வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/jjlp8o.jpg
மக்கள் திலகத்துக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் :
1. "புரட்சி நடிகர்" என்ற பட்டம் உறந்தை உலகப்பன் என்பவர் ஏற்பாடு செய்த விழாவில் கலைஞர் கருணாநிதியால்,05-06-1952 அன்று வழங்கப்பட்டது.
2. "மக்கள் திலகம்" என்ற பட்டம் தமிழ் வாணன் அவர்களால் 1961ல் வழங்கப்பட்டது.
3. "நடிக மன்னன்" என்ற பட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியன் அவர்களால் 1958ல் வழங்கப்பட்டது.
4. "நடிகப்பேரரசர்" என்ற பட்டம் "நாடோடி மன்னன்" பட வெற்றி விழாவில், 1959ல் அளிக்கப்பட்டது.
5. "கலைச்சுடர்" என்ற பட்டம் மதுரை நவீன தேகப் பயிற்சி கலை மன்றத்தினரால் 1960ல் வழங்கப்பட்டது.
6. "வாத்தியார்" என்ற பட்டம் நெல்லை மாவட்ட நகராட்சி மன்றத்தினரால் 1960ல் வழங்கப்பட்டது.
7. ";கலையரசர்" என்ற பட்டம் விழுப்புரம் முத்தமிழ் மன்றத்தினரால், பேராசிரியர் சிதம்பரநாதர் மூலம், 1960ல் வழங்கப்பட்டது.
8. "வெற்றி வீரன்" என்கின்ற பட்டம் 1961ம் ஆண்டு திருச்செங்கோடு இடைத் தேர்தலின் போது, பொது மக்கள் அன்புடன் வழங்கினர்.
9 ."பொன்மனச்செம்மல்" என்கின்ற பட்டம், திரு. முருக கிருபானந்த வாரியார் அவர்களால், கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 1968ல் வழங்கப்பட்டது.
10. " கலைமன்னர் " என்ற பட்டம், அப்போதைய பிரதம நீதிபதி பி.வி. ராஜ மன்னார் அவர்களால், 1964ல் வழங்கப்பட்டது.
11. "கலியுகப்பாரி" என்ற பட்டம் மதுரை ஜெமினி கணேஷ் கலைக் குழுவினர் 1962ம் ஆண்டு வழங்கி சிறப்பித்தனர்.
12. "இதயக்கனி" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்புடன் 1967ல் அழைத்து கவுரவித்தார்.
13. "புரட்சித் தலைவர்" என்ற பட்டம் 1972ல் சென்னை மெரீனா கடற்கரையில், திரண்ட லட்சக்கணக்கான பொது மக்கள் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் கே. ஏ. கிருஷ்ணசாமி அவர்களால் அளிக்கப்பட்டது.
14. "கலை வேந்தன்" என்கின்ற பட்டம் மலேசிய அரசாங்கம் 1972ல் அளித்து கவுரவித்தது.
15. "பாரத்" என்ற இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பட்டத்தை இந்திய அரசாங்கம், 1972ல் வழங்கி சிறப்பு செய்தது.
16. " டாக்டர்" பட்டம், முதலில் அமெரிக்க அரிசோனா பல்கலை கழகம், 1979ல் வழங்கி கவுரவித்தது.
17. பின்னர், மீண்டும், "டாக்டர்" பட்டம் சென்னை பல்கலைக் கழகம் மூலம் 1983ல் பெற்றார்.
18. "கொள்கை வேந்தன்" (CHAMPION OF PRINCIPLS) என்ற பட்டம், மலேசிய மற்றும் சிங்கப்பூர் வாழ் ரசிகர்கள் 1971ம் ஆண்டு நம் மன்னவனுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.
19. "பாரத ரத்னா" என்ற நமது இந்திய நாட்டின் உயரிய விருது 1988ல் அவரது மறைவுக்குப் பின் அளிக்கப்பட்டது.
20. "நிருத்திய சக்கரவர்த்தி" என்ற பட்டம், இலங்கை அரசாங்கத்தால் 1966ல் வழங்கப்பட்டது.
21. "மக்கள் நடிகர்" என்ற பட்டம், 1960ல் நாகர் கோவிலில் நடைபெற்ற கலைவாணர் பிறந்த நாள் நிகழ்சியீல் வழங்கப்பட்டது.
22, "வசூல் சக்கரவர்த்தி" என்று தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் அழைத்து மகிழ்ந்தனர்.
இவைகளை தவிர, மக்கள் உவகையுடன் உன்னத தலைவருக்கு சூட்டி மகிழ்ந்த பட்டங்கள் வருமாறு :
1. வசூல் பேரரசர்
2. ஏழைப் பங்காளன்
3. கலியுகக் கடவுள்
4. ஆலயம் கண்ட ஆண்டவன்
5. தரணி கண்ட தனிப்பிறவி
6. முத்தமிழைப் போற்றிய முதல்வன்
7. முப்பிறவி கண்ட முதல்வர்
8. கொடை வள்ளல்
9. மனிதப்புனிதர்
10, மக்கள் தங்கம்
11. மக்கள் தலைவர்
12. நாட்டுப்பற்று நாயகன்
13. குணக்குன்று
14. எழில் வேந்தன்
15. உலகத் தமிழர்களின் உன்னத தலைவன்
16. கலியுகக் கர்ணன்
17. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல்
18. சத்துணவு தந்த சரித்திர நாயகன்
19. இதய தெய்வம்
20. சம தர்ம சமுதாயக் காவலன்
21. எட்டாவது அதிசயம்
22. புரட்சிப் புரவலர்
முதன் முதலில் "மக்கள் திலகம்" என்று TITLE ல் காண்பிக்கப்பட்டது 1961ல் வெளியான "சபாஷ் மாப்பிள்ளே" படத்தில்தான்.