http://i65.tinypic.com/2z6t9as.jpg
Printable View
தொடரும்...
http://i64.tinypic.com/2yytau1.jpg
தினமலர் - வாரமலர் -திண்ணை நடுத்தெரு நாராயணன் -10/01/2016
http://i63.tinypic.com/1jwbbb.jpg
http://i65.tinypic.com/jru4g7.jpg
http://i66.tinypic.com/2myafpw.jpg
அந்தி மழை - ஜனவரி 2016
http://i65.tinypic.com/2hi05zo.jpg
சென்னை புழல் சிறைச்சாலை அருகில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்
திரு. ராவணன் அவர்கள், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகை
சரோஜாதேவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அமைத்த பேனர்
நண்பர்களின் பார்வைக்கு.
கடந்த ஆண்டும் இதே போன்று வாழ்த்துக்கள் தெரிவித்து பேனர் வைத்திருந்தார்.
http://i68.tinypic.com/97mih4.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பணத்தோட்டம் " வெளியான நாள் :11/01/1963
52 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
http://i66.tinypic.com/a23r69.jpg
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115"
வெளியானதினம் 11/01/1968 . 47 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
http://i67.tinypic.com/jz7578.jpg
மக்கள திலகத்தின்'' பணத்தோட்டம் '' இன்று 54வது ஆண்டு துவக்க தினம் .
மக்கள திலகத்தின் ''ரகசிய போலீஸ் 115'' இன்று 49 வது ஆண்டு துவக்க தினம் .
மக்கள் திலகத்தின் ''அலிபாபாவும் 40 திருடர்களும் '' 60 வது ஆண்டு நிறைவு பெறும் நேரத்தில் மதுரை நகரில் இப்படம் திரைக்கு வருவது மிக்க மகிழ்ச்சி .
மக்கள் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை நகரில் ''எங்க வீட்டு பிள்ளை '' வெளிவருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
Blast from the past: Chandhrodhayam (1966)
MGR in Chandrodhayam (1966)
Star Cast: M. G. Ramachandran, Jayalalithaa, M.R. Radha, M.N. Nambiar, Pandari Bai, S.A. Asokan, C.K. Nagesh, C.R. Manorama, Bharathi, S.N. Lakshmi, ‘Kuladeivam’ Rajagopal
The 1934 Hollywood classic, It Happened One Night, directed by Frank Capra, won several Oscars and was one of the biggest hits of the time. After World War II, this film was remade by his friend William Wyler as Roman Holiday, with Gregory Peck and Audrey Hepburn in lead roles.
It Happened One Night was naturally remade across the world, and in Hindi, it was produced by AVM under the title, Chori Chori, starring Raj Kapoor and Nargis. Interestingly, Roman Holiday was also remade under the title, Nau Do Gyarah (Dev Anand and Kalpana).
saravana flims made the film Chandhrodhayam—with MGR and Jayalalithaa in the lead roles. In Chandhrodhayam, Devi (Jayalalithaa), an innocent and beautiful heiress, runs away from her home in Selvamani Estate, a day before her engagement, causing quite a scandal. Her father, Zamindar Ponnambalam (S. A. Asokan) is disgraced.
Away from home, and all by herself in a strange unfriendly world, Devi is saved from rowdies by a reporter—an idealist and a good man, Chandran (MGR), who accommodates her at his home, until he can find her a new home.
Chandran, it is learned, works as a reporter for a newspaper named Dinakkavartchi, owned and managed by Duriothanan (M. R. Radha), an unscrupulous editor with little regard for classy news presentation. He only cares about sensationalising news, even if it means the concealment of truth. Chandran often disagrees with his employer.
Alwar (Nagesh) is a photographer, and a colleague and friend of Chandran and comes to his rescue often. Meanwhile, Chandran also wants to help another young woman Kamala (Bharathi), wounded cruelly at the time of her birth. A victim of a rich predator, Paranthaman (M. N. Nambiar), she is rescued by Chandran eventually, who, for his part, ends up marrying Devi with the blessings of the family.
Duriothanan also regrets his misdeeds and requests Chandran to start a new newspaper and choose a name for the same. The title of the film is the name of the newspaper.
The film was directed by editor-turned-filmmaker and producer K. Shankar, who also made Hindi movies. It was produced by the successful G. N. Velumani, under his banner Saravana Films, and music was by M. S. Viswanathan.
Chandhrodhayam had impressive cinematography by Thambu (C. V. Ramakrishnan)—the climax fight between M. N. Nambiar and MGR, especially, was appreciated, for being shot with the use of just one light source: a rolling, broken small table lamp.
The film was edited by Shankar and K. Narayanan, with lyrics by Bharathidasan and Vaali. One song, titled ‘Kaasikku pogum sanyasi’, rendered by MGR and Nagesh, was a hit.
Remembered for: Excellent acting by MGR and Jayalalithaa, and cinematography by Thambu.
courtesy - the hindu
1956.-2016
மக்கள் திலகத்தின் 60 வது ஆண்டு கொண்டாடும் மூன்று படங்கள் ஹாட்ரிக் வெற்றி காவியங்கள் .
அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரை வீரன்
தாய்க்கு பின் தாரம் .
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.
படத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? ‘காப்பாத்துங்க’ என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)
அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார்.
அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் *சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே...’’ என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).
உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (‘‘யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?’’ -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். ‘தே.. கம்னு கெட.’ -நான்)
அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க. பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.
அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு *ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட, பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.
சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.
திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.
அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (‘‘ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்*சியிலயா குடியிருக்காரு?’’ என்று சிரித்தது மனஸ். ‘‘த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின *பிச்சுப்புடுவேன் பிச்சு...’’ என்றேன் நான்.)
பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்*சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.
படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு.
படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும
courtesy - Thiru Ganesh- net
மக்கள் மனங்களில் ஆங்கில வருடத்தில் முதல் ஜனவரி மாதம் பிறப்பு.
மக்கள் திலகம் கடைசி வாழ்க்கை இறுதி மாதம் மார்கழியில் இறப்பு இதுவும் ஒரு சாதனைதான். தமிழ் மாதத்தில் தைபிறந்தால் நல்வழி பிறப்பது போல் சாதனை தமிழ் மாதத்தில் பிறந்தால்,மார்கழியில் இறந்தால் மோட்சம் என்பதற்கு மார்கழி மாதத்து பூவாக மறைந்தார் மக்கள் மனங்களில் என்றும் நிறைந்தார்.
எம்.ஜி.ஆர். ஓர் உலக அதிசயம்
சிறந்த நாடக மேடை நடிகர்
எம்.ஜி. ஆர். நாடக மன்ற தயாரிப்பாளர்.
உலகின் முதல் சிறந்த இயற்கை நடிகர்.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்.
சத்தியா ஸ்ரூடியோவின் நிர்வாகி.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்
திரைப்பட உலகின் மிகச் சிறந்த டெக்னிசியன்
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் 30 ஆண்டு கால தமிழ்ப்பட உலகின் வசூல் சக்கரவர்த்தி. 1947 முதல் 1977 வரை
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுநர்.
நடிகராக இருந்து ஆட்சி பிடித்த முதல் உலக நடிகர்.
ஈழத் தமிழருக்காக உலகின் முதல் உரிமைக்குரல் கொடுத்த முதல்வர்.
திராவிட பராம்பரியத்தின் பல முதல்வர்களை உருவாக்கிய முதல்வர்.
சிறந்த கதாசிரியர், சுயசரிதை எழுதியவர் (நாள் ஏன் பிறந்தேன்).
அண்ணா நாளிதழின் நிறுவுனர்
சமநீதி செய்தித்தாளின் ஆசிரியர்
பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய முதல்வர்.
நடிகன் குரல் செய்தித்தாளின் ஆசிரியர்
02 ஆம் உலக தமிழ் மகாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர்.
ஒளவை இல்லத்தின் அறங்காவலர்
வெள்ளியானை விருது பெற்ற தென்னிந்திய முதல்வர்.
இரண்டு பொதுத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற முதல்வேட்பாளர் (1967 1979).
03 முறை தொடர்ந்து முதல்வராகிய முதல்வர்.
சட்ட மன்ற மேலவை உறுப்பினர்.
சட்ட மன்ற உறுப்பினர் 05 முறை.
எம்.ஜி.ஆரின் எளிமையான வாழ்க்கை:
காலை உதயத்தின் தாயின் உபசரிப்பு.
உடலின் வலிமைக்கு நித்தம் ஒரு உடற்பயிற்சி.
தியான உணர்வில் தினமும் ஒரு தியானம்.
காலை நேரப்பொழுது குளியலின் ஒரு புத்துணர்ச்சி.
ஈர ஆடையுடன் தாயின் பிரார்த்தனையும் கடவுள் நம்பிக்கையும்.
பழைய சாதத்தின் நீராகாரம் பருகுதல்.
காலை நேரத்து உணவு யாராவது ஒருவருடன் சாப்பிடுதல்.
அறிவு நூல்களை படிப்பதற்கு வீட்டில் ஒரு நூலகம்.
தண்ணீரில் தியானம் செய்வதற்கு நீச்சல் குளம்.
வந்தவர்களை அன்புடன் வரவேற்று வாயாற உணவளித்தல்.
முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்கூற அண்ணாவின் புனித அறை.
வெளியே செல்லும் போது தாயை வணங்க தாய்க்கு ஒரு கோயில்.
கடமை உணர்வோடு காவல்புரியும் காவலர்களுக்கு ஒரு வீடு.
தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகைக்கு வரும் மக்களுக்கு உணவளிக்க ஒரு இடம்.
செய்தித்தாள், நண்பர்கள் பேட்டி, புகைப்படம் எடுக்க வசதியான இடம்.
தன்னை காணவரும் மக்களுக்கு பணிவிடைசெய்ய, மனுக்களை ஏற்றுக்கொள்ள தன் வீட்டில் தனி வசதி.
courtesy- net
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் ''என் அண்ணன்'' 'படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது
குதிரை வண்டிக்காரக மக்கள் திலகத்தின் யதார்த்தமான நடிப்பும் , சண்டை காட்சிகளும் , நகைச்சுவை காட்சிகளும் மிகவும் அருமையாக இருந்தது . குறிப்பாக ஜஸ்டினுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு பிரமாதமாக இருந்தது .
ஜஸ்டினுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு
https://youtu.be/eH4ON0hKA4A
12.1.1967
மக்கள் திலகம் எம்ஜிஆர் மறு பிறவி கண்ட தினம் .
1967 - தமிழக தேர்தல் களத்தில் அனல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் தாய்க்கு தலைமகன் திரைப்படம் வெளியானது . யாருமே எதிரபாராத துப்பாக்கியால் கொலை செய்யும் பாதாக செயல் நடந்தது . தர்மம் தலை காத்தது . மக்கள் திலகம் மறு பிறவி கண்டார்
20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் முடிவுக்கு வந்தது .மருத்துவ மனையில் இருந்து கொண்டே மக்கள் திலகம் பரங்கிமலையில் , தமிழகத்திலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் .மக்கள் திலகத்தின் எழுச்சி பயணம் தொடர்ந்தது . 1967ல் திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினார் .
அதே போல் திரை உலகிலும் பல சாதனைகளை தொடர்ந்தார் .காவல்காரனின் பிரமாண்ட வெற்றி. 1967ல் தமிழக அரசு சிறந்த படம் -பரிசு பெற்றது . லட்சக்கணக்கான ரசிகார்கள் எம்ஜிஆர் பின்னால் அணிவகுத்து நின்றது -1967 அரசியல் வெற்றிகளும் , திரை உலக வெற்றிகளும் நிருபித்து காட்டியது .