http://i1087.photobucket.com/albums/...3-08130627.jpg
http://i1087.photobucket.com/albums/...3-08130604.jpg
Printable View
adiram sir. whether we like or not now NT's most significant milestone films like Thiruvilayadal, Navarathiri, Thillana, Saraswathi Sabatham etc., are in APN's sons custody. As NT fever is on the rise every year and after every rerelease, we need to help bring out NT's classics in a proper sequence without detrimental to the box office collections. Two films per year is a good idea. Like our Divya films at the helm of Karnan's incomparable success over decades to come, other producers, if they emulate, that will be the real service to keep our NT in limelight forever.
வேலூரிலிருந்து தன் தந்தையுடன் வசந்தமாளிகையை ஆவலுடன் தரிசிக்க சென்னை வந்த கல்லூரியில் பயிலும் இளம் பெண் ஒருவர் நடிகர் திலகத்தைப் பற்றி சொல்வதைக் கேளுங்கள். அதுமட்டுமல்ல... அவரது தந்தை ('வாழ்க்கை' ராமசாமி) அதிதீவிரமான நடிகர் திலகத்தின் பக்தராம். "என் மூச்சு ஓடிக்கொண்டிருப்பதே தலைவர் சிவாஜியால்தான்" என்று அவர் சொல்லும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. ரசிக வேந்தர் சாரும், நானும் எடுத்த ஒரு மினி பேட்டி இதோ உங்கள் பார்வைக்காக.
http://www.youtube.com/watch?feature...&v=6y-vh7iN75o
'Dinasudar' Today Banglore
http://i1087.photobucket.com/albums/...t%20-2/pg4.jpg
மிகவும் மன வருத்தத்துடனும் மன வலியுடனும் இதை எழுத வேண்டியுள்ளதை நினைத்தால் கஷ்டமாகத் தான் உள்ளது. என்றாலும் நம் அனைவரின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்ற நிலையில் தான் இதை எழுதி ஆறுதல் தேட முயல்கிறேன்.
கர்ணன் 2012ன் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த்து நமக்கெல்லாம் மிகுந்த மன மகிழ்ச்சியைத் தந்தது. அதற்கு முன்னும் பின்னும் தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் நாடெங்கும் திரையிடப் பட்டு விநியோகஸ்தர்களின் மனதில் மகிழ்ச்சியை ஊட்டி வந்தது.. அந்த தைரியம் தான் கர்ணன் ஒரு படி மேலே போய் நவீன தொழில் நுட்பத்துடன் வெளிவந்து ஒரு தலைமுறையினையே சிவாஜி ரசிகர்களாய் மாற்றியது. அதனைத் தொடர்ந்து சிவாஜி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாகவும் புதிய தலைமுறையினருக்கு நடிகர் திலகத்தின் நடிப்பில் உள்ள பல்வேறு பரிணாமங்களில் ஒன்றினை அறிமுகப் படுத்தும் விதமாகவும் வசந்த மாளிகையின் நவீன மயமாக்கல் மற்றும் வெளியீடு அமைந்த்து.
தமிழகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நடிகர் திலகம் என்ற தெய்வத்திற்கு தங்கள் உடல் பொருள் உள்ளம் போன்ற யாவற்றையும் அர்ப்பணித்து மிகப் பெரிய வரவேற்பைத் தந்துள்ளனர். இவ்வளவு பெரிய மக்கள் அபிமானத்தைப் பெற்றவர் நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாருளர் என்று சொல்லுமளவிற்கு பிரம்மாண்டமான அளவில் வசந்த மாளிகை திரைக் காவிய மறு வெளியீட்டிற்கு வரவேற்பளித்தனர்.
ஆனால் நடந்தது என்ன.
சென்னை ஆல்பர்ட் மற்றும் தலைநகரின் மற்ற ஓரிரு திரையரங்குகளைத் தவிர கிட்டத் தட்ட அனைத்துத் திரையரங்குகளிலுருந்தும் ரசிகர்கள் மற்றும் திரையரங்க நிர்வாகம் அனைத்துத் தரப்பிலிருந்தும் ஒரே குரலாய் ஒலித்த விஷயம் –
படத்தின் பிரதி சரியில்லை.
இதற்கா நாம் இவ்வளவு உழைத்தோம் என்று ரசிகர்கள் உள்ளக் குமுறலோடு இருக்க, பல திரையரங்குகளில் பிரதி சரியில்லாத காரணத்தால் எடுக்கப் படும் சூழல் உருவாகி விட்டது. திரையரங்குகளை நாம் குற்றம் சொல்ல முடியாது. காரணம் அவர்களுக்கென்று தனி தர நிர்ணயம் உள்ளது. மக்களையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. காரணம் என்ன தான் இருந்தாலும் தரக் குறைவான பிரதியாகத் திரையிடப் பட்டால் அவர்கள் மறு முறை வரத் தயங்குவர்.
இதற்கு என்ன காரணம்
நல்ல வரவேற்பிருந்தும் மேலும் பலர் ஆவலுடன் வரக் காத்திருந்தும் திரையரங்குகளில் படத்தை எடுக்க யார் காரணம். இவ்வளவு பெரிய படத்தை இன்னும் கவனத்தோடு செதுக்கி நல்ல தரத்துடன் வெளியீடு செய்திருந்தால் கர்ணனை விட பல மடங்கு வெற்றியைப் பெற்றிருக்கும்.
நடிகர் திலகத்தின் படங்கள் பொன் முட்டையிடும் வாத்துக்களாய் இருப்பதை வியாபார நோக்கில் அணுகி, ரசிகர்களின் பலத்தையும் அல்லது பலவீனத்தையும் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்துபவர்களை என்ன சொல்வது. இனிமேல் நடிகர் திலகத்தின் படம் மட்டுமல்ல, எந்த பழைய படமாக இருந்தாலும் திரையரங்கு நிர்வாகத்தினர் உடனடியாக சம்மதிக்கத் தயங்குவர் அல்லவா.
இனிமேல் படத்தின் பிரதியின் தரத்தை உறுதி செய்த பின்னர் தான் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும். இதற்கு ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யத் தயங்க மாட்டார்கள்.
இந்த மன வருத்தத்தை அடுத்த வெளியிடாக அமைய விருக்கும் பாச மலர் நிச்சயம் போக்கும் என நம்புவோம்.
யாரையும் சுட்டிக் காட்டி அல்ல இப் பதிவு. நம் அனைவரின் மன வருத்தத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே.
sivaji fans joy at coimbatore
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rbecsQTx4mc