போகிற போக்கில் அப்படியே அள்ளி விடக்கூடாது நண்பரே
வாக்கு விபரம் இதோ
chandraseharan durai 36981
svajiganesan alias ganesan v.c. 26338
டிபாசிட் வாங்குவதென்றால் என்னவென்று தெரிந்து கொண்டு பேசுங்கள் .
நான் சிவாஜி வெறியன் என்றாலும் அரசியல் மாற்றுக்கருத்துள்ளவன் தான் .சிவாஜியை தோற்கடித்த திமுக வேட்பாளரே தன்னை ஒரு சிவாஜி ரசிகன் என்று பிரகடனப்படுத்தியது வரலாறு . தேர்தலில் தோல்வி அடைவது அந்த சூழ்நிலையை பொறுத்தது . ஏன் சிவாஜி தோல்வி அடைந்த போது அவர் கூட்டணி வைத்ததே எம்.ஜி.ஆரின் மனைவியோடு தான் .. எம்.ஜி.ஆரின் மனைவியும் தோல்வியடைந்தார் என்பதை நினைவில் கொள்க ..அது மட்டுமல்ல அறிஞர் அண்ணா தோற்றிருக்கிறார் ..பெருந்தலைவர் காமராஜர் தோற்றிருக்கிறார் .. ஏன் உங்கள் புரட்சித்தலைவி முதல்வராக இருந்த பின்னர் தோற்றிருக்கிறார் .. அதனால் தோற்ற இவர்களெல்லாம் வெற்றி பெற்ற ராமராஜன் , எஸ்.எஸ் சந்திரன் , எஸ்,வி.சேகர் , ராதாரவி இவர்களை விட மக்கள் செல்வாக்கு குறைந்தவர்கள் என ஒருவர் கருதுவாரேயானால் அவர்களின் அரசியல் அறிவு குறித்து நாம் நகைக்கத் தான் முடியும் .