'ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்' வைர வரிகள் (ஞான ஒளி) என் (!) காவியத்தில் அல்லவா! 'உயர்ந்த மனிதன்' அல்லவே!
'ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்' வைர வரிகள் (ஞான ஒளி) என் (!) காவியத்தில் அல்லவா! 'உயர்ந்த மனிதன்' அல்லவே!
அன்புச் சகோதரி வனஜா,
தாங்கள் சொல்ல வந்தது ஒரு பாடல் இணைத்தது வேறு பாடலா அல்லது இப் பாடலுக்கும் பொருந்தக் கூடிய வரிகள் என்ற அடிப்படையில் தந்துள்ளீர்களா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தங்கள் விருப்பம் நம் அனைவரின் விருப்பமும் கூட என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உள்ளங்கையில் அந்த ஊன்றுகோலை செங்குத்தாக வைத்துக் கொண்டு பாடிக் கொண்டு ஒயிலாக நடந்து கொண்டு கண்களில் அந்த எண்ண ஓட்டத்தைப் பிரதிபலித்துக் கொண்டு ... எழுதுவதற்கே மூச்சு வாங்குகிறதே... இத்தனையையும் செய்து காட்டிய மேதையை என்னென்பது ... நிச்சயம் காலத்தால் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்..
நன்றி
இன்றைய சூழ்நிலையில் நம் நெஞ்சில் இக்காட்சி நிழலாடுவதைத் தவிர்க்க முடியுமா?
http://youtu.be/ul9Xvjt83eI
டியர் வாசுதேவன் சார்,
வெள்ளை ரோஜா வெற்றி விவரம் சூப்பர்.. அதுவும் 100 வது நாள் விளம்பரம் அட்டகாசம். பாராட்டுக்களும் நன்றியும்
'என் விருப்பம்' (1)
படம்:உயர்ந்த மனிதன்
பாடல்: வெள்ளிக்கிண்ணம்தான்... தங்கக் கைகளில்...
சகோதரி வனஜா அவர்கள் தேர்ந்தெடுத்த 'உயர்ந்த மனிதன்' படத்தில் வரும் 'இந்த' காவியப் பாடல்தான் நடிகர் திலகம் பாடல்களில் என்னுடைய முதல் விருப்பமான பாடல். ஆம். காலம் அழிக்க முடியாத காவியப் பாடல்.
வெள்ளிக்கிண்ணம் தங்கக் கைகளில் ஏந்தி முத்துப் புன்னகையை அந்தக் கண்களில் தாங்கி வரும் வைரச்சிலை நாயகி பக்கத்தில் இருக்க எம் தங்க நாயகர் நளினமாக காதல் சரசம் செய்யும் பால்சுவைப் பாடல். இந்தப் பாடல்தான் என் முதல் விருப்பமான பாடல். TMS வரிகளை முடிக்க வரிகள் முடியுமுன்னரே ஆரம்பிக்கும் சுசீலாவின் சுந்தர ஹம்மிங்கிற்கு ஈடும் இல்லை இணையும் இல்லை. எம் தலைவர் நடந்து காட்டும் நடையழகும், பாடலின் முடிவில் நாயகியின் இடது கையை அழகாக வாங்கி அழைத்துச் செல்லும் பாங்கழகும் பார் புகழ்வதே!
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=F_6iBSY8yuw
அரசியல் சாராமல் இதுவரை இருந்து வந்த இந்த கமல் என்ற நல்ல கலைஞனை ஒரே நாளில் அரசியல் இப்படி வருந்தச் செய்து விட்டதே! இதுதான் அரசியல். இதற்குப் பெயர் தான் அரசியல். அவரின் அன்பு ரசிகர்கள் ஆசியினாலும், தன்னுடைய குலையாத அசாத்திய தன்னம்பிக்கையாலும் கமல் நிச்சயம் மீண்டு வருவார். விஸ்வரூபம் விஸ்வரூப வெற்றிபெற வாழ்த்தும்
வாசுதேவன்.
அமர தீபமாய் எங்கள் நெஞ்சில் ஒளி வீசும் எங்கள் குல தெய்வம் நடிகர் திலகம். (ராஜா ராணி)
http://sim.in.com/5088aa5c0824d88171...357d_ls_lt.jpghttp://img.youtube.com/vi/zz48wuiYr1M/0.jpg
டியர் வாசுதேவன் சார்,
வெள்ளிக்கிண்ணத்தில் ஏந்தி தங்கள் விருப்பத்தை விருந்தாய் பரிமாறி விட்டீர்கள். மிக்க நன்றி. என்ன ஸ்டைல் ... சூப்பர் பாட்டு ... மெல்லிசை மன்னருக்கும் வாலி, டி.எம்.எஸ்., சுசீலா, வாணிஸ்ரீ மற்றும் திரைக்குப் பின் கலைஞர்கள் என்று அனைவருக்கும் பாராட்டுக்கள்.
நடிகர் திலகம் என்ற தீர்க்க தரிசியின் ஆசியுடன் இச்சிக்கலில் இருந்து கமல் அவர்கள் வெளிவருவார் என்பது திண்ணம். எந்த அரசியல் நடிகர் திலகத்திற்கு இடையூறாக இருந்ததோ அதே நிலைமையே இப்போது கமலுக்கும். இந்த கஷ்டங்களிலிருந்து அவர் மீண்டு வந்து விஸ்வரூபம் படம் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்.
RARE IMAGES அபூர்வ நிழற்படங்கள்
http://i1146.photobucket.com/albums/...aps/rare03.jpg
என்ன ஒரு GRACE ....
டியர் முரளி சார்,
இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மேன்மேலும் சிறப்புக்களும் எல்லா நலன்களும் பெற்று வளமாக வாழ உளமார வாழ்த்துகிறேன். தங்களுக்கு பிறந்த நாள் பரிசாக நடிகர் திலகத்தின் மற்றொரு அபூர்வமான படம்
http://i872.photobucket.com/albums/a...psfedaa1e6.jpg
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
8. PEMBUDU KODUKU పెంబుడు కొడుకు
http://www.kinema2cinema.com/data201...bs/pempudu.jpg
RELEASED ON : 13.11.1953
CAST: SIVAJI GANESAN (brief appearance), S.V. RANGA RAO, SAVITHIRI, PUSHPAVALLI, L.V. PRASAD AND OTHERS
MUSIC: S. RAJESWARA RAO
DIRECTION: L.V. PRASAD
PRODUCED BY: A.V. SUBBA RAO
SPECIAL FEATURES
ORIGINAL VERSION OF PETRA MANAM, NADIGAR THILAGAM'S TAMIL FILM
BOTH THE WIVES OF GEMINI GANESAN - SAVITHIRI AND PUSHPAVALLI - CO-STARRED IN THIS FILM
From : http://www.kinema2cinema.com/kinema-...review-29.htmlQuote:
Pempudu Koduku was the first film to be made under Prasad Art pictures. Though the film was not a huge commercial success, it had the elements to attract all class of audience. S V Ranga Rao and Savitri's performance in this film was appreciated by everyone. The major highlight of this film was that both the wives of Gemini Ganeshan (Savitri and PushpaValli) were co stars in this film. Check out the review written in Kinema magazine.
Mr Vasudevan Sir,
Thanks for uploading the super song.
முரளி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
வனஜா, வாசுதேவன் அவர்களின் விருப்பத்தேர்வுகள் அசத்தல்...
கருப்புவெள்ளையில் காந்தர்வரின் அரியக் கோலங்கள்.
கண்கள், பெம்புடு கொடுகு - தகவல்கள்...
அள்ளித்தரும் சுரங்கம்..-இராகவேந்திரருக்கு நனறி..
------------------------------------------------------------------------------------------
என் விருப்பம்:
அழகுக் கரங்கள்..
நடிகர்திலகத்தின் முக வசீகரம் அதீதமானது. அவர் பக்கத்தில் யார் இருந்தாலும் பார்க்கவிடாமல் ஈர்க்கும் அதிசயக் காந்தம் அது..
தாடிவைக்காமல் கொஞ்சம் நீலம் காட்டும் கன்னங்களும்..
நாட்கணக்கில் ஒரே நீலவண்ண உடையும் பக்கவாத்தியங்களாக
நம்மவர் முகமும் விழிகளும் வாசிக்கும் மன ஆவர்த்தனம்....
கப்பல் கவிழ்ந்தவனின் சோகம் பாருங்கள்..
இரவிக்குமார் என்ற சூரியனே இருண்ட கொடுமையைப் பாருங்கள்...
கலங்கிய விழிநீர் கரையைக் கடக்காமல் வைரச்சீலையாய் போர்த்திய விழிமின்னல் வீச்சைக் காணுங்கள்..
ஆனந்தபவனத்தை அவுட் ஹவுசுக்குள் அடக்கிய விதியைக் கேளுங்கள்...
பாவனை இனிப்பைத் தின்னும் மேல்சிரிப்பைக் கிழிக்கும் சோகத்தைப் பாருங்கள்..
அறிவுக்கு நெற்றியையும்
பாசத்துக்கு நெஞ்சை நோக்கியும்
பார்த்தனுக்கு செங்குத்தாய்
கடலுக்கு விரிந்த சிறகாய்
கலங்காததற்கு அலரும் தாமரையாய்
விலகுவதற்கு குளத்தோர அலையாய்
தலைவனின் அழகுக் கரங்கள் காட்டும் அபிநயங்கள்..
பத்மா சுப்ரமணியமே பொறாமைப்பட்ட தவப்புதல்வரின் கரநடங்கள்..
மொழிபுரியாதவரும் பொருள்புரியச்செய்யும் நடிகர்திலகம் உடல்மொழி..
இந்த அழகுக்கரங்களுக்கு தனிமரியாதை அளிக்க
அந்தக் காந்த முகத்திலிருந்து சற்றே மனம் விலக்கி முயலுங்கள்...
http://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ
Nadigarthilagam Portrait Opening Function at INTUC Office Tirunelveli on 28th January 2013 (Press Coverages)
http://i1234.photobucket.com/albums/...ps674ea124.jpg
http://i1234.photobucket.com/albums/...ps322e4ed1.jpg
http://i1234.photobucket.com/albums/...ps54ac4e57.jpg
Ananda Vikatan - Pokkizham - 06-02-2013
http://i1234.photobucket.com/albums/...psb83e4223.jpg
டியர் காவிரிக் கண்ணன்Quote:
தலைவனின் அழகுக் கரங்கள் காட்டும் அபிநயங்கள்..
பத்மா சுப்ரமணியமே பொறாமைப்பட்ட தவப்புதல்வரின் கரநடங்கள்..
தாங்கள் எவ்வளவு தேர்ந்த கவிஞர் அறிஞர் என்பதற்கும் எந்த அளவிற்கு கலையையும் கலைஞர்களையும் நேசப்பவர் என்பதற்கும் அதை மிக நன்கு ரசிக்கத் தெரிந்த ரசிகர் என்பதற்கும் மேற்கூறிய வரிகளே சாட்சி
உளமார்ந்த பாராட்டுக்கள்
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது
கையளவே ஆனாலும் தயங்க மாட்டேன்
பிறவிக் கலைஞர் நடிகர் திலகம் என்பதற்கு மிகச் சிறந்த சான்றான படம் அவன் தான் மனிதன். 175 என்கிற எண்ணுக்கு மிகப் பெரிய அளவில் பெருமை சேர்த்த படம், நடிப்பு. அவன் தான் மனிதன் படம் முடிந்த பிறகு ஒரு சில நாட்களுக்கு அந்த hangover ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். இதுவும் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்த படம். சாந்தியில் பால்கனி வகுப்பிற்கு போட்டி அதிகம் இருக்கும். காரணம் ரசிகர்கள் கூடை கூடையாக பூக்களைப் பொழிவதற்கு சௌகரியமாக இருக்கும் என்பதால். புரொஜக்டரின் ஒளியில் அந்த பூக்கள் ஜொலிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
நன்றி
கண்ணன் சார்,
அற்புத நடையிலே 'ஆட்டுவித்தால் யாரொருவர்' பாடலைப் பற்றி எழுதி மனதை இனம் புரியா உணர்வால் ஆட்டுவித்து விட்டீர்கள். அற்புதம்.
டியர் சந்திரசேகரன் சார்,
Ananda Vikatan - Pokkizham - 06-02-2013 புகைப்படம் அருமை. நன்றி!
Nadigar thilagam with Ilayaraja.
http://i1087.photobucket.com/albums/...pscfc89baf.jpg
Exclusive
சமீபத்தில் வெளி வந்த 'Life of Pie' ஆங்கிலப் படத்தில் நமது நடிகர் திலகத்தின் 'வசந்த மளிகை' போஸ்டர் இடம் பெற்றுள்ள காட்சி.
http://i1087.photobucket.com/albums/...3ad58f7d3d.jpg
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
9. MANIDANUM MIRUGAMUM மனிதனும் மிருகமும்
http://i1110.photobucket.com/albums/...perStill-1.jpg
Released first on :04.12.1953
அரிதான விளம்பர நிழற்படங்கள் உவயம் ஆவணத் திலகம் பம்மலார்
சுதேசமித்ரன் : 28.11.1953
http://i1110.photobucket.com/albums/...laar/MM1-1.jpg
சுதேசமித்ரன் : 4.12.1953
http://i1110.photobucket.com/albums/...laar/MM2-1.jpg
சுதேசமித்ரன் : 11.12.1953
http://i1110.photobucket.com/albums/...laar/MM3-1.jpg
சுதேசமித்ரன் : 18.12.1953
http://i1110.photobucket.com/albums/...laar/MM4-1.jpg
சுதேசமித்ரன் : 25.12.1953
http://i1110.photobucket.com/albums/...laar/MM5-1.jpg
டியர் வாசு சார்
life of pie ஆங்கிலப் படத்தில் வசந்த மாளிகை போஸ்டர் இடம் பெற்ற காட்சியின் நிழற்படத்தை இங்களித்து அசத்தி விட்டீர்கள்.
பாராட்டுக்களும் நன்றியும்
அன்புடன்
மறைந்த கர்நாடக இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி அவர்கள் இப்படத்திற்காக பாடி அந்தக் காலத்தில் சூப்பர் ஹிட்டான பாடல், இமய மலைச் சாரலிலே ... கேட்கக் கேட்க தெவிட்டாச இசையமுது. அவருடைய படங்களை இணைத்து இப்பாடலை வழங்கியுள்ளார்கள். அவருக்கு நன்றி. இப்படத்தினுடைய காணொளி இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
http://youtu.be/WidYUMWM0bc
http://i872.photobucket.com/albums/a...ps66c3a01f.jpg
மனிதனும் மிருகமும்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன் – பாரிஸ்டர் மாதவன்
கே. சாரங்க பாணி – பேராசிரியர் சேகர்
டி.ஆர். ராமச்சந்திரன் – பேபி
எம்.என்.கண்ணப்பா – சுந்தரம்
நந்தாராம் – தேவேந்திர பூபதி
டி.கே. சம்பங்கி – பாரிஸ்டர் ராமானுஜம்
டி.என். சிவதாணு – டைகர்
டி.எஸ். மாணிக்கம் – நடேசன்
ஈ.ஆர். சகாதேவன் – சாமி
மாதுரி தேவி – வாணி
எம்.என்.ராஜம் – ராணி
கே.எஸ். சந்திரா – மீனாட்சி
நடனம் – குமாரி கமலா
கதை வசனம் பாடல்கள் – எஸ்.டி.சுந்தரம்
சங்கீதம் – எம். கோவிந்தராஜுலு நாயுடு
பின்னணி பாடியோர் – எம்.எல். வசந்தகுமாரி, சி.எஸ்.ஜெயராமன், ஜிக்கி, ராதா ஜெயலட்சுமி, எம்.எம்.மாரியப்பா
ஸ்டூடியோ – ரேவதி
டைரக்ஷன் – கே.வேம்பு எஸ்.டி.சுந்தரம்
பாடல்களின் பட்டியல்
1. ஜெகம் யாவும் சுக வாழ்வின்
2. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
3. மோட்டாருக்கு பேட்டரி போல்
4. இன்பக் குயில் குரலினிமை
5. இமய மலைச் சாரலிலே – எம்.எல்.வசந்த குமாரி
6. காலமென்னும் சிற்பி செய்யும் - எம்.எல். வசந்த குமாரி
7. உன்னை நினைக்க நினைக்க
பாட்டுப் புத்தகம் பைண்ட் செய்யப் பட்டுள்ள படியால் ஓரத்தில் சரியாக ஸ்கேன் செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (11) ஜமுனா
ஜமுனாவின் அழகிய தோற்றம்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/jam0.jpg
நடிகர் திலகத்தின் முக்கியமான ஜோடிகளில் ஒருவர். தெனாலி ராமன், பொம்மைக் கல்யாணம், 'பொம்மல பெள்ளி' (தெலுங்கு) தங்கமலை ரகசியம், நிச்சயத் தாம்பூலம், மருத நாட்டு வீரன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்திற்கு இவர் இணை. அன்றைய நாட்களில் ஸ்லிம்மாக இருந்த ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர். இவரது முக ஜாடை வட இந்தியக் 'கனவுக் கன்னி' ஹேமமாலினி அவர்களின் முக ஜாடையை சற்றே ஒத்திருப்பது போல எனக்கு தோன்றும். அழகான அலட்டல் இல்லாத நடிகை. 'அமுதைப் பொழியும் நிலவாக' அமர்க்களம் புரிந்தவர். "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?" பாடலை நாம் கேட்கும் போதெல்லாம் நடிகர் திலகத்திற்கு பிறகு நம் மனதில் இவர் நிழலாடுவது தவிர்க்க முடியாத ஒன்று. 'பொம்மைக் கல்யாணம்' திரைப்படத்தில் வரதட்சணைக் கொடுமையால் அவதியுறும் நாயகியாக அற்புதமாக நடித்திருப்பார். 'நிச்சயத் தாம்பூல'த்திலும் ('நெற்றியிலே ஒரு குங்குமப் பொட்டு' பாடலை மறக்க முடியுமா?!) அருமையான ரோல். கணவன் சந்தேகத்தால் அவதியுறும் மனைவி கேரக்டர். இதிலும் முத்திரை பதித்திருப்பார். 'தெனாலி ராமன்' திரைப்படத்தில் அமைதியே உருவாக ராமனின் மனைவியாக நடித்திருப்பார். தெலுங்கில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகை. கர்நாடகத்தில் பிறந்த இவர் ஆந்திராவில் செட்டிலானவர். தெலுங்கில் சாவித்திரிக்கு ஈடான புகழ் பெற்றவர். தனது 14-ஆவது வயதிலேயே 'மாபூமி' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர். 'மிலன்' (1967) என்ற இந்திப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது இவருக்குக் கிடைத்தது. (சாவித்திரி அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்து இயக்கிய 'பிராப்தம்' படம் 'மிலன்' இந்தியைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் சந்திரகலா ஏற்று நடித்த பாத்திரத்தை இந்தியில் ஜமுனா செய்திருந்தார்).1980-இல் இந்திரா காந்தி அவர்களின் தயவால் எம்பியாக காங்கிரசிலும், பின் பிஜேபி யிலும் இருந்தவர். சமூக நலப் பணிகளில் ஆர்வம் உடையவர்.
'பொம்மைக் கல்யாணம்' திரைப்படத்தில் ஜமுனா
http://padamhosting.com/out.php/i140...h23m56s101.png
'தங்கமலை ரகசியம்' திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன்.
http://padamhosting.com/out.php/i888...h31m29s130.png
http://i1087.photobucket.com/albums/...%20-2/jam1.jpg
நடிகர் திலகத்தின் படங்களில் தொடர்ந்து நடித்ததால் சிவாஜி தரப்பு நடிகை என்ற மாபெரும் பெருமை பெற்ற நடிகர். இதை அவரே ஒரு பேட்டியிலும் சொல்லியிருக்கிறார். மற்றவர்களுடன் இவர் நடித்த படங்களில் 'குழந்தையும் தெய்வமும்' மற்றும் 'அன்புச் சகோதரர்கள்' படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஏவிஎம்மின் 'தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் கமலின் தாயாராக நடித்துள்ளார்.
'தங்கமலை ரகசியம்' திரைப்படத்தின் தலைவர், ஜமுனாவுக்கான அற்புதமான டூயட். ("இகலோகமே... இனிதாகுமே...")
http://www.youtube.com/watch?v=9kzJUIcahGE&feature=player_detailpage
'நிச்சயத் தாம்பூலம்' படத்தில் மறக்க முடியாத ("பாவாடை தாவணியில் பார்த்த உருவமா!")
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wi-G7fvgZ7g
'பொம்மைக் கல்யாணம்' திரைப்படத்தில் ("இன்பமே பொங்குமே!") அபூர்வமான அருமையான டூயட். ('தங்கச் சுரங்க'த்தின் தலைவரின் ஸ்டைலை 'பொம்மைக் கல்யாண'த்திலேயே காணலாம். தலைவர் என்ன அழகு! என்ன ஒரு dress sense!)
http://www.youtube.com/watch?v=ASDtDM6DZa4&feature=player_detailpage
'மருத நாட்டு வீரன்' படத்தில் மறக்க முடியாத ("பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா!!") அட்டகாசமான டூயட்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=T5iEm9kt7Gs
வாசு அவர்களே...
புதுவையில் தொடங்கும் லைஃப் ஆஃப் பை கதை வாசித்திருக்கிறேன்.
நீங்கள் அளித்த நிழற்படம் திரைப்படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது...
என் பங்குக்கு பிபிசி ஆவணப்படத்தில் நம் தலைவரின் கம்பீரமான இராஜராஜச் சோழரைக் காணுங்கள்..
http://www.youtube.com/watch?v=_QgFLDjKBAk
இராகவேந்திரர் அவர்களே
பம்மலாரும் நீங்களும் வழங்கும் அருங்கொடை இப்புதையல்கள்...
ஓரம் சரியாக ஸ்கேன் செய்ய இயலாமைக்கெல்லாம் மன்னிக்க வேண்டுவது தகுமா?
அரும்பணியைச் செவ்வனே தொடர்ந்து முடிக்க என் வாழ்த்தும் ஊக்கமும்..
மனிதனும் மிருகமும் தகவல்கள் சொல்லொணா நல்லுணர்வு தருகின்றன..
நம்மவரின் ஆரம்பகாலம் தற்போது கண்முன் விரிவதுபோல்...
வனஜா அவர்களே,
கருங்குயில் பூங்குன்றத்துக் கொலை ( மரகதம் படத்தின் மூலநாவல்) படப்பாடல் மூலம் என் காலைப்பொழுதை இனிமையாக்கினீர்கள்.. நன்றி..
ஒரு சூரியன்..
பல மலர்கள் அவனால் மலர்ந்தாலும்
தாமரைக்கும் சூரியகாந்திக்கும் காவிய அந்தஸ்து அவ்வுறவால்..
பத்மினி தாமரைதான்..
சூரியகாந்தி யாராம்?
வாணிஶ்ரீ?தேவிகா? ஜமுனா? சரோஜாதேவி?
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
7. "எல்லோரும் கொண்டாடுவோம்" படம்:- பாவ மன்னிப்பு (1961); பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன், நாகூர் ஹனீபா மற்றும் குழுவினர்; பாடல் ஆசிரியர்:- கவியரசு கண்ணதாசன்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- ஏ.பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்/சித்தூர் நாகையா மற்றும் குழுவினர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்னுடைய பாடல் ஆய்வினைத் தொடர சந்தர்ப்பம் அளித்த இறைவனுக்கு முதற்கண் நன்றி.
இந்தத் தொடர் நடிகர் திலகத்தின் புதிய வித்தியாசமான முன்னோடி முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுபடியும் குறிப்பிடுகிறேன்.
சுற்றிப் பின்னப்பட்ட சதி வலையால், குழந்தையாய் இருக்கும்போது, ஒரு இஸ்லாமியப் பெரியவரிடம் வளர்ந்து வரும் ரஹீம் (நடிகர் திலகம்) வரும் அறிமுகக் காட்சி. ஒரு பாடலோடு நடிகர் திலகம் அறிமுகமாகும் இந்தக் காட்சியை ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் தவற விட்டதில்லை. அந்த முதல் காட்சியிலேயே, ஒரு இஸ்லாமிய சகோதரர் எப்படி இருப்பார் என்ற இலக்கணத்தையும், ரசிகனின் கற்பனை மற்றும் எதிர்பார்ப்பினையும் நூறு சதவீதம் பூர்த்தி செய்திருப்பார். ஆக, தோற்றத்தின் மூலம் அந்தக் கதாபாத்திரத்துக்குள் முதலில் முழுமையாக நுழைந்து, பார்க்கும் ஒவ்வொருவரையும் அவருள் நுழைத்துக் கொண்டு விடும் (வழக்கம் போல்) நடிகர் திலகம், கையில் உள்ள மேளத்தை இலாகவமாகவும் தேர்ந்த கலைஞரைப் போலும் சர்வ சாதாரணமாக அதே நேரத்தில், உயிர்ப்புடனும் தட்டிக் கொண்டு துவங்கும் அழகு!
இந்தப் பாடலில் பொதிந்துள்ள அழகு வேறெந்தக் கலைஞருக்கும் கிட்டாதது.
இந்தப் பாடல் மற்றப் பாடல்களைப் போல வாயசைப்பு மற்றும் அதற்கேற்ற பாவனைகள் இல்லாமல், இசைக் கருவியையும் சேர்த்து இயக்கிக் கொண்டே பாட வேண்டிய கட்டாயம் கொண்ட பாடல்.
முதலில் வாயசைப்பு:-
“எல்லோரும் கொண்டாடுவோம்” என்று துவங்கி "அல்லாவின் பெயரைச் சொல்லி" எனும் போது கோரஸோடு பாடும் போது, சாதாரணமாக இருக்கும் அவரது வாயசைப்பு, க்ளோசப்பில், அவரை மட்டும் காண்பிக்கும் போது, தனியாக அவர் மட்டும் "அல்லாவின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி" என்று முடிக்கும் போது மட்டும் இலேசாக வாயசைப்பில் ஒரு அழுத்தம் பெறும். அந்த இடத்தில் அழுத்தம், பாடியவர் கொடுத்ததால், அந்த வரிகளுக்குத் தேவைப் படுவதால். அதுவும் மிகச் சரியாக க்ளோசப்பில் அவரது முகம் வரும் போது இது இன்னும் கூடுதல் கவனம் பெறுகிறது. அதனால், அந்த வரிகளுக்கே ஒரு வசீகரம் வருகிறது. இப்போது முதல் சரணம், "கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே... என்று கூறி “கல்லாகப் படுத்திருந்து” என்று அவர் நிறுத்த, "களித்தவர் யாருமில்லே" என்று கூட்டத்தில் ஒருவர் (நகைச்சுவை நடிகர் மற்றும் எழுத்தாளர் ஏ.வீரப்பன் அவர்கள்) சத்தமாக முடிப்பார். இப்படிப் போய் "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று முடியும் போது, இந்த முதல் சரணத்தில் மட்டும் ஒரு நார்மலான வாயசைப்பு இருக்கும். இரண்டாவது சரணம். தொகையறாவில் தொடங்கும். "நூறு வகை பறவை வரும்... ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆ..ஆ..ஆ" என்று முடிக்கும் போது ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய வாயசைப்பு. "முதலுக்கு தந்தை என்போம் முடிவுக்கு அன்னை என்போம்" எனும்போது அழுத்தம் தரும் வாயசைப்பு. மூன்றாவது சரணம். மறுபடியும் தொகையறாவில் தொடங்கும். "ஆடையின்றிப் பிறந்தோமே...ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ஒ..ஒ..ஒ.." என்று மறுபடியும் தேர்ந்த பாடகருக்குரிய வாயசைப்பு. "எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்" என்று முடிக்கும் போது அழுத்தம் கொடுக்கும் வாயசைப்பு.
அடுத்தது, முக பாவம்:-
பாடல் துவங்கும் போது, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று கூட்டமாகச் சேர்ந்து வரும் போது தெரியும், ஒரு இலேசான குதூகலம். அப்படியே மேளத்தை இசைத்துக் கொண்டே, பாடிக் கொண்டே, தந்தையாரை பார்த்து பாவத்திலேயே acknowledge செய்யும் அழகு. முதல் சரணத்தில் அந்த வரிகளின் பொதுவான கருத்துகளுக்கேற்ப சாதாரணமான (normal) பாவம். “வந்ததை வரவில் வைப்போம் செய்ததை செலவில் வைப்போம்” எனும் போது கொடுக்கும் அழுத்தம். இரண்டாவது சரணம் – “நூறு வகை பறவை வரும்……… ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா" என்ற தொகையறாவில் கொடுக்கும் ஒரு விதமான தெய்வீக பாவம். மூன்றாவது சரணம். "ஆடையின்றிப் பிறந்தோமே" என்று துவங்கி, "ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ" எனும் தொகையறாவில் இலேசாக கண் கலங்கி கண்களில் கண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டே பாடும் போது, பார்க்கும், ஏன் பாடல் இயற்றியவனே கண் கலங்கியிருப்பானே! உடனே, “எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்” எனும் போது சுதாரித்துக் கொண்டு, அந்த வரிகளுக்குத் தேவைப்படும் அந்த அழுத்தம் கலந்த சூளுரையைக் காண்பிக்கும் விதம்!
இப்போது, மேளம் தட்டும் அழகு.
பாடல் துவங்கி மேளம் அடிக்கத் துவங்கியவுடன், அவரது கைகள் மேளத்தில் நர்த்தனம் ஆடும் அழகு; லயம். அப்படியே போய், அந்தத் தாளம் முடிந்து, நாகைய்யாவைப் பார்த்துக் கொண்டே, அவரை acknowledge செய்து கொண்டே, தாளம் அழுத்தமாக முடியும் போது, அதே அழுத்தத்தைக் காட்டி முடித்து, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று துவங்கும் அழகு. முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசை மற்றும் தாள கதிக்கேற்ப இவர் மேளத்தைத் தட்டி கொண்டே இருப்பார். இசையும் தாளமும் முடிந்து முதல் சரணம் துவங்கும் போது, மேளத்திலிருந்து கையை எடுத்து, "கல்லாகப் படுத்திருந்து" என்று துவங்கும் போது, சரியாக மறுபடியும் தாளத்துடன் பாடி/தட்டிக் கொண்டே துவங்குவார். பாடிக் கொண்டே, "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று ஒவ்வொரு வார்த்தையின் அழுத்தமான தாளத்துடன் ஒன்றி மேளத்தை அழுத்தமாக அதே தாள கதியில் அடித்து/ பாடிக் கொண்டே முடித்து, மறுபடியும் அனு பல்லவி வேறொரு தாளத்தில் வலுவாகத் துவங்கும் போது, உடனே, அந்த தாள அழுத்தத்தை மேளத்தில் தட்டித் துவங்குவார். இந்த கையசைப்பை, ஒவ்வொரு முறை சரணம் முடிந்து அனு பல்லவி துவங்கும் போதும், சரியாகச் செய்திருப்பார். பாடல் நிறைவடையும் போது, கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தாளம் அந்த வலுவைக் குறைத்துக் குறைத்து முடியும் அழகை, தன்னுடைய விரல்களில் மிகச் சரியாகக் காட்டிக் கொண்டே முடிப்பார்.
ஆக, ஒரு பாடலுக்கு ஒரு மிகச் சிறந்த நடிகன் காட்டும், இரண்டு பாவங்களையும் - அதாவது, வாயசைப்பு, பாடும் வரிகளுக்கேற்ப பாவத்தை முகத்தில் காண்பிப்பது. இவற்றைக்காட்டியாகி விட்டது. எப்பேர்ப்பட்ட நடிகனும் இரண்டு விஷயங்களைக் கஷ்டப்பட்டு செய்து விடுவான். ஆனால், மூன்றாவதாக, ஒரு கருவியை இசைத்துக் கொண்டே வாயசைப்பையும், வார்த்தைகளுக்கேற்ற பாவங்களையும் சுருதி கொஞ்சமும் பிசகாமல் செய்வது பிரம்ம பிரயத்தனம். இது கூட உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக மிகச் சிலரால் முடியும்.
ஆனால், மேற்கூறியவை மட்டுமல்லாமல் பாடல் நெடுக, நடிகர் திலகம் அவரது பிரத்தியேக ஸ்டைலில் தலையை ஒருவாறு மிதமாக ஆட்டிக் கொண்டே பாடுவதும், அவ்வப்போது தந்தையாரையையும் மற்றவரையும் acknowledge செய்யும் விதமும்! எப்படி இந்த மனிதர் ஒரே நேரத்தில், இத்தனை விஷயங்களை, ஒன்றோடொன்று அழகாக இணைத்து, காட்சியையும், பாடலையும், வேறொரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார் என்பது இன்று வரை புரியாத புதிராகத் தான் இருக்கிறது.
இந்தப் பாடல் மற்றும் நடிகர் திலகத்தின் பல பாடல்கள் மற்றும் படங்கள்/காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் திரு முக்தா சீனிவாசன் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது. "சதை படர்ந்த அந்த முகத்தில் ஒவ்வொரு அணுவும் நடிக்கும், முகம் நடிக்கும்; முகத்தில் உள்ள முடியும் நடிக்கும்".
ஒரு படத்தில், பாடலில், எத்தனையோ நடிகர்கள் இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டே நடித்திருக்கிறார்கள். நான் மேற்கூறிய முதல் மூன்று பாவங்கள் - வாயசைப்பு, வார்த்தைகளின் அர்த்தங்களுக்கேற்ற பாவம், மற்றும் இசைக்கருவியையும் கூடவே பிசிறில்லாமல் வாசிக்க வேண்டிய கட்டாயம். இவைகளை கோர்வையாக, மிகச் சரியாக செய்தது மட்டுமல்லாமல், கூடவே ஒரு வித ஸ்டைலையும், சுற்றி இருப்பவர்களை கவனித்தல்/மற்றும் acknowledge செய்தல், இவைகளையும் கோர்வையாகச் செய்து, இந்தப் பாடலைக் காட்சிப்படுத்திய வகையில், இந்தப்பாடல் முன்னோடி மட்டுமல்ல. இனி வேறொருவரால் வெற்றிகரமாக செய்வதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகிறது.
இந்தப் பாடலின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அத்தனை கலைஞர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கோரஸ் பாடலில், கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சரியாகப் பங்களித்து பாடலை மேலும் ரசிக்கும்படி செய்திருப்பார்கள். இந்தப் பாடலில் தான் படத்தில் வரும் பிரதான பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் (ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் தேவிகா).
தொடரும்,
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
எல்லோரும் கொண்டாடும் இமயத்தின் இணையற்ற பாடலை எல்லோரும் கொண்டாடும் படி எழுதிய சாரதி சார் .. பாராட்டுக்கள். சரியான நேரத்தில் சரியான பாடல். எல்லாக் கலைஞர்களுக்கும் முன் உதாரணமாய் விளங்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு இன்று வரை எல்லோரும் கொண்டாடும் படி இருப்பதே சான்று. வாழ்க்கையின் எந்த சூழ்நிலைக்கும் அவர் படத்தில் விடை உள்ளது. உதாரணத்திற்கு தேவர் மகன். இன்று எப்படி பொருந்துகிறது.
பாவ மன்னிப்பு படத்தை மனதில் நினைத்து திரைக்கதை அமைப்பதே மத நல்லிணக்கத்திற்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். இப்பாடல் இன்றைய சூழலுக்கு எவ்வளவு பொருத்தமாய் உள்ளது.
பாராட்டுக்கள் சாரதி சார்.. மீண்டும் ...
டியர் சாரதி சார்
இன்றைய சூழலுக்கு மிக பொருத்தமான பாடல், மிக நுணுக்கமாக ஆய்வு செய்துள்ளீர்கள், நன்றி!
என் விருப்பம் My Choice
http://youtu.be/jJtEEZ_g6Tk
மரகதம் அல்லது கருங்குயில் குன்றத்துக் கொலை ... எஸ்.எம்.சுப்ய்யா நாயுடு அவர்களின் பிரபலமான படங்களில் ஒன்று. பாடல்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவை. சகோதரி வனஜா அவர்கள் மிகச் சிறந்த பாடலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். நடிகர் திலகம் பத்மினி இணையாய் நடித்து இலக்கிய மணம் வீசும் காதல் காட்சி நிறைந்த படங்களில் ஒன்று. கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு பாடல் ஒரு சிறப்பு என்றால் இப்போது நாம் காண உள்ள இப்பாடல் மேலும் சிறப்பு வாய்ந்தது. நெடுந்தகட்டில் இப்பாடல் இடம் பெறவில்லை என எண்ணுகிறேன். இப்பாடல் கிராமபோன் இசைத் தட்டில் இருபக்கமும் ஒலிக்கும். படத்தில் மேலும் அதிக நேரம் இடம் பெறும். காரணம், இடையிடையே நடிகர் திலகமும் பத்மினியும் பேசும் காதல் வசனங்களும் சேரும். ஆனால் இப்போது இணையத்தில் தரவேற்றப் பட்டுள்ள காணொளியில் வசனங்கள் இடம் பெறவில்லை. என்றாலும் அதற்கு வேலையின்றி இருவரும் விழிகளாலேயே பேசும் அழகைக் காணுங்களேன்.
எனதுள்ளம் இன்றல்லவோ தனியே
இன்புற்று அலைகின்றதே...
கனவில் நடப்பதைப் போல் காண்பதெல்லாம்
கணத்தில் மறையுதடி...
பாடலாசிரியர் கவியோகி சுத்தானந்த பாரதி என எண்ணுகிறேன்.
இப்பாடலில் டி.எம்.எஸ். அவர்களும் ராதா ஜெயலட்சுமி அவர்களும் தங்கள் குரல்களில் உண்மையிலேயே தேனைத் தடவியது போல் அவ்வளவு இனிமையினைத் தந்துள்ளனர்.
பார்க்கப் பார்க்க தெவிட்டாத தெள்ளமுதை
பருக ...
இந்த வரிகளில் நடிகர் திலகத்தின் விழிகளை கவனியுங்கள். அதே போல் ஓவியத்தையும் பார்த்துக் கொண்டு ஓரக் கண்ணால் காதலியையும் பார்த்து குறும்புடன் அவர் காட்டும் காதல் சுவை ...
பாருங்கள் ... கேளுங்கள் ...
ஒரு சின்ன புதிர் ...
தெய்வப் பிறவி படத்திற்கு முதலில் வைத்த பெயர் என்ன...
ஒரு க்ளூ வேண்டுமானால் .... இதோ...
அந்தப் பெயர், மூன்று வார்த்தைகள் கொண்ட நடிகர் திலகத்தின் ஒரு படத்தின் பெயரில் முதல் சொல்லாக அமைந்திருக்கும்.
Rare Info அபூர்வ தகவல்கள்
கௌரவம் -
ஒவ்வொரு சிவாஜி ரசிகர் நெஞ்சிலும் ஆழப் பதிந்து விட்ட இக் காவியம் வியட்நாம் வீடு சுந்தரம் எழுதி யூ.ஏ.ஏ.வின் நாடகக் குழுவால் கண்ணன் வந்தான் என்ற பெயரில் மேடை நாடகமாகப் புகழ் பெற்றது பலருக்கும் தெரிந்திருக்கும். இது படமாக்கத் திட்டமிட்டு பூஜை போட்டது என்று தெரியுமோ...?
1971ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி காலை சுமார் 7.30 மணி.