முரசு டிவியில் சபாஷ் தம்பி என்று ஒரு படம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. கதை நாயகன் ஜெய்சங்கர். அது என்னவோ தெரியவில்ல. எந்தப் படத்தை பார்த்தாலும் அதிலும் துப்பறியும் படம் பார்த்தால் இந்தப் படத்தில் மக்கள் திலகம் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று மனது நினைக்கிறது.
சபாஷ் தம்பியில் மக்கள் திலகம் நடித்திருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும். மக்கள் திலகம் படத்தின் கதை அமைப்பை இன்னும் கொஞ்சம் மாற்றி நாம் எப்படி ரசிப்போமோ அப்பிடி படத்தை கொடுத்திருப்பார்.
சபாஷ் தம்பி சஸ்பென்ஸ் படம். இப்போது இந்த நேரத்தில் முரசு டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை யாராவது படத்தை பார்த்துக் கொண்டு இருக்கலாம். அதனால் சஸ்பென்சை சொல்ல மாட்டேன். படத்தில் வில்லனும் சரி, சஸ்பென்சும் சரி யாரும் ஊகிக்க முடியாதபடி இருக்க வேண்டியதுதான். ஆனால், ஏற்றுக் கொள்கின்ற மாதிரி இருக்க வேண்டும். சஸ்பென்ஸ் உடையும்போது ஆ… இவனா? அல்லது இவளா? என்று இருக்க வேண்டும். (இவளா… என்றால் பறக்கும் பாவை காஞ்சனா, இதயக்கனி ராஜசுலோசனா மாதிரி)
அதை விட்டுப்புட்டு சஸ்பென்ஸ் உடையும்போது காமெடியாக, ஏற்றுக் கொள்ள முடியாதமாதிரி ஜீரணிக்கவே கஷ்டமாக இருக்கக் கூடாது. சபாஷ் தம்பி படம் அப்பிடித்தான் இருக்கும். சஸ்பென்ஸ் உடையும்போது அதிர்ச்சிக்கு பதில் காமெடியாக இருக்கும். அது தேங்காய் சீனிவாசனின் காமெடியை தோற்கடித்து விடும்.
ஜெய்சங்கர் தன் பங்குக்கு கொடுத்த பாத்திரத்தை நன்றாகத்தான் நடிச்சிருப்பார். ஆனால், மக்கள் திலகம் மட்டும் இந்தப் படத்தில் நடித்திருந்தால்…? நிச்சயம் கதையோ அல்லது வில்லனாக கடைசியில் காட்டப்படுபவரோ மாற்றப்பட்டிருப்பார். இப்படி எரிச்சலுடன் நம்பளை ஏங்க வைக்கும் நிறைய படங்கள் உண்டு.
இப்படி நினைத்துக் கொண்டிருந்தேன். சபாஷ் தம்பியை தொடர்ந்து பார்க்க புடிக்கவில்லை. டிவியை நிறுத்திவிட்டு நான் நினைச்சதை பதிவு போட வந்துவிட்டேன்.
மக்களால் போற்றப்படுபவர், மக்கள் விரும்புகிற மாதிரி படங்கள் கொடுப்பவர் அதனால்தான் அவர்... மக்கள் திலகம்.
http://i68.tinypic.com/5vtbtc.jpg