Originally Posted by [url=http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=63789&Section ID=141&MainSectionID=141&SEO=&Title=
Dinamani[/url]] இயக்குநர் ஷங்கர் பேசும்போது...
""என் உதவியாளர் அனந்தகிருஷ்ணன் துடிப்பானவர்; திறமையானவர். அதனால்தான் நல்ல படைப்பையும் படைப்பாளிகளையும் ஆதரிக்கும் விகடன் நிறுவனம் அவருக்கு வாய்ப்பளித்துள்ளது. இதுவரை இளையராஜாவுடன் திரைப்படங்களில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு அமையவில்லை. ஒரு விளம்பரப் படத்தில் மட்டுமே பணியாற்றியிருக்கிறேன்.
அடிக்கடி சோர்வுறும்போதும் என் மனம் சஞ்சலம் அடையும்போதும் நான் தேடுவது இளையராஜாவின் பாடல்களைத்தான். அவற்றைக் கேட்டவுடன் புத்துணர்வு பிறக்கும். இளையராஜா இசையில் விகடன் நிறுவனம் தயாரித்துள்ள "வால்மீகி' படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்'' என்றார்.