-
உனக்காக நான் ராஜா
ராஜா பேருக்கு எற்ற போல் ராஜவாழ்க்கை வாழுகிறார், வயசு ஏறினாலும் போதிய அனுபவம் வாழ்க்கையில் ஏற்படமால் இருபதனால் மனதளவில் அவர் ஒரு குழந்தை , தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு கொண்டு , வாழ்க்கையில் ஒரு கருப்பு கண்ணாடியை போட்டு கொண்டு அணுகுவதால் மனதளவில் ஒரு குழந்தை , குழந்தைகளுக்கு உண்டான ஈகோ
சரி பிளாஷ் back காட்சிகள் இருந்து படத்தை அலசுவோம் ராஜாவின் கேரக்டர் யை பற்றி
முதல் காட்சியில் சிவாஜி சார் அந்த வீட்டில் செலுத்தும் உரிமையும் , அந்த வீட்டில் உள்ள ராமுவின் தாயார் அன்புடன் அழைபதையும் , தங்கை காலேஜ் பீஸ் உரிமையுடன் கேட்பதும் , எப்படி ஒரு நட்பா என்று வியக்க வைக்கிறது
.
அவர் தன் மாமூல் என்று 15 லட்டு கேட்பதும், கடிகாரம் கொடுத்த உடன் ஒரு பஞ்ச் டயலாக் பேசிய உடன் , ஜெமினி யார பார்த்து காபி அடிச்சே என்று கேட்பதும் , சிவாஜி மிகவும் ஸ்டைல் அக நான் எந்த பய்யளையும் காபி அடிக்க மாட்டேன் என்று சொல்லும் காட்சி superb
தான் தொழில் பழகும் வக்கீல் இடத்தில நோட்ஸ் எடுக்காமல் , விளையாட்டாக் வரைவதும் , ஆடுவதும் , படுவதும் என்று எதை பற்றியும் கவலை இல்லாமல் வாழுகிறார்
அவர் உலகத்தின் அங்கத்தினர்கள் அவர் ,அவர் தோழர் ராமு , ராமுவின் தங்கை , ராமுவின் தாயார் மற்றும் ராஜா வின் தந்தை அவ்வளவு தான்
http://www.youtube.com/watch?v=dK0Ti...ature=youtu.be
-
எல்லா மனிதர்கள்யின் வாழ்கையும் ஒரு நாள் மாறும் , இது தான் இயற்கை யின் நீதி , குழந்தை உள்ளம் கொண்ட ராஜாவின் வாழ்வும் மாறுகிறது , அவர் வாழ்கையை மாற்றுவது , ராஜாவின் தந்தையிடம் இருந்து வரும் ஒரு தொலைபேசி
ராதாவை சந்திக்கும் வாய்ப்பும் கிடைகிறது , ராதா ராஜாவை கரம் பிடிக்க காதிருக்கும் பெண்
ராஜா ராதாவை சந்திக்கும் முதல் சந்திப்பில் ராதாவை தன் தந்தை அறிமுகம் படுத்தும் பொது முதலில் ஒரு சின்ன ஜெர்க் குடுத்து , தன் uneasiness யை வெளி படுத்துவார் , அவர் உடது எதோ சொல்ல என்னும் , தந்தை இருப்பதை அறிந்து கொண்டு பரஸ்பரம் அறிமுகம் ஆகும் நபர்களை போலே பேசி கொள்வார்கள் , ராதாவும் ஒரே வரியில் பதில் சொல்லுவர்
பேச்சு காபிடலிசம், சோசியலிசம் பற்றி செல்லும் பொது சிவாஜி இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி பேசுவார், ஒரு விழியத்தை பற்றியும் தெளிவான ஒரு கண்ணோட்டம் இல்லாதவர் ராஜா , மற்றும் கொஞ்சம் பேசினால் அவரை influence செய்து விடலாம் என்பதுக்கு இந்த காட்சி ஒரு சான்று
தன் தந்தையின் வாதத்தையும் ஏற்று கொளுகிறார் , ராதாவின் வாதத்தையும் ஏற்று கொளுகிறார் , சுருக்கமா சொன்னால் அவர் மனது , மற்றும் மூளை ஒரு clean slate அதில் நஞ்சு விதிக்கிறார் ராஜாவின் தந்தை
http://www.youtube.com/watch?v=xoxp_...ature=youtu.be
-
முதல் அனுபவம் வெளி உலகத்துடன் ராஜாவிற்கு நிகழ்வது அவர் ஆபீசில் அதுவும் முதலலியாக , ஒரு கையெழுத்து போட சொன்னதற்கு அவர் தந்தையை consult செய்வதும் , ஒரு தொழிலாளிக்கு கை போன உடன் அதற்கு பொறுப்பு இல்லாமல் பதில் அளிப்பதும் அவரின் பிறவி குணம்
தான் மனிப்பு கேட்டல் தான் வேலை தடை இன்றி நடக்கும் என்பதை அறிந்து , வேறு வழி இல்லாத காரணத்தினால் ராஜா மனிப்பு கேட்கும் காட்சியில் அவர் சுற்றி முற்றி பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டு I am sorry என்று சொல்லும் இடம் அந்த மனவலியை பார்வையாளர்களும் உணரும் படி நடித்து இருக்கார் நம்மவர் ,
தன் தான் என்ற அகங்காரம் சூடு பட்ட உடன் , சுடு பட்ட பூனையாக துடிப்பதும் , தன் நண்பரிடம் புலம்புவதும் என்று ராஜா வின் கேரக்டர் travel ஆகிறது , ஒரு குடும்பத்தில் ஒரே பையனாக பிரபவர்கள் பொதுவாக ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள் இல்லை மோசமானர்களாக இருப்பார்கள் (ஒரு ஆய்வுவின் படி)
அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட நபர் மீது அதித dependent அக இருப்பார்கள் அதே குணாதிசயம் கொண்டவர் தான் ராஜா
தன்னை அவமானம் செய்ததாக வருத்த பட ராமுவிடம் செல்லுகிறார் , ராமு கொஞ்சம் தமாஷ் செய்ததும் வெடிக்கிறார்
அந்த dependence கொண்ட மனிதர் மீது ரொம்ப பாசம் வைத்து இருப்பார்கள் , ராஜா ராமு தன் கம்பெனி க்கு வருவதாக சம்மதிப்பதை அடுத்து GM போஸ்ட் குடுக்கிறார் , ராமு அதை மறுத்து தொழிலாளியாக வருகிறார் ராஜாவின் கம்பெனியில்
ராஜா ராமு வின் ஒபந்தம் தினமும் சந்திக்க வேண்டும் என்பது , அதை ராமு மீறும் பொது செல்லமாக தன் அறைக்கு கூபிட்டு கடிப்பதும் ராமு ஒரு பெண்ணை விரும்புவது தெரிந்து ,அதை ராமுவின் வாயாலேயே வரவைக்கும் தந்திரம் , வார்த்தை ஜாலம் , இடையில் வரும் நந்தி மேனேஜர் முன்னால் ராமு வை கண்டிப்பதை போல் நடிப்பதும் என்று நடிகர் திலகம் மற்றும் ஜெமினி இருவரும் கலக்கி இருப்பார்கள் அதுவும் அந்த காட்சி முடியும் பொது , டெய்லி progress report குடுக்கணும் என்று கண் அடிக்கும் பொது சுபெர்ப் legends என்று சொல்ல வேண்டும்
இந்த காலத்தில் சொல்லுவதை போலே chemistry இருவரும் இடையில் perfect
http://www.youtube.com/watch?v=ur5wY...ature=youtu.be
-
ராமுவிற்கு காதல் வையபட்டுவிட்டார் , ராஜா ?
அந்த காட்சியை எழுதும் பொது சிலிர்ப்பு , மயக்கம் , நடிகர் திலகத்தை நினைத்து பெருமை அப்படி என்ன இருக்கிறது
இதோ
ராமுவும் ராஜாவும் பேசி கொண்டு இருக்கும் பொது , ராதா வரும் நேரம் அறிந்து ராமு ஜகாவாங்குகிறார்
Radha: May I come in?
Raja: where there is a wine , there must be a women
ராஜா மது அறிந்து கொண்டு இருப்பதை பார்த்து ராதா கேட்கிறார் ; ஏன் ரெண்டு கிளாஸ் ,
ராஜா : நான் என் நண்பருடன் குடிக்கிறேன் , அவர் பெங்களூர் ல் இருக்கிறார் , அவரின் பங்கையும் சேர்த்து நான் குடிக்கிறேன்
ராதா : கடவுளுக்கு படையல் வைத்து நாம் உண்ணுவதை போலே?
ராஜா : என் நண்பர் அழைக்காமலே வருவார்
என்னக்கு இது வரைக்கும் நண்பர் தான் கிடைத்தார்
ராதா : என்னக்கு என்ன இடம் உங்கள் மனதில் ?
சொத்தை பங்கு போடுவதில் நான் சோசியலிஸ்ட்
மனதை பங்கு போடுவதில் நான் காபிடளிஸ்ட்
அந்த காட்சி
இதை விட ஒரு பெண் நயமாக தான் மனதை திறந்து பேச முடியாது , ஒரு மனிதர் குடித்தும் கண்ணியமாக பேச முடியும் என்பதை பறைசாற்றும் காட்சி
http://www.youtube.com/watch?v=5yb4v...ature=youtu.be
-
தன் தந்தை செய்த சூழ்ச்சியால் தன் நண்பன் தாக்க பட்ட செய்தி கேட்ட உடன் துடி துடித்து சென்று அங்கே இருந்து ராமுவை அழைத்து போக வருகிறார் ராஜா , ராமு வர மறுக்கும் காட்சி
இருந்த ஒரே ஒரு நண்பன் தன் பேச்சை கேடக் மறுத்ததும் , சிவாஜி யின் கோபம் இருந்த ஒரே ஒரு நண்பரும் சென்று விட்டாரே என்று , அந்த வளர்ந்த குழந்தை முதல் முதலில் தன் அப்பாவின் இரட்டை வேடத்தை அறிகிறது , சாப்பிட மறுகிறது, நாட்கள் செல்ல செல்ல , ராஜா சாப்பிடாமல் , மது அருந்தி விட்டு உண்மையை பேசுகிறார் , எல்லா மனிதர்களுக்கும் எதோ ஒரு vice இருக்கனும், relaxation செய்வதற்கு
ராஜா மது அருந்தி விட்டு தன் தந்தையிடம் வாகு வாதம் செய்கிறார்
தன் தந்தை யை எதுர்கிறார் , எதிர்ப்பு செல்லுபடி ஆகாததால் கெஞ்சுகிறார்
அந்த காட்சியில் வசனம் எல்லாம் கத்தியின் கூர்மை
தன் நண்பர் மீண்டும் தன்னை சந்திக்க வந்த உடன் ராஜா மீதும் வில் இருந்து புறப்பட்ட அம்பு போலே உற்சாகத்துடன் வரவேற்கிறார்
தன் நண்பரின் அம்மாவின் லட்டுகளை பார்த்த உடன் அவர் தோணி மாறும் பாருங்கள்
அம்மாவுக்கு ஒரே பையன் நான் இருக்கேன் , நான் அம்மாவை பார்த்துகிறேன் அவர்களை நான் இங்கே வைத்து கொளுகிறேன் என்று அன்பு செலுத்துவதில் கூட ஒரு அதிகாரம் , ஒரு right யை எடுத்து கொள்ளுகிறார்
ஒரே பிள்ளையாக வளருபவர் ஒரு துணை இல்லாமல் இருக்க முடியாது ,அது ராஜாவிற்கு வைக்காத பொது ராஜா வின் சினம் ராமுவின் மேல் திரும்புகிறது
கிளைமாக்ஸ் காட்சியில் தன் நண்பரின் சாவுக்கு தான் பொறுப்பு எத்து , தன் தகப்பனார்யிடம் பேசும் வார்த்தைகள் , சாட்டை வார்த்தைகள்
அதை விவரிக்க வார்த்தை கிடைக்காததால் காட்சி இங்கே
http://www.youtube.com/watch?v=SursF...ature=youtu.be
-
அழுது கொண்டே தன் தந்தை உடன் வாக்குவாதம் செய்து , தன் தந்தையின் குற்றதை தான் செய்வதாக ஏற்று கொண்டு தான் அக்னி பரீட்சை ஏற்று கொண்டு , தூய்மையான தங்கமாக வெளி வருகிறார்
சிறையில் இருந்து வரும் ராஜாவின் முகத்தில் கருணை , செயலில் நிதானம் , குரலில் ஒரு தெய்விக தன்மை அந்த காட்சியில் நாம் வழக்கம் போல் இருக்கும் சிவாஜியை காண முடியவில்லை , மாறாக காலம் கற்று தந்த பாடத்தினால் , அனுபவும் உள்ள ஒரு மனிதரை பார்க்கின்றோம்
இப்படி படம் முழுவதும் வியாபித்து இருக்கும் ராஜாவாக சிவாஜி சார் கலக்கி இருப்பார்
அவரின் கேரக்டர் பல படிகளை கடந்து பரிணாம வளர்ச்சியை அடைந்து புனிதர் என்ற அந்தஸ்தை அடைகிறார்
http://www.youtube.com/watch?v=XLoZ3...ature=youtu.be
-
ஜெமினி
ராமு / ஷங்கர் , ராமுவாக ராஜவிருக்கு உற்ற தோழனாக இருந்து , முதலில் ஆடல் ,பாடல் என்று சந்தோசமாக வாழுகிறார் , தன் நண்பர் வேலையை விட்ட உடன் தானும் வேலையை விடுகிறார்
தன் நண்பருக்கு அவமானம் வந்த உடன் , அதை சரி செய்ய தானே உள்ளே சென்று தன் நண்பர்க்கு உதவிகிறார் , முதலில் சரியாக போகும் திட்டம் , ராமு தொழிலாளிகளுக்கு ஆதரவாக பேசும் பொது தன் நட்பை காவு வாங்குகிறது , ராமு வின் மனமாற்றத்துக்கு காரணம் மற்றும் தர்மலிங்கத்தின் பெரிய மனது
பொதுவாக வீட்டுக்கு ஒரே பிள்ளைக இருபருக்கு கொஞ்சம் ஈகோ இருக்கும் அந்த மாதிரி நபர்களுக்கு நண்பராக இருப்பது கொஞ்சம் சிரமம் , அதாவது விட்டு கொடுத்து போவது அவசியம் , அதுவும் எதிர் பார்ட்டி தான் விட்டு தர வேண்டும் அவர்கள் விட்டு தர மாட்டார்கள்,
ராஜா அம்மா வை நான் பார்த்து கொளுகிறேன் என்று சொல்லும் பொது ராமு பெரிய மனது கொண்டு அம்மாவுக்கு நீ இருக்கே அது போதும் என்று சொல்லுவதும் , பின் வாக்குவாதம் முற்றி ராஜா வெளியே போக சொன்ன பொது , ராதாவை பார்த்து ராஜாவை கவனித்து கொள்ளுங்கள் , அவரால் தனியாக இருக்க முடியாது என்று சொல்லும் இடம் நெஞ்சை நெகிழ செய்தது
ராஜாவின் தந்தை செய்யும் சூழ்ச்சியில் அடி வாங்கும் பொது , தர்மலிங்கம் ராமுவிற்கு ஆதரவாக பேசும் இடத்தில ராமு கூனி குறகி நிற்பதும் , தன் தவறை சொல்லி தர்மலிங்கம் அவர்களிடம் மணிப்பு கேட்பதும் , நீ முதலாளியின் ஆள் என்பது எனக்கு தெரியும் என்று அவர் சொன்ன உடன் , இனி என்ன செய்ய என்று இருப்பது , நட்புக்கும் , கடமைக்கும் , தொழிலளிகளுகும் torn apart அக இருந்து சங்கட படுவதும் என்று நல்ல scope உள்ள பாத்திரத்தில் நன்றாக செய்து இருக்கார் மனிதர்
-
SV சுப்பையா
இந்த அற்புத நடிகரை சினிமா சரியாக அங்கீகரிக்கவில்லை என்பது என்று என் கருத்து , விதியும் அவரை சீக்கிரம் கொண்டு சென்று விட்டது
ஒரு matured union leader sans cinematic liberties அவர் பாத்திரம் , முதலில் அமைதிக்க தன் விருப்பதை சொல்லுவது , அது பலிக்காமல் போனால் அதிரடி முடிவை எடுப்பது , புதுசாக வரும் ஷங்கரின் அணுகுமுறையால் தன் position தளர்ந்து போகும் போதும் அதை பெருசாக எடுத்து கொள்ளாமல் , ராமு மனம் மரியாதையை அறிந்து , அவருக்கு ,உதவும் காட்சி , அவர் நல்ல உள்ளத்துக்கு சான்று
நாகேஷ்
குடிக்கும் ஏழை கதாபாத்திரத்தில் கௌரவ தோற்றம்
சதா குடித்து குடித்து லென்னின் கருத்தகளை எளிமையாக பேசுகிறார் , cancer என்ற கொடிய நோயால் வாடுகிறார் ,வறுமயின் காரணத்தினால் குடும்பத்தினர் அனைவரும் மாண்டு போக , அவர் குடியில் முழுகி இருக்கார் , குடிசை பெண் சாராயம் விற்பதை , விலைமாதுவாக மாறுவதை , அதை அவர் கவிதை மூலம் விலகும் காட்சி புரட்சி தீ அவர் சாகும் காட்சி கண்ணீரை வர வைக்கும் . வழக்கத்துக்கு மாறாக கேரக்டர் ரோல்
மேஜர்
பெரிய பணக்காரனாக வாழுகிறார் , அவரை பொறுத்த வரைக்கும் அவர் செய்வது சரி , தன் கொள்கையில் அவர் உறுதியாக இருப்பது மட்டும் இல்லாமல் தன் மகனையும் அதை போலவே செதுக்கிறார் , தன் மகன் உலகத்தை அறிந்து கொள்ள ஆபீஸ் க்கு அனுப்புகிறார் ,அவர் உலகத்தை அறிந்து matured ஆகும் பொது , ராமுவினால் மாறும் பொது , அதை போருக்க முடியமால் , நட்பின் சிறகை வெட்டுகிறார் , முதலில் அவர் ஆபீஸ்க்கு மீண்டும் சென்று முதல் காயை வெட்டுகிறார் , பிறகு , ஷங்கர் தான் ராமு என்று சொல்லி அடுத்த காயை வெட்டுகிறார் , கடைசியாக ராமுவின் கதையை முடிக்கும் அவர் , அதில் தன் மகன் மாட்டி கொள்ளும் பொது , தன் மகனிடம் கெஞ்சும் காட்சி , இவருக்கு என்னும் வேண்டும் என்று என்ன வைக்கிறது , ஆனால் அவர் அது செய்தது தன் மகன் சாபிடாமல் இருப்பது ,மற்றும் புலம்புவதும் தான்
லக்ஷ்மி
ராஜா வை காதலிக்கும் பெண் , வாழ்கை இனிமையாக இருக்கும் என்று என்னும் பொது , அது அப்படி அமையாமல் போனதும் , ராஜாவிற்கு ஒரு moral support குடுக்கும் நபர் , அடிப்படையில் காபிடளிஸ்ட், மனதளவில் சோசியலிசம் , முதல் காட்சியில் அதை பறைசாற்றுகிறார்
ராஜா விடம் தன் காதலை நயமாக எடுத்து உரைக்கும் காட்சி , தன் fiancee யின் குறைகளை அவருக்கு வலிக்காமல் எடுத்து சொல்லும் காட்சி , கடைசி வரை அவருக்காக காத்து இருப்பது என்று சின்ன கதாபாத்திரத்தில் சிறப்பாக செய்து இருப்பார்
பாடல்கள் :
ராமு I love யு என்ற பாடல் , மற்றும் , no , know என்ற பாடல் தாளம் போட வைக்கிறது
இறைவன் உலகத்தை படைத்தானா என்ற பாடல் புரட்சி
மொத்தத்தில் ஒரு நல்ல படத்தை அசை போட்ட மகிழ்ச்சி உடன் விடை பெறுகிறேன்
-
ஒருவர் பேசும்போது, 2003இல் கோர்ட் ஆர்டர் நெடுஞ்சாலையில் இடியூஒரு வரும்படி சிலைகள் அமைக்க கூடாது என்று ஆணை இட்டதால், சிவாஜி சிலை அதற்கு உட்பட்டது என்ற அர்த்தத்தில் பேசியது ஏற்புடையத இல்லை.
மோகன்ராம் நல்ல பதிலடி கொடுத்தார்.
-
முகநூல் இணைப்பு உள்ள நண்பர்கள் கீழேயுள்ள இணைப்பிற்கு சென்று, நடிகர்திலகம் சிலை சம்பந்தமான தங்களின் கருத்துக்களைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
https://www.facebook.com/sivaji.pera...t=feed_comment