:yes: கண்டவர் விண்டிலர்! :)Quote:
Originally Posted by kirukan
Printable View
:yes: கண்டவர் விண்டிலர்! :)Quote:
Originally Posted by kirukan
சும்மா இருத்தல் சுகம் எதுவரையெனில்
சும்மா இருத்தல் சுமையாகும்வரை.
-
கிறுக்கன்
உன் உடமை கண்டு உறவாடும்
உறவு உப்பற்ற உணவு.
-
கிறுக்கன்
:thumbsup: :thumbsup:
பிடித்தப்பிடியில் பலனில்லை என்றாலும் பித்தராய்
பிடிக்க வைக்கும் பிடிவாதம்.
-
கிறுக்கன்
முதிர்ச்சியை கூட்டும் முன்யோசனை மாறாய்
முட்டாள் ஆக்கும் பின்யோசனை.
-
கிறுக்கன்
பிறப்பால் பெரும்பேறு பெறுவதில்லை யாரும்
இருப்பால் இருவினைச் சேரும்.
-
கிறுக்கன்
கொண்ட கருமத்தை கண்ணாய் கண்டிட
குழப்பங்கள் குன்றி கலைந்தோடும்.
-
கிறுக்கன்
ருசிக்க புசிக்காமல் பசித்து புசித்தல்
ருசித்து ரசிக்க வைக்கும்.
-
கிறுக்கன்
Yes, eat to live and not live to eat as the saying goes!
எதிராய்காணும் எண்ணமில்லாது எதிரணி சென்றால்
எளித்தாய்விளங்கும் இருபுற உண்மை .
-
கிறுக்கன்.
விடையறியா விடயங்களுக்கு விடையில்லை எனல்
விழியில்லார் விடியலில்லை என்பதுபோல்.
-
கிறுக்கன்
:exactly:
வாழ்வில் வரும்வலி வலுவின் விளிவு
வீழாவன்மை வேதனையின் விடிவு.
விளிவு=கேடு
வீழா+வன்மை= தளரா வல்லமை
-
கிறுக்கன்
தடுமாறும் நிலையதில் தாங்கிட தோளில்லையெனில்
தன்கையே தனக்கு உதவி.
-
கிறுக்கன்
புகை புகைத்து உடற்பகை போற்றாது
புகை பகைத்து பழகு.
-
கிறுக்கன்
யாருக்கு என்னை
பிடித்ததோ இல்லையோ
உனக்கு என்னை
மிகவும் பிடித்துள்ளது
ஆகவே தான்
இரவும்பகலும் என்னை
அரவணைத்தே இருக்கிறாய்
பாவம் நீ
உன்னை விரும்புவோர்
யாரும் இல்லை
என் செய்வாய்
என்னருமை (உடற்)வலியே!!!
-
கிறுக்கன்
:)
:clap: good one!Quote:
Originally Posted by kirukan
அலர்தல் ஆவேசம் ஆத்திரம் இல்லா
ஆற்றலுள்ள அனுபவமே அறிவு.
அலர்தல் - புறங்கூறல்
-
கிறுக்கன்
:yes:
நம்பிய நம்பிக்கை நமக்கு நம்பும்கை
நம்பாத நடவடிக்கை மூடநம்பிக்கை.
-
கிறுக்கன்
Good one nga K!...:-)Quote:
Originally Posted by kirukan
செல்வந்தராக செல்வம் சேர்த்தல் ஒருவழி
செலவு சிறுத்தல் மறுவழி.
-
கிறுக்கன்
குறைகூறல் குறைய குணம் கூடும்
காணும் கவலை கலைந்தோடும்.
-
கிறுக்கன்
:clap: K
நீ காணாததை உன் பிள்ளைக்காண
நீ கண்டதை காணாதாக்காதே.
-
கிறுக்கன்
செய்யும் செயல் சரியாவதும் தவறாவதும்
சுற்றத்தின் சிந்தை வெளிப்பாடே.
-
கிறுக்கன்
:thumbsup:Quote:
Originally Posted by kirukan
புறத்தோற்றம் பார்த்து பிரிவினை போற்றாது
அகத்தோற்றம் பகுத்து பழகு.
-
கிறுக்கன்
mudhal vari vilakunga plz...:-)
thank u
ஒருவருடைய உருவ அமைப்பை வைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரிக்காது உள்ளத்தை வைத்து பிரித்தலே உலகமைதிக்கு வழிவகுக்கும்.Quote:
Originally Posted by suvai
பிரிவினை-secession
-
கிறுக்கன்
:clap: :clap:
thank u K :-)
துடுப்பு இல்லா படகு போன்றது
பிடிப்பு இல்லா படிப்பு.
-
கிறுக்கன்
மகிழ்ந்து மகிழ்தலினும் மகிழ்வித்து மகிழும்
மனமே மனமாற மகிழ்வுறும்.
-
கிறுக்கன்
:thumbsup: nice one k
மலராய் மலர்வாய் கனியாய் கனிவாய்
அன்பே அணியாய் அணிவாய்.
-
கிறுக்கன்
அறிவும் செறிவும் ஒளிரும் உள்ளம்
பணிந்து கனிந்து மிளிரும்.
-
கிறுக்கன்
எதுகையும், மோனையும் அலங்கரிக்கும் அறிவுச் சிதறல்கள்! அமுதனைய தேன் துளிகள்!
இரை குறை கண்டு இறைமாறும்
இனம் இறை காணா.
-
கிறுக்கன்