-
MGR. வாழ்க...
படத்தில் இருப்பவர்கள்
அண்ணன் சிவாஜி அவர்கள் அவர் மனைவி கமலா அவர்கள்
தாடியுடன் இருப்பவர் நடிகர் பாலாஜி அவர்கள்
நடிகர் பாலாஜி அவர்கள் பத்திரிகை நிருபர்களிடம் பேட்டி கொடுத்தார்
நான் சினிமா உலகத்திற்கு வந்த பொழுது மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தேன்
எம்ஜிஆர் அவர் அவர்களுடன் என் கடமை என்ற படத்தில் மட்டும் நான் நடித்து உள்ளேன்
ஒரு தீபாவளி பண்டிகையின்போது
ஒரு ரூபாய் கூட இல்லாமல் மிகவும் கவலையோடு நான் கடைவீதியில் வந்து கொண்டிருந்தேன்
என்னை கடந்து எனக்கு முன்னால் ஒரு
கார் நின்றது
,காரின் ஜன்னல் வழியாக ஜானகி அம்மையார் என்னை அழைத்தார்
நான் அருகில் சென்று பார்த்த பொழுது எம்ஜிஆர் உள்ளே அமர்ந்திருந்தார்
என்னிடம் நீ படங்களில் நடிக்கிறாயா எத்தனை படங்களில் நடிக்கிறாய்என்று என் குடும்ப நலனை விசாரித்தார்
கார் புறப்படும்போது என்னிடம் என் கையில் எம்ஜிஆர் பணம் கொடுத்தார்
பிரித்துப் பார்த்தேன்! பத்து100ரூபாய்நோட்டுக்கள் ஆயிரம் ரூபாய் இருந்தது
என் குடும்பத்திற்கு ரெடிமேட் துணிகள் வாங்கிக்கொண்டு
குழந்தைக்கு பலகாரங்கள் வாங்கிக்கொண்டு
வீட்டிற்குச் சென்றேன்
எம்ஜிஆர் கொடுத்த பணத்தில் இப்பொழுது 300 ரூபாய் மட்டும் என்னிடம் இருந்தது
பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 100 ரூபாய் 100 ரூபாய் எடுத்து செலவழித்தேன்
இப்போது எம்ஜிஆர் கொடுத்த ரூபாய் 100 மட்டும் என்னிடம் இருந்தது
அடுத்து என் செலவுக்கு பணம் இல்லை என்றால் இந்த நூறு ரூபாயை எடுத்து செலவழிக்கலாம் என்று நினைத்தேன்
என் மனதிற்குள் எம்ஜிஆர் கொடுத்த அந்த அதிர்ஷ்டமான பணத்தை செலவழிக்க கூடாது என்று நினைத்தேன்
,அடுத்து அடுத்து எனக்கு பட வாய்ப்புகள் வந்தது
எம்ஜிஆர் கொடுத்த நூறு ரூபாயை மணி பஸ்ஸில் போட்டோ வைக்கும் அறையில்
வைத்துள்ளேன்
அந்தப் பணத்தில் எம்ஜிஆர் என்று பெயர் எழுதி வைத்தேன்
அதற்குப் பிறகு எனக்கு பணத்திற்கு மேல் பணம் வந்து கொண்டே இருந்தது
இப்பொழுதும் எம்ஜிஆர் கொடுத்த அந்த நூறு ரூபாயை என் பர்ஸில் பத்திரமாக வைத்துள்ளேன்
இவ்வாறு நடிகர் பாலாஜி அவர்கள் திரை உலகம் பத்திரிகையில் பேட்டி கொடுத்தார்
அதன் பிறகு பாலாஜி அவர்கள் படத்தயாரிப்பாளர் ஆனார்
மலையாள நடிகர் மோகன்லால் அவர்கள்
நடிகர் பாலாஜியின் மகளைத் திருமணம் செய்துள்ளார்
இந்தப் பேட்டி 1970ஆம் ஆண்டு வெளிவந்தது
இப்படி எல்லாம் எம்ஜிஆர் வறுமையில் உள்ளவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த காரணத்தினால் தான்
மக்கள் சக்தி உடைய தலைவரானார்...
எந்த நடிகையும் சினிமாவில் நடித்த பொழுது 10 பைசா யாருக்கும் தர்மம் செய்தது கிடையாது
எம்ஜிஆர் வள்ளலாக வாழ்ந்த காரணத்தினால் தான்,Puratchi Thalaive AMMA’s Blessings
விக்ரவாண்டி தொகுதியிலும் நாங்குநேரி தொகுதியிலும் நாம் வெற்றி பெற முடிந்தது
மார்க்கெட்இளந்த நடிகைகளும் மார்க்கெட்இளந்த நடிகர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று துடிக்கிறார்கள்
ஆனால் எம்ஜிஆரை போல்ஏழை மக்களுக்கு இவர்கள் பண உதவி செய்தது கிடையாது
எம்ஜிஆருக்கு இணையாக உலகத்திலுள்ள எந்த நடிகரும்
தான் சினிமாவில் நடித்தபோது சம்பாதித்த பணங்களை ஏழை மக்களுக்கு கொடுத்த கிடையாது
உலகம் முழுவதும் 85 நாடுகளில் சினிமா தயாரிக்கின்றார்கள்
அதில்
எம்ஜிஆரை போல் ஏழை மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த நடிகர் கிடையாது நடிகையும் கிடையாது
முகநூலில் உள்ள அனைத்து எம்ஜிஆர் பக்தர்களுக்கும்
இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர் பக்தர்களுக்கும்
தெரியப்படுத்துகிறேன்...PM., Png
-
புரட்சித்தலைவர்
மக்கள் திலகம்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய
செவ்வாய்க்கிழமை காலை வணக்கம்
புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த திரைப்படங்களின் பற்றிய என்னுடைய இந்த தொடரில் இன்று நாம்
புரட்சி தலைவர் நடித்த 34 வது படமான
"#அலிபாபாவும்_நாற்பது_திருடர்களும்"
பற்றி காண்போம்..
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர், பி.பானுமதி
பி.எஸ்.வீரப்பா
மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இயக்கம்
டி. ஆர். சுந்தரம்
இசை
எஸ். தட்சிணாமூர்த்தி
நடிப்பு
எம்.ஜி.ஆர்
பி. பானுமதி
பி. எஸ். வீரப்பா
வெளியீடு
1956...தயாரிப்பு நடந்தது 1954, 1955
தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமாக இப்படம் அமைந்தது.
அரேபிய கதைகளை கொண்டு களமாக்கி வெற்றி கொண்டுள்ளார் இயக்குனர்...
இந்த படத்தில் நடிக்க புரட்சி தலைவர் எம். ஜி, ஆர் அவர்களுக்கு சம்பளமாக 12,500 ரூபாய் வழங்கப்பட்டது.
எம். ஜி. ஆர் - - அலிபாபா
கே. சாரங்கபாணி
பி. எஸ். வீரப்பா
கே. ஏ. தங்கவேலு
எம். ஜி. சக்கரபாணி
ஓ. ஏ. கே. தேவர்
கே. கே. சுந்தர்
பானுமதி
எம். என். ராஜம்
வித்யாவதி
பி. சுசீலா
சாயீ சுபபலக்ஸ்மி
வாஹீதா ரெஹ்மான்
அமீர் காசிம் கான் என்ற அரசனிடம் அகப்பட்டிருக்கும் பாக்தாத் நடன அழகி மார்சியானாயை (பானுமதி) காப்பாற்றுகிறார் மரவெட்டி அலிபாபா (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்). அலிபாபா வீட்டில் அடைக்கலம் புகும் மார்சியானா, அலிபாபாவை விரும்புகிறாள்.
ஒரு நாள், மரம் வெட்ட அலிபாபா செல்லும் பொழுது, கொள்ளையன் அபு ஹுசைனின் ரகசிய குகையை பார்த்துவிடுகிறார். அபு ஹுசைன் பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் கேட்டுவிடுகிறார் அலிபாபா. அந்த கொள்ளையர்கள் சென்ற பின்னர், அந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி, கொள்ளையர்களின் செல்வத்திலிருந்து சிறிதளவை எடுத்துச் சென்று ஏழைகளுக்கு உதவுகிறார் அலிபாபா.
ஓர் இரவுப் பொழுதில், அலிபாபாவும் மார்சியானாவும் செல்வந்தர்கள் ஆகின்றனர்.
அதில் பொறாமை கொண்ட அலிபாபாவின் அண்ணன் காசிம்
(எம். ஜி.சக்கரபாணி), அலிபாபாவின் திடீர் ரகசிய செல்வத்தை பற்றி தெரிந்து கொள்ள சலீமாவின் உதவியுடன் முயற்சிக்கிறான். அவ்வாறாக ரகசியத்தை தெரிந்து கொண்ட காசிம், அலிபாபாவை கொல்ல முயல்கிறான். சாதுர்யமாக மார்சியானா உதவி செய்ய, சண்டையிட்டு தப்பிக்கிறார் அலிபாபா.
பின்னர், பேராசை கொண்ட காசிம்,
அபு ஹுசைனின் ரகசிய குகைக்கு செல்கிறான். தங்கத்தையும் வைரத்தை அதிகம் பார்த்த அதிர்ச்சியில் கடவுச்சொல்லை மறந்து குகையின் உள்ளேயே அகப்பட்டு அபு கையால் கொல்லப்படுகிறான் காசிம் அந்த சடலத்தை குகையில் கட்டி தொங்க விட்டு கொள்ளையடிக்க வெளியே சென்று விடுகிறான்.
மீண்டும் அலிபாபா குகைக்கு வந்து தன் அண்ணன் இறந்ததைக் கண்டு அதிர்ந்து போய், சடலத்தை அப்புறப்படுத்துகிறார். காசிமின் மரணத்திற்கு பிறகு, பாக்தாத்தின் புதிய அரசனாகிறார் அலிபாபா. அந்நிலையில், கொள்ளையன் அபு ஹுசைன் குகைக்கு திரும்பி வர, காசிமின் சடலம் காணாமல் போனதை கண்டு அதிர்ந்து போகிறான் பிறகு இன்னொரு நபருக்கு குகை பற்றிய ரகசியம் தெரிந்து உள்ளது எனவே. அந்த சடலத்தை எடுத்தவனை பிடிக்க கொள்ளையர்கள் தேடத் துவங்குகின்றனர்.
செருப்பு தைக்கும் குலாம் மூலமாக, அலிபாபாதான் அந்த மர்ம நபர் என்று தெரிய வந்ததும், குலாமை கொள்கிறான் அபு. அலிபாபாவை கொல்ல திட்டம் தீட்டி தனது சக கொள்ளையர்களை எண்ணெய் பீப்பாயில் ஒளியச்செய்து, வியாபாரி போல் வேடம் பூண்டு வருகிறான் அபு. அந்த சதி திட்டத்தை அலிபாபாவும் மார்சியானாவும் எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதே மீதிக் கதையாகும்.
இந்த படத்தில் வீரப்பா அவர்களின் மிரட்டும் வில்லத்தனம் அருமை..
மருதகாசி எழுதிய பாடல்களுக்கு சுஸர்லா தக்ஷிணாமூர்த்தி இசை அமைத்தார்.
மாசிலா உண்மை காதலி
சின்னஞ்சிறு சிட்டே
அழகான பொண்ணு நான்
நாம ஆடுவதும்
உன்னைவிட மாட்டேன்
உல்லாச உலகம்
ஸலாம் பாபு
அன்பினாலே ஆளவந்த
என் ஆட்டமெல்லாம்
"சின்னச்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே" என்ற பாடலை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்- "நெல்லை சென்றிருந்தபோது விடுதியில் இந்தப் பாடலை நெடுநாட்களுக்குப்பின் பார்த்தேன். இப்போது சினிமாவுக்குள் இருக்கிறேன் என்பதனால் அட என வியந்து எழுந்துவிட்டேன். அதன்பின் வெண்முரசு எழுதுவதன் இடைவெளிகளின் சோர்வை வெல்ல பலமுறை இதைப் பார்த்துவிட்டேன். ஒவ்வொருமுறையும் அட என்றே சொல்லத் தோன்றுகிறது சினிமா நடனத்தின் மிகப்பெரிய பிரச்சினை முகபாவனைகளுக்கும் நடன அசைவுகளுக்கும் இடையே இயல்பான ஒத்திசைவு நிகழ்வதுதான். சினிமா நடனம் சாதாரணமானது அல்ல. காமிராவின் கோணம், தளத்தின் ஒளியமைப்பு, உடன் ஆடுபவர்களின் அசைவு ஆகியவற்றுக்கு ஏற்ப நடன அசைவுகள் முன்னரே வகுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நினைவில் கொண்டபடி ஆடவேண்டும், அந்த நினைவுகொள்ளல் முகத்தில் தெரியக்கூடாது. அக்காட்சியின் உணர்வில் ஒன்றி ஆடவேண்டும். இன்று எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன. ஆனாலும் நடன இயக்குநர்கள் படாதபாடு படுவதைக் காண்கிறேன். இருந்தும் நடனத்திற்குரிய வாயைக் குவித்துத் திறந்து வைப்பது, நாக்கைக் கடிப்பது போன்ற பாவனைகளே ஆடுபவர்களின் முகங்களில் இருக்கும். அதைத் தவிர்க்க மகிழ்ச்சி எனத் தெரியும் ஒரே பாவனையை தக்கவைக்க அவர்களிடம் சொல்வார்கள். அவர்களும் வாயைத் திறந்து கொண்டு ஆடுவார்கள். இந்தப்பாடலில் சாரங்கபாணி இயல்பாக நடிக்கிறார். முகபாவனைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் உடலசைவுகளிலும் காலிலும் தாளம் தன்னியல்பாக நிகழ்கிறது. அவருக்கு அப்போது ஐம்பதை அடுத்த வயது என நினைக்கிறேன். எம்.என்.ராஜமும் மிகையின்றி நடித்து ஆடுகிறார். அக்கால நடிகர்களின் மேடைப் பயிற்சிதான் இந்த துல்லியத்திற்கான காரணம் என தோன்றுகிறது ஒவ்வொரு அசைவிலும் எத்தனை திட்டமிடல்! ஆனால் இயல்பாக தெரிகிறது. சத்தியம் செய்யும்போது எம் என் ராஜம் கையை இழுத்துக்கொள்கிறார். சாரங்கபாணி பாய்ந்து வந்து குதிக்கும்போது பயந்து பின்வாங்கி ஃப்யூ என அறுதல்கொண்டு மூச்சுவிடுகிறார். கெஞ்சும்போது சாரங்கபாணியின் கைவிரல்கள் பலவகையாக நெளிகின்றன. அற்புதமான பாடல். எஸ்.ஜி.கிருஷ்ணனின் குரல் சாரங்கபாணியே பாடுவதுபோல் ஒலிக்கிறது. ஜமுனாராணியின் குரலின் இனிமையும் அந்தக்காலத்தை தித்திப்பாக மீட்கிறது என்று தெரிவித்து உள்ளார்...
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...skt......
-
20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரைச் சுற்றியும் கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது, விக்ர மாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது. அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்.
எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும்.
எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர், திரையில் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள். கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது “இந்தக் கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள். “ஆனா, அந்த நம்பியார்கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.
எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை. எம்.ஜி.ஆர். தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது. எம்.ஜி.ஆரின் கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக் கிறது. இப்படி நிறைய. இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் எம்.ஜி.ஆர்.
ஆழ்மனத் தேவை
காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்று கிறது. இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்குரியது.
சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் சாத்தியப்படும் காட்சி எல்லைக்கு உட்பட்டது. சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்துக்கு ஏற்பப் பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். உதாரணமாக, ஒரு நாயகனைக் கீழிருந்து மேலே காட்டும் கோணத்தில் காட்டும்போது அவரது வலிமைகுறித்த எண்ணம் பார்வையாளர் மனதில் வலுப்பெறுகிறது. தனியாக நிற்கும் ஒருவர் சட்டகத்தின் ஓரமாகக் காட்டப்பட்டால் முகம் தெரியாத நிலையிலும் அவர் சற்றே சோகத்தில் அல்லது தனிமை உணர்வில் இருப்பதாக உணர முடியும். கோமாளியாக ஒருவரைக் காட்ட வேண்டும் என்றால், அவர் முகத்தை அண்மைக் காட்சியில் சற்றே வக்கரித்த முறையில் காட்டினால் போதும்.
இத்தகைய காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்து கொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை, பெரும்பாலும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த கேமரா, இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.
‘பஞ்ச்’ வசனத்தின் பிதாமகன்
இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப் பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன்… இப்படி எத்தனை எத்தனை பிம்பங்கள். இந்தப் பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன.
“என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் நெறய பேர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “அவர் இல்லை யேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச, அடுத்த காட்சித் துணுக்கு அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.
எம்.ஜி.ஆர். ஆணையிட்டால்…
எதிரிகளைப் பந்தாடும் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாகச் சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார், உன்னைத் தாக்குவது என் நோக்க மல்ல என்று சொல்வது போல. வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.
அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். ‘நான் ஆணையிட்டால்’ என்று தங்களுக்காக முழங்கிய திரைப் பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.
காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்குப் பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.
தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லிய மாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்த பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காகத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘பாசம்’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல் காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கு இடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.
இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணர்வோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கும். ‘குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம்’ என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன் படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும்
எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரை, சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக வைத்திருந்தது....Baa
-
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆர்., என்ற மாமனிதர் ஏதோ ஒரு வகையில் பிரதிபலித்தார்...........
அதனால் தான் மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் அவரது புகழ் சிறிதும் மங்கவில்லை. பத்திரிகையாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அன்பு பாராட்டுபவர் அவர். அவரது தேர்தல் சுற்றுப்பயணம் என்றால் உடன் செல்லும் பத்திரிகையாளர் களுக்கு குஷியான அனுபவம் கிடைக்கும். பிரசாரத்தில் எம்.எஸ்.டபிள்யூ 2248 என்ற எண்ணுள்ள வேனை பயன்படுத்துவது எம்.ஜி.ஆர்., வழக்கம். அதைப் பார்த்து பிற கட்சி தலைவர்களும் வேன் பிரசாரத்தை பின்பற்றினர். கோடை வெயிலில் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதால் எம்.ஜி.ஆர்., மாலையில் பிரசாரம் செய்வார். மக்கள் வெள்ளத்தை கடந்து பிரசாரம் முடிப்பதற்குள் இரவாகிவிடும். வழியில் பெயர் வைக்க தங்கள் குழந்தைகளை நீட்டும் தாய்மார்களிடம் புன்னகையை பரிசளித்து பெயர் சூட்டி உச்சி முகர்வார். அன்றைய பிரசாரம் நிறைவு பெறும் போது அனேகமாக விடிந்து விடும். 1973ல் திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தல் காலம். மதுரையில் தங்கி திண்டுக்கல் பிரசார திட்டத்தை வகுத்தார் எம்.ஜி.ஆர்., மக்கள் வெள்ளம் வழிமறித்து கொடியேற்றம், கொண்டாட்டம் என களைகட்டும். இதனால் ஒவ்வொரு இடத்திலும் தாமதமாகும். அவரது வேனின் பின்னால் இருந்து பத்தாவது இடத்தில் பத்திரிகையாளர்கள் கார் இருக்கும். ஆனால் கட்சியினர் ஆர்வத்தில் காரை முந்திக் கொண்டு செல்வர்.
இதனால் பத்திரிக்கையாளர் கார் பின்நோக்கி சென்று ஒவ்வொரு இடத்திலும் போட்டோ எடுக்க நீண்ட தூரம் ஓடிச் செல்ல நேரிடும். எம்.ஜி.ஆர்., பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் மேடை முன் அமர்ந்திருந்தனர். நேரமின்மை காரணமாக பெரும்பாலும் வேனில் இருந்து பேசும் எம்.ஜி.ஆர்., அன்று காத்திருந்த மக்களை ஏமாற்ற விரும்பாமல் மேடை ஏறினார். போட்டோ எடுத்துக் கொண்டிருந்த நான் மேடையிலிருந்து கீழே இறங்க நினைத்த போது கால் வைக்க இடமில்லை. அந்த அளவிற்கு பெண்கள், குழந்தைகள் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தனர். வேறுவழியின்றி ஒருமணி நேரம் காத்திருந்தேன். அவர் பேசி முடிந்ததும் ஒரே கூச்சல். குழந்தைக்கு பெயர் வைக்க நின்ற தாய்மார்களிடம் தள்ளுமுள்ளு. பொறுமையாக அனைவருக்கும் பெயர் சூட்டி வேனுக்கு சென்றார்.
மேடையில் கேமரா உடன் சிக்கிக் கொண்ட நான் கீழே இறங்க முடியாமல் தவித்தேன். நிருபர்களின் காரையும் கண்ணுக்கெட்டிய தூரம் காணோம். எம்.ஜி.ஆர்., வாகனம் அந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த சமயத்தில் என் கேமரா பிளாஷை அவரை நோக்கி அடித்துக் கொண்டே இருந்தேன். அதனை கவனித்து தற்செயலாக எம்.ஜி.ஆர்., திரும்பி பார்த்தார். என்னை மீட்டு அழைத்துச் செல்லுங்கள் என சைகையில் தெரிவித்தேன். புரிந்து கொண்ட அவர் பாதுகாவலர்களை அனுப்பினார். மேடைக்கு வந்து என் கரங்களை பிடித்த பாதுகாவலர்கள் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர்., இருக்கும் வேனில் ஏற்றினர். இப்படி பத்திரிகையாளர்களிடம் அன்பு பாராட்டியவர் எம்.ஜி.ஆர்., குறைவாகக் காட்டு...Baa
-
சினிமா வசனகர்த்தா ஆரூர் தாஸ் எழுதிய புத்தகத்தில் இருந்து (நன்றி : தினமலர், விமல்)
ஒரு நாள் ஒப்பனை அறையில் நாங்கள் தனித்திருந்த வேளையில் எம்ஜிஆர், என்னிடம் (ஆரூர் தாஸ்) சொன்னார்:
“பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான். அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கேன். இப்போ புகழின் உச்சியிலே இருக்கேன். வசதிக்குப் பஞ்சம் இல்லே. தினமும் என் வீட்டுல மூணு வேளையும் குறைஞ்சது 50–60 இலைங்க விழுது. ஆனாலும், ரெண்டே ரெண்டு குறைகளை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது. ஒண்ணு: குழந்தைங்க வாரிசு இல்லாத குறை ! இன்னொண்ணு…’
நான் இடைமறித்து, “ஏன், பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க வாரிசு இல்லே. அதனால் என்ன குறைஞ்சி போயிட்டாரு !’ என்றேன்.
“அப்படி இல்லே. காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்தால குழந்தைங்க இல்லாம போயிடுச்சி; ஆனா, எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே!
எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா?’ அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.
பெரிய, பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சி என் ஜாதகத்தைக் காட்டிக் கலந்து ஆலோசனை பண்ணுவேன், ஜோதிடர் கலையில் நிபுணர்களான ரெண்டு, மூணு பேரு மட்டும் ஒத்து ஒரே கருத்தைச் சொன்னாங்க.
இது பலதார ஜாதகம்! ஒங்க வாழ்க்கையிலே பல பெண்கள் குறுக்கிடுவாங்க. அவுங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க; ஆனா, அவுங்க யாரும் ஒங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க; குடுக்கவும் முடியாது. குறை அவுங்ககிட்டே இல்லே’ன்னு சொன்னாங்க.
சமீபத்தில் ஆயுள் இன்சூரன்சுக்காக முக்கியமான ஒரு பெரிய மருத்துவர்கிட்டே உடல் பரிசோதனை பண்ணிக்கிட்டேன். அவர் உங்க மாதிரி என் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். இனிமே எனக்கு குழந்தை உண்டாகிறதுக்கு வாய்ப்பே இல்லேன்னு உறுதியா சொல்லிட்டாரு.
அதைக் கேட்டு நான் அப்படியே உடைஞ்சி நொறுங்கிப் போயிட்டேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கவே இல்லே. அழுது, அழுது தலையணையே நனைஞ்சிடுச்சி.
என் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு, எனக்கு ஒரு குழந்தை – ஒரே ஒரு குழந்தையைக் கூட குடுக்க மனசு வரலே பாத்தீங்களா?
எத்தனையோ சகோதரிகள், தாய்மார்கள் அவங்க பெத்தக் குழந்தைகளை என் கையில் கொடுத்து என்னைப் பேர் வைக்கச் சொல்லும்போது, உள்ளுக்குள்ளே என் நெஞ்சு பதறும். ஆனாலும், அதை வெளியில் காட்டிக்காம, அந்தக் குழந்தைகளுக்கு அப்பப்போ எனக்குத் தோணுற பேரை வச்சி, அவுங்க ஆசையை நிறைவேத்துறேன். போகட்டும்… நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்!
என்னோட ரெண்டாவது குறை என்னன்னா ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்திலே கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர பெரிசா ஒண்ணும் படிக்கத் தெரிஞ்சுக்கலே. இளமையிலே பட்ட வறுமை காரணமா அந்த வாய்ப்பு, வசதி இல்லாமப் போயிடுச்சி.
அண்ணாதுரை, கிருபானந்த வாரியார் இவுங்களோட சொற்பொழிவைக் கேட்கும்போது, என்னால அவுங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைச்சி வருத்தப்படுவேன். ஆனாலும், எப்படியோ பேசிச் சமாளிச்சி, மத்தவங்களை சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும் குறை, குறைதானே! அதுவும் பூர்த்தி செய்ய முடியாத குறை. அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா அதுலயாவது நான் பெரிய புள்ளைக் குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!
நடிப்பிற்கு அப்பாற்பட்டு அவரது கண்கள் நீர் நிலைகளானதை நேரில் நான் கண்டது அதுவே முதல் முறை!...Baa
-
நாளிதழ் விளம்பரமில்லை...மாநகராட்சி முழுவதும் போஸ்டர் இல்லை...வழக்கமான பேனர் பிளக்ஸ் போர்டுகள் இல்லை...பின் எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது. ஆ....ச்சரியத்தில், அதிசயத்தில்... சினிமா வட்டாரம் ஆழ்ந்திருக்க... வழக்கம்போல கட்சி அது இது என எவர் ஆதரவுமின்றி நூறுசதவீதம் மக்கள் திலகம் பக்தர்கள் சத்தமின்றி சாதனை படைத்துள்ளனர்....மீண்டும்! ஆம்... நெல்லை மேலப்பாளையம் அலங்கார் நவீன தொழில் நுட்ப திரையரங்கம் சமீபத்தில் திறக்கப்பட்டதுமே ' தலைவர் படம் போடுவார்களா?' என்று எம்ஜிஆர் பக்தர்கள் திக்கெட்டும் விசாரித்த வண்ணம் இருந்தனர். அந்த நாளும் வந்தது. 26.02.2021 முதல் "அடிமைப்பெண்" காவியம் அதிரடியாக திரையிடப்பட மகிழ்ச்சி பொங்க எம்ஜிஆர் பக்தர்கள் திருவிழாவை ஞாயிறு மாலை என நேரத்தை தீர்மானித்தனர். மதுரை, கோவை, தூத்துக்குடியிலிருந்தும் பக்தர்கள் நெல்லைக்கு படையெடுத்தனர், மேளதாளம் மேலப்பாளையத்தை அதிர வைக்க வாழ்த்து கோஷம் விண்ணைமுட்ட சாரை சாரையாக 10 வயது சிறுவர் சிறுமியர், 17,25,35 வயது என வாலிபர்கள் திரள இவர்களின் கூட்ட நெரிசலில் 50, 60,70 வயதினரும் சிக்கினர். நீண்ட க்யூவில் நிற்பதை பார்த்து நீண்ட நாளாச்சு அல்லவா? அந்த வழியாக சென்ற புதியவர்களும் ' இதென்ன பொங்கலுமில்லை...தீபாவளியுமில்லை...புதுப்படமும ் ரிலீசில்லை...இதென்ன கூட்டம்...எந்த படம் போட்டிருக்கு?' என நின்று பார்க்க..' அட நம்ம தலைவர் படம்' என ஆனந்தக் கூத்தாடினர். 3 வருடத்தில் அடிமைப்பெண் 4 வது தடவையாக திரையிடப்பட்டிருந்தும் நேற்று 400 பேர் குவிந்தனர். இனிப்பு, காரம், தேனீர் ஆகியவற்றோடு 'எம்ஜிஆர் தகவல் களஞ்சியம்' ஆழ்வை ராஜப்பாவின் அடிமைப்பெண் அன்றைய சாதனை தகவலையும் அனைவரும் ருசித்தனர். கூட்டம் கூட்டமாக நண்பர்களுடன் நலம் விசாரித்தபடி எம்ஜிஆர் பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சரவெடி அனைவரையும் வெளியே இழுத்துவர...10 வயது பொடியன்களுக்கும் இளவட்டப்பையன்களுக்கும் இது கனவா நிஜமா என தலைசுற்ற அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன்மார் கையைப் பிடித்துக்கொண்டு குளுகுளு உலகத்திற்குள் நுழைகிறார்கள்....வெள்ளித்திரையிலும் குளுகுளு பசுமை படர்ந்திருக்க வானத்திலிருந்து தேவன் இறங்கிவருவதுபோல புரட்சிநடிகர் வர...ஒட்டுமொத்த ஜனங்களும் ஆர்ப்பரித்த ஆர்ப்பரிப்பு சற்று நேரத்தில் அடங்கியதா?.... ம்கூம் குட்டி எம்ஜிஆரைக் கண்டு பரவசப்பட்டும் ஜீவாவின் குரல் கேட்டு ஆனந்தத்தில் களித்தும் தண்டனைக்கருவியிலிருந்து இளம்பெண்ணை மீட்க கட்டுமஸ்தான ஆணழகு நிமிருவதைக்கண்டு தங்களது உடலை முறுக்கேற்றியும் பவளவல்லியைக் கண்டு ஆரவாரம் செய்தும் சக்கரங்களை சுற்றி கைகளை பிய்த்து எடுக்கும் தண்டனைகருவியையே பதம் பார்க்கும் போதும் சிங்கத்தின் வாயை கிழித்துப் போடும்போதும் ...நிற்க! தலைவரின் பல படங்களின் பன்ச் வசனங்கள், தியேட்டருக்கு வெளியே நடந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட காட்சிகள் சுடச்சுட அடுத்த வினாடியே திரையிலும் ஜொலிக்க, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் பாடல் காட்சிகள் கண்களுக்கு சிறப்பு விருந்தளிக்க. அப்பப்பா...6-10 மணிவரை ஒரு வினாடி எங்க சும்மா இருக்க விட்டாங்க... இடைவிடாது ஆரவாரம்தான் போங்க.... நேற்று படம் பார்த்துச் சென்றவர்கள் இன்றும் அலங்கார் அடிமைப்பெண் மயக்கத்திலேதான் இருப்பார்கள். காரணம் வேறெந்த தியேட்டரிலும் அனுபவிக்காத இனிமையான பொழுதுபோக்கு அலங்கார் தியேட்டரில்தான் கிடைத்ததாக சொல்லி பலர் சிலாகித்தபடியே வீட்டுக்குச் சென்றனர். ' எப்போ அடிமைப்பெண் வந்தாலும்...ம்கூம் எப்போ தலைவர் படங்கள் வந்தாலும் அன்றும் இன்றும் என்றும் திருவிழாதான்' என்பதை இதோ மீண்டும் நெல்லை எம்ஜிஆர் பக்தர்களான ஆறுமுகம் குழுவினர் நிரூபித்துவிட்டனர். மூன்றுவிதமான புயல் ஒரே இடத்தில் மையம் கொண்டால் எப்படி இருக்குமோ அதுபோல தூத்துக்குடி, மதுரை, நெல்லை எம்ஜிஆர் பக்தர்கள் குமார் அவர்களின் உற்சாக நடனத்திலும் உணர்வுபூர்வமான வாழ்த்தொலி மூலமாகவும் அந்த ஏரியாவே அமளி துமளிப்பட்டது. நேரில் சென்று பார்க்க முடியாத நிலையில் பல நூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஏக்கத்துடன் உங்களுக்கு இச்செய்தியை தந்து விடைபெறுவது...சாமுவேல்..........
-
**நல்ல நல்ல பிள்ளைகளை நம்பியிருந்த எம்.ஜி.ஆர்**
எம்.ஜி.ஆர் தன் படத்தில் குழந்தை ரசிகர்களுக்காக தனிக் காட்சிகளும் பாடல்களும் காமெடியன் செய்யும் சில வேடிக்கை சண்டைகளும் வைத்திருப்பார். தனது தத்துவப்பாடல்களை அவற்றின் பல்லவியை இரண்டு வயது நிரம்பிய குழந்தை பாடும்படியாக எளிமையாக எழுத வேண்டும் என்பார். என் அண்ணனுக்கு ஒன்பது குழந்தைகளைக் கொடுத்த இறைவன் எனக்கு ஒரு குழந்தை கூட கொடுக்கவில்லையே என்று வசன கர்த்தா அரூர் தாசிடம் கவலைப்பட்ட எம்.ஜி.ஆர் சிறு குழந்தைகள் தன் வீட்டில் வந்து விளையாடுவதை பெரிதும் விரும்பினார். குழந்தைகள் நல்ல பண்புடனும் பழக்க வழக்கத்துடனும் வளர்க்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அதனால்தான் முதல்வரானதும் குழந்தைகளுக்காக நல்ல பல திட்டங்களை அறிமுகம் செய்தார்.
ஆட்சியிலும் சோறு போட்ட எம்.ஜி.ஆர்
ஏழு வயதில் சாப்பாட்டுக்கு வழியின்றி நாடக கம்பெனியில் சேர்ந்து நடித்த எம்.ஜி.ஆர் அந்த நிலைமை தமிழகக் குழந்தைகளுக்கு வரக் கூடாது என்று விரும்பினார். காமராஜரை தன் தலைவராகவும் அண்ணாவை தன் வழிகாட்டியாகவும் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் காமராஜர் கொண்டுவந்த பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவு படுத்தி சத்துணவுத் திட்டமாக அறிவித்தார். காமராஜர் அறிமுகப்படுத்திய திட்டத்தில் குழம்பு,கறிகாய் போன்றவை கிடையாது. அது பசிக்கான உணவு மட்டுமே. ஆனால் ஆரம்பம் முதல் தன் வாழ்வில் உடல் நலம் உடல் பயிற்சி ஆகியவற்றில் ஈடுபாடு காட்டி வந்த எம்.ஜி.ஆர் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தில் அவர்களின் உடல்நலனைக் காக்கும் சத்துகள் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இத்திட்டத்தில் சோறு, பருப்பு, காய்கறி, கீரை ஆகிய அனைத்தும் கலந்து சமவிகித உணவாக வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் பிறந்த நான்கு மாதக் குழந்தை முதல் பதினேழு வயது மாணவர்கள் வரைக்குமாகச் சேர்த்து திட்டமிடப்பட்டது. நான்கு மாதக் குழந்தைக்குச் சத்துணவு மாவு உருண்டை காலை பதினோரு மணிக்கு வழங்கப்படும் அதை தாய்மார் வந்து வாங்கி குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. சத்துமாவு பாக்கெட்டுகளைத் தாய்மாரிடம் வீட்டுக்குச் சத்துணவு ஆயாமார் கொடுத்துவிடுகின்றனர். காமராஜர் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் எனத் தொடங்கிய இத்திட்டம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலணி மற்றும் சீருடை என எம்.ஜி.ஆர் குழந்தைகள் நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்க பிரதமர் ராஜீவ் காந்தியிடம் உதவி கேட்டுப் போயிருந்தபோது அதிகாரிகள் காலம் தாழ்த்தினர் உடனே கோபப்பட்டு எம்.ஜி.ஆர் புறப்பட்டுவிட்டார். இவர்கள் கொடுக்காவிட்டால் நாம் வீட்டுக்கு ஒரு ரூபாய் என வசூலித்து இத்திட்டத்தைக் கொண்டுவருவோம் என்றார். அதன்பிறகு அவரைச் சமாதானப்படுத்தி பிரதமரின் உதவியாளர் எம்.ஜி.ஆரை அழைத்து நிதி உதவி செய்வதாக ஒப்புக்கொண்டார். இந்தத் துணிச்சல் எம்.ஜி.ஆர் கூடப் பிறந்தது ஆகும். அவர் தான் செய்ய நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செய்து வெற்றி பெறுவார்.
தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறிய போது அரசு அதிகாரிகள் அரசிடம் அவ்வளவு நிதி இல்லை என்றனர். உடனே எம்.ஜி.ஆர் கோபத்துடன் உங்கள் நிதியே தேவையில்லை என் மக்களிடம் நிதி பெற்று நான் இத்திட்டத்தை நிறைவேற்றுகிறேன் என்றார். உடனே சத்துணவு நிதி ஒன்றை அறிவித்தார். நல்ல உள்ளங்கள் தாராளமாக உதவின. அவரை வளர்த்துவிட்ட திரையுலகினர் முதலில் உதவ முன்வந்தனர். பின்பு தொழிலதிபர்கள் வந்தனர். பலர் தம் ஒரு நாள் சம்பளத்தை ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து உதவினர். இது உலகுக்கே ஒரு முன்னோடி திட்டமாக உருவாயிற்று.
கல்வித் திட்டம்
சர்வதேசப் பொருளாதாரக் கொள்கை காரணமாக தனியார்மயமாக்கல் விரைந்து வந்ததால் பள்ளிக்கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக் கல்வி வழங்குவதற்கான வாய்ப்பும் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைந்தது. தன்னிடம் வந்து வேலூர் மாவட்ட மாணவர்களுக்குப் படிக்க கல்லூரிகள் இல்லை. அரசு ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்று அவரது அமைச்சர் விசுவநாதன் கேட்டார் உடனே எம்.ஜி.ஆர் நீங்களே ஒரு கல்லூரி ஆரம்பியுங்கள். இந்த அரசு உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்றைய வி.ஐ.டி அகாடமி. எம்.ஜி.ஆர் ஆதரவுடன் பல அதிமுக கட்சியினர் பாலிடெக்னிக் தொழிற்பயிற்சி கல்லூரிகளையும் சுயநிதி கல்லூரிகளையும் தொடங்கி நடத்தினர். இவற்றில் எம்.ஜி.ஆர் ஏழை மாணவர்களுக்கு 25% இலவச ஒதுக்கீட்டைப் கேட்டுப் பெற்றார். மற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரிகளில் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் என்ற சட்டம் இயற்றினார். ஏழை மாணவர்கள் இலவசத் தொழிற்கல்வி பெற்றனர். இவை இன்று சர்வதேச தரத்துடன் பல்கலைக்கழகங்களாக வெளிநாட்டு மாணவர்களும் வெளி மாநில மாணவர்களும் படிக்கும் கலாலயமாக திகழ்கின்றன]. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது தொழில் பயிற்சி அல்லது வேலை வாய்ப்புள்ள தொழிற்படிப்புகளைப் படித்த மாணவர்கள் வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதித்தனர். எம்.ஜி.ஆரின் குழந்தை நலத்திட்டம் அவரது ஆட்சியில் வெற்றி பெற்றது.
எம்.ஜி.ஆர் தான் சினிமாவில் சொல்லிய விஷயங்களும் அவர் ஆட்சியில் அவர் அறிமுகம் செய்த திட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்ததனால் இன்றளவும் அவரை மக்கள் மறக்கவில்லை. அவரது ஒரிஜினல் முகமும் ஒப்பனை முகமும் அதிக வித்தியாசமின்றி ஒரே மாதிரி இருக்கும்படி அவர் ஆரம்பத்தில் கவனித்துக்கொண்டார். இது காலப்போக்கில் அவருக்கு மாபெரும் புகழையும் வெற்றியையும் தரும் அம்சமாக மாறிவிட்டது. இந்த ஒற்றுமை தொடக்கத்தில் அவர் மக்கள் மத்தியில் புகழ் பெற உதவியது; இந்தப் புகழே அவர் முதல்வரானதும் சினிமாவில் சொன்னபடி மாற்றங்களைக் கொண்டுவரவும் மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஊக்கமளித்தது.
எம்.ஜி.ஆர் தன் திரையுலகப் பயணம் முடிந்ததும் ஆன்மிக வாழ்வில் ஈடுபடலாம் என்று நினைத்திருந்த வேளையில் அவர் செய்து வரும் உதவிகளால் மகிழ்ந்திருந்த மக்கள் அவரை அரசியலுக்குள் கொண்டுவந்தனர். இது புலிவால் பிடித்த கதையாகிவிட்டது. அவராக உதவிகள் செய்த காலம் மாறி அவர் கண்டிப்பாக மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயமும் அவர் வகித்த முதல்வர் பதவியால் ஏற்பட்டது. அவர் மக்கள் மீது கொண்டிருந்த மாறாத அன்பினால் இந்தக் கட்டாயத்துக்குப் பணிந்தார். இந்த அன்பு ஆணிவேராக இருந்ததால் அவருடைய உழைப்பும் அறிவும் திட்டமிடலும் அவரை வெற்றித் திருமகனாக உயர்த்தியது.
Posted by : MG.Nagarajan
Published : VikatanOriginals
in வண்ணத் திரை.
வெளியீடு : யாழ் இணையம்
-
‘எம்.ஜி.ஆரின் மகிமை’
‘மகிமை’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு 1. பெருமை 2. புகழ் 3. கவுரவம் என மூன்று பொருள்கள் உண்டு.
இந்த மூன்றும் எம்.ஜி.ஆருக்குப் பொருந்தியது போல் வேறு யாருக்கும் பொருந்தவில்லை என்பதற்கு ஆதாரமாக அனுபவத்தில் நேரில் நான் கண்டு அறிந்த ஓர் உண்மை நிகழ்ச்சியை இங்கு கூற விரும்புகிறேன்.
1963–ம் ஆண்டின் முற்பகுதியில் நான் வசனம் எழுதி எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி நடித்த தேவர் பிலிம்ஸ் ‘நீதிக்குப்பின் பாசம்’ வெளிப்புறப் படப்பிடிப்பு ஊட்டியிலும், சிவாஜிகணேசன் – சரோஜாதேவி நடித்த சிவாஜி பிலிம்ஸ் ‘புதிய பறவை’ அதே ஊட்டியிலும், எம்.ஜி.ஆர்., சாவித்திரி நடித்த கவுரி பிக்சர்ஸ் ‘பரிசு’ இன்றைய தேனி மாவட்டத்தில் தமிழக – கேரள எல்லையைச் சார்ந்த ‘குமுளி’யைக் கடந்து மேலே கேரளாவுக்கு உரிய பகுதியான தேக்கடியிலும் நடைபெற்றது.
அது இனிய இளவேனிற்காலம்! ஆகவே, சுற்றுலா சென்றது போலவும் இருக்கும், படப்பிடிப்புகளைப் பார்த்த மாதிரியும் இருக்கும் என்ற திட்டத்துடன் திருவாரூரிலிருந்து என் தாய் தந்தையரை சென்னைக்கு வரவழைத்து, இங்கிருந்து குடும்பத்துடன் எல்லோருமாக எங்கள் புதிய காரில் புறப்பட்டோம்.
முதலில் தேக்கடிக்கு விஜயம்!
உயர் மட்டத்தில் அழகாக அமையப்பெற்றிருந்த – கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழகக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ‘ஆரண்ய நிவாஸ்’ என்னும் அரசு ‘ரெஸ்டாரண்டில்’ நாங்கள் தங்குவதற்கு இயக்குநர் யோகானந்தும் அவருடைய பங்குதாரரான கே.பி.கொட்டாரக்கராவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அதே ரெஸ்டாரண்டில் தான் சாவித்திரியும் தங்கி இருந்தார். குடும்பத்துடன் சென்று பார்த்தேன். எங்கள் எல்லோரையும் கண்டு அதிக மகிழ்ச்சி அடைந்தார்.
எம்.ஜி.ஆரை மட்டும் அங்கு காணவில்லை. அவர் எங்கே இருக்கிறார்?
அந்த ரெஸ்டாரண்டின் பின்புறம் – தாழ் மட்டத்தில், கண்களுக்கு எட்டிய தொலைவில் இருபுறமும் பரந்து விரிந்து கிடக்கும் மாபெரும் பெரியாரின் நீர்த்தேக்கம் பெரியதோர் ஏரிபோன்ற தோற்றத்தைக் கொண்டு காண்பதற்கு ரம்மியமாக இருந்தது!
நீரின் இடை இடையே நீட்டி நிமிர்ந்து – ஏற்கனவே வாளால் அறுபட்டுத் துண்டு துண்டான பெரிய பெரிய தேக்கு மரங்களின் அடிப்பாகங்கள் ஏராளமாக நிறைந்து நின்று கொண்டிருந்தன!
நீர் நிலைக்கு அப்பால், ஆங்காங்கே கரை ஓரங்களில் குழந்தை குட்டிகள் சகிதம் காட்டு யானைகளின் கூட்டம் காற்று வாங்கிக் கொண்டு நின்றன!
அவைகளுக்கு அந்த இடம்தான் ‘சம்மர் பீச்’ போலிருக்கிறது!
(இந்த இனிய இடத்தை இன்றைக்கும் ‘பரிசு’ படத்தில் சாவித்திரி படகோட்டும் காட்சியில் கண்டு களிக்கலாம்)
இளங்கோடையின் மேற்குப் பருவத்துச் செல்ல மழைச்சரம், விண்ணிலிருந்து மண்ணுக்குப் பாய் விரித்து உச்சந்தலையிலும் உடல் மீதும் பன்னீர் தெளித்தது!
அதன் ஊடே, நீரின் நடுவில் சற்றுத் தொலைவில், கேரளக் கட்டிடக்கலை அழகுடன் கூடி அமைந்துள்ள சிறு அரண்மனை போன்றதோர் வடிவம் என் விழிகளில் தென்பட்டது! சுற்றிலும் மிக மெல்லிய பனிப்புகை படலம் சூழ்ந்திருந்ததால் தெளிவாகத் தெரியவில்லை.
அந்தக் கட்டிடத்தின் பெயர் ‘திருவிதாங்கூர் பேலஸ்!’ – திருவாங்கூர் அரண்மனை!
இந்தியத் திருநாடு சுதந்திரம் பெறுவதற்கு முந்திய காலத்தில், திருவாங்கூர் மன்னர் தன் குடும்பத்தாருடன் வந்து தங்கி ஓய்வெடுத்துக் கொள்ளும் உல்லாச மாளிகை அது!
மிதக்காமல் மிதப்பது போன்றதோர் மாயத்தோற்றத்தில் அம்மாளிகையைக் கைதேர்ந்த கேரளக் கட்டிட வல்லுனர்கள் அமைத்திருந்தனர்.
அன்றைய திருவாங்கூர் மன்னரின் அந்த மாளிகையில் தான் இன்றைய திரைப்பட உலகின் மகுடம் தரிக்காத மன்னரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனது அன்புத் துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருடன் தங்கியிருந்தார்!
அவரைப் பார்ப்பதற்காக ஒரு படகில் அங்கு நான் ஊர்ந்தேன். நான் படகில் வருவதைப் பார்த்தபடி, அம்மாளிகையின் வெளிவராந்தாவும் நீரலையும் நெருங்கி இணைந்த இடத்தின் ஒரு மூலையில் எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் அம்மா இருந்தார்கள்! இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.
சற்று நெருங்கி வந்ததும் நான் கை அசைத்தேன். பதிலுக்கு அவரும் கை அசைத்தார்.
ஊர்ந்த என் படகு வராந்தாவை ஒட்டியதும் எம்.ஜி.ஆர். குனிந்து தன் வலது கையை நீட்டி என் கையை இறுகப் பற்றி இழுத்து நான் மேலே ஏறி வரத் துணை புரிந்தார்.
இளநகை புரிந்தவாறு என்னைக் கேட்டார்:– ‘எப்போ வந்தீங்க?’
விவரம் கூறிக்கொண்டே விழிகளைச் சுழற்றியபடி அம்மாளிகையை நோட்டம் விட்டேன்.
அவர்:– ‘இடம் எப்படி?’
நான்:– ‘ஒரு மாசத்துக்கு என்னை இங்கே ஒக்காரவச்சி சோறு மட்டும் போட்டு, பேப்பரும் – பேனாவும் கொடுத்தா நாலு எம்.ஜி.ஆர். வெற்றிப் படங்களுக்கு வேண்டிய கதை – வசனங்களை எழுதி தேவரண்ணன் கையிலே கொடுத்திடுவேன்’.
அவர்:– ‘அவருக்குத்தான் கொடுப்பீங்களா? எனக்குத் தரமாட்டிங்களா?’
நான்:– ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தான் இப்போ படம் எடுக்கிறதில்லையே’.
அவர்:– ‘இந்த இயற்கை அழகு நிறைஞ்ச இடங்களைப் பார்த்ததும் இங்கேயே முழுக்க முழுக்க ஒரு படத்தை
எடுத்து முடிச்சி ரிலீஸ்
பண்ணிடலான்னு எனக்குத் தோணுது’.
நான்:– ‘இது நமக்குள்ளேயே இருக்கட்டும். தேவரண்ணனுக்குத் தெரிஞ்சா, உடனே ஒங்களுக்கு முன்னால அவர் முந்திக்கிட்டு மூணே வாரத்துல மதுரை வீரன் மாதிரி ‘தேக்கடி வீரன்’ அப்படின்னு ஒரு படத்தை எடுத்து முடிச்சி ரிலீஸ் பண்ணிடுவாரு. அப்புறம் நாம ரெண்டு பேரும் தலையில் துண்டை போட்டுக்க வேண்டியதுதான்!
இதைக்கேட்டு அவர் உரக்கச் சிரித்தபடி உள் கூடத்தில் வந்து உட்கார்ந்து அம்மாவிடம் எனக்கு சூடாக டீ கொடுக்கச் சொன்னார்.
அவருக்கு காபி, டீ அருந்தும் பழக்கம் கிடையாது. சுத்தமான பால் தான் பருகுவார். அதுவும் வீட்டுப் பசும்பாலாக இருக்க வேண்டும். சுட வைத்த சீரக நீரைத் தவிர வேறு தண்ணீர் குடிக்கமாட்டார்.
அம்மா கொண்டு வந்து கொடுத்த சூடான தேநீரைச் சுவைத்துப் பருகிக் கொண்டிருந்தேன்.
திடீரென்று வெளிப்புறத்தில் இரைச்சல் ஒலி கேட்டது. எழுந்து வராந்தாவுக்கு வந்து பார்த்தோம்.
ஏழெட்டு பேர் நீரில் வேகமாக நீந்தி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் தலைகளின் மீது ஏதேதோ பொருள்களை வைத்துக் கட்டியிருந்தனர்.
அவர்களைத் துரத்தியவாறு பின்னால் ஒரு படகில் சீருடை அணிந்த காட்டிலாகா சேவகர்கள் வந்தனர்.
நீந்தி வந்தவர்கள், வராந்தாவில் எம்.ஜி.ஆர். நிற்பதைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்து மேலும் உற்சாகத்துடன் வேக வேகமாகத் தங்கள் கைகளை மாறி மாறிப் போட்டு நீந்தி அருகில் வந்து, மேலே ஏறி வராந்தாவை அடைந்தார்கள்.
ஒரு நொடிப் பொழுது எம்.ஜி.ஆரை வைத்த விழி வாங்காமல் உற்று நோக்கிவிட்டு, சட்டென்று அவர் முன் நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து வணங்கினார்கள்!
அதற்குள், இவர்களைத் துரத்தி வந்த சேவகர்கள் படகை விட்டு மேலே வந்து எம்.ஜி.ஆரிடம் இவர்களைப்பற்றி ஏதோ சொல்வதற்கு முனைய, அவர் தன் கையை நீட்டிக் கண் சாடை செய்து தடுத்து விட்டார்.
விழுந்தவர்கள் இப்பொழுது எழுந்து நின்றனர். நீரில் நனையாமல் இருப்பதற்காக தங்கள் தலைகளில் வைத்துக் கட்டியிருந்த பொருள்களை எடுத்து எம்.ஜி.ஆரின் காலடியில் காணிக்கையாக வைத்தனர்.
அவர்களில் ஒரு இளைஞர் மலையாளத் தமிழில் கூறியதை இங்கு நான் ஒழுங்குபடுத்தி எழுதுகிறேன்.
‘அண்ணே! நாங்க இந்தக் காட்டைச் சுற்றி இருக்கிற மலைவாழ் மக்களைச் சேர்ந்தவுங்க. மலையாளமும், தமிழும் பேசுவோம். கீழே இருக்குற குமுளி, கம்பம், டூரிங் சினிமா கொட்டகையில நீங்க நடிச்ச படங்களை ரொம்ப ஆசையோட பாத்து சந்தோஷப்படுவோம். பொங்கல், தீபாவளி நாள்ல ஒங்க புதுப்படம் பாக்கிறதுக்காக தேனிக்கு பஸ்ல போவோம்.
இங்கே நீங்க சூட்டிங்குக்கு வந்திருக்கிறதா கேள்விப்பட்டோம். நீங்க இங்கே வந்ததுலேருந்து ஒங்களை நேருல பாக்குறதுக்கு ரொம்ப முயற்சி பண்ணுனோம். முடியலே.
இன்னிக்கு நீங்க சூட்டிங் இல்லாம இங்கேதான் இருக்கீங்கன்னு எங்களுக்குத் தெரிஞ்சிது. என்ன ஆனாலும் சரி – இன்னிக்கு ஒங்களைப் பாக்காம விடுறதில்லேன்னு முடிவு பண்ணி இந்த அதிகாரிங்களைக் கேட்டோம். அனுமதி கிடைக்கலே.
அதனால அவுங்களை ஏமாத்திட்டு தண்ணில குதிச்சி நீந்துனோம். எங்களைப் பாத்திட்டு படகுல தொரத்துனாங்க. வேகமாக நீந்தி வந்து எப்படியோ ஒங்களை பாத்திட்டோம். அதுபோதும்.
இதோ – இதெல்லாம் உங்களுக்கு எங்க காணிக்கை. எங்க ஞாபகார்த்தமா கொண்டு போயி வச்சிக்குங்க. நீங்க எப்பவும் நல்லாயிருக்கணும்’ என்று சொல்லி எல்லோரும் கும்பிட்டுவிட்டு, அருகில் நின்ற அம்மாவின் காலிலும் விழுந்து வணங்கினர்.
சற்று முதிர்ந்த வயதுடைய ஒருவர் சொன்னார். ஓரளவுக்கு நல்ல தமிழில்:–
‘சாமி! நெசமாவே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. சினிமாவுல விட, நேருல பாக்குறதுக்கு நீங்க அசல் ராசாவாட்டமே இருக்கீங்க! அடுத்த வருஷமும் இதே மாதிரி அம்மாவைக் கூட்டிக்கிட்டு இங்கே வாங்க.
ஒங்களுக்குத் தோதுபட்டா நாங்க குடி இருக்குற அதோ அந்த எடத்துக்கு அப்பால படகுல வந்து எறங்குனீங்கன்னா, எங்க சாதி சனங்க புள்ளைகுட்டிங்களோட வந்து ஒங்களைப் பாத்து சந்தோஷப்பட்டு ஒங்களை எங்களோட சேர்ந்து சாப்பிட வைப்போம்’.
அந்த மலைவாழ் மக்களைப் பார்த்து அவர்கள் கூறியதைக் கேட்டு மலைத்து உணர்ச்சி வசப்பட்டுப்போன எம்.ஜி.ஆர். அம்மாவுடன் உள்ளே ஒரு அறைக்குள் போனார்.
சற்று நேரத்தில் வெளியே வந்தார்.
அவர் கையில் பத்துப்பத்து ரூபாய்களாகச் சேர்த்துப் பின் பண்ணிய இரண்டு நோட்டுக்கட்டுகள் இருந்தன. அதைப் பிளந்து திருகிப் ‘பின்’னிலிருந்து கழற்றி எடுத்து எல்லா நோட்டுகளையும் (இரண்டாயிரம் ரூபாய்) ஒன்றாய்ச் சேர்த்து வைத்துக் கொண்டு, பிரித்துப் பிரித்துத் தன் கைக்கு வந்ததை எண்ணிப் பார்க்காமல் அப்படியே அவர்கள் அனைவருடைய கைகளிலும் அன்போடு வைத்தார்.
அவர்களுக்குக் கொடுத்ததுபோக மிச்சம் மீதி இருந்த நோட்டுகளை காட்டிலாகா சேவகர்களிடம் கொடுத்தார். அவர்கள் முகம் மலர்ந்து கைகுவித்து அவரைக்
கும்பிட்டனர்.
இப்பொழுது – துரத்தப்பட்டவர்கள் இரண்டாவது தடவையாகவும், துரத்தியவர்கள் முதல் தடவையாகவும் எம்.ஜி.ஆர். என்ற அவர்களின் கண்கண்ட கடவுளின் காலடியில் விழுந்து வணங்கி விடைபெற்றனர்.
மலைவாழ் மக்களையும், படகுகளில் ஏற்றிச் செல்லுமாறு எம்.ஜி.ஆர். கேட்டுக்கொள்ள அது அப்படியே நடந்தது
-ஆரூர்தாஸ்........baa
-
அரசியலில் அறிவாளிகளும் ராஜதந்திரிகளும் தான் வெற்றி பெறுவார்கள் என்ற மரபை உடைத்தவர்கள் 2 பேர் ஒன்று "கர்மவீரர்" காமராஜர் மற்றொன்று "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர்.
"மனிதாபிமானம்" ஒன்று தான் இவர்களின் மகத்தான ஆயுதம்.அதனால் தானோ என்னவோ இன்றும் மக்களின் மனதில் இவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
சிறுவயதில் எம்.ஜி.ஆர் அனுபவித்த வறுமையான வாழ்க்கை சூழல் தான் பின்னாளில் அவரது மக்கள் நல பணிக்கு ஆசானாக விளங்கியது.
திரைப்படங்களில் அனைவரும் நடித்தார்கள் சம்பாதித்தார்கள் பின் சொந்த வேலையை பார்த்தார்கள்.ஆனால் மக்கள் திலகமோ நடித்தார் சம்பாதித்தார் அது மட்டுமின்றி மற்றவர்களின் துயரங்களை கவனித்தார் அதை நீக்க உதவினார்.
பரிவோடு ஏழை எளியோரை நோக்கினார்.துன்பத்தில் இருப்பவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டது மட்டுமின்றி வள்ளலாக உதவிகளை செய்தார்.
எம்.ஜி.ஆர் என்பது வெறும் பெயரல்ல இது ஒரு மூன்றெழுத்து மந்திர சொல்.
கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் திரையுலகை கட்டிப்போட்ட ஆளுமை.
திரையுலகை மக்களுக்கான நல்ல கருத்துக்களை சொல்லும் தளமாக மாற்றியவர்.
திரைப்படங்களின் வாயிலாக மக்கள் மனதை கொள்ளை கொண்டவர்.
அரசியலில் கால் பதித்து கடைசி மூச்சு வரை வெல்ல முடியாத தலைமையாக இருந்தவர்.
இவை அனைத்துக்கும் காரணமாக விளங்கியது ஒன்றே ஒன்று தான் அது தான் மக்கள் திலகத்தின் "மனிதாபிமானம்".........Baa
-
இந்த உலகம் முழுவதும் இசையால் நிரம்பிக் கிடக்கிறது என்றால் அது தான் உண்மை. இசைக்கு மட்டும்தான் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. மனிதனை மனிதனே அடிமையாக்கி வைத்திருந்தபோதும் இசை தான் மொத்த மனித இனத்தையும் அடிமையாக்கி வைத்திருந்தது.பல மன்னர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் இறங்கியபோது தான் ஓரிடத்திலிருந்த இசை வடிவம் இன்னொரு இடத்திற்குப் பரவியது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆப்ரிக்க அடிமைகளைக் கொண்டு வந்து இறக்கியபோது காங்கோ இசை லத்தீன் இசையோடு இரண்டறக் கலந்தது.உலகம் புதுவித இசையில் மயங்கியது.கரீபியன் கடற் பரப்பு தொடங்கி க்யூபா அர்ஜெண்டினா உருகுவே பிரேசில் என இசைக்கு புது வடிவம் கிடைத்தது.ஆப்ரிக்கன் பச்சாட்டா ,போஸனோவா, சல்சா, டாங்கோ ,சாம்பா, ராக், ஜாஸ் ,ஹிப்பாப் ரெக்காட்டன் என கலந்தடித்த இசையில் பல்வேறு இசைக் குழுக்கள் உலகமெங்கும் மேற்கத்திய இசையை கொண்டு சென்றது.அதிலொரு இசை வடிவம் தான் ரும்பா.உலகம் முழுவதும் ரும்பாவிற்கு அடிமையாகிக் கிடக்க ரும்பா கிரேஸ் ஐரோப்போ முழுவதும் நாற்பதுகளில் ஆட்டம் போட்டது.க்யூபாவின் மொய்ஸஸ் சிமன் தனது எல்மண்சரோவை ஸ்பெயின் முழுவதும் பரப்பினார்.ஒரு மில்லியன் ரெக்கார்டு விற்றுத் தீர்ந்தது.ஒரு லட்சம் டாலர் நாற்பதுகளில் ராயல்டியாகக் கிடைத்தது.அண்டோனியோ மசின், பெர்ட் ஆம்ப்ரோஸ் லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் , ரெட் நிகோலஸ், ஸ்டான் கெண்ட்டன், அபெலார்டோ பரோக்கோ, என பலரது பாக்கெட்டுகள் நிரம்பி வழிந்தது.ஆளாளுக்கு வெஸ்டர்ன் மியூசிக்கில் கலக்கிக்கொண்டிருக்க அன்றைய திரைத் துறையும் அதை அழகாக பயன்படுத்திக்கொண்டது.
பாஸனோவா பிரேசிலின் சாம்பா ரிதத்தோடு இணைந்தது.ராபர்டோ மெனஸ்கல் மற்றும் ரொணால்டோ பாங்கலி சாம்பாவிற்கு புது வடிவம் தந்தார்கள்.இன்றைய ரியோ டி ஜெனிரோவின் கார்னிவலில் அன்றைய ஆப்ரிக்க அடிமைகள் தொடங்கி வைத்த சாம்பா நடனத்தில் அந்த ரிதத்திற்கென்றே தனி மவுசு இன்றும் தொடர்கிறது. அண்டோனியோ கார்லோஸின் பிரேசில் லத்தீன் ஜாஸ் பியானோ கிடார் ஃப்ளூட் என பலரையும் கட்டிப்போட செலஸ்டி மெண்டோஸாவின் பேங்கோஸ் ஆட்டத்தின் வேகத்தை இன்னும் கூட்டியது.அமெரிக்க ஆப்ரிக்க அடிமைகள் உடல் அசதியை போக்க ராக்கோடு ஜாஸையும் வாசிக்க ப்ளூஸ் என்ற புது வடிவம் பிறந்தது.மறு பக்கம் லத்தீன் இசையின் புது வடிவமான ஓரஹா உலகை தன் பக்கம் ஈர்த்தது.க்யூபாவின் செக்காஸ்கி ஃப்ளூட்டும் இணைய ரும்பாவின் மாண்டலின் எல்லாவற்றையும் கலந்து நமது தமிழ்த் திரையிசையும் புது வடிவம் கண்டது.இதை இங்கே தொடங்கி வைத்தது மெல்லிசை மன்னர்கள்.
உலகில் எங்கெல்லாம் என்னென்ன மாற்றங்கள் இசையில் ஏற்படுகிறதோ அதையெல்லாம் முயற்சித்துப் பார்க்கும் ஆவல் எப்போதுமே மன்னர்களுக்கு உண்டு.புதுப் புது வாத்தியக் கருவிகளை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் வெஸ்டர்னில் கலக்க முடியுமோ அப்படியெல்லாம் கலக்கிய மேதைகள் அவர்கள்.பியானோவில் விளையாடிக்கொண்டே டபுள் பேங்கோஸில் விதவிதமான ரும்பாக்களை அவர்கள் தான் அறிமுகம் செய்து வைத்தார்கள்.க்யூபாவின் தெருக்களில் வாசித்த ரும்பாக்களை சினிமாவில் கொண்டு வந்தார்கள்.செலஸ்டி மெண்டோஸாவின் பேங்கோஸ் வடிவத்தை வஞ்சனையின்றி வாசித்தார்கள்.பரோக்காவின் சச்சச்சாவை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியது மன்னர்கள் தான்.அர்ஜெண்டினாவின் ஜூலியா டி கரோ பங்கு பெற்ற ஆர்கெஸ்ட்ரா டிபிக்காவை நமக்கு அடையாளம் காட்டியது அவர்கள் தான்.உருகுவேவின் டாங்கோ மியூசிக் க்யூபாவின் காற்று வாத்தியங்கள் என விதவிதமான முயற்சிகள் நம்மை தாளம் போட வைத்தன.என்ன இசை வடிவம் என தெரியாமலேயே நமது கால்கள் துள்ளாட்டம் போடக் காரணம் மன்னர்களின் மேற்கத்திய இசை ஞானம்.அதிலொரு அற்புதத்தைப் பற்றி பேசவே இன்றைய பதிவு.அந்த அற்புதம் இடம் பெற்ற திரைப்படம் தெய்வத் தாய்.
இந்தப் படம் ரும்பா உச்சம் தொட்ட 64 ல் வெளியானது இந்தப் படம்.மக்கள் திலகம் சரோஜா ஜோடியின் மகத்தான வெற்றிப் படம்.சத்யா மூவீஸின் முதல் முயற்சியில் பிற்காலத்தில் புகழ் பெற்ற இரு இயக்குநர்கள் ஒன்றாக பணியாற்றிய முதல் படம்.நந்திதாவின் மூலக் கதைக்கு நானாபாய் பட் திரைக்கதை வடிவம் தர டாக்டர் நோ சாயலில் ஒரு அருமையான துப்பறியும் கதை.உளவுத் துறை அதிகாரி மாறனாக மக்கள் திலகம்.அவரது காதலி மேகலாவாக அபிநய சரஸ்வதி.அப்போது தான் புதுமுகமான மாதவன் இயக்கிய மக்கள் திலகத்தின் ஒரே படம் தெய்வத் தாய்.நாடக மேடைகளில் வலம் வந்த கே.பி.க்கு திரைத் துறையை அறிமுகப்படுத்திய படமிது.பக்கம் பக்கமாக நாடக பாணியில் வசனங்களை எழுதித் தள்ளிய அவரது ஆர்வத்திற்கு இவ்வளவு வேண்டாம் இப்படி இப்படி எழுதினால் போதும் என சினிமா வசனங்களை அவருக்கு கற்றுத் தந்த படம் என தெய்வத் தாய்க்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு.படத்தின் மகத்தான வெற்றிக்கு இன்னொரு காரணம் அதில் இடம் பெற்ற பாடல்கள்.
இந்தப் புன்னகை என்ன விலை ஒரு ஸ்டைலில் வந்தால் வண்ணக்கிளி சொன்ன மொழி இன்னொரு ஸ்டைலில் இருந்தது.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் கொள்கை முழக்கம் செய்தபோது பருவம் போன பாதையில் இன்னொரு வடிவத்தில் வந்திருந்தது.இவை எல்லாவற்றிற்கும் மேலாக வெஸ்டர்னில் வெளுத்து வாங்கியது இன்னொரு பாடல்.அந்தப் பாடல் தான் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை என்ற பாடல்.மன்னர்கள் கையால் குட்டுப்பட்டு வெற்றிகரமாக வலம் வந்த வாலியின் வரிகள் படம் முழுவதும் பரவிக் கிடந்தது.சிச்சுவேஷனை சொல்லச் சொல்ல புதுப் புது சிந்தனைகளை அவர் தூவிக்கொண்டே போக மக்கள் திலகத்திற்கு வாலி இன்னும் கொஞ்சம் நெருக்கத்தில் வரக் காரணமாக இருந்தது தெய்வத் தாய்.அவரது கற்பனைக்கு கால் சலங்கை போட்டு கலகலப்பாக ஆடவிட்ட மன்னர்களை இந்த நேரத்தில் நம்மால் புகழாமல் இருக்க முடியாது.இந்தப் பாடலின் சிச்சுவேஷன் நாயகன் அவனது படுக்கையறையில் தனியாக இருக்கிறான்.அவனது பக்கத்து டேபிளில் நாயகியின் புகைப்படம் ஃபிரேம் போட்டு வைக்கப்பட்டிருக்கிறது.புகைப்படத்தைப் பார்த்ததும் அவனது கற்பனைச் சிறகுகள் விரிகிறது.புகைப்படம் உயிர் பெற நாயகி அதிலிருந்து வெளியேறி அவனோடு இணைகிறாள்.வாலியின் கற்பனையும் ஊற்றெடுக்க காட்சிகளை அழகாக எடுத்துத் தந்திருப்பார் மாதவன்.
அதன் மெட்டிற்குப் போவதற்கு முன்பாக மன்னர்கள் வாசித்த முன்னிசை தான் இங்கு முக்கிய இடம் வகிக்கிறது.ரும்பாவின் மேற்கத்திய ரிதத்தை அவர்கள் அட்டகாசமாக பயன்படுத்தியிருப்பார்கள்.ஓரஹா பாணியில் டபுள் பேங்கோஸை அருமையாக வாசித்திருப்பார் கோபாலகிருஷ்ணன்.ராக் அண்ட் ரோலை கொண்டு வந்து ரும்பாவில் கலந்து ஒரு செக்காஸ்கி பாணியில் அவர்கள் தந்த விதம் அசத்தலான முயற்சி.க்யூபாவின் இசை வடிவம் லத்தீன் அமெரிக்க ராக் அண்ட் ரோல் ட்ரம்ஸ் கிடார் ட்ரம்பெட் சாக்ஸ் பேங்கோஸ் அக்கார்டியன் மாண்டலின் என ஏகப்பட்ட வாத்தியங்களை இந்தித் திரைப்படங்களில் ஏகப்பட்ட இசை மேதைகள் வாசித்துத் தள்ளிய அறுபதுகளில் நமது மன்னர்களும் சளைக்காமல் இங்கே அவற்றை சமைத்துத் தள்ளியதை நாம் மறந்துவிடக் கூடாது.பாடலின் முன்னிசையில் வரும் அந்த ரும்பா பிட் வேறெங்கும் காண முடியாத அற்புதம்.பேங்கோஸின் தனியாவர்த்தனம்.ட்ரம்ஸில் தொடங்கி பேங்கோஸில் முடிய புகைப்பட நாயகி வெள்ளுடை தரித்து இரட்டை ஜடையில் அதே வெள்ளையில் ரிப்பன் கட்டி சிக்கென ஆட்டத்தை ஆரம்பிக்க நாயகனின் கால்கள் அந்த ரிதத்திற்கேற்ப தாளமிட ஃப்ளூட் வயலின் இசையோடு வருகிறது இந்தப் பாடல்.
கவிஞர்களுக்கே உரிய கற்பனைத் திறன்.பாடலுக்கு முன்பே வருகிறது இந்தக் கவிதை.ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்.நிலவு எனக்கு குளிராகத் தெரியவில்லை.நிலவை விட குளிர்கிறது இவள் முகம்.அந்த குளிர்ச்சி ததும்பும் முகத்தில் கண்களைப் பார்க்கிறேன் .மலரை விட ஒளிர்கிறது அந்தக் கண்கள்.இதோ முடிவெடுத்துவிட்டேன்.அவளின்றி நானில்லை.அவளும் அப்படித் தான் நானின்றி இனி அவளேது?. பல்லவியில் பக்குவமாக பாடமெடுத்திருப்பார் வாலி.மன்னர்கள் ஐயா டி.எம்.எஸ்ஸை அழைக்க எம்.எஸ்.வி.எப்படிப் பாட வேண்டுமென அவருக்கு பாடமெடுத்திருப்பார்.ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் வரை வாத்தியங்களை அவர் தொடவே இல்லை.நிலவில் குளிரில்லை என்றதும் தான் உயிர் பெறும் வாத்தியங்கள்.தேவையான இடத்தில் சைலன்ஸ் தர முக்கியமான கட்டம் இது தான் என வாத்தியங்களை ஒலிக்கவிட்ட விதம் நேர்த்தியான யுக்தி.கண்ணையும் மலரையும் சொல்லிவிட்டு அவளில்லாமல் நானில்லை எனும்போது கொஞ்சம் உற்சாகத்தை கூட்டியிருப்பார்.அவளில்...லாமல் சின்ன இடைவெளி அந்த தாளத்திற்கு சரியான மாத்திரையில் வந்து உட்கார்ந்திருக்கும்.தன னன் னான னானன்னா .ட்ரம்ஸின் கோர்வையான தாளம்.சட்டென ராக் அண் ரோல்.லல லல்ல லாலலா லால லல்லலா.மக்கள் திலகத்தின் உற்சாகம்.மாதவன் அவரை குழந்தை போல பெட்டில் கிடத்தி கால்களை காற்றில் மிதிக்க விட புகைப்படப் பெண்மை இப்போது உயிர் பெற்று உள்ளே வருகிறது.
இடையிசையில் ஃப்ளூட் வயலின் இசையோடு அட்டகாசமான மாண்டலின்.சரணத்திலும் விடாமல் கொஞ்சிக்கொண்டு போகிறது அந்த வாத்தியம்.வாலியின் கற்பனையில் வண்ணமயமான வரிகள்.
கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயில் ஓசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்.
சட்டென மின்னி மறையும் மின்னலை ஒத்த பார்வை.மின்னலை வாலி கொடியாக படரவிட்ட அழகு.விழியழகை மானோடும் மீனோடும் ஒப்பிட்டிருப்பார்.பவள வாய் திறந்து பேசினாலோ குயிலாக வந்து விழும் ஓசையில் குழலா யாழா என்ற குழப்பம்.நாயகன் நாயகியை நெருங்கி சுற்றி வந்து ஒரு ரிவால்விங் சேரில் அமர்த்தி க்ளோஸப் வர அந்த குழலோ யாழோ இன்னும் கொஞ்சம் அழகாகிறது.அதன் முடிவில் மன்னர்கள் தரும் மாண்டலின் இசையில் தந்திகளின் உற்சாகம் தெரியும்.இரு முறை ஐயாவின் குரல் ஒலிக்க இரண்டிலும் அவர் வெறைட்டி காட்டியிருப்பார்.அடுத்த வரியில் மெட்டில் சிறிது மாற்றம்.காரணம் வாலியின் வரிகளில் இன்னும் கொஞ்சம் நெருக்கம்.
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
காதலின் இன்னொரு பக்கம்.உடலோடு இணைவதற்கு முன்பாக உள்ளத்தோடு இணைந்த உண்மைக் காதல்.நெஞ்சம் இணைய பஞ்சாகிப்போன உள்ளம்.தீயாக வந்து தெவிட்டாத இன்பம் தர காதல் நோயில் கட்டுண்ட உள்ளங்கள்.மக்கள் திலகத்தின் எக்ஸ்ப்ரஷன் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.வார்த்தைகளுக்கு அவர் தரும் முக்கியத்துவம்.கைகளை பக்குவமாக படரவிட்டு வளைத்து நெளித்து வாகாக நெற்றியில் ஒரு முட்டு முட்ட மக்கள் திலகத்தின் ஈடுபாடு தெரியும். வாலி அடுத்த வரியில் இன்னும் கொஞ்சம் ஏங்கவிட்டிருப்பார்.நெஞ்சும் பஞ்சும் ஒரு மெட்டில் அடங்க அடுத்த வரியில் மாறிப் போகும் மாயம்.
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ?.
ஐயாவின் குரலில் ஏகப்பட்ட குழைவுகள்.ஏக்கத்துடன் அவர் கேட்ட கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள்.மாதவன் அப்படியே மக்கள் திலகத்தை நிலத்தில் படுக்க வைத்து கிரேன் மீதேறி உச்சிக்குச் சென்றிருப்பார்.நாளை என் செய்வாளோ?. நாளை என டி.எம்.எஸ்ஸூம் உச்சியில் நிற்பார்.வார்த்தைகள் இடிக்காமல் இருக்க என்ன செய்வாளோ என்பதை என் செய்வாளோ என சுருக்கியதில் கூட ஒரு ஒழுங்கிருக்கும்.முக்கியமாக அங்கே மியூசிக் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள் மன்னர்கள்.
அட்டகாசமான இசைக்கேற்ப ஆடும் ஜோடி.அபிநய சரஸ்வதியின் ஆட்டத்திற்கு இணையாக ஆடும் மக்கள் திலகம்.அந்த மேலாடையை எப்படித் தான் போட்டாரோ?. அவ்வளவு டைட்டான ஆடையில் கழுத்தில் ஒரு கலர் துண்டு முடிச்சோடு பறக்க கீழே லூசான கால்சட்டையில் நல்ல காம்பினேஷனோடு டபுள் கலர் ஷூக்கள்.இடுப்பில் பின்னலான பெல்ட்.ரிஸ்ட் வாட்ச்.ஜல்லிக்கட்டுக் காளையாக துள்ளாட்டம் போடும் மக்கள் திலகம்.ஏதோ பள்ளி முடித்து திரும்பும் மாணவி போல் இரட்டை சடை பின்னலிட்டு இரு பக்கம் ரிப்பன் கட்டி ஒரு வெள்ளுடை தேவதையாக சிக்கென்ற சரோஜா. வாலி தனது மனக் கண்ணால் நாயகியை பார்த்திருப்பார்.அதே வாத்தியங்களோடு இடையிசை அழகாக இந்த ஜோடி மெல்ல வெளியே வந்து வராண்டாவில் தங்களது ஆட்டத்தை தொடர்கிறது.வாலியின் வர்ணனை கொஞ்சம் தூக்கலாக
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை சேர்த்தாள்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ?.
அன்னம் போன்ற தோற்றம் சிலை வண்ணமாக தேகம்.மது ஊறும் இதழோடு ஒரு மகா கற்பனை.என்னோடு தன்னோடும் தன்னோடு என்னோடும் கற்பனையில் கட்டிப் பிடித்து கலக்கலான ஆட்டம் போட்டு காட்சிகளுக்கேற்ப கோணங்கள் அமைத்து மொத்த யூனிட்டும் தங்களது உழைப்பை கொட்டிக் கொடுக்க நமக்கு காலமெல்லாம் கண்டு களித்து காதுகளுக்கு விருந்தளிந்த இசை மேதைகள்.பாடல் முடிந்த பிறகும் ஆசை ஆசையாக அந்த ரும்பாவை ஆசை தீர அடித்த பிறகு தான் மன்னர்கள் ஓய்வார்கள்.முடிவில் ஒலித்த லல்ல லாலல்லாவில் உற்சாகமான இசை விருந்துண்ட திருப்தி.......... Abdul Samad Fayaz
-
"குடியிருந்த கோயில்", படத்தில் "ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலே" பாடல் படப்பிடிப்பு,நடனப்பயிற்சி பற்றி நண்பர்கள் பதிவுகள் மூலம் விவாதித்து வருகின்றனர்.இந்த பாடல் மற்றும் படப்பிடிப்பு பற்றி தயாரிப்பாளர் வேலுமணி,டைரக்டர் சங்கர்,நாயகன் தலைவர் ஆகியோர்களிடையே நடைபெற்ற சம்பாஷனைகள் பற்றி,எம்.ஜி.ஆருடன் உடனிருந்து 1950ல் இருந்து திரையுலகில் பயணித்த ரவீந்தர் (இவர்தான் நாடோடிமன்னனுக்கு இணை வசனகர்த்தா) பொம்மை இதழில் எழுதிய சுருக்கம் தந்துள்ளேன்.
ஆடலுடன் பாடலுக்கு செம்மலுடன் ஆட விஜயலட்சுமி ஒப்பந்தம் ஆயிருந்தார்.இளமையும்,திறமையும் உள்ள நடிகையுடன் உடன் ஆட செம்மல் தயங்கினாராம்.
அப்போது தலைவர் சொன்னாராம் நான் "விக்கிரமாதித்தன்", "மன்னாதிமன்னன்" படங்களில் நடனம் ஆடியுள்ளேன்.ஆனால் பரதம் என்றால் காட்சிகளில் அட்ஜஸ் செய்து கொள்ளலாம்.ஆனால் பங்கரா நடனத்துக்கு மூவ்மெண்ட்ஸ் முக்கியம் என்று சொல்லிவிட்டு உடன் படப்பிடிப்பை ஒருவாரம் தள்ளிவைக்க சொன்னாராம்.தயாரிப்பாளர் வேலுமணி எவ்வளவோ சொன்னாராம்.அந்த நாட்களில் பங்கரா டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் பயிற்சி எடுத்தாராம்.டைரக்டர் சங்கர் சொன்னாராம் அண்ணே உங்க திறமையிலே நம்பிக்கை இல்லாம பேசாதிங்க.நான் இந்த பாடலை எடுத்துக்காட்டறேன்.தலைவர் உடன் ஒரு வேண்டுகோள் சொன்னாராம்.பாடல் படப்பிடிப்பை நான் தான் முதலில் பார்க்கணும்.அப்புறம் தான் மத்தவங்களுக்கு காண்பிக்கணும் என்று சொல்லிவிட்டு சீக்கியர் வேஷம் போட சென்றுவிட்டாராம்.எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ஒப்பனை கலைஞர் பீதாம்பரம் (பி.வாசுவின் தந்தை) தலைவரை ,இத்துடன் பதிவு செய்துள்ள படத்தில் உள்ளபடி சீக்கியர் வேஷம் போட்டாராம்.இந்த ஆடலுடன் பாடலைக்கேட்டு பாடல் மூன்று நாட்கள் நடைபெற்றது.தலைவரின் மூவ்மெண்ட்ஸ் பார்த்த விஜயலட்சுமி அசந்து பிரமித்துப்போய் சொன்னாராம் "உங்க ஆட்டத்துக்கு முன்னால நான் இல்லை.என்னையே காணோம்".ரஷ் வந்ததும் சங்கர் தலைவரை பார்க்கும்படி சொன்னாராம்.படத்தொகுப்பு செம்மல் பார்த்ததும் ரவீந்தரும் பார்த்தாராம்.செம்மலின் ஆட்டத்தின் திறனை டைரக்டர் மெச்சினார்.டைரக்டர் படப்பிடிப்பு திறனை தலைவர் மெச்சினாராம்.படத்தின் சிறப்பான வெற்றிக்கு அப்பாடல் ஒரு அம்சமாக இருந்தது என்றார் .
இந்த செய்தி பொம்மை இதழில் தலைவரின் வசனகர்த்தா ரவீந்தர் எழுதியுள்ளார்..........nssm...
-
புரட்சித்தலைவர்
#மக்கள்திலகம்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதன்கிழமை
காலை வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து வரும் இந்த தொடர் பதிவில் இன்று நாம் தலைவர் நடித்த அவரின் 35 வது படமான
#"மதுரைவீரன் " திரைப்படம் பற்றி காண்போம்..
முன்னதாகவும் படங்கள் ஓடியிருக்கின்றன. வசூல் குவிந்திருக்கின்றன. ஆனால் அப்படியொரு வசூலை அதற்கு முன்பு வேறு எந்தப் படங்களும் கொடுத்ததில்லை எம்ஜிஆருக்கு. மட்டுமல்ல, தென்னிந்தியா அளவில்... அதேபோல், அவரை ரசிக்கத் தொடங்கிய கூட்டம் முன்னமே இருந்ததுதான். ரசிகர் மன்றங்களும் கூட முன்பே வைக்கத் தொடங்கிவிட்டார்கள்தான். ஆனால், அந்தப் படம் வந்த பிறகுதான், எம்ஜிஆரின் திரை வாழ்வில், பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது சின்னவரின் கொடி. அந்தப் படம்... ‘மதுரை வீரன்’.
இன்றைக்கும் தென்மாவட்டங்களில் பலராலும் வணங்கப்பட்டு வரும் தெய்வம்... மதுரை வீரன். தமிழ் கூறும் நல்லுலகில், மதுரை வீரன் குறித்தும் அவருடைய மனைவியர் குறித்தும் கர்ண பரம்பரைக் கதை உண்டு. அந்தக் கதையையே ஆதாரமாகக் கொண்டு, மிகப்பெரும் தயாரிப்பாளரான லேனா செட்டியார், எம்ஜிஆரின் கால்ஷீட்டை வாங்கி, ‘மதுரை வீரன்’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கினார்.
அநேகமாக, எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ஹிட்டும் ‘யாரது எம்.ஜி.ராமசந்திரன்?’ என்று எல்லோரும் வியந்து கொண்டாடியதுமான முதல் படம், முக்கியமான படம் ‘மலைக்கள்ளன்’ திரைப்படமாகத்தான் இருக்கும். திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் நூறுநாட்களைக் கடந்து ஓடியது.
இதையடுத்து மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படமும் செம ஹிட்டைச் சந்தித்தது. ‘அண்டாகா கஸம், அபூக்கா குகும், திறந்திடு சீசேம்’ என்கிற வசனத்தைச் சொல்லாத தமிழ் ரசிகர்களே இல்லை. தமிழின் முதல் கேவா கலர்ப் படத்தில் நடித்த பெருமையும் இதனால் எம்ஜிஆருக்கு வந்து சேர்ந்தது.
எம்ஜிஆரின் வேகத்தையும் சுறுசுறுப்பையும் முக வசீகரத்தையும் முக்கியமாக அவரின் தெள்ளுதமிழ் வசன உச்சரிப்பையும் கண்டுணர்ந்த டி.ஆர்.ராமண்ணா, ‘குலேபகாவலி’ திரைப்படத்தை எடுத்தார். எம்ஜிஆரை சாகசக்காரனாக்கினார்.
படத்தின் பாடல்களை கண்ணதாசன், உடுமலையார் (உடுமலை நாராயண கவி), தஞ்சை ராமையாதாஸ் முதலானோர் எழுத, படத்தின் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதினார் கண்ணதாசன். வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் விசில் பறந்தன. கைதட்டலால் அரங்கையே அதிரவைத்தார்கள் ரசிகர்கள்.
காமெடியுடன் நகரும் திரைக்கதை, படத்துக்குப் பலம் சேர்த்தது. ஜி.ராமனாதனின் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ‘நாடகமெல்லாம் கண்டேன்’, ‘வாங்க மச்சான் வாங்க’ என்று எல்லாப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தன.
இந்தப் படம் தமிழகமெங்கும் நூறு நாட்களைக் கடந்து, இருநூறு நாட்கள், அதற்கும் மேலே என்றோடியது. மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. ’மதுரை வீரன்’ திரைப்படம், முக்கியமாக மதுரை சென்ட்ரல் தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக, 200 நாட்களைக் கடந்து ஓடியது. இந்தப் படத்தின் மூலமாக எம்ஜிஆருக்கு மூன்றுவிதமான வெற்றி கிடைத்தது என்கிறார்கள் ரசிகர்கள். அதாவது, எம்ஜிஆருக்கு இந்தப் படம் வெளிவந்த கையோடு, தமிழகமெங்கும் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு எம்ஜிஆரின் மார்க்கெட்டும் சம்பளமும் திரையுலகில் கூடியது.
இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என்று சொல்கிற அந்த அந்தஸ்தை எம்ஜிஆர் ஸ்டார் அந்தஸ்து எகிறியது. எம்ஜிஆர் நடித்தால், அந்தப் படம் ஹிட்டாகிவிடும் என்று பைனான்சியர்கள் நம்பினார்கள். தயாரிப்பாளர்கள் அவரைப் படையெடுத்தார்கள். விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு ஊரிலிருந்தும் பணப்பையோடு வந்து, அவரின் படங்களை பூஜை நாளின் போதே, வாங்கத் துடித்தார்கள். மூன்றாவதான விஷயம்... அப்போது எம்ஜிஆர், திமுகவில் இருந்தார். ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு திமுகவில் அவரின் செல்வாக்கு உயர்ந்தது. மெல்ல மெல்ல, திமுகவில் பலரும் எம்ஜிஆர் ரசிகர்களானார்கள்.
1956-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸானது ‘மதுரைவீரன்’. எம்ஜிஆரை, மாறு கால் மாறு கை வாங்குவதுடன் படம் முடியும். துக்கத்தோடும் அழுகையோடும் திரையரங்கை விட்டு வெளியே வந்தார்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு எம்ஜிஆர், வேறு எந்தப் படத்திலும் தன் ரசிகர்களை அழவைக்கவே இல்லை.
மதுரை வீரன் ஏப்ரல் 13, 1956 அன்று தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்பட்டது. இப்படம் ஒரு பெரிய வணிக வெற்றியாக மாறியது, மேலும் 200 நாட்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா திரைப்படமாக ஆனது. தமிழ்நாடு முழுவதும் 35 திரையரங்குகளில் முதன் முதலாக 100 நாட்கள் கடந்து மிக பெரிய வசூலுடன் ஓடி, மற்றுமொரு முதல் முறையாக ரூபாய் ஒரு கோடி வசூலை கடந்ததும் பிரம்மாண்ட சிறப்பு. இது புரட்சி தலைவர் மற்றும் பத்மினி ஆகியோருக்கு சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. மேலும் இது போன்ற பல படங்கள் உருவாக வழிவகுத்தது.
கதை பற்றி காண்போம்...
வாரணவாசியில் மன்னருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, ஆனால் அது துரதிர்ஷ்டவசமாக ஒரு அடையாளத்துடன் மாநிலத்திற்கு ஒரு அழிவை கொண்டுவர விதிக்கப்பட்டுள்ளது. என்று ஜோதிடரின் கட்டளையின் படி, அக்குழந்தை காட்டில் விடப்படுகிறது. கபிலரும் அவரது மனைவியும் காட்டில் அக்குழந்தையை கண்டுபிடித்து, அவனை தங்கள் மகனாக வளர்க்கின்றனர். அவர்கள் அவனுக்கு வீரன் என்று பெயரிடுகிறார்கள், அதாவது போர்வீரன், ஏனெனில் காட்டில் வனவிலங்குகள் அவனை சுற்றி இருந்தாலும் அதற்காக அவன் அழவில்லை.
வீரன் ஒரு துணிச்சலான மற்றும் உன்னதமான மனிதனாக வளர்கிறான். தொட்டியத்தின் இளவரசி பொம்மி, காவேரியில் மூழ்கடிப்பதில் இருந்து காப்பற்ற அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. பொம்மி அவனை காதலிக்கிறாள். வீரன் ஆரம்பத்தில் அவளது காதலை மறுபரிசீலனை செய்யவில்லை என்றாலும், பொம்மி மனிதனாக உடையணிந்த யானை மீது சவாரி செய்து அவனை காப்பாற்றுகிறாள். அவளின் அன்பின் ஆழத்தை அவன் உணர்கிறான். பொம்மியின் மாமாவான கோழைத்தனம் மிக்க நரசப்பன், பொம்மியை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிடுகின்றான். வீரனின் குறைந்த பிறப்பை மேற்கோள் காட்டி, நரசப்பன் அவர்கள் இருவருக்கும் தேவையற்ற துன்பத்தை அளிக்கிறான். பொம்மியின் தந்தையின் எதிர்ப்பால், வீரன் இளவரசியை அழைத்து செல்கிறான். இறுதியாக திருச்சியின் ராஜாவிடமிருந்து நரசப்பன் உதவி கோரினார். வீரனும் பொம்மியும் குற்றவாளி அல்ல என்று அறிவித்து, அவர்கள் திருமணத்தில் தங்கள் சங்கத்தை புனிதப்படுத்துகிறார்கள். வீரனின் வீரத்தால் ஈர்க்கப்பட்ட மன்னர், அவனை தனது ராணுவ தளபதியாக நியமிக்கிறார்.
மதுரை மக்களை அச்சுறுத்தும் கொள்ளை கும்பலை கட்டுப்படுத்த உதவுமாறு, மதுரையை சேர்ந்த திருமலை நாயக்கர் திருச்சியிடம் வேண்டுகோள் விடுக்கிறார். வீரன் மதுரைக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர் நாயக்கரின் தளபதியாக நியமிக்கப்படுகிறார். அங்கு அவன் வெள்ளையம்மாவை பார்க்கிறான், அவள் ஒரு அழகான நீதிமன்ற நடனக் கலைஞர். அவளது நல்லொழுக்கங்கள் மற்றும் திறன்களால் அவன் ஈர்க்கப்படுகின்றான். வீரன் மற்றும் வெள்ளையம்மா பொருத்தமான மாறுவேடத்தில் சென்று, திருடர்களின் அழகர் மலை குகையில் நுழைகிறார்கள். மறைந்திருக்கும் வீரர்களின் உதவியுடன், அவர்கள் பெரும்பாலான கொள்ளையர்களை பிடிக்கவும், அவர்கள் கொள்ளையடித்த கொள்ளை பொருட்களையும் மீட்டெடுக்க நிர்வகிக்கிறார்கள்.
வெள்ளையம்மாவை தனது காமக்கிழத்தியாக மாற்ற விரும்பும் நாயக்கர், வீரனை வெள்ளையம்மா காதலிக்கிறாள் என்பதை அறிந்து கோபப்படுகிறார். தீய குணமுடைய நரசப்பன் மற்றும் அவரது தளபதி குட்டிலனால், நாயக்கரின் மனம் மேலும் நஞ்சுப்படுத்தப்படுகிறது. வீரனை ஒரு தேசத்துரோகி என குற்றம் சாட்டி, அவனது கை கால் துண்டிக்கப்படுமாறு கட்டளையிடுகிறார். தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், வீரன் கூட்டத்தில் திருடர்களின் தலைவர் சங்கிலிக்கருப்பனை அடையாளம் கண்டு, ஒரு சந்திப்பில் அவரை கொன்றுவிடுகிறார். அவன் இப்போது தனது பணியை நிறைவேற்றியுள்ளான் என்று திருப்தி அடைந்த வீரன், தன்னை சிதைப்பிற்கு உட்படுத்துகிறார். அவரது ஆத்மா விரைவில் அவரது உடலை விட்டு வெளியேறும்போது, பொம்மியும் வெள்ளையம்மாவும் அவருடன் பரலோக வாசஸ்தலத்தில் ஒன்றுபடுகிறார்கள்...
வீரன் - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
நரசப்பன் -டி.எஸ்.பாலையா
வீரனின் வளர்ப்பு தந்தை -என்.எஸ்.கிருஷ்ணன்
செயின்ட் -பி.எஸ்.வெங்கடாச்சலம்
குலதெய்வம் ராஜகோபால்
கல்லபார்ட் நடராசன்
திருமலை நாயக்கர் -ஓ.ஏ.கே.தேவர்
அரசன் பொம்மன் -மா.பாலசுப்ரமணியம்
சொக்கன் -திருப்பதிசாமி
பொம்மி -பானுமதி ராமகிருஷ்ணா
வெள்ளையம்மா -பத்மினி
வீரனின் வளர்ப்பு தாய் -டி.ஏ.மதுரம்
கிள்ளி -ஈ.வி.சரோஜா
நடனம்
லலிதா
ராகினி
சுகுமாரி
மாடி லட்சுமி
மதுரை வீரனின் முதல் காட்சி திரையில் 1939 ஆம் ஆண்டில் வி.ஏ.செல்லப்பா மற்றும் டி.பி.ராஜலட்சுமி நடித்த அதே பெயரில் வெளியிடப்பட்டது. இந்த நாட்டுப்புற புராணக்கதை தெய்வமாக மாறியது. புராணக்கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை உருவாக்க மற்றொரு முயற்சி 1940 களின் பிற்பகுதியில் நவீனா பிக்சர்ஸ், பி.யு.சின்னப்பாவை நடிகராக வைத்து எடுத்து. ஆனால் இது செயல்படவில்லை. கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத்தின் லீனா செட்டியார் பின்னர் வெற்றிகரமாக மதுரை வீரன் என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்க முடிந்தது, இதில் தசரி யோகானந்த் இயக்குநராக இருந்தார். இந்த பதிப்பிற்கான திரைக்கதையை கண்ணதாசன் எழுதியுள்ளார், அவர் பாடலாசிரியராகவும் பணியாற்றினார். கலை இயக்கத்தை கங்கா கையாண்டார், வி. பி. நடராஜன் படத்தொகுப்பையும் மற்றும் ஒளிப்பதிவை எம்.ஏ.ரெஹ்மானும் கையாண்டனர். முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில் இந்த படத்தில் புராணக் குறிப்புகள் இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டார், ஆனால் ஆர்.எம்.வீரப்பன் வற்புறுத்திய பின்னர் இப்படத்தில் இணைந்தார்.
அசல் புராணத்தில்
வெள்ளையம்மாவின் பாத்திரம் "மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது" என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் உணர்ந்தார், மேலும் அவரது திரை சித்தரிப்பில் மாற்றங்களை பரிந்துரைத்தார், அதற்கு தயாரிப்பாளர் ஒப்புதல் அளித்தார். எம்ஜிஆர் ஜோடியாக தனது முதல் படத்தில் பத்மினி நடித்தார்.
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........skt...
-
எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும் இரண்டும் ஒன்று ஆகாதடி கிளியே!, அதன் இயற்கை குணம் மாறாதடி! ஆஹா எவ்வளவு பொருள் பொதிந்த பாடல்.
பரந்த மனப்பான்மை கொண்ட தலைவர் ரசிகர்கள் எங்கே? தற்குறி எண்ணம் கொண்ட மாற்று அணியினர் எங்கே? அதனால்தான் காலம் கடந்தும் மாற்றம் வராமல் பழைய நிலையே தொடர்கிறது.
தலைவரின் செயலுக்கும் வள்ளல்தன்மைக்கும் மாசு கற்பிக்க விழையும் மாற்று அணியினரின் செயலைக்கண்டு வாளாதிருந்தால் கயவர்களின் கனவு பலித்து விடும் அல்லவா?. அதன் பொருட்டே எனது பதிவில் தக்க பதிலடி கொடுப்பது அவசியமாகிறது. புரிந்தவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்.
அய்யனின் கைஸ்கள் இரட்டை நாக்கு உடையவர்கள். அதிலும் நக்கீரன் என்ற கபட கைஸ் இரட்டை நாக்குடைய நாக்கீரன்.
நாக்கு இரண்டாக கீறி விஷ ஜந்துவின் விஷத்தோடு அலைபவன். இவன் போற இடத்துக்கு புண்ணியம் சேர்ப்பவனாம். இவனுடைய கபடநாடகத்தை என்னிடம் காட்டி தோல்வியடைந்தவன். சர்வ வித்தைகளை காட்டி சாகஸம் பண்ணியும் காலை பிடித்துப் பார்த்தும் கதை நடக்காததால் தலையில் ஏறி அமர்ந்து கொண்டால் ஏதாவது நடக்குமா? என்று அலைபவன்.
இப்போது நம்ம தலைவரின் அபிமானி a. முருகேசனிடம் ஒரு சில கைஸ்கள் காண்டாகி வருகின்றன. உண்மையை சொல்பவன் சதிகாரன்.
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் என்று பாடிய புரட்சியாரின் வாக்கிற்கிணங்க அலையும் வானரங்கள்.
சரி நம் பங்கிற்கு அடுத்த பிரம்மாஸ்திரத்தை எடுப்போம்.
நமது தளத்தில் நாம் சொன்ன பெ.இ.
பெண் 25 திரையரங்கில் 50 நாட்கள் ஓடியது என்றவுடன் பாயி ஆதாரம் கேட்கிறார். தலைவர் படத்தின் 50 நாட்கள் விளம்பரத்தில் சென்னையை தவிர வேறு தியேட்டர்கள் போட இடம் இருக்காது.
அய்யன் படங்களை போல் 4,5 தியேட்டரில் 50 நாட்கள் ஓடினால்தான் விளம்பரத்தில் போட முடியும் என்ற உண்மையை தெரிந்து கொண்டே பாய் கேட்கிறார்.
தலைவர் படங்கள் 70 சதவீத படங்கள் சுமார் 20 திரையரங்கு முதல் 40,50 திரையரங்கில் ஓடுவதால் இதெல்லாம் நமக்கு சாத்தியமில்லை. ஆனால் முதன் முதலில் 30 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓட்டிய "சிவந்தமண்" விளம்பரத்தில் ஓடாத மேலும் சில அரங்குகளையும் சேர்த்து விளம்பரம் தந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள். "உரிமைக்குரல்" 50 நாட்கள் விளம்பரத்தில் அத்தனை திரையரங்குகளையும் சேர்ப்பதென்றால் இரண்டு பக்க விளம்பரம் கொடுத்தாலும் பற்றாது.
ஆனால் 1 காட்சி 2 காட்சி என்று போட்டு மதுரை கல்பனாவில் மட்டும் 50 நாட்கள் ஓட்டிய "ஹரிச்சந்திரா" படத்துக்கு முழு பக்க விளம்பரம் கொடுத்து விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது என்பதை நிரூபித்தார்கள். .மேலும் உலகத்திலேயே மிகப் பெரும் விளம்பரம் இதுதான். 6 தியேட்டரில் 50 நாட்கள் ஓட்டிய "தங்கைக்காக" "அருணோதயம்" போன்ற படங்களுக்கு தியேட்டர் போட்டு விளம்பரம் கொடுக்கலாம்.ஆனால் நாம் என்ன செய்வது எவ்வளவு சுமாரான படமானாலும் 20 தியேட்டரில் 50 நாட்கள் ஓடி விடுமே..........ksr.........
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*104 வது*மனிதநேய*விழா மற்றும்*
1971ல் வெளியான*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்களின் பொன்விழா*
நிகழ்ச்சியில் ஸ்ரீதர்*நவராக்ஸ் குழுவினர் இன்னிசையில் ஒலித்த*பாடல்கள்**
விவரம்* *(21/02/21)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
1. தங்க தோணியிலே* - உலகம் சுற்றும் வாலிபன்*
2. பாடும்போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை*
3.சிரித்து சிரித்து என்னை* சிறையிலிட்டாய்** -தாய் சொல்லை தட்டாதே*
4.தாய் மேல் ஆணை - நான் ஆணையிட்டால்*
5. என்னை தெரியுமா -குடியிருந்த கோயில்*
6.என்னை எடுத்து தன்னை கொடுத்து -படகோட்டி*
7.அழகிய தமிழ் மகள் இவள் - ரிக் ஷாக் காரன்*
8. அவள் ஒரு நவரச நாடகம் - உலகம் சுற்றும் வாலிபன்*
9.எங்கே அவள் - குமரிக்கோட்டம்*
10.மஞ்சள் முகமே வருக - வேட்டைக்காரன்*
11.பாடினாள் ஒரு பாட்டு - ஒரு தாய் மக்கள்*
12.பட்டு சேலை காத்தாட - தாய் சொல்லை தட்டாதே*
13.நாம் ஒருவரை ஒருவர் - குமரிக்கோட்டம்*
14.காலத்தை வென்றவன் நீ - அடிமைப்பெண்*
15.கனிய கனிய மழலை* பேசும் - மன்னாதி மன்னன்*
16.நாளை உலகை ஆள வேண்டும் -* உழைக்கும் கரங்கள்*
17.இந்த புன்னகை என்ன விலை - தெய்வத்தாய்*
18.அங்கே வருவது யாரோ - நேற்று இன்று நாளை*
19.ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்*
20.கண்ணை நம்பாதே -நினைத்ததை முடிப்பவன்*
21.நாடு அதை நாடு - நாடோடி*
22.போய் வா நதி அலையே - பல்லாண்டு வாழ்க*
23.கடவுள் வாழ்த்து பாடும் - நீரும் நெருப்பும்*
24.பால் வண்ணம் பருவம் கொண்டு* - பாசம்*
25.இறைவா உன் மாளிகையில்* - ஒளி விளக்கு*
26.பச்சைக்கிளி முத்துச்சரம் - உலகம் சுற்றும் வாலிபன்*
27.பொன்னெழில் பூத்தது - கலங்கரை* விளக்கம்*
28.உனது விழியில் எனது பார்வை - நான் ஏன் பிறந்தேன்*
29.நாளை நமதே* இந்த நாளும் நமதே -நாளை நமதே*
-
கடந்த*ஞாயிறு (28/02/21) அன்று சென்னை*ராஜா அண்ணாமலை மன்றத்தில்*
நவீன்*பைன்* ஆர்ட்ஸ்*சார்பில்*நடைபெற்ற*இன்னிசை நிகழ்ச்சியில்*
பிரபல*இசை அமைப்பாளர்* திரு. லஷ்மண் ஸ்ருதி* குழுவினர்* இசைத்த*
பாடல்கள்*விவரம்* - தகவல் உதவி :: திரு.பி.ஜி.சேகர், பொன்மன*செம்மல்*
எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்*, சென்னை.*
------------------------------------------------------------------------------------------------------------------------
1. அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க*
2.ராஜாவின்* பார்வை ராணியின் பக்கம் - அன்பே வா*
3.பேசுவது கிளியா - பணத்தோட்டம்*
4.தொட்டால் பூ மலரும்* - படகோட்டி*
5.அழகிய தமிழ் மகள் இவள் - ரிக் ஷாக் காரன்*
6.உலகம் அழகு கலைகளின் சுரங்கம் -உலகம் சுற்றும் வாலிபன்*
7.ஆடலுடன் பாடலை கேட்டு - குடியிருந்த கோயில்*
8.பாடும்போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று* நாளை*
9.ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் -சிரித்து வாழ வேண்டும்*
10.பொன்னந்தி மாலை பொழுது - இதய வீணை*
11.தங்க* பதக்கத்தின் மேலே -எங்கள் தங்கம்*
12.விழியே கதை எழுது -* உரிமைக்குரல்*
13.நானொரு குழந்தை* - படகோட்டி*
14.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*
15.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு* - என் அண்ணன்*
16.என்னை தெரியுமா - குடியிருந்த கோயில்*
17.குமரி பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டு பிள்ளை*
18.அவள் ஒரு நவரச* நாடகம்* - உலகம் சுற்றும் வாலிபன்*
19.ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து* - நினைத்ததை முடிப்பவன்*
20.மாசிலா உண்மை காதலே - அலிபாபாவும் 40 திருடர்களும்*
21.ஆயிரம் நிலவே வா* *- அடிமைப்பெண்*
2.உனது விழியில் எனது பார்வை - நான் ஏன் பிறந்தேன்*
23.நாளை நமதே இந்த நாளும் நமதே - நாளை* நமதே*
-
தனியார் தொலைக்காட்சிகளில் கலை வேந்தன்*எம்.ஜி.ஆர். நடித்த*
திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம்* (21/02/21 முதல் 28/02/21வரை )
----------------------------------------------------------------------------------------------------------------
21/02/21- சன்* லைப் -பிற்பகல் 3 மணி - நான் ஆணையிட்டால்*
22/02/21- சன் லைப் - காலை 11 மணி - என் அண்ணன்*
* * * * * * * *கிங் டிவி _ பிற்பகல் 1 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * *எப் எம். தமிழ் -பிற்பகல் 1 மணி - தனிப்பிறவி*
* * * * * * பாலிமர் டிவி - பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*
23/02/21- சன் லைப் - காலை 11 மணி - உழைக்கும் கரங்கள்*
* * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -விவசாயி*
24/02/21-மெகா* 24- அதிகாலை 2.30 மணி - ராஜராஜன்*
* * * * * * * *ஜெயா டிவி - காலை 10 மணி - குமரிக்கோட்டம்*
* * * * * * * சன் லைப் - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*
* * * * * * * கிங் டிவி - பிற்பகல் 1 மணி - மாட்டுக்கார வேலன்*
* * * * * * மெகா டிவி -பிற்பகல் 1.30 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * *ஜெயா டிவி -பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * *வி. டிவி* - பிற்பகல் 2 மணி - பட்டிக்காட்டு பொன்னையா**
* * * * * * *ஜெயா மூவிஸ் - மாலை 4 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*
* * * * * *ஜெயா டிவி - இரவு 10 மணி - ஒரு தாய் மக்கள்*
* * * * * * வி டிவி - இரவு 10 மணி - அடிமைப்பெண்*
* * * * * * *பி.பி. டிவி - இரவு 10 மணி - மாட்டுக்கார வேலன்*
* * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - ராமன் தேடிய சீதை*
25/02/21-சன்* லைஃப் -காலை 11 மணி -நீரும் நெருப்பும்*
* * * * * * * முரசு -மதியம் 12 மணி/ இரவு 7 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - விவசாயி*
* * * * * * புதுயுகம் - பிற்பகல் 2 மணி - ராமன் தேடிய சீதை*
26/02/21-சன் லைப்- காலை 11 மணி - நாளை நமதே*
* * * * * * * சன் லைஃப்* - பிற்பகல் 3 மணி - தெய்வத்தாய்*
* * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி -இன்று போல் என்றும் வாழ்க*
27/02/21-சன் லைஃ- காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * *மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி -சிரித்து வாழ வேண்டும்*
28/02/21- சன் லைஃப் - காலை 11 மணி - கண்ணன் என் காதலன்*
* * * * * *
-
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை காலை வணக்கம்...
புரட்சி தலைவர் திரை காவியங்களை பற்றிய என்னுடைய இந்த தொடர் பதிவில் இன்று நாம் புரட்சி தலைவர் நடித்த 36 வது படமான
"#தாய்க்கு_பின்_தாரம்" படத்தை பற்றி காண்போம்...
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் பி.பானுமதி ஆகியோர் நடித்த 1956 ஆம் ஆண்டு படம் 21 செப்டம்பர் 1956 அன்று வெளியிடப்பட்டது.
குடும்பம்,காதல் மற்றும் வீரம் கொண்ட ஒரு எளிய கிராமப்புற கதை. 1956 ஆம் ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளில் ஒன்று மற்றும் முக்கிய நகரங்களில் 100 நாட்கள் ஓடியது.
இயக்கியவர் எம். ஏ. திருமுகம் தயாரித்தவர்
சாண்டோ எம். எம்.சின்னப்பா தேவர்
முத்தையனாக புரட்சி தலைவர்
ரத்னம் பிள்ளை மற்றும் மீனாட்சி ஆகியோரின் துணிச்சலான மகன். ஊரில் நல்ல மரியாதைகுரிய குடும்பம் மற்றும் அவர்களின் உன்னத குணங்களுக்காக கிராமத்தில் மிகவும் மதிக்கப்படுகிறார்கள்.
மறுபுறம், மீனாட்சியின் சகோதரர் துரைசாமி ஊரில் ஒரு முக்கியமான ஆள் பண்ணையார் அவரது ஆணவம், கொடுமை மற்றும் நேர்மையற்ற வழிகளில் அனைவருக்கும் பிடிக்கவில்லை.
ஒரு பொங்கல் பண்டிகை நாளில் கோவில் திருவிழாவில் ரத்னம் பிள்ளையின் பாரம்பரிய உரிமையான முதல் மரியாதையை கைப்பற்ற துரைசாமி முயன்றதிலிருந்து இரு குடும்பங்களும் பிரிந்து பகைமை ஏற்பட்டு பிரிந்து விடுகின்றார்கள்... துரைசாமியின் மகள் சிவகாமி, முத்தையனை காதலிக்கும் ஒரு நல்ல குணமுள்ள பெண். முத்தையனும் அவளுடைய காதலை ஏற்று கொண்டு விரும்புகின்றனர் மேலும் அவர்கள் எல்லா இடையூறுகளையும் தாண்டி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறார்கள்...
ஒரு காரணத்திற்க்காக துரைசாமியை
முத்தையன் அடித்து விடுகின்றார் அதனால் அவமான பட்ட துரைசாமி முத்தையனை பழிவாங்க துடித்து அவர் மேல் பகைமையை வளர்த்து வருகிறார்..
ரத்தினம் பிள்ளையின் பயிர்களில் துரைசாமி தன்னுடைய காளையை மேய விட்டு விடுகின்றார் மாடு பயிர்களை மேய்ச்சலைப் பிடித்தபோது, துரைசாமியின் மதிப்புமிக்க காளையின் மீது கற்களை எறிந்து விடுகின்றார் முத்தையன் என்ற காரணத்தால் அவரை மாயாண்டி மூலம் கடத்தி சென்று ஒரு அறையில் கைது செய்து வைக்கின்றார் துரைசாமி..
இது முத்தையாவின் தந்தையான ரத்தினம் பிள்ளைக்கு தெரிய வருகிறது தன் மகனை காப்பாற்ற செல்லும்போது ஏற்ப்படும் வாய் சண்டையில் துரைசாமியின் காளையை அடக்க வேண்டும் என்று சவால் விடும் துரைசாமியிடம் ரத்தினம் பிள்ளை ஒப்பு கொள்ள அங்கு ஏற்படும் காளை அடக்கும் போட்டியில் காளையால் கொள்ள படுகிறார் ரத்தினம் பிள்ளை.. அதே நேரத்தில் சிவகாமி முத்தையனை மீட்க வருகிறார்...
ரத்தினம் பிள்ளை இறக்கும் தருவாயில், மீனாட்சியிடமிருந்து ஒரு வாக்குறுதியை பெறுகிறார் துரைசாமி செய்த தவறுக்கெல்லாம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்று கூறி இறந்து விடுவார் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய கூட முடியாத நிலை ஏற்படும் முத்தையாவிற்கு இதனால் தன் தாய்மாமன் துரைசாமியை கொள்ள வேண்டும் என்று செல்லும் முத்தையனிடம் தன்னுடைய கணவரின் செய்த சத்தியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி தன் மகனை தடுத்து விடுகின்றார் முத்தையாவின் அன்னை..
இது ஒரு புறம் இருக்க முத்தையனின் காதல் விவகாரம் தன்னுடைய தாய்க்கு தெரிகின்றது இதனால் தன்னுடைய மகன் சபதத்தை நிறை வேற்றாமல் காதல் மயக்கத்தில் சென்று விடுவானோ என்று எண்ணி சிவகாமியை சந்தித்து இனி முத்தையனை சந்திக்க கூடாது என்று சொல்லி விடுகின்றார்.. சிவகாமியும் இனி சந்திக்க மாட்டேன் என்று அவருக்கு வாக்குறுதி அளிக்கிறார்.
சிவகாமியின் தந்தையும் அவளை வீட்டுக் காவலில் தனிமைப்படுத்தி, அவளுக்கு பொருத்தமான கணவனைத் தேடத் தொடங்கினார்.
திருவிழா நடைபெறும் போது நடைபெறும் மாட்டு வண்டி போட்டியில் முத்தையனை கொள்ள மாயாண்டி மூலம் திட்டம் தீட்டி செயல்படுத்த அதில் காயம் அடைந்த முத்தையனை பார்க்க வரும் சிவகாமியிடம் மீனாட்சி அம்மையார் துரைசாமியின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போது, சிவகாமியுடன் பேச வேண்டாம் என்று கூறுகிறார். இருவரும் எப்படியும் அன்றிரவு ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள், ஆனால் துரைசாமியின் வேலைக்காரர், மீனாட்சி ஆகியோரால் பார்க்கப்படுகிறார்கள்.
அங்கு தன்னை முத்தையன் கொலை செய்ய வந்தான் என்று சொல்லி பழி போடுகிறார் துரைசாமி ஆனால் சிவகாமி தான் தான் அவரை பார்க்க வர சொன்னதாக உண்மையை கூற முத்தையா விடுவிக்க படுகின்றார்..
சிவகாமிக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது திருமண நாளில் ஏதாவது பிரச்சனை முத்தையன் மூலம் ஏற்பட்டு திருமணம் நின்றுவிட்டால் தன் கௌரவம் பாதிக்கப்படும் என்று எண்ணி முத்தையன் வராமல் தடுக்க நினைக்கின்றார் துரைசாமி ஆனால் திருமணம் அன்று ஏற்படும் குழப்பத்தில் சிவகாமி முத்தையன் உடன் தப்பி செல்கின்றார் அவர்களை மடக்கி பிடித்து விடுகின்றார் பண்ணையார் துரைசாமி
அங்கு நடக்கும் பேச்சு வார்த்தையில் காளையை அடக்க வேண்டும் அப்படி செய்தால் தங்கள் சொல்படி நடப்பதாக வாக்கு அளிக்கின்றார் துரைசாமி
வலிமைமிக்க காளை செங்கோடனை முறியடித்து, தனது தந்திரமான மாமாவை சீர்திருத்திய பின்னர்
தனது தாயின் காலடியில் மன்னிப்பு கேட்க வைக்கின்றார் முத்தையான் பிறகு சிவகாமியின் கையை பிடித்து முத்தையன் கைகளில் ஒப்படைத்து திருந்துவதாக கதை முடிகின்றது...
ஆண் நடிகர்கள்
முத்தையனாக எம். ஜி.ஆர்
துரைசாமி பன்னையராக டி.எஸ்.பாலையா
ரத்னம் பிள்ளையாக ஈ.ஆர்.சகாதேவன்
வேலனாக காக்கா ராதாகிருஷ்ணன்
மாயண்டியாக
சாண்டோவ் எம். ஏ. சின்னப்பா (தேவர்)
பெண் நடிகர்கள்
சிவகாமியாக பி.பானுமதி
மீனாட்சியாக பி.கண்ணம்பா
சுராபி.செல்வாவாக பாலசரஸ்வதி
வள்ளியாக ஜி.சகுந்தலா
செங்கமலமாக கே.ரத்னம்
பட்டியாக கே.ஆர்.சாரதாம்பாள்
எம். ஏ.திருமுகம், இயக்குனராக அறிமுகமான தாய்க்குபின் தாரம் அப்போது புதிதாக உருவான தேவர் பிலிம்ஸ் சாண்டோவ் எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர் தயாரித்த முதல் படம்.
கே.வி.மகாதேவன் இசையமைத்தார். பாடல் தஞ்சை என்.ராமையா தாஸ், ஏ.மருதகாசி, காவி லட்சுமணதாஸ்,
டி. ஏ. நடராஜன் மற்றும்
சின்னப்பா தேவர்.
"மனுஷனை மனுஷன் சாப்பிடுராண்டா"
என்ற தத்துவ பாடல் டி.எம்.சவுந்தரராஜன். அவர்களால் பாடபெற்று உள்ளது
தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ என்பது தேவர் பிலிம்ஸ்ஸின் முதற் படமான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடலை டி.எம். சௌந்தரராஜன் பாடியிருந்தார்.
தந்தை இறந்திருக்கும் போது பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
ஒரு தாயின் அன்புக்கு இணையாக ஒரு தந்தையால் ஈடு கொடுக்க முடியாதென்றாலும் வாழ்க்கையின், வளர்ச்சியில் தந்தையின் பங்கும் அளப்பரியதே. தாயின் அன்பை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு தந்தையின் அன்பு பெரும்பாலும் உணர்ந்து கொள்ளப்படுவதில்லை. திரையுலகம் கூட இந்த விடயத்தில் கொஞ்சம் பாரபட்சமாகவே இருந்திருக்கிறது. தாயின் அன்பை மனசை உருக்கக் கூடிய வகையில் எத்தனையோ விதமாகப் பாடி வைத்த திரையுலகம் தந்தையின் அன்பை அவ்வளவாகப் பாடவில்லை. வழக்கமாக எம்.ஜி.ஆர். படங்களில் தாயை முன்னிறுத்தியே பாடல்கள் அமைந்திருக்கும். இப்படத்தில் சற்று வித்தியாசமாக தந்தையை முன்னிறுத்தி இப் பாடல் அமைந்துள்ளது. இப்பாடல் அவ்வளவாகப் பேசப்படவில்லை.
#இதோ_அந்த_பாடல்_வரிகள்
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவனென்றால்
விந்தை உண்டோ
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஒளவையின் பொன்மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அநுபவமே இதுதானா
உண்ணாமல் உறங்காமல்
உயிரோடி மன்றாடி
என் வாழ்வின் இன்பமே
எதிர் பார்த்த தந்தை எங்கே?
என் தந்தை எங்கே?
கண்ணிமை போலே எனை வளர்த்தாரே
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே ----- பாழான சிதையில்
கனலானார் விதிதானோ..!
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........skt.........
-
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்..
புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைக்காவியங்களை பற்றிய தகவல்களை வரிசையாக பதிவிட்டு
வரும் என்னுடைய இந்த தொடர் பதிவில் இன்றைய பதிவில் புரட்சி தலைவரின்
38-வது படமான "#சக்ரவர்த்தி_திருமகள்" படத்தை பற்றி காண்போம்...
சக்ரவர்த்தி திருமகள்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்,
அஞ்சலி தேவி மற்றும் எஸ்.வரலட்சுமி ஆகியோர் நடித்த திரைப்படம்.
பி. நீலகண்டன் இயக்கிய இப்படம் ஜி.ராமநாதனின் இசையில் 13 அருமையான பாடல்களை கொண்ட திரைப்படம் ஜனவரி 18, 1957 அன்று வெளியிடப்பட்டது. இது ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது மற்றும் 8 மையங்களில் 100 நாட்களைக் கடந்தது.
மருத நாட்டு நகரத்து இளவரசி கலாமணியை (அஞ்சலி தேவி) திருமணம் செய்ய கடுமையான போட்டியில் வெற்றி பெறும் இளவரசருக்கு மணம் முடித்து நாட்டையும் தருவதாக மன்னர் அறிவிக்கிறார்... இந்த போட்டியில் கலந்து கொள்ள இளவரசர் உதயசூரியன் (எம்.ஜி.ஆர்) கலந்து கொள்ள வருகின்றார்...
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுகின்றார்...
இதனால் இளவரசர் எம்ஜிஆர் மீது இளவரசிக்கு காதல் ஏற்படும்.. அதே சமயம் இளவரசியின் தோழியாக வரும்
துர்கா (எஸ்.வரலக்ஷ்மி) இளவரசன் மீது காதல் கொள்வாள்..
மற்றும் சேனாதிபதி பைரவன் (பி.எஸ். வீரப்பா) இளவரசி மீது ஆசை கொள்வான் கடைசி போட்டியில் இளவரசன் சேனாதிபதியுடன் மோத வேண்டும் அதில் வெற்றி பெறும் நபருக்கு மனம் முடித்து தருவதாக மன்னர் அறிவிப்பார்...
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பைரவன் சூழ்ச்சி செய்து வெற்றி பெற எண்ணுவார் ஆனால் போட்டியில் தோல்வி அடைந்து விடுவார்...
இந்த நிலையில் சேனாதிபதி மனதில் ஆசையை தூண்டி விடும் தோழி துர்கா சதித்திட்டம் தீட்டுகின்றால்...
இளவரசிக்கும் இளவரசனுக்கும் அரண்மனையில் திருமணம் நடக்கிறது... திருமணம் முடிந்த அன்று துர்கா மற்றும் பைரவன் ஆகியோரின் சூழ்ச்சி மூலம் இளவரசிக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து பைரவன் மூலம் கடத்த பட்டு பைரவன் இளவரசி இருவரும் காதலர்கள் அதனால் இந்த திருமணம் பிடிக்காமல் ஓடி விட்டனர் என்று செய்தியை மன்னருக்கு தெரிவித்து இளவரசி மீது அவதூறு பரப்புகின்றனர்..
மன்னரும் நம்பிவிடுகின்றார்..
இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் மன்னரின் மானம் போய்விடும் என்றும் அதனால் தான் இளவரசி வேடத்தில் நடித்து வருவதாக மன்னரிடம் துர்கா கூறி நம்பவைத்து இளவரசன் (எம்ஜிஆர்) நாட்டிற்கு வருகின்றாள்..
தான் தாலி கட்டிய இளவரசி துர்கா அல்ல என்று அடையாளம் கண்டு கொள்ளும் இளவரசன் அது அஞ்சலி தேவி என்றும் துர்கா அல்ல என்று தீர்க்கமாக எண்ணுகிறார் ஆனால் துர்கா அது தான் தான் என்று இளவரசரை நம்ப வைக்கின்றார் இதனால் குழப்பம் அடைந்த இளவரசன் இதில் உள்ள சூழ்ச்சியை எப்படி முறியடித்து வெற்றி கண்டார் என்பதை சுவாரஸ்யமான காட்சிகளால் படம் பிடித்து இருக்கின்றனர்...
தோழியாக வரும் வரலட்சுமி தான்
படத்தின் முதுகெலும்பு கதாபாத்திரம் சதி திட்டம் போட்டு காய் நகர்த்தி படத்திற்கு பலம் சேர்க்கின்றார்..
பைரவனாக வரும் பி.எஸ்.வீரப்பாவும்
மிரட்டுகிறார்...
சொக்கன், சொக்கியாக வரும்
என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் தம்பதியினர் படத்திற்கு பலம் சேர்க்கின்றனர்...
தயாரிப்பாளர்: ஆர்.எம்.ராமநாதன்
தயாரிப்பு நிறுவனம்: உமா பிக்சர்ஸ்
இயக்குனர்: பி.நீலகண்டன்ன்
இசை: ஜி.ராமநாதன்
பாடல்: தஞ்சை என்.ராமையா தாஸ், கே.டி.சந்தனம், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, கு. மா. பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் & கோமாளி சுந்தரம்
இந்த படம் 18 ஜனவரி 1957 அன்று வெளியிட பட்டு சக்ரவர்த்தி திருமகள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, ஆண்டின் அதிக வசூல் செய்தது, மேலும் 150 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது..........skt.........
-
ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதை கழிப்பதற்கு மட்டுமல்ல.சமூக அவலங்களை தோலுரித்துக் காட்ட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அதற்கு இருக்கிறது.
15 - 07- 1969 நாரதர் இதழில் ஒரு கட்டுரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.பாடுவதோடு ஆடுவதோடு நடிப்பதோடு ஒரு கலைஞனின் பொறுப்பு முடிந்து விடுவதில்லை என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே விஸ்வநாத தாஸ் போன்ற கலைஞர்கள் நாட்டிற்காக போராடி சிறை சென்றிருக்கிறார்கள்.நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்கிறது என்கிற ரீதியில் அந்தக் கட்டுரை இருந்தது.அப்போதைய தமிழக அரசிடம் அவர் ஒரு நல்லாட்சியை எதிர்பார்த்தார். "அடிமைப் பெண்" தந்திருந்த மகத்தான வெற்றியால் அரசியலில் இருந்த ஆர்வத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டு மீண்டும் திரையில் தனது கவனத்தைத் திருப்பினார்.திரைக்கு வந்தாலும் தனது கண்கள் அரசியலையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறது என்பதைக் காட்டவே அவர் " நம் நாடு" திரைப்படத்தை கையிலெடுத்தார்.நம் நாடு படத்தின் கதை தான் என்ன?.
தர்மலிங்கம், ஆளவந்தான், புண்ணியகோடி என்ற மூவர் கூட்டணி ஒரு நகரத்தை தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறது.வெளியே பெரிய மனிதர்களாக நடமாடும் இவர்கள் நிழல் உலகில் எமகாதகர்கள்.இவர்களது கொட்டத்தை அடக்க ஒரு இளைஞன் புறப்படுகிறான்.அவனது பெயர் துரை.நகரசபை அலுவலகத்தில் ஒரு சாதாரண க்ளார்க்.திருமணம் ஆகாத துரைக்கு முத்தைய்யா என்ற அண்ணன்.தர்மலிங்கத்திடம் கணக்குப் பிள்ளையாக பணியாற்றுகிறார்.மனைவி இரண்டு குழந்தைகள்.
அதர்மத்தை தட்டிக் கேட்கும் குணமுள்ள துரைக்கு அலுவலகத்தில் எதிரிகள்.வேலை பறிபோக வீட்டிலும் அண்ணனோடு மனஸ்தாபம்.அவர் தெய்வமாக மதிக்கும் தர்மலிங்கம் ஒரு அயோக்கியன் என்பதில் அண்ணன் தம்பிக்கிடையே மனஸ்தாபம்.வீட்டை விட்டு வெளியேறும் துரைக்கு அடைக்கலம் தருகிறது அங்கிருக்கும் குப்பம்.ஏழை மக்களுக்கு அவர் செய்த உதவிகளுக்கு நன்றிக் கடன்.இதற்கிடையில் அலுவலகம் எதிரே இளநீர் விற்கும் அம்முவோடு பழக்கம்.மோதலில் தொடங்கி நட்பில் வளர குப்பத்து ஜனங்களின் அன்பைப் பெற்ற துரை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நகரசபை தேர்தலில் நின்று வெல்கிறார்.பெருவாரியான கவுன்சிலர் ஆதரவோடு சேர்மனாகவும் உயர்கிறார்.பதவிக்கு வந்த பிறகு தான் தெரிகிறது புரையோடிப் போன ஊழல் நீக்கமற நிறைந்திருப்பது.ஒவ்வொன்றாக களைய எதிரிகளின் எண்ணிக்கை கூடுகிறது.
துரையால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று கூட நேர்மை வெளியேற்றப்படுகிறது.மீண்டும் நகரசபை கோட்டான்களின் கூடாரமாகிறது.இதற்கிடையில் தெய்வமாக மதித்த தர்மலிங்கத்தின் கோர முகத்தை துரையின் அண்ணன் முத்தைய்யா நேரடியாகக் காண்கிறார்.மக்கள் நலத் திட்டத்திற்காக மக்களிடம் வசூலித்த பத்து லட்சத்தை ஆட்டையைப் போட இந்தக் கூட்டம் திட்டம் போட மக்கள் பணத்தைக் காப்பாற்ற முத்தைய்யா பணத்தை எடுத்துக்கொண்டு ஓட கொள்ளைக் கூட்டம் துரத்த அவர் அந்த பணப் பெட்டியை ஓரிடத்தில் புதைத்துவிட்டுத் திரும்பும்போது பிடிபடுகிறார்.துரை பதவியிழக்க அண்ணன் காணாமல் போக அண்ணி குழந்தைகள் பரிதவிக்க இந்தக் கொடுமைகளை தட்டிக் கேட்கப் போன துரை பலமாக தலையில் தாக்கப்பட்டு நடு வீதியில் வீசப்படுகிறான்.பிழைக்கத் தெரியாத முட்டாள் மடையன் என தூக்கி வீசப்பட்ட துரை இந்த அவலங்களில் இருந்து எப்படி மீண்டெழுந்தான்.?. அண்ணனின் மீது இருந்த களங்கத்தை எப்படிக் களைந்தான்?. அராஜக ஆட்டம் போட்ட கூட்டத்தின் கொட்டத்தை எப்படி அடக்கினான் என்பதை நம் நாடு படத்தின் மீதிக்கதை சொன்னது.
எங்குமே தொய்வில்லாமல் போன விறுவிறுப்பான திரைக்கதை தான் இந்தப் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்.அடுத்தது அந்த அரசியல் கதைக்களம்.வெறும் நகரசபையிலேயே இத்தனை ஊழல்களா என ஆச்சர்யம்.துரை பதவியேற்றதும் பறக்கிறது பெரிய மனிதர்களுக்கு எதிரான நோட்டீஸ் ஆணைகள்.மக்களிடம் ஏமாற்றி வசூல் செய்த பல லட்சங்களுக்கு முறையான கணக்குகள் தாக்கல் செய்ய தர்மலிங்கத்திற்கு ஒரு நோட்டீஸ்.அவரு சொஸைட்டியில பெரிய மனுஷனுங்க.பி.ஏ.ரவி சொல்ல எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் தவறு செய்தா தண்டனை அனுபவிச்சுத் தான் ஆகணும்.காலம் மாறிப்போச்சு மிஸ்டர் ரவி.துரையின் அதிரடி கண்டு ஆடிப்போகும் ரவி.ஐயா கும்பிடறோங்க.வாங்க வாங்க.நாலைந்து கவுன்சிலர்கள்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோரிக்கை.மீன் மார்க்கட் டெண்டரு என ஒருவர் தலையைச் சொறிய பதினாரு பேருக்க்கு வேலை என இன்னொருவர்.காசு வாங்கியாச்சா?.நாகேஷ்.நமட்டுச் சிரிப்போடு ஆச்சுங்க.மொத்தத்தில எல்லாரும் சம்பாரிக்க வந்திருக்கீங்க.எலக்ஷன்ல எவ்வளவு செலவு செஞ்சிருக்கோம் .எடுக்க வேணாங்கிளா?. அப்போ நீங்க உங்க ஏரியா மக்களுக்காக வரல. இது பொழைக்கிற இடமில்லே சார் ஒழைக்கிற இடம்.69 ன் அரசியல் நமது முகத்தில் அறைகிறது.தர்மலிங்கம் லஞ்சம் தர முயல அவன் இதுக்கெல்லாம் மசியமாட்டாங்க.யோவ் உங்களுக்கெல்லாம் பணம் சம்பாதிக்கத்தான் தெரியும் அதன் மதிப்பு தெரியாது.ஒருத்தனுக்கு நூறு போதும் இன்னொருத்தன் ஆயிரத்துக்கு அசையுவான்.லட்சம் குடுத்தா அடிமையே ஆயிடுவான்.உனக்கு அரசியல் தெரியல துரை.பணக்காரன்கிட்ட இருந்து காப்பாத்துறேன்னு சொல்லி ஏழைங்ககிட்ட ஓட்டை வாங்கணும்.ஏழைங்ககிட்ட இருந்து ஓட்டை வாங்கிறேன்னு சொல்லி பணக்காரன்கிட்ட பணத்தை வாங்கணும்.இது தான் நான் படிச்ச அரசியல்.ஒவ்வொரு ஃபிரேமும் அரசியல் இல்லாம நகரவே இல்லை.
நடிகர்களின் பங்களிப்பு அசாத்தியமானது.அநீதிகளை தட்டிக்கேட்டும் நாயகனாக மக்கள் திலகம்.அத்தனை பாரத்தையும் தன் மீது சுமக்கிறார்.ஏழைகளின் காவலனாக பொங்கியெழும் நேரங்களில் புயலாக எதார்த்த நடிப்பில் மிளிர்கிறார்.அவரது காதலி அம்முவாக ஜெயா மற்றுமொரு எதார்த்தம்.மோதலில் சந்தித்த நட்பு உடனே காதலாகவில்லை என்பது ஒரு ஆறுதல்.தன் மனதில் நினைத்த காதலியை கேட்ட பின்பும் உங்களது ஜோடியை நான் தான் செலக்ட் பண்ணுவேன் என்கிற அளவிற்கு ஒரு டீஸண்டான காதல்.தான் தான் காதலி என்றதும் அவரையும் மழையில் ஆடவிட்டு அழகு பார்க்காமல் அவர் மட்டுமே ஆடி மகிழ்வது அழகு.மூன்று வில்லன்களில் முத்தாய்ப்பான வில்லன் தர்மலிங்கமாக ரங்கா ராவ்.மனிதர் தனது இமேஜை கழற்றி வைத்துவிட்டு ஆடித் தீர்த்திருக்கிறார்.அசோகனும் தங்கவேலுவும் ஆளவந்தான் புண்ணிய கோடியாக சில இடங்களில் சிரிப்பு மூட்டுகிறார்கள்.அசத்தலான அண்ணன் பாத்திரத்தில் பகவதி.மனைவியாக பண்டரிபாய்.குழந்தைகள் குட்டி பத்மினி ஸ்ரீதேவி என பக்காவான பாத்திரங்கள்.குடும்ப சென்டிமெண்ட் சில இடங்களில் கண் கலங்க வைக்கிறது.குறிப்பாக அந்த குழந்தைகள்.முதல் பாதியில் எளிமையாக வந்த மக்கள் திலகம் இரண்டாவது பாதியில் வட்டியும் முதலுமாக மிஸ்டர் மெட்ரோ கோல்ட் ராபர்ட்டாக அட்டகாசம் செய்கிறார்.நாகிரெட்டி பணமெல்லாம் ராபர்ட் கரைத்துத் தள்ளுகிறார். படத்தின் மகத்தான வெற்றிக்கு மற்றொரு காரணம் அதன் பாடல்கள்.
வின்னவய்யா ராமய்யா போலவே இங்கொரு வாங்கய்யா வாத்தியாரய்யா.மேகலா தியேட்டரில் சத்தமில்லாமல் நாகிரெட்டியோடு எம்.ஜி.ஆர்.இந்தப் பாடல் வந்தது தான் தாமதம்.தியேட்டரே அதிர்ந்தது.அருகிலிருந்த நாகிரெட்டி கையை அழுத்தமாகப் பிடித்து உணர்ச்சிவசப்பட்டார் எம்.ஜி.ஆர்.என அவரே பதிவு செய்திருக்கிறார்.எங்க வீட்டுப் பிள்ளையின் இமாலய வெற்றிக்குப் பிறகு இன்னொரு வெற்றி.இருவரும் அன்றைய அரசியல் பேசித் தான் இந்தப் படத்தில் இணைந்தார்கள் என்ற பேச்சும் அப்போது எழுந்தது.அதை உறுதிப்படுத்த அரசியலில் நான் ஜெயிச்சுட்டேன் என இந்த வாத்தியாரய்யா பாடலைக் கேட்டதும் அவரது ஆழ் மன ஆசையை வெளிப்படுத்தினார் மக்கள் திலகம்.அடுத்த அதிரடி நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்.மக்கள் திலகத்தின் மனசாட்சியான வாலியின் வரிகளில் எவ்வளவோ விஷயங்கள் இருந்தது.
குழந்தைச் செல்வங்களுக்காக நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ஒரு சிறந்த சமூக சீர்திருத்தம். கதையோடு ஒட்டி வந்த நாயகியின் குரலாக ஏழு வயசிலே எளனி வித்தவ என்ற ஈஸ்வரி குரல்.இதே படம் இந்தியில் வெளியாக ஏ பாபு லேலேனா நாரியல் என்ற லதாவின் குரல் ஞாபகம் வருகிறது.மன்னரின் அருமையான இன்னொரு பாடல் ஆடை முழுதும் நனைய நனைய .இசையரசியின் இன்னொரு இனிமை.ஈஸ்வரியின் அதிரடியான குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு மற்றொரு அதிரடி.வாலியின் அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கிவிட்டே ஓய்ந்தார் மன்னர்.அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது இந்தப் படம்.போட்டிக்கு ரெடியாக வந்து நிற்கிறது சிவந்தமண்.பாடல்கள் பட்டையைக் கிளப்புகிறது.சின்னவருக்கும் அவர் ஹிட் தர வேண்டிய நிர்பந்தம்.மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதைப் போல நிறைய வாத்தியக் கருவிகளை பயன்படுத்தி இங்கொரு பாடலையும் தர வேண்டிய சூழ்நிலை.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் என மன்னர் நினைத்ததை நடத்திக் காட்டினார்.
இந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா சேலம் பேலஸ் தியேட்டரில்.மக்கள் திலகம் உட்பட அனைவருமே ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலம் சேலம் வந்திறங்கி துவாகராவில் ரூமைப் போட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கப்பா மூணு மணி ஆட்டம் இருக்கு.ஆர்டர் போட்டு விட்டு அதன்படியே மூணு மணி ஆறு மணி ஆட்டங்களை ஜன சமுத்திரத்தில் மிதந்துகொண்டு மேடையேறி அழகாகக் காட்சி தர ஆரவாரம் செய்து குதூகலித்தது கூட்டம்.இரவுக் காட்சியிலும் எல்லோரும் இருக்கணும் என்று சொல்லிவிட்டு துவாரகா திரும்ப பிடித்தது அடைமழை.அப்படி அடித்துத் துவைக்க நைட் ஷோ கேன்சல்.அசோகன் மூலம் எல்லோருக்கும் தெரியப்படுத்த ஆளாளுக்கு ரூமில் ஒதுங்க என்னடா ஸ்ரீரங்கம் ரங்கராஜா ப்ரோக்ராம் தான் கேன்சல் ஆயிடுச்சே கச்சேரியை ஆரம்பிக்கலாமா.?. என நாகேஷ் வாலியிடம்.கொட்டும் மழையிலும் ஆர்கனைஸர் ஜெயசீலன் ஒரு ஸ்காட்சோடு வர வாலி வாயெல்லாம் பல்லாக நாகேஷ் எம்.எஸ்.வி.ஜோடி சேர கச்சேரி களை கட்டியது.அவர்களது பொல்லாத நேரம் மழை நிற்க எல்லோரும் வாங்க என அழைத்து வர அசோகன்.கதவைத் திறந்தவர் அடப் பாவிகளா என கீழே இறங்கி ஓட அடித்துப் பிடித்து மூவரும் முகம் கழுவி வாசனை திரவியங்களைத் தெளித்து குங்குமம் விபூதி ஒப்பனையில் ஈடுபட்டு மன்னரின் பெட்டியில் இருந்த அவருடைய ஜரிகை வேட்டி பட்டு சட்டை எடுத்து மாட்டி கீழே இறங்கி வர சின்னவர் ரெடியாக காத்திருக்க இந்த கோலத்தைக் கண்டதும் அவருக்கு கன்பார்ம் ஆனது.ஏற்கனவே ஓடிய அசோகன் வத்தி வைத்திருக்க என்ன மூணு பேரும் ஒரே ட்ரஸ்? . ஆமாண்ணே ஒரே ட்ரஸ். நாகேஷின் கோணங்கிச் சிரிப்பு காட்டிக் கொடுத்தது.அடுத்த நாள் வாலிக்கு சகட்டு மேனிக்கு டோஸ்.நம் நாடு படத்தின் நூறாவது நாளை மறக்க முடியாது என வாலி இந்த சம்பவத்தை பதிவு செய்கிறார்.நீண்ட அனுபவம் அது.எந்தவித ஏற்பாடுகளும் செய்யாமல் ஜம்பு அருமையாக இயக்கிய படம்.ஏற்கனவே அவர் பல படங்களில் தனது எடிட்டிங் திறமையைக் காட்டியிருக்கிறார்.இந்தப் படத்திலும் அருமையான எடிட்டிங். அதனால் தான் படம் தொய்வில்லாமல் சென்றது.ஐம்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டது.ஆனாலும் கண்ணை உறுத்தாத அந்த கலர் படம் இப்போதும் நம்மை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது.
நன்றி..அப்துல் ஸமாத் ஃபையஸ்.
அவர்கள்.........
-
M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,
அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.
கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.
என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவ ருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.
அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.
கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.
அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.
‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.
அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவி யாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசா ரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.
‘‘இதில் பத்தாயிரம் ரூபாய் இருக் கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங் களையே வைத்துக்கொள்ளச் சொன் னார்’’ என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரி வித்தனர். நன்றிப் பெருக்கில் மழை யுடன் போட்டியிட்டபடி, கோபால கிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் கொட்டியது. பின்னர், அவ ருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன்.
இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து, ‘‘கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம்” என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘அரச கட்டளை’ படம், பல மாற்றங்கள் செய்யப்பட்டு, துப் பாக்கிச் சூடு சம்பவத்தால் எம்.ஜி.ஆர். பல மாதங்கள் நடிக்க முடியாமல் இருந்து, பின்னர், 1967-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தல் முடிந்து தாமதமாக வெளியானது. படத்தில், ‘‘அண்ணா... அண்ணா... என்று நாங்கள் அழைக்கும் காலம் போய் மன்னா... மன்னா... என்று அழைக்கும் காலம் வரப்போகிறது’’ என்ற வசனம் இடம்பெறும். அதாவது, பேர றிஞர் அண்ணா விரைவில் முதல் அமைச் சர் ஆவார் என்பதை விளக்குவதுபோல வசனம். ஆனால், படம் வந்தபோது அண்ணா முதல்வராகவே ஆகிவிட்டார்.
இந்தப் படத்தில், கவிஞர் வாலி எழுதி, பி.சுசீலாவின் இனிமையான குரலில் ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்…’ என்ற அருமையான பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா பாடுவது போல காட்சி. எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைப் புகழும் பின்வரும் வரிகள் வரும்போது, தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் கூரையைப் பிளக்கும்.
‘அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’...........Png
-
தமிழ்திரையுலகம் எத்தனையோ சாதனை காவியங்களை தந்திருக்கின்றன. ஆரம்ப காலத்தில் m.k.t பாகவதர் p.u. சின்னப்பா சாதனை நாயகர்களாக இருந்தாலும்
அன்றைய காலகட்டத்தில் தேவையான அளவு திரையரங்குகள் இல்லை. போட்டியாளர்கள் அதிகம் இல்லை. அதிகபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் நடந்த காலத்தில் வெளியான "ஹரிதாஸ்", "சிந்தாமணி" "ஜகதலபிரதாபன்" "மனோண்மணி"
"சந்திரலேகா" போன்ற படங்கள் வெளியாகி வெற்றி கொடி நாட்டின.
இதில் "ஹரிதாஸ்" சென்னையில் மூன்று தீபாவளி கண்ட படம். அது போல் நெல்லை ராயலில் ஓராண்டு பூர்த்தி செய்த படம். தமிழின் முதல் பிரமாண்ட படமான "சந்திரலேகா" சென்னையில் ஓராண்டும் நெல்லையில் வெள்ளி விழாவும் கண்ட படங்கள். முதன்முதலில் வசூலில் அகில இந்திய அளவில் "சந்திரலேகா"தான் சாதனை செய்த படம். தயாரிப்பு செலவு 30 லட்சம் என்றாலும் வட்டியை சேர்க்கும் போது சுமார் 60 லட்சத்தை தாண்டியது என்றார்கள்.
ஆனால் அவர்களாலும் தொடர் வெற்றி படங்களை தர இயலவில்லை. அவர்கள் காலத்தை தாண்டியவுடன் தியேட்டர்களும் படம் பார்ப்போர் எண்ணிக்கையும் கிடுகிடு என்று உயர ஆரம்பித்தது.
எம்ஜிஆர், அய்யன் காலத்தை நாம் எடுத்து கொள்வோம். அதுதான் சினிமா உலகின் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். எம்ஜிஆர் காலத்தை 1947 ராஜகுமாரியிருந்து பார்த்தால் எம்ஜிஆர் 115 படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
ஒவ்வொன்றும் ஒரு சாதனையை செய்தது என்று கூட சொல்லலாம்.
அய்யனின் காலம் 1952 தொடங்கி 1977 வரை சுமார் 190 படங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
முதன் முதலில் தமிழ்ப்படங்களில் அதிகம் 100 நாட்கள் ஓடிய படத்தை பார்த்தால் சந்தேகமே இல்லாமல். அது "மதுரை வீரனை" யே சேரும். தமிழகத்தில் மட்டும் சுமார் 31 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி மிகப்பெரும் சாதனையை செய்தது. அந்த சாதனையை 1977 வரை யாராலும் சமன் செய்ய முடியவில்லை.
மொத்தத்தில் 20 திரையரங்குகள் அல்லது அதற்கு மேல் 100 நாட்கள் ஓடிய படங்களை
அசுர சாதனை செய்த படங்கள் என்று எடுத்துக் கொண்டால் அதில் வரும் முதல் இரண்டு படங்களும் எம்ஜிஆர் படங்களே. 2வதாக வருகின்ற படம்தான் "உலகம் சுற்றும் வாலிபன்". சுமார் 20 திரையரங்குகளில் 100 நாட்களும் , பெங்களூர், இலங்கையை சேர்த்தோம் என்றால் 25 அரங்சுகளிலும் 100 நாட்கள் ஓடியது.
மேலும் "உலகம் சுற்றும் வாலிபன்" திரையிட்டு 91 வது நாளில் வெளிவந்த "பட்டிக்காட்டு பொன்னையா" மேலும் 10 திரையரங்குகளை காவு வாங்கி விட்டது. இல்லையென்றால் மதுரைவீரன் சாதனையை முறியடித்திருப்பார் வாலிபன்.
இந்த இரண்டு படங்களை தவிர வேறெந்ந படங்களும் இந்த சாதனையை நெருங்கவில்லை எனலாம்.
அதனால் தமிழ் படத்தின் அசுர சாதனை செய்த படமாக இந்த இரண்டு படங்களையும் எடுத்து கொள்ளலாம். அய்யனோட படங்கள் எதுவும் அசுர சாதனை செய்ய முயற்சிக்கவில்லை என்பதால் புரட்சி நடிகரே அசுர சாதனைக்கு சொந்தம் கொள்கிறார்.
அங்கம், வங்கம், கலிங்கம் போன்ற 56 தேசங்களை வென்று ஆட்சி செய்யும் ராஜாவை "சக்கரவர்த்தி" என்று அழைப்பார்கள். அதுபோல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற எல்லா மொழிப்படங்களின் சாதனையை தன்னகத்தே வைத்திருப்பதால் "திரையுலக சக்கரவர்த்தி" என்று விநியோகஸ்தர்களால்
அழைக்கப்பட்டார். ஒரு படம் நடித்து விட்டால் போதும் அது அவர் மறைந்த பின்னும் பணமழை கொட்டுவதை நிறுத்துவதில்லை என்பதால் "நிருத்திய சக்கரவர்த்தி" என்ற பெயரிட்டு இலங்கையில் அழைக்கப்படுகிறார்... ......ksr.........
-
DESTINATION – TAMIL NADU ,INDIA
Its been a while since I posted a post – as in write about a destination and I hope to do that in my next post. Until then, here is an attempt to be alive in the blogging world. I have been travelling extensively all of August and all roads pointed to Tamil Nadu. I started with Chennai aka Madras , then drove down to Thanjavur, Kumbakonam, Pondicherry and smaller villages and towns around these places. The next trail took me to Madurai and Kodaikanal and then again to Chennai, the capital city which recently celebrated its birthday. I will be doing more of TN in the next few months. For now, I am back in Bangalore with a sore throat .
This picture of MGR,(M G Ramachandran) former Chief Minister and famous actor framed on the wall was taken on the roads of Triplicane . In a way he represents the spirit of the people there .There is a reason why I say this. I saw a carton of cardboard boxes lying on a bench and this picture of MGR hanging on the wall. Not a soul around. .When I was busy framing a shot, a lady ran from the other end of the road, screaming in Tamil which I’m penning down without editing a single word.
“Avaroda sethu ennaiyum oru photo edungama ..Avar en deivam .Avarthan innivarikkum ennakku saapaad poduraru..”
Please take a photograph of me along with his picture. He is my God .He is the one who feeds me even till day ..........
-
By Vaishali VijaykumarExpress News Service
CHENNAI: Ask anyone in the neighbourhood of Star theatre in Triplicane for MGR and they will guide you to an auto stand. No, we are not talking about legendary actor-politician MG Ramachandran, but his die-hard fan, Santhana Krishnan. When we reach his auto, we are stunned. One look at his auto and his love for the yesteryear stalwart is evident. It is entirely decked up with posters of MGR. Junior MGR, as he is fondly called, has curly hair and a dyed mustache.
Dressed in a red velvet shirt, yellow tie, and sporting black sunglasses, he asks us to take a seat inside his auto for a chat. Buddhan yesu gandhi song plays in the background. Krishnan used to work in a lottery ticket shop. But he wanted to be his own boss. He purchased an auto 20 years ago. As a father of two daughters and a son, Krishnan has been juggling parenting and his work since his wife’s death in 2015. “Every day, my routine begins with a shave. I pick my costume for the day from the 40 garments, five pairs of shoes and four pairs of glasses.
Then, I gear up for the savaris,” says Krishnan, who spends his free time watching MGR movies. There have been instances when people mistook him for MGR. When Star theatre used to play MGR films, Krishnan would get a paal abhishekam. From childhood, Krishnan has idolised MGR and followed his principles. When he offers a ride to the poor, or kids, he doesn’t charge money, but accepts what they offer. Recalling the political era of MGR, he says, “Every weekend I would go to MGR’s house to serve tea and breakfast to the people.
MGR used to feed even his enemy before getting into a battle with him. That’s one of his qualities that I follow. Out of the `10 I earn, I give `5 to kids or the needy,” says Krishnan, who earns around `750- `900 a day. The only difference between the star and the fan is that Krishnan is a vegetarian. “I’ve been following the same diet for 25 years and weight fluctuates between 53 kg and 54 kg,”he laughs. Krishnan is 54 years old now. He has never missed any important day related to MGR. On MGR’s birthday, he goes to MGR memorial at Marina to spend some time.
He hopes to continue inspiring people and live by the principles of his ‘God’. “Passersby hoot when they spot me on the road. I have loyal customers. Nobody has stopped me from doing what I like and it’s that respect that keeps me going. The lyrics from my God, MGR’s film songs are so meaningful that they keep motivating me. I’ve been living more as MGR than Santhana Krishnan by following every mannerism of his and I am proud of it.
Even a good night’s sleep is assured only after listening to his songs,” he says. Krishnan has also played cameos in films like Mersal. During state elections, he canvasses along with the area councillors. As we chat, junior MGR sings certain verses from MGR’s movies. “The smile on Krishnan’s face lights up our day. One day he dresses up like the fisherman from the film Padagotti, and on another day, like the slave from Aayirathil Oruvan,” says Kannan, a fellow auto driver....
-
" ஒன்றரை அணா டிக்கெட் எடுத்து , தரையிலே அமர்ந்து கொண்டு , நம்முடைய நடிப்பைப் பார்த்து , கைதட்டி மகிழ்கிற ரசிகர்கள் தான் நாம் தேடி வைக்கும் நிரந்தர செல்வம் . அந்த ரசிகன் கொடுக்கிற ஒன்றரை அணாவில் ஓரளவாவது மீண்டும் அவர்களுக்கே சென்று சேரும்படி, நல்ல காரியங்களுக்கு உதவுவதே நல்ல கலைஞனுக்கு இலக்கணம் "
என்று மக்கள் திலகம் எம்ஜியாருக்கு அடிக்கடி சுட்டிக் காட்டியவர் கலைவாணர் .........
-
மக்கள்திலகம்
படித்ததில் பிடித்தது
நான் நாடோடி மன்னனுக்கு இந்தப் பொண்ணைப் போடப்போறேன் என்ன சொல்றீங்க?. நீங்க தைரியமா இருந்தா எனக்கும் ஓகே தான் என்று ஏ.எல்.எஸ்.இறங்கினார்.எந்த தேதியில் கால்ஷீட் கொடுத்தாலும் அவங்க வந்து நடிக்கணும்.மறக்காம இதைச் சொல்லீடுங்க.ஒரு வழியாக சரோஜா ஒப்பந்தமானார்.ஒரு பெண்ணை நடிக்க வைக்க இந்தப் பிரபலங்கள் இவ்வளவு யோசிக்க இந்தப் பெண்ணிற்காக இவர்கள் காத்துக்கொண்டிருந்தது தான் காலச் சக்கரத்தின் விளையாட்டு.
ஆரம்பக் காட்சிகளுக்கு சரியான ஒத்துழைப்பைத் தந்தார் சரோஜா.மக்கள் திலகத்தின் பொதுச் சேவைகளோடு நாடகங்களும் நடக்க பொறுமையாகக் காத்திருந்து கேட்டபோதெல்லாம் கால்ஷீட் வழங்கினார்.அப்போது தான் எம்.ஜி.ஆரின் இன்பக் கனவு நாடக போஸ்டர் சீர்காழியில் ஒட்டப்பட்டது.மக்கள் திரளாக ஆதரவு தர கொட்டகையில் விசில் சத்தம் பறந்தது.காரணம் ஒரு சண்டைக் காட்சி.குண்டுமணி மற்றும் மாணிக்கத்தோடு எம்.ஜி.ஆர்.மோதவிருக்கிறார்.முதலில் மாணிக்கம் ஓடி வர அவரை அப்படியே பக்கவாட்டில் தூக்கி ஒரு போடு.அடுத்து குண்டுமணி.வெப்பத்தில் வேர்க்க விறுவிறுக்க ஓடி வருகிறார் மணி.அதே போல் ஒரு தூக்கு.தூக்கிவிட்டு ஒரு அடி பின்னால் நகர கால் இடற வேர்வையில் இருந்த மணி நழுவ அப்படியே தரையில் உட்கார்ந்த எம்.ஜி.ஆரின் இடது காலில் அந்த 250 பவுண்ட் பொத்தென இறங்கியது.மளுக்கென ஒரு சத்தம் உள்ளே கேட்டது.ஜோலி முடிந்தது என அப்போதே உணர்ந்தார்.கைகளை ஊன்றி எழ முயற்சிக்கிறார் முடியவில்லை.சைகையால் சைடில் திரையை இறக்கச் சொன்னார்.கைத் தாங்கலாக இருவர் தூக்க ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை.உடனே காரெடுத்து சென்னை விரைய திருடாதே தொங்கலில் நின்றது.தனியாக இருந்த ஜானகியம்மா சதானந்தவதியோடு இணைந்தார்.இருவரும் சேர்ந்து அவரை கவனிக்க இந்தப் படத்தை அவரால் கவனிக்க முடியாமல் போனது.
எம்.ஜி.ஆர்.கதை அவ்வளவு தான் என சிலர் குதூகலமாக தனது வாழ்வில் முக்கியமான திருப்பம் இந்தப் படம் தானே இப்படி ஆகிவிட்டதே என அவரும் சங்கடமானார்.ஒரு வழியாக ஓய்வெல்லாம் முடிந்து ஸ்டுடியோ வந்தால் சரோஜா எங்கேயோ போயிருந்தார்.நாடோடி மன்னனில் அவர் பரவலாகப் பேசப்பட சபாஷ் மீனா, தேடி வந்த செல்வம், பாகப் பிரிவினை, கல்மாணப் பரிசு, இரும்புத் திரை, கைராசி, பாலும் பழமும் , பனித்திரை, பார்த்திபன் கனவு வாழ வைத்த தெய்வம் போக பல தெலுங்குப் படங்கள் மட்டுமல்ல இந்திப் படங்கள் பைகாம் மற்றும் சசூரல் என அவர் இந்திய நட்சத்திரமாகிவிட்டார்.பகல் முழுவதும் பம்பரமாக சுழன்று விட்டு மாலை ஆறு மணிக்கு வந்தால் மக்கள் திலகம் அவருக்காக மேக்கப்போடு காத்துக்கொண்டிருப்பார்.இதை ஒளிவு மறைவின்றி தனது சுய சரிதையிலும் அவர் சொன்னார்.அவரது கால்ஷீட்டை அனுசரித்து நான் கால்ஷீட் கொடுத்தேன் என்றார்.ஒரே காரணம் அவர் தன்னை தக்க வைத்துக்கொள்ள இந்தப் படம் முடிந்ததாக வேண்டும்.ராஜா வேஷத்தில் கத்தியைச் சுழற்றத் தான் இவர் லாயக்கு என காதுபடவே பேசினார்கள்.கால் முறிவில் அரைகுறையாக படங்கள் அப்படியே நிற்கிறது.பணம் போட்ட முதலாளிக்கு பதில் சொல்ல வேண்டும்.பரணி ஸ்டுடியோவில் பிரபல நடிகர் பாராட்டு விழா.பேசிய பலரது டார்கெட் எம்.ஜி.ஆர்.ஒத்துழைக்காததால் பட முதலாளிகள் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.இவரால் ரூபாய் ஒரு கோடி நஷ்டம் என ஒரு பிரபலம் பேச நொந்தே போனார்.அடுத்த நாள் கொட்டை எழுத்துக்களில் செய்தித் தாள்கள் தங்களது பங்கை ஆற்ற நான் சமூகப் படங்களுக்கு லாயக்கா என்பதை விட கலைத் துறைக்கு லாயக்கா என்ற மிகப் பெரிய கேள்வி அவர் முன்பு நின்றது.இந்தப் படம் வெளியானால் தான் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.ஆனால் சரோஜாவிற்கு இந்தப் படம் வந்து தான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலை இல்லை.யார் என்ன நிபந்தனை போட்டாலும் தலையாட்ட வேண்டிய சூழல் மக்கள் திலகத்திற்கு.பல படங்களில் சரோஜா கால்ஷீட் கொடுத்திருந்ததால் அங்கிருந்து பிடுங்கவும் முடியாது.மாலை ஆறு மணிக்குத் தான் அவர் வருவார்.அவர் சம்பந்தப்பட்ட கடா எடுத்து உடனே அவரை அனுப்பி விட வேண்டும்.சிங்கிள் ஷாட்டில் அவர் இருக்கமாட்டார்.ஒவ்வொரு நாளும் பலரும் அவருக்கு காத்திருந்தார்கள்.காத்ததற்கு பலன் கிடைத்தது.படம் சூப்பர் ஹிட்டானது.
.மக்கள் திலகம் பாலுவாக சரோஜா சாவித்திரியாக நம்பியார் பொன்னம்பலம் துளசிங்கமாக படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை விறுவிறுப்பாக இயக்கித் தந்தார் நீலகண்டன்.கவியரசு கதை திரைக்கதையோடு பாடல்கள்.ஆரம்பிக்கும்போது ஒன்றாக இருந்தவர்கள் முடியும்போது வெளியே பிரிந்திருந்தார்கள்.அன்றைய அரசியல் சூழல் அப்படி.ஆனாலும் அவரது வசனங்கள் சோடை போகவில்லை.வயிறு புரட்சி பண்ண ஆரம்பிக்கும்போது கை தானாக நீளுது.காலம் கெட்டுப் போச்சுங்க.காலமெல்லாம் கெட்டுப் போகலை.மனுஷங்க தான் காலத்தை கெடுத்துட்டாங்க.அவன் இரும்பு மனுஷன்.இரும்பு நெருப்புகிட்ட உருகிடும் சித்தப்பா.உலகத்திலேயே ஈனமான தொழில் திருடுறது தான்.வாழ முடியாதுண்ணா செத்தாவது போகலாம்.நான் திருடிக்கிட்டு இருக்கும்போது யாரும் ஒண்ணும் சொல்லலை.திருந்தி வாழ்ந்தா திருடங்கிறாங்க.எனக்காகவா திருடினே. என் வயிறு குளிரும்போதெல்லாம் ஊரார் வயிறு பத்தி எரிஞ்சிருக்குமே.கவிஞரின் பேனா சிந்திய எழுத்துக்கள் படத்தின் விறுவிறுப்பை இன்னும் கூட்டியது.
மக்கள் திலகம் சமூகப் படங்களிலும் வெளுத்து வாங்குவார் என்பதை ஆணித்தரமாக நிரூபித்த படம்.நீண்ட இடைவெளியை அவரது ஹேர் ஸ்டைல் காட்டித் தரும்.ஒரிஜினல் ஹேரில் அம்சமாக பேண்ட் ஷர்ட் இன் பண்ண ஷர்ட்டை மடித்து விட்டதில் ஒரு நேச்சுரல் இருந்தது.வசனங்களில் அவரது எதார்த்த நடிப்பு அந்த பாலு கேரக்டர் படம் முழுவதும் பல வித உணர்ச்சி கொந்தளிப்புகளோடு வலம் வந்தது.செய்த தவறுக்கு அவர் வருந்தியபோதெல்லாம் நாமும் வருந்தினோம்.பிராயசித்தத்திற்கு அவர் எடுத்த முயற்சிகளில் எள்ளளவும் செயற்கை இல்லை.அந்த பாலுவாகவே அவர் வாழ்ந்தார்.காதலியோடு அவர் காட்டிய ஈடுபாடு அத்தனை இயல்பாக இருந்தது.கூட நடித்த சரோஜா அட்டகாசம் செய்தார்.சரியான ஜோடி என ஊரார் புகழ எத்தனை படங்களில் இந்த ஜோடி வாழ்ந்துகாட்டியது.நம்பியார் தன் பங்கிற்கு அசத்தினார்.தாராவாக வந்தஎம்.என்.ராஜம் இந்தி நாதிராவின் பாத்திரம் ஏற்றார்.தாயாக வந்த பெண்கள் கலங்க வைத்தார்கள்.மோகனாக வந்த முஸ்தபா பண்பட்ட தடிப்பைத் தர அவரது மனைவியாக வந்த சகுந்தலா அசத்தினார்.ஜம்புவாக வந்த தங்கவேலு சரோஜா ஜோடி கலகலப்பூட்டியது.
இசையமைப்பாளர் பங்கை சொல்லியே ஆக வேண்டும்.நாயுடு அவர்கள் எம்.ஜி.ஆரின் நீண்ட கால நண்பர்.கோவையில் ஏற்பட்ட பழக்கம்.அவரது சொந்தப் படமான நாடோடி மன்னனில் அவர் தான் இருந்தார்.காலத்தால் அழியாத திருடாதே பாப்பா திருடாதே பாடலை அனுபவிக்க பட்டுக்கோட்டைக்கு கொடுத்து வைக்கவில்லை.ஓ மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு சும்மா ஓடாதய்யா அழகான பாடல்.பாத்தா பழகாத ஜோடி போலத் தோணுது ஆத்தாடி இவ கோவக்காரி சரியான டப்பாங்குத்து.மாமா மாமா மக்கு மாமா நீ மண்ணாரு போல நிக்கலாமா?.இந்த மலையைப் பாத்து சொக்கலாமா?. இன்னொரு ஜாலியான அனுபவம்.அச்சா பகூத் அச்சா உனக்கு அழகை யாரு வெச்சா.கிருஷ்ணன் ரத்னமாலா ஜோடி தங்கவேலு ஜோடிக்காக.
என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சூழலுவதேன் மெல்லிசை மன்னர்கள் போட்ட பாடல் சும்மா கிடந்தது.அதை தூசி தட்டி இந்தப் படத்தில் பயன்படுத்தினார் ஏ.எல்.எஸ்.அட்டகாசமான பி.பி.எஸ்.கரு எம்.ஜி.ஆர் பாட கவிஞரின் வஞ்சி இடை கெஞ்சுவதேன் பிஞ்சு மொழி கொஞ்சுவதேன் தேனாக இனித்தது.கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே இசையரசியின் இனிய குரலில் காலமெல்லாம் வாழ்கிறார் கவியரசு.கண்ணும் கண்ணும் பேசுது காதல் பாட்டு ஆணும் பெண்ணும் சேர்ந்துகிட்டு ஆடுறாங்க டான்ஸ்.இந்த பாடலைப் பேச ஒரு தனிப் பதிவே போட வேண்டும்.அப்படியொரு வெஸ்டர்னில் கலக்கியிருப்பார் நாயுடு.
விறுவிறுப்பான திரைக்கதை.கதை மாந்தர்களின் பக்குவமான நடிப்பு கலக்கலான பாடல்களோடு சண்டைக் காட்சிகளையும் சொல்லியே ஆக வேண்டும்.குறிப்பாக நீண்ட க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி.கால் ஒடிந்து அவ்வளவு தான் இவரது எதிர்காலம் என்பவரின் வாயை அடைக்கவே இந்த நீண்ட சண்டை.ரிஸ்கான சண்டையில் நம்பியார் பங்கு அசாத்தியம்.கிடைத்த பொருட்கள் கையிலெடுத்து எறிந்து எறிந்து விளையாடும் ஜாக்கி சான் ஸ்டைல்.ஒரே ஒரு சீலிங் பல்ப் சுழல அதன் ஒளியில் ராமமூர்த்தி படமாக்கிய இந்த ஃபைட் பல படங்களுக்கு முன்னோடி.சமூகத்திற்கு ஒரு ஸ்ட்ராங்கான மெஸ்ஸேஜ்.மக்கள் திலகம் ஒரு ஃபார்முலாவை நோக்கி நகர உதவிய படம்.ஆரம்பமே அசத்தல்.இருட்டில் ஏற்பட்ட சிநேகம் இருட்டிலேயே போகட்டும்.திருட்டில் இவன் ராஜாண்ணா நான் சக்கரவர்த்தி.எதிர்பார்ப்பை எகிற வைத்தது.கடைசியாக எனக்கு ஏதாவது சொல்லீட்டு போங்க மாமா என அந்த பிஞ்சு கேட்க திருடாதே பாப்பா திருடாதே என்பதோடு நிறைவாக நிறைவுறுகிறது இந்ததிரைப்படம்.திருடாதே என பாப்பாவிற்கு மட்டுமா சொன்னார்?.
நன்றி..
அப்துல் ஸமாத்ஃ பையஸ்.அவர்கள்...........
-
#வாத்தியார் #என்ற #ஆயிரங்காலத்துப் #பயிர்
(செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதிய அமரர் எம்ஜிஆர் குறித்த இந்தக் கட்டுரை மலேசியாவில் கடந்த 10 செப்டம்பர் 2017-இல் கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இடம் பெற்றது)
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1987-இல் மறைந்தபோது, அடுத்து வரும் பத்தாண்டுகளில் அல்லது இருபது ஆண்டுகளில் அவரது புகழும், செல்வாக்கும் தமிழக மக்களிடையேயும், சினிமா இரசிகர்களிடையேயும், மெல்ல மெல்ல மங்கி, ஒரு காலகட்டத்தில், அவர் மறக்கப்பட்டு விடுவார் என நினைத்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால், அதற்கு நேர்மாறாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னரும், எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், அவரது புகழ் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு, நீடித்து நிலைத்திருப்பதற்கும், தொடர்வதற்கும் என்ன காரணம் என பல தருணங்களில் நான் சிந்தித்ததுண்டு.
கீழ்க்காணும் மூன்று முக்கிய அம்சங்கள் காரணமாக அவரது புகழ் இன்றும் தொடர்ந்திருக்கிறது – நிலைத்திருக்கிறது – என்பது எனது சிந்தனையின் முடிவு:
தமிழக அரசியலில் தொடர்ந்து அதிமுக கட்சி ஜெயலலிதாவின் ஆளுமையாலும், திறனாலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதோடு, முக்கிய மாற்று அரசியல் சக்தியாகவும் திகழ்ந்ததால், அவர்களால் எம்ஜிஆரின் புகழை ஒரு வாக்கு வங்கியாக மாற்றி மக்களிடையே அவரது பெயரை நிலைத்திருக்கச் செய்ய முடிந்தது.
இரண்டாவதாக, எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் விஸ்வரூபமெடுத்து இல்லம்தோறும் இன்று பரவிக் கிடக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள் எம்ஜிஆரின் புகழ் நிலைத்திருப்பதற்கு இன்னொரு காரணமாகும். தனது சொந்தத் திரைப்படத் தயாரிப்புகளைக் கூட தொலைக்காட்சிகளுக்கு உரிமம் கொடுக்காமல் பாதுகாத்தவர் எம்ஜிஆர். ஆனால், நாளடைவில், அவரது திரைப்படங்களும், காட்சிகளும், குறிப்பாகப் பாடல் காட்சிகளும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளியேறி வர இதன் மூலம் அவர் காலத்து இரசிகர்கள் அவரை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டாட முடிந்தது என்பதோடு, அடுத்த தலைமுறையின் புதிய, இளம் இரசிகர்களும் அவரது இரசிகர்களாக இணைந்தார்கள். எம்ஜிஆரின் தீவிர இரசிகர்கள் பலர் அடிக்கடி எம்ஜிஆர் படங்களை தொலைக்காட்சிகளில் பார்க்க, அவர்களோடு அந்தப் படங்களைப் பார்த்த அவர்களின் பிள்ளைகளும் எம்ஜிஆரை இரசிக்கத் தொடங்கினார்கள் என பல குடும்பங்களில் நானே சொல்லக் கேட்டிருக்கிறேன். இது மற்ற எந்த நடிகருக்கும் நேராத அதிசயம்.
மூன்றாவதாக எம்ஜிஆர் மிகவும் கவனமுடன் கடைப்பிடித்த ‘இமேஜ்’ எனப்படும் அவரது வெளித்தோற்ற நடவடிக்கைகள், மனித நேயத்தை மையமாகக் கொண்டு அவர் கடைப்பிடித்த பொது உறவுப் பண்பாடுகள் இன்றுவரை பலராலும் பெருமிதத்துடனும், ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருவதால், அந்த விவரங்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்பட்டு, எம்ஜிஆர் இப்படியெல்லாம் நடந்து கொண்டாரா, எம்ஜிஆர் அவ்வளவு நல்லவரா என இன்றைய மக்களும் அதிசயப்படும் வண்ணம் அவரது புகழ் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மேற்கூறிய மூன்றாவது அம்சத்தை மையமாகக் கொண்டதுதான் இந்தக் கட்டுரை.
எம்ஜிஆரைப் பொறுத்தவரை என்னை மட்டுமின்றி பலரையும் இன்றுவரை ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்,
"ஒரு கூட்டத்தினரிடையேயும், கோடிக்கணக்கான மக்களிடத்திலும் அவர் தனது தோற்றத்தையும், தனது பிம்பத்தையும் பாதுகாத்து வந்த அதே நேரத்தில் மிகச் சாதாரண தனி மனிதர்களிடத்திலும் சரிசமமாக உண்மையாக அவர்களுக்கு
மரியாதை கொடுத்து நடந்து
கொண்டார் என்பதுதான்........bsm
-
இது எப்படி இருக்கு?
---------------------------
எம்.ஜி.ஆர் தான் எனக்குத் தெரிஞ்சு நல்லா நடிக்கறவன்! சண்டைக் காட்சிகளில் கூட இங்கே நிறைய யுக்திகளைக் கொண்டு வரணும்ன்னு நினைக்கறவன்.
யாரோட பாணியையும் காப்பி அடிக்காம,,நடிக்கறது யாருன்னு கேட்டால் நான் ராமச்சந்திரனைத் தான் சொல்லுவேன்--
மேற் படிக் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர்-
நடிகவேள் எம்.ஆர்.ராதா!
இயற்கை செய்த எத்தனையோ ஏடாகூடங்களில்-
எம்.ஜி.ஆர்--எம்.ஆர்.ராதா மோதலும் ஒன்று என்பேன்!
நகைச்சுவை,,யதார்த்தம்,,வில்லன் இப்படி எந்த பாத்திரத்திலும் எம்.ஆர் ராதாவின் நடிப்பு,,ஒரு ஹீரோவுக்கான நிறைவைக் கொடுக்கும்!
அன்று திரையுலகமே பயந்து,,பின் வாங்கிய குஷ்டரோகி பாத்திரத்தைத் துணிந்து ஏற்று நடித்ததோடல்லாமல் -
ரத்தக் கண்ணீர் படத்தை பெரிய அளவில்,,தன் நடிப்பினால் வெற்றி பெறச் செய்தவர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!
மனதில் பட்டக் கருத்தை பளிச்சென்று கூறுவது இவர் பாங்கு!
நாத்திகராக இருந்தாலும்,,காட்சிக்கு ஏற்பக் கடவுள் பக்தராகவும் வந்து அசத்துவார்!
அது பாகப்பிரிவினை படத்தின் வெற்றி விழா!
இந்தி நடிகர் சுனில்தத்,,ராதாவைத் தனிப்பட்ட முறையில் பாராட்ட விரும்பியவர் ராதாவைக் கண்டபோது திகைத்துப் போகிறார்--
லுங்கியை மடித்துக் கட்டியபடி கரண்டியும் கையுமாக நடிகர்களுக்கான சமையலைச் செய்தபடி இருந்தவரைக் கண்டதால் வந்த திகைப்பு--
ராதாவைக் கட்டித் தழுவி பாராட்டி,,வேகமான ஆங்கிலத்தில்;உரையாடத் தொடங்க--
சுனில்தத் பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த எம்.ஆர்.ராதா,,அருகிலிருந்தவரிடம் கேட்கிறார்--
என்னய்யா சொல்றான் இவன்??
அப்போது தான் சுனில்தத்துக்குத் தெரிகிறது,,,எம்.ஆர் ராதாவுக்கு இங்கிலீஷ் தெரியாது என்று?
மேலும் திகைப்படைகிறார் சுனில்--
காரணம்,,அந்தப் படத்தில் பிரிட்டிஷ் ஆங்கிலத்தை இலக்கணப் பிழை இல்லாமலும் சரளமாகவும் வேகமாகவும் பேசியிருப்பார் ராதா
ஒரு முறை,,தமது சொந்த நாடகத்தில்--
போலீஸைப் பார்த்து ஏன் பயப்படறே என்னும் வசனம் பேசிய ராதா,,வசனம் பேசிக் கொண்டே கூட்டத்தை நோக்கித் திரும்பி--
இங்கே பாரு,,பல போலீஸ்காரங்க ஓஸி டிக்கட் வாங்கினவங்க முன் வரிசையிலே உட்கார்ந்திருக்கானுங்க.
துட்டு குடுத்து டிக்கட் வாங்கினவங்க பின் வரிசையிலே நின்னுக் கிட்டிருக்காங்க--என்று டைமிங்-சென்ஸாக அடிக்க--
மறு நாளிலிருந்து பல ஓசி டிக்கட்டுங்க எஸ்கேப்??
ஒருமுறை ராதாவை நோக்கி ரசிகர்கள் கல்லால் அடிக்க,,அந்தக் கற்களை அவர்களை நோக்கியே திரும்ப எறிந்திருக்கிறார் ராதா??
திரையுலகம் செய்த பல அதிர்ஷ்டங்களில் எம்.ஆர் ராதாவும் ஒன்று என்பது நம் கருத்து!
உண்மை தானே உறவுகளே???
!...vtr
-
நன்றி- Abdul samsth Fayaz .அவர்கள்...
ஸ்கிரிப்ட் ரெடி பண்ணீடுங்க நாம ஒரு படம் சேர்ந்து பண்ணீடுவோம்.எதிரே அமர்ந்திருந்த சகோதரர்களின் முகம் மலர்ந்தது.அது ராமாவரம் தோட்டம்.மாநிலத்தின் முக்கிய முகமான மக்கள் திலகத்தின் உறைவிடம்.முகம் மலர்ந்த சகோதரர்கள் ஏ.வி.எம்மின் வாரிசுகள்.உங்க கூட ஒர்க் பண்ண ஃபாதர் பிரியப்படுறாரு.நாகிரெட்டிக்கு செய்தது போல் எங்க பேனருக்கும் ஒரு படம் பண்ணித் தருணும் என கேட்க வந்த இடத்தில் தான் உடனடியாக பச்சைக் கொடி காட்டினார் மக்கள் திலகம்.ஸ்கிரிப்ட் ரெடியா இருக்குங்க.
அப்படியொரு ஸ்கிரிப்டை அதற்கு முன்பு எம்.ஜி.ஆர்.பார்த்ததே இல்லை.பக்காவாக பைண்ட் செய்யப்பட்டிருந்தது.அதில் நேர்த்தியான எண்களைப் போட்டு எடுக்கப்போகும் காட்சிகள் சீன் வாரியாக பிரிக்கப்பட்டு பேச வேண்டிய வசனங்கள் பங்கு பெறும் பாத்திரங்கள் என பக்காவான ஸ்கிரிப்ட். இப்படியெல்லாம் இருக்குமா?.ஆச்சர்யமானார் எம்.ஜி.ஆர். எங்க எல்லா படங்களுக்கு இப்படித் தாங்க.அது அன்பே வா ஸ்கிரிப்ட் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஏ.வி.எம்.என்ற பிரமாண்டமான நிறுவனத்தில் எம்.ஜி.ஆர்.தன்னை இணைத்துக்கொண்டது திரையுலகிற்கு பெரிய விஷயம்..அது வரை அவருக்கென்றே ஒரு ஃபார்முலா இருந்தது.தாய் தங்கை செண்டிமெண்ட் வில்லன் அநியாயம் தட்டிக் கேட்டு பாதிக்கப்பட்டு வீறுகொண்டு எழுந்து துவம்சம் செய்து வெற்றிக்கொடி நாட்டி என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த எதுவுமே அன்பே வாவில் இல்லை.படித்துப் பார்த்த அவர் இது என் படம் இல்லை.இருந்தாலும் எனக்கிது பிடிச்சிருக்கு.திருலோக் படத்தில நான் இருக்கேன் அவ்வளவு தான்.அப்பாவிற்கு ஸ்கிரிப்ட் ஓகேன்னா எனக்கும் ஓகே தான்.ஏ.வி.எம்.பேனரில் பசங்களுக்காக ஒரு யூனிட் தயாராக இருந்தது.குமரனுக்காக மியூசிக் டிபார்ட்மெண்ட் முருகனுக்காக அக்கௌண்ட் பிரிவு சரவணன் ஸ்டார் காஸ்டிங் வெளிப்புற படப்பிடிப்பு என செட்டியார் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்த நேரம்.இந்த யூனிட்டில் ஏ.ஸி.திருலோக்கும் இணைய காதலை மையமாக வைத்து ஒரு ஜாலியான கதைக் களம்.சின்ன பட்ஜெட்டில் யாரைப் போடலாம்.?. ஜெய் செட்டாவார் என பேசிக்கொண்டிருந்தபோது தான் சரவணன் எம்.ஜி.ஆரை ட்ரை பண்ணலாமா என்றார்.அதற்குக் காரணம் அசோகன்.பார்க்கும்போதெல்லாம் நச்சரித்துக்கொண்டே இருப்பார்.ஏ.ஸி.யை உள்ளே நுழைத்ததும் அவர் தான்.அவரது முதல் படமான வீரத் திருமகனில் வில்லன் அசோகன் முக்கியப் பாத்திரம்.செட்டியாருக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை.எதிர்பார்த்த வெற்றியும் கிடைக்கவில்லை.பசங்க என்னவோ பண்றாங்க என அமைதியாக இருக்க இந்த ஸ்கிரிப்ட்டில் எம்.ஜி.ஆர்.ஓகே சொன்னதும் அதன் கலரே மாறிவிட்டது.செட்டியாரும் முகம் மலர்ந்தார்.படத்தை கிராண்டா பண்ணுங்கப்பா என்றார்.இதன் கதை ரொம்ப சிம்ப்பிள்.
கம் செப்டம்பரை ஞாபகப்படுத்தும் கதை.பெரிய பிரமாதம் எல்லாம் இல்லை.பணக்கார பாலு வேலைப் பளுவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு விடுமுறைக்காக ரிலாக்ஸாக தனது சிம்லா பங்களாவிற்கு வர பங்களாவை கவனித்துக்கொண்டிருந்த வேலைக்கார தம்பதி காசிக்குச் செல்ல வந்து பார்க்கும் பாலு பங்களா வாடகைக்கு விடப்பட்டது கண்டு அதிர அங்கு தங்கியிருக்கும் சுற்றுலா வந்த குடும்பத்தோடு ஒன்றி விடுகிறான் பாலு.கூட இருக்கும் பொண்ணோடு மோதலில் தொடங்கி காதலில் முடிய அடுத்தடுத்த நிகழ்வுகளை சுவாரசியமாக சொன்னது அன்பே வா திரைக்கதை.இந்த எளிய வாழ்க்கை பாலுவிற்கு பிடித்துப்போவது தான் ட்விஸ்ட்.இதில் எம்.ஜி.ஆரை தேடினாலும் கிடைக்கமாட்டார்.
இப்படியொரு படத்தை இது வரை அவர் முயற்சித்ததே இல்லை.முக்கியமாக அது வரை அவர் பார்க்காத அவுட்டோர்.கதைக் களம் சிம்லா என்றதும் கண்களுக்கு குளிர்ச்சி.கலர்ஃபுல் லொகேஷன்.நாகேஷின் அதிரடி நகைச்சுவை.தொய்வே இல்லாமல் நகரும் கதையில் அட்டகாசமான பாடல்கள் இன்னொரு சிறப்பு.இது வரை மக்கள் திலகம் சந்திக்காத புதுவித அனுபவம்.அவரது படத்தில் முழு ஆதிக்கம் அவர் தான் என்பது ஊரறிந்த விஷயம்.ஆனால் அன்பே வா பாடல் கம்போஸிங்கில் மக்கள் திலகத்தின் பங்களிப்பு எங்குமே இல்லை என்பது தான் ஆச்சரியம். மியூச்க்கை கவனித்த குமரன் தான் இதற்கெல்லாம் காரணம்.
குமரனுக்கு பிடித்தமான இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.இருவரும் ஜாலியாக எதையாவது முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள்.உயர்ந்த மனிதனில் கூட குமரனின் டேஸ்ட் இருக்கும்.அப்படித் தான் அன்பே வாவிற்கும் இருவரும் அமர்ந்தார்கள்.அட்டகாசமான பாடல்கள் கிடைக்க காரணம் குமரனின் பங்களிப்பு தான்.ஒன்ஸ் ஏ பப்பா இலங்கை பைலா பாடலில் கூட அவரது பங்களிப்பு இருந்தது.ட்விஸ்ட் டான்ஸ் டெஸ்ட் மேட்ச் என பார்த்துப் பார்த்து அவர் செய்தார்.எந்த பாடலுக்கும் எம்.ஜி.ஆர். நேரடி தொடர்பில் இல்லை.ஓகே வாங்குவதற்கு மட்டும் போட்டுக் காட்டியதோடு சரி.எம்.எஸ்.விக்கே இது ஆச்சர்யம்.அவரு வந்து உட்கார்ந்தா என்னை ஒரு வழி பண்ணிடுவாரு.எதுக்கும் நீங்க கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க.கடைசி நேரத்தில கூட பாட்டை மாத்திடுவாரு என அவரது அனுபவத்தைச் சொல்ல குமரன் பயந்தது என்னவோ உண்மை.செட்டியாரு கேட்டாரா?. கேட்டாருங்க.என்ன சொன்னாரு.நல்லாயிருக்கப்பா இதையே வெச்சுக்கலாம்னு சொல்லீட்டாரு.செட்டியாருக்கு பிடிச்சிருந்தா எனக்கும் ஓகே தான்.இப்படித் தான் ஒவ்வொரு பாடலுக்கும் அவர் ஏ.வி.எம்மிற்கு மரியாதை தந்தார்.உங்க நிறுவனம் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.நீங்க எது செய்தாலும் கரெக்டா இருக்கும்.எங்கிட்ட ஒப்பீனியன் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.நேரா சூட்டிங் போயிடலாம்.அவுட்டோரில் இருக்கும்போது டேப்பில் ஒலிக்கும் பாடலை இயக்குநர் டேஸ்டிற்கு நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆரை அது வரை திரையுலகம் கண்டதே இல்லை.அதிலொரு பாடலை இன்றைய தினத்தில் பார்க்கலாம்.பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.இதிலும் குமரனின் ஆதிக்கம் இருந்தது.
நாயகனும் நாயகியும் நெருக்கத்தில் இருக்க நாயகி ட்ரீம் போகிறார்.திருலோக் இந்த இடத்தில் பாடல் வைத்திருந்தார்.குமரனும் எம்.எஸ்.வி.யும் அவரோடு உட்கார நாலைந்து நாளாச்சு டியூன் வந்தபாடில்லை.மன்னரின் விரல்கள் ஆர்மோனியத்தில் விளையாடிக்கொண்டே இருக்க குமரன் குனிந்த தலை நிமிரவே இல்லை.எம்.எஸ்.வி.பொறுமை இழக்கிறார் கிட்டத்ட்ட 15 டியூன் போட்டும் அவருக்கு திருப்தியில்லை.எம்.எஸ்.வி.ஆர்மோனியத்தை மூடிவிட்டு என்ன தான் எதிர்பார்க்கிறீங்க என்றார்.ப்ரீலூட் கொஞ்சம் கேட்சியா இருக்கணும்.நேத்து ஒரு படம் பார்த்தேன்.பாரீஸ் ஷாம்பெய்ன்.அதில ரெண்டு குதிரை பூட்டின கோச்சில லவ்வர்ஸ் உட்கார்ந்து போறாங்க.அப்போ ஒரு மியூசிக் குடுக்கிறான் . சும்மா ஜில்லுனு இருக்கு.நமக்கே குதிரைல போற ஃபீலிங் கெடைக்குது.அது மாதிரி ஒரு ஃபீலிங் இந்த பாட்டிலும் இருந்தா பெட்டரா இருக்கும்.அவ்வளவு தானே.ஆர்மோனியத்தை எம்.எஸ்.வி.தொடவே இல்லை.இதில வேண்டாம் பியானோ அரேன்ஜ் பண்ணுங்க.பியானோ ஆர்.ஆர்.ல இருக்கு.ரெக்கார்டிங் தியேட்டர் போக மன்னர் வாசிச்ச முதல் டியூனே அசத்தல். மெதுவாக ஆரம்பித்து டன் டன் டான்.பியானோ அலறுகிறது.பிரமாதம் சார்.இது தான் நான் எதிர்பார்த்தது.இதே ஸ்பீடில் வாலியை கூப்பிடுங்க இங்கேயே பாட்டை முடிச்சிடலாம்.வாலி வீட்டிற்கு ஃபோன் பண்ண நான் வாஹினி கெளம்பீட்டு இருக்கேனே.அதை முடிச்சிட்டு வந்திடுறேன்.நீங்க முதல்ல இங்க வந்திட்டு போயிடுங்க.குமரன் வேண்ட வாலியின் ஃபியட் ஏ.வி.எம்.காம்பவுண்டிற்குள் நுழைந்தது.
என்னண்னே என அவசரமாக அவரும் வர இதென்ன பியானோ?. வாலிக்கு ஆச்சரியம். வாங்க சார் .உங்களுக்காகத் தான் வெயிட்டிங்.குமரன் அவசரம் தெரிந்தது.சாருக்கு இந்த மெட்டு பிடிச்சிருக்கு. எழுதிக்கொடுங்க.என்ன சிச்சுவேஷன் என்ன சமாச்சாரம். ஏதோ கோச் வண்டிங்கிறாரு.ராஜா ராணிங்கிறாரு.ட்ரீம் சாங் தானே.இப்படி போடலாமா ?. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.அட! .. நல்லாயிருக்குங்க!..குமரன் முகம் மலர்ந்தது.என்ன திருலோக்.நல்லாயிருக்கு !.. கண்டினியூ பண்ணலாம்.பியானோவில் வாசிக்க வாசிக்க ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே.பூரண நிலவோ புன்னகை மலரோ?. இசையரசியோடு ஐயா டி.எம்.எஸ்.வாலியின் வரிகளில் தெரிந்த உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்க மன்னரின் கை வண்ணத்தில் எழிலாக மிளிர்ந்த பாடல்.ரெக்கார்டிங் போவதற்கு முன்பாக வழக்கம் போல் எம்.ஜி.ஆர்.பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்கு.அந்தப் பாடலை எப்படி எடுக்க வேண்டும் என சத்தியமா அப்போது திருலோக்கிற்கு ஐடியாவே இல்லை.ஒரு ஓரத்தில் குவித்து வைத்திருந்த சாரட்டின் பாகங்களை பார்க்கும் வரை.
ஏதோ ஒரு தெலுங்கு படத்திற்காக பயன்படுத்திவிட்டு அக்கு வேறு ஆணி வேராக கிடந்த சாரட்டின் பகுதிகளை ஆர்ட் டைரக்டர் சேகர் அசத்தலாக பொருத்தினார்.ஆசாரிகள் தங்களது திறமைகளைக் காட்ட பக்காவான பெயிண்டிங்.ஒரே ஒரு குதிரையின் க்ளோஸப் வேண்டுமே.அழகான வெள்ளைக் குதிரையின் முன்னால் நின்று புல்லுக்கட்டைக் காட்ட அது தலையை இசைக்கேற்ப ஆட்டியது.இது போதும்.வெறும் சாரட்டை வைத்து சமாளிக்கலாம்.பாடலுக்கு வந்த மக்கள் திலகம் காஸ்டியூமைப் பார்த்தார்.ரிச்சா பண்ணிருக்கீங்க.அணிகலன்கள் அசத்த ராணிக்கும் ஒரு பளபளக்கும் கிரீடம்.ஸ்லீவ்லெஸ் கவுனில் அசத்தல் வேலைப்பாடுகள்.
நாயகி தோளில் சாயும் நாயகன்.அப்படியே கண் மயங்க இசையரசி தாலாட்டும் மூடில் ஒரு ஆலாபனை.ம்ம்ம்.ஆஆ ஆஹா...ஆஹா...மன்னரின் பியானோ மெல்லிய கோடுகளாக வரைய ஒரு இன்பமான ஃபீலிங்.அப்படியே கனவுலகம்.ஜோடிகளாக கலரில் கண் முன்னே ஆட மணியோசையோடு வருகிறது அந்த சாரட்.அதிலேறி பயணிக்கும் அனுபவம்.ஒரு கையில் சாரட் கயிறு.அதை ஆட்டிக்கொண்டே புஷ்டியான மக்கள் திலகம்.குண்டடி படாத 65ல் ஆரோக்கியமான அழகான முகம்.அசத்தனலான உடையலங்காரம்.அருகே அழகான ராணியாக சரோஜா.இசையரசி குரலுக்கு லிப் மூவ்மெண்ட் தருகிறார்.
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம் பொன்
மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்.
எடுத்தவுடன் ஆரோகணத்தில் தொடங்கிய மெட்டு.நீட்டி முழக்கிய ராஜாவை நெருங்கி அணைக்கும் ராணி.அவர் பாடுவதையே பார்த்துக்கொண்டிருக்கும் ராஜா.சாரட்டின் கயிற்றில் கவனம்.கண் தேடும் சொர்க்கமும் கை மூடும் வெட்கமும் கனிவாக வந்து விழுகிறது.பொன் மாலை மயக்கம் இரு வேறு ஸ்டைல்களில்.சாரட்டிலிருந்து எழுந்து அப்படியே வளைந்து நெளிந்து சிருங்கார ரசத்தைக் கொட்ட சோப்ரா மாஸ்டர் சொல்லிக் கொடுத்த அதே அபிநயம்.அழகாக அருகில் அமர ஐயா டி.எம்.எஸ்.மறுமொழி பகர
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன்
அணைக்கத் துடித்தேன்.
சினிமா பாடலுக்கு சந்தம் எவ்வளவு அழகு.முகமே சுகமே நிலவோ மலரோ வடித்தேன் குடித்தேன்.அந்தக் கால பாடல்கள் ஏன் நம் நெஞ்சை விட்டு அகலாமல் அங்கேயே கிடக்கிறது.?. வஞ்சனையில்லாமல் கவிஞர்கள் வாரி வழங்கிய சுந்தரத் தமிழ் தான் காரணம்.தமிழ் இலக்கியங்கள் சாதாரண மக்களுக்கு அந்நியமாகப் போனாலும் இம் மாதிரி பாடல் வரிகள் தான் இலக்கியத்தின் பால் ஈடுபாடு கொள்ள வைக்கிறது.மன்னரின் மெட்டில் வகையாக பொருந்தும் வரிகளில் வளமான தமிழ் இருந்தது.அதே நேரத்தில் அந்தப் பாத்திரங்கள் என்ன உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமோ அதை டீஸண்டாக சொல்லுவும் வேண்டும்.அதனால் தான் வாலி போன்ற கவிஞர்களால் இவ்வளவு காலத்திற்கு இங்கே குப்பை கொட்ட முடிந்தது.எல்லாவற்றிற்கும் மேலாக அந்த இசை.பாமரனையும் கட்டிப்போட்ட லாவகம்.குமரனுக்கு எப்போதுமே ப்ராஸ் வாத்தியங்களில் அலாதி பிரியம்.பியானோ வயலின் அக்கார்டியனை மீறி அந்த ட்ரம்பெட் ஒரு ரிச்சான ஃபீலிங்கைத் தரும்.யானையின் பிளிறலோடு ஆங்காங்கே அது தென்படும்.நேர்த்தியான மிக்ஸிங்.அந்த மணியோசையோடு நெருக்கமாக வரும் ட்ரம்பெட்.முடிவில் பியானோ தரும் ஃபினிஷிங்.தாளங்களை கச்சிதமாகத் தரும் பேங்கோஸ்.காட்சிகள் மாற சாரட்டிலிருந்து இறங்கி ஊட்டிக்குச் செல்கிறது ஜோடி.பச்சைப் புல்வெளியில் ஒரு பக்கம் மஞ்சள் புகை வெளியேற வெள்ளுடை தரித்த ஜோடி.
ஆசையில் விளைந்த மாதுளங் கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
விதவிதமான கோணங்களில் இந்த அவுட்டோர் அழகாகிறது.கனி இதழ் தேடும்போது அழகாக க்ளோஸப் வருகிறது.அப்படியே புல் தரையில் படுத்து விலகி நெருங்கி என வித்தைகள் காட்டி விழியோடு விழி சேர
உனக்கென பிறந்தேன்
உலகத்தை மறந்தேன்
உறவினில் கலந்தேன்
அதே அழகான சந்தங்கள்.இயற்கையோடு இணைந்த ஜோடி இதயத்தைப் பகிர்கிறது.இயல்பாக நகரும் மெட்டிற்காக எம்.ஜி.ஆரும் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல்.ஆரத் தழுவும் வேலையின்றி அவரவர் பங்களிப்பைத் தர இடையிசையில் தேவதைகளின் குரல் மட்டும் கோரஸாக ஒலிக்கிறது.எக்ஸ்ட்ராக்கள் இல்லாத கோரஸ் பாடலுக்கு மேலும் அழகூட்டுகிறது.வெஸ்டர்ன் ஸ்டைலில் ஒரு ஒபேரா கேட்ட ஃபீலிங்.வாலியின் கடைசி சரணத்திலும் அதே கோரஸ்.ஐயா டி.எம்.எஸ்.குரலில் அருமையான சரணம்.ஊட்டியின் பொட்டானிக்கல் கார்டனின் வண்ணப் பூக்களுக்கு மத்தியில் மலர்ந்து நிற்கும் இரு மலர்களாக இந்த ஜோடி.நெருக்கத்தில் வந்து அப்படியே லாங் ஷாட் போகும் கேமிரா.மெல்லிய ஆட்டத்தோடு நடை பழகும் மக்கள் திலகம்.ஐயாவின் குரலில்
பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன்
தனிமையைச் சொன்னேன்
தழுவிடக் குளிர்ந்தேன்.
எந்த இசையரசி ஆரம்பித்து வைத்தாரோ அவரே முடிக்கும் அருமையான சரணம்.அந்தக் குரலில் அவர் காட்டிய எக்ஸ்ப்ரஷன் அருமையாக வந்திருக்கும்.பாடல் முடிவில் எங்கோ ஒரு பக்ஙத்திலிருந்து ஒலிக்கும் அந்த கோரஸ் நம்மை என்னவோ செய்யும்.மணியோசை மெல்லிசை வழங்க மெதுவாக முடியும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் ஒரு இனம் புரியாத இன்பம்...........
-
எம்.ஜி.ஆர்., நடிப்பில் வெளியான, "விக்ரமாதித்தன்" படத்தின் சண்டைக் காட்சி ஒன்று, வாஹினி ஸ்டூடியோவில் மூன்று நாட்கள் படமாக்கப்பட்டது. அப்போதெல்லாம் ஸ்டன்ட் குழுவினருக்கு, யூனியன் அமைக்கப்படாத சமயம். ஒப்பந்த அடிப்படையில், நாங்களே நேரடியாக தயாரிப்பாளர் ஊதிய தொகையை முடிவு செய்வோம். அதன்படியே, அப்படத்தின் தயாரிப்பாளரிடம் பேசினோம். படத்தின் சண்டைக் காட்சி மூன்று நாட்கள் சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.
அதன் பின் ஒரு வாரம் கழித்து நானும், படத்தில் நடித்த மற்ற ஸ்டன்ட் கலைஞர்களும் படத்தில் நடித்ததற்கான ஊதியத்தை பெற, சென்னை தேனாம்பேட்டை தற்போதைய டி.எம்.எஸ்., வளாகத்திற்கு சற்று தள்ளி அமைந்திருந்த, தயாரிப்பாளரின் இல்லத்திற்கு சென்றிருந்தோம். தயாரிப்பாளரிடம் ஊதியம் கேட்டோம்.உடனே கோபம் கொண்ட அவர், 'அடுத்த மாதம் வந்து பாருங்கள்' என்று வெறுப்புடன் கூறினார். ஸ்டன்ட் சோமுவிடம் விபரத்தை கூறியபோது, அவரோ, 'எனக்கும், 'அட்வான்ஸ்' தொகை கொடுத்ததோடு சரி... முழு தொகையும் வரவில்லை' என, தன் நிலையை கூறினார்.
பின்னர் படத்தின் இயக்குனர்களில் ஒருவரான, என்.எஸ்.ராமதாசிடம் சொன்னபோது, தன்னால் இவ்விஷயத்தில் தலையிட முடியாது என்று அவரும் ஒதுங்கினார்.எம்.ஜி.ஆரிடம் செல்லாததற்கு காரணம், எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி மறைந்து, இரண்டு மாதங்களே ஆகியிருந்தது. துக்கத்தில் இருந்த அவரிடம், எப்படி சொல்வது என்ற தயக்கம்.விபரத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., மிகவும் கோபமுற்றார்.
உடனடியாக தொலைபேசியில் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு, 'ஏன் இன்னும் தொகையை கொடுக்காமல் இருக்கிறீர்கள்?' என்று கேட்க, 'கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே... பின்னர் கொடுக்கிறேன் என்று தானே சொன்னேன்' என்று தயாரிப்பாளர் கூற, பதிலுக்கு எம்.ஜி.ஆர்., 'படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், தாமதம் செய்வது சரியில்லை. 'அவர்கள் கஷ்டப்பட்டு, தங்கள் தொழிலை செய்பவர்கள். அவர்களுக்கான ஊதியத்தை, காலநேரம் அறிந்து கொடுக்க வேண்டாமா?
'படம் வெளியானபின், பணம் கிடைப்பதில் என்ன உத்தரவாதம் உள்ளது... இன்று மாலை என் உதவியாளரை அனுப்புகிறேன்; அவரிடம், தொழிலாளர்களிடம் பேசிய ஊதியத் தொகையை கொடுத்து அனுப்புங்கள்...' என்று கோபத்துடனேயே தொலைபேசியை வைத்து விட்டார்.அதன்படி, எம்.ஜி.ஆரால் எங்களுக்கு உடனடியாக ஊதியத்தொகை கிடைத்தது.
தன் மனைவியின் துக்கம் முழுவதுமாக மாறாத நிலையிலும், எங்கள் விஷயத்தில் தாமதமின்றி, உடனடியாக செயல்பட்டு உதவி செய்தார். இந்தப் படத்தின் ஒரு சிறப்பு என்னவெனில், இந்தியா - சீனா யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, இப்படம் வெளியானது. அந்த சமயத்தில், பிரதமர் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க, யுத்த நிவாரண நிதியாக, 75 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக, எம்.ஜி.ஆர்., அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு போதிய சமயத்தில் பணம் கிடைப்பதற்கு, இப்போது அமைக்கப்பட்ட யூனியன் எல்லாம் அப்போது இல்லாத நிலையில், எங்களை போன்ற கலைஞர்களுக்கு பணத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில், ஒரு பாதுகாப்பு யூனியனாகவே இருந்து உதவினார், எம்.ஜி.ஆர்.,சினிமாவில் எம்.ஜி.ஆர்., இருந்தது வரை, சினிமா தொழிலாளர்களுக்கு அவரது காலம் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்.இது போன்ற எண்ணற்ற மனித உதவி செயல்களால் தான் காலங்களையெல்லாம் கடந்து, மக்களின் உள்ளங்களில், எம்.ஜி.ஆர்., சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.- ஆர்.கோவிந்தராஜ்
வள்ளுவரின் குறள் நெறிப்படி
எம்.ஜி.ஆரை பிடிக்காதவர்கள், யாரும் இருக்க முடியாது. அதே சமயம் எம்.ஜி.ஆருக்கு பிடிக்காத சிலர் உண்டு. அவர்கள் எம்.ஜி.ஆரிடம் பழகியபடியே, எம்.ஜி.ஆர்., மீதுள்ள பொறாமை காரணமாக, அவரைப் பற்றி மறைமுகமாக மற்றவர்களிடம் தேவையின்றி விமர்சிப்பவர்களாக இருந்திருப்பர் அல்லது எம்.ஜி.ஆருக்கு பிடிக்காத செயல்களை செய்பவர்களாக இருந்திருப்பர். எம்.ஜி.ஆருக்கு இது தெரியாது என்ற எண்ணத்தையும் கொண்டிருப்பர். விஷயத்தை நன்கு விசாரித்து அறியும் எம்.ஜி.ஆரும், எதுவும் தெரியாதது போல் இருந்து விடுவார்.அப்படியானவர்களை நிகழ்ச்சிகளில் எதிரெதிரே பார்க்க நேர்ந்தால், எம்.ஜி.ஆர்., அவரைத் தவிர்க்க, தன் கண்ணெதிரே தென்படும், தனக்குத் தெரியாத நபரிடம், நலம் விசாரிப்பது போல பேசி, நகர்வார். நலம் விசாரிக்கப்பட்டவருக்கு ஒன்றுமே புரியாது.
எம்.ஜி.ஆர்., நலம் விசாரித்ததில், ஆனந்தம் கொள்வார் அந்த நபர். எதிரே வரும் தனக்கு பிடிக்காதவர்களை பார்த்து முகம் சுளித்துப் பேசுவதை தவிப்பதற்காக, எம்.ஜி.ஆர்., மேற்கொள்ளும் வித்தியாசமான செயல் இது.எம்.ஜி.ஆரின் வெறுப்பிற்கு ஆளானவர், கூனிக் குறுகி போய் விடுவார். எம்.ஜி.ஆர்., தன்னை தவிர்த்து விட்ட நிலையை எண்ணி வருந்துவார். அதுவே, எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை. எம்.ஜி.ஆருக்கு தவறிழைத்த அந்த நபர் பின் தன் தவறை உணர்ந்து எம்.ஜி.ஆரிடம் வரும் பட்சத்தில் அவரது நிலையுணர்ந்து அரவணைத்துக் கொள்வார். வள்ளுவரின் குறள் படி, 'இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பதே, எம்.ஜி.ஆரின் கண்ணியமான செயலாக இருந்தது.
மற்றவர் பொறுக்க மாட்டார்
எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றிக்கு, பல்வேறு சிறப்புகளை உதாரணமாக கூற முடியும் என்றாலும், அவற்றில் மிக முக்கியமானது, மற்றவர்களின் பசி உணர்வை அவர் பொறுக்க மாட்டார் என்பது தான். எங்கு சென்றாலும் மற்றவருக்கு உணவு தேவை எனும் செய்தியை கேள்விப்பட்ட மாத்திரத்தில், உடனே அதற்கு ஏற்பாடு செய்யும் அவர், தன்னுடனேயே இருப்பவர்களின் பசியை உணர்ந்து கொள்ளாமல் இருப்பாரா என்ன! அதற்கான சம்பவம் இது.கடந்த, 1972ல் கட்சி துவங்கியபின் தமிழகம் முழுதும் மக்களை சந்தித்து கருத்து கேட்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சமயம். எம்.ஜி.ஆரின் சுற்றுப் பயணங்கள் சூறாவளியை போன்றது.
இரவு பகல் பாராது, ஓய்வைப் பற்றி கவனத்தில் கொள்ளாமல், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, மக்களை சந்தித்தார் எம்.ஜி.ஆர்., சாப்பிடுவதற்கு நேரம் நிச்சயிக்க முடியாது. மதியம் 2:00 மணிக்கு ஒரு ஊரில் உணவு சாப்பிட தீர்மானித்தால், அது சாத்தியப்படாமல், மாலை, 4:00 மணி கூட ஆகிவிடும். காரணம், வழியெங்கும் மக்கள் வெள்ளம், உணர்ச்சிப்பெருக்கு தென்படும். அவர்களைத் தாண்டிப் போக, அவர் மனம் இடம் கொடுக்காது.
இடையில் ஆங்காங்கே கொடியேற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பட்டு விடும். அதையெல்லாம் முடித்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அங்கிருந்து கடந்து செல்வார். அப்படியான சூறாவளி சுற்றுப்பயணம், ஒரு நாள் கும்பகோணத்தில், காலை, 10:00 மணியளவில் துவங்கியது.
மதிய உணவை பட்டுக்கோட்டையில் வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து புறப்படுகிறார் எம்.ஜி.ஆர்., வழக்கம் போல் மக்கள் அலை அலையாக வழியெங்கும் எம்.ஜி.ஆரை காண காத்திருந்ததால் பட்டுக்கோட்டை செல்ல மதியம், 4:00 மணி ஆகிவிட, எம்.ஜி.ஆர்., உட்பட உடனிருந்த எங்கள் அனைவருக்கும் அதிகமான பசி.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரையில் நீண்ட வரிசையாக உணவு பரிமாறி எம்.ஜி.ஆருக்கு தனியாக ஒரு தனி அறையில் ஏற்பாடு செய்ய, எம்.ஜி.ஆரோ அதை ஏற்றுக் கொள்ளாமல், தரையில் அமர்ந்தார்.அருகே மெய்க்காப்பாளர்கள் நாங்கள் அமர்ந்து விட, திடீரென சுற்றும் முற்றும் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்., யாரையோ தேடுகிறார் என்பதை அறிந்த நாங்கள், 'என்ன அண்ணே...' என்று கேட்க, 'எங்கப்பா நம்ம கதிரேசன், ஆறுமுகம்...' எனக் கேட்க, 'முகம் கழுவப் போயிருக்காங்கண்ணே...' என்றோம்.
கதிரேசன், எம்.ஜி.ஆரின் கார் ஓட்டுனர்; ஆறுமுகம், புகைப்படக்காரர். அவர்கள் வந்ததும், எம்.ஜி.ஆர்., 'எங்கேப்பா போனீங்க... பசிக்கலியா... பந்திக்கு முந்திக்க வேண்டாமா... ஊர்க்காரங்க எல்லாரும் உட்கார்ந்துட்டாங்களே...' எனச் சொல்லியபடி, 'டக்'கென எழுந்து விட்டார்.
'நீங்களெல்லாம் சாப்பிடுங்க. நான் அப்புறம், என் கூட வந்தவங்களோடு சேர்ந்து சாப்பிடுகிறேன்' என்று கூறி நகரத் துவங்கினார். அந்த இடமே பரபரப்பானது; பலரும் சங்கடத்தில் நெளிந்தனர்.
சிலர் தங்கள் இலையிலிருந்து எழுந்து, எம்.ஜி.ஆர்., உட்பட மூவருக்கும் இடம் கொடுத்து அமரச் சொல்லி வற்புறுத்திய பின், திருப்தியுடன் அமர்ந்தார் எம்.ஜி.ஆர்., யாராவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், எம்.ஜி.ஆர்., அங்கு வந்தால், சாப்பிடுபவர் எழுந்து நிற்பதை அவர் விரும்ப மாட்டார்.'நாம் எந்நேரமும் உழைப்பது, இந்த உணவிற்காக தான். அத்தகைய உணவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும். எனக்கு மரியாதை வேண்டாம். சாப்பிடும் போது, யாருக்காகவும் இடையில் நிறுத்தக் கூடாது' என்று அறிவுரை வழங்குவார்.இது போன்ற இன்னும் எத்தனையோ சிறந்த குணங்களால் மட்டுமே, எம்.ஜி.ஆர்., இன்றளவிலும் மக்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்து வாழ்ந்து வருகிறார்!
வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்! :பணியாளர்கள் வீடு தேடி வந்த வண்ண 'டிவி'
எம்.ஜி.ஆர்., மறைந்து, 33 ஆண்டுகளான பிறகும், அவரை முன்னிறுத்தி தான் இன்றும் அரசியல் நகர்கிறது. மக்கள் மனதில், அவர் இன்னமும் வாழ்கிறார். எம்.ஜி.ஆரால் பலன் பெற்ற பல்லாயிரம் பேரும், இன்னும் அவர் புகழ்பாடுகின்றனர். அவர்களில் ஒருவர், பழநியாண்டவர்.தேனி மாவட்டம், சின்னமனுாரில், அந்நாளில் பிரபல புகைப் படக்கலைஞரும், தந்தையுமான பவுனுடன் ஸ்டூடியோ நடத்திக் கொண்டு இருந்தார், பழநியாண்டவர்.
கடந்த, 1986ல், ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி.,யாக இருந்த கம்பம் ஆர்.டி.கோபால் இல்ல திருமணத்தில், புகைப்படம் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, எம்.ஜி.ஆரிடம் அறிமுகமானவர்.திருமணத்தை நடத்தி வைத்த, எம்.ஜி.ஆர்., தன்னையும் அழைத்து, தன்னுடன் படம் எடுத்துக் கொண்டது தான், தன் வாழ்நாளின் உச்சக்கட்ட மகிழ்ச்சி என்றார், பழநியாண்டவர்.அவர் நினைவுகூர்ந்ததாவது: நான் எம்.ஜி.ஆரின் ரசிகன் மட்டுமில்லை; பரம பக்தன். எம்.ஜி.ஆரை படம் எடுக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தவனை, என்னை அழைத்து, படம் எடுத்துக் கொண்டது பெரும் பாக்கியம்.
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அவர் வாழ்ந்த, சென்னை, ராமாபுரம் தோட்டத்தில், அவர் மனைவி ஜானகியின், தனி வீடியோகிராபராக பணிபுரிந்தேன்.எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து ஆசைப்பட்டு வாங்கி வந்த, 'என்3' வீடியோ கேமராவை, நான் தான் உபயோகித்தேன்.எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையும், கொடை குணமும் மக்களுக்கு மட்டுமல்ல; வீட்டு பணியாளர்களுக்கும் தாராளமாக கிடைத்தன. அதை சொல்லி சொல்லி, அவர்கள் மகிழ்வது வழக்கம்.ஒரு முறை, 'டிவி'யில், எம்.ஜி.ஆர்., நடித்த, நம்நாடு படம் ஒளிபரப்பாக இருந்தது. வீட்டில் வேலை பார்த்தவர்கள், வேலை நேரம் முடிந்தும், வீட்டிற்கு போகவில்லை. வீட்டில் 'டிவி' இல்லாததால், எம்.ஜி.ஆர்., அவர்களை படம் பார்க்கச் சொல்லிவிட்டு, படத்துக்கு நடுவே ருசிக்க, பலகாரம், டீயும் ஏற்பாடு செய்தார். படம் முடிந்த பின், சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டது. பணியாளர்கள் யார் வீட்டில் எல்லாம், 'டிவி' இல்லை என கணக்கெடுத்தார். அத்தனை பேர் வீட்டிலும், 'டிவி' பொருத்த, 'ஆர்டர்' கொடுத்தார்.
எல்லார் வீட்டிலும், 'ஒனிடா' என்ற நிறுவனத்தின் வர்ண 'டிவி' பொருத்தப்பட்டது.அன்றைய தினத்தில், நடுத்தர வர்க்கத்தினருக்கு கூட, அப்படிப்பட்ட வண்ண 'டிவி' வாங்குவது, ஒரு கனவாகவே இருந்தது.வீட்டில், 'டிவி' பொருத்தப்பட்ட போது தான், அது எம்.ஜி.ஆர்., சொல்லி வந்தது என்பது, பணியாளர்களுக்கு தெரியவந்தது. இது போல, எத்தனையோ சம்பவங்களை சொல்வர்.ராமாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது பரிசுப்பொருட்களை, தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்திற்கு மாற்றிய பின், ராமாவரம் வீட்டில் வேலை இல்லை. வெளியில் வேலை பார்க்கவும் விருப்பம் இல்லை.
நான் தலைவரது நினைவு இல்லத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு, புகைப்படம் எடுத்துக் கொடுத்து, அதில் வரும் வருமானத்தில் வாழ்கிறேன். இன்றைக்கும், என் குடும்பத்திற்கு, அவர் தான் சோறு போட்டுக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு, பழநியாண்டவர் கூறிய போது, அவர் நா தழுதழுத்தது.
அ.தி.மு.க., உருவாக என்ன காரணம்?
எம்.ஜி.ஆரின் நினைவகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார், நிழல் போல உதவியாளராக வலம் வந்த கே.மகாலிங்கம்.இது குறித்து அவர் கூறியதாவது:குடும்பத் தலைவரை இழந்து, நிர்க்கதியாய் நின்ற, நடிகர் குண்டு கருப்பையா குடும்பத்திற்கு ஆறுதலாக இருப்பதற்காக, அவரின் மகனான, என்னை தனி உதவியாளராக அமர்த்தினார் எம்.ஜி.ஆர்., எனக்கு மட்டுமல்ல, என் உடன்பிறந்த சகோதர - சகோதரியர் அனைவருக்கும், அவர் தான், தந்தை போல இருந்து, திருமணத்தை நடத்தி வைத்தார்.மனதிற்கு பிடித்தவர்களுக்கு, 200நுாறு ரூபாய் நோட்டுகளை வழங்குவது, அவரது வழக்கம். முதல் முதலாக அவரை சந்தித்த போது, எனக்கும் 200 ரூபாய் வழங்கினார். உதவி கேட்டு வந்தவர்களுக்கு, 200 ரூபாய்களாக, அள்ளி அள்ளி கொடுப்பார்.
தோட்டத்தில், எப்போதும் சாப்பாடு தயாராகியபடி இருக்கும். யார் வந்தாலும், முதலில் சாப்பிட்டுவிட்டு தான் பேசச் சொல்வார்.
தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்டபோது, அவர் 'சத்யா ஸ்டூடியோ'வில் படப்பிடிப்பில் இருந்தார். அவரின் கருத்தறிய, ராமாபுரம் தோட்டத்தில் குவிந்தனர், பத்திரிகையாளர்கள். படப்பிடிப்பில் இடைவெளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த எம்.ஜி.ஆருக்கு போன் செய்து, விஷயத்தைச் சொன்னேன். குழப்பத்தில் நான், 'பத்திரிகையாளர்களிடம் என்ன சொல்ல' என, கேட்டேன். அவர் சொன்ன பதில், ''நான் பாயசம் சாப்பிட்டுக் கொண்டு
இருக்கிறேன்!'' வீடு திரும்பிய எம்.ஜி.ஆர்., அமைதியாக இருந்தார். நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.எஸ்., போன்றவர்கள், எம்.ஜி.ஆரை மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்கும் பேச்சில் இறங்கினர். ஆனால், வீட்டு வாசலில் திரண்டு ரசிகர்கள் நின்று, கண்ணீர் விட்டு அழுதனர்; கதறினர். தி.மு.க.,வினரால் தாக்கப்பட்ட முசிறிபுத்தன் போன்றவர்கள், ரத்தம் வழிய, எம்.ஜி.ஆரை பார்க்க வந்தனர்.
ரசிகர்களின் கண்ணீரில் நெகிழ்ந்து போய் இருந்த எம்.ஜி.ஆர்., அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் வெகுண்டு எழுந்தார். இது, அவரை உறுதியான முடிவுக்கு அழைத்துச் சென்றது. 'இனி, எந்த சமாதானத்தையும் ஏற்பதாக இல்லை' என்று சொன்னவர், அ.தி.மு.க.,வை
துவக்கினார்.அவரது எண்ணம், கொள்கை, லட்சியம் மூலை முடுக்கெல்லாம் பரவியது. இதில், 'தினமலர்' நாளிதழும் முக்கிய பங்காற்றியது. 'தினமலர்' தனக்கு பெரும் பலமாகவும் உறுதுணையாகவும் இருந்ததாக, எம்.ஜி.ஆர்., கருதினார். எம்.ஜி.ஆர்., துவக்கிய கட்சி, அசுர வளர்ச்சி பெற்று, வெற்றிகளை குவித்தது. அவர் முதல்வரானதும், என்னை அதிகாரபூர்வமாக உதவியாளராக்கி அழகு பார்த்தார். அவர் பச்சை குத்திக் கொள்ளச் சொன்ன போது, பலரும் தயங்கினர். நான் ஒரு கையில், இரட்டை இலையையும், இன்னொரு கையில் எம்.ஜி.ஆர்., படத்தையும் பச்சை குத்திக்கொண்டேன்.
இதை எல்லாம் மனதில் வைத்து தான், 'கட்சியை நடத்திச் செல்வதில், மகாலிங்கத்திற்கு பெரும் பங்கு உண்டு' என்று பொது வெளியில் என்னை பாராட்டினார்.அவர் இறக்கும் வரை, அவரது உதவியாளராகவே இருந்தேன். அது எனக்கு மட்டுமல்ல; என் குடும்பத்துக்கே பாக்கியம். அதன் பின், அவரது நினைவுகளோடு இன்று வரை வாழ்ந்து வருகிறேன்.
குண்டு கருப்பையா குடும்பம்
எம்.ஜி.ஆரின் படங்களில், நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர், குண்டு கருப்பையா. அவர் மறைந்த போது, அவர் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்திக் கொடுத்தவர்.குண்டு கருப்பையாவின் மகன், கே.மகாலிங்கத்தையும் எம்.ஜி.ஆர்., அரவணைத்துக் கொண்டார்.
நாடு போற்றும் நடிகராக இருந்த காலத்தில் இருந்து, 1987ம் ஆண்டு, அவர் உலகம் போற்றும் முதல்வராக இருந்து மறைந்தது வரை, எம்.ஜி.ஆர்., நிழல் போல தனி உதவியாளராக, கூடவே இருந்தார் கே.மகாலிங்கம். தற்போது, சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தில் குடியிருக்கிறார்.
எப்போதும் பிரகாசிக்கும் நட்சத்திரம் எம்.ஜி.ஆர்.,
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கான பரிந்துரை பட்டியலில், 'கவிஞர் மு.மேத்தாவுக்கு இந்த விருதை வழங்கவும்' என, தன் கையால் எழுதியிருந்தார். இதை, இன்றும் நினைவுகூர்கிறார், 'சாகித்ய அகாடமி' விருது வென்ற, மு.மேத்தா.
எம்.ஜி.ஆர்., குறித்து, அவர் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., என்ற பெயருக்கு, இப்போதும் இருக்கிற மந்திர சக்தியை கொடுத்தவரே, எம்.ஜி.ஆர்., தான். ஏராளமானோர் மக்களால் புகழப்பட்டாலும், குறிப்பிட்ட காலத்துக்கு பின், அந்த பெயரும், புகழும் மறக்கப்படும்.
எம்.ஜி.ஆர்., நல்ல நடிகர் என்பதைத் தாண்டி, முழுமையான மதிக்கத்தக்க மாண்புமிகு மனிதர்.எம்.ஜி.ஆரின் இரக்க குணம், ஈகை குணம், வாழ்த்துகிற குணம், அவரை எல்லார் மனதிலும் நிலைநிறுத்தியுள்ளது. தன்னைப் போல் மற்றவர்களையும் மதித்து, தன்னைப் போல் பிறரும் நன்றாக வாழ வேண்டும் என்ற குணம், அவரிடம் இருந்தது.எந்த துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அன்புடன் அரவணைத்தார்.கஷ்டப்பட்டு வாழ்க்கையில் உயர்ந்தவர்களை மதித்தார்.மாற்றுக் கட்சியில் இருந்தாலும், உண்மையான கலைஞர்கள், எழுத்தாளர்கள் மீது, எம்.ஜி.ஆருக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு.
நடிகராக இருந்தபோதும், தலைவராக இருந்தபோதும், முதல்வராக இருந்தபோதும், அவரது நடவடிக்கைகள், மக்கள் நலம் சார்ந்தவையாக, மக்களுக்காக சிந்திப்பவையாக இருந்தன.நடிகர் சிவாஜி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், எம்.ஜி.ஆரின் சினிமாவில், அவரையே அவரின் ரசிகர்கள் நேரில் பார்ப்பதாக உணர்ந்தனர். மக்களை காப்பாற்றுபவராக சினிமாவில் வந்தார். மக்களைக் காப்பவராகவும் வாழ்ந்து காட்டினார்.
எதிரிகள் கூட, இவரை நேரில் ஒருமுறை சந்தித்தால் நண்பர்களாவர். இது தான், அவரது செல்வாக்குக்கு காரணம்.வர்த்தகமான சினிமாவில், நிறைய பேர் தங்களின் வளர்ச்சியை மட்டும் கவனிப்பார்களே தவிர, மற்றவர்களின் நலத்தைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். ஆனால், எம்.ஜி.ஆர்., மற்றவர்களின் நலத்தையும் பார்த்தார். அது அவருக்கு பெரிய பலத்தைக் கொடுத்தது. அவரது கோபம் கூட ஒரு தீபம் தான். அது அழுக்குகளையும், இருட்டையும் அகற்றும்.மக்கள் வெள்ளம் ஒருவரைச் சந்திக்க எதையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தது என்றால், அது எம்.ஜி.ஆரை சந்திக்கத் தான். எம்.ஜி.ஆரின் உயர்வு, அவரது உருவத்தால் ஏற்பட்டதல்ல; பரந்த அவரது உள்ளத்தால் ஏற்பட்டது. எளியவர்களுக்கு உதவும் பண்பு, இயற்கையிலேயே அவருக்கு இருந்தது. எளிய மக்களின் வாழ்க்கை கஷ்டங்களை புரிந்து, அதைப் போக்கும் மருத்துவராக எம்.ஜி.ஆர்., வாழ்ந்தார். அதனால் தான், அவர் எப்போதும் பிரகாசிக்கும் நட்சத்திரமாக திகழ்கிறார்.இவ்வாறு, மு.மேத்தா கூறினார்..........Baabaa
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி .........05/03/21முதல்*----------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை பாடி லட்சுமி பாலா -*
மதுரை - சக்தி சினிமாஸ்*
திண்டுக்கல் விஜய்* அரங்குகளில்*
நம் நாடு தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது*
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பி.என்.எஸ். அரங்கில்*
அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
காஞ்சிபுரம் பாலசுப்ரமணியாவில்* நினைத்ததை முடிப்பவன்*
தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
-
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை
காலை வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைக்காவியங்களை பற்றிய இந்த தொடரில் தலைவர் நடித்த திரை படங்களை பற்றிய தகவல்களை இங்கே பதிவிட்டு வருகின்றேன்..
இரண்டு நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் போனதால் தொடரை தொடர முடியாமல் போனது மன்னிக்கவும்.. வாருங்கள் இன்றைய பதிவில் புரட்சி தலைவரின் 38 வது
படமான "#ராஜராஜன்" திரைப்படம் பற்றி தெரிந்து கொள்ளலாம்...
ராஜா ராஜன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம், எம். ஜி. ராமச்சந்திரன், பி.எஸ்.வீரப்பா,
எம். என். நம்பியார், பத்மினி, லலிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 26 ஏப்ரல் 1957 இல் வெளியிடப்பட்டது... பாடல்களுடன் இது ஒரு நல்ல பொழுதுபோக்கு என்றாலும், படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படவில்லை, 50 நாட்களுக்கு மேல் ஓடியது.
(இது ராஜா தியேட்டர் வேலூரிலும் திரையிடப்பட்டது).
வனங்கமுடி, மாயா பஜார் மற்றும்
ராஜா ராஜன் ஆகிய மூன்று படங்களும் ஒரே நேரத்தில் வந்தது...
இது நல்ல பொழுதுபோக்கு படம் இந்த படத்தில் இங்கோவனின் சிறந்த வசனங்கள் உள்ளன. வசனங்களை இப்போது கூட ரசிக்க முடியும்.
பி.எஸ்.வீரப்பா விடம் ராணி உனக்கு இரக்கமே இல்லையா என்று கேட்பார்கள் அதற்கு பி.எஸ்.வீரப்பா சொல்வார்
இரக்கம் மட்டுமல்ல நான் இதயமே இல்லாதவன் என்று..
தளபதி நாகவேலன் (பி.எஸ். வீரப்பா) சோழ மன்னராக இருப்பதற்காக இளவரசர் ராஜராஜன் (எம்.ஜி.ஆர்) கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ராஜராஜன் ஒரு வேட்டை பயணத்திற்கு சென்று இருக்கும்போது, நாகேவேலன் சோழ மக்களுக்கு இளவரசன் மீது ஒரு தவறான செய்தியை பரப்ப திட்டமிடுகிறார், மக்கள் மத்தியில் இளவரசன் ஒரு பெண் பித்தன் மற்றும் குடிகாரன் என்று கதை கட்டி விட்டு நாட்டு மக்களின் பார்வையில் தவறாக சித்தரிக்க படுகின்றார்...
ராஜராஜன் காட்டில் இறந்துவிட்டார் என்று மக்களை நம்ப வைக்கின்றார் உண்மையில், ராஜராஜன் சிறைபிடிக்கப்பட்டார், நாகவேலனால் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டார். தனது சகோதரனின் செயல்களை எதிர்க்கும் நாகவேலனின் தங்கை பிரியாமோகினி (லலிதா) காயமடைந்த ராஜராஜனை தப்பிக்க வைக்க உதவுகிறார். நாகவேலனின் உதவியாளராக இருக்கும் உதயச்சந்திரன் (எம். என். நம்பியார்) பிரியாமோகினியைக் காதலிக்கிறார், ஆனால் பிரியமோகினி அவர் நாகவேலனுக்காக பணிபுரிவது மட்டுமல்லாமல், ராஜராஜனையும் ஒரு தலையாக காதலிக்கிறார் என்பதால் உதயச்சந்திரன் காதலை நிராகரிக்கிறார்.
ராஜராஜன் தனது ஆசிரியர் உத்சேலன் கவிராயர் (எம்.ஜி.சக்ரபாணி) இடத்தின் கீழ் தஞ்சம் அடைகிறார். ராஜராஜனின் தந்தையின் நெருங்கிய அரசராக இருக்கும் நங்கூரின் மன்னர் கீர்த்திவர்மனை சந்திக்கவும், வேட்டைக்காரரின் பழங்குடி மன்னர் வெங்கடேவனிடம் உதவி பெறவும் ராஜராஜனுக்கு அறிவுறுத்துகிறார்கள்...
ராஜராஜனின் மோசமானவன் என்றும் அவரின் செயல்களைப் பற்றி நாகவேலன் கிங் கீர்த்திவர்மன் (ஆர்.பாலசுப்பிரமணியம்) மற்றும் ராணி சென்பகவல்லி (எஸ். டி. சுப்புலட்சுமி) ஆகியோருக்கு ராஜராஜனின் ஆட்சியைக் கைப்பற்றுமாறு ஒரு செய்தியை அவரிடம் சொல்கிறார்.. நாகவேலனின் உண்மையான திட்டம் சோழ ராஜாவாக இருந்து மன்னர் கீர்த்திவர்மன் மற்றும் ராணி சென்பகவல்லியின் ஒரே மகள் இளவரசி ராமாவை (பத்மினி) திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான். சோழ நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை களைந்து நாட்டில் வாழும் மக்கள் குறை தீர்க்கும் என்னத்துடன் மன்னர் கீர்த்திவர்மன் ராஜராஜனின் நாட்டிற்கு புறப்படுகிறார்.
ராஜரஜன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த ராணி சென்பகம் மற்றும் இளவரசி ராமரை நாகவேலனின் குண்டர்களிடமிருந்து காப்பாற்றுகிறார், ஆனால் அவரது அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் செல்லும் வழியில், தீர்ந்துபோன ராஜராஜனை (ஜி. சகுந்தலா) மன்னர் வெங்கடேவனின் மகள் கண்டுபிடித்து, தலைமை (எஸ் எம் திருப்பதிசாமி) க்கு தெரிவிக்கிறார். உத்சேலனின் உதவியாளராக இருக்கும் சற்குனம் (நண்பர் ராமசாமி) உதவி வழங்க அங்கு வருகிறார்.
தெரு நாடகங்கள் மற்றும் மேடை நாடகங்கள் மூலம் ராஜராஜன் பற்றிய உண்மையான சூழ்நிலையை மறைமுகமாக மக்களுக்குக் எடுத்துரைக்கும் திட்டத்தை உத்சேலன், வெங்கடேவன், சற்குணம் மற்றும் ராஜராஜன் ஆகியோர் மக்கள் முன்வைக்கின்றனர்.
நாகவேலன் இதைக் கண்டுபிடித்து உத்சேலனையும் வெங்கடேவனையும் கைது செய்கிறார், தானே அரசனாக ஆக வேண்டும் என்று எண்ணிய நாகவேலனுக்கு, மன்னர் எழுதி வைத்து விட்டு சென்ற உயில் பற்றி எடுத்துரைக்கிறார், ராஜாவுக்கு வேட்பாளர் யாரும் இருக்கக்கூடாது என்று அரச சட்டம் கூறுகிறது என்பதை உத்சேலன் நினைவுபடுத்துகிறார்,
அரச யானை யாருக்கு மாலை அணிவிக்கின்றதோ அவர் தான் அடுத்த மன்னர் என்று உயிலில் உள்ள மன்னரின் செய்தியை கூறுகின்றார், பின்னர் கீர்த்திவர்மன் மன்னர் இதற்கு சம்மதித்து உடனடியாக இந்த செயல்முறையை மேற்கொண்டு நங்கூருக்கு புறப்படுகிறார்,
இதற்கிடையில் நாகவேலன் யானை யாருக்கு மாலை அணிவிக்கின்றதோ அந்த நபரை கொலை செய்ய உதயச்சந்திரனுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். .
அரச யானை ராஜராஜனை அடையாளம் கண்டு அவருக்கு மாலை அணிவிக்கிறது, ஆனால் உதயச்சந்திரன் அவரைப் பிடித்து சிறையில் அடைக்கிறார். ராஜராஜன் உயிருடன் இருப்பதை அறிந்து நாகவேலன் கோபமடைந்து ராஜராஜனை முதலை குளத்திற்கு தள்ளி விட்டுவிட்டு ராஜராஜன் இறந்துவிட்டதாக கருதுகிறார்.
ஆனால் அந்த இடத்தில் இருந்து ராஜராஜன் தப்பிக்கிறார். இதற்கிடையில், நாகவேலன் எந்த வேட்பாளரையும் அரச யானை தேர்வு செய்யவில்லை என்ற பொய்யை அறிவித்து, கீர்த்திவர்மனை மன்னாக அரியணையில் ஏற அழைக்கிறார், ஆனால் கீர்த்திவர்மன் மன்னர் நாகவேலன் ஆட்சியில் அமரும் படி கூறுகின்றார்.. ஆனால் நாகவேலன் மக்களுக்கு தன் மீது சந்தேகம் வராமல்
இருக்க எச்சரிக்கையாக திட்டமிடுகிறார்.
அதன்படி சோழ மன்னனின் நீதிமன்றத்தில் கீர்த்திவர்மனை ம ஆஜர்படுத்தி, ராஜராஜனைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டுகின்றான் நாகவேலன்... கீர்த்திவர்மன் மன்னர் தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றால், இளவரசி ராமாவைக் கொலை செய்வதாக நாகவேலன் அச்சுறுத்துகிறார், மேலும் சென்பகவல்லி மகாராணி தனது சாட்சியாக இருப்பார் அல்லது கீர்த்திவர்மன் மன்னர் கொல்லப்படுவார் என்று அச்சுறுத்துகிறார்.
நீதிமன்றம் கீர்த்திவர்மனை குற்றவாளி என்று கூறி, கீர்த்திவர்மனை சிறையில் அடைக்கவோ அல்லது தலை துண்டிக்கவோ நாகவேலனுக்கு உரிமை உண்டு என்று தெரிவிக்கிறது. நாகவேலன் மன்னர் கீர்த்திவர்மனைச் சந்தித்து, இளவரசி ரமா நாகவேலனை மணந்தால் அவரை விடுவிப்பதாக உறுதியளிக்கிறார், அதில் மன்னர் கீர்த்திவர்மன் மறுத்துவிடுகின்றார். இதனால் கோபம் கொண்ட நாகவேலன்
மன்னன் கீர்த்திவர்மனை கொன்றுவிட ஆணை பிறப்பிக்கின்றான்
ராஜராஜன் மன்னர் கீர்த்திவர்மனை காப்பாற்றுகிறார்.
நல்லவர்களுக்காக துணை நிற்க பிரியமோகினியின் அழுத்தத்தின் பேரில், நாகவேலன் உத்தரவிட்டபோது உத்சேலனை கொலை செய்ய உதயச்சந்திரன் மறுக்கிறார். ராஜராஜனுக்கு உதவுவதற்காக பிரியாமோகினி உதயச்சந்திரனை பணிக்கின்றார் , இருவரும் நல்ல நண்பர்களாக மாறினர். உதயச்சந்திரன் தனது அன்பை பிரியாமோகினியிடம் வெளிப்படுத்துகிறார், ஆனால் அவர் இளவரன் ரமா வை நேசித்தாலும் ராஜராஜனைக் காதலிப்பதால் அவர் உதயசந்திரன் காதலை ஏற்கவில்லை.
இதற்கிடையில், வெங்கத்தேவன் மற்றும் கீர்த்திவர்மன் மன்னர் நங்கூரின் வீரர்கள் சோழ நாட்டிற்கு வருகிறார்கள். நாகவேலன் தப்பிக்க முயன்றாலும் ராஜராஜனால் கொல்லப்படுகிறான். ராஜராஜன் இளவரசி ராமாவை மணந்து சோழ நாட்டின் ராஜாவாகின்றார்
இளவரசர் ராஜராஜனாக
எம்.ஜி.ஆர்
ஜெனரல் நாகவேலனாக பி.எஸ்.வீரப்பா
உதயச்சந்திரனாக எம். என். நம்பியார்
உத்சேலன் கவிராயராக
எம். ஜி. சக்ரபாணி
கீர்த்திவர்மன் மன்னராக ஆர்.பாலசுப்பிரமணியம்
சற்குணமாக நண்பர் ராமசாமி
டி.என்.சிவதனு
சி.வி.பந்துலு
என்.எம்.முத்துக்கூத்தன்
ஆர்.எம்.சோமசுந்தரம்
ஜோஷ் பிரகாஷ்
இளவரசி ராமராக பத்மினி
பிரியமோகினியாக லலிதா
ராணி சென்பகவள்ளியாக
எஸ். டி. சுப்புலட்சுமி
ஜி.சகுந்தலா
எஸ்.வி.வசந்தா
லட்சுமி
மற்றும் பலர்...
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு......skt...
-
"நாளை நமதே"! இந்த நாளும் நமதே!
புரட்சி தலைவரின் தாரக மந்திரமான "நாளை நமதே"! யை ஓங்கி ஒலிக்க செய்தது இந்தப் படத்தின் மூலமாகத்தான். படத்தின் பெயர் அனைவரையும் கவர்ந்து இழுத்து படத்தின் வெற்றிக்கு முன்கூட்டியே கட்டியம் கூறியது. புரட்சி நடிகரின் 125 படமாக வெளிவந்து வெற்றி வாகை சூடிய படம். 1975 ஜீலை 4 ல் வெளியாகி மிகக் குறுகிய காலத்தில் வெளியான "இதயக்கனி" யையும் தாண்டி ஓடி வெற்றி பெற்றாலும் 100 நாட்கள் ஓடும் வாய்ப்பு கைநழுவி போனது.
அதற்கு பிராயசித்தமாக இலங்கையில் 100 நாட்களை தாண்டி ஓடி மகத்தான வெற்றி பெற்றது. முதல் பாதியில் உள்ள காட்சிகளை சற்று ட்ரிம் செய்து வேண்டாத காட்சியை வெட்டினால் போதும் படம் இதைவிட பெரிய வெற்றி பெற்றிருக்கும். இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற "யாதோன் கி பாரத்" தின் தழுவலாக இருந்தாலும் தலைவருக்கு ஏற்றபடி மாற்றி எடுத்த படம். பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. காதல் பாடல்கள் சற்று அதிகம் ஆனாலும் ரசிக்கும்படி இருக்கும். படத்தில் ரிச்னஸ் சற்று அதிகமாகவே இருக்கும்.
"தர்மத்தின் வெற்றிதனை சூது கவ்வும், முடிவில் தர்மம் வெல்லும்" என்ற கூற்றுப்படி அநியாயம் அக்கிரமம் செய்த வில்லனின் கெட்ட எண்ணத்தை அழித்தால் போதும் ஆளை அழிக்கும் எண்ணம் வேண்டாம் என்று எதிரிக்கு கூட கருணை காட்டும் தாயுள்ளம் கொண்ட தலைவர் எங்கே? அன்னை தந்த பால் கூட விஷமும் ஆகலாம் என்று தாயை கூட சந்தேகப்படும் தரங்கெட்ட கூட்டம் எங்கே?. அருமையான படிப்பினையை மக்களுக்கு ஊட்டி "நாளை நமதே" என ஒவ்வொரு மக்களுக்கும் எழுச்சியை ஊட்டினார் புரட்சி தலைவர்.
இனி "நாளை நமதே" படத்தின் சாதனையை பார்க்கலாம். சென்னையில் ஓடியன், பாண்டியன், முரளிகிருஷ்ணா, ராஜகுமாரி ஆகிய திரையரங்குகளில் வெளியாகி ஓடியன், பாண்டியனில் 63 நாட்களும்,
முரளிகிருஷ்ணாவில் 50 நாட்களும்
ராஜகுமாரியில் 42 நாட்களும் ஓடி
மொத்தம் 218 நாட்களில் வசூலாக ரூ 882734.79 பெற்று வெற்றி பெற்றது. 50 நாட்களுக்கு முன்பே "இதயக்கனி" என்ற மாபெரும் வெற்றிப் படம் வெளியானதால் 100 நாட்கள் காண இயலவில்லை.
ஆனால் இலங்கையில் யாழ்ப்பாணம் ராணியில் 102 நாட்களும் தெமட்டகொட சமந்தாவில் 132 நாட்களும் ஓடி வசூலில் அய்யனின் படங்களை அலற விட்டது. முதல் நாளில் 7 காட்சிகள் திரையிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 40 திரையரங்குகளில்
வெளியாகி 16 திரையரங்குகளில் 50
நாட்களை கடந்தும் முதல் வெளியீட்டில் தமிழகத்தில் மட்டும் சுமார் 55 லட்சத்துக்கும் அதிகமாகவும் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் 8 திரையரங்குகளில் திரையிடப்பட்டு இணைந்த 25 வாரம் கொண்டாடியது. நெல்லையில் புதிய திரையரங்கமான சிவசக்தியில் வெளியாகி 62 நாட்கள் ஓடி வசூலாக ரூ 146305.75. பெற்று அய்யனின் பெரும்பாலான படங்களை வென்று
தனித்தன்மை காட்டியது..........ksr.........
-
*"MGR"* _தமிழகத்திற்கு என்ன செய்தார்?_
_ஏன்? எல்லோரும் *M.G.R* ஆட்சி தருவதாகக் கூறுகின்றனர்!_
*மேட்டூர் அனல் மின் நிலையம்*
*தூத்துக்குடி அனல் மின் நிலையம்*
*பவாணி கட்டளை நீர் மின் நிலையம்*
*கீழ் மேட்டூர் நீர் மின் நிலையம்*
*சேர்வலாறு நீர் மின் நிலையம்*
*சுருளியாறு நீர் மின் நிலையம்*
*Tamil Nadu Cement Corporation Limited (TANCEM)* (Tamil: தமிழ் நாடு சீமைக்காரை கழகம்)
*The Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL)*
தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் (TNPL)
*Tamil Nadu Minerals Limited (TAMIN)* (Tamil: தமிழ் நாடு கனிம நிறுவனம் (டாமின்))
*Tamil Nadu Industrial Explosives Limited (TEL)* தமிழ்நாடு தொழில்துறை வெடிபொருட்கள் நிறுவனம்(டெல்)
*Tamil Nadu Medicinal Plant Farms and Herbal Medicine Corporation Limited (TAMPCOL)*
தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் & மூலிகை மருத்துவம் கழகம்(டாம்ப்கால்)
*Chennai Metropolitan Water Supply and Sewerage Board(CMWSSB)*
சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்
*TAMILNADU POLLUTION CONTROL BOARD(TNPCB)*
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம்
*Tamilnadu Magnesite Limited(TANMAG)*
தமிழ்நாடு கனிமவள நிறுவனம்(டான்மாக்)
*Tamilnadu Co-operative Milk Producers' Federation Limited (TCMPF Ltd.,)*
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்
*AAVIN-ஆவின்*
*தெலுங்கு கங்கை திட்டம் கிருஷ்னா நதி நீர்*
_இன்னும் விடுபட்டது நிறைய.................SKR
-
ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வள்ளல், நடுநிசி பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார்.
கண்விழித்தவாறே வள்ளல் வந்து கொண்டிருந்த பொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார். வள்ளலின் கார் அவரைக் கடந்து செல்கிற போது, வள்ளலின் நெஞ்சில் பொறி தட்டுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த அர்த்த ராத்திரியில், அந்தப் போலீஸ்காரர் பஸ்ஸூக்காக காத்து நிற்கிறார்; என்பதை புரிந்து கொள்கிறார்.
உடனே கார் டிரைவரிடம் காரை நிறுத்தச்சொல்கிறார். கார் பின்னோக்கி வருகிறது. போலீஸ்காரர் அருகில் காரை நிறுத்தி கதவைத் திறந்து “ஏறுங்கள், எங்கே போக வேண்டும்” என்கிறார்.
“பரவாயில்லை. நான் பஸ்ஸிலேயே வந்து விடுகிறேன்” என்கிறார் அந்தப் போலீஸ்காரர்.
நேரம் ஆகிவிட்டது. இனி இந்த ரூட்டில் பஸ் கிடையாது. ஏறிக்கொள்ளுங்கள்” என்று வள்ளல் வலுக்கட்டாயம் செய்ய, போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.!
லைட்டைப் போட்டு, “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, சீட்டுக்கு பின்னால் இருந்த பிஸ்கட், பழங்களை எடுத்துக் கொடுக்கிறார்.
“இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன் பாடில்லை. இன்னும் நீங்கள் உண்ணச் சொல்லி வேறு என்னை இழிவு படுத்தாதீர்கள்” என்று போலீஸ்காரர் மறுக்கிறார். பொன்மனச் செம்மல் பூரிக்கிறார். இருப்பவனில் இருந்து, இல்லாதவன் வரை படித்து பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று நம் வள்ளலிடம், வேண்டியதை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சாதாரண பொறுப்பில் இருக்கும் இந்தப் போலீஸ்காரனின் நேர்மை, செம்மலை சிலிரக்க வைத்து விட்டது.!
வள்ளலின் கார் காத தூரத்தில் வந்து கொண்டிருந்தாலும், காரின் நிறத்தையும், ஒலியையும் மணம் கமழும் ஓடிகான் வாசனையையும், வைத்து, இது வள்ளலின் கார் என்றும், கார் சென்ற தடத்தை தொட்டு வணங்குகிற அளவுக்கு, புகழுடன் திகழ்ந்த நேரம் அது!
அரைமணி நேரம் கார் சென்று கொண்டிருக்கிறது! ஆனால், அது வரை வள்ளலைப் பற்றிப் பெரிதாகப் போற்றிப் புகழ்ந்து பேசாமல் அந்த போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே, புரட்சித்தலைவருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதையைக் கூடுதலாக்கியது.
“நான் தான் எம்.ஜி.ஆர்”
“கேள்விப்பட்டிருக்கிறேன்”
பொன்மனச் செம்மலின் முகத்தில் கோபம் இல்லை, பதிலுக்கு புன்முறுவல் மலர்கிறது.
“என் படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா?”
“நான் சினிமாவே பார்ப்பதில்லை. “புரட்சித்தலைர் இன்னும் பிரம்மிக்கிறார். இப்பொழுது கார் சத்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்.
போலீஸ்காரர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச்சொல்லி, “இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்”என்கிறார்.
“ஏன் நீங்கள் குறிப்பிட்ட அந்த விலாசம் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதே”
“சாதாரண போலீஸ் உத்தியோகத்தில் இருக்கும் நான் காரில் வந்து இறங்கினால்: என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதுவரை இப்படி நான் யார் காரிலும் ஓசியில் வந்த பழக்கமில்லை. “நீங்கள் இவ்வளவு தூரம் செய்த உபகாரத்திற்கு நன்றி.
வள்ளல் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. ‘அவர் எந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புகிறார்.
அடுத்த நாள் செங்கல் பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து” நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்” என்கிறார் வள்ளல்.
இரவு சந்தித்த போலீஸ்காரரைப் பற்றி விசாரிக்கிறார்.
டி.எஸ்.பி. சொல்கிறார், “நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்காதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே இலக்கணம். வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்தோ, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர்! கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களையும், கரை சேர்க்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்கிற விபரங்கள் டி.எஸ்.பியால் சொல்லப்படுகிறது.
கேட்டுக்கொண்ட டி.எஸ்.பி, “உங்களோடு போனில் ஆளுக்கொரு வார்த்தைப் பேச ஆசைப்படுகிறார்கள். “போனை அவர்களிடம் கொடுக்கலாமா? என்கிறார். வள்ளலும் கொடுங்கள்; என்கிறார். பேசுகிறார். அந்தப் போலீஸ் ஸ்டேஷனே புண்ணியம் பெற்றதாக புளகாங்கிதம் அடைந்தனர். அந்த போலீஸ்காரர்கள்.
மறுநாள் அந்தப் போலீஸ்காரர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பேப்பரில் மடித்த பெரிய பணக்கட்டை கொடுத்து “இதை வைத்து உங்கள் பெண்களின் கல்யாணத்தை நடத்துங்கள்” என்கிறார் வள்ளல், போலீஸ்காரர் மறுக்கிறார்.
“நான் ஏதாவது உங்களிடம் காரியமாற்றச் சொல்லி அதற்காக கொடுத்தால், அது தவறு. என்னால் ஆக வேண்டியது உங்களுக்கும், உங்களால் ஆக வேண்டியது எனக்கும், ஏதும் இல்லை. நான் உங்கள், கூடப் பிறந்த ஒரு சகோதரனாக நினைத்துக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னபிறகு, கேட்டும் கூட கிள்ளிக்கொடுக்காத கனவான்கள் வாழும் இந்த உலகில், ரோட்டில் நின்றவனை அழைத்துச் சென்று அள்ளிக் கொடுத்த வள்ளலின் கருணையில், நெகிழ்ந்து போய் பெற்றுக் கொள்கிறார் போலீஸ்காரர். பிறகொரு தேதியில் புரட்சித்தலைவரே சென்று, அந்த போலீஸ்காரரின் மூன்று பெண்களின் திருமணத்தையும் நடத்தி வைத்து, வாழ்த்தி இருக்கிறார்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்..............gdr
-
"தெலுங்கு கத்துக்கலாம்"
‘கொக்கு சைவ கொக்கு’ பாட்டில் ரஜினியுடனும் ‘கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா வர்றியா’ என்ற பாட்டில் விக்ரமுடனும் ஆடிய ஜோதிலட்சுமி ஆடல் பாடல் கலைகளில் கை தேர்ந்தவர். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அவர் பாட்டி தமயந்தியும் அம்மா தனலட்சுமியும் நடிகையராய் இருந்தவர்கள். எம்.ஜி.ஆருக்கு இவர்கள் நல்ல பரிச்சயம் ஆனவர்கள்.
ஒரு நாள் ஜோதிலட்சுமியின் தாயார் எம்.ஜி.ஆரிடம் பேசும்போது ‘இப்போது தமிழில் ஜோதிக்கு அதிக வாய்ப்பில்லை. தெலுங்கில் அழைப்பு வருகிறது, ஆனால் இவள் நடிக்க மறுக்கிறாள்’ என்று குறைபட்டுக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர் ஜோதிலட்சுமியிடம் ‘ஏன் உனக்குத் தெலுங்கில் நடிச்சா கசக்குதா’ எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோதிலட்சுமி ‘இல்லண்ணே தெலுங்கு பாஷை தெரியாது. என்ன பேசுறாங்கன்னே எனக்குப் புரியாது’ என்றார். ‘அதெல்லாம் புரியும் புரியும். போய் நடி அப்படியே தெலுங்கு கத்துக்கலாம்’ என்று தைரியம் கொடுத்தார். அதன்பிறகு சண்டை காட்சி நிறைந்த படங்களில் ஜோதிலட்சுமி ஒரு ரவுண்ட் வந்தார். ‘நடிகைக்கு ஃபீல்டில் இருந்தால்தான் மதிப்பு. ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டால் யாரும் அவரை தேடப் போவதில்லை’ என்பதால் கிடைக்கும் வாய்ப்பை தவற விடக் கூடாது என்று எம்.ஜி.ஆர் கூறிய அறிவுரையைக் கேட்டதால் அவர் சாகும்வரை நடித்தார். விவேக்குடன் நகைச்சுவை பாத்திரத்திலும் நடித்து பேர் வாங்கினார்.
Posted by : MG Nagarajan
Published by : vannathirai
யாழ் இணையம்
in வண்ணத் திரை...
-
புரட்சித்தலைவர்
#மக்கள்திலகம்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய செவ்வாய் கிழமை காலை வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திரைப்படங்களை பற்றிய இந்த தொடர் பதிவில் இன்று புரட்சி தலைவர் நடித்த அவரின் 39 வது படமான
"#புதுமைப்பித்தன்" படத்தை பற்றி காண்போம்..
புதுமைபித்தன் 1957 ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம், புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர்., டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பி.எஸ். சரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆர்.ராமண்ணா
இயக்கத்தில்
தயாரித்தது
கே.முனிரத்னம்
திரைக்கதை
எஸ். என். மூர்த்தி
கதை கருணாநிதி
படம் பாக்ஸ் ஆபிஸில் 105 நாட்கள்.
இந்த படம் தெலுங்கில் வீர கட்கம் என பெயரிடப்பட்டு வெற்றி பெற்றது...
மணிபுரி மன்னர் தனது சகோதரரால் (டி.எஸ். பாலையா) சிறையில் அடைக்கப்படுகிறார், அவர் வேட்டைக்கு காட்டுக்கு சென்ற போது வேட்டையின் போது புலி தாக்கி மன்னர் இறந்துவிட்டார் என்று மக்களிடம் பொய் சொல்லி அவரை கைது செய்து யாருக்கும் தெரியாமல் ரகசிய இடத்தில் வைத்து உள்ளார்...
ராஜாவின் மகன் இளவரசன் ஜீவகன் (எம்.ஜி.ஆர் ) பல நாடுகளுக்கு கடல் பயணம் முடித்து நாடு திரும்புகிறார் அவருக்கு வரவேற்பு அளிக்காமல் மக்கள் சோகமாக இருப்பதை காண்கிறார் எம்ஜிஆர்...
என்ன ஆனது என்று அவரின் சித்தப்பா பாலையாவிடம் கேட்க அவர் புலி அடித்து கொன்று விட்டது உடல் கூட கிடைக்க வில்லை என்று ராஜாவின் போலி சமாதி முன் நிறுத்துகிறார்.. இறுதிச் சடங்கின் போது, அரண்மனை மருத்துவரின் மகள் (பி.எஸ். சரோஜா, மாறுவேடத்தில்) அவருக்கு அனுப்பிய ரகசிய செய்தி மூலம் அரசர் உயிருடன் இருக்கிறார் என்பதை ரகசிய சீட்டு மூலம் தெரிவிக்கின்றார் இளவரசர் உண்மையை அறிந்துகொள்கிறார் அந்த இடத்தில் பாலையா அரசர் அரண்மனை ஜோசியர் சொல்லி ஒரு சாசனம் எழுதி வைத்து இருக்கின்றார் அந்த சாசனம் காணவில்லை என்றும் அதை கண்டு பிடிக்க படை தளபதியை நியமனம் செய்து இருப்பதாக அறிவிக்கிறார் அதில் எனக்கு பிறகு இளவரசன் நாட்டை ஆளவேண்டும் ஆனால் இளவரசன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லிவிட்டு அந்த சாசனம் கிடைத்தால் தான் முடிவுக்கு வர முடியும் என்று சொல்லிவிடுகின்றார்..
எதிர்பார்த்தபடி அவர் அரசு ஆள வேண்டும் என்றால் இளவரசன் உயிருடன் இருக்க கூடாது அதற்கு என்ன செய்வது என்று படை தளபதி, அரண்மனை வைத்தியர் ,பாலையா ஆகியோர் ரகசிய திட்டம் தீட்டுகின்றனர்..
அதில் மன்னர் விஷயத்தில் மக்களை ஏமாற்றி நம்ப வைத்து இருப்பது பெரிய விஷயம் இளவரசனை கொன்று விட்டால் மக்களின் சந்தேகத்திற்கு ஆளாக நேரிடும் ஆதலால் கொள்ளாமல் வேறு வகையில் தந்திரமாக செயல் பட வேண்டும் என்று தீர்மானிகின்றனர்...
இதற்கு அரண்மனை வைத்தியர் மருந்துமூலம் இளவரசனை பைத்தியமாக்கி விடலாம் பிறகு இளவரசன் பைத்தியம் என்று சொல்லி நீங்களே ஆட்சி செய்யலாம் மக்களுக்கும் சந்தேகம் வராது என்று யோசனை கூறுகின்றார் இதில் மகிழ்ச்சி அடைந்த பாலையா அடுத்த மந்திரி பதவி உனக்கு தான் என்று அரண்மனை வைத்தியருக்கு வாக்கு கொடுக்கிறான் இதனால் இளவரசனை பைத்தியமாக மாற்ற மூலிகைகள் மூலம் மருந்து தயாரிகின்றார்..
இந்த ரகசியங்களை தெரிந்து கொண்ட மருத்துவரின் மகள் மருந்தை மாற்றி வைத்து விட்டு இளவரசனுக்கு தகவல் தெரிவிக்கபடுகின்றது அவரின் நற்குணங்கள் பிடித்து போக மருத்துவரின் மகளை இளவரசன் காதலிக்கிறார் அவளும் இளவரசனை காதலிக்கிறார்..
ஒரு விருந்தில் இளவரசனுக்கு அந்த மருந்து கலந்த பணம் கொடுக்க படுகின்றது அவர் அதை குடித்து விட்டு
அனைவரையும் முட்டாளாக்க மருந்தை குடித்த பைத்தியக்காரனைப் போல நடிக்கிறார்...
தனது தந்தையான மன்னரை காப்பாற்ற பகலில் அரண்மனையில் பைத்தியகாரனாகவும், இரவில் முகமூடி அணிந்து கொண்டு திரிகிறார்..
பாலையாவின் சதிகளை முகமுடியால் முறியடிக்க படுவதால் முகமுடியால் நாட்டில் கொலை கொள்ளை நடப்பதாக அவதூறு பரப்ப படுகின்றது முகமூடியை பிடித்து கொடுப்பவர்களுக்கு ஐயாயிரம் பொற்காசுகள் பரிசு என்று அறிவிக்கப்படுகிறது...
அந்த சமயத்தில் தளபதியால் முகமூடியை கைது செய்ய திட்டம் தீட்டபடுகின்றது
அவர்களிடம் இருந்து தப்பி ஓரு நாடக குழுவில் தஞ்சம் அடைகிறார் அவருக்கு நாடக பெண்மணி (டி. ஆர். ராஜகுமாரி) உதவுகிறார், அவர் இளவரசன் என்பதையும் அறிந்து கொள்கின்றார் இளவரசரின் மீது பாசம் கொள்கிறார்..
எந்த உதவியென்றாலும் உதவுவதாக கூறுகின்றார் அவர் மீது காதல் வயப்படுகின்றார் அதை இளவரசனிடம் கூறுகின்றார் ஆனால் இளவரசன் வைத்தியர் மகளை விரும்புவதாக நிராகரித்து விடுகின்றார்...
இருந்தாலும் இளவரசனுக்கு உதவி
இறுதியில், அவள் தன் உயிரைத் தியாகம் செய்கிறாள், இளவரசன் அரண்மனை மருத்துவரின் மகளோடு ஐக்கியப்படுகிறார். சதித்திட்ட வில்லன்களுக்கு இளவரசர் மற்றும் அவரது நண்பர் அறிவுமணி (சந்திரபாபு) உடன் சேர்ந்து போரிட்டு வெற்றி பெற்று தன் தந்தையை மீட்பார் இளவரசன்...
ஜீவகனாக
எம்.ஜி.ஆர்
பிரதாபனாக
டி.எஸ்.பாலையா
அரிவுமணியாக
ஜே. பி. சந்திரபாபு
பரக்ரமனாக
ஈ.ஆர்.சாதேவன்
துர்முகியாக
ஆர்.பாலசுப்பிரமணியம்
சி.எஸ்.பாண்டியன்
சித்ரகுப்தனாக
வீரையாவாக
பி.எஸ்.வெங்கடச்சலம்
சி.வி.வி.பந்துலு
சக்கரவர்த்தியாக
நல்லன்னனாக
பட்டுசாமி
இன்பவல்லியாக
டி.ஆர்.ராஜகுமாரி
வேல்விழியாக
பி.எஸ்.சரோஜா
அப்ராஜிதாவாக
இ.வி.சரோஜா
பூங்கோடியாக
கே.எஸ்.அங்கமுத்து
ஆகியோர் நடித்து உள்ளனர்
அன்புடன்
படப்பை பாபு.......skt...
-
பிரபல பாடலாசிரியரான மருதகாசி ‘அல்லி பெற்ற பிள்ளை’ என்ற பெயரில் தயாரித்த சொந்தப் படம் தோல்வியடைந்ததால் , பெரும் நஷ்டத்திற்கு உள்ளானார்.
மருதகாசிக்கு உதவுவதற்காக அவருக்குத் தன்னுடைய கதை ஒன்றை படமாக்கக் கொடுத்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கே.எஸ்.ஜி. கொடுத்த கதையின் பெயர் ‘தூண்டாமணி விளக்கு.’
கே.எஸ்.ஜி.யின் கதையை வாங்கிப் படித்த மருதகாசி, அந்தக் கதையை
திரைப்படமாக ஆக்கினால் நிச்சயமாக அது வெற்றி பெறும் என்று திடமாக எண்ணினார்.
அந்த படத்தின் கதை வசனத்தையும் கே.எஸ்.ஜி.யே எழுத வேண்டும் என்று மருதகாசி கேட்டுக் கொள்ள அதற்கும் கே.எஸ். ஜி. சம்மதித்ததைத் தொடர்ந்து அந்த படத்துக்கு பூஜை போடப்பட்டது.
சிவாஜி கணேசன், சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.ஏ.அசோகன் ஆகிய பிரபலமான நட்சத்திரங்கள் அந்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர் என்றாலும் மருதகாசி பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததால் அந்தப் படத்தை அவரால் தொடர முடியவில்லை.
அந்த சந்தர்ப்பத்தில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் நெருங்கிய நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆர், தனக்கு ஒரு படம் நடித்துத் தர சம்மதித்திருப்பதாகவும் அதற்கு ஒரு கதையைத் தர முடியுமா என்றும் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டார்.
“எம் ஜி ஆர் எப்போது கதை கேட்கிறார் என்று கேட்டுக் கொண்டு வாருங்கள். நான் வந்து கதை சொல்கிறேன்” என்று அவருக்கு பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன்.
“உங்களை உடனே எம்.ஜி.ஆர். அழைத்து வரச் சொன்னார்..” என்று அன்று மாலையே அந்த நண்பர் வந்து நிற்க இருவரும் எம் ஜி ஆரின் வீட்டுக்கு புறப்பட்டனர்.
எம்.ஜி.ஆரோடு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு நாடக காலத்திலேயே நல்ல பழக்கம் இருந்ததால் காரைவிட்டு இறங்கிய கோபாலகிருஷ்ணனை சிரித்தபடியே அவர் வரவேற்றார்.
சிவாஜி கணேசன் நடிப்பதாக இருந்து நின்று போன ‘தூண்டாமணி விளக்கு’ கதையை சிறு, சிறு மாற்றங்களுடன் எம். ஜி. ஆருக்கு சொன்னார் கோபாலகிருஷ்ணன். எம்.ஜி.ஆருக்கு அந்தக் கதை மிகவும் பிடித்துப் போனதைத் தொடந்து அந்தப் படத்தின் படப்பிடிப்பு உடனே தொடங்கியது.
சிவாஜி நடிப்பதாக இருந்து படப்பிடிப்பிற்கு முன்னரே நின்று போன அந்தப் படம், எம்.ஜி. ஆர். நடித்து இரண்டு நாள் படப்பிடிப்பு நடந்த பிறகு நின்று போனது.
அந்தக் கதையை சில மாதங்களுக்குப் பிறகு ‘கற்பகம்’ என்ற பெயரில் சொந்தமாக எடுத்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அப்போது அதில் கதாநாயகனாக நடித்தவர் ஜெமினி கணேசன்.
எம். ஜி.ஆர். நடிப்பதாக இருந்த அந்தப் படம் நின்றதற்கான காரணம் என்ன..?
‘கற்பகம்’ படத்தின் கதையை காட்சிவாரியாக எம்.ஜி.ஆரு.க்கு விளக்கினார் கோபாலகிருஷ்ணன். கதாநாயகனின் முதல் மனைவியான கற்பகத்தின் குடும்பப் பாங்கு, தான் பெறாத குழந்தையிடம் அவள் காட்டும் எல்லையற்ற பாசம், பின்னர் அவள் காலமான பிறகு இரண்டாம் தாரமாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி மாமனாரே வற்புறுத்தும்போது முதல் மனைவியை மறக்க முடியாமல் கணவன் படும் வேதனை ஆகியவற்றை கோபாலகிருஷ்ணன் விவரித்தபோது எம்.ஜி.ஆரின் கண்கள் அவரையும் அறியாமல் கலங்கின.
தனது உள்ளத்து உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு முன்னால் வெளிக்காட்ட விரும்பாமல் அடுத்த அறைக்கு சென்று விட்டார் அவர்.
“உங்கள் கதையைக் கேட்டவுடன் அவருக்கு காலம் சென்ற அவரது முதல் மனைவியின் நினைவு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்” என்று கோபாலகிருஷ்ணனிடம் தயாரிப்பாளரான அந்த நண்பர் கூறிக் கொண்டிருக்கும்போது அதைக் கேட்டபடியே அறையில் இருந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர். “அவர் சொல்வது உண்மைதான்” என்று சொல்லிவிட்டு ”படத்தின் பிற்பகுதியை நான் பின்னால் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு முன் மாமனாரின் வற்புறுத்தலுக்கு இணங்கி கதாநாயகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டானா இல்லையா அதை மட்டும் சொல்” என்று கோபாலகிருஷ்ணனிடம் கேட்டார்.
“தன்னைப் பெற்ற தாயாகவே தனது முதல் மனைவியை நினைத்து வந்த கதாநாயகன் குழந்தையின் ஏக்கத்தை போக்குவதற்காக இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறான். இரண்டாவது மனைவியும் கற்பகம் காட்டிய தாய் அன்பிற்கு தான் சளைத்தவள் அல்ல என்கின்ற அளவிற்கு அந்தக் குழந்தையின் மீது அன்பு காட்டுகிறாள். அதைப் பார்த்தபிறகே அவளை நாயகன் திருமணம் செய்து கொள்கிறான்” என்று கோபாலகிருஷ்ணன் சொல்லி முடித்ததும் “அருமையான கதை” என்று பாராட்டிய எம் ஜி ஆர் “உடனே இதற்கு வசனம் எழுதி விடு” என்றார்.
அப்போது அடுத்த வாரமே படப்பிடிப்பை ஆரம்பித்தால்தான் தனக்கு பைனான்ஸ் கிடைப்பது எளிதாக இருக்கும் என்று அந்தத் தயாரிப்பாளர் கூற சிறிது நேரம் யோசித்த எம்.ஜி.ஆர். பின்னர் கோபாலகிருஷ்ணனைப் பார்த்து “கதையின் தொடக்கத்தில், அதாவது முதல் மனைவியை மணப்பதற்கு முன் பண்ணையாரும் ஹீரோவும் சந்திக்கும் இரண்டு காட்சிகளுக்கு வசனம் எழுதிக் கொண்டு வா.. அந்தக் காட்சிகளுக்கான படப்பிடிப்பை முதலில் நடத்துவோம். பின்னர் இரு கதாநாயகிகளையும் தேர்ந்தெடுத்த பின்னர் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம்” என்றார்.
எம்.ஜி.ஆர். படங்களைப் பொறுத்தவரையில் நடிகர், நடிகைகள், தொழில் நுணுக்கக் கலைஞர்கள் ஆகிய அனைவரையும் அவரேதான் தேர்ந்தெடுப்பார் என்பதை கோபாலகிருஷ்ணன் அறிந்திருந்த காரணத்தால்… வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர் சொன்ன இரண்டு காட்சிகளுக்கும் வசனம் எழுதினார் அவர்.
அதையடுத்து படப்பிடிப்பு தேதியையும் படப்பிடிப்பு நடைபெற உள்ள ஸ்டுடியோ பற்றியும் கோபாலகிருஷ்ணனுக்கு தெரிவித்த பட அதிபர் படப்பிடிப்பு அன்று அதிகாலையிலேயே வந்து விடும்படி அவரைக் கேட்டுக் கொண்டார்.
‘கற்பகம்’ படத்திலே கதாநாயகன், கதாநாயகி அளவிற்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரம் அந்த மாமனார் கதாப்பாத்திரம், ஆகவே, அந்த பாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பிய கோபாலகிருஷ்ணன் அது பற்றி தயாரிப்பாளரிடம் கேட்டபோது அதையெல்லாம் எம்.ஜி.ஆர்.தான் முடிவெடுத்து இருக்கிறார் என்றும் படப்பிடிப்பு நாள் அன்றுதான் யார் நடிக்கப் போகிறார் என்ற விவரம் தெரியும் என்றும் தயாரிப்பாளரிடமிருந்து பதில் வந்தது.
படப்பிடிப்பு நாள் அன்று அந்த மாமனார் பாத்திரத்தில் நடிக்க வந்திருந்தவரைப் பார்த்ததும் கோபாலகிருஷ்ணன் அடைந்த ஏமாற்றத்துக்கு அளவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எம் ஜி ஆர் தேர்ந்தெடுத்திருந்த நடிகர் நல்ல பண்பட்ட நடிகர்தான். ஆனால் உருவ அமைப்பைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கு மாமனாராக அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது சிரமம் என்று கோபாலகிருஷ்ணன் மனதிற்குப்பட்டது. அந்தக் கதாபாத்திரத்திற்கு கே.எஸ். ஜி. யின் ஒரே தேர்வு எஸ்.வி.ரங்காராவ் மட்டுமே.
நடிகர் தேர்வு சரியாக அமையவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த கோபாலகிருஷ்ணனை இன்னும் மிகப் பெரிய வேதனைக்குள்ளாக்கியது.. எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்திருந்த இயக்குநர் அன்று அந்தக் காட்சியை படமாக்கிய விதம்.
ஒரு நல்ல கதை சிதைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் அவர் மனதிற்குள் தோன்றியது. ஆனால் அதை எம்.ஜி.ஆரிடம் எப்படி எடுத்து சொல்வது..? அதனால் மனக் குமைச்சலுடன் செட்டின் ஓரத்தில் ஒதுங்கிவிட்டார் கோபாலகிருஷ்ணன்.
அன்று முழுவதும் அவர் படப்பிடிப்பில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததை அந்த பரப்பரப்பான படப்பிடிப்புக்கு இடையேயும் எம். ஜி. ஆர். கவனித்திருக்கிறார் என்பது அந்த இரண்டு நாள் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு எம். ஜி. ஆரின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்கச் சென்றபோதுதான் கோபாலகிருஷ்ணனுக்குத் தெரிந்தது.
“என்ன தம்பி.. நீ எப்போதும் படப்பிடிப்பில் நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது, நடிப்பு சொல்லிக் கொடுப்பது என்று ஒரு வினாடி கூட உட்காராமல் துரு துறுவென்று இருப்பாயாமே. அப்படிப்பட்ட நீ நம்ம படப்பிடிப்பில் பேசாமல் ஒதுங்கி நின்று விட்டாயே.. என்ன காரணம்..?” என்று கேட்டார் எம். ஜி. ஆர்.
மாமனார் பாத்திரத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்திருந்த நடிகரை எனக்குப் பிடிக்கவில்லை.. அதேபோல் அந்த இயக்குநர் காட்சியைப் படமாக்கியவிதத்தில் எனக்கு உடன்பாடில்லை என்றும் எம்.ஜி.ஆரிடம் கூற முடியுமா..?
ஆகவே, அதை எல்லாம் அப்படியே மனதுக்குள் புதைத்துக் கொண்டு “நான் சொல்லித் தருகின்ற அளவிற்கு அங்கு நடிகர்கள் யாருமில்லையே…” என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன்.
எம்.ஜி.ஆர். எப்படிப்பட்டவர்…? கோபாலகிருஷ்ணன் மனதில் உள்ளது என்னவென்பதை வரவழைக்க அவருக்கு வழி தெரியாதா என்ன..?
“அன்று படப்பிடிப்பில் நடந்தது எதுவுமே உனக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்துதான் உன்னை வரவழைத்தேன். அதனால், இப்போது உண்மையான காரணம் என்ன என்பதை சொல்” என்றார் எம்.ஜி.ஆர்.
அவர் பரிவோடு கேட்டவிதம் தனது மனக் குறையை அவரிடம் சொல்லலாம் என்ற தைரியத்தை கோபாலகிருஷ்ணனுக்குக் கொடுத்ததால் “மாமனார் கதாப்பாத்திரத்தை ஏற்றவரின் உருவ அமைப்பு.. இயக்குநரின் திறமை ஆகிய இரண்டுமே எனக்கு திருப்தியாக இல்லை..” என்றார் கே. எஸ். ஜி.
சிறிது நேரம் மவுனமாக இருந்த எம்.ஜி.ஆர்., “உன் மனதுக்குப்பட்ட இரண்டு குறைகளுமே நியாயமானதுதான். இயக்குநரைப் பற்றி நாம் எப்போது வேண்டுமானால் முடிவெடுத்துக் கொள்ளலாம். மாமனார் கதாப்பாத்திரத்திற்கு எந்த நடிகரைப் போட்டால் சரியாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்..?” என்று கேட்டார்.
“உங்களுக்கு மாமனாராக நடிப்பவர் ரங்காராவ் போல இருக்க வேண்டும்” என்று கே.எஸ்.ஜி., சொன்வுடன் “அதென்ன ரங்காராவைப் போல..? ரங்காராவைப் போட்டால் சரியாக இருக்கும் என்று நேராக சொல்ல வேண்டியதுதானே..” என்றார் எம்.ஜி.ஆர்.
“இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் கதை வசனகர்த்தாதானே” என்று கோபாலகிருஷ்ணன் சொன்னவுடன் வாய்விட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., “சரி.. ரங்காராவையே ஒப்பந்தம் செய்யச் சொல்கிறேன். இப்போது திருப்திதானே…” என்று கேட்க “பூரண திருப்தி” என்று கூறிவிட்டு அவரது இல்லத்தை விட்டு புறப்பட்டார் கோபாலகிருஷ்ணன்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. அந்த இடைப்பட்ட காலத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும், கே.எஸ்.ஜி.யைச் சந்திக்கவேயில்லை.
ஒரு நல்ல கதை இப்படி முடங்கிப் போவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்தத் தயாரிப்பாளரைத் தேடி கோபாலகிருஷ்ணன் சென்றபோதுதான் படம் தயாரிக்கும் சூழ்நிலையில் அந்தத் தயாரிப்பாளர் இல்லை என்பது அவருக்குத் தெரிய வந்தது.
அந்தப் படத்திற்காக அந்தப் படத் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களிடம் வாங்கியிருந்த பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு அந்தக் கதையின் உரிமையை திரும்பப் பெற்று அந்தப் படத்தை எடுத்தார் கோபாலகிருஷ்ணன்.
சிவாஜி கணேசன் நடிப்பதாக இருந்து பின்னர் எம். ஜி. ஆர். கதாநாயகனாக இரண்டு நாட்கள் நடித்த அந்தக் கதை இறுதியில் ஜெமினி கணேசன் நாயகனாக நடிக்க ‘கற்பகம்’ என்ற பெயரில் வெளியானது மட்டுமின்றி வசூலில் மிகப் பெரிய சாதனை புரிந்தது.
அந்தக் ‘கற்பகம்’ படத்தில்தான் ‘புன்னகை அரசி’ என்று ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் கே.ஆர்.விஜயா கதாநாயகியாக அறிமுகமானார்.
அதுவரை கதாசிரியராகவும், இயக்குநராகவும் இருந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை, ஸ்டுடியோ அதிபராக ஆக்கியதும் அந்தக் ‘கற்பகம்’ படம்தான்.பாடல் ஆசிரியர் வாலிக்கு சூப்பர் ஹிட் கொடுத்ததும்‘கற்பகம்’ படம்தான்
எம்ஜியாருக்கும்,சிவாஜிக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம்
ஜெமினி கணேசனுக்கு கிடைத்தது...........Baabaa
-
1956 – ஆம் ஆண்டில் ஒரு சவரன் (பவுன்) ரூபாய் நூறுக்கும் குறைவாகவிற்றபோதே, பல்லாயிரக்கணக்கில் வாரி வாரி வழங்கிய வள்ளலே எம்.ஜி.ஆர். என்பதனை அறியும்போது, அவர் ‘மக்கள் திலகம்’ என்ற மகுடத்தைப் பெற்ற மகிமை நம் மனங்களுக்கு நன்கு புரிகிறது.
பின்னாளில் 1959 – ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவமனைகள், பள்ளிக்களுக்கு எம்.ஜி.ஆர் வாரி வழங்கிய நிதி ரூபாய் மூன்று இலட்சமாகும்.
1961, 1964 – ஆம் ஆண்டுகிளல் அடையாறு ஔவை இல்லத்திற்கு வழங்கிய நிதி ரூபாய் அறுபது ஆயிரங்கள்.
1960, 61, 64 – ஆம் ஆண்டுகளில் சென்னை வெள்ளநிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் எண்பத்தைந்தாயிரம்.
1960, 62, 64 – ஆம் ஆண்டுகளில் மதுரை, தஞ்சை, திருச்சி, நகரங்களின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் ஒரு இலட்சமாகும்.
1961 – ஆம் ஆண்டு ரிக் ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வாங்கி, வழங்கிடத் தந்த தொகை ரூபாய் அறுபதாயிரம்.
1962 – ஆம் ஆண்டு சீனப்படையெடுப்பின் போது எம்.ஜி.ஆர் வழங்கிய யுத்த நிதி, ரூபாய் ஒரு இலட்சமாகும்.
1964-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் தீக்குளித்த தியாகிகளுக்கு வழங்கிய நிதி ரூபாய் இருபதாயிரம். இதே ஆண்டில் பண்டிதர் நேரு பிரான் நினைவு நிதிக்கு வழங்கிய தொகை ரூபாய் இருபத்தைந்தாயிரமாகும்.
1965-ஆம் ஆண்டில் பரங்கிமலைத் தொகுதியில் பாலம் கட்டவும், நீர்த்தேக்கம் அமைக்கவும் தந்த தொகை ரூபாய் 41,500 ஆகும்.
1968-ஆம் ஆண்டில் மட்டும் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, விழுப்புரம் கல்லூரி, செங்கல்பட்டு கல்லூரி, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, மராட்டிய மாநில வெள்ள நிவாரணங்கள், ராஜஸ்தான் பஞ்சநிவாரணம், ஒரிஸ்ஸா பூகம்ப நிவாரண மற்றம் பல நற்செயல்களுக்கும் வழங்கிய தொகை இலட்ச ரூபாய்களுக்கும் மேலாகும்.
இவ்வளவுதானா? …. 1968 – ஆம் ஆண்டே சென்னையில் தீப்பிடிக்காத வீடுகள் கட்டித் தந்த தொகை ரூபாய் ஒரு இலட்டசமாகும்.
சிலம்புச்செல்வர் ம.பொ.சி. விழாக்களுக்கு மட்டும் பலமுறை தந்த ரூபாய் ஐந்து இலட்சங்கள்.
இவை போன்று எத்தனையோ, தமிழ்ச்சான்றோர்கள், கலையுலகப் பிரமுகர்கள், நலிந்த கலைஞர்கள் எம்.ஜி.ஆரிடம் தனிப்பட்ட முறையில் பெற்ற நிதி ஏராளம்! ஏராளம்!
தாராளமாய்க் கலியுகப் பாரிவள்ளலாம் எம்.ஜி.ஆர். கரங்கள் ஈந்த நிதிக்கு எல்லாம் பட்டியல் ஈந்தால் அதிவே ஒரு நூலாக மலர்ந்து விடும்..........Baabaa
-
எம்.ஜி.ஆர். படத்தை ரசித்தவர்கள், வேறு எந்த நடிகரின் படத்தையும் ரசிக்க முடியாது. எந்த ஒரு நடிகரின் படத்தைப் பார்த்து விட்டு வந்தாலும் எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்த பிறகே உறங்கச் செல்வேன்.
'மர்மயோகி', "பெற்றால்தான் பிள்ளையா', "ஆயிரத்தில் ஒருவன்', "எங்க வீட்டுப் பிள்ளை' என ஒவ்வொரு படத்திலும் தன் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் எம்.ஜி.ஆர்.
வள்ளல்
வள்ளல்
எம்.ஜி.ஆர். ஒருவர்தான் விவசாயிகளின் நலன், மீனவர்களின் துயர்துடைத்தல் என ஒவ்வொரு பிரச்னையையும் தனது திரைப்படங்களில் பேசியிருப்பார். அதேபோல இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர். ஒருவேளை இன்று எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் தனி ஈழம் அமைந்திருக்கும்.
கற்பனை கூட பண்ண முடியாது
கற்பனை கூட பண்ண முடியாது
ஜாதி மத வேறுபாடு, ஏழை எளிய மக்கள் இல்லாத சமூகம் உருவாகப் பாடுபட்டவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அடைந்த வெற்றியை எந்த நடிகரும் நினைத்துப் பார்க்க முடியாது.
வருங்கால முதல்வர் என்று எந்த ஒரு நடிகர் கூறிக்கொண்டாலும் அதைப் பார்த்து எனக்குச் சிரிப்புதான் வரும்,"
சத்யராஜ்...............Baa
-
#உலக #மகளிர்தின #வாழ்த்துக்கள்
happy women's day
"பெண்ணின்றி அமையாது உலகு "
இந்த நன்னாளில் ஒரு தமிழாசிரியை உரைத்திருந்த புரட்சித்தலைவருடனான நெகிழ்வான சம்பவத்தைப் பகிர விரும்புகிறேன்.
1978 – நான் தனியார் பள்ளியொன்றில் தமிழாசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். மலையரசிக்கும் வானரசனுக்கும் பருவந்தோறும் நடக்கும் ஊடல் முற்றி… சிணுக்கும் தூறல் –சிறு மழையானது. சிறுமழை-பெருவர்ஷமானது.
இரவும் பகலும் ஜலப்பிரவாகத்தில் ஜீவித இயக்கும் ஸ்தம்பதமானது. புயலால் மக்கள் அடைந்த கஷ்ட நஷடங்கள் நெடிய கண்ணீர்க் கதைகளாயின. உயிர்ச்சேதம்-உடைமைச் சேதங்களுக்குப் பரிகாரமாக அரசு ஆறுதல் கரம்நீட்டி நிதியளித்ததோடு-பாதிக்கப்பட்டபணியாளர்களுக்கு முன் பணம் கொடுக்கவும் முன் வந்தது.
ஆனால் அரசு அலுவலர்களுக்கு மட்டுமேஅட்வான்ஸ் அளிக்கப்படும் என்ற உயர் அலுவலர்களின் உதாசீனத்தால் அட்வான்ஸ் மறுக்கப்பட்ட சோர்வோடு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியினர் அவசரக் கமிட்டி அமைத்தனர். நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் தானே பணிபுரிகிறோம்.
எங்கள் கூரை சரியவில்லையா? எங்கள்உடமைகள் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகவில்லையா? வெள்ளமும் புயலும் எல்லோருக்கும்பொதுதானே! என்ன செய்யலாம்! என்னசெய்யலாம் – என்று குமுறிக்கொண்டிருந்தபோது…
செய்தி வந்தது. மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவர் அவர்கள் உதகைக்கு வருகிறார்! பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு பேச்சு மருந்து பூசப் பள்ளித்திடலில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார் என்று.
‘’தாய்க்குலம் சார்பாக சார்பாக நீங்களும்வரவேணும்’’ அழைப்பை ஏற்று அவர்களோடு அவர்களில் ஒருத்தியாகக் காத்து நின்றேன். நிமிடங்கள் மணிகளான பின்னர் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பொன்மனச்செம்மல்வெளியேவந்தார்.
முற்றுகையிட்டோம். முன்ஒத்திகையின்மையால் சில ஆசிரியர்கள் சொற்சுருக்கமற்று செய்தியை நீட்டியபோது முதல்வர் கண்கள் தானாகக் கைக்கடிகாரத்தில் படிந்தன. பளீரென இடைவெட்டி உரையாடலில் நுழைந்தேன். ‘’அரசுஅங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிஆசிரியர்களுக்குப் புயல் நிவாரண முன்பணம் கிடைக்கவில்லையே!’’
‘’அது எப்படி கிடைக்காமல் போகும்? #ஆணைஎல்லோருக்கும் #பொதுதானே #அம்மா!’’
‘’இல்லை! எங்களுக்கு மறுக்கப்பட்டது.’’ ‘’உடனே மாற்றப்படும்’’.
‘மிக்க நன்றி’.
நாடோடி மன்னன் பாணியில் ஒரு கையசைப்பு, ஒரு புன்னகை, கரங்குவிப்பு. விண்ணப்பத்தினை கையில் வாங்கிக்கொண்டு காரேறிப்பறந்தார்.
அப்புறம்-
அன்று மாலை பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நொந்திருந்த ஆசிரியர்களுக்கு இதமாக சில சொல்லி ஆணையிட்டார். அடுத்த சில நாட்களில் அட்வான்ஸ் கிடைத்தது.
ஒரு தலைவனுக்கான சுறுசுறுப்போடு துணிந்து விரைந்து செயலாற்றிய
பாங்கு.நாலே வரிகளில் நடந்த உரையாடலில் ஆசிரியர்களின் துயர்துடைத்த சாமர்த்தியம்!
முதன் முறையாக புரட்சித்தலைவரைச் சந்தித்த போதே-நான் பார்த்த நிர்வாகத்திறன்! இப்போதுநினைத்தாலும் என்னைப் பூரிக்கவைக்கிறது.
#கவிதாயினி.#ஆசிரியை. #ரோஹினி.......... Bsm