http://i58.tinypic.com/j7te7k.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -17 துவக்கிய இனிய நண்பர் திரு சுஹராம் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''மாட்டுக்கார வேலன் '' அருமையான காட்சிகளின் நிழற் படங்களின் தொகுப்பு
அசத்துகிறது முத்தையன் சார் . மிகவும் சிறப்பாக இருந்தது .உங்கள் உழைப்பிற்கு என்னுடைய பாராட்டுக்கள் .
ஒளிவிளக்கு படத்தின் கண்ணை கவரும் நிழற் படங்களை தாங்கள் பதிவிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .
PERIYAR PIRANTHA NAL
http://i59.tinypic.com/20iyjb7.jpg
https://www.youtube.com/watch?v=gv5dfjTQQ2E
This is not to hurt to any individuals sentiments. My concern is Humanity should be given first priority. If this posting is going hurt anyone's sentiments, please inform me, I shall remove this posting without any hesitation.
திரியின் நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
http://i62.tinypic.com/2vmap92.jpg
Dear Friends,
Wishing you all a very happy and prosperous Vinayaga Chadhurthi Day.
Praying Vinayagar on this day for the well being of all Makkal Thilagam Friends and their family members.
RKS
Happy Ganesh Chaturthi to all Mayyam Friends and family.
http://i57.tinypic.com/15whq35.jpg
திரு சுகாராம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 17 ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சியே .தொடர்ந்து உங்களது பதிவுகளை வழங்கி வரவும்.வாழ்த்துக்கள் .
திரு செல்வகுமார் சார்
திராவிட இயக்க வரலாறு - புதிய முறையில் எல்லோரும் அறிந்திடும் வகையில் பதிவிடவும் .
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
மதுரை திரு எஸ்.குமார் அவர்களின் தந்தை மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்
திரியில் ஒருவரை வரவேண்டாம் என்றும் , தனிப்பட்ட முறையில் அநாகரீகமாக தாக்கியும் ஒருவர்
பதிவு போட்டதை அந்த திரியின் moderator அந்த நபரை கண்டிக்கவும் இல்லை .பதிவை நீக்கவும் இல்லை .வியப்பாக உள்ளது .ஒரு வேளை moderator விருப்பமும் அதுவே என்று நினைக்க தோன்றுகிறது .
பழனி - சந்தானகிருஷ்ணா
திரை அரங்கில்
தாயைக் காத்த தனயன்
தகவல் - ஹரிதாஸ் - கோவை.
2000 பதிவுகள் வழங்கிய திரு செல்வகுமார் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் .
பகுத்தறிவு பகலவன், வெண்தாடி வேந்தன், ஈரோட்டு சிங்கம் தந்தை பெரியார் அவர்களின் 107வது பிறந்த நாள் இன்று. இந்த இனிய நாளில் அவரது பெருமையை போற்றும் விதமாக சில தகவல்கள் :
1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி சீர் திருத்த செம்மல் என்று அழைக்கப்பட்ட தந்தை பெரியார் இத்தமிழ் மண்ணில் பிறந்தார். அவருக்கு முன்பாக 1877ம் ஆண்டு இதே செப்டம்பர் திங்களில் 28ம் நாள் அவரது மூத்த சகோதரர் ஈ. வெ. கிருஷ்ணசாமி அவர்கள் பிறந்தார். இவர் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈ. வெ . கி. சம்பத் அவர்களின் தந்தை ஆவார். அவரது மகன் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி தவிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ. வெ கி. ச. இளங்கோவன் .
ஆரம்பத்தில் பெரியார் அவர்களின் தந்தை வெங்கட்ட நாயக்கர் அவர்கள் வாடகைக்கு வண்டி ஒட்டி சம்பாதித்து பின் சிறு மளிகை கடை வைத்தார். பின்பு தனது கடுமையான உழைப்பால் மளிகை கடையை மண்டிக்கடையாக மாற வைத்தார். அதனால் செல்வம் சேர்ந்த அந்த குடும்பத்தில், பெரியார் அவர்களுக்கு வசதியான இடத்தில் பெண் பார்த்தார் அவரது தந்தை. . தந்தையின் இந்த போக்கு பிடிக்காமல், ஏழைக் குடும்பத்தை சார்ந்த தனது மாமன் மகளாகிய நாகம்மாளை, தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக இளம் வயதிலேயே பிடிவாதமாக இருந்து மணந்தார். ,
பெரியார் அவர்கள் தனது 25 வது வயதில், தந்தையுட ன் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டால், கோபித்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி ஆந்திராவுக்கு சென்றார். பின்பு அங்கிருந்து காசிக்கு சென்று துறவறம் பூண்டார். காசியை புனிதமான இடம் என்று நம்பிய தந்தை பெரியார் அவர்கள் அங்குள்ள சாமியார்கள் திருட்டு, விபச்சாரம், மது அருந்துதல் போன்ற குற்றங்களை செய்வது கண்டு வெறுத்து ;போய் மீண்டும் ஆந்திரா சென்றார் ஒரு வழியாக அவரது இருப்பிடம் தெரிந்து அவரது தந்தை அவரை சமாதானப்படுத்தி மீண்டும் தமிழகம் அழைத்து வந்தார்.
http://i57.tinypic.com/2mee841.jpg
25வது வயதில் தந்தை பெரியார் அவர்கள் சாமியாராக
1911ல் தனது தந்தை காலமான பிறகு, பொது வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார் வைக்கம் வீரர் பெரியார் அவர்கள். ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, வணிகர் சங்கம், விவசாயிகள் சங்கம், தேவஸ்தானம், சங்கீத சபை முதலான 29 பொது அமைப்புக்களில் உறுப்பினராக திகழ்ந்தார்.
1919ல் தன் 40வது வயதில், ஈரோடு நகரசபை தலைவர் ஆனார். அந்த சமயத்தில் நடைபெற்ற "ஜூலியன் வாலாபாக்" படுகொலை சம்பவத்தை கண்டித்து தனது நகரசபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
1921ம் வருடம் செப்டம்பர் மாதம், மகாத்மா காந்தி அவர்கள் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களின் வீட்டில் தங்கினார். "கள் இறக்க உதவும் மரங்களையெல்லாம் வெட்டி விட வேண்டும் என்று காந்தியடிகள் கூரீயதை தொடர்ந்து, தன தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார், காந்தியின் தீவிர பக்தரான தந்தை பெரியார்.
வைக்கம் வீரர் :
கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள வைக்கம் என்ற ஊரில், தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க கூடாது என்ற கட்டுப்பாட்டினை ஒழித்து, அவர்களுக்கு சம உரிமை பெற்றிட போராட்டங்கள் பல நடத்தி, சிறை வாசம் கண்டு, இறுதியில் தனது முயரிசில் வெற்றி பெற்ற காரணத்தால் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.
பெரியார் பட்டம் :
13-22-1938 அன்று சென்னையில் தமிழ் நாடு பெண்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு, மறைமலையடிகளாரின் மகளான நீலாம்பிகை அம்மையார் அவர்கள் இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். டாக்டர் தர்மாம்பாள், ராமமிர்தம்மாள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று போராடிய ஈரோட்டு சிங்கத்துக்கு "பெரியார்" என்கின்ற பட்டம் இந்த மாநாட்டில்தான் வழங்கப்பட்டது.
குடியரசு பத்திரிகை துவக்கம் :
தன கொள்கைகளை பரப்புவதற்காக 2-5-1925 அன்று துவக்கப்பட்ட :குடியரசு" வாரப்பத்திரிகையில், சாதி ஒழிப்பு, கலப்பு திருமணம், விதவை திருமணம், புராண எதிர்ப்பு போன்ற கருத்துக்களை வலியுறுத்தி கட்டுரைகள் எழுதினர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல் :
தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், செயலாளராகவும் பதவி வகித்த தந்தை பெரியார் அவர்கள், திரு. வி. க. தலைமையில் 1925ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்,, வகுப்புவாரி பிரதிநிதி துவத்தை வலியுறுத்தி கொண்டு வந்த தீர்மானத்தை அனுமதிக்க முடியாது என்று மாநாட்டுக்கு தலைமை வகித்த திரு. வி. க.. அவர்கள் கூறியதனால், வெகுண்ட பெரியார் அவர்கள், மாநாட்டிலிருந்து வெளியேறினார். அவருடன், ஒரு கணிசமான பகுதியினரும் வெளியேறினர்.
நீதிக்கட்சியில் ஈடுபாடு :
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பெரியார் அவர்கள், பின்பு நீதிக்கட்சியை ஆதரித்தார். 27.8.1944,ல் நீதிக்கட்சியின் சார்பில் நடந்த சேலம் மாநாட்டுக்கு பெரியார் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில்தான் "நீதிக்கட்சி" என்ற பெயரை "திராவிடர் கழகம்" என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது.
நீதிக்கட்சியில், பெரும்பாலும் வசதி படைத்தவர்களே அங்கம் வகித்ததால், அது பணக்காரர்களின் கட்சி என்று கருதப்பட்டது. ஆனால், திராவிடர் கழகத்தில் பாட்டாளி மக்களும், இளைஞர்களும் பேரு வாரியாக சேர்ந்தனர். அதனால், திராவிடர் கழகம், ஏழை - எளிய மக்களின் கட்சி என்ற தோற்றத்தினை பெற்றது.
திராவிடர் கழகம் - வளர்ச்சி
திராவிடர் கழகத்தில், பெரியாருக்கு அடுத்தாபடியாக, பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவானார். பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்,, மாணவ சமுதாயத்தை கவர்ந்தன. எதுகை மோனையும் கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சுக்களால், இளைஞர்கள், பெரிதும் ஈர்க்கப்ட்டனர்,. அலை அலையாக திராவிடர் கழகத்தில், அமுதாய சிந்தனை மற்றும் அக்கறை கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் திராவிட கழகத்தில் இணைந்த வண்ணம் இருந்தனர். அவ்வாறு இணைந்த அன்றைய இளைஞர்களில் முக்கியமானவர்கள் கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியார் க. அன்பழகன், கே. ஏ. மதியழகன், சேலம் ராஜாராம், தில்லை வில்லாளன், இராம அரங்கண்ணல் போன்றோர்.
திராவிடர் கழத்தில் பிளவு :
1947 ஆகஸ்டு மாதம் 15ம் தேதி இந்தியா விடுதலை பெற்ற நாள் "துக்க நாள்" என்று தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த போது, அதனை ஏற்க மறுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டார். பின்னர் தந்தை பெரியார் அவர்கள் மணியம்மையாரை சுமார் 40 வயது வித்தியாசம் கொண்டு மணந்த போது, இந்த கருத்து வேறுபாடு முன்னிலும் பல மடங்கு பெருகி, 17-09-1949 அன்று, தந்தை பெரியாரின் பிறந்த தினத்தில், தி. மு. க. என்ற மாபெரும் இயக்கம் பேரறிஞர் அண்ணா அவர்களின் சீரிய தலைமையில் உருவாகி, திராவிட இயக்கத்துக்கு பெருமை சேர்க்கத் தக்க வகையில், தமிழகத்தில் 1967 ல் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு அபரிதமான செல்வாக்கு பெற்றது. இந்த அபார வெற்றிக்கு பின்னணியில் நமது புரட்சித்தலைவரின் பெரும் பங்கு இருந்தது என்றால் அது மிகையாகாது.
குருவும் சீடரின் பக்தியும்
தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கெதிராக 1962 சட்டமன்ற தேர்தலில் கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு அவர் தோற்க ஒரு காரணமாய் விளங்கினாலும், 1967ல் பெற்ற மகத்தான வெற்றியை தனது குருவாகிய தந்தை பெரியாருக்கு சமர்ப்பணம் செய்து, அர்ப்பணித்து அவரின் ஆசிகளை வாங்கிய பின்னர்தான், தமிழக முதல்வாரக பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு மூலம் தனது பெருந்தன்மையை மீண்டும் நிரூபித்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவரின் பெருந்தன்மையை பின்பற்றி அவரின் வழி நடந்து தான் நம் புரட்சித்தலைவர் எம். ஜி. அர் அவர்கள் இன்றளவும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை கொண்டிருக்கிறார்.
தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்த திராவிட இயக்கத்தின் பெருமையை இன்றளவும் கட்டிக்காப்பது நம் புரட்சிதலைவர் கண்ட அ.தி.மு.க. தான் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை !
ஓங்குக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் புகழ் !
பின்குறிப்பு :
திராவிட இயக்க முன்னோடி தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் சுமார் 10,700 நிகழ்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். 20,000 மணி நேரத்துக்கும் அதிகமாக பேசி இருக்கிறார். பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். தள்ளாத வயதிலும், இந்த அளவுக்கு சாதனை படைத்தவர் தந்தை பெரியாரை போல் எவரும் இல்லை என்பதே உலகறிந்த உண்மை !
புகைப்படம் உட்பட தகவல்கள் பல "தினத்தந்தி" யிலிருந்து எடுத்து எழுதப்பட்டுள்ளது. நன்றி !
திரியின் பார்வையாளர்கள் அனைவருக்கும் "விநாயக சதுர்த்தி" நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...எல்லோரும் எல்லா வளங்களும், நலன்களும் பெறவேண்டும் என்பதே மக்கள்திலகம் ரசிகர்கள் கொண்டிருக்கும் குறிக்கோள் & ஆவல்...
மக்கள்திலகம் பாகம் 17 தொடங்கியதற்கு நல்வாழ்த்துக்களை கூறிய மூத்த சகோதரர் அன்பிற்கினிய திரு வினோத் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...
பாரத் - மக்கள்திலகம் பாகம் 17 ஆரம்பித்தற்கு நிறைவான வாழ்த்துக்களை அளித்த திரி மூத்த சகோதரர் திரு cs குமார் சார் அவர்களுக்கு மிக்க நன்றி... தாங்கள் அமுதசுரபியாக நிறைய புரட்சி நடிகரின் வசூல் நோட்டீஸ் முதலியன பதிவிட அன்புடன் கோருகிறேன்...
திருவண்ணாமலையில் வரும் வெள்ளியன்று (25/09/2015) மாலை 5 மணியளவில்
நகர மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றத்தின் 50 வது ஆண்டு விழா, புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களின் 98 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற
உள்ளதையொட்டி ,புரட்சி தலைவரின் தீவிர பக்தர் திரு. கலீல் பாட்சா அவர்கள்
அனுப்பியுள்ள வரவேற்பு அழைப்பிதழின் முன்புற/பின்புற தோற்றங்கள்.
http://i58.tinypic.com/5cd6dl.jpg
http://i58.tinypic.com/2v2jfv7.jpg
http://i58.tinypic.com/53oaie.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 17-ஐ பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் பெருமையுடன் துவக்கிய நண்பர் திரு. சுகாராம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.
நன்றி அறிவிப்பு
--------------------------
மதுரை நண்பர் திரு.எஸ். குமார் அவர்களின் தந்தையார் மறைவிற்கு அனுதாபம்
மற்றும் இரங்கல் செய்திகளை அலைபேசி /கைபேசி மூலம் பகிர்ந்து கொண்டதற்கும்
திரி மூலம் அனுதாபச் செய்திகளை பதிவு செய்து , தனது துயரத்தில் பங்குற்ற அனைத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும், நடிகர் திலகம் நண்பர்களுக்கும் திரு. எஸ். குமார் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி மூலம்
நன்றி தெரிவித்துள்ளார்.
ஆர். லோகநாதன்.
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் - செப்டம்பர் 2015
http://i58.tinypic.com/abh747.jpg
அன்பு (1953) என்கிற படத்தில் , பாடல் பதிவின்போது பி.சுசீலாவின் தமிழ் உச்சரிப்பு
சரியில்லை என்று நிராகரித்தார்.இசைஅமைப்பாளர் டி.ஆர். பாப்பா. காலங்கள், காட்சிகள் மாறியதும், வாலி, சீர்காழி கோவிந்தராஜன் கூட்டணியில், டி.ஆர். பாப்பா
இசை அமைப்பில், "நல்லவன் வாழ்வான், " திரைப்படத்தில் -சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள் பாடலை பாடி புகழ் பெற்றார்.
http://i59.tinypic.com/ae1nbb.jpg
http://oi62.tinypic.com/35hr7s9.jpg
இன்று போல என்றும் வாழ்க என எம்மை வாழ வைத்த எம் தலைவன்
தங்கத்தலைவரின் இந்த புன்சிரிப்புக்கு நிகர் எதுவும் உண்டோ ?
நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் மக்கள் திலகம், பாரத ரத்னா, புர்டசித்தலைவர் அவர்களின் திரைப்படங்களிலிருந்து, நமது தானைத்தலைவரின் அருமையான நிழற்படங்களை பதிவிட்டு, இந்த திரி அன்பர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் தொடர்ந்து மூழ்கடித்து வரும் இனிய சகோதரர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி !!
http://i61.tinypic.com/20b1t8k.jpg
2000 பதிவுகள் வழங்கியமைக்கு எனக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்த அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !