https://www.youtube.com/watch?v=TB0ZcDqwh0Y
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆரின் திரைப்படங்கள் 1987க்கு பிறகு நிகழ்த்திய முக்கியமான சாதனைகள் .
தூத்துக்குடி நகர்- சத்யா அரங்கில் தொடர்ந்து 100 வாரங்கள் மேல் மக்கள் திலகத்தின் பல படங்கள் திரையிடப்பட்டது .
சென்னை - சரவணா அரங்கில் தொடர்ந்து 100 நாட்கள் எம்ஜிஆர் பல படங்கள் திரையிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் திரையிடப்பட்ட படங்களில் அதிக அரங்குகளில் 25 நாட்கள் - 50 நாட்கள் ஓடிய படங்கள் .
நாடோடி மன்னன் .
அடிமைப்பெண் .
உலகம் சுற்றும் வாலிபன் .
எங்க வீட்டு பிள்ளை .
ஆயிரத்தில் ஒருவன் .
குடியிருந்த கோயில் .
வேட்டைக்காரன் .
ஒளிவிளக்கு
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
ரிக்ஷாக்காரன்
உரிமைக்குரல்
ஆயிரத்தில் ஒருவன் - தென்னகமெங்கும் 123 அரங்கில் திரைக்கு வந்தது ஒரு புதிய சாதனை .மேலும் பல வெளி நாடுகளிலும் திரையிடப்பட்டு சாதனை .
மக்கள் திலகத்தின் 80 படங்கள் இந்த 27 ஆண்டுகளில் பல ஊர்களில் பல முறை திரையிடப்பட்டுள்ளது .
மேலும் பல மக்கள் திலகத்தின் மறுவெளியீடு சாதனைகளை நண்பர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன் .
http://i1170.photobucket.com/albums/...ps79e07860.jpg
2007 deepavali
http://i1170.photobucket.com/albums/...ps43432fdb.jpg
secondweek in madurai
http://i125.photobucket.com/albums/p...ps753eb5f6.jpg
Kudieruntha Kovil.
Anbay Vaa 14.6.1991.
http://i125.photobucket.com/albums/p...ps0e880f5a.jpg
1970- MAKKAL VELLATHTHIL MAKKAL THILAGAM - SINGAPORE INTERNATIONAL AIRPORT
http://i60.tinypic.com/14ue70j.jpg
Ayirathil Oruvan release during our Thalaivar rule in Tamil Nadu.
http://i125.photobucket.com/albums/p...ps7b10a295.jpg
The re-release ads given by Olikirathu Urimaikural Editor B.S.Raju and MGR Devotee Venkat.
பழைய காவியங்கள் நவீனமயம் ஆகி இன்றைய தலைமுறையினருக்கும் சேரும் வண்ணம் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கி நடிகர் திலகத்தின் கர்ணன் மூலம் மதோன்னத வெற்றி பெற்ற திவ்ய நிறுவனம் திரு சொக்கலிங்கம் அவர்களின் அடுத்த முயற்சியான மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியம் இந்த வாரம் 50வது நாளை எட்டிபிடிக்கிறது.
திரை உலகத்தை பொருத்தவரை என்றுமே இருகண்களாக, இரு தூண்களாக என்றும் விளங்குபவர்கள் நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் என்றால் அது சத்திய வாக்கு !
இன்றும் இவர்கள் திரைப்படங்கள் தமிழகத்தின் பல அரங்குகளில் புதிய படங்களை விட அதிகம் பார்வையாளர்களை, மகசூலை பெறுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
சாதனை....சஹாப்தம் என்ற இரு சொல்லிற்கும் இரு வல்லவர்கள், நல்லவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும் ! அவர்கள் நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மற்றும் மக்கள் திலகம் திரு MG ராமசந்திரன் அவர்கள்.
வளர்க அவர்களது புகழ் !
2012இல் வெளிவந்து 152 நாட்கள் ஓடிய கர்ணன் திரைப்படத்தின் 50வது நாள் மற்றும் 2014இல் மார்ச் மாதம் வெளிவந்து வெற்றிகரமாக இந்த வாரம் 50வது நாளை தொடும் ஆயிரத்தில் ஒருவன் விளம்பரம் ஒரே அச்சாக அனைவரின் பார்வைக்கும் சமர்பிக்கிறேன் !
http://i501.photobucket.com/albums/e...ps8350192c.jpg
மக்கள் திலகத்திற்கு மிகவும் ராசியான மாதம் ''மே ''
மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் -1969 மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் -1973 இரண்டு படங்களும் மே மாதம் வெளிவந்து வெள்ளி விழா ஓடியது . மக்கள் திலகத்திற்கு ''பாரத் '' பட்டம்
கிடைப்பதற்கு காரணமான ''ரிக்ஷாக்காரன் '' படம் 29.5.1971 அன்று வெளியானது .
என் அண்ணன் - இன்று போல் என்றும் வாழ்க - பெரிய இடத்து பெண் - நினைத்ததை முடிப்பவன்
100 நாட்கள் ஓடிய படங்கள் .
மக்கள் திலகத்தின் இயக்கமான அண்ணா திமுக முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி
நாடாளுமன்ற இடைதேர்தல் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை புரிந்ததும் இந்த மே மாதத்தில் என்பது குறிப்பிடத்தக்கது .
மே மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
1.5.1969 அடிமைப்பெண்
5.5.1977 இன்றுபோல என்றும் வாழ்க
6.5.1948 அபிமன்யு
6.5.1960 பாக்தாத் திருடன்
9.5.1975 நினைத்ததை முடிப்பவன்
10.5.1963 பெரிய இடத்து பெண்
11.5.1973 உலகம் சுற்றும் வாலிபன்
19.5.1967 அரசகட்டளை
21.5.1970 என் அண்ணன்
27.5.1966 சந்திரோதயம்
29.5.1971 ரிக்ஷாக்காரன்
31.5.1952 என் தங்கை .
அடிமைப்பெண் - சிறப்புக்கள் -ஒரு கண்ணோட்டம்
மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் -1969- 46வது ஆண்டு துவக்கம் .
.
1. மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் -1958 பிறகு வந்த இரண்டாவது சொந்த படம் .
2. ஏராளமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் .
3. ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் பாலைவனத்தில் எடுக்கப்பட்டபடம் .
4. தமிழ் பட வரலாற்றில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் இதுவரை யாரும் எடுக்காத அளவு பிரமாதமாக படமாக்கப்பட்ட படம் .
5. ஆரம்ப காட்சியில் வலையில் மக்கள் திலகம் - அசோகன் மோதும் சண்டைக்காட்சி [ஒற்றைக்காலில் ] புதுமையானது .
6. மக்கள் திலகம் கூனனாக அறிமுக காட்சி முதல் சிறையிலிருந்து தப்பிக்கும் வரை பரப்பரப்பு காட்சிகள் விறுவிறுப்பானவை . மக்கள் திலகத்தின் கூன் வேடம் அருமை . குனிந்து நடந்து வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கும் .
7. முதன் முதலில் மக்கள் திலகம் குனிந்து நடந்து வரும் போது அவருடைய நிழலுக்கு கைத்தட்டல் கிடைத்த படம் .
8. நீர்வீழ்ச்சியில் சண்டை கற்று கொள்ளும் காட்சிகளும் பின்னர் தனது தாயாரை சந்திக்கும் காட்சி - உருக்கமாக பேசும் காட்சி - தாயில்லாமல் நானில்லை பாடல் காட்சிகளில் மக்கள் திலகம் ரசிகர்களின் அமோக வரவேற்பினையும் , கைத்தட்டலையும் அள்ளி செல்வார் .
9. காலத்தை வென்றவன் ...நீ பாடலில் ஒரு வெற்றிவீரராக காட்சி முழுவதும் நிமிர்ந்த
நடையோடு புன்னகையோடு பிரமாதமாக நடித்திருப்பார் .
10.ஊட்டி பகுதிகளில் வேங்கயனும் - ஜீவாவும் பிரியும் இடம்- பாலைவனத்தில் மாறு வேடத்தில் பாடும் ஏமாற்றாதே .....பாடல் மக்கள் திலகத்தின் நடிப்பும் -ஜெயாவின் நடனமும் சூப்பர்.
11.பவள நாட்டில் ராணி முன் மக்கள் திலகம் தனது பலத்தை நிருபிக்கும் அட்டகாசமான
வீரமான காட்சியில் மக்கள் திலகத்தின் உடற்கட்டும் - அழகிய தோற்றமும் ...உலகில் ஒரே அழகான நடிகர் யார் என்றால் அது நம் மக்கள் திலகம் .
12. ஆயிரம் நிலவே வா ... பாடல் கேட்கவே வேண்டாம் . பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும் மன்மதனின் பாடல் .
13.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ..... இந்த பாடல் படமாகப்பட்டவிதமும் காட்சிகளும் அருமை .
14. சிங்கத்துடன் மக்கள் திலகம் மோதும் காட்சி - மக்கள் திலகத்தின் வீரத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு .
15. ஆங்கில படத்துக்கு இணையாக வந்த மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படம்
http://i125.photobucket.com/albums/p...ps48e0d534.jpg
5.15 pm status.