Dear RKS,
தங்களுடைய சிறப்பான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!
Printable View
Dear RKS,
தங்களுடைய சிறப்பான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!
TWO SONGS - SAME SITUATION - TWO DIFFERENT PERFORMANCES
http://www.youtube.com/watch?v=YKo4y7B1iWI
http://www.youtube.com/watch?v=MNx6Oz7KDxc
எப்பேர்பட்ட விருப்பு வெறுப்பு பார்க்காமல் இந்த பாடலை பாருங்கள். நம்முடைய மனதை ஒரு சில வினாடிகள் பிசையும் இந்த பாடல் முடிவதற்குள்....
நடிகர் திலகத்தின் நடிப்பு என்பது அதுதான் ! அவர் தான் நடிகர் !
http://www.youtube.com/watch?v=ZMUfKlNYulM
Re-Cap of our Pammalar from Part-7.
1963-ம் ஆண்டு "குங்குமம்" திரைப்படம் வெளியான சமயத்தில் ["குங்குமம்" வெளியான தேதி : 2.8.1963], திராவிட முன்னேற்றக் கழக இதழ் ஒன்றின் கேள்வி-பதில் பகுதியில், கழகக் கண்மணி ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்வி:
"குங்குமம்" படம் பார்த்தீர்களா?
கேள்விக்கு பதிலளித்தவர் அப்படத்தைப் பற்றி தனது மனதில் பட்ட கருத்தையோ அல்லது நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிததோ அல்லது அப்படத்தில் இடம்பெற்ற மற்ற கலைஞர்களின் பங்களிப்பு பற்றியோ எழுதியிருக்கலாம். அது ஜனநாயக முறை. ஆனால் அவர் என்ன பதில் கொடுத்தார் தெரியுமா?! அதை அறிந்தால் அனைவருக்குமே அதிர்ச்சியாயிருக்கும் ! ஆம், அவர் இந்தக் கேள்விக்கு அளித்த பதில்:
"இந்தப் படத்துடன் சிவாஜி காலி" என்பது தான்.
நமது நடிகர் திலகம் இன்றும் வாழ்கிறார். என்றென்றும் வாழ்வார். பதிலளித்தவர் தான் காலியாகியிருப்பார்.
அவருடைய காலத்தில், அவர் வாழ வேண்டும் என அவரை நேசித்த ஒரு பெரிய கூட்டமும், அவர் வீழ வேண்டும் என அவரைக் கண்டு அஞ்சிய ஒரு கூட்டமும் முழக்கமிட்டு கொண்டிருந்ததது மறுக்க முடியாத உண்மை. அவரைப் பிடிக்காத கூட்டததையும் இரு வகையாகப் பிரிக்கலாம்.
ஒன்று - அவரது சினிமாக் கூட்டத்தை, செல்வாக்கைக் கண்டு ஒரு முகாமுக்கு அச்சம்
மற்றொன்று - அவரது அரசியல் கூட்டத்தை, செல்வாக்கைக் கண்டு இன்னொரு முகாமுக்கு பயம்.
இவை தவிர, கூட இருந்தே குழிப்பறிக்கும் துரோகிகளும் இருந்தனர். எண்ணிலடங்கா எதிர்ப்புகளையும், துரோகங்களையும் சமாளித்து ஜெயக்கொடி நாட்ட அவர் போட்ட எதிர்நீச்சல் இருக்கிறதே, அப்பப்பா.....அது அவரால் மட்டுமே முடியும். ஆரம்பமுதற்கொண்டே கலையுலகிலும் சரி, அரசியலிலும்
சரி, நடிகர் திலகம் எதிர்நீச்சல் போட்டேதான் சாதித்துக் காட்டினார். எந்த நிலையிலும், எந்த சமயத்திலும், எந்தவொரு காலகட்டத்திலும் அவர் தன்னை எதிர்த்தவர்களையோ, துரோகம் செய்தவர்களையோ பழி வாங்கியதில்லை. பழிவாங்கும் எண்ணம் கூட அவருக்கு கிடையாது. அப்பேர்ப்பட்ட ஒரு தெய்வப்பிறவி அவர்.
நமது நடிகர் திலகம் தி.மு.க.வை விட்டு வெளியே வந்தது மார்கழி 1954 [அதாவது 16.12.1954 - 13.1.1955] காலகட்டம். "பராசக்தி" [17.10.1952] வெளியான பிறகு சிவாஜி அவர்கள் சற்றேறக்குறைய இரண்டே கால் வருடங்களே கழகத்தில் இருந்திருக்கிறார். "பராசக்தி" முதல் "தூக்கு தூக்கி" [26.8.1954] வரை அவரது எல்லா பட விளம்பரங்களும், செய்திகளும் கழக ஆதரவு ஏடுகளில் வந்திருக்கிறது. அதன் பின்னர் அத்திபூத்தாற் போலத்தான் அவரது செய்திகளும், பட விளம்பரங்களும். கழகத்தை விட்டு அவர் கிளம்புவதற்கு முன்பு வெளியான படம் "எதிர்பாராதது" [9.12.1954]. எதிர்பாராத விதமாக அவர் திருமலை திருப்பதிக்கு திடீரென புனிதயாத்திரை செல்ல அதன் பின்னர் எதிர்பார்த்தது, அந்தப் பெருமாள் நினைத்தது நல்லபடியே நடந்தது. மொத்தத்தில் திரையுலகிற்கு அவர் வரக் காரணமும் பெருமாள், திரையுலகில் அவருக்கு சிறந்ததொரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததும் பெருமாள். கழகத்துக்குள்ளே குடத்துக்குள் நீராய் இருந்து வந்த அவர், புதுவெள்ளமாய்ப் பொங்கி "காவேரி"யாய்ப் பெருக்கெடுத்தார். ஆம், கழகத்தை விட்டு வெளிவந்த பின், வெளிவந்த படம் "காவேரி" [13.1.1955]. "காவேரி" 100 நாள் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. முந்தைய படமான "எதிர்பாராதது"வும் 100 நாள் வெற்றிப்படம். மேலும், 1955-ல் "மங்கையர் திலக"மும்[100 நாள்], "கள்வனின் காதலி"யும் சிறந்த வெற்றிப்படங்களாக வலம் வந்தன. "முதல் தேதி", "உலகம் பல விதம்", "கோடீஸ்வரன்" ஆகியவை Average ரகத்தில் ஓடியவை.
1956-ல், "அமரதீபம்", "பெண்ணின் பெருமை" இரண்டும் 100 நாள் பெருவெற்றிப்படங்கள். "நான் பெற்ற செல்வம்" நேரடியாக 100 நாள் ஓடவில்லை என்றாலும் வசூலில் சக்கை போடு போட்டது. பல ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. பகைமை பாராட்டாமல், ஏற்கனவே கழகத்தில் இருந்த போதே, ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்த படங்களான "ராஜா ராணி", "ரங்கோன் ராதா" ஆகிய படங்களை பிரச்னை ஏதுமின்றி முடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். "ரங்கோன் ராதா" வெற்றி பெற்றது. தி.மு.கழக முக்கியப் பிரமுகரான ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் கதை-வசனத்தில் "வாழ்விலே ஒரு நாள்" படத்தில் நடித்தார்.
1957-ல், "வணங்காமுடி" 100 நாள் பெருவெற்றிக்காவியம். அதற்கு அடுத்த நிலையில், "மக்களைப் பெற்ற மகராசி", "தங்கமலை ரகசியம்", "பாக்கியவதி" ஆகியவை அமோக வெற்றியைப் பெற்றன. "புதையல்" நல்லதொரு வெற்றிப்படம். "அம்பிகாபதி" ஓட்டத்தில் OK.
1958-ம் ஆண்டு குறித்து முரளி சாரும், 1959 பற்றி சகோதரி சாரதாவும் கூறி விட்டார்கள். அதற்கு பின்னர் அவர் சாதித்த விண்ணளந்த சாதனைகள் அனைவரும் அறிந்ததே.
அவர் மண்ணை விட்டு மறைந்து பத்து ஆண்டுகள் ஆகப் போகிற நிலையிலும் என்றென்றும் வான்புகழ் கொண்டு,
அவர் வாழ்கிறார் ! வாழ்கிறார் !! வாழ்ந்து கொண்டேயிருக்கிறார் !!!
அன்புடன்,
பம்மலார்.
செந்தில் சார்,
இதுவரை நீங்கள் நாகரிகத்தின் எல்லை மீறி ஒரு பதிவு கூட இட்டதில்லை. இப்போதும் அந்த ஒரு பதிவு கூட மற்றொரு நபர் உங்கள் மேல் தொடுத்த வார்த்தை தாக்குதலினால் வந்த எதிர் வினையே என்பதையும் புரிந்துக் கொள்கிறேன். ஆயினும் நமது திரியை பொறுத்தவரை அனைவரும் நடிகர் திலகம் என்ற ஒரு மனிதனின் மேல் வைத்த அன்பின் காரணமாகவே ஒரு குடையின் கீழ் கூடியிருக்கிறோம் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை. சம கல்வியறிவு படைத்தவர்கள்தான் இந்த திரியில் கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று சொன்னால் நானே உங்கள் முன் தேற மாட்டேன். காரணம் நீங்கள் முனைவர். நான் வெறும் பட்டதாரி மட்டுமே. எனவே இது போன்ற சிறிய அளவிலேனும் சிலர் மனதில் பேதம் தோன்றக் கூடிய வாக்கியங்களை தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
கோபால்,
உங்களின் ஒன்றரை பக்க நாளேடு ரசனையாக் இருந்தது. என் எழுத்து நடையும் களப் பின்னணியும் அழகாய் வடிவமைத்திருந்தீர்கள். அது போன்றே கார்த்திக் மற்றும் சாரதியின் நகல் பதிவுகளும். சாரதா நகல் மட்டும் சற்று முழுமையடையாதது போல தோன்றியது.
ஒருவரின் நடையைப் போலவே எழுதுவது என்பது கடினமான வேலை. அதை வெகு இலகுவாக கையாளும் உங்களை பார்க்கும் போது மீண்டும் அதே கேள்விதான் மனதில் எழுகிறது. இது போன்ற மற்றும் திருவிளையாடல் அலசல் போன்ற பதிவுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் எத்தனை ஆக்கபூர்வமாக இருக்கும்? இனி மேலாவது இதை மட்டும் செய்வீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்
ஆமாம், ராகவேந்தர் சார், வாசு மற்றும் சின்னக் கண்ணன் இவர்களை எல்லாம் ஏன் விட்டு விட்டீர்கள்?
dear Murali Sir. Grateful to you for your rational way of understanding my pains. When we go up by educational qualifications naturally we get refined and maturity of mind too goes up to become an unbiased human being showing no aggressiveness or differences among our fellow beings. This I had always followed and practiced in my life and I never wanted to exhibit my qualifications ever since I entered this thread. When Hyderabad Ravi Sir came to know about my academic credentials he started addressing me"Dr." but I politely requested him not to do so since it may create differences and we may not freely move with to deliberate on the common platform of NT's glory. Even I had expressed due respects to Mr.Gopal and Mr. Ramdoss, who are much younger to me, if my earlier postings are referred to. However it was unfortunate that my self respect was put to an acid test when some filthy and derogatory remarks, like illiterates, about my write-ups were openly instigated in this thread instead of a decent way of expressing through a PM to me. If one, who is really unbiased and rational goes through my entries right from the beginning, and their inteludes too, he can understand that I never made any 'politics' or 'self proclamation as leader' like that! I only rised up to the occasion to persuade our friends to keep the thread moving instead of sagging at the end of the earlier thread at the call of RKS Sir to all fellow hubbers. My intention was not to become a competitor for anybody who is virtually unknown to me and insignificant as well, but only to contribute my share for the glory of NT, which I did in my original ways of articulated expressions, that's all! Point blank attack with vested interest to degrade me... kindly tell me sir, is it right?. Murali Sir, as the respected moderator could also take note at the initial stage itself... I was helpless with no other fellow hubbers coming to my support! Hence out of my anguish, I admit I slipped to exhibit my status only to inform that gentleman to correct his approach before mudslinging on a person who never did any harm to him, without knowing about him!Quote:
செந்தில் சார்,
இதுவரை நீங்கள் நாகரிகத்தின் எல்லை மீறி ஒரு பதிவு கூட இட்டதில்லை. இப்போதும் அந்த ஒரு பதிவு கூட மற்றொரு நபர் உங்கள் மேல் தொடுத்த வார்த்தை தாக்குதலினால் வந்த எதிர் வினையே என்பதையும் புரிந்துக் கொள்கிறேன்.எனவே இது போன்ற சிறிய அளவிலேனும் சிலர் மனதில் பேதம் தோன்றக் கூடிய வாக்கியங்களை தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். by Murali Sir
I do not have ill feelings on any one of this thread and I regret for whatever has happened from my part to have hurt anybody's feelings. But what about the person or persons who opted to degrade me!?will they also regret for the harsh words used on me? I can prove my prowess in write-ups in a better way...but there is no need for me! I just want to keep off this thread having understood the way it is being taken up lest a feel of 'monopoly'.
No more hastles from my side Sir. From my point of view, as the person unnecessarily got a beat...I reiterate that my reaction was just a response to an impulse! Let this not happen to anybody else in future...Good luck! My fellow hubbers... leave this issue at this stage to your conscience as I am totally out of this thread now but will continue to do the service to NT in my way outside. I thank my friends who expressed their soft words of heal personally.Happy if those gentlemen have a feel of winning and me lost. Regretted again, from my part.
தமிழில் ஒரு பழ மொழி ஞாபகத்துக்கு வருது.
சரக்கு முறுக்கா ,செட்டியார் முறுக்கா என்று.
சோதிப்புக்கு ஆட்படாத வரை எல்லோரும் புத்தர்களே.ஆட்பட்ட பிறகுதான் சாயம் எத்தனை முறை வெளுத்து கந்தையாவது ?"முனை"ந்தாலும் முனிவர் போல பேசும் முனைவரால் சினம் காக்க முடியவில்லையே ,கந்தையா ,காப்பாற்று.
எனக்கும்தான்...... உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. அதன்கொடுப்பினை வாழ்நாள் முழுவதும் புழுங்கியே பொசுங்கவேண்டியதுதான்!!
Mr. Gopal. Whoever you are... Kindly dont try to drag this issue as I have already expressed my regrets in a polite way in response to our respected moderator's posting.
Dear Moderator. / dear RKS sir. I am not a stumbling block for the movement of this thread, as I had volunteered to keep away, and now kindly realise the situation with such type of intentional dragging!! If he continues, I will also see to it to the end! then don't blame me, as I have gone out to keep this thread run for the cause of NT's glory rather than personal projections!
அடுத்தவர் பதிவில் குதிரையேறும் 'தரக்கட்டுப்பாடு' மே(பே)தையால் தராதரம் தர இயலவில்லையே! ஒளிக்கடவுளே!
திரி தரம் திரிந்துவிடாமால் காப்பாற்று!
அடடா, முல்லை நில கிணற்று தவளை ,குருவி,பருந்தை எல்லாம் தெரிந்து வைத்துள்ளதே.
டாக்டர் சார்,
இவ்வளவு முரளி சொல்லி,நாங்கள் அடங்கிய பிறகும்,கடைசி பதிவிலும் ,அதே தொனி .illiteracy என்ற வார்த்தை பிரயோகம் வேறு.
இதே ராமதாஸ் என் மேல் தூஷனை செய்த போது ,உங்கள் பார்வையில் Stalwart ஆக தெரிந்தது எப்படி?தற்போது நீங்களே ஆசிரியர் என்று ஒப்பு கொண்ட அவர் illiterate ஆனது எப்படி?ஓய்வு பெற்ற ஆசிரியரும் டாக்டர் ஆக இருக்க வாய்ப்பு உள்ளதே?ஆராய்வோம்.
Please concentrate! Best of luck within our lifetime!!
கல்லுக்குள் பதுங்கியிருக்கும்பாலைநிலத்தேரையே !
அடடா ,வாயிலே நல்ல வருதே.முரளி சார் கைகளை கட்டி விட்டாரே? பேசாமல் டாக்டர் prescribe பண்ணிய படி P .M தான் சிறந்தது. இதையெல்லாம் public ஆ எழுத எனக்கே கூச்சமா இருக்கு.
Quote:
அடடா ,வாயிலே நல்ல வருதே.முரளி சார் கைகளை கட்டி விட்டாரே? பேசாமல் டாக்டர் prescribe பண்ணிய படி P .M தான் சிறந்தது. இதையெல்லாம் public ஆ எழுத எனக்கே கூச்சமா இருக்கு.
PM is better Mr.Gopal. I thank you since you also pave way for the smooth run of the thread. You write whatever you feel like writing! I enjoy since I continue to learn some more with your interactions!! And it will serve as an outlet for you to pour out all your anger on me so that at one stage you will become soft and sober.
ஹா ஹா ஹா,முரளி சார்,
நானும் செந்தில் சாரும் பேசி வைத்து விளையாடி கொண்டோம். நட்பான ஜாலி சண்டை. பாருங்கள் திருவிளையாடல் போட்ட போது யாரையும் காணோம்.இப்போ நிறைய விருந்தாளிகள். செந்தில் சாரும் சும்மாதான் விளையாடினார்.
Don't worry. No more fights in this thread and I will concentrate only on my postings. Do you remember similar thing done by Kamal &Gemini in Anandha Vikatan?
புரியல,புரியல என்று எல்லோரும் குறை படுவதால்,நிஜமாகவே எல்லோருக்கும் புரியும் படி எனக்கு மிக பிடித்த 1973 ஆம் வருட படம் ஒன்றை ஆய்வுக்கு எடுக்கிறேன்.கோபாலின் புரியும் படியான முதல் விமர்சன் ஆய்வு.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...01627067_n.jpg
[புகைப்படத்திற்கு நன்றி வாசு சார்!]
இன்றைக்கு 111 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் உதித்த துருவ நட்சத்திரமே!
விருதுபட்டி ஈன்றெடுத்த கர்ம வீரரே!
சுதந்திர பாரதத்தின் சோஷலிச சிற்பியே!
விடுதலை இந்தியாவில் தமிழகத்தின் விடிவெள்ளியே!
1947-க்கு பின் இந்த
அறுபத்தேழு ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரே ஒரு பொற்கால ஆட்சி வழங்கிய அற்புத முதல்வனே!
தொழிற் புரட்சி ஏற்படுத்திய தொழிலாளர் தோழனே!
பல்வேறு அணைகளை கட்டி பாசன வசதியை மேம்படுத்தி
பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்த ஏழை பங்காளனே!
பள்ளி சிறார்களுக்கு மதிய உணவு அள்ளி தந்த படிக்காத மேதையே!
எண்ணிக்கையில் வெறும் 9 அமைச்சர்களை வைத்துக்கொண்டு [அதிலும் முதல் இரண்டு அமைச்சரவைகளில் எட்டே பேர்] ஊழலற்ற அரசாங்கமாய் வெளிப்படையான நிர்வாகமாய் எண்ணிலடங்கா மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றிய செயல் வீரனே!
அகில இந்தியாவையும் ஆர் ஆள வேண்டும் என்பதை
அகிலத்திற்கே அறிவித்த பாரத ரத்தினமே!
ஆட்சியிலிருந்தவரை ஆராலும் தோற்கடிக்கப்பட முடியாத சாதனை சரித்திரமே!
1947-க்கு பின் இந்த
அறுபத்தேழு ஆண்டு தமிழக வரலாற்றில்
ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று
ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து மீண்டும்
ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று
வெற்றி பெற்ற ஒரே தமிழக தலைவனே!
என்றென்றும் எங்கள் பெருந்தலைவனே!
ஏங்கி கிடக்கிறோம் பல்லாயிரம்
எப்போது வரப்போகிறது உன் மறு அவதாரம்
அன்றுதான் ஆரம்பமாகும்
தாழ்ந்து கிடக்கும் தமிழகம்
தலை நிமிரப் போகும் பொற்காலம்!
அன்புடன்
dear Murali Sir. A timely write-up on our 'Thennaattu Gandhi'the legend living in our hearts and minds forever. NT Ninaivu Naal nerungum velayil, a fitting tribute with NT, the ardent follower of Shri. Kamaraj, the Karmaveerar who wiped out the hungerpains of children through his Noon Meal scheme
பெரும் தலைவர் காமராஜர் அவர்களுக்கு அவர் பிறந்த நாளில் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இந்த நேரத்தில் சில விண்ணப்பங்கள்.
காமராஜர் தன்னுடைய அற்புதமான காமராஜர் திட்ட வலையில் அவரே வீழ்ந்து ,காங்கிரெஸ் ,தமிழகத்தில் தலையெடுக்க விடாமல் வீழ்ச்சியுற வைத்தார். பக்தவத்சலத்தின் ஆட்சியே காங்கிரஸ் முதல் வீட்சி. திராவிட கட்சியின் (அப்போது ஒன்றுதான்) எழுச்சிக்கு இணையாக ,தமிழகத்தில் காங்கிரஸ் திட்டமிடவே இல்லை.
தேசிய அரசியல்,நேரு மறைந்த பிறகு கிங் மேக்கர் என்பதெல்லாம் ஒரு புறம். இந்திரா அழகாக திட்டமிட்டு சீனியர் தலைவர்களை டம்மியாக்கி விட்டார்.
இதனால் பெரும் இழப்பு தமிழ் நாட்டுக்கு. தன் உயரம், limitation தெரியாத ,தேசிய விளையாட்டு காமராஜ் திட்டம்.
இந்த நேரத்தில் காங்கிரஸ் புத்துயிர் பெற,தன்னுடைய புகழை பணயம் வைத்து,பலன் கருதாமல் உழைத்த சிவாஜி என்ற நல்ல உள்ளம் கொண்ட ,பெரும் தலைவரின் தொண்டரை,பெரும் தலைவராலேயே அங்கீகரிக்க பட்டு, இறப்புக்கு முன் அவர் இல்லம் தேடி சென்ற அவரின் செல்ல பிள்ளையான சிவாஜி அவர்களை காங்கிரஸ் நன்றாக உறிஞ்சி,அவர் உழைப்பை பயன் படுத்தி ,அவரை கறிவேப்பிலை போல நடத்துவது வருத்தமளிப்பது.ஓரளவாவது காங்கிரஸ் 1967 முதல், 1987 வரை தமிழ் நாட்டில் ஜீவித்தது சிவாஜியின் ரசிகர் கூட்டத்தால் மட்டுமே. என்னை மாதிரி பலரை காங்கிரஸ் கட்சிக்கு ஈர்த்த பெருமை சிவாஜிக்கு மட்டுமே.
சத்யமூர்த்தி பவன், காமராஜ் மணி மண்டபம்,நினைவு இல்லம்,காமராஜர் சினிமா படம் இவற்றில் நடிகர்திலகத்தின் பங்கை உரிய வகையில் அங்கீகரித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் ,காங்கிரஸ் ,திரும்ப தூசு தட்ட இருக்கும் காமராஜ் சினிமா சிவாஜி ரசிகர்களின் புறக்கணிப்பை சந்திக்கும்.உரியவர்களுடன் சேர்ப்பிக்க வேண்டியது ராகவேந்தர்,சந்திர சேகர் போன்றோர் கடமை.
சிவாஜியை செல்ல பிள்ளையாக கருதிய காமராஜருக்கு ,அவர் நினைவு பிறந்த நாளில் எங்கள் மானசீக தலை வணக்கம்.
முரளி சார் கோபால் சார் இருவரின் கருத்துமே நம் அனைவரின் கருத்தும்.
http://i1094.photobucket.com/albums/...Kamarajar6.jpg
பெருந்தலைவர் பிறந்த நாளில் மாலை அணிவித்து விட்டு மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற மனப்போக்கில் இருக்கும் தமிழக காங்கிரஸார் இருக்கும் வரை திராவிட இயக்கங்களின் தாக்கம் தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.
தவறு திராவிட இயக்கங்களின் மீதல்ல.
தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அரசியல் காய்களை நகர்த்தாத காங்கிரஸின் பிற்போக்குத் தனமே இதற்குக் காரணம்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத வகையில் தமிழக மீனவர்களின் அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இதற்கெல்லாம் காமராஜர் தான் வழி காட்ட வேண்டும்
பெருந்தலைவரே!
உன்னாலே படித்தோம் .உன்னாலே வளர்ந்தோம் .உயிருள்ளவரை உன்னை மறக்க மாட்டோம்
--உன்னை கைவிடாத நாஞ்சில் நாட்டுக்காரன் என்ற பெருமையுடன்
நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா? அல்லது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமை தேசங்களில் ஒன்றின் நீட்சியாக வாழ்கிறோமா? சில விடுதிகளில் வேட்டி கட்டி உள் செல்ல தடையாம்.அதுவும் தமிழ் நாட்டில்?? என்ன பைத்தியகாரத்தனம்?
நான் சென்ற பல நாடுகளில் ,குறிப்பாக இந்தோனேசியாவை எடுத்து கொள்வோம். அங்கு dress code -Formal wear என்று குறித்திருந்தால் கோட்டு சூட்டு அல்லது அதற்கு மாற்றான அவர்கள் பாரம்பரிய தேசிய உடையான batik சட்டை (முழுக்கை)in பண்ணாமல் அணிய பட்டால் அது formal ஆகவே கருத படும்.அவர்கள் பாரம்பரியத்தை அவ்வளவு மதிக்கிறார்கள்.
நம் அறிவு கெட்ட ,தமிழ் மேட்டு குடிகளுக்கோ(எல்லா சாதி பணக்கார ,மேல் நடுத்தரவர்க்கங்களும் அடக்கம் ) ,நம் கலாசார உடை வேட்டி என்றால் கேவலம். தமிழ் மொழி என்றால் இளப்பம். பிளாஸ்டிக் பைக்கு(உலகின் அழிவு) பதில் பருத்தி அல்லது சணல் பை (உலகின் நண்பன்)எடுத்து சென்றால் அவமானம். ச்சீ.....இவர்களை பொறுக்கும் நாம் ஒரு நல்ல குடி மகன்களா?
இதை நம் நடிகர்திலகம் (இரண்டு உடைகளும் பொருந்தும் திராவிட அழகன்)திரியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
அருமை முரளி சார்
[QUOTE=Gopal,S.;1147712]நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா? அல்லது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமை தேசங்களில் ஒன்றின் நீட்சியாக வாழ்கிறோமா? சில விடுதிகளில் வேட்டி கட்டி உள் செல்ல தடையாம்.அதுவும் தமிழ் நாட்டில்?? என்ன பைத்தியகாரத்தனம்?
dear gopal sir
இந்த அநியாயம் நீண்ட நாட்களாக சென்னையில் உள்ள எல்லா மனமகிழ் மன்றதில் நடைபெற்று கொண்டு இருக்கிறது . இப்போது மூத்த வழக்கறிஞர் அவர்களுக்கும் நீதிபதி அவர்களுக்கும் நடைபெற்றதால் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. நீதிபதி கிருஷ்ண ஐயர்க்கு 1990 கால கட்டத்தில் இதே போல் நடந்து உள்ளது
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த தினம் இன்று... 15/07
விருதுப்பட்டி, தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு இந்த ஊரை தெரியும் என தெரியவில்லை. ஒரே ஒரு மனிதனால் இந்த பட்டியின் மேல் இந்தியா மக்களின் பார்வை பட்டது. அவர் தான் பெருந்தலைவர் காமராஜ...ர் அவர்கள். அந்த பட்டி அவர் பிறந்த சில நாட்களுக்கு பிறகு நகர் ஆனது. அது தான் தற்போதைய விருதுநகர். காமராஜர் ,விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார்.
903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
படிப்பு
”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.
சிறை
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராசு சுயமாகப் படித்துத் தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.
அரசியல்
மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் தன் பணியைத் தொடங்கினார்.
தமிழக ஆட்சிப் பொறுப்பு
1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.
1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.
வித்தியாசமான அமைச்சரவை
காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)
அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.
அகிலஇந்திய காங்கிரசு தலைமை
மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.
கல்விக்கண் கொடுத்தவர்
ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.
“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.
“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.
“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.
“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.
உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.
அணைக்கட்டுகள்
காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன். இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது.மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது.சுமார் 3 கோடி செலவில் அமராவத அணை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.நெல்லை மாவட்டம்தாமிர பரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது.1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது. இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொழில் நிறுவனங்கள்
காமாரஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேணன் ஆகியவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.
இறுதிக் காலம்
இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
நன்றி : Wikipedia, Dr.Google
அத்தனை பேரும் படிக்கனும் என்கின்றேன்...
வயிற்றில் ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்..? அவனும்தானே நம் இந்தியாவுக்குச் சொந்தக்காரன்..?
ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிகூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்கனும். தேவைப்பட்டால் பகல் உணவிற்கென்று தன...ியாக வரி போடத் தயங்கமாட்டேன்...
அதனால் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு இதே வேலையாக ஊர் ஊராகப் பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன்...!
-காமராஜர்
(அதனால் தான் மக்கள் மனதில் உயர்ந்து நி்ற்க்கிறார்..)
http://i157.photobucket.com/albums/t...psd30a840f.jpg
மின் உற்பத்தி பற்றி காமராஜர் கொடுத்த விளக்கம்
--------------------------------------------------------------------------
காமராஜரின் பேச்சுப்பாணி எளிமையாக இருக்கும். குழந்தைகளோடு உரையாடுவது போல் இருக்கும். எவ்வளவு பெரிய தத்துவமானாலும் அதை எள...ிமைப்படுத்தி விளக்குவதிலே வல்லவர் காமராஜர். ஒரு தடவை தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது பற்றி ஏழை மக்களிடம் காமராஜர் விளக்கினார்.
எப்படி தெரியுமா? மேட்டுத் தெரு பண்ணையார் வீட்டிலே வாரத்துக்கு ஒரு தரம் மொட்டை மாடியைக் கழுவி விடுவாங்க பாத்திருக்கீங்க இல்ல, மூணாவது மாடியிலே கழுவி விடற அந்தத் தண்ணி ஒரு பைப் வழியாக கீழே வரும். அந்தக் குழாய் தரை வரைக்கும் வராது. 3, 4 அடி மேல நின்னுடும்.
அப்படி விழற தண்ணியில் ஊர்ல இருக்கிற மொட்டைப் பசங்க தலையை நீட்டுவாங்க. அவங்களுக்கு அது ஒரு குஷி. மேலே இருந்து வர தண்ணியிலே ஒரு சக்தி இருக்குது. அது குஷியைக் கொடுக்குது.
3-வது மாடியிலேயே ஒருந்து விழற அந்த தண்ணிக்கு இவ்வளவு சக்தின்னா, மலைமேலே இருந்து விழற தண்ணிக்கு எவ்வளவு சக்தி இருக்கும். அந்தச் சக்தியை மலையடிவாரத்திலேயே மிஷின் வச்சுப்பிடிக்கிற அந்த சக்திதான் மின்சாரம். அந்த மின்சாரம் எதற்கு? எல்லாம் உங்களுக்குத்தான்.
பெருந்தலைவர் காமராஜர் பெரும்பாலும் திரைப்பட
நிகழ்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை . ஒரு முறை
ஏவிஎம் நிறுவனத்தின் ' பார்த்தால் பசி தீரும் ' படத்
தொடக்க விழாவில் கலந்து கொள்ள நேரிட்டது . அப்போது
பேசிய பெருந்தலைவர் , " இந்தப் படத்தின் தலைப்பு ,
' பார்த்தால் பசி தீரும் ' என்பது . பார்த்தால் ஒருவனுக்கு
எப்படி பசி தீரும் ? சாப்பிட்டால் தானே தீரும் . பிறகுதான்
எண்ணிப் பார்த்தேன் . இந்தப் படத்தை மக்கள் பார்த்தால் ,
படம் எடுத்தவர்களின் பசி தீருமல்லவா " என்று
நகைச்சுவையுடன் குறிப்பிட்டாராம் .
அன்புமிக்க உறவுகளே
பங்களிப்போர் பங்களித்தால்தான் பார்வையாளர்களை கொண்டுவரமுடியும்
பதிவிருந்தால்தானே பார்வையாளர்கள் பார்ப்பதற்கு
எல்லோரும் பார்வையாளர்களானால் பதிவு எங்கிருந்து வரும்
நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும்
எல்லாவற்ரையும் மறந்து
எல்லோரும் ஒன்று சேருங்கள்
பழையன மறப்போம் புதியன நினைப்போம்
எல்லோரும் வாருங்கள் பதிவிடுங்கள்
நன்றி நன்றி நன்றி
http://i265.photobucket.com/albums/i...ps3abd65e6.jpg
குளத்தில கிடந்த 50 மீன்களில்
பலவற்றை பருந்து இப்படித்தான் கவ்விக்கொண்டுபோய் சேர்குது
https://scontent-a-lhr.xx.fbcdn.net/...85668391_n.jpg
சோத்துக்கு ஏங்கும் நிலையில் நாங்கள் இருக்க... உங்கள் பிள்ளைகள் பீட்சாவை வாங்கி வீதியில் வீசுதல் தகுமோ..??!
நடிகர்திலகம் பற்றி பெருந்தலைவர்
http://i1234.photobucket.com/albums/...psc0e846db.jpg
பெருந்தலைவர் பற்றி நடிகர்திலகம்
http://i1234.photobucket.com/albums/...psd8f5f29a.jpg