hi S Ramaswamy ,Prof !
பொன்முடி (1950 ) மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படம் அல்லவா
அதனால் பாடல்கள் பிறமொழிப் படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டதில்
வியப்பேதும் இல்லை
மாடர்ன் தியேட்டர்ஸ்
ஆரவல்லி (1957) ஜி ராமநாதன் இசையமைப்பில் வந்தது
அதிலும் தழுவல் பாடல்கள் இருந்தமை பெரும்பாலும் தெரிந்த விடயமே
குறிப்பாக
வெண்ணிலா நிலா
http://www.youtube.com/watch?v=xZbKHDPPrrc
மனோகர் பிக்சர்ஸ் கல்யாணிக்கு கல்யாணம் (1959) திரைப்படத்திலும்
ஜி ராமநாதன் அவர்கள்
இந்த மாநிலத்தை பாராய் மகனே
என்ற பாடலின் இசையை இந்தியிலிருந்தே எடுத்திருந்தமையும் அறிந்த ஒன்றே
(Janam Janam Ke Phere - Zara Saamne To Aao Chhaliye)
http://www.youtube.com/watch?v=vtX8KCqGp7Q
தவிர
பொன்முடி
Ellis R. Dungan னுக்கு பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி தந்த திரைப்படம்
படம் ஓடவில்லை
ஓட விடாமல் ஓட ஓட விரட்டினார்களாம்
Ellis R. Dungan இனிமேல் தமிழ் படங்களைத் தொடர்ந்தது எடுப்பதா இல்லையா என்று
சோதனையை தருவித்த
காதல் காட்சிகளில்
நரசிம்ஹ பாரதியும் மாதுரிதேவியும் நெருக்கமாக நடித்து
( அன்றைய கால கட்டத்தில் பெரும் புரட்சியாக கருதப்பட்ட )
சமுதாயத்தை கெடுக்கிறார்
இது தமிழ் படமா ஆங்கிலப் படமா என்று
ரஸிகர்கள் கொந்தளித்து ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் அறிந்தேன்
அப்படி என்னதான் இருக்கிறது என்று நானும் எனது தகட்டில்
fast-forward rewind செய்து செய்து பார்த்தேன்
இன்றைய நிலையில் சாதாரணமாகப் பட்டாலும்
நரசிம்ஹ பாரதியும் மாதுரிதேவியும் ரொம்ப தாராளமாகவே பண்ணி இருக்கிறார்கள்
கொஞ்சி கட்டி பிடிப்பது உருண்டு உரசுவது
முத்தம் கொடுப்பது போல நெருங்கி மூக்கு மட்டும் உரசி விலகுவது
எல்லாம் குளோசப்பில் பார்க்கும் போது சகிக்கவில்லை
அவர்களுடைய தோற்றம்
இன்னும் காதல் காட்சி வசன உணர்ச்சி உட்பட
Regards