http://i1087.photobucket.com/albums/...rt%20-2/a7.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/a28.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/a33.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/a26.jpg
Printable View
''என்ன பாவம் செய்தார் எங்கள் சிம்மக் குரலோன்?'' - junior vikatan
மணிமண்டப ஏக்கத்தில் சிவாஜி ரசிகர்கள்
'பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டம் எழுப்பப்படவில்லை. அவரைப் பற்றி எந்த ஆட்சியாளர்களுக்கும் அக்கறை இல்லை’ என்று கொதிக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அக்டோபர் 1-ம் தேதி சிவாஜியின் பிறந்தநாள். அதை ஒட்டி இந்தக் கோரிக்கை மீண்டும் பரபரப்பாக எழுந்துள்ளது!
விவகாரத்துக்குள் போகும் முன் சின்ன ஃபிளாஷ்பேக்..!
2001-ல் சிவாஜி மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் 'சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கித் தாருங்கள்...’ என்று கோரிக்கை வைத்தது நடிகர் சங்கம். சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் ஆந்திரா மகிளா சபா அருகில் சுமார் 12 கிரவுண்ட் இடத்தை நடிகர் சங்கத்துக்கு 2002-ல் ஒதுக்கி அரசாணை போட்டார் ஜெயலலிதா. 'அரசு இலவசமாக ஒதுக்கிய இடத்தில் நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்று அறிவித்தது நடிகர் சங்கம். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பேச்சு மூச்சே இல்லை. இந்த சமயத்தில் 'மணிமண்டபம் எழுப்புவதில் ஏன் தாமதம்?’ என்று அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த நடிகர் நெப்போலியன் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். 'மணிமண்டபம் கட்டும் இடத்துக்குக் குறுக்கே செல்லும் சாலைக்கு மாற்று சாலை அமைப்பதற்கு 4.20 லட்சம் செலவாகிறது. அதில் 2 லட்சத்தை மட்டுமே நடிகர் சங்கம் செலுத்தியிருக்கிறது. அதனால்தான் தாமதம்’ என்று சொன்னது அரசு. உடனே மீதித் தொகையை நடிகர் சங்கம் செலுத்தியது. அதோடு 22.4.2005-ல் மணிமண்டபம் கட்டுவதற்கு நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் பூமி பூஜை போட்டார்கள். அதன் பிறகும் கிணற்றில் விழுந்த கல்லாகவே இருக்கிறது இந்தப் பிரச்னை.
மணிமண்டபத்துக்காகத் தொடர்ந்து போராடி வரும் 'சிவாஜி சமூகநலப் பேரவை’ தலைவர் சந்திரசேகரனிடம் பேசினோம். ''ஜெயலலிதா இடம் கொடுத்தும் அதை நடிகர் சங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. பூமிபூஜை போட்டதோடு சரி. அந்த ஏரியாப் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை நடிகர் சங்கம். இதற்காக நடிகர் சங்கத்துக்கு கடிதங்கள் எழுதியும் எந்த பதிலும் இல்லை. அதன் பிறகு தலைவரான சரத்குமாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதற்குள் ஆட்சி மாற்றம் நடந்து 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 'சிவாஜிக்கு சிலையும் மணிமண்டபமும் அமைக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. வாக்குறுதி கொடுத்தது. நெருங்கிய நண்பரான சிவாஜிக்கு கடற்கரையில் சிலை எழுப்பித் திறந்து வைத்தார் கலைஞர். சிவாஜிக்கு சிலை வைத்த கலைஞரே நிச்சயம் மணிமண்டபத்தையும் கட்டித் தருவார் என்று காத்திருந்தோம். 2008-ல் துணை முதல்வராக இருந்த ஸ்டாலினை சந்தித்து மணிமண்டபம் தொடர்பாகக் கோரிக்கை வைத்தோம். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ஜெயலலிதாவால்தான் மணிமண்டபம் அமையும் என்று உறுதியாக நம்புகிறோம். ஜீவா, சிங்காரவேலர் போன்றவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டபையில் கடந்த வாரம்தான் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதனால் சிவாஜிக்கும் நிச்சயம் மணிமண்டபம் எழுப்புவார். இதுதொடர்பாக அவரை சந்தித்து மனு கொடுப்போம்...'' என்றார் சந்திரசேகரன்.
நடிகர் சங்கத்துக்கு அரசு கொடுத்த நிலம் என்ன ஆனது என்பது பற்றி விசாரித்தோம். இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சந்திரசேகரன் அரசிடம் கேட்டபோது 'அந்த நிலம் நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. பொதுப்பணித்துறையிடமே உள்ளது’ என்று சொல்லப்பட்டது. நடிகர் சங்கம் பூமி பூஜை போட்டபோது ''மணிமண்டபம் கட்ட வரைபடம் தயாரிக்க நிதி திரட்டக் குழுவை நியமிக்கப் போகிறோம். இதற்காக இணையதளம் ஆரம்பிக்கப் போகிறோம்...'' என்று அப்போது விஜயகாந்த் சொன்னார். ஆனால், அதன் பிறகு அதை நடிகர் சங்கம் கண்டுகொள்ளவே இல்லை. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளிநாட்டில் இருப்பதால் அவரிடம் பேச முடியவில்லை. நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவியிடம் கேட்டபோது, ''சாலை அமைப்பதற்காக மட்டும் நடிகர் சங்கம் 2 லட்சம் அரசுக்கு கொடுத்தது. அந்தப் பணத்தையும் திரும்ப வாங்க முயற்சி செய்து வருகிறோம். சிவாஜிக்கு கடந்த ஆட்சியில் சிலை வைத்துவிட்டதால் மணிமண்டபம் தேவையில்லை என்று அரசு நினைத்திருக்கலாம். மணிமண்டம் கட்டுவதாக நடிகர் சங்கம் சொல்லவே இல்லை...'' என்றார். ''பூமி பூஜை போட்டது ஏன்?'' என்றோம். ''நிலம் தருவதாக அரசு சொன்னதால் பூஜை போட்டோம். இப்போது நிலம் அரசிடமே இருப்பதால் கட்டவில்லை!'' என்றார்.
அரசு என்ன சொல்கிறது? செய்தித் துறை அமைச்சர் செந்தமிழனிடம் பேசினோம். ''உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இப்போது எதுவும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்ததும் இதுபற்றி அம்மாவின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்போம்!'' என்றார்.
சிவாஜி ரசிகர்களின் கோரிக்கையை இந்த முறையாவது ஜெயலலிதா நிறைவேற்றுவாரா?
- எம். பரக்கத் அலி
சிறப்பு நிழற்படம்
ANR, NADIGAR THILAGAM, RAMANAIDU AND SRIKANTH DURING VASANTHA MALIGAI SHOOTING
http://i1087.photobucket.com/albums/...n31355/a23.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Please click the link to view the news published in Chennai livenews.com
http://www.chennailivenews.com/Enter...i-Ganesan.aspx
Thanks Mr.RC for your Junior Vikatan News post :
Please Click the links below to view the complete coverage done by JUNIOR VIKATAN:
http://4.bp.blogspot.com/-l_x0tJn8TC...10-2011Pg1.jpg
http://1.bp.blogspot.com/-QLeKdpHqw1...10-2011Pg2.jpg
E-Mail received by me from Moorthy who produced documentary on NT - Sivaji - Oru Parampariya Kurippu narrated by Prof. Sivathambi.
Hi Mr Balakrishnan,
Thank you for the mail.
I am happy that people like you really liked my work. I think Prof Sivathambi and - of course - Nadigar Thilagam "forced" me to do this work.
I want to analyze NT's contribution to 'Tamils living outside TamilNaadu' (Eelam, Singapore, Malaysia and the diaspora). One day I will come up with that documentary too... :)
Thank you Sir.
Moorthy
திரு சந்திரசேகரன் சார்,
நடிகர்திலகம் பிறந்த நாள் விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.
திரு பாலா சார்,
குறும்பட இணைப்பு மிகவும் அருமை ,பாதுகாக்க படவேண்டிய பொக்கிஷம் ,நன்றி.
திரு வாசு சார்,
அக் 16 அன்று நாங்கள் காணப்போகும் மாளிகைக்கு ஒரு முன்னோட்டம் போல் இருந்தது தங்களின் படத்தொகுப்பு ,நன்றி
திரு பம்மல் சார்,
வசந்தமாளிகை வரலாற்று ஆவணங்கள் அற்புதம் ,தொடரட்டும் தங்கள் திருப்பணி.
DEAR KUMARESAN SIR,
Were you accompanying ilaya thilagam for the opening of kalyan jewellers?
please give the latest update on VM
திரு பாலகிருஷ்னன் சார்,
குறும்பட இணைப்பு மிகவும் அருமை நன்றி.
திரு.ஹரிஷ், தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!
டியர் ஹரிஷ் சார்,
தங்கள் உயரிய பாராட்டுக்கு நன்றிகள்.
நாங்களும் உங்களுடன் சேர்ந்து நாமனைவரும் மாளிகையைக் காணப் போகிறோம். மனம் ஆகாயத்தில் பறக்கிறது.
இவண்,
வாசுதேவன்.
Dear Harish
yes i was with our ilyathilagam VM WILL BE RELEASED ON 14TH OCT
REGARDS
KUMARESHANPRABHU
அன்பு நண்பர்களுக்கு,
திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள் நடத்த இருக்கும் நடிகர் திலகம் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டின் மாதிரி கீழே தரப் பட்டுள்ளது. தேவைப் படுவோர் அங்கே தரப்பட்டிருக்கும் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டால் நம் நண்பர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் வழங்கப் படும் என மகேந்திரா அவர்கள் கூறியுள்ளார். வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்க.
http://i872.photobucket.com/albums/a...og21011tkt.jpg
அன்புடன்
அன்பு மிக்க மாடரேட்டர் அவர்களுக்கு,
கடந்த சில நாட்களாக நம்முடைய ஹப்பில் தரவுச்சொல்லுடன் நுழையும் போது, invalid url என்கிற பிழைச் செய்தி வருகிறது. அது மட்டுமன்றி, நம்முடைய பதிவுகளில் நிழற் படங்களையோ காணொளி இணைப்புகளையோ சேர்க்க உதவும் ஐகான்கள் காணப் படவில்லை.
அன்புடன்
டியர் ஜேயார் சார், நெஞ்சார்ந்த நன்றி !
டியர் சந்திரசேகரன் சார், மனமார்ந்த நன்றி !
டியர் பாலா சார்,
தாங்கள் அளித்து வரும் சுட்டிகள் ஒவ்வொன்றும் பிரமாதம். பல அரிய-புதிய தகவல்கள் கிடைக்கின்றன. பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
"வசந்த மாளிகை" திரைக்காவியத்தையே மீண்டும் ஒருமுறை பார்த்த மனநிறைவை தாங்கள் பதிவிட்ட நிழற்படங்களின்மூலம் அளித்துவிட்டீர்கள் !
நன்றிகள் பலப்பல !
[சிறப்பு நிழற்படம் மிகமிக அரியதொரு பொக்கிஷம் !]
அன்புடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
வசந்த மாளிகை countdown -கள் சூப்பர் கலக்கல். பொம்மை இதழின் மாளிகைக் கதை முன்னோட்டம் அருமை. இதயவேந்தன் சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள் [பாகம் 3] பற்றிய விவரங்கள் பயனுள்ளவை. புத்தக அட்டைகளின் முன் முகப்பு மற்றும் பின் அட்டையையும் பதிவிட்டமைக்கு நன்றி. அன்பே ஆருயிரே! பொம்மை முதல் வெளியீட்டு விளம்பரம் தூள். வசந்த மாளிகை countdown -கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.
நன்றியுடன்,
வாசுதேவன்.
அன்பு ராகவேந்திரன் சார்,
இரண்டு மனம் வேண்டும் பாடலின் வரிகள் முழுவதையும் தந்து அசத்தி விட்டீர்கள். உங்களால் நிறைய அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக என்னுடைய சிறப்பு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வசந்த மாளிகை திரைக்காவியத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியின் பொம்மை இதழில் வெளிவந்த நிழற் படங்கள் கண் கொள்ளாக் காட்சி. ஹேமா,ராஜேஷ்,நாகேஸ்வரராவ்,ராமாநாயுடு மற்றும் நம் தலைவர் என்று ரகளையான நிழற்படங்கள். மிக மிக அரிதான பொக்கிஷத்தை வழங்கிய தங்களுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை.
திரை வானத்தின் அன்பே ஆருயிரே ஸ்டில்ஸ் அருமை.(சார், எனக்கு எதற்கு நன்றியெல்லாம்?. நான்தான் தங்களுக்குக் கோடி கோடியாய் நன்றி சொல்ல வேண்டும். இப்படிப் பட்ட நம் ஹப்பையும் மற்றும் தங்கங்களான நம் ஹப் அங்கத்தினர்களையும் அடியேனுக்கு அறிமுகம் செய்து வைத்ததற்காக.)
நன்றியுடன்,
என்றும் தங்களின் வாசுதேவன்.
டியர் சந்திரசேகரன் சார்,
தலைவருக்கான மணிமண்டபம் எழுப்ப இடைவிடாது உழைக்கும் தங்களின் விடாமுயற்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. ஜு.வி மூலமாக உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வழி செய்துள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றி அடையவும். நம் எல்லோரது ஆசை நிறைவேறவும் நம் இதய தெய்வம் ஆசிர்வதிப்பது உறுதி. நல்லது விரைவில் நடக்கும் என நம்புவோம். வெற்றி ஏணிப்படிகளில் ஏற ஆரம்பித்து விட்டீர்கள். வெற்றி நிச்சயம். கடலூரில் கூட நகரசபை கூட்டத்தில் தலைவருக்காக கடலூரில் சிலை வைப்பது சம்பந்தமாக விவாதிக்கப் பட்டு வருகிறது என்ற சந்தோஷத் தகவலைத் தங்களுடனும்,நம் ஹப் அங்கத்தினர்களுடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
dear sankara sir,
thank u very much for your kind post.
regrds,
vasudevan.
dear kumaesan sir,
I sent our ayya's some v.m stills via e-mail. pl. watch it.
vasudevan.
Dear raghavendran,parthasarathy. pammalar vasudevan and hub friends,
Vasantha maligai opening note suerb.VM has not only turned the tables for NADIGAR THILAGAM but for me also personally. that way most unforgettable kaviyam.
nadigar thilagam dcumentry by mr moorthy a remarkable one and has to be pwell preserved by all of us. kudos.
This year I am missing ygm's programes hence if possible if you could get any links may be forwaded to me or inducted in the site so that all fans who will be missing the function can enjoy.
SIvaji peravai chief sekar's continuing efforts for SIVAJI MANI MANDAPAM installation highly appreciated. we hope our dream will come true soon.
Although iam physially out of the country mindwise fully with the evergreen thoughts of our NADIGAR THILAGAM always.
my best wishes to all HUB friends on this memorable day of OCTOBER ONE,
cheers,
VALGA NADIGAR THILAGAM AND VALRGA AVAR rsigargal valmudan
ramjajayam LOS ANGELES usa
அனைவருக்கும் "நவராத்திரி" நல்வாழ்த்துக்கள் !
http://i1094.photobucket.com/albums/...EDC4682a-1.jpg
வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை"
Countdown : 2
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : மே 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4683a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4684a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4685a-1.jpg
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஜூன் 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4686a-1.jpg
பக்திப்பெருக்கில்,
பம்மலார்.
Dear Pammalar Sir, Vasudevan Sir,
It is amazing to see all the collections on 'Vasantha Maligai" and other material placed by both of you and I bow my head for both of you for the sheer hard work with so much love you have made.
It is really a fabulous Job by both of you!!!!!!
Regards,
ANM
வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை"
Countdown : 1
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஆகஸ்ட் 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4688a-1.jpg
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : செப்டம்பர் 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4689a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4691a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4692a-1.jpg
பக்திப்பெருக்கில்,
பம்மலார்.
வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை"
Countdown : Zero
ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில் : பிலிமாலயா : 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4694a-1.jpg
பக்திப்பெருக்கில்,
பம்மலார்.
dear Raghavendra, pammalar , vasudevan sir
Superb note on Vasanthamalaigai
thank you Vasu sir i have recived your mail thank you
we are started our work for oct 14th from yesterday
regards
kumareshan prabhu
வாசுதேவன் சார், தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி. கடலூரிலும் நடிகர்திலகம் சிலை விரைவில் அமையவேண்டும் என வாழ்த்துகிறோம்.
Dear Ramajayam Sir,
Thank you for your appreciation.
டியர் பம்மலார், "வசந்தமாளிகை count down" சூப்பர். நன்றி.
Dear anm sir,
thank u very much and so kind of u.
regards,
vasudevan.
Thank u kumaresan sir.All the best.
regards,
vasudevan.
Dear chandrasekaran sir,
thank u very much.
vasudevan.
hi shekar
gooooood jod
வசந்த மாளிகை படத்தின் ஷூட்டிங் (அரிய காட்சி)
அன்பு நண்பர்களே,
வசந்த மளிகை திரைக்காவியத்தை பலமுறை பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இப்போது நீங்கள் காணப் போவது மிக மிக அரியதொரு காட்சி. 'பங்காரு பாபு' தெலுங்கு திரைப் படத்தில் வசந்த மாளிகை படத்தின் ஷூட்டிங் நடப்பது போன்ற ஒரு அருமையான காட்சி. நடிகர் திலகம் கிளைமாக்ஸ் காட்சியில் வாணிஸ்ரீ அவர்களுடன் நடிக்கும் காட்சி படமாகும் விதமும், ஷாட் முடிந்ததும் நடிகர் திலகம் வாணிஸ்ரீயிடம் 'bye, bye' சொல்லிவிட்டு விடைபெறுவதும் கண்கொள்ளாக் காட்சி. 'வசந்த மாளிகை' மேளாவில் இந்த அரிய வீடியோக் காட்சியை இங்கு பதிவிடுவதற்கு பெருமையும்,உவகையும் கொள்கிறேன். இனி காட்சியைக் கண்டு மகிழலாம்.
http://www.youtube.com/watch?v=UQWyc...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.