A detailed ad but no information about theater names.
http://i125.photobucket.com/albums/p...ps069800e6.jpg
Printable View
A detailed ad but no information about theater names.
http://i125.photobucket.com/albums/p...ps069800e6.jpg
இந்த திரி தொடர, என்னை எல்லா வகையிலும் ஊக்குவித்து,
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்த எம். ஜி. ஆர். பக்தர்களுக்கும், அருமை நண்பர் சுப்பு உட்பட அனைத்து அன்பர்களுக்கும், எனது பணிவான நன்றி !
எல்லாப் புகழும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்தின் 28வது திரைப்படம் " என் தங்கை" பற்றிய தகவல்
1. படம் வெளியான தேதி : 31-05-1952
2. படத்தை தயாரித்த நிறுவனம் : அசோகா பிக்சர்ஸ், குகை, சேலம்.
3. கதாநாயகன் : மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : ராஜேந்திரன்
5. பாடல்கள் : பாரதிதாசன், மருதகாசி, சரவணபவா நந்தர், சுரதா, ராஜகோபாலன், நரசிம்மன்
6. இசை அமைப்பு : சி. என். பாண்டுரங்கன்
7. வசனம் : வில்லன் டி. எஸ். நடராஜன்
8. இயக்குனர் : சி.எச். நாராயணமூர்த்தி, எம். கே. ஆர் நம்பியார்.
9. கதை - மூலக்கதை : வில்லன் டி. எஸ். நடராஜன், திரைக்கதை : சி.எச். நாராயணமூர்த்தி
10. படத்தில் பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : எம். ஜி. சக்கரபாணி பி. எஸ். கோவிந்தன்,
பி. வி. நரசிம்மபாரதி, டி.ஆர்.பி. ராவ்,
மாதுரி தேவி, இ.வி. சரோஜா, எம். என். ராஜம்,
வி. சுசீலா, எஸ். ஆர். ஜானகி மற்றும் பலர்.------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
படத்தின் சிறப்பம்சம் :
1. அண்ணன் - தங்கை பாசத்தை அருமையாக வெளிப்படுத்தி, பின்னாளில் வெளிவந்த இதர
அனைத்து மொழி படங்களுக்கும் ஒரு முன்னோடியாக திகழ்ந்த திரைப்படம்.
2. இலங்கையில் அதிக நாட்கள் ஓடி வரலாற்று சாதனை புரிந்த படம்.
3. திருச்சி ஜுபிட்டர் அரங்கில் வெள்ளிவிழா கண்ட திரைப்படம்.
4. சென்னை - சித்ரா, பிரபாத், சரஸ்வதி மற்றும் மதுரை நியூ சினிமா, சேலம் ஒரியண்டல், கோவை அசோக் ஆகிய திரை அரங்குகளில் 100 நாட்களை கடந்த வெற்றிப்படம். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்தின் 28வது திரைப்படம் " என் தங்கை" கதைச் சுருக்கம்
காஞ்சிபுரத்தில் வசிக்கும் ராஜேந்திரன் தன் தம்பி செல்வரத்தினத்தின் படிப்பிற்காக கஷ்டப்பட்டுப் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறான். சென்னையிலே, செல்வம் (செல்வரத்தினம்) ராஜம் என்ற கல்லூரி மாணவியை காதலிக்கிறான்.
ராஜேந்திரன் சித்தப்பா கருணாகரம் பிள்ளை வஞ்சக நெஞ்சினன். அவன் மகன் சூரியமூர்த்தி சென்னையிலே படித்துக் கொண்டிருக்கிறான். அவன் மேரி என்ற கிறிஸ்துவப் பெண்ணைக் காதலிக்கிறான். ராஜேந்திரன் தன் தங்கை மீனாவின் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால் துரதிர்ஷ்டம் குறுக்கிடுகிறது. தோழியின் வீட்டிலிருந்து மழையிலே நனைந்து கொண்டு வரும் போது ஏற்பட்ட
இடி மின்னலால் கண்களை இழந்து குருடியாகிறாள் மீனா. இதையறிந்த
சகோதரன் செல்வம் துடித்துப் போய் வீடு திரும்புகிறான்.
காதலன் செல்வத்தை தேடிக் கொண்டு ராஜம் தன் தந்தை வீராசாமிப் பிள்ளையுடன் காஞ்சிக்கு வருகிறாள். விரைவில், ராஜம் - செல்வம் திருமணத்தை முடித்துவிட முடிவு செய்கின்றனர். முதலில், ராஜேந்திரனுக்கு கல்யாணம் செய்து பின் செல்வத்துக்கு செய்யலாம் என்று சொன்ன தன் தாய் குணவதியிடம் தங்கைக்கும், தம்பிக்கும், திருமணம் செய்யாமல் தான் செய்து கொள்வதில்லை
என்று சத்தியம் செய்கிறான் ராஜேந்திரன்.
பரீட்சையிலே பெயிலாகி வீடு திரும்பிய சூரியமூர்த்தி ராஜேந்திரன் குடும்பத்துக்கு பல வழிகளிலும் உதவுகின்றான். சென்னை சென்றிருந்த செல்வம் தாயின் அபாய நிலையினைத் தந்தி மூலம் அறிந்து ஓடோடி வருகிறான். குணவதி இறந்து விடுகிறாள். நாட்கள் பல உருண்டோடுகின்றன.
ஆண் உடையிலே சூரியமூர்த்தியைத் தேடிக் கொண்டு காஞ்சிபுரம் வருகிறாள் மேரி. வேறு ஜாதிப் பெண்ணைத் தன் மகன் மணம் செய்து கொள்வதை
விரும்பாத கருணாகரம் பிள்ளை மேரியை வீட்டை விட்டு விரட்டுகிறார்.
தாய் இறந்தபோது சொன்ன வார்த்தையைக் காப்பற்றுவதற்காக வஞ்சகச் சித்தப்பாவிடம் வீட்டை அடகு வைத்து தம்பியின் கலியாணத்தை நடத்தி விடுகிறான் ராஜேந்திரன். ஆரம்பத்தில் மீனா மீது அன்பு மழை பொழிகிறாள், ராஜம். நாளடைவில் அது மாறுதல் அடைகிறது. மீனாவைப் பல வித
கொடுமைப் படுத்துகிறாள். ஓர் நாள் தங்கையைத் தம்பி அடிக்கப் போவதைப் பார்த்துக் கொண்டு வந்த ராஜேந்திரன் கொதித்துப் போய் தம்பியை அடித்து விடுகிறான். இதையே காரணமாக வைத்துக் கொண்டு செல்வத்தை சென்னைக்கு அழைத்துச் சென்று விடுகிறாள் ராஜம். அச்சாபிசிலே (printing press) வேலை செய்து கொண்டிருந்த ராஜேந்திரனின் வேலையும் போய் விடுகிறது. வறுமையின் சீற்றம் நாளுக்கு நாள் அதிகமாகிறது.
சூரியமூர்த்தியை எதிர்பார்த்து ஏமாந்த மேரி பல கஷ்டங்களுக்குள்ளாகி கடலில் விழப் போகும் பொது, ஒரு பாதிரியால் காப்பாற்றப்பட்டு நர்ஸாகிறாள். வீரசாமிப் பிள்ளை செல்வத்திடம் பத்தாயிரம் ரூபாயை கொடுத்துக் குதிரைப் பந்தயத்துக்கு அனுப்புகிறார். பணம் போய் விட்டதை அறிந்த வீராசாமிப் பிள்ளை மாரடைப்பால் மரணமடைகிறார். அன்றிலிருந்து செல்வம் குதிரைப் பந்தயத்தைத் தோழனாக கொள்கிறான். கைப்பொருள் குறைந்து கொண்டே வருகிறது. கடைசியில், ராஜத்தின் தாலியையும் கேட்கிறான், விற்பதற்கு.
வீராசாமிப் பிள்ளை இறந்ததை விசாரிக்க ராஜேந்திரன் சென்னை வருகிறான். ராஜேந்திரனைக் கண்ட ராஜம் அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். தம்பி கெட்டு விட்டதைப் பார்த்து மனமுடைந்து வீடு திரும்புகிறான், ராஜேந்திரன். மேரி விஷயமாகத் தனக்கும் தந்தைக்கும் தகராறு ஏற்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறுகிறான் சூரியமூர்த்தி.
தாலியை விற்பதற்கு கேட்ட செல்வத்திடம் நியாயத்தை எடுத்துரைத்து அவனைத் திருந்தும்படி செய்கிறாள் ராஜம். அன்று மாலை காரில் இருவரும் புறப்பட்டுச் செல்கிறார்கள். ஒரு விபத்து ஏற்பட்டு ராஜம் இறந்து விடுகிறாள். செல்வம் தன் கை, கால்களை இழந்து காஞ்சிபுரம் சென்று அண்ணன் காலடியில் விழுந்து உயிர்
விடுகிறான்.
கருணாகரம் பிள்ளையால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட ராஜேந்திரனும், மீனாவும் வழியில் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு சென்னையை அடைகிறார்கள்.
அங்கு ரிக்ஷா இழுத்துக் கொண்டிருக்கும் சூரியமூர்த்தியை சந்திக்கின்றனர். மீனாவின் பசிக்குச் சாப்பாடு கொண்டு வரச் சென்ற சூரியமூர்த்தியைக் கருணாகரம் பிள்ளை சந்தித்து, வீடு திரும்ப வேண்டுகிறார். மறுத்து விடுகிறான் மகன். பின் தொடர்ந்த கருணாகரம் பிள்ளை, வேகமாக வந்த மோட்டாரினால் தாக்குண்டு
ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.
அங்கு நர்ஸாக இருக்கிறாள் மேரி. அவளையும், அவனையும், மணம் செய்து
கொள்ளும்படி சொல்லி உயிர் விடுகிறார் கருணாகரம் பிள்ளை.
வெகு நேரமாகியும், சூரியமூர்த்தி வராததைக் கண்ட ராஜேந்திரன் தங்கைக்கு ஆகாரம் கொண்டு வர கிளம்புகிறான். பெட்டித் தூக்கி கிடைத்த இரண்டணாவுக்கு தோசை வாங்கித் திரும்பிய ராஜேந்திரன் வழியிலே பிச்சை கேட்ட நொண்டிக்கு அந்த தோசையை கொடுத்து விட்டு திரும்பும் சமயம் ஒரு அவன் கையில் பண பர்ஸை எறிந்து விட்டு ஓடி விடுகிறான்.
திருடனை துரத்தி வந்தவர்கள் ராஜேந்திரனை திருடன் என மதித்து அடிக்கின்றனர். மீனா, தன் அண்ணன் அடிபடுவதைக் கேட்டு பொறுக்காமல் தடுமாறி ஓடி வரும்பொழுது விழுந்து இறந்து விடுகிறாள்.
மற்றவை திரையில் காண்க !
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்