மாற்றார் தோட்ட இசை மதுரம்
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இசைக் கோர்வை
பகுதி 13 : மூன் ரேக்கர் (1979) / Moon Raker starring Roger Moore as James Bond OO7!
Moonraker pre-title action sequence! Enjoyable music but back projection irks!!Quote:
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மட்டுமே பிரமிப்பான பிரம்மாண்டங்கள் என்னும் கருத்து ஸ்டார் வார்ஸ் குளோஸ் என்கவுண்டர்ஸ் போன்ற அதிபிரம்மிப்பான தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஜார்ஜ் லூகாஸ் விண்வெளி சார்ந்த படங்களின் வருகையால் சற்று மாறத்துவங்கிய காலகட்டம்! போட்டிகளால்தான் தரம் உயரும் என்ற கூற்றின்படி புரோக்கோலி ஜேம்ஸ் பாண்டையும் விண்ணில் ஏவி விட எண்ணி ஆவியான படம்தான் மூன்ரேகர் !!
டைட்டிலுக்கு முன்னால் வரும் விண்வெளி சாகசமும் பேக் ப்ரோஜக்ஷன் உத்தி புகுத்தப் பட்டதால் அதிகம் ரசிக்க முடியவில்லை.
திரைக் கதையும் விண்வெளி சார்ந்த விண்கல/விமானக் கடத்தலை மையமாகக் கொண்டதால் அதிக பொருட்செலவில் அமைக்கப் பட்ட அரங்குகளில் காட்டிய ஆர்வத்தை இயக்குனர் திரைக்கதையில் கோட்டை விட்டு சலிப்படையச் செய்தார் பழையபடி ரோஜர்மூரும் ஒரு மாடல் போல வந்து போனார்!
மீண்டும் இரும்புப் பல் வில்லன் ரிச்சர்ட் கீல் நுழைக்கப் பட்டாலும் அவர் தோன்றும் காட்சிகள் சொதப்பலான எரிச்சலே!! சற்று ஏமாற்றமளித்த காமிக் கதை வரிசைப் படமாக முடிந்தது !
ஆனாலும் டைட்டில் தீம் இசை ஈர்ப்பானது ! இப்படத்திலிருந்து ரோஜர்மூரின் வயதான தோற்றம் வெளிப்படையாக ஒரு ஆயாசத்தை உண்டாக்கத்தொடங்கியது !! முந்திய படத்தில் உச்சம் தொட்ட மூர் ஏழு பட சாதனையாளரானாலும் படிப்படியாக தொய்வடைய துவங்கினார்!!
https://www.youtube.com/watch?v=Jesy6Kt-tvc
Moonraker Titles with theme music!
மீண்டும் ஜான் பெரி இசையில் ஷர்லி பஸ்ஸி பட்டையை கிளப்பினார் where are you பாடல் மூலம் !
https://www.youtube.com/watch?v=eR6k_2IVNVU
Some more action scenes .....
https://www.youtube.com/watch?v=woDyKekeTTg