http://i58.tinypic.com/14lsoqw.jpg
Printable View
முரளி சார், சில விளக்கங்களை நான் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.
வேதனை அளித்தாலும் உண்மை அது தான். இங்கு என்ன நடந்த்து என்று தெரியாமல் தான் வதந்திகளை நம்பி நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்களின் அடிப்படையில் மன்றங்கள் கலைக்கப்பட்டது. நான் வெறும் யூகங்களின் அடிப்படையில் கருத்து அலசல்களின் அடிப்படையிலும் எதையும் கூறவில்லை. பெருந்தலைவருடன் நேருக்கு நேராக மாணவர் காங்கிரஸில் இருந்து கருத்து விவாதங்களை நடத்தியவன். மாணவர் காங்கிரஸுக்கு அரசியல் தேவையில்லை என்று கூறினாலும் பரவாயில்லை, அலட்சியமாக பதில் சொன்னார்கள். விவசாயிகள் போராட்டத்தின் போது பெரும்பாலான விவசாயிகளுக்காக காவல் நிலையங்களுக்குச் சென்று முறைப்படியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து அவர்களை விடுவிக்க முயற்சி எடுத்த்து சிவாஜி மன்றங்கள் தானே தவிர உள்ளூர் காங்கிரஸ் அமைப்புகளல்ல. பெருந்தலைவர் காமராஜர் மேல் உங்கள் எல்லாரையும் விட அதிகமாகவே மதிப்பு வைத்திருப்பவன் நான். நான் சொல்வதை ஏற்காத்தும் ஏற்க மறுப்பதும் அவரவர் இஷ்டம். ஆனால் வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும். காமராஜரைப் பற்றி நான் எதுவும் தாழ்த்திப் பேசவில்லையே. காமராஜர் ஏன் நடிகர் திலகத்தை இன்னும் பயன்படுத்தவில்லை என்கிற ஆதங்கத்தைத் தான் கூறுகிறேன். எனக்கு ஏதோ காமராஜர் விரோதி போல சித்தரிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அன்றைய கால கட்டத்துக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு நடிகர் திலகத்தின் பலத்தை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் 1971லேயே ஆட்சியைப் பிடித்திருக்கலாம்.Quote:
இன்றைய தினம் மாலையிலும் இரவிலும் பாஸ்கருக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் நீங்கள் எழுதியிருக்கும் பல விஷயங்களோடு நான் மாறுபடுகிறேன். ஆனால் அவற்றை பற்றி நான் பேசி விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெளியூரில் இருந்தவர்கள் அனைவரும் அந்த காலக்கட்டத்தில் பள்ளி மாணவர்கள் விஷயம் தெரியாதவர்கள் அறியாமையில் ஊறியவர்கள் அதனால் நடிகர் திலகம் எடுத்த முடிவை எதிர்த்தார்கள் என்று நீங்கள் சொல்வது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
இன்னும் கூட சொல்லலாம்.
பெருந்தலைவர் மறைந்த போது ஒரு விநியோகஸ்தரை வைத்து நடிகர் திலகத்தை தரக்குறைவாக சித்தரித்து போஸ்டர் அடித்த்து யார். திராவிடக் கட்சிகளா.
அதே போல அதே விநியோகஸ்தர் திரும்பிப்பார் படத்தின் மறு வெளியீட்டின் போது விளம்பரத்தில் வேண்டுமென்றே நடிகர் திலகத்தின் விதவிதமான போஸ்களை போட்டு பெண் பித்தன், ஸ்த்ரீ லோலன் என்றேல்லாம் போஸ்டர் அடித்தது. இதற்கு காரணமாக இருந்தது யார், திராவிடக் கட்சிகளா. எதுவுமே தெரியாமல் காமராஜர் மேல் இருக்கும் அபிமானத்துக்காக கேள்விப்பட்ட விஷயங்களையெல்லாம் வைத்து, நடிகர் திலகத்தைக் குறை கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா.
மற்றவர்களிடம் ஒரு விரலை சுட்டிக்காட்டும் முன் நம்மை மூன்று விரல்கள் காட்டுவதை பார்க்க வேண்டும். திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்கும் தொடர் வெற்றிக்கும் காரணம், இங்குள்ள தேசிய இயக்கங்களின் தவறான அணுகுமுறையே அன்றி மக்களல்ல.
மக்கள் செய்த தவறு என்றால் நடிகர் திலகம் என்கிற உத்தமமான மனிதரைப் புறக்கணித்தது தான்.
களத்தில் பணியாற்றியவர்களுக்குத் தான் அந்த வலி புரியும். கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து ஏதோ சிந்தனைப் போக்கில் லாஜிகல் அனாலிஸிஸ் அடிப்படையில் கூறப்படும் விஷய.மல்ல இது நேரடியாக அனுபவித்ததன் மன வலி. உங்கள் எல்லோரையும் விட அதிகமாகவே காமராஜரைப் போற்றியவன் நான். தெருத்தெருவாய் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளருக்காக சுற்றி வாக்குக் கேட்டு படிப்பை விட்ட சிவாஜி ரசிகனுக்குத் தான் தெரியும். அதனுடைய கஷ்டம். மேம்போக்காக விமர்சனம் எழுதுவது சுலபம். அதை என்னாலும் செய்ய முடியும்.
இதில் தனிப்பட்ட சர்ச்சை என்று என்னைக் குறை கூறாதீர்கள். நான் என்னுடைய கருத்து எழுதவில்லை. அன்றைய சூழலிீல் நடிகர் திலகத்திற்கு ஏற்பட்ட கஷ்டங்கள் சொல்லப்படாமலேயே போய் விடக்கூடாது என்கிற நியாயமான காரணத்தில் எழுதப்பட்டது. இதில் தனிப்பட்ட நபர்களுக்கிடையே சண்டை என்பது எங்கிருந்து வந்தது.
முத்தையன் சார்
புதிய பறவை நிழற்படங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உள்ளது.
கோவை ராயலில் கௌரவம் படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள் மாலைகள்.
http://i1065.photobucket.com/albums/...psd7ayfbmo.jpg
http://i1065.photobucket.com/albums/...psreuol3wk.jpg
http://i1065.photobucket.com/albums/...psp4gfchxm.jpg
http://i1065.photobucket.com/albums/...psqhfrujqc.jpg
http://i1065.photobucket.com/albums/...psctjuexxp.jpg
http://i1065.photobucket.com/albums/...psf4gl7dus.jpg
http://i1065.photobucket.com/albums/...psz03kd0s6.jpg
http://i1065.photobucket.com/albums/...psntkpfo3m.jpg
http://i1065.photobucket.com/albums/...psqthenf1m.jpg
மதுரை சென்ட்ரலில் 2.10.2015 அன்று வெளியாகும் மக்கள்தலைவர் சிவாஜியின் உத்தமன் பட போஸ்டர். 1
http://www.sivajiganesan.in/Images/2509_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
பெருந்தலைவர் காமராஜரைப் போற்றி நடிகர் திலகத்தைக் குறைகூற வேண்டும் என்று நினைத்தால் அதற்கென்று தனியாக திரி ஆரம்பித்து மனம் போன போக்கில் நடிகர் திலகத்தை விமர்சியுங்கள். யாரும் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக நடிகர் திலகம் திரியிலேயே அவரைக் குறை கூறுவதும் அதற்கு மற்றவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எவ்வகையில் நியாயம். அரசியல் வேண்டாமென்றால் குறையும் கூறாமல் பாராட்டவும் செய்யாமல் சினிமாவை மட்டும் எழதலாமே. எந்த அளவிற்கு நடிகர் திலகத்தைக் குறை கூறுபவர்களுக்கு உரிமையுள்ளதோ அதை விட அதிகமாக அவரை ஆதரிப்பவர்களுக்கு உள்ளது. ஸ்தாபன காங்கிரஸால் சிவாஜிக்கு லாபமில்லை, சிவாஜியால் தான் ஸ்தாபன காங்கிரஸுக்கு லாபம். ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்து எந்த சிவாஜி படமும் ஓடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதற்குப் பிறகும் அவருடைய படங்கள் அதிக அளவில் வசூலை ஈட்டியுள்ளன.
திரிசூலம், உள்பட பல படங்கள் வசூலில் பிரளயத்தை ஏற்படுத்தியது காமராஜர் காலத்திலோ அல்லது ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களாலோ அல்ல.
மதுரை சென்ட்ரலில் 2.10.2015 அன்று வெளியாகும் மக்கள்தலைவர் சிவாஜியின் உத்தமன் பட போஸ்டர். 2
http://www.sivajiganesan.in/Images/2509_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
மதுரை சென்ட்ரலில் 2.10.2015 அன்று வெளியாகும் மக்கள்தலைவர் சிவாஜியின் உத்தமன் பட போஸ்டர். 3
http://www.sivajiganesan.in/Images/2509_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
உத்தமன் சிவாஜி கொண்டாட்டம் மதுரையில் ஆரம்பம்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சென்ட்ரலில் 02.10.2015 வெள்ளியன்று வெளியாகும் உத்தமன் திரைப்படத்திற்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒட்டபடவுள்ள வரவேற்பு சுவரொட்டி.
http://www.sivajiganesan.in/Images/2509_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
Cho Ramaswamy in NT starrer Thangappadhakkam
https://www.youtube.com/watch?v=v87Cee3JhOQ
சென்னையில் 21-07-2015 அன்று நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகம் மணிமண்டபம் கோரி நடைபெற்ற உண்ணாவிரதத்தின் போது அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கலையுலகைச் சார்ந்தவர்கள் ஆற்றிய உரையின் காணொளி:
மதுரை திரு.சுந்தரராஜன் அவர்களின் www.sivajiganesan.in இணையத்தில் வழங்கப்பட்ட இணைப்பு:
http://www.sivajiganesan.in/unnavi%20video.html
அன்புள்ள ராகவேந்தர் சார்,
நடிகர்திலகம் எடுத்த பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் குறித்து திருச்சி பாஸ்கர் கூறிய விஷயங்கள் சற்று கடுமையான வார்த்தைகளால் சொல்லப்பட்டாலும் ஏற்கத்தக்கதே. 1970-களில் (குறிப்பாக பெருந்தலைவரின் இறுதிக்காலமான 75-ல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றால் அது ஸ்தாபன காங்கிரஸ்தான், அதிலும் ஸ்தாபன காங்கிரஸ் என்றால் அது சிவாஜி படைதான் என்ற நிலையிருந்ததுதான் உண்மை. அந்த அளவுக்கு சிவாஜி ரசிகர்கள்/தொண்டர்கள் / மன்றத்தினர் கட்சியை வளப்படுத்தி வைத்திருந்தனர். கொடிபிடித்து கொள்கைப்பணியாற்றிய தங்களுக்கு தெரியாதது அல்ல.
பெருந்தலைவர் தனக்குப்பிறகு இன்னார்தான் என்று காட்டவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர் இப்படி திடீரென மறைவார் என்பது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. பாயில் படுத்து மரணத்தை எதிர்நோக்கிய நிலையில் இருந்திருந்தால் ஒருவேளை அடுத்த தலைவரை சுட்டிக்காட்டியிருக்கக் கூடும். ஆனால் மரணத்துக்கு முதல்நாள் நடிகர்திலகத்தை அவர் இல்லம் வரை சென்று வாழ்த்தி விட்டு வந்தவர். இதெல்லாம் எல்லாரும் அறிந்ததே.
சரி, அவர்தான் சுட்டிக்காட்டவில்லை. ஸ்தாபன காங்கிரஸ் என்றாலே தனது மன்றமறவர்கள்தான் என்பதை அறிந்திருந்த நடிகர்திலகம் உடனே ஸ்தாபன காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டுமல்லவா?. யார் எதிர்த்திருப்பார்கள்?. பா.ரா.பின்னால் ஒருபத்துபேர், குமரி அனந்தன் பின்னால் ஒரு பதினைந்துபேர், நெடுமாறன் பின்னால் மதுரையில் மட்டும் ஒரு கூட்டம் என்றுதானே நின்றிருப்பார்கள்?. ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரிய படை சிவாஜி படைதானே. அதைப்பயன்படுத்தி ஸ்தாபன காங்கிரசைக் கைப்பற்றி தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டாமா?. அதுதான் அவர்மீது உயிரையே வைத்திருந்த, அவருக்காக எதையும் செய்யத்துணிந்து நின்ற அவரது தொண்டர்களின் பெரிய ஆதங்கம்.
எந்த இயக்கத்துக்காக தன உடல்உழைப்பு, பொருள், தன் தொண்டர்களின் உழைப்பு அனைத்தையும் செலவழித்து உழைத்தாரோ அவை அனைத்தையும் பலனின்றி விட்டு விட்டு சட்டென்று "வேறு" முடிவு எடுத்துவிட்டார். இது ரசிகர் / தொண்டர்களின் மிகப்பெரிய ஏமாற்றம்.
சரி, போனார். அங்கும் ராஜ்யசபா எம்.பி.வரை உயர்த்தப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார். அங்காவது நிலைத்தாரா?. மிகத்தவறான நேரத்தில் மிகத்தவறான முடிவாக தனிக்கட்சி துவங்கினார். தொண்டர்களுக்கு மீண்டும் ஏமாற்றம். "எங்கள் நடிகர்திலகத்துக்காக எதையும் செய்வோம், ஆனால் எங்களுக்கு துளியும் சம்மந்தமில்லாத திருமதி வி.என்.ஜானகி அம்மையாரை முதலமைச்சராக்க எங்கள் உழைப்பை செலவிட மாட்டோம்" என்று பின்வாங்கினர். அதன் முடிவாக அனைத்து இடங்களிலும் அந்த கூட்டணி தோல்வி. பி.எச்.பாண்டியன் மட்டும் தன் சொந்த செல்வாக்கில் சேரன்மாதேவியில் வெற்றி.
இப்படியெல்லாம் அவர் எடுத்த தவறான அரசியல் முடிவுகளால் தங்கள் உழைப்பு வீனாக்கப்பட்டதில் தொண்டர்கள் மனதில் விரக்தியும் அதனால் சில வார்த்தைப் பிரயோகங்கள் வருவது இயற்கை. அதற்காக அவர்கள் நடிகர்திலகத்தை குறை சொல்ல அலைகிறார்கள் என்று கணிப்பது தவறு.
உங்களைப் பொருத்தவரை நடிகர்திலகம் எடுத்த எல்லா நிலைப்பாட்டையும் ஆதரித்தவர். ஸ்தாபன காங்கிரசில் இருந்தபோது அது சரியெனப்பட்டது, இந்திராகாந்தி பக்கம் சென்றபோது அதையும், ஏற்றுக் கொண்டீர்கள், தமிழக முன்னேற்ற முன்னணி கண்டபோது அதையும் முழுமையாக ஏற்றுக்கொண்டீர்கள். ஜனதா தளத்தில் இருந்ததையும் ஆதரித்திருப்பீர்கள். அதாவது அரசியலில் நடிகர்திலகம் எது செய்தாலும் ஓ.கே.
அதே சமயம் அவருக்காக உழைத்த மற்றவர்களுக்கு அவரது இப்படிப்பட்ட முடிவுகளால் சரிவுகள் நேர்ந்தபோது ஆதங்கம், வருத்தம் ஏற்பட்டு, அதை அவர்கள் வெளியிடும்போது அவர்களை ஏதோ நடிகர்திலகத்தின் விரோதிகள், எதிரிகள், அவரை குறை சொல்லி சுகம் காண்பவர்கள் என்பது போல நீங்கள் சித்தரிக்க முயல்வது ஏற்புடையதல்ல.
டியர் முரளி சார்,
இந்த விஷயத்தை தவிர்க்கும்படி நீங்கள் சொல்லியும் நான் எழுதியதற்கு மன்னிக்கவும். நடிகர்திலகத்தின் அரசியல் முடிவுகளை விமர்சித்தாலே அவர்கள் சிவாஜியின் விரோதிகள் என்பதுபோல சித்தரிக்கும் மனப்பான்மை மாற வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு நோக்கமில்லை.