SMOKING - A STYLE QUOTIENT ! & NADIGAR THILAGAM's DRESSING ! NONE CAN MATCH !! - Courtesy - Youtube
https://www.youtube.com/watch?v=i1GVPnyk9Ew
Printable View
SMOKING - A STYLE QUOTIENT ! & NADIGAR THILAGAM's DRESSING ! NONE CAN MATCH !! - Courtesy - Youtube
https://www.youtube.com/watch?v=i1GVPnyk9Ew
WHAT MADE HIM NADIGAR THILAGAM ? Is it acting alone ? - Watch this video - Courtesy : Youtube
https://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE
Article in The Hindu - 23-07-2014
http://www.thehindu.com/news/cities/...cle6238923.ece
Chevaliar Sivaji Ganesan Road, in the heart of T. Nagar, was christened as it housed the star at bungalow number 17, ‘Annai Illam’. The property, where his family continues to reside, was bought seven years after his debut in ‘Parasakthi’
It was in Madras city that Sivaji Ganesan became the icon that he was. In many ways, the city continues to bear signs of his presence, even as his family solemnly observed his 13 death anniversary on Tuesday.
Chevaliar Sivaji Ganesan Road, in the heart of T. Nagar, was christened as it housed the star at bungalow number 17, ‘Annai Illam’. The one-and-a-half-acre property, where his family continues to reside, was bought 55 years ago, seven years after his triumphant debut in ‘Parasakthi’ (1952). It was a prestigious address to possess, and nothing screamed his having arrived as counting the likes of M.G. Ramachandran, Jayalalithaa, and Manorama among one’s neighbours.
But where did the star find refuge before cementing his place in the annals of Tamil film history?
The 2 floor office space of National Pictures on Burkit Road, T. Nagar, was where the aspiring actor first found asylum. As a company artiste for the studio, he earned Rs. 200 per month and lived on its premises for two brief months.
According to his eldest son, Ramkumar Ganesan, it was around the 1940s his father first visited the city as part of a travelling theatre troupe from Tiruchi. Finally, in 1950, producer P.A. Perumal Madurai handed him a plane ticket to Madras for the screen test for ‘Parasakthi’, and Sivaji’s love affair with the city and its people truly blossomed.
After his bellowing debut, the newly-crowned movie star moved in to a house in Kodambakkam at No.1 United Colony. In less than a year, the star shifted into a two-storeyed house at Royapettah.
The building now functions as the headquarters for Sivaji Productions, managed by Ramkumar. He recalls, “I remember M.G.R. coming here and having dinner with us as he used to live on Walltax Road, quite a distance from the studios which were all in this part of town.”
A couple of years later, by September 1960, the star and his family made the mansion on then Boag Road their pride of place.
The mansion itself has a rather distinguished past to boast, and, uncannily, the road has successively been named after two people, both owners of the property. George T. Boag, an illustrious British ICS officer, and Venkata Reddy Naidu, the acting governor of Madras Presidency in 1936, are among the few to have inhabited the premises at different points of time.
முதல் சாதனைகளின் முடிசூடா மன்னன் என்ற பதிவை படித்த போது எனக்க்கு தோன்றியது , நம் நடிகர் திலகம் வாழும் போதும் மட்டுமல்ல , இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்ட பின்னரும் கூட முதல் சாதனைகளை தொடர்ந்து கொண்டிருந்தார் என்பது தான் .
தன்னுடைய மரணத்தில் கூட எனக்க்கு தெரிந்து இரண்டு முதல் சாதனைகளை புரிந்தார் நடிகர் திலகம்.
1. எனக்குத் தெரிந்து ஒருவரின் இறுதி ஊர்வல நிகழ்வுகளை நேரலையாக தொலைக்காட்சி ஒளிபரப்ப , ஒட்டு மொத்த தமிழகமும் தொலைக்காட்சியில் அந்த ஒரே சானலின் மீது கண்களை பொருத்திக்கொண்டது முதன்முறையாக நடிகர் திலகத்தின் மரணத்தின் போது தான் . அதற்கு முன்னர் புகழந்தவர் , இகழந்தவர் என்ற வேறுபாடின்றி , 'சிவாஜி' என்றால் தனிநபரல்ல , வெறும் கலைஞன் மட்டுமல்ல , அந்த வார்ர்த்தை தமிழ் கலை , பண்பாட்டு அடையாளச்சின்னம் என ஆழ்மனத்தில் தமிழர்கள் மனதில் பதிந்து கிடந்த உள்ளுணர்வின் வெளிப்பாடாக அந்நிகழ்வு அமைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது .
2. இன்றைக்கு தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும் போது 'குடும்ப வாரம்' 'ஆக்*ஷன் வாரம்' என்றெல்லாம் பலவகையான தொகுப்புகளாக வாரம் முழுவதும் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது .அதையும் தன் மரணத்தின் மூலம் தொடங்கி வைத்தவர் நடிகர் திலகம் ..நடிகர் திலகம் மறைவையொட்டி சோகம் தழும்பி நின்ற தமிழகத்தின் துயரத்துக்கு சிறு வடிகாலாக நடிகர் திலகத்தின் 5 திரைப்படங்களை தினம் ஒன்றாக 'நடிகர் திலகம் வாரம்' என தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்ப , தமிழர்கள் அதனை முச்சி முகர்ந்து கொண்டாடினார்கள் .அதன் மாபெரும் வெற்றி , தொடர்ந்து அது போல வாரத்தொகுப்புகளாக பல்வேறு தலைப்புகளில் தொடர்ர்ந்தது .
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டது ஒரே தொலைக்காட்சி தான் . கால ஓட்டத்தில் தடம் மாறி சென்றாலும் கூட , அன்றைக்கு நடிகர் திலகத்துக்கு இந்த இருபெரும் மரியாதையை செய்ததற்காக சன் தொலைக்காட்சி மிகுந்த பாராட்டுக்குரியது .
சந்திப்பு
மதுரை சென்ட்ரலில் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்த சந்திப்பு இன்று இரவு காட்சியோடு சிறப்பான வசூலைப் பெற்று ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. ஒரே வாரத்தில் ரூபாய் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று சென்ற மாதம் இதே போல் வெற்றிக் கொடி நாட்டிய சங்கிலி வசூலையும் தாண்டியிருக்கிறது. முன்பே குறிப்பிட்டது போல் அரங்க நிர்வாகத்தினரும், வெளியிட்டாளரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் இது போன்ற சிறப்பான வரவேற்பை பெறுவதால் இனி வரும் மாதங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் அதிகமாக வெள்ளித்திரைகளை அலங்கரிக்கும். செய்திகளை துல்லியமான புள்ளி விவரங்களோடு பகிர்ந்து கொண்ட நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி.
நெல்லை சென்ட்ரலில் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போட்ட தியாகம் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்கிறது. தகவலளித்த நண்பர் ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.
கோவையில் புதிய பறவை வெற்றி சிறகடித்து பறந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நண்பர் ரமேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.
சந்தோஷ செய்திகள் தொடரும்.
அன்புடன்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
பட்டிக்காடா பட்டணமா இப்படி வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்க அடுத்து வரப் போகும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய சர்ச்சைகளும் ஆரம்பித்தன.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
பட்டிக்காடா பட்டணமா வெளி வருவதற்கு முன்பு அடுத்து வெளிவரப் போகும் நடிகர் திலகத்தின் படங்கள் பின் வரும் தேதிகளில் ரிலீஸ் செய்யும் வண்ணம் chart செய்யப்பட்டிருந்தது. தர்மம் எங்கே அடுத்த ரிலீஸ் ஆக அறிவிக்கப்பட்டு ஜூலை 1-ந் தேதி வெளிவரும் என தகவல். அதற்கு அடுத்தது தவப்புதல்வன். இதற்கு இரண்டு தேதிகள் சொல்லப்பட்டிருந்தன. ஒன்று ஆகஸ்ட் 26 அல்லது செப்டம்பர் 9 என்று. வசந்த மாளிகை தீபாவளி நவம்பர் 4-ந் தேதி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பட்டிக்காடா பட்டணமாவின் இமாலய வெற்றி மேற்சொன்ன ரிலீஸ் தேதிகளை எல்லாம் புரட்டிப் போட்டது. சென்னையைப் பொறுத்தவரை முதலில் சாந்தியில்தான் தர்மம் எங்கே வெளியாவதாக இருந்தது. ஆனால் பட்டிக்காடா பட்டணமாவின் வெற்றியைப் பார்த்தவுடன் அதை சாந்தியிலிருந்து மாற்றுவது இயலாத காரியம் என்று தெரிந்தவுடன் வேறு தியேட்டர் தேடும் முயற்சிகள் துவங்கின. மவுண்ட் ரோடு நேரடி தியேட்டர்கள் எல்லாம் book ஆகி இருக்க மவுண்ட் ரோடின் அருகில் GP ரோட்டில் அமைந்திருக்க கூடிய ஓடியன் தேர்வு செய்யப்பட்டது. இதன் காரணமாகவும் பட்டிக்காடா பட்டணமாவிற்கு சற்று கூடுதல் இடைவெளி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் 56 நாட்கள் இடைவெளி 70 நாட்களாக மாற்றப்பட்டு தர்மம் எங்கே ஜூலை 15-ந் தேதி ரிலீஸ் என்று முடிவு செய்யப்பட்டது. மதுரை ஸ்ரீதேவியில் படம் ரிலீஸ். தவப்புதல்வன் செப் 9 என்றும் மாளிகை தீபாவளி என்றும் முடிவு செய்யப்பட்டு பாலாஜியின் நீதி 1973 ஜனவரி 26 என்று தீர்மானிக்கப்பட்டது.
ஜூன் 18 அன்று ஞான ஒளி 100 நாட்களை நிறைவு செய்து சென்னையில் தொடர்ந்து ஹாட்ரிக் 100 நாள் படங்களை கொடுத்த பெருமை மீண்டும் நடிகர் திலகத்திற்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 6,7 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்திருக்க வேண்டிய ஞான ஒளி பற்பல சூழ்ச்சி சூழல் காரணமாக நூலிழையில் 5,6 தியேட்டர்களை தவற விட்டது. பிளாசாவில் 100 நாட்களை கடந்தது.
இந்த நேரத்தில் தமிழக அரசியல் வானிலும் போராட்டங்களும் மாற்றத்திற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்தன.
(தொடரும்)
அன்புடன்
பராசக்தி திரைப்பட பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார் நேஷனல் பிக்சரஸ் திரு p a பெருமாள் . - புதுமுகம் கணேசன் தொடர்ந்து நடிக்கிறார் !
லாபம் வந்தால் இருவருக்கும் - நஷ்டம் வந்தால் எனக்கு மட்டும் ! Pa பெருமாள் சவால் ஒப்புதல் !
கணேசன் என்ற புதுமுகம் நடிப்பில் படபிடிப்பில் இருந்துவரும் திரைப்படம் பராசக்தி. எடுத்தவரையில் போட்டு பார்த்த திரு av மெய்யப்பன் அவர்கள் புதுமுகம் நடிப்பு இந்த துறைக்கு புதுமையாக இருப்பதால் மக்கள் ஏற்றுகொள்வார்களா என்றும் இவ்வளவு பெரிய risk எடுக்க வேண்டுமா என்றும் நடிகர் kr ராமசாமி அவர்களை வைத்து திரும்பவும் எடுத்துவிடலாம் என்று படபிடிப்பை நிறுத்தியது அனைவரும் அறிந்ததே.
இப்போது புதிய திருப்பமாக படத்தின் பங்குதாரர் நேஷனல் pictures pa பெருமாள் அவர்கள் புதுமுக நாயகன் கணேசன் தான் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆணித்தரமாக உரைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் லாபம் வந்தால் மட்டுமே பங்கு என்று. நஷ்டம் ஏற்படுமானால் அந்த நஷ்டம் முழுவதையும் தான் ஏற்றுகொள்வதாக கூறி படபிடிப்பு தளத்தில் உள்ளவர்கள் பேச்சை கேட்டு நல்ல ஒரு கலைஞனின் பயணத்தை தடை செய்யகூடாது என்றும் தனது முடிவை கூறிவிட்டதாக தெரிகிறது.
திரைப்படம் நஷ்டம் அடைந்தால் முழுவதையும் தான் ஏற்றுகொள்வதாக திரு பெருமாள் கூறியதை முன்னிட்டு av மெய்யப்பன் அவர்கள் படபிடிப்பு தொடர்ந்து நடக்க இசைந்துள்ளதாக திரை உலக வட்டாரங்கள் ஊர்ஜிதபடுத்தியுள்ளது !
இதனை தொடர்ந்து பராசக்தி படபிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
எது எப்படியோ பராசக்தி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் !