-
வாழும் படியொன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும் படியன்று, விள்ளும் படியன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
vaazhumpadi onRu kaNdu koNdEn; manaththE oruvar
veezhumpadi anRu; viLLumpadi anRu; vElai nilam
Ezhum paru varai ettum, ettaamal iravu pakal
choozhum chudarkku naduvE kidanthu chudarhinRathE
-
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்திமைப் போதிருப்பார், பின்னும் எய்துவரோ-
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
chudarum kalaimathi thunRum chadaimudik kunRil onRip
padarum parimaLap pachchaik kodiyaip padhiththu nenchil
idarum thavirththu imaippOthu iruppaar, pinnum eythuvarO-
kudarum kozhuvum kuruthiyum thOyum kurampaiyilE.
-
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங் கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளக்கை அமைத்து,
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து, அஞ்சல் என்பாய்-
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.
kurambai aduththu kudipukka aavi, veNG kooRRukku itta
varambai aduththu maRukkum appOthu, vaLaikkai amaiththu,
arambai aduththa arivaiyar choozha vandhu, 'anchal' enpaay--
narambai aduththa ichai vadivaay nNinRa naayakiyE!
-
நாயகி, நான்முகி, நாராயணி, கை நளினபஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதிநச்சு
வாயகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆயகியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.
naayaki, naanmuki, naaraayaNi, kai naLina pancha
chaayaki, chaambavi, chankari, chaamaLai, chaathi nachchu
vaayaki maalini, vaaraaki, choolini, maadhanki enRu
aaya kiyaathiyudaiyaaL charaNam-araN namakkE.
-
அரணம் பொருள் என்று, அருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழியமுனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.
araNam poruL enRu, aruL onRu ilaatha achurar thankaL
muraN anRu azhiya munintha pemmaanum, mukunthanumE,
'charaNam charaNam' ena nNinRa nNaayaki than adiyaar,
maraNam piRavi iraNdum eythaar, intha vaiyakaththE.
-
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,-பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
vaiyaam, thurakam, mathakari, maa makudam, chivikai
peyyum kanakam, peruvilai aaram,--piRai mudiththa
Iyan thirumanaiyaaL adith thaamaraikku anbu munbu
cheyyum thavamudaiyaarkku uLavaakiya chinnankaLE.
-
சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.
chinnaNY chiRiya marunkinil chaaththiya cheyya pattum
pennam periya mulaiyum, muththaaramum, pichchi moyththa
kannankariya kuzhalum, kaN moonRum, karuththil vaiththuth
thannanthani iruppaarkku, ithu pOlum thavam illaiyE.
-
இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல். நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
illaamai cholli, oruvar thampaal chenRu, izhivupattu
nillaamai nenchil ninaikuvirEl, niththam needu thavam
kallaamai kaRRa kayavar thampaal oru kaalaththilum
chellaamai vaiththa thiripurai paadhankaL cErmiNnkaLE.
-
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.
min aayiram oru mey vadivu aaki viLankukinRathu
annaaL, akam makizh aananthavalli, arumaRaikku
munnaay, nadu enkum aay, mudivu aaya mudhalvithannai
unnaathu ozhiyinum, unninum, vENduvathu onRu illaiyE.
-
ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்-என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா, இப் பொருள் அறிவார்-
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.
onRaay arumbi, palavaay virinthu, iv ulaku enkumaay
ninRaaL, anaiththaiyum neenki niRpaal--enRan, nenchinuLLE
ponRaathu ninRu purikinRavaa! ip poruL aRivaar--
anRu aalilaiyil thuyinRa pemmaanum, en aiyanumE.
-
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன் தன் மெய்யருளே?
aiyan aLanthapadi iru naazhi koNdu, aNdam ellaam
uyya aRam cheyum unnaiyum pORRi, oruvar thampaal
cheyya pachunthamizhp paamaalaiyum koNdu chenRu, poyyum
meyyum iyampavaiththaay: ithuvO, uNnthan meyyaruLE?
-
அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.
aruNaampuyaththum, en chiththaampuyaththum amarnNthirukkum
tharuNaampuyamulaith thaiyal nallaaL, thakai chEr nNayanak
karuNaampuyamum, vadhanaampuyamum, karaampuyamum,
charaNaampuyamum, allaal kaNdilEn, oru thanchamE.
-
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.
அபிராமி தாயே, உன்னை தவிர வேறு புகலிடம் இல்லை என அறிந்தும், உன்னுடைய தவ நெறிகளைப் பயிலாமலும், நெஞ்சத்தில் நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக நீ என்னை தண்டிக்க கூடாது. எனக்கு அருள் பாலிக்க வேண்டும். உலகத்தில் உள்ள பெண்கள், தங்கள் குழந்தைகளை, தண்டிக்க மாட்டார்கள் அல்லவா, அதுபோல், நீயும் எனக்கு அருள வேண்டும்.
thancham piRithu illai eethu allathu, enRu un thavanNeRikkE
nencham payila ninaikinRilEn; oRRai neeLchilaiyum
anchu ambum ikku alaraaki ninRaay: aRiyaar eninum
panchu anchu mel adiyaar, adiyaar peRRa paalaraiyE
-
பாலினும் சொல் இனியாய், பனி மா மலர்ப் பாதம் வைக்க
மாலினும், தேவர் வணங்க, நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும், சால நன்றோ, அடியேன் முடை நாய்த் தலையே.
அபிராமி தாயே, கொன்றை வார் சடை மேலும், உன் அருட் கண்கள் பட்டு உயர்ந்து இருக்கும், நால் வகை வேதங்கள் மீதும், உன் திருவடி தாமரைகளைப் பதித்தாய். இன்று நாயாகிய என்னுடைய தலையும் உன் திருவடியில் சேர்த்துக் கொன்டாய். நான் என்ன அவ்வளவு சிறந்தவனா?
paalinum chol iniyaay! pani maa malarp paadham vaikka--
maalinum, thEvar vaNanka ninROn konRai vaar chadaiyin
mElinum, keezhnNinRu vEdhankaL paadum meyp peedam oru
naalinum, chaala nanRO--adiyEn mudai naayth thalaiyE?
-
I ripped the Abhiraami Andhaadhi cassettes by Guruji Sri A.S.Raghavan for personal use. Here's the first part.. if anyone wishes to continue listening please let me know and I will upload the others too.
http://www.ziddu.com/download/482382...dhi1a.mp3.html
Love and Light.
-
please upload the rest also, anbu. :)
-
நாயெனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்,-
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.
தாயே! திருமாலின் தங்கையே, நாயாகவுள்ள என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, நீயே தன்னை மறந்து ஆட் கொண்டுவிட்டாய். மேலும், உன்னையே உள்ளபடி அறிந்து கொள்ளும் அறிவையும் எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்.
naayEnaiyum inku oru poruLaaka nayanthu vandhu,
neeyE ninaivinRi aaNdu koNdaay; nNinnai uLLavaNNam
pEyEn aRiyum aRivu thanthaaY; enna pERu peRREn!--
thaayE, malaimakaLE, chenkaN maal thiruth thankaichchiyE.
-
தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.
அபிராமி தாயே! உன் கணவர் பொன்மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிறந்த காவலனாவார். பொன் போன்ற சிவந்த கைகளில், கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்பொதும் உறைந்திருப்பாய்.
thankach chilai koNdu, thaanavar muppuram chaayththu, madha
veNG kaN uri pOrththa chenchEvakan meyyadaiyak
konkaik kurumbaik kuRiyitta naayaki, kOkanakach
cheNG kaik karumbum, malarum, eppOthum en chinthaiyathE.
-
தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும்-சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.
ஆறு சமயங்களுக்கும் தலைவியானவள் அபிராமி அன்னையாகும். பேதையர்களுக்கு நற்கதியடைவதற்கு உண்மையான வழிகளைக் காட்டுபவள். அப்படியிருந்தும், சில வீணர்கள், பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகின்றர்கள்.இவர்களது செயல், பெரிய மலையை தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.
thERumpadi chila Ethuvum kaatti, mun chelkathikkuk
kooRum poruL, kunRil kottum thaRi kuRikkum--chamayam
aaRum thalaivi ivaLaay iruppathu aRinthirunthum,
vERum chamayam uNdu enRu koNdaadiya veeNarukkE.
-
sila koyilla kalvettu mathiri ezuth iruppanga. :) :clap:
serene to the soul.
-
-
-
வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.
அபிராமி தாயே!, உன்னையன்றி வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையை அன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும், உன் திருமேனிப் ப்ரகாசததை தவிர வேறொன்றும் காண மாட்டேன்.
veeNE pali kavar theyvankaLpaal chenRu, mikka anbu
pooNEn; unakku anbu pooNdukoNdEn; ninpukazhchchi anRip
pENEn, oru pozhuthum; thirumEni prakaacham anRik
kaaNEn, iru nilamum thichai naankum kakanamumE.
-
ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?-வல்லி, நீ செய்த வல்லபமே.
ஆனந்தவல்லி அபிராமி தாயெ! உனது கணவராகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அவருக்கு, ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனான முருகனை சக்தியாய் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!.
kakanamum vaanum puvanamum kaaNa, viR kaaman ankam
thakanam mun cheytha thavamperumaaRku, thadakkaiyum chem
mukanum, munNnNaaNnku irumoonRu enath thOnRiya moothaRivin
makanum uNdaayathu anRO?--valli! nee cheytha vallabamE!
-
வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு-
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய், வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.
அபிராமி தாயே! பசுமையான் பொன்மலையை வில்லாக உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே, நான் அறிவே இன்னதென்று அறியாதவன், மிகவும் சிறியவன். நின் மலர்பாதத் துணையன்றி வேறு பற்றுமில்லாதவன். எனவே, பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. அவை யாவும் உன்னை பாடிய தோத்திரங்களேயாகும்.
vallabam onRu aRiyEn; chiRiyEn; nNin malaradich chey
pallavam allathu paRRu onRu ilEn; pachum poR poruppu--
villavar thammudan veeRRiruppaay! vinaiyEn thoduththa
chol avamaayinum, nNin thiru naamankaL thOththiramE.
-
தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்-வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம் குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே.
அபிராமி தாயே! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின் போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை நினையாத பேர்கள், கொடைகுணம், கல்வி குணம், இவையெல்லாம் குன்றி வருந்தி திரிவர்.
thOththiram cheythu, thozhuthu, min pOlum nNin thORRam oru
maaththiraip pOthum manaththil vaiyaathavar--vaNmai, kulam,
kOththiram, kalvi, kuNam, kunRi, naaLum kudilkaL thoRum
paaththiram koNdu palikku uzhalaanNiRpar--paar enkumE.
-
பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
அபிராமி தாயே! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஒசை ஆகியவற்றின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சிவகாம சுந்தரியே!. உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தை பெறுவர். அவர்கள் அடையாத செல்வமே இல்லை.
paarum, punalum, kanalum, veNG kaalum, padar vichumbum,
oorum muruku chuvai oLi ooRu oli onRupadach
chErum thalaivi, chivakaama sundhari, cheeRadikkE
chaarum thavam, udaiyaar padaiyaatha thanam illaiyE.
-
தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள் அபிராமி, கடைக்கண்களே.
அபிராமி தாயே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும், அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தை தரும், நல்ல கல்வி தரும், சோர்வடையாத மனத்தை தரும், தெய்வீக அழகைத் தரும், நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும், நல்லன எல்லாம் தரும்.
thanam tharum, kalvi tharum, orunNaaLum thaLarvu aRiyaa
manam tharum, theyva vadivum tharum, nenchil vancham illaa
inam tharum, nallana ellaam tharum, anbar enbavarkkE--
kanam tharum pooNG kuzhalaaL, abiraami, kadaikkaNkaLE,
-
கண்களிக்கும்படி கண்டு கொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
அபிராமி தாயே! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அன்னையே, மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னை கண்குளிர கண்டு கொண்டேன்.
kaNkaLikkumpadi kaNdukoNdEn; kadampaadaviyil
paN kaLikkum kural veeNaiyum, kaiyum payOtharamum,
maN kaLikkum pachchai vaNNamum aaki, mathankarkulap
peNkaLil thOnRiya emperumaattithan pErazhakE.
-
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க-
இழவுற்று நின்ற நெஞ்சே-இரங்கேல், உனக்கு என் குறையே?
அபிராமி தேவி எவருக்கும் இணையில்லத அழுகுடையவள். வேதப் பொருளில் திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி. இனிமையான கொம்பாக தேவி இருக்க, நெஞ்சே, ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்றுகோலாக அன்னை இருக்க உனக்கு என்ன குறை?
azhakukku oruvarum ovvaatha valli, aru maRaikaL
pazhakich chivantha padhaampuyaththaaL, pani maa madhiyin
kuzhavith thirumudik kOmaLa yaamaLaik kombu irukka--
izhavuRRu nNinRa nNenchE!-irankEl, unakku en kuRaiyE?
-
எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்! இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்-
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.
அபிராமி தாயே! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக் குறையையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால், அது உன்னுடைய குறையேயாகும். எம் தந்தை சிவ பெருமான் தன் குறை தீரச் செய்த பாதத் தாமரைகளை உடையவளே.
enkuRai theeranNinRu ERRukinREn; ini yaan piRakkil,
nNin kuRaiyE anRi yaar kuRai kaaN?-iru neeL visumbin
min kuRai kaatti melikinRa nEr idai melliyalaay!-
than kuRai theera, emkOn chadai mEl vaiththa thaamaraiyE.
-
தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.
அபிராமி தாயே! உன்னுடைய மாலை கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள்(மலர் அம்புகள்), வில்லோ கரும்பு, உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள், நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ, நள்ளிரவாகும். திரிபுரை எனும் பெயரும் உண்டு. நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.
thaamam kadambu, padai pancha paaNam, thanuk karumbu,
yaamam vayiravar Eththum pozhuthu; emakku enRu vaiththa
chEmam thiruvadi, chenkaikaL naaNnku, oLi chemmai, ammai
naamam thiripudai, onRodu iraNdu nNayanankaLE.
-
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக் கூடிய தேவி அபிராமியாகும். அவளுடைய பாதங்களிலெ சரண் அடைந்த அடியார்கள், இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிடைத்தாலும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்.
nayanankaL moonRudai naathanum, vEthamum, naaraNanum,
ayanum paravum abiraama valli adi iNaiyaip
payan enRu koNdavar, paavaiyar aadavum paadavum, pon
chayanam porunthu thamaniyak kaavinil thankuvarE.
-
தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை, மால் வரையும் ,
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் அமைத்த அபிராமி தாயே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர், சகலத்தையும் தருகிற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர்.
thankuvar, kaRpaka thaaruvin nNeezhalil; thaayar inRi
mankuvar, maNNil vazhuvaay piRaviyai;-maal varaiyum,
ponku uvar aazhiyum, eerEzh puvanamum, pooththa unthik
konku ivar poonkuzhalaaL thirumEni kuRiththavarE
-
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
அபிராமி தாயே! பஞ்ச பாணங்களை உடையவளே, உன்னுடைய திருக்கோலத்தையே மனதில் நினத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளால், மருட்டுகின்ற யமன்வரும் வழியை கண்டு கொண்டேன், அதனோடு, அவன் வரும் வழியையும் அடைத்து விட்டேன்.
kuRiththEn manaththil nNin kOlam ellaam; nNin kuRippu aRinthu
maRiththEn maRali varukinRa nErvazhi; vaNdu kiNdi
veRiththEn avizh konRai vENip piraan oru kooRRai, meyyil
paRiththE, kudipukuthum pancha paaNa payiraviyE.
-
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வ்ராகி- என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.
அபிராமி தாயே! உன்னை பயிரவர் வணக்கக் கூடிய பயிரவி, பஞ்சமி, பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை, ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி, வஞ்சகரின் உயிரை மாய்க்கும் சண்டி, மகா காளி, ஒளி வீசும் கலை பொருந்திய வயிரவி, சூரிய, சந்திர மண்டலத்தில் உள்ளோர்க்கு மண்டலி, சூலத்தையுடைய சூலி, உலகளந்த வராகி, என்றெல்லாம் பல நாமக்கள் குற்றமற்ற வேதங்களில் கூறப்படுகின்றன. அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி வணங்கி வழிபடுகின்றனர்.
payiravi, panchami, paasaankucai, pancha paaNi, vanchar
uyir avi uNNum uyar chaNdi, kaaLi, oLirum kalaa
vayiravi, maNdali, maalini, chooli, varaaki--enRE
cheyir avi nNaanmaRai chEr thirunNaamankaL cheppuvarE.
-
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
துப்பும், நிலவும் எழுதி வைத்தேன், என் துணை விழிக்கே.
அபிராமி தாயே! உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன். சந்தனக் கலவையும், சிறந்த அணிகலன்களும் புரளவும், சிறந்த முத்துக் கொப்பும், வைரத்தோடு, செழுமையான கருணைமிகு கடைக்கண்களும், குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகமும், இவைகளைக் கொண்ட திருவடிவை என் மனதில் இருத்தினேன்.
cheppum kanaka kalachamum pOlum thirumulaimEl
appum kaLapa abiraama valli, aNi tharaLak
koppum, vayirak kuzhaiyum, vizhiyin kozhunkadaiyum,
thuppum, nilavum ezhuthivaiththEn, en thuNai vizhikkE.
-
விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?
அபிராமி தாயின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேத முறைப்படி வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால், பழியையும், பாவத்தையும் விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாழும் பேதையரோடு எனக்கு இனி என்ன தொடர்பு?
vizhikkE aruL uNdu, abiraama vallikku; vEdham chonna
vazhikkE vazhipada nenchu uNdu emakku; avvazhi kidakka,
pazhikkE chuzhanRu, vem paavankaLE cheythu, paazh narakak
kuzhikkE azhunthum kayavar thammOdu, enna koottu iniyE?
-
கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.
அபிராமி தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே! என்னை உன் அடியார்கள் கூட்டத்தில் சேர்த்தவளே, நான் செய்த கொடிய வினைகளையெல்லாம் ஒழித்தவளே, ஒன்றும் அறியாத எனக்கு, உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே, உன்னை கண்ட என் கண்ணும், மனமும் களிநடம் புரிகின்றது. இவ்வாறெல்லாம் நாடகமாடச் செய்தவளே, உன் கருணையை என்னவென்பேன்.
koottiyavaa ennaith than adiyaaril, kodiya vinai
ottiyavaa, eNnkaN Odiyavaa, thannai uLLavaNNam
kaattiyavaa, kaNda kaNNum manamum kaLikkinRavaa,
aattiyavaa nadam--aadakath thaamarai aaraNankE.
-
அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே.
அபிராமி தாயே! என்னிடத்தில் நீ வைத்த பெருங்கருணையினால் நான் கள்ள நெஞ்சம் உடையவரிடம் நெருங்க மாட்டேன், மற்ற சக்திகளையும் வணங்க மாட்டேன். ஒருவரையும் போற்ற மாட்டேன். நான் அறிவில்லாதவனாயினும், என்னுடையதெல்லம் உன்னுடையது என்று உன்னை வணங்கும் ஞானிகளோடு மட்டும் பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்.
aNankE!-aNankukaL nNin parivaarankaL aakaiyinaal,
vaNankEn oruvarai; vaazhththukilEn nNenchil; vanchakarOdu
iNankEn; enathu unathu enRiruppaar chilar yaavarodum
piNankEn; aRivu onRu ilEn; eNnkaN nNee vaiththapEr aLiyE!