I agree with you. Thiruvenkadam always bring laughter to the table . :lol:Quote:
Originally Posted by Arthi
Printable View
I agree with you. Thiruvenkadam always bring laughter to the table . :lol:Quote:
Originally Posted by Arthi
ஆனந்திக்கு வாக்களித்தபடி, அபி அவருக்கு தனியாக ஒரு பத்திரிகை துவங்கி கொடுத்துவிட்டார். ஆரம்ப விழாவில் தோழர் வழக்கம்போல செந்தமிழில் அமர்க்களம் செய்தார். அபியின் அம்மா ஒரு குழப்பவாதி, தொட்டதெற்கெல்லாம் பிரச்சினை. 'முதலில் யார் குத்துவிளக்கேற்றி துவங்குவது என்பதில் ஆரம்பித்து, ஆதியைப்பற்றி ஆனந்தி தன் பத்திரிகையில் செய்தி போடக்கூடாது' என்பது வரை அந்த அம்மா எதற்கெடுத்தாலும் பிரச்சினை.
அர்ஜுனுக்கு சேர வேண்டிய பாதிசொத்து விஷயமாக ஆதியிடம் நியாயம் கேட்கப்போன இடத்தில் ஆதி, தன் அடியாளான தேவராஜ பாண்டியனையும் அவனுடைய ஆட்களையும் வைத்து, தன் சித்தப்பா திருவேங்கடத்தையும், அவரது மகனையும், தன் தம்பி அர்ஜுனையும் அடித்து விரட்டியதுடன், திருவேங்கடம் முன்பு தன்னிடம் மிரட்டி வாங்கிய காரையும் தன் வசப்படுத்தி விட்டான்.
ஆதி இவ்வளவு ஆணித்தரமாக பேசுவது, திருவேங்கடத்துக்கு (ஆதி முழு சொத்தையும் தன் அண்ணனை ஏமாற்றி எழுதி வாங்கி விட்டானோ என்று) சந்தேகத்தை ஏற்படுத்த, அது பற்றி தெரிந்துகொள்ள, உஷா வீட்டில் தங்கியிருக்கும் தன் அண்ணன் ஈஸ்வரனை (தன் மகன் மற்றும் அண்ணன் மகன் அர்ஜுன் ஆகியோருடன்) சந்திக்கிறார். ஆதிக்கு தான் எந்த சொத்தையும் எழுதிக்கொடுக்கவில்லை என்று ஈஸ்வரன் மறுக்கிறார். (எந்த இடத்துக்கு போனாலும் 'திருவேங்கடம் சித்தப்பா' தன் அரசியல் சரவெடிப்பேச்சை அவிழ்த்து விடுவது நல்ல தமாஷ்).
ஈஸ்வரன் எழுதிக்கொடுக்கவில்லையென்றால் ஆதி எப்படி இவ்வளவு துணிச்சலாக பேசுகிறான் என்பதை அறிய, ஆதியின் கைத்தடி கிரியை மடக்கி விஷயத்தை வாங்கலாம் என்று அர்ஜுன் சொல்ல, அதற்காக புறப்படுகிறார்கள்.
தன்னிடம் பெரிய காண்ட்ராக்ட்டை ஒப்படைக்க விரும்பும் புதிய கம்பெனியினர், அது பற்றிய விவரங்கள் தெரிந்துகொள்ள வருமாறு அபியை அமெரிக்காவுக்கு அழைக்க, முதலில் தயங்கிய அபி, பின்னர் தொல்ஸ், விஸ்வநாதன் ஆகியோரின் வற்புறுத்தலுக்குப்பின், அமெரிக்கா போக சம்மதிக்கிறாள். (சும்மா இரண்டு மாதங்களுக்குத்தான்). அதுவரை அலுவலக பொறுப்பை கவனித்துக்கொள்ளும்படி தொல்ஸைக்கேட்க, தொல்ஸ் மறுத்து, அபியின் குடும்பத்தில் யாராவது அந்த இடத்தில் இருக்க வேண்டுமென்றும், தான் உடனிருந்து முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் கூறி அந்த போஸ்ட்டுக்கு ஆர்த்தியை சிபாரிசு செய்கிறார். அப்போது ஆர்த்தியைப்பற்றி தொல்ஸ் பேசுவதை தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் இடையில் மட்டும் கேட்கும் கிருஷ்ணன், அபி இடத்துக்கு ஆர்த்தி வருவதை தொல்ஸ் விரும்பவில்லை என்று முடிவுக்க வருகிறார்.
அக்காவைக் காண ஆஃபீஸுக்கு வரும் ஆர்த்தியிடமும் இதை ரகசியமாக சொல்லி விடுகிறார். (இந்த கிழவனுக்கு ஏன் இந்த வேலை?). இதைக்கேட்டதும் வீட்டில் சூரப்புலி மனோ கொதிக்கிறான். தொல்ஸைக் கேட்கப்போவதாக சீறும் மனோவின் கோபத்தை, மனைவி அனு, அபியின் பக்கம் திருப்பி விடுகிறாள். மனோவை தன் இடத்தில் வைத்து விட்டுப்போக மனமில்லாமல், ஆர்த்தியை அபி நியமித்ததாக தூபம் போட, மனோவின் மனம் மாறுகிறது.
பெண்கள் மற்றும் மதுவின் மீது 'கிரி'க்கு இருக்கும் வீக்னஸைப்பயன்படுத்தி, ஒரு லாட்ஜ் அறைக்கு அழைத்துப்போய் 'ஆதி எல்லா சொத்துக்களையும் எப்படி அடைந்தான் என்பதையும், அதற்கு எப்படி ஒருத்தன் ஈஸ்வரனைப்போலவே பொய்க்கையெழுத்துப்போட்டான் என்பதையும், அதற்கு சங்கரபாண்டியன் உடைந்தையாக இருந்தார் என்பதையும் தெரிந்துகொண்டு விட்டனர் அர்ஜுனும் அவன் சித்தப்பா மகனும். போதையில் அனைத்தையும் உளறி விட்டதை தெரிந்துகொண்ட கிரி, இதை ஆதியிடம் சொல்ல வேண்டாமென்றும், சொன்னால் அவன் தன்னை பிணமாக்கி விடுவான் என்றும் கெஞ்ச, அவனை அனுப்பி விடுகின்றனர். பொய்க்கையெழுத்துப் போட்டவனின் அட்ரஸ், போன் நம்பர் ஆகியவையும் கிரியிடமிருந்து இவர்ககளுக்கு கிடைத்து விடுகிறது.(இதைச்சொல்லி பயமுறுத்தியே, பின்னர் கிரியிடம் இன்னும் நிறைய விஷயங்களைப்பெற வாய்ப்புள்ளது).
அபி அமெரிக்கா புறப்பட, அவருக்கு வேண்டியவர்கள் அனைவரும் விமான நிலையத்துக்கு வருகின்றனர். (எந்த ஊர் விமான நிலையம் அது? ரயில்வே ஸ்டேஷனை விட மோசமாக இருக்கிறது. ஒருவேளை ஏதாவது ஓட்டலின் ரிசப்ஷன் கவுண்ட்டரை விமான நிலையம் போல காட்டினார்களோ). அனுவைத்தவிர அத்தனை பேரும் ஆஜர். இரண்டுமாதம் போய் வருவதற்குள், அபி ரொம்பவே ஃபீல் பண்ணுகிறாள். அவங்க அம்மா சத்யப்ரியா அதைவிட. தன் மகள் ஏதோ சந்திரமண்டல பயணம் போவது போல ஓவராக அலட்டலும் அழுகையும்.... :cry2: :cry2: :cry2:
ஒருவழியாக அபி புறப்பட்டாள்.
ராஜேஷ் - மனோ இணைந்து துவங்கும் 'ஆர்த்தி ட்ராவல்ஸ்' துவக்க விழா.
திருவேங்கடம் சித்தப்பா ஒரே அலம்பல். காரில் வந்து இறங்கும் தன்னைக்கண்டதும், தொண்டர்கள் கோஷம் போடுவதும், அவர்கள் மத்தியில் ட்ராவல்ஸ் பற்றி தன்னுடைய வழக்கமான அரசியல் பேச்சை எடுத்து விட்டு உரையாற்றுவதும் சூப்பர்.
துவக்க விழா நடக்கும்போது, அமெரிக்காவிலிருந்து போனில் வாழ்த்துச்சொல்லும் அபியிடம் பேச மனோ மறுத்து விட, அதைத்தொடர்ந்து ஆனந்திக்கும் மனோ, அனு இவர்களுக்கிடையே நடக்கும் வாக்குவாதத்தில் ஆனந்தி வெளிநடப்பு.
அல்டாப்பு மேனகா, தன் உதவியாளரான ஜாஸ்மினிடம் ஏதோ ரெட்டி என்பவனைப்பற்றிய விவரங்களைக்கேட்டுக்கொள்கிறாள். இடையே, தன்னிடம் பணியாற்றும் ரவிக்கு டோஸ் வேறு. (பொழுதன்னைக்கும் 'லேப்டாப்'பை மடியில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தால் அவர் பெரிய தொழிலதிபரா?? :lol: )
தேவராஜ பாண்டியனைக்காணவரும் ஆதி, அங்கு பாஸ்கர் இருப்பதைப்பார்க்கிறான். தேவராஜனின் தூண்டுதல் பேரில் இருவரும் சேர்ந்து பிஸினெஸ் செய்ய முடிவெடுக்கின்றனர். (அதென்ன பெரிய பெரிய புள்ளிகள் சந்திக்கும் இடம் ஏதாவது கட்டிடத்தின் மொட்டைமாடியாகவே இருக்கிறது? :D )
சரி அடுத்த வாரம் பார்ப்போம்.... :wave:
Abi will be away fro two months, so they might bring Ganga back. After all Ganga was introduced to extend the story while Devvayani was on maternal leave.
:shock: drama star panruppa avanga marriage koda pannula-nu nenakuren.. now 2nd child, :lol:Quote:
Originally Posted by gta129
so Abi won't return back ??Quote:
Originally Posted by saradhaa_sn
:lol: :lol:
expecting .. :roll:Quote:
Originally Posted by saradhaa_sn