http://i59.tinypic.com/ml4hu9.jpg
Printable View
எம்.ஜி.ஆருடன் பலபடங்களில் உடன் நடித்த நடிகை லதா, அவர் ”வருவான் வடிவேலன்” என்ற படத்திற்கு சிறந்த நடிகையாக (சென்னை சினிமா ரசிகர் சங்கம், முருகாலயா சபா, ஃபிலிம் பேர் போன்ற 3 பெரியநிறுவனங்களால்) தேர்ந்தெடுக்கப்பட்டார். இது மிகப்பெரிய நிகழ்வு. இந்த நிகழ்ச்சியை சாதாரணமாக செய்துவிடக்கூடாது என்பதில் எனக்கொரு ஆர்வம். எனவே லதாவிடம், ”நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆரை தலைமையேற்கும்படி அழைக்கலாமா?”, என்று கேட்டேன். அப்போது எம்.ஜி.ஆர். முதல் மந்திரியாக இருந்தார். ஆகவே, லதாவும் பயப்பட்டார், “நான் அவருடன் பலபடங்களில் நடித்திருந்தாலும், இப்போது முதலமைச்சராக ஆனபின்பு என்னால் அவரைச் சந்திக்க இயலுமா” என்று சொன்னார். அவர் சொன்னதும் உண்மைதான் எம்.ஜி.ஆரை யாராலும் அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது.
சிவகுமாரின் நூறாவது படம் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” வெளியான சமயம். படமும் நன்றாக ஓடி நல்ல வசூலையும், பேரையும் அப்படக்குழுவிற்கு அள்ளித்தந்தது. ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் நூறாவது நாள் வெற்றிவிழாவிற்கு எப்படியாவது எம்.ஜி.ஆரை தலமையேற்கச் செய்யவேண்டும் என்பதே சிவகுமாரின் விருப்பம். அதே வேளையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நல்லமதிப்பெண் எடுத்த மாணவர்கள் பத்துபேருக்கு அவரவர் அம்மாவின் பேரிலேயே பணத்தை டெபாஸிட் செய்துவிட்டு அதன்மூலம் வருகின்ற வட்டிப்பணத்தை எடுத்து மாணவர்களின் படிப்புச்செலவிற்கு உபயோகப் படுத்திக்கொள்ளலாம், என்ற திட்டத்தை வெற்றிவிழாவில் அறிமுகப்படுத்த வேண்டும், என்ற யோசனையில் சிவகுமார் இருந்தார். இதேவிஷயத்தை எம்.ஜி.ஆரிடம் சொன்னதும் தாய்மார்கள் மீது அளவற்ற மதிப்பு வைத்திருந்த எம்.ஜி.ஆர் உடனே மறுப்பின்றி ஒத்துக்கொண்டார்.
இந்த விஷயத்தை நான் லதாவிடம் சொன்னேன். சிவகுமாரின் நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர் வருவது உறுதியான காரணத்தினால், லாதாவையும் ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் நூறாவது நாள் விழாவிற்காக அழைத்திருந்தேன். அவரும் ஒத்துக்கொண்டார்.
நான் சிவகுமாருக்காக அவர் நடித்த மொத்தபடங்களின் தொகுப்புகளையும் மலராக வெளியிடுகின்ற வேலையில் இருந்தேன். இதேபோல என்னிடம் நூறு புத்தகங்கள் தயாராகவும் இருந்தது. புத்தகத்தை சிவகுமாரிடம் அனைவரின் மத்தியிலும் ஒப்படைப்பதாகத்தான் ஏற்பாடு. எம்.ஜி.ஆர் அரங்கினுள் நுழைகின்றார். விழா மேடையிலிருந்த ஏ.வி.மணியன் என்பவர், எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன் ஏற்பட்ட படபடப்பில், என்ன செய்தாரென்றால் பிலிம்நியூஸ் ஆனந்தன் தொகுத்த மலரை (சிவகுமார் நடித்த நூறு படங்களின் தகவல்கள், புகைப்படங்கள் அடங்கிய புத்தகம்) எம்.ஜி.ஆர் பெற்றுக்கொள்வார் என்று தவறுதலாகச் சொல்லிவிட்டார். நியாயமாக அதனை சிவகுமார் தான் பெற்றிருக்க வேண்டும், அவருக்குத்தான் அது நூறாவது படம், அவருக்காக தயாரிக்கப்பட்டது தான் இந்தப் புத்தகம். இத்தகைய குளறுபடிகள் நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே லதாவும் வந்துவிட்டார்.
எம்.ஜி.ஆர், லதாவைப் பார்த்ததும், மேடைக்குவரச் சொன்னார். எம்.ஜி.ஆரின் அருகிலேயே இருக்கை ஒன்று காலியாக இருந்த காரணத்தினால், லதாவை அங்கு அமரும்படி சொன்னார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு லதாவும், எம்.ஜி.ஆரிடம் தன் “வருவான் வடிவேலன்”, திரைப்படத்திற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சொல்லிவிட்டார். புத்தகம் மாறிப்போன குழப்பத்தில் இருந்த எனக்கு இது எதுவும் தெரியாது.
அடுத்த நாள் காலை ஏழுமணிக்கு லதா, அவர் இல்லத்திற்கு என்னை வரச் சொன்னார். ”எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிக்கு வருவதாகவும் ஒத்துக்கொண்டார், ஆனால் மூன்று நாட்களுக்குள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முடித்துவிட வேண்டும், என்றும் பின்பு எனக்கு கட்சிவேலைகள் நிறைய இருக்கின்றன”, என்று எம்.ஜி.ஆர். சொன்னதாக லதா என்னிடம் சொன்னார். மூன்று நாட்களுக்குள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் என்பது மிகவும் கஷ்டம்தான் ஆனாலும் நான் முடித்து தருவதாக ஒப்புக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச்செய்ய ஆரம்பித்தேன்.
அந்நிகழ்விற்கு 200க்கும் அதிகமான பத்திரிக்கையாளர் நண்பர்கள் வந்தார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிபேசுகின்ற மக்களும், பத்திரிக்கை நண்பர்களும் வந்திருந்தனர். எம்.ஜி.ஆர் சொன்னபடியே தலைமையேற்று நிகழ்வினை சிறப்பாக நடத்தி வைத்தார். பின்னர் கடைசியாக பேசிய எம்.ஜி.ஆர், என் செயலைப்பாராட்டி மேடையிலேயே ரூபாய் 20,000 தொகையை அன்பளிப்பாக அளித்தார். இவ்வளவு பெரிய தொகையை அன்பளிப்பாக பெற்றுக்கொள்வது இதுவே முதல்முறை. உடனிருந்த பத்திரிக்கையாளர்கள் எல்லாமே, பிலிம்நியூஸ்ஆனந்தன்தான் அடுத்த சினிமா மந்திரி, என்றும், ”சினிமா மந்திரி பிலிம்நியூஸ் ஆனந்தன் வாழ்க!”, என்றும் கோஷமிட தொடங்கி விட்டார்கள். அடுத்தநாள் பேப்பரிலும் இதே செய்திகள்தான் அடிபட்டன.
https://encrypted-tbn2.gstatic.com/i...Jx3YNTquVlrF8g
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.லோகநாதன் சார், திரு.ஜெய்சங்கர் சார், உங்களை உரிமையுடன் கேட்கிறேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். இது நியாயமா?....காஞ்சித் தலைவன் பற்றிய உங்கள் கருத்துக்களைத்தான் சொல்கிறேன். நறுக்குத் தெரித்தாற்போன்ற அருமையாக விமர்சன கருத்துக்களை எழுதும் நீங்கள் இருவரும் உங்கள் திறமைகளை மறைத்துக் கொண்டு அதிகம் எழுதாமல் இருக்கிறீர்களே? நியாயமா? நேரமின்மை உங்கள் கரங்களை கட்டிப் போட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். இருந்தாலும் விடுமுறை தினங்களிலாவது நேரம் ஒதுக்கி, தலைவரின் படங்கள் பற்றிய கருத்துக்களை எழுத வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன். காஞ்சித் தலைவன் பற்றிய உங்கள் இருவரின் கருத்துக்களில் இருந்து நான் பார்க்காத சில கோணங்களை தெரிந்து கொண்டேன். திரு.ஜெய்சங்கர் சார், தங்கள் தாயார் விரைவில் முழு நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
திரு. லோகநாதன் சார், அழகுத் தலைவனின் அற்புத படங்களை பதிவிட்டு அசத்தியுள்ளீர்கள். விக்கிரமாதித்தன் படம் பற்றிய தங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். புதுமைப்பித்தன் புகைப்படத்தை வெளியிட்டு அதுபற்றிய செய்தி பின்னர் பதிவிடப்படும் என்று ஆவலைத் தூண்டியுள்ளீர்கள். அதையும் எதிர்பார்க்கிறேன். தாங்கள் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் புகைப்படத்தில் தலைவருக்கு அருகில் நிற்கும் நடிகர் பார்த்திபனின் பேட்டியை இன்று காலை சன் தொலைக்காட்சியில் பார்த்தேன். காலம் மனிதர்களின் தோற்றத்தை எப்படி மாற்றி விடுகிறது?
திரு. செல்வகுமார் சார், வழக்கம்போல ஸ்டில்களை வெளியிட்டு அசத்துகிறீர்கள். காஞ்சித் தலைவன் அட்டகாச ஸ்டில்லுக்கு நன்றி. திரு. ராமமூர்த்தி சார் சொன்னதுபோல ஸ்டில்ஸ் என்றால் திரு. செல்வகுமார் சார்தான்.
காஞ்சித் தலைவன் மல்யுத்த சண்டைக் காட்சியை தரவேற்றிய திரு.யுகேஷ்பாபு அவர்களுக்கு நன்றிகள் பல.
சைலேஷ் பாசு சாரின் ‘ஒரு லாரி மோர், ஒரு லாரி தண்ணீர்’ பதிவு, தலைவரின் கருணைக்கு சான்று. வைகை அணையில் டைரக்டர் ப. நீலகண்டனுடன் கூட்டத்தை பார்க்கும் தலைவருக்கு முன்னால் மக்கள் கடல். இந்தக் கடலை வைகை அணை எப்படி தாங்கும்? கையை பின்புறமாக கட்டி நிற்கும் தலைவர் செம ஸ்மார்ட். ஒரு மனிதன் பின்பக்க தோற்றத்தில் கூட இவ்வளவு ஸ்டைலாக இருக்க முடியுமா?
திரு.முத்தையன், உங்கள் பதிவுகள் அற்புதம். நீங்கள் பதிவிட்டுள்ள நேரங்களை பார்த்தால் மிரட்சியாக இருக்கிறது. தூங்கவே மாட்டீர்களா? உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்.
திரு.எஸ்.வி. சார், தலைவரைத் தவிர வேறு சிந்தனையே கிடையாதா? விக்கிமாதித்தன் வெளியீட்டு தினத்தை நினைவுபடுத்தியதற்கு நன்றி.
அண்ணாவின் தம்பிகள் சிங்கிள் டீயை குடித்து விட்டு பம்பரமாக சுழன்று வேலை பார்க்கிறார்கள் என்று அன்றைய முதல்வர் பக்தவத்சலம் கூறினார். அதை இப்போதும் நிரூபித்து வருகிறோம் என்று தோன்றுகிறது.
பிலிம் நியூஸ் ஆனந்தன் கட்டுரையை வெளியிட்ட நண்பர் திரு. ஜி.கிருஷ்ணா சார் அவர்களுக்கு சிறப்பு நன்றி. ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு ரூ.20,000த்தை மேடையிலேயே அன்பளிப்பாக தலைவர் வழங்கியிருக்கிறார். வள்ளல்.... வள்ளல்தான்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் சார்
எல்லோரையும் பாராட்டும் உங்களின் பண்புக்கு நன்றி . உங்களுக்கு ஒரு வியப்பான செய்தி .
மக்கள் திலகத்தின் வீர தீர சண்டை காட்சிகளை பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து வீடியோ கட்டுரை விரைவில்
நமக்கு பரிசாக தர நம் இனிய நண்பர் ஒருவர் தன்னை முழுமையாக ஈடு படுத்தி கொண்டு வருகிறார் என்பதை
மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன் .மக்கள் திலகத்தின் உலக புகழ் வரலாற்றை அந்த ''மாய கண்ணன் ''
நமக்கு தங்க சுரங்கமாக வழங்குவார் . விரைவில் எதிர்பார்ப்போம் .
தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி வினோத் சார். என்னால் ஓரளவு ஊகிக்க முடிகிறது. சாதாரண மக்கள் மட்டுமல்ல, நமது போற்றுதலுக்குரிய தெய்வ வடிவங்களாகத் திகழும் நாதனும், தேவனும், பரமாத்மாக்களும் கூட தலைவரின் பெருமைகளை உணர்ந்து அவருக்கு புகழ் சேர்க்கும்போது....... வேறு என்ன சொல்ல?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ஒரே நாளில் இரண்டு ஜாம்பவான்கள் நடித்த பழைய படங்களை பார்த்த என் விமர்சனம் .
இன்றைய தலை முறை ரசிகனான நான் பழைய படங்கள் பார்த்ததில்லை .சில சமயம் டிவியில் பார்த்து உள்ளேன் .
தீபாவளி அன்று வித்தியாசமாக பழைய படம் பார்க்க விரும்பி எம்ஜிஆர் நடித்த சங்கே முழங்கு -சிவாஜி நடித்த
ராஜா படங்களை டிவிடியில் பிக் ஸ்க்ரீனில் போட்டு பார்த்தேன்
சங்கே முழங்கு எம்ஜிஆர் - லக்ஷ்மி - ஜோடி
அசோகன் - வி.கே . ராமசாமி வில்லன்கள்
சோ - காமெடி
கோபாலகிருஷ்ணன் - வசனம்
நீலகண்டன் - இயக்கம்
எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை
கிளப் டான்சர் - ஹெலன்
எல்லா பாடல்களும் பிரமாதம்
எம்ஜிஆரின் முருகன் + கிர்பால்சிங் -அசத்திவிட்டார்
பயில்வான் ஆசாத்திடம் மோதும் சண்டை சூப்பர்
எம்ஜிஆரின் இயல்பான நடிப்பு பிளஸ் பாயிண்ட்
பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் கண்ணை கவருகிறது .
கிளைமாக்ஸ் - கோர்ட் காட்சிகள் - எம்ஜிஆரின் குறுக்கு விசாரணை .. அபாரம் .
எம்ஜிஆர் ரசிகர்கள் ஏன் எம்ஜிஆரை இந்த அளவிற்கு நேசிக்கிறார்கள் என்பதையும் ஆண்டுகள் உருண்டோடினாலும்
எம்ஜிஆர் ஒரு வசூல் சக்கரவர்த்தி என்பதை அவருடைய பழைய படங்கள் இன்றளவும் சாதனைகள் புரிந்து
வருவதையும் உணர முடிகிறது .
முழு படத்தையும் பார்த்து விட்டு சற்று இடை வெளிவிட்டு சிவாஜி கணேசனின் ராஜா படம் பார்த்தேன் .
சிவாஜி கணேசன் - ஜெயலலிதா ஜோடி
ரங்கராவ் - மனோகர் - பாலாஜி வில்லன்கள்
பயில்வான் - ரந்தாவா
கிளப் டான்சர் - பத்மா கண்ணா
சந்திர பாபு - காமெடி
சி , வி ராஜேந்திரன் - இயக்கம்
விஸ்வநாதன் - இசை
டைட்டில் காட்சி - பிரமிக்க வைத்தது . சிவாஜி கணேசனின் அறிமுகம் அட்டகாசம் . கேரளா வெளிப்புற படபிடிப்பு
காட்சிகள் குளுமை .அண்ணன் தம்பி கதை .போலீஸ் - துரத்தல் - கொஞ்சம் காதல் - மீண்டும் அண்ணன் - தம்பி
ஒன்று சேருதல் . பாலாஜி வித்தியாசமாக நடித்திருந்தார் . சிவாஜி - மனோகர் - பாலாஜி மூவரின் கிருதா சூப்பர் .
பாடல்கள் இரண்டு நன்றாக இருந்தது . நல்ல பொழுது போக்கு படம் .
ஒரே நாளில் இரண்டு படங்களை பார்த்தபின் கத்தி - பூஜை படங்களை பார்க்க மனம் இடம் கொடுக்க வில்லை
சங்கே முழங்கு படத்தில் இடம் பெற்ற பாடல் - தமிழில் அது ஒரு இனிய கலை பாடலை முணு முணுத்து
கொண்டு வருகிறேன் . கிர்பால்சிங் மனதில் இடம் பெற்று விட்டார் ...
courtesy - mukilan - net
Numerous posts mostly by all members one and half days I was not online so much pages completed, great work. Thanks to everyone.
I wish to thank Muthaiyan sir on uploading MGR disguises in alphabetical order.
With Muthaiyan's help only I had complied some and uploaded it as a post in srimgr.com below is the link.
http://mgrroop.blogspot.in/2014/07/d...es-of-mgr.html
Makkal Thilagam team is in full form today.
Any idea Sailesh Sir which movie first showed Puratchi Nadigar in the title card?
இந்த வார குங்குமம் இதழில் புகைப்படங்களுடன் வெளியான செய்தி.
-------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/ea5q2c.jpg
http://i59.tinypic.com/2q3yknt.jpg
http://i58.tinypic.com/huoksl.jpg
http://i62.tinypic.com/23wwmv.jpg
நடித்தேன் என்றார்.
http://i60.tinypic.com/jt79ft.jpg
http://i59.tinypic.com/9hp4hy.jpgMaduraiyai Meetta Sundarapandiyan
http://i58.tinypic.com/il9bnb.jpgMalaikallan
http://i57.tinypic.com/2cru9l5.jpgAdimaipen
http://i61.tinypic.com/2qdmmgx.jpgChakravarthi Thirumagal
http://i62.tinypic.com/amcy8x.jpgMandhirikumari