http://i1077.photobucket.com/albums/...psosvto9fj.jpg
கோவை நாஸ் அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக
நடித்த "ரகசிய போலீஸ் 115" தினசரி 4 காட்சிகள் நேற்று முதல் (26/05/2017)
நடைபெறுகிறது .
Printable View
http://i1077.photobucket.com/albums/...psosvto9fj.jpg
கோவை நாஸ் அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக
நடித்த "ரகசிய போலீஸ் 115" தினசரி 4 காட்சிகள் நேற்று முதல் (26/05/2017)
நடைபெறுகிறது .
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் ராகவேந்திரா அவர்களுக்கு மக்கள் திலகம் திரி நண்பர்கள் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
https://s14.postimg.org/9i07pz23l/IMG_4318.jpg
மக்கள் திலகத்தின் பக்தர்
கோவை வி கே எம்
தற்போது ஜெயா மூவிஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் "
இரவு 10 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/34y61qc.jpg
தினமலர் -வாரமலர் -28/05/2017
http://i1077.photobucket.com/albums/...pshimmige5.jpg
http://i1077.photobucket.com/albums/...ps0jw8koex.jpg
http://i1077.photobucket.com/albums/...pswej1xn1i.jpg
தினமலர் =28/05/2017
தமிழ் இந்து -30/05/2017
http://i1077.photobucket.com/albums/...psl7w9uslg.jpg
Our Evergreen Unparallel Anytime Emperor of both Cinema Field, Political World Makkalthilagam MGR., Thread star writers messrs. Loganathan, Sundarapandian, Masthan saheb etc matters & documents Super Fine... Go ahead Positive...
புரட்சித் தலைவரைப் பற்றி மதுரை தினமலரில் இது உங்கள் இடம் பகுதியில் மல்லிகை மன்னன் என்ற பேமானி மனம்போன போக்கில் எழுதி இருக்கிறான். ஜானகி அம்மையாரைப் பற்றியும் எழுதி இருக்கிறான்.
புரட்சித் தலைவர் எதையும் மறைத்தது இல்லை. தனக்கு 3 மனைவிகள் என்பதை மறைத்தது இல்லை. அந்தக் காலத்தில் அது குற்றமாக யாரும் நினைக்கவும் இல்லை. இருதார தடை சட்டமும் இல்லை. நம்ப முன்னோர்கள் யாருக்காவது உறவினருக்காவது அந்த காலத்தில் 2 பெண்டாட்டி இருப்பார்கள்.
ஜானகி அம்மாள் யார்? அவரது பின்னணி என்ன? அவரது முன்னாள் கணவரிடம் என்ன கொடுமைகளை அனுபவிச்சார்? தான் அவரை எப்படி கல்யாணம் செய்ய வேண்டி வந்தது? என்பதை எல்லாம் விளாவாரியாக சொந்த வாழ்க்கை சரித்திரத்தில் நான் ஏன் பிறந்தேன்? புத்தகத்தில் புரட்சித் தலைவர் எழுதி இருக்கிறார்.
ஜானகி அம்மாளை புரட்சித் தலைவர் முறைப்படி சட்டபூர்வமாக பதிவு திருமணம் செய்து கொண்டு வெளிப்படையாக அறிவித்தார்.
தமிழகத்துக்கு கஷ்டத்தோடு வாய்ப்பு தேடி வந்தாலும் தன் சொத்தை எல்லாம் தமிழக மக்களுக்குத்தான் கொடுத்தார். மனைவிகளை வெளிப்படையாக அறிவித்தார். ரகசியமாக கல்யாணம் செய்து கொண்டு மறைவு வாழ்க்கை நடத்தவி்ல்லை.
மல்லிகை மன்னன் என்ற நாய்க்குத்தான் அறிவில்லை. மதுரை தினமலர் பதிப்பு நடத்தும் குடிகார பொம்பளை பொறுக்கி பன்றிகளுக்குமா அறிவு இல்லை? எல்லா தினமலர் பதிப்பையும் சொல்லக் கூடாது. இவன்கள் குடும்பச் சண்டையில் ஆளுக்கு ஒரு ஊர் பதிப்பு பிரிச்சுக் கொண்டார்கள்.
தினமலர் நெல்லை பதிப்பு பாண்டிச்சேரி பதிப்பு தொடங்கி வைத்தவர் புரட்சித் தலைவர்தான். நன்றி கெட்ட பன்றிகள்.
http://i65.tinypic.com/29qcxtf.jpg
புரட்சித் தலைவரின் பெருந்தன்மை
ஒரு மாணவன் கோவையைச் சேர்ந்தவன். அவன் தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் புகழ் பெற்றவர். அவன் கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் சினிமாவில் சேர ஆசைப்பட்டான்.அதற்காக திரைப்படக்கல்லூரியில் கேமராமேன் பிரிவுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தபோது, அதற்கு வயது அதிகமாகிவிட்டது என்ற காரணத்தால் டைரக்ஷன் கோர்ஸுக்கு விண்ணப்பித்தான்
அவன் தந்தை சென்னைக்கு கம்யூனிஸ்ட் அலுவலகமான-பாலன் இல்லத்துக்கு அனுப்பி வைத்தார்.சென்னையில் அவன் இன்னார் தோழரின் மகன் என்றதும் தோழர் கல்யாண சுந்தரமே அவனுக்காக முயற்சிகள் மேற்கொண்டார்.
என்ன வேலைக்கு தம்பி? என அவனைக் கேட்டார்.அவன் இயக்குநர் படிப்புக்கு என்றான்.அவர் "நமக்கு அங்கு யாரையும் தெரியாதே! என கூறிவிட்டு, சரி ஒரு தோழர் மூலம் பார்ப்போம்" எனகூறினார்.பின்னர்
ஒரு தோழரின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
அந்த கார் தலைமைச் செயலகம் சென்றது.அங்கு ஒரு அறைக்கு அந்த தோழரும் வாலிபனும் சென்றனர்.அந்த அறை முகப்பில்'முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்ற போர்டு காணப்பட்டது.
இருவரும் அந்த அறைக்குள் நுழைந்தனர்.எம்.ஜி.ஆர் அந்த தோழரைக் கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார்.தோழர் சொன்னதைக் கேட்டுவிட்டு அந்த வாலிபனிடம் 'டைரக்ஷனுக்கு படிக்கணுமா? டைரக்ஷன் பத்தி உனக்கு என்ன தெரியும்?" என கேட்டார்."அது பத்தி தெரியாது. இனிமேதான் கத்துக்கணும்! என்றான்.அவன் முதுகில் தட்டி. "உனக்கு ஏற்பாடு செய்கிறேன்.நன்றாக படி" என கூறி அனுப்பி வைத்தார்.
வெளியே வந்ததும் அந்த தோழரிடம்," எம்.ஜி.ஆரே கட்டி பிடிக்கிற அளவுக்கு நீங்க பெரிய ஆளா? உங்கள் பெயர் என்ன?" என கேட்டான் அந்த வாலிபன்.
அதற்கு அந்த தோழர்" நான்தான்
வழக்கறிஞர் என்.டி.வானமாமலை
எம்.ஜிஆருக்கு எதிரா, எம்.ஆர்.ராதாவுக்காக வாதாடிய வக்கீல்" என்றார்.இதைக்கேட்டதும் அந்த வாலிபன் மிகுந்த ஆச்சரியத்துடன் "அப்போ எம்.ஜி.ஆர் உங்களைக் கட்டிப்பிடித்து ரொம்ப மரியாதையாக பேசினாரே" என்றான்.அதுதான் #எம்ஜிஆரின் #பெருந்தன்மை என்றார் தோழர்.
அந்த வாலிபன்தான் ரஜினியை 'எஜமான்' படத்திலும், கமலை 'சிங்காரவேலன்' படத்திலும், விஜயகாந்தை ' சின்ன கவுண்டர் படத்திலும் இயக்கிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.
பி.கு... இந்த தகவலை கூறியவர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் குமுதம் லைப் இதழில்
நன்றி ; வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி முகநூல்
இன்று (02/06/2017) முதல் சென்னை பாலாஜியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு பின் பாசம் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i1077.photobucket.com/albums/...psmgjnlipp.jpg
தமிழ் இந்து -02/06/2017
http://i1077.photobucket.com/albums/...ps6pghxfx4.jpg
மாலை மலர் -2/06/2017
http://i1077.photobucket.com/albums/...psz06ua5lb.jpg
வட சென்னை , தங்கசாலை மணிக்கூண்டு அருகில் வைக்கப்பட்டுள்ள பேனர்
http://i1077.photobucket.com/albums/...pscok3yt9s.jpg
இன்று (03/06/2017) இரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "குடியிருந்த கோயில் " திரைப்படம்
ஒளிபரப்பாகிறது .
http://i1077.photobucket.com/albums/...pshbhxnwlj.jpg
http://i66.tinypic.com/21444l0.jpg
உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு பேட்டியின்போது தலைவரின் படங்களுக்கு எதிராகவே விமர்சனம் எழுதும் ஒரு வாரப்பத்திரிகை நிருபர்: ஏன் சார்! உங்கள் படத்தில் விஞ்ஞானிகளுக்கு முருகன் என்றும் பைரவன் என்றும் பெயர் வைத்துள்ளீர்களே? அது சரியாகப்படவில்லையே! என்று கேட்டார்.
சற்றும் கோபமின்றி நம் தலைவர் கூறியதாவது: தம்பி! நம் தமிழ் நாட்டு விஞ்ஞானிகள்தான் வெளிநாடு சென்று கட*மையாற்றுவதாக படம் எடுத்துள்ளேன். ஏன்? முருகன், பைரவன் போன்ற பெயருள்ள*வர்கள் அறிஞராகமுடியாதா? தமிழ்க்கடவுள் முருகனின் எதிரி பைரவன்தானே! எனவேதான் கதாநாயகன் முருகனுக்கு வில்லனாக பைரவனை வைத்தேன்! என் படத்தை பார்க்கும் பெரும்பாலான சாமான்ய ரசிகர்களுக்கும் எளிதில் புரியும் என்றார். அதுசரி! பின்னாளில் சாதனை படைத்த மயில்சாமி அண்ணாதுரை, பொன்னுராஜ், சுந்தர்பிச்சை போன்றவர்கள் பெயரை வைத்தா சாதித்தார்கள்? உண்மையில் எம்ஜியார் ஒரு தீர்க்கதரிசி!
நன்றி முகநூல்
பின்னூட்டம்
Govindha Rajan ஆமாம் சார் நானும் படித்திருக்கிறேன். தலைவருக்கும் இயக்குநர் கே. சங்கருக்கும் மட்டும் தான் இந்த முருகன் என்ற பெயரில் அலாதி பிரியமாம் ப.நீலகண்டன், எம்.ஜி.ஆர் சக்ரபாணி எம்.எஸ்.வி கண்ணதாசன் வாலி எல்லோருமே சொன்னார்களாம் கதைப்படி நீங்கள் ஒரு விஞ்ஞானி நவநாகரிக இளைஞன் உலகம் முழுவதும் சுற்றி வரும் யுவன் ஆகையால் பெயரை மட்டும் மாற்றுமாரு வற்புறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. மேலும் மஞ்சுளாக்கு விமலா என்ற பெயர் ஆதலால் நீங்கள் விஜய் என்று மாற்றி விடுங்கள், ராஜ் என்ற பெயர் தம்பிக்கு நல்லா இருக்கு எனவே முருகனை மாற்றி விடுங்கள் எனக் கூற தலைவர் சொன்னாராம் இந்த படம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தவுடனே பட டைட்டில் உ.சு.வா என்றதும் எனது கேரக்டர் பெயர் முருகன் தான் என முடிவு செய்து விட்டேன் புராணப்படி பழத்தின் காரணமாக உலகத்தை முதன் முதலில் சுற்றி வந்தது முருகன் தானே அதனால் எனது கேரக்டர் க்கு முருகன் என்ற பெயர் வைத்தேன் என்றாராம். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கை தட்டி ஆராவாரம் செய்தனராம் அண்ணன் சக்ரபாணியும் டைரக்டர் நீலகண்டனும் ஒரு பெயர் சூட்டுவதில் கூட தலைவரின் அக்கறையை கண்டு வியந்து போனார்களாம்.
· Reply ·
2
· 23 hrs
http://i68.tinypic.com/2nw0rqb.jpg
நள்ளிரவில்??
------------------------
அது1979!!
எம்,ஜி,ஆரின் இரட்டை இலை சூரியனின் உஷ்ணத்தால் புண்ணான மக்களின் உடலை வருடிக்கொடுத்தகாலம்!!
அ.தி.மு.க.வின் மேடைப் பேச்சாளர் தமிழ் செல்வன்!1
அன்றைய மேடைகளில் தன் சூடான சொற்பொழிவால் பட்டையைக் கிளப்புவார்! எதிர்க் கட்சிகளின் சட்டையை நனைப்பார்!!----இவரது இலக்கிய உரை என்றாலே எதிர்க் கட்சியினர் வயிற்றை கலக்கிய வண்ணம் இருக்கும்!!
ஒரு நாள் இரவு!!
பொன் மனத்தாரின் பூங்குணங்களை பொழிகிறார்!!
கேட்பவர் விழி அதனில் நீர் வழியும் வண்ணம் தன் மொழி அதனில் !!---அப்போது அவர் மனைவிக்கு மகப்பேறு காரணமாக உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்க வேண்டி--சேதிவருகிறது!!
தன் உரையை குறையில் [பாதியில் ] நிறுத்த மனம் இல்லாமல் அதே சமயம் அந்த சமயத்தில் மனைவியின் அருகில் தான் இல்லையே என்ற குறை கொண்டும்?? --தன் உறவினர் மூலம் மருத்துவ மனையில் மனையாளை சேர்க்க ஆவன செய்கிறார்!!
கூட்டம் முடித்து ஓட்டம் எடுக்கிறார் மருத்துவமனைக்கு!!
கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மருத்துவமனை!!
தன் நல்லுறவாம் மனைவியைக் காண இவர் அங்கே செல்லும்போது நேரம் நள்ளிரவு!!
பெண்கள் மகப்பேறு மருத்துவ மனை ஆதலால் காவலாளி உள்ளே விட மறுக்கிறார்!! இவரும் எவ்வளவோ தன் நிலையை விளக்கியும் உள்ளே அனுமதிக்காத காரணத்தால் உள்ளம்வெறுக்கிறார்!!
நள்ளிரவு ஒரு மணி!!!
வாட்டத்துடன் தொடர்பு கொள்கிறார் தோட்டத்துக்கும் தன் மன நாட்டத்துக்கும் நாயகராம் முதல்வர் எம்,ஜி,ஆரை!!!
முதல் இரண்டு முயற்சிகள் தோற்ற நிலையில் மூன்றாம் முறை முயலும்போது இணைப்பில் வருவருகிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்!!
விபரம் கேட்ட வேந்தர் உடனேயே அந்த நடு நிசி வேளையிலும் தன் தி,நகர் அலுவலகத்தில் இருக்கும் முத்துவை அனுப்புகிறார் உதவிக்கு!!
முத்து வந்து நிலையை விளக்கியும் காவலாளி உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்!!
முத்துவும் அப்போது இரவுப் பணியில் இருக்கும் நர்ஸைத் தொடர்பு கொள்ள முயல--அந்த நர்ஸோ தொலைபேசியின் இணைப்பை எடுத்து வைத்து விட்டு நித்திரையின் ஆனந்த அணைப்பில்???
ஆத்திரம் கொண்ட முத்து மருத்துவமனையின் உதவி பொறுப்பாளரை தொடர்பு கொள்ள--அத்தனை விபரங்களையும் கேட்ட அந்தப் பெண் அதிகாரி உடனே குறிப்பிட்ட அந்த நர்ஸுடன் வருகிறார். தமிழ் செல்வனின் மனைவியின் உடல் நலம் பற்றிய விபரங்கள் தருகிறார். முதலமைச்சர் வரை விஷயம் போய் விட்டதே என்ற அதிர்ச்சியை உள்ளத்தில் பெறுகிறார்!!!
மறு நாள்!!!
அந்த நர்ஸ் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்??--கடமையை ஒழுங்காக செய்யாத காரணத்தால்!!!
மாதங்கள் சில மாயமாய் கரைகிறது!!
அந்த நர்ஸ் பரிதவிப்போடு முதல்வரை சந்திக்க செல்கிறார்.அங்கே முத்துவும் இருக்கிறார்!!
கனம் கொண்ட மனதுடன் நிற்கும் நர்ஸை இனம் கண்டு கொண்டவர் அருகில் வந்து காரணம் கேட்க --மனம் திறந்து தன் குடும்பச் சூழலைக் கொட்டித் தீர்க்கிறார் அந்த நர்ஸ்!!
விபரங்களை வினயத்துடன் முத்து விளக்க---
நர்ஸை அழைத்த எம்,ஜி,ஆர் நல்ல முறையில் கண்டிக்கிறார்.
உயிர் காக்கும் பதவியில் இருப்பவர்கள் இப்படித்தான் பொறுப்பில்லாமல் இருப்பதா என்று உறுமியவர் அடுத்துக் கேட்கிறார்!
எத்தனை மாதமாயிற்று வேலை போய்?/
இரண்டு மாதங்கள் என்ற பதிலைத் தொடர்ந்து குறிப்பிட்ட தொகையை வழங்கி அவரை வழி அனுப்புகிறார்!!
ஒரு வாரம் கழிந்து---
கோஷா என்று அழைக்கப்படும் அதே மருத்துவ மனையிலேயே அவருக்கு மீண்டும் பணிநியமன உத்தரவு வருகிறது??
தன் கட்சிக்காரர் ஒருவருக்காக நள்ளிரவு ஒரு மணிக்கு உதவிய உயரிய மனித நேயத்தை பாராட்டுவதா??
அந்த நர்ஸுக்கு வேலையில்லாத அந்த இரண்டு மாதங்களுக்கும் கேஷாகப் பண உதவி செய்தும் கோஷா மருத்துவ மனையிலேயே மீண்டும் பணி உதவி செய்தும் தன் பரந்த இதயத்தைக் காட்டிய பாங்கினை சீராட்டுவதா???
இமயம் தொட்டவரின் அகம் பற்றி சொல்லப் போதுமா ஒரு யுகம்???
நன்றி வைத்திநாதன் கிருஸ்ணமூர்த்தி முகநூல்
தற்போது சன்லைப் சானலில் ஏழை பங்காளன் எம்.ஜி.ஆரின் "ரிக்ஷாக்காரன் " திரைப்படம் காலை 11 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i1077.photobucket.com/albums/...ps6h8wwev8.jpg
இன்று (04/06/2017) முதல் மதுரை ஷா அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
தென்னக ஜேம்ஸ்பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115 " தினசரி 4 காட்சிகள்
நடைபெறுகிறது .
http://i1077.photobucket.com/albums/...ps8ecej5ac.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
தினத்தந்தி -04/06/2017
http://i1077.photobucket.com/albums/...psntvxclxy.jpg
நண்பர் ஒருத்தரின் ஆலோசனை பேரில் நான் நம்ப திரிக்கு புதிதாய் வந்தேன். . பழைய திரிகளை கொஞ்சம் கொஞ்சமாய் படிச்சு வர்றேன்.
அந்த பேர்களை பார்த்தால் நிறைய பேர் வந்துள்ளார்கள். ராஜ், மாசானம், ஜோ, எஸ்வி., யூகேஸ்பாபு, செல்வகுமர், ஜெயச்ங்கர், கலைவேந்த்ன், ராமூர்த்தி, கலியபெருமாள் விநாயகம், தெனாலிராஜன் ரூப்குமார் வரதகுமார் சைலஸே் பாபு, ராஜ்குமார், பாஸ்கரன் என்று பல பே்ரகள் உள்ளது. அவர்கள் எல்லாம் யாருமே இப்போது வரவில்லையா? ஏன்/
திரியை பார்த்து நுழையும்போது எல்லாம் 12, 13, சாயங்காலம் இரவு நேரங்களில் சில நேரம் 22, 23 பேர் வியூஸ் என்று வருகின்றது. எல்லாம் பார்க்கிறார்கள். ஆனல், பதிவு போடறதில்லையா? எஸ்வி என்பவர் அதிகமாக பதிவு போட்டிருக்கார். ஆனால், சமீபத்தில் ஒருததருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு சென்றுவிட்டர். அவரும் நிறுத்திவிட்டார்.
சில நேரத்தில் வெறுப்பாக உள்ளது. யாருக்ாகாக பதிவு பேடுகிறோம்? யார் பார்க்கிறார்கள். புரட்சித் தலைவர் மேல் உள்ள பற்றால் பதிவு போடுகிறோம். ஆனால், நாம் மட்டும் போட்டு 2 , 3 பேர் பார்கிறதால் என்ன பலன்? இதுக்கு நான் பேசாமல பேஸ்புக்கிலே மட்டுமே பதிவு போட்டுபோய்விடலாம்.
திரி மொத்தமா அழிந்தாலும் பரவயில்லை.விட்டுப் போய்விடலாம். ஆனால், திரி இருந்து புரட்சித் தலைவர் புகழ் தொடரமல் போய்விடுமே என்பதால் மனதுகேட்கவில்லை. எல்லாரும் பதிவு போட்டால் சரி. இல்லாவிட்டால் சுகாரம் என்பவர் மாதிிரி எல்லாருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு போகவேண்டிதான்.
Dear frends,
Only our great only one emporer vasol chakravarthi in the world nobody beten our thalvar. Cine field and poltics field great. All members pathivugal super.
[please go aheed.
M.G.R. மக்களிடம் தனக்கு உள்ள செல்வாக்கைக் கொண்டு அரசியலில் உயர்ந்தாரே தவிர, ரசிகர்களையும் தொண்டர்களையும் தனது சுயநலத்துக்காக அவர் பயன்படுத்திக் கொண்டது இல்லை. அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் அவர். தொண்டர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் துடித்துப் போய்விடுவார். அவர்களது குடும்பம் அதிலிருந்து மீள உதவும்வரை ஓயமாட்டார்.
எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் நிகழ்ச் சிகள் என்றால் அதில் பங்கேற்க வெளியூர்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் வருவார்கள். ஒருமுறை மதுரையில் ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். கூட்டத் துக்கு வெளியூரில் இருந்து வந்த சில தொண்டர்கள், இரவு திரும்பிச் செல்லும் போது வாகன விபத்தில் பலத்த காய மடைந்து மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
மதுரை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு எம்.ஜி.ஆர். சென்னை திரும்பு வதாக ஏற்பாடு. ஆனால், விபத்து பற்றி கேள்விப்பட்டு தனது பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டார். காயமடைந்த தொண்டர்களை சந்திக்க மறுநாள் காலை யில் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அவர் வருவது முன்கூட்டியே யாருக்கும் தெரியாது. திடீரென மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர். வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொண்டர் ஒருவர் படுத்திருந்த இடத் துக்கு எம்.ஜி.ஆர். சென்றார். படுக்கை யில் கிடந்த அந்த தொண்டரின் அருகே உதவிக்கு அவரது மனைவி மட்டும் இருந்தார். அந்தப் பெண்மணியின் கோலமே அவர்களது குடும்ப நிலை மைக்கு கட்டியம் கூறியது.
எம்.ஜி.ஆரைப் பார்த்த மகிழ்ச்சி, கண வனின் நிலையால் துயரம், அந்தத் துயரை சமாளிக்க தோள் கிடைத்த நிம்மதி என எல்லாம் கலந்த உணர்ச்சிக் குவியலாய் அந்தப் பெண்மணி அழ ஆரம்பித்துவிட்டார். ‘‘ஐயா, எப்பப் பார்த் தாலும் உங்க பெயரையும் பெருமையை யும் சொல்லிக் கொண்டிருப்பாரய்யா. அவருக்கு இப்படி ஆகிவிட்டதே’’ என்று சொல்லிக் கதறினார். கிழிந்த ஆடை யுடன் பரிதாபமாகக் காட்சி அளித்த அந்தப் பெண்மணியின் கதறலைக் கண்டு எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கின.
‘‘கவலைப்படாதே அம்மா. உன் கணவருக்கு ஒன்றும் ஆகாது. எல்லாம் சரியாகிவிடும். நான் இருக்கிறேன்’’ என்று ஆறுதல் கூறினார். அந்த வார்டில் இருந்த டாக்டரிடம் தொண்டரின் உடல் நிலை குறித்து விசாரித்து, அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
டாக்டரிடம் பேசிவிட்டு அந்த தொண்டர் படுத்திருந்த கட்டில் அருகே சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தலையைத் தடவிக் கொடுத்து கையை இறுகப் பற்றி, ‘‘நீ எதுக்கும் கவலைப்படாதே. டாக்ட ரிடம் சொல்லியிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் நீ வீடு திரும்பலாம். தைரிய மாய் இரு’’ என்றார். தனது அபிமான தலைவர் தன் கையைப் பிடித்து பேசு வதைப் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் பதில்கூட சொல்லமுடியாமல், அந்த தொண்டரின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் அருவியாய் கொட்டியது. அந்தத் தொண்டர் உட்பட காயமடைந்த தொண்டர்களின் உடல்நலம் தேறும் வரை, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.
http://i63.tinypic.com/t0qoac.jpg
நன்றி - முகநூல்