//நண்பரே,
பொதுவாக, "தா" "ஜா" "லா" என முடியும் பெயர்கள் பெண்களுக்கானவை என்பது தமிழ் இலக்கணம்..//
idhu engalukku theriyaadhaakkum..
noval writer Sujathavai, avar photovaip paarkkumvarai penn endre ninaiththavargal 95 % readers. theriyumaa?.
Printable View
//நண்பரே,
பொதுவாக, "தா" "ஜா" "லா" என முடியும் பெயர்கள் பெண்களுக்கானவை என்பது தமிழ் இலக்கணம்..//
idhu engalukku theriyaadhaakkum..
noval writer Sujathavai, avar photovaip paarkkumvarai penn endre ninaiththavargal 95 % readers. theriyumaa?.
Mr Parthasarathy Sir,
Try to post in your own style on NT's songs.
http://youtu.be/GSupVVrB5t8
one of my sweet song
I differ with you on multiple points.
1) எந்த ஒரு இடுகைக்கும் வரும் எதிர்வினை அதன் மொத்த வாசகர்களின் எண்ணிக்கை அல்ல. ரசித்துப் படிக்கும் இடுகைகள் ஆகட்டும், தகவல் அறிந்துகொள்ள உதவிகரமாக இருந்த இடுகைகள் ஆகட்டும் - எல்லாவறிற்கும் எல்லாரும் பதில் எழுதுவதில்லை. மேலே சொல்ல எனக்கு எதுவும் இல்லாத பட்சத்தில் 'படித்தேன், பிடித்தது' என்பதுபோல இடுகை இட நானே தயங்குவேன். என்போல பலர் இருக்கலாம்.
2) முன்பே பலமுறை பேசியதுபோல, பலவகை ரசிகர்களுக்கான பலவகை இடுகைகள் உள்ள திரி இது. நீங்கள் எப்படி எல்லாவற்றையும் படிப்பதில்லையோ, அதுபோல தான் உங்கள் எழுத்தும். விருப்பம் உள்ளவர்களை சென்றடையும். அதற்கான வாசகர் வட்டம் நீங்கள் நினைப்பதுபோல குறுகலானது அல்ல என்று ஓரளவு நிச்சயமாகவே சொல்வேன். You should not hold back.
3) மேற்கோள் காட்டப்பட்ட இடுகையில் உள்ள condescensionஐ சற்றே திருப்பிப் போடுகிறேன். எனக்கும் கண்பட்டுக்கும் (துணைக்கு அவரையும் சேர்த்துக்கொள்கிறேன்) புரியும்படி இருந்துவிடும் என்பது என்ன நிச்சயம்? உங்கள் நன்மதிப்பை ஏற்கமறுக்கும் அவையடக்கம் எல்லாம் எனக்குக் கிடையாது :-) 'முனைப்புடன் வாசிக்கவேண்டிய ஆர்வம் எவ்வாறு எங்களுடையதோ, அதே போல 'தெளிவாக எழுதவேண்டிய பொறுப்பு உங்களுடையது'. Meet us half-way என்கிறேன் :-)
4) Jokes apart, ஒரு criticism: அந்த முதல் பத்தியில் நீங்கள் குறிப்பிட்ட பெயர்கள் அனேகம் (எனக்குப்) புதிது. அவற்றைப் பற்றி விரிவாக விளக்கப்படாத பட்சத்தில் அது ஒரு பெயர்த்தோரணமாக மட்டுமே வாசகருக்கு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு முதல்பத்தி, படிக்க முனைபவருக்கு படாடோபமாகப் பட்டு, ஆயாசத்தினால் மேற்கொண்டு படிக்காமல் விட்டுவிடும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். Particularly when you know most of us do not know those names.
மாறாக எங்களுக்குத் தெரியாத அவர்களைப் பற்றி, எங்களுக்குத் தெரிந்த சிவாஜியுடன் தொடர்பு படுத்திப் நீங்கள் எழுதும் பட்சத்தில், பலர் ஆர்வமாக படிக்கவும், அதன் மூலம் சிலருக்கு புது திறப்புகள் கிடைக்கவும் வாய்ப்புண்டு. அவற்றை உங்கள் முன்முடிவுகளால் முடக்கவேண்டாம், என்பதே என் வேண்டுகோள்.
கோபால்,
முதல் மரியாதை. ஏனோ அப்படி ஆகிவிட்டது. என்னவென்றால் மிக பெரும்பாலான இளைய தலைமுறையினருக்கும், எதார்த்த சினிமா பற்றி பேசுபவர்களுக்கும் மிக மிக பிடித்த இந்த திரைப்படம் பெருவாரியான நடிகர் திலகத்தின் ரசிகர்களின் டாப் 10-ல் இடம் பெறுவதில்லை.அதிலும் குறிப்பாக 60-களிலும் 70-களிலும் நடிகர் திலகத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களுக்கு இது அவரின் மேலும் ஒரு நல்ல படம் என்ற கருத்தே இருந்தது. அதற்காக அவர்கள் அந்தப் படத்தை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றோ அவர்களின் ரசனையில் ஏதோ குறை இருக்கிறது என்றோ அர்த்தம் இல்லை.
எனக்கு தோன்றிய காரணமெல்லாம் அவர் எத்தனை எத்தனையோ நல்ல பாத்திரங்களையும் படங்களையும் அளித்திருக்கிறார். அப்படி இருக்கும் போது இதில்தான் அவர் நடிப்பு பரிமளித்தது என்றும் இதுதான் அவரின் மிக சிறந்த நடிப்பை உள்ளடக்கிய படம் என்றெல்லாம் தொடர்ந்து ஊடகங்களில் பரப்புரை செய்யப்பட, அதுவே ஒரு சிவாஜி ரசிகனுக்கு இந்தப் படத்தை உச்சி முகந்து பாராட்ட ஒரு mental block-ஐ ஏற்படுத்தியது என சொல்லலாம். இதை ஏற்கனவே நமது திரியில் நானும் சாரதா போன்றவர்களும் எழுதியிருக்கிறோம். நண்பர்கள் பிரபு ராம் மற்றும் Maddy போன்றவர்களிடமும் நேரில் சந்தித்தபோது இதை சொல்லியிருக்கிறேன்.
குறிப்பாக நடிகர் திலகம் ராதாவின் குடிசையில் மீன் சாப்பிடும் காட்சியை மிகவும் சிலாகித்து சொல்பவர்களிடம் அதையெல்லாம் அதற்கு 17 வருடங்களுக்கு முன்பே உயர்ந்த மனிதன் படத்தில் செய்து விட்டார் எனபதை சொல்லுவேன். அன்றைய தினத்தில் இப்படி சின்ன சின்ன நகாசுகளை highlight செய்ய மீடியாக்கள் இல்லை என்ற காரணத்தினால் அவை இது போன்ற spot light-ல் வரவில்லை என்ற விஷயத்தையும் சொல்லியிருக்கிறேன். ஆனால் அது போன்ற காட்சி விவரணைகளில் இறங்காது படத்தையும் நாயக பாத்திரத்தையும் ஒரு மனவியல் ஆய்வாக நீங்கள் செதுக்கியிருக்கும் விதம் அருமை.
ரசிகர்களின் மனப்பாங்கைப் பற்றி சொன்னேன். அதற்கு பின்னால் வேறு ஒரு காரணமும் இருந்ததாக தோன்றுகிறது. அன்றைய கால கட்டத்தில் [1985 -ன் முற்பகுதி] வெளியான நடிகர் திலகத்தின் படங்கள் ஒரு தேக்க நிலையை பிரதிபலித்தது என்றே சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் இந்தப் படம் தயாரிப்பில் இருந்தது. வெளியாகும் வரை படத்தை பற்றிய எதிர்பார்ப்பு பெரிதாக இல்லை. மிக மிக அதிசயமாக சுமார் மூன்றரை மாதங்கள் இடைவெளி இருந்தது. மே மாதம் வெளியான நேர்மை-க்கு பிறகு 1985 ஆகஸ்ட் 15-ல் இந்த படம் வெளியானது.
இந்த நேரத்தில் மதுரை சம்மந்தப்பட்ட ஒரு விஷயத்தையும் கூற வேண்டும். [நான் இப்படி எழுதினாலே கிண்டலடிக்க கூடிய கோபால் இம்முறை அதை செய்ய மாட்டார்]. முதல் மரியாதை வெளியான அதே நேரம். மதுரையில் தங்கசுரங்கம் வெளியாகிறது. அதுவும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக மறு வெளியீடு காணாமல் இருந்த அந்தப் படம் புதிய பிரதி எடுக்கப்பட்டு ஆகஸ்ட் 16 அன்று சிந்தாமணியில் வெளியானது. ஒரு மாமாங்கத்திற்கு பின் வரும் ராஜனை வரவேற்க வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கிய ரசிகர் படை மலைச்சாமி தேவரை சற்று cold shoulder செய்தது நிஜம். அதிலும் முதல் மூன்று நாட்கள் சிந்தாமணி திரையரங்கு அமைந்துள்ள கீழ வெளி வீதி அல்லலோகோலப்பட்டது என்று நண்பர்களும் சிவாஜி அன்பர்களும் எப்போதும் சொல்வார்கள். இதன் காரணமாக கூட முதல் மரியாதை முதலில் சரியாக கவனிக்கப்படாமல் பின் wom மூலமாக நற்பெயர் பெற்று பிறகு கோலோச்சியது. அந்த காலகட்டத்தில் நான் மதுரையில் இல்லை. கேரளத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த நான் முதல் மரியாதை வெளியான 15 நாட்களில் ஒரு அவசர அலுவல் நிமித்தம் சென்னை வர வேண்டிய தேவை.
ஆகஸ்ட் 30 என்று நினைவு. சென்னை வரும் ரயிலில் உறங்கி கொண்டிருந்த நானும் சக பயணிகளும் அதிகாலை நேரத்தில் காட்பாடி நிறுத்தத்தில் எழுப்பபட்டோம். அன்றைய தினம் ஒரு ஹர்த்தால் அல்லது ரயில் மறியல் [இலங்கை பிரச்னை என நினைவு] என்றும் ஆகவே ரயில்கள் மேலும் இயக்குவதில்லை என அறிவித்து விட்டு பயணிகள் அனைவரையும் ரயில் நிறுத்தத்திற்கு வெளியே நின்றிந்த பஸ்களில் ஏற்றி அனுப்பினார்கள். சென்னை வந்து சேரும் போது காலை 10 மணியாகி விட்டது. வந்த வேலை முடிவதற்கு மதியம் மூன்று நான்கு மணி ஆகிவிட்டது. மதிய உணவை துறந்து விட்டு மவுண்ட் ரோடிற்கு விரைந்தேன். சாந்தி திரையரங்கிற்கு வந்து பார்த்தால் பால்கனி டிக்கெட்கள் எல்லாம் புல். கீழே உள்ள டிக்கெட்கள் ஒரு சிறியளவில் மட்டும் current booking-ல் கொடுக்கப்படும் என சொன்னதும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். ரசிகர்களை விட 90% பொது மக்களே வந்திருந்த ஷோ அது. மிகவும் ரசித்தேன். அந்த நாளுக்கு முன்பு வரை எத்தனையோ முறை அரங்க வளாகத்திற்கு வந்திருந்த போதிலும் அன்றுதான் முதன் முதலாக அரங்கினில் படம் பார்த்தேன். ஆக சாந்தி திரையரங்கம் எனக்களித்த முதல் மரியாதை இந்த முதல் மரியாதை திரைப்படம்.
இனி படத்திற்கு அலல்து உங்கள் விமர்சனத்திற்கு வருகிறேன்.
(தொடரும்)
முதல் மரியாதை படத்தைப் பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று கிளம்பும் பெரும்பாலானோர் நான் முன்னர் குறிப்பிட்ட மீன் சாப்பிடும் காட்சியையும் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் மற்றும் முதல் நாள் நடிகர் திலகம் விக் வைத்து வந்ததையும் அதை விரும்பாத பாரதிராஜா அதை நேரிடையாக சொல்லாமல் முகம் காட்டியதையும் பிறகு நடிகர் திலகத்தின் ஒரிஜினல் முடியே இடம் பெற்றதையும் பெரிய அளவில் விவரிப்பார்கள். அந்த template-ஐ எல்லாம் ஒதுக்கி விட்டு உங்கள் தனித்துவமான நடையிலே படத்தை அணுகியிருக்கும் முறை ரசிக்கதக்கதாக அமைந்திருக்கிறது.
நடிகர் திலகத்தின் பல படங்களைப் பற்றிய உங்கள் ஆய்வுகளை படிக்கின்ற போதெல்லாம் அதன் அடிநாதமாய் தெரிவது கதாபாத்திரங்களைப் உளவியல் பாணியில் அணுகும் நடைமுறை. அது இதிலும் தவறாமல் தொடர்ந்திருக்கிறது. பரந்துபட்ட ஆழமான வாசிப்பு, அலுவல் நிமித்தம் பல்வேறு நாடுகளுக்கு [60?] பயணப்பட்ட, பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஏற்பட்ட பல்வேறு மொழி படங்களுடான பரிச்சயம் இவை உங்கள் விமர்சன பார்வையை கூர்மைப்படுத்த உதவியிருக்கின்றன என்பதுடன் உங்கள் எழுத்திற்கு ஒரு பலத்தையும் வசீகரத்தையும் கொடுக்கிறது.
மலைச்சாமி தேவரை பெரும்பாலானோர் ஒரு silent sufferer ஆக பார்க்கும்போது அவர் தன்னை ஒரு அய்யோ பாவம் போல் வெளியே காண்பித்துக் கொண்டு உள்ளூர மனைவியை மானசீகமாக வதைப்பவர், physical புறக்கணிப்பின் மூலம் தன வாழ்க்கையின் சந்தோஷம் தொலைய காரணமாக இருந்தவளுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பவர் என்ற ஒரு முகத்தை வரைந்திருக்கிறீர்கள். அதை அடிப்படையாக கொண்டு சென்று அவருக்கு அந்த ஓடக்கார பெண்ணிடம் ஏற்படும் பரிச்சயம், அது நட்பாக மாறுதல் அதன் மூலம் வரும் கரிசனம் அதன் காரணமாக எடுத்துக் கொள்ளும் உரிமை, முடிவில் அது மரியாதை, நட்பு கரிசனத்தையும் தாண்டி வேறு ஒரு தளத்திற்குள் பிரவேசிப்பது போன்றவற்றை அலசி விட்டீர்கள்.
ஆனால் செல்வராஜ் அவர்களும் பாரதிராஜா அவர்களும் கூட இந்த பாத்திரத்திற்கு இத்தனை dimensions யோசித்திருப்பார்களா என்பதே சந்தேகம் என்றே எனக்கு தோன்றுகிறது. நீங்கள் எத்தனை அழகு பாடலைப் பற்றி எழுதும்போது கூட நாயகி அணிந்திருக்க கூடிய உடைகளின் வர்ணம் [Rose மற்றும் Red] எப்படி அந்த mood-ஐ பிரதிபலிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினீர்கள். With due respect to CVR, என்னால் அந்த credit-ஐ அவர் account-ல் சேர்க்க முடியவில்லை.
இது போன்றே சுமதி என் சுந்தரி-யிலும் வரும். இதை நான் முன்பே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். தன்னுடன் வாழ்பவள் சுந்தரி அல்ல சினிமா நடிகை சுமதி என்று தெரிந்தவுடன் அந்த ஆல்பத்தை எடுத்துக் கொண்டு மது வீட்டிற்கு வர அங்கே சுமதி கல்யாண சந்தையிலே பெண் பார்க்கும் நேரமிது என்று பாடிக் கொண்டிருக்க மதுவான சிவாஜி படியிறங்கி வந்து அங்கே flower vase-ல் வைக்கப்பட்டிருக்கும் காகிதப் பூவை முகர்ந்து பார்ப்பார். அவருக்கு தெரியும் அது மணமில்லா காகிதப் பூ என்று. ஆனாலும் மணமுள்ள நிஜ ஜாதி மல்லி என்று நினைத்தோமே அது உண்மையிலே ஒரிஜினல் மல்லியாக இருந்துவிடக் கூடாதா என்ற ஆதங்கத்தையும் அனால் அப்படி இல்லையே என்ற கசப்பான உண்மையையும் முகத்தில் வெளிப்படுத்தி அதை தான் விரும்பும் பெண்ணிற்கு உவமைப்படுத்திக் கொள்வதை பார்வையாளனுக்கு புரிய வைப்பார். இங்கேயும் CVR தான்.இங்கேயும் என்னை பொறுத்தவரை அவருக்கு credit இல்லை என்றே சொல்லுவேன்.
நடிகர் திலகம் சுயமாக செய்த பல விஷயங்களினால் இயக்குனர்களும் வசனகர்தாகளும் பெயர் தட்டி சென்றனர் எனபதே நடைமுறை உண்மை.
ஆனால் நீங்கள் என்னிடம் சொன்னது போல் ஒரு படைப்பு உன்னத நிலையை அடைவதே இது போன்ற பல்வேறு interpretation-களுக்கு உள்ளாகும் போதுதான் என்ற வாதம் சரி என்றே தோன்றுகிறது.
இது நாள் வரை மலைச்சாமி தேவர் பாத்திரத்தைப் செக்கானூரணி உசிலம்பட்டி கமுதி போன்ற பகுதிகளில் அன்றாடம் சந்திக்க கூடிய ஒரு கிராமத்து பெரிய மனிதன், பஞ்சாயத்து தலைவர் போன்றவர்களுடனே பொருத்தி பார்க்க தோன்றியிருக்கிறது. ஆனால் அதை தாண்டிய ஒரு பார்வையை அதிலும் குறிப்பாக கணவனால் இத்தனை உதாசீனப்படுத்தப்பட்டாலும் பொன்னாத்தாளுக்கு இருக்கும் தன் கணவன் என்ற possessiveness மலைசாமியிடம் இல்லை என்ற புதிய கோணத்தை சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள் பல.
நீங்களே விருந்து பரிமாறி விட்டர்கள் அதற்கும் மேலாக double dessert போன்று கணேஷ் அவர்கள் அற்புதமான் பாயசத்தை படைத்தது விட்டார். ஆக வாசித்தவர்களுக்கு double whammy.
மற்றப்படி நீங்கள் உலகளவில் சினிமா சம்மந்தப்பட்டு எழுதிய பெயர்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் தெரிந்துக் கொள்வதற்கு பிரபுராம் போன்றவர்களுக்கே google ஆண்டவர் உதவி தேவைப்படும்போது lesser mortals நாங்கள் எங்கே? நண்பர் கணேஷ் சொன்னது போல் பரவாயில்லை இருக்கட்டும் என்று சொல்லி கடந்து விட வேண்டியதுதான்.[கணேஷ் சார், sorry for the nit picking. அது க.கல்யாணம் இல்லை, ஊட்டி வரை உறவு]
மீண்டும் நன்றி கோபால்!
அன்புடன்
கணேஷ் சார்,
நாற்பதுகளில் வரும் காதல் பற்றிய உங்கள் பதிவிற்கு தனியே சின்னதாகவேனும் ஒரு பதிவு போட வேண்டும்.பார்ப்போம். [ஆமாம், நீங்கள் தஞ்சை குடந்தை பகுதியை பூர்விகமாக கொண்டவரா?]
முரளி சார் ,
இதை இதை இதைதான் நான் எதிர்பார்த்தேன். மு.வ. நமது NT நடிப்பை புலவர்களுக்கும், பாமரர்களுக்குமான இணைப்பு பாலம் என்று குறிப்பிட்டார். அதை போல் திரியில் பல்வேறு முகம் கொண்டவர்களின் இணைப்பு பாலம் நீங்களே. அதனால்தான் உங்களை வம்புக்கிழுத்தாவது உங்கள் பங்களிப்பை பெற விழைகிறேன்.வழக்கம் போலவே உங்கள் பின் ஆய்வு (இதிலும் பின் தானா என்று வனஜா முணு முணுப்பது காதில் கேட்கிறது)எழுதுபவர்களை உற்சாக படுத்துவதோடு, வழி நடத்தவும் செய்கிறது.
வழக்கம் போலவே ,ஒரு விஷயத்தை மறுக்கிறேன். C .V .Rajendran . underestimate செய்ய படுவதை மறுக்கிறேன். குமுதத்தில் 1972 இல் என்று நினைவு. தான் சுமதி என் சுந்தரி படத்தில் colour psychology உபயோகித்ததாகவும் ,அதை எந்த விமரிசகரும் கண்டு கொள்ளவில்லை என்றும் வருந்தி இருந்தார்.
பிரபு,
தாங்கள் சொல்வது எனக்கு உடன்பாடே. நான் ஒரு முழு கட்டுரை தொடர் எழுத விழைகிறேன் எனக்கும் vital few தான் target . trivial many அல்ல. (வியாபாரம்,கலை அனைத்திலும்)
நீங்கள் சொன்ன மாதிரி கோடி காட்டி விட்டு ,கடந்து செல்வது ஒருவித பொறுப்பின்மையே.
ஆனால் எனது எழுத்தில் வாசகனின் இட்டு நிரப்பும் ஆற்றலுக்கு தீனி போடும் விழைவு அதிகம். அதனால் வந்த ஆர்வ கோளாறு.
நடிகர் திலகத்தின் காஸ்ட்யூம் விஷயத்தில் ஒரு புதிய பரிணாமத்தைக் கொண்டு வந்தது சி.வி.ஆர். அவர்களே. இந்த விஷயத்தில் கோபால் கூறுவதை நான் ஆமோதிக்கிறேன். அவரிடம் நேரிலேயே கேட்டிருக்கிறேன். தங்கள் படத்தில் மட்டும் நடிகர் திலகத்தின் தோற்றம் வித்தியாசமாக இருப்பது மட்டுமின்றி இளமையாகவும் தோன்றுகிறதே என்று கேட்டோம். சொல்லப் போனால் அவர் இதை ஊட்டி வரை உறவு படத்திலேயே செயல் படுத்தத் தொடங்கி விட்டதாக கூறினார். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருப்பதாக அவர் கூறினார். இதற்கென்றே அந்தக் காலத்தில் பல டிசைனர் புத்தகங்களை வாங்கிப் படித்ததாகவும் கூறினார். இதை விட பெரிய விஷயம், அனுபவம் புதுமை படத்தை நடிகர் திலகம் பார்த்து சி.வி.ஆர் அவர்களைப் பாராட்டியது தெரிந்த விஷயம். ஆனால் அவர் முதலில் பாராட்டியது அப்படத்தில் சி.வி.ஆர். பயன் படுத்திய காஸ்ட்யூம் தான். குறிப்பாக கனவில் நடந்ததோ பாடலில் முத்துராமன் அணிந்திருந்த உடைகளை நடிகர் திலகம் மிகவும் ரசித்ததாகவும் கூறியுள்ளார். அதே போல் ஊட்டி வரை உறவு படத்தில் எங்கெங்கு half sleeve எங்கெங்கு full sleeve போன்றவற்றையும் பார்த்து பார்த்து செய்ததாகவும் அதை நடிகர் திலகம் மிகவும் பாராட்டியதாகவும் கூறினார். இதனுடைய உச்சம் தான் சுமதி என் சுந்தரி. இப்படம் ஓடியதில் பெரும் பங்கு நாயக நாயகியரின் உடையலங்காரம். அதிலும் ஒரு காட்சியில் நான் ஒரு சந்தேகம் கேட்டேன். ஆலயமாகும் பாடல் இரண்டாம் முறை வரும் போது அலுவலகத்திற்கு நாயகன் கிளம்புவதாக வரும் போது முழுக்கையாகவும் வரும் போது அரைக்கையாகவும் இருக்கும். இதைக் கேட்ட போது சிவிஆர் சிரித்தார். தாங்கள் கேட்டது சரிதான். ஆனால் அதை நான் ஒரு சிம்பாலிக்காகத் தான் வைத்துள்ளேன். அது ஒரே நாளாக எடுத்துக் கொண்டால் தவறாகத் தோன்றும். ஆனால் பொதுவாகத் தான் அந்த இடத்தில் வைத்துள்ளேன் என்றார்.
இந்த கலர் கான்செப்டைத்தான் சி.செ. படத்தில் எத்தனை அழகு பாடலிலும் கடைப் பிடித்துள்ளார். அப்படிப் பார்க்கும் போது சிவிஆருக்கு முன்பிருந்த இயக்குநர்கள் இந்த கலர் கான்செப்ப்டைப் பயன் படுத்தியிருந்தால் இன்னமும் கூட அழகான தோற்றங்களில் நாம் நடிகர் திலகத்தை ரசித்திருப்போம்.
கோபால் சார், தங்களுடைய பதிவுகளை எல்லோரும் ரசிக்கிறார்கள் பார்க்கிறார்கள். எனவே தாங்கள் அதற்காக பிரத்யேக முயற்சி எடுக்க வேண்டாம். வம்பிற்கிழுக்கும் பதிவுகளைப் போட வேண்டாம்.
இந்த முதல் மரியாதை அமர்க்களத்தில் ராகுலின் அம்பிகாபதி, தில்லானா மோகனாம்பாள் பதிவுகள் கவனிக்கப் படாமல் போய் விட்டன. சில சமயம் இத்திரி சிலருக்கு மட்டும் தான் முன்னுரிமையோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது. அவ்வாறு இல்லை என்று நிரூபித்து அனைவரின் பதிவுகளையும் ஒரு சேர மதித்து அனைத்திற்கும் தங்கள் பதில் கருத்துக்களை எழுதுமாறு அனைத்து நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
கிட்டத் தட்ட மூன்று நான்கு பக்கங்கள் கோபால் ஒருவருக்கே கோட்டா வாகி விட்டது.
சந்தோஷம் தானே கோபால்
சிவிஆர் கலர் கான்செப்ட் ... தொடர்ச்சி
ஆனால் சி.வி.ஆர். அவர்கள் கோட்டை விட்டது என் மகன் படத்தின் விக் விஷயத்தில். சாதாரணமான விக் வைத்திருந்தால் அப்படத்தின் உடைகள் பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கும். குறிப்பாக பொண்ணுக்கென்ன அழகு பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் உடைகள் மிகவும் பிரமாதமாக இருக்கும், ஆனால் அவற்றை ரசிக்க விடாதபடி அந்த விக் வந்து கெடுக்கும். மஞ்சுளாவின் காஸ்ட்யூம் அப்படத்தில் times ahead ஆக இருக்கும். ஆனால் அன்றைய கால கட்டத்தில் அது ஆபாசமாயிருந்தது உண்மை. இன்றைக்கும் பெரியவர்கள் அந்தப் பாட்டை தொலைக் காட்சியில் போட்டால் சேனலை மாற்றி விடுவார்கள். இது போன்ற சிற்சில விஷயங்களில் இன்னும் சற்று கவனம் எடுத்து செய்திருந்தால் என் மகன் இன்னும் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கும்.
சி.வி.ஆர். அவர்களின் ஒவ்வொரு படத்தின் காஸ்ட்யூமைப் பற்றி எழுதவே தனியாக திரி தேவைப் படுகிறது
பழைய பதிவு(ஆனால் இன்றைய உரையாடலோடு தொடர்புள்ளதால்)
சுமதி என் சுந்தரி-1971
எழுபதுகளில் என் மீசை அரும்பும் பருவத்தில் ,என் சக வயது தோழர்களுடன் திரும்ப திரும்ப பார்த்து ,அதை பற்றி உரையாடி(எதை பற்றி என்று பிறகு)மகிழ்ந்து ,லயித்த நகைச்சுவை தெளித்த காதல் காவியம்(ஆங்கிலத்தில் ரொமாண்டிக்-காமெடி).ரோமன் ஹாலிடே என்ற படத்தை தழுவிய வங்காள மூலத்தில்(பிரசாந்த்)இருந்து கோபு-சி.வீ.ராஜேந்திரன் இணைப்பில் உருவான ரசிக்கத்தக்க படம்.(அசல் பெயர் விட்டில் பூச்சி??)
நடிகர் திலகம் ,நடிப்பில் முன் மாதிரியாய் இருந்தது போல் உடையில்,சிகை அலங்காரத்தில் ,ஸ்டைலில், அனைத்து வயதினருக்கும் (முக்கியமாய் கல்லூரி இளைஞர்கள்) முன் ரோல் மாடல் அண்ட் டிரென்ட் செட்டர்.ஏன் இந்தியாவுக்கே எனலாம்(ஐம்பதுகளில் வட இந்திய பத்திரிகைகள் அவரை நன்கு உடையணிந்த இந்திய ஆண் நடிகராய் தேர்வு செய்து மகிழ்ந்தன. இந்த படத்தில் மிக மிக அழகாய் (படத்தில் ஜோசிய காரன் சொல்வது போல்)
அழகான சிகை அலங்காரம்,உடைகள் என அதகளம் புரிவார்.ஜெயலலிதா மிக அழகாய் தோன்றி பொருத்தமான ஜோடியாய் காதல் காட்சிகளில் பொருந்துவார்.. நடிகர் திலகம் சற்றே தூக்கி சடாரென்று நெற்றிக்கு இறங்கும் நிறை குடம் பாணி hair ஸ்டைல்.வெளுறிய காவி நிற சட்டை ,சிவப்பு தொப்பி,பிரவுன் சட்டை ,கட்டம் போட்ட ஹாட்,ஜெர்கின்,லெதர் ஜாக்கெட்,கிரே சட்டை,கட்டம் போட்ட பிரவுன்,மஸ்டர்ட் சட்டை,லவேண்டேர் டி ஷர்ட்,காகி ஷார்ட்ஸ்,அருமையான கூலிங் கிளாஸ், வைட் அண்ட் வைட் (சிவப்பு காலர்),அருமையான இரவு உடைகள்,கிரே பான்ட்,என்று பொருத்தமான ஸ்டைல் ஆன உடைகளில் தோன்றி இள மனசுகளை அள்ளோ அள் என்று அள்ளுவார்.கலைச்செல்வியும் பாந்தமான மித வர்ண புடவைகளில் ஜொலிப்பார்.
ஒரு ஸ்டாம்ப் சைஸ் கதை.மிதமான ,இதமான வசனங்கள்.ஆரம்பமே களை கட்டும்.டைட்டில் ஓடும் போதே ஹாலிவுட் நடிகை புகைப்படங்களை பட கதையமைப்புக்கு பொருத்தமாய் ஓட விடுவார்.ஒரு காதல் பாடல் சம்பந்தமே இல்லாத நபருடன் எடுத்த எடுப்பிலேயே நாயகி பாடி ரசிகர்களை அதிர வைப்பார்.சாரி சொல்லி கதா நாயகி பாடல் இடையில் திரும்பும் போது ரசிகர்கள் மூச்சு விடுவார்கள்.அதிலிருந்து கதை பயணிக்கும் பாணி தமிழ் ரசிகர்களுக்கு புதிது.சி.வீ.ஆர் உடை நிறத்திலேயே கலர் சைகாலஜி உபயோகித்து காட்சியின் தரத்தையே மாற்றுவார்.(உடை-ராமகிருஷ்ணன்)
பாஸ்கர் ராவ்-தம்பு காம்போ இதமாய் ஒளிப்பதிவை குளுமையாய் தரும்.
நடிகர் திலகம் நடிக்காமல் ரெஸ்ட் எடுப்பார்.அதுதான் இந்த படத்தையே தூக்கி நிறுத்தும்.சினிமா பற்றியே தெரியாமல் டீ எஸ்டேட் டையே உலகமாய் கொண்டிருக்கும் மது என்ற இளைஞனாய் ....ஆரம்ப காட்சியில் இருந்து ஜாலியாய் நடிப்பார். தங்க வேலு தவறாய் அர்த்தம் செய்து வீட்டில் குளிக்க சொல்லி மிரட்டும் இடத்தில்(மூன்று முறை டவல் உடன் திரும்பும் காட்சி),முதலிரவு காட்சியில் மிரளும் போது,பொட்டு வைத்த முகமோ (எஸ்.பீ.பாலு முதல் NT பாடல்) மிதமான இளமை கொஞ்சும் ஸ்டைல்(தரையோடு வானம்-புகழ் பெற்ற ஸ்டில்),ஏய் புள்ளே பாடலில் ஆட தெரியாதவன் போல் ஆடுவது,தொடர்ந்த இளைஞர்களை பைத்தியமாக்கிய பலூன் காட்சி, பூவின் ஒரு இதழை சுவைத்து காமத்தை அழகாய் வெளிப்படுத்தும் காட்சி,(வசந்த மாளிகை ப்ளம் ஞாபகம் வருமே!!),சட்டென்று ஜெயலலிதா அழும் போது எல்லா திசைகளிலும் அப்பாவியாய் பார்ப்பது,கிளி-ஜோசிய காட்சி, என்னுடைய பேவரிட் ஒருதரம் (காலை ஸ்டைல் ஆக தூக்கி நிற்பது,பௌலிங் ஆக்க்ஷன்) என்று இந்த பாணி படத்திலும் தான் தான் கிங் என்று நிரூபிப்பார்.ஒருதரம் பாடல் கலாட்டா கல்யாணம் படத்திற்காக உருவானது.ஆனால் மழை வந்து படமாக்க முடியாமல் இந்த படத்தில் உபயோகித்தனர்.
விஸ்வநாதன் இசையில் இளமையை கொட்டுவார்.ல ல லா ஹம்மிங் ,ஹும் ஹம்மிங் என்று கலக்குவார்.எனக்கு மிக மிக பிடித்த நடிகர் திலகத்தின்
லைட் movie .(மற்றவை ராஜா,என்னை போல் ஒருவன்,எங்கள் தங்க ராஜா)
இந்த படம் இளைஞர்களை குறி வைத்து எடுக்க பட்டதால்,நடுத்தர வயதினர்,முதியவர் என மற்றோருக்கு அதிக நாட்டம் வரவில்லை.இளைஞர்கள் இக்காலம் போல் பணப்புழக்கம் கொள்ளாத காலம்.அதனால் மிதமான வெற்றியை அடைந்த இளமை திருவிழா இப்படம்.
சிவிஆர் கலர் கான்செப்ட் தொடர்ச்சி
என் மகன் படத்தில் பொண்ணுக்கென்ன அழகு பாடலைப் பாருங்கள்
http://youtu.be/dKh8Q-yDlZU
பல்லவி தொடங்கி முதல் சரணம் வரை cream வண்ணத்தில் டிசைன் போட்ட சட்டையும் அதன் மேலே பிங்க் வண்ணத்தில் மேலங்கியும் நடிகர் திலகத்திற்கும், செவ்வண்ணத்தில் மஞ்சுளாவிற்கு நவீன உடையும் அவ்வளவு அழகாய்த் தோன்றுகின்றன. அதே போல் முதல் சரணத்தில் டார்க் சேண்டல் நிறத்தில் கால் சட்டையும் அதே வண்ணமும் க்ரீம் வண்ணமும் இணைந்த டிசைன் சட்டையும் நடிகர் திலகத்திற்கும் ஊதா நிறத்தில் மஞ்சுளாவின் உடையும் மிக அருமையாய் உள்ளன. அதுவும் அந்த தோட்டத்தில் கீழேயிருந்து மேலே படிக்கட்டில் ஓடிவரும் ஸ்டைலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் அதற்கு இடையூறாக இருப்பது அந்த விக். இப்பாடல் முழுவதுமே நடிகர் திலகத்தின் உடைகள் வித்தியாசமாகவும் இருக்கும். ஆனால் எடுபடாமல் போனதற்கு தலைமுடி ஸ்டைலே காரணம்.
ஓரிடத்தில் கருநீல பூக்கள் திரையின் வலது பக்கம் மேல் மூலையில் தெரிய பின்னணியில் லாங் ஷாட்டில் அவர்களின் போஸைக் காண்பிக்கும் போது கேமிரா கம்போஸிங்கின் அருமையும் வண்ணங்களை எப்படி பயன் படுத்த வேண்டும் என்பதும் புலப்படுகிறது.
அதே போல் இன்னோரிடத்தில் டாப் கோணத்தில், நடிகர் திலகம் அமர்ந்திருக்க மஞ்சுளா நின்றிருக்க, அந்த ஊதா நிறம் வானத்தின் நீல நிற பின்னணியில் அந்த காதலர்களின் உணர்வை அப்படியே சித்தரிப்பது அந்த கோணத்தையே கவிதையாக்கி விடும்.
பாடலின் உச்சக் கட்ட சிறப்பு அந்த ஆசையெனும் பந்து சரணத்தில் நடிகர் திலகம் அணிந்திருந்த உடையின் வண்ணம். டார்க் டேன் கலரில் நடிகர் திலகமும், அதே க்ரீம் கலரில் மஞ்சுளாவின் உடையும்.
இவையெல்லாவற்றையும் நமக்கு உணர்வு பூர்வமாக அளித்தது மெல்லிசை மன்னரின் மெட்டும் அதற்கான இசையும் கவியரசரின் வரிகளும் சுசீலா சௌந்தர் ராஜன் குரல்களும் என்றால் அதற்கு ஜீவன் அளித்தவர் நடிகர் திலகம். ஒரு நிமிடம் இப் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தெய்வ மகன் அல்லது சுமதி என் சுந்தரி விக்கை வைத்துப் பாருங்கள். தாங்களே உணர்வீர்கள்...
அடுத்து தேவர் மகன் படத்திற்கு சில பக்கங்கள் போன பிறகு மீதி யிருந்தால் நடிகர் திலகத்தின் மற்ற படங்களைப் பற்றிப் பேசலாம் என எண்ணுகிறேன். நண்பர்கள் தங்கள் கருத்தைக் கூறவும். ஏனென்றால் ஆதி ராம் கூறியது போல் நமக்கு வேறு திரியும் இல்லை. எனவே இவர்களெல்லாம் தங்கள் படங்களை அலசியது போக மிச்சம் மீதி நமக்கு அளித்த பிறகு நாம் மற்றவற்றைப் பற்றிப் பேசலாம். சி.வி.ஆர். பற்றிய பதிவுகள் ஒரு sample ஆகத் தான் இங்கு பதியப் பட்டன. இனி இப்போதைக்கு தொடராது. பயப்படவேண்டாம்.
பிரபு/முரளி/சாரதி ,
இப்போது என்ன செய்ய சொல்கிறீர்கள்? நான் சும்மா இருந்தாலும் விடாது இப்படி தொந்தரவு தருகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் போட்ட போதெல்லாம் இனித்த பாராட்டுகள் இப்போது கசக்கின்றன. இத்தனைக்கும்,பாராட்டல்ல. தொடர் பதிவுகள். open ஆக போதும்,மற்றவரை கவனியுங்கள் என்கிறார். political ஆக இப்படி நடந்தால், எப்படி நமக்கும் interest வரும்? ஆட்டு மந்தை போலத்தான் சிந்திக்க வேண்டும் , இந்த திரியின் தரம் உயர்வதில், இவ்வளவு, insecurity இருந்தால், எங்கே போய் முட்டி கொள்ள? நான் சிவாஜி செந்திலுக்கு பதிலளித்தால், இவர் வந்து ஆள் சேர்த்து மோதுகிறார். நான் விமரிசனம் எழுதினால் cut paste செய்து திரிக்கிறார். இத்தனைக்கும், இவருடைய பல பதிவுகள் சுவாரஸ்யமானவை. விஷயம் தெரிந்த மனிதர். இவரே இப்படியென்றால், எங்கே சந்திக்க?(சந்திப்பிலா).நான் இவர் வழிக்கே போகாத போதும், mental torture . ஆனால் என்னிடம் சுவாதீனம் எடுத்து advise பண்ணும் ஆட்கள், இவரை கண்டிப்பதே இல்லை.(நானும் ஆள்
சேர்ப்பேனாக்கும் )
அன்புள்ள திரு. ராகுல் ராம் அவர்களே,
தங்களின் "அம்பிகாபதி" மற்றும் "தில்லானா மோகனாம்பாள்" படக் கட்டுரைகள் பெரிய அளவில் இங்கு விவாதிக்கப்படவில்லை என்று தோன்றலாம்.
எனக்குத் தெரிந்து முக்கியமான காரணம், ஒரே சமயத்தில், வேறு சில படங்களைப் பற்றிய கட்டுரைகளும் அதையொட்டி வழக்கம் போல் சர்ச்சைகளும் துவங்கி, சில நல்ல ஆய்வுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன என்பது தான் உண்மை.
நண்பர்கள் பலர் என்னுடைய பாடல் ஆய்வுகளை தொடருங்கள் என்று கூறினாலும், நான் அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொள்ள பல காரணங்கள் உண்டு. முதற்கண் அலுவலக வேலைகள் மற்றும் சொந்த வேலைகள். இன்னோர் காரணம் இங்கு அடிக்கடி எழும் சர்ச்சை என்னை அவ்வப்போது முடக்கி விடுகிறது. இது போன்ற தருணங்களில், என்னதான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும், இது போன்ற சர்ச்சைகள், சில சிறந்த ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து விடுகிறது என்பது கசப்பான உண்மை. என்னதான் சொந்த திருப்திக்கு எழுதினாலும் இது போன்ற தருணங்கள் பயணத் தடைகளாகி விடுகிறது. இது பற்றி மேலும் எழுதினால், புது சர்ச்சைகள் துவங்கி விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
இருப்பினும், தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். ஏனென்றால், இப்பூவுலகு எல்லோருக்கும் சொந்தம்! - திரு. ராகவேந்திரன் சார் - இது உங்களுக்கும் தான்! தங்களுடைய "என் விருப்பம்" - அற்புதம் தயை கூர்ந்து தொடருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அதிகம் படித்திருந்தாலும் - அதிகம் பேசியிருந்தாலும் - அதிகம் ஊர் சுற்றியிருந்தாலும் -மேலைநாடுகள் மற்றும் அந்த நாடுகள் பற்றிய தகவல்கள் அறிந்து வைத்திருந்தாலும் - நம் தமிழ் நாட்டில் கிடைத்த வைர பெட்டகம் நடிகர் திலகத்தின் நடிப்பினை குறை கூற முடியுமா ?
நமது நடிகர்திலகத்தின் நடிப்புக்கு முன் உலகளவு பேசப்படும் நாவல்கள் - பல்வேறு உலக மொழி நடிகர்கள் - மற்றும் படங்கள் எம்மாத்திரம்
நடிகர் திலகத்தின் அனைத்து படங்களும் பேசப்படவேண்டும் . பாகுபாடு வேண்டாம் .
தனிப்பட்ட வெறுப்பு விமர்சனங்கள் தவிர்க்கலாம் .
மறைமுக தாக்குதல்கள் - கிண்டல்கள் - எச்சரிக்கை - போன்றவை உயர்ந்த மனிதனின் கௌரவம் பாதிக்கப்படும் என்று உத்தமன் புகழ் பாடும் உங்களுக்கு தெரியாதா ?
தவறு செய்கிறீர்கள் நண்பர்களே
இனியாவது நடிகர் திலகம் அவர்கள் அவன்தான் மனிதன் என்று அவன் ஒரு சரித்திரம் - வெற்றிக்கு ஒருவன் -
என்று புகழ் பாடுங்கள் .
பாவ மன்னிப்பு உண்டு பாசமலர்களே .
நெஞ்சிருக்கும் வரை ... இந்த புண்ணிய பூமியில் சிவகாமியின் செல்வனாம் - நிறைகுடமாம் -அன்னை இல்லத்தின் பெருமைகளை கூறி , எங்கள் தங்க ராஜா வின் சாதனைகளை தொடருங்கள் .
Ayyyo... ayyo... Murali sir,
enna oru arumaiyaana post. kannil oththikkollanum pola irukku.
solla vandha karuththai miga nutpamaaga, miga aazhamaaga padippavargal manadhil padhiya vaikkum thanmai. But at the same time, ezhuththil medhaaviththanam kaattaamal miga eliya nadaiyil vivarikkum paangu. arumai sir arumai.
Openly saying, Indian Express padippavargalukku mattume puriyumbadi ezhudhaamal, ennaippondra 'Dhina thandhi' padippavanukkum puriyum vannam ezhuthum thangal method of wrting simply superb.
(enakku tamil fontil ezudha theriyaamaikku romba varuththappadukiren. therindhaal unggalai paaraattu mazaiyil nanaiththu pacific kadadil muzhugadiththiruppen).
Mudhal mariyadhai patriya ungal ennam appadiye en ennaththaip piradhipalikkirathu. You wrote, what I want to write. Yes, "mudhal mariyaadhaiyum devarmaganum illennaa shivaji endra artist illaamale poyiruppaar" enbadhu pola pulambithiriyum arivu jeevigalukku nalla soodu.
silar avvirandu padangalai thalaiyil thookki vaiththu aadi, aadiye appadanggal ennaip pondra paamara (Dhinathandhi) rasigargalukku pidikkaamal ponadhu. aanaal padanggalukku banner katti, kodi katti, palamurai paarththu oda vaippavan Dhinathandhi rasiganthaan. Express rasigargal perumbaalor (ellorum alla, perumbaalor) o c passil padam paarppavargal.
ungal padhivaippadiththu vaanmazai kanda mayil pola manam thullukirathu. adikkadi ezudhungal sir, please.
a Royal Salute to your excellent memory power. arivu jeevigalukkum paamarargalukkum idaiye arumaiyaana inaippu paalam neengal. vaazhga... vaazhga...
(If anybody ask me 'are you Raghavendar group or Gopal group?' I will proudly say, "I am Murali group").
''உங்களுக்கு 'மெல்லிசை மன்னர்’கிற பட்டம் கொடுத்தது யார்?''
''1963-ம் வருஷம்னு நினைக்கிறேன்... திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகாடமி எங்க கச்சேரிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தது. என்.கே.டி. கலா மண்டபத்துல நிகழ்ச்சி நடந்தது. ஏகப்பட்ட கூட்டம். அந்த மேடையில்தான் ரசிகர்கள் மத்தியில் எனக்கும் ராமமூர்த்திக்கும் சிவாஜி கணேசன் 'மெல்லிசை மன்னர்’ங்கிற பட்டத்தைக் கொடுத்தார். அது காலாகாலத்துக்கும் நிலைச்சது ஆண்டவன் அனுக்கிரஹம்!''
Joe,
Yes. They are ones deserve this title from the most deserving hand to give it inthe world.
Adiram,
Pl.note that I am a loner. I dont belong to any group nor forming any group here. I am also Dhinathanthi viewer. If the same material is given to me in Tamil and English,I prefer to read it in my mother tongue ,Tamil. I dont intend to creat any misunderstanding or groupism and I mean it. I just spoke my heart and enjoyed with you guys. You have right to boycott me or criticise my writing style and you are welcome.I relish it. But dont mention gopal group,that is insulting. I dont need a sub-group in miniature homogenious group . I will never trouble you here after with medhaviththanam. But you express your animosity openly and I am thankful for the same.I appreciate your honesty. Again,I instate here that no groups here. Naanum, pammalar, vasu, ragavendhar rasiganthaan.
சுமிதாம்மா,
உங்கள் பதிவு ok . என்னுடைய ஆட்சேபணை ,அவன் ஒரு சரித்திரம்,புண்ணிய பூமி, வெற்றிக்கு ஒருவன் போன்ற தவறான பிரயோகங்கள்.
Friends,
arguments and counter arguments are healthy for the growth of a thread.
healthy arguments should get welcome, otherwise thread will become dull again.
( I have visited some other threads. thread endra peyaril 'photo album' nadaththik kondu irukkiraargal)
you are correctly told mr. adiram. the other thread what you have mentioned mgr thread is currently going steadily with united postings and praising their actor like anything . no criticism. no arguements - no warnings . we have to learn the good things ,
1992 ஆம் வருடம், நடிகர்திலகத்தை, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் சந்தித்த புகைப்படம் இந்த வார ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அப்புகைப்படத்தில் நானும் இடம்பெற்றிருப்பது, எனக்கும் பெருமை அளிக்கக்கூடிய பொக்கிஷப் புகைப்படமாக அமைந்துள்ளது. இத்தகைய வாய்ப்பை எனக்களித்த இறைவனுக்கு நன்றி.
http://i1234.photobucket.com/albums/...ps84544b41.jpg
//dig..
Gopal sir,
Please dont mistake me. I want to show me as nutral and for that I have to use the word 'group'. But it is well known you are the one told first about groups, like 'aal serkiraar', 'politics panraar' like that. But it seems there are two groups here (I dont want to mention names) one is 'talking about all movies' and the other one is 'talking about very selective movies'.
ok... leave it, we are all in Shivaji Group.
and regarding the 'medhaavithanam', why you take that word is for you, as I didnot mention your name or some other?. It will apply to all who are all writing in that nature, sometimes me too.
thanks again.
dig ends//
Mr. Chandrasekhar sir,
Nice to see the photo from Ananda Vikatam pokkisham. NT with V.P.Singh and others.
You also there in that picture makes it a very special one (I think the one who is standing behind NT).
It would be better if you round-up your face in that snap, sothat everyone here can identify you.
நமது நண்பர் கே.சந்திரசேகர் அவர்கள் நடிகர் திலகத்தின் பின்னால் நிற்கிறார். சிவப்பு நிறத்தில் அம்புக்குறி இட்டு காட்டப் பட்டுள்ளது.
http://i1146.photobucket.com/albums/...psfc9f965e.jpg
[தினத்தந்தி வாசகன் என்பதை நிரூபித்து விட்டேனாக்கும்]
திரு. ஆதிராம் அவர்களே,
தங்கள் அன்புக்கு நன்றி.
அம்புக்குறியிட்டுக் காட்டி அசத்திய திரு.ராகவேந்திரன் அவ்ர்களுக்கு நன்றி.
டியர் ஜோ சார்,
மெல்லிசை மன்னர்களுக்கு அந்தப் பட்டம் வழங்கிய நிகழ்ச்சியின் பார்வையாளர்களில் அடியேனும் ஒருவன் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் கூற விரும்புகிறேன். அந்த விழாவை நடத்தியது திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடெமி. அந்த சபா இன்னும் இயங்கி வருகிறது. விழாவை ஏற்பாடு செய்தவர் திரு என்.கே.டி. முத்து அவர்கள். அவர் தனியாக திருவட்டீஸ்வரன் பேட்டை சபா நடத்தி வந்தவர். இந்த விழாவிற்கு சில நாட்கள் முன்னர் அந்த அகாடெமி உறுப்பினர்களிடம் பல்வேறு பெயர்களை தரச் சொல்லி அதிலிருந்து தேர்ந்தெடுத்து தந்த பட்டம். சிவாஜி கணேசன் அவர்களுக்கு எத்தனையோ பட்டங்கள் யார் கொடுத்தாலும் எப்படி ஒரு ரசிகர் தந்த நடிகர் திலகம் என்ற பெயர் சாஸ்வதமானதோ அதே போல் விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு யார் எந்த பட்டம் கொடுத்தாலும் ஒரு ரசிகர் தந்த மெல்லிசை மன்னர்கள் என்ற பெயர் தான் அவர்களுக்கு நிலையான புகழைத் தந்துள்ளது. உள்ளன்போடு ஒரு ரசிகன் தரும் ஆதரவே நிலையானது என்பதற்கு இவ்விரண்டும் சரியான உதாரணங்கள். செவாலியே, பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று எவ்வளவோ அடைமொழி இருந்தாலும் நடிகர் திலகம் என்ற பெயரை உச்சரிக்கும் போது ஏற்படும் புல்லரிப்பு மற்றவற்றில் இல்லை.
அந்த நிகழ்ச்சி சென்னை என்.கே.டி. கலாமண்டபத்தில் நடைபெற்றது. அது open air theatre. அரங்கத்திற்கும் கேலரிக்கும் நடுவில் மிகப்பெரிய மைதானம். அந்த மைதானத்தில் சேர்கள் போடப் பட்டிருக்கும் . கிட்டத் தட்ட 1000 நாற்காலிகள் கொள்ளும். அது அன்றி கேலரியில் கிட்டத் தட்ட 500 பேருக்கு மேல் அமரலாம். அவையனைத்தும் நிரம்பி மைதானத்தில் நாற்காலி இடத்தை சுற்றிலும் நின்று கொண்டே பார்த்த மக்கள் மட்டுமின்றி போகும் வழியிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒலி பெருக்கி நெடுஞ்சாலை முகப்பிலும் வைக்கப் பட்டிருந்ததால் மக்கள் அங்கும் நின்று கொண்டிருந்தனர். நான் பள்ளி மாணவன்ஆகையால் நண்பர்களுடன் சிவாஜியைப் பார்க்கும் ஆசையில் முதலிலேயே போய் கேலரியில் அமரந்து விட்டோம். நாற்காலிகளில் உறுப்பினர்களுக்குத் தான் முன்னுரிமை.
நடிகர் திலகம் உள்ளே நுழையும் போது அந்த அரங்கில் எழுந்த அளப்பரை சொல்லி மாளாது. என் பங்கிற்கு நானும் எழுந்து குதிக்கிறேன். கை தட்டுகிறேன். அப்போதே எப்படியோ மனதில் நுழைந்து விட்டிருந்தார். அன்று தொடங்கிய ரசிகத் தன்மை இன்று வரை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
நினைவுகளை அசை போட வைத்ததற்கு நன்றி.
ராகவேந்திரா சார்.
மெல்லிசை மன்னர் விழா பற்றிய கூடுதல் தகவல்களுக்கு நன்றி . நேரடியாக பங்கு பெற்ற உங்கள் குதூகலம் உணரமுடிகிறது .
//செவாலியே, பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று எவ்வளவோ அடைமொழி இருந்தாலும் நடிகர் திலகம் என்ற பெயரை உச்சரிக்கும் போது ஏற்படும் புல்லரிப்பு மற்றவற்றில் இல்லை.//
Because, there will be many Chevaliers, many Padhmashrees, many Padhmabooshans...... but....
ONLY ONE NADIGAR THILAGAM in the world.
நண்பர்களே,
ஆதிராம் சொன்னது போல் நாம் அனைவரும் சிவாஜி என்ற குரூப் தான். ரத்தத்தில் ஏ, பி, ஏ பாசிடிவ், பி பாசிடிவ், என்பது போன்று பல்வேறு குரூப்கள் இருப்பது போல் நம்முடையது சிவாஜி குரூப் ரத்தம், கோபால் உள்பட.
சுமிதா அவர்களே,
கோபால் சாரும் தீவிரமான சிவாஜி ரசிகர் தான், நடிகர் திலகத்தை கடவுளாக மதிப்பவர். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் மற்ற ரசிகர்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் பொருட்படுத்தாமல் நடிகர் திலகத்தின் படங்களை சகட்டு மேனிக்கு விமர்சிப்பது தான் நம்மால் தாங்க முடிவதில்லை. ஒரு வட்டத்துக்குள் அவரை அடக்க முற்படுவதை நான் எதிர்த்துக் கொண்டே தான் இருப்பேன். அவர் படங்களை கோபால் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அது உரிமை. அதற்காக நடிகர் திலகத்தின் பங்களிப்பை அந்த படங்களில் consider பண்ண மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் போது தான் மனம் மிகவும் கஷ்டப் படுகிறது. சொல்லப் போனால் இவர் நடிகர் திலகத்தை சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் போது நமக்குத் தான் MENTAL TORTURE. நடிகர் திலகத்தின் பங்களிப்பை எந்த ஒரு படத்தினின்றும் ஒதுக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பாத்திரத்திலும் மிக நுண்ணியமான நுட்பமான விஷயத்தை செய்திருக்கிறார். அது வெற்றிக்கு ஒருவனாகட்டும் தர்மராஜா வாகட்டும், அவருடைய பங்களிப்பு 100 சதவீதத்திற்கு 0.1 சதவீதம் கூட குறைவில்லாமல் முழுமையாக தன் பங்கை அளித்திருக்கிறார்.
அவருடைய 50 வருட திரையுலக பங்களிப்பை வெறுமனே குறிப்பிட்ட சில படங்களுக்குள் அடக்க முயல்வதை நம்மால் ஜீரணிக்க முடியாது. அப்படிப் பட்ட போக்கு இருக்கும் வரை என்னுடைய எதிர்ப்பும் தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.
மற்ற படி அவருடைய எழுத்து நடையிலோ அல்லது அவர் சொல்லும் பாணியிலோ குறை சொல்ல ஏதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் சிவகாமியின் செல்வன் பாடல் அவருடைய சிறந்த ஆய்வினை எடுத்துக் காட்டியதாகும். ஆனால் சொல்லும் போது சில சமயம் எழுத்து வேகத்தில் சில சொற்கள் அவரை மீறி வந்து விட்டாலும் கூட ஆய்வு சிறந்த முறையில் இருப்பதை மறக்க முடியாது.
கோபால் தாங்கள் சிவாஜி ரசிகர் தான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை, அது தெரிந்த ஒன்று தான்.
தங்களுக்கு பிடித்த படங்களை எழுதுங்கள். ஆனால் தங்களுக்கு பிடிக்காதவை மற்றவர்களுக்கு பிடிக்கலாம் என்பதை மனதில் வைத்து எழுதுங்கள். அந்தப் படங்களைக் கிண்டல் கேலியை விட்டு விட்டு அவற்றில் நடிகர் திலகம் என்ன செய்திருக்கிறார் என்பதை ஆராயுங்கள். உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஏதேனும் ஒரு SPARK அவர் தருவார். அதிலிருந்து எங்களுக்கும் புதிய தகவல்கள் கிடைக்கும்.
தாங்கள் வெறுக்கும் படங்களை மீண்டும் ஒரு முறை பொறுமையாக பாருங்கள். படம் எப்படி என்பதை விட்டு விட்டு bias இல்லாமல் பார்க்கும் போது புதிய பரிணாமங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பை உணர்வீர்கள். அது கூட எங்களை விட உங்களுக்குத் தான் அதிகம் புலப் படும்.