-
அன்புள்ள ராகுல் - பழனியை உங்கள் தலைமுறை கண்டிப்பாக பார்க்கவேண்டும் - ஒரு கூட்டு குடும்பம் , family values , அண்ணன் தம்பி உறவுமுறை , மற்றவர்களை புண் படுத்தகூடாத நல்ல மனம் , பிறரை மனம் உவந்து பாராட்ட கூடிய நல்ல இதயம் , ஈகோ இல்லாத மனித நேயம் , பிறரையும் ( தவறு செய்தவர்களையும் ) மன்னிக்கும் பரந்த உள்ளம் - இவைகள் அத்தனையும் தெரிந்து கொள்ள , புரிந்து கொள்ள
உங்களுக்காகவும் , மற்ற நண்பர்களுக்காகவும் முழு படமும் இதோ - DVD நீங்கள் தேட அவசியம் இல்லை ---
நீங்கள் உங்கள் பதிவுகளை இனி தொடரலாம் - எனக்கு பழனியை பற்றி அலச நேரம் உங்களால் கிடைத்தற்கு மிகவும் நன்றி
http://youtu.be/R8grFFCVpGQ
-
Dear Ravi Sir,
Nice write up on palani movie, one suggestion , you can type the article in MS word, complete it leisurely and once you complete it you can post it sequentially, it will be better and we can read without break
Thanks for video
-
பார்த்ததில் பிடித்தது - 21
1970 ல் வந்த விளையாட்டு பிள்ளை பற்றி தான் இந்த பதிவு ,1968 ல் வந்த தில்லான மோகனாம்பாள் என்ற இமாலய வெற்றி படத்தை தந்த கூட்டணி , மேலும் காலத்தால் அழியாத படங்களை தந்த இயக்குனர் நடிகர் கூட்டணியில் வந்த படம் தான் இந்த விளையாட்டு பிள்ளை, இந்த படத்தை திரு apn இயக்கிய காரணத்தை பற்றி திரு முரளி சார் சில நாட்களுக்கு முன்பாக விரிவாக எழுதி உள்ளார் , எனவே முதலில்
கதை:
கிராமத்து இளைஞன் முத்தையா (சிவாஜி சார் ) பொறுப்பு இல்லாமல் விளையாட்டு தனமாக வாழ்ந்து வருகிறார் , வீர விளையாட்டில் சூரர். அதே கிராமத்தின் பண்ணையார் மகள் மரகதம் (பத்மினி ) வீர விளையாட்டில் பிரியம் உள்ளவர் , ஆசையாக ஒரு மாட்டை வளர்த்து வருகிறார் . விளையாடி கொண்டு இருக்கும் முத்தையா மாட்டை பிடிக்க போக , மரகதத்தை சந்திக்கிறார் , முதல் சந்திப்பிலே இரண்டு பேருக்கும் சண்டை வர , சில நாட்களுக்கு பிறகு ரேகலா பந்தயத்தில் சந்தித்து கொளுகிரர்கள் , அந்த பந்தயத்தில் மரகதம் மற்றும் முத்தையா இருவருக்கும் கடும் போட்டி , கடைசியில் போட்டியில் வெற்றி பெறுகிறார் முத்தையா, மரகதத்தின் மனதிலும் இடம் பிடிக்கிறார்.
இந்த பந்தயத்தை படம் பிடிக்கிறார் இளைய ராணி ரோஜா ரமணி
-
தான் மரகதத்தை காதலிக்கும் விஷியத்தை தன் தாயிடம் சொல்லும் முத்தையா , மரகதத்தை பெண் கேட்டு செல்ல சொல்லுகிறார். தான் விதவையாக இருப்பதால் முத்தையாவின் சித்தஅப்பாவை இவர்கள் சார்பில் பெண் கேட்க அனுப்புகிறார் முத்தையாவின் தாயார் . முத்தையாவின் சித்தஅப்பா கருமி , மற்றும் அடுத்தவரின் சொத்துக்கு ஆசைபடுபவர் , பெண் கேட்டு போக சீர்வருசை தட்டு வாங்க வெறும் பத்திரத்தில் கை எழுத்து வாங்குகிறார் சித்தஅப்பா (பாலையா)
மரகதத்தின் வீட்டுக்கு சென்று அங்கே தன் பிள்ளையை பற்றி பெருமையாக சொல்லி , முத்தையாவை பற்றி பொய் சொல்லி , அந்த சம்பந்தத்தை தன் மகனுக்கு முடிக்கிறார் பாலையா
பாலையாவின் மகன் சோ பட்டணத்தில் நாடகம் நடத்துகிறார் , அவர் மனோரமாவை காதலிக்கிறார் , பணத்துக்கு அல்லாடுகிறார் , மரகதத்தை தனக்கு கல்யாணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று அறிந்து மரகதத்தை தூக்கி கொண்டு பொய் கல்யாணம் செய்கிறார் முத்தையா , இதனால் ஊர் கோபத்துக்கு ஆளாகும் முத்தையாவின் குடும்பத்தை ஊர் ஒதுக்கி விடுகிறது ,சோ பணத்தை எடுத்து கொண்டு போய் விடுகிறார் , மனோரமா கர்பமாக இருப்பதை அறிந்து அவரை கழட்டி விடுகிறார் சோ
-
விவசாயம் செய்து வாழ முடிவு செய்கிறார்கள் முத்தையா மற்றும் மரகதம் , உழ இரண்டு மாடு இல்லை என்ற சூழ்நிலையில் , மரகதத்தின் தந்தை மகள் மேல் உள்ள வெறுப்பில் அவள் வளர்த்த மாட்டை துரத்தி விட அது மரகதம் வீடு தேடி வர , இவர்கள் அதை வைத்து உழுது விவசாயம் செய்கிறார்கள் . நிலைமை கொஞ்சம் சீராகிறது
மரகதம் கர்ப்பம் ஆகிறார் , இதை அறிந்த அவர் தாய் மரகதத்தை வந்து சந்திக்கிறார் . சில மாதங்களில் முதைய்யவுக்கு ஆன் குழந்தை பிறக்கிறது , அனால் அவர் சந்தோசம் சில நிமிடங்கள் தான் நீடிக்கிறது , காரணம் தான் வெறும் பத்திரத்தில் கையெழுத்து போட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொளுகிறார் பாலய்யா , அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லுகிறார்கள் ( தன் நிலத்தில் குடுசை போட்டு வாழுகிறார்கள் ) முத்தையாவின் மகன் பெயர் மாணிக்கம் , மாணிக்கம் கொஞ்சம் பெரியவன் ஆகிறார் , ஒரு நாள் மாணிக்கம் விளையாட்டின் பொது கிணத்தில் விழ போக அதை பார்க்கும் முத்தையாவின் தாய் கிழே விழுந்து இறந்து விடுகிறார் , சில வருடங்களில் அந்த ஊரில் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது , பசி கொடுமை தாங்காமல் மாணிக்கம் தன் தாத்தா (பத்மினியின் தந்தை) வீட்டில் திருட போக , தாத்தா( vs ராகவன் ) அடிக்கிறார் , அதை பார்க்கும் அவர் மனைவி மாணிக்கம் தான் தங்கள் பேரன் என்று சொல்ல மனம் மாறும் ராகவன்
தன் மகள் , மருமகன் , பேரன் அனைவரையும் தன் வீட்டுக்கு வந்து வசிக்கும் படி அழைக்க போகும் பொது , அவர்கள் அனைவரும் வேறு ஊருக்கு சென்று விட்ட செய்தி கேட்டு மாண்டு விடுகிறார்
தன் உயிலில் தன் சொத்து அனைத்தும் மாணிக்கத்துக்கு தான் சொந்தம் என்றும் மாணிக்கத்துக்கு 18 வயது ஆகும் வரை அதை நிர்வகிக்கும் பொறுப்பை முத்தையாவுக்கு வழங்குகிறார் ராகவன்
-
வருடங்கள் ஓடி விடுகிறது மாணிக்கம் இப்போ சிவகுமார் , தன் கல்லுரி ஆண்டு விழாவுக்கு தன் தந்தையை அழைக்கிறார் , அவரும் வர , அந்த சமஸ்தான ராஜாவும் வருகிறார் , மாலை போடும் பொது யானை மதம் பிடித்து ராஜாவை மிதிக்க போக முத்தையா ராஜாவை காபதுகிறார் , அப்போ தான் ராணியை பார்க்கிறார் , சின்னவயதில் பார்த்த இளையராணியின் அண்ணன் தான் ராஜா (ராமதாஸ் ). ராணி (காஞ்சனா) முத்தையாவின் குடும்பத்தை விருந்துக்கு அழைக்கிறார்
முத்தையாவின் குடும்பம் ராஜாவின் மாளிகைக்கு சென்று விழாவில் கலந்து கொளுகிரர்கள் , மரகதம் மற்றும் மாணிக்கம் இருவருக்கும் ராணியின் மேல் நாட்டு நாகரிகம் பிடிக்காமல் வந்து விட முத்தையா விருந்தில் கலந்து கொளுகிறார் . அந்த மாளிகையில் வேலை செய்கிறார் சோ , அதை பார்த்து என்ன த இங்கே இருக்கே என்று சாதரணமாக கேட்க சோ அதை offensive ஆக எடுத்து கொண்டு நேரம் பார்த்து பழி வாங்க திட்டம் போடுகிறார். விருந்தில் மது குடித்து விடுகிறார் முத்தையா , அவரை பிடித்து கொண்டு நிற்கும் காஞ்சனா உடன் அவரை படம் எடுக்கிறார் சோ
குடித்து விட்டு வரும் தன் கணவரை பார்க்கும் மரகதம் அதிர்ச்சி ஆகிறார் , முத்தையா மீண்டும் குடிக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறார் . தன் எடுத்த படத்தை மாணிக்கம் கைக்கு போகும் படி செய்கிறார் சோ
ராணியின் அன்பு பிடியில் இருந்து விலக முடியாமல் அங்கே தங்கி விடுகிறார் முத்தையா , தாயும் , மகனும் ஊருக்கு கிளம்பி விடுகிறார்கள் .ஊர் திருவிழா வருகிறது , அதற்கு வருவதாக சொல்லுகிறார் முத்தையா. சொன்னபடி வருகிறார் ராணியுடன் , அந்த வருடம் முதல் மரியாதையை ராணிக்கு கிடைக்கும் படி செய்கிறார் , இதை பார்த்து தாயும் , மகனும் தப்பாக எடுத்து கொளுகிரர்கள் (உண்மையில் இருவரின் மனதிலும் வெறும் மரியாதை கலந்த நட்பு தான் ). மாணிக்கம் தனக்கு 18 வயது முடிந்து விட்டது என்று கூறி சொத்தை தன் பெயருக்கு மாற்றி தர சொல்ல , தந்தையும் அப்படியே செய்கிறார் , மனம் வெறுத்து போய் ராணி கூட சென்று விட நினைக்கிறார்
இந்த நேரத்தில் சோவின் நண்பர் அந்த ஊருக்கு exhibition நடத்த வருகிறார் , அவரிடம் சொல்லி மாட்டை அடக்கும் போட்டி வைக்கும் படியும் , மாட்டின் கொம்பில் விஷம் தடவும் படியும் சொல்லுகிறார் . முத்தையாவை provoke செய்ய பேசுகிறார் சோவின் நண்பர் , முத்தையா போட்டிக்கு தான் தயார் என்று சொல்லிவிட , அந்த செய்தி முத்தையாவின் மனைவி , மகன் இருவருக்கும் தெரியவருகிறது ( மாட்டின் கொம்பில் விஷம் இருப்பதும் ) தந்தையை காப்பற்ற களத்தில் குதிக்கிறார் மாணிக்கம் , அவரால் முடியாமல் போகவே முத்தையா மாட்டை அடக்க , சோ செய்த சூழ்ச்சி தெரிய வருகிறது
(TR ராமச்சந்திரனின் செயலால் ) அந்த போடோவும் சோ வின் கைவண்ணம் என்று தெரிய வர குடும்பம் ஒன்று சேர்க்கிறது
சுபம்
-
அலசல் :
இந்த படம் எனக்கு பிடித்த காரணங்கள்
1. நடிகர் திலகத்தின் தோற்ற்றம் - பொதுவாக சற்று குண்டாக இருப்பார் இதில் எப்படி ஒல்லியாக இருக்கார் என்று விந்தை , காரணம் அதற்கு அடுத்த படத்தில் (vietnam வீடு) கொஞ்சம் குண்டாக இருக்கிறார் Dedication thy name is சிவாஜி )
2.light ஸ்டோரி - ரொம்பவும் அழ விடாமல் , போகும் கதை + positive ending
3. நடிகர் திலகத்தின் வீர சாகசங்கள் (சாமிநாதன் sir- thanks)
-
சிவாஜி :
என்ன ஒரு அழகு . ஆனைமுகம் நம்பியே என்ற பாடலில் கபடி ஆடும் பொது அறிமுகம் ஆகும் நடிகர் திலகத்தின் முகத்தில் விளையாட்டு பிள்ளை கலை , அதே பாடில் சிலம்பம் சுத்தும் லாவகம் , கயிறு இழுக்கும் காட்சி , என்ன தெரியாது இந்த அற்புத மனிதர்க்கு - படத்தில் வரும் வசனம் முற்றிலும் உண்மை , வித்தைக்கு ஜெயம் உன் பக்கம் தான் , அடுத்து வரும் ரேகள போட்டியில் வண்டி ஓட்டும் லாவகம் , மாட்டை அடக்கும் காட்சி , யானையை அடக்கும் காட்சி - போடுங்க ஒரு whistle . நடிகர் திலகத்துக்கு அழ வைக்கும் காட்சி தான் வரும் , சண்டை போடா வராது என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டர்கள் , நம்மவரும் ராஜா , திருடன் , என் தம்பி, தியாகம் , தங்கை போன்ற பல படங்களில் அதை பொய் என்று நிருபித்து உள்ளார் , இந்த படத்தில் மீண்டும் ஒரு முறை நிருபித்து உள்ளார்
யானையை அடக்கும் காட்சியில் பெரும் பகுதி நம்மவர் டுப் இல்லாமல் நடித்து இருபது தெரிகிறது , காரணம் camera கோணத்தில்
ஹீரோ வுக்கும் டுப்க்கும் இருக்கும் வித்தியாசம் கண்டிப்பாக தெரியும் , skull shape காட்டி கொடுத்து விடும் , யானையை அடக்கும் காட்சியில் வேகம் என்றல் மின்னல் வேகம் தான் , அதுவும் அது தூக்கி போடும் போட்ட உடன் சுதாரித்து கொண்டு எழுந்து வருவதும் , மீண்டும் அது தன் பலத்தை காட்ட , நம்மவர் அதை அடக்கும் காட்சியும் - டாப்
-
கிளைமாக்ஸ் காட்சியில் மாட்டை அடக்கும் காட்சி - சூப்பர் அதிலும் மாட்டின் கொம்பை பிடித்து தொங்கும் காட்சி. மாடு தன்னை முட்டி விட்டு தான் தகர தடுப்பு கிட்ட விழுந்து விடுவதும் , மீண்டும் மாட்டை அடக்க ம்யற்சிபதும் - swept me off my feet (வாசு சார் விரிவாக எழுதி உள்ளார் )
வெறும் சண்டை படமா என்று கேட்கும் நண்பர்கள் தொடர்ந்து படிக்கவும் . நடிகர் திலகத்தின் கிராமத்து படம் என்று சொன்ன உடன் என் நினைவுக்கு வரும் படங்கள் பட்டிகாடா பட்டணமா, சவாலே சமாளி , பழனி (இது பார்க்க வில்லை ) பல நபர்களுக்கும் அப்படி தான் என் இந்த படம் பிடிக்க வில்லை என்று தெரியவில்லை . தனக்கு ஆன் குழந்தை பிறந்து இருப்பதை அறிந்து , அதை பார்த்த உடன் , தனக்கு 10 ஆட்கள் பலம் வந்து விட்டதை போன்று கர்ஜிக்கும் காட்சி , உணர்ச்சி மிகுதியில் குழந்தையை தன் தாயின் காலடியில் வைக்க போகும் காட்சியும் , தன் மனைவிடம் குழந்தை தன் குழந்தை சிவப்பாக இருக்கிறது , கருப்பாக இல்லை என்று சொல்லுவதும் , வீட்டை காலி செய்யும் சூழ்நிலையில் அனைவரும் இது குழ்ந்தை பிறந்த நேரம் என்று சொல்ல , நம்மவர் மட்டும் குழ்ந்தை பிறந்த நேரம் என் கடன் தீர்ந்து விட்டது என்று சொல்லுவது - typical நடிகர் திலகம் stamp . இது இளம் பருவத்தின் மிடுக்கில் நடிகர் திலகம் -
A typical village angry young man portrayed effectively by NT
-
இப்படி செல்லும் அவர் கதாபாத்திரம் பணக்காரன் அந்தஸ்தை அடைந்த உடன் கம்பீரமாக ஸ்டைல் ஆக , அதே சமயம் பெரிய மனிதர்களின் சவகாசம் வேண்டும் என்ற குணத்தையும் , யார் மனதையும் புண் படுத்த கூடாது என்ற குணத்தையும் கொடுகிறது
NT breeze life into the character Muttaiyaa particularly in the second half of the movie as middle aged man with subtle mannerisms
பட்டு வேஷ்டி கட்டி கொண்டு வரும் பொது கஷ்ட படும் காட்சியும் , தன் சொந்த நிலத்தில் உழுது சாப்பிடுவதும் , அவர் பழசை மறக்க வில்லை என்பதையும் காட்டுகிறது , வீரத்திலும் அவர் பழசை மறக்கவில்லை என்பதை அடுத்த அடுத்த காட்சிகளும் , கிளைமாக்ஸ் காட்சிகாலும் நிருபிகிறது ( அண்ணாமலை , படையப்பா படங்களுக்கு this may be a reference for hero character‘s transformation )
சிவகுமார் சொல்லி கொடுத்து நடிகர் திலகம் அங்கிலம் பேசும் காட்சி -கை தட்டாமல் இருக்க முடியவில்லை - (இவர் பள்ளி படிப்பை முடிக்காதவர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ) என்ன ஒரு command over language , அதை உச்சரிக்கும் பொது அவர் உடம்பை ஒரு சைடு ஆக நிப்பதும் , பேசி முடித்த உடன் உக்கர்த்து துடைத்து கொல்வதும் , மீண்டும் பேச சொன்ன உடன் தமிழில் பேசுவதும் ( அந்நியன் ஸ்டைல் )
ராஜா உடன் குடிக்கும் காட்சியில் அவர் நடிப்பு - வெட்கம் , சாப்பிட தெரியமால் தவிப்பதும் - nice
முதல் முறையாக குடித்து விட்டு மனிப்பு கேட்கும் காட்சி - சொர்க்கம் ஸ்டைல் . தன் மகன் சொத்தை கேட்கும் பொது கை எழுத்து போட்டு விட்டு நிற்கும் காட்சி - நான் எதிர் பார்க்காத காட்சி (பெரிய சண்டை - உபதேசம் எதிர் பார்த்தேன் ) காஞ்சனா உடன் பழகும் காட்சிகள் நல்ல ஆன் பெண் நட்புக்கு utharnam
மொத்தத்தில் perfect characterization - உபயம் - கொத்தமங்கலம் சுப்பு
-
பத்மினி :
மாட்டுக்கு ஒரு தார் பழத்தை கொடுக்க சொல்லும் போதே அவர் பணக்கார வீடு பெண் என்று தெரிகிறது , சிவாஜி பத்மினி இருவரும் கன்னல் பேசி கொள்வதும் -அதற்கு வார்த்தையை திரையில் உலவ விடுவதும் - அதில் நடிகர்களின் நடிப்பும் - கிளாஸ் . சண்டை போட்டு கல்யாணம் செய்து - அம்மாவை விட்டு கொடுக்காமல் , கணவரின் கெளரவம் கேடாமல் நடந்து கொண்டு நல்ல பெயர் எடுக்கிறார் - வண்டி ஒட்டும் லாவகத்தில் நான் மயங்கி பொன்னென் - மாட்டை அவர் நீல மணி என்று கூப்பிடுவது அழகு - upper கிளாஸ் நாகரிகம் புரியாமல் அவர் காஞ்சனா உடன் பேசு வதும் , விருந்து வேண்டாம் என்று போவதும் , கணவரை தப்பாக நினைப்பதும் என்று கொஞ்சம் possessive ஆக நடந்து கொளுகிறார் , மகன் சொத்தை எழுதி வாங்கி வந்த உடன் மகனை திட்டி விட்டு தவிக்கும் காட்சி - நல்ல பதி பக்தி
காஞ்சனா -
மிக அழகாக இருக்கிறார் . மிகவும் நேர்த்தியாக உடை அணிந்து இருக்கிறார் . இவரால் தான் கதை நகர்கிறது - இவர் படம் பிடித்த காட்சிகளில் நடிகர் திலகம் பார்த்து கமெண்ட் பண்ண அதை அவர் பார்த்து அவர் comment செய்யும் காட்சி , விருந்து சாப்பிடும் காட்சிகளில் அவர் சிவாஜிக்கு சாப்பிட கற்று கொடுப்பதும் - நல்ல காட்சிகள்
-
சிவகுமார் :
70 ல் வளர்ந்து வரும் நடிகர் - உயர்ந்த மனிதன் படத்திலும் நடிகர் திலகத்தின் மகன் பாத்திரம். அவர் மாடு பிடிக்க போகும் பொது படையப்பா படத்தில் வரும் அப்பாஸ் தலைவர் ரஜினி உரையாடல் தான் நினைவுக்கு வருகிறது . இவரால் பிரச்சனை வருமோ என்று நினைக்க , இவர் மிகவும் நல்லவராக இருப்பது மனதுக்கு இதம்
சோ , பாலையா , மனோரமா
சோ, பாலையா இருவரும் வில்லன்கள் , பாலையா செய்யும் தவறை பார்க்கும் பொது நமக்கே கோபம் வருகிறது , அதே மாதிரி அவருக்கு பிற்காலத்தில் நடக்கிறது
சோ அறிமுகம் ஆகும் நாடக காட்சி டாப்
ஆனால் இந்த இரு பெரிய நடிகர்களின் characterisation சற்று weak என்றே தோன்றுகிறது
சொல்லாமல்
தெரிய வேண்டுமே , நெல்லு பெருசா போன்ற பாடல்கள் - காதில்,கருத்தில் தென்
APN, சிவாஜி infact 90% of தில்லானா மோகனாம்பாள் கூட்டணியில் மீண்டும் தரமான படம்
-
தில்லானா மோகனாம்பாள் - நாதஸ்வரத்துடன் ஆரம்பித்தோம் - அந்த இசையுடன் சிறிதே தேவை இல்லாத , வேண்டாத இசையும் சேர்ந்து விட்டதனால் , பழனியை வேண்டி இந்த திரி மீண்டும் தோய கூடாது என்று அந்த விளையாட்டு பிள்ளையை வேண்டிக்கொண்டு மீண்டும் அந்த மங்களகரமான வாசிப்புடன் சில பழைய நினைவுகளை மீண்டும் அசை போடுவோம் - சில ஆவணங்கள் உங்களுக்காக
Contd....
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Its Thillana Mohanambaal all the way - Courtesy Ravi sir
one word- EXCELLENT, BREATH TAKING, SUPERB
-
நன்றி கோபால்!
பட்டத்திற்கும் பதவிக்கும் பாராட்டிற்கும்!
நண்பரிடமிருந்து கிடைக்கும் போது அந்த மகிழ்வே தனி!
அன்புடன்
-
ரவி,
பழனி பற்றி விரிவாக அலசியிருக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பு வெளிப்படும் படம் பழனி. நீங்கள் சொன்னது போல் இப்படியும் கூட ஒரு மனிதன் அப்பாவியாக இருப்பானா என கேட்க வைக்கும் அளவிற்கு ஒரு innocent character. சற்றே சோகம் அதிகமாக இருக்கும் என்ற குறையை தவிர்த்து விட்டுப் பார்த்தால் மிக நல்ல படம். படம் வெளிவந்த காலகட்டம் நமக்கு வினையாகி போனது. 1965-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி பொங்கலன்று உழவர் பெருமையை பேசும் இந்த படம் வெளி வந்தது. அந்த நேரத்தில்தான் தமிழகத்தில் மாணவர்களும் இளைஞர்களும் தூண்டி விடப்பட்டு மொழி போராட்டம் என்று அவர்களுக்கு தவறான தகவல்களையும் கொடுத்து அவர்களுக்கு தவறான வழிகாட்டுதலையும் காண்பித்துக் கொடுத்து தங்கள் அரசியல் லாபத்திற்காக அவர்களை பலியாடுகளாக மாற்றி இரண்டு தலைமுறை மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்த சமயம். அந்நேரத்தில் அந்த போராட்டம் காரணமாக பழனி பாதிக்கப்பட்டது.
ஆனாலும் ஒன்று. இந்தப் படம் அப்போதும் கூட வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நட்டத்தை தரவில்லை. லாபம் என்று சொல்லக் கூடிய overflow இருந்தது. இதை நாம் சொல்லவில்லை. இந்தப் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்த SSR அவர்களே சொன்னது. இந்தப் படம் வாங்குவதற்கு முடக்கிய பணம் எல்லாம் விநியோகஸ்தர்களுக்கு திருப்பி கிடைத்து விட்டது என்ற தொனியில் அவர் சொல்லியிருப்பார். எனது நினைவு சரியாக இருக்குமானால் நமது சுவாமி, திரு ஸ்ரீனிவாசன் மற்றும் நமது பேரவை சந்திரசேகர் ஆகியோரின் முயற்சியில் வெளிவந்த நடிகர் திலகம் - ஒரு வரலாற்றின் வரலாறு புத்தக்கத்தில் கூட அந்த SSR பேட்டி இடம் பெற்றிருக்கிறது. அதுவும் தவிர ஏராளமான கிராமங்களில் பொங்கல் பண்டிக்கையின் போது அந்தந்த ஊர் திரையரங்குகளில் பழனிதான் திரையிடப்படும். பழனி படத்தின் ஒவ்வொரு ஏரியா விநியோகஸ்தரும் பொங்கல் நேரங்களில் தங்களிடமுள்ள பிரிண்ட்கள் போதாமல் தவிப்பார்கள். இதை நேரிலேயே பார்த்திருக்கிறேன். இயக்குனர் பீம்சிங் அவர்களிடமே சிபாரிசுக்கு வருவார்களாம் தியேட்டர் அதிபர்கள் என்று அதை நேரிலே பார்த்த பீம்சிங் மகனும் எடிட்டருமான B.லெனின் சொல்லியிருக்கிறார்.
ஆசிய ஜோதி பண்டிட் ஜவகர்லால் அவர்களின் மறைவிற்கு பிறகு பாரதப் பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பிரபலமான ஜெய் ஜவான்! ஜெய் கிஸான் என்ற முழக்கம்தான் இந்த படத்தின் ஆதார சுருதி. இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியிலே வரும் ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் பாடலில் குறிப்பாக இறுதி சரணத்தில் இதை தெளிவாக உணரலாம். தமிழ் சினிமா திரைப்பட பாடல்களில் ஒரு மைல்கல் இந்தப் பாடல். பின்னணி பாடகர்களில் மும்மூர்த்திகளாக விளங்கிய சீர்காழி,TMS மற்றும் PBS ஆகிய மூவரும் இணைந்து என் சிற்றறிவிற்கு எட்டிய வரை இரண்டு பாடல்களைத்தான் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் ஒன்று இந்தப் பாடல். [மற்றொன்று குழந்தைக்காக படத்தில் வந்த ராமன் என்பது கங்கை நதி]. தமிழ் சினிமாவின் அமரத்துவம் வாய்ந்த மிக இனிமையான பாடல் இது.
எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்று உண்டு. ரவி சொல்லியிருப்பது போல் நகரத்தில் பணத்தை தொலைத்து விட்டு நிற்கும் கிராமவாசியிடம் நீ எந்த ஊரு என்று நடிகர் திலகம் கேட்பார். மதுரை பக்கம் ஒரு ஊரை சொல்லுவார் அந்த நபர். திரும்பு ஊருக்கே போகிறேன் என்பார். உடனே ஓடு ஓடு என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு ஒருவனையாவது காப்பாற்றினோமே என்ற சின்ன சந்தோஷத்தை முகத்தில் காட்டுவார். அது ஒரு நிமிடத்திற்கும் குறைவானதுதான். ஆனால் அதில் அவர் புரியும் ஜாலம் இருக்கிறதே! ஓஹோ!
ஒரு சில வருடங்களுக்கு முன்பு மதுரை சென்றிருந்தேன். காலை 11 மணி சமயத்திற்கு வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்ல வேண்டிய ஒரு வேலை. புறப்படும் முன் TV-யின் சானலை மாற்றியபோது Z தமிழ் சானலில் பழனி படம் ஆரம்பம். சரி ஆறோடும் மண்ணில் பாடல் முடிந்து போகலாம் என்று பார்த்தேன். அதன் பிறகு ஓரிரண்டு காட்சிகள் முடிந்து போகலாம் என்று பார்த்தேன், பிறகு இந்த பாட்டு முடிந்து போகலாம் என்று உட்கார்ந்தேன். இப்படியே ஓடி படம் முழுக்க பார்த்தவுடன்தான் எழுந்திருக்கவே முடிந்தது. வெளி வேலை cancel ஆகிப் போனது. நானே எதிர்பார்க்காமல் அப்படி ஒரு ஈர்ப்பு.
சின்ன கண்ணன்,
நீங்கள் சொன்னது சரிதான். இங்கே பலமுறை குறிப்பிட்டிருப்பது போல நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாள் விழா 1970-ம் வருடம் கொண்டாடப்பட்ட போது ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அதில் பராசக்தி முதல் அந்த அக்டோபர் வரை வெளியாகியிருந்த நடிகர் திலகத்தின் 139 படங்களைப் பற்றிய [பராசக்தி முதல் 1970 ஆகஸ்ட் 15 அன்று வெளியான ராமன் எதனை ராமனடி வரை] நடிகர் திலகத்தின் ஒரு வரி விமர்சனத்தை அந்தந்த படங்களின் ஸ்டில்களோடு வெளியிட்டுருந்தனர். அதில்தான் பழனி பற்றி நீங்கள் சொன்ன கமன்ட் வந்தது. அதை முதலில் படித்த போது உப்கார் இந்திப் படத்தின் தழுவலே பழனி என்றே நினைத்திருந்தேன். பின்னாட்களில்தான் பழனியின் தழுவலே உப்கார் என்று தெரிய வந்தது. அதை ஒரு முறை திரு லெனின் அவர்களுடன் உரையாடும் போது உறுதிப்படுத்திக் கொண்டேன்.
இரண்டு வரிகளில் நன்றி சொல்லி பதிவிடலாம் என்று நினைத்த என்னை நினைவலைகளில் நீந்த வைத்ததற்கு நன்றி ரவி.
அன்புடன்
ராகுல், வசந்தத்தில் ஒரு நாள் நன்று. விளையாட்டுப் பிள்ளை படித்து விட்டு சொல்லுகிறேன்.
-
100 Days Films List
Film Name /
Place Name(s)
(1952-1960)
1) Parasakthi Chennai(2), Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Colombu, Yazh Nagar
2) Thirimbipar Selam
3)Manohara Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Kolombu
4) Kalyanam Panniyum Brahmachari Chennai, Trichy, Selam
5) Ethir Parathathu Chennai, Trichy
6) Kaveri Vellor
7) Mangaiyar Thilagam Chennai(3), Trichy, Selam
8) Pennin Perumai Chennai(3), Trichy, Selam
9) Amaradeepam Chennai, Trichy
10) Vanangamudi Chennai(2), Trichy
11) Uthamaputhiran Chennai(2), Madurai, Mysore
12)Pathibakthi Chennai, Madurai, Trichy, Kovai
13)Sampoorna Ramayanam Madurai, Trichy, Selam
14) Sabash Meena Chennai, Selam
15) Veerapandiya Kattabomman Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Dindukal, Nagarkovil, Vellor, Tirunelveli, Kerala, Colombu,Yazh Nagar
16)Maragadham Chennai
17)Bagapirivinai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Tirunelveli, Colombu
18) Irumbuthirai Kovai
19)Deivapiravi Chennai(3), Trichy, Selam, Kovai
20)Padikkatha Methai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
21)Vidi Velli Chennai(2), Madurai
(1961-1970)
22)Pava Mannippu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli,kanchipuram,Ramanadhapuram, Bangalore, Kerala, Colombu
23)Pasamalar Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli, Erode, Bangaluru, Mysore, Colombu
24)Sri Valli Colombu
25)Marutha Naatu Veeran Kerala
26)Palum Pazhamum Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Bangalore, Colombu
27) Paarthal Pasi Theerum Madurai, Selam
28) Padithal Mattum Pothuma Chennai, Madurai, Trichy, Selam
29)Alayamani Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
30)Iruvar Ullam Chennai, Madurai, Colombu
31) Annai Illam Chennai
32) Karnan Chennai(3), Madurai
33)Patchai Vilakku Chennai(4), Madurai, Trichy, Kovai,
34)Kaikodutha Deivam Chennai(4), Madurai, Trichy, Kovai
35) Pudhiya Paravai Chennai
36) Navarathri Chennai(4), Madurai, Trichy
37) Santhi Chennai
38)Thiruvilaiyadal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Tirunelveli, Nagarkovil, Kumbakonam, Karur
39) Motar Sundaram Pillai Madurai, Trichy
40)Saraswathi Sabadham Chennai(3), Madurai, Trichy, Selam
41) Kanthan Karunai Chennai(2), Madurai, Trichy
42)Iru Malargal Chennai, Trichy, Selam
43) Ooty Varai Uravu Chennai, Madurai, Trichy, Kovai
44) Galatta Kalyanam Chennai(2)
45) Thillana Mohanambal Chennai(3), Madurai, Trichy, Kovai, Colombu
46) Uyarntha Manithan Chennai
47)Deivamagan Chennai(3), Madurai, Trichy
48) Thirudan Colombu
49)Sivantha Mann Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Thuthukudi
50) Dharti(Hindi) Delhi(4), Bombay(3), Kolkatta
51) Viyetnam Veedu Chennai(3), Trichy, Selam, Kovai
52) Raman Ethanai Ramanadi Madurai, Colombu
53) Engirundho Vandhal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
54)Sorkkam Chennai, Madurai, Trichy, Selam, Tirunelveli
(1971-1980)
55) Kulama Gunama Chennai, Madurai, Trichy, Selam
56) Savale Samali Chennai(3), Madurai, Trichy, Selam, Kumbakonam, Colombu, Yazh Nagar
57) Babu Chennai(3), Trichy, Colombu, Yazh Nagar
58) Raja Chennai(2), Madurai, Trichy, Colombu
59) Gnana Oli Chennai
60)Pattikkada Pattanama Chennai(3), Madurai, Trichy, Selam, Tirunelveli, Colombu, Yazh Nagar
61) Thavapudhalvan Chennai
62) Vasantha Maligai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Erode,Mayavaram, Colombu, Yazh Nagar
63) Needhi Chennai
64) Bharadha Vilas Chennai(3), Madurai, Trichy, Selam
65) Engal Thanga Raja Chennai(3), Madurai, Trichy, Selam, Nagarkovil, Thirunelveli, Colombu, Yazh Nagar
66)Gouravam Chennai(3), Madurai, Selam
67) Vani Rani Madurai
68) Thangapadakkam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Bangaluru(2), Colombu, Yazh Nagar
69) En Magan Madurai
70) Avanthan Manithan Chennai(3), Madurai, Trichy, Selam, Yazh Nagar
71)Mannavan Vanthanadi Chennai(3)
72) Sathyam Srilanka
73)Uthaman Madurai, Colombu, Yazh Nagar, Mattu Nagar
74) Deepam Chennai(3), Madurai, Colombu, Yazh Nagar
75) Annan Oru Koyil Chennai(3), Madurai, Trichy, Selam,kovai,Thanjavore,Kumbakonam.
76) Andhaman Kathali Chennai(3), Madurai, Selam, Kovai, Colombu, Yazh Nagar
77) Thiyagam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelvelli
78) General Chakaravarthi Chennai, Yazh Nagar
79) Thatcholi Ambu(Malayalam) Kerala
80) Pilot Premnath Chennai, Colombu(2), Yazh Nagar
81) Thirisoolam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Mayavaram, Thirupur, Pollachi, Nagarkovil, Thiruvannamalai, Pondy, Colombu, Yazh Nagar
82) Naan Vazhzvaippen Chennai
83) Pattakkatthi Bairavan Colombu, Yazh Nagar
84) Rishimoolam Chennai(3)
85)Viswaroopam Chennai
(1981-1990)
86) Satthiya Sundaram Chennai, Selam
87)Kalthoon Chennai(2), Madurai, Selam, Kovai
88) Keezhvanam Sivakkum Chennai(2), Madurai
89) Va Kanna Va Chennai(3)
90) Theerppu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelveli
91) Neevuru Kappina Neppu(Telugu) Andhra
92) Bejavaada Boppuli(Telugu) Andhra
93) Needhipadhi Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
94) Sandhippu Chennai(3), Madurai, Trichy
95) Miruthanga Chakravarthy Chennai
96) Vellai Roja Chennai(6), Madurai, Trichy, Selam, Kovai, Pondy, Thiruvottriur
97) Thiruppam Chennai
98) Vazhkkai Chennai(3)
99) Dhavanik kanavugal Chennai
100) Bandham Chennai
101) Mudhal Mariyadhai Chennai, Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Pondy, Tirunelveli
102) Padikkadhavan Chennai(5), Madurai, Kovai
103) Sadhanai Chennai(2)
104) Marumagal Chennai(2)
105) Viswanatha Nayakudu (Telugu) Andhra
106) Agni Puthrudu (Telugu) Andhra
107) Jallkikattu Chennai(2)
108) Pudhiya Vanam Chennai
(1991-1999)
109) Devar Magan Chennai(5), Madurai(2), Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Vellor, Tirunelveli, Nagarkovil, Bombay
110) Oru Yathramozhi(Malayalam) Kerala
111) Once More Chennai(2)
112) Padaiyappa
-
ராகுல் ராம் ..விளையாட்டுப் பிள்ளை அலசல் நன்று..ராவ் பகதூர் சிங்காரம் என கலைமணி என்ற பெயரில் விகடனில் வந்த தொடர்கதை.. கோபுலுவின் உயிர்ச்சித்திரங்களுடன் இருக்கும்..ஆனால் அதில் வளையல் சொல்லி ஹீரோ ஹீரோயினை கரெக்ட்(?!) பண்ணுவார்..இதில் குடுகுடுப்பையாக மாற்றியிருப்பார்கள் (என நினைக்கிறேன்).. ம்ம் காஞ்சனா குளிக்கின்ற குளியலறை..அடேங்கப்பா எவ்ளோ பெரிசு (கண்ணா..உன்னைத் திருத்தவே முடியாதுடா!!)ம்ம் சொல்லாமல் தெரிய வேண்டுமே...
ரவி..தி.மோ ஸ்டில்ஸ் + தகவல்கள் அமர்க்களம்.. நடத்துங்கள்..
கோபால் லிஸ்ட்டெல்லாம் கொடுத்து அசத்துகிறீர்கள்..நன்றி..பார்க்காத படங்கள் என்ன என்று பார்க்க்கிறேன்..
முரளி சார்.. நன்றி..கன்ஃபர்ம் பண்ணியமைக்கு.. ஓ..பழனியில் இருந்து தான் இந்திக்குப் போனதா..அது எனக்குத் தெரியாது..ஆனால் உத்தமன் ஆகலே லக் ஜாவிலிருந்து தானே..
-
டியர் ரவி சார் ,
தங்களுடைய பழனி திரைப்படத்தைப் பற்றிய விமர்சனம் பிரமாதம். விவசாயிக்கு உண்மையிலேயே பெருமை சேர்க்கும் படம். நடிகர்திலகத்தின் பேச்சு வழக்கிலிருந்து, சகோதரப் பாசத்தில் உருகும் கட்டத்திலும், திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவர் நெஞ்சையும் உருக்கிவிடுவார் நடிகர்திலகம்
தில்லானா மோகனாம்பாள் கட்டுரைகள், விளம்பரங்கள் என்று பலவற்றை அளித்து ஜமாய்த்துள்ளீர்கள். அதற்கும் நன்றி.