vr,
I couldn't wtch the episode on march 10th. Can u please write a jist (atleast a line or two?) on that?
Printable View
vr,
I couldn't wtch the episode on march 10th. Can u please write a jist (atleast a line or two?) on that?
Quote:
Originally Posted by Shakthiprabha
:ty:
http://www.cinechipz.com/tv/2009/03/...nge-brahmanan/Quote:
Originally Posted by Shakthiprabha
நாதன் மிக ஆவேசத்துடன் கல்லூரிக்கு போய் கல்லூரி நிர்வாகியிடம் நியாயம் கேட்டு கொதிக்கின்றார்.
ஆனால் நிர்வாகி அசோக்கை மற்ற மாணவர்களின் கேலிக்கு ஒவ்வொரு நாளும் இரையாகுகின்றான் என்றும்
அவனைக் காப்பாற்றுவதற்க்காகவே
கல்லூரியிலிருந்து நீக்கியதாகும் கூறுகின்றார்.
சோ வின் - ஒரு ராஜாவின் கதை - ஜடபரதன் கதை.
அசோக்கை --
ஒரு கல்லூரிக்கும் அனுப்ப வேண்டாமெனவும்
அவன் ஒரு தெய்வக் குழந்தை எனவும் கூறி அனுப்பி வைக்கிறார்.
நல்லதோர் வீணை செய்து ...
:oops: I'm terribly sorry akka... Poor memory.. :shaking:
Appaadi... Thanks to aana... :ty:
Sorry'ka :oops: :cry:
:ty: aana, your link didnot work for me.
The foll link works.
http://tamiltv4u.com/enge-brahmanan/...ated-10032009/
Anyone interested in watching any episode can just try for the particular day's video clip.
ஸ்திதப்ரக்ஞன் பற்றி முன்பே ஒரு அத்தியாயத்தில் பார்த்திருந்தோம். அதாவது இரட்டைகள் அற்ற நிலை. நானோ நீங்களோ பேசிய பிறகு எழுதிய பிறகு, இதையெல்லாம் பற்றிப் படித்த பிறகு, உண்மை அறிவு நிலை என்ன என்று எழுத்தளவில் அறிந்த பிறகு, மீண்டும் ஆசைகள், ஏமாற்றங்கள்,Quote:
Originally Posted by Shakthiprabha
புகழ்ச்சி, இகழ்ச்சி, பெருமை, சிறுமை we enter into the dual syndrome. பற்பல பிறவிகளில் சேகரித்த ஆசைகள், நிராசைகளை, ஒட்டுமொத்தமாய் தொலைத்துவிட, அழித்துவிட முடிவதில்லை. படிப்படியாய் உயர வேண்டிய பாதை. அதனால் தான் மனத்தை முதல் படியாக ஒருநிலைப் படுத்த, பஜனை, தியானம், ஸ்லோகங்கள் என பல பாலப்படிகள். இதையெல்லாம் பாராயணம் செய்யவும் இன்றளவில் நேரமும், விருப்பமும் இல்லாமல் போய்விடுகிறது. க்ஷண நேரத்தில் மனம் மீண்டும் ரஜோ குணத்தால் பீடிக்கப்பட்டு..... முடிவில்லா சக்கரம்.
அசோக் போன்ற வெகு சொற்ப மனிதர்கள், இறைத்தன்மைக்கு சிறிது (relatively) அருகாமையில் இருப்பதால், அவர்களால், சட்டென்று ஒரே படியில் தாவ முடிகிறது. அவர்களை அவமானம் மானம் போன்ற இரட்டைகள் பாதிப்பதில்லை. Their existence is said to be in a different plane (probably higher) அதனால், அவர்களைத் துன்புறுத்தினால், reaction இல்லாமல் போனாலும், துன்புறுத்தியவனை மன்னிக்கும் பக்குவம் இருந்து, அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் மன்னித்தாலும், equal opposite reaction என்ற விதிப்படி, பாதிப்பு துன்புறுத்தியவனை தாக்கும். இங்கு சாமான்ய மனிதன் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய கட்டாயம். அந்த பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது, ஏனெனில், இப்படிப்பட்டவர்களின் வாக்கு, சொல், செயல், சிந்தனை எல்லாமே நம்மை விட பன்மடங்கு அதிக பலம் வாய்ந்தது. Intensity can be higher.
இயேசு, தன்னை துன்புறுத்தியவர்களின் பால் மிகுந்த கருணை மேலிட "இவர்கள் செய்யும் பாவத்தை இவர்கள் அறிய மாட்டார்கள், எனவே பிதாவே இவர்களை மன்னியுங்கள்" என்று மன்னித்தருளினார். அவர் கருணைக் கொண்டு மன்னித்திராவிட்டால், விளைவுகள் அதிகமாக இருந்திருக்கும். Universal love என்று இதைச் சொல்வதுண்டு. தன்னைத் தவிர பிற ஒன்றை காணாது, எங்கும் தன்னையே கண்டுவிட்டதால்,
இரட்டைகள் அற்ற நிலை. Compasson and love hence flows towards one and all.
தானே எல்லாமாகி இருக்கிறோம் என்று அறிவு முழுமை பெறும்போது, அவமானம் மானம், துன்புறுத்துபவன், துன்புறுத்தபடுபவன் என்ற வேற்றுமை கடந்து நிற்கும் பக்குவம் வரப் பெற்றுவிடும். அது அவ்வளவு சாமான்யமானதல்ல.
ஜடபரதரின் கதை அதற்கு சான்று. ஜட பரதர் முற்பிறவியில் துஷ்யந்த மஹாராஜாவின் மகனாய் பிறந்தார். ராஜபோகத்தைத் துறந்து தேர்ந்த ஞானியாக விளங்கினார். ஆன்மநிலையை எட்டப்பெற்ற பின்னும் வீழ்ந்தார். எப்படி? தன்னை அண்டி வந்த மானின் மேல் அன்பு பாராட்டினார். மெல்ல மெல்ல மான் அவர் மனம் முழுவது ஆக்ரமிக்கத் துவங்கியது (like how a camel creeps into the tent). பாசம், அன்பு வேறூன்ற ஆரம்பித்த
அவரின் மனதில், இறைவனைத் தாண்டி மானின் நினைப்பு மட்டுமே மிஞ்சியது. மான் ஒரு நாள் இறந்துவிட்ட போது அந்த துயரம் தாங்காமல், பாசத்தால் பீடிக்கப்பட்டார். துடித்தார். இந்த பாசத்தை அறுக்க, மீண்டும் ஞானப்படிகள் ஏற அவருக்கு மேலும் இரண்டு பிறப்பு தேவைப்பட்டதாம். அவரின் கடைசி பிறவி 'ஜட பரதர்' என கூறப்படுகிறது. இறக்கும் தருவாயில் தவத்தின் நிலையிலிருந்து வீழ்ந்துவிட்டதை உணர்ந்திருந்த அவர், மேற்பட்ட பிறவிகளில் உணர்வுகளுக்கு இடம் கொடாத 'ஜடமாய்' இருந்து, இறுதி நிலையை எய்வேன் என்ற உறுதிபூண்டதாக சொல்லபடுகிறது.
நாதனிடம் வசுமதி கேட்கிறாள்:
"அப்போ காலேஜ் படிப்புக்கு அவன் லாயக்கு இல்லையா?"
பட்டென்று நமக்குத் தோன்றும் பதில்.
"காலேஜ் படிப்பு இவனுக்கு லாயக்கு இல்லை" .
பாரதியார் எவ்வளவு அருமையாய் ஒரே சொல்லில் அடக்கிவிட்டார்! For all those whose existence is beyond worldly affairs...
சொல்லடி சிவஷக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்!
வல்லமை தாராயோ இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கே! (such ppl find it diff to gel)
I missed yesterday's episode akka.... pls post it :oops:
March 16th
_________
வையாபுரி, சிங்காரத்தை காப்பாற்றுவதற்கு தேர்ந்தெடுத்த ஒரே வழி, அஷோக்கின் சரீரத்தை ஹிம்சிக்காத வழி. அத்தெருவில் உள்ளோரிடம் "அசோக் மனநிலை சரியில்லாதவன்" என்று கையெழுத்து வாங்குகிறார். நாதனும் மனம் வெம்பியபடி கையெழுத்திடுகிறார். ஒவ்வொரு தந்தைக்கும் மகன்/மகளின் செய்கைக்கு தார்மீகப் பொறுப்பு (responsibility / accountability) உள்ளது என சாஸ்திரங்கள் கூறுவதாய் எடுத்துரைக்கிறார் சோ. அவர்கள் செய்யும் பாபங்களுக்கு இவர்கள் பொறுப்பாவார்கள். மகன் தந்தை வழியில், பிரஜைகளின் பாபங்களுக்கு அரசனும், சிஷ்யனின் செய்கைகளுக்கு குருவும், மனைவியின் பாபங்களுக்கு கணவனும் பொறுப்பாவான் என்பது முன்னோர்களின் கூற்று. ஆகவே உயர்ந்த பதவி (not to be taken literally) வகிப்பவர்கள் தம் நடத்தையால், செய்கையால், வார்த்தைகளால் தம்மைச் சார்ந்தோரை வழி நடத்த வேண்டிய கடமைக்கு உட்பட்டவர்கள்.
வேம்புவின் சம்பந்தத்தை வெகு சந்தோஷமாய், பெருமையாய் ஜகன்னாதன் (ஜட்ஜ்) ஏற்றுக்கொள்கிறார். அவர் மனைவிக்கு சற்றே மனம் சுருங்குகிறது. எனினும் சினிமா வில்லியைப் போல் இல்லாமல், இயல்பாய் இன்முகத்துடனேயே தன் விருப்பமின்மையை நாசூக்காக கூறுகிறார். அவர் மகளின் விருப்பத்திற்கு விட்டுக்கொடுக்கவும் செய்கிறார். வைதீகம் செய்து வைப்போர்களின் நிலைமையை நன்கு கையாண்டிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்திலும் வேத வழி சென்று வேத மந்திரங்கள் ஓதும் அவர்களை, அதன் சாரம்சத்தை கட்டிக்காக்கும் அவர்களை நாம் சரிசமமாய் நடத்துவதில்லை எனும் உண்மை சுடுகிறது.
வேத மந்திரங்கள் ஒலிக்கும் வீட்டில் என் மகள் மன நிறைவுடன் இருப்பாள் எனக் கூறுகிறார் ஜகன்னாதன். Postive effects of mantras was subtly hinted.
உறவுகளின் பேச்சு அடிபடும் போது, துன்பம் விளைவிப்பவன் உறவினன் என்பது கண்கூடாய் தெரிவதாக அபிப்ராயம் சொல்லப்பட்டது. நிதர்சனத்தில் தனியொரு மனிதனின் வீழ்ச்சியும், உயர்வும், நண்பன் ஒருவனுக்கு வருத்தத்தையும் சந்தோஷத்தையும் தரும் அளவு உறவினனுக்கு உள்ளன்பு பொங்குவதில்லை. இதை இராவணனும், இராமனும் கூட முன்மொழிந்ததாய் கூறப்படுகிறது.
விபீஷனனைப் பற்றி எடுத்துரைக்கும் இராமன், "அவன் நீதிக்கு தலைவணங்குபவன், நியாயத்தின் பக்கம் நிற்பவன்" என்று சொல்வதோடு நிற்காமல், "மேலும் அவனுக்கு இராஜ்ஜியத்தில் ஆசை வந்துவிட்டது" என்றும் கூறுவதாய் இராமாயணத்தில் இடம்பெற்றிருக்கிறது. உறவினனே உலைவைப்பவன் ஆகிறான்.
(வளரும்)
(நேற்றைய தொடரில் லௌகீகப்பேச்சுக்கள் மட்டுமே இருந்தன)
after thoughts: இக்கருத்து பொதுப்படையாய் கூறப்படுகிறது. ஒப்புக்கொள்ள இயலாதது. பொறாமை, அசூயை, போன்ற குணங்கள் பொதுவானவை, அவை உறவினன் மட்டுமே இன்னொரு உறவினனுடன் பாராட்டுவான் என்று சொல்வது generalisation. யாருக்கும் எப்படிப்பட்ட குணமும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.
விபீஷனனை விட கும்பர்கணன் சிலரால் புகழப்பெறுகிறான். தமையனுக்காக உயிர்த்தியாகம் செய்தவன் என்று பாராட்டபடுகிறான். இராஜ்ஜிய பரிபாலனத்தை ஏற்றிருக்காவிடின் விபீஷனன் இன்னும் உயர்ந்து நின்றிருக்கலாம். அவன் மனம் வெதும்பி வேண்டாம் என்று மறுத்ததாகவும், இராமன், உயர்ந்த ஞானத்தை எடுத்துரைத்து மக்கள் நலன் கருதி, இராஜ பரிபாலனத்தை ஏற்று நடத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கதை உண்டு.
http://tamiltv4u.com/enge-brahmanan/...rial-16032009/
(நேற்றைய பகுதியைக் காண மேலே சுட்டுங்கள் )
:ty: Akka...
லௌகீகப்பேச்சுக்கள் - :confused2: appadina enna ka? :oops:
Talks on worldy life and matters. 99 % of all what we talk. Viyavahhaarik nnu sollalaam.
லௌகீகம் = லோகம் (உலகம், உலகம் சார்ந்த ஒட்டொழுகல்) சம்பந்தபட்ட பேச்சுக்கள்.
anythign that is NOT pertaining to supreme knowledge or god :| :oops:
:bow: :bow:Quote:
Originally Posted by Shakthiprabha
Thank you so much!
To beat the regular routine,
I absolutely admire character portrayal of,
1. Ashok
2. vEmbu
3. Samaiyal maami
4. Neelakantan
scale above the rest.
Please share ur favourites too ( and share reasons if u wanna add on)
மிக்க நன்றி SP
Ashok is good. But he did not impress me much. :oops: But definitely I agree with the 2, 3 & 4 in your list. :bow:Quote:
Originally Posted by Shakthiprabha
Neelakandan wasn't much impressive at first but later he picked up the character and started living as Neelakantan. :thumbsup:
Vembu and Samayal Maami :redjump: Wonderful character just like someone next door... :yes:
Thanks vr :)
I always appreciate ashok types and also relate to his types lot of times ( :| :oops: ) and definitely I know, most people wont admire his charactor or relate to him. Looks like we get along reg the rest.
March 17th
_________
இவ்வளவு நடந்த பின்பும் எப்படி ஒருவனால் நிச்சலனமாக, கடமைகளைத் தொடர முடிகிறது? அஷோக் அப்படித் தான் இயல்பாய் தன் பணிகளைத் தொடர்கிறான். பிறர் பழிப்பதோ புகழ்வதோ அவனுக்கு பொருட்டாய் தெரிவதில்லை. இதைத் தொடர்ந்து பேசிய கதாசிரியர், உண்மையான ஞானி மற்றோரின் கருத்துக்கு செவி சாய்ப்பதில்லை. தன் பாதையை தானே வகுத்துப் பயணிக்கிறான், என்கிறார். மற்றோரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு, பிற சாமான்யர்கள் ஞானிகளை விட உயர்ந்தவர்கள் அல்ல (உயர்ந்தவர்கள் = உயர்ந்த ஞானம் உடையவர்கள்).
பட்டினத்தார் எப்பேர்பட்ட ஞானி என இன்று நாம் பேசிக்கொண்டாலும், அவர் வாழ்ந்த காலகட்டத்தில், அவரை இகழ்ந்தவர்களும், பைத்தியக்கார பட்டம் கட்டியவர்களும் அதிகம். ஒருமுறை பட்டினத்தார் வயல்வரப்பில் கையை தலைக்கு அணையாக வைத்து இளைப்பாறிக்கொண்டிருந்தார். அவ்வழியே கடந்து சென்ற இரு பெண்டிரில் ஒருவர், "இவரெல்லாம் என்ன ஞானி! உறங்கும் போதும் சுகம் வேண்டியிருக்கிறது பார், கையை தலைக்கு அணையாக்கி உறங்குகிறார்" என்று இன்னொருத்தியிடம் சாடை பேசுகிறாள். "அப்படி பேசாதே அவர் உண்மையில் பெரிய ஞானி" என்று மறுத்துரைக்கிறாள் மற்றொருத்தி. உடனே பட்டினத்தாருக்கு மனம் வெம்பியது. 'ஆஹா நம்மால் இன்னும் சரீர சுகத்தை துறக்கமுடியவில்லையே என்று வருந்தி, இனி இதுவும் வேண்டுவதில்லை என கையையும் விடுத்துப் படுத்தார். மீண்டும் அவ்வழியே திரும்பச்சென்ற அப்பெண்டிரில் இன்னொருத்தி "பார்த்தாயா நீ கூறியதும் அதையும் துறந்துவிட்டார்" என்று சொல்ல, முதல் பெண் "இன்னொருவர் சொல்வதைக் கேட்டு, அதனால் பாதிக்கப்பட்டு, தன் போக்கை மாற்றிக்கொள்ளும் இவரெல்லாம் ஞானியா" - அலட்சியம் பேசிச் செல்கிறாள். இக்கதையில் வரும் இரு பெண்டிரும் உமையும் சிவனுமே ஆவார்கள் எனக்கூறுவர். சுரீரென உறைத்தது பட்டினத்தாருக்கு. "உலகத்தோரின் பேச்சுக்கு தன் மனம், செவி சாய்த்து அதனால் பாதிக்கப்படுகிறதென்றால், எப்பேற்பட்ட அஞ்ஞானத்தில் உழன்றுகொண்டிருக்கிறோமே, இன்னும் எத்தனைப்படிகள் ஞானத்தை நோக்கி செல்லவேண்டுமோ" என மறுகுகிறார்.
"என் மனதுக்கு தெரியுமப்பா நான் பைத்தியம் அல்ல என்று" "நான் ஏன் கவலைப்பட வேண்டும்" என்கிறான் அஷோக். உலக மக்களைப் புரிந்து கொள்ள அவன் தன் வட்டத்தை விட்டு வெளிவர வேண்டும். அவர்களோடு பழகவேண்டும். அதன் பின்னர் அவன் சொல்லும் செய்தி, அவர்களுக்கும் எட்டலாம் என நாதன் அபிப்ராயப்படுகிறார்.
"அடடா பணக்காரனுக்கு இவ்வளவு கஷ்டமா" - பர்வதத்தின் கேள்விக்கு வசுமதியின் பதில் நன்றாய் இருந்தது. "பணத்தை நாங்க வெச்சுண்டு இருக்கிறதா நினைக்கிறா, அது தான் இல்லை, பணம் தான் எங்களை வெச்சுண்டு இருக்கு"
( ரஜினிகாந்துடைய 'முத்து' படத்திற்கு வைரைமுத்து எழுதிய வரிகள் நினைவிற்கு வருகிறது.
கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் )
பணக்காரனுக்கு உள்ள துன்பங்கள் சொல்லி மாளாது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே. கட்டிக்காக்கும் பொறுப்பு இருக்கையில், அதைப் பற்றிய பயமும் அதிகரிக்கும். பணக்காரர்கள், தம் நண்பர்கள் -பகைவர்கள் - உறவினன் என எல்லோரையும் பயத்துடனேயே நெருங்குகின்றனர். என்றைக்கேனும் தனதென்று வைத்துள்ளது தம்மை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் நிறைந்த வாழ்க்கை. "மடியில் கனம் இருந்தால் வழியில் பயம்" என்ற தொன்மை மிகுந்த கூற்றை இங்கு அப்படியே with literal meaning பயன்படுத்திக்கொள்ளலாம்.
சேமித்து வைத்து அதை தனதென்று உரிமைக்கொண்டாடி, பயத்துடன் கட்டிக்காப்போனுக்கு தேனி கதை பொருந்தும். தேனி சிறுக சிறுக சேமித்து கூட்டைக் கட்டும், ஒரே நாளில் அதை அழித்து அதன் பலனை இன்னொருவன் கொண்டு சென்றுவிடுவான். சேகரித்து சேமித்து வைக்கும் பணக்காரன் நிலையும் இது தான். இவ்வுலகில் எதுவும் சாஸ்வதம் அல்ல. தேவைக்கு அதிகமாக சேர்க்காத மலைப்பாம்பு, இரை அருகில் வந்தால் உண்ணுமாம். பசி நேரத்தில், தேவையான அளவு கிடைத்த பொழுது கிடைத்த உணவை உண்ணும்
மலைப்பாம்புக்கு வேறு அனாவசிய கவலைகள் இருக்க வாய்ப்பில்லை. உயர்ந்த ஞானிகள் தமக்கென சேமித்து வைப்பதில்லை. பட்டினத்தார், ஒருநாள் யாசகம் கேட்டுச் செல்கையில், அவருக்கு திருட்டுப் பட்டம் கட்டிவிட்டனர். மனம் வருந்தி, 'உணவு எனைத் தேடி வந்தால் உண்பேனே ஒழிய, இளைத்தாலும், நான் இனி உணவைத் தேடிச் செல்லமாட்டேன் என வைராக்கியம் பூண்கிறார்.
முக்கியத் திருப்பங்கள்:
1. தம் பெண்ணுக்கு அடையார் விட்டை எழுதிக்கொடுத்து தனிக்குடித்தனம் வைக்கலாம் என அபிப்பிராயப்படுகிறார் ருக்மிணி, ஜகன்னாதன் உடன் படுகிறார்.
2. தேர்ந்த மருத்துவர் ஒருவரின் சான்றிதழின் பேரிலேயே அசோக் மனநிலையை உறுதி செய்ய முடியும் என போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். அவர்களை அடக்க, மந்திரியின் உதவியை நாடி, வையாபுரி வெற்றி காண்கிறார்.
3. சமையல் மாமியின் கணவருக்கு தம் மகள் கல்யாணாத்தையொட்டி பணம் புரட்டுவது கடினமாகிறது. தீர்கதரிசனத்துடன், அனேகமாக சமையல் மாமியே அவருக்கு உதவக்கூடும் என்ற முடிவுக்கு நாமே வரலாம்.
(வளரும்)
:ty: SPQuote:
Originally Posted by Shakthiprabha
அட் பாவமே !!
இங்கும் இப்படியா :hammer: :hammer:
Today's episode was good.
Cho explained the reason why Women should be treated with dignity.. :bow:
I loved his speech. Each point sounded very valid!!! :bow:
And, Kripa's wife's character has been portrayed so well. Romba nalla ponnu :cool:
Kripa's attitude - :hammer:
SP akka, awaiting your writing :yes:
:| எழுதறேன்.Quote:
Originally Posted by viraajan
March 18th
_________
தனிக்குடித்தனம் மிகுதியாகிவிட்டபடியால், தனிக்குடித்தனத்தை முகச்சுளிப்போடு ஏற்கும் நிலை போய், இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கும் எல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறோம். கலியுகத்தில் மனிதன் தன் மனைவி வழி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பணத்தாலும் சரீராத்தாலும் உழைக்கக் கடவான் என்று பாகவதத்தில் கூறியிருக்கிறதாம். இதன் முக்கிய காரணம் வீட்டில் உள்ள பெண்கள். அனுசரணையாய் இல்லாமல், பிடுங்கும் ஒரு பெண்ணை சமாளிக்கத் தெரியாமல் அவள் போதனைக்கு செவி சாய்க்க வேண்டிய கட்டாயம். சமுதாயம் என்னும் பிணைப்பில் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளதால், பெண்கள் சிந்தனைகள் மாறுவதற்கேற்ப, ஆண்களும் மாறுவது இயல்பு. இறுதியில் வீட்டில் நிம்மதி என்பது பெண்ணின் கூட்டுறவால் அமையப்பெறுகிறது, அதை அவள் விருப்பத்திற்கு இணங்கி விலை கொடுக்கவேண்டியதாயிருக்கிறது.
மேற்பட்ட கருத்தை மறுப்பதும் ஒப்புவதும் அவரவர் தனிப்பட்ட அனுபவங்களைப் பொருத்து. ஆனால் நம் சாம்புவும் அவர்கள் வீட்டாரும் விகல்பம் இல்லாது, நல்லமனதுடன் வாழத்தி தம்பதிகளை தனிக்குடித்தனம் வைக்கின்றனர்.
(பி.கு: க்ருபா/ப்ரியா திருமணம் ஒரே சீனில் மூன்றே மூன்று டைலாக்குடன் இனிதே முடிந்தது!)
எல்லாம் தெரிந்த ஞானிகளும் சில நேரம் ஏன் உலக விஷயங்களில் மூக்கை நுழைத்து மாட்டிக்கொள்கின்றனர்? ஸ்ரீ அரோபிந்தோ இந்திய பாக்கிஸ்தானிய உறவுகளுக்கு பாலமிட உடன்படுமாறு எடுத்துரைக்க முற்பட்டு அனுப்பிய மனு கவனிக்கபடவில்லை. அது கவனிக்கப்படாது என்று அவருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததல்லவா? தெரிந்திருந்திருந்தும், தம் கடமைக்காக செய்தார் என்று கூறியிருக்கிறார்.
பிட்டுக்கு மண் சுமந்த ஈசனும், பூமியில் பிறந்ததால், தாம் செய்ய வேண்டிய அனுபவிக்க வேண்டிய கடமையிலிருந்தும் தவறவில்லை. இராமனுக்கு சீதை அபரிக்கப்படுவாள் என்று தெரிந்திருந்ததா? அவர் பதினாறு குணங்கள் நிரம்பப்பெற்ற அவதார புருஷனல்லவா! தெரிந்திருக்கும் வாய்ப்பிருக்கிறது. துளசிதாஸ் இராமாயணத்தில் இராமன் அவதாரமாக இறைவனாக போற்றப்படுகிறான். ராவணன் அபகரித்தது நிஜ சீதையை அல்ல அது 'மாயா சீதா' எனும் வேதவதி என்ற கதை உண்டு. ஆனால் வால்மீகி இராமாயணத்தில் இராமன், மனிதனாக அவதரித்து, ஒரு உயர்ந்த மனிதாக மட்டுமே வாழ்தார். மனிதாக மட்டுமே தன்னை உணர்ந்தார் என்றே கூறப்படுகிறது. அக்னிப் ப்ரவேசம் முடித்ததும், தேவதிதேவர்களும், சிவனும், பிரம்மனும் வந்து "நீ யார் என்று விளங்கவில்லையா" என்று கேட்டும் கூட "நான் தசரத புத்திரன் இராமன்" என்றே கூறுகிறாராம்.
{ ( சில சிந்தனைகள் ): இதை இரண்டு விதமாய் யோசிக்கலாம். தன்னை மனிதனாக பாவித்தப் பின், நிகழ்காலத்தின் மட்டுமே வாழ்ந்த ஞானியின் நிலையில், அவன் தன் இயல்பை மறந்து மனிதனாக மட்டுமே செயல் பட்டான். அப்படி செயல்பட்டதால், அவனே இறையம்சத்தின் பிரதிபலிப்பு என்பதும் கூட நினைவிலிருந்து அகன்று விட்டது.
அல்லது
தான் இறை என்பது நினைவில் இருந்தும், அவன் தன்னை மனிதனாக மட்டுமே வெளிப்படுத்தினான்.
கண்ணன் அவதாரம் வெகு வித்தியாசமானது. பரிபூர்ண அவதாரமான க்ருஷ்ணன், தான் மனிதனாக வாழ்ந்த போதும், இறைவனின் அத்தனை அம்சங்களையும் வியக்கத்தக்க வகையில் பல சில சமயங்களில் வெளிப்படுத்தினார் }
நீலகண்டன் நியாயவாதியாய் செயல்படுகிறார். வைதீகத்தை ஒருபுறம் அனுசரித்த போதும், மற்றைய விவகாரங்களில் வளைந்து கொடுத்து நடப்பவனை விட, தம் மனதுக்கு சரியென பட்ட தர்மத்தை துணிந்து செயலாற்றும் உயர்ந்த குணம் இவரிடம் மின்னுகிறது. அசோக் விவகாரத்தில் நேரடியாக இவர் தன்னை சம்பந்தப்படுத்திக்கொள்ள, வையாபுரி ஏவியதில் சிங்காரம், நீலகண்டனையும் அவர் குடும்பத்தையும் மிரட்டிச் செல்கிறான்.
(வளரும்)
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
Quote:
Originally Posted by Shakthiprabha
:ty:
What is easy or not easy is not in our hands, is it?. Our duty is merely to perform our dharma with passion and devotion. If it takes a billion more births to be enlightened.. so be it. What is more pleasurable than to enjoy our experiences with the co-creators of our reality? What is more pleasurable than to express and experience the infinitely many more aspects of God in each of our unique life-forms and births? Enlightenment doesn't even come close :D.Quote:
Originally Posted by Shakthiprabha
Love and Light.
Ive heard this version. In other words some put it this way.Quote:
Originally Posted by anbu_kathir
"Journey is more pleasurable and interesting than the destination itself"
:) Truly said, each has its own flavour and aroma.
This too seems to be a generalization, just like the one you mentioned about relatives-friends. IMHO there seems to be little difference between the distribution of mentality in people who chant manthras and those who don't. In my personal experience, I have known some really cruel personalities (who actions seemed pretty 'violent' at heart) who are well established Veda chanters.. and some really simple and good hearted people who know nothing except to say except to say some god's name. Again, I have noticed the opposite kind of people too. Finally imho a statement that 'our daughter will be having a good time in a place where Veda manthras resound' is quite illogical.Quote:
Originally Posted by Shakthiprabha
Love and Light.
Prasad,
I also agree with u. But I look at it this way.
The chanting DOES have postive effect , and to the extent it has minute effect on ppl's mind set (may be negligible)
With alll that if a person is still disturbed, then he would have been more disturbed without chants (give it 2 percent)
Without all those postive vibration if a person is wonderful and reflects well with his surroundings, such person would vibrate with more energy (give it 2 percent) with chantings.
UNLESS (exception clause:) he is a gnani, where mantras and other vibration does not matter much as he himself is like a plain clear water, un perturbed.
'The journey' and 'the enlightenment' of the seeker are two illusions that don't exist. Morals, good-bad values, etc etc do nothing to serve those that seek Freedom. They basically maintain control and sanity in a society, but Freedom lies within and without all these things. The man who seeks Freedom goes with the flow of the natural order of things.. and Freedom comes to him as simply (or as complicatedly) as the flowering of a plant that has grown without being desperate to understand with logic or reason the miracle of Life.Quote:
Originally Posted by Shakthiprabha
Love and Light.
Perfect! No second thoguhts. You pour ur thoguhts precisely to the point.Quote:
Originally Posted by anbu_kathir
I believe that it is the 'intention' that counts. The state of being with which a manthra is said carries the greatest potential for the result of the manthra to manifest itself. In other words,Quote:
Originally Posted by Shakthiprabha
Intention (more important) + Action(less important) = Result
Good intention + Good action = good result
Good intention + Inefficient/Unknowingly done bad action = fair result
Bad intention + good action = Bad result
Bad intention + bad action = worse result
Of course, by good I mean that which is beneficial to the overall spiritual/mental/physical well being of one or many beings of the universe. In action, I include thought, word and deed, and thereby manthra-chanting is included too. This is why I believe the story of Valmiki who meditates on a 'tree' ( mara-mara) ends in a positive result, not because "mara" was morphed into Rama, although that could very well have played a part. Ultimately continuous intention drives the person towards one's result, not the action (external manifestation of the intention itself.. although it is essential).
Love and Light.
IMHO a human being is an extremely complicated and constantly changing machine (conscious machine :) ) and such 'general' time-invariant observations ('in the kali yuga' blah blah) are pretty useless when it comes to an actual relationship (how many people would have such thoughts in their head when they are in the relationship and not in solitude???). Instead the relationship itself is to be understood by the those in a relationship as a single living entity where every individual contributes to the whole.Quote:
Originally Posted by Shakthiprabha
Modern psychoanalysis actually suggests (and I guess this was definitely not something unknown to the ancient eastern philosophers) that every individual is made up of both the male and the female personalities in different proportions. A healthy relationship is probably one where the aggregate male/female personalities lies in dynamic balance.
http://en.wikipedia.org/wiki/Anima_and_animus
Love and Light.
gimme sometime :oops:
I shall update it today.
aana,
I am not able to change poll :|
(you can take this topic reg women and post something related to the discussion abotu women and their nature)
March 19th
___________
க்ருபா தன் சம்பளப் பணத்தை அவன் பெற்றோரிடம் சமர்ப்பித்து, அவர்களுக்கும் செலவிற்கும் உதவிவிட்டு, மிச்ச வருமானத்தில் குடும்பம் நடத்துவதே போதுமானது என்று அவன் மனைவி கூறுகிறாள். இப்படிப்பட்ட பெண்ணே பூஜிக்கத் தக்க நல்ல பெண்மணி வகையைச் சேர்ந்தவள்.
யுத்தம் முடிந்ததும் பீஷ்மர் தர்மருக்கு, யுத்த தர்மங்களைப் பற்றி ராஜநீதிகளைப் பற்றியும் இன்னும் சில தர்மங்களையெல்லாம் விளக்குகிறார். அப்போது தர்மர் "பெண்கள் எப்படிப்பட்டவர்கள்" என்ற கேள்வி எழுப்புகிறார். அதற்கு பீஷ்மர், பஞ்சசுவடி என்ற தேவகன்னிகை குறிப்பிட்டுள்ளதை அப்படியே கூறுகிறார். 'பெண்கள் சுயநலம், ஆசை, அஹங்காரம், ஆத்திரம், ஆசை, அசூயை, திருப்தியின்மை (இன்னும் என்னவெல்லாம் உண்டொ அவ்வளவும் போல?!) ஆகிய குண்ங்களைப் அதிகம் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட பெண்கள் அதிகரிக்க, யமனுக்கு மனித உயிர்களை கொண்டு செல்லும் போது திருப்தியின்மையே ஏற்படும்' என்கிறாள் என பீஷ்மர் கூறுகிறார்.
படைப்பின் ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் மிகுந்த அறிவும், நற்குணமும், வேத அறிவும் மிக்கவர்களாக (வேதம் = knowledge about rightiousness) இருந்தனர். மனித உலகம், பூவுலகம் தேவலோகம் போல் ஆகிவிட்டபடியால், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசமின்றி மகிழ்ச்சியும், குதூகலமும் நிரம்பப்பெற்றிருந்தனர். பூவுலகிற்கும் தேவலோகத்திற்கும் வித்யாசம் இன்றி போய்விடும் என்று இந்திரன் (தேவேந்திரன்) கேட்டுக்கொண்டதன் பேரில், பெண்கள் ஆசையும் ஆத்திரமும் சேர்த்து படைக்கப்பட்டனர். அதன் பின் மனிதனின் வாழ்வும் பெரும் அல்லலுக்கு உட்பட்டது. ஆயிரம் நாக்கை கொண்டு ஒருவன் இருந்தாலும், அவனால் தன் ஆயுள் முழுவதும் ஒரு பெண்ணின் தீய குணங்களையும், அதனால் விளையும் விளைவுகளையும் அடுக்க நினைத்தால் முடியாது என்று பஞ்சசுவடி குறிப்பிடுகிறாள்.
மனுதர்மத்தில் (இதுவே தேவலை) பெண்கள் இரட்டை குணங்கள் மிகுந்தவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். அதாவது இயற்கையிலேயே, பெண் என்பவள் பொறுமை-ஆத்திரம், ஆசை-சாந்தம், தாராளம்-சுயநலம் எல்லாமே சரிசமமான அளவு இருக்கபெற்றவள். அதனாலேயே அவளால் சரியானதொரு பாதை தேர்ந்தெடுக்க தேரியாது, அல்லது சரியானதொரு முடிவை எடுக்க முடியாமல் திணறுவதால், ஆண் மகனின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு இருக்கிறாள். இளமையில், தந்தையும், பின் மணாளனும், அதன் பின் மகனும் அவளை பாதுகாக்கின்றனர்.
இதுவரை பஞ்சவடியும் மனுவையும் குறிப்பிட்ட சோ, பெண்களிலும் மிக நல்ல பெண்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட பெண்களால் தான் இப்பூமி செழிப்புறுகிறது. அப்படிப்பட்ட பெண்களால் தான் நீதி நேர்மை, நல்லிணக்க சிந்தனை முதலியவை பாதுகாக்கப்பட்டு, உலகின் ஷாந்தி நிலவுகிறது. அதனால் அப்படிப்பட்ட பெண்கள் பூஜிக்கத்தக்கவர்கள். அப்படிப்பட்ட நற்குண மங்கை ஒருத்தி பூஜிக்கப்பட்டால், அவ்விடத்தில் தேவர்கள் வசிப்பதாக என்று புராணங்கள் கூறுவதாக முடித்தார்.
(வளரும்)
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
வளரட்டும்
As usual nice write up SP :clap:
Anbukathir, Good analysis :thumbsup:
நன்றி திருமாறன்.
// நண்பர்களே, என் மகளுக்கு ஆண்டுத் தேர்வு நடந்து கொண்டிருப்பதால், சில நேரங்களில் தொடரை முழுமையாக பார்க்க முடியவில்லை. 20ஆம் தேதி அன்று ஒளிபரப்பப்பட்ட தொடர் அரைகுறையாகத் தான் பார்க்க நேர்ந்தது. நேற்றைய தொடரை முழுவதும் பார்க்க இயலவில்லை. நேற்றைய தொடரின் விடியோ சுட்டியைப் பார்த்து என்னால் இயன்ற உரை எழுதுகிறேன்.
இந்த பதிவில், கதையோட்டத்தை மட்டும் இரண்டே வரியில் முடித்துவிடுகிறேன்.
//
Random updates
___________
க்ருபாவின் மனைவி, தன் புகுந்து வீட்டு மனிதர்களிடம் மிகுந்த அன்பு ஆதரவும் கொண்டு பாசத்துடன் நடந்து கொள்வதோடு மட்டுமின்றி, தனிக்குடித்தனத்தில் ஈடுபாடின்றி, கூட்டுக்குடித்தனம் வாழ ஆசைப்படுகிறாள். இது பற்றி தன் மாமியாரிடம் வேண்டுகோள்விடுக்கிறாள்.
சமையல் மாமி தன் கணவருக்கு நகைகளை அளித்து அவர் மகளின் கல்யாணத்திற்கு உதவி செய்கிறாள். யாருடைய நகைகள் என்பது இன்னும் மர்மமான விஷயம். யாருமற்ற வீட்டில் பூட்டாத அலமாரியை மாமி, சஞ்சலத்துடன் பார்வையிடுகிறார். இதை மட்டுமே வைத்து நாம் மாமியைத் தவறாய் எடை போட்டு விட முடியாது. என்ன ஆயிற்று என்று பொருத்திருந்து பார்ப்போம். என்றாலும், பாசமும், பிணைப்பும், தேவையும் எந்த ஒரு நல்ல மனிதனையும், குறிப்பாக, மனத்தை தன் கட்டுக்குள் வைக்காத சாமான்யனை பிறழச் செய்ய முடியும் என்பது நினைவில் கொள்ளத் தக்க பாடம்.
(இதன் அடுத்த பகுதியில், கதையை அறவே விடுத்து, வெறும் விவாதங்களைப் பற்றி மட்டும் எழுத நினைக்கிறேன்)
(வளரும்)
March 23rd
_________
நாதன் அஷோக்கிடம் மனம் திறந்து பேச எத்தனித்து, சில கேள்விகள் எழுப்புகிறார். "ஏண்டா நீ மத்தவா மாதிரி இருக்க மாட்டேன்கிற" என்கிற ரீதியில் வருத்தம் தோய்ந்த கேள்விகள். அதற்கு அசோக் அளிக்கும் தெளிந்த பதில்கள்.
எதை நீங்க சந்தோஷம் என்று சொல்கிறீர்கள்? இந்த material / உலக விஷயங்களைத் தாண்டி யோசிக்க மாட்டாது நீங்கள் எல்லோரும் அதிலையே ஊறிப்போயிருக்கிறீர்கள். இந்த உடல் நித்தியம் அல்ல. matter என்பது condensed spirit (for the want of right word, I stick to english). ஆன்மா என்பது பால் போல் தூய நிலை என்றால், matter என்பது condensed milk போன்றது ( good explanation).ஆனந்தம் என்பது மகிழ்ச்சி நிலை அல்ல. ஆனந்தம் என்பது ஷாந்தம் என்ற நிலை. க்ருத யுகத்தில், பிருகு, தம் தந்தை வருணனிடம், உண்மையான ஆனந்தம் என்பதை எப்படி அறிவது எனக் கேட்க, வருணன், பிருகுவை தபஸ் செய்யச் சொல்கிறார். இந்த இந்திர்யங்களும், சரீரமும்தான் எல்லாவற்றையும் உணருகிறது, இதுவே ஆனந்தம், நிரந்தரமானது எனக் கண்டுகொண்டு வருணனிடம் தாம் கண்டதை உரைக்கிறார். இன்னும் கொஞ்சம் தவம் செய்" என்று மறுபடியும் அனுப்பி வைக்கிறார். இவ்விடத்தில் நாம் அறியவேண்டியது ஒன்றுள்ளது. உலகம் என்பது மாயை எனச் சொல்வது relative அபிப்ராயம், ஆனால் உலகமும் அதன் மகிழ்ச்சியும் முற்றிலும் தவறு என்பது அல்ல. இந்த விதமான உலகமயமான ஆனந்தம் தவறு என்பதல்ல. அதனாலேயெ பிருகு "சரீரமும் இந்திரியமும் இன்பம்" என்று சொல்லும் போது "அது தவறு, இன்னும் தவம் செய்" என்று சொல்லவில்லை வருணன். "இன்னும் தவம் செய்" என்று மட்டுமே சொல்கிறார். மேலும் தவம் செய்த பிருகு, உண்மை ஆனந்தம், ப்ராணனில் இருப்பதாக உணார்கிறார், பின் படிப்படியாக, அவர் நிறைவான ஆனந்த (ஷாந்த) அனுபவத்தை உணர்வதாக தைத்ரிய உபநிஷத் எடுத்துரைக்கிறது. (Initially ashok mentions thaithriya upanishad, later when he finishes off in next episode, he says isha upanishad :? As per my knowledge this story is depected in thaithriya upanishad, I aint sure why they mention isha upanishad later in the conversation)
அப்படிபட்ட நல்ல நிலையை விடுத்து உலக விஷயங்களை என் மனம் நாடவில்லை என்கிறான் அஷோக். நீங்கள் கூறியபடியே எனக்கு உலகை அனுபவிக்கும் வயது என்றே வைத்துக் கொண்டாலும், தர்ம நியாயப்படி, உங்கள் வயதுப்படி நீங்கள் எல்லாவற்றையும் துறக்கவேண்டும். நீங்கள் ஏன் செய்யவில்லை எனக் கேட்கிறான். பந்தம் பாசம் என்பதெல்லாம் ஒரேடியாக விட்டுவிடக்கூடியதல்ல. படிப்படியாகத் தான் விட்டுவிடமுடியும் என நாதன் பதிலளிக்கிறார்.
இராமக்ருஷ்ணருக்கு பொன்முடிப்பை பரிசாக கொண்டு சென்ற பக்தரிடம், அதை கங்கையில் போட்டு விட உத்தரவிடுகிறார் இராமக்ருஷ்ணர். ஒவ்வொன்றாக எண்ணி எண்ணி குளத்தில் போட்டுக்கொண்டிருக்கிறார் பக்தர். சேர்க்கும் போது கண்ணும் கருத்துமாய் எண்ணிச் சேர்க்கிறானென்றால், மனிதன் துறக்கும் போதும் எண்ணித் துறக்கிறானே என்கிறார் இராமக்ருஷ்ணர். சங்கல்பம் செய்யும் ஒருவன் எண்ணிச் செய்கிறான். சமர்பணம் செய்யும் மனிதனோ, பலனையோ பணத்தையோ எண்ணுவதில்லை.
அஷோக்கின் ஜாதகத்தை பரிசீலிக்கும் ஜோசியர், இந்த ஜாதகக் காரனுக்கு கல்யாணம் குடும்பம் போன்ற ப்ராப்தி இல்லை. இது மஹான்களின் ஜாதகம். ஜாதகருக்கு வாக்கு பலிதம், ஏற்படும். தாமரை இலைத் தண்ணீரையொத்து பாச பிணைப்பின்றி இருப்பவன். ஆன்மீகத் தேடல் சிறுவயதிலேயே தொடங்கிவிடும். அர்ஜுனனுக்கு எப்படி பூர்வ புண்யங்கள் சேர்ந்து ஒரு பிறவியில் விஸ்வரூப தரிசனத்தையே பெற முடிததைப் போல் இவனுக்கும் பூர்வ புண்ய ஸ்தானம் மிக பலமாக இருப்பதால், இயற்கையிலேயே ஞானம் நிரம்பப் பெற்றிருக்கிறான். இவன் வாழ்வில் பல ஆச்சரியங்களும், அமானுஷ்யங்களும் நடைபேறும். இந்த சுடர் வெகு சீக்கிரம் பிரகாசிக்கும், அப்போது உலகிற்கு இந்த மஹானின் ஒளி புலப்படும் என்கிறார். ஆன்மீகப் பாதையை நாடுபவனுக்கு குரு இருத்தல் அவசியமானது என்பதல்ல, சிலர் "ஸ்வயம் ஆச்சார்யா"ர்களாக இருப்பர்.
அதன் பிறகு "குரு" என்ற சொல் எத்துணை புனிதமானது என்று விளக்குகிறார் சோ. 'வாத்தியார்', 'ஆச்சார்யர்', 'உபாத்யாயர்' என பல சொற்கள் இவற்றை குறிப்பிடுபவன என்று நாம் நினைத்தாலும், அவற்றின் அர்த்தங்கள் வெவ்வேறு.
வாத்தியார் எனும் சொல், அத்யாபகர், உபாத்தியாயர் போன்ற சில சொற்கள் மருவி வந்ததன் விளைவு. அத்யாபகர், உபாத்யாயர் என்றால் வேதங்களை கற்பிப்பவர். தற்காலத்தில், கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் என எதைக் கற்பித்தாலும், அவரை வாத்தியார் அல்லது உபாத்தியாயர் என்றே அழைக்கிறோம்.
ஆச்சார்யர் என்பவரோ, தாம் கற்பிப்பதை நடைமுறையில் கடைபிடிப்பவர். குருதஷிணையாக மாணவர்கள் எது கொடுத்தாலும், அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, குருகுலத்தில் வழி நடத்துபவர்.
சிறந்த குரு என்பவரோ, மௌனத்தினாலேயே பாடங்களைக் கற்பிப்பவர். முதல் குரு தக்ஷிணாமூர்த்தி என்பவரை நாம் கடவுளாய் வரிக்கிறோம். ஆலமரத்தடியில் சீடர்கள் அமர்ந்திருக்க, குரு என்பவர், மௌனமாய் அமர்ந்திருக்கிறார். அந்த மௌனத்தின் மொழியிலேயே சீடர்களின் சந்தேகங்கள் அனைத்தும் தீர்கின்றன. அப்பேற்பட்டவர் குரு.
(வளரும்)
Today's episode was good!
Looking forward to Cho's explanation for Palm Leaves Astrology :yes:
Even though I've experienced this and know about this astrology, Cho's explanation would shed more lights on this :yes:
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
சமர்ப்பணம்
March 24rd
__________
நாதனின் சஹோதரி செல்லம்மா, வசுமதியிடம், அவர்களின் குலதெய்வத்தை காண உடையாளூர் வந்து போகுமாறு அழைப்பு விடுக்கிறாள். குலதெய்வத்துக்கு செய்ய வேண்டிய ப்ரீதி செய்தாலே, வினை அத்தனையும் அகன்று, அவர்கள் வாழ்வில் பெரும் மாற்றமும் நிம்மதியும் ஏற்படும் என அபிப்ராயப்படுகிறாள். பொதுவாகவே நம் மனைகளிலும் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் நிலவி வருகிறது. இறை என்பது ஒன்று, i.e. பலவாய் காட்சி தரும் ஒருவன் என்பதே உண்மை என்றிருக்கும் போது, குலதேய்வத்தை தனியாய் ப்ரீதி செய்வது முரண்பாடாக தோன்றுகிறது என்று சிலர் நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்து மதத்திற்கே உரிய ஒரு விஷயம், இறைவனை பலவகையாய் உருவகப்படுத்தியிருப்பது. இதன் உள்ளர்த்தமோ, தாத்பர்யமோ, பலவாய் அவனே தோன்றியிருக்கிறான். ஒரு ஷக்தியே பலவாய் தோன்றும் இயல்புடையது என்பதை புரிந்து கொள்ளவே. நம் எண்ணத்திற்கும் சிந்தனைக்கும் ஏற்ப இறை எந்த வடிவத்திலும் நம் முன் வரலாம். (நீங்கள் அறியாததொரு மனித வடிவில் வந்து உங்களுடன் உரையாடி, குழப்பம் தீர்த்துவிட்டும் போகலாம்). எல்லாவற்றிற்கும் காரணம் நம்பிக்கை. தொடங்கிய கேள்விக்கு வருவோம்.இறை ஒன்றாய் இருக்க, எந்த தெய்வத்திற்கு பிரார்த்தித்தால் என்ன? குலதெய்வத்திற்கு மட்டும் தனி அங்கீகாரம் வேண்டுமா? எனும் சந்தேகம் எழும்புகிறது.
காலகாலமாய் மூதாதையர்கள், குறிப்பிட்ட குலத்தை, குடும்பத்தை சேர்ந்தவர்கள், தனிப்பட்ட தெய்வத்திடம் தம் பாரத்தை, நம்பிக்கையை, பக்தியை செலுத்திவந்திருக்கின்றனர். அதனாலேயே அக்குடும்பத்துக்கு, ஏதுவான sanctity or purity அந்த இடத்தில் அந்த தெய்வத்தின் உருவகத்தில் உருவாகி இருக்குக்கூடும் என்பதை justifiable விளக்கமாக கருதலாம். மேலும் வேண்டுதல், ஸ்லோகங்கள், குலதெய்வம் போன்றவை நம்பிக்கை, ஒழுங்கு முதலியவற்றை வளர்க்க உதவுகின்றன.
பர்வதம் சகிதம் நாதம் குடும்பம் உடையாளூருக்கு செல்கிறது. அங்கு நிலவும் அமைதி அத்தனை பேர் மனதையும் கொள்ளை கொள்கிறது. கும்பகோணம் சென்று கோவில் தரிசனம் செய்து, அஷோக்கிற்கு நாடி ஜோதிடம் பார்க்குமாறு செல்லம்மா கூற, மறுத்துக்கூறும் அஷோக்கை வலுக்கட்டாயமாக நாடி ஜோதிடம் பார்க்க அழைத்து செல்கின்றனர்.
கும்பகோண க்ஷேத்திரத்தின் தனிப் பெருமை சொல்லி மாளாது. கோவில்கள் பல அமையப்பெற்றிருக்கும் திருத்தலம். மேலும், எப்பேற்பட்ட பாவங்கள் செய்தாலும், காசிக்குச் சென்றால் அவன் பாவம் தொலையும் என்பது நம்பிக்கை. காசியிலே செய்யும் பாவங்களைக் கூட, கும்பகோணத்தில் தொலைக்கலாம் என்பது பெரியவர்கள் கூற்று.
நாடி ஜோதிடத்தைப் பற்றி சிலருக்குத் தெரிந்திருக்கலாம். பலகோடி வருடங்களுக்கு முன்பே ஓலைச்சுவடியில் இன்னாரின் பிறப்பு, எதிர்காலம், கணித்து வைத்திருக்கின்றனர் ரிஷிகள். அவரவரகள் முன் ஜன்மமும் தெரிந்து கொள்ள முடிகிறது. தேர்ந்த நாடி ஜோதிடரை நாடிச்சென்று படிக்கும் ஜோதிடம் ஆகையால் 'நாடி ஜோதிடம்'. எல்லாருக்கும் ஓலைகள் கிடைத்துவிடுவதில்லை. யாருக்கு பார்க்கவேண்டிய ப்ராப்தி இருக்கிறதோ அவர்களுக்கு கிடைக்கும். அஷோக், தன் ஓலைச்சுவடி கிடைக்காது, கிடைத்தாலும், முன் ஜன்மத்தை பற்றி தெர்ந்து கொள்ள இயலாது என்று கூறுகிறான்.
மேலும், எத்தனையோ பிறவிகள் ஜன்மங்கள் எடுத்துவிட்டதன் அறிகுறி நம் வாழ்வின் தடயங்களில் நிறைந்துள்ளது. மிருகமாய் பிறந்திருந்ததால் தான் இரை தேடுகிறோம். நரியின் தந்திரமும், யானையின் பலமும் ஒவ்வொரு மனிதனிடமும் இப்படிப்பட்ட அடையாளங்கள் இருக்கின்றன. ஆதி மனிதனாகப் பிறந்திருந்ததால் தான் இன்னும் இருட்டைக் கண்டு பயம் கொள்கிறோம், இதில் சென்ற பிறவிகளைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என கூறுவது something to really ponder upon.
(வளரும்).
பி.கு: க்ருபாவின் வீட்டில் சேர்ந்து இருப்பது தன் மகளுக்கு முதலில் சரிபட்டு வந்தாலும், பின் சலிப்பு தட்டலாம் என க்ருபாவின் மாமியார் ருக்மிணி சாம்புவைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து தன் எண்ணத்தை முன் வைக்கிறாள்.
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
இவ்வளவு கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்தாலே சில வேளை துன்பம்தான் மிஞ்சலாம்.
அத்துடன் போன பிறவி ஞபகமும் வந்தால் ..
வேண்டவே வேண்டாம்