின் செயலாளர் என்ற முறையில் முதல் வர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது வி.எஸ்.ராகவன் தனது நிலையை விளக்கினார்.
‘‘உங்களுக்குத் தெரியாதது இல்லை. என் தாயாரின் மருத்துவ செலவுக்கு நான் கேட்காமலேயே பெரிய தொகையை கொடுத்து அனுப்பினீர் கள். என் தாயாருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. வீட்டுக்கு வந்துவிட்டார். இனி மருத்துவ செலவு கிடையாது. அப் படியிருக்கும்போது, தாயாரின் மருத் துவ செலவுக்காக என்று நீங்கள் அனுப் பிய பணத்தை நான் ஏற்றுக் கொள்வது சரியாக இருக்காது என்பதால்தான் திருப்பி அனுப்பினேன்’’ என்று வி.எஸ். ராகவன் கூறினார்.
அவரது விளக்கத்தை பொறுமை யாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., அவரை மன தார பாராட்டினார். உணர்ச்சிவசப்பட்ட ராகவன், ‘‘எனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் உங்களிடம்தான் வருவேன். வேறு யாரிடம் போவேன்?’’ என்றதும் எம்.ஜி.ஆர் அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.
ஆரம்ப காலத்தில் ஏச்சுக்களையும் பேச்சுக்களை யும் உரமாகக் கொண்டே வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சக நடிகர்கள் யாரையும் மற்ற வர்கள் கிண்டல் செய்வதோ, குறை கூறுவதோ பிடிக் காது. புதிய நடிகர் களை உற்சாகப் படுத்தி வாழ்த்து வார். வி.எஸ்.ராக வனும் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட ஒரு படப்பிடிப்பு.
காட்சிப்படி மாடிப்படி களில் இருந்து எம்.ஜி.ஆர். இறங்கி வரவேண்டும். அப் போது, வாசலில் வரும் தபால்காரர் ‘சார் போஸ்ட்’ என்று கூறி எம்.ஜி.ஆரிடம் தபாலைத் தர வேண்டும். தபால்காரர் வேடத்தில் நடித்தவர் புதுமுக நடிகர். ‘சார் போஸ்ட்’ என்ற இரண்டே வார்த்தைகள்தான் அவருக்கு வசனம். என்றாலும் பதற் றத்தில் இருந்தார். ‘‘தம்பி, எம்.ஜி.ஆரு டன் நடிக்கிறே. ஜாக்கிரதை’’ என்று இயக்குநர் ப.நீலகண்டன் வேறு எச்சரித் ததில் அவரது பதற்றம் அதிகரித்தது.
படப்பிடிப்பு தொடங்கியது. திட்டமிட்ட படி, எம்.ஜி.ஆர். புயலாக மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்தார். பதற்றத்தில் இருந்த தபால்காரராக நடித்த புதுமுக நடிகர், எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘‘சார் போஸ்ட்’’ என்று சொல்வதற்கு பதிலாக, ‘‘சார் பேஸ்ட்’’ என்று சொல்லிவிட்டார். செட்டில் சிரிப்பலை எழுந்தது. அதை அடக்கியபடி ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல். ‘‘நிறுத்துங்க. ஒரு நடிகர் தப்பு பண் ணிட்டா இப்படித்தான் சிரிக்கிறதா? நாம எல்லாம் தப்பே பண்ணலையா? யாரை யும் கிண்டல் பண்ணாதீங்க’’ என்று வெடித்தார். செட்டில் மயான அமைதி!
பின்னர், அந்த புதுமுக நடிகரை தனியே அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தோளில் கைபோட்டபடி, ‘‘கவ லைப்படாதீங்க. சரியா நடிங்க. உங்க ளால் முடியும்’’ என்று உற்சாகப்படுத்தி னார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அந்த நடிகர் சரியாக நடித்தார். ஷாட் ஓ.கே. ஆனது. உணர்ச்சிவசப்பட்டு காலில் விழுந்த நடிகரைத் தூக்கி வாழ்த்திய எம்.ஜி.ஆரின் பண்பைப் பார்த்து வி.எஸ். ராகவன் சிலிர்த்துப் போனார்.
எம்.ஜி.ஆரின் குரல் எப்போதுமே சமு தாயத்தில் ஏளனத்துக்கு உள்ளாகி கடை நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆதரவாகத்தான் ஒலிக்கும். அது உரிமைக்குரல்!.........Pngi
-
கவிஞர் கண்ணதானுக்கு உதவி ....
பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ...
ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார்.
யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது
அவருக்கு வேண்டிய ஒருவர்
நம்ம மாதிரி ஆள்களுக்கு
உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார்.
அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார்.
இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள்,
அய்யய்யோ வேண்டவே, வேண்டாம்
அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன்.
நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல,
இவர் சொல்கிறார்,
மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர்,
மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர்
அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை
எனவே எதையும் யோசிக்காமல்
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம்
என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன்
அவர்கள்
பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார்.
அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி,
உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்.
இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார்.
ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க
அவர் ரொம்பவும் தாழந்த குரலில்
எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன்
மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.
இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல்
சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார்.
அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து
இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல
அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து
பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து
இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார்
என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார்.
பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில்
பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு
உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று,
மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார்.
தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே ..
நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன்.
ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே
நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம்
நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்....bpg
-
வெற்றி முகம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் :
யாருடைய முகமானது இலட்சோப
லட்சம் இதயங்களைக் கவருகிறதோ,
யாருடைய பண்பானது மக்களது மனதில் வேரூன்றியிருக்கிறதோ
அத்தகைய முகத்துக்குரிய அத்தகைய பண்புக்குரிய "மக்கள்
திலகம் எம்.ஜி.ஆர் "அவர்களை வைத்துப் படம் எடுத்தால் எல்லா
வகையிலும் வெற்றியடையலாம், என்று தயாரிப்பாளர்கள் மலரை
வண்டு மொய்ப்பதுபோல் வந்து மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
- திரைத்தென்றல்-1974.
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........Sar.Swa
-
1972 செப் 15 ம் தேதி வெளியான தலைவரின் கடைசி கருப்பு வெள்ளை படம்தான் "அன்னமிட்டகை". முழுக்க முழுக்க கேரளாவில் உள்ளதேயிலை தோட்டத்தில் படமாக்கப்பட்ட வெற்றிப் படம்தான் "அன்னமிட்டகை". இதிலும் பாடல்கள் அத்தனையும் அருமை. படம் கலரில் வெளியாகியிருந்தால்
வெற்றியின் வீச்சு சற்று அதிகமாக இருந்திருக்கும்.
'ஒன்னொண்ணா ஒன்னொண்ணா சொல்லு சொல்லு'
'அழகுக்கு மறுபெயர் கண்ணா' 'மயங்கி விட்டேன் உன்னை கண்டு'
'பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா' 'அன்னமிட்டகை' போன்ற பாடல்கள் kv மகாதேவன் இசையில் மனதை ஈர்க்கும். பாரதியுடன் பாடும் 'மயங்கி விட்டேன்' பாடல் தலைவர் அழகில் மனம் மயங்கி விடும். 'அழகுக்கு மறுபெயர் கண்ணா' பாடல் ஜானகியின் குரலில் தேனாய் இனிக்கும்.
அத்தனையும் தேயிலை தோட்டத்தில் எம்ஜிஆரும் ஜெயாவும் புது புது ஸ்டெப்களுடன் ஆடிப்பாட அருமையாக எடுக்கப் பட்டிருக்கும். நல்ல எளிமையான கதை அழகாக பின்னப்பட்டிருக்கும். நாகேஷ்
வி கேஆர். காமெடியில் கடைசியாக வந்த படம் என்று நினைக்கிறேன். . சென்னையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகி. பிளாசாவில் 63 நாட்கள் வரை ஓடி வெற்றி பெற்றது. படம் வெளியாகும் போது திமுகவில் இருந்த தலைவர் அக் 17 ல் அதிமுக தொடங்கி அதிமுகவின் பொதுசெயலாளராக இருந்தார்.
ஆளும் தீயசக்தியின் அராஜக ஆட்சியினால் தியேட்டர்கள் மிரட்டப்பட்டு படத்தை சென்னையில் 63 நாட்களில் எடுத்து விட்டனர். திமுக காலிகள் "அன்னமிட்டகை" பேனர்களை கிழித்து அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டனர். பிரபாத் சரவணாவில் 49 நாட்களும் லிபர்டியில் 42 நாட்களும் ஓடியது. அக் 20 ல் வெளியான "இதயவீணை"யையும் தாண்டி ஓடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி ஜோஸப்பில் வெளியாகி 33 நாட்கள் ஓடியதிலிருந்து படம் நல்ல வெற்றிப்படம் என்று தெரிந்து கொள்ளலாம். ஜோஸப்பில் வெளியான கடைசி எம்ஜிஆர் படம் இதுதான்.
ஏனென்றால் இங்கு கைஸ்கள் வெற்றிப்படம் என்று சொல்லும் "ராஜா" 21 நாட்களும் "நீதி" 17 நாட்களும் "ஞானஒளி" 18 நாட்களும் "தியாகம்" 21 நாட்களும்தான் ஓடியது. மற்ற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்கள் வரை ஓடியது. அடுத்து வெளியான இதயவீணை 35 நாட்களிலே வெளியானதால் 100 நாட்களை எட்ட முடியவில்லை. 100 நாட்கள் ஓட தகுதியான படம்தான் "அன்னமிட்டகை". குறுகிய காலத்தில் "இதயவீணை" வெளியாகா விட்டால் நிச்சயம் 100 நாட்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்..........ksr.........
-
என் கொள்கைகளை பின்பற்றி வளர்ப்பதால் மட்டுமே என் பெயர், புகழ்
காப்பாற்றப்படும் - #எம்ஜிஆர்.
#உங்களை தெய்வமாக மதித்து வணங்கும் என்னைப் போன்றவர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை யாது?
MGR : என்னைத் தெய்வமாக்காதீர்கள் என்பதுதான் எனது முதல் வேண்டுகோள். நானும் சாதாரண மனிதன் தான். நான் கற்க வேண்டியது, நாட்டுக்கு ஆற்ற வேண்டிய தொண்டு நிறைய உள்ளன. என்னிடமும் குறைகள் இருக்கும். எனவே என்னை அந்த அளவிற்கு உயர்த்தாதீர்கள்.
#தங்களின் விடாமுயற்சிக்கு சவாலாக அமைந்த நிகழ்ச்சி எது?
MGR : கருணாநிதி அவர்கள் குற்றமற்ற என்னை கட்சியிலிருந்து வெளியேற்றியது.
#என் மறைவிற்குப் பிறகு என்னைப் பற்றிப் புரிந்து கொள்பவர்கள் என்று பேசி இருக்கிறீர்களே, இப்படிப்பட்ட வார்த்தைகளை கூறி மனதைப் பதற வைக்க வேண்டுமா?
MGR : தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும். வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும். பகலிருந்தால் இரவு இருக்கும். செயலிருந்தால்
விளைவிருக்கும். இளமையிருந்தால் முதுமையிருக்கும். பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும். எனவே இளைஞர்கள் ஒருவனுடைய கொள்கையிலும், அதை செயல்படுத்தும் முறையிலும் உண்மையான பற்று வைத்திருந்தார்களேயானால் அவைகளைத் தாங்களும்
செயல்படுத்திக் காப்பாற்றுவதற்கு, மேலும் வளர்ப்பதற்குத் தயாராக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நீங்கள் வேதனைபடுவதாகச் சொல்லுகின்ற வார்த்தைகளை வெளியிட்டேன். ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப்படும்.எனக்குப் பின் உங்களைப் போன்றவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால், அது அமரர் பேரறிஞர் அண்ணாவிற்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன்.
(வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆர். தந்த பதில்கள்)
Ithayakkani S Vijayan...VRH
-
எத்தனைத் தடைகள் வந்தாலும் உதவி செய்வதை நிறுத்த மாட்டார் எம்.ஜி.ஆர்.!
- கவிஞர் முத்துலிங்கம்
புரட்சித் தலைவரைப் போலவே அவரது திரைப்பாடல்களும் சாகாவரம் பெற்றவை. மெட்டுக்களின் இனிமைக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை வார்த்தைகளின் புதுமைக்கும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.
அதனால் தான் அவரது திரைப்படப் பாடல்கள் தலைமுறைகள் கடந்து இன்றைக்கும் பாடப்படுகிறது. கண்ணதாசன், வாலி போன்ற ஜாம்பவான்களால் சூழப்பட்ட எம்.ஜி.ஆரின் கவிதைத் தோட்டத்தில் பல புதிய திறமையாளர்களையும் வளர்த்தெடுக்க அவர் தவறவில்லை.
அந்த வரிசையில் வந்த மிக முக்கியமான கவிஞர் தான் முத்துலிங்கம். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தமிழக மேல்சபை உறுப்பினராகவும் அதன் பின்னர் தமிழக அரசவைக் கவிஞர் பதவியையும் வகித்தவர் இவர்.
இந்த கௌரவமான பதவியில் கண்ணதாசன் உட்பட இதுவரை நான்கு கவிஞர்கள் மட்டுமே அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் கவிஞர் முத்துலிங்கமும் ஒருவர். இந்தப் பதவியில் இருந்த கடைசிக் கவிஞரும் அவரே. எம்.ஜி.ஆர். உடனான தன் நீண்ட நெடிய பயணத்தில் இருந்து சில நினைவுகளை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...
“தன் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பை எனக்கு ஏன் கொடுத்தார் எம்.ஜி.ஆர். என்ற காரணத்தை ஒரு விழா மேடையில் எம்.ஜி.ஆரே சொன்னபோது தான் நானே தெரிந்து கொண்டேன்.
அது 1981ஆம் ஆண்டு. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருக்கிறார். எனக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது எம்.ஜி.ஆர். கைகளினால் வழங்கப்பட்டது. அந்த விழா மேடையில் இப்படிப் பேசினார் தலைவர்.
“சினிமாதுறைக்கு வருவதற்கு முன்னர் கவிஞர் முத்துலிங்கம் பத்திரிகைத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அ.தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டவர்.
1973ல் ‘பொண்ணுக்கு தங்க மனசு' என்ற ஒரு படத்துக்கு பாட்டு எழுதினார். அதன் பிறகு கொஞ்ச நாளில் கொள்கை காரணமாக அவர் பத்திரிகை வேலையைவிட்டு விலகும்படியான சூழ்நிலை உருவானது.
அப்போது ஒரு நாள் என்னைப் பார்ப்பதற்காக தி.நகர் அலுவலகம் வந்திருந்தார். நான் வேறு சில முக்கியமான அலுவல்களில் இருந்ததால், வெளியில் இருந்தபடியே இன்டர்காமில் என்னுடன் பேசினார்.
“வேலையை விட்டுட்டீங்கனு கேள்விப்பட்டேன். ரொம்ப சிரமமா இருக்குமே? கொஞ்சம் பணம் தரேன்... செலவுக்கு வச்சுக்குங்க” என்று நான் சொன்னதும், “பணமெல்லாம் வேண்டாம் பாட்டெழுதும் வேலை கொடுங்க” என்றார். “வேலையெல்லாம் அப்புறம் தர்றேன்... இந்தப் பணத்தை முதல்ல வாங்கிக்குங்க” என்றதற்கு, “பணம் வேண்டாம், வேலை கொடுங்க” என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். கோபத்தில் படாரென நான் போனை வைத்துவிட்டேன்.
ஆனால் அந்தச் சம்பவம் என்னை சிந்திக்க வைத்தது. சினிமாத் துறையில் உள்ள பெரும்பாலான கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு நான் பண உதவி செய்திருக்கிறேன். அதெல்லாம் அவர்களாகவே வந்து என்னிடம் கேட்டபோது தான் நான் செய்தேன். ஆனால் நானாக வலியப்போய் பண உதவி செய்தபோது அதை வேண்டாம் என்று மறுத்தவர் முத்துலிங்கம்.
உழைக்காமல் யாரிடத்திலும் எதையும் இனாமாக வாங்கக்கூடாது என்ற தன்மானம் மிக்க மனிதர் இவர் என்பதை அன்று நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் அவருக்கு என் படங்களில் பாட்டெழுதும் வாய்ப்புகள் வழங்கத் தொடங்கினேன்.
கவிஞர் பாரதிதாசன் தன்மானத்துக்கு பேர்போனவர். அவர் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை தன்மானம் மிக்க கவிஞர் முத்துலிங்கத்துக்கு வழங்காமல் வேறு யாருக்கு வழங்குவது” என்றார் எம்.ஜி.ஆர்.
இதைவிட வேற என்ன வேணும் சொல்லுங்க என்று கேட்கிறார் முத்துலிங்கம். சொல்லும்போதே அவர் முகத்தில் அவ்வளவு பெருமிதம். எம்.ஜி.ஆர். அவர்களின் கொடைக் குணம் குறித்து மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தவர், அவரது மனித நேயத்துக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார்.
“மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துக்கு பாட்டெழுதிக் கொண்டிருந்தபோது என் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுப்போச்சு. டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். என் கையில் இருந்ததோ ரெண்டு ரூபாய். எம்.ஜி.ஆரை பார்க்கப் போனேன்.
அப்போது அவர் சத்யா ஸ்டுடியோவில் ஷூட்டிங்கில் இருந்தார். ஷூட்டிங் முடிந்து மேக்கப்பை கலைத்துவிட்டு அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது மேக்கப் அறை வாசலில் தான் கார் வந்து நிற்கும். விறுவிறுவென வந்து அவர் காரில் ஏறியதும் கார் புறப்பட்டது.
அப்போது நான் அங்கு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே வண்டியை நிறுத்தச் சொல்லி அருகில் அழைத்து என்னவென்று கேட்டார்.
நான் விஷயத்தைச் சொல்லிவிட்டு, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்துக்கு நேற்று தான் சிச்சுவேஷன் சொன்னாங்க. நாளைக்கு தான் கம்போசிங். அதனால் பாட்டெழுதின பிறகு வாங்கப்போற பேமெண்ட்டை முன்பணமாக இன்றைக்கே கேட்டு வாங்கிக் கொள்ளட்டுமா? என்று கேட்டேன்.
சற்று யோசித்தவர், “வேண்டாம். அது நல்லா இருக்காது. நீ அந்தக் கம்பெனிக்கு இதுக்கு முன்ன பாட்டு எழுதினதில்ல. நான் தான் உன்னை சிபாரிசு செய்தேன். அதனால அவங்ககிட்ட கேட்டா அது அசிங்கம். அதுவும் நீ கேட்கவே கூடாது” என்று சொல்லிவிட்டு, அவரது உதவியாளர் மாணிக்கத்திடம் காரில் இருக்கும் சூட்கேஸை எடுத்துக்கொண்டு உள்ளே வரும்படி சொல்லிவிட்டு என்னை அழைத்துக் கொண்டு மீண்டும் மேக்கப் அறைக்குள் நுழைந்தார்.
சூட்கேஸில் இருந்து 2000 ரூபாய் எடுத்துக் கொடுத்து, உடனே டாக்டரைப் போய் பாருங்க என்றார். பவுன் 400 ரூபாய் விற்ற காலம் அது. 2000 ரூபாய் என்பது இன்றைக்கு லட்ச ரூபாய்க்கு சமம். இதுதான் அவருடைய மனித நேயம். காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டார் என்றால் எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் மேக்கப் அறைக்கு திரும்ப மாட்டார்.
ஆனால் அன்றைக்கு என் நிலைமையைச் சொன்னபோது அவர் இறங்கி வந்தார் என்றால் அது எனக்காக என்றில்லை. என் நிலைமையில் அன்றைக்கு அவரிடம் யார் வந்து உதவி என்று நின்றிருந்தாலும் அவர் இதைத் தான் செய்திருப்பார். அப்பேற்பட்ட மனிதநேயம் மிக்க மாணிக்கம் அவர்” என்று சொல்லும்போதே முத்துலிங்கத்தின் கண்கள் கலங்கி இருந்தன.
அதே போல தன்னை நம்பி வந்தவர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்துவிட்டால், எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் அதை செய்தே தீருவார் என்பதற்கு உதாரணமாக இன்னொரு சம்பவத்தைச் சொன்னார்.
“மீனவ நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அவரைப் பார்ப்பதற்காக ஸ்டுடியோ சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததும், “வாங்க முத்துலிங்கம்... இந்தப் படத்துல நீங்க என்ன பாட்டு எழுதறீங்க?”என்று கேட்டார்.
“நான் எதுவும் எழுதலியே” என்றேன்.
“என்னது எழுதலியா? உங்களுக்கு ஒரு பாட்டு தரச் சொல்லி இருந்தேனே!” என்றார்.
“என்னை யாரும் கூப்பிடலியே!” என்றேன்.
உடனே ப்ரொடக்ஷன் மேனேஜரை அழைத்தார்.
“முத்துலிங்கத்துக்கு பாட்டு தரச் சொல்லி இருந்தேனே, ஏன் தரல?” என்றார்.
“நாங்க தேடும்போது அவர் ஊருல இல்லை” என்று பதில் வந்தது.
“ஊர்ல இல்லைனா ஏன் என்கிட்ட சொல்லல? என்ன... ஸ்ரீதர் படம்னு கொஞ்சம் சலுகை கொடுத்தா அதிகமா உரிமை எடுத்துக்கறீங்களா?” என்று கடுமையாக கோபித்துக் கொண்டவர் என்பக்கம் திரும்பி...
“கவிஞரே இனிமே ஊருக்கு போறதா இருந்தா என்கிட்ட சொல்லிட்டு போகணும் புரிஞ்சதா” என்று சொல்லிவிட்டு, “முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு கொடுக்க சொன்னேன்னு டைரக்டர்கிட்ட சொல்லு” என்றார்.
“சார்... படத்துல பாடலுக்கான அத்தனை சிச்சுவேஷனும் முடிஞ்சுட்டதா டைரக்டரும் ப்ரொட்யூசரும் நேத்து பேசிக்கிட்டு இருந்தாங்க” என்றார் ப்ரொடக்ஷன் மேனேஜர்.
“அப்படியா...? அப்படின்னா டைரக்டரையும், ‘சானா'வையும் கூப்பிடு” என்றார்.
டைரக்டர் என்றால் ஸ்ரீதர். சானா என்றால் அந்தப் படத்தின் ப்ரொட்யூசர் சடையப்ப செட்டியார். இருவரும் வந்தனர்.
“இவர் தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வச்சு ஒரு டிரீம் ஸாங் போடுங்க. நல்லாருக்கும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
“ஸாங்குக்கான சிச்சுவேஷன் எல்லாமே முடிஞ்சிடுச்சே எங்க போடுறது?” என்று செட்டியாரும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.
“டிரீம் ஸாங்குக்கு என்ன சிச்சுவேஷன் வேண்டிக்கிடக்கு. சிச்சுவேஷன் இல்லாத ஒரு சிச்சுவேஷனை உருவாக்குறது தானே டிரீம் ஸாங். ஒரு ரிலாக்ஸூக்கு போடுறது தானே. சாப்பிடும்போது நினைச்சு பார்க்குற மாதிரியோ, இல்ல வேலை செய்யும்போது அசதியில கண் அசந்து கனவு காணுற மாதிரியோ போடலாமே.
‘அன்பே வா'ல போட்டமே, “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...” அது என்ன சிச்சுவேஷன்? அது மாதிரி “விழியே கதை எழுது”ன்னு ‘உரிமைக்குரல்' படத்துல போட்டீங்களே அது என்ன சிச்சுவேஷன்? அதமாதிரி ஒன்னு உருவாக்குங்க என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டு போய்விட்டார்.
அதற்கு அப்புறம் ஒரு டிரீம் சிச்சுவேஷனை உருவாக்கி போட்ட பாடல் தான் அந்தப் படத்துலயே பெரிய ஹிட் ஆச்சு. அதான் “தங்கத்தில் முகமெடுத்து... சந்தனத்தில் உடலெடுத்து”.
எல்லா பாடல்களும் முடிந்துவிட்ட நிலையிலும் எதற்காக இப்படி ஒரு பாடலை உருவாக்கினார் என்றால், தன்னை நம்பி வந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு நாம்தான் உதவ வேண்டும் என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான். அதனால் தான் அவர் மறைந்தும் மறையாமல் கோடாணுகோடி இதயங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆரிடம் பாடல்களை ஓ.கே. வாங்குவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. ஒரே நாளில் ஓ.கே. ஆன பாட்டும் உண்டு. அதேபோல ஒரு மாதம் ஆகியும் ஓ.கே. ஆகாத பாட்டும் உண்டு. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்ல நான் மூணு பாட்டு எழுதினேன். அதுல ஒரு பாட்டை அவர் ஓ.கே. பண்றதுக்கு ஒரு மாசமும் ஆனதும் உண்டு....Rmh
-
நம்நாடு திரைப்படம் மக்கள் திலகம் அவாகள் நடித்து 1969ம் ஆண்டு வெளிவந்தது. இதே படம் முதலில் தெலுங்கிலும் பின் நம்நாடு தமிழ்த்திரைப்படத்தைத் தொடர்ந்து இந்தியிலும் வெளியாகியது.
நம்நாடு திரைப்படம் தமி்ழ் திரையுலகில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. இதன் பிற மொழி ஆக்கங்கள் எதிர்பார்த்த முடிவைத் தரவில்லை.
அந்த காலக்கட்டங்களில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாகிய திரு. சிவாஜி கணேசன் மற்றும் திரு. M.G.இராமச்சந்திரன் ஆகியோரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி இரசிகர்களை மகிழ்ச்சியில் தத்தளிக்க வைக்கும். அந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில் நம்நாடு படம் வெளியாவதற்கான சமயத்தில் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் சிவந்த மண் என்ற படமும் வரிசையில் இருந்தது.
மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட சிவந்தமண் படத்தோடு சேர்ந்து கதைப்படி அத்துணை பிரம்மாண்டத்திற்குத் தேவையில்லாத நம்நாடு படத்தை வெளியிட தயாரிப்பாளர் திரு.நாகிரெட்டியாருக்கு சிறிது கலக்கம். தன் கலக்கத்தை திரு.M.G.இராமச்சந்திரன் அவர்களிடம் தெரியப்படுத்தி நம்நாடு திரைப்பட வெளியீட்டைத் தள்ளிப் போடலாம் என்ற தன் எண்ணத்தைத் தெரிவித்தார். அதற்கு சம்மதிக்காத திரு.M.G.இராமச்சந்திரன் அவர்கள் நம்நாடு படத்தை சிவந்தமண் படம் வெளியான அன்றைக்கே வெளியிடும்படிச் செய்தார். படம் மாபெரும் வெற்றி. மக்கள் திலகம் அவர்கள் திரு நாகிரெட்டியாரிடம் தம்பி திரு.சிவாஜிகணேசனுக்கு என்றும் தனக்கு என்றும் தனித் தனி இரசிகர்கள் உண்டு என்றும் தன் இரசிகர்கள் மீது தனக்கு என்றும் நம்பிக்கை உண்டு என்றும் கூறினார்.
படம் வெளியான அன்று திரு.M.G.இராமச்சந்திரன் அவர்களும் திரு. நாகிரெட்டியார் அவர்களும் மேகலா தியேட்டரில் யாரும் அறியா வண்ணம் படம் பார்த்தனர். படத்தில் வாங்கய்யா வாத்தியாரய்யா என்ற பாட்டு வரும் பொழுது அனைத்து இரசிகர்களும் ஒன்றாக எழுந்து நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்து Once More Once More என்று கோசம் எழுப்பினர். அன்று தியேட்டரில் அக்காட்சி மறுஒளிபரப்பு செய்யப்பட்டது.
படம் மிகப் பெரிய வெற்றியை எட்டியது. வசூலில் அன்றைய காலக்கட்டத்தில் ஒரு சாதனையைப் படைத்தது....Rmh
-
தேவருக்கு, கோபம் ஏற்படுத்தும் மூன்று விஷயங்கள்.
தாமதம், வார்த்தை தவறுவது, மோசடி!
தேவரின் அர்த்தமுள்ள இந்த கோபத்திற்கு அனைவரும் தலை வணங்கினர். ஒழுக்கம், உண்மை, கடுமையாக உழைப்பவர்களுக்கு அவர், ஒரு குழந்தையாகவே காட்சியளித்தார். அவர், 'டென்ஷன்' அடையும் போதெல்லாம், 'ஏண்ணே டென்ஷன் ஆகறீங்க... எல்லாம் ஒழுங்கா நடக்குது; கொஞ்சம் அமைதியா இருங்க. நான், இருக்கேன்ல பாத்துக்கறேன்...' என்று அவரை சமாதானப்படுத்தி, கோபத்தைக் குறைப்பார் எம்.ஜி.ஆர்.,
ஒரு நாளில், எட்டு மணி நேரம் கால்ஷீட் வீதம், 40 கால்ஷீட்டுகளில், மொத்தப் படமும் முடிய வேண்டும். ரீ - ஷூட்டிங் என்பதே தேவர் பிலிம்ஸ் வரலாற்றில் கிடையாது.
எந்த கதாநாயகியாவது நடிக்க தெரியாமல் சொதப்புவார். அதற்காக, பிலிமை, வீணடிக்க மாட்டார் தேவர்.
நடிகை சொதப்பியதற்கு ஏற்றாற் போல் கதாசிரியர் மாராவை அழைத்து, வசனத்தை மாற்ற சொல்வார். அவரைப் பொறுத்த வரை, எல்லாமே ஒரே டேக்கில் முடிய வேண்டும். இதனாலேயே நடிக்க தெரியாத நடிகைகளை, தன் படத்தில் ஒப்பந்தம் செய்யவே மாட்டார்.
தேவர், சினிமா இடி அமீன்; யாரும் அவரிடம் யோசனை கூறக்கூடாது; அது, அங்கு சாத்தியமும் இல்லை.
பாமர மக்களுக்காகவே, படம் எடுப்பதாக கூறுவார். படத்தின் டைட்டில், வசனத்தில் வந்தாக வேண்டும். அதை, எம்.ஜி.ஆர்., மட்டும் பேசினால் போதாது; நடிக்கிறவர்கள் அத்தனை பேரும் சொல்ல வேண்டும் என நினைப்பார். ஒரு முறை, ஆரூர்தாஸ், 'அது வேணாமே... இத்தனை படங்களில் தொடர்ந்து அதையே செய்திருக்கோம்; இதிலுமா...' என்றார். அன்றைய டிஸ்கஷனை, அதோடு முடித்து கொண்டார் தேவர்; அடுத்த படத்தில், அய்யாபிள்ளையை வசனம் எழுத வைத்தார்.
தனக்கான காட்சிகள் முடிந்தவுடன், 'மேக்-அப்' அறைக்குள் போய் விடுவார் எம்.ஜி.ஆர்., அங்கு பல முக்கியஸ்தர்கள், கட்சிக்காரர்கள் அவருக்காகக் காத்திருப்பர். அவர்களுக்கு குடிக்க ஏதாவது வேண்டுமென்று சைகை செய்வார்
எம்.ஜி.ஆர்., பையன்களைத் தேடாமல், தானே காபி, டீ, கூல்டிரிங்ஸ் எடுத்துப் போவார் தேவர்.
எம்.ஜி.ஆரின் மேக்-அப் அறைக்குள், அவரது மேக் - அப் மேன் பீதாம்பரம் தவிர, அன்னியர்கள் பிரவேசிக்கவே முடியாது; கூடாது. எம்.ஜி.ஆர்., அழைக்கும் வி.ஐ.பி.,க்கள் மட்டுமே அங்கு செல்லலாம். பட முதலாளிகள் கூட அவரது அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது.
எம்.ஜி.ஆரின் தயாரிப்பாளர்களில், தேவர் மட்டுமே அவரது மேக்-அப் அறைக்குள் சுதந்தரமாகச் செல்வார். அது மட்டுமல்ல,
எம்.ஜி.ஆருக்கான, 'ஷாட்' தயாராகி விட்டால், 'அண்ணே மன்னிச்சுக்குங்க...' என்றபடியே எம்.ஜி.ஆரை கையைப் பிடித்து இழுத்து, செட்டுக்குள் அழைத்துச் செல்வார். அதிர்ந்து போய் நிற்பர் எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த விருந்தினர்.
தேவர், எப்போதும் ஒன் - மேன் ஆர்மியாகவே செயல்பட்டார். சகலமும் அவரே! எம்.ஜி.ஆர்., படப்பிடிப்புக்கு வர தாமதமாவது போல தெரிந்தால், ராமாவரம் தோட்டத்திற்கு அவரே சென்று விடுவார். ஷூட்டிங்கில் எம்.ஜி.ஆர்., இருந்தால், தேவர் அவருடனேயே இருப்பார். எம்.ஜி.ஆரும், தேவர் படங்களில் நடிக்கும் போது, ப்ரீயாக இருப்பார். அவரது தலையீடு அறவே இருக்காது. பொதுவாக, தன் படங்களின் எடிட்டிங்கில் எம்.ஜி.ஆரே நேரடியாகப் பங்கு கொள்வார். அவர் ஒப்புதல் பெறாத காட்சிகள், படத்தில் வராது; ஆனால், திருமுகமே, ஒரு எடிட்டர் என்பதால், தேவர் பிலிம்ஸில் எடிட்டிங் மேஜையில், எம்.ஜி.ஆர்., உட்கார மாட்டார்.
எம்.ஜி.ஆர்., தன் பட அதிபர்களை, 'ஆண்டவனே' என்றும், 'முதலாளி சவுக்கியமா?' என்றே நலம் விசாரிப்பார். தேவரை மட்டும், 'அண்ணே...' என்று பாசமாக அழைப்பார்.
எம்.ஜி.ஆரை வைத்து, தேவர் தயாரித்த படங்களில் நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், வசனகர்த்தா என்று அனைவருக்குமே மிக அதிக சம்பளம் கிடைத்தது....vrh
-
ஒருவருக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால், அதை உடனே செய்துவிடவேண்டும், நேரம் காலம் பார்க்கக்கூடாது, புயலோ மழையோ எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தன்னுடைய உதவி தேவைப்பட்டவருக்கு அந்த உதவியை செய்து முடித்த பின்பு தான் எம்.ஜி.ஆருக்கு சாப்பாடே இறங்கும்.
#உதவும்_வரை_நிம்மதி_ஏது
எம்.ஜி.ஆர் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,
#எம்_ஜி_ஆரின்_உதவியாளர்
அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.
#கை_விரித்த_நண்பர்கள்
கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத்தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண்பர்களிடம் உதவி கேட்டார் கோபாலகிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.
#எம்_ஜி_ஆர்_உதவி_செய்வாரா
என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல்லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.
#ஸ்டுடியோவில்_காத்திருப்பு
அப்போது, எம்.ஜி.ஆர் வாஹினி ஸ்டுடியோவில் பட்டிக்காட்டு பொன்னையா படப்பிடிப்பில் இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர், சோகத்துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்
#எம்_ஜி_ஆர்_ஆறுதல்
கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலைமையை எம்.ஜி.ஆர் தெரிந்துகொண்டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தனது நிலைமையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.
#ஏன்_இவ்வளவு_லேட்டா_வந்தீங்க
அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர், ‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை என்று அவரை அன்போடு கடிந்துகொண்டார். வாடகை பாக்கி எவ்வளவு? என்று கேட்டார். மூவாயிரம் ரூபாய் என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முகவரியை கொடுத்துவிட்டு போகச் சொன்னார். அவரும் எம்.ஜி.ஆரின் உதவியாளரிடம் தன்னுடைய முகவரியை கொடுத்துவிட்டு திரும்பி வந்துவிட்டார்.
#இந்த_மழையில்_உதவி_வருமா
எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.
#மழையிலும்_தேடிவந்த_உதவி
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசாரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.
#மழையுடன்_போட்டி_போட்ட_ஆனந்தக்_கண்ணீர்
இதில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங்களையே வைத்துக்கொள்ளச் சொன்னார் என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரிவித்தனர். நன்றிப் பெருக்கில் மழையுடன் போட்டியிட்டபடி, கோபாலகிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. பின்னர் அவருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன். அப்போது பக்கத்து வீட்டு ரேடியோவில் ஒரு பாட்டு அந்த மழையின் சத்தத்தையும் தாண்டி ஒலித்தது அவருடைய காதுகளில் கேட்டபோது அவருடைய ஆனந்தக் கண்ணீர் மேலும் அதிகரித்தது.
அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி... வாழி
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர் சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம் என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்
#தொடரும்
சிவதாஸ்-கிருஷ்ணசாமி...
-
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#ஆசியோடு_நண்பர்கள்
#அனைவருக்கும் #இனிய_வியாழக்கிழமை_காலை #வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த திரைப்படங்களை வரிசைப்படி பார்த்து வருகின்றோம் அந்த வகையில் இன்று மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட சர்வாதிகாரி திரைப்படம் பற்றி பார்ப்போம்...
சர்வதிகாரி என்பது 1951 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், எம். என். நம்பியார் வில்லனாக நடித்தார்.
இது நம்பியாரை ஒரு முக்கிய நட்சத்திரமாக இந்த திரைப்படம் நிறுவியது. இந்தபடம் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது மற்றும் திருச்சியில் அதிகபட்ச ஓட்டம் - 141 நாட்கள். இந்த திரைப்படம் நடிகை
டி. பி.முத்துலட்சுமியை நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகையாகவும் தன்னை நிலை நிறுத்த
வைத்தது
இயக்கியது டி. ஆர்.சுந்தரம்
தயாரித்த டி. ஆர்.சுந்தரம்
எழுதியது ஏ.வி.பி.ஆசைதம்பி
கதை மற்றும் திரைக்கதை
கோ.தா.சண்முகசுந்தரம்
எம்.ஜி.ஆர்
அஞ்சலி தேவி
எம்.என்.நம்பியார்
சித்தூர் வி.நாகையா
ஏ.கருணாநிதி
டி. பி.முத்துலட்சுமி
இசை எஸ்.தட்சிணாமூர்த்தி சினிமாடோகிராபி எம்.மஸ்தான்
ஜி. ஆர். நாதன்
எடிட்டிங் எல்.பாலு
மன்னர் வகை படங்களில் இந்த படமும் ஒன்று மணிப்பூரின் கைப்பாவை மன்னரை (புலிமூட்டை ராமசாமி) கவிழ்ப்பதற்கான வடிவமைப்புகளைக் கொண்ட ஒரு லட்சிய மந்திரி (மகாவர்மன்) தளபதி (உக்ரேசனார்) மற்றும் அவரது மெய்க்காப்பாளர் (பிரதாபன்) ஆகியோரின் பிரபலத்தால் ஒரு தடுமாற்றத்தைக் காண்கிறார் . பிரதாபனை கவர்ந்திழுக்க அவர் ஒரு இளம் பெண்ணை (மீனா தேவி) அனுப்புகிறார், ஆனால் அவள் அவனை காதலிக்கிறாள். பல திருப்பங்களுக்கு பிறகு, மகாவர்மன் பிரதாபனுடன் ஒரு அற்புதமான சண்டையில் அம்பலப்படுத்தப்படுகிறார்.
அன்று முதல் ஜனாதிபதியாக உக்ரேசனார் தேர்ந்தெடுக்கப்பட்டார், பிரதாபன் புதிய தளபதியாக நியமிக்கப்படுகிறார். கடைசியில் மணிப்பூரி இராச்சியம் இப்போது ஒரு குடியரசாக காட்டப்படுகின்றது..
படத்தின் நடிகர்கள் மற்றும் அவர்களின்
கதாபாத்திரம்
பிரதாபனாக
எம்.ஜி.ஆர்
உக்ரேசனராக
வி.நாகையா
மகாவர்மனாக
எம்.என்.நம்பியார்
ராஜாவாக
புலிமூட்டை ராமசாமி
வைராகியமாக
ஏ.கருணாநிதி
பாலாதேவாக
வி.கே.ராமசாமி
மோகனாக
கே.கே.சவுந்தர்
மீனா தேவியாக அஞ்சலி தேவி
கற்பகமாக எம்.சரோஜா
ஜெயலட்சுமி
எஸ். ஆர். ஜானகி
அங்கமுத்து
பூஞ்சோலை என முத்துலட்சுமி
நடனம்
குமாரி கமலா
அன்புடன்
படப்பை
ஆர். டி. பாபு...
-
[#கேட்காமலே #கொடுப்பவர்
பழம்பெரும் நடிகர் வீரப்பன் அவர்களின் அளித்து பேட்டியில் இருந்து:
#மக்கள்திலகம் முதலமைச்சராக இருந்த பொது, ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன். அப்போது
ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்தார்.
அவரிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள?'
என்று கேட்டேன்.
அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை. நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன்... ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன்... என்றார்!
சரி உட்காருங்க...! 'சின்னவர் வெளிய
வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்...
சிறிது நேரம் கழித்து எம்ஜிஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
"இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும்"
என்று சொல்லி விட்டு,காரில்
ஏறிச் சென்றுவிட்டார்.
அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
தவிப்புடன் நின்றார்.
"இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
சொன்னாருல்ல, மதியம் சாப்டுட்டு
போங்க " என்றேன்...
"நான் எப்படிச் சாப்பிடுவது..என்
குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
என்றார் அவர்.
'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்...
சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
எம்ஜிஆர் கோட்டையிலிருந்து வந்து
விட்டார்.
அந்த நடிகரிடம், மதியம் திரும்ப
எம்ஜிஆர் வெளியே புறப்படும்போது
அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
போங்க..என்றேன். "சரி.." என்றார்.
வெளியே வந்த எம்ஜிஆர் அவரைப்
பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார். அந்த
நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
மீண்டும் நின்றது. எம்ஜிஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
அவர் காருக்கு அருகில் சென்று சற்று தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
அவரும் காருக்கு மிக அருகில் போய்
நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
எம்ஜிஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
அவர் என்னருகே வந்து கவரைப்
பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
விட்டது. அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
எனக்குத்தான் அதிக சந்தோஷம்...
மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
சென்றிருந்த போது எம்ஜிஆரிடம்
கேட்டேன்...
"கஷ்டத்துல வந்த அந்த
நடிகரை சாப்பிடச் சொன்னீங்க, ஆனா
அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
கேட்காம போயிட்டீங்க...
திரும்ப மதியம்
வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க...
அந்த
நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு...
இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
வச்சு அனுப்புறீங்க... ஏன் அண்ணே
அப்படிச் செஞ்சீங்க...? என்று கேட்டேன்.
சில கணங்கள் என்னை அமைதியாகப்
பார்த்துவிட்டு அவர் சொன்னார்.
"எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
படுவார். அவரா கேட்டா கம்மியாத் தான்
கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
கொடுத்திடனும்..." என்றார்.
எனக்குத்தான் இப்ப கண்கலங்குச்சு.
அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
ஈகை இயல்பு பற்றியும் இருவேறுகருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.
அதனால் தான் அவர் இன்னும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்!...bpn
-
இரட்டையர்கள் சேகர் மற்றும் ஆனந்த்,(எம் ஜி ஆர்) அவர்களின் தாய் மங்களத்துடன் (பண்டரிபாய்) சேர்ந்து, தந்தை ராம்நாதன் (ராமதாஸ்) நாகப்பனால் (நம்பியார்) கொலை செய்யப்பட்டதைக் காண்கிறார், இது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடர குடும்பத்தை மெட்ராஸுக்குச் செல்லத் தூண்டுகிறது. ஆனால் சேகர் (அண்ணன் எம்ஜி.ஆர்) கொஞ்சம் தண்ணீர் எடுக்க ரயிலில் இருந்து இறங்கும்போது, ரயில் போய்விடுகிறது. நாகப்பன் தப்பித்து வரும் போது தண்டவாளத்தில் சேகரை கண்டு தூக்கி செல்கிறான். அதே மனிதன் தான் தன் தந்தையை கொன்றான் என்பது சேகருக்குத் தெரியாது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தன்னை "பாபு" என்று அழைக்கும் சேகர், ஒரு குற்றவாளி. நகரத்தில் வாழும் ஆனந்த் (தம்பி எம்.ஜி.ஆர்) ஒரு கிளப்-நடனக் கலைஞர், அவரோ பாபுவோ ஒருவருக்கொருவர் இருப்பதை அறிந்திருக்கவில்லை. ஒரு கொள்ளை சம்பவத்தின் போது, பாபு கடுமையாக காயமடைந்து மங்களத்தின் வீட்டில் தஞ்சம் புகுந்தாலும், அவளை தனது தாய் என தெரியாமல் அவள் மேல் ஒரு பாசம் வைக்கிறார்., ஆனால் நாகப்பன் (இப்போது பூபதி என்று அழைக்கப்படுகிறார்) இதைப் பற்றி அறிந்ததும், அவர் பாபுவிடமிருந்து பாசத்தை ஒழிக்க முயற்சிக்கிறார்.
மற்றொரு போலிஸ் என்கவுண்டரின் போது, பாபு மீண்டும் காயமடைகிறார், ஆனால் இந்த முறை பைத்தியக்காரத்தனமாகி, மறதி நோயாகவும் மாறுகிறார். டி. ஐ. ஜி. மோகன் (சுந்தர்ராஜன்)ஆனந்தைக் காண்கிறார், அவருக்கும் பாபுவுக்கும் இடையிலான ஒற்றுமையைப் பார்த்தபின், கும்பலின் அனைத்து ரகசியங்களையும் பெற்று அவர்களை கைது செய்ய பாபுவாக செயல்பட அறிவுறுத்துகிறார். ஆனந்த் ஒப்புக்கொள்கிறார், ஆனால் பின்னர் பாபு தனது சகோதரர் என்பதை உணர்ந்தார். இதை உணராத ஆனந்தின் காதலி ஜெயா (ஜே.ஜே) ஆனந்தின் பிரீஃப்கேஸில் நிறைய பணம் இருப்பதைக் கண்டு, உண்மையை அறியாத அவர், ஆனந் ஒரு குற்றவாளியாக மாறிவிட்டதாக நினைத்து, அவருடன் பேச மறுக்கிறார். மங்களமும் இதை அறிந்து, மனம் உடைந்து போகிறது. இருப்பினும், மங்கலமும் ஜெயாவும் ஆனந்தின் உண்மையை அறிந்தவுடன் விரைவில் சமரசம் செய்து கொள்கிறார்கள், மேலும் பாபு அவருடைய சகோதரர் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
ஆனந்த், பாபுவாக ஆள்மாறாட்டம் செய்கிறார் என்பதை பாபுவின் காதலி ஆஷா (ராஜ ஶ்ரீ) கண்டுபிடித்தார், ஆனால் அவர் அவளிடம் சரணடைந்து பாபுவின் மருத்துவ நிலை குறித்து விளக்குகிறார், பின்னர் தன்னை பாபுவின் சகோதரர் என்று வெளிப்படுத்துகிறார். ஆஷா அவரை மன்னிக்கிறார், பின்னர் இருவரும் நாகப்பனையும் அவரது ஆட்களையும் தோற்கடிக்க அணிவகுக்கின்றனர். ஆனந்தைப் பற்றி அறியும்போது அவரைக் கொல்ல பாபு பின்னர் சிறையிலிருந்து தப்பிக்கிறான், ஆனால் ஜெயாவால் ஆனந்த் தனது சகோதரன் என்று அறிகிறான். ஆனால் பாபு இதை நம்பவில்லை, ஜெயாவைக் கடத்துகிறான். பின்னர் அவரை மங்களம் தடுத்து நிறுத்துகிறார், அவர் தனது மகன் என்றும் ஆனந்த் அவரது சகோதரர் என்றும் உணர வைக்கிறார். நாகப்பன் தனது தந்தையை கொன்றதை நினைவில் கொண்டு, நாகப்பனை தோற்கடிக்க ஆனந்த் உடன் இணைகிறார், பின்னர் கைது செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து, பாபு "சேகர்" ஆகத் திரும்பி, தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைகிறார்.
அருமையான பாடல்கள் கொண்ட அற்புத திரைப்படம் .நாகேஷ் அவர்கள் கிழவி வேடத்தில் வந்து வி.கே.ராமசாமியுடன் பண்ணும் காமெடி கலாட்டா ஹைலைட்.........Sr.Bu
-
#புரட்சித்தலைவர் கொடுங்கோலன் ஜெயவர்த்தனே-வுக்கு விடுத்த தில்லான எச்சரிக்கை..!
தமிழக முதல்வர் #எம்ஜிஆர் 1983-ஆம் ஆண்டு ஆகஸ்டு 30-ஆம் தேதி கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.
"தமிழர்கள் கட்டுப்பட்டிருக்கிறார்கள். கட்டுண்டு இருக்கிறார்கள். ஜெயவர்த்தனே தயவு செய்து தமிழகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிட வேண்டாம்’ என்று மட்டும் இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு,
‘இருப்பது ஓர் உயிர் தான், போவதும் ஒருமுறைதான்’ என்ற அறிஞர் அண்ணா கூறியதை தெரிவித்துக் கொள்வேன்.
'ஈழத்தில் நடைபெறுகின்ற இனப்படு கொலை காரணமாகத் தமிழகத்தில் உள்ள ஐந்துகோடி தமிழர்களும் சீறிப்பாயக்கூடிய நிலைமையை ஜெயவர்த்தனே நிச்சயமாக ஏற்படுத்தக் கூடாது' என்று தமிழக முதல்வர் என்ற முறையிலும் அனைத்திந்திய அண்ணா தி.மு.கவை நிறுவியவன் என்ற
முறையிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#மக்கள்திலகத்தின் இந்த அறிக்கை, எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத
துணிச்சலை பறைசாட்டியது...
சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நம் தலைவர் ஹீரோதான்..........Rmh
-
அள்ளிக்கொடுத்த எம்ஜியாரும்...கிள்ளிக்கொடுத்த கருணாநிதியும்...
எனது விளம்பரப்படங்களுக்கு புரடக்*ஷன் மேனேஜராக பணியாற்றியவர் மறைந்த எனது நண்பர் பாகனேரி ராஜேந்திரன்.அவர் சொன்ன தகவல் இது...
ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர். திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர். எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம். இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்... எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.
தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து... தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார். கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு... நான் கல்யாணத்துக்கு வந்தா...வரவேற்ப்பு,கட்சிக்காரனுக்கு சாப்பாடு அது..இதுன்னு எக்கச்சக்கமா செலவு வரும்.
நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி....என தனது நரி சிரிப்பை உதிர்த்து இருக்கிறார். .
உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர். பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர். "வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்..." என இழுத்திருக்கிறார்.
"அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம். அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்..." என தயங்கியிருக்கிறார்.
"நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு.." என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.
முதல்வர் எம்ஜியாரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம். எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர்.
காரை நிறுத்தி அருகில் அழைத்து....
"இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க... கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....'
-என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.
மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு. உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.
வந்தவர்களை வரவேற்று...
"சாப்பிட்டீங்களா... என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?' என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.
ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...
"அந்தக்கட்சியிலேயே இரு....
நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி..." என வாழ்த்தி இருக்கிறார் எட்டாவது வள்லல்.
ஊருக்கு வந்தவர்... திமுகவிலிருந்து விலகி...
அதிமுகவிலும் சேராமல் வாழ்ந்து... மறைந்து போய் விட்டார்....Baabaa
-
நிலைத்து நிற்கும் புகழ் மன்னர்
நீடித்து நிற்கும் பெருமைக்குரிய பேரரசர்
அழியாத புகழின் அதிபதி பூலோக சக்கரவர்த்தி
மக்கள் அனைவரும் இறைவனாக கடவுளாக நம்பிக்கையுடன் போற்றி வணங்கப்படுகிற ஒரேயொரு தமிழர்களின் உண்மையான தலைவர் பெருந்தகை மக்கள் திலகம்
கிட்டத்தட்ட சுமார் 100/ ஆண்டுகளாக தொடர்ந்து அனைவரது இதயத்திலும் பேச்சிலும் மூச்சிலும் எழுத்திலும் கலந்து நிறைந்து நிற்கும் ஒரேயொரு திருநாமம் உண்டு என்றால் அது எம் ஜி ஆர் என்ற புனித பெயர்தான்
தினம் தோறும் அனைவராலும் உச்சரிக்க படுகின்ற ஒரேயொரு திருநாமம் எம் ஜி ஆர் என்ற புனிதமான தெய்வீக திருப்புகழ் பெற்ற பெயர் தான்
100/ ஆண்டுகள் என்ன 1000/ ஆண்டுகள்
என்ன
ஆண்டுகள் ஆயிரக்கணக்கில் ஆனாலும் அழியாத புகழின் அதிபதி பேரரசர் வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான்
பொன் மனம் கொண்ட வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான தெய்வீக நல்லாசி களுடன்
எனதருமை நண்பர்கள் அனைவருக்கும் இனிதான நல் அழகிய இளம் காலை பொழுது வணக்கம் அன்பர்களே
எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் என்றும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்
என்றும் என்றென்றும் அன்புடன் நன்றியுடன் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் கோடானுகோடி ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளில் நானும் ஒருவன்✌️.........smn