-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பாக*உள்ள விவரங்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
சன் டிவி.-----------------
05/05/20* செவ்வாய் - இரவு 9.30 மணி* -ரிக்ஷாக் காரன்*
07/05/20 - வியாழன் -இரவு 9.30 மணி - குடியிருந்த கோயில்*
சன் லைப்*-
-----------------
-04/05/20 -திங்கள்* காலை 11 மணி - நாளை நமதே*
06/05/20-புதன்* - காலை 11 மணி* *- வேட்டைக்காரன்*
08/05/20 -வெள்ளி -காலை 11 மணி -ஆனந்த ஜோதி*
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்*-
----------------------------------
-05/05/20-செவ்வாய் - பிற்பகல் 1.30 மணி -ரகசிய போலீஸ் 115
6/05/20-புதன்* * - பிற்பகல் 1.30 மணி -குடியிருந்த கோயில்*
07/05/20* * -வியாழன் -பிற்பகல் 1.30மணி -தேடி வந்த மாப்பிள்ளை*
08/05/20 -வெள்ளி* - பிற்பகல் 1.30 மணி* - நல்ல நேரம்*
-
எங்கள் தலைவா (இறைவா ) உன்னை போல் மனித தெய்வம் இவ் உலகில் உண்டா தரணி போற்றும் தன்னிகர் இல்லா எங்கள் தங்க தலைவா ,மக்களுக்க்கவே வாழ்ந்த "மக்கள் திலகமே "
எங்களின் இதயமே நீ தானே.
================================================== =========
எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
# இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
#“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
“லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
# எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!..... Thanks...
-
எம்ஜிஆர் என்ற விந்தை மனிதர்.....
************
அவரிடம் ஒரு அரிதான குணம் இருந்தது. அதாவது ஆங்கிலத்தில் எம்பதி என்று சொல்வார்கள்.
அடுத்தவர்களின் தேவைகளை நாமே புரிந்துகொண்டு அதற்கேற்ப உதவிசெய்வது...
உதாரணத்திற்கு, ஒருவர் எம்ஜிஆரை சந்தித்து உதவிகேட்பார்..என்ன ஆச்சர்யம்..!
அடுத்த நிமிடமே அவருக்க போதுமான பணமோ, தேவையான பொருளோ எம்ஜிஆரிடமிருந்து கிடைத்துவிடும்...
அது காலேஜ் சீட்டாக இருக்கலாம்,, பணம் கட்டி கல்யாண மண்டபம் புக் பண்ணியதற்கான ரசீதாக இருக்கலாம்..நகையாக இருக்கலாம்..
இதெல்லாம் மாயஜாலமா என்றுகூட பலரும் வியந்ததுண்டு...
ஆனால் உண்மை என்ன தெரியுமா? எம்ஜிஆர் என்ற மாமனிதன் சக மனிதர்களை நேசித்த விதத்திற்கான வியப்பூட்டும் மார்க்கம் அது..
எம்ஜிஆரை சந்திக்க ஒருவர் நேரம் கேட்கிறார் என்றாலே, அவர் எதற்காக சந்திக்க விரும்புகிறார், அவரின் உண்மையான தேவை என்ன என்பது போன்ற விவரங்கள் அடுத்தடுத்து ரகசியமாக திரட்டப்பட்டுவிடும்...
சம்மந்தப்பட்டவரிடமோ அல்லது அவருக்கு நெருக்கமானவர்களிடமோ எதுவுமே காட்டிக்கொள்ளாமல் ஜாடைமாடையாக பேசி எம்ஜிஆரின் உதவியாளர்கள் வட்டாரம், விஷயத்தை திறமையாக கறந்துவிடும்.
அந்த தகவல்கள் அப்படியே எம்ஜிஆரின் காதுகளுக்கு போகும்.. இதன் பிறகு உதவி கேட்டு வருபவருக்கு தேவையான விஷயம் ரெடியாக ஆரம்பிக்கும்.
விஷயம் கைக்கு கிடைத்ததும், சந்திக்க விரும்பியவரை வரச்சொல்வார் எம்ஜிஆர்..
உதவி வேண்டும் என்று உதடுகள் ஆரம்பிக்கும் முன்பே அந்த மனிதரிடம் அவருக்கு தேவையான விஷயத்தை கைமேல் வைத்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்துவிடுவார் மக்கள் திலகம்...
அதனால்தான், வீட்டில் உலைவைத்து விட்டு நம்பிக்கையோடு எம்ஜிஆர் வீட்டுக்கு சென்றால் கண்டிப்பாக அரிசியோடு திரும்பலாம் என்று பெருமையோடு சொல்வார்கள்....... Thanks...
-
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்த பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை. என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!
================================================== ======
#"உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்..... நீ வேலை தருவியா மாட்டியா?" - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை!
அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், "போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க..... பேசலாம்" என்கிறார்.
ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், "இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?"
"போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்!" என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.
உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர். அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!
அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்..... கூடவே அரசாங்க சம்பள கவர்!
புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.
அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!
அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா?.... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா?
பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!
புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.
எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!
எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்த பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை. என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!..... Thanks...
-
" ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''
மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன். அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.
முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறார் . சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்....... Thanks...
-
எம்.ஜி.ஆரே பாரத் பட்டத்தை திருப்பியளித்து, அப்போதைய மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சருக்கு எழுதிய கடிதம் எல்லாவற்றையும் விளக்குகிறது.
திரு. ஐ.கே.குஜ்ரால், மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர், புதுடில்லி, 21.03.1973.
மதிப்பிற்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,
கடந்த 1972-ஆம் ஆண்டுக்கான “பாரத்” விருதைப் பெற்றவன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் பெருவிழிப்பை நீங்கள் அறிவீர்கள் என்றும், இந்த உணர்ச்சி வெள்ளத்தின் நீரோட்டத்திற்கு ஆட்பட்டுவிட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றும் நம்புகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், ஆளும் தி.மு.க.கழகத்திற்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில் மாநிலகல்வி அமைச்சரான திரு நெடுஞ்செழியன் பின்கண்ட பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.
“பாரத் விருதை வேறொரு நடிகருக்கு வழங்க தேர்வுக்குழு முடிவு செய்தது. இதை அறிந்த நமது முதல்வர் கலைஞர், திரு ஏ. எல். சீனிவாசனை அழைத்து, எம்.ஜி.ஆருக்கு இந்த விருது கிடைக்க முயற்சி செய்யுமாறு கூறினார். இதற்காக திரு ஏ.எல். சீனிவாசன் கடும் முயற்சிகள் மேற்கொண்டார். சாதகமான கருத்து கூறுவதற்காக பலரை தன்பக்கம் மாற்றினார். ஆனால், தேர்வுக்குழு தலைவரான திரு. வி.கே. நாராயணமேனன் எளிதில் இணங்கவில்லை. நமது முதல்வரான கலைஞர், இதனை அடைய வைக்க பல வழிகளைக் கையாண்டார். இந்த முயற்சிகள் எல்லாம் எதற்காக? மற்ற நடிகருக்கு கிடைப்பதற்கு முன் எம்.ஜி.ஆருக்கு விருது கிட்டவேண்டும் என்பதற்காகதானே? அந்த இன்னொரு நடிகர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை”
இந்த அறிவிப்பு 8.02.1973 தேதியிட்ட ஒரு வார ஏட்டில் வெளிவந்தது. மிக அதிகமாக விற்பனை ஆகும் தமிழ் வார ஏடு அது. இந்த செய்தி, அந்த இதழின் வாசகர் ஒருவரின் கிண்டலான விமர்சனத்திற்கு இரையானது. அந்த வாசகரின் கடிதம் 15.2.73 தேதியிட்ட இதழில் பிரிக்கப்பட்டிருந்தது. அதை இங்கு மீண்டும் தருகிறேன்.
“எம்.ஜி.ஆருக்கு பாரத் விருது பெற்றுத் தருவதற்காக தேர்வுக்குழு தலைவரான திரு நாராயண மேனன் விஷயத்தில் பலவழிகளை முதல்வர் கலைஞர் கையாண்டதாக நெடுஞ்செழியன் கூறியுள்ளார். இந்த செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது, இந்த காரியத்திற்காக ஒருவரை இணங்க வைப்பது குற்றமல்லவா? அதுவும் ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்யலாமா?
இந்த.... அதை ஒரு மாநில அமைச்சர் பெருமையாக கூறிக்கொள்வது வேடிக்கையாக இல்லையா?”- இவ்வாறு அந்த வாசகனின் கடிதம் இருந்தது.
இத்தகைய கருத்துக்கள் வெளிவந்த பின்னரும் முதல்வரிடமிருந்தோ, தேர்வுக்குழு அதிகாரிகளி டமிருந்தோ இதனை மறுத்து மறுப்புரை வரவில்லை. முதல்வர் ஓர் கூர்மையான அரசியல்வாதி என்பதால் அவர் மறுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தேர்வுக்குழு அதிகாரிகளின் மவுனம் எனக்கு வியப்பைவிட கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
தேசிய அளவில் நுண்கலைத்திறனை தேர்வு செய்வதற்காக அமர்த்திடும் குழுவின் நடுநிலைத் தன்மையின் மீது எனக்கு மெத்த மதிப்பும், மரியாதையும் உண்டு. நீதியின் அடிப்படையிலும், பேதமற்ற நிலையிலும்தான் அந்தக்குழு செயல்படுகிறது என்பதே எனது நிச்சயமான அபிப்பிராயமாகும்.
இப்போது அந்தக் குழுவின் மீதும் அதன் தலைவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கிற உள்நோக்கம், முறைகேடான நடைமுறைகள் இவற்றை மென்மையாகக் குறிப்பிடவேண்டுமானால், 'நான் அதிர்ச்சியடைந்தேன்' என்றுதான் கூறுவேன். எனது உண்மையான உழைப்பின் காரணமாக இந்த விருது பெறும் தகுதி எனக்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.
இந்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த கவுரவம் என்றும் நான் மதிக்கிறேன். ஆனால், நடுநிலை தவறாத தீர்ப்புக் காரணமாக இந்த விருது கிடைத்தால் மட்டுமே நான் பெருமிதம் கொள்ளமுடியும். தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியும் ஊழல் அற்றதாக விளங்கவேண்டும் என்று நான் கூறி வருகின்ற காரணத்தால், தமிழக அரசியலில் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றேன்.
ஆனால், முறையற்ற வழிகளால் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவும் இயலவில்லை. இந்தச் சம்பவங்கள் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது.
இந்த விருதின் தன்மைகள் பாதிக்காத வகையில், தகுதியை தீர்மானிக்க கையாளப்பட்ட வழி முறைகளைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு பார்க்கும்போது இனியும் இந்த விருது என்வசம் வைத்திருப்பது நியாயமில்லை என்று நான் கருதுகிறேன்.
எனவே இந்த விருதினை திருப்பி அனுப்புகிற நேரத்தில் எனது செயலை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது முடிவின் பின்னால் உள்ள உணர்வை பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் பிரதான பாத்திரம் வகிக்கும் ஒரு நியாயமற்ற சர்ச்சையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். தேர்வுக்குழு போன்ற உயர் இலக்கிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களை அரசியல் தலைவர்களின் தந்திரோபாயங்களுக்கு ஆட்படவிடாமல் காத்து வருவதுடன், நீதி வழுவாமுறையில் கலைஞர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படவும், உரியமுறையில் அவர்கள் உற்சாகம் பெறவும் வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் அன்பன்
எம்.ஜி.ராமச்சந்திரன்........ ( இத்தகைய மதிப்பு, மரியாதை மிகுந்த ஒரு ஜனநாயக நாட்டின் உயரிய விருதை, இது போன்ற ஒரு விமர்சனம் செய்ய பட்டது என்ற ஒரு காரணத்திற்காக விருதை திரும்பி உங்களிடமே அனுப்பி விடுகிறேன் என கூறிய சம்பவம் உலகளாவிய தேசங்களில் எங்காவது நடைபெற்றிருக்கிறதா?! அப்பப்பா... எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு தான் என்னவொரு தில்?!) ....Thanks.........
-
அன்று மட்டுமல்ல ஏன்றென்றும் பாரத் விருதுக்கு தகுதி பெற்ற ஒரே நடிகர் தலைவர் புரட்சித்தலைவர் மட்டுமே. அவருக்கு வழங்கியது முற்றிலும் நியாயமானதே.
இதில் கருணாநிதி சிபாரிசால் தலைவருக்கு கிடைத்தது என்பதை கண்டிப்பாக ஏற்கமுடியாது. கருணாநிதி அந்தளவிற்கு தலைவருக்கு உதவி செய்யும் மனிதர் அல்ல. அவர் தன் மகன் மு.க.முத்துவிற்காக வேண்டுமானால் சிபாரிசு செய்திருப்பாரே ஒழிய கண்டிப்பாக எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு கிடைக்க செய்திருக்க மாட்டார். அவருக்கு கிடைத்த விருது தன்னால்தான் என்று பொய் பிரச்சாரம் செய்திருப்பார்கள். அது திமு.க.வின் வழக்கம்.
இவர்களுக்காக இந்திய அரசாங்கம் கொடுத்த பாரத் பட்டத்தை திருப்பி அளித்தது வருத்தத்திற்குறிய செயல்.......சத்யகாந்த்..... Thanks...
-
நோபல் பரிசு அளிக்க தகுதி படைத்த எம். ஜி .ஆரூ.க்கு இது ஒரு ஜுஜுபி... ஆறுமுகம்.... Thanks...
-
"குலேபகாவலி" காவியம்; மூன்று திரைக்கதை அமைப்புகளைக் கொண்ட ஒரு மிகப்பெரிய வெற்றியை திரைப்படம் ...குலேபகாவலி எம்ஜிஆர் இளமை துள்ளல் காணக்கிடைக்காத காட்சி இந்த திரைப்படத்தின் புலியுடன் மோதும் காட்சியில் பெரிய பள்ளத்தை வெட்டி எம்ஜிஆர் இறங்கிவிட்டார்கள் எப்போதும் எம்ஜிஆர் தற்பாதுகாப்பு துப்பாக்கி வைத்திருப்பார்முதலில் சண்டைக்காட்சி ஆரம்பித்தவுடன் புலி கொஞ்சம் மிரள ஆரம்பித்தது எம்ஜிஆரின் கொஞ்சம் துரத்த ஆரம்பித்தது தலைவர் உடனே சமாளித்துக் கொண்டு தன் கையில் இருந்த துப்பாக்கி எடுத்து மேல் நோக்கி சுட்டு விட்டு மேலே வந்து விட்டார்பிறகு புலி யை பழகி வைத்திருக்கும் மனிதனின் மீண்டும் புலி யை நன்றாக பழகி விட்டு பிறகு இரண்டாவது சாட்எடுக்கப்பட்டது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது இந்த திரைப்படம் குறிப்பாக தங்கவேலு எம் ஜி ஆர் ஈ பி சரோஜா சந்திரபாபு இவர்கள் இணைந்து கலக்கும் காமெடி எப்போதும் காண முடியாது... எந் த சோகத்தில் இருந்தாலும் அந்த நிகழ்வை பார்த்தால் மனது சந்தோஷமாகி விடும்.... Thanks...
-
#வாத்தியார் #படம்...!
வீட்ல ஏதும் வேலைகளிருந்தா சீக்கரம் முடிங்க...
இன்று காலை 10:30 மணிக்கு ராஜ்டிவியில்....!
ராஜ்டிவி நிர்வாகத்திற்கு...
தயவு செய்து காட்சிகளை கட் பண்ணாதீங்க...எப்போதும் போல்...
விளம்பரங்களைக்கூட பொறுத்துக்கொள்கிறோம்...
#உலகம் #சுற்றும் #வாலிபன்.......... Thanks...
-
புரட்சி தலைவர் அன்றே ஆராச்சியில் உலகத்தை அளிக்கும் ஒரு மருத்துவ வெப்பனை கண்ட றிந்து அதை பயர் செய்தால் உலகமே எரிவது போன்று காட்டினார்.
அன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றது போன்றும்
அதன் ரகசியத்தை பாதுகாப்பார்.
அதே போன்று இன்று அந்த விஷப் பொருள் காற்றில் பரவி ஏரியும்.
இன்று அதே போன்று ஒரு விஷப் பொருள் பரவி உலக மனித உயிர் செத்து மடிகிறார்கள்.
இது இன்று உண்மை ஆகி விட்டது.
எம்ஜிஆர் ஒரு தனிப்பிறவி,தெய்வபிறவி, அபூர்வப்பிறவி, அதிசயபிறவி, மறுபிறவி.
இவண்.
ரோட்டரியன். ஆசிரியன்
மோகன் ராஜ் என்ற
மோகன் குருசாமி............ Thanks.........
-
கறுப்பு வெள்ளையில் கடைசியாக சூப்பர் ஹிட்டான படம் காவல்காரன். அலிபாபா,மற்றும் நாடோடி மன்னன் பகுதி கலர் படத்துக்கு பிறகு வெளிவந்த கலர் படம்தான்"படகோட்டி". அதன்பின் தொடர்ச்சியாக எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா இது போன்ற காவிய படங்கள் வெளியான பிறகு ரசிகர்களுக்கு கலர் படம் என்றால் ஒரு மயக்கம் என்றே சொல்லலாம்.
அதன்பிறகு எம்ஜிஆரை வைத்து படம் எடுப்பவர்கள் அனைவரும் கலர் படத்தையே எடுக்க விரும்பினார்கள்.
தேவர் மற்றும் ஓரிரு பழைய தயாரிப்பாளர்கள் எடுத்த கறுப்பு வெள்ளை படங்களை தவிர புதிய படங்கள் அனைத்தும் கலர் படங்களாகவே தயாரிக்க ஆரம்பித்தார்கள். எம்ஜிஆரை கலர் பட கதாநாயகன் என்றே அழைத்தார்கள். குண்டடி பட்ட பின் வெளியான முதல் படம் "அரச கட்டளை". மே 19 , 1967 அன்று வெளியானது. எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணி டைரக்ட் செய்த ஒரே படம்.
கூடவே சிவாஜியின் "தங்கை" படமும் வெளியானது. பாலாஜி தயாரிப்பான இந்த படத்தில் சிவாஜி தனது பாணியை மாற்றி எம்ஜிஆர் பட பாணியில் எடுத்த படம். பக்திபட வரிசையும் குடும்ப கதை வரிசையும் இனி வேலைக்காகாது என்று எம்ஜிஆர் பார்முலாவுக்கு மாறி எடுத்த படம். எம்ஜிஆருக்கு சமூக படம் சரியாக வராது என்று கூறியவர் இன்று எம்ஜிஆரின் பாணிக்கு மாறி எடுத்த படம்தான் தங்கை. படம் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் பாலாஜிக்கு போட்ட காசு கைக்கு வந்து விட்டது.
அரசகட்டளையில் டச்அப் ஒர்க் மட்டுமே பாக்கி இருந்ததால் படம் முதல் படமாக வெளிவந்தது. படத்தின் எடிட்டிங் ஒர்க்கில் எம்ஜிஆர் பணியாற்றவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.
"அரசகட்டளை" கவர்ச்சிகரமான வால் போஸ்டருடன் வெளிவந்தாலும் படத்தின் நீளம் மிக அதிகம். அதுவும் தலைவர் வரும் காட்சிகள் என்றால் அனைவரும் கண்டு .ரசிப்பார்கள். ஆனால் நாகேஷின் பொருந்தாத நீளமான காமெடி படத்தை சலிப்படைய வைத்தது. ரசிகர்கள் தியேட்டரில் நாகேஷ் வரும் காட்சியில் எல்லாம் விசிலடித்து கத்தி தங்கள் வெறுப்பை காட்டினார்கள்.
ஆரம்ப காட்சி பார்த்து விட்டு வந்தவுடனே ரசிகர்கள் நாகேஷ் காமெடியை குறைத்து படத்தின் நீளத்தை குறைத்தால் படம் விறுவிறுப்பாக அமையும் என்ற வலியுறுத்திய பிறகு காமெடி காட்சிகளை குறைத்து மீண்டும் இடைவேளை காட்சியை மாற்றி அமைத்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்ய தவறியது.
சென்னையில் 42 நாட்கள் மட்டுமே ஓடியது. மற்ற ஊர்களில் அதிக பட்சமாக 63 நாட்கள் ஓடியது.அடுத்தடுத்த வெளியீடுகளில் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டியது.முதல் வெளியீட்டில் வெள்ளிவிழா கண்ட படங்கள் அடுத்த வெளியீடுகளே காணாத நிலையில் எத்தனை தடவை வந்தாலும் வெற்றி பெறும் "அரச கட்டளை" என்பது ஆண்டவன் இட்ட கட்டளை.
குண்டடி பட்டபின் வந்த முதல் படம் என்பதால் மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமானதால் அடுத்த படமான காவல்காரனை வெகுவாக நம்பியிருந்தார்கள்.
அடுத்த பதிவு விரைவில்......SK.,....... Thanks...
-
எம்.ஜி.ஆரின் மனிதநேயத்திற்கு எல்லையுண்டா ?
அந்த பத்திரிகையாளர் முதல்வர்
எம்ஜிஆரின் பல திட்டங்களை கிழித்து
எழுதியவர். எப்போதும் எதிர் விமர்சனம்தான்.
செய்தியாளர் சந்திப்பின் போதும்கூட நேருக்கு நேராக, முதல்வர் என்றும் பாராமல் விமர்சனங்களை முன்வைப்பார்.
அப்படியானவருக்கு குடிப்பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. பணி நேரம் போக அதில் மூழ்கிவிடுவார்.
ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிருந்து புறப்பட்ட #எம்ஜிஆரின் கார், அடையாறு பாலம் தாண்டினதும் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று வாகனத்தை நிறத்தச் சொல்கிறார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
"ரோட்டோரமா ஒரு ஆள் சாய்ந்து கிடக்கிறார். நம் ------மாதிரி தெரிகிறது. போய் அவரா என்று பாருங்கள்" என்கிறார். இறங்கி ஓடிச்சென்ற பாதுகாப்பு அதிகாரி, திரும்ப வந்து, ‘அது அவர்தான் ஐயா’ என்கிறார்.
"அப்படியா, தூக்கி வண்டியில் போடுங்கள்" என்கிறார்.
அதன்படி அவரைத் தூக்கி பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்தில் கிடத்திக் கொள்கிறார்கள். மிதமீறிய குடியால் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.
உடனிருந்தவர்களுக்கு ஒரு அச்சம். 'அவ்வளவுதான், இன்னைக்கு அந்த ஆளுக்கு #ராமாவரம் தோட்டத்தில் பூஜைதான்' என்ற நினைப்புக்கு வர, எம்ஜிஆரோ, "பத்திரிகையாளரின் வீடு எங்க இருக்கு? அங்க வண்டிய ஓட்டு" என்கிறார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக உடனிருந்த ஒரு உதவியாளருக்கு அவர் குடியிருக்கும் வீடு தெரிந்திருந்தது.
அதன்படி வாகனம் தியாகராயர் நகர் பகுதி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம். கும்பல் கூடிவிட்டது. செய்தியாளரின் வீட்டம்மாவிடம், ‘ஏன் இப்படி இருக்கின்றார். இப்படியே ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்?’ என அக்கறையோடு விசாரிக்கின்றார்.
அவர்களோ, ‘கல்லீரல் முழுதும் கெட்டுப்போய்விட்டது. இதற்குமேலும் அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்" என்ற கதையைச் சொல்லி, நாங்களும் முடிந்த மட்டும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டாலும், இப்படி வெளியேறி விடுகின்றார்" எனக்கூறி வருந்தினார்கள்.
நிலையை புரிந்துகொண்ட #எம்ஜிஆர், வாகனத்தை #கல்யாணி #மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். சென்றதும் அவரை அட்மிட் செய்து சீனியர் #மருத்துவர்களை அழைத்து, "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.
அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் #மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார். எல்லாமும் எம்ஜிஆர் சொன்னதின் பேரில் நடந்து கொண்டிருந்தது-
எம்.ஜி.ஆரும் இடையில் ஓரிரு முறை நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு போயிருக்கிறார்.
ஓரிரு மாதங்கள் ஓடியது. அந்த பத்திரிகையாளரின் #உடல்நிலை நன்றாக தேறி, மீண்டும் #நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.
#கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக்கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார் எம்ஜிஆர் . பத்திரிகையாளரும் சிரித்தபடி பதிலளிப்பார். அவ்வளவுதான். மற்றபடி எந்த #சமரசமும் இருக்காது.
தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், (அப்போது அது ஒரு பேஷன்) மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை. பேச்சிலும், செயலிலும் ஒரு நிதானம் மிக்கவராக இருந்தார்.
காலம் ஓடியது.
ஒரு நாள் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்க்கிறார்கள்.
‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.
எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்த ‘#தென்னகம்’ மு.கோ. வசந்தன் அண்ணன் அவர்கள் இதை சொன்னபோது உடைந்து அழுதுவிட்டார். நானும்தான்.
மனிதர்கள் எப்படியெல்லாம் இருந்துள்ளார்கள்?
ஒத்த ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்து ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தார் எம்ஜிஆர்.
அந்த பத்திரிகையாளருக்கு, இப்படியாக செய்தேன் என்று எம்ஜிஆரும் சொல்லிக் கொண்டதில்லை. அதைச் சொல்லிக்காட்டி, ‘என்னை இப்படியெல்லாம் விமர்சிக்கின்றாயா”? என்று கேட்டதுகூட இல்லை. மருத்துவமனையில் சேர்த்ததோடு அந்த சம்பவத்தை மறந்து போனார் எம்ஜிஆர். சிலருக்கு மட்டுமே அது தெரிந்திருந்தது. அவ்வளவுதான்! (Edited version)
----------------------------------------------------------
இப்படி 'குமுதம்' இதழில் எழுதியதாக
திரு பா.ஏகலைவன் தன் முகநூலில்
பதிவு செய்துள்ளார். அந்த நான்கெழுத்து பத்திரிகையாளரை பற்றி 'தினமலர்'
திரு நூருல்லா எழுதி 'இதயக்கனி' இதழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளேன். அந்த பத்திரிகையாளர் 'அண்ணா' நாளிதழில்
எம்.ஜி.ஆரின் விருப்பத்தின் பேரில்
பணி செய்ததுமுண்டு....... Thanks...
-
#இந்தக்காலத்தில் #இப்படியுமா!
யானைக்கு ஒரு குணம் உண்டு. தன்னுடைய காதில் எறும்பைவிட நினைத்ததவனையும் நினைவில் வைத்திருக்கும். தன் நேசத்துக்குரிய கரும்பைக் கொடுத்தவனையும் நினைவில் வைத்திருக்கும். இந்த யானை குணம், #இதிகாசத்தலைவன் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆருக்கும் பொருந்தும்.
இசை மணி’ என்றும் ‘இசை ஞானச் செம்மல்’ என்றும் கர்னாடக இசையுலகில் கொடிகட்டித் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த தில்லையாடி சிவராமன் என்பவர். எம்.கே. தியாகராஜ பாகவதரின் பாசத்திற்குரியவர். கம்பீரமான அவரது குரல் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவரை வரவேற்பறையில் இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே போகிறார் எம்ஜிஆர்.
அப்போது அங்கு வேலை பார்க்கும் பசுபதி என்பவர் தில்லையாடி சிவராமனை தனியே அழைத்து “இப்பொழுது எம்ஜிஆர் நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். வறுமையில் வாடுபவர் அவர். ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பன். இந்த வருமானத்தைக் கொண்டுதான் அவர் குடும்பம் நடத்துகிறார். அவருடைய பிழைப்பில் ஏன் நீங்கள் மண்ணை அள்ளிப்போடுகிறீர்கள்?” என்று புலம்ப, மனம் நெகிழ்கிறார் அவர்.
அப்படியே சந்தடியின்றி வந்த வழியே மெதுவாக திரும்பிப் போய்விடுகிறார். எம்ஜிஆர் திரும்பி வந்து அவருக்கு அட்வான்ஸாக பணம் கொடுக்க நினைத்தபோது அவர் அங்கு இல்லை.
நடந்ததை பிற்பாடு தெரிந்துக்கொண்ட எம்ஜிஆருடைய மனதில் தில்லையாடி சிவராமனின் #மனிதநேயம் கல்வெட்டாய் பதிந்து விடுகிறது.
‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று ஆச்சரியப்பட்டு போகிறார். அவரை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று மனதில் ஆவல் கொள்கிறார். அந்த தருணம் ஒருநாள் வந்தது.
இந்த சம்பவம் நடைபெற்று காலம் கடந்து விடுகிறது. தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் எம்ஜிஆரின் ‘இன்பக்கனவு’ நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது. நாடகக் குழுவிற்கு மேலாளராக இராம.வீரப்பன் நியமிக்கப்பட்டிருந்தார். “இன்பக்கனவு” நாடகத்தை திருவாரூரில் நடத்த தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன்.
எம்ஜிஆரைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். இதற்கு முன் ஏற்பட்ட சந்திப்பில் தில்லையாடி சிவராமனுடன் ஏற்பட்ட அனுபவம் எம்ஜிஆரின் நினைவில் வர, போக்குவரத்து செலவு மாத்திரம் கொடுத்தால் போதும் #நாடகத்தை #இலவசமாக நடத்தித் தருகிறேன் என்று வாக்களிக்கிறார்.
தில்லையாடி சிவராமன் பூரித்துப் போகிறார். "#இந்தகாலத்தில் #இப்படியும் #ஒரு #மனிதரா...?" மகிழ்ச்சியை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவசர அவசரமாக ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ. யிடம் கொடுத்துவிட்டு நடையைக் கட்டுகிறார்.
நாடகம் நடத்த எட்டாயிரம் ரூபாய் வரை தொகை வசூலிக்கும் எம்ஜிஆர் எப்படி #இலவசமாக நடத்திதர ஒப்புக்கொண்டார் என்று விளங்காமல் வீரப்பன் குழம்பிப் போகிறார்...
வீரப்பா...!
"தில்லையாடி சிவராமனின் தியாக மனப்பான்மைக்காக என்றாவது ஒரு நாள் பரிகாரமாக உதவி புரியவேண்டும்... என்று நான் நினைத்திருந்தேன். இன்று அதை செய்தும்விட்டேன். என் மனதில் இருந்த மிகப்பெரிய #குறை #நீங்கியது. இப்ப தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு..." என்று கண்ணீர் மல்கினார்.
நமக்கு இதையெல்லாம் பார்க்கும்போது வாத்தியார் தெய்வத்திற்கும் மேலாகத் தான் தெரிகிறார்...BSM.... Thanks...
-
சத்தணவு திட்டம் பற்றிய ........
புரட்சி தலைவரின் ....
கண்ணீர் வரவழைக்கும் ......
பேட்டி .......
அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.
பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு?
(பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள்.
அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள்.
வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள்.
எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள்.
சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்)
குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க.
பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது.
ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதும் அப்போதுதான்.
வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.
ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம்.
நல்ல பசி.
இலை போட்டாச்சு.
காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க.
சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர்
நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு.
வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு
கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார்.
கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்?
ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது.
'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது,
கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?
எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன்,
எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன்.
இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது
எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது.
அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க
ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம்.
எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.
புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால்
விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம்....... Thanks...
-
"எம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்"
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன்.
அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!
– தகவல் : சு .திருநாவுக்கரசர் ( புதிய தலைமுறை
2 May 2020 7;16 PM..... Thanks...
-
என்னுடன் மோதத் தயாரா?" குத்து சண்டை வீரர் தாரசிங்கிற்கு ஆவேசமாக சவால் விட்ட புரட்சித்தலைவர்...
1965-ம் ஆண்டு காலகட்டத்தில் திருச்சியில் "மல்யுத்த "போட்டி நடைபெற்றது, அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார் வட இந்தியாவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் தாராசிங்.
வெற்றி களிப்பில் அவர்..
"தமிழ்நாட்டில் என்னை வெல்வதற்கு எவருமில்லையா "என்றார்.
இதனை கேள்வியுற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்..
"மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற சகோதரர் தாராசிங்கிற்கு வாழ்த்துக்கள், அவர் வெற்றி பெற்றதோடு போயிருந்தால் நான் பேட்டி கொடுக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது,
ஆனால் தமிழ்நாட்டில் என்னுடன் மோத எவருமில்லையா? என்று கேட்டிருக்கிறார், அதனால் நான் சொல்கிறேன் எனக்கு மல்யுத்தம் தெரியும் அவர் விருப்பபட்டால் என்னுடன் மோதட்டும் தயாரா?"
என்று ஆவேசமாக பேட்டியளித்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர்......
-
அன்பு நண்பர்களே....
வணக்கம்.. வணக்கம்.. வணக்கம்...!!!
தமிழ்நாட்டில்.! ஏழைகள் அதி எண்ணிக்கையில் கல்வி அறிவு பெற்றதற்கு காரணம் என்னவென்று ஐ.நா. சபை ஆய்வு செய்தது.
அந்த ஆய்வில் அவர்களுக்கு கிடைத்த தகவலை உலகத்திற்கு தெரிவித்தார்கள்.
அது யாதெனில் ....
தமிழ்நாட்டில்.! எழைகள் அதிக அளவில் கல்வி அறிவு பெற்றதற்கு மிக முக்கிய காரணம்.
"#புரட்சித்தலைவர்_எம்ஜிஆர்_அவர்கள்."
கொண்டுவந்த "#சத்துணவுத்_திட்டமே " மிக முக்கிய காரணமாக விளங்கியது என்றும்... ஆய்வில் தெரியவந்தது என்றும்.... ஐ.நா.சபை கூறியது.
இந்த தகவலை நான் கூறவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் ) மாநில செயலாளராக உள்ள, கே. பாலகிருஷ்ணன் அவர்கள்.. கூறினார்கள்.
இன்றும்.. Cpm... மாநில செயலாளராக,
கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தான் உள்ளார்.
உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
வாழிய வாழிய வாழியவே....!!!
புரட்சித்தலைவர் நாமம் வாழியவே ...!!
.........
-
குண்டுமணி – பழம்பெரும் தமிழ்த் திரைப்பட வில்லன் நடிகர். சபாஷ் தம்பி, தாயின் மேல் ஆணை, நாடோடி மன்னன் போன்ற ஏராளமான படங்களில் வில்லனாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் ஒவ்வொன்றிலும் இவரைக் காணலாம்.
குண்டுமணியை திரையில் பார்த்த மாத்திரத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிவிடும். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவரோடு எம்.ஜி.ஆர் மோதும்போது திரையரங்கில் ரசிகர்களின் விசில் சப்தம் காதுகளைப் பிளக்கும். ......
-
"நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்"
நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கை பயணம்..!
🍁 அத்தியாயம் : 1🍁
சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன... இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வின் இன்னும் பல சுவாரஸ்ய பக்கங்களை சொல்கிறது இந்தத் தொடர்.
“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்“ - முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த தான் ஏறிய மேடைகளில் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள் இவை. பல நூறு மேடைகளில் இதை அவர் தெரிவித்திருந்தாலும்... 2012-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்த மேடை, மிகப் பொருத்தமானது. ஆம் அவர் அப்படிப் பேசியது தனது பிறப்பை சம்பவமாகவும் இறப்பை வரலாறாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்து மறைந்த இடத்தில் நின்றுதான்! அது, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி! அந்த மாமனிதர் மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன். ரத்தின சுருக்கமாக எம்.ஜி ஆர் என்றால் இந்தத் தலைமுறையின் எந்தக் குழந்தைக்கும் புரியும்.
இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.) பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.
அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது.
கோபாலன் நேர்மையான மனிதர்; மனிதநேயம் கொண்டவர்; எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர். இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல; புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர். தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்; கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை. அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம். கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம்.
அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில்... அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது. தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார். பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது. இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள். இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம். அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை; தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை. ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் 'சம்பவம்' நிகழ்ந்தது. ஆம்...அன்றிரவு அந்தக் குடும்பத்தின்
5-வது குழந்தையை சத்யபாமா பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.
ராம்சந்தர் பிறந்தநேரம் குடும்பம் மோசமான வறுமையில் சிக்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் வருமானத்தில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் திணறினார் கோபால மேனன். இந்தச் சமயத்தில் குழந்தைகளில் இருவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் பாலக்காட்டுக்குத் திரும்பியது குடும்பம். குடும்பத்தின் சூழல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனது. பணி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும் கோபால மேனன் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிவந்து அவர்களின் படுக்கைத் தலையணைக்குக் கீழே வைத்துவிடுவார். காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு ரசிப்பது அவர் வழக்கம். ராம்சந்தர் கைக்குழந்தையாக இருந்த சமயம் ஒருநாள் அப்படிக் குழந்தைகள் தங்கள் படுக்கையைத் தடவிப்பார்த்தபோது அங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை.
மூத்த பிள்ளை சக்கரபாணி வழக்கமாக தனக்குப்பிடித்த வாழைப்பழத்தைத் தேடுவார். அன்று கிடைக்காத ஏமாற்றத்துடன் தாயை பார்த்தார் அவர். “பசங்களா இனி தலையணையில் எதுவும் தேடாதீங்க...அப்பா உடம்பு சுகமில்லை. இனி அவர் வேலைக்குச் செல்லமாட்டார்’’ என சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி கூறிவிட்டுச் சமையற்கட்டுக்கு ஓடிச் சென்றார் சத்யபாமா.
குழந்தைகளுக்குப் பெரும் ஏமாற்றம். கொஞ்சநாளில் கோபால மேனனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது. ஒருநாளில் தன் பிள்ளைகளில் மூத்தவரான தங்கத்தை அழைத்த கோபால மேனன், “தங்கம்... அப்பா இனி பிழைக்கவழியில்லை. நீதான் இனி விபரம் தெரியாத அம்மா மற்றும் உன் சகோதரர்களைப் பொறுப்போடு பார்த்துக்கொள்ளவேண்டும். செய்வாயா” என மகளின் கையைப் பிடித்தபடி 'நாராயணா, நாராயணா' என மூன்று முறை சொன்னார். அவர் கை தளர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் பெருங்குரலெடுத்த ஓர் அழுகை புறப்பட்டது. அது சத்யபாமாவுடையது.
வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டது. வறுமை வாணலியில், வறுபட ஆரம்பித்தது சத்யபாமா குடும்பம். உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. அரிதாகச் சிலர் உதவினார்கள். ஆனால், உண்பதற்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதுதானே நிரந்தர உதவி. அப்படி நிரந்தரமாக அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஏற்படுத்தித் தர உறவினர்கள் யாரும் உதவிட முன்வரவில்லை. குழந்தைகளின் எதிர்காலம் கருதி தானே வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தார் சத்யபாமா. பாலக்காட்டில் ஒரு வசதியானவர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார் அவர். ஆனால் கெளரவமாக இதுநாள் வரை குடும்பம் நடத்திவந்த அவருக்கு அங்குதான் சோதனைகள் உருவாகின. வேலைக்குச் செல்கிறபோது தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பொருட்டு ராம்சந்தரை மட்டும் சத்யபாமா, வேலை செய்யும் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். அதற்கு வீட்டுக்காரப் பெண்மணியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. கொஞ்சநாட்களில் சத்யபாமாவை, ’’வாடி போடி’’ என்ற தொனியில அந்த வீட்டுப்பெண்மணி கீழ்த்தரமாக அழைக்க ஆரம்பித்தார்.
பொறுத்துப்பார்த்து பொங்கித்தீர்த்துவிட்டார் சத்யபாமா. “இத பாரும்மா... நானும் உன்னைப்போல ஒருகாலத்துல வசதியாக மாட மாளிகையில வசித்தவதான். என் விதி என்னை இப்டி வீட்டு வேலை செய்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆனா, நீ மனிதப்பிறவி போல என்னை நடத்தலை. எனக்கு சத்யபாமா, கண்ணச்சியம்மா, சின்னம்மா என ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணைவைத்துக் கூப்பிடு. இல்லைனா, இனி ஒரு நிமிஷம்கூட உங்கிட்ட வேலை பார்க்க முடியாது” என பொரிந்துதள்ளிவிட்டு குழந்தை ராம்சந்தரைத் துாக்கி இடுப்பில் துாக்கிவைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார் சத்யபாமா.
உண்மையில் வீட்டுக்காரப் பெண்மணி சத்யபாமாவைக் கொடுமைப்படுத்தியதில் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு. குழந்தையில்லாத அவரது உறவினர் ஒருவர், சத்யபாமாவின் வறுமையைச் சுட்டிக்காட்டி குழந்தை ராம்சந்தரை தனக்கு தத்து கொடுத்துவிடும்படி முன்பு ஒருமுறை கேட்டிருந்தார். கோபமடைந்த சத்யபாமா, “எத்தனை கஷ்டம் வந்தாலும் குழந்தையை தத்து தர மாட்டேன்” என மறுத்துவிட்டார். இதுதான் வீட்டுக்கார அம்மாவின் கோபத்துக்குக் காரணம்.
அன்றிரவு குழந்தைகளைக் கட்டியணைத்தபடி பலப்பல சிந்தனைகள் தோன்றி மறைந்தன அவருக்குள். குழந்தைகளைக் காக்க தாமதிக்காமல் தமிழகத்துக்குச் செல்வது ஒன்றுதான் தனக்கு ஒரே தீர்வு என முடிவெடுத்தார். கடவுளை வேண்டியபடி பின்னிரவுக்குப்பிறகே உறங்கப்போனார். மறுநாள், அவரைத்தேடி வந்தார் வேலுநாயர். இவர் ஓய்வுபெற்ற போலீஸ்காரர். கோபாலனுடன் பணியாற்றியவர் என்பதோடு... அவருக்கு நெருங்கிய நண்பர். கோபாலன் இறந்த தகவல் கேட்டு விசாரிக்க வந்திருக்கிறார். குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்த அவர், கும்பகோணத்துக்கு தான் செல்லவிருப்பதாகவும்... அங்கு வந்தால், ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாமே என ஆறுதல் சொன்னதோடு... தன்னோடு வந்தால் தானே அதற்கு வழி செய்வதாகக் கூற, சில தினங்களில் மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளுடனும் கணவரின் புகைப்படங்களோடு அவரது நினைவுகளையும் சுமந்தபடி கும்பகோணத்துக்குப் பயணமானார் சத்யபாமா.
மாட்டுவண்டி கும்பகோணத்தை அடைந்தநேரம் விடிந்தும் விடியாத ஒரு விடியற்காலைப்பொழுது.
அந்த நேரம், தம் நடிப்பாலும் மனிதநேயப் பண்பாலும் ஓர் அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் உறக்கத்தைக் கலைக்கப்போகிற குழந்தை ராம்சந்தர் தாயின் மடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான். ராம்சந்தருக்கு அப்போது இரண்டேகால் வயது.
(தொடரும்).....
"வண்ணத்திரை"
யாழ் இணையம்
-
"ராம்சந்தருக்கு பால் கொண்டுவா டா..! எம்.ஜி.ஆருக்கு கிடைத்த முதல் கவுரவம்',"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
அத்தியாயம் : 2
பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சத்யபாமா உழைக்க ஆரம்பித்தார். உடலை வருத்தி ஒரே நாளில் பல சிறுசிறு வேலைகளைச் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆனாலும் வறுமை அந்தக் குடும்பத்தை முழுவதுமாகவிட்டு விலகி ஓடிவிடவில்லை. பள்ளிசேர்க்கும் வயது வந்தபோது கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். பள்ளியில் ராம்சந்தர் படுசுட்டி. ஏதாவது குறும்பு செய்துவிட்டு ஓடி ஒளிந்துகொள்வான். பஞ்சாயத்து, அண்ணன் சக்கரபாணிக்கு போகும். தம்பியைக் கூப்பிட்டுக் கோபப்படுவதுபோல் நடிப்பார். புகார் சொன்னவர்கள் சமாதானம் அடைவர். பிறகு, ''ஏன் ராம்சந்தர்... இப்படிச் செய்றே? அம்மாவிடம் யாராவது இதைச் சொன்னா பிரம்படிதான் கிடைக்கும்” என தம்பி மீது இரக்கப்பட்டுப் பேசுவார் சக்கரபாணி. எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்த நல்ல பழக்கங்கள் பல சத்யபாமாவினால் வந்தவை. பிள்ளைகள் பொய்சொல்வதை, சொந்த சகோதரனாக இருந்தாலும் அனுமதியின்றி ஒருவர் பொருளை இன்னொருவர் எடுப்பதை அவர் அனுமதிக்கமாட்டார்.
இம்மாதிரி சமயங்களில்தான் சத்யபாமா பிரம்பைத் தூக்குவார்; படிப்பில் குழந்தைகள் சோடைபோனால்கூட மன்னிப்பார்; ஒழுக்கத்தில் குறை கண்டால் பொறுக்கமாட்டார். ஒழுக்கம்தான் பிள்ளைகளை உயர்த்தும் என்பதில் உறுதியான பெண்மணி அவர். சத்யபாமாவின் இந்தக் கண்டிப்புதான் சகோதரர்களை வறுமையிலும் செம்மையாக இருக்கவைத்தது.
படிப்பு, அப்படி இப்படி என்றாலும் சகோதரர்களுக்கு நடிப்பு நன்றாக வந்தது. பள்ளியில் அந்த வருட விழாவில் அரங்கேற்றப்பட்ட 'லவகுசா' நாடகத்தில் ராம்சந்தருக்கு லவன் வேஷம் அளிக்கப்பட்டது. சிறுவன் பின்னியெடுத்துவிட்டான். அதுமுதல் ராம்சந்தருக்கு தடபுடல் மரியாதைதான் பள்ளியில். நாடக ஆசையில் கொஞ்சநாள் கனவிலும் நனவிலும் தன்னை ராஜா போன்று எண்ணிப் பேசிவந்தான்.
இப்படித்தான் ஒரு விடுமுறை நாளில் சிறுவன் ராம்சந்தர் வில் அம்பு செய்து தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறுவன் விட்ட அம்பு தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீது பட்டு காலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. குறிபார்த்து விட 'ராமச்சந்திர'னா என்ன; ராம்சந்தர்தானே! பயந்து வீட்டில்போய் பதுங்கிக்கொண்டான். ஆனாலும் அடிபட்டவர், கோபத்துடன் ராம்சந்தர் வீட்டுக்குள் நுழைந்து, ''கூப்பிடுறா... உன் அப்பா அம்மாவை'' என எகிற... அப்போது, எதேச்சையாக உள்ளே நுழைந்தார் வேலுநாயர். அடிபட்டவரை பார்த்து, ''வாரும்... எப்போ வந்தீர்... ஏன் இவ்வளவு தாமதம்... இது என்ன ரத்தம்” எனக் கேட்டார். ராம்சந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டுக்குள் இருந்துவந்த சத்யபாமாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது. வந்தவர் வேலுநாயரின் உறவினர். நாடகக் கம்பெனி ஒப்பந்ததாரர். பிள்ளைகள் இருவரும் படிப்பில் சற்று மந்தமாக இருந்ததால் சத்யபாமாவிடம் அனுமதி பெற்று அவர்களை நாடகக் கம்பெனியில் சேர்க்கத் திட்டமிட்டு வரச்சொல்லியிருக்கிறார். வந்த இடத்தில்தான் இந்த ரகளை.
எது எப்படியோ நாராயணன் நாயருக்கு (அடிபட்டவர்) சகோதரர்களைப் பிடித்துவிட்டது. சத்யபாமாவையும் பேசிக் கரைத்துவிட்டார் வேலுநாயர். புகழ்பெற்ற மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. அன்றே சிறுவர்கள் அதில் சேர்த்துவிடப்பட்டனர். கும்பகோணத்தில் கொஞ்சநாள் பயிற்சி. பின்னர் பாண்டிச்சேரியில் நாடகம் போட கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்தது. முதல்முறையாகத் தாயைப் பிரிந்துசெல்கின்றனர் சகோதரர்கள். இரண்டு தரப்பிலும் கண்ணீர் வெள்ளம். “ எல்லாம் உங்க நன்மைக்குதானப்பா” பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் சத்யபாமா. பீறிட்டுக் கிளம்பிய ரயிலின் சத்தத்தில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் குறைவாகவே கேட்டது.
நாடகக் கம்பெனியில், ராம்சந்தருக்கு மகாபாரத நாடகத்தில் விகர்ணன் வேஷம் கொடுக்கப்பட்டது. கௌரவர்களில் ஒருவனே இந்த விகர்ணன். கண்பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவன். சிறுவேஷம் என்றாலும் ராம்சந்தருக்கு தன்னை நிரூபிக்க அது போதுமானதாக இருந்தது. நாடக நுணுக்கங்களை ஓரளவு சகோதரர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கினர். விகர்ணன் வேஷத்தில் நன்றாக நடித்ததால், அடுத்த முறை அதே நாடகத்தில் அபிமன்யு வேஷம் தரப்பட்டது.
'நாடகத்தில் படையோடு எழுந்திடுவேன்' என அபிமன்யு பாடும் பாடல் ஒன்று உண்டு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பாடுவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ரிகர்சலிலேயே கொஞ்சம் அப்படி இப்படித்தான் பாடினார். பாடலாசிரியரும் நாடகத்தின் நகைச்சுவை நடிகருமான பக்கிரிசாமி, “பையா நீ இந்தப் பாட்டை நாடகத்தில் நன்றாகப் பாடி முடித்துவிட்டால், உனக்கு என் பரிசு 1 ரூபாய். இல்லையென்றால் நான் தரும் தண்டனையை நீ வாங்கிக்கொள்ள வேண்டும்” எனக் கறாராகச் சொல்லிவிட்டார். 'இதென்னடா வம்பு, பாடினால் பரிசு... பாடாவிட்டால் தண்டனையா...' சரியாக சிக்கிக்கொண்டோமா என்ற குழப்பத்துடனே ரிகர்சலில் ஈடுபட்டான் சிறுவன் ராம்சந்தர்.
தண்டனைக்காக அல்லாமல் தான் பாடத்தகுதியற்றவன் என்ற ஆசிரியரின் எண்ணத்தை மாற்றியாகவேண்டும் என முடிவெடுத்தான் ராம்சந்தர். பலநாட்கள் கடும் முயற்சியில் ரிகர்சலில் ஈடுபட்டான். நாடகத்தன்று நாடகக் குழுவில் இருந்த ராம்சந்தரின் நண்பர்கள் பதைபதைப்போடு மேடையை வெறித்துகொண்டிருந்தனர்.
ராம்சந்தர் பாடத் தொடங்கினான். எங்கும் சுருதி விலகவில்லை. வாத்தியாரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி உச்சஸ்தாயியில் பாடி முடித்தபோது... அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது.
வாத்தியார் வைத்த பரீட்சையில் தன் தம்பி ஜெயித்துவிட்டதை மகிழ்ச்சியுடன் அரங்கின் ஓரத்தில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார் சக்கரபாணி . நினைத்ததை முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ராம்சந்தர்.
அரங்கில் அன்று அவன் காதுகளில் முதன்முறையாக ஒலித்த கைதட்டல், அடுத்த பல பத்து ஆண்டுகளுக்கு தொடரப்போவதை காலம் மட்டுமே அன்று அறிந்திருக்கும்.
சில நிமிடங்களும் தாமதிக்கவில்லை. பக்கிரிசாமி, ராம்சந்தரை அழைத்து கட்டிப்பிடித்தபடி ஓங்கி குரல் கொடுத்தார். “ஏய் பையா, ராம்சந்தருக்கு பால் கொண்டுவாங்கடா..”- ராம்சந்தருக்கு இன்னும் மகிழ்ச்சி. ஆம் அன்றைய நாளில் பாய்ஸ் கம்பெனியில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, நாடகத்தில் அப்ளாஸ் வாங்கும் அளவு சிறப்பாக நடிப்பவர்களுக்கு கம்பெனி உரிமையாளர் தன் கையால் நாடகம் முடிந்தவுடன் பாராட்டி பால் தருவார். கம்பெனியில் அது ஒரு கெளரவம். அதுவரை அரிதான சிலரே அப்படி கெளரவம் பெற்றிருந்தனர். முதன்முறையாக ராம்சந்தருக்கு அன்று, அந்தக் கெளரவம் கிடைத்தது.
கம்பெனியில் நல்ல நடிகன் என பெயர் வாங்கியாகிவிட்டது. இப்போது முறைப்படி ராம்சந்தருக்கு 6 வருட அக்ரிமென்ட்டும், சக்கரபாணிக்கு 3 ஆண்டுகளும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. சகோதரர்கள் தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பாலபார்ட் நடிகனாக ராம்சந்தர் நடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ராஜபார்ட் நடிகராக இருந்தவர் அந்நாளைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான பி.யு.சின்னப்பா. கதாநாயக நடிகர் என்பதால், கம்பெனியில் ஏக மரியாதை அவருக்கு. அதைப் பார்க்கிறபோதெல்லாம் தானும் ஒருநாள் இப்படிப் பலரும் மதிக்கும் பெயரும் புகழும் பெற்ற நடிகனாக வேண்டும் என்ற வெறி சிறுவன் ராம்சந்தரின் மனதில் எழும். ராம்சந்தரின் ஆசை நிறைவேறியதா...?
தொடரும்... .....
விகடன்
யாழ் இணையம்
-
"எம்.ஜி.ஆர் குருவிடம் அறை வாங்கியது ஏன்...?"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
அத்தியாயம் : 3
அந்நாளில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்வது என்பது குதிரைக்கொம்பான விஷயம். திறமையுள்ளவர்களுக்கு மட்டுமே அங்கு கதவுகள் திறக்கப்படும். சச்சிதானம்பிள்ளை என்பவர் நடத்திவந்த இந்த நாடக கம்பெனியில் நடித்தவர்கள் பின்னாளில் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்களானார்கள். பி.யு சின்னப்பா, பி.ஜி. வெங்கடேசன், டி.எஸ் பாலையா, நன்னையா பாகவதர், கே.பி கேசவன், பிரபல நாடகாசிரியர் எம்.கந்தசாமி முதலியார், அவரது மகன் எம்.கே. ராதா, கே.ஆர் ராமசாமி , காளி என்.ரத்தினம் என இந்த பட்டியல் ரொம்ப நீளம். இந்த பட்டியலில் ராம்சந்தருக்கும் ஓர் இடம் இப்போது.
பாய்ஸ் கம்பெனியில் சேர வெறும் கலை ஆர்வமும் நடிப்புத்திறனும் மட்டுமே தகுதிகளில்லை. கிட்டதட்ட அது ஓர் குருகுல வாசம்போல. நடிப்புப் பயிற்சிக்கு முன்னதாக அவர்களுக்கு அடிப்படை படிப்பு சொல்லித்தரப்படும். விடியற்காலை எழுந்ததும் தேகப்பயிற்சி, பின்னர் வீர திர விளையாட்டுப்பயிற்சி, நாடக வசனங்களை பாடம் செய்தல், பாடும் பயிற்சி, நடனப்பயிற்சி என கிட்டதட்ட ஒருவனை நாடகத்துறையில் சகலகலா வல்லவனாக்கும் முயற்சிகள். அதேசமயம் இத்தனை பயிற்சிக்குப்பின்னும் நாடகத்தில் சொதப்பினால் அதற்கு தண்டனைகளும் உண்டு. அந்த தண்டனைக்கு பயந்தே நடிகர்கள் கண்ணும் கருத்துமாக பயிற்சிகளை செய்வார்கள். உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்க பாய்ஸ் கம்பெனி இட்ட இந்த உரம்தான் பின்னாளில் ராம்சந்தரை 'எம்.ஜி.ஆர்' ஆக ஆக்கியது என்பதில் சந்தேகமில்லை.
சேர்ந்தபோது மாத சம்பளம் நாலணா. இப்போது 5 ரூபாய். சக்கரபாணிக்கும் அதேதான். பெருமிதமான இந்த அங்கீகாரத்துடன் தனது திறமையை மட்டுப்படுத்திக்கொள்ளாமல் இன்னும் புகழடையவேண்டும் என்ற எண்ணம் ராம்சந்தருக்கு தீவிரமானது. அந்நாளில் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு குருவாக இருந்தவர் எம்.கந்தசாமி முதலியார். இவர் தமிழகத்தில் நாடக வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம்.
நாடகங்கள் குறித்த முக்கியத்துவம், நடிகர்களின் அர்ப்பணிப்பு போன்றவற்றை ராம்சந்தருக்கு உணர்த்தியவர் எம்.கே என்றால், ஒரு நடிகன் கதாபாத்திரத்தில் சோபிக்க என்னவெல்லாம் தியாகம் செய்யவேண்டும், எப்படியெல்லாம் தன்னை கதாபாத்திரத்திற்குள் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதை ராம்சந்தருக்கு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம். எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு ஆதாரமானவர்கள் இவர்கள் இருவரும். உதாரணமாக இவர்களுடனான ராம்சந்தரின் ஒரு அனுபவத்தை சொல்லலாம்.
ராம்சந்தர் அப்போது ராஜேந்திரன் என்ற நாடகத்தில் நடித்துவந்தார். ஊதாரித்தனமாக செலவு செய்யும் பெரும் பணக்கார வாலிபன் வேடம் அவருக்கு தரப்பட்டிருந்தது. ஒரு காட்சியில் மகனின் ஊதாரித்தனத்தால் அவனுக்கு தன் கணக்கில் வங்கியில் பணம் தர வேண்டாம் என அவரது தந்தை வங்கிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதுதெரியாமல் சென்று 'செக்' கிற்கு பணம் கேட்க வங்கி மறுக்கிறது. கோபமடைந்த வாலிபன் தன் செருப்பை கழற்றி வங்கி அதிகாரிகளை அடிப்பதுபோல் ஓங்கியபடி வெறியாட்டம் போடுகிறான். நாடகத்திற்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி.என். ரத்தினம்.
முதல்நாள் நாடக அரங்கேற்றம் நடந்து முடிந்து ஓய்வாக வந்து தன் இருக்கையில் வந்து அமர்ந்தார் ராம்சந்தர். அப்போது வேகமாக அவரை நோக்கி முன்னேறி வந்த கந்தசாமி முதலியார் ராம்சந்தரின் முகத்தில் ஒங்கி ஒரு அறை விட்டார். அதிர்ந்துபோயினர் அங்கிருந்தவர்கள். கந்தசாமி முதலியார் நடிப்பு விஷயங்களில் கொஞ்சம் முரட்டுமனிதர். அதனால் அவரிடம் சென்று ராம்சந்தரை அறைந்ததற்கான காரணம் கேட்க யாருக்கும் தைரியமில்லை. எந்த தவறும் செய்யாத தன்னை ஏன் வாத்தியார் அடித்தார் என கன்னத்தை பிடித்தபடி நின்றான் ராம்சந்தர். தந்தை என்பதால் எம்.கே.ராதா மட்டும் துணிந்துகேட்டார். எதற்காக அவனை அடித்தீர்கள் நன்றாகத்தானே நடித்தான்...?
“முட்டாள்தனமான நடிப்பு...எந்த பணக்காரனாவது பொது இடத்தில் இப்படி செருப்பை கழற்றி அநாகரீகமாக நடந்துகொள்வானா...ஏற்ற பாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டாமா... இப்படி நடித்தால் நாடகம் பார்ப்பவர்கள் என்னையும் நம் நாடக குழுவையும்தானே தவறாக பேசுவார்கள். ரத்தினம் என்ன பாடம் சொல்லிக்கொடுத்தான் இவனுக்கு! ” என்று பொரிந்து தள்ளினார் கந்தசாமி முதலியார். ராம்சந்தருக்கு எந்த கோபமும் எழவில்லை. காரணம் தந்தையை இழந்து தாயை பிரிந்து வறுமைக்காக கலைத்துறையில் ஈடுபட்டிருக்கும் தனக்கு எல்லாமுமாக இருந்து இதுநாள் வரை வழிநடத்தி வருபவர் எம்.கே முதலியார் என்பதால், அவர் எதை செய்தாலும் அது தன் வளர்ச்சிக்குத்தான் என்பதில் உறுதியாக இருந்ததே. நல்ல படிப்பினையாக அந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டான் ராம்சந்தர்.
அதேசமயம் தன்னை வாத்தியார் அடித்ததை யாரும் தட்டிக்கேட்க துணிவில்லாதபோது தைரியமாக தனக்காக தன் தந்தையையே எதிர்த்து கேள்வி கேட்ட எம்.கே.ராதாவின் அன்பில் நெகிழ்ந்துபோனார் எம்.ஜி.ஆர். தன் சொந்த சகோதரர் சக்கரபாணிக்கு இணையான பாசத்துடன் இறுதிவரை அவரையும் தன் சொந்த சகோதரர் போன்றே மதித்து பாசத்துடன் பழகினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருக்கு முன்னரே சந்திரலேகா, அபுர்வ சகோதரர்கள் பாசவலை போன்ற படங்களில் நடித்து பின்னாளில் புகழ்பெற்றவர் எம்.கே.ராதா. திரையுலகில் புகழடைந்ததற்கு பின், எம்..ஜி.ஆர் பொது இடங்களில் மூத்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கியது அரிதான சந்தர்ப்பங்களில்தான். அணணா கூட இடம்பெறாத இந்த பட்டியலில் எம்.கே ராதாவும், சாந்தாராமும் இடம்பெற்றிருந்தனர். தன் வாழ்நாளில் முக்கியமான எந்த நிகழ்வுகளுக்கும் எம்.கே.ராதாவை தேடிச்சென்று ஆசிபெறுவதை இறுதிவரை கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். எம்.கே.ராதாவின் மீது அத்தனை மரியாதையும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
இனி நடிப்பில் சோடைபோகக்கூடாது. வாத்தியாரிடம் அடி வாங்கக்கூடாது என அன்றே உறுதி எடுத்துக்கொண்டார் ராம்சந்தர். தொடர்ந்து மனோகரா உள்ளிட்ட பல நல்ல நாடகங்கள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தப்பட்டன. இந்த நேரத்தில் பி.யு சின்னப்பாவை போல் பெரிய நடிகர் ஆக வேண்டும் என்ற ராம்சந்தரின் ஆசை ஒருநாள் கைக்கூடிவந்தது.
அப்போது பாய்ஸ் கம்பெனி 'தசாவதாரம்' என்ற நாடகத்தை நடத்திவந்தது. சென்னையில் பல நாட்கள் தொடர்ந்து நடந்த வெற்றிகரமான நாடகம். பின்னர் பாலக்காட்டில் நடத்தப்பட்டது. இதில் பரதனாக பி.யு சின்னப்பா நடித்தார். ராம்சந்தருக்கு சத்ருகன் வேடம். பெயருக்குத்தான் வேடம்; அதில் நடிப்புத்திறமையை காட்டும் வாய்ப்பு துளியும் இல்லை. வேண்டா விருப்பமாகவே நடித்துவந்தார் ராம்சந்தர். ஒருநாள் புதுக்கோட்டையில் இருந்து பாலக்காட்டுக்கு பறந்து வந்தது அந்த 'அதிர்ச்சி' தந்தி. தந்தி சொன்ன சேதி என்ன...?
தொடரும் ..........
Vikatan News
யாழ் இணையம்.
-
"கதர் பக்தியும் காந்தி தரிசனமும்..!"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -.
அத்தியாயம் : 4
பாலக்காட்டில் நடந்த 'தசாவதாரம்' நாடகம் பி.யு சின்னப்பாவின் புகழை அதிகப்படுத்தியது. சென்ற இடங்களில் எல்லாம் பாராட்டு மழை. ஆனால் அது நிலைக்கவில்லை. ஆம், நாடக குழு தங்கியிருந்த வீட்டிற்கு பறந்துவந்தது ஒரு தந்தி. சின்னப்பாவின் தாய் மறைந்துவிட்டதை சொன்னது அது.
அழுதபடி ஊருக்கு புறப்பட்டார் சின்னப்பா. வெளி மாநிலம். நாடகத்திற்கு நல்ல வசூல். தொடர்ந்து இன்னும் சில தினங்கள் நடத்தினால் நல்ல வசூலாகலாம். கம்பெனி நிர்வாகிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. “கே.ஆர் ராமசாமியை கூப்பிடுவோமா அவசரத்துக்கு” என்றார் வாத்தியார். “அவனை தேடி கண்டுபிடிச்சி ஒத்திகை நடத்தி...விடிஞ்சிடும் போ...”கவலையுடன் சொன்னார் முதலாளி. பலரும் பலரை பரதன் பாத்திரற்கு பரிந்துரைத்தார்கள்.
முதலாளிக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது. “ஆமாம் அந்த ராம்சந்தர் எங்க இருக்கான் கூப்பிடு அவனை”. ஆரம்பத்திலிருந்தே சின்னப்பாவுடனேயே வருவதால் எப்படியும் பரதன் வேடத்திற்கான வசனங்கள் அத்துபடியாகி இருக்கும். எனவே ராம்சந்தர்தான் சரியான மற்றும் விரைவான தேர்வு என அவர் தீர்க்கமாக முடிவெடுத்தார்.
உடனடியாக நாடக குழுவினர் தங்கியிருந்த வீட்டுக்கு ஆள் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு ராம்சந்தர் இல்லை. விசாரித்ததில், பாலக்காட்டில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்றுவிட்டதாக சொன்னார்கள். முதலாளியிடம் சென்று தகவல் சொன்னபோது, “என்ன செலவானாலும் சரி, ராமசாமியை உடனே கிளம்பி பாலக்காடு வரச்சொல்லு” என்றார் கொதிப்பான குரலில். அதே நேரம் அந்த இடத்திற்கு வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்துகொண்டிருந்தார் ராம்சந்தர்.
எல்லோர் முகத்திலும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் உண்டானது. முதலாளி முகத்தில் கொள்ளை சந்தோஷம். “டேய்... போய் பரதன் பாடத்தை படி...இன்னிலேர்ந்து நீதான் பரதன்”- அசரீரி போல முதலாளி சொன்னதைக் கேட்டு தன்னையே கிள்ளிப்பார்த்துக்ககொண்டார் ராம்சந்தர்.
பாலக்காட்டின் இன்னொரு மூலையில் இருந்து முதலாளியைத் தேடி ராம்சந்தர் அத்தனை சீக்கிரம் வந்தது எப்படி..?
வீட்டில் ராம்சந்தரை தேடி வந்ததை பார்த்த அவரது சக நடிகனான நண்பன், விஷயத்தை கேட்டு தெரிந்துகொண்டு தம் நண்பனுக்கு வந்த வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என வாடகை சைக்கிள் பிடித்து அழைத்துவந்திருக்கிறார். நண்பனால் ராம்சந்தரின் கனவு நனவானது அன்று.
“பாடம் படி, போ" என காளி. என்.ரத்தினம் சொன்னபோது, “தேவையில்லை அண்ணே... என் பாடத்தோட அவர் பாடத்தையும் நான் படிச்சி வெச்சிருக்கேன். ஒருதடவை ஒத்திகை பார்த்தால் போதும்”- நெகிழ்ந்தார் ரத்தினம். இதுதான் எம்.ஜி.ஆர்!
'வாய்ப்புகள் வரும்... போகும். அல்லது எப்போதாவது வரலாம். அதற்காக தகுதியை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர வாய்ப்பு வரவில்லை என சுணங்கிவிடக்கூடாது. சுணங்கினால் வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விடும். திரைத்துறையில் அரசியலிலும் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றிகளுக்கு எல்லாம் இதுதான் காரணம். பாலக்காட்டில் பரதன் என்ற கதாபாத்திரத்தில் முதன்முறையாக கதாநாயகன் வேடம் ஏற்றார் எம்.ஜி.ஆர்.
பி.யு.சின்னப்பா நடித்த பாத்திரத்தில் ராம்சந்தர். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற ஐயம் முதல்நாளிலேயே தீர்ந்தது. சின்னப்பாவுக்கு வந்த அதே கைதட்டல். பத்துநாட்கள் மட்டுமே நடத்த திட்டமிட்டிருந்த நாடகம் அடுத்த பத்து பத்து நாட்கள் கூடுதலாக நடந்தது. கதாநாயகனாக வெற்றிபெற்றார் எம்.ஜி.ஆர்.
ஆயினும் சின்னப்பா திரும்பி வந்ததால் கடைசி 2 நாட்கள் அவரே மீண்டும் பரதனாக நடித்தார். ஆனாலும் முதலாளி கடைசி நாளன்று எம்.ஜி.ஆரின் அருகே வந்து அவரது காதுகளில் மெதுவாக சொன்னார் இப்படி, “ டேய் ராம்சந்தர், வாய்ப்பு விட்டுப்போச்சுன்னு கவலைப்படாதேடா...சின்னப்பாவின் எல்லா பாடத்தையும் நேரம் கிடைக்கும்போது படிச்சி வெச்சிக்கடா...பின்னாடி பயன்படும்”- முதலாளி வாக்கு பலித்தது ஒருநாள்.
தற்காலிகமாக வந்த கதாநாயகன் வாய்ப்பு நிரந்தரமாகும் காலம் கைக்கூடிவந்தது சில மாதங்கள் கழித்து. ஆம், 'தசாவதாரம்' முடிந்து கம்பெனியின் அடுத்தடுத்த நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டன. அதில் ஒன்று 'சந்திரகாந்தா'. அதில் சுண்டூர் இளவரசன் வேடத்தில் சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். பாய்ஸ் கம்பெனிக்கும் தனிப்பட்ட முறையில் சின்னப்பாவுக்கும் புகழ் தந்த நாடகங்களில் ஒன்று இது.
ஆந்திர மாநிலம் சித்துாரில் இந்த நாடகம் நடந்துகொண்டிருந்தபோது சின்னப்பாவுக்கு மகரக்கட்டு பிரச்னை வந்தது. இதனால் நாடகத்தில் அவரால் பாடி நடிக்கமுடியாத நிலை. இதனால் நாடகம் கொஞ்சநாள் நிறுத்தப்பட்டது. அதற்குள் சின்னப்பாவால் குரலை தேற்ற முடியவில்லை. கொஞ்சநாளில் மனக்கசப்பும் உருவாகவே சின்னப்பா கம்பெனியை விட்டு விலகுவதென முடிவெடுத்தார். அவர் விலகியதையடுத்து முக்கிய கதாநாயகன் பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கும், கம்பெனியின் மற்றொரு நடிகரான கே.எம்.கோவிந்தன் என்பவருக்கும் பிரித்தளிக்கப்பட்டன.
இதில் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்டவை முக்கிய கதாபாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனோகராவில் மனோகரன், சந்திரகாந்தாவில் சுண்டூர் இளவரசன், பதிபக்தியில் வீரமுத்து, இப்படி! பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரமாகின; நிரந்தரம் என்றால் பெயரளவில் இல்லை. ராஜபார்ட் நடிகர்களுக்கு கம்பெனி தரும் சிறப்பு சலுகைகளும் சிறப்பு மரியாதைகளும் எம்.ஜி.ஆருக்கு இப்போது கிடைத்தன.
ஆனாலும் கதாநாயகனாத்தான் நடிப்பேன் என எம்.ஜி.ஆர் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. ராஜபார்ட், ஸ்திரீ பார்ட் என எதிலும் தன்னை நிரூபித்தார். மகழ்ச்சியாக சென்றன நாட்கள்.
இந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு 'கதர் பக்தி' என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தின் முடிவில் நிஜமாகவே காந்தியத்தின் மீதும், காந்தியின் மீதும் காதல் உண்டானது. இதனால் கதர்த்துணிகளையே உடுத்த ஆரம்பித்தார். காரைக்குடியில் அவரது நாடகம் ஒன்று நடத்தப்பட்டபோது போராட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக காந்தி அங்குவந்திருந்தார்.
விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர், தன் ஆதர்ஷ நாயகனை நேரில் பார்ப்பதென முடிவெடுத்து காந்தி கலந்துகொண்ட கூட்டத்திற்கு ஆர்வத்துடன் சென்றார். காந்தியை நேரில் சந்தித்தார். புகழ்பெற்ற நடிகரான பின் ஒருமுறை காந்தியை சந்தித்த தன் அனுபவத்தை இவ்வாறு விவரித்திருந்தார்.
"நான் அப்போது இளைஞன்தான். காங்கிரஸ் கட்சியில் நான் இருந்தேன். கதராடையே அணிந்து வந்தேன். காரைக்குடிக்கு காந்தியடிகள் வந்து ஒரு மேடை மீது நின்று, மக்களுக்கு தரிசனம் தந்தார். அமைதியும், எளிமையும் உருவான அவரைப் பார்த்ததும் ஏதோ செய்வத்தன்மை பொருந்திய ஒருவரைப் பார்ப்பது போன்ற பக்தி உணர்வுதான் ஏற்பட்டது.
அந்தப் புன்சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்னும் சித்திரமாகப் பதிந்திருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அக்கூட்டத்தில் ஒரு மூலையில் நின்றபடி பார்த்தேன் இந்த பார் முழுதும் போற்றும் மகானை. அப்போது மக்களுக்கு என்னை அதிகம் தெரியாது."
காலத்தின் விளையாட்டு, பின்னாளில் காந்தி வளர்த்தெடுத்த, அவரது கொள்கைகளை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சியையே அவர் எதிர்க்க நேர்ந்ததுதான்.
மீண்டும் நாடக கம்பெனிக்கு வருவோம்... சினிமா படங்கள் தோன்றி மவுனப்படங்களாக வெளிவந்து மக்களுக்கு ஆச்சர்யத்தை தந்துகொண்டிருந்த காலம் அது. தமிழகத்தில் மவுனப்பட காலம் முடிந்து பேசும்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்தன.
இந்த நேரத்தில்தான் கம்பெனியின் முக்கிய நடிகர்கள் பலரும், குறிப்பாக வாத்தியார் எம்.கந்தசாமி முதலியார், எம்.கே.ராதா போன்றோர் சினிமா ஆசையில் கம்பெனியில் இருந்து விலகிச் சென்றிருந்தனர்.
கம்பெனியில் ராஜபார்ட் நடிகர், சகலவிதமான மரியாதைகள், கணிசமான சம்பளம் என விரும்பியதெல்லாம் கிடைத்தாலும் சகோதரர்கள் தனிமையை உணர ஆரம்பித்தனர் கொஞ்சநாளில்...
தொடரும் ........
-
"எம்.ஜி.ஆர் அழுத ரகசியம்!"...
" நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்"...!
🍁 அத்தியாயம் : 5🍁
கம்பெனியில் இருந்த தனது நலன் விரும்பிகள் வெளியேறிவிட்ட கவலையில் நாடகங்களில் பங்கெடுத்துவந்த ராம்சந்தருக்கு இன்னொரு பிரச்னை உருவானது. ஆம் பி.யு.சின்னப்பாவுக்கு வந்த அதே மகரக்கட்டு பிரச்னை. பாடி நடிக்கும் குரல்வன்மை போனதால் ஒரேநாளில் எல்லாமே தலைகீழானது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுபோல் சின்னப்பாவிடமிருந்து ராம்சந்தருக்கு வந்த ராஜபார்ட் வேடங்கள் இப்போது இன்னொருவருக்கு அளிக்கப்பட்டது.
மகரக்கட்டு என்பது ஆண்களுக்கு பருவ வயதின் துவக்கத்தில் குரல்வளம் கடினமாக மாறிவிடும் தன்மை. சிறுவர்கள் பெரியவர்களாகிவிட்டதற்கான அடையாளம் அது. இயல்பான மனிதர்களுக்கு அதில் சிக்கலில்லை. தொழில்முறை நாடக நடிகர்களுக்கு அது வனவாசம் போன்ற காலகட்டம். எந்த பாத்திரத்திற்கும் அந்த குரல் பொருந்திவராது. இக்காலகட்டத்தில் நடிகர்கள் பெரும்பாலும் வேறு தொழிலுக்கோ அல்லது நாடக குழுவிலேயே வேறு பிரிவுக்கோ மாறிவிடுவர். மகரக்கட்டினால் பாட வாய்ப்பில்லாத சில பாத்திரங்கள் மட்டுமே ராம்சந்தருக்கு ஒதுக்கப்பட்டன. சக்கரபாணி தன் தம்பியின் நிலை கண்டு வருந்தினார்.
'தொடர்ந்து கம்பெனியில் தங்கி தம் திறமையை மழுங்கடித்துவிடக்கூடாது. அதேசமயம் கம்பெனியை விட்டு முற்றாக வெளியேறிவிடுவதும் புத்திசாலித்தனம் இல்லை' என சிந்தித்த சகோதரர்கள், குரல் வன்மை திரும்ப வரும்வரை முதலாளிக்கு தெரியாமல் வேறு கம்பெனியில் சேர்ந்து நடிப்பது என முடிவெடுத்தனர். ஆனால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தெரிந்த நண்பர்கள்தான். நாடக குழுக்களின் அறிமுகம் எதுவும் கிடையாது. கம்பெனியின் பழைய வாத்தியாரான எம்.கந்தசாமி முதலியார், மொய்தீன் என்ற நாடக ஒப்பந்ததாரருடன் இணைந்து சிங்கப்பூரில் நாடகம் போட்டுவந்த தகவலை அப்போதுதான் சக்கரபாணியின் நண்பர் ஒருவர் சொன்னார்.
சகோதரர்களுக்கு மகிழ்ச்சி. நம் மீது அன்பு கொண்ட வாத்தியார் எப்படியும் நமக்கு ஒரு வழிகாட்டுவார் என்ற எண்ணத்துடன் அவரை நேரில் சந்தித்தனர். 'பசங்களா எப்படிடா இருக்கீங்க...' என நலம் விசாரித்த கையோடு சகோதரர்களின் பிரச்னைக்கும் தீர்வு சொன்னார் எம்.கே.
மொய்தீன் குழுவில் சகோதரர்களை சிங்கப்புர் அழைத்துச்செல்வதென முடிவெடுக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் 12 நாட்கள் நாடக ஒத்திகை நடந்தது. ஆனால் அன்றைய அரசியல் சூழலால் அந்த பயணம் ரத்தானது. அதற்கு பதிலாக பர்மா பயணமாக முடிவானது.
பர்மா செல்லும் நாள் வந்தது. அந்நாளில் நாடக குழுக்களில் நடிப்பவர்கள் அவ்வப்போது நாடக குழுக்களை மாற்றிக்கொள்வது சகஜம் என்றாலும் தமக்கு ஆதரவளித்த கம்பெனிக்கு துரோகம் செய்துவிட்டு வேறு குழுவுக்கு வந்தது சகோதரர்களுக்கு உறுத்தியது. அப்படி தம்முடன் பழைய குழுவில் இருந்த யாரேனும் நம்முடன் வந்து நம்மை அடையாளம் கண்டுவிடுவார்களோ என்ற அச்சம் சக்கரபாணியை விட ராம்சந்தருக்கு அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் உண்டு.
பாய்ஸ் கம்பெனியில் முதலாளி சச்சிதானந்தம் கோபக்காரர்தான். ஆனால் பேச்சோடு அவர் கோபம் நின்றுவிடும். ஆனால் வாத்தியார் காளி.என்.ரத்தினம் அப்படியல்ல; கோபம் வந்தால் தாறுமாறாக அடித்துவிடுவார். பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்த புதிதில் ராம்சந்தர் நல்லதங்காள் நாடகத்தில் நடித்தார். அதில் வறுமையினால் தன் குழந்தைகளை ஒவ்வொருவராக கிணற்றில் வீசிவிடுவாள் நல்லதங்காள். கடைசி குழந்தை ராம்சந்தர். கடைசி குழந்தையை வீசும் முன் அந்த குழந்தை அம்மாவிடம் தன்னை கொன்றுவிடாதே என்றும் தான் குடும்பத்தை காப்பாற்றுவதாகவும் அழுதபடி கூறவேண்டும்.
ஆனால் ராம்சந்தருக்கு அப்போதிலிருந்தே அழுகை மட்டும் கொஞ்சம் சிக்கல் தரும் விஷயம். ஒத்திகையின்போதே டயலாக் பேசுவார். அழுகை வராது. அழவில்லையென்றால் அந்த காட்சி உருக்கமாக இருக்காது. இதற்காக காளி.என்.ரத்தினம் ஓர் உபாயம் செய்தார். முதல்நாள் நாடக அரங்கேற்றத்தின்போது அந்த காட்சியில் ராம்சந்தரை வசனம் பேசியபடி நாடக மேடையின் ஓரமாக வரச்சொல்லியிருந்தார் ரத்தினம்.
வாத்தியார் கூப்பிடுகிறாரே என சிறுவன் ராம்சந்தர் வசனம் பேசியபடி மேடையின் ஓரம் வர, திடடமிட்டபடி அங்கு மறைந்திருந்த ரத்தினம் ராம்சந்தரின் தலையில் ஒங்கி ஒரு குட்டு வைத்தார். உயிர் போகும் வலி. ராம்சந்தர் நிஜமாகவே அழுதபடி வசனம் பேச, அதை சிறுவனின் யதார்த்தமான நடிப்பு என நம்பி, “அடடா, என்னமா நடிக்கிறான்யா பையன்! ” என அரங்கில் பலத்த கைதட்டல். வலியினால் நாடகம் முடிந்தபின்னும் அழுதுகொண்டிருந்தான் ராம்சந்தர். இப்படி நாடகத்தின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர் காளி.என். ரத்தினம்.
கப்பல் பயணத்தில் இந்த சம்பவம்தான் திரும்ப திரும்ப நினைவில் வந்து ராம்சந்தரை பயமுறுத்திக்கொண்டிருந்தது.
யாராவது பார்த்துவிட்டு முதலாளியிடம் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்துடனேயே பர்மா பயணமானார்கள் சகோதரர்கள். பர்மாவில் நாடகம் துவங்கியது. ஒருநாள் நாடகத்தின் க்ளைமேக்ஸ் காட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது
தொடரும்.........
-
"எம்.ஜிஆரை சிறைக்கு அனுப்பிய காந்தி!" -
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
அத்தியாயம் : 6
மகரக்கட்டினால் கம்பெனியிலிருந்து வெளியேறி பர்மாவில் வேறொரு குழுவுடன் நாடகம் நடிக்கச் சென்றிருந்த ராம்சந்தர் நாடகத்தன்று முதன்முறையாக பூகம்பம் என்ற ஒன்றை நேரில் உணர்ந்தார்கள்
ஆம் நாடக மேடையில் நாடகம் நடந்துகொண்டிருந்தபோது கட்டிடம் ஒரு கணம் குலுங்கி நின்றது. அதிர்ச்சிக்கு ஆளானார்கள் அத்தனைபேரும். என்னவாயிற்று என்பதை உணர்வதற்குள் இன்னொரு முறை நிகழ்ந்தது அந்த சம்பவம். பதறியபடி தெருக்களில் சிதறி ஓடினர் நாடகம் பார்க்கவந்தவர்கள். சக்கரபாணி, தம்பியை தேடினார். சிறிதுநேரத்திற்குப்பின்னர்தான் தம்பியை கண்டுபிடித்தார். இது பூமி அதிர்ச்சி என்றார்கள். சகோதரர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில தினங்கள் பிடித்தன.
பர்மாவில் நாடகம் நடந்துகொண்டிருந்த சமயம் பி.யு.சின்னப்பாவும் பல இடங்களில் வாயப்புத் தேடி அலைந்து திரிந்து இறுதியாக மொய்தீன் குழுவில் நடிக்க பர்மாவுக்கு வந்திருந்தார். குறைவான ஆட்களே அழைத்துவரப்பட்டிருந்ததால் சமயங்களில் ராம்சந்தரே பெண் வேடமிட வேண்டியிருந்தது ஒருநாடகத்தில் பி.யு.சின்னப்பா ராஜபார்ட்டாகவும் ஸ்திரீ பார்ட்டாக ராம்சந்தரும் நடித்தனர். பர்மாவில் வெற்றிகரமாக நாடகங்கள் முடிந்து 6 மாதங்களுக்குப்பின் சென்னை வந்துசேர்ந்தனர் நாடக குழுவினர். அப்போது சென்னை யானைக்கவுனியில் ராம்சந்தர் குடும்பம் வசித்தது.
சொல்பேச்சு கேளாமல் இப்படி கண்டபடி அங்கும் இங்கும் திரிவது சத்தியபாமாவுக்கு அறவே பிடிக்கவில்லை. பிள்ளைகளை திட்டித்தீர்த்தார். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி எந்த திட்டமும் இல்லை சகோதரர்களிடம். ஆனாலும் அவர்கள் நாடகங்களை பார்ப்பதை கைவிடவில்லை. சென்னையில் எங்கு நாடகங்கள் நடந்தாலும் சகோதரர்கள் போய் பார்ப்பார்கள். வீட்டிற்கு வந்தபின் நடிகர்களின் நடிப்பை விமர்சனம் செய்வர். ஒரு மாதம் கழிந்த நிலையில் ஒருநாள் வேலுநாயர் ராம்சந்தரின் வீட்டுக்கு வந்தார்.
குடும்பத்தின் நலத்தை விசாரித்தவர், சகோதரர்களின் செயலை கண்டித்ததுடன், முதலாளி இன்னமும் அவர்கள் மீது அக்கறையாக இருப்பதை சுட்டிக்காட்டி திரும்ப பாய்ஸ் கம்பெனிக்கு வரும்படி அழைத்தார். அப்போதெல்லாம் சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் மாதம் 30 நாட்களும் நாடகங்கள் நடக்கும். வேலுநாயர் ராம்சந்தர் - சக்கரபாணியை சந்தித்த நேரத்தில் அங்கு பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் நடத்திவந்தது. இதனால் வேலுநாயருடன் அன்றே முதலாளியை பார்க்க கிளம்பினர் சகோதரர்கள்.
முதலாளியை பார்த்ததும் சகோதரர்களுக்கு ஒன்றும் பேச முடியவில்லை. “ஏம்பா நான் உங்களுக்கு என்ன குறைவெச்சேன். ஒழுக்கமான பசங்க நீங்க... குரல் கெட்டா என்ன கொஞ்சநாள் சாதகம் பண்ணி சரியாக்கிட்டா பழையபடி நடிக்கவேண்டியதுதானே...அதுக்காக கம்பெனியை விட்டு ஒடுறதா...சரி இனிமே அப்படி செய்யாதீங்க..போய் பாடத்தை படிங்க“ என பெரிய மனதுடன் பேசிவிட்டு கிளம்பினார்.
மீண்டும் உற்சாகத்துடன் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர் சகோதரர்கள். கதர்பக்தி நாடகம் இப்போது மீண்டும் நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் கதர்த்துணி உடுத்த ஆரம்பித்த காலகட்டம் அது.
ஒரு பக்கம் காந்தியத்தின்மீது பற்று. அதன்பேரில் காந்தியக்கொள்கைகளில் தீவிர பிடிப்பு உண்டாகி இக்காலத்தில் நிறைய புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தார். மற்றொரு பக்கம் எம்.ஜி.ஆர் தீவிர ஆத்திகராகவும் இக்காலத்தில் இருந்தார். சத்தியபாமா குடும்பத்தினரின் குலதெய்வம் காளி. என்றாலும் சிவனையும் நாராயணனையும் அவர்கள் தீவிரமாக வணங்கிவந்தனர். இதனால் இயல்பாகவே தாயின் வழக்கம் பிள்ளைகளுக்கு தொற்றிக்கொண்டது. எம்.ஜி.ஆர் வெங்கடேசபெருமாளை வணங்கும் வழக்கம் கொண்டிருந்தார். அக்காலத்தில் அவரது கழுத்தில் தாமரை மணி மாலை ஒன்று எப்போதும் அவரது கழுத்தை அலங்கரிக்கும். பாய்ஸ் கம்பெனியில் பாலநடிகனா இருந்தபோது சிலமுறை திருப்பதிக்கும் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் அவர்.
"நான் ஒரு நாத்திகன் என்று பலரும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, எழுதிவருகிறார்கள். உண்மையாகவே நான் ஒரு நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஒருவனே தேவன் என்ற கொள்கையுடையவன் நான். நமக்கெல்லாம் மீறிய ஒரு பெரிய சக்தி இருக்கிறது. அதைத்தான் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம். பலர் இந்தச் சக்திக்கு உருவம் கொடுத்து, பெயர்கள் தந்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள்.
நான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபாட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோயிலுக்குப் போனது கிடையாதா? போயிருக்கிறேன். அங்கிருந்த தெய்வங்களை வணங்கி இருக்கிறேன். 'மர்மயோகி' படம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாராகி வந்த சமயம், நான் பழநிக்குப் போய் முருகனைத் தரிசித்து இருக்கிறேன். அப்போது நான் மட்டும் தனியே போகவில்லை.
நண்பர் எம்.என்.நம்பியாரும் வந்திருந்தார். அவரின் மூத்த மகனை (சுகுமாரன் நம்பியார்) என் தோளிலே தூக்கிக்கொண்டு மலைக்குச் சென்றேன். அந்தக் குழந்தைக்கு அன்று நானே பெயரும் சூட்டினேன்.
ஒரு சமயம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நடந்தே போயிருக்கிறேன். இரண்டாவது முறையாக திருப்பதிக்குச் சென்றபோது தான் என் உள்ளத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. நண்பர்கள் சிலருடன், வாடகை காரில் திருப்பதிக்குச் சென்றிருந்தேன். ஏராளமான பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த தர்ம தரிசன வரிசையில் போய் நின்றுகொண்டோம்.
சற்றுநேரத்தில் எங்களுடன் வந்து பிரிந்துபோன நண்பர் ஒருவர், எங்களிடம் வந்தார். வரிசையிலிருந்து பிரிந்து எங்களுடன் வரும்படி அவர் எங்களையெல்லாம் அழைத்தார். நாங்களும் வெளியே வந்தோம். அவர், "உள்ளே சென்று வணங்கிவர நமக்கு பிரத்தியேகமான அனுமதி கிடைத்துவிட்டது. வரிசையில் காத்திருக்க வேண்டாம். தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் ஒருவரிடம் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டேன்"... என்றார் அந்த நண்பர்.
என் உள்ளத்தில் இது ஒரு பெரிய கேள்வியையே எழுப்பிவிட்டது.
'ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்திருக்கும் புனிதமான இடத்தில் இப்படி ஒரு முறையற்ற செயலா?' என்ற கேள்வியும் 'தெய்வத்தைத் தரிசிக்க லஞ்சமா?' என்ற வேதனையும் என் நெஞ்சத்தைப் போர்க்களமாக்கிவிட்டன. இதுபோன்ற வழிகளில் தான் தெய்வத்தைத் தரிசிக்க வேண்டுமா?
எனக்கு அது பிடிக்கவில்லை. என் மனம் அதற்கு இடம் தரமறுத்துவிட்டது. அன்று தான் நான் கடைசியாகக் கோயிலுக்குப் போனது. அதன்பிறகு நான் கோயிலுக்குச் சென்றது கிடையாது. அதனால் தெய்வம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நான் மறுப்பவனாக எண்ணிவிடக்கூடாது."- 1968-ல் நாடகம் ஒன்றுக்கு தலைமை வகித்துப் பேசிய அவர் தன் கடவுள் நம்பிக்கை பற்றி இப்படி குறிப்பிட்டார்.
கடவுள் மறுப்புக்கொள்கையில் தீவிரமாக இருந்த பெரியாரின் மீதும், அவரின் தளபதியாக விளங்கிய அண்ணாவின் மீதும் பி்ன்னாளில் எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு உருவானபோதும் கூட எம்.ஜி.ஆர் தன் ஆத்திக கொள்கையை விட்டுவிடவில்லை. அண்ணா உருவாக்கிய திமுகவில் அவர் இணைந்தார். பெரியார் அளவுக்கு நாத்திக கொள்கையில் அண்ணா உறுதியாக இல்லாதது திமுகவில் எம்.ஜி.ஆர் சேர ஒரு முக்கிய காரணமானது எனலாம். ஆனால் எக்காலத்திலும் அவர் கடவுளை மறுத்ததில்லை. ஆனால் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் கொண்ட படங்களை பலமுறை தவிர்த்திருக்கிறார். சிவாஜி நடித்த காத்தவராயன் உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம்.
பாய்ஸ் கம்பெனிக்கு திரும்ப வருவோமே...கதர்பக்தி நாடகம் திரும்ப நடத்தப்பட்டபோது எம்.ஜி.ஆர் உள்ளத்தில் காந்தியக்கொள்கைகள் கனன்று கொண்டிருந்தது.
காரணம் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த அந்நாளில் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்கள் துவங்கும் முன் “மகாத்மாக காந்திக்கு”....என மேடையில் இருந்து குரல் வரும். பார்வையாளர்கள் ஜே என்பார்கள். நாடகத்தின் கதையும் குடிப்பழக்கத்தின் தீமையை சொல்வது.
'சுதந்திரத்துக்காக இந்த தள்ளாத வயதில் காந்தி போராட்டங்களை நடத்தும்போது இளம்வயதில் நாம் பொறுப்பற்று இருக்கிறோமே' என்ற எண்ணம் அவரது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒருகடடத்தில் நாமும் எதையாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, ராம்சந்தர் காங்கிரஸில் காலணா உறுப்பினராக சேர்ந்தார்.
சேர்ந்ததுடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். அதையும் மீறி எதையாவது செய்யும் எண்ணம் அவருக்குள் தீவிரமானது... அது, இறுதியில் அவரை சிறைக்குக் கொண்டு போய் நிறுத்தியது...என்ன நடந்தது?
தொடரும்.........
-
"கண்ணில் பட்ட 'அது'... கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்!" - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
அத்தியாயம் : 7
நடிகர்கள் பொதுவாக உணர்ச்சியவயப்படுபவர்கள். நாடகத்தின் பெயர் கதர் பக்தி; கதாநாயகன் காந்தியின் கொள்கைகளை கொண்டாடுபவன். மதுவிலக்கை வலியுறுத்தி பக்கம் பக்கமாய் வசனங்கள்... கதாநாயகன் ராம்சந்தரின் மனசுக்குள் காந்தி வந்து அமர இது போதாதா?! காங்கிரஸின் காலணா உறுப்பினராகும் அளவு அவரது காந்தியப்பற்று வளர்ந்தது. காந்தியையும் நேரிலும் தரிசித்திருந்ததால் அது இன்னும் உச்சத்திற்கு போனது.
அப்போதெல்லாம் கள்ளுக்கடை மறியல் போராட்டங்கள் தீவிரமாக காங்கிரஸ் மற்றும் பல அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. மறியல் நடப்பதும் அதை போலீஸார் தடியடி நடத்தி கலைப்பதும் வாடிக்கையாக இருந்த காலம். மறியல் போராட்டங்களில் சாரிசாரியாக இளைஞர்கள் சிறையில் அடைபட்டு வந்தனர். யானைக்கவுனியில் ராம்சந்தர் வீடருகே, இயங்கிவந்த கள்ளுக்கடை முன் காங்கிரஸ் தொண்டர்கள் அன்று மறியல் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது. “என்னண்ணே உங்க தம்பி கூட மறியல்ல கலந்துக்க போறாமே! தேசபக்தி முத்திடுச்சா” - போகிற போக்கில் ஒரு நடிகர், சக்கரபாணியிடம் சொல்லிவிட்டுப் போனார்.
ராம்சந்தராவது போராட்டத்தில் கலந்துகொள்வதாவது என மனதிற்குள் சிரித்துக்கொண்டு வேறு வேலையில் ஈடுபட்டார் சக்கரபாணி. தகவலை அவர் உறுதிபடுத்தாதற்கு காரணம் சத்தியபாமா. வறுமையினால் ஊர் விட்டு ஊர் வந்து படிப்பையும் துறந்து நாடகத்தில் நடிக்கும் தம் பிள்ளைகள் சுதந்திரப்போராட்ட உணர்வுகளுக்கு ஆட்படுவதை அவர் ஆரம்பத்திலிருந்தே விரும்பவில்லை. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த ஒரு தாயின் கவலை அது. தனது கவலையை தொடர்ந்து பிள்ளைகளிடம் அவர் வலியுறுத்திவந்திருக்கிறார். இதனால் அம்மாவின் பேச்சுக்கு மாறாக ராம்சந்தர் அப்படிப்பட்ட விஷயங்களில் ஈடுபடமாட்டான் என்பதில் சக்கரபாணிக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது.
நாடக கொட்டகைக்கு கிளம்பிவந்தவர் ஒத்திகையில் மூழ்கினார். ஆனால் கொஞ்சநேரத்தில் மனதில் ஏதோ நெருடியது. வீட்டிலிருந்து தனக்கு முன்பு கிளம்பிய தம்பி எங்கே? ....மனது தேடத்துவங்கியது. கொட்டகையில் விசாரித்ததில் எல்லோரிடமும் ஒரே பதில் “ராம்சந்தரா... காலையிலிருந்தே அவனைப் பார்க்கலையே...” பகீர் என்றது சக்கரபாணிக்கு. 'நமக்கு வந்த தகவல் உண்மைதானா...' பதறியபடி மறியல் நடந்த கள்ளுக்கடைக்கு விறுவிறுவென சென்றார்.
சந்தேகம் உறுதியானது. மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீஸார் ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்களின் மத்தியில் குல்லா போடாத ஒரு இளைஞனும் வண்டியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தான். அது ராம்சந்தரேதான்.
வண்டி புறப்பட்டது. அதை பின்தொடர முடியவில்லை. கடைசியில் ராம்சந்தரை பூக்கடை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றதாக தெரிந்து அங்கு சென்றார் சக்கரபாணி. காவல்நிலையத்தில் சிரித்தபடி நின்றிருந்தார் ராம்சந்தர். “ஏண்டா உனக்கு இந்த வேலை...அம்மா சொன்னதைப்பற்றி கொஞ்சமும் கேட்கலை இல்லையா? ...சரி வா பெயில் எடுக்கிறேன்” என கடுங்கோபத்துடன் அவரை திட்டினார். “தேவையில்லை ஏட்டா... அவ்வளவு பெரிய பெரிய தலைவர்களாலேயே இன்னும் சுதந்திரம் வாங்க முடியலை...நீ போராடி என்னத்தை வாங்கப்போறே” என இன்ஸ்பெக்டர் கேஸ் எழுதாமல் தன்னை வெளியே அனுப்பிவிட்டதை ராம்சந்தர் சொல்ல... அத்தனை மணிநேர பதற்றத்தை மீறி சிரிக்கத்துவங்கினார் சக்கரபாணி.
ராம்சந்தரின் மதுவிலக்குப் போராட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை!..மதுவிலக்குக்காக தெருவில் இறங்கி ஒரு பக்கம் ராம்சந்தர் கொடிபிடித்துக்கொண்டிருக்க, அவருக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அவரது வீட்டிலேயே பல மாதங்களுக்குப்பின் நடந்தது. ... அப்போது சக்கரபாணிக்கு திருமணமாகிவிட்டிருந்தது. ஒருநாள் செலவிற்கு பணம் இல்லாமல் வீட்டில் துழாவிக்கொண்டிருந்தார் ராம்சந்தர். வழக்கம்போல அம்மாவின் பீரோவிலும் தேடியபோது துணி அடுக்கவைக்கப்பட்ட அடுக்கில் துணிகளுக்கு மத்தியில் ஏதோவொன்று அவர் கைக்கு தட்டுப்பட்டது.
வழக்கத்துக்கு மாறான பொருளாக தென்படவே, ஆவலுடன் அதை உள்ளேயிருந்து எடுத்த ராம்சந்தர் அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றுவிட்டார்... அது பாதி குடிக்கப்பட்டு மீதம் இருந்த ஒரு மது பாட்டில். மதுவிலக்கை வலியுறுத்தி நாடகங்களும், தெருவில் இறங்கி போராட்டங்களும் நடத்திவர, சொந்த வீட்டிலேயே மது பாட்டில் இருந்தது கோபத்தை உண்டுபண்ணியது. மூக்கை பரபரபரவென தேய்த்துவிட்டுக்கொண்டு வீட்டின் நடுஹாலுக்கு வந்தார்.
அங்கே தாயும் அண்ணியாரும் பிறந்த குழந்தையான மணியை கொஞ்சிக்கொண்டிருந்தனர்.
“ யாரு இங்க மது குடிச்சது...”உச்சஸ்தாயியில் கத்தினார் எம்.ஜி.ஆர். ஒருவரிடமும் பதிலில்லை. என்னடா இது இப்படி அசிங்கமா சத்தம் போடறே... அக்கம்பத்தினர் கேட்டா என்ன நினைப்பாங்க... போய் வேலையைப் பாரு....” - சத்தியபாமாவின் பேச்சு இன்னும் கொதிப்பை ஏற்படுத்த, “ஓஹோ குடிக்கிறது தப்பு இல்லை. அது மத்தவங்களுக்கு தெரியறதுதான் உங்களுக்கு பிரச்னையா” - பதிலுக்கு எகிறினார் ராம்சந்தர்.
“இது உன் அண்ணன் வாடகை தர்ற வீடு... உனக்கு பெரியவனே சும்மா கிடக்கான். நீ என்னமோ எகிறுறியே.. இஸ்டமிருந்தால் இரு இல்லேன்னா வெளியே போ...”சத்தியபாமா மகனுக்கு சளைக்காமல் குரலை உயர்த்திப் பேசினார். தாயின் பேச்சில் கொதிப்படைந்த ராம்சந்தர், கையிலிருந்த பாட்டிலை தரையில் ஓங்கி அடித்துவிட்டு சட்டையை மாற்றிக்கொண்டு ஒரு முடிவோடு விறுவிறுவென
தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்... அவரது கால்கள் கடற்கரையை நோக்கி நடந்தன...
தொடரும்.........
-
"எம்.ஜி.ஆர் இவரிடம் தான் நடிப்பு கற்றார்!"...
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் : 8, 9
எம்.கந்தசாமி முதலியார்... உட்பட எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பல்வேறு நபர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ஆளுமை செலுத்தியிருக்கிறார்கள். அவர்களில் எம்.கந்தசாமி முதலியார் முக்கியமானவர். வறுமையினால் பள்ளிப்படிப்பைத் துறந்து எம்.ஜி.ஆரும் அவர் சகோதரரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் குழுவில் இணைந்தபோது கம்பெனியின் நாடகங்களை எழுதி இயக்கிக்கொண்டிருந்தவர்தான் எம்.கந்தசாமி முதலியார். சத்தியபாமா தன் இரு மகன்களை ஒப்படைத்தது இவரிடம்தான். அப்போது சத்தியபாமாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “உங்க பிள்ளைங்க குறித்து இனி கவலைப்படாதீங்கம்மா... இனி அவங்களுடன் சேர்த்து எனக்கு 3 பிள்ளைங்க. எதிர்காலத்தில் அவுங்க நல்ல நிலைக்கு வர நான் பொறுப்பு” என ஆறுதல் சொன்னவர் எம்.கந்தசாமி முதலியார்.
அந்தக் காலத்திலேயே பி.ஏ பட்டதாரியான எம்.கந்தசாமி முதலியார், புராண நாடகங்கள் மட்டுமே போடப்பட்டுவந்த காலத்தில் சமூக நாடகங்களைத் துணிச்சலுடன் அரங்கேற்றியவர். நாடகத்தில் பகல் காட்சி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். படிக்கும் காலத்திலேயே கல்லூரி முதல்வர் முல்லர் என்பவரால் நாடகத்தின் மீது ஈடுபாடு கொண்டு பின்னாளில் அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இவருடைய புதல்வர்தான் ஜெமினி நிறுவனத்தில் ’சந்திரலேகா’, ’அபூர்வ சகோதரர்கள்’ படங்களில் நடித்துப் புகழ்பெற்ற எம்.கே ராதா.
தந்தையில்லாத எம்.ஜி.ஆர் சகோதரர்களை, சத்தியபாமாவுக்கு வாக்கு கொடுத்தபடியே தம் பிள்ளைகளில் ஒருவராகப் பாவித்தார் எம்.கே. நாடகம் மட்டுமின்றி அச்சு, விளம்பரம் போன்ற துறைகளிலும் ஞானம் பெற்றவர் எம்.கே.
நாடகக் குழுவில், தாய் தந்தையைப் பிரிந்து வந்திருக்கும் சிறுவர்களுக்குத் தந்தையைப்போல் இருந்து பாதுகாத்தவர் அவர். அவரது பிள்ளையான எம்.கே.ராதாவுக்கும் தந்தையில்லாமல், தாயைப் பிரிந்துவந்தவர்கள் என்பதால் எம்.ஜி.ஆர் சகோதரர்கள் மீது ஓர் இனம்புரியாத ஒரு பாசம் இருந்தது.
தந்தையுடன் எங்கு சென்றாலும் சகோதரர்களுக்கும் சேர்த்து தின்பண்டங்களை வாங்கி மறைத்துவைத்துக்கொண்டு கொட்டகைக்கு வந்தபின், சகோதரர்களுக்குத் தருவார் அவர். இது மற்ற பிள்ளைகளுக்கு வருத்தத்தைத் தந்தது. வாத்தியார் மகன் நம்மைவிட ராம்சந்தருக்கும் சக்கரபாணிக்கும் தனிக் கவனிப்பு தருகிறாரே என்ற தங்கள் ஆதங்கத்தை ஒருமுறை வாத்தியாரிடமே தெரிவித்தனர்.
மகனை அழைத்த எம்.கே., ’’நண்பர்களிடம் பேதம் காட்டக் கூடாது. உனக்கு ராம்சந்தர் சகோதரர்கள் மீது அதிக பாசம் இருப்பது தவறில்லை. ஆனால், அதை நீ இப்படி வெளிப்படையாக காட்டக் கூடாது. ஒருவர் மீது அதிகம் பிரியம் காட்டினால், அது மற்றவர்களை ஒதுக்குவதுபோல் ஆகிவிடும். இனி அப்படிச் செய்யாதே” என அறிவுரை கூறினார். இப்படி நாடகக் குழுவில் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் எம்.கே.
நாடகக் குழுவில் சிறுவர்கள் யார் தவறு செய்தாலும் தன் பிள்ளை எம்.கே.ராதாவைத்தான் அடிப்பார், எம்.கே. அப்படிக் கண்டிப்பதைப் பார்த்து அடுத்தமுறை அந்தத் தவற்றைச் செய்யமாட்டார்கள் என்பது அவரின் கணக்கு. “யாரோ செய்கிற தவறுக்கு என்னை ஏன் கண்டிக்கிறீர்கள்” என ஆற்றாமையாக ஒருநாள் கேட்டார் எம்.கே.ராதா. அதற்கு, “தாய் தந்தையரைப் பிரிந்து பல மைல் துாரங்களில் இருந்துவந்து எப்போது வீடு திரும்புவோம் எனத் தெரியாமல் நம்முடன் தங்கியிருக்கிறார்கள். தவறுக்காக அவர்களைக் கண்டித்தால் அவர்கள் யாரிடம் ஆறுதல் தேடிப்போவார்கள். நானும் அம்மாவும் உன்னுடன் இருப்பதால், உனக்கு அது பெரிய வருத்தத்தைத் தராது. அதனால், நீ பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.” - தந்தையின் மனிதநேயத்தைப் புரிந்துகொண்டு அமைதியானார் எம்.கே.ராதா.
ராம்சந்தர் சகோதரர்கள் பாய்ஸ் கம்பெனியில் இணைந்தபோது... ஆரம்பத்தில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்குள் இருந்தது. சமூக நாடகங்களில் முதன்முதலாகப் பிரதான வேடங்களை அவர்களுக்கு அளித்து உற்சாகப்படுத்தியதும் கந்தசாமி முதலியார்தான். கம்பெனி உரிமையாளரிடம் கோபித்துக்கொண்டு எம்.கே. மற்றும் அவரது மகன் எம்.கே.ராதா வேறு குழுவில் இடம்பெற்று வெளிநாடுகளில் நாடகம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது ராம்சந்தர் சகோதரர்களையும், தங்களுடன் இணைத்துக்கொள்ள பல முறை முயன்றனர். ஆரம்பத்தில் சகோதரர்கள் மறுத்தனர். ஆனால், பின்னாளில் சகோதரர்களுக்குக் குழுவைவிட்டுப் பிரியும் மனநிலைக்கு வந்தபோது அவர்களுக்குக் கைகொடுத்தவர் எம்.கே-தான். அவர்களுடனான முதல் பயணமே பர்மா.
கந்தசாமி முதலியாரைத் தவிர, வேறு யாராக இருந்தாலும் கடல்கடந்த அந்தப் பயணத்துக்கு அனுமதித்திருக்கமாட்டார் சத்தியபாமா. அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார் கந்தசாமி முதலியார் மீது.
தந்தைக்கு நிகராக அவரது தனயனும் சகோதரர்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார். பின்னாளில் புகழ்பெற்ற நடிகரான எம்.ஜி.ஆர்., ’’தனக்கு எம்.கே.ராதாவுடன் சேர்த்து இரண்டு அண்ணன்கள்" என்று வாஞ்சையுடன் புகழ்ந்தார். முன்னரே குறிப்பிட்டபடி எம்.ஜி.ஆரால் பொதுமேடையில் காலில் விழுந்து வணங்கப்பட்டவர்களில் ஒருவர் எம்.கே.ராதா. இன்னொருவர் சாந்தாராம். அத்தனை மரியாதைக்குரிய இடத்தில் எம்.கே.ராதாவை வைத்திருந்தார்.
பின்னாளில், எம்.ஜி.ஆர் முதல்வரான சமயம்... முதன்முதலில் அவர் வீடு தேடிச்சென்று வாழ்த்து பெற்றது எம்.கே.ராதாவிடம்தான். சுமார் ஒரு மணிநேரம் அவரது வீட்டில் இருந்து பூஜையறையில் இருந்த கந்தசாமி முதலியார் படத்தின் முன் 10 நிமிடங்கள் நின்று வணங்கிவிட்டுத் திரும்பினார்.
“நாடகத்துல நடிக்கும் காலத்திலேயே தம்பி, தான் நடித்து முடித்துவிட்டாலும் அங்கிருந்து போய்விடாமல் மற்றவர்களின் நடிப்பை அரங்கின் ஓரமாக நின்று ரசிக்கும். அபாரமான பாடம் செய்யும் சக்தியும், கேள்விஞானமும் அதிகம் அவருக்கு. உடன் நடிப்பவர்களுக்கு உதவுவதில் முன்நிற்பார். மனிதநேயம், விடாமுயற்சி, அயராத உழைப்பு, தன்னம்பிக்கை இவைதான் அவரை இந்த உயரத்துக்குக் கொண்டுவந்தன” 70-களின் மத்தியில், தம்பி எம்.ஜி.ஆரை சிலாகித்துச் சொன்னவர் எம்.கே.ராதா.
எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆருக்கு நாடகக் குரு மட்டுமல்ல; அவரது திரையுலகப் பிரவேசத்துக்கும் அவர்தான் வித்திட்டார்.
எம்.ஜி.ஆரின் முதல்படமான 'சதிலீலாவதி' யில் நடிக்கும் வாய்ப்பு பெற்றுத்தந்தவர் அவரே... ராம்சந்தருக்கு முதல்பட வாய்ப்பு எப்படிக் கிடைத்ததுத் தெரியுமா...?
தொடரும்..............
-
"முதலாளிமார் சிறை வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்"..! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜிஆர். அத்தியாயம் 10
எம்.ஜி.ஆரின் முதற்படம் 1936 ம்ஆண்டு வெளியானது. இந்தியத் திரைப்படங்கள் மௌனம் கலைந்து பேச ஆரம்பித்த காலத்தில் நாடக நடிகர்கள் மெல்ல திரைப்பட ஆசையில் திளைக்க ஆரம்பித்தனர். பார்வையாளர்களின் கைதட்டலையும் கூச்சலையும் நேரில் கண்டு அனுபவித்தவர்கள், சினிமா மாயைக்குள் சிக்குண்டனர். திரைப்படங்களில் நடித்து புகழ்பெறுவது அவர்களின் கனவாக ஆனது. ராம்சந்தர் சகோதரர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. என்றாலும் அவர்கள் திரைத்துறையில் எளிதாக வாய்ப்பு பெறும் அளவு நாடகத்துறையில் புகழ்பெற்றவர்களாக அப்போது இல்லை. இளமையும் நடிப்புத்திறமையும் அவர்களிடம் மூலதனமாக இருந்தபோதும் சினிமா வாய்ப்பு பெறும் அளவுக்கு பரவலான நட்புவட்டத்தை பெற்றிருக்கவில்லை அவர்கள். வெளியுலகத்தைப்பற்றியோ, மனிதர்களின் சுபாவம் பற்றியோ பெரிய அளவில் அறிந்துகொள்ளாத பக்குவம்தான் அவர்களுக்கு இருந்தது. உலக அனுபவமும் அவ்வளவாக பெற்றிருக்கவில்லை. 'நாடகத்தில் நடிக்கிறோம், பணம் கிடைக்கிறது, குறைந்தபட்ச வசதியான வாழ்க்கை' இப்படித்தான் கழிந்தன ராம்சந்தரின் நாடக வாழ்க்கை.
திரைப்பட ஆசையில் நாடக கம்பெனியில் இருந்து ஒவ்வொருவராக கழன்று சென்றுகொண்டிருந்தனர். ஆசான் எம்.கந்தசாமி முதலியார், அவரது மகன் எம்.கே.ராதா, கே.பி கேசவன், பி.யு சின்னப்பா, கே.ஆர். ராமசாமி...என அந்நாளில் புகழ்பெற்ற நாடகக்கலைஞர்கள் மற்றும் இன்னும் பலர் அப்படி விலகியிருந்தனர். சினிமா ஆசை சகோதரர்கள் மனதில் மெல்லத் துளிர்விட ஆரம்பித்தது. அரைகுறை மனதுடன் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த தகவல் வந்தது சகோதரர்களுக்கு. ஆம் நாடக கம்பெனியின் முதலாளி சொந்தமாக திரைப்படம் எடுக்கப்போகிறார் என்ற தகவல்.
சகோதரர்களுக்கு மகிழ்ச்சி. ஆஹா, நாமும் திரைப்பட நடிகர்களாகப்போகிறோம். கும்பிடப்போன காமிரா குறுக்கே வந்ததுபோல், துள்ளிக்குதித்தனர் இருவரும்.
அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி 'பதிபக்தி' என்ற நாடகத்தை நடத்திவந்தது. தமிழகத்தில் அந்த நாடகம் நடக்காத ஊர் இல்லை என்ற அளவுக்கு பெரும் வரவேற்பை பெற்றது அந்த நாடகம். அதன் விளைவாக அதை படமாகத் தயாரிக்க திட்டமிட்டது நாடக கம்பெனி. அதேசமயம் நாடகக்குழுவை கலைத்துவிடவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. அது, சகோதரர்கள் மனதில் பயத்தை உண்டுபண்ணியது. காரணம் அக்காலத்தில் சினிமா தயாரிப்பு என்பது புனே, மும்பை என சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டன. சென்னையில் அந்நாட்களில் வசதியான ஸ்டுடியோக்கள் அரிதாகவே இருந்தன. இதனால் ஒரு படத்தை தயாரித்து முடிக்க பல மாதங்கள் ஆகின. 'நாடகம் தினமும் நடக்கிறது. தினமும் நிச்சயமான வருமானம். ஆனால் சினிமாவில் ஒரு படத்திற்கான குறைவான சம்பளத்தில் வருடம் முழுக்க உழைப்பையும் நேரத்தையும் செலவிடவேண்டியதிருக்கும். அப்படியானால் நாடகத்தை முற்றாக துறக்கவேண்டும். இதுதான் கவலை தந்தது சகோதரர்களுக்கு. சினிமாவை நம்பி நிரந்தர வருமானத்தை இழக்கமுடியாது. எப்படியோ மனதை தேற்றிக்கொண்ட நேரத்தில் இடியென வந்தது அந்த தகவல்.
முதற்படம் என்பதால் ஏற்கெனவே சினிமாவில் பிரபலமானவர்களைக் கொண்டே தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதேசமயம் எம்.ஜி.ஆர் சகோதரர்கள் தொடர்ந்து கம்பெனி நாடகங்களில் நடிக்கவேண்டும் என கம்பெனி முடிவெடுத்த தகவல் அது. .நொந்துபோனார்கள் சகோதரர்கள்.
இத்தனை வருடங்கள் கம்பெனிக்காக உழைத்த நமக்கு கம்பெனியின் சொந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்படும்போது தொடர்ந்து இங்கு நம் உழைப்பை வீணாக்கவேண்டுமா என்ற எண்ணம் ராம்சந்தர் மனதில் தோன்றியது. கம்பெனியை விட்டு விலகுவதென சகோதரர்கள் முடிவெடுத்தனர். ஆனால் அதிலும் ஒரு சிக்கல். முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை ரொம்ப கறார் பேர்வழி. விருப்பப்பட்ட நேரத்தில் விடுமுறையே அளிக்கமாட்டார். விலகுவதென்றால் விடுவாரா...அதுவும் கம்பெனியில் ஆட்கள் இல்லாத இந்த நேரத்தில்.
ஒருமுறை வேலுாரில் முகாம் போட்டிருந்த நேரம், ஊரெல்லாம் காலரா பரவியது. பலர் இறக்கவும் நேரிட்டது. உச்சகட்டமாக நாடகக்குழுவில் இருந்த ஒருவரும் காலரா பாதிப்பில் இறந்தார். ஊரை உடனே காலி செய்வது நல்லது என குழுவினர் முடிவெடுத்தனர். ஆனால் முதலாளி சச்சிதானந்தம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. திட்டமிட்டபடி ஒப்பந்தம் முடிந்த பின்னரே செல்வது என உறுதியாக இருந்தார். இத்தனைக்கும் ராம்சந்தரே கூட காலராவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அத்தனை முரட்டு மனிதர் அவர். சகோதரர்களுக்கு இப்போது இந்த சம்பவம் நினைவுக்கு வந்து கிலி தந்தது.
மன உளைச்சலுக்கு ஆறுதல் தேடி அவர்கள் சென்ற இடம் எம்.கந்தசாமி முதலியார் வீடு. தங்கள் பிரச்னைகள் முழுவதையும் அவரிடம் சொல்லி அழுதனர். இளமையும் அழகும் கொண்ட தங்கள் எதிர்காலம் நாடகத்திலேயே முடங்கிவிடக்கூடுமோ என்ற தங்கள் அச்சத்தை சொல்லி வேதனைப்பட்டனர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட எம்.கே. மனதில் ஒரு திட்டத்துடன் சகோதரர்களிடம், கம்பெனியை விட்டு வந்துவிடுங்கள்...உங்களுக்கு நான் ஒரு வழி செய்கிறேன்”- எம்.கே வின் வார்த்தைகளில் ஆறுதலடைந்து வீடு திரும்பினர் சகோதரர்கள்.
என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மறுநாள் முதலாளி முன்போய் நின்று தங்கள் முடிவை சொன்னார்கள். “ஏலே பயலுகளா...நல்லா நடிச்சி பேரு கிடைச்சி, நாலு காசும் பார்த்தபின்னாடி திமிரு வந்திடுச்சா...கம்பெனியில ஆளு குறைவா இருக்கு. உங்களை வெளிய அனுப்பமுடியாது. அப்படி தெரியாம ஓடிப்போக நினைச்சிங்கன்னா, கம்பெனி சாமான்களை திருடிட்டுப் போயிட்டதா போலீஸ்ல புகார் தந்து புடிச்சி கொடுத்திடுவேன். ஜாக்கிரதை”- முதலாளியின் பேச்சால் அதிர்ந்தனர் சகோதரர்கள்.
சினிமா வாய்ப்பும் மறுக்கப்பட்டதோடு, விரும்பியபடி வெளியேறவும் செல்லமுடியாமல் கிட்டதட்ட சிறைக்காவல் போல தாங்கள் வைக்கப்பட்டதை நினைத்து இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த சகோதரர்கள் சத்தியபாமாவிடம் அதைச் சொல்லி வேதனைப்பட்டனர். “அட, இதற்காகவா விசனப்பட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். என் பிள்ளைகளை மிரட்டறானா அந்த முதலாளி.. போய் ஒரு வெள்ளைத்தாளை கொண்டுவாங்கடா, சீக்கிரம்...” அம்மா ஏன் வெள்ளைத்தாளை கொண்டுவரச் சொல்கிறார்" என்ற குழப்பத்துடன் தாயாரைப் பாரத்தார்கள் சகோதரர்கள்...அம்மா சொன்ன அதிரடி யோசனையை கேட்டு அதிர்ந்து நின்றனர் இருவரும்.
தொடரும்...............
-
"எம்.ஜி.ஆருக்கு தியேட்டரில் கிடைத்த அனுபவம்! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். அத்தியாயம் 11
நாடக முதலாளியால் தன் பிள்ளைகள் மிரட்டப்பட்டதைக் கேள்விப்பட்டு பொங்கி எழுந்தார் சத்தியபாமா. “அவரு என்னடா புகார் தர்றது...நாம தருவோம் அவர் மேல...”- எம் ஜி ஆர் பேப்பர் கொண்டுவர, விடுவிடுவென சொல்லச் சொல்ல சக்கரபாணி எழுத ஆரம்பித்தார்.
“மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடித்துவரும் எங்களுக்கு கம்பெனி எடுக்கும் சொந்தப் பணத்தில் வாய்ப்பு தராததோடு தொடர்ந்து தங்கள் நாடகத்தில் நடிக்கவேண்டும் எனவும், மறுத்தால் கம்பெனி சாமான்களை திருடிச்சென்றுவிட்டதாக எங்கள் மீது முதலாளி பழிபோட்டு சிறைக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டுகிறார். எங்களை இந்த இக்கட்டிலிருந்து காக்கவேண்டும்.” இதுதான் கடிதத்தின் சாராம்சம்.
தாயின் சொல்படி, கடிதத்தை உள்ளுர் காவல்நிலையத்திற்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தனர் சகோதரர்கள். “இப்போ போய் சினிமாவாய்ப்பை தேடுங்கடா...உங்க முதலாளி என்ன பண்ணிடுவார்னு பார்ப்போம்” - தாயின் சாதுர்யமான முடிவை எண்ணி வியந்த சகோதரர்கள், மனநிம்மதியுடன் வாய்ப்பு தேடும் முடிவுக்கு வந்தனர்.
அப்போது அவர்களுக்கு நினைவுக்கு வந்தவர், நாடக உலகில் மேடைப் புலி என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட கே.பி கேசவன். அவரது நாடகத்திற்கு நிச்சயமான வசூல் என்பது அந்நாளில் உறுதி. பாய்ஸ் கம்பெனியில் இருந்தபோது சகோதரர்களுடன் நெருங்கிப்பழகியவர். அழகும், கணீர்க்குரலில் அவர் பேசும் வசனமும் அப்போது நாடகமேடையில் அவரை பிரபலப்படுத்தியிருந்தது. நாடகத்துறையில் இருந்து விலகி சினிமாப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர், ராஜ்மோகன் என்ற படத்தில் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டிருந்தார். கம்பெனியில் இருக்கும்போது அத்தனை பேரும் புகழும் பெற்றிருந்த அவர், “ராம்சந்தரா உன் அழகுக்கும் கலருக்கும் நீ ஒருநாள் இந்த சினிமாவை ஆளப்போறேடா”- என எம்.ஜி.ஆரை பார்க்கும்போதெல்லாம் சொல்வார். அப்போதெல்லாம் வெட்கப்பட்டு சிரிப்பார் எம்.ஜி.ஆர். காரணம் சினிமாவில் நடிப்பது குதிரைக்கொம்பான காலம் அல்லவா.
ஆனால் பின்னாளில் அதுதானே நடந்தது. பின்னாளில் பெரும் போராட்டங்களுக்கிடையில் சினிமா உலகில் தனக்காக ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்ட எம்.ஜி.ஆர், அங்கு தொடர்ந்து நிலைத்து நிற்கவும் கே.பி கேசவனே காரணமானார்.
சினிமா உலகில் புகழின் உச்சியை தொட்டபோதும், தன்னைச்சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக எம்.ஜி.ஆர் கற்பனை செய்துகொள்ளவில்லை. வெற்றிகளின்போது வெறி கொண்டு ஆடாமலும், தோல்விகளின்போது துவண்டுவிடாமல் போராடவும் இருக்க அவருக்கு பாடமாக இருந்தவர் கே.பி கேசவன்தான்.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் நடந்தது. சென்னை 'நியூ எல்பின்ஸ்டன்' தியேட்டரில் அப்போது 'இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டிருந்தது. அதில் கதாநாயகனாக நடித்தவர் அன்றைய பிரபல நடிகர். நாடக மேடையிலும் சினிமாவிலும் நடித்து பெரும் புகழ்ப் பெற்றிருந்த அவருடன் எம்.ஜி.ஆரும் வேறு சிலரும் படத்தைப் பார்க்க சென்றிருந்தனர்.
இடைவேளையின்போது, படத்தின் கதாநாயகனே படம் பார்க்க வந்த தகவல் ரசிகர்களுக்கு எட்டியது. ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக எழுந்து நின்று அவர் பெயரைக் கூறி வாழ்த்துக் கோஷமிட ஆரம்பித்தார்கள். அந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த எம்.ஜி.ஆர், இதைத் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார். கதாநாயகனை தங்கள் அன்பில் திளைக்கவைத்தனர் ரசிகர்கள். இத்தனை ஆதரவும், செல்வாக்கும் பெற்ற ஒரு நடிகனின் அருகில் தான் அமர்ந்திருந்தது பெருமையாக இருந்தது எம்.ஜி.ஆருக்கு.
படம் முடிந்த பின் புறப்பட்டால் ரசிகர்கள் அன்பிலிருந்து விடுபடமுடியாது என்பதால் கதாநாயக நடிகர் அதற்கு முன்பே புறப்பட்டார். ஆனால் அதற்குள் மக்களும் வெளியே வந்துவிட்டனர். கதாநாயக நடிகர் மேலே இருந்து படி இறங்கி கீழே வருவதற்க்குள் ரசிகர்கள் அவரை சூழந்துக் கொண்டு ஆட்டோகிராப் கேட்டு அன்புத்தொல்லை கொடுத்தனர். அவர்களிடம் இருந்து அவரை பெரும் சிரமத்துடன் காப்பாற்றி அன்று பாதுகாப்பாக காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தது எம்.ஜி.ஆர்தான்.
அன்று மக்களுக்கு எம். ஜி.ஆர் என்ற துணைநடிகரைத் தெரியாது. ரசிகர்களிடம் அவர் சண்டையிட்டு கதாநாயக நடிகரை மீட்டபோது கூட அவரும் அந்த படத்தில் நடித்திருப்பவர்களில் ஒருவர் என்பதை அவர்கள் அறியவில்லை. அன்றைக்கு எம்.ஜி.ஆரின் பிரபல்யம் அவ்வளவுதான்.
காலச் சக்கரம் சுழன்றது. அதற்குப் பல ஆண்டுகளுக்கு பின், எம்.ஜி.ஆர் நடித்த 'மர்மயோகி' திரைப்படம் வெளியானது. படத்தின் வெற்றியால் மூலைமுடுக்கெல்லாம் எம்.ஜி.ஆரின் வாள்வீச்சும், அநாயாசமான நடிப்பும், இளமையும், அழகும் மக்களால் சிலாகிக்கப்பட்டது. அப்போது சென்னை 'நியூ குளோப்' தியேட்டரில் அதே கதாநாயக நடிகருடன் ஓர் ஆங்கிலப் படம் பார்க்கச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர்.
இடைவேளையின்போது 'மர்மயோகி' எம்.ஜி.ஆர் படத்திற்கு வந்திருந்த தகவல்
அறிந்து ரசிகர்கள் எழுந்து கூச்சல் போட்டார்கள். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த முன்னாள் கதாநாயக நடிகரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அவரைத் தள்ளிக்கொண்டுச் சென்று எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் வாங்கினர் ரசிகர்கள். பலர் அந்த முன்னாள் கதாநாயக நடிகரிடமே தங்கள் நோட்டுப்புத்தகங்களை தந்து எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் வாங்கித்தரக்கோரினர். பொறுமையுடன் அதை செய்தார் அவர். அந்த அளவிற்கு அந்த முன்னாள் கதாநாயகன் மக்களின் மனங்களில் இருந்த மறக்கப்பட்டிருந்தார்.
படம் முடிந்து வெளியே வந்தபோது மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்தது. அந்த ரசிகர் கூட்டத்திடமிருந்து எம்.ஜி.ஆரைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி அனுப்பினார் அந்த 'முன்னாள்'. எம்.ஜி.ஆர் ஏறி அமர்ந்த டாக்ஸி அங்கிருந்து சீறிக்கிளம்பியது. வண்டியின் பின் கண்ணாடி வழியாக எம்.ஜி.ஆர் திரும்பிப்பார்த்தார். திரண்டு நின்ற மக்கள் கூட்டத்தில் மக்களோடு மக்களாக அந்த முன்னாள் கதாநாயகனும் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். இத்தனைக்கும் அந்த நடிகருக்கு வயதாகிவிடவுமில்லை; நடிப்பு வன்மையும் குறைந்துவிடவில்லை.
எம்.ஜி.ஆர் மனதில் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அன்றுதான், எவ்வளவுதான் புகழ் கிடைத்தாலும் அதன் போதைக்கு அடிமையாகிவிடக்கூடாது என தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.
“எந்த மனிதனும் அவனுடைய வாழ்க்கையில் உச்ச நிலைக்குப் போய்விட்டதாக நினைப்பது, தோல்வியான ஒரு சூழ்நிலையில் தோன்றும் திகைப்பேயாகும். கலைஞர்களுக்கு உச்சநிலை, தாழ்ந்தநிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. அவ்வளவுதான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும்; தாழ்த்தும். அது மக்களின் மனதில் தோன்றும் முடிவு! - என 1968 ம்ஆண்டு ஏப்ரலில் சினிமா இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மேற்சொன்ன சம்பவங்களைக் கூறி பேட்டியளித்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருக்கு படிப்பினையை ஏற்படுத்திய அந்த கதாநாயக நடிகர் வேறு யாருமல்ல; சினிமா வாய்ப்புக்காக முதன்முதலாக எம்.ஜி.ஆர் நாடிச் சென்ற அதே கே.பி.கேசவன்தான்!
வாய்ப்பு பெற்று தந்தாரா கே.பி.கேசவன்?
தொடரும்... .........
-
"எஸ்.எஸ்.வாசன் கதையில் திரைப்பட வாழ்வைத் துவக்கிய எம்.ஜி.ஆர்"! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
அத்தியாயம் 12
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன்.
அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!
– தகவல் : சு .திருநாவுக்கரசர் ( புதிய தலைமுறை )...........
-
"முதல் படத்தில் எம்.ஜி.ஆரின் சம்பளம் எவ்வளவு"?- நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். அத்தியாயம்-13
கே.பி கேசவன் மூலம் தேடிவந்த வாய்ப்பு, தன் முகவாய்கட்டையில் இருந்த தழும்பினால் தவறிப்போன வருத்தத்துடன் இருந்த நேரத்தில்தான், எம்.கந்தசாமி முதலியாரைச் சந்தித்தனர் எம்.ஜி.ஆர் சகோதரர்கள். அவர்களின் நலம் விசாரித்த எம்.கே, உடனடியாக அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர முன்வந்தார். தங்களின் நாடக குரு மூலம் ராம்சந்தர் முதன்முதலாக படத்தில் நடிக்கும் வாய்ப்புப் பெற்றாலும், அத்தனை எளிதாக அது கைகூடவில்லை. படத்தின் படப்பிடிப்பு துவங்கும்வரை, அதில் தான் நடிப்போமா இல்லையா என்று குழப்பத்தின் உச்சிக்கே செல்லும்படி பல சம்பவங்கள் நடந்தேறின. 1966 -ம் ஆண்டில், தான் பொறுப்பாசிரியராக இருந்து நடத்திய சமநீதி இதழில் சுவாரஸ்யமான அந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
பதவிப் போராட்டம் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், சதி லீலாவதி செய்த சதிகளை சுவாரஸ்யமாக எழுதுகிறார் இப்படி...
நான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடித்துக்கொண்டிருந்த நேரம். வெளியுலகத்தைப் பற்றியோ, மக்கள் மனோபாவம் எப்படியிருக்கும் என்பதையோ, எந்தெந்தக் குணத்தினர், எப்படிப்பட்ட தரத்தினர் என்பதையோ சிறிதும் தெரிந்துக்கொள்ளாத, தெரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தேன். (இப்போது எல்லாம் தெரிந்துகொண்டுவிட்டேன் என்று கருதுவதாக யாரும் எண்ண வேண்டாம்.) உலக அனுபவம் சிறிதும் பெறாத நிலையில் இருந்தேன் என்பதையே குறிப்பிடுகிறேன்.
அந்தப் பருவத்தில், அதுவரை எனக்குக் கிடைத்திருந்த அனுபவமெல்லாம், “நாடகத்திலே நடிக்கிறோம்; பணம் கிடைக்கிறது. கிடைக்கிற பணம் வாழ்க்கைக்குப் போதாது. அதிகப் பணம் தேவை. அந்த அதிகப் பணத்திற்காக ,அதிகச் சம்பளம் வாங்குவதற்கு வேறு கம்பெனிக்குப் போக வேண்டுமென்றால், அதற்கு வேண்டிய தகுதிகள் இல்லை. ஏதோ கிடைத்ததைக்கொண்டு, இதாவது கிடைக்கிறதே என்று வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டு போகவேண்டியதுதான்” என்று சுற்றிச்சுற்றி இந்தப் பிரச்னையிலேயே உழன்று கொண்டிருந்தேன்.
இப்போது சில சமயம் வேலை செய்வதற்கு நேரம் போதவில்லையே என்ற கவலை! அப்போது நிறைய நேரமிருக்கிறது, வேலையில்லையே என்ற கவலை.
இத்தகைய நிலையில், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் நல்ல வசூலோடும், வெற்றியோடும் நடத்திக்கொண்டிருந்த 'பதிபக்தி' என்ற நாடகத்தைச் சினிமாவாக எடுக்கத் தீர்மானித்துவிட்டார்கள். வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்ற செய்தி விபத்தைப்போல எங்கள் செவிகளில் விழுந்தது. படம் எடுப்பதனால் நாடகக் கம்பெனியை நிறுத்திவிடப்போவதாகவும், அவர்களை ஒவ்வொன்றாகத் தொடர்ந்து படமெடுக்கத் தீர்மானித்துவிட்டதாகவும் சொல்லப்பட்டதுதான் அந்தச் செய்தி. அது, விபத்தைப் போன்று என்னையும், என் தமயனாரையும் உலுக்கியது.
“ஆமாம், நாடகக் கம்பெனியை நிறுத்திவிட்டால் என்ன? படம்தான் எடுக்கிறார்களே! அதில் வேலை (வேடம்) கிடைக்காதா என்ன? அந்த நம்பிக்கை இருக்குமல்லவா?”: என்று கேட்டுவிடாதீர்கள்! நாடகக் கம்பெனி என்றால், தினமும் நாடகம் நடக்கும். மாதா மாதம் சம்பளமும் கிடைக்கும். எப்போதோ படம் எடுப்பார்கள்; என்றோ ஓரிரு நாள் வேலையிருக்கும். மாதச் சம்பளம் எப்படிக் கிடைக்கும்! அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனால், எதிர்பார்க்காவிட்டால் எப்படித்தான் வாழ்வு..? எங்களுக்கு இந்த நல்ல குணம் (தேவையற்ற குணம்) யாரிடமாவது சென்று வேலை கேட்கும் பழக்கமும் கிடையாது; எப்படிக் கேட்பது என்றும் தெரியாது. அழுதபிள்ளைதான் பால்குடிக்கும்! சரி, பால் எந்தத் தாயிடமிருந்து கிடைக்கும் என்றாவது குழந்தைக்குத் தெரிய வேண்டுமே!
வறுமையின் காரணமாக பால் கொடுக்கும் சக்தியை இழந்துவிட்ட ஒரு தாயிடம், அதன் குழந்தை எவ்வளவு பெரியதாக அழுதால்தான் என்ன, எத்தனை நேரம் அழுதால்தான் என்ன? அந்த நிலையில் உள்ள குழந்தைகளைப் போன்றவர்களானோம் நாங்களும். ஒரு நாள் ,எதிர்பாராதவிதமாக எங்களுடைய நாடக ஆசிரியரும், எம்.கே.ராதா அவர்களின் காலஞ்சென்ற தந்தையுமான எம்.கந்தசாமி முதலியார் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்... எதிர்காலத்திற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று எப்போதும்போல அக்கறையோடும், அன்போடும் அவர் விசாரித்தார். “படம் எடுக்கப்போகிறார்கள்... அதிலே ஏதாவது வேடம் கிடைக்குமென்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” இதுவே எங்கள் பதில்.
‘இல்லை’ என்று சொல்வதற்கும் வெட்கம்! “இருக்கிறது” என்று சொல்வதற்கும் அச்சம்!
அவர் சொன்னார், “நல்லவேடம் கொடுத்தால் நடிக்கலாம் இல்லையா? ஒரு பட முதலாளி ‘சதிலீலாவதி’ என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். அதற்கு நான்தான் உரையாடல் எழுதப்போகிறேன்! எல்லிஸ் ஆர்.டங்கன் என்கிற அமெரிக்க டைரக்டர் படத்தை இயக்கப்போகிறார். அதில் ஒரு துப்பறிபவன் வேடம் இருக்கிறது. சண்டைக் காட்சிகள் எல்லாம் அந்த வேடத்திற்கு உள்ளன. நீ வருவதாயிருந்தால், அந்த வேடத்தை உனக்குத் தர ஏற்பாடுசெய்கிறேன்” என்றார்.
கரும்பு தின்னக் கூலியா கேட்போம்! 'பத்தோடு பதினொன்று அத்தோடு இதொன்று' என்ற நிலையிலிருந்த எனக்குத் துப்பறிபவன் வேடம்!
'பதிபக்தி' என்ற நாடகத்திலும் 'துப்பறியும் சந்தானம்' என்ற ஒரு வேடம் உண்டு. அந்த வேடத்தை ஏற்று நடிப்பவர் எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்த ஆசிரியரான காளி என். ரத்தினம் அவர்கள். அந்த நாடகம் பெருமை பெறக்காரணமாக இருந்த சிறப்புகளில் ஒன்று காளி. என். ரத்தினம். அவர்கள் தாம் ஏற்றுக்கொண்ட துப்பறியும் வேடத்திற்கேற்ப நாடகத்தின் இறுதிக்கட்டத்தில் போடும் சண்டைக் காட்சி தவிர கே.பி. கேசவன் அவர்களின் குடிகார நடிப்பும், நல்ல கதையமைப்பும் அதன் வெற்றிக்குக் காரணங்களாகும்.
'சதிலீலாவதி' யின் கதையும் ‘பதிபக்தி’போன்றே ஒரே மாதிரியான பல சம்பவங்களைக் கொண்ட கதைதான். 'பதிபக்தி' யின் கதாசிரியர் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். “சதிலீலாவதி”யின் கதை ஆசிரியர் எஸ்.எஸ். வாசன். என்னுடைய ஆசிரியர் நடிக்கிற அதே வேடம். அதேபோன்ற படத்தில் எனக்குக் கிடைக்கிறதென்றால் எப்படி அதை வரவேற்காமல் இருக்க முடியும்? “எப்பொழுது வரவேண்டும்?” என்றுதான் என்னால் கேட்க முடிந்தது. “முதலாளி வந்துவிடுவார்கள்; வந்ததும் பாரு, ஒப்பந்தம் செய்து வைக்கிறேன் ’’ என்றார்.
அதன்பின், படத்தின் முதலாளி வந்துவிட்டார் என்ற செய்தி வருகிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது என்றால் மிகையாகாது.
எங்கள் நாடக் கம்பெனி நாடகங்கள் சென்னை ராயல் தியேட்டரில் (சால் கொட்டர்ஸ்) தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது. நாங்கள் வேறொரு கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்படப் போகிறோம் என்ற செய்தி எங்கள் இருவரையும், எங்கள் தாயாரையும் தவிர வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை. நாங்களும் சொல்லவில்லை. வேண்டுமென்றேதான் மறைத்து வைத்திருந்தோம். ஒருநாள் ஆசிரியர் எம்.கே. அவர்களிடமிருந்து தகவல் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் எங்களை அழைத்துப்போய் ஒப்பந்தம் செய்துவைத்து முன்பணம் வாங்கித் தருவதாக கிடைத்த தகவல்.
எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காத்திருந்தோம்; காலமும் வந்தது, கைநீட்டிப் பணம் வாங்க நானும், என் தமையனாரும் நாடக ஆசிரியரோடு சென்றோம். ஒரு ஓட்டலில் அந்த முதலாளி தங்கியிருந்தார். அவர் பெயர் மருதாசலம் செட்டியார்; கோவையைச் சேர்ந்தவர்; நல்ல உயரம், உயரத்திற்கு ஏற்ற பருமன், உருவத்திற்கு ஏற்றவாறு கணீரென்று ஒலிக்கும் குரல். அவர் வந்தார். எங்கள் இருவரையும் பார்த்தார்.
பிறகு ஆசிரியரும், அவரும் பேசினார்கள். எங்களுக்கு ஒரு சம்பளமும் நியமிக்கப்பட்டது. முதலாளி முன்பணம் கொடுப்பதற்காகப் பணமெடுக்க விரைந்து சென்றார். சட்டைக்கெல்லாம் நூறு ரூபாய் நோட்டு என்று சொல்லப்படும் ஒரு தாளுடன் அவர் வந்தார். அவர் எங்களிடம் அதைக்கொடுக்க வந்தபோது நாங்கள் ஆசிரியரைப் பார்த்தோம். ஆசிரியர் எங்களுடைய எண்ணத்தைப்புரிந்துக் கொண்டு அதைத் தம்கையில் வாங்கி எங்களிடம் கொடுத்தார். ஆசிரியர் “உங்களுக்கு நூறு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருக்கு. இது உங்களுக்கு முன்பணம்‘ என்று சொன்னார். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. நாடகத்திலே ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையான ஒரு நூறு ரூபாய் நோட்டை கூடக் கண்டதில்லை. அதிலும் ஒரே நேரத்தில் மொத்தமாக நூறு ரூபாய் முன் பணம்! நெஞ்சிலே ஏதோ ஒன்று கிளர்ந்து நெஞ்சை முன்னால் தள்ளியது போன்ற உணர்ச்சி. இதற்குத்தான ‘மகிழ்ச்சி விம்மல்’ என்று பெயரோ?
அண்ணனை நான் பார்த்தேன். அண்ணன் என்னைப் பார்த்தார். மருதாசலம் செட்டியார் என்ன நினைத்தார் என்று தெரியாது. முதல் படம் தானே! கொடுக்கிறதை வாங்கிக்குங்க முன்னே பின்ன இருந்தாலும் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கத்தான் வேணும் ...அப்புறம் தருவோம். நல்லா நடிச்சுப்பெயர் வாங்குங்க...” என்று கூறினார் அவர். அவர்கள் இருவருக்கும் நமஸ்காரத்தைச் சொல்லி விட்டுப் புறப்பட்டோம். “வணக்கம்“ சொல்வதற்கு எங்களுக்கு என்ன தெரியும்? ஆசிரியர் கீழே வாசல் வரை வந்து வழியனுப்பினார்.
எங்களுக்கு இப்படிப்பட்ட பேருதவியைச் செய்தாரே, அதற்காக அவர் எங்களிடமிருந்து உபசாரத்திற்காக நாங்கள் சொல்லவேண்டிய ஒரு நன்றி வார்த்தையைக் கூட எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு உதவிசெய்ய வேண்டியது ஒரு கடமை என்று கருதியவராக எந்தவித மறுமொழியையும் எதிர்பார்க்காமல் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு போய்விட்டார். நாங்கள் வண்டியில் செல்வதாவது? அதற்கு ஏது எங்களிடம் காசு! நானும் அண்ணனும் நடந்தே வீடுநோக்கி புறப்பட்டோம்.
வீடு செல்லும் வழியில் எம்.ஜி.ஆருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. என்ன அது?...
தொடரும்............
-
"ஒரு வேடத்துக்கு இருவர்..! 'சதி லீலாவதி' யில் சதி!.. - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
🍁 அத்தியாயம்-14🍁
நாடகத்திலிருந்து திரைப்பட உலகுக்குள் நுழையும் பெரும் கனவு, அந்நாளைய நாடக நடிகர்களைப் போலவே எம்.ஜி.ஆர் சகோதரர்களுக்கும் இருந்தது. பல போராட்டங்களுக்கிடையில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றார்கள். அதற்கு நுாறு ரூபாய் சம்பளமும் பெற்றார்கள் ஆனால் அதைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்ததா?... அதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன...தொடர்ந்து பேசுகிறார் எம்.ஜி.ஆர்.
”செல்லும் வழியில் நான் தமயனாரிடம் கேட்டேன். “ஏன் அண்ணே! இது உண்மையான நோட்டா இருக்குமா? சரியான நூறு ரூபாய் நோட்டுதானே?“ என்று.
'இதுக்கு முன்னாலே நான் எங்கேடா பார்த்தேன்?' என்று சொன்ன அண்ணன், 'ஆமாம் உனக்கு ஏன் திடீர் சந்தேகம்?' என்று கேட்டார்.
'ஏன் அண்ணே நீங்க கவனிக்கலையா? நூறு ரூபாய் முன்பணம் கொடுத்தாரே! அவர் போட்டுக்கிட்டிருந்த சட்டையிலே கைப் பொத்தான் கிடையாது. கயிறுதான் கட்டியிருந்தாரு. பாத்தீங்க இல்லே? அதனால்தான் சந்தேகம். நூறு ரூபாய் முன்பணம் கொடுக்கிறவர் ஏன் பொத்தான்கூடப் போட்டுக்காம கயிற்றைக் கட்டிக்கிட்டிருக்காரு?' என்றேன்.
'நானும் கவனிச்சேன். இந்தக் கயிறு கட்டினதுனாலே அவரு முதலாளியா இருக்கக் கூடாதுங்கறது இல்லையே! நிறைகுடம் தளும்பாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஒன்றுமில்லாதவங்கதானேடா வெளிச்சம் போடணும்! நாமெல்லாம் நல்ல சட்டை, வேட்டியில்லாம போனா கேலி பண்ணுவாங்க! அதுக்காக எல்லாம் சரியாப் போட்டுக்கிட்டுப் போகவேண்டியிருக்கு. அவங்களை யாரு கேள்விகேட்க முடியும்? யாரு கேலி பேச முடியும்?' என்றார் அண்ணன். அதுவும் சரியான நியாயமாகத்தான் எனக்குப்பட்டது.
வீட்டுக்குப்போய் தாயாரிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தோம். அப்போது இரவு நேரம். அவர்கள் நோட்டைப் பார்த்தார். பார்க்கும்போதே என்னுடைய சந்தேகத்தை அண்ணன் தாயாரிடம் சொன்னார். தாயார் உடனே விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார்கள். 'நீரோட்டம் இருக்கேடா! எப்படிப் பொய்யாக முடியும்?' என்று சொல்லிவிட்டார்.
அந்த நோட்டை அப்படியே எடுத்துத் தாயார் அவர்கள் எப்போதும் வணங்கும் விஷ்ணுவின் படத்தடியில் வைத்துவிட்டு, 'நாளைக் காலையில் இதைப்போய் மாத்திக்கிட்டு வரலாம்' என்றார். அந்த இரவெல்லாம் எனக்குத் தூக்கமே இல்லை. வீடு நிறையப் பணமாக இறைந்து கிடப்பதுபோல ஒரு பிரமை. நடப்பதற்குக்கூட இடமில்லாதபடி வெள்ளி ரூபாய்களாகக் குவிந்து கிடப்பது போல எனக்குத் தெரிந்தது.
தூங்கினேனோ, இல்லையோ தெரியாது. விடிந்து எழுந்தேன். உடனே நாடகக் கம்பெனிக்குச் சென்று எல்லோரையும் பார்க்கவேண்டுமென்ற ஆசை. என் சக நண்பர்களிடம் போய் இந்த முன்பணம் சமாச்சாரத்தைச் சொல்ல வேண்டுமென்று பேராவல்.
எப்படித்தான் தாயார் என் மனக்குறிப்பைத் தெரிந்துக் கொண்டார்களோ, அறியேன். சட்டையைப் போட்டுக் கொண்டு நான் புறப்பட்டபோது அழைத்தார்கள்; சென்றேன்.
“நான் சொல்ற வரைக்கும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. நாடகக் கம்பெனி முறையெல்லாம் தெரியுமில்லே? ஜாக்கிரதை!” என்றார்கள். எவ்வளவு பெருமையோடு புறப்பட்டேனோ அவ்வளவுக்கவ்வளவு தாழ்ந்து, குறுகி, சோர்ந்து ஒரு மூலையில் போய் உட்கார்ந்தேன்.
ஒருநாள் நாடகத்தின்போது நாடகக் கொட்டகைக்குப் போனேன். என் நண்பர்களையெல்லாம் பார்த்தேன். என் தோழர்கள் எவ்வித மாற்றத்தோடும் இல்லை; எப்போதும் போலத்தான் இருந்தார்கள். ஆனால், என் கண்களுக்கு அவர்கள் என்னைவிடத் தகுதி குறைந்தவர்களாகத் தோன்றினார்கள்! ஏனென்றால் நூறு ரூபாய் முன்பணம் வாங்கினவன் அல்லவா நான்!
அவர்கள் என்னிடம் ஏதோ ஒரு மாற்றத்தைக் கண்டுவிட்ட நிலையில் ஏதேதோ கேட்கத் தொடங்கினார்கள்.
நான் சொல்லவும் முடியாமல், மனதிலே வைத்துக்கொள்ளவும் முடியாமல் தடுமாறினேன். நெருங்கிய நண்பன் ஒருவனிடமாவது சொல்லலாமா என்று ஆசை.
தாயாரின் கட்டளையை நினைத்தவுடன் ஆசை எப்படி பறந்தோடிற்றோ எனக்குத் தெரியாது. ஒருநாள் எங்கள் நாடகத்தின்போது காலஞ்சென்ற ஜட்ஜ் எம்.வி.மணி ஐயர் என்பவர் கொட்டகைக்கு வந்தார். எங்கள் நாடகக் கம்பெனியிலேயே நாங்கள் சேர்வதற்கு முன்பு நடித்துக் கொண்டிருந்தவர் அவர். ஜட்ஜாக நடித்து மக்களால் பாராட்டப்பட்டதன் காரணமாக ‘ஜட்ஜ் எம்.வி. மணி ஐயர்’ என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது. அவரிடம் காளி என். ரத்தினம் அவர்கள், 'ஏன் மணி எங்கே வந்திருக்கே?' என்று கேட்டார்.
“சினிமாப் படத்திலே நடிக்க வந்திருக்கேன். உங்க ‘பதிபக்தி’ மாதிரிதான்; சதிலீலாவதி. அந்தப் படத்திலே நடிக்க வந்திருக்கேன்” என்றார். எங்களுக்கு ஒரே பயம். எங்கே நாங்கள் ஒப்பந்தமாகியிருக்கும் விஷயத்தைச் சொல்லி விடுவாரோ என்ற திகில். ஆனால், அவர் மேலும் பேசுவதற்குள் டி.ஆர்.பி. ராவ் அவர்கள் அவரைக் கேட்டார். “நீ என்ன வேஷம் போடப் போகிறாய்?” என்று 'துப்பறியும் வேடம்' என்றார் அவர். அவ்வளவுதான்! என் தலை சுற்றுவதுபோல் இருந்தது. அந்த வேடத்துக்குத்தானே சம்பளம் பெற்று வந்திருக்கிறோம். “சரி இந்த வேடம் நமக்குக் கிடைக்காதோ “சரி இந்த வேடம் நமக்குக் கிடைக்காதோ என்னவோ, என்ன ஆனாலும் மறுநாள் ஆசிரியரைப் பார்த்து விடுவது” என்று முடிவெடுத்தேன்.
ஜட்ஜ் எம்.வி. மணி இந்தச் சேதியைச் சொன்ன பிறகு சிறிது நேரத்துக்கு முன்னால் எந்த நண்பர்கள் என்னைவிடத் தாழ்ந்தவர்களாக என்முன் தெரிந்தார்களோ, அதே நண்பர்கள் இப்போது என்னைவிட உயர்ந்தவர்களாகத் தெரிந்தார்கள் எனக்கு! மனிதனுடைய மனம் எத்தனை பலவீனமானது என்பதை அப்போது தான் ஒரு சிறிது நேரத்தில் புரிந்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மனதின் உள்ளம் மிகக் கடினமானது, வலிவுமிக்கது, எதனாலும், யாராலும் கலங்கவோ, கலக்கப்படவோ முடியாத சக்தி வாய்ந்த ஒன்று என்பது பல புராணக் கதைகள் மூலமாகவும், வீரப் பெருமக்களின் சரிதை மூலமாகவும், என் தாயின் வாய்மொழி வழியாகவும் ஓரளவு புரிந்துக்கொண்ட முடிவாகும்.
இளகிய மனம் படைத்தவர்கள் பலரை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். ஏன், என் தாயார் செய்த பல அருஞ்செயல்களை மகனான நான் கண்முன் அறிந்து உணர்ந்திருக்கிறேன்.
இந்த சம்பவம் சில ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்ததொரு நிகழ்ச்சிக்கு என் மனம் என்னை ஈர்த்துச் செல்கிறது. இங்கே அதை வெளியிடவும் விரும்புகிறேன்.
அந்தச் சமயம் நாங்கள் குடியிருந்த வீட்டில் இன்னும் சில குடித்தனக்காரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் ‘டீ’ விற்கும் தொழிலாளி; அவருக்கு தொழில் செய்யும் உபகரணங்கள் சேதமாகிவிட்டது ஒருநாள். தாயாருக்கு இந்தச் செய்தி தெரியவந்தது. தொழில் செய்யத்துடிக்கும் அந்த எளியவர்களுக்கு அதற்குத் தேவையான கருவி இல்லாமல் பிழைப்பே கெட்டுப்போகிறதே என்று அவர்களின் அல்லலை நினைத்து அனுதாபத்தோடு வேதனையும் அடைந்தார். அந்தக் காலத்தில் நாங்கள் உயர்ந்த நிலையில் வசதியோடு இருந்தோம் என்று யாரும் தப்புக்கணக்குப் போட்டுவிட வேண்டாம். எப்படியோ சிரமத்துடன் ஒருவிதமாய்க் காலம் ஓடிக்கொண்டிருந்து பட்டினி கிடக்கவில்லை என்பதுதான் அப்போதைய நிலைமை.
அந்தத் தொழிலாளருக்கு உதவுவேண்டும் என்ற நல்ல எண்ணம் தாயாருக்குப் பிறந்தது. எண்ணம் பிறந்தால் போதுமா! செயல்படுத்துவதற்கு வாய்ப்பு அதாவது, பணம் வேண்டாமா? பணம் தான் இல்லையே!
நாங்கள் பற்று வரவுக் கணக்கில் கடையில் வாங்கும் உணவுப் பண்டங்களை வேண்டுமானால் கொடுக்கலாம். எத்தனை நாளைக்கு முடியும்? அப்படியும் கொடுத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பின்புதான் கடைசியாக முடிவுக்கு வந்து எங்களுக்குக்கூடத் தெரியாமல் பணம் ஏற்பாடு செய்து அவருக்குத் தேவையான அந்தப் பணத்தைக்கொடுத்திருக்கிறார். இதன்பின் அந்தக் குடும்பத்தினர் டீ விற்பதையும், சம்பாதிப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் எப்படித்தான் அவர்களின் வாழ்க்கை நடந்து வருகிறது என்பது தெரியாது.
ஒருநாள் வீடு திரும்பிய நேரத்தில் ஆறு மாதக் கடன்காரன் என்று அழைக்கப்படுகிற ஈட்டிக்காரனுக்கும், தாயாருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கக் கண்டோம்.
ஒன்றுமே புரியவில்லை. எங்களுக்கு ஈட்டிக்காரன் என்றாலே பிடிக்காது. அவன் பயங்கரமானவன் என்ற எண்ணமுள்ளவர்கள் நாங்கள். அவன் வீட்டுக்கு வருவதே தலைகுனிவு என்பதும் எங்கள் முடிவு. அப்படிப்பட்ட ஒருவன் என் தாயிடம் வந்து 'பணத்தை வைத்துவிட்டு மறுவேலை பார்' என்றால் அதை எப்படி நாங்கள் சகித்துக் கொள்வோம். அதுவரை நாங்கள் தாயாரை எதிர்த்துப் பேசியதோ, முரண்பாட்டுடன் பார்த்ததோ கிடையாது. என்னவென்று விசாரித்தோம். எங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பார்த்துப் புரிந்துக்கொண்ட தாயார் தம் கையில் போட்டிருந்த தங்கக் காப்பைக் கழற்றி அவன் மேல் விட்டெறிந்து 'இதை எடுத்துக் கொண்டு போய் விற்று உன் பணம்போக மீதத்தைக்கொண்டு வந்து கொடு' என்றார்கள்.
இதைச் சிறிதும் எதிர்பார்க்காத அந்த ஈட்டிக்காரன், 'நாளைக்கு வரேன். நீங்களே நாளைக்குக் கொடுங்க' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். அதோடு காலையில் 10 மணிக்கு வந்துவிடுவேன் என்று எச்சரிக்கையும் செய்தான். அவன் போனதும் நாங்கள் தாயாரைப் பார்த்தோம். அழுகையோடும்; ஆத்திரத்தோடும் எங்கள் வார்த்தைகள் வெளிப்பட்டன. தாயார் அவர்கள் சிறிதும் சலனமுறவில்லை. 'நான் கைநீட்டி வாங்கினேன் திருப்பிக் கொடுக்கலன்னா அவன் திட்டத்தானே செய்வான்.'
'எதுக்காக வாங்கனும்? அவன் கிட்டே எதுக்காக வாங்கினீங்க?'- கொஞ்சம் அதிகமாகவே வார்த்தைகள் எங்களிடமிருந்து வெளிவந்தன. எதுக்காகவோ வாங்கினேன்; ஏன் எனக்காகத்தான் வாங்கினேன்! அதை யார்கிட்டயும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.'
இழிவான, கேவலமான வார்த்தைகள் அல்ல. 'நீங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று கண்டிக்கும் வார்த்தைகள்'. இதுவரை அவர்கள்தான் எங்களைக் கேட்டதும், கண்டிப்பதும் வழக்கம்.
இப்போது நாங்கள் கேட்கும் படியாக நேர்ந்ததை எங்களாலேயே பொறுத்துக் கொள்ளமுடியாதபோது தாயாருக்கு அதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்! ஆனாலும் கடைசி வரையில் அவர்கள் எதற்குப்பணம் வாங்கினார்கள் என்பதைத் தெரிவிக்கவே இல்லை. இந்தக் குழப்பத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளியின் மனைவி எங்களிடம் வந்து அழுதபடியே உண்மையைச் சொன்னார்.
அவர்களுக்குக் கெட்டிலுக்குப் பணம் தருவதற்காகவும், வியாபாரம் நன்றாக நடப்பதற்காகவும் அவர்கள் மீது ஈட்டிக்காரனுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் என் தாயார் தன் பேரில் கடன் வாங்கி அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவர்களால் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. வரவுக்கும், செலவுக்கும் தான் சரியாக இருக்கிறதே! எப்படிக் கொடுப்பார்கள். அதனால் தாயார் ஈட்டிக்காரனுக்குப் பதில் சொல்லக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட இளகிய மனத்தையும் நாங்கள் கண்டிருக்கிறோம்.
மேலே நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி என்னுடைய பதவிப் போராட்ட காலத்துக்குப் பின்னால் சில ஆண்டுகள் கழித்து நடந்ததுதான் என்றாலும் இன்றைய சூழ்நிலையில் இதை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.
எப்படியோ ஆசிரியரின் மனத்தை எங்கள் பக்கம் திருப்பி எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்து கொண்டிருந்தது.
தொடரும்............
-
"எனக்கு இழைக்கப்பட்ட அநீதி!... எம்.ஜி.ஆர் முதல் பட அனுபவம்! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
அத்தியாயம் - 15
நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி முதலியார் மூலம் எஸ்.எஸ் வாசன் எழுதிய கதையான சதிலீலாவதி திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அந்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு அவர் பல சிரமங்களைச் சந்திக்கவேண்டியதிருந்தது. அந்த அனுபவத்தைத் தொடர்ந்து விவரிக்கிறார் இங்கே...
“அந்த நேரத்தில் நாடக் கம்பெனியில் ஆசிரியருடைய மகன் எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா போன்றவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அரக்கோணத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்த நேரம். அரக்கோணத்துக்குப் போய்ப்பார்க்க எங்களுக்கு நேரம் இல்லை.சென்னையிலேயே தினமும் எங்கள் கம்பெனி நாடகம் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்ததால் நாங்கள் அங்கே போகமுடியவில்லை. கடைசியாக நாங்கள் எங்கள் கம்பெனியைவிட்டு விலகி சினிமா கம்பெனி வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுக்கே போய்ச் சேரவேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுவிட்டது.
நாங்கள் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து எப்படி அங்கே குடி போனோம் என்பதே நெருக்கடி நிறைந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாகும். அதைப் பிறகு சொல்வோம். நாங்கள் ஆழ்வார்ப் பேட்டையிலிருந்த அந்தக் கம்பெனி வீட்டில் குடிபுகுந்தோம். வேடத்தைப் பற்றிய பிரச்னை எங்கள் முன்னால் பெரிய உருவெடுத்துச் சோதனைக் குறியாக நின்று கொண்டிருந்தது.
ஒருநாள் நாங்கள் அரக்கோணத்துக்குச் சென்று ஆசிரியரைச் சந்தித்தோம். அங்கு சதிலீலாவதி நாடகம் நடந்துகொண்டிருந்தது. என்னை வற்புறுத்தினார்கள் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்படியாக. நான் நடிக்கவும் செய்தேன். மறுநாள் ஆசிரியரிடம் நாங்கள் எங்கள் அச்சத்தைச் சொன்னோம். எனக்குக் குறிப்பிட்ட வேடத்தை எம்.வி. மணி அவர்களுக்குக் கொடுக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாமே, என்னுடைய நிலைமைதான் என்ன, எனக்கு என்னதான் வேடம் என்று நேரிடையாகவே கேட்டுவிட்டேன்.
ஆசிரியருக்குத் தெரியாமலேயே பட முதலாளிகள் எம்.வி. மணி அவர்களுடைய நடிப்பை வேறு கம்பெனி நடத்திய பதிபக்தி என்ற நாடகத்தில் கண்டு வியந்து அவரை ஒப்பந்தம் செய்துவிட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்ததாம்.
இதைச் சொல்லிவிட்டு அந்த வேடம் கிடைக்க முடியாமல் போய்விட்டதாலும், அதைப்போலவே இன்னொரு வேடம் இருக்கிறது. அதை ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறினார். அவர் குறிப்பிட்ட வேடம் உண்மையிலேயே நல்ல வேடம் தான். கதாநாயகனால் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டவர். அந்தக் கதாநாயகனுடைய நெருங்கிய நண்பர். கதாநாயகனுக்கு தொல்லை வரக்கூடாது என்பதற்காகவும், கொலையாளிகளைப் போலீசிடம் ஒப்படைப்பதற்காகவும் மாறு வேடத்தில் இருந்து கொண்டே நண்பருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வழக்கு மன்றத்தில் உண்மையை நிரூபித்து நண்பரைக் காப்பாற்றும் ஒரு நல்ல பாத்திரம். மனத்துக்கு ஒரு பெரிய நிம்மதி. மகிழ்ச்சியோடு நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தோம்.
விரைவில் படப்பிடிப்புத் துவங்கவிருக்கிற செய்தி வெளிவந்தது. படப்பிடிப்புத் துவங்க ஒருசில நாட்களுக்கு முன்பு எங்களுக்குக் கிடைத்த செய்தி குழப்பத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது. ஆசிரியர் அவர்களுடைய கம்பெனியில் அவர் மகனுடன் கதாநாயகியாக நடித்த நண்பர் நம்மாழ்வார் என்பவருக்கு சதிலீலாவதி படத்தில் எந்த வேடமும் குறிப்பிடப்படவில்லை என்பதாகவும், அதனால் ஆசிரியருக்கும், அவருக்கும் மனத்தாங்கல்கூட ஏற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் வந்த செய்திதான் அது.
நம்மாழ்வார் என்பவர் பல ஆண்டுகள் நாடக மேடையில் நடித்து அனுபவம் பெற்றவர் என்பது மட்டுமல்லாமல் ஆசிரியருக்கு வலதுகை போல் இருந்து எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும் ஆசிரியரை விட்டுப் பிரியாது அந்தக் கம்பெனியிலேயே இருந்து நிறையச் சேவை செய்தவர். ஆசிரியருடைய நன்மதிப்புக்கும், நன்றிக்கும்கூடப் பாத்திரமாகும் தகுதியைப் பெற்றவர். இந்த உண்மையை நாங்கள் முன்பே நன்றாக அறிந்தவர்கள்.
அனுதாபத்தின் பேரால் வேலைகொடுக்கப்பட்ட எனக்கே வேடம் மாற்றப்படுகிறது என்ற செய்தியை தாங்க முடியாதிருக்கும்போது பல ஆண்டுகளாக ஓடாக்கிக் கொண்டவருக்கு வேலையே இல்லை என்றால் எப்படி அவரால் தாங்கிக்கொள்ளமுடியும்!
அவர் விரும்பியதோ, கேட்டதோ நியாயம் என்று இப்போதுதான் தெரிகிறது. ஆனால், அப்போது அதைப்பற்றிச் சிந்திக்க நேரமும் இல்லை. மனதில் அந்த எண்ணத்துக்கு இடமும் இல்லை.
அவருடைய நியாயமான வாதத்தை உணர்ந்த ஆசிரியர், நம்மாழ்வாருக்குச் செய்யவேண்டிய கடமையைச் சரிவரத்தான் செய்தார். ஆனால், அது சரிவரச் செய்ததாக என் உள்ளத்துக்கு எப்படித் தோன்ற முடியும்!
ஏனெனில், அந்தத் தீர்மானத்தால் பாதிக்கப்பட்டவன் நான் எப்படியெனில் எனக்கு என்று சொல்லப்பட்ட\இரண்டாவது முறையாகத் தீர்மானிக்கப்பட்ட “பரசுராமன்” (கதாநாயகனின் நண்பன்) என்ற வேடம் நம்மாழ்வாருக்கு என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது.
இது எனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நான் கருதினேன். நீதியோ, அநீதியோ முடிவாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. எனக்கு அந்த வேடம் இல்லையென்று. வேடம் இல்லை என்று சொல்லிவிட்டால் போதுமா! என் வேதனையைத் தீர்க்க யாரால் மருந்து கொடுக்க முடியும்?
தாயாரிடம் போய்ச் சொல்வதற்கும் எங்களுக்குத் துணிவில்லை; அவரைத் தவிர நாங்கள் போய் எங்கள் குறைகளைச் சொல்ல வேறு யாருமில்லை.
எப்படியோ மனதில் இருக்கிற பாரம் குறையவேண்டும். மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் கொட்டி விடவேண்டும். திறந்த மனதோடு கொட்டப்படுகிற அந்த வார்த்தைகளில் எந்தவிதமான இடையூறும் வந்துவிடக்கூடாது. சே இவ்வளவு மோசமா! என்று கேலியும் வந்துவிடக்கூடாது. கேலி செய்யப்பட்டால் அவமானம் மிஞ்சும். அதனால் சொல்லப்படுகிற திசையிலிருப்பவரிடமிருந்து எந்தவித மறுமொழியும் இல்லாதிருக்கவேண்டும். ஆனால், ஒருவரிடம் மனச்சுமையை இறக்கிவிட்டோம். அதாவது நம் குறைகளைக் கொட்டிவிட்டோம். அவர்கேட்டுவிட்டார் என்கிற நம்பிக்கை பிறக்கவேண்டும். அந்த நேரத்தில் முறையீட்டைக் கேட்டவரிடமிருந்து வந்த மறுமொழியும் இல்லாவிட்டாலும் பின்பு என்றைக்காவது அவரால் ஒருவழி காட்டப்பட்டே தீரும் என்ற நம்பிக்கை உதயமாகும்.
இதற்கு ஏற்ற ஒரே இடம் கடவுள் சிலைதான் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
எங்களுக்கு ஆறுதலோ, தேறுதலோ உண்டாக வேண்டுமானால் எங்கள் தாயாரிடமிருந்துதான் உண்டாக வேண்டும். உண்டாவது வழக்கம். அவர்கள் சொல்கிற பதில் எப்போதும் உறுதியூட்டுவதாகவும், தன்னம்பிக்கையை உண்டாக்குவதாகவும் இருக்கும்.
அம்மாவிடம் சொல்லாமல் இருக்க முடியாது. சொன்னால் அவர்களுடைய முகபாவம் நிச்சயமாக அவருடைய துன்பத்தையும், வேதனையையும் அல்லவா வெளிக்காட்டும்!
கடவுள் சிலையைப் போல் மவுனமாக இருக்க அவர்களால் முடியாதே! தன்னுடைய மகனுக்கு ஏற்படும் இன்னலை எப்படி ஒரு தாயால் பதில் உணர்வைக் காட்டாமல் மறைத்துக் கொள்ளமுடியும். ஆனால், சொல்லாமலிருக்க முடியாதே! தாயிடம் கூறினோம். நாங்கள் சொல்லுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டேயிருந்தார். தாயார் அவர்கள் என்ன சொல்வார்களோ, வேதனைப் படுவார்களோ என்று அவர் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்...
பிள்ளைகளிடம் என்ன சொன்னார் சத்தியபாமா?
அடுத்த அத்தியாயத்தில்.............
-
"எம்.ஜி.ஆரின் முதற்படத்தின் படப்பிடிப்பில் இதுதான் நடந்தது"! : நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
அத்தியாயம் :16
தன் முதல்பட வாய்ப்பு குறித்து கனவில் மிதந்துகொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு அவருக்கு அளிக்கப்பட்ட வேடத்துக்கு வேறு ஒருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்ட தகவல் அறிந்து கலங்கிப்போனார். வழக்கம்போல் அந்த கவலையை தாயார் சத்தியபாமாவிடம் பகிர்ந்துகொண்டபோது மகனின் கவலையை அவரது தாயார் எப்படி தீர்த்தார் என தொடர்ந்து சொல்கிறார் எம்.ஜி.ஆர்.
...“கடைசியாக இப்ப என்னதான் வேஷம் கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்டார் என் தாயார். இன்ஸ்பெக்டர் வேஷம் என்று சொன்னேன். ஒரு நீண்ட பெருமூச்சோடு எங்களைத் திரும்பிப் பார்த்தார். எங்களுடைய விழிகளிலிருந்து எங்களை அறியாமல் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்துவிட்டு கேலி நிறைந்த ஓர் அலட்சியச் சிரிப்போடு என் கண்களைத் துடைத்தபடி சொன்னார். 'போடா, ரொம்ப லட்சணம்! வானம் இடிந்து விழப் போகுதுன்னு முட்டையினாலே தடுத்து நிறுத்த யாராவது முயற்சி செய்வார்களா! முட்டையும், பூமியும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் தாண்டா அதைப் போலத்தானே நாமும் நம்ம நிலைமையிலே இதையெல்லாம் எப்படித்தடுக்க முடியும். நடக்கிறது நடந்தே தீரும். அதுக்காக ஏக்கப்பட்டு கண்ணீர் விட்டால் முடிவு மாறியா போயிடும்!
பாய்ஸ் கம்பெனியிலே இருந்தவங்க பலபேருக்கு இந்த வேடம் கூடக் கிடைக்கலே, இல்லையா! உனக்காவது இந்த வேடம் கிடைச்சிருக்கே! அதுக்குச் சந்தோஷப்படு. எப்போ கிடைக்குமோ, அப்போதுதான் எதுவும் கிடைக்கும் வர்றதை தடுக்க முடியாது; வராததைக் கொண்டு வாழ்ந்துட முடியாது. கிடைச்ச வேஷத்துல உன் திறமையைக் காட்டு' என்றார்.
இப்போது உணர்கிறேன். நான் பம்பாய்க்குப் போனபோது எனக்குக் கொடுக்கப்படுவதாக இருந்த வேடம் பாலையா அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்று எழுதியிருந்தேனே அந்த வேடத்தையோ, அல்லது இங்கே குறிப்பிட்டு இல்லை என்று ஆன அந்த வேடத்தையே ஏற்று நான் நடித்திருந்தால் நிச்சயமாக நானும் தோல்வி அடைந்திருப்பேன்; அந்தப் படமும் தோல்வி கண்டிருக்கும்.
மனிதனுக்கு ஆசை தோன்ற வேண்டியது தான். முன்னேற வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தே தீரவேண்டிய ஒன்று தான். ஆனால், எதிரியோடு போராடப் போகிற ஒருவன் தன் பலத்தையும், எதிரியின் பலத்தையும் தெரிந்து போராடப் போகவேண்டும் என்று சொல்லியிருபதுபோல் தன்னுடைய சக்தியையும், அந்தப் பாத்திரத்தின் தகுதியையும் உணர்ந்து விருப்பம் கொள்ளாவிட்டால் எத்தனை பேருக்கு அதனால் எப்பேர்பட்ட விளைவு உண்டாகுமென்பதை அன்று என்னால் உணரமுடியவில்லை. இன்று உணர முடிகிறது!"- இப்படி தன் முதல்படமான சதி லீலாவதி குறித்து எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
'இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி'...என தன் படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் வரிகளை அன்றே அனுபவபூர்வமாக தாய் சத்தியபாமா எம்.ஜி ஆருக்கு உணர்த்தியதால் எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கை 1936-ம் ஆண்டு வெற்றிகரமாக துவங்கியது.
சதி லீலாவதி படம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல; பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் வள்ளல்குணத்துக்கு ஆதர்ஷமாக விளங்கியவரும் தமிழக மக்களால் கலைவாணர் என அழைக்கப்பட்ட நகைச்சுவை மேதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் அதுதான் முதற்படம். குணச்சித்திர நடிகர் டி.எஸ் பாலய்யா அறிமுகமானதும் இந்த படத்தில்தான்.திரையுலகில் எம்.ஜி.ஆர் சகாப்தம் துவங்கியது..........
சதி லீலாவதி படத்தின் படப்பிடிப்புக் காட்சி....இப்பதிவில் இணைத்துள்ளேன்....
-
கௌரவம் பார்த்தால்
கௌரவம் பார்க்காதே?
---------------------------------------------
எம்.ஜி.ஆரின் சிறப்பை வகை வகையாய் ஒவ்வொருத்தரும்,, தங்கள் தனித் திறமையால் வித விதமாக முக நூல்,,வாட்ஸ்-அப்புகளில் விளக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
அந்த வகையில் எம்.ஜி.ஆரின் ஒரு குண நலனை,,அதுவும் அவர் முதல்வராக இருக்கும்போதும் செயல்படுத்தியதை இங்கேப் பார்க்கலாம்!
அது,,சத்யா மூவீஸின் மாஸ்டர் பீஸ் படம்--
ரிக்ஷாக்காரன்!!
சோ வையும்,,இன்னொரு சிறந்த நடிகரையும் தனது விருப்பத் தேர்வாக,,அந்தப் படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் எம்.ஜி.ஆர்!
தேங்காய் ஸ்ரீனிவாசனோடு ஈடு கட்டும் ஐயராக சோ நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் எதிர்ப்பார்ப்பு எவ்வளவு சரியானது என்பதைப் படம் பார்த்த நாம் புரிந்து கொள்ளலாம்!
தேங்காயோடு சேர்ந்து கலக்கியிருப்பார் சோ!!
வக்கீலாக,,ஒரு குணச்சித்திர நடிகரை தம் மனதில் தேர்வு செய்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்!
கதையே,,அந்த வக்கீலால் தான் அமைந்திருக்கிறது என்பதையும்,,அந்த நடிகரால் தான் அந்தப் பாத்திரத்துக்கு உயிர்க் கொடுக்க முடியும் என்றும் திடமாக நம்பினார் எம்.ஜி.ஆர்!
குணச் சித்திர நடிகராக எவர் பொருத்தமானவர் என்று எம்.ஜி.ஆர் கருதினாரோ,,அவரால் எம்.ஜி.ஆரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இயலவில்லை?
சிவாஜி படங்களுடன் வேறு நடிகர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ஒரு நாள் கால்ஷீட்டைக் கூட ரிக்ஷாக்காரனுக்காக அவரால் ஒதுக்க முடியவில்லை!
தயாரிப்பாளர் சார்பிலும்,,இயக்குனர் சார்பிலும் கேட்கப் பட்டும் சாதகமான பதிலை அந்த நடிகரால் கொடுக்க முடியவில்லை!
வத்தி வைக்கவும்,,வளைத்துப் பேசவும் தான் வகை வகையாய் மனிதர்கள் இருக்கிறார்களே?
ரொம்ப அலட்சியமா மாட்டேன்னு சொல்லிட்டார்!
சிவாஜி படங்களில் நடிக்கறோம்ங்கற திமிரு?
உங்கள வச்சு தாண்ணே படமே!
அந்தாளு கிட்டே எதுக்குக் கெஞ்சணும்?
இப்படியாக உப்புக் காரம் சேர்த்து??
பதில் ஏதும் சொல்லாத எம்.ஜி.ஆர்,,தொலைபேசியைக் கையில் எடுக்கிறார்--
சாதாரணமாக,, மறு முனையில் பேசிய அந்த நடிகர் பேசுவது எம்.ஜி.ஆர் எனத் தெரிந்ததும் டென்ஷனாகிறார்?
என் படத்துல நீங்க நடிச்சா நான் சந்தோசப்படுவேன். உங்களுக்குக் கால்ஷீட்டு பிரச்சனை இருக்குங்கறதையும் நான் மறுக்கலே.
உங்களுக்காக ஒரு ரெண்டு மாசம் காத்திருக்கணும்ன்னாலும் பரவாயில்லே--
எம்.ஜி.ஆர் போய் இப்படி--அதுவும் நம்மப் போல சாதாரண நடிகரிடம்??
நெகிழ்ச்சியில் கண் கலங்கிய அந்த நடிகர் பல்வேறு முறைகளில் தன் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடித்துக் கொடுத்து,,தம் நடிப்பில் எம்.ஜி.ஆருக்கு இருந்த நம்பிக்கையை பூர்த்தி செய்து கொடுக்கிறார்!1
ஆம்! அவர் மேஜர் சுந்தரராஜன்!!!
ஒரு கலைஞனாக மட்டுமே தம்மை இருத்தி,,ஒரு படம் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்பதோடு,,காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மன நிறைவைக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால்,,தன் நிலையைத் தாழ்த்தி மேஜரிடம் பேசிய எம்.ஜி.ஆர்??
இதே எம்.ஜி.ஆர் தான் முதல்வராக இருந்தபோது மத்தியில் பிரதமராக எவர் இருந்தாலும் தன் ஆதரவைக் காட்டினார்--
நான் இப்போ தமிழ் நாட்டு மக்களின் பிரதி நிதி!
ராமச்சந்திரனுக்குன்னு நான் கவுரவம் பார்த்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு மத்தியிலேர்ந்து வரும் உதவிகள் தடைபடுமே??
எவன் ஒருவன்--
தன்னிலைத் தாழ்ந்து மற்றவர்க்காக குரல் கொடுத்தால்--
விண் நிலைக்கு உயரமாட்டானா ஒருவன்?
என் நிலை இதுவென்று எம்.ஜி.ஆர் சொன்னதைக் கடைப் பிடித்தால்-
இன் நிலை தானே எல்லோருக்கும் இறுதி வரைக்கும்!!
இதுவென்று நாமும் பணிவைக் கொள்வோம்!
இது வென்று கொடுக்கும் நம் முயற்சிகளை!!!.........
-
"எம் ஜி.ஆரின் முதல் காதல்"...! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
அத்தியாயம்-17
நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் எம்.ஜி.ஆருக்கு சில பிரச்னைகள் இருந்தன. 'சதி லீலாவதி' படப்பிடிப்பின் ஆரம்ப நாட்களில் பெரும் சிரமப்பட்டார் எம்.ஜி.ஆர். சினிமாவைப்பற்றிய அடிப்படை புரிதல்கள் அவருக்கு கைவரவில்லை.
பார்வையாளர்களுக்கும் நாடகமேடைக்கும் பல அடி துார இடைவெளி இருக்கும் என்பதால் அந்நாளைய நாடக நடிகர்கள் வசனங்களையும் பாடல்களையும் உச்சஸ்தாயியில் பாடி நடிப்பார்கள். சினிமாவும் புதிது; சினிமாவுக்கு எம்.ஜி.ஆரும் புதிது. சொல்லவேண்டுமா எம்.ஜி.ஆர் நிலையை?...நாடக பாணியிலான நடிப்பை திரைப்படத்துக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளப் பெரிதும் சிரமப்பட்டார் அவர்.
வழக்கம்போலவே சினிமா வசனங்களையும் நாடக பாணியிலேயே உரத்தக் குரலில் பேசினார். சினிமாவின் நுணுக்கங்களை அவரால் முதலில் புரிந்துகொள்ளமுடியவில்லை. இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கனுக்கும் இது முதல் படம்தான் என்றாலும், அமெரிக்கரான அவர் மேலைநாடுகளின் மென்மையான வசனபாணியைப் பின்பற்றி படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அத்தகையவருக்கு எம்.ஜி.ஆரின் நாடக பாணி நடிப்பும், வசன உச்சரிப்பும் எரிச்சலைத் தந்தது. ஆவேசத்தோடு இப்படி பேசுகையில் நடிப்பும் மிகையாக வெளிப்பட்டது. டங்கன் பலமுறை சொல்லியும் எம்.ஜி.ஆர் திருத்திக்கொள்ளவில்லை.
ஒருநாள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு எம்.ஜி.ஆரை தனியே அழைத்துச்சென்று, “மிஸ்டர் ராமச்சந்திரன், சினிமா மனித உழைப்பினால் மட்டும் உருவாவது அல்ல; பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களின் ஒருங்கிணைப்பில் உருவாகிறது. நீங்கள் இயல்பாக பேசி நடியுங்கள். நான் பார்வையாளனுக்கு தக்கபடி அதைக் கொண்டு சேர்க்கிறேன். இது தொடர்ந்தால் உங்கள் சினிமா வாழ்வு பாதிக்கப்படும்” என மென்மையாக சொல்லிப் புரியவைத்தார்.
இத்தனை அல்லல்களுக்கு மத்தியில் கிடைத்த அரியவாய்ப்பை இழக்க விரும்பாத எம்.ஜி.ஆர் பெரும் முயற்சிகளுக்குப்பின் நாடக பாணி நடிப்பிலிருந்து வெளிவந்தார். சில நாட்களில் இயக்குநர் டங்கனே ஆச்சர்யப்படும்வகையில் எம்.ஜி.ஆரின் நடிப்பு மிளிர்ந்தது.
திரைப்படத்தின் நுணுக்கங்களை புரிந்துகொண்டாலும் நாடகத்தைத்தான் எம்.ஜி.ஆர் மிகவும் நேசித்தார். சினிமாவின் யதார்த்தங்களை உணர்ந்ததால் அவர் சினிமாவுக்குரிய உடல்மொழியில் நடித்து வெற்றிபெற்றார். ஆனால் அது எம்.ஜி.ஆருக்கு திருப்தியளித்த விஷயமல்ல. சினிமாவின் வெற்றிக்காக அவர் விருப்பமின்றி சில விஷயங்களை தியாகம் செய்யவேண்டியதானது.
'எம்.ஜி.ஆரின் அழுகை நடிப்பு சோபிக்காது என்றும், அழுகிற காட்சிகளில் அவர் முகத்தை காமிராவுக்கு காட்டமாட்டார்' என அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் எம்.ஜி.ஆர் ஆரம்பநாட்களில் நாடகங்களில் கூட கிளிசரின் பயன்படுத்தமாட்டார். இயல்பாக நடிப்பதையே அவர் விரும்பினார். 'என் தங்கை' நாடகத்தில் துயரமான காட்சிகளுக்குத் தக்கபடி முகத்தில் உணர்ச்சிகளை வரவழைத்துக்கொண்டு அவர் அழும்போது அவரின் அழுகை பார்வையாளர்களை உருகவைத்துவிடும். சினிமாவிலும் அப்படியே நடிக்க அவர் ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் சில படங்களில் கிளிசரினை பயன்படுத்தாமல் இயற்கையாகவே அழுகை காட்சிகளில் நடித்தார். ஒரு படத்தில் நடித்துமுடித்து 'ரஷ்' பார்த்தபோது அவரது அழுகை நடிப்பு சோபிக்கவேயில்லை. காரணம் படமாக்கப்பட்டபோது இருந்த மின்விளக்கின் சூட்டினால் அவரது கன்னத்தில் வழிந்த நீர் உடனடியாக காய்ந்து உலர்ந்துபோனது. காட்சி எடுபடாமல் போனது. நாடகம் வேறு, சினிமா வேறு என்பதை அன்றுதான் முழுமையாக புரிந்துகொண்டார் எம்.ஜி.ஆர்.
சதி லீலாவதி திரைப்படம் வெளியாகி அபார வெற்றிபெற்றது. படத்தின் வெற்றியைவிட திரையுலகில் நாமும் நுழைந்துவிட்டோம் என்பதில் எம்.ஜி.ஆருக்கு பெரும் மகிழ்ச்சி. சதி லீலாவதியைத் தொடர்ந்து 'இரு சகோதரர்கள்' வாய்ப்பு. முதல் இரண்டு படங்களுக்குப்பின் வாய்ப்பின்றி இருந்தவருக்கு மீண்டும் எம்.கே.ராதா மூலம் 3-வது படவாய்ப்பு கிடைத்தது. 1938-ம் ஆண்டு 3-வது படமாக 'தட்சயக்ஞம்' வெளியானது. இதில் கதாநாயகன் தட்சனாக எம்.ஜி.நடராஜபிள்ளை என்பவர் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு மகாவிஷ்ணு வேடம். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கல்கத்தாவிலேயே நடந்தது. இது கம்பெனி தயாரித்த மாயா மச்சீந்திரா படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஒரு வேடம் கிடைத்தது. அதற்கு முன் அவர் நடித்து வெளியான படம் வீர ஜெகதீஸ்....இந்த படம் வெளியான சமயம் எம்.ஜி.சக்கரபாணிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்திருந்தது.
இதனால் பெரியவனைப்போல் சின்னவனுக்கும் திருமணம் முடித்து விடவேண்டும் என்ற எண்ணம் சத்தியபாமாவுக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கு எம்.ஜி.ஆர் உடன்படவில்லை. “சினிமாவில் பேரும் புகழும் பெறவேண்டும் என்பதுதான் என் வாழ்நாள் லட்சியம். திருமணம் அதற்குத் தடையாக இருக்கும். சினிமாவில் அப்படி ஒரு நிலையை எட்டியபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திப்பேன்” என உறுதியாக தெரிவித்துவிட்டார்.
உள்ளம் உறுதி காட்டினாலும் 22 வயது வாலிபனால் இயற்கையான உணர்ச்சிகளை ஒளித்துவைக்கமுடியுமா?... அப்போது எம்.ஜி.ஆர் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரே ஒரு இளம்பெண் வசித்துவந்தார். இளமையும் அழகும் இணைந்த வசீகரமான இந்த இளம்பெண் மீது எம்.ஜி.ஆருக்கு ஒருவித ஈர்ப்பு இருந்தது.
படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் ஓய்வில் இருக்கும் சமயங்களில் அந்தப் பெண் எம்.ஜி.ஆர் வீட்டுக்குள் தண்ணீர் பிடிக்க குடத்துடன் வருவார். அப்போது அவளைக் கவர்வதற்காக எம்.ஜி.ஆர் ஒரு ஆர்மோனியப் பெட்டியை எடுத்துவைத்துக்கொண்டு ஏதாவது கத்திப்பாடுவார். அதை அந்தப் பெண் ஓரக்கண்ணால் பார்த்தபடி செல்வதைக் கண்டு ரசிப்பார் எம்.ஜி.ஆர்.
கொஞ்சநாளில் இருவரும் கண்களாலேயே பேசிக்கொள்ளத்துவங்கினர். அரசல் புரசலாக சத்தியபாமாவின் காதுகளுக்கு இந்த சேதி வந்துசேர்ந்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் என்ன ஆகும் என பழுத்த அனுபவசாலியான அவருக்குத் தெரியாதா?! கொஞ்சநாட்களில் அந்த வீட்டை காலி செய்துகொண்டு வேறு இடத்துக்கு குடிபுகுந்தார்.எம்.ஜி.ஆர் தாடிவிட ஆரம்பித்தார்.
அதன்பின் தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தார் சத்தியபாமா. சக்கரபாணியுடன் கலந்துபேசியவர், எம்.ஜி.ஆரின் 'வீரஜெகதீஷ்' பட ஸ்டில் ஒன்றைப் பையில் பத்திரப்படுத்தியடி பாலக்காட்டுக்கு ரயில் ஏறினார்...
சத்தியபாமா எதற்கு பாலக்காடு புறப்பட்டுச் சென்றார்...
தொடரும்... .........
-
#1983 ம் ஆண்டு மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்றைக்கு பரபரப்பான அரசியல் சூழலில் எதிர்கட்சியான திமுக எம்.ஜி.ஆர் அரசு மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றை வைக்கப்போவதாக எம்.ஜி.ஆருக்கு உளவுத்துறையிலிருந்து தகவல் போனது. அதேசமயம் திமுக கட்சியினரின் எம்ஜிஆரின் தொப்பி பற்றிய தாக்குதல் உச்சத்தில் இருந்தநேரம் அது. பேட்டியளித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் கருணாநிதியின் குற்றச்சாட்டு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
#ஆனால் எம்.ஜி.ஆர் பதிலைக் கூறாமல் ஒரு காரியம் செய்தார். மெல்ல தன் தலையிலிருந்து தொப்பியை கழற்றி மேஜை மீது வைத்தார். அவ்வளவுதான் அடுத்த நொடி புகைப்பட .ஃப்ளாஷ்கள் மின்னத் துவங்கின. மறுநாள் செய்தித்தாள்களில் தலைப்புச்செய்தி எம்.ஜி.ஆர் 'தலைச் செய்தி'தான். எம்.ஜி.ஆரின் தொப்பியற்ற தோற்றத்தை வெளியிட்ட பத்திரிகைகள் கருணாநிதியின் குற்றச்சாட்டை கடைசிப்பக்கத்தில் முக்கியத்துவம் இன்றி வெளியிட்டன. அதுதான் எம்.ஜி.ஆரின் சாதுர்யம்..............
-
சத்தணவு திட்டம் பற்றிய ........
புரட்சி தலைவரின் ....
கண்ணீர் வரவழைக்கும் ......
பேட்டி .......
அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.
பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு?
(பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள்.
அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள்.
வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள்.
எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள்.
சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்)
குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க.
பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது.
ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதும் அப்போதுதான்.
வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.
ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம்.
நல்ல பசி.
இலை போட்டாச்சு.
காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க.
சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர்
நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு.
வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு
கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார்.
கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்?
ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது.
'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது,
கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?
எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன்,
எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன்.
இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது
எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது.
அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க
ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம்.
எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.
புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால்
விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம்.........
-
1984 வருடம் டிசம்பர் மாதம் தமிழகமே தவித்து நின்றது சோகத்தில் தினசரி ஊடங்களில் மேல் சிகிச்சைக்காக சென்ற முதல்வர் எம்ஜிஆர் எப்போது திரும்பி வருவார்? என்ற செய்தியை தவீர வேற செய்திகள் வந்தாலும் மனம் ஏற்க மறுக்கிறது மக்களுக்கு விரதம் இருக்கும் தாய்மார்களும் மூன்று மதத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடந்த வண்ணம் உள்ளது
"இறைவா! உன் காலடியில் எத்தனையோ மணிவிலக்கு?
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒலி விளக்கு!"
என்ற பாடலை தேசியகீதம் போல் ஒவ்வொரு காட்சிக்கும் முதலில் காண்பித்து எல்லா திரையரங்கமும் எம்ஜிஆருக்காக நன்றி கடன் செழுத்திக் கொண்டிருந்தனர் ஏன்? தலைவர் படத்தை வைத்து சம்பாரிக்காத திரையரங்கே கிடையாது என்றே சொல்லலாம்.
எம்ஜிஆர் அவர்களுக்கு மூளையில் கட்டி வந்ததை அப்போலோவில் நீக்கிய பின் தனி விமானத்தில் சிறுநீரகம் மாற்று சிகிச்சைக்காக அமெரிக்கா புரூக்ளீன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அவர் உயிருடன் இல்லை என்றல்லாம் எதிர்கட்சிகள் பரப்புரை செய்கிறார்கள் கிராமங்களில் அழுகுரல் ஓலமிட தமிழகமே உருக்கமாக நின்ற வேலையில்
அண்ணே ஒரு தந்தி கொடுக்கனும் ம்ம்.. சொல்லுங்க என்ன விஷயமாக "தலைவா.. நீங்க நல்லபடியா சிகிச்சைப்பெற்று திரும்பி வரனும் இது வீரகாளி அம்மன் மீது ஆனை சரி அட்ரஸ் என்ன என் தலைவர் எந்த ஆஸ்பத்திரிக்கு எங்க போனாரோ? அங்க அனுப்பு சரி உன் பேர் சொல்லு ஏழுமலை மொத்தம் 28 ரூபாய் ஆச்சு இந்தா ரசீது
மீண்டும் மறு நாள் அதே தந்தி அதே வார்த்தைகள் அனுப்பு யோவ் ஒனக்கு பைத்தியமா நேத்துதா ஒரு தந்தி கொடுத்த அதுக்கே பதில் இல்ல? இன்னைக்கு இன்னோரு தந்தி வேறயா? உங்க தலைவர் எவ்வளவு பெரிய ஆளு உன்னை எல்லாம் யாருன்னே அவருக்கு தெரியாது நீ ஒரு நாள் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி சம்பாரிக்கிற காச இப்புடி ஏ? வீணடிக்கிற?
யோவ் உன் வாய கழுவுயா நீ இங்க வந்து பாரூய்யா... இந்த சைக்கிள்ரிக்ஷா அவர் கொடுத்தது இன்னைக்கு என்னோட குடும்பத்துக்கே சோறு போடுது அதுக்கு என்னால முடுஞ்சது என் தெய்வத்துக்கு செலவு செய்யாம வேற யாருக்குயா செய்ய சொல்ற... ஏழுமலை ஓட்டி சென்ற சைக்கிள்ரிக்ஷாவையே பார்க்க பின்னால் உள்ள தலைவர் முகம் சிரித்தபடியே ஓடி சென்று மறைகிறது
இடம் நுங்கபாக்கம் தலைமை தபால் நிலையம்
மீண்டும் தலைவரின் நினைவில் சந்திப்போம்
#எல்லா புகழும் எம்ஜிஆர்கே..........
-
நமது மக்கள் திலகம் புகழ் பரப்பும் எண்ணற்ற தகவல்கள் புதிதாக வந்து கொண்டே இருக்கிறது..... சக சகோதரர்கள் புதுவை திரு கலியபெருமாள், சௌ.செல்வகுமார், esvee, லோகநாதன் உட்பட அனைத்து நல் உள்ளங்களும் அவரவர்களுக்கு இயன்ற அருமையான பதிவுகள் பகிர்ந்து புரட்சி நடிகர் அவர்களுக்கு தொண்டுகள் புரிய மனமார அழைக்கின்றோம், நன்றிகள் உரித்தாகுக.........