http://i501.photobucket.com/albums/e...ps755a5d89.jpg
Printable View
http://i1028.photobucket.com/albums/...psdzajyuef.jpg
( 1 )
திருவிளையாடல்
என்கிற படத்தில்
கடவுள் முதன் முதலாக
நடித்திருந்தார்.
( 2 )
31.7.1965-
கடவுள்
அனைவரின் கண்களுக்கும்
தெரிந்தார்.
( 3 )
கைலாயம்,
நாட்டின்
மூலை முடுக்கெல்லாம்
தெரிந்தது.
( 4 )
அரங்கங்கள்
கோயில்களானதால்,
ரசிகர்கள்...
பக்தர்களாயினர்.
( 5 )
திரையரங்குகளில்
கட்டணச் சீட்டுகளைப்
பிரசாதம் போல்
பெற்றுக் கொண்டார்கள்.
( 6 )
படம் துவங்குகையில்
அடிக்கப்பட்ட மணி
எல்லோருக்கும்
ஒரு வித நிறைவு தந்தது.
கோயில் மணி போல.
( 7 )
கடவுளைக் காணச்
சென்றவர்கள்
கவலைகளே இல்லாமல்
போனது
இதுதான் முதல் முறை.
( 8 )
படம் காட்டுவதற்காக
அரங்கங்கள்
இருட்டாயின.
பார்க்கப் போனோர்
இதயங்கள்
வெளிச்சமாயின.
( 9 )
சிவனாக
சிவாஜி தோன்றினார்.
( அல்லது)
சிவாஜியாக
சிவன் தோன்றினார்.
( 10 )
கடவுள் இருக்கிறார் என
நிறையப் பேர்
நம்பத் துவங்கினர்.
( 11 )
முதல் முறையாக
கடவுளுக்கு
விசில் மந்திரங்கள்...
கைதட்டல்
அர்ச்சனைகள்...
( 12 )
திரையில்
கடவுள் தோன்றிய போது..
இங்கிதமே இல்லாமல்
செருப்பணிந்து வந்ததற்காக
எண்ணற்றோர்
சங்கடப்பட்டனர்.
( 13 )
திரை நோக்கி வணங்கிய
தாய்மார்கள்
குழந்தைகளையும்
கும்பிடச் சொன்னார்கள்.
( 14 )
அதிசயத்தை
அருகே பார்த்து விட்ட
அத்தனை கண்களும்
ஆனந்தக்கண்ணீர்
உகுத்தன.
( 15 )
நடிகர் திலகத்தின் வடிவில்
உலகம்
கடவுளைப் பார்த்தது.
"உமையவளே"என விளித்த சிம்மக் குரலில்
கடவுளின்
குரல் கேட்டது.
( 16 )
அம்மாக்கள்
பயமுறுத்தியது போல்
இந்த சாமி, கண்ணைக்
குத்தவில்லை என்பதால்
குழந்தைகளுக்கும்
சிவாஜி "சாமி"யைப்
பிடித்திருந்தது.
( 17 )
அவரவர் வீட்டுப்
பூஜையறையிலிருக்கும்
சிவன் சாமிப் படம்,
சிவாஜி சாமி போல்
இல்லையென்பதால்
மாற்ற வேண்டுமென்று
குழந்தைகள்
தீர்மானித்துக் கொண்டன.
( 18 )
குழந்தைகளை,
ஒரு கண்டிப்பான ஆசிரியர்
போல் மிரட்டவில்லை..
நடிகர் திலகத்தின்
கடவுள் நடிப்பு.
தின்பண்டம் வாங்கி வரும்
அன்பு மிக்க தாய்மாமனை
நெருங்குவது போல்
மகிழ்வாய்
நெருங்கச் செய்தது.
( 19 )
திருவிளையாடல்
பார்த்த போது...
ஆண்கள்,
புகை மறந்தனர்.
பெண்கள்,
அடுத்த பெண் மீது கொண்ட
பகை மறந்தனர்.
( 20 )
ரசிப்புடனான
ஒரு பார்வையை...
தரிசனமாக்கியது,
நம் சிவாஜி பெருமானே!
( 21 )
நாரதன் கனி கொடுக்க,
"இன்று உனக்கு
வேறு இடம்
கிடைக்கவில்லையா?"
என்று கிண்டலாகக்
கேட்கிறார்...
மனிதன்
இயல்பாகக் கேட்கும்
தொனியிலேயே.
மனிதரின்
இயல்பான தொனியை
மகேசனுக்கும்
பொருந்தச் செய்த
மகா ஆச்சரியம் அது.
( 22 )
மனைவி பார்வதி
உரிமையுடன்
சுட்டிக் காட்டிய
உண்மைக்காக
அடி வயிற்றிலிருந்து
சத்தம் எழுப்பிச்
சிரிக்கிறார்.
அதிர வைக்கும்
சத்தம்தான்.
ஆனால் யாருக்கும்
அதிர்ச்சியில்லை.
சிரிப்பிலும்
வியக்க வைக்கிறார்,
நடிகர் திலகம்.
( 23 )
நாரதன் கொடுத்த கனியை
பார்வதியிடம்
கொடுத்து விட்டு,
"ஆளை விடு"
என்பது போல்
பாவனை காட்டுகிறார்.
கடவுளாக நடித்தால்
இறுக்கமாகவே
நடிக்க வேண்டுமென்கிற
இலக்கணம் உடைத்த
அற்புத பாவனை.
( 24 )
ஞானப்பழம்
கொடுக்காத கோபத்தில்
பிள்ளை முருகன்
கோபித்து நடக்க,
"பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு
என்பதற்கு உதாரணம் காட்டி
விட்டுப் போகிறான்.. உன்
மகன்." என்கிறார்.
ஒரு தகப்பனுக்கே உரிய
பாசத்தோடும், வேதனையோடும் சொல்லுகையில்,
கடவுளுக்கும் வேதனைகள்
உண்டென்று உணர்த்துகிறார்.
( 25 )
என்னதான் வேதனை
இருந்தாலும், ஆணுக்கே
உரிய கம்பீரத்துடன் "டஸ்"
என்று முருகன் முன்
தோன்றி அறிவுரை சொல்லுவார்.
அவர் நிற்கும் தோரணையே,
"நான் உனக்கு அப்பன்டா"
என்று சொல்லும்.
திரு.ஆதவன் ரவி சார்,
நடிகர்திலகத்தைப் பற்றிய தங்களுடைய கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மனதைத் தொடுவதாக இருக்கின்றன. பாராட்டுக்கள்.
வடசென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், இன்று (27-12-2015) காலை, தண்டையார்பேட்டையில், மாவட்டத் தலைவர் திரு.B .குபேரன் தலைமையில், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
http://i1234.photobucket.com/albums/...pstd6lnkgd.jpg
http://i1234.photobucket.com/albums/...ps4z7ysbwf.jpg
http://i1234.photobucket.com/albums/...pstkjmrh0h.jpg
http://i1234.photobucket.com/albums/...ps5vesg3ci.jpg
http://i1234.photobucket.com/albums/...psbsqs0nie.jpg
( 26 )
பிள்ளைகளுக்குப்
புத்திமதி சொல்லும்
தகப்பனிடம்
பரிவும் இருக்கும்.
கண்டிப்பும் இருக்கும்.
"பதட்டத்தில் தவறான முடிவுக்குப் போகாதே.
தாய் சொல்லைக் கேள்."
இதை, நடிகர் திலகம் உச்சரிக்கும் போது கவனியுங்கள்.
இரண்டும் தெரியும்.
( 27 )
"ஊமையின்
குழந்தைக்கு
எது தாய்மொழி?"
-என்று நான் எழுதிய ஒரு
கவிதையை, வீட்டிலுள்ளோர்,
நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோரும் மிகவும்
பாராட்ட...
ஒரு சாதாரணன்.. நானே
என்னைக் கொஞ்சம் கர்வமாய்
உணர்ந்திருக்கிறேன்.
கடவுள்... புலவனாய் மாறினால்
கர்வமிருக்காதா?
தருமியிடம் வந்து நிற்கும்
போது அவர் முகத்தில்
காட்டும் உணர்வுகளைக்
கவனியுங்கள்.
( 28 )
"அழைத்தது நான்தான்"
என்று நாகேஷிடம்
சொல்லும் போது
தன் கம்பீரத்தைத் தெரிவிக்கும்
பாங்கு தெரியும்.
( 29 )
தன்னை யாரென்று கேட்ட
தருமிக்கு, "சொற்சுவை,பொருட்
சுவை அனைத்தும் கூட்டி,
சுந்தரத் தமிழில் பாட்டிசைத்து,
செந்தமிழ்க் கவி பாடும்
புலவன் நான்" என்று பதில்
சொல்லுவார்.
ஒரு நல்ல தமிழ் வசனத்தை,
ஒரு நல்ல தமிழ்ப் பாடலாக,
அழகாக மாற்றியது
நடிகர் திலகம்தான்.
( 30 )
நான் கண்ணை மூடிக்கிட்டு
நின்னப்ப எனக்கு முன்னாடி
வந்து நின்னுருப்பீங்க.நான்
கவனிச்சிருக்க மாட்டேன்."
என்று நாகேஷ் சொல்ல...
"உண்மைதான். கண்மூடித்தனமாக இருப்பவர்களுக்கு நான்
தெரிவதில்லை." என்று
சொல்லுவார்.
தன்னை இறைவன் என்பதை
மறைமுகமாகத் தெரிவிக்கும்
வசனத்தை, குறுஞ்சிரிப்புடன்
நடிகர் திலகம் வெளிப்படுத்தும்
அழகே அழகு.
http://i1039.photobucket.com/albums/...psaccx7ucf.jpg
ராகவேந்திரா சார்
தங்களின் கருத்தும் படமும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி.
கல்கி பத்திரிக்கைக்கும் பாராட்டுக்கள்.
ஆதவன் ரவி
தங்களின் பங்களிப்புகள் பாராட்டப்படவேண்டியவை.
வாழ்த்துக்கள்
( 31 )
"என்னிடம் வா. நான் பார்த்துக்
கொள்கிறேன்." என்று நடிகர்
திலகம் சொல்ல ...
"என்ன..எங்கெங்கே வீங்கியிருக்குதுன்னா?" என்று
நகைச்சுவையாய்க் கேட்க..
நடிகர் திலகம் சிரிக்கும்
அந்த "தெய்வீகச் சிரிப்பு"
சாதாரணமானதா.. ?
எத்தனை ஒத்திகை
பார்த்திருப்பார்கள்?
எப்படி ஒரு இயல்பு.. அந்த
சிரிப்பில்?
( 32 )
"நல்லா நடிக்கிறேய்யா நீ"
என்று நாகேஷ் சொல்ல..
"நாடகத்தையே நடத்துபவன்
நடிக்க முடியுமாப்பா?" என்று
நடிகர் திலகம் சிரித்தபடி
சொல்வதைப் பார்க்கையில்
நமக்குத் தோன்றுகிறது...
இவராலா நடிக்க முடியாது?