காலப்ரமாணம், timing என்பதெல்லாம் பெரிய சமாசாரங்கள்.
பாடகர் எந்த வகை பட்டவர் என்று தெரிந்து, அவர் பாடும் பாணிக்கேற்ப வாயசைத்தலே சிறப்பு. தன்னுடைய பாணியிலேயே, எல்லா பாடகர்களுக்கும் மற்ற நடிகர்கள் நடிக்க, பாடகர் பாடும் பாணியை கவனித்து ,அதற்கேற்ப வாயசைத்தலே நடிகர்திலகத்தின் மேதைமை. இந்த திராவிட மன்மதனின் ,டி.எம்.எஸ் பாடலுக்கான வாயசைப்பை ,வசந்த முல்லை போலே வந்து, மலர்ந்தும் மலராத,என்னை யாரென்று,பொன்னை விரும்பும்,நீயே உனக்கு என்றும்,சின்னஞ்சிறிய ,கண்ணெதிரே,மடிமீது, அந்த நாள்,உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடல்களில் கவனியுங்கள். பாடகர் open voice இல் பாடுகிறாரா,bass voice ஆ ,nasal tone ஆ என்று கவனித்து அவர் பாடும் பாணி இருப்பதுதான் இந்த வகை வர்ணனைகளுக்கு பொருந்தும்.
அதை தவிர பொட்டு வைத்த முகமோ, நினைவாலே சிலை செய்து என்ற எஸ்.பீ,ஜேசுதாஸ் இவர்களுக்கு வேறு வகை. என்னவொரு கலைஞரைய்யா அவர்.
பத்திரிகை துறையில் இருந்து,நம் நண்பர் போல நடித்து கொண்டிருக்கும், நடிகர்திலகத்தின் மேல் வன்மம் கொண்டு அவர் நினைவு நாளுக்கு நண்பர்களுக்காக ஒரு பதிவு கூட போடாத கலை போன்றவர்கள் ,தங்கள் கொண்ட தொழிலுக்கு வெறுப்பு-வெறுப்பற்ற நேர்மையை காட்டுவார்களா? பொய்யும் ,புனைசுருட்டுமல்லவா ,சரித்திரமாக போகிறது?
என்னை உதாரணம் காட்ட தேவையில்லை. நான் எங்கும் சென்று நண்பன் போல் நடிக்கவில்லை. விருப்பு-வெறுப்புகள்,தேர்ந்தெடுப்புக்கள்,நல் ரசனை உள்ளதால் ,தங்க தட்டில் வைத்து வழங்க பட்ட பத்திரிகை துறையை ஒதுக்கியவன் நான்.
தயவு செய்து,தனிப்பட்ட பாராட்டுரைகளுக்கு அடிமை படாமல் ,விழிப்புடன் இருக்க வேண்டியது நமது ரசிகர்களுக்கு மிக மிக அவசியம்.கலை போன்றவர்களுக்கு என் வலுவான கண்டனங்கள்.
சுதாங்கன் போன்ற பல நடிகர்திலகம் ரசிகர்களான பத்திரிகையாளர்கள் நேர்மையுடன் ,உண்மையை மட்டுமே எழுதுபவர்கள். இந்த விதத்திலும் நாம்தான் முன்னுதாரணம்.