http://i1170.photobucket.com/albums/...psc5f4d315.jpg
Printable View
கன்னிகாபுரம் வெங்கடேஸ்வரா டெண்ட் கொட்டகையில் குமரிக்கோட்டம் ஒரு வாரம் ஓடி சாதனை. வெளியூர் சென்றுவிட்டதால் போட்டோ பதிவு எடுக்க முடியவில்லை
http://i57.tinypic.com/illfyp.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
எ னக்குள் எம்.ஜி.ஆர்.!’ எனும் இந்தத் தலைப்பு எகரத்துக்கு எகரம் என்று மோனை கருதி மொழிந்ததல்ல.
என்னுள் எம்.ஜி.ஆர். உண்மையிலேயே உறைந்திருக்கிறார்!
என் கழுத்துக்கு வந்த மாலையெல்லாம் என் எழுத்துக்கு வந்தவைதாம்; ஆயினும், அவ் எழுத்துகளுக்கு ஏற்றமும் ஊற்றமும் அவை எம்.ஜி.ஆர். நாவில் ஏறி அமர்ந்ததால்தானே!
இவ் திருவரங்கத்து இளைஞன் மேல் திரையரங்கத்தின் புகழ் வெளிச்சம் பாய்ச்சிய புண்ணியவான் –
அதுவும் கண்சிமிட்டும் நேரத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியவன் –
சத்தியபாமாவின் குடல் விளக்கம் செய்ய வந்த உத்தமபுத்திரன்!
எம்.ஜி.ஆர். மாட்டு எனக்குள்ள கடப்பாடு காரணமாக மட்டும் –
அவரை நான் என் உள்ளம் பூராவும் அப்பியிருக்கவில்லை; உடனிருந்து அவரோடு உரையாடிய காலங்களில், கண்டு கொண்டேன் அவர் பட்ட காயங்களை.
அந்த ரணங்களால் அவர் ரவுத்திரம் பழகவில்லை; மாறாக – ‘பூமியை மிஞ்சும் பொறையை’ப் பழகினார். தன்னுள் கனன்ற கனலைக் கொண்டு அவர் தைரியச் சோறு வடித்தார்; புயலில் விழாத புல்லாகிப் பொழுதுதோறும் பொழுதுதோறும் – மெல்ல மெல்ல நின்று நிமிர்ந்து கிளை பரப்பி ஒருநாள் நெடு மரமாகிப் பூச்சொரிந்தார்!
கொழும்பிலிருந்து கோட்டை வரை – எம்.ஜி.ஆர். எதிர்கொண்ட – Hurdles; Obstacles – ஒன்றா இரண்டா ஓதி முடிக்க?
‘ஆனைகவுனி’ எனும் வடசென்னையில் உள்ள இடத்தில் –
அவர் தனது தாயொடும் தமையனொடும், நாள்களை நகர்த்தி பட்டபாடுகளை என்னிடம் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது வரலாறு – எனக்கொரு விழுமிய கருத்தைப் ‘பயில்; பயில்!’ என்று பாடமாக போதித்தது.
அது யாதெனில் –
ஒருவன், ஆளாண்மை மிக்கவனாயினும் தோளாண்மை மிக்கவனாயினும் – அவனுள் ஒரு தாளாண்மையில்லையேல் – வாழ்க்கை வயலில் அவன் வேளாண்மை செய்ய ஏலாது!
எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்!
நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார் திரு.கந்தசாமி முதலியார். அவர் திரு.எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘சதிலீலாவதி’ கதையை வாங்கிப் படமெடுத்தார்.
‘சதிலீலாவதி’யில் எம்.ஜி.ஆர். ஒரு சப்–இன்ஸ்பெக்டராக வருகிறார்.
பின் –
‘பிரகலாதா’வில் ஒரு சிறிய வேடம்.
பின்
‘சாலிவாகனன்’ படத்தில் வில்லனாக வருகிறார்.
இந்தப் படத்தில் திரு.ரஞ்சன் கதாநாயகன். ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு அற்புதமான கத்திச் சண்டை அந்தப் படத்தில் உண்டு.
அதில் – எம்.ஜி.ஆர். Risk எடுத்துக் கத்தியைச் சுழற்றியதில், பெரும் புகழ் அவருக்கு வரக்கூடும் என்ற காழ்ப்பின் காரணமாக –
அந்தக் காட்சியின் நீளம், அதுவும் எம்.ஜி.ஆர். பங்கு பெறும் காட்சிகள் குறைக்கப்படுகிறது!
பிறகு –
தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்த ‘அசோக்குமார்’ படத்திலும்; ‘ராஜமுக்தி’ படத்திலும் சிறிய வேடங்களில் வருகிறார். இந்த வேடங்களை அவர் பெறக் காரணமாக இருந்தவர் டைரக்டர் திரு.ராஜாசந்திரசேகர் அவர்கள். இவர், திரு. டி.ஆர்.ரகுநாத் அவர்களின் தமையனார்.
ஜூபிடர் ‘அபிமன்யு’வில் – அர்ஜுனனாக வருகிறார்!
ஜூபிடர் ‘ஸ்ரீமுருக’னில் – சிவதாண்டவம் ஆடுகிறார்!
ஜூபிடர் ‘ராஜகுமாரி’யில் தான் கதாநாயகனாகிறார். பிறகு
‘மருதநாட்டு இளவரசி’;
‘மந்திரிகுமாரி’;
‘மலைக்கள்ளன்’ – இப்படித் தொடர்ந்து பெரும் பெயர் பெறுகிறார்!
‘மலைக்கள்ள’னில் எம்.ஜி.ஆர். புகழின் உச்சிக்குப் போகிறார்.
‘நாடோடி மன்னன்’ மூலம் – இனி, உயர உயரமில்லாத உயரத்தில் போய் உட்காருகிறார்!
- காவியக் கவிஞர் வாலி .
தலைவரின் வெற்றி சின்னம். இந்த சின்னம் தான் இன்றைக்கு உள்ள நாடாளுமன்ற , சட்ட மன்ற உறுப் பினர்களாக மாற்றியது . ஏன் நம் முதல்வரை முதல்வர் ஆக்கியது .
http://i1170.photobucket.com/albums/...psb8d64518.jpg
மக்கள் திலகம் எம்ஜியாரிடம்
விருது பெறும் ' மாண்டலின் ' சீனிவாசன் !
http://i60.tinypic.com/1zlggea.jpg