http://i1039.photobucket.com/albums/...psyjmo0pyf.jpg
Printable View
அதிகமான சிவாஜி ரசிகர்களின் வீடுகளில் அலங்கரித்த போடேடோக்களில் இதுவும் ஒன்று http://i1039.photobucket.com/albums/...pskdbka9df.jpg
கோவையில் தெய்வமகன் பல வருடங்களுக்கு முன் திரையிட்டபோது வெளியிடப்பட்ட நோட்டீஸ்
http://i1039.photobucket.com/albums/...ps6xz9rwma.jpg
சென்னையில் தெய்வமகன்
திரையிட்டபோது நடந்த இந்த நிகழ்வை தெரிந்தவர்கள் யாரேனும் எழுதுங்கள்.
நன்றி.
செந்தில்வேல்,
தங்களுடைய அபாரமான பணியினைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. பக்கம் பக்கங்களாக எழுதப்படுவதையெல்லாம் தங்களுடைய நிழற்படங்களே கூறி விடுகின்றன. குறிப்பாக மேலே காணப்படும் நிழற்படம் உண்மையிலேயே மிக மிக மிக அபூர்வமான ஒன்று. தந்தையார் சின்னையா மன்றாயர் தன் தவப்புதல்வன் நடிகர் திலகத்தை அன்புடன் அரவணைக்கும் இந்த நிழற்படத்திற்காக தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
What theaters they are tryng FOR SIVAKAMIYIN SELVAN IN CHENNAI
Raghavendran sir
http://i1028.photobucket.com/albums/...psjjlpip6w.jpg
* "அமாவாசை எப்போ.?"
என்று பாட்டி கேட்ட போது
உன்னைத்தான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
நிலவே..!"
* " நேரங்கெட்ட நேரத்தில்தான்
வந்து தொலைக்கிறது
இந்தக் காதல்..
நூலக அமைதியில்
தும்மலைப் போல.
- இந்த மாதிரி நிறைய காதல கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
நிறையப் பேர் பாராட்டியிருக்கிறார்கள்.
" நீ போட்ட காதல் வகுத்தலில்
எனக்குக் கிடைத்த
ஈவு : கண்ணீர்.
மீதி : உயிர்."
-என்கிற என் கவிதையைப்
படித்து விட்டு, ஒரு சிலர்
"உனக்கு காதல் தோல்வியா?"
என்று கூடக் கேட்டிருக்கிறார்கள்.
காதலை எழுதி, எழுதி.. எனக்கும் காதலுக்குமான
காதல்தான் அதிகமாயிற்றே
தவிர, என் காதல் படித்துக்
கோபமுற்று "ராஸ்கல்" என்று
பல் கடித்து, செருப்பு கழற்றிக்
காட்டுவதற்குக் கூட ஒருத்தி
எனக்கு வாய்க்கவில்லை.
மென்மையும்,மேன்மையுமாய்..
இனிமையும், இதமுமாய்..
இந்தப் பாடல் பார்க்கக் கிடைத்த போது, இப்படிப் பாடி
சந்தோஷிக்கவாவது ஒருத்தி
எனக்குக் கிடைத்திருக்கலாம்
என்று ஏக்கமாய்ச் சிந்தித்திருக்கிறேன்.
------------------------------
இருளில் மிதக்கும் இரவு.
இரவில் மிதக்கும் நீர்நிலை.
நீர்நிலையில் மிதக்கும் படகு.
படகில் மிதக்கும் காதல்.
காதலோடு அதில் மிதக்கும்
காதலர்கள்.
அழகே உருவாக கலைச் செல்வி.
அசத்துவதன்றி வேறொன்றறியா நடிகர் திலகம்.
கண்களைச் சிரிக்கச் செய்து
விட்டு, நம்மை வேடிக்கை
பார்க்கிற அவரது குறும்பு.
மெல்லிசை மாமன்னர் தந்த,
இனிப்புச் சாறு உள்வைத்த
பாட்டுக் கரும்பு.
இந்தப் படத்தில்தான் இந்தப்
பாடலென்பதறியாமல்
"தர்மம் எங்கே" படத்தினூடே
இந்தப் பாடல் பார்த்த சந்தோஷம்...
கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கையில், தபால்காரர்
"மணி ஆர்டர்" தந்தது போன்ற
சந்தோஷம்.
https://youtu.be/XiSD-cp9KgU
செந்தில்வேல் சார்,
அருமையான ஆவணப்பதிவுகளுக்கு நன்றி.
http://i1028.photobucket.com/albums/...psxlnogfho.jpg
நீங்கள்-
ஓட்டுநருக்கே இடமில்லாத
நெரிசல் பேருந்தில்
அமர்வதற்குக் கிடைத்த
இருக்கை போல்
ஒரு ஆச்சரியம்.
நீங்கள்-
கால் அழுத்தி நிற்கையிலே
காலின் கீழ் மணல் உருவும்
கடலலை தருகிற
ஆனந்தம்.
நீங்கள்-
பசிப் பொழுதில்
கிடைத்த நல்லுணவு.
நீங்கள்-
வேறெந்த உணவுக்கும்
அடங்காத பசி.
http://i1028.photobucket.com/albums/...psjxngaceo.jpg
குடம் குடமாய்
குளிர்பானம் குடித்தாலும்,
இளநீர் உறிஞ்சி
உதடுகள் ஓய்ந்தாலும்,
'அடங்குவேனா?' என்று
ஆர்ப்பரிக்கிற தாகத்தை,
ஒரு குவளைத் தண்ணீர்
ஓட ஓட விரட்டும்.
குளிர்பானத்திற்கும்,
இளநீருக்கும்
அடங்காத தாகம்-
எங்கள் ரசனை.
நீங்கள்-
தண்ணீர்.
RKS,
This is again for you. I have already said that no more discussions on the impending Assembly elections here in this thread. Everyone whom I had mentioned have agreed. In spite of that if you are going to write about it again under whatever pretext, then it means that you have no inclination to adhere to the rules laid down. Sorry that cannot be allowed.
As I had mentioned earlier please debate about the election related matters in Current Affairs section. I sincerely hope that my moderating tools will not be put to use.
Thanks in advance
Regards
Monotony Breaker!
அதிசய ஆடல் பாடல் இதயத் திருடர்கள்
தில்லா டாங்கு டாங்கு திருப்பிப் போட்டு வாங்கு ! தீம் தீம் ஜனக்தா ஜனக்தா அஜக்தா மஜக்தா ரையா ரப்பான் சையா சப்பான் டோலடிக்கிற பையா....
ஏதாவது புரிகிறதா ...என்னமோ போங்க!!
டப்பாங்குத்து அடி 1 : நடிகர்திலகத்தின் foot tapping steps in சதாரம்drama scene from Kalvanin Kaadhali!Quote:
ஆனாலும் பாமரனுக்கும் பூமரமாகப் புரிகிற உடல்மொழியில் கைகால் அசைவில் முகபாவனைகளில் க க போவாக உற்சாகத்தைத் தூண்டும் தூண்டில் மீன் நடனமே டப்பாங்குத்து என்னும் சாகாவரம் பெற்ற அடி பின்னுகிற இடி மின்னுகிற ஆட்ட பாட்ட தோட்டக் கலையாகும் !
இந்த சண்டமாருத தெருக் கூத்து வாரிசுக் கலையில் நிகரற்ற சாம்ராஜ்யாதிபதி நடிகர்திலகமே !அந்த உற்சாக துள்ளலை கள்வனின் காதலியோடு சேர்ந்து சதாரமாக சேதாரமில்லாமல் கண் கொட்டாமல் ரசிப்போமே!
பெண்ணாக அதகளம் பண்ணும் டி ஆர் ராமச்சந்திரன்!
உடலும் உள்ளமும் சோர்வடையும் கணங்களில் ஆற்றல் ஊற்றல் பானங்கள் தேவையில்லை!
நடிகர்திலகத்தின் இக்கான நடனமே நம்மை சுறுசுறுப்பாக்கிவிடும் கிரியா ஊக்கி!!
Quote:
Even the demi-Gods of foot tapping dances of this Universe Gene kelly and Fred Astaire would envy upon NT's dancing to the tune shaking of legs!!
https://www.youtube.com/watch?v=STeAHQyK1Kw
டப்பாங்குத்து இடி1
இதே தில்லா டாங்கு டாங்கு திருப்பிப் போட்டு வாங்கும் மனோரமா தில்லானாவில்....!
right before the eyes of NT as spectator enjoying at his original replayed!
https://www.youtube.com/watch?v=YDUzDwY2Bs0
டப்பாங்குத்து மின்னல்1 :
அதிசயத் திருடன் ஜெமினியும் டப்பாங்குத்து குத்துகிறாரே !
Sadhaaram Hero GG too tries a leg shaking as the Adhisaya Thirudan!
https://www.youtube.com/watch?v=vvSgA7CW54g
திருச்சி- கெயிட்டி திரையரங்கில் இன்று
( 26.03.2016 ) முதல் தினசரி
நான்கு காட்சிகளாகத்
திரையிடப்பட்டிருக்கிற,
காலம் வென்ற கலைப்படைப்பாம் நம் நடிகர்
திலகத்தின் "தங்கப் பதுமை"
திரைக்காவியத்திற்காக
ஒட்டப்பட்டிருக்கிற சுவரொட்டிகள்.
http://i1028.photobucket.com/albums/...psp6ehfiq7.jpg
http://i1028.photobucket.com/albums/...pspgfazypo.jpg
http://i1028.photobucket.com/albums/...psbvuroq81.jpg
http://i1028.photobucket.com/albums/...psbitigyns.jpg
http://i1028.photobucket.com/albums/...psym5aekai.jpg
தகவலுக்கும்,நிழற்படங்களுக்கும் நன்றி:
திரு.S.அண்ணாதுரை,
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர்.
அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டுமாம்....
அப்படி ஒரு தடவை கதவை தட்டும்போதே , அதை விட்டுடாம வீட்டுக்குள்ளே பிடிச்சு தள்ளி கதவை சாத்திடணும்..”
# ஹஹா... இன்று நான் ரசித்துச் சிரித்த நண்பரின் பதிவு இது...!
‘தூக்குத்தூக்கி’ என்று ஒரு படம்...சிவாஜி நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்தது...
அந்தப் படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள்..
சிவாஜிக்கு பின்னணி பாடுவதற்காக , அப்போது பிரபலமாக விளங்கிய பாடகர் திருச்சி லோகநாதனிடம் கேட்டபோது அவர் சொன்னார்...
“ஒரு பாடலுக்கு ஐநூறு ரூபாய். எட்டும் பாடுவதற்கு நான்காயிரம்”
.”எட்டாயிரமா..?கொஞ்சம் குறைச்சுக்கலாமே..?” என்று தயாரிப்பாளர்கள் கேட்க...
“அப்படி ரேட்டைக் குறைத்துக்கொண்டு என்னால் பாட முடியாது. வேணும்னா உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். மதுரையிலிருந்து செளந்தரராஜன் என்கிற புதுசா ஒரு பாடகர் வந்திருக்கிறார். அவரைக் கேட்டுப்பாருங்கள்” ...
திருச்சி லோகநாதனின் அந்த ஆலோசனையைக் கேட்டு ஆளுக்கு ஒரு பக்கம் தேடி, அடுத்த நாளே தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.ஸைப் பிடித்தார்கள்.
“எட்டுப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள். மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பளம் தர முடியும்.... ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா?” என்று தயக்கத்துடன் தயாரிப்பு தரப்பு கேட்க.... எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாகத் தலையாட்டினார் டி.எம்.எஸ்.
காரணம்....மதுரை பஜனை மடங்களில் பாடி, அதற்குச் சன்மானமாக காப்பி ..காராச்சேவு, பக்கோடா மற்றும் இரண்டு ரூபாய் வாங்கிய காலம் அது...
ஆனால்..அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
“தூக்குதூக்கி” கதாநாயகன் சிவாஜி சொன்னார்.. "‘பராசக்தி’யில் குரல் கொடுத்த சி.எஸ். ஜெயராமன்தான் எனக்குப் பொருத்தமாக இருக்கும்... அந்த ஜெயராம பிள்ளையைப் பாடவைக்காமல், நேற்று வந்தவரை எல்லாம்…” என்று அதிருப்தியுடன் சிவாஜி இழுக்க...
பார்த்தார் டி.எம்.எஸ்..! கதவைத் தட்டும் அதிர்ஷ்டத்தை உள்ளே பிடிச்சு தள்ளி கதவை சாத்திடணும் என்று உறுதியான முடிவை உடனே எடுத்தார்...
. சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சிவாஜியிடம் ஒரு சவால் விட்டார்...
“ நான் பாடுவதை ஒலிப்பதிவு செய்து கேளுங்கள். பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக்கொள்கிறேன்”
அசராமல் டி.எம்.எஸ். சொன்னதை , அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டார் சிவாஜி.
மளமளவென்று மூன்று பாடல்களை ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக்காட்டினார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.
சிவாஜிக்கு ஒரே சந்தோஷம்... “அட..என் குரல் மாதிரியே பாடி இருக்காரே...நல்லா வந்திருக்கு. எல்லாப் பாட்டையும் நீங்களே பாடுங்க”
‘பெண்களை நம்பாதே…’, ‘ஏறாத மலைதனிலே…’ ..என தூக்குத்தூக்கியின் அத்தனை பாடல்களையும் டி.எம்.எஸ்ஸே பாடி அமர்க்களப்படுத்தினார்...!
# டி.எம்.எஸ்.வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தை , அதிர்ஷ்டம் என்பதா..? தைரியம் என்பதா..?
# இதற்கு நண்பர் சொன்ன பதில் பொருத்தமாக இருக்கிறது...
“அதிர்ஷ்டம் என்பது ஒருதலைக்காதல் ..
தைரியசாலிகளை மட்டுமே அது எப்போதும் காதலிக்கிறது...!”
courtesy net
http://i1028.photobucket.com/albums/...psu4ompkve.jpg
உலகமெல்லாம் உன்னைப்
புகழ வேண்டும்
என்கிறாள் அம்மா.
மதிப்பும்,மரியாதையுமாய்
நீங்கள் வலம் வரும்
இடங்களிலெல்லாம்
மகிழ்வுடன் உங்கள்
அருகிருக்க வேண்டும் நான்
என்கிறாள் மனைவி.
எல்லோரும் ஒன்றாக,
எல்லாமும் நன்றாக
என் தலைமைக்கு
ஏங்குகின்றன
சொந்த பந்தங்கள்.
எப்போதும் மாறாத
நேரந் தவறாமையையும்,
தொழில் பக்தியையும்
எதிர்பார்க்கிறது
வேலை பார்க்குமிடம்.
எல்லோரிடமும்
கேட்கிறேன்..
நானென்ன
நடிகர் திலகமா?
22அல்லது 23 வருடங்களுக்கு முன்பு ஜுனியர்விகடனில் வெளியான செய்தி http://i1039.photobucket.com/albums/...psrki0eirt.jpg
http://i1028.photobucket.com/albums/...psdmrfahgw.jpg
அந்தக் குழந்தைக்கான
அன்புத் தூளிகள்,
அத்தனை
உத்திரங்களிலும்
தொங்கின.
அந்தக் குழந்தையை
முத்தமிட
அவனி முழுதும்
உதடுகள் குவிந்தன.
அந்தக் குழந்தை
அதிவேகமாக
வளர்ந்தது.
என்னென்னமோ
சாதனை விளையாட்டு
விளையாடிற்று.
எப்படியெப்படியோ
தன்னை
நிரூபித்தது.
அகவை முதிர்ந்த
எழுபத்து நான்கிலும்
இருந்தது-அது
குழந்தையாகவே..
எல்லோருக்கும்
பிரியமான
குழந்தையாகவே..!
http://i1028.photobucket.com/albums/...pskpcetagd.jpg
பிறப்பென்பதென்ன..?
ஒரு அன்னை,
தன் பத்து மாத
வயிற்றுச் சுமையை
பூமியை நோக்கிப்
புறந் தள்ளுவதின்
வெளிப்பாடா?
பூமியில்
ஒரு மனிதனுக்கான
வெற்றிடத்தை நிரப்பும்
இறைவனின் செயல்பாடா?
ஆமாம்.. ஆமாம்
என்கின்றன
ஆயிரமாயிரம்
சராசரி பிறப்புகள்.
இல்லை.. இல்லை
பிறப்பென்பது
இலட்சியக் கோட்டைக்குச்
செல்லும் வழியென்றும்,
வாழ்வைப் பேசும்
ஆண்டவன் மொழியென்றும்
உணர்த்துகின்றன..
உங்களுடையதைப் போன்ற
சில சாதனைப் பிறப்புகள்.