Quote:
Originally Posted by venkkiram
Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
விருமாண்டி வந்தபோதும், சில விமர்சனகளில் கமல் மட்டுமே வெள்ளை மற்றவர்களெல்லாம் கருப்பாக உள்ளனர் என்று ஒரு அசட்டு கமென்ட் வந்தது.
நிறம் ஒரு குறியீடு. எப்படி இடம், வட்டார மொழி போன்றவை ஒரு படைப்பிற்கு குறியீடுகளாக இருக்கிறதோ அப்படியே நிறமும். பத்து பேர் வாழ்ற சமுதாயமாக இருந்தாலும், படைப்பு என வரும்போது அதில் எட்டு பேருக்கு எது பொதுவாக, சராசரியாக இருக்கிறதோ அதையே முன்னிலைப்படுத்துதல் சாலச் சிறந்தது. உதாரணம் - பருத்தி வீரன் படத்தில் கார்த்தியின் நிறமே ஒரு இயல்புத்தன்மையை கொணர்ந்து விட்டது.
நன்றாக கவனித்தால் தேவர் மகனின் சக்திவேல் தேவர் மீது இந்த வெலுத்த தோல் குற்றச்சாட்டு வைக்கப்படவில்லை. சக்திவேலும் விருமாண்டியும் ஒரே சாதியைச் சேர்ந்த கிராமத்தாய்ங்கதான்.
ஆனா...சக்திவேல் தேவர் படித்த பக்குவமான பட்டதாரி..அவன் வெலுத்த தோலா இருக்கறது யாருக்கும் உருத்தல... ஆனா ஒரு முரட்டு ஆசாமியை வெலுத்த தோலாக காமிக்கும் போது உருத்துது!
"செவப்பா இருகரவன் பொய் சொல்ல மாட்டான்டா" வகையராவில்தான் இதை சேர்த்த முடியின்!