Go ahead :thumbsup:
Printable View
Go ahead :thumbsup:
May 11.
அஷோக்கிற்கு shock treatment கொடுக்க நாதனும், நீலகண்டனும் அவனை அழைத்துக்கொண்டு செல்கிறார்கள்.
மயக்க ஊசி போடப்பட்டு அஷோக் உள்ளே அழைத்து செல்லப்படுகிறான்.
(காட்சி மேல் உலகத்திற்கு மாற்றப்படுகிறது). இதைப் பார்த்துக்கொண்டு இருக்கும் நாரதர் கண் அசைக்க, ஆஸ்பத்திரியில் treatment ஆரம்பிக்கும் தருவாயில் மின்வெட்டு நிகழ்கிறது.
சற்றே அதிர்ச்சி ஆகும் நாதன், என்னவென்று விசாரிக்க, மாலை வரையில் current வராது என்ற பதில் வருகிறது. உடனடியாக Generator'ai ஆன் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கிறார் மருத்துவர். Diesel இல்லை என்று பதில் வருகிறது. Strike காரணதால் உடனடியாக எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது.
--
தயாரிப்பாளர்: என்ன சார் இது. நாரதர் தான் power cut'ku காரணமா? நாரதர் என்ன E.B'la வேலை செய்யறாரா? என்று நையாண்டியாய் கூற, சோ விளக்குகிறார்.
சோ: ஒரு விஷயத்துல நம்மக்கு தெரியாத ஒன்னு கலந்து இருந்தா அது தெய்வ செயல் என்று கூறிவிடலாம். இப்போ powercut ஆச்சு. ஏன் ஆசுசு? ஏன் diesel தீர்ந்து போச்சு? ஏன் diesel வாங்கி வைக்கல? இப்படி கேட்டுண்டே போகலாம். உதாரணமா, ஒரு flight accident நடக்குது. அதுல போக வேன்டிய ஒருதர் airport வரைக்கும் போயிட்டு, எதையோ மறந்துட்டு திரும்ப வந்துடறார். அந்த flight'ல போன எல்லாரும் இறன்துடராங்க, ஆனா இவர் மட்டும் தப்பிசுடறார். ஏன் இப்படி நடந்தது? எப்படி இவர் மட்டும் தப்பிச்சார்? அதிர்ஷ்டம்! திருஷ்டம் என்றால் பார்வை உடையது. அதிருஷ்டம் என்றால் பார்வைக்கு அப்பாற்பட்டது. அந்த மாதிரி விஷயம் எல்லாம் தெய்வச்செயல்'னு சொல்றோம். என்று கூறி "எந்த ஒரு விஷயத்துக்கு காரணம் கண்டறிய முடியவில்லையோ அது தெய்வச்செயல்" என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டிருப்பதை எடுத்துரைக்கிறார்.
--
நாதனின் மனதில் ஒரு உறுத்தல். இந்த தடங்கலில் ஏதொ ஒரு செய்தி இருப்பதாய் உணர்கிறார். நீலகன்டனிடம் இதனைக் கூற, நீலகன்டணோ அதை அறவே மறுக்கிறார். அதற்கு முதல் நாள் இரவு தான் சொற்பனதில் கண்ட காட்சியையும், இந்த தடங்கலையும் சம்பந்தப்படுத்தி, இந்த தடங்கல் வெறும் coincidence இருக்க வாய்ப்பில்லை என்று எடுத்துறைக்கிறார். கனவில் "ஒரு மிகப்பெரிய அறையில் ஜகஜோதியாய் சரவிளக்குகள் எறிய. ஒரு முனிவர் அந்த அறைக்குள் நுழைந்து எறியும் விளக்கில் ஜலத்தை தெளிக்கிறார். அத்துனை விளக்கும் அணைந்து விடுகின்றன" என்று தான் கண்ட கனவையும், இந்த மின்வெட்டு நிகழ்விற்கும் சம்மந்தம் இருப்பதாய் கூறுகிறர். இதை மறுக்கும் நீலகண்டனிடம், இது போன்ற இன்னொரு அனுபவத்தை கூருகிறார். பல ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் அதிகாலை "ஸ்வமிநாதா" என்று தன் தந்தையின் குரல் கேட்பதாக உணர்ந்ததையும், அதை தொடர்ந்து, அன்று காலையில் தந்தையின் இரங்கல் செய்தி வந்ததாக தெரிவிக்கிறார்.
--
This is only the first part. The remaining will be posted soon. :)
நீலகண்டன் தான் ஒரு நிலம் வாங்க இருப்பதாகவும், அதனை இந்த மாததில் பதிவு செய்து விடவேண்டும் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.
--
இப்ப எல்லாம் நிலம் வாங்கினா register பண்ணனும். Documents வச்சுக்கனும். இதெல்லாம் உங்க காலதுல இருந்ததா? யார் எந்த நிலத்தில் இருக்கிறாரோ அந்த நிலம் அவருக்கு சொந்தம் என்று தான் இருந்தது என்கிறார்.
சோ, அப்பொழுதும் இந்த நடைமுறை இருந்ததாகவும், அதனை சரியாக செய்து கொண்டு வந்ததாகவும் கூறுகிறர். மனுநீதி, அர்தசாஸ்த்திரம், இவற்றில் இது பற்றி கூறப்பட்டிருப்பதையும் எடுத்துரைக்கிறார். அர்த்த சாஸ்த்திரம் என்பது வேதம் இல்லை என்றும், அது "Administration" எனப்படும் ராஜாங்கம் எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி கூறுவதாக சொல்கிறார். அதில், நாம் இப்போது தான் வந்ததாக நினைத்துக்கொன்டிருக்கும் Metallurgy, Mining இவை எல்லாம் கூட வருவதாகவும் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். அதில் இந்த பத்திர குறிப்புகள் பற்றி வருவதை எடுத்துரைக்கிறார்.
சுக்ரநீதியில் ஒரு வழக்கு எப்படி கை ஆள வேன்டும் என்பதற்கான குறிப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். "வாதி, ப்ரதிவாதி, __ , தீர்ப்பு" இவை நாலும் சேர்ந்ததுதான் ஒரு வழக்கு என்று கூறப்பட்டிருக்கிறதாக சொல்கிறார்.
உம்: வரி கட்டாமல் ஏமாற்றும் ஒருவனை, காட்டிக்கொடுதால், அந்த Informer-க்கு, வசூலிக்கப்படும் வரியில் ஒரு பங்கு கொடுக்கும் வழக்கம் இன்று இருப்பதை அறிவோம். அன்றும் இந்த வழக்கம் இருதாதகவும், அதில் Informer-கு 6-ல் ஒரு பங்கு கொடுக்க வேன்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது என்றும் கூறுகிறார். மேலும், லஞ்சம், ஊழல் வாங்கும் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை வழங்க வேன்டும் என்று கூரப்பட்டிருக்கிறது. நீதிபதி லஞ்சம் வாங்கினால் கடுமையான தண்டனை prescribe செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்.
உளவாளிகளை எப்படி நியமிக்க வேண்டும் என்று எடுதுரைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சந்யாசி நல்ல உளவாளியாக இருப்பார். ஒருவன் ஒரு சந்யாசியைப் போல் வேடமிட்டுக்கொண்டு, மடம் அமைத்துகொன்டு, சிஷ்யர்கள் வைத்துகொன்டால், அவனிடம் நிறைய பேர் வந்து பேசுவர். confidential-ஆன விஷயங்களை சந்யாசியிடம் உளறுவர். அவன் மூலமாக நிறைய விஷயங்களை வாங்கிகொள்ளலாம்.
இன்று இருக்கும் நல்லதும் சரி, கெடுதலும் சரி, அன்றைக்கே அதனை கையாண்டு இருக்கிறார்கள். எனவே, இன்றைக்கு தான் இவை எல்லாம் வந்ததாக நினைக்க வேண்டியதில்லை என்று கூறி முடிக்கிறார்.
--
Akka, pls let me know what is the 3rd one in the four things for a Case.
Also, I request you to write about the "madisaar, priya's good news, saasthirigal meeting" scenes. :oops: I don't know how to write about madisaar, conceive matter :oops: :lol: not getting the right words :ashamed:
Quote:
Originally Posted by viraajan
:ty:
its goodQuote:
Originally Posted by viraajan
keep on writing - u will reach it
:ty: Thanks aana :bow:
vr,
:2thumbsup:
romba nalla ezhuthirukeenga... :clap:
keep an eye on spellos .
:ty: akka :bow:
Yes ka. R, r, n, N, o, O indha madiri letters'la thAn kOttai vittudaren.. :oops:
aarvama type pandrappo n instead of N, r instead of R :banghead:
I will correct it :bow:
neenga eppadi ka type pandreenga... :bow: believe me these two posts took more than 100 mins :oops2:
will keep writing and practice :thumbsup:
வாதி அவர் தரப்பு மனு, பிரதிவாதி அவர் தரப்பு மறுப்பு, அடுத்து வருவது trial அதாவது வழக்கு சம்பந்தபட்ட பேச்சுக்கள், அது போகும் போக்கு, proceedings என்று வைத்துக்கொள்ளலாம். இறுதியாக judgement / தீர்ப்புQuote:
Originally Posted by viraajan
Thanks ka :D